நல்வரவு_()_


Saturday 29 December 2012

பரிசு வரும்...:))

ஒருநாள் தெரியவரும்... 
முதல் பரிசு ஆருக்கென:)) 
அப்போ உங்களுக்கெல்லாம் மயக்கம் வரும்:)
1.ஸ்பினாஜ் கீரைக்கறி
 


தே.பொருட்கள்ஸ்பினாஜ் இலைகள்  -250 கிராம்
புரோக்கோலி -100 கிராம்
பூண்டு - 3 பற்கள்
பால் - 75 மி.லீ
தேங்காய்ப்பூ - 2 மே.க
உப்பு - 1 தே.க
தேசிக்காய்(எலுமிச்சை) - 2 தே.க
தாளிப்பதற்கு:
வெங்காயம் -50 கிராம்
செத்தல் மிளகாய் -3
கடுகு 1/2 தே.க
கறிவேப்பிலை - 2 நெட்டு

செய்முறை:
//புரோக்கோலி , ஸ்பினாஜ் இலைகளைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
//ஏனைய பொருட்களையும் தயாராக எடுக்கவும்.
//புரோக்கோலியை சிறு துண்டுகளாக வெட்டி, பாத்திரத்தின் அடியில் போடவும்.
//அதன்மேல், ஸ்பினாஜ் இலைகளை வெட்டிப் போட்டு, பூண்டையும் தோல் நீக்கிப் போடவும்.
//கொஞ்சம் தண்ணீர்(25ml) விட்டு மூடி, மெல்லிய நெருப்பில் அவியவிடவும். 
//அவிந்ததும், குக்கரால் இறக்கி, கீரை மசிக்கும் கரண்டியால் நன்கு மசிக்கவும்.

//நன்கு மசிந்ததும், பால், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்துப் பிரட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, சூடாகியதும் இறக்கிவிடவும்.
//தாளிக்க கொடுத்துள்ளவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
//நன்கு தாளித்து, கீரைக் கறியின்மேல் கொட்டி, தேசிக்காய் விட்டுப் பிரட்டவும்.

//சுவையான, சத்தான கீரைக்கறி தயார்.
ஊசிக்குறிப்பு:-
தண்ணியின் அளவு அதிகமானால் கறியின் சுவை போய்விடும்.


============================================================
2.Onion Scones

தேவையான பொருட்கள்:
self raising flour - 41/2 கப்.
வெங்காயம் பெரிது ஒன்று.. குட்டியாக அரிந்து கொள்ளவும்.
பட்டர் - 60 கிராம்
துருவிய சீஸ் - ஒருகப்
பசுப்பால் - ஒருகப்
தண்ணி - 1/2 கப்
உப்பு தேவைக்கு... [3/4 மேசைக்கரண்டி போதும்] 

செய்முறை:
ஒரு pan ஐ அடுப்பில் வைத்து பட்டரைப் போட்டு உருகியதும், வெங்காயத்தைக் கொட்டி, நன்கு வதக்கவும்.

வதங்கியதும், அதில் பால் + தண்ணீர் சேர்த்து , சூடானதும் இறக்கி மாவினுள் ஊத்தவும், சீஸும் உப்பும் சேர்த்து, ரொட்டிப் பதமாகக் குழைத்து எடுக்கவும்.
பின்பு சிறு சிறு உருண்டைகளாக்கி, அலுமினியம் ஃபொயிலிங் பேப்பர் விரித்து, அதில் கொஞ்சம் பட்டர் தடவி, இவ் உருண்டைகளை ஒன்றுடன் ஒன்று முட்டாமல் இடைவெளி விட்டு வைக்கவும்..

அவனை, 350 பாகையில் சூடாக்கி, இதை வைத்து பொன்னிறமாக வந்ததும், இறக்கி ஆறவிட்டு பின்பு எடுத்துப் பரிமாறலாம். 30-45 நிமிடங்கள் தேவைப்படும்.

சாப்பிடும்போது, இரண்டாக வெட்டி பட்டர் பூசிச் சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகமாகும்.

ஊசிக்குறிப்பு:
மாவைக் குழைக்கும்போது தண்ணிப் பதமாக இருப்பின், இன்னும் மாச் சேர்த்து, அழகிய உருண்டைகளாக்கவும். அடுத்து, பிரவுன் ஆனதும், உடனே எடுக்காலம், வெளியே எடுத்து ஆறும்வரை விடவும், அப்போதான் உள்ளே நன்கு வேகும். 
உருண்டைகளை, ஆகவும் பெரிதில்லாமல் செய்யவும்.

================================================
3.ஹொலிபிளவர் பஜ்ஜி

தே.பொருட்கள்
ஹொலிபிளவர் - 400 கிராம்
மைதா மா - 100 கி
அரிசிமா - 100 கி
உப்பு - பாதி தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க.

செய்முறை:
+ஹொலிபிளவரை ஒவ்வொரு பூவாக வெட்டி எடுத்து, வெந்நீரில் சிறிது உப்புப் போட்டு அதில் இப்பூக்களைக் கழுவி எடுத்து வைக்கவும்.
+இரு வகை மாவையும், உப்பு, தூளையும் ஒன்றாகக் கலந்து.. வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைத்து... இறுக்கமா, அதாவது தோசைப் பதமாக கரைத்து எடுக்கவும்.
+அடுப்பில் எண்ணெயை நன்கு சூடாக்கவும்.
+பின்பு இப்பூக்களை ஒவ்வொன்றாக அம் மாக் கலவையில் தோய்த்து உடனேயே கொதிக்கும் எண்ணெயில் போட்டு, பிரட்டி பிரட்டி பொரித்து எடுக்கவும். 


+எண்ணெய் நன்கு கொதித்த பின்பு, நெருப்பைக் குறைத்து வைத்தே பொரிக்கவும், அப்போதுதான் கருகாமல் வரும்.

======================================================
4.சல்மன் மீன் கறி

தே.பொ:சல்மன் மீன் - 500 கிராம்
வெங்காயம் - 30 கிராம்
கறி பேஸ்ட் - 2 மே.க
கறித்தூள் - 3 தே.க
உப்பு - 2 தே.க
ஜிஞ்சர் & கார்லிக் பேஸ்ட் -1 தே.க
தேசிக்காய் - 2 தே.க
எண்ணெய் - 2 மே.க

செய்முறை:///அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுக்கவும்.

///சல்மன் மீன் துண்டுகளை சின்னதாக வெட்டி, தேசிக்காய், ஜிஞ்சர் & கார்லிக் பேஸ்ட், கறித்தூள் 1 1/2 தேக்கரண்டி, உப்பு ஒரு தேக்கரண்டி.. இத்தனையும் சேர்த்துப் பிரட்டி, அரை மணித்தியாலமாவது ஊறவிடவும். மீன் தோலுடன் வாங்கியிருந்தால், தோலை முற்றிலும் நீக்கிவிடவும்.
///பின்னர் ஊறிய மீன் துண்டுகளை, அவண் ரேயிலே, கிரில் கம்பியில் அடுக்கி மீடியம் கீற்றில் கிறில் பண்ணவும். 

///இம்மீன் உடனே அவிந்துவிடும், மெதுவாக கலர் மாறியதும் எடுத்துக்கொள்ளவும்.(வெள்ளைப் பால் போலே, ரேயிலே வடிந்திருப்பதைக் காணலாம், நன்கு முறுகவிட்டும் எடுக்கலாம், நன்கு முறுகவிட்டால், நேரடியாக பொரியல் போல சாப்பிடலாம்).
[கிறில் வசதி இல்லாதவர்கள், அடுப்பில் தோசை சுடுவதுபோல, சிறிது எண்ணெய் விட்டு, மீன் துண்டுகளைப் போட்டு, வாட்டி எடுத்துக்கொள்ளலாம்.]
///அடுப்பிலே பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிறு துண்டுகளாக்கிப்போட்டு வதங்கியதும், 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், 2 மேசைக்கரண்டி கறிப்பேஸ்ட், சேர்த்துப் பிரட்டவும்.
///250 மில்லி லீற்றர் தண்ணீரும் ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
///நன்கு கொதித்ததும், மீன் துண்டுகளைப் போடவும். மீன் துண்டுகளைப் பிரட்டிப் பிரட்டி விட்டு, கறி பிரட்டலானதும் இறக்கவும். 

///சுவையான சல்மன் மீன் கறி ரெடி. இதில் சத்தும் அதிகம்.

ஊசிக் குறிப்பு:
(இங்கே நான் பாவிப்பது Tamarind & Chillie Paste.  கறி பேஸ்ட் வாங்கும்போது, Tamarind  இருப்பதையே வாங்கிக்கொள்ளுங்கள் அதில்தான் சுவை அதிகம், மீன்கறி, கிழங்குக்கறிகளுக்கு பாவிக்கலாம். ஒருவேளை tamarind இல்லாத பேஸ்ட்டாக இருப்பின், கறியை இறக்கியதும் 2 தே.க எலுமிச்சைச்சாறு சேருங்கள்).

========================================
5.நெத்தலிக் கருவாட்டுக் கறி

தே.பொ:-
நெத்தலிக் கருவாடு - 200 g
கத்தரிக்காய் - 75-100 g
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 30 g
எலுமிச்சை -பாதி
பூண்டு - 4/5 பற்கள்
கறித்தூள் - 11/2 மே.க
கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
நல்லெண்ணெய் - 5 மே.க.
உப்பு 1 தே.க

செய்முறை:
 கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஆயத்தமாக எடுத்துக் கொள்ளவும்.

கருவாட்டை, கொதிநீரில், 10நிமிடங்கள் ஊறவிட்டு, பின் கழுவி எடுத்துக்கொள்ளவும். கத்தரிக்காய், வெங்காயம், ப.மிளகாய், உள்ளியை வெட்டி எடுத்துக்கொள்ளவும். (இதற்கு சின்ன வெங்காயம் மிகவும் சிறந்தது, தோலை நீக்கி பாதியாக வெட்டிப்போட்டால் போதும்).

ஒரு நொன் ஸ்ரிக் பாத்திரத்தில், நெத்தலியைப் போட்டு, அதன்மேல் கத்தரிக்காய், உள்ளி, வெங்காயம், பச்சை மிளகாய் போடவும். கறி, மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும்.

அதன்மேல் எண்ணெயையும் ஊற்றி, மூடி, அவியவிடவும்.
அவிந்ததும், கறித்தூள், கறிவேப்பிலை உப்புப்போட்டுப் பிரட்டவும்.
நன்கு பிரட்டலானதும், இறக்கி தேசிக்காய் சேர்க்கவும்.
 சுவையான நெத்தலிக் கறி தயார்.

(பெரும்பாலும் நெத்தலிக்கருவாட்டில் உப்பு இருப்பதில்லை, உங்கள் கருவாட்டை சுவை பார்த்து, உப்பைப் போடவும்).

===============================”சுபம்”============================
பின்னூட்டப் பெட்டியைத் தேம்ஸ்ஸில் எறிஞ்சிட்டேன்ன்:))