நல்வரவு_()_


Wednesday, 21 August 2019

இன்று  “என்பக்கம்” தின் திறப்பு விழா:)

கொஞ்ச நாள் ஓய்வு தந்தேன் எல்லோருக்கும்:) அது போதும்தானே? இனி அதிராவின் தொல்லைகள் கடுகதி வேகத்தில் ஆரம்பமாகிறது:))..
இது டெய்ஸிப்பிள்ளை மம்மியை மிஸ் பண்ணினாவாம்:)).. ஆனா பாருங்கோ அஞ்சு என்னை மிஸ் பண்ணவே இல்லையாமே:( கர்ர்ர்ர்:).

ட்றம்ப் அங்கிளைப் போய்ப் பார்த்த கதையைச் சொல்லாட்டில் எனக்கு நித்திரை வருமோ ஜொள்ளுங்கோ?:)).. அதனால என் பயணத் தொடர் அங்கிருந்து ஆரம்பமாகிறதூஊஊஊஊ ஹா ஹா ஹா:). எல்லோரும் ஓடி வாங்கோ.. இந்தாங்கோ இந்தாங்கோ.. இது வோஷிங்டனில் இருக்கும் சைனா ரவுண் ஏரியாவில் இருந்த ஷொப்பில் வாங்கிய அவகாடோ பபிள் ஸ்மூத்தி...


அதுக்கு முதல்.. “ஆஷா போஸ்லே அதிரா” பாடுகிறார் கேளுங்கோ:)... இது என் ஃபோனில் ஒரு அப் இருக்கு.. என் தலை அசைவுக்கு ஏற்ப அதுவும் அசையுது, நான் கண்ணை உருட்டினால் .. அதேபோல அதுவும் உருட்டுது ஹா ஹா ஹா:))... ஆருக்காவது ஏதும் பாடல் தேவை எனில் இனிமேல் கூச்சப்படாமல் அதிராவைக் கேட்கவும்.. கீதாவைக் கேய்க்க வாணாம்:)).. ஹா ஹா ஹா ஹையோ கீதாவை இப்போ எங்கும் காணோம் எனும் ஒரு நெம்பிக்கையில் ஜொள்ளிட்டேன்:)) [ஸ்ரீராம்தான் சொன்னார், வீடியோ எடுக்கும்போது குரல் குடுங்கோ என:) அதனாலதான் இந்த வீடியோ எடுக்கும்போது பாடுறேனாக்கும் ஹா ஹா ஹா ஓடாதீங்கோ எல்லோரும் இது ச்ச்ச்ச்சும்மா ஆரம்பம்தானே.. இதுக்கே ஓடினால்:)]



கனடா போய் ஓய்வெடுத்துக் கொண்டு பின்பு தான் குட்டி ட்ரிப் ஆக வோஷிங்டன் போனோம்... படத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தால் புரியும்..

வோஷிங்டன் பற்றிக் கொஞ்சம் என் பார்வையில் சொல்லிடுறேன். 

நியூயோர்க் அழகிய கட்டிடங்கள், ஆனா மிக மிக பரபரப்பான சிற்றி. சன நெரிசல்.. எப்பவும் பிஸியாக இருக்கும், சாமத்திலும் ஆட்கள் நடப்பார்கள், பயம் குறைவுபோல இருந்தது.

ஆனா வோஷிங்டன் அதுக்கு எதிராக இருந்தது. மிக அமைதியாக, அழகாக, பச்சைப் பசேலென எங்கும் மரங்கள், பென்னாம் பெரிய அடர்ந்த கட்டிடங்கள் என எதுவுமில்லை, பெரிய சன நெருக்கடி இல்லை.. இரவானாலே ரோட்டெல்லாம் கொஞ்சம் அடங்கிவிடுவதைப்போல ஒரு ஃபீலிங்காக இருந்துது. 

சுற்றுலா ஏரியாக்கள் எல்லாம் பெரும்பாலும் இப்படி அதிக மரங்களோடு பார்க் போல இருந்தது, அந்த வெயிலுக்கு இதமாக இருந்தது. நாம் போனநேரம் வெயிலோ வெயில்..

அங்கு அதிகமா இருப்பவை மியூசியங்களே[எனக்குப் பிடிக்காத ஒன்று மியூசியம் என்பது வேறுவிஷயம், ஆனா என்னைத்தவிர வீட்டில் அனைவருக்கும் பிடிப்பது மியூசியம்தான் ஹா ஹா ஹா].. இது அஃப்றிகன் அமெரிக்கன் கிஸ்ரி அண்ட் கல்ச்சர் மியூஸியம்.

அந்த மியூஸியத்தின் உள்ளே இருந்த ஷொப்பில் பனை ஓலையால் செய்த குட்டிக் குட்டிப் பொருட்கள், காது தூக்கணம் கூட இருந்துது

இந்த மியூசியத்தின் முன்னால், இப்படிப் பூக்கன்றுகள் நடப்பட்டிருந்துது.. இதை படமெடுத்ததுக்கு காரணம், வடிவாப் பாருங்கோ மிளகாய்ச் செடிகள் அழகிய பழங்களோடு, கோழிக்கொண்டை, மற்றும் நம் நாட்டு வாடா மல்லிகை வெள்ளை நிறத்தில்... ஒருவேளை அஃப்றிக்கா என்பதால, உறைப்பு அதிகம் சாப்பிடுவினம் என இப்படி மிளகாய்ச் செடிகள் நட்டிருக்கினமோ என எனக்கொரு டவுட்டூஊஊஊ:)..


ஆனா நமக்கு அங்கிருப்போர் எச்சரித்திருந்தார்கள், அந்நேரம் வோஷிங்டனில் பின்னேரம் 6-7 மணிபோல ஒருவித புயலோடு மின்னல் முழக்கம் மழை வருகிறது .. ஒரு மணித்தியாலம் இருக்கும் பின்பு போய்விடும் என. அதுபற்றி நாம் எதுவும் யோசிக்கவில்லை,  இந்த இடத்தில் நின்றிருந்தோம்.. மாலையாகி விட்டது.. என்ன இன்னும் முழக்கம் மின்னலைக் காணவில்லையே எனப் பேசிக்கொண்டிருக்கையில்... இந்த வானத்தில் பிளவு பிளவாக மின்னல் தொடங்கியது.. ஆஹா ஆரம்பிச்சுட்டாரையா ஆரம்பிச்சுட்டார் என நினைச்சு முடிக்க முன்.. சட சடவென மழையோடு புயல்போல காத்தும் முழக்கமும்... 

எல்லோரும் அடிச்சுப் பிடிச்சு பார்க் மரங்களுக்கு கீழே அங்கங்கு குட்டிக் குட்டி இன்ஃபோமேஷன் செண்டர்கள் இருந்தன, அதன் தாவாரத்தில் எல்லா மக்களும் ஒன்றாக இடிபட்டுக் கொண்டிருந்தோம்.. நான் அவசரமாக வீடியோ எடுக்கத் தொடங்கிட்டேன்.. இன்னும் வீடியோக்கள் எடுத்தேன்.. பின்பு இங்கு இணைக்கவில்லை, ஒன்று மட்டும் போட்டிருக்கிறேன் பாருங்கோ...

இது ச்சும்மா அங்கிருந்து.. நாம் தங்கிய ஹோட்டல் ஏரியா..

இவர்தான் Martin Luther King, அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வென்றவராம்...

மேலே இருக்கும் சிலைக்கான நுழைவாயில் இது..

சுற்றுலா ஏரியாக்களில் இப்படி வான்களில் அனைத்தும் கிடைக்கிறது ஆனை விலையில:).. இந்திய வான் கூட நின்றுதே சிக்கின் பிறியாணி, சமோசா எல்லாம் வைத்திருந்தார்கள். ஒரு குட்டி கோன் ஐஸ் கிரீம் 7 டொலர்கள்...



இது துரை அண்ணனுக்காக வோஷிங்டனில் இருந்த  மரத்திலிருந்த  காய்/நட்.. பாருங்கோ எவ்ளோ அழகாக இருக்குது தெரியுமோ.. Maple காய்கள் என நினைச்சேன் இலைகளைப் பார்த்து ஆனா கூகிள் பல பெயர்கள் சொல்லுது English oak மரக் காய்கள் எனவும் சொல்லுது, ஆனா அழகோ அழகு.

ஊசிஇணைப்பு:)
நான் குடுத்த வாக்கை மீற மாட்டேனெல்லோ:), நெல்லைத்தமிழனுக்காக தமனாக்கா கலெக்‌ஷன்ஸ் நடக்குது எனச் சொன்னேன் முன்பு:)).. அதில் ஒன்று இப்போ ஊசி இணைப்பாக.. ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் நாங்க மறக்க விடமாட்டோம் டமனாக்காவை:).

ஊசிக்குறிப்பு:
=====================================================
இன்னும் சுற்றுலாத் தொல்லைகள்:) நிறைய நிறையத் தொடரும்:))
========================_()_=============================

147 comments :

  1. நான் வந்துட்டேனு சொல்லு பழைய பன்னீர்செல்வமா வந்துட்டேன்னு சொல்லு :) இப்படிக்கு ஜெற்ற்ற்ரி

    [im]https://media.tenor.com/images/6b40464cdd878d207a7f3bee1404b0d7/tenor.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ வளைக்குள் அடைக்கலமாகியிருந்த எலியை வெளியே வர வச்சிட்டேன்:).. வாங்கோ வாங்கோ.. இதுக்காகவும்தான் போஸ்ட் போட்டேன் தெரியுமோ?:) ஹா ஹா ஹா அதிரா ஆரு?:) என் கண்ணைப்ப்பாருங்கோ.. என் ஹெட் ஐப் பாருங்கோ:)..

      அது செரி சே சே ஜெரி.. சே.ச்சே டங்கு ஸ்லிப்பாகுதே ஆரம்பமே... அது சரி... எனக்கு புதிய பன்னீச் செல்வம் அங்கிளைத்தான் தெரியும்?:) அது ஆரு பழைய பன்னீச்செல்வம்? ஒருவேளை அஞ்சு காலத்தில இருந்திருப்பார் போல எனக்கெதுகு ஊர் வம்ஸ்ஸ்:))

      Delete
    2. ஏஞ்சல் சந்தோச பிஸியில் இருக்கிறா கோமதி அக்கா:).

      Delete
    3. ஸ்ஸ்ஸ்ஸ் குண்டு பூனை :) தெளிவா சொல்லணும் :) சந்தோஷம்னு மொட்டையா சொன்னா :)

      @ கோமதி அக்கா மகள் யூனிவர்சிட்டி செல்கிறாள் அதனால் கொஞ்சம் பிசியா இருக்கேன்க்கா .விரைவில் வருவேன்

      Delete
  2. //இது டெய்ஸிப்பிள்ளை மம்மியை மிஸ் பண்ணினாவாம்:)).. ஆனா பாருங்கோ அஞ்சு என்னை மிஸ் பண்ணவே இல்லையாமே:( கர்ர்ர்ர்:).
    ஹாஹா ஹீஈ ஹீஈ உண்மையை உரக்க சொல்லக்கூடாது :)
    ஆனாலும் அப்பப்போ உங்க குழை ஜாதம் மட்டும் கனவில் வந்து பயம் காட்டும் அப்போ மட்டும் உங்க நினைவு வந்து ஓடும்

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்களும் இன்னும் என் குழை ஜாதம்ம்ம் செய்யேல்லையோ?:) இது சரிவராது.. நான் ஊ ரியூப் சனல் தொடங்கப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      Delete
  3. டெய்சி குழந்தை நலம்தானே .ஆனா கொஞ்சம் கூட இளைச்ச மாதிரி தெரில :) அப்டியே அம்மா மாதிரிதான் :)

    ///இருக்கும் சைனா ரவுண் ஏரியாவில் இருந்த ஷொப்பில் வாங்கிய அவகாடோ பபிள் ஸ்மூத்தி...//
    நொவ்வ்வ் வேணாம் நீங்களே குடிச்சிக்கோங்க :) அது 2 வருஷம் முன்னாடி செஞ்சு வச்சதுன்னு பிபிசில சொன்னாங்க :)

    ReplyDelete
    Replies
    1. //அப்டியே அம்மா மாதிரிதான் :)//
      அம்மா ரொம்ம்ம்ம்ம்ப இளைச்சிட்டாவாம்:)).

      //நொவ்வ்வ் வேணாம் நீங்களே குடிச்சிக்கோங்க :) //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு வள்ளாரை சே சே நெ.தமிழன் ஓடி வரப்போறார் கர்:) .. வல்லாரை ஊஸ் எல்லாம் அங்கு கிடைக்காதாக்கும்:)..

      Delete
  4. ஹயோ யாரவது எமர்ஜென்சிக்கு சொல்லி என்னை ஹாஸ்பிடல் கொண்டு போசொல்லுங்களேன் :)

    இன்னிக்கு எத்தினி பேர் மயங்கி விழப்போறீங்களோ :)) கண்ண பாருங்கோ கண்ணை பாருங்கோனு சொல்லி இப்படியா பயங்காட்டுறது .
    உங்க குரல் கேட்டு மல்ட்டி உருளரா :)))))))))))




    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இனி கீதா பாடுவதை நிறுத்திடப்போறாவாம் எனக் காத்து வாக்கில கதை அடிபடுது:)

      Delete
    2. ஹா ஹா ஹா நிஜம்மாவே பாடுவதை நிறுத்திவிட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிரா...

      ஏஞ்சல் அதான் இப்ப பூஸார் டர்ன் எடுத்திருக்கிறார்...ஸோ எல்லாரும் ரெடியாருங்க அவ்வளவுதான்...ஜொல்லுவேன். இன்ஸுரன்ஸ் எடுத்து வைச்சுக்கலாம்...

      கில்லர்ஜிகிட்ட சொல்லி சிவமணியைக் காப்பாத்தா பூசாரை அங்கு பாட வைத்தால் போதும் எல்லா உருவங்களும் ஓடிய்ப் போய்விடும்.!!! என்ன சொல்றீங்க கில்லர்ஜி அண்ட் ஏஞ்சல்?

      கீதா

      Delete
    3. ஏஞ்சல், உடல் நலமா? தலைவியின் பதிவுக்குக் கரெக்டா வந்துட்டீங்க! எங்களை எல்லாம் வந்து பார்க்கலையே? அலர்ஜி எல்லாம் சரியாப் போச்சா?

      Delete
    4. ///ஹா ஹா ஹா நிஜம்மாவே பாடுவதை நிறுத்திவிட்டேன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!அதிரா...//

      ஏன் ஏன் ஏன் கீதா ஏன்.. பாடுங்கோ சாந்தா பாடுங்கோ...:)

      ///கில்லர்ஜிகிட்ட சொல்லி சிவமணியைக் காப்பாத்தா பூசாரை அங்கு பாட வைத்தால் போதும் எல்லா உருவங்களும் ஓடிய்ப் போய்விடும்.!!!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓல்ரெடி அங்கு தேவதை ஒன்று மியாஸூஊஉ எனக் கத்தியபடி குதித்துவிட்டது:)).. இதுக்கு மேலயும் மீ பாடினால்ல்.. பிறகு கதாசிரியருக்கும் ஆபத்து வந்து எமேஜென்ஸிக்குப் போக நேரிட்டால்:)) என்னிடம் அதுக்கெல்லாம் இன்சூரன்ஸ் இல்லை:)).. நோஓஓஓஓஒ மீ பாட மாட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:))

      Delete
    5. கீசாக்கா..

      //தலைவியின் பதிவுக்குக் கரெக்டா வந்துட்டீங்க//
      வராவிட்டால் வீடு பூந்து அடிச்சு.. ரெண்டு சமோசாவும் தீத்திப் போடுவேன் என மிரட்டி வச்சிருக்கிறேன்ன்ன்:)).. பிறகு போன அலர்ஜி திரும்ப வந்திடுமாக்கும் ஹா ஹா ஹா...

      Delete
    6. @ கீதாக்கா அது பூக்கள் மகரந்த அலர்ஜி ..இப்போ வெயில் குறைந்ததால் அந்த ஹாச்ச்சும் ஹாசிம் ஓடிப்போச்சு :)
      மகள் பல்கலைக்கழகம் செல்கின்றாள் விரைவில் பதிவு ஒன்றை வெளியிடுகிறேன் .அதில் கொஞ்சம் பிசியா இருக்கோம் நானும் கணவரும் .

      Delete
  5. /சாமத்திலும் ஆட்கள் நடப்பார்கள்//
    ஹா ஹா சாமத்தில் நடந்தா அதுக்கு பேர் somnambulism

    சும்மா கிண்டலினேன் ..
    எங்க மதுரை தூங்கா நகரம் மாதிரின்னு சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. அது உங்க மதுரையோ?:) மதுரைத்தமிழன் கலைக்கப் போறார்ர்:)

      Delete
    2. அதிரா மதுரை தமிழன் மட்டுமா....கீதாக்கா, ஸ்ரீராம், கோமதிக்கா எல்லாரும் இருக்காங்களாக்கும்...

      கீதா

      Delete
    3. நாங்க இருக்கோமே மதுரைக்காரங்க! அவர் செங்கோட்டை! தனி மதுரைக்காரர் இல்லையாக்கும்! நாங்க அக்மார்க் மதுரைக்காரங்க!

      Delete
    4. ///கீதாக்கா, ஸ்ரீராம், கோமதிக்கா எல்லாரும் இருக்காங்களாக்கும்.../// ஆஆஆஆஆ நீங்க எத்தனை தடவை சொன்னாலும் எனக்கு அவர்கள் இப்போ இருக்கும் இடங்கள்தான் மனதில் பதிஞ்சிருக்கு... ஸ்ரீராம் எனில் சென்னை.. கீசாக்கா எனில் ஸ்ரீரங்கம்தானே..

      நீங்க எங்க இருக்கிறீங்களோ அந்த ஊரைத்தான் நினைவில வைக்கிறேன் இல்லை எனில்.. பெயரில நெல்லை, மதுரை இப்படி இணைச்சால் மீக்கு கஸ்டமிருக்காதெல்லோ.. அவ்வ்வ்வ்

      கீசாக்கா இனி உங்கட நேம்ம்ம்.. “மதுரை கீசா சிவம்”.. இது எப்பூடி?:) ஹா ஹா ஹா.

      Delete
  6. மியூசியம்லாம் சின்ன ஆட்களுக்கு :) தான் பிடிக்கும் சரி விடுங்க வயசு ஆக ஆகா இது ஜகஜம் :)
    அந்த பனை ஓலை க்ராப்ட்ஸ் அழகா இருக்கு குவில்லிங் மாதிரிதான் செஞ்சிருக்காங்க .
    /

    //ஒருவேளை அஃப்றிக்கா என்பதால, உறைப்பு அதிகம் சாப்பிடுவினம் என இப்படி மிளகாய்ச் செடிகள் நட்டிருக்கினமோ என எனக்கொரு டவுட்டூஊஊஊ:).. ///
    உண்மைதான் எனக்கு ஒரு பெரிய பை நிறைத்து கலர் கலர் மிளகாய் கொடுத்தார் ஒரு தாத்தா .சாப்பிட்டு நாங்க பட்ட பாடு அம்மாடியோ :) பிட்சாவில் மேலே போட்டேன் அவ்ளோதான் இன்னும் மறக்கலை :)

    ReplyDelete
    Replies
    1. //மியூசியம்லாம் சின்ன ஆட்களுக்கு :) தான் பிடிக்கும்//
      யூ மீன் ஏலியன்ஸ்?:) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
      பனை ஓலையில குட்டிக் குட்டி பாஸ்கட் மிக அழகாக இருந்துது அஞ்சு...

      ஏனெனில் ஒவ்வொன்றையும் கனெக்ட் பண்ணித்தான் அந்தந்த ஏரியா இருக்கும்.. அதனால அங்கு மட்டும் எதுக்கு மிளகாய்ச்செடி அதுவும் வஞ்சகமில்லாமல் காச்சுக் குலுங்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நான் வீட்டில நட்டால் பூப்பதோடு சரி:))

      Delete
  7. /இது ச்சும்மா அங்கிருந்து.. நாம் தங்கிய ஹோட்டல் ஏரியா..//
    ஆனாலும் க்ரேட் மியாவ் வாஷிங்க்டனில் சும்மலாம் தங்கி இருந்திருக்கிங்க .
    அப்புறம் அந்த புயலில் எல்லாரும் பறந்தாங்கன்னு ஆனா ஒரே ஒரு பயணி மட்டும் பறக்க முடியாம அங்கேயே உருண்டார்னும் abc நியூஸில் பிளாஷ் நியூஸில் சொன்னாங்க :) அது நீவிர்தானே

    /Maple காய்கள் என நினைச்சேன் இலைகளைப் பார்த்து ஆனா கூகிள் பல பெயர்கள் சொல்லுது English oak ///

    ஹலோ மியாவ் அடுத்தவர் உணவை பறிப்பது தவறு .பிளைட் புடிச்சி அங்கேயே கொண்டு வைங்க .அந்த நட்செல்லாம் அணில்களுக்குரியது :)

    ReplyDelete
    Replies
    1. ///ஆனாலும் க்ரேட் மியாவ் வாஷிங்க்டனில் சும்மலாம் தங்கி இருந்திருக்கிங்க .//

      இந்த ஒரு மாதம் ..கொம்பியூட்டர்ஜி கனெக்ட் த கோலர்ர்:)) என்பவரிடம் போய் ட்ரெயினிங் எடுத்திருக்கிறீங்க போல:)).. அல்லது அதிரா இல்லாத நேரம் பார்த்து ஏதும் ஸ்பெஷல் கிளாஸ்ஸ் போயிருப்பாவோ:))..

      ///அது நீவிர்தானே //
      ஆஆஆஆஆ டமில் டமில்.. எல்லாமே புதுசா இருக்கே இன்று:) ஹா ஹா ஹா..

      எனக்கு உடனேயே ட்றம்ப் அங்கிள் கோல் பண்ணி ஸ்பெஷல் கார் அனுப்புறேன் என்றிட்டார்.. நான் தான் இல்ல வாணாம் நான் ருவர் பஸ்லயே வாறென் என அடக்கொடுக்கமாகச் சொல்லிட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:).

      //அந்த நட்செல்லாம் அணில்களுக்குரியது :)//
      இல்ல அஞ்சு நானும் படங்களில் இந்த நட்ஸ் உடன் அணில்ப்பிள்ளையைப் பார்த்திருக்கிறேன், ஆனா அந்த நட்ஸ் இல்லை இந்த நட்ஸ்... இது சாப்பிடுவதுபோல தெரியல்ல.

      Delete
  8. ஹாஹா ஆமா தமனாக்கா படத்தில் ஜூலி னு பெயர் போட்டிருக்கே :))

    ஊசிகுறிப்பு செம :)
    பழக்க தோஷத்தில் கொஞ்சம் ட்ரான்ஸ்லேஷன் அருஞ்சொற்பொருள் எழுதிட்டேன் :)




    சைனா ரவுண் =china town
    அப் = app
    அஃப்றிகன் அமெரிக்கன் கிஸ்ரி = African அமெரிக்கன் history
    காது தூக்கணம் = ஜிமிக்கி கம்மல்

    ReplyDelete
    Replies
    1. ///ஹாஹா ஆமா தமனாக்கா படத்தில் ஜூலி னு பெயர் போட்டிருக்கே :))//
      அது ஜூலி இல ஜீ லி எனப் போட்டிருக்கு நேக்கு டமில்ல டி ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      பெயர் அது ஒருவேளை தமனாக்காவுக்கு நெல்லைத்தமிழன் வச்ச செல்லப்பெயராக இருக்குமோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:).

      ஹா ஹா ஹா அஞ்சு உங்கட மொழிபெயர்ப்பு ஸ்ரீராமுக்கு ரொம்ப உதவும்.. ஆனா அவர் என் புளொக்கைத்தூக்கிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நாளைக்கு தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ஏஞ்சல் இந்த அருன்சொற் பொருட்கள் எளிதாகப் புரிந்துவிட்டது...இப்போதெல்லாம் பூஸாரின் சொற்களால் எங்க தமிழ் எல்லாம் மறந்து நாங்களும் ரவர், ரீ, ஆன்ரீ, இன்னும் இப்படி நிறைய வந்துருது...பழக்க தோஷம் தேன் எல்லாம்...ஹிஹிஹி

      கீதா

      Delete
    3. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா டமில் டமில். ஸ்பெல்லிங் மிசுரேக்கு விடுறீங்க கீத்ஸ்ஸ்:)) நேக்கு டமில்ல டி எல்லோ:))..

      //அருன்சொற்//
      அது ஞ் ஆக்கும் ஹா ஹா ஹா.... ரயேட்ட்.. ரேபிள், ரீச்சர், ஓல்ரெடி, ஓல் இந்தியா, ஹா ஹா ஹா இது போதுமோ இன்னும் வேணுமோ:))

      Delete
  9. //அனைத்தும் கிடைக்கிறது ஆனை விலையில:).. //

    ஆமா ஒரு டவுட் ஆனை விலை எவ்வளவு ????

    ReplyDelete
    Replies
    1. அதுவோ அது வந்து அஞ்சு.. அந்த ஆனைப்பிள்ளையின் அம்மாவை விற்ற விலைதானாம் வரும்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:))

      [im] https://i.pinimg.com/originals/51/58/65/515865b161ff7496dd688ead65c135e8.jpg [/im]

      Delete
  10. தளம் திறப்பு விழாவுக்கு வாத்துகால்.

    நீங்க சொல்வதைப் பார்த்தால் நியூயோர்க் தேவகோட்டையைவிட பெரிய சிட்டியாக இருக்கும் போலயே...

    இன்னும் அனுபவங்கள் தொடர்ந்து வரட்டும் என்று மூஸாலி கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளேன்.

    படங்கள் எல்லாம் அழகு.

    கீழிருந்து மேலும், மேலிருந்து கீழும் சரியாக ஒன்பதாவது படத்தில் ஒரு பில்லரை ஏன் அவசியமில்லாமல் வெட்ட வெளியில் கட்டி வைத்து இருக்கின்றார்கள் ?
    அதனைப்பற்றி கொஞ்சம் விளக்கவும் அல்லது குழப்பவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //வாத்துகால்//
      ஹையோ இண்டைக்கு வியாளக்கிழமை மீ
      சூசுப்கூடப் பண்ண மாட்டேன் தெரியுமோ விடதம்:)) ஹா ஹா ஹா..

      //நீங்க சொல்வதைப் பார்த்தால் நியூயோர்க் தேவகோட்டையைவிட பெரிய சிட்டியாக இருக்கும் போலயே...//
      ஹா ஹா ஹா நீங்க இருப்பது இந்தியாவின் நியூயோர்க் எல்லோ.. அதைவிட பெரிதாக எங்கும் இருக்க வாய்ப்பில்லை கில்லர்ஜி.. ஜந்தேகப்படக்குடா:)).

      ///மூஸாலி கோவிலில் நேர்த்திக்கடன் வைத்துள்ளேன்.///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வச்சதுதான் வச்சீங்க .. திருப்பதி உண்டியலில் ஒரு கைப்பிடி நகையை அளக்காமல் அள்ளித் தருவேன்.. அல்லது திருப்பரங் குன்றத்து முருகனின் சந்நிதியில் வள்ளிக்கு , அதிராவின் நேர்த்திகளை அஞ்சுவைக் கொண்டு நிறைவேற்றப் பண்ணுவேன் .. இப்பூடி ஏதாவது நேர்ந்திருக்கலாமெல்லோ கர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா மூஸாலி பெயரைக் கேட்டாலே நடுங்குதே:).

      Delete
    2. //நீங்க சொல்வதைப் பார்த்தால் நியூயோர்க் தேவகோட்டையைவிட பெரிய சிட்டியாக இருக்கும் போலயே...//

      ஹா... ஹா... ஹா... கில்லர்ஜி!

      Delete
    3. கில்லர்ஜியின் பதிலைப் பாதியில் விட்டிட்டு ஓடிட்ட்டேன்ன்ன்:)..

      //படங்கள் எல்லாம் அழகு.//
      டாங்ஸ்ஸ்.._()_

      //ஒரு பில்லரை ஏன் அவசியமில்லாமல் வெட்ட வெளியில் கட்டி வைத்து இருக்கின்றார்கள் ?
      அதனைப்பற்றி கொஞ்சம் விளக்கவும் அல்லது குழப்பவும்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுதான் ஓல்ரெடி குழம்பிட்டீங்களே
      :)

      வருகைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி..

      Delete
  11. திறப்பு விழா சூப்பர்.
    சிறப்பு விருந்தினர் கருத்துக்கள் சூப்பர்.
    ஏஞ்சலின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிவு நான் போன இடங்களும் வருது, நான் போகாத இடம் வருதா எனவும் பார்க்க போகிறேன் இனி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

      நீண்ட நாட்களின் பின் போஸ்ட் போட்டு எல்லோரையும் சந்திப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கு.

      ஓ நீங்கள் போன இடங்கள்தான் வரும் என நினைக்கிறேன்.. ஏனெனில் முக்கிய இடங்கள் தவிர, அனைத்தும் பார்க்கவில்லை.. வோஷிங்டன் போயாச்சு.. முக்கியமாக வைட் ஹவுஸ் பார்த்தாச்சு:) இனி பேசாமல் நல்ல நல்ல ரெஸ்ட்டோரண்ட்ஸ் தேடிச் சாப்பிட்டு ஹோட்டலில் நன்கு ஓய்வெடுப்போம் என்பதே நம் விருப்பம் ஹா ஹா ஹா..

      Delete
  12. அவகாடோ பபிள் ஸ்மூத்தியை எவ்வளவு நேரம் குடித்தீர்கள்? அங்கு எல்லாம் பெரிய அளவில் இருக்குமே!

    //நியூயோர்க் அழகிய கட்டிடங்கள், ஆனா மிக மிக பரபரப்பான சிற்றி. சன நெரிசல்.. எப்பவும் பிஸியாக இருக்கும், சாமத்திலும் ஆட்கள் நடப்பார்கள், பயம் குறைவுபோல இருந்தது.//

    ஆமாம், ஆடலும், பாடலும், நடப்பவர்களையும் அங்கு தான் பார்க்க முடியும். உறங்கா நகரம்.

    //வோஷிங்டன் அதுக்கு எதிராக இருந்தது. மிக அமைதியாக, அழகாக, பச்சைப் பசேலென எங்கும் மரங்கள்,//

    ஆமாம், அமைதியான அழகான நகரம். வெள்ளை மாளிகை பகுதி இன்னும் அழகு .

    ReplyDelete
    Replies
    1. //அவகாடோ பபிள் ஸ்மூத்தியை எவ்வளவு நேரம் குடித்தீர்கள்? அங்கு எல்லாம் பெரிய அளவில் இருக்குமே!//
      அதேதான் கோமதி அக்கா.. அமெரிக்கா கனடாவின் பாதிப்பங்குதான் யூகேயின் அளவு வரும்.. அங்கு லாச் எனில் பெரிசூ.. இங்கு லாச் எனில் அமெரிக்கர்களின் கப் அள்வில் பாதிக்கு கிட்டத்தான் வரும்..

      நான் எங்கு குடிச்சு முடிப்பது, எப்பவும் எல்லோருக்கும் வாங்கும்போது எனக்கும் ஒன்று வாங்கி விட்டுப் பின்னர் குடிக்கவும் முடியாமல், காவவும் முடியாமல் எல்லோர் வாயிலும் தீத்தியே முடிச்சிடுவேன் ஹா ஹா ஹா..

      ஆஆஆஆஆ அப்போ எனக்கு வந்த அதே ஃபீலிங்தான் கோமதி அக்காவுக்கும் வந்திருக்கு.. அப்போ மீ ஜொன்னது கரீட்டூஊஊஊஊ:).

      Delete
  13. //English oak மரக் காய்கள் எனவும் சொல்லுது, ஆனா அழகோ அழகு.//

    பம்பரத்துக் காய் போல் இருக்கிறது அழகு.

    ReplyDelete
    Replies
    1. படத்தில் பார்த்ததை நேரில் பார்த்ததும் அதன் அழகில் மயங்கிட்டேன்... அப்படியே காண்ட் பாக்கில் போட்டிருந்தேன்.. மறந்துபோய் ஃபிளைட்டில் கனடா போய்த்தான் பார்த்தேன் நல்லவேளை இமிகிறேஷன் செக்கிங்கில் அகப்படாததால் தப்பினேன்:) ஹா ஹா ஹா.

      Delete
  14. ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தும் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    மிளகாய் பழம் அழகு.
    நான் வைத்து இருந்த மிளகாய் செடி பூத்து பூத்து உதிர்ந்தது, காய்க்கவில்லை தொட்டியிலிருந்து எடுத்து போட்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் கண்ணை உருட்டினால் .. அதேபோல அதுவும் உருட்டுது ஹா ஹா ஹா:))..//

      உங்கள் பாடலும், கண் உருட்டலும் நன்றாக இருக்கிறது.

      உங்களை முகநூலில் தேடுகிறார் ஜலீலா.
      நீங்கள் முகநூலில் வருவது இல்லையே!
      உங்கள் அழகு முகம் படம் போட்டு இருக்கிறார். கண்கள் அழகு.

      Delete
    2. ஓ அங்கும் அப்படியோ கோமதி அக்கா.. இங்கும் எனக்கு கன்று நல்லா வரும் நிறைய பூக்கும் ஆனா காய்க்காது.. கத்தரியும் இப்படியே.. இதனாலேயே இப்போ நடுவதை விட்டு விட்டேன்.. மிக்க நன்றி கோமதி அக்கா அனைத்துக்கும்.

      Delete
    3. //உங்கள் பாடலும், கண் உருட்டலும் நன்றாக இருக்கிறது.//
      ஹா ஹா ஹா நன்றி _()_.

      //உங்களை முகநூலில் தேடுகிறார் ஜலீலா.
      நீங்கள் முகநூலில் வருவது இல்லையே!
      உங்கள் அழகு முகம் படம் போட்டு இருக்கிறார். கண்கள் அழகு.//

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் படம் போட்டுத் தேடுறாவோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஜல் அக்கா எப்பவும் என்னை மறப்பதில்லை.. தேடிக் கொண்டே இருப்பா.. ஆனா அவவை புளொக் பக்கம் கூப்பிட்டால் வாறா இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      2008 இலிருந்து நானும் ஜல் அக்காவும் நல்ல ஒட்டாகவோ இருப்போம்ம்.. இப்போதான் நான் பேஸ்புக் போவதை நிறுத்தியதால் தொடர்பு குறைஞ்சுபோச்சு.. இருப்பினும் அப்பப்ப இங்கு வருவா தேடி... அது எந்தப் படம் போட்டிருக்கிறாவோ தெரியல்லியே...கடவுளே:).

      நான் 2 வருடத்தால் வருவேன் திரும்ப என மூடிட்டு வந்தேன்.. ஆனா இப்போ 4 வருடங்களாகிறது.. இனிப் போகும் ஐடியா இல்லை.. இதுவே போதும்.. என்னால் 2 தோணியில் கால் வச்சு மனேஜ் பண்ண முடியாது என்பதால் இங்கேயே பழகிட்டேன்.

      வேணுமெண்டால் என் செக்:) ஐ அனுப்பி விடட்டோ அங்கு?:) ஹா ஹா ஹா இதை அஞ்சு படிச்சாவோ இப்போ தேம்ஸ்ல “லவ் மரீஜ்” பண்ணிடுவா:))..

      ஹா ஹா ஹா குழப்புறேனோ?:)).. லவ் மரீஜ் க்கும் அரேஞ் மரீஜ் க்கும் என்ன வித்தியாசம் எண்டாலாம்.... தானா தேம்ஸ்ல குதிச்சால் அது லவ் மரீஜ் ஆம்:)).. குடும்பமா கூட்டமாக சேர்ந்து தேம்ஸ்ல தள்ளினால் அதுக்குப் பெயர் அரேஞ் மரீச்சாம்ம்ம்ம் ஹா ஹா ஹா எப்பூடி எல்லாம் யோசிக்கினம் பாருங்கோ..

      நன்றி கோமதி அக்கா. ஜல் அக்காவை புளொக்கு வரச்சொல்லி அதிரா கூப்பிடுறா எனச் சொல்லிவிடுங்கோ கோமதி அக்கா.

      Delete
    4. நானும் நிறைய தடவை கூப்பிட்டு விட்டேன்.
      அவர்கள் இப்போது .youtube.ல் சமையல் குறிப்புகள் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
      அதை படிக்க லைக் செய்ய கேட்பார்கள். எப்போதாவது என் முகநூல் பக்கம் வருவார்கள்.

      Delete
  15. விதம்விதமான இடங்கள், காட்சிகள். அருமை.

    ReplyDelete
  16. ஆஹா... அதிரா இஸ் Bபேக்! Welcome Back...

    கண்ணை உருட்டி பயமுறுத்துனா எப்படி? ஹாஹா...

    பயணம் பற்றிய செய்திகள் - நடக்கட்டும். நாங்கள் செலவே இல்லாமல் அம்பேரிக்கா சுற்றி வர வாய்ப்பு!

    ஊசி இணைப்பு - :) நெல்லைத் தமிழனுக்கு மகிழ்ச்சி. ஸ்ரீராம் பாவம்! அவருக்காக அனுஷ் படமும் போட்டிருக்கலாம்!

    ஊசி மிளகாய் படம் பார்க்கும்போதே காரம்!

    ReplyDelete
    Replies
    1. அனுஷா? ஆரது வெங்கட்? எனக்குத் தெரியலையே...

      Delete
    2. அதுவா ஸ்ரீராம்... அது..அது... அனுஷ்கா சர்மா .........................

      Delete
    3. வாங்கோ வெங்கட் வாங்கோ.. ஓ யேஸ்ஸ்ஸ் மீ பக்கூ:).

      கண்ணை உருட்டிக்காட்டினாலாவது எனக்கு ஆராவது பயப்பிடீனமோ எனப் பார்க்கிறேன்...:) ஹா ஹா ஹா..

      //நெல்லைத் தமிழனுக்கு மகிழ்ச்சி. ஸ்ரீராம் பாவம்! அவருக்காக அனுஷ் படமும் போட்டிருக்கலாம்!//
      ஹா ஹா ஹா ஒரேயடியாக இருவரையும் குளிர வைக்க வாணாமே என்றுதான்:) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் வெங்கட்.

      Delete
    4. //ஸ்ரீராம்.Thursday, August 22, 2019 9:35:00 am
      அனுஷா? ஆரது வெங்கட்? எனக்குத் தெரியலையே...//
      ம்ஹூம்ம்..... நீங்க மாறினாலும் இனி நாங்க விட மாட்டோம் தெரியுமோ?:).. அவர்களுக்கு வயசாகிறது என நைசா கட்சி மாறப் பார்க்கிறீங்க நீங்களும் நெ.தமிழனும்..:)) நாங்கள் புளொக்கில் இருக்கும்வரை விட மாட்டோம்ம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
    5. ///நெல்லைத்தமிழன்Thursday, August 22, 2019 11:34:00 am
      அதுவா ஸ்ரீராம்... அது..அது... அனுஷ்கா சர்மா .........................//

      ஹா ஹா ஹா என்னா ஸ்பீட்டான பதில்..:)

      Delete
  17. ஆஹா... வந்திட்டாங்க. வாங்க வாங்க. ட்றம்ப் அங்கிளை சந்தித்ததற்காக இப்படியெல்லாம் பெயரை மாத்திவைக்ககூடாது. இது உங்களுக்கே ஓஓஓஓவரா இல்லை. வைட் ஹவுஸ் அதிராவா....ஹா...ஹா..ஹா.. அஞ்சு கவனிக்கேல்லை போல.
    சைனா ரவுண் ஏரியாவில் வாங்கியதெல்லாம் வேணாம். நாங்க செய்தே சாப்பிட்டுறோம். அஞ்சு சொன்னமாதிரி எக்ஸ்பயர்ட் ஆன ஸ்மூர்த்தி.
    டெய்சிக்கு இப்ப நல்ல சந்தோஷமா இருக்கும்.
    நல்ல காலம் எனக்கு இந்த அப் ஓபன் ஆகல. கேட்ட அஞ்சுவுக்கே என்ன நிலமை பாருங்கோ.. இப்படியா வந்ததும் வராததுமா விழ செய்வது....
    இந்த மிளகாய் தானே கொச்சிக்காய் என சொல்றது. மெக்ஸிக்கோ ஆட்கள் நல்லா உறைப்பு சாப்பிடுவினம். கனவருடன் வேலை செய்யும் ஒருவர் நல்லா உறைப்பு சாப்பிடுவார். (அவர் அந்த நாடு)இந்த மிளகாய் தான் வாங்குவார். எங்க்ட பச்சை மிளகாயை பார்த்துவிட்டு அவர் சிரிச்சசிரிப்பு மறக்கமுடியாது.
    எனக்கும் மியூசியம் பிடிக்காது. படத்தில் பனை ஓலையால் செய்த பொருட்கள் அழகா இருக்கு.
    //அதன் தாவாரத்தில்// தாழ்வாரம் . சும்மாவே இடி,மின்னல் என்றால் பயம் இதில வேறு அமெரிக்கஇடிமின்னல் வீடியோ.கர்கர்கர்கர்...
    இந்த நட்ஸ் பார்த்தால் எனக்கு ice age filmதான் ஞாபகம் வரும்.
    அந்த வானை பார்க்க எங்கட ஊர் ஐஸ்கிரீம் வான் ஞாபகம் வருது..
    நல்லவேளை நாங்க வோஷிங்க்டன் போற ப்ளான் இருந்தது. இப்ப காசை மிச்சப்படுத்தியாச்சு உங்க ஊருலா வால். உங்க பக்த்தில ஓசியில பார்ப்பம்.வோஷிங்டனை...
    ஊசிகுறிப்பு அருமை..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ... மீ வந்துட்டேன்ன்ன்ன்:)..
      //இது உங்களுக்கே ஓஓஓஓவரா இல்லை//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ட்றம்ப் அங்கிள் சொத்தில பாதி எழுதி டமாலென என் கைக்குள் வச்சுப் பொத்தி விட்டிட்டார்... இதுக்குப் பிறகும் இப்பூடிப் பெயர் போடாட்டில் அது ட்றம்ப் அங்கிளுக்கு மனக் கஸ்டமெல்லோ:)).. இல்லாட்டில் நான் தற்பெருமை பேசுவனோ?:)) எனக்குத்தான் தற்பெருமையே பிடிக்காதெல்லோ:)) ஹா ஹா ஹா.

      //வைட் ஹவுஸ் அதிராவா....ஹா...ஹா..ஹா.. அஞ்சு கவனிக்கேல்லை போல//
      ஹா ஹா ஹா அது அஞ்சுவால இப்போ முந்தினமாதிரி ஓட முடியேல்லையாம்:)) வயசாகிட்டுதோ என்னமோ ஹா ஹா ஹா:)..

      //சைனா ரவுண் ஏரியாவில் வாங்கியதெல்லாம் வேணாம்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அமெரிக்கா, கனடாவில் இப்படி பபிள் bubble ரீ என்றாலே அது சைனீஸிடம்தான் கிடைக்குது..

      //டெய்சிக்கு இப்ப நல்ல சந்தோஷமா இருக்கும்//
      பயங்கர குஷியில் இருக்கிறா.. எனக்கு, என் முகத்தைப் பார்த்துக் கதை சொல்றா.. இந்த ஒரு மாதமும் நடந்த கதையை:)) ஹா ஹா ஹா

      Delete
    2. @அம்முலு
      //இந்த மிளகாய் தானே கொச்சிக்காய் என சொல்றது//
      இந்த மிளகாய் என்றில்லை அம்முலு.. பொதுவாக மிளகாயை வடபகுதி மக்கள் மிளகாய் என்போம், கிழக்கு மாகாணத்தில் கொச்சிக்காய் என்பார்கள்.. அதுதான் வித்தியாசம்.

      ////அதன் தாவாரத்தில்// தாழ்வாரம் ////
      ஹா ஹா ஹா நான் பேச்சு வழக்கில்தானே அதிகம் எழுதுவேன்.. அதனால தாவாரமாகிப்போச்ச்ச்ச்:)).

      //அமெரிக்கஇடிமின்னல் வீடியோ.கர்கர்கர்கர்...//
      அது தனியே நம் குடும்பத்தோடு மட்டும் வீட்டில் இருந்தால்தானே பயம் அம்முலு.. இப்படி திறந்த வெளியில் மக்களோடு மக்களாக அதுவும் ஆர் எவரெனத் தெரியாமல் எல்லோரும் தாழ்:)வாரத்தில் தலையைக் குடுத்து இடிபட்டுக் கொண்டு நிற்கும்போது பயம் எப்படி வரும்.. எனக்கு இப்படியான நேரங்களில் சிரிப்புத்தான் வரும்.. சிரித்துக் கொண்டே இருப்பேன்ன் ஹா ஹா ஹா.

      //இந்த நட்ஸ் பார்த்தால் எனக்கு ice age filmதான் ஞாபகம் வரும்.//
      அதேதான்.. அதில்தான் பென்னாம் பெரிய நட்ஸ் ஐத்தூக்கி வருவார்...

      //அந்த வானை பார்க்க எங்கட ஊர் ஐஸ்கிரீம் வான் ஞாபகம் வருது..///
      அப்படியேதான், சமர் என்பதால் கனடாவிலும் இப்படி ஆஇகிரீம் வான் பார்த்தோம். இங்கும் இருக்குது அம்முலு.. மியூசிக்குடன் பெரும்பாலும் நைட்டில் வரும்.

      //நல்லவேளை நாங்க வோஷிங்க்டன் போற ப்ளான் இருந்தது. இப்ப காசை மிச்சப்படுத்தியாச்சு உங்க ஊருலா வால்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நாங்க நியூயோர்க் போய் வந்ததுக்கும் இதையேதான் சொன்னீங்க:)) நான் மறக்கேல்லைப் பாருங்கோ ஹா ஹா ஹா..

      அனைத்துக்கும் மிக்க நன்றி அம்முலு.

      Delete
  18. ──────o─────o
    ─╔╦──║─║║─║╔╦
    ╔╬╬╦─║─║║─║║║
    ╚═╝╠╗╚═╝╚═╝║║
    ╚═══╝───────╝

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ.. உங்கள் சூப்பர் உம் சூப்பர் ஹா ஹா ஹா நன்றி.

      Delete
  19. கண்ணைப் பாருங்கோ... கண்ணைப் பாருங்கோ...

    ஐயோ...! பயமாயிருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கும் பயம் வருதோ.. அப்போ இனிமேல் இதையே மெயின்ரைன் பண்ணிடுறேன்:))

      Delete
  20. பழசை மறந்து அல்லது அவசரத்தில் பாட்டு இணைப்பதை மறந்துவிட்டு வடிவேல் அங்கிள் படாமினித்திருக்கிறீர்கள்!​

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஆவ்வ்வ்வ் அப்படி இல்லை, நல்ல பாடல் மனதில் இல்லை, தேட நேரம் போதவில்லை.. அதனால இப்படி.. முன்பும் இப்படி இடைக்கிடை போடுவேன்...

      ஆஆஆஅ நீங்களும் இப்போ அதிரா ஸ்டைலுக்கு வந்திட்டீங்க ....அங்கிள்!!! ஹா ஹா ஹா..

      Delete
  21. டெய்ஸியை காப்பகத்தில் விட்டுச் சென்றீர்களோ... எப்படி இருந்தது அது? உங்களைக் கண்டதும் என்ன செய்தது? அதை எல்லாம் விடியோஎடுக்க மாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. போன தடவை ஹொலிடேயின்போதுதான் அங்கு விட்டோம் ஸ்ரீராம், ஆனா அது அவவுக்குப் பிடிக்கவே இல்லை, சாப்ப்பிடாமல் மெலிஞ்சு பயந்து போயிட்டா.. அதனால இம்முறை பாவமே என வீட்டில்தான் விட்டோம், நண்பி குடும்பம் வந்து கவனித்தார்கள், ஆனா என்ன எங்கும் ஒரே மயிர் கொட்டி இருந்துது.. அதை துப்புரவு செய்ய மிகவும் கஸ்டமாகிட்டுது.. அதனால இனி அவ அழுதாலும் பறவாயில்லை கற்றறியில்தான் விடுவது எனும் முடிவோடு இருக்கிறோம்.

      எங்களைப்பார்த்ததும் நிறையக் கதை சொல்லுவா ஸ்ரீராம்.. முகம் பார்த்து ஏதேதோ சொல்லிக்கொண்டிருப்பா.. என்னை விட்டு கொஞ்ச நேரம் தூர போக மாட்டா.. ஓடி ஓடி வந்து மடியில் ஏறி இருப்பா.. திரும்பவும் விட்டுவிட்டுப் போயிடாதே எனச் சொல்வதுபோல இருக்கும் செய்கைகள்... ஏனெனில் ஆர் இல்லாட்டிலும், நான் இல்லாட்டில் அவவுக்கு கஸ்டமாக இருக்கும்... வீடியோ எடுத்ததில்லை... எங்களுக்கு ஒரு குழந்தையை பார்க்கும் தவிப்போடுதான் எல்லோரும் ஓடி வருவோம்ம்..

      Delete
    2. டெய்சி பிள்ளை பாவம் நான் யோசித்துக் கொண்டே வந்தேன் அவ எப்படி உங்களைப் பிரிந்து இருந்தா என்று..இப்போது தெரிந்து கொண்டேன். இப்போ உங்கள் பின்னாடியே சுற்றி வருவாளே....

      எங்கேனும் விட்டுப் போய்டிவீங்களோ என்று...

      கீதா

      Delete
    3. அதேதான் கீதா, அது என்னமோ தெரியவில்லை அவவி விட்டு விட்டுப் போவதென்பது நம் பிள்ளையை விட்டு விட்டுப்போவதைப்போல இருக்கு.. அங்கு எல்லோரும் டெய்ஷியையும் கூட்டி வாங்கோ எனச் சொன்னார்கள்.. ஆனா இவ இருக்க மாட்டாவே.. இறங்கி ஓடினால் ஓடினதுதான் ஹா ஹா ஹா.. பப்பீஸ் எனில் கொண்டு போகலாம் ஓரளவுக்கு... இப்போ இப்போ மெதுவா பயம் குறைகிறது.. ஆனா வலு ஹப்பியாக இருக்கிறா கீதா.

      Delete
  22. டிரம்ப் அங்கிளை சரியா தலை வாரச் சொன்னீங்களா? எண்ணெயே தடவ மாட்டாரோ... இது மாதிரி ஆப் எல்லாம் டவுன்லோட் பண்ணுவீங்களா? ஆனால் பாடல் வரிகுறளில்லாதா மங்கேஷ்க்கரே தெரிந்தார் போங்க...

    ReplyDelete
    Replies
    1. ///டிரம்ப் அங்கிளை சரியா தலை வாரச் சொன்னீங்களா?//
      அவரின் ஸ்டைலே அதுதானே ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா ஆராருக்கோ என்னென்னமோ கவலை:) ஸ்ரீராமுக்கு...:)) ஹா ஹா ஹா.

      //இது மாதிரி ஆப் எல்லாம் டவுன்லோட் பண்ணுவீங்களா?//
      பண்ணுவேன்.. ஆனா இது நான் பண்ணவில்லை, ஃபோனுடன் கூட வந்திருக்கு.. டெக்ஸ்ட் மெசேஜ் ஏரியாவில்... புதுபோன் எனச் சொன்னேன் தானே.. அதில்.

      ///ஆனால் பாடல் வரிகுறளில்லாதா மங்கேஷ்க்கரே தெரிந்தார் போங்க...///

      ஹா ஹா ஹா கடவுளே இப்போ அஞ்சு தேம்ஸ்க்கு ஓடுவதாக நியூஸில சொன்னார்கள்.. இதுதான் காரணமோ.. அப்பூடியாஆஆஆஆ இருக்குதூஊஊஊஉ?:) ஹா ஹா ஹா.

      ஆளைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இப்போதான் தேடினேன்.. இப்பாடல் வந்துது..

      https://www.youtube.com/watch?v=Ou0B9T89L0g

      Delete
  23. உங்கள் பார்வையில் வாஷிங்டன் பற்றித் தெரிந்து கொண்டேன். அங்கு போகும்போது சரியாய் இருக்கிறதா என்று செக் செய்து பார்ப்பேன் சொல்லிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா செக் பண்ணிச் சொல்லுங்கோ.. நீங்க போகலாம் தானே அங்கெல்லாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ மகன்களின் வெடிங் முடிஞ்சதும் நீங்கள் உல்லாசப் பயணம் வெளிக்கிடலாம்தானே.

      Delete
  24. படங்களெல்லாம் அழகாய் இருக்கிறது. திடீர் மின்னலும் மழையும் ரசனை. ஆனால் ஆபத்து என்றால் அப்படி அலட்சியமாய் அங்கு இருக்க விட்டிருக்க மாட்டார்களே...சுழன்றாடும் புயல் ஒன்று போகுமே... அதன் பெயர் என்ன... அதெல்லாம் வரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம்.
      ஆபத்து இல்லை என்றே நினைக்கிறேன், ஆனாலும் பொருட்கள் பறக்குது, மரங்கள் முறியுது கொப்புக்கள் உடையுதுதான், இருப்பினும் பஸ் சேவிஸ் எல்லாம் இருந்தது.. அந்நேரத்திலும் பஸ் ஓடிக்கொண்டுதான் இருந்தது. எங்களால் நின்று பிடிக்க முடியவில்லை அப்படியே முழுவதும் தோய்ந்து நனைஞ்சிட்டோம்ம்.. வாழ்க்கையில் முதல் தடவையாக இப்படி மழையில் நனைந்தது இதுதான்..

      அப்போ எங்கள் பஸ் அதில் வந்து ரெட் சிக்னலில் வெயிட் பண்ணியது.. ஓடினோம் உடனே ட்றைவர் கதவைத்திறந்து ஏற்றி விட்டார் உள்ளே.. இங்கெல்லாம் பஸ் ஸ்ரொப் தவிர இடையில் எங்கும் பஸ் நிக்காது, ஏற்றவும் மாட்டினம்.. இது மழையால ஏத்தினார் நடு ரோட்டில் வச்சு.. இரவானதால் அப்படியே ஹோட்டல் வந்து சேர்ந்து விட்டோம்.. சொல்லி வச்சதுபோல் வன் அவரில் நின்றுவிட்டது.

      ஆனா அடுத்த நாள் விடியற்காலை 4 மணியிலிருந்து எலாம் அடிப்பதுபோல.. எங்கள் எல்லோர் மொபைலுக்கும் அலேர்ட் மெசேஜ் ஆம்.. வந்து கொண்டே இருந்தது.. பகல் 12 மணிவரை ஆரும் வெளியே போக வேண்டாம் Flash flood வரப்போகிறது என... அதனை amber அலேர்ட் எனச் சொல்கின்றனர் .. அது அங்கிருக்கும் எல்லோர் மொபைலுக்கும் போகும்.. பிள்ளைகளுக்கும்..

      அதனால அடுத்த நாள் 12 மணிவரை எங்கும் வெளிக்கிடவில்லை நாம், ஒரே மழை கொட்டிக்கொண்டிருந்துது. அந்நேரம் ஹோட்டேல் பின் பகுதியில் ரெயின் போய்க் கொண்டிருந்துது வீடியோ எடுத்தேனே.. முடிஞ்சால் பின்பு போடுகிறேன்..

      //சுழன்றாடும் புயல் ஒன்று போகுமே... அதன் பெயர் என்ன//
      ஹையோ அது வோஷிங்டனில் இல்லை.. Tornado வைத்தானே சொல்றீங்கள்.. அது வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்.. அது வந்தால் கதை முடிஞ்சிடும் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா.

      Delete
    2. /அது வந்தால் கதை முடிஞ்சிடும் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா.// - எனக்கு டொர்னடோ மூவிலாம் பார்த்து டொர்னடோவை நேரில் (கொஞ்சம் தூரத்திலிருந்துதான்) பார்க்கணும், அப்போ உள்ள காற்றை அனுபவிக்கணும்னு ஆசை.

      அதுபோல நல்ல சலசலக்கும் மழையில் நனையவும் ஆசை (அப்போ நீரோடும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தால் வாவ்).

      Delete
    3. நெல்லை ஹைஃபைவ்...எனக்கும் ரொர்னரோ (ஹையோ இந்த பூஸாரின் பழக்க தோஷம்!!!) எல்லாம் பார்க்க ஆசை உண்டு நேரில். அதே போல மழை பெய்யும் போது ஆற்றில் குளித்திருக்கிறேன் நெல்லை செமையா இருக்கும்...மழையில் நனைந்ததுண்டு. இப்பவும் நனைகிறேன்...ஹியரிங்க் எய்டை நினைவாகக் கழற்ரி வைத்துவிட்டு ஹா ஹாஹ் ஆ

      கீதா

      Delete
    4. நாங்க மெம்பிஸில் இருக்கையில் 2011 ஆம் ஆண்டில் டொர்னடோ வந்தது. அனுபவங்களைப் பகிர்ந்திருந்தேன்.

      Delete
    5. @நெ.தமிழன், கீதா

      ரொனாடோவைப் பார்க்கலாம் ஆனா பார்த்துவிட்டு வந்து போஸ்ட் போட ஆள் இருக்கோணுமே:)) ஹா ஹா ஹா அது தூக்கிக் கொண்டு போய்விடுமெல்லோ:)).. ஹையோ நான் மாட்டேன்ன்...

      மழையில் நனையும் ஆசை எனக்கு எப்பவும் இருந்ததில்லை.. இங்கு ஒரே மழைதானே... நதியில், கடலில் குளிக்க ஆசை.. குளிச்சும் இருக்கிறேன்ன்..

      ///ஹியரிங்க் எய்டை நினைவாகக் கழற்ரி வைத்துவிட்டு ஹா ஹாஹ் ஆ
      //ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் கீதா:))

      Delete
    6. ஓ அப்படியோ கீசாக்கா.. அந்நேரம் நான் உங்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தேன்:)).. ஹா ஹா ஹா.. போஸ்ட் பார்க்கவில்லை.

      Delete
  25. மார்ட்டின் லூதர்கிங் பற்றி சிறுவயதில் ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். கார் அந்த நுழைவு வாயிலில் செல்லும் இல்லையா? குறுகலாக இருப்பது போல இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. இல்லை, சைக்கிள் தவிர வாகனங்கள் போகாது.. ரோட்டில் இறங்கி நடக்க வேணும்..

      நாங்கள் சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓடித்திரிந்தோமே இஇந்த இடத்தில்.. வெளியே ஒரே பார்க் மயம்.. பார்க்கினுள் சைக்கிள் ஓட சூப்பராக இருந்தது.

      Delete
  26. ஊசி இணைப்பில் இருக்கும் அந்தப் பெண்மணி யார்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. ஊசிக்குறிப்பு ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பெண் மணியாமே.... சின்னப் பெண்ணைப் பார்த்து இப்படிச் சொல்ல எப்படி மனசு வந்தது? நல்ல படமா தேர்ந்தெடுத்துப் போட்டிருக்காங்களே என்று பாராட்டாமல்.................

      Delete
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் இப்பூடிப் பொயிங்க வச்சிட்டீங்களே நெ.தமிழனை:)).. ஹா ஹா ஹா அனைத்துக்கும் நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    3. @நெ.த

      //சின்னப் பெண்ணைப் பார்த்து இப்படிச் சொல்ல எப்படி மனசு வந்தது?//

      என்னாதூஊஊஊஊஊஊஊஉ சின்னப்பொண்ணோ? அந்த ஒரு அக்கா பாட்டுப் பாடுவாவே அவவுக்கும் பெயர் சின்னப்பொண்ணுதான் ஹா ஹா ஹா.

      //நல்ல படமா தேர்ந்தெடுத்துப் போட்டிருக்காங்களே என்று பாராட்டாமல்........///
      ஆஆஆஆஆஆ அப்போ இந்த தமனாக்காவைப் பிடிச்சுப்போச்சு அப்பூடித்தானே?:).. ஹா ஹா ஹா.

      Delete
  27. என் நாடகப் பதிவுக்கு மின்னல் இடி என்று இணைத்திருந்தேன் அப்போது உங்கள் இந்தைடி மழை இணைப்புஇருக்க வில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ..

      ஓ உங்கள் நாடகப் பதிவு நான் படிக்கவில்லை என நினைக்கிறேன். மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
    2. நீங்கள் படிக்க வில்லை என்று தெரியும் சுட்டி இணைத்திருந்தேன் ஏனோ காக்கௌஊச் போல தெரியுது மீண்டும் இணைக்கிறேன் .https://gmbat1649.blogspot.com/2013/03/blog-post_12.html

      Delete
    3. ஜி எம் பி ஐயா..,சரியாகத்தான் இருக்குது லிங்.. நான் போய்ப்பார்த்துக் கொமெண்ட்டும் போட்டு விட்டேன்.

      Delete
  28. //வீடியோ எடுக்கும்போது பாடுறேனாக்கும்// - பாடல் கேட்டேன். இவ்வளவு இனிமையான குரலா? வயது 15 என்று கூடச் சொல்லமுடியாது. அவ்வளவு எனெர்ஜெடிக் குரல். நிஜமாகவே நீங்க சினிமாப் பாடல்களும் பாடலாம். அப்படி எஸ்.ஜானகி குரலைத் தோற்கடிக்கும் இனிமை.



    ரொம்ப சாரி அதிரா.... என்னால எவ்வளவு பொய் தொடர்ந்து எழுதமுடியும்னு செக் பண்ணிப் பார்த்தேன். இதுக்கு மேல எழுத வரலை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //பாடல் கேட்டேன். இவ்வளவு இனிமையான குரலா? வயது 15 என்று கூடச் சொல்லமுடியாது. அவ்வளவு எனெர்ஜெடிக் குரல். நிஜமாகவே நீங்க சினிமாப் பாடல்களும் பாடலாம். அப்படி எஸ்.ஜானகி குரலைத் தோற்கடிக்கும் இனிமை.///

      ஆஆஆஆஆஆஆ அப்பூடியே எயார்போர்ட்டில்.. பிளேன் மெதுவா ரிவேஸ் எடுத்து.. மெதுவா.. ஊர்ந்து.... பின்பு எடுக்குமே ஸ்பீட்ட்ட்ட்ட்.. அந்த ஸ்பீட்டிலேயே மேலே எழும்பி.. முகிலுக்குள் போகும்போது வருமே ஒரு பரவசம்.... அப்பூடி இருக்குது.....:)

      எனச் சொல்லுவேன் என நினைச்சீங்களோ ஹா ஹா ஹா... எனக்குத்தான் தெரியுமே உங்களை:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      Delete
    2. ///ரொம்ப சாரி அதிரா.... என்னால எவ்வளவு பொய் தொடர்ந்து எழுதமுடியும்னு செக் பண்ணிப் பார்த்தேன். இதுக்கு மேல எழுத வரலை.///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நானும் டிடி போல போடுவேனாக்கும்:))...

      ......(\_/)
      ......( '_')
      ..../""""""""""""\======░ ▒▓▓█D
      /"""""""""""""""""""\
      \_@_@_@_@_@_@_/

      Delete
  29. //இது அஃப்றிகன் அமெரிக்கன் கிஸ்ரி// - உங்க இடுகையைப் படிக்க ஆரம்பிச்சப்பறம்தான் எது சரியான தமிழ், எது குழப்பும் மொழி என்றெல்லாம் புரியுது.

    கிஸ்ரி - Kiss, Tea (டீ க்கு ரீ என்றுதானே உபயோகப்படுத்துவீர்கள்). ஹிஸ்டரி என்று எழுதியிருந்தால் எங்களுக்கெல்லாம் புரிந்துவிடுமே என்பதனால் ஆஃப்ரிகன் மொழியை உபயோகப்படுத்தியிருக்கீங்க போலிருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்களுக்கெல்லாமாகத்தான் என் செக் மேலே கஸ்டப்பட்ட்டு மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறா:)) ..

      நான் சேர்த்து எழுதியதை நீங்க பிரிச்சுப் படிச்சால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா இன்னும் பல குழப்பங்கள் வரும் இந்த உல்லாசப்பயணத் தொடரில்:))

      Delete
  30. //இன்னும் சுற்றுலாத் தொல்லைகள்:) // - அப்ப்ப்பா... இப்பத்தான் இந்தத் தளத்தைப் படிக்கற நாங்க எல்லோரும் உங்களுக்கு அவசியமானவங்கன்னு புரிஞ்சது. அதுனாலத்தானே பொய் சொல்லாம உண்மையை எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நான் சொல்வதெல்லாம் உண்.. மெய்.. செ..சே சேர்த்து எழுதோணும் உண்மை:)) உண்...மையைத்தவிர வேறில்லை:)..

      Delete
  31. படங்கள் நல்லா இருக்கு. காத்து, மழை காணொளியும் நல்லா இருக்கு.

    எல்லாவற்றிலும், பனையோலையால் செய்த பொருட்களை படம் எடுத்துப் போட்டிருக்கீங்களே..அது மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. பனை ஓலைப் பொருட்கள் என் மனதைக் கவர்ந்தன அங்கு...

      Delete
  32. மழையும், காத்தும் காணொளி அருமை.
    சுற்றிப்பார்த்து முடித்தவுடன் வந்ததா மழை? அல்லது சுற்றிப்பார்க்க இடைஞ்சலாக மழையா?
    மழை பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி தான்.

    ReplyDelete
    Replies
    1. பின்னேரம்தானே வந்தது கோமதி அக்கா அதனால ஓகே... மழை பார்த்தது மட்டுமில்லை.. வாழ்வில் முதல் தடவையாக மழையில் மொத்தமாக.. அப்படியே தேம்ஸ்சில குதிச்சதைப்போல நனைஞ்சிட்டேன்ன் ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
    2. அங்கு எல்லாம் மழை வருவதை, முங்கூட்டியோ எல்லாம் சொல்லி விடுவார்கள் அது மிக துல்லியமாக இருக்கும் என்று என் மருமகள் சொல்வாள், மழை நாளில் பயணம் ரத்து செய்து விடுவாள்.

      Delete
  33. வருக வருக. அதிரா இந்த இரண்டு வருகவும் உங்களுக்கு மட்டும் இல்லை. ஒன்றை சமத்தாக தேவதைக்கு கொடுத்து விடுங்கள்.
    படங்களும், ஊசிக்குறிப்பும் அபாரம். தொடரட்டும் 👍👌

    ReplyDelete
    Replies
    1. பானுமதி அக்கா வாங்கோ வாங்கோ..

      //ஒன்றை சமத்தாக தேவதைக்கு கொடுத்து விடுங்கள். //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா கொடுத்திடுறேன்.

      மிக்க நன்றிகள், உங்கள் இக்கட்டான இந்நேரத்திலும் வருகைக்கு.

      Delete
    2. பானுக்கா தாங்க்ஸ் ..இன்னும் சில பல முக்கிய அலுவல்கள் முடிஞ்சதும் ரெகுலரா வர ஆரம்பிப்பேன்

      Delete
  34. /ஊசி இணைப்பில் இருக்கும் அந்தப் பெண்மணி யார்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது./

    ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▉▂▂▂▂▂
    ▂▂▂▉▉▉▉▉▂▂▂▉▂▂▂▉▉▉▂▉▉▉▉▂▂▉▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
    ▂▂▉▂▉▂▂▂▉▂▂▉▂▂▉▂▂▂▉▂▂▂▉▂▂▉▂▂▂▉▉▂▂▂▂▉▉▂▂
    ▂▂▂▉▂▂▂▂▉▂▂▉▂▉▉▂▂▉▂▉▂▂▂▉▂▉▂▂▉▂▂▉▂▂▉▂▂▉▂
    ▉▉▉▉▉▉▉▉▉▉▉▉▂▉▂▉▂▉▂▉▂▂▂▉▂▉▂▉▂▉▂▂▉▂▉▂▂▉▂
    ▂▉▂▂▂▂▂▂▉▂▂▉▂▂▉▂▂▂▉▂▂▂▉▂▂▉▂▉▂▉▂▂▉▂▂▉▉▂▂
    ▂▂▉▉▉▉▉▉▂▂▂▉▂▂▉▉▉▉▉▉▉▉▉▉▉▉▂▂▉▂▂▉▉▉▉▉▉▉▂
    ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▉▂▂▂▂▂▉▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▉▂▂▂▂
    ▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▉▉▉▉▉▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▉▂▂▂▂▂

    படத்தை போடாததால் (ஸ்ரீராம் சார் சார்பாக) நான் கோபித்துக் கொள்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா டிடி கண்டுபிடிச்சிட்டேன் அனுஷ் ஐ:))

      Delete
  35. வணக்கம் அதிரா சகோதரி

    தங்கள் தளம் திறப்பு விழாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    அமெரிக்காவிறகு செலவில்லாமல் அழைத்துச் சென்று காண்பித்து விட்டீர்கள். படங்கள் மிக அருமை. காற்றும், மழையும், எங்கு சென்றாலும் நமக்கு நண்பர்கள்தான் போலும்.. அதுதான் விடாமல் விட்டுப் பிரியாமல் வந்து விட்டார்கள்.

    குளுமை நிறைந்த மரங்கள் படம் அழகு. பனை ஓலையில் செய்த பொருட்கள் மிக அழகாக உள்ளது. சின்ன சின்ன செடிகள் பூக்கள், மிளகாய்கள் என அத்தனையும் அழகு.

    ஊசிக்குறிப்பும், இணைப்பும் பிரமாதமாக இருக்கிறது. ஊசி இணைப்பாக தமன்னா படம் மிக மிக அழகு. (ஐயோ யார் மனம் ஊசியால் தைத்தது போல் வலிக்குமென்று தெரியவில்லையே?) அடுத்து வருவது தொல்லைகள் என நீங்கள் எண்ணினாலும், சுகமாக நாங்கள் கருதி வரவேற்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. கார்ட் பெட்டியில் ஓடி வந்து ஏறிட்டீங்க:)..

      //தங்கள் தளம் திறப்பு விழாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
      ஹா ஹா ஹா நன்றி நன்றி.

      மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறீங்கள் ஆனா மேலே அதிரா பாடுகிறேனெல்லோ.. அந்த வீடியோவை நீங்க கேட்கவில்லைப்போலும்:)) ஹா ஹா ஹா ..

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  36. வணக்கம் பூசாரே ! நலமா ?

    சென்றவிடம் கண்டேன் நல்ல
    ......செழிப்புகளைக் கண்டேன் !மின்னல்
    மின்னுதலைக் கண்டேன் ! பூஸார்
    ......மிரண்டதையும் கண்டேன் ! காற்றில்
    சின்னமரக் கிளைகள் ஆடச்
    ......சிந்தும்நீர் அழகைக் கண்டேன்
    என்னவெலாம் கண்டாய் நீயும்
    ......இயம்பிடுவாய் நாளும் வந்தே !

    உள்ளமகிழ் வெல்லாம் ஓங்க
    .....ஊசியிணைப் பெல்லாம் கண்டேன்
    கள்ளமிலாக் கவியைப் போலே
    .....கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன்
    பிள்ளை'எழில் கொள்ளை கொண்ட
    .....பிறைநுதலாள் தமனா கண்டேன்
    கொள்ளையினிப் பெல்லாம் போய்க்கக்
    .....கொடுத்தவுங் குரலும் கேட்டேன் !

    தொல்லுலகை ஆட்டித் தன்னைத்
    .....தொட'எவரும் இல்லை என்னும்
    சொல்'உலகை ஆளும் வண்ணம்
    .....சுடர்ந்தபெரும் நாட்டின் முன்னே
    வல்ல'அறப் போராட் டங்கள்
    .....வளர்த்ததனால் கொல்லப் பட்டும்
    கல்லிடையில் மின்னும் அந்தக்
    .....கறுப்பினத்தின் தலைவன் கண்டேன் !

    எல்லாமே அருமை நலம் பேணுங்கள் நலம் பெறுங்கள்
    வாழ்க வளமுடன்



    ReplyDelete
    Replies
    1. அருமையான கவிதை சீராளன். வெகு இயல்பான வார்த்தைகள் சிக் என்று உட்கார்ந்துகொள்கிறது.

      முதல் பாடலைப் படித்ததும், இரண்டாவது, அந்தாதியாக அமைந்திருக்கக்கூடாதா என்று தோன்றியது.

      ......இயம்பிடுவாய் நாளும் வந்தே !

      வந்தவுடன் மகிழ்ச்சி பொங்க ... என்பதுபோல

      //கொல்லப் பட்டும்
      கல்லிடையில் மின்னும் அந்தக்
      .....கறுப்பினத்தின் தலைவன் கண்டேன்// - வெகு அருமை

      //..கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன் // - இது சரியா வந்திருக்கா? 'களிப்பூசிக் குறிப்பும் கண்டேன்' என்பதுபோல வரவேண்டாமா?

      //பிள்ளை'எழில் கொள்ளை கொண்ட
      .....பிறைநுதலாள் தமனா கண்டேன் // - இது டூமச் இல்லையோ.... அவளுக்கு எங்க பிறை நுதல் இருக்கு? கவுத்துப்போட்ட ப மாதிரி கூட இல்லையே..

      வஞ்சி எழில் கொள்ளை கொண்ட
      இஞ்சி இடுப் பழகி கண்டேன் - என்று சொல்லலாம்னா கவிதைல மற்ற வார்த்தைக்கு இணையா வரலை. அந்தப் படத்தைப் பார்த்தால் பொட்டுதான் அழகா இருக்கு. அதை வைத்துப் பாடாமல்...

      //கொள்ளையினிப் பெல்லாம் போய்க்கக்
      .....கொடுத்தவுங் குரலும் கேட்டேன்// - சரியா வந்திருக்கா?

      Delete
    2. வாங்கோ மேஜரே.. கவிஞரே வாங்கோ.. நீண்ட இடைவெளியின் பின்பு எல்லோரையும் சந்திப்பது மகிழ்ச்சி... அதுவும் கவிதையுடன் களம் இறங்கி... இங்கின ந வரியில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவரையும் குளிர்வித்திட்டீங்க.. அவருக்கு இது காதல் வாரமோ என்னமோ ஹா ஹா ஹா அது போகட்டும்.. மட்டருக்கு வாறேன்...

      Delete
  37. ஆவ்வ்வ்வ் முதல் பந்தி, எப்பூடி இவ்ளோ சிம்பிளாக, நான் முக்கி முக்கி எழுதிய கதையை.. சில வரியில சொல்லி முடிச்சிட்டீங்க.. உண்மையில் மகிழ்ச்சியான வியப்பாக இருக்கு.

    ///பிள்ளை'எழில் கொள்ளை கொண்ட
    .....பிறைநுதலாள் தமனா கண்டேன் ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இது எனக்குப் புரியவில்லை:).... பெயரும் தெரியவில்லை:)) இது எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:))

    ஹா ஹா ஹா இந்த வரி பார்த்தவுடனேயே மின்னல் வேகத்தில் களம் இறங்கி சிக்ஸர் அடிச்சிட்டாரே இங்கு ஒருவர்ர்.. அதாவது தமனாக்காவின் சகோதரர் எனச் சொல்ல வந்தேன்ன்ன்.. ஹா ஹா ஹா மீ இப்போ ஓடிட்டு கொஞ்சத்தால வாறேன் மிகுதிக்கு...

    ReplyDelete
    Replies
    1. நான் வெள்ளிக்கிழமைல யாரையும், அதிலும் "அ"வில் பெயர் ஆரம்பிப்பவரைத் திட்டறதில்லை. //சகோதரன் எனச்/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா

      Delete
    2. மிக அருமை சீராளன் மிக்க நன்றிகள்... மகிழ்ச்சி.

      Delete
    3. ஆஆஆஆஆஆ பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்ன்ன்.. அப்பாடா நெல்லைத்தமிழன் இப்போ கம்பி மேல இல்லை என்பதால:)) சொல்வதைச் சொல்லிபோட்டு ஓடிடுவோம்:))..

      முதல்ல டவுட்டு.. நுதல் என்றால் நெற்றியோ.. நெற்றியைத்தான் பிறைக்கு ஒப்பிடுவினம்...

      இனி எங்கே சீராளன் வந்து விளக்கம் தரப்போகிறார்ர்:) அவர் அடுத்த போஸ்ட்டுக்குத்தான் வருவார்போலும்.. அதனால மீயும் டமனாக்காவின் அன்புச் சகோதரமுமாக[ஹா ஹா ஹா சிரிச்சு முடியுதில்லை:)].. இதை அலசலாமோ என வந்தேன்..

      ////..கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன் // - இது சரியா வந்திருக்கா? 'களிப்பூசிக் குறிப்பும் கண்டேன்' என்பதுபோல வரவேண்டாமா?//

      இது சரியெனவே படுது நெ தமிழன்.. அதாவது முன்னால “நம்மை”.. எனப் போட்டுப் பாருங்கோ சரியா வருதெல்லோ.. அந்த அர்த்தத்தில் சொலியிருக்கிறார் என நினைக்கிறேன்.

      ///வஞ்சி எழில் கொள்ளை கொண்ட
      இஞ்சி இடுப் பழகி கண்டேன் - என்று சொல்லலாம்னா///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீசாக்கா கொஞ்சம் ஸ்பீட்டா ஓடி வந்து அந்த நீங்க வழமையாகச் சொல்லும் .. ஆ தோ அ வ.. அதைக் கொஞ்சம் சொல்லுங்கோ நெ.தமிழனுக்கு கர்ர்ர்ர்ர்:))

      //கொள்ளையினிப் பெல்லாம் போய்க்கக்
      .....கொடுத்தவுங் குரலும் கேட்டேன் !////

      இதுவும் சரியாய் வந்திருக்குது நெல்லைத்தமிழன், ஆனா “போ” எனப் போட்டுவிட்டார்ர்.. அது பொய்க்க.. என வந்தால் சரியாகுது பாருங்கோ இப்போ.. சே சே எதையாவது ஜொள்ளி அதிராவின் தேன் குழலை சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே குரலை டவுனாக்கவென்றே கங்கணம் கட்டியிருக்கிறாரோ:)).. ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல முருகா:))

      சே..சே.. ஒரு டமில்ப் புரொஃபிஸருக்கே மீ வகுப்பெடுக்க வேண்டிக் கிடக்கே ஆண்டவா இதுக்காகவோ.. ட்றம்ப் அங்கிள் வைட் ஹவுஸ் லயே தங்கச் சொல்லிச் சொல்லியும், இல்ல வாணாம் மீ அங்கயே போயிடுறேன் எனச் சொல்லி வந்தேன்.. ஹையோ ஹையோ:)).... ஹா ஹா ஹா.

      Delete
    4. 1. நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு. நான் இமையை எடுத்துக்கொண்டேன். ஆனால் பொதுவா அர்த்தம் நெற்றி, புருவம், தலை, சொல். இதனைத் தவிரவும் வேறு பொருட்களில் நுதல் என்ற வார்த்தை உபயோகித்திருக்கிறார்கள். பிறைநுதல் என்பதற்கு சந்திரன் போன்ற நெற்றி என்று எடுத்துக்கலாம். (தமன்னா ஜொள் பார்ட்டில சீராளனும் சேர்ந்துட்டாரே என்று வருத்தம்தான் ஹா ஹா)

      'போய்க்க' என்பதால்தான் அர்த்தம் சரியில்லாமல் இருந்தது. நீங்க 'பொய்க்க' என்று சொல்லும்போது சரியாத்தான் இருக்கு.

      /கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன்// - இதுல தளை பிரச்சனை இருக்கு. கவர்ந்தூசிக் என்று வாசிப்பதற்கும் கவர்ந்த ஊசிக் என்று வாசிப்பதற்கும் வித்தியாசம் தெரியுதில்லையா?

      சீராளன் ரொம்ப டேலண்ட் உள்ள ஆள். நான் பொதுவா அப்படித் திறமையைப் பார்த்ததில்லை. கண்ணதாசன் மாதிரி வரவேண்டிய ஆள் என்று வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லலை. (ஆனா அதுக்கு இன்னும் படிக்கணும். ஆனா சுலபமா அந்த இடத்துக்கு வரமுடியும்)

      Delete
    5. //நுதலுக்கு நிறைய பொருள் இருக்கு.//

      ஓ.. நான் பிறையை வச்சு.. அது நெற்றியாக இருக்கும் என எண்ணிட்டேன்.

      //(தமன்னா ஜொள் பார்ட்டில சீராளனும் சேர்ந்துட்டாரே என்று வருத்தம்தான் ஹா ஹா)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் சேரவில்லை:) நீங்க சேர்த்திட்டீங்க:)) ஹா ஹா ஹா.

      //கவர்ந்த'ஊசிக் குறிப்பும் கண்டேன்///

      ஓ நீங்க அந்த அப்போஸ்ரொஃபி யை வச்சுக் குழம்புறீங்க ஹா ஹா ஹா.. நான் அந்த ரேஞ்சுக்கெல்லாம் யோசிப்பதில்லை.. சிம்பிளாக ஓசிச்சேன்ன் சரியா வருது.. அது அவர் ஸ்பேஸ் பார் தட்டுவதுக்குப் பதில் அப்போஸ்ரொஃபியைத்தட்டிட்டார்ர்.. நித்திரைத்தூக்கம்.. மொபைல் ரைப்பிங்.. இரண்டும் சேர்ந்தமையால் என நினைக்கிறேன்.. அது சேராமல் பார்த்தால் சரி.. கவர்ந்த ஊசிக் குறிப்பு.... இப்படித்தான் என் இண்டியூஸன் டொல்லுது:).. ஹையோ கெதியா என் ஃபீஸைத்தாங்கோ நெ.தமிழன்:)) ஹா ஹா ஹா..

      //கண்ணதாசன் மாதிரி வரவேண்டிய ஆள் என்று வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லலை.//
      என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க ஆவ்வ்வ்வ் சீராளன் ஓடி வாங்கோ.. இந்த வரியை மட்டுமாவது படிச்சிட்டுப் போங்கோ... நீங்க சொல்வது உண்மைதான் நெல்லைத்தமிழன், ஆனா சீராளனுக்கு வேர்க் இல் நேரம் போதவில்லை என நினைக்கிறேன்.

      Delete
  38. என் பக்கம் எங்கள் பக்கத்தில் ஒயிங்கா வரவே இல்லை...எல்லாம் உங்கள் பாஸ் ட்ரம்ப் செய்யும் வேலை..எல்லாம் வெள்ளையாவே இருக்குது...வொயிட் ஹவுசின் மகிமையோ.!!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      //என் பக்கம் எங்கள் பக்கத்தில் ஒயிங்கா வரவே இல்லை...//
      அது ஸ்ரீராம் செய்த ஜதி..சே.சே சதி கீதா:)) ஹா ஹா ஹா இப்போ வருகிறது.

      வைட் ஹவுஸ் இனித்தான் வரும் அப்போ பாருங்கோ:))

      Delete
  39. படங்களும் அதன் விவரமும் எல்லாமே சூப்பர். ஓ அதிரா நீங்கள் சுற்றுப் ப்யணத்தில் இருந்தீர்களா. நான் தளம் பக்கம் வராததால் தெரியவில்லை.

    உங்க்ள் மூலம் நானும் நியூயார்க் வாஷிங்க்டன் எல்லாம் சுற்றிப் பார்க்கிறேன். படங்கள் எல்லாமே மிக நன்றாக இருக்கின்றன அதிரா.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. உங்களை நீண்ட நாளாகக் காணாததுபோல இருக்குது.. இப்போ கண்டதில் மகிழ்ச்சி.. மிக்க நன்றி துளசி அண்ணன்.

      Delete
  40. அவகெடோ டபுள் ஸ்மூத்தி வாவ்!! எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கும் அவகெடோ கிடைக்கிறது என்ன விலைதான் அதிகம். ஒரு கிலோ 180-200 விற்கிறார்கள்.

    அதுவும் அங்குஎல்லாம் பெரிய பெரிய மக் போன்ற கப்பில்தான் தருவாங்க...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவகாடோ கொஞ்சம் விலைதான் கீதா, இங்கும் ஓரளவான பழம் எனில் வன் பவுண்ட், கொஞ்சம் சின்னன் எனில் கொஞ்சம் குறையும்.. 80பென்ஸ், 60 பென்ஸ் இப்படி..

      அங்கு என்ன விலைக்கு வாங்கினோம் என மறந்திட்டேன்ன்.. மொத்தமாக பே பண்ணியமையால்.

      Delete
  41. ஹா ஹா ஹா ஹையோ கீதாவை இப்போ எங்கும் காணோம் எனும் ஒரு நெம்பிக்கையில் ஜொள்ளிட்டேன்:)) //

    வந்துவிட்டேன் வந்துவிட்டேன்...அதுக்காக இப்படியா என்னை மிரட்டுவது!!! ஹா ஹா ஹா...முழிது முழித்து..

    அது சரி பச்சை நிறமே நு பாடிட்டு பின்னாடி ஹப்பாடி மூஸாலி வந்து ஒட்டிக் கொண்டது போல அப்படி ஒரு இடிச்சிரிப்பு!!! பயந்துவிட்டேன்னு நினைக்காதீங்கோ....நான் பயப்பட எல்லாம் மாட்டேனாக்கும்

    உங்க குரல் நல்லா இருக்கு அதிரா...நல்ல இனிமையான குரல்...அதை ரசித்தேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///உங்க குரல் நல்லா இருக்கு அதிரா...நல்ல இனிமையான குரல்...அதை ரசித்தேன்...//

      ஆஆஆஆஆஆஆ இன்னும் ஜத்தமா ஜொள்ளுங்கோ கீதா.. தேம்ஸ் கரையெல்லாம் ஒலிக்கட்ட்டும்.. புகைப்புகையாகப் போகட்டும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  42. பனை ஓலை சாமான்கள் அழகாக இருக்கின்றன. எனக்கு இது போன்றவை மிகவும் பிடிக்கும்.

    நீங்கள் காதுக்கான தூக்கணம் வாங்கலையோ? வாங்கியிருந்தால் போட்டு தொங்குவதை மட்டும் க்ளோசப்பில் எடுத்துப் போடுங்களேன்...

    அந்த ஒற்றைக் கோபுரம் போல இருப்பது பெரிய ரவர் என்று நினைக்கிறேன் சரியா அதிரா...

    அந்தக் காய் அழகாக இருக்கிறதெ...

    சரி ட்ரம்ப் மாமாவுடன் ரீ அருந்திய ஃபொட்டோ உண்மையான ஃபோட்டோ போடோனும்....சும்மா நெட்டிலிருந்து சுட்டு அதில் பூசார் படம் எல்லாம் போட்டு ஜல்லி வேலை எல்லாம் காட்டி ஜல்லை அடிக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்...ஹா ஹா ஹா

    ஏஞ்சல் ஒரு செக் வைச்சுக்கோங்க பூஸார் போடுவதை!!!!

    படங்கள் எல்லாமே ரொம்ப அயகு!! அதிரா. நியூயார்க் ரொம்பவே பிஸி நகரம். ஆனால் வாஷிங்க்டன் கொஞ்சம் அமைதிதான்...நீங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றிருக்கலாமே இன்னும் அழகான இடங்கள் நிறைய உண்டு அங்கு. நீங்கள் சென்ற கானடாவில் இருக்கும் இடத்திற்கு இதுதான் அருகிலோ? நயாகரா பார்க்கவில்லையா? அல்லது முன்பே போயிருக்கீங்க இல்லையா?
    தொடர்ந்து போடுங்க உங்க பயணத்தின் படங்களை...நான் இரண்டரை வருடங்கள் முன்ன போன பயணப் படங்களே போடலை இன்னும் ஹிஹிஹி....நேரம் நெக்கிப் பிடிக்குது...இப்பத்தான் விட்ட பதிவுகளைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். அப்புறம் இன்று கோகுலாஷ்டமி இல்லையா...அது வேறு ஏதேனும் செய்ய வேண்டும்...

    கீதா

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //நீங்கள் காதுக்கான தூக்கணம் வாங்கலையோ? வாங்கியிருந்தால் போட்டு தொங்குவதை மட்டும் க்ளோசப்பில் எடுத்துப் போடுங்களேன்...//
      ... பபபபனை ஓலையில் வாங்கவில்லை ஹா ஹா ஹா..அது வேறு நிறைய வாங்கினேன் கோயிலில்.. படம் போடட்டே:).. என் காதின் குட்டித்தோட்டையும் புதுசா பற்றனாக வாங்கினேன் அது கோல்ட் இல்.

      //அந்த ஒற்றைக் கோபுரம் போல இருப்பது பெரிய ரவர் என்று நினைக்கிறேன் சரியா அதிரா...//

      that is Monument of Washington DC Geethaa... அவர்களின் நினைவுச்சின்னமாம்.. இது எங்கட ஆபிரிக்காம் லிங்கன் தாத்தாவின்.. நினைவாலயத்தின் முன்னால் இருக்கு... பின்பு இதுபற்றி விரிவான படங்கள் போடுவேன்..

      ///நீங்கள் சென்ற கானடாவில் இருக்கும் இடத்திற்கு இதுதான் அருகிலோ? ////

      இல்ல கீதா நியூயோர்க் தான் அருகில் இருக்கு.. அது ஏற்கனவே போயாச்சு.. இம்முறை கனடாவில் அதிகம் அலுவல், நிகழ்வு இருந்தமையால்.. நாட்கள் போதவில்லை, அதனால 5 நாட்கள் மட்டுமே ஒதுக்கி இங்கு போனோம்.. கியூபா அல்லது ஜமெய்க்கா போகும் பிளான் ஆரம்பித்தார்கள் ஆனா நாள் போதாமையால் அதனை நிறுத்தி.. சரி ஒவ்வொரு இடமாக பார்க்கலாமே என இங்கு போனோம்.. இப்படி கொஞ்சமாக அமைதியாக ஆறுதலாகப் பார்ப்பதுதான் கீதா எனக்குப் பிடிக்கும்.. பரபரத்து ஓடி ஓடிப் பார்க்க பிடிக்காது.. எங்கே போயிடப்போகுது.. அங்குதானே இருக்கும்.. மெதுவா பார்க்கலாமே என நினைப்பேன் ஹா ஹா ஹா..

      Delete
    2. // நயாகரா பார்க்கவில்லையா? அல்லது முன்பே போயிருக்கீங்க இல்லையா?//

      அது கனடாவில் பார்த்தோமே.. பல தடவைகள் பார்த்து அலுத்துவிட்டது கீதா, ஆனா இம்முறை நயகராவைக் கடந்து நியுயோர்க்கில் நுழைந்து ஒரு அம்மன் கோயில் கும்பிட்டோம்ம்.. சூப்பராக இருந்தது கார்களில்.. எல்லோருமாகப் போனோம்.. எல்லாம் மெதுவா இங்கு வரும் ஹா ஹா ஹா ஓடிடாதீங்க எங்கும் அதுவரை:)..

      ///சரி ட்ரம்ப் மாமாவுடன் ரீ அருந்திய ஃபொட்டோ உண்மையான ஃபோட்டோ போடோனும்//
      போடுவேனே.. ட்றம்ப் அங்கிள் வளர்க்கும் தாராக் குஞ்சு.. அணில்ப்பிள்ளை எல்லாம் போடுவேன்ன்.. நீங்கதான் ஓடிடக்கூடாது ஒயுங்கா வரோணும்:)).

      இப்படித்தான் கீதா, போனதடவை நியூயோர்க்கில் எடுத்த இடங்களில் பாதிகூட இங்கு போடவில்லை.. அப்படியே விட்டு விட்டேன்ன்...:))..

      பின்பு வருகிறேன்.

      Delete
    3. //எங்கே போயிடப்போகுது.. அங்குதானே இருக்கும்.. மெதுவா பார்க்கலாமே என நினைப்பேன்// - ரெட்டைக் கோபுரம் அப்படித்தான் பார்க்க மிஸ் ஆகிடுச்சோ

      Delete
    4. ///ரெட்டைக் கோபுரம் அப்படித்தான் பார்க்க மிஸ் ஆகிடுச்சோ//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கண்ணில விளக்கெண்ணெயோடயே திரியினமே வைரவா:)).. அது உடஞ்சதால அதன் புது இடம் பார்த்திட்டமே.. இங்கு படங்கள் போட்டேன் என்றுதான் நினைக்கிறேன்..

      Delete
  43. ஏஞ்சல் எப்படி இருக்கீங்க. நலம் தானே.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதை இன்னும் அவ பார்க்கவில்லைப்போலும்.. நலம்.. நலம்.. வருவா விரைவில் .

      Delete
  44. அதிரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன தமனாக்கா படம் மட்டும் போட்டுவிட்டு அனுஷ் படம் போடவே இல்லை....டூமச். அரம தலைவர் பேசாமல் இருக்கிறார் செக்ரட்டரி வேறு வரலை!!! அதான் பாவெ!!!

    அனுஷ் படம் போடாததற்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அண்ட் கண்டனம். சரி கான்சல் பண்ணின உண்ணா விரதம் என்னாச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எனக்கு இப்போ ஒரு டவுட்டூஊஊஊஉ.. கீதா நீங்க தமனாக்கா கட்சியா இல்ல அனுக்கா கட்சியா இல்லை என்னைப்போல நியூட்றலோ?:)).. படம் போட்டதுக்கு சந்தோசப்படாமல்.. போடாததை நினைச்சுக் கவலைப்பட்டு.. இருக்கும் ஜந்ந்ந்ந்ந்ந்தோசத்தையும் இழந்து கர்:))

      ஊசிக்குறிப்பு:
      நெல்லைத்தமிழன் கீதாவுக்கு “கா” சொல்லிடுங்கோ ஜொள்ளிட்டென்ன்ன்:)).. இது மானப்பிரச்சனை:)) ஹா ஹா ஹா

      உண்ணாவிரதம் இருந்ததும் தெரியாது எதுக்கு கான்சலாச்சு எனவும் தெரியாது ஸ்ரீராமுக்கு:)).. இதைக்கூட சொல்லி விளங்கப்படுத்த வேண்டியதாப்போச்ச்ச்ச்ச்ச்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ ரொம்ம்ம்ம்ம்ப பாவம்.. அப்ப்ப்ப்பாஆஆஆஆஆவி:))

      Delete
  45. இப்போது ஒரு பார்ட்டைம் ஜாப் போறேன் அதிரா. 4 மணினேரம் தான் ஆனாலும் சில சமயம் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று வேலை வந்துவிடுகிறது. சப்ஜெக்ட்ஸ் புக்ஸ் பப்ளிஷிங்க் ஆஃபீஸ். கொம்பனி லா, காமெர்ஸ், அக்கவுண்டிங்க், மேற்றிக்ஸ், புள்ளியியல் என்று. எடிட் செய்யணும். மல்டிபிள் சாய்ஸ் கொவ்ஷெனஸ் ப்ரிப்பெர் செய்யனும் என்று...

    இரு மாதம் ஆகிறது. நமக்கு சப்ஜெக்ட் இல்லை. எனவே கொஞ்சம் மெதுவாக வாசித்துப் புரிந்துகொண்டுதான் செய்ய முடிகிறது ஆனால் நம் பாஸிற்கு நான் ஸ்லோவாகச் செய்கிறேன் என்று சொல்கிறார். நான் வொர்க் செய்வது 4 மணி நேரம் ஆனால் அவரோ அதில் நிறைய கேள்விகள் ப்ரிப்பெர் செய்யனும் என்கிறார். 50 60 என்று ஒரு நாளில் பலரும் 100, 150 ப்ரிப்பெர் செய்வார்களாம்.

    சோ நான் சில சமயம் வீடு வந்தும் செய்ய வேண்டியதாய் உள்ளது. டார்கெட் முடிக்க...

    அதான் தளம் வருகை...குறைந்திருக்கு. பதிவுகளும் புதியதாய் போடவில்லை. எபியில் வந்த கதைகளைப் போட்டு ஓட்டினேன்...

    எபியில் உங்கள் கேள்வி பார்த்தேன் என்னைக் கெட்டு. அதான் இங்கு பதில்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓ கீதா, உங்களைத் தேடினேன், அப்போ கீசாக்கா சொன்னா நீங்க ஜொப் இல் ஜொயின் ஆகியிருப்பதாக.. சந்தோசம், மகிழ்ச்சி கீதா.. நல்லதுதானே.. பார்ட் ரைம்தான் பெஸ்ட்.. எனக்கும் ஃபுல் ரைம் பிடிப்பதில்லை.. கேட்டாலும் மறுத்திடுவேன்.

      Delete
  46. மழை வீடியோ ரொம்ப அழகா இருக்கு அதிரா...அந்த சத்தம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா, பஸ்ஸில் ஏறியபின்பும் வீடியோ எடுப்பதை விடவில்லை நான்:)) ஆனா அது ஏதோ கையை மாத்திப்பிடிச்சிட்டேன் போலும், வீடியோ சரிஞ்சு வருது.. அதனால போடவில்லை இங்கு.

      Delete
  47. ஆஹா, எல்லோரும் வந்துட்டுப் போயிட்டாங்க. நான் தான் கடைசியா? பதிவு வந்ததே தெரியலை. எல்லோரையும் கூப்பிட்ட அதிரா என்னைக் கூப்பிடவும் இல்லை. இங்கே வந்து பார்த்தால் முழிச்சு முழிச்சுப் பார்த்துக் கொண்டு பாட்டுனு சொல்லிப் பயமுறுத்தல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ.. நல்லவேளை ரெயின் பிளாட்ஃபோமை விட்டு நகர முன் ஸ்பீட்டா ஓடி வந்து கார்ட் பெட்டியில் ஏறிட்டீங்க:).. இன்னும் கொஞ்சம் லேட்டானால் ஸ்பீட் எடுத்திருக்கும் தெரியுமோ:)).

      //எல்லோரையும் கூப்பிட்ட அதிரா என்னைக் கூப்பிடவும் இல்லை//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் எங்கே எல்லோரையும் கூப்பிட்டேன்ன்.. நான் எப்பவும் கீசாக்கா ஆரையும் கூப்பிடுவதில்லை .. ஏனெனில் போஸ்ட் பார்த்ததும்.. நம்மிடம் வருவோர் நிட்சயம் வருவினம், வரவில்லை எனில் ஏதும் காரணம்.. வேலை பிஸி இப்படி இருக்கலாம் என நினைப்பேன்ன்.. எடுத்தோம் கவிழ்த்தோம் எனக் குறையாக நினைப்பதில்லை.. தொடர்ந்து சில போஸ்ட்களுக்கு வரவில்லை எனில்தான் யொசிப்பேன்.

      இது மேபிள் காய்கள் படம் துரை அண்ணனுக்காகப் போட்டமையால்.. அவருக்கு மட்டும் சொன்னேன்.. சொல்லியும் அவர் வரவில்லைப்பாருங்கோ..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெரி பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)).. ஹா ஹா ஹா இதுவும் கடந்து போகும்:)

      Delete
  48. அமெரிக்கன் ஆஃப்ரிகன் கிஸ்ரி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கும் அப்படியே வந்துடும் போல. நல்லாச் சொல்லி இருக்கீங்க! அந்த நுழைவு வாயில் ஆச்சரியமூட்டுது. நியூயார்க்கெல்லாம் முன்னாலேயே போயிட்டு வந்தாச்சா? வெள்ளை மாளிகையில் தேநீர் சாப்பிட எப்போப் போனீங்க? என்னெல்லாம் இருந்தது தேநீரோடு! ட்ரம்ப் அங்கிளோட மகளைப் பார்த்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கும் அப்படியே வந்துடும் ///
      ஹா ஹா ஹா கமோன் கீசாக்கா கமோன்ன் வற:)ட்டும்:))

      //அந்த நுழைவு வாயில் ஆச்சரியமூட்டுது//
      அது அழகுக்கு கட்டியிருக்கினம்.

      //நியூயார்க்கெல்லாம் முன்னாலேயே போயிட்டு வந்தாச்சா? //
      போனதடவை படம் படமாய்ப்போட்டு நீங்களும் கொமெண்ட்ஸ் போட்டீங்களே கர்ர்:))..

      இங்கு லேபலில்.. அதிரா தியேட்டர் என இருக்கும்.. அதில் போட்டிருப்பேன் எல்லா இடங்களும்..

      //வெள்ளை மாளிகையில் தேநீர் சாப்பிட எப்போப் போனீங்க?//
      ஜூலை 4 அவர்களின் சுகந்திரதினமாம்.. நாங்க 8ம் திகதி போனோம் வெ.மா க்கு..

      //என்னெல்லாம் இருந்தது தேநீரோடு//
      ட்றம்ப் அங்கிள்தான் இருந்தார்ர்ர்:)) ஹையோ நோ குறொஸ் குவெஷன்ஸ்ஸ் பிளீஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா.

      Delete
  49. ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் அருமை. ஶ்ரீராம் ஏமாந்திருப்பார். நெல்லைக்கு சந்தோஷம். படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. முக்கியமாய் வாஷிங்க்டன் புயல். அதனால் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க என்று புரிஞ்சு போச்சு! காணொளிகள் இரண்டுமே நல்லா வந்திருக்கு. பதிவு படிக்கும்போதே முதல்முறையாகக் காணொளியையும் சேர்த்துப் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. //அதனால் நீங்க எடுத்திருக்க மாட்டீங்க என்று புரிஞ்சு போச்சு!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது என் ஐஃபோன்10 இல் எடுத்ததாக்கும்:)).. அப்பாடா இதைச் சொல்ல ஒரு ஜந்தர்ப்பம் கிடைக்காதோ என நினைச்சிருந்தேன்:)) ஹா ஹா ஹா.

      மியாவும் நன்றிகள் கீசாக்கா.. மிக்க நன்றி.. வந்தமைக்கு மியாஸூ.... ஹா ஹா ஹா.

      Delete
  50. திறப்புவிழா! மூடிமூடித் திறக்கிறீங்கள். :-) கனகாலம் வந்து பார்த்து ஏமாந்துபோனன். இனி நம்பிக்கையோட இடைக்கிடை எட்டிப் பார்ப்பேன்.

    ReplyDelete
  51. மிளகாய்ச்செடிகள் வடிவா இருக்கு.

    ReplyDelete
  52. ஆஹா ...மிக தாமதமான வருகை ...


    ஆனாலும் பதிவு பிரெஷ் ஆ தான் இருக்கு ....உலகத்தை சுத்தி பார்க்க நானும் ரெடி ..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.