நல்வரவு_()_


Thursday, 29 August 2019

வோஷிங்னில் திரா:)😻

ந்த சனி ஞாயிறு கொஞ்சம் பிஸியாகப்போகிறேன் அதனால புளொக் பக்கம் வர முடியுமோ தெரியவில்லை, அதற்கு முன் ஒரு போஸ்ட் போட்டிடலாம் என நினைச்சு அவசரமாக இதைத் தொகுக்கிறேனாக்கும். என்னா கடமை உணர்வு என நீங்கள் சொல்வது கேய்க்குது:)) நன்றி நன்றி:)).. பின்ன நான் என்ன அஞ்சுவைப்போல லேஷியோ?:) ஹா ஹா ஹா:))

இதன் போன பகுதியைப் பார்க்க விரும்பினால் இங்கு கையை வையுங்கோ:)

வோஷிங்டனில் ஒரு நல்ல விஷயம் இருக்கு அது என்னவெனில், tour buses ஃப்றீ யாக விட்டிருக்கிறார்கள் ,[சிலது காசுக்கும் உண்டு], சுற்றிக்கொண்டே இருக்கும், அதனால நாம் கண்ட சில காட்சிகள், நம் நாட்டவர்கள் பிள்ளைகளிடம் வந்திருப்பவர்களோ இல்ல, அங்கேயே இருப்பவர்களோ தெரியாது, தம்பதிகளாக பஸ்ஸில்[கொஞ்சம் வயதானவர்கள்] தனியே வருவதைப் பார்க்க முடியுது, அந்த பஸ்ஸில் சும்மா ஏறி இருந்தாலே போதும், அழகாக சுற்றி வரும் . விரும்பிய இடங்களில் இறங்கி ஏறலாம், இல்லை எனில் அப்படியே சுற்றி வரலாம், பிள்ளைகள் வேர்க் போவர்களாக இருந்தால், பெற்றோருக்கு இது நல்ல பொழுதுபோக்கு.. வெயிலுக்கு ஏற்ப நல்ல ஏசியுடன் கூடிய சொகுசு பஸ்கள்... நமக்கும் அது நன்கு உதவியது. நியூயோர்க்கில் இந்த வசதி இருக்கவில்லை.

ரிக்கெட் எடுத்துச் செல்லும் பஸ் எனில்.. ஒரு நாளுக்கு அல்லது 2 நாட்களுக்கு இப்படி ரிக்கெட் எடுக்கோணும், அதுவும் ஒரு நாளுக்கு ஒருவருக்கு 49 டொலர்கள் எனச் சொன்னதாக நினைவு... இப்படி எனில் அடிச்சுப் பிடிச்சு இடங்கள் பார்த்து முடிக்கோணும்.

இது ஃபிறீ சேவை இருந்ததனால், டெய்லி கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதலாகப் பார்க்க முடிஞ்சுது. இப்படி எல்லா நாடுகளுக்கும் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்.. இது பற்றி ட்றம்ப் அங்கிளோடு பேசோணும்:).

அங்கு இருக்கும் யூனியன் ஸ்டேஷன்... இரு பக்கமும் ரெயின் நிக்குது பாருங்கோ.. இந்த ஸ்டேசனுக்கு கிட்டத்தான் எங்கள் ஹோட்டேல்.

ஸ்டேசனின் வெளிப்பக்கம் வந்தால் இப்படி இருக்கும். இங்கு  இந்த ருவர் பஸ்கள் வந்து வந்து போகும்..

இது ச்சும்மா அங்குதான் எங்கோ ஓரிடம்:))

பஸ்ஸில் ஏறி இந்த இடத்தில் இறங்கினால், இங்கு நிறைய பார்வை இடங்கள் இருக்கு.. உள்ளுக்குள்ளாலேயே நடந்து நடந்து பார்க்கோணும்.. தூரம் கொஞ்சம் அதிகம் தான், ஆனா நடப்பதும் ஒரு சந்தோசமாக இருந்தது.. எங்கும் ஒரே சோலை மயம்... சில இடங்களுக்கு ரக்‌ஷி பிடிச்சும் போனோம். போனதடவை படம் போட்டேனே கறுப்பினப் போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங்.. அவரது நினைவுச்சிலை இருந்த ஏரியாவுக்கு கிட்டத்தான் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடந்தால் ஆபிரிக்காம் லிங்கனின் நினைவிடம் வரும்... அந்த ஏரியாப் படங்களே இன்று போடுகிறேன்.

இங்கு பஸ் ஐ விட்டு இறங்கியதும் சைக்கிள் கண்ணில் பட்டுதா.. உடனே ஆசை வந்து விட்டது. இது, இதிலேயே கிரடிட் கார்ட்டைப் பாவிச்சு எடுக்கலாம், திரும்ப கொண்டு வந்து இதில் லொக் ஆக்கி விட்டால் சார்ஜ் பண்ணுவது நிக்கும்.  அரை மணித்தியாலத்துக்கு ஒரு தடவை சார்ஜ் ஏறும்.. அரை மணித்தியாலத்துக்கு 2 டொலர்கள் என நினைவு..



லூதர் கிங் சிலைக்கு எதிர்ப்பக்க வியூ.. ஒரு ஏரிக் கரையில்தான் அவரது சிலை அமைஞ்சிருக்கு.

அங்கிருந்து ஒரு 20 நிமிடம் நடந்தால், அங்கு வியட்னாம் போரில் [என்றுதான் நினைவு] உயிர் நீத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் சிலைகள் சிலது இப்படி அழகாக அமைக்கப்பட்டிருக்கு......
 

நாம் அங்கு போக 2 நாட்கள் முன்னர்தான் [4/ யூலை] அமெரிக்க சுகந்திரதினம் வந்திருந்தமையால், இவை வைக்கப்பட்டிருந்தன.


இது கிட்டத்தட்ட அரைக் கிலோமீட்டருக்கும் கூடிய தூரம் இப்படி இருக்கு, சுவர் கட்டி அதில் இறந்த வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கு, அது மிகவும் சைனிங்காக இருந்தமையால் கமெராவுக்குள் அடக்க கஸ்டமாக இருந்தது.

৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫இடைவேளை৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
ஆஆஆஆஆஆஆ இதில கிளியராக இருக்குது:)) அதாவது ஆருக்கு 6 அறிவு இருக்குது என்பது:)).. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் கண்ணாடி போட்டுப் படிக்கவும் பிளீஸ்ஸ்:))
৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫〄〄〄〄〄〄〄〄〄〄〄৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫

ஆஆஆஆஆ இந்த இடத்தில் தான் Abraham Lincoln Memorial இருக்கு. அதென்னவோ தெரியவில்லை, எங்கட பிரைமறி ஸ்கூல் புக்கில் இவரின் கதை இருந்தது, அப்போ தொடங்கி இவரில எனக்கு நல்ல விருப்பம், அதனால மிக மிக ஆவலாகப் போனேன்...

அங்கிருந்து பார்த்தால் இந்த நினைவுச்சின்னம் இப்படி தெரியும்.. எவ்ளோ அழகாக படம் வந்திருக்கு பாருங்கோ.. மீ எடுத்தது சூப்பரா இருக்குதெல்லோ.. அஞ்சு சொல்லுவா படங்களுக்கு பெயர் பொறியுங்கோ என, ஆனா அனைத்துக்கும் பொறிப்பதில்லை, இதுக்கு என்னமோ பொறிக்காமல் விட மனம் வரவில்லை. இதன் மற்றப் பக்கம் தான், போனபதிவில் படம் போட்டு, அங்குதான் காற்று மழையில் அகப்பட்டோமே.. இது அதுக்கு எதிர்ப்பக்கம். அதே நேரம் லிங்கன் மெமோரியல் வாசலுக்கு  நேர் எதிரே அமைஞ்சிருக்குது.. தண்ணீரில் விம்பம் தெரியும் அழகைப் பாருங்கோ...


ஆஆஆ இதுதான் அவரது நினைவிடம், எனக்கு என்னமோ இதைப் பார்க்க ஒரே கவலையாக இருந்தது... வெய்யில் பக்கம் என்பதனால் படம் இருட்டாக இருக்கு. அருகில் எயார்போர்ட் இருப்பதனால் நிமிடத்துக்கு ஒரு பிளேன் போய்க்கொண்டிருந்துது... கீழே வீடியோவில் அழகாக எடுத்திருக்கிறேன் என்பதனால், அதிகம் படம் இணைக்கவில்லை.

ஸ்ரீராம் சொன்னமையால், இப்போ வீடியோவின்போது நானாகப் பேசுகிறேன்:), என்னமோ எல்லாம் ஹா ஹா ஹா:)).. ஆனா குரலைக் கேட்டு, புதுப்படத்துக்கு பாடச் சொல்லி இளையராஜா அங்கிள் ஃபோன் மேல் ஃபோன் போடுகிறார்:)).. எனக்கு நேரமில்லை வெரி சொறி எனச் சொல்லிட்டேன்ன்:)).. ஆஆஆ ஓடாதீங்கோ:)) பார்த்திட்டு ஓடலாம்:)) ஹா ஹா ஹா

இது உள்ளே அவரது சிலை, பென்னாம் பெரிதாக அமர்ந்திருக்கிறார்.. உங்களுக்கும் கவலையாக இருக்கோ?... 
===================================

இது ஏற்கனவே பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தேன் அது கனடா பற்றி, இது வோஷிங்டன் ரொயிலெட்:)). என்ன கொடுமை எனப் பாருங்கோ, அமெரிக்கா, கனடாவில் ரொயிலெட்ஸ் எல்லாம், இவ்ளோ இடைவெளியாக இருக்கும், உள்ளே நிற்பவரை வெளியே தெரியுது, வெளியே நிற்பவரை உள்ளே தெரியுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதுவும் பெரிய இடைவெளி:))

மேலே இருப்பது கதவு இடைவெளி, இது கீழே, கால் பகுதியில் ஒரு அடி உயரத்திலிருந்தே மறைப்பு வருது கர்:)), படத்தில் புரியவில்லை, அதனால கீறியிருக்கிறேன் பாருங்கோ.. தாராளமாக வெளியே இருந்து குனிஞ்சு பார்க்கலாம் ஹையோ ஹையோ:)).. இங்கு எனில் இப்படி இல்லை, இடைவெளியே இருக்காது.

இதைக் கொஞ்சம் பாருங்கோ, இது அங்கிருந்த ஒரு ரோட், மேலேயும் ரோட் போகிறது, அதனால இது பாலத்தின் கீழே இருப்பதைப்போல இருக்கு.. இந்த மேல் பகுதியைப் பாருங்கோ மிக அழகாக தொங்கும் பல்ப்புகளால் அலங்கரித்திருக்கிறார்கள், இது மெயின் ரோட் அல்ல, ஆனா கார் எல்லாம் போகிறது.. உற்றுப் பாருங்கோ.. குட்டிக் குட்டி ரெண்ட் தெரிகிறதா. இங்கு ஹோம் லெஸ் பீப்பிள் வாழ்கிறார்கள்.. மிக ஆச்சரியமாக இருந்தது பார்க்க.


ஆஆஆஆஆ இது அஞ்சுவுக்காக வாங்கி வந்தேன்:)[பிறகு ஆரும் சொல்லிடக்கூடாதெல்லோ, அஞ்சுவுக்கு மீ ஒண்டும் வாங்கி வரேலை என:)] எமெரெல்ட் உம் வைரமும் கலந்து.. நெக்லெஸ்... அஞ்சூஊஊ லொக்கரில் வைக்காமல் போட்டுக்கொண்டு எங்கள் புளொக் வரவும் கொமெண்ட்ஸ் போட:))[இதுபற்றிய விபரம் இன்னொரு பதிவில்...]

ஊசி இணைப்பு:)

 அடுத்த தொடரில் வர இருப்பது:)- ஸ்ஸ்ஸ்ஸ் என்னை ஆரும் பின்னால கூப்பிட வாணாம்:).. மீ ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணப் போய்க் கொண்டிருக்கிறேன்ன்:)).. முன்னே வச்ச காலை பின்னே வைக்க மாட்டேன்ன்ன்:))

ஊசிக்குறிப்பு
+++++++++++++++++__()_-++++++++++++++++

131 comments :

  1. தலைப்பை படக்குனு "வாஷிங்மிஷினில் அதிரா" அப்படினு படிச்சுட்டேன் ஸாரி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ...

      //"வாஷிங்மிஷினில் அதிரா" //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

      Delete
    2. ஆமா இல்ல, நானும் அப்படித் தான் படிச்சுட்டேன். :P:P:P

      Delete
    3. //ஆமா இல்ல, நானும் அப்படித் தான் படிச்சுட்டேன். :P:P:P//

      என்னா ஒரு ஜந்தோசம்:)).. அப்பாடா அதிரா வோஷிங் மெஸினில காலியாகிட்டா ஹை ஜாலி என நினைச்சிட்டீங்க கர்:)) அதுதான் நடக்காது:)) ஹா ஹா ஹா.. நான் இருந்து தொல்லை தருவேன்:))

      Delete
  2. விவரங்கள் சுவாரஸ்யம் ஆனால் இணையம் பிரச்சனை படங்கள் ஒன்றுமே திறக்கவில்லை காணொளியும் பிறகு காண்பேன்.

    //இளையராஜா அங்கிள் ஃபோன் மேல் ஃபோன் போடுகிறார்//

    உங்களுக்கு பாடுவதற்கு அவர் சான்ஸ் தருகிறார் போலும் ஓகே.

    ஆனால் ???

    அவருக்கு சான்ஸ் கொடுக்க ஆளில்லையே...

    சரி டிரம்செட் வாசிச்சுட்டு வாங்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஅ கில்லர்ஜி என் புளொக் வழக்கப்படி 1ஸ்ட்டா வந்த உங்களுக்கு ஏதாவது தரோணுமே:))... ஆஆஆஆ அந்த சைக்கிளில் ஒன்று உங்களுக்கே.. அதில உங்கட ஊரணியைச் சுற்றீஈஈஈஈச் சுற்றி ஓடுங்கோ:)) ஹா ஹா ஹா.

      //அவருக்கு சான்ஸ் கொடுக்க ஆளில்லையே...//
      இதென்ன புயுக் கதை:)) அதிரா பாடினாலே அவருக்கு சான்ஸ் வந்து டோரைத் தட்டுமே:)).

      //சரி டிரம்செட் வாசிச்சுட்டு வாங்க நன்றி.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      சரி சரி நெட் ஓகேயானதும் படங்கள் பாருங்கோ. மிக்க நன்றி.

      Delete
  3. [im]https://media3.giphy.com/media/9Pk8DGoB7XPbNGkOdl/giphy.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. அடடே ஜெரி ஸ்டைலா இருந்து ஊஸ் குடிக்குதே:)).. என் புளொக் வழக்கப்படி 2 வதா வருவோருக்கு என் கண்ணின் மணியான சமைக்கும் ஆயாவைக் குடுத்தனுப்புவேனெல்லோ:))).. அதுக்குத்தான் ஜெரி ரெடியாகுது போல:))..

      வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஏன் இவ்ளோ லேட்டூஊஊஉ?:) சரி சரி ஆயா பத்திரம், என்னோட கோபத்தை ஆயா மேல காட்டிடாதீங்க.. பொசுக்கெனப் போயிடுவா ஹா ஹா ஹா:))

      Delete
  4. நான் ரிவர்ஸில் இருந்து வர்றேன் :)
    தீமையை விட்டு விலகுவது எப்படி ?
    நாம் விலகினாலும் அது தொடருதே ஏன் ?
    சரீஈ தீமை என்றால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. //சரீஈ தீமை என்றால் என்ன ?//

      ச்சோ சிம்பிள் உதாரணம்.. தீமை என்றால் அதிராவுக்கு எதிர்க்கருத்து:)) ஹா ஹா ஹா. இந்தப் பதில் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமோ:)).

      //நாம் விலகினாலும் அது தொடருதே ஏன் ?//
      ஹா ஹா ஹா முற்பிறப்பின் பயனாக இருக்குமோ என்னமோ:))

      Delete
  5. // ஸ்ஸ்ஸ்ஸ் என்னை ஆரும் பின்னால கூப்பிட வாணாம்:).. மீ ட்றம்ப் அங்கிளை மீட்//

    ஹாஹா எல்லாரும் வாயினால் கூப்பிடுவாங்க இல்லை கையை தட்டி கூப்பிடுவாங்க இவ்ளோ ஏன் உங்க ட்ரம்ப் அங்கிள் மெலனியாவை தன காலை தட்டி கூப்பிட்டாராம் :) இருங்க மெகா சைஸ் pin வாங்கிட்டு வந்து கூப்பிடறேன் உங்களை

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆவ்வ்வ்வ்வ் ஒரு சிம்பிள்:) பின்னுக்கு இவ்ளோ அர்த்தம் இருக்கா ஹா ஹா ஹா எப்பூடில்லாம் ஒசிக்கினம்:)).

      //இருங்க மெகா சைஸ் pin வாங்கிட்டு வந்து கூப்பிடறேன் உங்களை//

      [im] https://cf.ltkcdn.net/cats/images/std/160383-425x283-cat-hiding.jpg [/im]

      Delete
    2. [im]https://i.ebayimg.com/images/g/atMAAOSwvp5ZhLM~/s-l640.jpg[/im]

      Delete
    3. https://i.ebayimg.com/images/g/atMAAOSwvp5ZhLM~/s-l640.jpg

      pin படம் தெரிலன்னா இந்த லிங்கை தொடுங்க

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    5. ம்ஹூம்ம் அது நல்லாத்தெரியுதே:)) பத்திரமா வச்சிருங்கோ அஞ்சு.. இங்கின நமக்கு தேவைப்படும் அப்போ கேய்க்கிறேன்ன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    6. /ஹாஹா எல்லாரும் வாயினால் கூப்பிடுவாங்க இல்லை கையை தட்டி கூப்பிடுவாங்க இவ்ளோ ஏன் உங்க ட்ரம்ப் அங்கிள் மெலனியாவை தன காலை தட்டி கூப்பிட்டாராம் :) இருங்க மெகா சைஸ் pin வாங்கிட்டு வந்து கூப்பிடறேன் உங்களை///
      அஞ்சூஊஊ சிரிச்சு முடியல...
      எம்மாம்ம்ம் பெரிய்ய்ய pin

      Delete
    7. @ priyasaki
      அஞ்சூஊஊ சிரிச்சு முடியல...
      எம்மாம்ம்ம் பெரிய்ய்ய pin////

      http://memees.in/funnyimages/memees.php?w=650&img=dmFkaXZlbHUvYW5ncnktdmFkaXZlbHUtZmFjZWJvb2stMjAxNjA5MDgxNTUzMjYuanBn

      Delete
    8. @பிரியா ஹாஹாஹா அதுதான் உங்களுக்கு தெரியணும்னே ரெண்டு லிங்கும் கொடுத்தேன் :)

      Delete
  6. ஊசி இணைப்பு :)) ஹாஹா ஆகா மொத்தம் எல்லாரையும் சொல்லிட்டிங்க
    ஹலோ எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க பூஸார் அந்த நகை வைச்ச பெட்டியை மட்டுமே எனக்கு அனுப்பினாங்க .இன்னும் நெக்லஸ் வந்த்து சேரல்ல

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம்ம்.. நேற்று நீங்க எனக்கனுப்பின செல்பில இருந்துதே:) அதை நான் டக்கென நெல்லைத்தமிழனுக்கு வட்ஸப் ல அனுப்பிட்டேன்:)).. அவர் சாட்சிக்கு வருவார் நாளைக்குப் பாருங்கோ:))

      Delete
  7. [im]https://media2.giphy.com/media/dUDKnsLAEn8R2/source.gif[/im]

    அந்த தரை டைல்ஸ் பார்க்க mine craft மாதிரியே குட்டியூண்டா இருக்கு
    வில்லங்கம் புடிச்ச குண்டு பூனை :) அது லேடிஸ் ரெஸ்ட் ரூம்தானே அங்கே யார் பாக்கப்போறா :)
    இவ்ளோ ஆராய்ச்சி தேவையா படமெல்லாம் எடுத்து :))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. ///அது லேடிஸ் ரெஸ்ட் ரூம்தானே அங்கே யார் பாக்கப்போறா :)//
      ஆஆஆஆஆஆஅ இந்தக் கொடுமையைக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையா:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) லேடீஸ் பார்த்தாலும் ஷை தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்பூடியே தெரியுது அஞ்சு ஹா ஹா ஹா...
      ஏன் படமெடுத்தேன் எனில் ட்றம்ப் அங்கிளுக்கு அடுத்த மீட்டிங்கில் சொல்லப்போறேன்ன்ன்:))

      Delete
  8. //குட்டிக் குட்டி ரெண்ட் தெரிகிறதா//

    tent

    அமெரிக்கா என்னா இங்கிலாந்தென்ன எல்லா இடத்திலும் ஹோம்லெஸ் உண்டு .இதில் நிறையபேருக்கு அம்மா அப்பா இருந்தும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இப்படி ஆவோரும் உண்டு இன்னும் சிலருக்கு மன சிதைவால் மூடிய அரைக்கும் இருக்க முடியாததால் இப்படி வெளியில் தங்குறாங்க .வேலை செய்றா இடத்தில பகல் நேரத்திலும் அறையில் 4 விளக்குகளை ஆன் செய்யவைத்தே இருக்கு ஒரு 20 வயது ஆண் .

    ReplyDelete
    Replies
    1. //tent //

      மீ டமில்ல அழகாக எழுதிட்டேனெல்லோ:)) ஹா ஹா ஹா..

      உண்மைதான் அஞ்சு, ஆனா நம்ப முடியல்ல. கனடாவிலும் பார்த்தேன் ஒரு பில்டிங் கை ஒதுக்கிக் குடுத்திருக்கிறார்கள் அரசாங்கமே.. drugs எடுப்போருக்காக.. நான் நினைக்கிறேன், மருத்துவச் செலவைவிட இது மலிவென அரசாங்கம் நினைக்குதோ என்னமோ...

      Delete
  9. //ஆனா குரலைக் கேட்டு, புதுப்படத்துக்கு பாடச் சொல்லி இளையராஜா அங்கிள் ஃபோன் மேல் ஃபோன்//
    அம்மாடீ எனக்கு காது கேக்காம போச்சே ரெண்டு நிமிஷம் முன்னாடி கூட கேட்டுச்சு அஆம்புலன்ஸ் ஆம்பு கம்

    ReplyDelete
    Replies
    1. //அம்மாடீ எனக்கு காது கேக்காம போச்சே ரெண்டு நிமிஷம் முன்னாடி கூட கேட்டுச்சு அஆம்புலன்ஸ் ஆம்பு கம்//
      எதுக்கஞ்சு அம்பியூலன்ஸ்:)))).. மீ பாடத் தொடங்கிட்டால்ல்.. அடைபட்ட காதிலெல்லாம் அடைப்பு நீங்குமே:))... பாடட்டோ?:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. "ஆம்பூ கம்" - இப்படிக் கத்தும்போது, பாம்புக்கு வேற மாதிரி கேட்டு 'பாம்பு கம்' என்று நினைத்து வீட்டுக்குள்ள வந்துடப்போகுது....ஜாக்கிரதை

      Delete
    3. //பாம்புக்கு வேற மாதிரி கேட்டு 'பாம்பு கம்' என்று நினைத்து வீட்டுக்குள்ள வந்துடப்போகுது....ஜாக்கிரதை//

      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்.. மீயும் அப்பூடித்தான் நினைச்சேன் கொமெண்ட் படிச்சதும், ஆனா பதில் போடும்போது சொல்ல மறந்திட்டேன்ன் ஹா ஹா ஹா... ச்ச்ச்சும்மா போற அப்பாவிப் பாஆஆஆஆம்பை எல்லாம் வலியக் கூப்பிட்டுக் கொண்டு கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  10. லின்கன் மெமோரியல் அழகா படமெடுத்திருக்கிங்க .நம்ம ஸ்கூல்ஸில் பெரும்பாலும் வெள்ளையர் பட்ட கஷ்டங்கள் பற்றிய கதைகளை சொல்லியே உச் சொல்ல வச்சிட்டாங்க ஆறாம் வகுப்பில் லிப்ட் மேன் அப்புறம் கிங் லியர் ,அப்புறம் சொலிட்டேரி ரீப்பர் ,நட்பை பார்க்கப்போனப்போ நண்பன் பூஞ்சை பிடித்த சீஸ் கொடுத்த கதை இப்படி அழ வச்சிருக்காங்க அதாலோ என்னவோ எல்லாம் மனசை விட்டு நீங்கல ..பாருங்க 60 வருஷம் முன்னாடி படிச்சது இன்னும் உங்களுக்கு நினைவில் இருக்கே :))

    ReplyDelete
    Replies
    1. சில சில பெரியவர்களில் எனக்கு படுபயங்கர அன்பு.. அது ஏன் வந்துது எப்படி வந்துதெனத் தெரியாது.. அந்த வரிசையில்தான் பூட்டோ, கடாபி எல்லாரும் அடங்குவர்.

      //பாருங்க 60 வருஷம் முன்னாடி படிச்சது இன்னும் உங்களுக்கு நினைவில் இருக்கே :))//
      சொந்தச் செலவிலேயே சூனியம் வச்சிட்டமோ:))

      [im] https://tse4.mm.bing.net/th?id=OIP.uiS2r_4aFh11c-OSZ-WQSQHaEy&w=230&h=170&rs=1&pcl=dddddd&o=5&pid=1.1 [/im]

      Delete

  11. க்கிந்த வார் மெமோரியல்செல்லாம் பார்க்க பிடிக்கவே மாட்டது வர வர

    அது வியட்நாம் இல்லை மியாவ்
    கொரியன் war veterans மெமோரியல்னு கூகிள் ஆன்டி சொல்றாங்க

    மனுஷன் மட்டுமே எல்லாத்துக்கும் போட்டி போட்டு அடைய ஆசைப்பட்டு கேவலப்பட்டு போகும் ஜென்மம்

    ReplyDelete
    Replies
    1. //அது வியட்நாம் இல்லை மியாவ்
      கொரியன் war veterans மெமோரியல்னு கூகிள் ஆன்டி சொல்றாங்க//

      அது நான் இடம் மாறிப்போட்டிட்டேன் அஞ்சு.. கொஞ்சம் கொன்ஃபியூஸ்ட்.

      அந்த வீரர்களுக்கு கீழே சுவரில் பெயர்கள் எழுதப்பட்ட படமிருக்கிறதே அதுதான் வியட்னாம் போரால் இறந்தோர்..

      இதுக்கு நீங்க சொன்னது சரி..

      //மனுஷன் மட்டுமே எல்லாத்துக்கும் போட்டி போட்டு அடைய ஆசைப்பட்டு கேவலப்பட்டு போகும் ஜென்மம்//

      போட்டி இருந்தால்தானே முன்னேற முடியும்:)) ஆனா இது ஓவர் ஆசை:))

      Delete
  12. ஹா ஹாங் பெண்களால் மட்டுமே மல்ட்டி டாஸ்கிங் இயலும் :)
    இதில் மாற்றுக்கருத்தே இல்லை :)

    ReplyDelete
    Replies
    1. http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20190417112150.jpg

      Delete
    2. [im]https://media1.tenor.com/images/a1705a7e2e6ad09f8c6f801b0af080a8/tenor.gif?itemid=7525573[/im]

      Delete
    3. உண்மைதான். அந்த மல்டி டாஸ்கில் எத்தனை உருப்படி என்று பார்த்தால் ஒண்ணுமே உருப்படியா இருக்காது. வெறும்ன சொன்னா புரியாது.

      அச்சப்பம் செய்யறது ஒரு டாஸ்க். அம்மா அப்பாவோட போன்ல கதைக்கறது, தொலைக்காட்சி சீரியல் பார்க்கறது, அப்படியே அப்போ அப்போ இணையத்துல கோகிஷா தளம் பார்க்கறதுன்னு நீங்களும் மல்டி டாஸ்கிங்லதான் இருக்கீங்க. கடைசில ஒரு டாஸ்கும் வராம, கணவர் வந்து அச்சப்பம் செய்யவேண்டியிருக்கு.

      இதுல லேடீஸ் மல்டி டாஸ்கிங் என்று பெருமை வேற..

      Delete
    4. //நெல்லைத்தமிழன்Friday, August 30, 2019 6:06:00 am
      உண்மைதான். அந்த மல்டி டாஸ்கில் எத்தனை உருப்படி என்று பார்த்தால் ஒண்ணுமே உருப்படியா இருக்காது. வெறும்ன சொன்னா புரியாது.///

      நாங்க இப்பூடி மல்ட்டி ராஸ்க்கில இருப்பதனாலதான்.. ஜொந்தோம் பந்தோம் எல்லாம் விட்டுப்போயிடாமல் மெயிண்டைன் பண்ணுறோமாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ////அப்போ அப்போ இணையத்துல கோகிஷா தளம் பார்க்கறதுன்னு ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா புகை புகையுதூஊஊஊஊஊஊஊ:))..

      “மண்ணில் மங்கையாய்ப்பிறக்க மாதவம் செய்திட வேண்டுமம்மா”:) என எங்கட ஒளவைப்பாட்டி அப்பவே ஜொள்ளிட்டா தெரியுமோ?:)).. ஹா ஹா ஹா ஹையோ என்னை விடுங்கோ மீ ரொம்ப பிஸி:))

      Delete
    5. @நெல்லைத்தமிழன் அது என்னன்னா பேசிக்கலி சந்தோஷத்தில் பெரிய சந்தோசம் எதுன்னா பூனை வாலை காலை வாரி விடுதல் அதனாலேயே மல்ட்டி டாஸ்க்கிங்கில் முதலிடம் கோகிஷாவுக்கு :)

      Delete
    6. ஸ்ஸ்ஸ்ஸ் சாமீ இவர் இன்னும் அந்த அச்சப்பத்தை மறக்க மாட்டேங்கிறாரே :) என்ன செய்யலாம் ..அநேகமா தேவதை கிச்சனை தூசி தட்டறதே நல்லதுன்னு நினைக்கிறன் :)
      அப்புறம் நெல்லை தமிழன் ஒரு நேயர் விருப்பம் சுலபமா செய்யும் பொடி வகைகள் ரெசிப்பி உடனடியா தேவை எனக்கு

      Delete
    7. ///அப்புறம் நெல்லை தமிழன் ஒரு நேயர் விருப்பம் சுலபமா செய்யும் பொடி வகைகள் ரெசிப்பி உடனடியா தேவை எனக்கு//

      அஞ்சு முதல்ல அந்த “நேயர்” பெண்ணோ ஆணோ எனச் சொன்னால்தான், நெல்லைத்தமிழன் உடனேயேயா அல்லது தாமதப்படுத்துவதோ என முடிவெடுப்பாராக்கும்:)).

      //அநேகமா தேவதை கிச்சனை தூசி தட்டறதே நல்லதுன்னு நினைக்கிறன் :)///

      இண்டைய போஸ்ட்டில வெங்கட் போட்ட கண்ணதாசன் வரிகள் கண் முன்னே வருகின்றன.. ஹா ஹா ஹா நில்லுங்கோ வாறேன்ன் சுட்டுக்கொண்டு:)).. ஹா ஹா ஹா:))

      ///கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும் – கவிஞர் கண்ணதாசன்.////

      நீங்க டேவடையை தூசு தட்டுங்கோ:))

      Delete
  13. //ஃபிறீ சேவை இருந்ததனால், டெய்லி கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதலாகப் பார்க்க முடிஞ்சுது. இப்படி எல்லா நாடுகளுக்கும் கொண்டு வந்தால் நல்லா இருக்கும்.. இது பற்றி ட்றம்ப் அங்கிளோடு பேசோணும்:).//

    ஆங் அப்டியே எங்க ஜானி அங்கிள் கிட்டயும் பேசுங்க அதோட அந்த சைக்கிளில் காரியர் வைக்க சொல்லுங்க நான் உக்காந்துட்டு வருவேன் :)

    ReplyDelete
    Replies
    1. //அதோட அந்த சைக்கிளில் காரியர் வைக்க சொல்லுங்க நான் உக்காந்துட்டு வருவேன் :)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சைக்கிள் உருட்டவாவது தெரியுமோ?:))

      [im] https://i.ytimg.com/vi/ibZlqSOrelw/hqdefault.jpg [/im]

      Delete
    2. haaahaaa :) soooooooo chweet super

      Delete
    3. ஆ..அஞ்சு நீங்க உங்கட புது அங்கிளை மறந்திட்டீங்களோ. Boris uncle தானே.இது யாரு ஜானி அங்கிள்.

      Delete
    4. ஸ்ஸ்ஸ்ஸ் ப்ரியா :) அவர்தான் அது போரிஸ் ஜான்சன் ஜான்சனை ஜானி அங்கிள் ஆக்கி கூப்பிட்டேன் :)

      Delete
  14. சொர்க்கமே என்றாலும் // வித்யாசமா லிரிக்ஸ் மாற்றி பாடியிருக்கார் சில வரிகள் கோஹினூர் வைரம் சாஃப்ட் வேர் ஐடி ஊழியர்கள்னு ..எனக்கு எப்பவும் பிடிச்ச பாட்டு இது

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான் அஞ்சு ஆனா இதை விட அவர் பாடும்... நான் தேடும்ம்ம்ம் செவ்வந்திப்பூவிது.. நாள் பார்த்து அந்தியில் பூத்தது... அதுதான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. 100 தடவைகளாவது கேட்டிருப்பேன்.

      மிக்க நன்றி அஞ்சு.. நெக்லெஸ் பத்திரம்:)) இப்போ கண்ட நிண்ட பாட்டுக்கு களவு நடக்குதாமே:))

      Delete
  15. பாடல் அருமையான பாடல். ஆரம்ப இசையே துள்ளிசை. இளையராஜா பாடலை ஆரம்பிப்பதே உச்சஸ்தாயியில். நல்ல பாடல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      மிக்க நன்றி.. பொதுவா இப்பாடலை விருப்பாதோர் இருப்பது குறைவே.

      Delete
  16. எல்லா நாடுகளிலும் அந்த வசதியைக் கொண்டுவர ட்ரம்ப் அங்கிள் என்ன செய்ய முடியும்? அவரவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். ஆனால் மனம் வராதே...

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் மனம் வராதே...//

      உண்மைதான் ஸ்ரீராம், ஆனா நம் நாடுகளில் இப்படி ஆரம்பித்தால் பல கட்டுப்பாடுகள் போட வேண்டி வரும், இல்லை எனில் ஸ்கூலுக்கு வேர்க்குக்கு எல்லாம் இந்த பஸ் ஐ யூஸ் பண்ணி, உல்லாசப்பயணிகளுக்கு இடமிருக்காது பிறகு ஹா ஹா ஹா.

      Delete
  17. இரு பக்கமும் டிரெயின் நிற்கும் படம் அழகு.இந்தக் காட்சியை இப்போது சென்னையில் கூட பார்க்க முடிவது சந்தோஷம்!

    ReplyDelete
    Replies
    1. இரு பக்கமும் எதிரெதிரே ரெயின் போகும் வீடியோவும் எடுத்தேன், இருக்கு.. அடுத்தமுறை போடுறேன்ன்.

      அது என் கவிதையை நினைவுபடுத்தியது...”நீயும் என்னைக் காதலித்தாயா”.. எனும் தலைப்ப்பில் இங்கு போஸ்ட் போட்டிருக்கிறேனே.. நீங்களும் படிச்சீங்க.. அதை.

      Delete
    2. படத்தில் இருப்பது அண்டகிரவுண்ட் பிளாட்ஃபோம்..

      Delete
  18. ரக்ஷி என்றால் டாக்சிதானே? அய்... கண்டு பிடிச்சுட்டேன்! சைக்கிள் ஏற்பாடு சூப்பர். அதை எடுப்பதிலும் என்ன ஒரு தெக்கினிக்கி...! சைக்கிள் நினைவுகள் வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ் அது “ரக்‌ஷி ” ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.. இப்படியும் சொல்லலாம் இல்லாட்டில் நீங்க சொன்னதுபோலவும் சொல்லலாம்ம்ம் ஹா ஹா ஹா:))..

      அடிக்கடி இப்படி சைக்கிள், ஸ்கேட் போர்ட், electric scooter, மற்றும் இன்னொன்று ~self balancing scooter~.. இப்படி அனைத்தும் வாடகைக்கு எடுக்கலாம், ஆனா இந்த செல்ஃப் பலன்ஸிங் ஸ்கூட்டரில் போக ஆசையாக இருந்தது, அது ஓன் லைனில் புக் பண்ணி பே பண்ணினால்தான் கிடைக்குமாம், உடனே எடுக்க முடியாதாம் என்பதால் எடுக்க முடியவில்லை, அதை ஒருநாளும் ஓடிப்பார்த்ததில்லை, ஆனா மக்கள் அதில் போவதைப் பார்க்க ஆசையாக இருந்தது, பெரிய ஜீப் சைஸ் வீல்கள்.. படம் போடுறேன் பாருங்கோ link.... இதில் இன்னொரு வசதி, எங்கு எடுத்தாலும் , அங்குதான் திரும்ப விடவேணும் என்றில்லை.. எந்த பார்க்கிலும் விட்டு விடலாம்..

      https://www.holamalls.com/images/Sports%20Outdoors/HOLAMMH00389_13.jpg

      Delete
  19. உயிர் நீத்த வீரர்களின் சிலைகள் அழகு. இங்கு வார் மெமோரியல் என்று சொல்லி வெறும் கற்கள்தான் நட்டிருப்பார்கள். இது நன்றாயிருக்கிறது. ஒருவரையாவது க்ளோசப்பில் எடுத்திருக்கக் கூடாதோ....

    ReplyDelete
    Replies
    1. //இங்கு வார் மெமோரியல் என்று சொல்லி வெறும் கற்கள்தான் நட்டிருப்பார்கள்.//
      உண்மைதான் இப்படி நோஷிங்டனில் மட்டும்தான் பார்த்தோம்ம்.. வேறு எங்காவது இருக்கோ தெரியவில்லை.

      //ஒருவரையாவது க்ளோசப்பில் எடுத்திருக்கக் கூடாதோ....//
      எனக்கு இப்படி இடங்கள் மியூசியங்கள் விருப்பமில்லை+ஒருவித பயம் ஸ்ரீராம், ஆனா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இப்படியான விசயம் தான் ரொம்பப் பிடிக்கும் கர்:)).. நான் சொல்லுவேன், நான் இதிலே இருந்து இந்த குருவி, பூக்கள், தண்ணி இவற்றைப்பார்த்துப் படமெடுக்கிறேன், நீங்க உள்ளே போய் வாங்கோ என.. விடவே மாட்டினம்.. அதிலும் மூத்தவர் விடவே மாட்டார்ர்.. வரச்சொல்லி அடம்பிடிப்பார்ர்.. அப்போ நானும் லெவலாக போவேன்ன் ஹா ஹா ஹா.. கொஞ்சம் பயத்தினாலேயே குளோஸ் ஆக படமெடுக்கவில்லை, ஆனா இங்கே ஆரிடமாவது தங்கள் கமெராவில் இருக்கலாம்.. இருப்பின் இணைக்கப் பார்க்கிறேன்.

      Delete
  20. அந்த ஆண்- பெண் கண்டுபிடிப்பு அநேகமாக ஒரு பெண்ணால் எழுதப்பட்டிருக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஒத்துக்கொள்ள, எவ்ளோ கஸ்டப்படுறீங்க என்பது புரியுது ஹா ஹா ஹா:))

      Delete
  21. பெயர் பொறித்த படத்துக்கு அடுத்த படம் வெகு அழகு. மேகக்கூட்டங்களும், அந்தக் கட்டிடமும், பறக்கும் ஒரு விமானமும்...

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா, அது இருட்டாக இருப்பதனால் நான் நினைச்சேன் பலரும் விரும்ப மாட்டார்கள் என, அப்படி பிளேன்கள் போனபோது நிறையப் படங்கள் எடுத்தேன் ஆனா ஒன்றையே இணைச்சேன்ன்..

      பெயர் பொறிச்ச படம், தண்ணியில் ரிஃபிளெக்ஸ் சூப்பராக இருந்துது.. பின்னேர வெயில் என்பதனால்.

      Delete
  22. வீடியோவில் பேசறீங்களா... இருங்க... ஸ்பீக்கர் ஆன் செய்து கொள்கிறேன்! இளையராஜா அங்கிளா? எனக்கெல்லாம் அவர் தாத்தா!

    முழுத்திரையில் வீடியோ ரொம்ப அழகு. நீங்கள் பேசி இருக்கும் விவரத்தையும் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //வீடியோவில் பேசறீங்களா... இருங்க... ஸ்பீக்கர் ஆன் செய்து கொள்கிறேன்! //
      [im] https://media.tenor.com/images/6523da164dbe88d511a80043e2db78ff/tenor.gif [/im]

      //இளையராஜா அங்கிளா? எனக்கெல்லாம் அவர் தாத்தா!//

      https://lh5.googleusercontent.com/proxy/-O_GhYzm9GM8jF1lAMVcaQBciwFmhrg0JhfC_qJRjq7ZKCWi_Pt8j5sq53KSL3vb_oNVdpxqDAPdSB10XUkTENs1smvz-u18cQxcD74OTdtsrgbYBFB4eax93j8__u4HRyVbBo9vsEOwTL5dZLf2UYAofOQTML6W5qg=s0-d

      //முழுத்திரையில் வீடியோ ரொம்ப அழகு//

      தங்கூ தங்கூ..

      //நீங்கள் பேசி இருக்கும் விவரத்தையும் கேட்டேன்.//
      அப்பாடா கொமெண்ட் ஏதும் சொல்லாததால் தப்பிட்டேன்:).

      Delete
    2. அதுக்கப்புறம் அவருக்கும் காது கேட்கவில்லை என்று NDTV யில் பிளாஷ் நியூஸ் போகுது

      Delete
    3. ஆருகு ஸ்ரீராமுக்கோ அஞ்சு?:)) அது அவருக்கு அந்தப் பிரச்சனை ஏற்கனவே உண்டு என கீதா சொன்னாவே மறந்திட்டீங்களோ?:) ஹையோ கோர்த்து விட்டிட்டேன்ன்.. ஓடுங்கோ அஞ்சு ஓடுங்கோ:)) ஓடிப்போய் தேம்ஸ் கரைத், தேத்தண்ணிக் கடை மேசைக்குக் கீழ ஒளிச்சிடலாம்:)) ஹா ஹா ஹா..

      Delete
  23. //பென்னாம் பெரிதாக அமர்ந்திருக்கிறார்.. உங்களுக்கும் கவலையாக இருக்கோ?... //

    ஆமாம்... அங்கிருந்து அவர் எப்படி இறங்கி வருவார் என்று கவலையாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)) ஒவ்வ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான கவலை:))

      Delete
  24. அடுத்து வரும் படங்கள் என்னால் ரசிக்கப்பட்டன!! அஞ்சுவிற்கான வைர நெக்லெஸ் அருமை.

    நண்பர்கள் லூசு என்பதை இப்படிச் சொல்கிறீர்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்... தீமை எது என்று விளக்கமாகச் சொல்லுங்கள். விலகி இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. //அஞ்சுவிற்கான வைர நெக்லெஸ் அருமை.//
      தங்கூ தங்கூ:) ஆனா ஸ்ரீராம் பாருங்கோ அஞ்சுவுக்கு பழக்கவழக்கம் சரியில்லை:)) ஏனெனில் இவ்ளோ கஸ்டப்பட்டு வாங்கி வந்து குடுத்தேன்.. அதுக்கு தங்கூவும் சொல்லல்ல நன்றியும்:)) ஜொள்ளல்ல அவ ஹா ஹா ஹா:)).

      //நண்பர்கள் லூசு என்பதை இப்படிச் சொல்கிறீர்களா?//
      சே சே லூஸு என்றால் ரொம்பத் தங்கமாவவிங்க:) என அர்த்தம்:)) ஹையோ டமில் படிப்பிச்சே எனக்கு ஆயுசு குறைஞ்சிடும்போல இருக்கே.. பழனிமலைச் சிவனே...

      Delete
    2. //தீமை எது என்று விளக்கமாகச் சொல்லுங்கள். விலகி இருக்கலாம்!///

      உண்மை என்ன தெரியுமோ?:) கடவுள் கிருபையால விலத்தப்பட்டபின்புதானே நமக்கு தெரியும்.. தீமையில் இருந்து விலகிட்டோம் என.. தீமை எனத் தெரிஞ்சுகொண்டு சேர்ந்திருப்போமோ??, இல்லையே:))... அனுபவப் பட்டபின்னர்தான் அனைத்தும் புரியுமாம் ஹா ஹா ஹா.

      கையில் சுட்டபின்புதானே குழந்தைக்கு தெரிகிறது அது நெருப்பு.. தீமையானது இனி விலகி, கவனமாக இருக்கோணும் என...

      சரி இப்போ என் ஊசிக்குறிப்பு க்கு வருவோம்:))....
      இதுக்கு அடுத்தவரின் அனுபவத்திலிருந்துதான் நாம் கண்டு பிடிச்சு விலகோணுமாக்கும்.. ஹையோ மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சூஊஊஊஊ..:)

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
    3. ஹலோ மியாவ் நீங்க கொடுத்தது நெக்லெஸ் பெட்டி மட்டுமே அதில் நெக்லஸ் இல்லை .அது கிடைச்சதும் நன்றீயே சொல்றேன்

      Delete
    4. //ஹலோ மியாவ் நீங்க கொடுத்தது நெக்லெஸ் பெட்டி மட்டுமே அதில் நெக்லஸ் இல்லை//

      உண்மையாவோ அஞ்சு:).. கொஞ்சம் இருங்கோ எனக்கு அம்முலுவிலதான் டவுட்டு டவுட்டா வருது:)).. ஏனெனில் கனடால இருந்து அனுப்பினது ஜேர்மனிக்கு மேலாலதான் வந்தது.. இடையில பிளாக் மணி குடுத்து:)) உடைச்சு எடுத்திட்டாவோ:)).. நில்லுங்கோ ஒருக்கால் ஓடிப்போய் அம்முலுவின் கழுத்தைத்தடவிப்பார்த்து கொன்ஃபோம் பண்ணிட்டு அடிக்கிறேன் கோல்.... இப்போ ஃபோனைக் கட் பண்ணுங்கோ:) ஹா ஹா ஹா.

      Delete
  25. காணொளி பார்த்தேன், அது என்ன அம்புட்டு பயம் உங்களுக்கு! பேசவே பயந்துட்டு இல்ல பேசறீங்க! ஊசிக்குறிப்பெல்லாம் நல்லாவே இருக்கு. அஞ்சு போட்டிருக்கும் படங்கள் உங்க படங்களை விட அழகா இருக்கு. இஃகி,இஃகி! வாஷிங்டன் டி.சி. படங்கள் எல்லாமும் நல்லா இருக்கு. அதென்ன கழிவறையைக் கூட விடாமல் படம் எடுத்திருக்கீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கெல்லாம் யார் வந்து பார்க்கப் போறாங்க?

    ReplyDelete
    Replies
    1. அது பெண்களின் பாதுகாப்புக்காக அப்படி வைத்துள்ளார்கள்.

      Delete
    2. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      //அது என்ன அம்புட்டு பயம் உங்களுக்கு! பேசவே பயந்துட்டு இல்ல பேசறீங்க! //
      ஆஆஆஆஆ அப்பூடியா தெரியுதூ:)).. இப்பவாவது நம்புங்கோ மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆஆவி:)) ஹா ஹா ஹா.

      //அஞ்சு போட்டிருக்கும் படங்கள் உங்க படங்களை விட அழகா இருக்கு.//
      கர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      //அதென்ன கழிவறையைக் கூட விடாமல் படம் எடுத்திருக்கீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கெல்லாம் யார் வந்து பார்க்கப் போறாங்க?//

      ஆரும் வந்து பார்க்கப் போவதில்லை, ஆனா எப்பவும் பிஸியாவெல்லோ இருக்கும்.. வெளியே நின்று ச்சும்மா தலையை திருப்பினாலே கதவு இடுக்கினுள்ளே எல்லாம் தெரியும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கூச்சமா இருக்குமெல்லோ.. ஒரு பிறைவசி இல்லாத்தன்மையாக ஃபீல் பண்ணுவேன் இப்படி இடங்களில்.

      கீழே நெல்லைத்தமிழன் சொன்னதைப்போல, கனடா அமெரிக்காவில் துவக்கோடு திரிவோரும் இருப்பதால், பாதுகாப்புக்காகவே இப்படி செய்திருக்கிறார்களாம் மறைப்பு குறைவாக கர்ர்ர்ர்ர்:))

      Delete
  26. இதிலே வர சுற்றுலாப் பேருந்து மாதிரிச் சென்னையிலும் ஒரு காலத்தில் சென்னையைச் சுற்றிப் பார்க்கவெனப் பேருந்துகளை ஞாயிறன்று விட்டிருந்தாங்க. பத்து ரூபாயோ என்னமோ பயணச் சீட்டு. இஷ்டப்பட்ட இடத்தில் இறங்கிக்கலாம். சுற்றிப் பார்த்துட்டு மறுபடி அதே மாதிரிப் பேருந்தில் ஏறி வேறொரு இடத்துக்குப் போகலாம். யார் ஆட்சியில் இருந்ததுனு மறந்துட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஓ அக்காலத்தில் அப்படி இருந்ததோ.. அறிஞர் அண்ணா.. அண்ணாதுரை அந்தக்காலமாக இருந்திருக்கும்..

      Delete
  27. வழக்கம் போல் ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் அருமை. அதென்ன அஞ்சுவுக்கு மட்டும் வைர நெக்லஸ்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு தரமாட்டேன் கீசாக்கா ஏனெனில் நீங்க என் போஸ்ட்டுக்கு ஒழுங்கா வருவதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) போன போஸ்ட்டுக்கு வரவில்லைப் பாருங்கோ:)).. அதெப்பூடி அதிராவின் போஸ்ட் மட்டும் கரெக்ட்டாத் தெரியாமல் போகுது:)) ஹா ஹா ஹா சரி விடுங்கோ..

      கீசாக்கா உங்களுக்கும் கொண்டு வந்தேன், ஆனா நீங்க அம்பேரிக்கா போவதால்.. போட்டாலும் பார்க்க மாட்டீங்க:)).. எம்பாலாருக்கு வைரத்தில் உண்டு பொருட்கள்:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  28. இளையராஜா பாடல் பிடித்த பாடல். கேட்டேன். இதை விட சினிமாவில் பாடல் மிக பிடிக்கும்.
    நிறைய சொந்தமாக ஊரின் பெருமையை சேர்த்து இருக்கிறார் போலும். கடைசியாக அவர் சொன்னது சரிதான் அங்குள்ளவர்கள் இங்கு வாழ்ந்த வாழ்க்கையை, ஊரை நினைத்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    ஊர் சுற்றிப்பார்த்தேன் மறுபடியும் உங்களுடன்.

    ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

    படங்கள் எல்லாம் அழகு.

    //தண்ணீரில் விம்பம் தெரியும் அழகைப் பாருங்கோ..//

    பார்த்தேன், ரசித்தேன், அதிராவை புகழ்ந்தேன்.

    நானும் பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..

      உண்மைதான் கோமதி அக்கா, வெளிநாட்டில் இருப்போர் ஊரை நினைத்துத்தான் வாழ்கிறார்கள், ஆனா ஊரில போயிருங்கோ என்றால் யாரும் வரப்போவதில்லை.. இந்த சொகுசு வாழ்வை விட்டு:) இதுதான் உண்மை.

      மிக்க நன்றி கோமதி அக்கா.. வாங்கோ.

      Delete
  29. அழகான இடங்களுக்கு உங்கள் மூலம் நாங்களும் பயணிக்கிறோம்.

    வீடு இல்லா மக்கள் - பாலங்களுக்கு அடியில்... பாவம் தான். அங்கேயும் வறுமை உண்டு என்பதைப் படித்திருக்கிறேன்.

    இனிய சுற்றுலா. ட்ரம்ப் அங்கிள் பார்க்கப் போனது பற்றி படிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      //வீடு இல்லா மக்கள் - பாலங்களுக்கு அடியில்... பாவம் தான்//
      அமெரிக்காவிலும் அதுவும் தலைநகரில்.. இப்படியா.. என எண்ணத் தோணியது...

      //ட்ரம்ப் அங்கிள் பார்க்கப் போனது பற்றி படிக்கக் காத்திருக்கிறேன்//
      ஹா ஹா ஹா வெயிட் பண்ணுங்கோ வரும்.. மிக்க நன்றிகள்.

      Delete
  30. அருமையான படங்கள் மூலம், ஊரை நன்றாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள்...

    அதென்ன காணொளியில், குழந்தையிடம் பேசுவது போலவே...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ...

      //ஊரை நன்றாக சுற்றிக் காண்பித்து விட்டீர்கள்...//
      மிக்க நன்றி.. இன்னும் நிறைய இருக்கு:)..

      //அதென்ன காணொளியில், குழந்தையிடம் பேசுவது போலவே...!//

      ஹா ஹா ஹா அப்படியா இருக்குது.. ஸ்கூலில் சொல்லிக்குடுப்பதைப்போல இருக்கோ ஹா ஹா ஹா.. நான் இப்படித்தான் பேசுவேன்.. இனியும் நிறையக் காணொளிகள் வரப்போகுது.. அதையும் கேட்டுவிட்டு... ஒரு முடிவுக்கு வரலாம்:))

      Delete
  31. பெண்களின் வலிமைகளில் ஒன்று :-

    பெண் புத்தி பின் புத்தி...

    பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்...

    ReplyDelete
    Replies
    1. //பெண் புத்தி பின் புத்தி...//

      நானும் இதுபற்றி ஒரு போஸ்ட் முன்பு போட்டிருக்கிறேன்ன்.. அத்தோடு பெண்களுக்கு உள்ளுணர்வு இண்டியூஷனும் அதிகம்:))..

      நெல்லைத்தமிழன் கேய்க்குதாஆஆஆ:)) ஹா ஹா ஹா.

      நன்றி டிடி.

      Delete
  32. எனக்கும் இந்த பாட்டு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும் அதைவிட நீங்க சொன்ன செவ்வந்திப்பூ அதைவிட பிடிக்கும். என்க்கென்று கலெக்‌ஷன் வைத்திருந்து காரில் கேட்டிக்கொண்டேபோவேன். மல்லிகைபூவிற்கு ஈடாக ஏது. அதில் சித்ரா படித்திருப்பாங்க ஒரிஜினலில்.. இதில் சாதனா சர்கம் பாடுறாங்க. எனக்கு இவங்களையும்,ஸ்ரேயா கோஷலையும் பிடிக்கும் மிக. தமிழ் தெரியாது ஆனா என்னா அழகா தமிழை உச்சரிப்பாங்க. இதில சாதனா சர்க்கத்தை பார்க்க உங்களை மாதிரி இருக்காங்க அதிரா. ஹா..ஹா.
    படங்கள் எல்லாமே சூப்ப்ப்ப்ப்ப்பரா இருக்கு அதிரா. உங்களுடைய பேவரிட் படத்தில் பெயரை கொஞ்சம் கீழே எழுதியிருக்கலாமெல்லோ. எனக்கும் ரெம்ப பிடிச்சு போச்சு. லூர்தகிங் சிலைக்கு எதிர்பக்கம் வியூ படம் சூப்பர் ஷொட், இருபக்க மரங்கள் படத்தில் நிறைய டக் இருக்கினம் இதுவும் அழகா இருக்கு.
    இங்கும் இருக்கே ஈ பைக் முறை . பெரிய சிட்டியில் இந்த ஈ பைக் ல்தான் கூடுதலானவர்கள் வேர்க் போகிறார்கள். உடம்புக்கு பிட்னெஸ்,பணத்துக்கு சேவ்,சூழல் பாதுகாப்பு.. இப்ப கம்பனிகளில் கூட அரைவாசி விலையில் டீலிங் ல் கொடுகிறார்கள். கொஞ்சம் விலை கூடிய பைக். பணத்தை மாதாமாதம் கொஞ்சமா கழிப்பார்கள். எங்க வீட்டிற்கும் ஒன்று வந்துவிட்டது. முக்கியமாக சூழல் பாதுகாப்பு..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு.. கொஞ்சம் லேட்டா வாறேன் திரும்ப.. அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கோ:))

      Delete
    2. @அம்முலு
      //ஆனா என்னா அழகா தமிழை உச்சரிப்பாங்க. //
      ஊ மீன்ன்:)) அதிராவைப்போல எனச் சொல்லுங்கோ::))..

      சொந்தமாக பொதுவா அனைத்து இடங்களிலும் பைக் வைத்திருக்கிறார்கள்தான் அம்முலு.. ஆனாலும் வீட்டில் ஓடுவதை விட, புது இடங்களில் ஓடுவதிலும் ஒரு அலாதி மகிழ்ச்சி:)..

      உங்கள் வீட்டுக்கும் வந்துவிட்டதோ?:) ஹா ஹா ஹா அப்போ அம்முலு பைக்குடன் ஒரு செல்ஃபி பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.

      Delete
  33. // நெல்லைத்தமிழன் கண்ணாடி போட்டுப் படிக்கவும் பிளீஸ்ஸ்:// - இதைத்தானே நாங்களும் சொல்லிக்கிட்டிருக்கோம். உங்களுக்கு மல்டி டாஸ்கிங் பண்ணும்படியா மூளை கடவுள் கொடுத்திருக்கார். சமையல் செய்து, பாத்திரம் கிளீன் பண்ணி, துணி தோய்த்து, வீடைச் சுத்தம் செய்து, ஆம்பளைங்க டிரெஸ்லாம் அயர்ன் செய்து, அப்படியே தொலைக்காட்சி பார்த்துக்கிட்டு ஊர் வம்பை வளர்த்து, தோட்டத்தைச் சுத்தம் செய்து, செடிகள் வளர்த்து என்று மல்டி டாஸ்கிங் செய்ங்க. நாங்க ஆண்கள், ஒரு வேலையைத்தான் ஒழுங்காச் செய்யமுடியும் என்பதால் ஆபீஸ் போய் அங்கு அரட்டையடித்துவிட்டு வருகிறோம்.

    இப்படிச் செய்தால் நீங்க 'ஆணாதிக்கம்', எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ளணும் என்று சண்டைக்கு வர்றீங்க (சண்டை போட்டுக்கிட்டே சமையலும் உங்களால பண்ண முடியும்.. மல்டி டாஸ்கிங்).

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //உங்களுக்கு மல்டி டாஸ்கிங் பண்ணும்படியா மூளை கடவுள் கொடுத்திருக்கார். //

      டாங்ஸ்ஸ்ஸ்:)) புல்லாஆஆஅரிச்சுப்போனேன்ன்:)) நெல்லைத்தமிழனா இப்பூடி ஒத்துக் கொள்கிறார் என ஹா ஹா ஹா:))...

      //சமையல் செய்து, பாத்திரம் கிளீன் பண்ணி, துணி தோய்த்து, வீடைச் சுத்தம் செய்து, ஆம்பளைங்க டிரெஸ்லாம் அயர்ன் செய்து, அப்படியே தொலைக்காட்சி பார்த்துக்கிட்டு ஊர் வம்பை வளர்த்து, தோட்டத்தைச் சுத்தம் செய்து, செடிகள் வளர்த்து என்று மல்டி டாஸ்கிங் செய்ங்க///

      ஹா ஹா ஹா நம்மை எரிச்சலூட்டி ஜாங்றி சே சே அங்றி ஆக்கப்பார்க்கிறாராம் ஆனா அதுதான் இல்லை:)) ஏன் தெரியுமோ.. எனக்கெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிச்ச வேலைகள் இவை:)).. எனக்கு வெளியே போய் வேர்க் பண்ணுவதைக் காட்டிலும் இப்படி வீட்டு வேலை செய்து அழகா சுத்தமா கண்ணுக்கு இதமாக வைத்திருப்பதே பிடிக்கும்.. இடைக்கிடை ரிவி பார்க்கலாம்:)) யூ ரியூப் பார்க்கலாம் ஆனா வெளியே வேர்க் பண்ணும்போது ஒரு கொமெண்ட் போடுவதே கஸ்டமாக எல்லோ இருக்குதூஊஊ:))...

      அதனால இப்பூடிச் சொல்லி என்னைக் கடுப்பேத்த முடியாதாக்கும் ஹா ஹா ஹா:)).. இன்னொரு உண்மை தெரிஞ்சுகொள்ளுங்கோ:)).. இப்பூடி நாம் மனம் அடக்கி வீட்டைப் பராமரிப்பதாலதான்.. உங்களால வாசனையோடு உலா வர முடியுது தெரியுமோ இல்லை எனில் உடுப்பு தோய்ப்பதே மாதம் ஒரு நாளாகத்தான் இருக்கும் ஹையோ ஹையோ.

      நான் இங்கு வந்த ஆரம்பம், ஒரு 3 மாதங்கள் கணவர் தனியே இருந்தார்.. அப்போ வந்தவுடன் பார்க்கிறேன் அவரின் ரீ கப், வெளியே அழகிய குதிரைப்படத்துடன் சொக்கலேட் பிறவுனிலும், உள்ளே முழுக்க பிறவுணாகவும் இருந்துது.. ஆ ரொம்ப அழகா இருக்கே என, ஸ்பொஞ் எடுத்து ஒரு தேய் தேய்ச்சேன் அவ்ளோதேன்ன்:)).. உள் நிறம் பியோ வைட்:)) டாக வந்துது:)) ஹா ஹா ஹா இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க:))

      Delete
    2. //இப்படிச் செய்தால் நீங்க 'ஆணாதிக்கம்', எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொள்ளணும் என்று சண்டைக்கு வர்றீங்க//

      இல்ல இல்ல இப்படிச் சொல்வோரை நான் எப்பவும் எதிர்ப்பேன், இது ஆணாதிக்கம் இல்லை, ஆனா எனக்குப் பிடிக்காத விசயம், மனைவிக்கு உடல் சுகமில்லை அல்லது இன்று சமைக்கவில்லை எனில், அந்நேரம் சில கணவன்மார் சொல்கிறார்களெல்லோ.. அது உன் வேலை, நீ தான் செய்ய வேண்டும் இப்படி.. அல்லது...

      சிலசமயம் வீட்டு வேலை எதுவும் செய்யப் பிடிக்காது, மூட் ஓஃப் ஆனதுபோல இருக்கும், அப்போ பேசாமல் இருந்தால், கணவன் வந்து ஏன் இது இப்படி இருக்கு ஏன் உடுப்பு மடிச்சு வைக்கவில்லை, ஏன் கிச்சினில் பாத்திரம் கழுவுப்படவில்லை.. இப்படிக் கேட்போரை சத்தியமாக நான் தேம்ஸ்ல தள்ளி விடுவேன்ன்:).. இதுதான் ஆணாதிக்கம்,

      சரி உனக்கு மூட் சரியில்லையா அதனாலென்ன நாளைக்கு கிளீன் பண்ணலாம், வெளியே சாப்பாடு வாங்கலாம்..இப்படிச் சொல்லோணும் இல்லை எனில், நீ ரெஸ்ட் எடு நான் முடிஞ்சதைச் செய்து விடுகிறேன் இப்படிச் சொல்லோணும்.. இப்படி எனில்தான் குடும்பம் ஆப்பியாக இருக்கும்... இதை எல்லோரும் பழகுங்கோ ஜொள்ளிட்டேன்ன் ஹா ஹா ஹா:))

      Delete
  34. //ஆபிரிக்காம் லிங்கனின்// - இறைவா... லிங்கனை ஆப்பிரிக்கா அனுப்ப நினைக்கறவங்க எழுத்தெல்லாம் என்னை ஏன் படிக்க வைக்கிற?

    கொடுமை கொடுமை என்று இன்னொருவரிடம் சொல்லலாம்னா, அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சு ஆடுது //மூடிய அரைக்கும் இருக்க //

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ ஜாமி முடியல்ல:)).. அது குழந்தையிலயே ஆப்பிரிக்காம் லிங்கன் என பாடம் சொல்லித் தந்திட்டினம்:)) அப்போ அது என்னோட டப்பா?:)).

      ///அங்க ஒரு கொடுமை தலைவிரிச்சு ஆடுது //மூடிய அரைக்கும் இருக்க ////
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் காதைக் கொண்டு வாங்கோ ஒரு ரகசியம் சொல்றேன்ன்:)) நான் இதை ஓல்ரெடி கையும் களவுமாகப் பிடிச்சிட்டேன்ன்:)).. அவவுக்கு “ர, ற” வில குழப்பம் இருக்கு:)) ஆனா ஒத்துக் கொள்றாவில்லை.. இல்ல குழப்பமிலை அது மிசுரேக்கூத்தான் என வாதாடுறா:)).. நீங்க சைலண்டா இருந்து கொஞ்சம் நோட் பண்ணுங்கோ எங்காவது மெய்மறந்து அவசர ரைப்பிங் செய்யும்போது பிடிச்சிடலாம்:)).. இல்லை எனில் அவ ஆராச்சி அம்புயமாச்சே:)) கூகிளில் தேடிக் கரெக்ட்டா எழுதிடுவா:)).. ஹையோ படிசதும் கிழிச்சு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில எறியுங்கோ பிளீஸ்ஸ்:)) அவர் விரும்பினால் எடுத்து ஒட்டிப்போட்டு வாசிப்பாருக்கும் ஹா ஹா ஹா:))

      Delete
  35. படங்கள் நல்லா வந்திருக்கு. அந்த இடத்தைப் பற்றி கற்பனை செய்ய முடியுது.

    ஆப்ரஹாம் லிங்கன் சிலை - இதைப் பார்த்துத்தான் தாய்வான்ல சியாங் கை ஷேக், சன்யாட் சென் நினைவகத்துச் சிலைகளை பண்ணியிருக்காங்களா? இதே மாதிரித்தான் இருக்கும் (ஆள் வேற). பிறிதொரு சமயம் நான் படங்கள் பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //படங்கள் நல்லா வந்திருக்கு.//
      தங்கூ:))

      // அந்த இடத்தைப் பற்றி கற்பனை செய்ய முடியுது///
      அப்போ என் வர்ணனை நல்லா இருக்குதெனச் சொல்றீங்க:))..

      //இதே மாதிரித்தான் இருக்கும் (ஆள் வேற). பிறிதொரு சமயம் நான் படங்கள் பகிர்கிறேன்.///

      நீங்க இப்படி முன்பும் சில வாகுறுதிகளை அள்ளி வீசியிருக்கிறீங்க:) ஆனா நிறைவேத்தவில்லை:)).. இதுக்கு சொந்த புளொக் இருந்தால்தான் அதிகம் சாத்தியம், அதுவும் திறக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறீங்க கர்ர்:)).. அது ஒரு போட்டோ அல்பம் போல சேர்த்து வைக்கலாமெல்லோ புளொக்கில்.

      Delete
    2. எ.பி.ல சனிக்கிழமை விமர்சனம் எழுதினா, சம்பந்தமில்லாத படங்களையெல்லாம் சேர்த்துவிடுகிறேன். அப்போ பார்த்துக்கோங்க. அது ஒண்ணுதான் இப்போதைக்கு வழி.

      நானும் பிளாக் ஆரம்பிச்சு, அப்புறம் 2 வருஷத்துக்கு ஒரு முறை ஒரு செய்முறை எழுதணும் சில பேர் மாதிரி (உடனே டேவடைன்னு கற்பனை பண்ணாதீங்க)

      Delete
    3. @ நெ.தமிழன்
      //எ.பி.ல சனிக்கிழமை விமர்சனம் எழுதினா, சம்பந்தமில்லாத படங்களையெல்லாம் சேர்த்துவிடுகிறேன். //
      ஆஆஆஆஆஆஆ நல்லவேளை படிச்சதும் கிழிச்சுட்டேன்ன்ன்ன் ஸ்ரீராம் பார்க்க முன்.. பூஸோ கொக்கோ:)).

      //(உடனே டேவடைன்னு கற்பனை பண்ணாதீங்க)//

      சே..சே.. அப்பூடிப் பண்ணுவேனா.. அவ மூடி 3 வருடமாகப்போகுதே:)) ஹா ஹா ஹா.

      Delete
  36. பச்சைக்கல் நகை என்னைக் கவரலை. பொதுவா தங்கத்துல பதிக்கும்போதுதான் (மஞ்சள் நிறத்துல) நகைகள் அழகா இருக்கு என்பது என் எண்ணம். வெள்ளி நகைகள் ரொம்ப சுமாராத்தா இருக்கும் (அரசிகள்லாம் வெள்ளிலதான் நகை செஞ்சு போட்டுக்கொண்டாலும்)

    ReplyDelete
    Replies
    1. ///பச்சைக்கல் நகை என்னைக் கவரலை. //
      நல்லதை எல்லாம் பார்த்து, இப்பூடிச் சொல்லிச் சொல்லித்தான் அண்ணியை இவ்ளோ காலமும் பேய்க்காட்டி வந்திருக்கிறீங்க போல என... ஜந்தேகம்தான் படுறோம்:)) வேறொன்றுமில்லை ஹா ஹா ஹா...

      வெள்ளைக்காரர்களுக்கு அவர்களில் தொலுக்கு வெள்ளி அழகு.. நமக்கு தங்கம் சேர்ந்தால்தான் அழகு:))

      Delete
    2. தொலுக்கு வெள்ளி அழகு //

      தோலுக்கு :))))))))))))))))))))))))))))))
      இப்படித்தான் கூகிள் டைப்பிங்கில் எனக்கு மிஸ்டேக் வந்துச்சாம்

      be careful :) i am watching

      Delete
    3. ஆஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் சூசைக் கழ்ட்டிப்போட்டு ஓடுங்கோ ஓடுங்கோ.. புகை வரத்தொடங்கிட்டுதூஊஊஊஊ ஹா ஹா ஹா:))

      Delete
  37. //தண்ணீரில் விம்பம் தெரியும் அழகைப் பாருங்கோ// - நல்லாத்தான் இருக்கு படம். பாராட்டறேன். ஆனால் பிம்பம் என்று சொல்லாமல் விம்பம் என்று சொல்றீங்களே... பால் என்று சொல்லாமல் 'வால்' என்று சொல்வீங்களோ? பாசம் என்பதற்குப் பதில் வாசம் என்றும் எழுதுவீங்களோ..... சிமியோன் டீச்சரைக் குறை சொல்ல மனசு வல்ல. அவங்களுக்குத் தெரியுமா டமில்ல டி போட்டவங்க எல்லாம் தமிழ் நல்லா எழுதமாட்டாங்க என்பது.

    ReplyDelete
    Replies
    1. ///நல்லாத்தான் இருக்கு படம். பாராட்டறேன்.//
      நன்றி நன்றி, இங்கும் படம் பார்த்தவர்கள் புகழ்ந்தார்கள்... என்னைத்தான்:)).

      //ஆனால் பிம்பம் என்று சொல்லாமல் விம்பம் என்று சொல்றீங்களே//
      ஓ ஹா ஹா ஹா அது பிம்பமோ? வாயில உச்சரிக்க வருகுதில்லை.. சத்தியமாக தெரியாதெனக்கு.. விம்பம் எனத்தான் நினைச்சிருந்தேன்:)).. நல்லவேளை ஜாமீ எக்ஸாமில இந்தச் சொல்லு வரேல்லையாக்கும்:) இல்லை எனில் எப்பூடி டமில்ல டி கிடைச்சிருக்கும் எனக்கு ஹா ஹஹ் ஹா:))..

      //சிமியோன் டீச்சரைக் குறை சொல்ல மனசு வல்ல. //
      ஹா ஹா ஹா அவவைக் குறை ஜொள்ளக்குடா:)) அவவின் ஊக்கம்தான் என்னை 5ம் வகுப்பு ஸ்கொலசிப்பில் ஹையஸ்ட் மாக்ஸ் எடுக்க வச்சது..:)..

      ஆவ்வ்வ்வ் நெ.தமிழனின் கொமெண்ட்ஸ் எலாம் பதில் போட்டு முடிச்சிட்டேனா:)).. தப்பிட்டேன் ஜாமீ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் நெ.தமிழன்.

      Delete
  38. ஆஹா... இந்த மல்டி டாஸ்கிங் எங்க வீட்டிலும் நடப்பதுதான்..ஆவ்வ்வ்வ்வ், வாசிக்க சிரிப்பு சிரிப்பா வருது...அடிச்சுக்கவே முடியாது ....
    ஆபிரஹாம் லிங்கன் பற்றி எத்தனை முறை படித்தாலும் சலிக்காது எனக்கு ரெம்ப பிடிக்கும். பள்ளிகூடத்தில் படித்தவிடயங்கள் மனதில் இருக்கு. அவரது வாழ்க்கை சோகமாகவே இருந்திருக்கிறது. சிலையிலும் அப்படியே. எனக்கு அவர் சிரிததபடி உள்ள படம் பார்க்கவேண்டும்போல. நீங்கள் பார்த்திருக்கிறீங்களா. அவரின் பேச்சு ஒன்று பிடித்தமானது. அவரின் அப்பா செருப்பு தைப்பவர்.ஜனாதிபதி ஆனதும் ஒருவர் சொன்னாராம். உங்க அப்பா தைத்த செருப்பு என் காலில்..லிங்கன் சொன்னார். என் அப்பாவின் உழைப்பின் சிறப்பு அது. பிய்ந்தால் தாருங்கள் தைத்து தாறேன் என. வா..வ் .
    என்னாஆஆஆ வாய்ஸ் அதிரா வாய்ஸ். உண்மையில் நீங்க பாடப்போனால் மற்றைய பாடகிகள் பொறாமைப்படுவாங்க. சாதனா சர்கம் மாதிரியே இருக்கு உங்க குரல். இல்லையிலை அவாவை விட சூப்பரா இருக்கு.(கடவுளே இதை அஞ்சு பார்க்க(கடவது)கூடாது.. உண்மையில் நல்லாயிருக்கு உங்க குரல் அதிரா. இப்படியே வீடியோவுக்கு குரல் கொடுங்க நல்லாயிருக்கு.
    இங்கு டாய்லெட் ல் கதவு இடைவெளி இல்லை.ஆனா கீழே கொஞ்ச இடைவெளி இருக்கு. அஞ்சு சொன்னமாதிரி லேடீஸ் ரெஸ்ட் ரூம் தானே. இதெல்லாம் டீஈஈடெய்லா பார்க்ககூடாது. டிரம்ப் அங்கிள்ட்ட பேச நிறைய விடயம் இருக்கு. முதல்ல தலைக்கு எண்ணெய் வைக்கசொல்லுங்கோ.அவரைபார்த்து யூகே ஆளும் கெடுறார்.
    இந்தபஸ் ப்ரீ சேவிஸ் பற்றி அஞ்சலாவிடமும் கதையுங்கோ. இங்கு இருக்கு. ஆனா கொஞ்ச காசு கொடுக்கோனும்.
    ஹோம்லெஸ் ஆட்கள் இங்கும்தான்....
    ஆவ்வ்வ் எமரால்ட் ஓஒ...அஞ்சுவுக்கு இன்னும் பச்சைகல் நெக்லஸே கொடுக்கேல்லை. அதில இது வேறையா. அஞ்சுவிடம் கேட்கோனும் வந்ததா, ஒரிஜனலா இல்லை டூப்ளிகேட்டா என.. அஞ்சூஊஊஊ..
    ஹா..ஹா...ஹா....ஊசிஇணைப்பு சூப்பர்.....
    பிங்க் காண்ட்பாக்கோட போறது நீங்க தானே. அப்படியென்றா நான் கூப்பிடேலை.



    ReplyDelete
    Replies
    1. //சாதனா சர்கம் மாதிரியே இருக்கு உங்க குரல். இல்லையிலை அவாவை விட சூப்பரா இருக்கு.(கடவுளே இதை அஞ்சு பார்க்க(கடவது)கூடாது.//

      ஏற்கனவே காது கேக்காம போச்சி இப்போ பார்வையும் தெரில இங்கே பிளாக் போஸ்ட் படிச்சதில் இருந்து

      Delete
    2. //எனக்கு அவர் சிரிததபடி உள்ள படம் பார்க்கவேண்டும்போல. நீங்கள் பார்த்திருக்கிறீங்களா.//
      இல்ல அம்முலு.. அவரின் இதே முகம்தான் அப்போ புக்கிலும் இருந்தது.

      //லிங்கன் சொன்னார். என் அப்பாவின் உழைப்பின் சிறப்பு அது.//யேஸ்ஸ்ஸ் இந்தக் கதையை நான் மியாஸூ ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..

      //வா..வ் .
      என்னாஆஆஆ வாய்ஸ் அதிரா வாய்ஸ். உண்மையில் நீங்க பாடப்போனால் மற்றைய பாடகிகள் பொறாமைப்படுவாங்க.///
      போங்கோ அம்முலு நேக்கு ஒரே ஷை ஷையா வருதூஊஊஊ:)).. பாடகிகள் பொறாமைப்படாட்டிலும் நேக்குக் கவலை இல்லை:)), ஆனா அஞ்சுக்குப் புகை வரோணும்..:)) அஞ்சுக்குப் புகை வந்தால் மீ இன்னும் உரக்கப் பாடுவேனே:)) ஹா ஹா ஹா..

      //இப்படியே வீடியோவுக்கு குரல் கொடுங்க நல்லாயிருக்கு.//
      ஹையோ இது ஒண்ணும் வஞ்சகப் புகழ்ச்சி இல்லையே:)).. இப்போ ஆரை நம்புவது ஆரை நம்ப முடியாது என கணக்கெடுக்கவே முடியாமல் இருக்கு ஜாமீஈஈஈ:))..

      இப்பூடி என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தியே மீ இப்போ வெள்ளை மாளிகை வாசல்ல நிக்கிறேனாக்கும் ஹையோ ஹையோ ஹா ஹா ஹா.

      //அஞ்சு சொன்னமாதிரி லேடீஸ் ரெஸ்ட் ரூம் தானே//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுக்காக? ஹா ஹா ஹா..நிறையப் பேச வருது ஆனா அடக்கிடுறேன்ன் ஹா ஹா ஹா வாணாம்:)).. லேடீஸ் குரூப் ஒன்லி ஒன்று ஓபின் பண்ணிப் பேசோணும் இது பற்றி:)) ஏனெனில் இங்கின எல்லோருக்கும் பாஆஆஆஆஆஆஆம்புக் காதூஊஊஊஊ ஹா ஹா ஹா.

      இங்கிலாந்துப் பக்கம் ரெஸ்ட் றூம், ஸ்கொட்லாந்தில் ரொயிலட், அமெரிக்கா-கனட - வோஷ்ரூம்.. இலங்கையில ரொயிலட்/பாத்றூம்.. ஜேர்மனியில என்ன சொல்லுவினம் அம்முலு அங்கு ஜேர்மனில்தான் இருக்குமோ பெயர்கள்..

      //அப்படியென்றா நான் கூப்பிடேலை. //
      இது இது இது நல்ல பிள்ளைக்கு அழகு ஹா ஹா ஹா... மிக்க நன்றி அம்முலு.. றம்ப் அங்கிளுடனான மீட்டிங் பற்றி கொஞ்ச நாளில் தணிக்கையுடனான:) செய்தி வெளிவரும்:).

      Delete
    3. @அஞ்சு
      ///ஏற்கனவே காது கேக்காம போச்சி இப்போ பார்வையும் தெரில இங்கே பிளாக் போஸ்ட் படிச்சதில் இருந்து///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).. அம்முலு என்னை சாதனா [அதாரது எனத் தெரியல்லியே:)]எனச் சொன்னதால கண்ணிலயும் புகை போயிருக்கு காதாலயும் போயிருக்கு:)) அஞ்சுவுக்கு... இப்படி இருக்கும்போதே கடகடவென போஸ்ட் எல்லாம் போட்டு முடிச்சிடோணும் ஜாமீஈஈஈஈஈஈஈ:))

      Delete
  39. காணொளி நன்றாக இருக்கிறது . குழந்தைகளிடம் பள்ளியில் பேசி பேசி நீங்கள் அவர்களிடம் பேசுவது போலவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அக்கா திரும்ப வந்திருக்கிறா.. ஹா ஹா ஹா நீங்க கொஞ்சம் பிசியாக இருப்பதைபோல உணர்ந்தேன்... அதனால திரும்பி வருவீங்களென எதிர்பார்க்கவில்லை... மிக்க நன்றி. இன்னும் வீடியோக்கள் வரும் கோமதி அக்கா.. ரெடியா இருங்கோ என் குரல் கேட்க:).

      Delete
  40. ஹலோ எங்க நாட்டுக்கு எப்ப வந்தீங்க ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ.. மன்னிச்சுக்கோங்கோ.. மெயிலுக்கு கொமெண்ட் வராமையால பாருங்கோ எவ்ளோ லேட்டாகிட்டுது என இங்கு போட..

      //ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.....//

      ம்ஹூம்ம்.. உங்களை நம்ப மாட்டேன்ன்:)) நீங்க எப்படா அதிராவைப்பிடிச்சு நயகராவில் தள்ளலாம் எனக் காத்திருக்கிறீங்க ஹா ஹா ஹா:))

      Delete

  41. மைண்ட் வாய்ஸ் : மதுரைதமிழா நீயெல்லாம் பெரிய ஆளா உன்னிடம் வந்து சொல்லுவதற்கு அல்லது பார்ப்பதற்கு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க இருப்பது வோஷிங்டன் இல்லையே ட்றுத்..

      Delete
  42. கடந்த வாரம் நானும் வாசிங்க்டன் டிசியில் தான் நானும் குடும்பதோட இருந்தேன் அதன் பின் வெர்ஜினியா பீச்சில் சில நாட்கள் இருந்தோம்

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்களும் ஹொலிடேக்கு அங்கு போயிருக்கிறீங்க.. நாங்கள் யூலை 2ண்ட் வீக் அங்கிருந்தோம் ட்றுத். மிக்க நன்றி.

      Delete
  43. வணக்கம் அதிரா சகோதரி

    இந்த தடவை உங்களோட ரயில் என்னை மிஸ் பண்ணிவிட்டு போயே போச்சு..கார்ட் பெட்டியில் கூட ஏற வாய்ப்பில்லை.. நான் விடுவேனா? எப்படியோ கஸ்டப்பட்டு பின்னாடியே ஓடி வந்து ரயிலில் ஏறிவிட்டேன்.

    தங்கள் பதிவு தங்களுடன் ஊர் சுற்றிய திருப்தியை தந்தது. படங்கள் அத்தனையும் அழகு. காணொளியில் தங்கள் பேச்சை கேட்டேன்.அருமை இளையராஜாவின் அடுத்தபடத்திற்கு தங்களுக்கு சான்ஸ் கிடைத்துள்ளதாமே! மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //இந்த தடவை உங்களோட ரயில் என்னை மிஸ் பண்ணிவிட்டு போயே போச்சு..கார்ட் பெட்டியில் கூட ஏற வாய்ப்பில்லை//

      இல்லையே .. நீங்க வராட்டில் நான் விடுவேனோ:)) உங்களுக்காகவே கடசிப் பெட்டியை கழட்டிப்போட்டெல்லோ ரெயின் வெளிக்கிட்டது:)) நீங்கள் ஏறியதும் ஸ்பெஷல் எஞ்சின் வந்து கொழுவிக்கொண்டு வந்து சேர்க்கட்டும் என உத்தரவு விட்டிருந்தேன்:)).. என் நம்பிக்கையை வீணடிக்காமல் வந்து ஏறிட்டீங்கள் நன்றி.. ஹா ஹா ஹா.

      //இளையராஜாவின் அடுத்தபடத்திற்கு தங்களுக்கு சான்ஸ் கிடைத்துள்ளதாமே!//
      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சோ:)).. இந்த ரகசியத்தை வெளியிட வேண்டாம் என நெ.தமிழனிடம் சொல்லியிருந்தேனே:)).. எப்பூடி லீக் ஆச்சு:)).. ஹா ஹா ஹா.. இனி என்னை வெரி சொறி:) என் குரலை சினிமாவில எதிர்பாருங்கோ விரைவில்:)... ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  44. அட அமெரிக்கா எல்லாம் படம் போட்டு காட்டுக்கின்றீங்க! உலகை சுற்றிப்பார்க்கும் எங்க அதிரா இளவரசிக்கு வாழ்த்துக்கள்![[

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ நேசன் வாங்கோ வாங்கோ.. அப்பப்ப எங்களை மறக்காமல் எட்டிப் பார்த்துவிடுவதோடு நிறுத்தாமல் கொமெண்ட்டும் போட்டு விடுறீங்கள் மிக்க சந்தோசம்..

      //அதிரா இளவரசிக்கு//
      ஹா ஹா ஹா உங்களுக்குப் புரியுது:) இங்கின ஆருக்குமே புரியுதில்லை:)) இது:) ஹா ஹா ஹா நன்றி நேசன்.

      Delete
  45. சொர்க்கமே என்றாலும் அது நம் ஈழத்துக்கு ஈடில்லை![[

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. உண்மை.. உண்மை நேசன்.. ஆனா அதிலும் ஒரு சின்ன திருத்தம்.. நாம் அங்கிருந்த காலம்தான் உண்மையில் பொற்காலம், இப்போ அங்கு, அப்போ இருந்த சந்தோசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை... களவு கொள்ளை என மக்கள் பதட்டத்தில் இருக்கிறார்களாம்.

      Delete
  46. கொஞ்சம் தனிப்பட்ட பொருளாதார தேடல் மகன்கள் பள்ளி போறார்கள்§ மீண்டும் வருவேன் எப்ப எப்ப முடியுமோ! வலையில்![[

    ReplyDelete
    Replies
    1. ஓ குட்டீஸ் ஸ்கூல் போகிறார்களோ நேசன், இப்போதான் சின்னவர் பிறந்ததுபோல இருக்கு.. திரும்பிப் பார்ப்பதற்குள் வளர்ந்துவிடுவார்கள்.. அவர்களோடு நேரம் செலவளியுங்கோ.. இந்த வயதில்தான் நம்மோடு வந்து ஒட்டியிருப்பார்கள்.. வளர்ந்திட்டால், நாம் கூப்பிட்டாலும் வர மாட்டார்கள் ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி நேசன்.. இடைக்கிடையாவது எட்டிப் பாருங்கோ இப்படி.

      Delete
  47. அமெரிக்கா....ஆஹா அழகா இருக்கு ..

    பையனின் history பாடத்தில் இந்த வியட்நாம் சண்டை பகுதி எல்லாம் வருது ..இங்க படங்கள் பார்க்கும் போது அவை தான் நியாபகம் வந்து ..


    அடுத்து அமர்ந்து இருக்கும் லிங்கன் அவர்களின் சிலை ....அசோ அதிரா ..போன வாரம் lucknow பயணம் போனோம் அங்கு அம்பேத்கர் பார்க்கு ன்னு ஒரு இடம் அங்கு அம்பேத்கர் அவர்களின் சிலைகள் உள்ளன ..

    அதில் முக்கியமான் சிலை இப்படி தான் இருக்கும் பெரிய சிலை அமர்ந்த வாக்கில் ...அதை பார்த்துட்டு என் நண்பர் சொன்னார் அமெரிக்க லிங்கன் போல இருக்கு ன்னு ..இப்போ தான் புரியுது ...சிக்கீரம் blog ல போடுறேன் பாருங்க ...


    அப்புறம் அந்த இடைவெளி இங்கும் மால் ல அப்படி தான் இருக்கு ...

    உங்க வாய்ஸ் செம்ம cute..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      //அதை பார்த்துட்டு என் நண்பர் சொன்னார் அமெரிக்க லிங்கன் போல இருக்கு ன்னு ..இப்போ தான் புரியுது ...சிக்கீரம் blog ல போடுறேன் பாருங்க ...
      //
      ஹா ஹா ஹா ஓ.. சரி சரி போடுங்கோ பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

      அனைத்துக்கும் மிக்க நன்றிகள் அனு.

      Delete
  48. வெள்ளை...அழகு...

    ரசனையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வாங்கோ.. மறவாமல் வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.