நல்வரவு_()_


Sunday, 8 September 2019

ஏழு பிள்ளை நல்லதம்பி நல்லதங்காள்😎

நான் சரித்திரக் கதைகள் எழுதிப் பல நாட்கள் ஆகிவிட்டதெல்லோ.. மகாபாரதம் சொல்லிட்டேன்:), கம்பராமாயணம் சொல்லிட்டேன், பீஸ்மர் பற்றிச் சொல்லிட்டேன்:).. அதன் பின்னர் நீண்ட நாட்கள் சரித்திரக் கதைகள் சொல்லாமையால உங்களுக்கும் சரித்திரம் மறந்திடும்:)), அது தமிழுக்கு நாம் செய்யும் துரோகம் என்பதால, இண்டைக்கு அதிரா சொல்லப்போவது நல்லதங்காளின் கதையாக்கும்.
ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு உப்பூடி நித்திரை தூங்கக்கூடாது 
கதை கேட்கும்போது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), அதிராவைப் பாருங்கோ:)
சரி சரி.. அக் கதையை மிகச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கப் போகிறேன், ஏனெனில் விரிவாகச் சொன்னால் உங்களுக்குப் புரியாது:)) ஹா ஹா ஹா. ஓகே இதை விடுங்கோ:). இக்கதையை நீண்ட நாட்களாக சொல்லோணும் என்றே நினைச்சு வருகிறேன், காரணம், சின்ன வயசிலேயே அறிஞ்ச கதை.

எங்கள் அப்பம்மாதான் எங்களுக்கு நிறையப் பாடல்கள் கதைகள் சொல்லுவா. அப்பம்மா நம்மோடு இருக்கவில்லை, ஆனா அடிக்கடி வந்து கொஞ்சக்காலம் நின்றுபோட்டுப் போவா. அப்போ அப்பம்மா வருகிறா என்றாலே கதை சொல்லபோகிறா என ஆவலாக இருப்போம்.

அவவும் ஒரு வசனத்தை வச்சு, ஒன்பேது கதைகள் சொல்லுவா:)) ஹா ஹா ஹா, பின்ன நிறையக் கதைகள் சொல்ல எங்கே போவது:).. ரிப்பீட்டிலும் பல கதைகள் போகும்.

அப்படித்தான் இந்தக் கதையும்.. “ஏழு பிள்ளை நல்லதம்பி நல்லதங்காள்” கதை சொல்லச் சொல்லி நாங்களும் கேட்போம், அவவும் அதில் பல பாடல்கள் பாடிப்பாடிக் கதை சொல்லுவா.

சரி வாங்கோ நானும் உங்களுக்குச் சொல்கிறேன்:), இவை எல்லாம் நாம் அறிஞ்சு வச்சிருக்கோணும் தெரியுமோ:)..

ஒரு ஊரில் மிகவும் செல்வந்தரான ஒருவருக்கு இரு குழந்தைகள், மகனின் பெயர் “நல்லதம்பி”, மகளின் பெயர் “நல்லதங்காள்”.

அண்ணாவுக்கும் தங்கைக்கும் இடையே வயசு வித்தியாசம் இருக்குமென நினைக்கிறேன். இருவரும் சின்னவர்களாக இருக்கும்போதே, பெற்றோர் இறந்து விட்டனர். அப்போ நல்லதம்பியே பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தங்கை, அண்ணன் இருவரும் பாசத்தில் மிக உயர்ந்தவர்கள்.

மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தார்கள். அப்போது தன் தங்கை நல்லதங்காளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மதுரையிலே மாப்பிள்ளை பார்த்தார் அண்ணன். மாப்பிள்ளையின் பெயர் “காசிநாதன்”..

காசிநாதனுக்கு தங்கையைக் கட்டிக் குடுக்கும்போது, அண்ணன் குடுத்த சீதனமோ சொல்லி அடங்காதாம்.. சரியோ தப்போ எங்கட அப்பம்மா பாடிய வரிகளில் சில இப்பவும் காதில ஒலிக்குது...

வடக்குத்தெரு நிறைந்த வாழைமரம் சீதனமாம்
கிழக்குத் தெரு நிறைந்த கீழ் வீடு சீதனமாம்
தெற்குத் தெரு நிறைஞ்ச தென்னை மரம் சீதனமாம்
மேற்குத் தெரு நிறைஞ்ச மேல் வீடு சீதனமாம்..

இத்தோடு பொன் பொருள் ஆடு மாடு என எவ்வளவோ எல்லாம் அள்ளிக் கொடுத்து தன் தங்கையை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ மதுரைக்கு அனுப்பி வைத்தார். ஆனா மதுரைக்காரங்க என்ன பண்ணினாங்க???:)) ஹா ஹா ஹா இடைவேளையின் பின் தொடர்வோமா?:).
================================
சரி, இப்படிக் கட்டிக் கொடுத்து தன் தங்கையை மதுரைக்கு அனுப்பி வைத்த அண்ணன், ஒரு தடவைகூட மதுரைக்குப் போய்த் தன் தங்கையைப் பார்க்கவில்லையாம், அதுக்குக் காரணம், அண்ணாவின் மனைவி மூளி என்பவ, மிகவும் மோசமானவ கொடுமைக்காரியாம். அவவை மீற முடியாமல், இந்த நல்லதம்பி மனதில் புழுங்கியபடி வாழ்ந்து வந்தார்.

மதுரைக்குச் சென்ற தங்கை, தன் கணவரோடு மிக சந்தோசமாக வாழ்ந்து அவர்களுக்கு 7 பிள்ளைகளும் பிறந்தன. ஆனா இவர்கள் வாழ்க்கை ஆரம்பித்த காலம் தொட்டு, மதுரையில் மழை பெய்வது குறையத் தொடங்கி, முற்றிலும் மழையில்லாமல் வறண்டு போய், விவசாயம் இல்லாமல் பட்டினி ஆரம்பித்ததாம்.

அப்போ இவர்கள் தம் சொத்துக்களை விற்று விற்று குடும்பம் நடத்தி வந்தார்கள், ஒரு கட்டத்தில் எதுவுமே இல்லாமல் போய், ஊரில் மக்கள் பட்டினியால் சாகத் தொடங்கி விட்டனராம். காசிநாதன் குடும்பமும் பட்டினியில் வாடத் தொடங்கியது. இதனால், நல்லதங்காள் சொன்னா, வாங்கோ எல்லோரும் அண்ணன் வீட்டுக்கே போயிடலாம் என.

அதுக்கு காசிநாதன் இணங்கவில்லை, அங்கு உன் அண்ணியின் குணம் தெரியும், அங்கு போய் அவமானப் பட வேண்டும், இங்கேயே நமக்கொரு வழி பிறக்கும் பொறுத்திருப்போம் என்றார். நல்லதங்காள் கேட்கவில்லை, குழந்தைகள் பசியால் துடித்து அழுவதைப் பார்க்க முடியாமல், அண்ணன் வீடு போக முடிவு செய்தா, அப்போ காசிநாதன் சொன்னார், சரி முதலில் நீயும் குழந்தைகளும் போய்ச் சேருங்கள், நான் இங்கு ஏதும் விவசாயத்துக்கு வழி கிடைக்கிறதா எனப் பார்த்துவிட்டுப் பின்னால் வருகிறேன் என.

அப்போ மதுரையில் இருந்து, காடுகள் மலைகள் பள்ளங்கள் என பல காலமாக பயணித்து அண்ணன் வீடு வந்தார் தங்கை. அங்கு மாங்காய்கள் தேங்காய்கள் எனக் குவிந்து கிடப்பதைப் பார்த்து, குழந்தைகள் ஓடி ஓடி உண்டார்கள், தம் பசியைப் போக்கினார்கள், ஆனால் இது மூளிக்குப் பிடிக்கவில்லை. நல்லதங்காளோடு முகம் கொடுத்துப் பேசுவதையே தவிர்த்தாள். நல்லதம்பி, வீட்டில் இல்லா சமயம் எல்லாம், உணவு கொடுக்காமல் கொடுமைப் படுத்தினா.

இவ்வளவு கொடுமைகளோடும் அண்ணனுக்கும் எதுவும் சொல்லாமல், அமைதியாக சகித்துக் கொண்டு வந்தா நல்லதங்காள்.

ஒருநாள் அண்ணன் இல்லாத சமயம், குழந்தைகள் பசியால் அழுதன, அப்போ நல்லதங்காள் கெஞ்சினாள் “அண்ணி கொஞ்சம் அரிசி குடுங்கள் கஞ்சி செய்து குடுத்து குழந்தைகளின் பசியைப் போக்குகிறேன்” என. அதுக்கு ஏதோ உதவாத அரிசியையும், ஒரு ஓட்டைப் பானையையும், பச்சை விறகுகளையும் கொடுத்து சமைக்கச் சொன்னா மூளி.

அதை வைத்துக் கஸ்டப்பட்டு சமையல் செய்து, குழந்தைகளை அழைத்தாள் நல்லதங்காள் சாப்பிட., குழந்தைகள் ஓடி வந்தன, இதைப்பார்த்த மூளி, ஓடிச்சென்று பானையோடு கஞ்சியை அடிச்சு உடைத்தாள். எல்லாம் மண்ணில் கொட்டி விட்டது. இனியும் இந்ங்கிருப்பது தப்பு, தன் கணவனையும் காணவில்லை, அதனால இனி உயிரோடிருக்க வேண்டாம் எனும் முடிவெடுத்து, குழந்தைகளை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடந்து போனாள் நல்லதங்காள். போகும்போது, அண்ணன் வந்தால் தெரிய வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு வகை இலைகளைப் பறித்து பாதை முழுவதும் தூவிச் சென்றாளாம்.

அங்கு ஒரு பாழும் கிணறு இருந்தது, அதில் தன் 7 குழந்தைகளையும் தூக்கி கிணற்றில் போட்டு, முடிவில் தானும் குதித்து உயிரை விட்டாள். இதற்கிடையில், அங்கு மதுரையில், நல்லதங்காள் புறப்பட்ட பின், மழை பெய்ய ஆரம்பித்ததாம், அதனால திரும்பவும் விவசாயம் ஆரம்பமாகியதாம், அப்போ காசிநாதன் விவசாயம் செய்து, நன்றாகிவிட்டது மதுரை, இனிப்போய் மனைவி பிள்ளைகளை அழைத்து வரலாம் என நல்லதம்பி வீட்டுக்கு வருகிறார்.

அதேநேரம் வேட்டையாடப் போன நல்லதம்பியும் வீட்டுக்கு திரும்புகிறார், அயலவர்கள் சொல்கின்றனர், மூளி செய்த கொடுமையையும், நல்லதங்காள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அழுதுகொண்டு காட்டுப்பக்கமாகச் சென்றதையும்.

அப்போ அந்த இலைகளின் அடையாளத்தை வைத்து பாழும் கிணற்றைக் கண்டு பிடிக்கின்றனர், அவர்களைக் கண்டதும், அதில் தானும் குதித்து இறந்துவிடுகிறார் காசிநாதன்.

நல்லதம்பியோ எதுவும் பேசாமல், அவர்களை அடக்கம் செய்துவிட்டு, அவசரமாக தன் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். திருமணத்துக்கு மூளியின் உறவுகளுக்காகவே ஒரு ஸ்பெஷல் பந்தல் போடுகிறார். எல்லோரும் வந்ததும், மூளி உட்பட, அவவின் உறவுகள் ஒன்றுகூடி இருந்த சமயம், பந்தலை விழ வைத்து அனைவரையும் கொல்கிறார்.

தானும் ஈட்டியால் தன்னைக் கொன்று மரணத்தைத் தழுவினாராம் என்பது கதை. ஆனா இதை அறிஞ்ச பரம்பொருள் முன்னே தோன்றி அனைவரையும் உயிர்ப்பித்ததாகவும், இல்லை வேண்டும் நாங்கள் போனது போனதாகவே இருக்கட்டும் எனக்கூறி அவர்கள் மறைஞ்சுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது கதை.

இப்பவும் நல்லதங்காள், நல்லதம்பிக்கு தமிழ் நாட்டில் கோயில் இருக்கிறதாமே? உண்மையோ?.
[[[என் கதையில் பல திருத்தங்கள் இருக்கலாம், ஏனெனில் இது எனக்கு செவிவழி வந்த கதையே.. அதனால நான் சொன்னதுதான் 100வீதம் கரெக்ட் எனச் சொல்ல மாட்டேன், ஆனா கதையின் ஆரம்பமும் முடிவும் கரெக்ட்:))]]]

ஊசிக்குறிப்பு:
இதுக்கு ஆராவது, ஆஆஆ சோகக்கதை, அது இது என பீலிங் காட்டினால், அதே கிணற்றிலேயே தள்ளி விட்டிடுவேன் ஜாக்கிர்ர்ர்ர்தை:)).. சரித்திரக் கதைகள் என்றாலே முடிவு இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன், அதனால நோ ஃபீலிங்ஸூஊஊ:))

குருவே இப்போ எதுக்குச் சிரிக்கிறீங்க?:) அது ஒன்றுமில்லை, அடுத்தமுறை அதிராவின் வைட் ஹவுஸ் படங்கள் தொடருமே:)) அதை மக்கள் மறந்திட்டினமே:) என நினைச்சேன் சிரிச்சேன்:))

ஊசிக்குறிப்பு
💗💙💚💛💜

110 comments :

  1. வணக்கம் அதிரா சகோதரி

    சரித்திர கதையை அழகாக சொல்லி உள்ளீர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். நீங்களும் நன்றாக சுவையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்லதங்காள் பொறுமைசாலி என்பதாக அவளின் பொறுமைக்கும் உதாரணமாக இந்த கதை வரும். ஆனால் நீங்கள் சொல்லுயபடி அக்கால பெண்களின் கதைகள் இப்படித்தான் மிகுந்த கஸ்டங்களை அனுபவித்து விட்டு இறுதில் மனதை பிழியும் சோகமும் வந்து அதற்கும் முடிவில் கடவுள் வந்து இறப்பதாக இருந்து விட்டால் அவர்களை உயிர்ப்பித்தோ, இல்லை நன்மை பயக்கும்படி நல்லதாகவே ஏதேனுமோ தருவார். இதைத்தான் குறிப்பிட்டு அக்கால நம் வீட்டுப்பெரியவர்கள் காலங்காலமாய் தலைமுறை தலைமுறையாய் நமக்கு பொறுமையின் அவசியத்தை சுட்டிக் காட்டி கதை வாயிலாக உணர்த்துவர். கேட்கும் நமக்கும், ரொம்ப ஆர்வமாகவும், நேரக் கடத்தலுமாகவும் இருக்கும். அதன்படிதான் நம் வாழ்க்கை பயணமும் நகரும் என்ற எண்ணத்தில் ஒழுக்க உணர்வுகளும் தப்பாமல் வரும். சுவையான காலங்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா...அதிரா சகோதரி, இன்று ரயில் வந்தவுடனேயே நான் முதல் பெட்டியில் அதுவும் முதலாவதாக ஏறி விட்டேன் போலிருக்கிறதே!!முதலாவதாக வந்த எனக்கு உங்கள் குல வழக்கப்படி என்ன பரிசு இளவரசி அதிரா அவர்களே.? (சே!! உங்களைப் போல் எனக்கும் டங்கு நழுவுகிறது.) சரித்திரக்கதை புகழரசி அதிரா அவர்களே என்று வர வேண்டும். ஹா. ஹா. ஹா.

      நல்லதங்காள் குதித்த கிணற்றுக்குள் உங்களுக்கும் நான் கொடுக்கும் பரிசு இருக்கிறது என கை காட்டி விடாதீர்கள். அப்புறம் நான் எப்போதும் காத்திருந்து கடைசி பெட்டியில்தான் கண்டிப்பாக ஏறுவேன். ஹா.ஹா.ஹா.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வாங்கோ கமலாக்கா வாங்கோ..
      பார்த்தீங்களோ போனதடவை உங்களுக்காக ஸ்பெஷல் ரெயின் ஏற்பாடு பண்ணியதில் ஏகப்பட்ட செலவாகி ட்றம்ப் அங்கிளிடன் கடன் வாங்கியதாப் போச்சு:)).. இம்முறை முயற்சி எடுத்துப் 1ஸ்ட்டாக வந்திட்டீங்க வாழ்த்துக்கள்.. இந்தாங்கோ அதுக்காக உங்களுக்கு ஒரு கிஃப்ட்டூஊஊ:)) ஆருக்கும் காட்டிடாமல் வீட்டுக்குப்போய்க் கதவை லொக் பண்ணிப்போட்டு ஓபின் பண்ணுங்கோ:)).

      [im] https://image.made-in-china.com/43f34j00sQtfmkJFrZqG/Wholesale-Small-Christmas-Eve-Gift-Boxes.jpg [/im]

      Delete
    3. //நல்லதங்காள் பொறுமைசாலி என்பதாக அவளின் பொறுமைக்கும் உதாரணமாக இந்த கதை வரும்//
      ஓ .. ஆனா அவ இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிச்சிருக்கலாமோ எனத்தான் எண்ணத் தோணுது.. இக்காலப் பெண்கள் எனில் உடனேயே அண்ணனுக்குப் போட்டுக் குடுத்திடுவார்கள் ஹா ஹா ஹா.

      //முதலாவதாக வந்த எனக்கு உங்கள் குல வழக்கப்படி என்ன பரிசு இளவரசி அதிரா அவர்களே.? (சே!! உங்களைப் போல் எனக்கும் டங்கு நழுவுகிறது.) சரித்திரக்கதை புகழரசி அதிரா அவர்களே என்று வர வேண்டும். //

      ஹா ஹா ஹா சரித்திரக்கதையையும் பிகழரசியையும் பார்த்து டங்கு ஸ்லிப்பாவது நோர்மல் தானே:)).. உங்களின் இக்கொமெண்ட் படிக்காமலேயே மேலே பரிசு தந்துவிட்டேன்ன்.. உண்மையில் இப்போதான் இதைப் படிக்கிறேன்.

      Delete
    4. //நல்லதங்காள் குதித்த கிணற்றுக்குள் உங்களுக்கும் நான் கொடுக்கும் பரிசு இருக்கிறது என கை காட்டி விடாதீர்கள்.//

      சே..சே... அது ஃபீலிங்கு காட்டுவோரைத்தான் தள்ளி விட்டிடுவேனாக்கும்:). நல்லதங்காளுக்கு பெரீய தலைமயிராம்... கிணற்றுள் அவவின் தலை மயிர் தண்ணீரை மூடியபடி பரவிக் கிடந்ததாம்.. இது உண்மையோ கற்பனையோ யாரரிவர்.

      மிக்க நன்றிகள் கமலாக்கா... கிஃப்ட் பத்திரம்..:).

      Delete
    5. //இக்காலப் பெண்கள் எனில் உடனேயே அண்ணனுக்குப் போட்டுக் குடுத்திடுவார்கள் // - இக்கால ஆண்கள் எனில், மனைவியை, தன் தங்கையை மதிக்கவேண்டாம் என்று முதல் நாளிலேயே சொல்லிக்கொடுத்திடுவார்கள், இல்லைனா, மனைவியே கணவனுக்கு அந்த மந்திரத்தைப் போட்டிடுவார்கள்.

      எந்தக் காலத்தில் இருக்கீங்க அதிரா?

      Delete
    6. @ நெ தமிழன்
      //இக்கால ஆண்கள் எனில், மனைவியை, தன் தங்கையை மதிக்கவேண்டாம் என்று முதல் நாளிலேயே சொல்லிக்கொடுத்திடுவார்கள்//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு தங்கை இல்லைப்போல:) அதுதான் இப்பூடி தைரியமாச் சொல்றீங்க:)).

      //இல்லைனா, மனைவியே கணவனுக்கு அந்த மந்திரத்தைப் போட்டிடுவார்கள்.//
      சே..சே.. அப்பூடியெல்லாம் இல்லை நெல்லைத்தமிழன், இந்தக் காலத்தில் பெரும்பாலும் அண்ணி என்பவவும் அக்காபோலத்தான்..

      Delete
  2. / சரித்திரக் கதைப்புகழரசி அதிரா:)//
    இதை பார்க்கத்தானா ஓடோடி வந்தாய் மகளே ஏஞ்சல் :) அப்டீன்னு யாரோ சொல்றது காதில் விழுகிறதே :))
    என்ன இது பட்டம் சின்னதா இருக்கே ..இருங்க நானும் நாலு வார்த்தை சேர்த்து தரேன் :)Sye Raa  /சய்ரா /பாஹுபலியையும் மிஞ்சிய சிங்கப்பெண் சரித்திர கதைபுகழரசி அதிரா 

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ அஞ்சு வாங்கோ வாங்கோ.. என்ன இண்டைக்கு ரொம்ப ஸ்லோவாகிட்டீங்க:)).. ஓட முடியாமல் போச்சோ அதிராவைப்போல:)).. ஹா ஹா ஹா சரி சரி பயப்பூடாதீங்க என் புளொக் வழக்கப்படி 2 வதா வருவோருக்கு ஆயாவைக் குடுப்பேன், ஆனா இம்முறை ஆயா ச்சோ யங்கூ:)) அதனால அவவி எங்கும் அனுப்ப மனசு வரவில்லை எனக்கு:)).

      //இதை பார்க்கத்தானா ஓடோடி வந்தாய் மகளே ஏஞ்சல் :) அப்டீன்னு யாரோ சொல்றது காதில் விழுகிறதே :))//

      ஹா ஹா ஹா அது ஒருவேளை அந்த நல்லதங்காளாக இருக்குமோ:)).

      //என்ன இது பட்டம் சின்னதா இருக்கே ..இருங்க நானும் நாலு வார்த்தை சேர்த்து தரேன்//
      உங்களுக்குத்தான் தெரியுமே அஞ்சு:) எனக்குப் புகழ்ச்சி புய்க்காதென:)) அதனாலேயே சின்னப் பட்டத்தை ஜந்தோசமாக ஏற்றுக் கொண்டேன்ன்:)) பெரிசெல்லாம் வாணாம்ம்:)) ஹா ஹா ஹா.

      Delete
  3. /அது தமிழுக்கு நாம் செய்யும் துரோகம் என்பதால,//ஸ்ஸ்ஸ்ஸ் யப்பப்பா இதை பார்த்து உங்க சிமியோன் ரீச்சர் உங்களை தேடி வரப்போறார் எங்கிருந்தாலும் :)

    ReplyDelete
    Replies
    1. [im] https://vetstreet-brightspot.s3.amazonaws.com/5c/1d/29740f154636858af697dbc3a217/cat-hiding-thinkstock-147061125-225sm121813.jpg [/im]

      Delete
  4. ஆமா எங்களுக்கு தமிழே மறந்துபோச்சு உங்க புண்ணியத்தால் :) சரித்திரம் எம்மாத்திரம் :)
    அஞ்சு தூங்கவில்லை அது மயக்கம் 

    ReplyDelete
    Replies
    1. ///அஞ்சு தூங்கவில்லை அது மயக்கம் //

      ஹா ஹா ஹா மயக்கம் திருவதற்கு டக்குப் பக்கென வெள்ளைமாளிகையில் அதிரா மெல்ல அடிமேல் அடி வச்சு நடக்கும் வீடியோவைப் போட்டிட வேண்டியதுதேன்ன்:)).. ஓடாதீங்க அஞ்சு:)) மயக்கமாவே இருங்கோ:))

      Delete
  5. எனக்கு இந்த கதை பெரிசா தெரியாது ஆனா கிணற்றில் போட்டது மட்டுமே நினைவிலிருக்கு அநேகமா எங்க மங்கை மிஸ் பாடம் நடத்தும்போது கோட் செஞ்சிருப்பார் :) மற்றபடி உங்க பாட்டி மாதிரி எங்க பாட்டி இல்லை ..எங்க பாட்டி பைபிள் ஸ்டோரீஸ் ஈசாப் நீதிக்கதைகள்  சொல்லுவாங்க 80 ,90 களில் மாலைமதி அப்புறம் லட்சுமி அனுராதா  ரமணன் சிவசங்கரி எல்லாம் படிப்பாங்க எங்களுடன் பகிர்வாங்க .

    ReplyDelete
    Replies
    1. //அப்புறம் லட்சுமி அனுராதா ரமணன் சிவசங்கரி எல்லாம் படிப்பாங்க எங்களுடன் பகிர்வாங்க .//
      ஆஆஆஆஆஆ இதெல்லாம் அப்பவே ஜொள்ளித்தந்து சின்னனிலேயே அஞ்சுவைக் கெடுத்துப்போட்டா பாட்டீஈஈஈஈஈஈ:)) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))..

      ஹா ஹா ஹா எனக்கு நிறையக் கதைகள் மறந்திட்டேன் அஞ்சு..

      பூனைக்குட்டியாகிய ராசகுமாரன்
      ஆமைக்குட்டியாகிய ராசகுமாரன்:)).. இப்படிப் பல தலைப்புக்கள் வச்சு சொல்லுவா.. இவை எல்லாம் 10 வயதுக்கு முன்னர் சொல்லிய கதைகள்.. சில பாட்டுக்கள்.. இப்போதைய காலம் எனில் வீடியோ எடுத்து வச்சிருக்கலாம்..

      இதேபோல அம்மம்மா சொல்லும் கதைகள் எல்லாம், தன் அனுபவப் பகிர்வாக இருக்கும்.. அதாவது தன் சின்ன வயசுச் சம்பவங்கள்.. என் 20 வயசில கூட, அம்மம்மாவின் சாறித்தலைப்பை விரிப்பா, அதில் ஒட்டிக்கொண்டு படுத்திருப்பேன், எனக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பா... அதெல்லாம் ஒரு காலம்.

      இப்போதைய பிள்ளைகளைக் கதை சொல்லக் கூப்பிட்டால்.. எப்படி நழுவுகிறார்கள் என்றே தெரியாமல் நைச நழுவி ஓடி விடுகிறார்கள் ஹா ஹா ஹா கர்ர்ர்:))

      Delete
  6. ///அவவும் ஒரு வசனத்தை வச்சு, ஒன்பேது கதைகள் சொல்லுவா:)) ///
    பின்னே பேத்திக்கு தப்பாத பாட்டி /அப்பம்மாவாச்சே  :)  

    //சரி வாங்கோ நானும் உங்களுக்குச் சொல்கிறேன்:), இவை எல்லாம் நாம் அறிஞ்சு வச்சிருக்கோணும் தெரியுமோ:)..//
    அப்போ உங்க பாட்டி உங்களுக்கு சொன்னாங்க இப்போ அதிரா ஆச்சி எங்களுக்கு சொல்வதால் அமைதியா கதையை படிச்சிட்டு வரேன் :)

    ReplyDelete
    Replies
    1. //இப்போ அதிரா ஆச்சி//

      ஹா ஹா ஹா அப்பா என்னைக் கூப்பிடுவதை நினைவு படுத்திட்டீங்க:)..

      //அமைதியா கதையை படிச்சிட்டு வரேன் :)//
      பாடமாக்கி வச்சிருங்கோ.. திடுதிப்பென எப்போதாவது கொஸ்ஸ்ஸ்சன்ஸ் கேய்ப்பேன்:))

      Delete
  7. //அப்பம்மா பாடிய வரிகளில் சில இப்பவும் காதில ஒலிக்குது...//அப்படின்னா அதை அப்படியே உங்கள் தேனினும் இனிய குரலில் பாடி இங்கே பதிவிட்டிருக்கலாமே சாந்தா :) சேசே :))) டங் ட்விஸ்டிங் அதிராவ் :)

    ReplyDelete
    Replies
    1. ////அப்படின்னா அதை அப்படியே உங்கள் தேனினும் இனிய குரலில் பாடி இங்கே பதிவிட்டிருக்கலாமே சாந்தா :)//

      ஹா ஹா ஹா கர்:)) கில்லர்ஜியும் ஒரு கெரகாட்டமாம்:) ஜொந்த முயற்சியில எழுதியிருக்கிறார்:)).. அதை நான் பாடி.. அனுப்பப்போறேன் அடுத்த ரவிக்குமார் அங்கிள் மூவிக்கு:)).. ஹீரோ கவின் ஹீரோயின் லொஸ்லியா:) ஹா ஹா ஹா.

      Delete
  8. கதையை படிச்சு விட்டேன் ஆனாலும் பாருங்க இப்பவும் மூளி போன்ற கெட்ட வர்களே உலகில் நிறைய இருக்காங்க நல்லதங்கால்கள் குறைவே (இங்கே ள் வரவேயில்லை டைப்பும்போது எனவே  இது கூகிள் எர்ரர் என்னுதில்லை )

    ReplyDelete
    Replies
    1. //(இங்கே ள் வரவேயில்லை டைப்பும்போது எனவே இது கூகிள் எர்ரர் என்னுதில்லை )//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இவிங்களுக்குப் பொழுது போகவில்லைப்போலும்:)) ஹா ஹா ஹா...

      இருப்பினும் அஞ்சு.. அக்கால சகுனி, மூளி, தாடகை.. இப்படியானோரைப் பார்க்கும்போது, இப்போதைய காலம் அவ்வளவு கொடிய மக்கள் இல்லை அல்லோ.. முன்னைய காலங்களில் நிறையப் பொல்லாதோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

      Delete
  9. //அண்ணன் வந்தால் தெரிய வேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு வகை இலைகளைப் பறித்து பாதை முழுவதும் தூவிச் சென்றாளாம்.//என்னவொரு நம்பிக்கை அண்ணனுக்கு இவங்க போகிற இடம் தெரியணும்னு .இப்போவாச்சும் மொபைல் அது இதுன்னு தொடர்பிருக்கு அந்த காலத்தில் மழை பெய்து விவசாயம் நல்ல இருக்குன்னு தெரியக்கூட வாய்ப்பில்லை பிரிந்த குடும்பத்துக்கு .கதை படிச்சு feelingslaam இல்லை ..இதைவிட கொடுமைகள் இப்போ உலகத்தில் தாண்டவமாடுது .என்ன நாமெல்லாம் பசித்த பூச்சிக்கும் கூட நீரும் பழமும் வச்சி பழகிட்டோம் இப்படி யாரவது பசின்னு வந்தா நிச்சயம் உணவிடுவோம் வாங்கி கொடுப்போம்  அந்த காலத்தில் அவங்களுக்கு ஒருவர் கூட ஹெல்ப் செய்யலியே 

    ReplyDelete
    Replies
    1. //என்னவொரு நம்பிக்கை அண்ணனுக்கு இவங்க போகிற இடம் தெரியணும்னு//

      நானும் அதை நினைச்சுப் பார்த்தேன் அஞ்சு.. அது எனக்கு தெரியவில்லை, அதுக்கும் ஒரு கதை இருக்கலாம், ஒருவேளை சின்ன வயதில், அப்படி இலையைப் போட்டுக்கொண்டே வேட்டைக்கு அல்லது எங்காவது காட்டில் ஏதும் பழம் பறிக்கப் போவது.. இப்படி முறை அவர்களுக்குள் இருந்திருக்கும்.. அதனாலேயே அண்ணன் பார்த்தால் கண்டு பிடிப்பார் எனும் நம்பிக்கையில் போட்டிருக்கிறா போலும்.

      Delete
    2. //என்ன நாமெல்லாம் பசித்த பூச்சிக்கும் கூட நீரும் பழமும் வச்சி பழகிட்டோம் இப்படி யாரவது பசின்னு வந்தா நிச்சயம் உணவிடுவோம் வாங்கி கொடுப்போம் //

      தன் காதில் இருந்த குண்டலத்தை வாழால் வெட்டிக் குடுத்ததும் அக்காலத்தில் நிகழ்ந்திருக்கு.. கர்ணன். தன் விரலை வெட்டிக் கொடுத்தார் அர்ச்சுனன்... இப்படி பலவும் அக்காலத்திலும் இருந்திருக்கு. ஆனா மூளி போன்ற கொடியவர்களும் இருந்திருக்கினம்.

      //அந்த காலத்தில் அவங்களுக்கு ஒருவர் கூட ஹெல்ப் செய்யலியே //
      இதுபற்றி என் குட்டிக் கிட்னியும் ஜிந்திச்சது அஞ்சு.. அதுக்கு இன்னொரு காரணம் இருக்கு. அக்காலத்தில் பெரிய அரச வம்சம், பணக்கார வம்சம் எனில்.. உயிரை மாய்த்தாலும் மாய்ப்பினமே தவிர, அடுத்த வீட்டில் சாப்பிட மாட்டினம், அடுத்தவர்களும் பயத்தில் கூப்பிட்டு உணவு குடுக்காயினமெல்லோ... அப்படி ஒரு கெளரவப் பிரச்சனையும் அக்காலத்தில் இருந்ததெல்லோ.

      நான் எனில், அடுத்தவர் மனம் நோகக்கூடாது என்றே, எதையாவது நீட்டினால் நோ சொல்லாமல் வாங்கிடுவேன்.. அது ஆராக இருப்பினும்..

      மிக்க நன்றி அஞ்சு. எல்லோரையும் காணல்லியே கொஞ்சம் போஸ்ட் போட்டு நாமாவது பேசுவோமே எனத்தான் இதைப் போட்டேன்.

      Delete
    3. எழுத்தில் பிழை விட்டாலும், ஆபத்தான பிழை விடலை என்று அதிரா ஆறுதல் பட்டுக்கலாம்.

      //குண்டலத்தை வாழால் வெட்டிக் // - வாலால் என்று எழுதியிருந்தால் அதற்கு வேறு அர்த்தம் வந்துவிடும். வாளால் என்று எழுதத் தெரியாமல் 'வாழால்' என்று எழுதி தமிழ்க் கொலை செய்ய அதிராவுக்குத்தான் முடியும்.

      Delete
    4. //வாலால் என்று எழுதியிருந்தால் அதற்கு வேறு அர்த்தம் வந்துவிடும்.//
      ஆஆஆஆஆஆஆஅ இந்த ல வில எனக்கு எப்பவும் குழப்பமில்லை, அதுமட்டுமில்லை ழ/ள வர வேண்டிய இடத்தில் ஆராவது ல போட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் தெரியுமோ:)) ஹா ஹா ஹா... ஆனா இந்த ழ/ள இருக்கே.. ஹையோ முருகா முடியல்ல.. ஓகே வாள்.. வாள்.. வாள்.. வாள்.. வாழைமரம்... ஹா ஹா ஹா

      Delete
  10. கிழக்குத்தெரு கீழ்வீடு சீதனம்
    மேற்குத்தெரு மேல்வீடு சீதனம்.

    அப்படீனாக்கா... மேற்குத்தெரு கீழ் வீட்டையும், கிழக்குத்தெரு மேல் வீட்டையும் யாருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்தாங்க ?

    ஏழு குழந்தையையும் தூக்கி கிணற்றில் போட்டாள் என்றால் மூத்த குழந்தையின் வயது கிட்டத்தட்ட 15 வயது இருக்கணும் நல்ல தங்காளால் தூக்கிப்போட முடியுமா ? (இதில் சரித்திர கதா"சிரி"யர் கிணற்றில் தண்ணீர் இருந்ததா என்பதை குறிப்பிடவில்லை)

    சரி ஒன்பது நபரை கொன்றதுக்காக மூளியை மட்டும் கொல்லாமல் திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லோரையும் கொல்வது எவ்வகையில் நியாயம் ?

    சரி நல்லதம்பியின் மகனுக்கு திருமணம் செய்யும் வயது இருந்தால் தங்கைக்கு முன்பே ந.தம்பிக்கும், மூளிக்கும் திருமணம் முடிந்து விட்டது அப்படியானால் இம்பூட்டு சீதனம் கொடுக்க மூளி எப்படி சம்மதித்தாள் ?

    மதுரையில் தங்கை வீடு சரி காடு மேடு கடந்து அண்ணன் வீட்டுக்கு வந்த அண்ணனின் ஊர் எது ?
    (நல்லவேளை நல்லதம்பியின் ஊர் தேவகோட்டை என்று சொல்லவில்லை)

    மேலும் பந்தல் சரிந்து அவ்வளவு பேரும் இறக்கும்போது பெண்ணும், மாப்பிள்ளையும் என்ன ஆனார்கள் ?

    மாப்பிள்ளையின் பெயர் “காசிநாதன்” என்று அழுத்தம் கொடுப்பதின் பிரத்யேக காரணம் உண்டா ?

    டைரக்டர் சங்கர் கதை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருப்பதாக தகவல். எதற்கும் இக்கதையை துணியைப் போட்டு மூடி வையுங்கள் அவர் கதையை படித்தால் சுட்டு விடப்போகிறார். உங்களை அல்ல! தன்னைத்தானே (பாவம் சங்கர் மனைவி. பெண்பாவம் பொல்லாதது)

    குறிப்பு - பந்தல் போட்ட கம்பெனிகாரனின் அலைபேசி எண் அனுப்ப இயலுமா ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //அப்படீனாக்கா... மேற்குத்தெரு கீழ் வீட்டையும், கிழக்குத்தெரு மேல் வீட்டையும் யாருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்தாங்க ?
      //
      [im] https://fscomps.fotosearch.com/compc/PSK/PSK005/cat-climbing-a-tree-stock-photography__1574r-23055.jpg [/im]..

      // மூத்த குழந்தையின் வயது கிட்டத்தட்ட 15 வயது இருக்கணும் //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மூத்த குழந்தையின் வயசு 7 ஆம்ம்ம்:)).. பேர்த் சேட்டிபிகேட் என்னிடம் இருக்கு:)) ஆதாரம் இல்லாமல் கதை சொல்லுவேனோ?:)) நாம ஆரு குயின் அம்மம்மாவின் பேத்தி எல்லோ:))

      Delete
    2. //(இதில் சரித்திர கதா"சிரி"யர் கிணற்றில் தண்ணீர் இருந்ததா என்பதை குறிப்பிடவில்லை)//
      தண்ணி நிறைய இருந்ததாம் கில்லர்ஜி:)) அதுக்கு அந்த ஏரியாவில் ஆடு மேய்த்த பிள்ளைகள் சாட்சி:)) .. ஆடு மேய்த்தோரை ஆரு பார்த்தா எண்டெல்லாம் நோ குரொஸ் குவெஸன் பிளீஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா..

      Delete
    3. //அப்படியானால் இம்பூட்டு சீதனம் கொடுக்க மூளி எப்படி சம்மதித்தாள் ?//

      ஒரே மேடையிலேயே இரு திருமணங்கள் நடந்திருக்குமோ கில்லர்ஜி:)).. சே..சே இப்போ அப்பம்மாவையும் கேய்க்க முடியாதே:))

      //அண்ணனின் ஊர் எது ?
      (நல்லவேளை நல்லதம்பியின் ஊர் தேவகோட்டை என்று சொல்லவில்லை)//
      அது கில்லர்ஜி, தேவகோட்டையின் கிழக்காலே இருக்கும் “அர்ச்சுனாபுரம்” எனும் ஊராம் உண்மையில்... ஹா ஹா ஹா

      Delete
    4. //மேலும் பந்தல் சரிந்து அவ்வளவு பேரும் இறக்கும்போது பெண்ணும், மாப்பிள்ளையும் என்ன ஆனார்கள் ?

      மாப்பிள்ளையின் பெயர் “காசிநாதன்” என்று அழுத்தம் கொடுப்பதின் பிரத்யேக காரணம் உண்டா ?//

      [im] https://content-images.jilljuck.com/medium/aa32973d-cdca-43da-a68e-57d85c19a9e5.jpg[/im]

      Delete
    5. //உங்களை அல்ல! தன்னைத்தானே (பாவம் சங்கர் மனைவி. பெண்பாவம் பொல்லாதது)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்:)) ஹையோ ஆண்டவா:)).. பெண்பாவம் மூளியைத்தானே தாக்கும்:)).

      //குறிப்பு - பந்தல் போட்ட கம்பெனிகாரனின் அலைபேசி எண் அனுப்ப இயலுமா ?//
      ஆஹா தேவகோட்டையில் ஒரு கல்யாணவீடு வருது போல:))..

      [im]https://tamilphotocomments.com/cache/tamil-photo-comment/vadivelu/ippo-dhan-nimmadhiya-iruku_1406289548_595.jpg[/im]

      அப்பாடா:)) மிக்க நன்றிகள் கில்லர்ஜி:)).. நல்லவேளை நெல்லைத்தமிழன் பயணத்தில் இருக்கிறார்:)) ஹா ஹா ஹா:))

      Delete
    6. கில்லர்ஜி கேள்விக்கணைகளாய் தொடுத்து விட்டார்.  எல்லாம் நியாயம்தான்!

      Delete
    7. //கில்லர்ஜி கேள்விக்கணைகளாய் தொடுத்து விட்டார். எல்லாம் நியாயம்தான்!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  11. தன்மானம் என்பது என்னைப்பொறுத்தவரை மிக முக்கியம் .அதற்கு லேசா ஒரு கீறல்விழுந்தாலும் எதுவும் வேணாம்னு அங்கிருந்து விலகிடுவேன் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அஞ்சு, நானும் அப்படித்தான் ஆனா எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க மாட்டேன், த்ரிஞ்சவர்கள் எனில் கவனிக்காமல் விட்டுக்கொடுத்துப் போவேன், ஓவராகும்போதுதான் விலத்த நினைப்பேன்.

      Delete
  12. /அதிரா நீங்க சிங்கப்பெண் ,சகலகலாவல்லி சமையல் அரசி கதை எழுதுவதில் மகா ராணி ,குரல் ஜானகியும் சுசீலாவும் கலந்த பஞ்சாமிர்தம் ,நீங்க நடந்தா நடையழகு ,சிரிச்சு முத்துக்களை  சிதறவிடுகிறீர்கள் ,உங்க புன்னகை கோடி கொடுத்தாலும் கிடைக்காத பொன்நகை //
    இருங்க உங்களை இப்போ உற்சாகப்படுத்தியத்தில எனக்கும் உற்சாகம் சுரக்குதான்னு அளந்துட்டு வரேன் :) 

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எழுதும்போதே உற்சாகம் உங்களுக்குள் அலைபுரண்டு ஓடியிருக்குமே:)) ஹா ஹா ஹா நன்றி அஞ்சு.

      Delete
    2. ஆ....அஞ்சு ஹை பைவ் 🤣 🤣 🤣 🤣 🤣
      (இந்த கொமண்ட் எப்படி எனக்கு மிஸ் ஆச்சு..ஆ பரவாயில்லை கண்டுபிடிச்சுட்டோம்ல்ல)

      Delete
    3. இன்னும் நிறைய தோணுச்சு ப்ரியா நீங்களும் சொல்லிப்பாருங்க :) நமக்கு இலவசமா உற்சாகம் கிடைக்குதுன்னா விடக்கூடாது :)

      Delete
    4. ஆமா ஆமா ஜொள்ளிப்பாருங்கோ.. என் வளையல்களை அதிராவுக்கு குடுக்கப்போறேன், வைர அட்டியலையும் அதிராவுக்கே குடுக்கப்போறேன்.. மட்டின் ரோல் செய்து குடுக்கப் போறேன்ன்:)) இப்பூடிச் சொல்லிப்பாருங்கோ இன்னும் உட்..சாகம் கிடைக்குமாக்கும் ஹையோ ஹையோ:)) கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க:))

      Delete
  13. வணக்கம் அதிரா சகோதரி

    இந்த தடவை ஊசிக்குறிப்பு இரண்டு தடவை தந்து விட்டீர்களே! அதுவும் தாங்கள் கூறியது சோகக்கதை என்ற உணர்வை நாங்கள் காட்டி விட்டால் உடனே "உங்கள் இணைப்பை கட் செய்து விட்டு நீங்கள் கிணற்றுக்குள் தள்ளப்படுவீர்கள்" என்று ஊசிபோல் குத்தியதால்,"ஊசி இணைப்பு" அந்த இடத்தில் தானாகவே கட் ஆகி கழன்று விட்டதோ? ஐயோ... இன்னைக்கு எனக்கும் என்னமோ ஆகி விட்டது..! நல்லதங்காள் கதையின் சோகம் அளவுக்கு மீறி தாக்கி விட்டதோ? ஈஸ்வரா!ஈஸ்வரா..

    குரு அழகாய்தான் சிரிக்கிறார்,.. அர்த்தமாகவும் சிரிக்கிறார்.. மொத்தத்தில் அவர் சிரிப்பு நன்றாகவே உள்ளது.

    தன்மானத்தை வலியுறுத்திய இரண்டாவது ஊசி வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது. "மதியாதர் தலைவாசல் மிதிக்காதே" ஔவை பிராட்டியின் தலைசிறந்த தாரக மந்திரமாயிற்றே!

    உண்மைதான்.. அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் போது நமக்குள்ளும் அது தொற்றிக் கொள்கிறது. நல்ல உணர்வான வாக்கியங்கள். அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //அதுவும் தாங்கள் கூறியது சோகக்கதை என்ற உணர்வை நாங்கள் காட்டி விட்டால் உடனே "உங்கள் இணைப்பை கட் செய்து விட்டு நீங்கள் கிணற்றுக்குள் தள்ளப்படுவீர்கள்" என்று//

      பின்ன இதைச் சொல்லாட்டில்.. இப்போ சோக மயமாகியிருக்கவும் சான்ஸ் இருக்கு இங்கு:)) ஹா ஹா ஹா அதனாலதான் மிரட்டி விட்டேன் ஹா ஹா ஹா:).

      //குரு அழகாய்தான் சிரிக்கிறார்,.. அர்த்தமாகவும் சிரிக்கிறார்.. மொத்தத்தில் அவர் சிரிப்பு நன்றாகவே உள்ளது.//
      நன்றி நன்றி அவர் எப்பவும் அழகுதான், அவரின் சேட்டைகளும் அழகுதானே..

      நன்றி கமலாக்கா.. இன்று நீங்களும் உற்சாகமாக ஓடி ஓடி வந்திருக்கிறீங்க.. நோ ஃபீலிங்ஸூ என நான் மிரட்டியதுதான் காரணமோ ஹா ஹா ஹா.

      Delete
  14. மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அதிரா!

    'சரித்திரக்கதைப்புகழரசி அதிரா!'உண்மையிலேயே இந்தப்பெயர் கம்பீரமாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ..
      பெயர் கம்பீரமாக இருக்கோ ஹா ஹா ஹா.. பின்ன நான் மேலே பர்த்து கீழே பார்த்து கடலைப்பார்த்து.. ஏன் அஞ்சுவையும் பார்த்த பின்தான் முடிவு செய்தேன் பெயரை ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் மனோ அக்கா.

      Delete
  15. அப்புறம்தான் வரவேண்டும்.  இப்போதைக்கு அட்டண்டன்ஸ் மட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஓ நீங்களும் இப்போ பயங்கர பிஸியாக இருப்பதைப்போலதான் தெரியுது.. எங்கள் ஹொலிடே முடிஞ்ச பின்னர்தான் நீங்கள் எல்லோரும் பிசியாகியிருக்கிறீங்க:).

      Delete
  16. நேற்று ஏதோ ஒரு தளத்தில் பெயர் மாறியிருக்கும்போதே சந்தேகப்பட்டேன்..   பதிவு வெளியாகியிருக்க வேண்டும் என...  அப்டேட் ஆகவில்லை!  இப்போதுதான் பார்க்கிறேன் பதிவை!

    ReplyDelete
  17. தெரிந்த கதை என்றாலும் உங்கள் மொழியில், உங்கள் நடையில் படித்து ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      மிக்க நன்றி.. தெரிஞ்ச கதைதான் ஆனாலும் எல்லோரும் மறந்திருப்பீங்க:) நான் மறக்க விடமாட்டனே.. சரித்திரம் ரொம்ப முக்கியமாக்கும்:).

      Delete
  18. உங்கள் பதிவை காட்டவில்லையே டேஸ் போர்ட் !
    அதற்கு சோக கதை பிடிக்காதோ?

    நல்லதங்காள், பாலநாகம்மா போன்ற கதைகளை பெரியவர்கள் சொல்வார்கள். சின்னவர்கள் கேட்டு கண்ணீர் வடிப்பார்கள். முதல் கதையில் அண்ணி கொடுமைக்காரி, அடுத்த கதையில் சிற்றன்னை கொடுமைக்காரி.


    பொறுமை கடலிலும் பெரிது என்பது போல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து இருந்தால் காசிநாதன் வந்து அழைத்து சென்று இருப்பார் மதுரைக்கு.
    விதி வலியது ! என்பதையும் இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை என்று முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது இறைவனால் என்பதும் இக்கதையிலிருந்து தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... ஓ டாஸ் போர்ட் இல் காட்டவில்லையோ.. இது ஏதோ திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈ:).. நான் இதை ட்றம்ப் அங்கிளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா.

      ஓ பாலநாகம்மா கதை.. நினைவில் இல்லையே எனக்கு.. உண்மைதான் அக்காலத்தில் பொறுமை குறைவோ?.. ஏனெனில் கோவலனைக் கொன்ற அரசனும் கொஞ்சம் பொறுமை காத்திருந்தால்.. ஒரு உயிர் போயிருக்காதெல்லோ..

      உண்மைதான் கோமதி அக்கா.. விதி வலியது...

      Delete
  19. சரித்திர கதையை அழகாய் சொல்ல வருகிறது.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மிக்க நன்றி.. சே..சே நெல்லைத்தமிழன் கோமதி அக்காவின் இக்கொமெண்ட்டைப் படிக்காமல் இருக்கிறாரே:))

      Delete
  20. தவளை இளவரசி, ஏழு குள்ளர்கள் அவள் தங்கை கதைகள் எல்லாம் அடுத்து வருமா?
    பாட்டியின் பாடல் அருமை. சீதனம் கொடுக்கும் பாட்டு.

    ReplyDelete
    Replies
    1. ஓ இப்படி எல்லாம் கதை இருக்கோ.. எனக்கு தெரியவிலை ஹா ஹா ஹா.. இல்லை அடுத்து வேறு பிளான் வச்சிருக்கிறேன் கோமதி அக்கா:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  21. தமிழ்நாட்டில் விருதுநகர் பக்கம் வத்திராயிருப்பு ஊரில் நல்லதங்காள் கோயில் இருக்கிறது. 
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ...

      ஆஆஆஆஆஆ உங்களுக்கு தெரிஞ்சிருக்கு... நல்லதம்பிக்கும் கோயில் இருக்காம்.. ஆனா இவை எல்லாம் சிலைகள் எனத்தானே சொல்ல வேண்டும்.. கோயில் எனச் சொல்கிறார்கள்..

      மிக்க நன்றிகள்.

      Delete
    2. என்னுடைய பெரியப்பாவுக்கு (அம்மாவோட அக்கா கணவர்) நல்லதங்காள் குலதெய்வம்.  அதனால் கோயில் உண்டு. ஒரு அண்ணன் பெயர் நல்லதம்பி. நல்லதம்பிக்கும் சிலையுண்டு. Jayakumar

      Delete
    3. ஓ அப்படியா ஜே கே ஐயா.. ஆஆ இதெல்லாம் எனக்குத் தெரியாது.. பாருங்கோ ஒரு கதை எழுதியதால் இவ்ளோ விசயங்கள் தெரியவருது.. குலதெய்வமாக வழிபடுகிறார்கள் என்பது எனக்கு முற்றிலும் புதுத்தகவல். நன்றி நன்றி.

      Delete
  22. விழித்திருக்கும் பூனையின் கண்களில்தான் என்ன ஒரு சோகம்!  அதற்கு தூங்கி விடுவதே மேல்!

    ReplyDelete
    Replies
    1. ஆஆ ஸ்ரீராம் மறுபடியும் லாண்டட்ட்ட்:))..

      //விழித்திருக்கும் பூனையின் கண்களில்தான் என்ன ஒரு சோகம்!//

      சே..சே.. உத்துப் பாருங்கோ ஸ்ரீராம் அது சோகம் இல்லை பயம்:)).. கதை முடிவில் அந்தக் கிணற்றினுள் தன்னையும் தள்ளிப்போடுவினமோ எனும் பயம் ஹா ஹா ஹா:))

      Delete
  23. //மகாபாரதம் சொல்லிட்டேன்:), கம்பராமாயணம் சொல்லிட்டேன், பீஸ்மர் பற்றிச் சொல்லிட்டேன்:).. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........  இதுல 'பீஸ்'மர் வேற!!

    ReplyDelete
    Replies
    1. அவசரமா வேலைக்கு புறப்படறேன் ஆனாலும் பீஸ் ஆன பீஷ்மர் பற்றி சொல்லிட்டு செல்றேன் அது பெருவாரியான இலங்கை தமிழர்கள் எழுதும்போது பேசும்போது நான் கவனித்து ஷ் என்பதை ஸ் என்றே எழுதறாங்க நாம் லக்ஷ்மி என்பதை லக்ஸ்மி என்றும்   சொல்றாங்க 

      Delete
    2. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... இதுல 'பீஸ்'மர் வேற!!//
      ஹா ஹா ஹா சரி சரி அது ஏதோ ஒரு ஃபுளோல வந்திட்டுது:)) வீஷ்மர் எனக்கு பெரிய தாத்தா முறையாக்கும்:)) அதனால கோச்சுக்க மாட்டார்ர் ஹா ஹா ஹா:)).. சே..சே.. வீஷ்மர் விட்டாலும் இவிக விடவே மாய்ட்டாக கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. // நான் கவனித்து ஷ் என்பதை ஸ் என்றே எழுதறாங்க //

      கஸ்டம்தான் போங்க!!!

      Delete
    4. //அவசரமா வேலைக்கு புறப்படறேன்//

      ஹா ஹா ஹா ஜந்தோசம் பொயிங்குதே.. ஜந்தோசம் பொயிங்குதே... ஹா ஹா ஹா இந்தக் குளிரில ஆரும் வேலைக்க்குப் போவினமோ:)) ஹா ஹா ஹா மீ குல்ட்டினுள் தஞ்சம் புகுந்திருக்கிறேனாக்கும் நேக்கு இண்டைக்கு ஹொலிடேஏஏஏஏஏஏஏஏ:))..

      அல்லோ மிஸ்டர் அஞ்சு.. இலக்குமி என்பதுதான் டமிலாக்கும் மிச்சமெல்லாம் சமஸ்கிரதம் கலப்பூஊஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா..

      https://www.cartoonmemes.in/tom_and_jerry/sleeping/Tom-jerry%20Sleeping%20Night%20Reactions%20(77).jpg

      Delete
    5. //கஸ்டம்தான் போங்க!!!//

      ஹா ஹா ஹா..

      https://qph.fs.quoracdn.net/main-qimg-5699b3001c7ca7f06d4f9d7ba78e697c.webp

      Delete
    6. பீஷ்மர் - தமிழ்ல நியாயமா வீடுமர் என்று எழுதணும். விபீஷணன் - விபீடணன் லட்சுமணன் - லக்குவன் அல்லது இலக்குவன். லட்சுமி - இலக்குமி திருதராஷ்டிரந் திருதராட்டிரன்

      Delete
    7. ///பீஷ்மர் - தமிழ்ல நியாயமா வீடுமர் என்று எழுதணும்.///

      ஆஆஆஆஆஆஆஆ அவ்வ்வ்வ்வ் பார்த்தீங்களோ.. இதுக்காகத்தான் நான் வட நாடெல்லாம் வந்து தேடித் திரிஞ்சேன் உங்களை ஹா ஹா ஹா.. இல்லையெனில் கூட்டுச் சேர்ந்து அடிக்க வருகினம் நெல்லைத்தமிழன்:)).. எனக்கு ஏதோ சிமியோன் ரீச்சர் சொன்னது நினைவிருந்ததால அடிச்சு விளாசிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா அதை நீங்களும் சொல்லிட்டீங்க:))..

      பாருங்கோ ஸ்ரீராமும் அஞ்சுவும் ஓடீனம்:)) உங்கள் கொமெண்ட் பார்த்து..

      Delete
  24. //ஆனா அடிக்கடி வந்து கொஞ்சக்காலம் நின்றுபோட்டுப் போவா.//

    ஏன் உட்கார நாற்காலி கூடவா இருக்காது வீட்டில்?

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ கில்லர்ஜி யும் ஸ்ரீராமும் ஒரு முடிவோடதான் களம் இறங்கி இருக்கினம் ஆண்டவா திருவேணி சங்கம வெள்ளை வைரவா.. வெள்ளியில வேல் செய்து தருவேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ன்ங்:))...

      பாருங்கோ.. கஸ்ட காலத்திலும் ஒரு நல்ல காலம் எனச் சொல்லுவினம்:)).. நெல்லைத்தமிழன் இப்போ பிஸி ஹா ஹா ஹா:))..

      அடாது கொஸ்ஸன்ஸ் கேட்டாஅலும்:)) விடாது டமில்ச் சரித்திரம் எழுதியே தீருவேன்ன்:)).. ஹையோ அதாரது குறுக்க நிக்கிறதூஊஊ கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ மீ ஓடோணும்..:))

      Delete
  25. நல்லதங்காள் கதை மிகவும் பிரபலம்தான்!  இதையே சற்று மாற்றி நாகசதுர்த்தி கதையாகவும் சொல்வார் என் அம்மா.   அந்நாளில் எல்லா பெண்களும் புற்றுக்கு பாலூற்றி வழிபட்டு, அந்த புற்று மண்ணை எடுத்து சகோதரர் காதில் வைத்து கொழுக்கட்டைகளுடன் தங்கள் உடன் பிறந்தோருக்கு சீர் செய்வார்கள்!   இந்த வருடமும் என் தங்கை எனக்குப் பணம் கொடுத்தாள்!

    ReplyDelete
    Replies
    1. ஓ இப்படி ஒன்று கேள்விப்பட்டதே இல்லை... ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை. உங்களுக்கு தங்கச்சி இருக்கிறாவோ ஸ்ரீராம், நான் நினைச்சேன் நீங்கதான் கடசிப்பிள்ளை என. தங்கை இப்பவும் அதை மறக்காமல் தொடர்வது சந்தோசம்... வாழ்த்துக்கள்.

      Delete
    2. நீங்க சொல்லிட்டீங்க இல்லை ஸ்ரீராம். இனி அதிராதான் முடிவெடுக்கணும்.

      எனக்கு அவர், தங்கையா இல்லை அக்காவா என்பதை.

      Delete
    3. யாராயிருந்தாலும் பணம் வரணும்!!!

      Delete
    4. ///நெல்லைத்தமிழன்Friday, September 13, 2019 11:13:00 am
      நீங்க சொல்லிட்டீங்க இல்லை ஸ்ரீராம். இனி அதிராதான் முடிவெடுக்கணும்.

      எனக்கு அவர், தங்கையா இல்லை அக்காவா என்பதை.//

      ஹா ஹா ஹா மொத்தத்தில இப்போ என்ன?:)) நெல்லைத்தமிழன் காதில புற்று மண் எடுத்து வைக்கோணும்:).. இங்கின ஸ்கொட்லாந்தில புற்று இல்லை, நான் அப்புறிக்கா போயாவது நல்ல புடையன் பாம்புப் புற்றாப் பார்த்து மண்ணெடுத்து வந்து காதில வைப்பேன்ன்.. இது அந்த புற்றின் மேல் முளைச்சிருக்கும் தொட்டாச்சிணுங்கிச் செடிமீது ஜத்தியம்ம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா..

      Delete
    5. //ஸ்ரீராம்.Friday, September 13, 2019 2:33:00 pm
      யாராயிருந்தாலும் பணம் வரணும்!!!//

      பொயிண்டை இறுக்கிப் பிடிச்சிட்டாரே ஹா ஹா ஹா கர்ர்ர்:))..

      Delete
  26. நான் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகே வத்திராயிருப்பில் பணிபுரிந்த காலத்தில் அதன் அருகே இருந்த மகாராஜபுரம் என்ற ஊரில்தான் இந்த சம்பவம் நடந்ததாகச் சொல்லி அங்கு ஒரு கிணற்றைக் காட்டினார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ இருக்கலாம் ஸ்ரீராம்... அர்ச்சனாபுரத்துக்கு அருகில்தானாம் அக்கிணறு இருக்கிறது... இனிப்போனால் படமெடுத்து வாங்கோ..

      Delete
  27. உறவுகள் இருக்கட்டும்... வேலை செய்யும் இடத்தில் தன்மானத்துக்கு சோதனை வந்தால் என்ன செய்வது?  வேலையையா விட முடியும்? ஒரு வாரம் லீவு போடவேண்டியதுதான்!  இப்போது மனதளவில் ஒரு கஷ்டமான நேரத்தை கடந்துகொண்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. இதை பற்றி அதான் வேலையிடத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எழுத ஐடியா இருக்கு டைம் தான் இன்னும் கிடைக்கல .முயல்கிறேன் .

      நம்மூரிலேயே பிரச்சினைகள்னா அப்போ வெளிநாட்டில் நினைச்சுப்பாருங்க 

      Delete
    2. ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன...
      "உந்தன் சோகம் சொன்னாலும் ஏக்கம் போய்விடும்...எந்தன் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்"

      அவரவருக்கு அவரவர் கஷ்டம் பெரிதுதானோ!

      Delete
    3. //ஸ்ரீராம்.Monday, September 09, 2019 9:43:00 am
      உறவுகள் இருக்கட்டும்... வேலை செய்யும் இடத்தில் தன்மானத்துக்கு சோதனை வந்தால் என்ன செய்வது? வேலையையா விட முடியும்?//

      இல்லை ஸ்ரீராம், இதில முக்கியமான ஒன்று முதலில் சோர்ந்துபோயிடக்கூடாது.. உறவுகள் எனில் தான் கடசிவரை வருபவர்கள்.. வேலையிடத்தில் ஆரோதானே.. சொல்வதைச் சொல்லட்டும் என இருக்கோணும்.. இதில் பெரிதாக மானம் போகிறது என்றெல்லாம்[நம்மில் தவறில்லா பட்சத்தில்] எண்ணிக் கவலைப்படக்கூடாது.. அவர்கள் என்ன கடவுளோ? சொல்வதைச் சொல்லிட்டுப் போகட்டுமே.. சோகமாகிடாமல் புன்னகையோடு இருக்கப் பழகுங்கோ இப்படித்தருணங்களில்.. கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதுதானே.. கடவுளை நம்புங்கோ நிட்சயம் நல்லதைக் காட்டுவார்ர்.

      எனக்குப் பலதடவைகள், நான் மிக மனம் வருந்தும்போது அப்படியே கண் முன்னேயே கடவுள் சில காரியங்கள் அதிசயிக்கும்படி காட்டியிருக்கிறார் உண்மையில்.. என்னாலேயே நம்ப முடியாமல் இருக்கும்.

      என்னைப்பொறுத்து வேலையிடத்தில் பிரச்சனை வரும்போது, லீவு எடுத்து ஒதுங்குவதை விட, தொடர்ந்துபோனால்தான் நோர்மல் ஆகும்... ரேக் இட் ஈசியாக இருக்கோணும்.. சொல்வது சுலபம் செய்வது கஸ்டம்தான் இருப்பினும் மனம் உடைய விட்டிடக்கூடாது.

      //அவரவருக்கு அவரவர் கஷ்டம் பெரிதுதானோ!//
      இதைத்தான் போன புதன்கிழமை கேள்வி பதிலில் கேட்டிருந்தேன்.

      Delete
    4. //AngelMonday, September 09, 2019 9:59:00 am
      இதை பற்றி அதான் வேலையிடத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி எழுத ஐடியா இருக்கு டைம் தான் இன்னும் கிடைக்கல .முயல்கிறேன் .//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கெதியாத் தூசு தட்டுங்கோ.. நான் இப்பவே பபபப..முட்டை எல்லாம் குடிச்சு தென்பாகிறேன் அடிக்க:)) கொமெண்ட்டிலதேன்ன்ன்ன்ன்:))

      Delete
    5. வேலை செய்யும் இடங்களில் பிரச்சனையைக் கடந்துதான் வரவேண்டும். பலவிதமான அவமானங்கள் ஏற்படும். சட் சட் என்று சிறிய வயதில் இருந்ததுபோல முடிவு எடுக்க முடியாது. இதுவும் கடந்துபோகும் என்றுதான் நினைக்கவேண்டும்.

      நான் அப்படித்தான் நினைத்துக் கடப்பேன். ஆனால், அந்த அவமானத்துக்கு அல்லது அவச் சொல்லுக்குக் காரணமானவர்களை மறக்கவே மாட்டேன். நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போது திருப்பிக் கொடுக்கத் தயங்கமாட்டேன். ஹா ஹா.

      Delete
    6. // நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போது திருப்பிக் கொடுக்கத் தயங்கமாட்டேன். ஹா ஹா. //

      நானும்!

      Delete
    7. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் , ஸ்ரீராம், இருவரும் இந்த விஷயத்தில மட்டும் தெளிவாத்தான் இருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இதை என் டயறியில் எழுதி வைக்கிறேன் இப்பவே:)).. நெல்லைத்தமிழன் ஏதும் குறள் சொல்லும்போது எடுத்து விடுறேன் இகதையை:))

      என்னைப்பொறுத்து வேலையில் ஏற்படுவதை அவமானமாக எடுக்கவே கூடாது:).. எரு.. மையில்:) மழை பெய்வதைப்போல நோ வெய்க்கம் நோ ரோசம் என இருக்கோணும்.. ஹா ஹா ஹா..

      Delete
  28. கங்கை நதியோரம் அருமையான பாடல்.  இந்தப் பாடலில் இளையராஜாவின் கைவண்ணமும் உண்டு என்று ஞாபகம்.  இந்தப்படத்துக்கு இசை ஆர் கோவர்தனன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ உங்களுக்கும் பிடிக்கும் என நினைச்சேன் அதேபோல பிடிச்சிருக்கு.. எனக்கும் மிகவும் பிடிக்கும்.. நன்றி.

      Delete
  29. பாடல் கேட்டேன். நீங்களும் ரவிச்சந்திரன் பாடல் வைத்து விட்டீர்கள்.

    அன்பான பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா.. நான் எப்பவும் பாடலின் வரிகள் மற்றும் இசை இரண்டையும் பார்ப்பேன்ன் ஆனா சத்தியமாக ஆர் இயற்றியது ஆர் இசையமைச்சது.. பாடியது என்றெல்லாம் கவனிப்பதிலை:))

      நன்றி நன்றி.

      ஆனா இக்கதைக்கு நான் போட நினைச்ச பாட்டு... “இக்கரைக்கு அக்கரைப்பச்சை...” எனும் பாடல்.. ஆனா அது சோகம்போல இருந்ததால் விட்டுவிட்டேன்..

      Delete
  30. ஊசிக்குறிப்பு சொல்வது சரிதான்.
    உறவு வேண்டும் தான், ஆனால் மதியாதார் வாசல் மிதிக்க கூடாது தானே!
    அதனலேயே நல்லதங்காள் வாழ்க்கை கெட்டு போனது.
    வேறு எங்காவது போய் வேலை பார்த்து குழந்தைகளுக்கு அரை வயிற்று கஞ்சி ஊற்றி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //உறவு வேண்டும் தான், ஆனால் மதியாதார் வாசல் மிதிக்க கூடாது தானே!//

      உண்மை கோமதி அக்கா. நானும் இப்படித்தான், அத்தோடு அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளியாகப் போகவும் மாட்டேன்..

      ஆனா என்னில் ஒரு பழக்கம் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுக்க மாட்டேன்ன்.. ஆர் என்ன சொன்னாலும் மக்ஸிமம் அதை பொஸிடிவ்வாக எடுப்பேன்ன்.. பின்பு, இல்லை இது கொஞ்சம் தப்பாக இருக்கிறதே என மனதுக்கு படும் இடத்து, நன்கு யோசித்து முடிவெடுப்பேன்.

      //அதனலேயே நல்லதங்காள் வாழ்க்கை கெட்டு போனது//
      அதில இன்னொன்று இருக்குது கோமதி அக்கா.. அண்ணனை விட்டுக்குடுக்க மனம் வராதெல்லோ.. பாசம்தானே அங்கு முன்னுக்கு நிக்கும்.. அதுக்காக அண்ணி என்ன சொன்னாலும் பொறுத்துப் போயிடுவோம் எனத்தானே எண்ண வரும்...

      //வேறு எங்காவது போய் வேலை பார்த்து குழந்தைகளுக்கு அரை வயிற்று கஞ்சி ஊற்றி இருக்கலாம்.//
      அது உண்மைதான், ஆனா அக்காலத்தில் கெளரவப்பிரச்சனை எல்லோ..

      நல்லதங்காளிடம் கணவர் காசிநாதர் சொல்கிறாராம், அண்ணி வீடு போகாதே.. நாம் சாணி தட்டி விற்றுப் பிழைக்கலாம் என்று, ஆனா அதுக்கு நல்லதங்காள் சொன்ன பதில் “சந்தனம் எடுத்த கையால் சாணியை எடுப்பேனோ?.. குங்குமம் தொட்ட கையால் கூலி வேலை செய்வேனோ”.. என்பதாம்.. இதை எல்லாம் எழுதினால் கதை பெரிசாகிடும் என எழுதாமல் விட்டேன்..

      அக்காலத்தில் மானம்தான் பெரிசென வாழ்ந்தார்கள். ஆனா அதுவும் சிலசமயம் மோட்டுத்தனமான சிந்தனையே.. இல்லை எனில் இவ்வளவு உயிர்களும் மாண்டிருக்காதே...:(.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  31. /அவரவருக்கு அவரவர் கஷ்டம் பெரிதுதானோ!//

    ஆமாம் அதிரா, முன்பு வெளியில் சொல்லி புலம்பி கொண்டு இருந்தேன் , இப்போது அது மற்றவர்களுக்கு பேசி சிரிக்க ஒரு விஷ்யம் கிடைத்தமாதிரி இருக்கிறது. மேலும் வார்த்தைகளால் நன் வருத்தம் அதிகமாக அளவு பேசுகிறார்கள்.

    அதனால் இப்போது இறைவனிடம் மட்டுமே ! நம் வேதனை, கஷ்டம் எல்லாம் சொல்லி அழுது விடுவது அவர் அதற்கு நீங்கள் சொல்வது போல் அவ்வபோது வந்து நமக்கு ஆறுதல் தருவார்.

    ஐயப்பன் பாட்டில் வருவது போல் தூக்கி விடையா, ஏத்தி விடையா என்று நம்மால் நம் பாரத்தை சுமந்து வர முடியவில்லை என்றால் அவர் நம்மை தூக்கி வருகிறார்.

    குற்றங்களை பொறுத்து காத்து அருள்வார்.

    ReplyDelete
    Replies
    1. //ஆமாம் அதிரா, முன்பு வெளியில் சொல்லி புலம்பி கொண்டு இருந்தேன்//
      இது மாபெரும் தப்பு கோமதி அக்கா, நமக்கு நன்கு தெரிந்தவர், நம்பிக்கையானவர் எனில் ஓகே மற்றும்படி யாரையும் நம்பி நம் துன்பங்களைப் பகிரக்கூடாது.. பிக்பொஸ் பார்க்கிறீங்களோ தெரியாது.. அதில் ஷெரின் தன் துன்பத்தை வனிதாவுக்கு சொல்லி அழ.. அதை வச்சே பின்பு நீ என்னிடம் அப்போ எதுக்கு சொன்னாய் எதுக்கு அழுதாய் என.. ஹையோ பிக்பொஸ் பார்க்கக்கூடாது எனத் திட்டுவினம், ஆனா அது பார்ப்பதால், நாம் எப்படி இருக்கக்கூடாது என்பதைக் கண்டு பிடிக்க முடியுது...

      “நம்ப நட, ஆனா நம்பி நடவாதே”.. இதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

      //அதனால் இப்போது இறைவனிடம் மட்டுமே//
      அத்தோடு வீட்டுக்குள் நீங்கள் பகிரலாம்.. அதனால் நமக்கு துன்பம் வரப்போவதில்லை.

      //நீங்கள் சொல்வது போல் அவ்வபோது வந்து நமக்கு ஆறுதல் தருவார்.//
      நிட்சயம் கோமதி அக்கா, எனக்கு பல தடவைகள் நம்ப முடியாதளவுக்கு கடவுள் காட்டியிருக்கிறார்...

      நிறைய விசயங்களை மனதில் போட்டுக் குழம்பக்கூடாது கோமதி அக்கா, டேக் இற் ஈசியாக கடக்கோணும்... நம்மைப்பற்றி நமக்கு தெரியும்.. அதை மீறி மற்றவர் ஏதும் சொன்னால் சொல்லட்டுமே:)) ஹா ஹா ஹா அதனால் அவர்களுக்கு சந்தோசம் கிடைக்குதெனில்.. எடுத்துக் கொள்ளட்டுமே... ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  32. சரித்திரக்கதை புகழரசி அதிரா... ஆவ்வ்வ்வ்வ் புதுபட்டம். நல்லதங்காள் கதை படித்து கேள்விபட்டதுதான். நீங்க எழுதினதில் திரும்ப ஞாபகம் வருது.பொறுமைக்கு இந்த அக்காளை சொல்லுவாங்க. எனக்கு கிரிஜாம்பாள் கதை மட்டும் அப்பா சொன்னது ஞாபகம் இருக்கு. மற்றும்படி சரித்திரக்கதை எனில் சாண்டில்யன்,கல்கி கதை தான்.
    அப்ப சரித்திரக்கதை என்றா இந்த சேர,சோழ,பாண்டியர் கதையும் வருமோ...
    இப்பாடல் கேட்டிருக்கேன். நல்ல பாட்டு. இப்படியான ப்ளக் அண்ட் வைட் பாட்டு சிலது ரசித்து கேட்கலாம். மாமியின் கலெக்‌ஷனோ..
    ஹா..ஹா..அறிஞர் அண்ணாவின் மொழி சூப்பர். எனக்கு இராவணனை பிடிக்கும். ஊசிகுறிப்பு அருமை. நானும் கடவுளிடமே முறையிட்டு விடுவேன்.யாரை நம்புவது,நம்பாமல் இருப்பது என தெரியவில்லை. எனக்கும் ஏதாவது தப்பா இருந்தால் மனசு சொல்லும்.பலவிடயம் நடந்திருக்கு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் அதிரா.. பல வனிதாக்கள் நம்மிலே உண்டு. ஹா...ஹா..ஹா..
    நாங்க மறக்கேல்லையே....உங்க டொல்லைகள் தொடரும் எனத்தெரியுமேஏஏ..எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு..ஆவ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் என் தாமதமான பதிலுக்கு.. நேற்று கண் திறக்கவே முடியவில்லை.. ஈவினிங்கில் இருந்து ஒரே தலையிடி.. இன்று நோர்மல் ஆகிட்டுது, ஆனா மாத்தி மாத்தி ஏதோ வேலை மற்றும்.. ஏனைய புளொக் கடமைகளை முடிச்சு வர லேட்டாகிட்டுது.

      //ஆவ்வ்வ்வ்வ் புதுபட்டம்//
      இதுக்கே ஏங்கினால்?:)).. இன்னும் நிறைய வர இருக்கெல்லோ:)).

      //எனக்கு கிரிஜாம்பாள் கதை மட்டும் அப்பா சொன்னது ஞாபகம் இருக்கு. //
      எனக்கும் கிரிசாம்பாள்:) கதை நினைவிருக்கு, ஆனா ஆர் சொன்னது என நினைவில்லை.. அப்பாவும் எங்களுக்கு நிறையக் கதைகள் சொல்லுவார்ர்ர்.. அதிகம் ஜோக்ஸ் சொல்லுவார்.. தானும் விழுந்து விழுந்து சிரிப்பார் சொல்லிப்போட்டு ஹா ஹா ஹா..

      //அப்ப சரித்திரக்கதை என்றா இந்த சேர,சோழ,பாண்டியர் கதையும் வருமோ.//
      வரும்ம்ம் ஆனா இங்கின வராது ஏனெனில் எனக்கு அரச கதைகள் படிக்கப் பிடிக்காது..

      // மாமியின் கலெக்‌ஷனோ..//
      இல்ல இல்ல, இது பேமஸான பாட்டுத்தானே.. பொதுவா ரேடியோவிலும் போகும்.

      //எனக்கு இராவணனை பிடிக்கும்//
      ஆஆஆஆஆஅ அவரின் எந்தத் தலை பிடிக்கும் அம்முலு? ஹையோ நேக்கு நஹி:)) ஹா ஹா ஹா..

      //பல வனிதாக்கள் நம்மிலே உண்டு. ஹா...ஹா..ஹா..//
      ஹா ஹா ஹா நாமும் சிலசமயம் சிலருக்கு வனிதாபோல தெரிஞ்சிருக்கலாம் ஹையோ ஹையோ..

      மிக்க நன்றிகள் அம்முலு.. மறக்காமல், கைவிடாமல் தொடர்ந்து வாறீங்க அதுக்காகவே அஞ்சுவின் ஒரு சோடி வளையலில் கண் போட்டுக்கொண்டு திரிகிறேன்ன்.. என் கையில மாட்டிச்சுதோ:)) உடனே உங்களுக்கு கிவ்ட்டாகத் தந்திடுவேன்ன்:)).. நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்றேன்ன்:)) ஹா ஹா ஹா...

      Delete
  33. நல்லதங்காள் கதை கேள்வி பட்டிருந்தாலும் தெரிந்திருக்க வில்லை கதைசொல்லிக்கு நன்றி

    ReplyDelete
  34. சரித்திர கதைப்புகழரசி வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஅ மாதேவி நீண்ட இடைவெளியின் பின்பு வாங்கோ வாங்கோ.. மிக்க மகிழ்ச்சி நன்றி.. நன்றி.

      Delete
  35. நல்ல சோகக்கதையை, நீங்கள் சொல்லிய விதத்தில், ப்பூ..இந்த விஷயத்துக்காகவா குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் இறந்தாள் என்று தோன்றியது.

    இதனை தமிழகத்தில் 60-70 வருடங்களுக்கு முன்பு பலமுறை நாடகமாக நடித்திருக்கிறார்கள், அதிலும் ஒரு ஆண், நல்லதங்காளாக பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர், ஒவ்வொரு குழந்தையாக கிணற்றுக்குள் தள்ளுவதற்கு முன்பு பாட்டுப் பாடி மக்களை சோகரசத்தில் ஆழ்த்துவார் என்றும் முன்பு ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். பிறகு நேரம் கிடைத்து, அந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்கும்போது எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. வட நாடு என்பது எது? ஆனா அங்கு கோயில்கள் நிறைய இருக்கு எனப் பலர் பேசக் கேட்டதுண்டு.. நீங்கள் போனனீங்களோ..

      //நீங்கள் சொல்லிய விதத்தில், ப்பூ..இந்த விஷயத்துக்காகவா குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தானும் இறந்தாள் என்று தோன்றியது.//
      ஹா ஹா ஹா உண்மைதானே.. என்னோஒடு அவ ஃபிரெண்ட்டா இருந்திருந்தால் நான் கிணற்றில குதிக்க விட்டிருக்கவே மாட்டேன்ன்ன்.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா இதுக்குப்போய் குதிக்கிறியே எனச் சொல்லியிருப்பேன் ஹா ஹா ஹா.

      நான் நினைக்கிறேன், எங்களுக்கு கவலை வராத விதத்தில் அப்பம்மா சொல்லித் தந்தாவோ என்னமோ..

      //பிறகு நேரம் கிடைத்து, அந்தச் சம்பவத்தை மீண்டும் படிக்கும்போது எழுதுகிறேன்.//
      நேரம் கிடைக்க என் பிரார்த்தனைகள்..

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. ஓடி வந்து கார்ட் பெட்டியில் ஏறியமைக்கு.

      Delete
    2. ஆந்த்ராவைத் தாண்டிவிட்டால் வடநாடுதான். பொதுவா உத்தரப்பிரதேசம் அதற்கு மேலே வடநாடு. நான் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்), கயா, காசி, அயோத்யா, நைமிசாரண்யம், ஆக்ரா சென்றிருந்தேன். ஆக்ரா தவிர மற்றவை யாத்திரை மாதிரி, ரிலீஜியஸ் பயணம்.

      இப்போதான் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை முழுமையாகப் பார்த்தேன். இண்டெரெஸ்டிங் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.

      Delete
    3. ஓ அப்போ நீங்க டெல்லிக்குக் கிட்டப் போயிருக்கிறீங்க நெல்லைத்தமிழன்.. அப்படியே ஹரிதுவார் போய்க்குளிச்சிருக்கலாமே.. மூன்று கங்கைகளும் ஆரம்பிக்கும் இடத்தில்:).. நம் பாவம் எல்லாம் போயிடுமாமே:)).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி பதில் அளிச்சமைக்கு.

      Delete
  36. வடக்குத்தெரு நிறைந்த வாழைமரம் சீதனமாம்
    கிழக்குத் தெரு நிறைந்த கீழ் வீடு சீதனமாம்
    தெற்குத் தெரு நிறைஞ்ச தென்னை மரம் சீதனமாம்
    மேற்குத் தெரு நிறைஞ்ச மேல் வீடு சீதனமாம்..



    அருமையான வரிகள் ..

    தெரிந்த கதை என்றாலும் மனம் கனக்கிறது...

    கடைசி குறிப்பு ..உண்மை ..அடுத்தவரை உற்சாகபடுத்தும் போது நம்மதும் உயரும் ...

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.