நல்வரவு_()_


Sunday 15 September 2019

ட்றம்ப் அங்கிளைப் பார்க்கப்போன அந்த நாள்:)💖

இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))
தொடர்ந்து சுற்றுலாவைப்பற்றியே போட்டால் எல்லோருக்கும் போரடிக்கும் எனும் காரணத்தால இடையில மானே தேனே போட்டால், அது எங்கின விட்டேன் என மறந்து போயிடுதே எனக்கு:), இருப்பினும் பூஸோ கொக்கோ தேடிப்பிடிச்சு தொடர்கிறேன்... இதைத் தொடுங்கோ தொடர் புரியும்.

இம்முறை கொஞ்சம் வீடியோவாகத்தான் போடப் போகிறேன், ஏனெனில் ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி எல்லோ அதிரா:), அதனால வெள்ளை மாளிகையில் வீடியோ எடுத்தேனாக்கும்:).. 

இந்த வைட் ஹவுஸ் ஐ எங்காவது தனியே எடுத்த படம் இருக்குமோ எனத் தேடினால்.. ம்ஹூம்ம் எல்லாத்திலும் விட்டேனா பார் என நாம் நிற்கிறோம்.. அதனாலதான் பெட்டி போட்டு மறைச்சிட்டேன்ன் அதிராவோ கொக்கோ?:)..

இந்த வேலியைப் பாருங்கோ, மாளிகையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கு, இந்த வேலிவரைதான் மக்கள் போக அனுமதி உண்டு, இங்கால தெரிவது ரோட்.


ஆனா அந்த வேலியில் மக்கள் நின்று ஏதும் பண்ணிப்போடுவினம் எனப் பயமாக்கும் ட்றம்ப் அங்கிளுக்கு:), அதனால நாங்கள் போய்க் கொஞ்ச நேரத்தில பொலிஸ்காரர் வந்து, ரோட்டின் இந்தப் பக்கம் கயிறு போட்டு புளொக் பண்ணி எல்லோரையும் பின்னே வரப் பண்ணிட்டினம் கர்ர்ர்ர்ர்:)).. இந்தப் பக்கம் ஒரே பார்க்தான்.. பென்னாம் பெரிய ஏரியா, இருக்கலாம், படுக்கலாம், ஓடலாம்.. நல்ல அருமையான சோலையான இடமாக இருந்தது. 

இப்போ பொலீஸ் வந்த பின், பார்க்கினுள் நின்று எடுத்த வீடியோ இது..

அந்த சோலையான பார்க்கில்தான் இந்த குட்டி தண்ணித்தடாகம் செய்து, அதில் தாராக் குஞ்சொன்று குளிக்கும் அழகைப்பாருங்கோ.. தனியே பலன்ஸ் பண்ணிப் பண்ணி நின்றதே:)



இதுவும் அங்கு, நிறைய அணிப்பிள்ளைகள், என்னா வீரம் காட்டுது தெரியுமோ.. கையில் வந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுது, தாரா , புறாக்களை ஜம்ப் பண்ணிக் கொத்துது.. இப்படி நிறைய அணில்கள்.. அவர்களின் ராஜ்யம் தான் அங்கு, பார்க்க அழகு..

Trump uncle உடன், நீண்ட நேரம் அமெரிக்காவைப் பிரிச்சு, சொத்தெழுதி அதிராவுக்குக் குடுப்பது பற்றிப் பேசி:), ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டபின், சந்தோசத்தில் எடுத்துக் கொண்ட படம் இது...ஆதாரத்துடன் சொல்லாட்டில் நம்ப மாட்டீங்களெல்லோ நீங்கள் கர்ர்:)).. அவர் எதிலேயோ ஏறி நிற்கிறார் கர்ர்:))

இதுவும் அங்கிருந்த ஒருவகை மேபிள் மரக் காய்கள்தான்.. இதை கோமதி அக்காவுக்குக் குடுக்கப் போறேன்:)


👈👈👈👈👈👈இடைவேளை👉👉👉👉👉👉
ஒரு குட்டிக் கதை தெரியுமோ உங்களுக்கு. ஒரு வீட்டுக்கு ஒருவர் விருந்துக்குப் போயிருந்தாராம், அப்போ அங்கு போட்ட கறிகளில் கத்தரிக்காய்க்கறி அவருக்குப் பிடிக்காதாம், அப்போ பிடிக்காததை முதலில் முடிச்சிடுவதுதானே நம் வழக்கம்[நான் அப்படித்தான், அவித்த முட்டையைக் கடசியில என்சோய் பண்ணிச் சாப்பிடுவேன், ஆனா இதில ஒரு தீமையும் இருக்கு, பக்கத்தில இருப்போர் பங்கு கேட்கவும் வருவினம் கர்ர்:))]. அப்போ அவருக்கு கத்தரிக்காய் பிடிக்காமையால, கடகடவென்று உடனேயே சாப்பிட்டு முடிச்சிட்டாராம், அதைப்பார்த்த அந்த வீட்டுக்காரம்மா, ஹையோ இவருக்கு இது பிடிச்சிருக்கு அதனால முழுவதையும் உடனே முடிச்சிட்டார் என திரும்பப் திரும்ப அக்கறியைப் போட்டுக் கொண்டிருந்தாவாம் என்பது ஒரு நகைச்சுவைக் கதை:))..
இதை இப்போ எதுக்குச் சொல்கிறேன் எனத்தானே யோசிக்கிறீங்க?:).

போன தடவை போட்ட படத்தில, அந்த பிளேன் பறப்பதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சது என்றார் ஸ்ரீராம்:)).. அதனால இந்தத் தொல்லை.. இன்னும் அதே லிங்கன் மெரோறியலில் எடுத்த இரண்டு படங்கள்..

👦👦👦👦👦👦👦👦👦👦

ஆஆஆஆஆஆ இது நம்மட ஏரியா:))
 இனி இன்னொரு பொயிண்டுக்கு வருவோமோ? அங்கிருந்த  ஒரு நஷனல் மியூசியத்தில் , டயமண்ட் வேர்ல்ட் போல ஒரு இடம், அங்கு இருக்கும் நகைகள் தங்கம் வைரம் எல்லாம் அப்படியே நிலத்தில் தோண்டி எடுத்து வைக்கப்பட்டிருந்தது.. கண் கொள்ளா அழகு.. அனைத்தும் கண்ணாடிக்குள் லொக் பண்ணி இருந்துதே கர்ர்:))

பானுமதி அக்கா விரைவில் வெளியே வரவேண்டும், பழையபடி நம்மோடு கதைத்துப் பேசி, மனக் கவலையில் இருந்து விடுபட வேண்டும், அது கஸ்டமான காரியம் அல்ல, ஆனாலும் என்ன பண்ணுவது மிகுதி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கத்தானே வேண்டும்.. அதுக்காக என்றாலும் புளொக் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு.. இந்தத் தங்கத்தில் ஒன்றை அவவுக்குக் கொடுக்கிறேன்..

இது அஞ்சுவுக்கு என் ரெண்டாவது அழகிய கிஃப்ட்:))..போன பதிவில ஒன்று குடுத்திட்டேன் , ஆனா அதுக்கே அவ இன்னும் நன்றி ஜொள்ளேல்லை கர்:)) [இப்பூடி அடிக்கடி எதையாவது குடுத்தால்தான், வாலை இழுக்காமல் விடுறா:)) இல்லை எனில் போட்டுத்தாக்குவதிலேயே குறியா இருக்கிறா கர்ர்ர்:))]

இது முழுவதும் அம்முலுவுக்கே:)).. அம்முலு வடிவா உத்துப் பாருங்கோ.. அத்தனையும் பபபச்சைக்கற்கள்:)) இனி அதிராட பச்சைக்கல் நெக்லெஸ் ஐக் கேய்க்கப்படாது ஜொள்ளிட்டேன்ன்:)).. எவ்ளோ காசு குடுத்து வாங்கி வந்திருக்கிறேன் இந்தப் பச்சைக் கல்லு நெக்லெஸ் ஐ:))


ஆஆஆஆஆ இது கீசாக்காவுக்காக சூஸ் க்குள் ஒளிச்சு சே....சே நாக்குத்தடுமாறி உண்மையை உளறிடுவேன் போல இருக்கே கர்ர்:)).. கஸ்டப்பட்டு வாங்கி வந்த புதுக்க்க் கிரிஸ்டல் கவனமா மேசையில வச்சு தினமும் காலையில இதிலயே கண் முழியுங்கோ கீசாக்கா:))[அம்பேரிக்காவில இருந்து நீங்க இதை வந்து பார்க்கப்போறீங்களோ தெரியேல்லை, இருப்பினும் அதிரா சொன்ன பேச்சுத் தவற மாட்டேனாக்கும்:))]

கமலாக்கா, இந்த நடுவில் இருக்கும் அழகிய டயமண்ட் நெக்லெஸ் உங்களுக்கே... தோஓஓஒ.. கச் இட்:))[அதிராவுக்கு எம்புட்டுப் பெரிய மனசு எனச் சொல்வது கேய்க்குது நன்றி நன்றி:)]

இதிலிருக்கும் அத்தனை குட்டித் தோடுகளும் அனு பிரேம் க்கே:))[அனுவுக்கு குட்டி நகைகள்தான் பிடிக்குமாம்:)) ச்சும்மா ஒரு கற்பனைதேன்ன்:))]

இந்த நெக்லெஸ்.. சொல்லிச் செய்து எடுத்து வந்தேன் கீதா ரெங்கனுக்கு:)).. ஆளைக் காணமே இங்கின:)).. தோடுகள் மாதேவிக்கு:))

இந்த டயமண்ட் நெக்லெஸ் கோமதி அக்காவுக்கு.. அடுத்த தடவை குடந்தைக் கோயிலுக்குப் போகும் போது போட்டுக்கொண்டு போய் வாங்கோ கோமதி அக்கா, மாமாவைக் கொஞ்சம் பின்னால நடந்து வரச் சொல்லுங்கோ:)).. நகையைப் பாதுகாக்கத்தான் ஹா ஹா ஹா:)).. இது உண்மையில் இந்தியன் டயமண்ட் ஆம்ம்.. எழுத்துடன் படம் எடுத்திருந்தேன் காணவில்லை..

ஆஆஆஆஆஆ இந்த விலை மதிக்க முடியாத கற்களை நெல்லைத்தமிழனுக்கும் ஸ்ரீராமுக்குமாகப் பாதுகாப்பாக எடுத்து வந்தோம்.. சண்டைப் பிடிக்காமல் பிரிச்சு எடுங்கோ:)).. கஸ்டமெனில் என் செக் ஐ அனுப்புகிறேன் அவ அழாப்பாமல்:), சமனாகப் புறிச்சுத் தருவாவாக்கும்:))

இவையும் அங்கிருந்தவற்றில் என்னைக் கவர்ந்த இரு விலங்குகள்.. இவரைப் பார்க்க சிரிப்பதைப்போல இருக்குதெல்லோ..


அந்த மியூசியத்தில், உயிருடன் ஒரு வண்டைக் கொண்டு திரிந்து ஒருவர், எல்லோருக்கும் கையில் வச்சிருக்கக் குடுத்தார், மூத்தவருக்குப் பயம்:), சின்னவர் வாங்கி வச்சிருந்தார்..


இது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டேலில் இருந்த ஃபிறீ சார்ஜர், எந்த வகையான ஃபோனையும் சார்ஜ் பண்ணும் வசதி...

இது, கனடா தங்களுக்கு, நட்புக்காக, மேபிள் மரம் தந்ததாம், அதன் நினைவாக இந்தப் பென்னாம்பெரிய மேபிள் இலை...

இது ச்ச்ச்சும்மா, பஸ்ஸில் போனபோது:))

ஊசி இணைப்பு:)
இதில் ஸ்ரீராம் யார்? நெல்லைத்தமிழன் யார்?[இதில் இருவருமே தாடி வச்சிருக்கினமே கர்ர்ர்:)] என் டவுட்டை ஆராவது கிளியர் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்:) இல்லை எனில் எனக்கு நாளைக்கு வேலை ஓடாதே:)) ஹா ஹா ஹா...

ஊசிக்குறிப்பு

இம்முறை ஓவர் தொல்லை தந்துவிட்டேன்:)[மன்னிக்கவும்] என நினைச்சு இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்ன்.. அதிரா ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன் .. அடுத்த போஸ்ட்டில் சந்திப்போமா?:))..கறுப்பினப் போராட்ட வீரர் மார்டின் லூதர் கிங்.. அவரின் சிலைக்கு முன்னால் களைச்சுப்போய் நின்றபோது:)))
👹👹👹👹👹👹👹👹👹👹

128 comments :

  1. Replies
    1. வாங்கோ துரை அண்ணன் வாங்கோ.. மிக நீஈஈஈஈஈஈஈண்ட இடைவெளியின் பின்பு வந்திருக்கிறீங்க.. அதுவும் முதலாவதாக.. மகிழ்ச்சி.

      Delete
    2. அதுவும் முதலாவதாக.. மகிழ்ச்சி..... அதிலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மாதிரி கோட் சூட் போட்டுக்கிட்டு ஆங்கிலத்தில் பின்னூட்டம் வெளுத்து வாங்குறீங்க. என்னாச்சு?

      Delete
    3. ///கோட் சூட் போட்டுக்கிட்டு ஆங்கிலத்தில் பின்னூட்டம் வெளுத்து வாங்குறீங்க. என்னாச்சு?////

      ஹா ஹா ஹா இதைத்தான் நானும் கேட்க நினைச்சு விட்டிட்டேன், நீண்ட நாட்களின் பின் வந்திருக்கிறார் எதிலயாவது பேசுவாருக்கும் என பேசாமல் இருந்திட்டேன் ஹா ஹா ஹா:)..

      Delete
  2. Replies
    1. //Other Extras//
      இது எதையெல்லாம் சொல்றீங்க எனப் புரியவே இல்லையே:) தெளிவாச் சொன்னால்தானே புரியும்:) மீ ஒரு அப்பாவீஈஈஈ ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் துரை அண்ணன்.

      Delete
  3. அதிரா நீங்க திரும்பி போனதை கேள்விபட்ட ட்ரெம்ப் ரொம்ப ஏங்கி தவிச்சு போயிட்டாருன்னு வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று சொல்லுது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ...

      //ட்ரெம்ப் ரொம்ப ஏங்கி தவிச்சு போயிட்டாருன்னு//
      இது இருக்கட்டும்:)). முதல்ல என் புளொக் வழக்கப்படி ரெண்டாவதாக வருபவருக்கு.. ஆயாவைக் குடுத்து அனுப்புவேன் எல்லோ:)).. ஆயாவிடம் சொன்னேன் ட்றுத் அவ்டிக் காரில ஏசியும் பாட்டும் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார் கூட்டிப் போக, ரெடியாகுங்கோ என்றேன்... உடனே ஓடிப்போய் முதல் வேலையா முகமெல்லாம் வெள்ளை அடிச்சதைப் போல பவுடரை அள்ளி அப்பிக் கொண்டு நிக்கிறா:)) பயந்திடாதீங்கோ.. 99.9 வயசாகுது அவவுக்கு... இப்ப கொஞ்ச நாளாக நியூமோனியாவும் வந்து ஒரே இருமல் ட்றுத்:)., கவனம் பார்த்துப் பத்திரமா காரைக் குலுக்காமல் ஓட்டிப்போங்கோ பிளீஸ்ஸ்:)).. அவவுக்கு குல்ஃபி ஐஸ் கிரீம்.. அதுவும் பச்சைக்கலரில பாதாம் போட்டது கிடைக்க்குதே அதுதான் விருப்பம்.. வாங்கிக் குடுத்துக் கூட்டிப் போங்கோ:))... ஹா ஹா ஹா.

      அது ட்றுத்,
      அதிரா போயிட்டாவே திரும்பி என ஏங்கவில்லை:)) அவர், அவசரப்பட்டுச் சொத்தை எழுதிக் குடுத்திட்டமே எண்டுதான் குலைப்பன் காச்சல் வந்ததாக அறிஞ்சே.. ஹா ஹா ஹா மிக்க நன்றி .. இம்முறை உடனேயே கண்டுபிடிச்சிட்டேன் உங்கட கொமெண்ட்டை:).

      Delete
  4. வெள்ளை மாளிகை மற்றும் இதர படங்கள், காணொளிகள் நன்று. உங்கள் மூலம் செலவில்லாமல் சுற்றுலா வந்து கொண்டிருக்கிறேன்! :)

    நகைகள் எனக்குப் பிடிக்காது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ..

      //நகைகள் எனக்குப் பிடிக்காது!//
      இல்லையே....:), உங்கட விரல்ல மோதிரம் பார்த்தனே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  5. //அதனாலதான் பெட்டி போட்டு மறைச்சிட்டேன்ன் // - ஓ.. அப்போ ஏஞ்சலின் சொன்னது உண்மைதான் போலிருக்கு (குண்டுப் பூனைனு அவங்க சொல்றது). நீங்க போட்டிருக்கற பெட்டில, சுமார் 7 பேர் நிற்கலாம். அது முழுதும் நீங்க ஒருத்தரேவா? முன்னாலல்லாம் ஒல்லியா ஒரு படம் போடுவீங்களே. ஒரே கன்ஃப்யூஷன்... ஏஞ்சலின்... கொஞ்சம் உதவிக்கு வாங்க

    ReplyDelete
    Replies
    1. >>> ஓ.. அப்போ ஏஞ்சலின் சொன்னது உண்மைதான் போலிருக்கு (குண்டுப் பூனைனு சொல்றது).. <<<

      அப்போ இவ்ளோ நாளு... பூங்கொடி..ன்னா நெனைச்சுக்கிட்டு இருந்தீங்க?...

      இம்புட்டு அப்புராணியா இருக்கீங்களே நெல்லை!...

      Delete
    2. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      ஹா ஹா ஹா வந்த வேகத்தில எங்கட டெய்சிப்பிள்ளையைக் கூடப் பார்க்காமல்:), பெட்டி போட்ட படத்துக்கு ஜம்ப் பண்ணிட்டீங்க என நினைச்சு சிரிச்சதில பல்லுக் கொழுவுது எனக்கு ஹா ஹா ஹா..

      //ஏஞ்சலின்... கொஞ்சம் உதவிக்கு வாங்க//

      வாங்கோ ஏஞ்சலின் வாங்கோ:)).. வந்து எனக்குக் கொம்பனி குடுங்கோ:)) தனியே சிரிக்கப் பயம்மாக் கிடக்கூஊ ஹா ஹா ஹா:)).

      //நீங்க போட்டிருக்கற பெட்டில, சுமார் 7 பேர் நிற்கலாம். அது முழுதும் நீங்க ஒருத்தரேவா?///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நில்லுங்கோ வாறென்ன்ன்:).. கோபு அண்ணன்ன்ன்ன்ன்ன்ன்ன் கேய்க்குதாஆஆஆஆஆஆ.. கொஞ்சம் நெல்லைத்தமிழனின் அந்த படத்தை அனுப்புங்கோ இப்பவே.. வட்ஸப்பில் அனுப்புங்கோ கோபு அண்ணன்:)) அதுதான் ஸ்பீட்டா வரும்:)).. நான் உங்களுக்கு குண்டா சுவீட் வாங்கித் தருவேனாக்கும்:)).. இது அந்த வெள்ளைப்பெட்டி மேல் ஜத்தியம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா...

      Delete
    3. //அப்போ இவ்ளோ நாளு... பூங்கொடி..ன்னா நெனைச்சுக்கிட்டு இருந்தீங்க?...

      இம்புட்டு அப்புராணியா இருக்கீங்களே நெல்லை!..//

      ஹா ஹா ஹா துரை அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கலா அண்ணியிடம் சொல்லிக்குடுத்து விடுவேன்ன்ன்ன்ன்..:)..
      ஜாக்ர்ர்ர்ர்ர்தை[ஹையொ இது எனக்குச் சொன்னேன்:))]

      Delete
    4. @நெல்லைத்தமிழன் அது குண்டு பூனைதான் ..நானு மகள் மியாவ் சேர்ந்து ஒரு படமெடுத்தோம் பாதிஸ்க்ரீன் பூனைக்கே பத்தலை 

      Delete
    5. ///நானு மகள் மியாவ் சேர்ந்து ஒரு படமெடுத்தோம் பாதிஸ்க்ரீன் பூனைக்கே பத்தலை//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இருங்கோ ஒரு நாளைக்கு தேம்ஸ் கரையில நின்று இருவரும் எடுத்த செல்வியை:)) இங்கு போடப்போறேன்:))

      Delete
  6. ரெண்டு கையாலயும் மொபைலைப் பிடித்துக்கொண்டுதான் செல்ஃபி எடுக்கத் தெரியும் போலிருக்கு. ஒற்றைக் கையால் எடுக்கும் கலையை இன்னும் கத்துக்கலையா? (கடைசிப் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்துச் சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. // (கடைசிப் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்துச் சொன்னேன்)//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் இப்போ ஓடிப்போய் யூஊஊஊஊம் பண்ணிப் பார்க்கப் போகினமே வைரவா ஹா ஹா ஹா:)).. அது செல்ஃபி இல்லையாக்கும்:)).

      Delete
  7. பழைய காலத்துல உள்ள படங்களையெல்லாம் இப்போ போடாதீங்க. ஸ்ரீராம் சொல்றார்...(வருத்தத்தோட) அனுக்கா ரொம்ப குண்டாயிட்டாங்களாம் சமீபத்துல. நெ. சொல்றார்... தமன்னா ரொம்ப பழசாயிட்டாங்களாம். அதுனால பாகுபலி காலத்தை விட்டு வந்து வேறு ஏதேனும் புதுப் படங்களாப் போடுங்க.

    அது சரி... என் படத்தை எ.பியில் வெளியிட்டிருந்தாங்களே..நீங்க பார்க்கலையா? (உண்மையா என் படம்தான் அது)

    ReplyDelete
    Replies
    1. //ஸ்ரீராம் சொல்றார்...(வருத்தத்தோட) அனுக்கா ரொம்ப குண்டாயிட்டாங்களாம் சமீபத்துல//
      ஹா ஹா ஹா அதை மீயும் பார்த்தேன்:)).. அதனாலதான் அவர் இப்போ அனுக்கா படமே போடுவதில்லை:)) ஆனா இப்பூடி எஸ்கேப் ஆக நான் விட மாட்டேனெல்லோ ஹா ஹா ஹா:).

      //தமன்னா ரொம்ப பழசாயிட்டாங்களாம்.//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..பழசானாலும் அவ உங்களுக்கே:)) விட மாட்டோம் தப்பி ஓட:)) ஹா ஹா ஹா..

      //அது சரி... என் படத்தை எ.பியில் வெளியிட்டிருந்தாங்களே..நீங்க பார்க்கலையா?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்குக் கோபு அண்ணன் வட்ஸப்பில் அனுப்புவதாகப் பதில் போட்டிட்டார் டக்கெண்டு:)) ஹா ஹா ஹா.. ஓடாதீங்கோ:))..

      Delete
  8. கிழிப்பது எளிது, தைப்பது கடினம் // - பொன்மொழியை நீங்க சரியா கிழிக்கலை போலிருக்கே. இரண்டாவது வரி அரைகுறையாத் தெரியுது

    ReplyDelete
    Replies
    1. இல்ல இல்ல அது கீழ இருப்பது வேறு, கிழிச்சுப் பார்த்தேன்:) முழுசா கிழியமாட்டெனெண்டுட்டுதே கர்ர்ர்ர்ர்:)))

      Delete
  9. //லிங்கன் மெரோறியலில்// - இது என்ன மொழியா இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹையோ எப்பூடி மிசுரேக்கு விட்டேன்:))..

      நான் பயந்து கொண்டிருந்தது.. “அழாப்பாமல்”.. இதில் ழ சரியா தப்பா .. நீங்க பிடிக்கப் போறீங்க என:))..
      அது அளாப்புதலா இல்ல அலாப்புதலா? இல்ல, தமிழில் அப்படி ஒரு சொல்லே இல்லையோ?:)..

      Delete
  10. //அத்தனையும் பபபச்சைக்கற்கள்:)) // - எனக்குத்தான் கண்ணில் கோளாறா? மேலே இருக்கும் படத்தில் மஞ்சள் கற்கள். கீழே நீலம். ஒருவேளை இரண்டையும் சேர்த்தால் பச்சை வருமே. அதனால் பச்சை நெக்லெஸ் என்று சொல்லிட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. //எனக்குத்தான் கண்ணில் கோளாறா?//
      ஆமா..ஆமா..ஆமா.. அதை நான் கரீட்டாத்தேன்ன்ன்ன் சொல்லியிருக்கிறேன்ன்.. அது பச்சைக் கல்லேதான்ன்ன்ன்:))..

      ஹா ஹா ஹா ஹையோ ஒரு பொய்யை 100 தடவை சொன்னால் அது உண்மையாகிடுமாமே:)).. அவ்வைப்பாட்ட்டி சொன்னதாக அஞ்சுதான் எனக்குச் சொன்னா:)).. ஆவ்வ்வ் ஆள் பிஸிபோலும்:)), அதனால பயப்பூடாமல் மின்னி முழக்கிடுவேன் வரமுன்:))..

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்... மீண்டும் வாங்கோ:).

      Delete
    2. எனக்கும் அதே சந்தேகம் வந்து திரும்ப திரும்ப பார்த்தேன் ...வைரவா காப்பாத்து

      Delete
    3. அனு நீங்களுமோ?:)) ஹா ஹா ஹா வடிவா உத்துப் பாருங்கோ அது பச்சையேதான்ன்:))

      Delete
  11. பாட்டு நன்றாக இருக்கிறது. கேட்டு இருக்கிறேன்.

    படத்தில் இந்த பாட்டைப் பார்த்து நொந்து போனேன்.
    அழகான ஸ்ரீதேவி.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
      ஓ பாட்டு நன்றெனச் சொன்னமைக்கு நன்றி. ஓ படத்தில் சரியில்லையோ... ஸ்ரீதேவி நடிச்ச படம்போலதான் தெரிஞ்சது.

      கொஞ்சம் பின்பு வாறேன் கோமதி அக்கா மிகுதிக்கு.

      Delete
  12. இது எங்கட முற்றத்து மலர்கள்.. டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிங்கோ:))

    கண்டு பிடித்து விட்டேன், இரண்டு செடிகளுக்கும் நடுவில் டெய்சிப்பிள்ளை.

    அதிராவின் அழகிய முகத்தை இப்படி பெட்டி போட்டு மறைக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. ஓ டெய்சிப்பிள்ளையைக் கண்டு பிடிச்சிட்டீங்க கோமதி அக்கா.. அவ கறுப்பு என்பதால கண்டு பிடிப்பது கஸ்டம்.

      //அதிராவின் அழகிய முகத்தை இப்படி பெட்டி போட்டு மறைக்கலாமோ?//
      ஹா ஹா ஹா ஆராவது முகத்தைப் பார்த்துக் கடத்திட்டாலும் எனும் பயம்தான் கோமதி அக்கா:)), சுவீட் 16 அதிரா எல்லோ:)).. ஹா ஹா ஹா இல்ல அதில் நால்வர் நிற்கிறோம்:))

      Delete
  13. வெள்ளை மாளிகையில் வீடியோ எடுத்தேனாக்கும்:).. //

    இம்முறை கொஞ்சம் வீடியோவாகத்தான் போடப் போகிறேன், ஏனெனில் ட்றம்ப் அங்கிளின் பேசனல் செக்கரட்டரி எல்லோ அதிரா:),

    வெள்ளை மாளிகை உள்ளே எடுத்தீர்கள் செகரட்டரி என்று ஆவலுடன் பார்த்தால் முன்னும், பின்னும் வெளியே காணொளிகளை காட்டி ஏமாற்றி விட்டீர்கள்.


    ஆனாலும் காணொளிகள் மிக அருமை, தாராகுஞ்சு அழகு.
    பறவைகளும், தாராக்களும், அணில்பிள்ளையும் உள்ள காணொளிகள் அருமை. உங்கள் பேச்சு கிள்ளை பேச்சு இனிமை.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் போன போது ஒபாமா இருந்தார், குடும்பத்துடன் அவரோடு படம் எடுத்துக் கொண்டோம்.

      Delete
    2. //பின்னும் வெளியே காணொளிகளை காட்டி ஏமாற்றி விட்டீர்கள்.//
      ஹா ஹா ஹா ட்றம்ப் அங்கிளோடு நான் நிற்பது வைட் ஹவுஸ் உள்ளே எடுத்ததுபோல இல்லையோ கோமதி அக்கா?.. அது நியூயோர்க் போனபோது எடுத்தது...

      முன்பு ஒபாமா அங்கிள் காலத்தில், வைட் ஹவுஸ் உள்ளே போய்ப் பார்க்கலாமாம், மிஸ் பண்ணிட்டோம்.

      // உங்கள் பேச்சு கிள்ளை பேச்சு இனிமை.//
      ஹையோ இப்போ தேம்ஸ் இன் மற்றப் பக்கமாகப் புகைப் புகையா வரப்போகுதே:)) ஹா ஹா ஹா நன்றி கோமதி அக்கா.. நெல்லைத்தமிழன் இதைக் கவனிக்கவில்லைப்போலும்:))

      Delete
    3. //// உங்கள் பேச்சு கிள்ளை பேச்சு இனிமை.//// - இதை, கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி அழகு என்றும் எடுத்துக்கலாம்... நீங்க எழுதறது பேசறது ஒண்ணுமே புரியலை என்றும் எடுத்துக்கலாம். நான் இரண்டாவதைத்தான் எடுத்துக்கொண்டேன். ஹா ஹா

      Delete
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:))நான் தான், சொல்லிட்டனே “பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை”:).. என.. அதை அப்பூடியே இப்பவும் நிரூபிச்சிட்டாராம்ம்ம்ம்ம்:))

      பேசுவது என்னமோ எல்லோரும் பொஸிடிவா திங் பண்ணுங்கோ:)) பொஸிடிவ்வா பேசுபவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும் என்பது:), ஆனா பண்ணுவதோ:))... நில்லுங்கோ வாறன் ஆரோ ஓடிக் கேய்க்குது:)).. ஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் ஓடுறார்.. சந்திரிக்கா அக்காவும் வாணாம் நான் புனிதனாகவும் வாணாம் என ஹா ஹா ஹா... ஒண்ணுமே பிரியல்லியாமே.. எங்கிட்டயேவா?:)) ஹா ஹா ஹா ஹையோ முடியல்ல முருகா.

      Delete
  14. மேபிள் மரக் காய்கள்தான்.. இதை கோமதி அக்காவுக்குக் குடுக்கப் போறேன்:)//

    அழகாய் இருக்கிறது மேபிள் காய் எனக்கு கொடுத்தற்கு மகிழ்ச்சி .

    உங்கள் கதை போலவே மாங்கொட்டை சாமியார் கதை உண்டு. இலையில் மீதி வைக்க கூடாது என்று மாங்கொட்டையை சாப்பிட்டு விடுவார் உணவு அருந்த போன வீட்டில். அவர்கள் சாமியாருக்கு மாங்கொட்டை பிடிக்கும் என்று கொண்டு கொண்டு வந்து போடுவார்கள் கடைசியில் பிடிப்பார் ஓட்டம்.


    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்படியும் ஒன்று படிச்சேன், அது மாம்பழ சாமியார் என ஒருவர் ஊருக்குள் வந்திருப்பதாக அறிஞ்சு எல்லோரும் மாம்பழம் கொடுப்பார்கள்.. அப்படி ஒரு கதை.. அதுதான் இதோ தெரியவில்லை, முழுசாக நினைவில்லை மறந்துவிட்டேன்.

      Delete
  15. பிளேன் பறப்பது பார்க்க அலுக்காது, நகைச்சுவை கதையில் வருவது போல் ஓட்டம் எடுக்க மாட்டார்கள் யாரும்.
    வானத்தில் வெள்ளை மேகமும், நீலவானமும் பிளேன் பறப்பதும் பார்க்க அழகுதான். இரண்டு படங்களும் அழகு. அதற்காக ஸ்ரீராம் மாதிரி கோமதி அக்காவும் சொல்லி விட்டார்கள் என்று தொடர்ந்து அதையே போடாமல் வேறு வேறு அழகான படங்கள் போடுங்கள்.

    நானும் இது போல எடுத்த படங்களை காட்ட வேண்டும் ஒரு நாள்.

    ReplyDelete
    Replies
    1. //அதற்காக ஸ்ரீராம் மாதிரி கோமதி அக்காவும் சொல்லி விட்டார்கள் என்று தொடர்ந்து அதையே போடாமல் வேறு வேறு அழகான படங்கள் போடுங்கள்.//
      ஹா ஹா ஹா இல்லைக் கோமதி அக்கா, இருந்ததெல்லாம் போட்டு விட்டேன், நிறையப் பிளேன் படங்கள் எடுத்து டிலீட் பண்ணி விட்டேன்.

      போடுங்கோ போடுங்கோ..

      Delete
    2. அதற்காக ஸ்ரீராம் மாதிரி கோமதி அக்காவும் சொல்லி விட்டார்கள் என்று தொடர்ந்து அதையே போடாமல் வேறு வேறு அழகான படங்கள் போடுங்கள்.....



      சூப்பர் மா

      Delete
    3. @ அனு:))
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  16. //டயமண்ட் நெக்லெஸ் கோமதி அக்காவுக்கு.. அடுத்த தடவை குடந்தைக் கோயிலுக்குப் போகும் போது போட்டுக்கொண்டு போய் வாங்கோ கோமதி அக்கா, மாமாவைக் கொஞ்சம் பின்னால நடந்து வரச் சொல்லுங்கோ:)).. நகையைப் பாதுகாக்கத்தான் ஹா ஹா ஹா:))

    ஆஹா! இன்று பெரிய பரிசு கிடைக்க போவதாய் சொன்னார்கள் தொலைக்காட்சியில் ஜோதிடர்

    வந்து விட்டதே! அன்பான தங்கையிடமிருந்து பரிசு. நாளை உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போகவேண்டும். போட்டு கொண்டு போகிறேன்.

    நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //ஆஹா! இன்று பெரிய பரிசு கிடைக்க போவதாய் சொன்னார்கள் தொலைக்காட்சியில் ஜோதிடர்

      வந்து விட்டதே!//

      ஆஆஆ அப்போ அந்த ஜோதிடருக்கும் ஒரு டயமண்ட்டைத்தூக்க்கிக் குடுத்திடலாம்:)[காசா பணமா?:)}} ஹா ஹா ஹா.

      //நாளை உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போகவேண்டும். போட்டு கொண்டு போகிறேன்.//
      ஆவ்வ்வ்வ் நன்றி நன்றி:) மறக்காமல் அதிரா தந்தவ எண்டும் சொல்லிடுங்கோ கோமதி அக்கா:).

      Delete
  17. ஊசிக்குறிப்பு அருமை.
    அதிரா கொஞ்சம் மெலிந்த மாதிரி தெரிகிறதே!

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண் தலைல எப்படி ஐஸ் மலையையே தூக்கி வைக்கறது என்பதில் கோமதி அரசு மேடம் 'முனைவர்' பட்டமே பெற்றாச்சு.

      உடனே அதிரா இதை உண்மைனு நம்பி, 'மிக்க நன்றி கோமதி அக்கா. அங்க இங்கன்னு ரொம்ப அலைஞ்சதுல ஒரு நாளைக்கு 8 வேளைதான் சாப்பிட நேரம் கிடைத்தது. அதுனால ரொம்ப ரயற்றாகிட்டேன். அதான் மெலிஞ்சதா தோணுது. இது நெ.த கண்ணில் பட்டுடக்கூடா. கண்ணு போட்டுருவார்' என்று மறுமொழி எழுதுவாங்க. நீங்க வேணா பாருங்களேன்.

      Delete
    2. நெல்லை, நீங்கள் அதிராவின் பழைய படம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் .
      நான் இப்போது கூட ஜலீலா போட்டு இருந்த அதிரா படம் பார்த்தேன், அதில் நனறாக இருப்பார்.
      இந்த படத்தில் மிகவும் களைத்து போய் வேறு இருக்கிறார், அதனால் மெலிந்த தோற்றம் நன்றாக தெரிகிறது.

      Delete
    3. //அதிரா கொஞ்சம் மெலிந்த மாதிரி தெரிகிறதே!//
      நேக்கு ஷை ஷையா வருது கோமதி அக்கா:)).. நான் ஜிம் போகிறேன், யோகா போகிறேன், வோட்டர் ஏரோபிக் போகிறேன்.. சுவீட் 15 ஆகிக்கொண்டிருக்கிறேன் கோமதி அக்கா:)) ஹா ஹா ஹா ஹையோ நெல்லைத்தமிழன் பார்க்க முன் படிச்சுப்போட்டுக் கிழிச்சிடுங்கோ:))

      Delete
    4. ///நெல்லைத்தமிழன்Sunday, September 15, 2019 2:27:00 pm
      ஒரு பெண் தலைல எப்படி ஐஸ் மலையையே தூக்கி வைக்கறது என்பதில் கோமதி அரசு மேடம் 'முனைவர்' பட்டமே பெற்றாச்சு.//

      ஹா ஹா ஹா கடலூரில மின்னினால் கோடைக்கானலில முழங்குதே:)) ஹா ஹா ஹா

      //அங்க இங்கன்னு ரொம்ப அலைஞ்சதுல ஒரு நாளைக்கு 8 வேளைதான் சாப்பிட நேரம் கிடைத்தது.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நியூயோர்க்கில் கொஞ்சம் சாப்பாட்டுக்கு கஸ்டமாக இருந்தது, ஆனா வோஷிங்டனில் நல்ல நல்ல ரெஸ்டோரண்ட் கிடைச்சது..:).

      கர்ர்ர்ர்ர்:)) எதுக்கு இவ்ளோ பொறாமை:))) ஹா ஹா ஹா..வேணுமெண்டால் நீங்களும் GM Diet பண்ணுங்கோ நெல்லைத்தமிழன்... அது ரொம்ப நல்லா இருக்கு... மாதம் ஒரு கிழமை ஃபலோ பண்ணுங்கோ.

      Delete
    5. //நான் இப்போது கூட ஜலீலா போட்டு இருந்த அதிரா படம் பார்த்தேன்//
      ஜல் அக்கா எந்தப் படம் போட்டாவோ கோமதி அக்கா? சாறியுடன் நிற்கும் படமோ? இல்லை வேறு படமோ.. தெரியல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      இது சைக்கிள் எல்லாம் ஓடி, வெயிலில் நடந்து.. கிட்டத்தட்ட 15,000 ஸ்ரெப்ஸ் நடந்தோம்.. களைச்ச வேளையில் எடுத்தது.... சரி போனாப்போகுது கொஞ்சம் அஞ்சுவுக்கு காட்டலாமே எனப் போட்டேன் ஹா ஹா ஹா:)).

      Delete
    6. ஒரு பெண் தலைல எப்படி ஐஸ் மலையையே தூக்கி வைக்கறது என்பதில் கோமதி அரசு மேடம் 'முனைவர்' பட்டமே பெற்றாச்சு.....


      அஹா....ஓஹா

      Delete
    7. சே..சே... அனுவும் சிரிக்கிறமாதிரி ஆக்கிட்டாரே நெல்லைத்தமிழன்:).. நெல்லைத்தமிழனுக்குக் குடுத்த வைரக்கல்லுகள் கான்சல்ட்ட்:))

      http://yesofcorsa.com/wp-content/uploads/2019/02/Cats-Meow-Wallpaper.jpg

      Delete
  18. வணக்கம் அதிரா சகோதரி

    பாடல் மிக இனிமை. எஸ். பி. பியின் குரலில் இளமை ததும்புகிறது. வெள்ளை மாளிகை படங்கள் அழகு. அதை விட அழகாக இருக்கும் அதிராவின் முகத்தை வெள்ளைப் பெட்டிக் கொண்டு ஏன் மறைத்தீர்கள்? சரி கடைசியில் வெள்ளை மாளிகைக்குள்ளும் அதே மறைப்பு தேவையா?

    இடையிடையே பழமொழிகள் இனிக்கிறது. மிகுதியையும் ரசிக்க வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

      //பாடல் மிக இனிமை// நன்றி நன்றி.

      //சரி கடைசியில் வெள்ளை மாளிகைக்குள்ளும் அதே மறைப்பு தேவையா?//
      ஹா ஹா ஹா எதையாவது சொல்லி, அதிராவுக்கு சொக்கலேட் குடுத்தாவது படம் பார்த்திடலாம் என எல்லோரும் நினைக்கிறீங்க:)).. ஆனா அதிரா ரொம்ப உஷாராக்கும் ஹா ஹா ஹா:).

      Delete
  19. Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ.. ஓ வீடியோக்கள் பார்த்திட்டீங்க நன்றி.

      Delete
  20. // என்னது பொலிஸ்காரர் வந்து ரோட்டில் புளொக் பண்ணிட்டாரா...? //

    அவரின் வலைப்பக்கம் ப்ளீஸூ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்படியும் மாத்திச் ஜிந்திக்கலாமோ?:))

      Delete
    2. அய்யோ ...ஹா ஹா..

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 அனு:)) என்னா சிரிப்பு:)) ஹா ஹா ஹா..

      Delete
  21. // பொலிஸ்காரர் வந்து, ரோட்டின் இந்தப் பக்கம் கயிறு போட்டு புளொக் பண்ணி //

    அவரின் வலைப்பக்கம் + பதிவும் ப்ளீஸூ...

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ட்றம் அங்கிளைக் கேட்டு வாங்கித்தாறேன் ஹா ஹா ஹா.. மிக்க நன்றி டிடி.

      Delete
  22. படங்கள் அழகு
    ஊரில் உள்ள நகைக்கடைகளை போட்டோ எடுத்து விட்டு ஆளுக்கொரு பரிசா ?

    Chivas Regal சிவசம்போ-
    கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கதை போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //ஊரில் உள்ள நகைக்கடைகளை போட்டோ எடுத்து விட்டு ஆளுக்கொரு பரிசா ?//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன இப்பூடி பொசுக்கெண்டு சிம்பிளாச் சொல்ல்லிட்டீங்க:).. பிளேன் எடுத்து பஸ் எடுத்து ரக்‌ஷி பிடிச்சுப் போய்... கமெராவில, அந்த சனக்கூட்டத்துள் இடிபட்டு.. படமெடுத்து வேர்க்க விறுவிறுக்க எடுத்து வந்தால்ல்.. இப்பூடிச் சொல்லிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா சரி போகட்டும் விடுங்கோ.. அடுத்தமுறை போனால் உங்களுக்கு ஏதும் பரிசு வாங்கி வாறேன்:)) ஹா ஹா ஹா நன்றி கில்லர்ஜி.

      Delete
  23. பானுமதி அம்மா

    என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவர்களின் மனம் அமைதியாக அமைய பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  24. பானுமதி அவர்கள் மன ஆறுதல் அடைந்து மீண்டும் அவர்கள் வர பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  25. வணக்கம் அதிரா சகோதரி

    காணொளிகள் மூன்றும் அழகாக இருந்தன. அந்த தாரா பறவை, அணில்கள், புறா ஆகியவை அடிக்கும் லூட்டி மிக அருமை. தாரா பறவை வாத்து மாதிரி இருக்கிறதே!

    ஊசி இணைப்பு, இங்கிருக்கும் உண்மையான ரசிகர்களின் காதில் புகையுடன் நெருப்பும் வரப்போகிறது. ஹா ஹா ஹா.

    ஊசி குறிப்பு உண்மையான வாசகங்கள். மிகவும் ரசித்தேன்.மெளனமாக இருக்க பழகி விட்டால் நாளடைவில் மதிப்பு என்பதே என்னவென்று தெரியாமலும், அதைப்பற்றிய எந்த ஒரு கவலை இல்லாமலும் போய் விடும். நல்லதுதான்.

    எனக்காக தாங்கள் தந்த பரிசு மிகவும் நன்றாக இருக்கிறது. கழுத்தில் அணியும் ஆசை வரும் போது,(வராது...நகை அணியும் ஆசைகள் இல்லை. அப்படி எப்போதாவது வரும் போது..) தங்கள் பதிவில் பார்த்து திருப்தி அடைந்து கொள்கிறேன். ஹா.ஹா.ஹா. மிக்க நன்றி.

    சிரிக்கும் விலங்குகள், மற்றும் படங்கள் (தங்களின் பாதி படம் உட்பட) அனைத்தும் நன்றாக இருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //தாரா பறவை வாத்து மாதிரி இருக்கிறதே!//

      ஹா ஹா ஹா என்னை இன்னும் நீங்கள் சரியாகப் புரிஞ்சுகொள்ளேல்லை:))... நான் எப்போ எதற்கு சரியான பெயர் சொல்லியிருக்கிறேன்?:).. வீட்டிலும் அப்படித்தான் என் வாயில என்ன பெயர் வருதோ அதைச் சொல்லி அப்பப்ப வீட்டில எல்லோரையும் கூப்பிடுவேன்:)).. டெய்சியையும் அப்படித்தான்.. பலசமயம் நான் டெய்சியைக் கூப்பிடும்போது, சின்னவர் தன்னைத்தான் கூப்பிடுறேன் என .. வருவார் ஹா ஹா ஹா.. சுப்பிரிவிக்கி.. மிரேக்கிள் இப்பூடி எல்லாம் கூப்பிடுவேன் தெரியுமோ.. கூப்பிடும் ரோனை/தொனியை வச்சே கண்டுபிடிப்பினம் ஆரைக் கூப்பிடுறேனென ஹா ஹா ஹா.. அதனால எனக்கு அது அப்போ தாரா என வாயில வந்துதா:)) சொல்லிட்டேன் ஹா ஹா ஹா:))...

      //ஊசி இணைப்பு, இங்கிருக்கும் உண்மையான ரசிகர்களின் காதில் புகையுடன் நெருப்பும் வரப்போகிறது. ஹா ஹா ஹா.//
      என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க? அப்போ நெ.தமிழன், ஸ்ரீராம் எல்லாம் அவர்களின் உண்மையான ரசிகர்கள் இல்லையோ:)) ஹா ஹா ஹா:)

      Delete
    2. //மிகவும் ரசித்தேன்.மெளனமாக இருக்க பழகி விட்டால் நாளடைவில் மதிப்பு என்பதே என்னவென்று தெரியாமலும்//
      இல்ல கமலாக்கா, நாம் சிலசமயம் போட்டிபோட்டுக் கத்தாமல், எதிர்த்துப்பேசி புரியவைக்கக் கஸ்டப்படாமல் மெளனமாக இருந்திட்டால், அப்போ எதிரிக்கு தாம் பேச்சில வென்றிட்டோம் எனத் தோன்றலாம், ஆனா அந்த மெளனம் நமக்கு நிட்சயம் பின்னாளில் மதிப்பை ஏற்படுத்தித் தரும் என்கிறது அந்த கோட்:)).. இன்னொரு வகையாக சொல்லப்போனால், தவளையும் தன் வாயால் கெடும் என்பதைப் போல ஆகிடாமல் இருக்கலாம்:)) இப்பூடித்தான் நான் நினைக்கிறேன் அதன் பொருளை.

      //,(வராது...நகை அணியும் ஆசைகள் இல்லை. அப்படி எப்போதாவது வரும் போது..) //
      ஹா ஹா ஹா என்னிடமும் இருக்கு நகைகள் ஆனா தங்கத்தை விட இமிடேஷன் போடுவதில்தான் எனக்கு அதிக ஆசை:))

      மிக்க நன்றிகள் கமலாக்கா.

      Delete
  26. ஹாஹா :) ரோடு செடியும் கோபுரம்போல் இருக்குமிடத்தில் டெய்சி  வாட்சிங் :)//அதனாலதான் பெட்டி போட்டு மறைச்சிட்டேன்ன் அதிராவோ கொக்கோ?:)..//கர்ர்ர்ர் :) நாங்க எப்பவுமே தனியா சேர்த்துனு எடுப்போம் :)இப்படி வெள்ளையடிச்சிட்டிங்களே வெள்ளை மளிகை முன்னே நாங்க கூட்டமா நின்னாலும்  கூடவே ஆடு மாடு கூட நிக்கும்போதுகூட இவ்ளோ வெள்ளையடிக்க தேவையிருக்காது :)குண்டூஸ் CAT :)  

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. சே..சே... இவ்ளோ லேட்டாக வருவீங்க எனத் தெரிஞ்சிருந்தால் அந்த நெக்லெஸ் ஐ நெல்லைத்தமிழனின்[அண்ணாவின்:)] அண்ணிக்கு குடுத்திருப்பேனே:))..

      ///குண்டூஸ் CAT :)//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த ஒரு பொய்யை 1000 தடவை சொல்லித்தான் இப்போ எல்லோரும் இதுவே உண்மை என நினைக்கினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா....

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கோணும் அஞ்சு.. நேற்று ச்ச்ச்சோ ரயேட் அதனால விட்டிட்டேன்ன்.. இப்போ பதில் போட்டே ஆகோணும் என வந்திருக்கிறேன்.

      Delete
  27. ஹலோ எதுக்கு களைச்சு நின்னீங்க :) வெள்ளை மாளிகையில் டீ காபி போட்டு கொடுத்தீங்களா :)) ஆவ் அது சன் க்ளாஸஸ் காணோம்னு 3 மாசமா தேடறேன் :))))))))))  

    ReplyDelete
    Replies
    1. //ஹலோ எதுக்கு களைச்சு நின்னீங்க :) //
      ஆஆஆஆஆஆ இது இது இதைத்தான் எடிர் சே..சே எதிர்பார்த்தேன்:)).. இதுக்காகத்தானே என் செக்:)) ஆக வச்சிருக்கிறேன்.. எவ்ளோ அக்கறை அதிரா மேல பாருங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்:))..

      ///வெள்ளை மாளிகையில் டீ காபி போட்டு கொடுத்தீங்களா :))///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆஆஆஆஆஆஅ இதைப் படிக்காமல் மேலே புகழ்ந்திட்டேனே அவசரப்பட்டு:)) இதனாலதான் அம்மம்மா அப்பவே ஜொன்னா:)) எதுக்கும் அவசரப்பட்டிடாத பிள்ளை:)) ஓசிச்சு ஓசிச்சுப் பேசு என மீ கேய்ட்டேனா?:) இல்லையே:)).. அந்த நெக்லெஸ் கான்சல்ட்ட்ட்ட்:)) ஹா ஹா ஹா எங்கிட்டயேவா?:))..

      Delete
    2. //வெள்ளை மாளிகையில் டீ காபி போட்டு கொடுத்தீங்களா :)) // - டிரம்புக்கு எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள் இருக்காங்க. டேவடைக் கிச்சன், ஒடியல் கூழ் பார்டிகளை வெந்நீர் போட்டுக் கொடுக்கக்கூட அனுமதிக்க மாட்டாங்க. பிரசிடெண்ட் ஹெல்துல அவங்களுக்கு அக்கறை இருக்காதா? (ஒரு வேளை நெ.த போனால் அனுமதி கொடுப்பாங்களாயிருக்கும்..போனாப் போகுது ஏஷியன் உணவு சாப்பிடும் வாய்ப்பு டிரம்புக்குக் கிடைக்கட்டும்னு)

      Delete
    3. // (ஒரு வேளை நெ.த போனால் அனுமதி கொடுப்பாங்களாயிருக்கும்..போனாப் போகுது ஏஷியன் உணவு சாப்பிடும் வாய்ப்பு டிரம்புக்குக் கிடைக்கட்டும்னு)//

      ஆஆஆஆ மீ ஃபெயிண்ட்டாகிறேன்:)) எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. முதல்ல இப்பவே ட்றம்ப் அங்கிளைக் காப்பாத்தோணும் நான்:)), மனிசன் அவசரப்பட்டு நெல்லைத்தமிழனின் புளிச்சாதத்தை, மாங்காய்த் தொக்கைச் சாப்பிட்டுப் பொசுக்கெண்டு போயிட்டாரெனில்:)).. என் சொத்து இனும் வேலை முடிஞ்சு கைக்கு வந்து சேரவில்லையே.. ஆண்டவா எதுக்கெல்லாம் பயப்பூட வேண்டிக் கிடக்கூ:))... ஹா ஹா ஹா நன்றி நெ.தமிழன்... படிப்போரை சிரிக்க வைக்கிறீங்க.. வட்ஸப் மாதிரி, இங்கும் வொயிஸ் ரெக்கோர்ட் வசதி இருப்பின்.. மின்ன்னி முழக்கலாம்:)) ஹா ஹா ஹா.

      Delete
    4. @அதிரா...இதுக்கு மட்டும் பதில் எழுதணும்னு தோன்றியது. என் குரல், ரொம்ப டாமினேட்டிங் குரல். இண்டர்வியூவின்போது மட்டும் என் குரலை சாஃப்டாக்க முயற்சிப்பேன். மத்தபடி என்னிடம் பேசி உடனே யாரும் இம்ப்ரெஸ் ஆகிட முடியாது. இது நான் வாங்கிவந்த வரம். என்னிடம் முதலில் பேசும் யாரும் கொஞ்சம் டஃப் ஆன ஆளு, ஃப்ளெக்சிபிள் இல்லை அப்படீன்னுதான் நினைப்பாங்க.

      எனக்கென்ன ஆஷா போன்ஸ்லே குரல் இருக்குதா என்ன.. பாடி பதிஞ்சு வைக்க.

      Delete
    5. //மத்தபடி என்னிடம் பேசி உடனே யாரும் இம்ப்ரெஸ் ஆகிட முடியாது.//
      ஹா ஹா ஹா அப்போ அன்று பொம்பிளை பார்க்கப்போனபோது, ஸ்மைல் மட்டும் பண்ணிட்டு வந்தீங்களோ அண்ணியைப் பார்த்து :) ஹா ஹா ஹா..

      //எனக்கென்ன ஆஷா போன்ஸ்லே குரல் இருக்குதா என்ன.. பாடி பதிஞ்சு வைக்க.//
      ஹா ஹா ஹா இதுக்காகவே இப்போ ஒரு பாட்டுப் பாடோணும் போல வருதே ஆனாவாணாம்:)) சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்த கதையாகிடும் என் கதை ஹா ஹா ஹா .. மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. எதுக்கும் கோபு அண்ணனோடு வட்ஸப்பில்:) பேசி,.. உங்கள் கதை உண்மைதானா என்பதைக் கொன்ஃபோம் பண்ணிக்கொள்கிறேன்:)))

      Delete
  28. ஹாஹா ட்ரம்ப் அங்கிள் கூட என்னமா போஸ் குடுக்குது பூஸ் :)ஆனா பாருங்க அவர் ஒரு ஜென்டில் மேன் :) பேரழகி பக்கத்தில் இருந்தாலும் காமிராவை மட்டுமே பார்க்கிறார் .

    ReplyDelete
    Replies
    1. //பேரழகி பக்கத்தில் இருந்தாலும் காமிராவை மட்டுமே பார்க்கிறார் //

      அது அஞ்சு அவர் முன்பு கொஞ்சம் அப்பூடி இப்பூடித்தான் இருந்தார்:)) ஆனா மீ அவரின் பேஷனல் செக்கரட்டரி ஆனதும்.. அவருக்கு உலகியல்:)) .... ஞானம் எல்லாம் சொல்லிப் புரிய வைத்தமையால இப்போ அவர் முக்கால் ஞானி:)), தேவலோக அரம்பை வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டார் தெரியுமோ:)) ஹா ஹா ஹா..

      Delete
  29. அதிரா சீக்கிரம் 100 பவுண்ட்ஸ் போடுங்க பே பாலில் .நீங்க சொன்ன மாதிரி பேரழகின்னு கமெண்ட் போட்டுட்டேன் 

    ReplyDelete
  30. ஹலோவ் மியாவ் ரெண்டு நெக்லஸுக்கும் தேங்க்ஸ் :) அப்டியே அந்த க்ரெடிட் கார்ட்  லொக்கர் சாவி கார் சாவியும் சேர்த்து அனுப்பிடுங்க அதுக்கும் இப்போவே தாங்க்ஸ் சொல்லிடறேன் 

    ReplyDelete
    Replies
    1. //அப்டியே அந்த க்ரெடிட் கார்ட் லொக்கர் சாவி கார் சாவியும் சேர்த்து அனுப்பிடுங்க அதுக்கும் இப்போவே தாங்க்ஸ் சொல்லிடறேன் /

      ஆஆஆஆஆஆஆ இப்பவே அனுப்புறேன்:)) ஏணெண்டால் கிரடிட் கார்ட்டில ஒரு ஜஸ்ட்:)) 75 ஆயிரம்:)), கார் கீயோடு காரில லோனும் இருக்கு:)) உடனேயே கட்டி முடிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)).. இல்லை எனில் உங்களுக்கு சங்கிலி வந்திடும்:)) கழுத்துக்கல்ல கையுக்கு:)) ஹா ஹா ஹா:)).. நெக்லெஸ் ஐ வாங்கி வச்சுப்போட்டுக் கிரடிட் கார்ட் வேணுமாம்:)) கார்க் கீயும் வேணுமாமே கர்ர்ர்:)) பூஸோ கொக்கோ:)).. ஓடிப்போய்க் காரைக் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சுப் போட்டேன்ன்ன்ன்ன்:)).

      Delete
  31. பானு அக்கா சீக்கிரம் பதிவுலகம் வரணும்னு நானும் வேண்டிக்கிறேன் 

    ReplyDelete
  32. மியாவ் நான் ஸ்கிம் ரீடிங் தான் கொடுத்தேன் ..பிசியா இருக்கேன் .அடுத்த திங்கள் வரை பிசி ..

    ReplyDelete
    Replies
    1. தெரியும் அஞ்சு தெரியும்.. பொறுமையா வாங்கோ.. இருப்பினும் அப்ப அப்ப இங்கினயும் வந்தீங்களெண்டால்ல் உங்கள் மனம் ஈசியாகும்:))

      Delete
  33. மறக்காம ஆயாவை ட்ரூத்துக்கு பார்சல் பண்ணுங்க :) அவர் பத்திரமா பார்த்துப்பார் 

    ReplyDelete
    Replies
    1. ஆயாவை ட்றம்ப் அங்கிளின் ஸ்பெஷல் பிளேனில றைவருக்குப்:)) பக்கத்து சீட்டில இருக்க வச்சு அனுப்பியிருக்கிறேன்:)).. ட்றுத் ரிசீவ் பண்ணியிருப்பார்:)) ஹா ஹா ஹா.. மிக்க நன்றிகள் அங்கு.

      Delete
  34. பின்னர் வருகிறேன்.  நேற்று முழுவதும் இணையம் பக்கம் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. ஞாயிற்றுக்கிழமை வீட்டில இருப்பீங்க என நினைச்சேன், ஆனா வெளியே போயிட்டீங்களாஅக்கும் என விட்டு விட்டேன்.. அதனாலென்ன..

      என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் ஸ்ரீராம்.

      Delete
  35. 'பகலில் ஒரு இரவு' பாடல்கள் தொண்ணூறு சதவிகிதம் எல்லாமே நல்ல பாடல்கள்.  இப்படத்தில் இந்தப் பாடலும், 'பொன்னாரம் பூவாரம்' பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.

    ReplyDelete
    Replies
    1. //'பகலில் ஒரு இரவு'//

      ஓ படப்பெயரைக் கவனிக்கவில்லை நான்.. பொன்னாரம்ம்ம்ம்ம் பூவாரம்.. எனக்கும் பிடிக்கும்.

      Delete
  36. காணொளியில் போலீஸ்தானே...  அவர்கள் அங்கு சைக்கிளில் செல்வது ஆச்சர்யம்.   காணொளியில் அந்த குஞ்சுப்பறவை குளித்து விட்டு வந்து தலை துவட்டுவதுபோல நிற்பது அழகு.

    ReplyDelete
    Replies
    1. இங்கு சிற்ற்றிக்குள் இருக்கும் போலீஸ்.. பெரிய பெரிய குதிரைகளில் வருவார்கள் பார்க்க அழகாக இருக்கும்... பல சமயம் பார்த்திருக்கிறோம்.. படமெடுக்கவில்லை, இனிப் பார்க்கும்போது எடுக்கோணும்.

      //அந்த குஞ்சுப்பறவை//
      அது வாத்துக்குஞ்சு:)).. அவ என்ன பண்றா எனில்... கஸ்டப்பட்ட்டு நீந்தி, அந்த விளிம்பில் நின்றுகொண்டு உடம்பை துடைக்கிறாவாம், ஆனா தண்ணி ஓடுது விளிம்பால வழிஞ்சு ஹா ஹா ஹா.:))..
      நன்றி.

      Delete
  37. ட்ரம்ப் உங்கள் அருகில் சிலைபோல நிற்கிறார்.    

    மனிதர்களின் நடுவே வித்தியாசம் காட்டும் உற்சாகமும்,  நாவின்  நுனியில் இருக்கும் கௌரவமும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. //ட்ரம்ப் உங்கள் அருகில் சிலைபோல நிற்கிறார்//
      ஹா ஹா ஹா அது அதிராவைப் பார்த்ததும் சிலையாகிட்டார்ர்ர்:)) ஐ மீன் வாயடைச்சுப் போயிட்டார்ர்:))

      Delete
  38. அந்த கத்தரிக்காய் கறி நகைச்சுவை எனக்கு நிஜமாகவே நிகழ்ந்திருக்கிறது.    மேகப் பின்னணியில் ஆகாய விமானம் அழகுதான்.  அந்த அழகை அதற்குத் தருவது அந்த மேகங்கள்தான்.

    ReplyDelete
    Replies
    1. //அந்த கத்தரிக்காய் கறி நகைச்சுவை எனக்கு நிஜமாகவே நிகழ்ந்திருக்கிறது//
      ஹா ஹா ஹா நிஜமா?.. ஏன் நீங்க சொல்லியிருக்கப்படாதோ?:))

      மேகங்கள் எப்பவுமே ரசிச்சு முடியாதுதானே... வேறொரு கூட்ட மேகத்துடன் விரைவில் சந்திப்பேன்:)).. ஹா ஹா ஹா கோமதி அக்கா.. இது வேற கதை சொல்லப்போறேனாக்கும்:))

      Delete
  39. பானு அக்காவுக்கு நானும் அதே வேண்டுகோளை வைக்கிறேன்.  நானும் அந்த தங்கத்தில் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன்!!!!

    ReplyDelete
    Replies
    1. //நானும் அந்த தங்கத்தில் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன்!!!!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தங்கத்தை டச்சு பண்ணக்கூடா:)).. கர்ர்ர்ர்ர்:)) அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்:))

      உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டோ:)).. இது முன்பும் எங்கேயோ சொன்னதுண்டு:)..

      ஒரு வயதான அப்பப்பா ஒருவர் ஊரில் இருந்தார்[இது நாங்கள் குழந்தையாக இருந்த காலத்துக் கதை:)], அவருக்கு சொத்துக்கள் அதிகம், ஆனா கொஞ்சம் விவேகம் குறைந்தவர். அதனால தாயுடனேயே இருந்தார் திருமணம் முடிக்காமல், அவருக்கு ஒரு 30,35 வயசிலேயே தாயும் போயிட்டா, இவர் தனித்து நின்றார், அப்போ ஊராக்கள் அவருக்காக ஒரு பெண்ணை பேசி திருமணம் முடிச்சுக் குடுத்தார்கள். பெண் மிகவும் வறியவ, உணவுக்கே பஞ்சம், ஆனா வடிவானவ, சொத்து இருக்கிறது என எல்லோரும் சமாதானம் பண்ணி முடிச்சுக் குடுத்தார்களாம்.[இவரும் பெரிய தாலிக்கொடி, நகை எல்லாம் போட்டு, உடுப்புகள் வாங்கித்தான் முடிச்சார்ர், ஊரவர்கள் பிடிச்சு செய்வித்திருக்கலாம் தெரியவில்லை]

      திருமணத்து அன்றே, அவருக்கு ஒரு பாய் தலையணை போட்டு விட்டு, அருகில் தனக்கொரு பாயும் தலையணையும் போட்டாவாம் பெண், அப்போ இவர் உடனே.. தூக்கு தூக்கு உன் பாயை எடுத்துப் போய் அறையிலே படு என்றிட்டார் ஹா ஹா ஹா.. அதையும் பொறுத்துக் கொண்டு கொஞ்சக்காலம் வாழ்ந்தாவாம் அவ, ஆனா இவர், உணவுகூட, அளந்துதான் சமைக்க கொடுப்பாராம், அரிசி, பருப்பு எல்லாம்.. இப்படி நிறையப் பிரச்சனை, அதனால சமாளிக்க முடியாமல் மீண்டும் தன் வீட்டுக்கே போயிட்டா பெண். பெண்ணின் பெயர் சொல்ல மறந்திட்டேன் .. தங்கம் என்று பெயர்.

      இதனால இவருக்கு மிகுந்த கோபம். ஊரெல்லாம் அவவை திட்டித் திரிஞ்சார், தன்னைக் கை விட்டிட்டா என, ஆனா ஊரவர்கள் தங்கத்துக்கே சப்போர்ட். பின்னர் இவர், உறவினர்கள் வீடுகளுக்குப் போய் சாப்பிட்டு, ரீ குடிச்சு வாழ்ந்து வந்தார் தனியே.

      இது பல வருடங்கள் ஓடி, வயதாகிவிட்டது. இதற்குள் அந்த தங்கம், கஸ்டம் காரணமாக சிங்கப்பூர் போய்க், கொஞ்சம் பணம் சேர்த்து பின் ஊரில் வந்து தனியே வாழ்ந்து வந்தாவாம்.

      ஒருநாள், இவர் உறவினர் வீடு ஒன்றுக்குப் போய் ரீ குடிச்சுப்போட்டு சும்ம்மா அங்கு இருந்திருக்கிறார். அந்த வீட்டில் இருந்த ஒருவர் சும்மா சத்தமாக பேப்பரை வாசித்தாராம்.. தங்கம் பற்றியே எல்லோரும் மறந்து விட்டனர்.. நீண்ட காலம் ஆகிவிட்டமையால.

      பேப்பரில் வந்த நியூஸ்.. “சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர், எயார்போர்ட்டில் பிடிபட்டார்”.. இதுதான்.. இதை அவர் சத்தமாக வாசித்ததும், இவருக்கு கெட்ட கோபம் வந்து எல்லோரையும் திட்டித் தீர்த்திட்டாராம்.. அதாவது அவர் நினைச்சது.. தங்கம்-சிங்கப்பூர் இரண்டையும் மட்டுமே காதில வாங்கிப்போட்டு.. தனக்காக என்னமோ சொல்கிறார்கள் என நினைச்சு திட்டத் தொடங்கிட்டாராம்.. தங்கத்தை ஹா ஹா ஹா இது கொஞ்சக் காலம் ஊரில பெரிய நியூஸாம்:))

      Delete
    2. அவருக்கு 'தங்கத்தை' திருமணம் செய்துகொடுத்த ஊரார் யார் யார்? ஆளுக்கு ஒரு அறை விடணும் பளார்னு.

      எங்க ஊர்லயும் ஒரு வடிவான பெண்ணை ஒரு வக்கீலுக்கு திருமணம் செய்துகொடுத்தார்கள். அவர் பணமுள்ளவர் ஆனால் கருப்பு அழகில்லை. அதுனால இந்தப் பெண் அவர் கூட நடந்து வரமாட்டார். பக்கத்துல போக மாட்டார். ஒரு சமயத்துல தன் வீட்டுக்கே போயிட்டா. அப்புறம் 20 வருஷம் கழிச்சு திரும்பி வந்த பிறகு அவங்களுக்கு குழந்தையே பொறக்கலை..

      Delete
    3. நெ.தமிழன்
      //ஆளுக்கு ஒரு அறை விடணும் பளார்னு./
      ஹா ஹா ஹா இவருக்கு மைண்ட் தானே கொஞ்சம் ஸ்லோ மற்றும்படி பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பார், நிறைய சொத்து இருந்தது, அப்போ நல்லா இருக்கட்டுமே என செய்து கொடுத்தார்கள்.

      //அவர் பணமுள்ளவர் ஆனால் கருப்பு அழகில்லை. அதுனால இந்தப் பெண் அவர் கூட நடந்து வரமாட்டார்//
      இது 100 வீதமும் தப்பு, ஒருவரின் உடம்பில் என்ன இருக்கு.. மனம், குணம் நன்றாக இருக்கோணும்.. அதை மட்டும்தான் கவனிக்கோணும்.. அழகை எதிர்பார்த்து ஏமாந்து வாழ்க்கையைத் துலைத்த ஆண்கள், பெண்கள்.. இருக்கத்தான் செய்கிறார்கள்.

      ஆனா நான் எப்பவும் சொல்வது, ஒருவரைப் பிடிக்கவில்லை எனில், யார் ஆசை காட்டினாலும், பெற்றோர் எவ்ளோ அடிச்சு துன்புறுத்தினாலும்.. சரி அஜஸ்ட் பண்ணிப் பார்ப்ப்போம் என அவரை/அவவை மணம் செய்யவே கூடாது.. ஒரே முடிவாக மாட்டேன் என தெளிவா இருக்கோணும்...

      எங்கள் ஊரிலும் ஒரு மாமா, அவர் இன்னொருவரை விரும்பியதை அறிஞ்சு, அவசரமாக இன்னொரு பெண்ணுக்கு மணம் முடிச்சுக் குடுத்தனர், இவர் எவ்ளோ மறுத்தும் தந்தை அடி கொடுத்து தாலி கட்ட வச்சார், ஆனா கடசிவரை அவர்கள் ஒற்றுமையாகவும் இல்லை, குழந்தையும் இல்லை.. வயசாகிவிட்டது, ஆனா விதியே என சேர்ந்துதான் இருக்கின்றனர்..

      Delete
  40. கோமதி அக்காவுக்கான போட்டோவில் போட்டோ எடுக்கும் நீங்களும் இருக்கிறீர்களே..  பார்க்கவில்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடிப்போய் யூஊஊம் பண்ணிப் பார்த்தேன்:)) இல்லை:))

      Delete
  41. எந்த வகையான போனையும் சார்ஜ் செய்யும் அந்த சார்ஜர் நேற்றோ முந்தா நாளோ ஒரு விளம்பரத்தில் பார்த்தேன்!

    ReplyDelete
    Replies
    1. உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கு:)) நாங்கதான் இன்னும் கை நோக நோக புளொக் எழுதிக் கொண்டிருக்கிறோம் ஹா ஹா ஹா:))

      Delete
  42. அந்த படத்தில் நடுவில் நிற்பதுதான் நான்.   ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்..!

    ReplyDelete
    Replies
    1. பின்ன நீங்க அனுக்கா பக்கத்தில நெல்லைத்தமிழனை நம்பி:)) நிற்க விடுவீங்களோ?:)) ஹா ஹா ஹா:)).. ஆனா பாருங்கோ நெல்லைத் தமிழன் ஒபாமா அங்கிளைப்போல எவ்ளோ அடக்கொடுக்கமாக:)) தூரமாக நிற்கிறார்:) கை கட்டிக்கொண்டு:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. அதிரா... என் மனைவி எப்போதும் சொல்வாங்க...முக அழகுதான் ஒரு பெண்ணுக்கு அழகு என்று. அப்படிப் பார்த்தால் பேசாம, ஸ்ரீராமைத் தள்ளிவிட்டுட்டு நான் அனுஷ்கா ரசிகர் மன்றத்துல இணையலாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். அதாவத் நான் ரசிகர் மன்றத் தலைவர்... அவர்....அவர்.... 'புது உறுப்பினர்' ஹா ஹா

      Delete
    3. நெ.தமி//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) மன்றத் தலைவராவது ஒரு புறம் இருக்கட்டும்:) முதல்ல அனுக்கா பக்கத்தில போய் நின்று காட்டுங்கோ, ஸ்ரீராம் விடுறாரோ பார்ப்போம்:))

      Delete
  43. நான் பெரும்பாலும் மௌனமாகவே இருந்து பழகி விட்டேன்.  எனவே பிரச்னையில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ஊருக்கே தெரியுமே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்..

      Delete
    2. ஆஆஆஆஆஆ ஸ்ரீராம் சொல்ல மறந்திட்டேன்:)).. நீங்க ஸ்கிறீன் ஷொட் எடுத்தபோது என் புளொக் ஆடிச்சுதே:)) அநாமிக்கா குரைக்கத் தொடங்கிட்டா:)) மீ பயந்திட்டேன் என் வைரம் தங்கம் எல்லாம் களாவு போகுதென:)) ஹா ஹா ஹா நன்றி நன்றி[புரியுமென நினைக்கிறேன்:)]

      Delete
  44. காணொளிகள் அருமை.

    என்னையும் மறக்காமல் எனக்கும் பரிசு நன்றி...நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மாதேவி வாங்கோ.. நீங்க இப்போ தொடர்ந்து வாறீங்கள்.. அப்போ எப்படி உங்களை மறப்பேன்?:).. மிக்க நன்றி.

      Delete
  45. உங்கட ட்ரம்ப் அங்கிள் என்னைப் பார்ப்பதற்காக இங்கேயே வராராக்கும். என்னனு நினைச்சீங்க என்னை? அதோட இங்கே மோதி அங்கிளும் வரப்போவதால் ஒரு மாபெரும் ஆலோசனை என்னோட தலைமேலே நடக்கப் போகுது! பொறுத்திருந்து பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ட்றம் அங்கிள் சொன்னார்:) நீங்க அவரை ஆக்கினை பண்ணிக் கூப்பிடுவதாக:)).. இது நல்லதில்லை சொல்லிட்டேன் ஹா ஹா ஹா..

      //ஒரு மாபெரும் ஆலோசனை என்னோட தலைமேலே நடக்கப் போகுது! //
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. "தலைமையி"லா இல்லை "தலை மேலவா" - அட ஆண்டவா.. அம்பேரிக்கா போய் தமிழும் போச்சா இந்தக் கீசா மேடத்துக்கு

      Delete
    3. //அட ஆண்டவா.. அம்பேரிக்கா போய் தமிழும் போச்சா இந்தக் கீசா மேடத்துக்கு

      //
      ஹையோ நெல்லைத்தமிழன்.. கீசாக்காவைப் பார்த்து என்னா கிளாவி.. சே சே டங்கு ச்லிப்பாகுதே:) என்னா கேள்வி கேட்டிட்டீங்க?:) எப்பூடி நீங்க இப்பூடிக் கேய்க்கலாம்?:)).. அது கீசாக்காவுக்கு தமிழ்நாட்டிலயே தமிழ் போயிந்தி ஆக்கும் ஹா ஹா ஹா :))

      Delete
  46. எல்லோருக்கும் வைரம், தங்கம், பச்சைக்கல், எமரால்ட்னு கொடுத்திட்டு எனக்கு மட்டும் க்ரிஸ்டலா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போனால் போகுது, இம்முறை மன்னிச்சு விட்டுடறேன். அடுத்த முறை டைமன்ட் செட்டாகக் கொடுத்திடணும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா எவ்ளோ கஸ்டப்பட்டு அந்தக் கிரிஸ்டலைக் கொண்டு வந்தேன் தெரியுமோ?:) கிரிஸ்டல் வீட்டில இருந்தால் லக் வருமாம் கீசாக்கா:)) சொன்னா நம்புங்கோ.. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்... அம்பேரிக்கால இருந்தும் வருகை தருவதற்கு.

      Delete
  47. வைட் ஹவுஸ் ஐ...நல்லா வெள்ளையா இருக்கு ...சூப்பர்


    காணொளி உங்க குரலுடன் cute ட்டா இருக்கு ..


    விமான ம் பறக்கும் ரொம்ப அழகாக இருக்கு ..ஆனாலும் இப்போ கோமதி மா சொன்ன கமெண்ட் தான் நியாபகம் வருது ...

    இதிலிருக்கும் அத்தனை குட்டித் தோடுகளும் அனு பிரேம் க்கே:))[அனுவுக்கு குட்டி நகைகள்தான் பிடிக்குமாம்:)) ச்சும்மா ஒரு கற்பனைதேன்ன்:))....


    இல்ல நிஜமாலுமே எனக்கு இப்படி குட்டி குட்டி நகைகள் பிடிக்கும் ....நன்றி நன்றி ...எல்லாமே அழகு


    திரும்ப திரும்ப பார்க்க சொல்லும் அழகில் அனைத்து நகைகளும் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..
      //விமான ம் பறக்கும் ரொம்ப அழகாக இருக்கு ..ஆனாலும் இப்போ கோமதி மா சொன்ன கமெண்ட் தான் நியாபகம் வருது ...//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. இன்னும் விமானம் பறக்கும்:)) ஆனா வித்தியாசமான ரசிக்கும் வடிவத்தில்:)..

      மிக்க நன்றி அனு.

      Delete
  48. கர்ர்ர்ர்...நான் இங்கின 4 நாள் இல்லை. இப்ப நெக்லஸ் வாங்க லேட்டா வரவேண்டி இருக்கு. ஆவ்வ்வ் பச்சை கல்லுதான் அது. நான் நெக்லஸ் ஐ சொன்னேன். அந்த டிசைனுக்கு நீலகற்கள் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.பரவாயில்லை. வடிவா இருக்கு.மிக்க நன்றி,நன்றி. ஆனா அஞ்சுவுக்குதான் அந்த பபபச்சைகல் நெக்லஸ் கொடுக்கோனும் நீங்க.
    எனக்கும் பிடித்த பாட்டு.Hydrangea மலர்களிக்கு நடுவில என்ன ஒய்யாரமா இருக்கா டெய்சிபிள்ளை. அழகான படம்.
    சின்ன தோடுகளும் (அனுவுக்கு கொடுத்த) அழகு.
    ட்றம்ப் அங்கிளை இன்னும் அட்வைஸ்கொடுங்கோ.ஜிம்,யோகா,வாட்ட்ர் ஏரோபிக்,ஒன்றும் மிச்சமில்லையா. சைக்கிளிங்,ஜாகிங்,வாக்கிங் இதுவும் செய்யலாம். ஆனா முன்னவிட டிபரன்ட் இருக்கு உங்களில்.
    பறவைகள்,அணில்கள் வீடியோ அழகா இருக்கு. இங்கு அணில்கள் கொஞ்சம் காண்பது அரிதாக இருக்கு. காகம் பார்க்கமுடியுது.
    அந்த தாராக்குஞ்சு ஸோ ஸ்வீட். இம்முறையும் உங்க குரலையும் கேட்டாச்சாம்,வைட் ஹவுசையும் பார்த்தாச்சாம்.
    எனக்கு பயம். எப்படி உங்க சின்னவர் பயமில்லாமல் வைத்திருக்கார்.
    தைப்பது எளிது.... இது ஆக்குவது கடினம்,அழிப்பது எளிது என்பதை போல.. உண்மைதானே.
    இக்காலத்தில் மெளனம் மிக அவசியம். பிரச்சனைகளை தவிர்க்கலாம். லேட்டா வந்துவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஅ வாங்கோ அம்முலு வாங்கோ.. ரெயின் வெளிக்கிடும்போது ஓடிவந்து ஏறிட்டீங்க:))..

      //ஆவ்வ்வ் பச்சை கல்லுதான் அது. //
      நான் சொன்னனே அம்முலு கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிடுவா என[நான் ஒண்ணும் ஸ்ரீராமைக் கொப்பி பண்ணவில்லையாக்கும்:))].

      //ஆனா அஞ்சுவுக்குதான் அந்த பபபச்சைகல் நெக்லஸ் கொடுக்கோனும் நீங்க.//
      இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊஉ:))..

      டெய்ஷிப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கிறாவாம் ஹா ஹா ஹா.

      //சைக்கிளிங்,ஜாகிங்,வாக்கிங் இதுவும் செய்யலாம்//
      எல்லாமே ஜிம் இல் தான் .. வெளியே இனி குளிருது அம்முலு...

      //ஆனா முன்னவிட டிபரன்ட் இருக்கு உங்களில்//
      சுவீட் 15 ஆகிட்டேன் எனச் சொல்ல வரீங்க?:) அப்பூடித்தானே இருக்கட்டும் இருக்கட்டும் எனக்குப் புகழ்ச்சி புய்க்காது:)) ஹா ஹா ஹா.

      //எப்படி உங்க சின்னவர் பயமில்லாமல் வைத்திருக்கார்.//
      அவர் இங்கு வெள்ளைகளோடு பழகியோ என்னமோ பயப்பட மாட்டார்.. ஆனா பார்த்றூமில், றூமில் எங்காவது குட்டியாக ஸ்பைடர் தெரிஞ்சாலும் நாம் தான் போகோணும் எடுத்து எறிய.. இருவருக்கும்..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  49. அனைத்துப்புகைப்படங்களும் அழகு தான் என்றாலும் முதல் புகைப்படம் மிகவும் அழகு! 'முற்றத்து மலர்கள்'! செந்தமிழில் அழகாக எழுதியிருக்கிறீர்கள் அதிரா! அந்த்க மேபிள் மரக்காய்கள் கூட மிக அழகு!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.