காதலிக்கு ஒரு கடிதம்!!!
என் கனவுகளைக் கலைத்தவளே காதலியே கைவிட்டாய்
நினைவுகளைக் குலைத்தெனது நிம்மதியைப் போக்கிவிட்டாய்
ஆரம்ப நாட்களிலே அஞ்சினேன் உனைக்காண
எப்படி இருப்பாயோ? என்னென்ன கேட்பாயோ?
என்றெல்லாம் தயங்கினேன் இரவெல்லாம் விழித்திருந்தேன்!!
நாளும் குறித்தனர் நாம் சந்திக்க
நடுங்கினேன்.. உனைப்பற்றி நான் சிந்திக்க
ஆறுதல் தந்தான் அருமை நண்பன்
அறிமுகம் செய்தான் உன் சகோதரிகளை!!
அவர்களைப் போலவேதான் அன்பே நீ இருப்பாய் என்று
அச்சத்தை ஓட்டினான் ஆசைபல ஊட்டினான்
முத்தான முத்தே உன் மூத்த சகோதரிகளான
பத்துப் பேரையுமே பார்த்துக்கொண்டேன் நன்றாக!!
அந்த நாளும் வந்தது அறைக்குள்ளே காத்திருந்தேன்
கறுப்பு டிஷைன் போட்டிருந்த வெள்ளைநிற உடையினிலே
சிரிப்புமலர் போலசைந்து சித்திரமே நீ வந்தாய்
ஆவலோடு கரங்களிலே அள்ளியுனை நானெடுத்தேன்!!
அந்தோ என் செய்வேன்? அன்று நான் ஏமாந்தேன்..
சற்றேனும் உன்னிடத்தில் சகோதரிகள் சாயலில்லை..
முற்றிலும் புதியவளாய் மோசக்காரி நீயிருந்தாய்...
அன்று நீ - நீயாக இல்லாமல், உன் அக்காமார் போலிருந்தால்..
“இன்று நான் பட்டதாரி ஆயிருப்பேன் பரிதவித்து நிற்கமாட்டேன்”
((என்ன எல்லோருக்கும் பீலிங்ஷாக இருக்கோ?:):), பத்து வருட வினாத்தாள்களை மட்டுமே பார்த்துவிட்டு, தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் வராததால், தோல்வி அடைந்த மாணவர், பின்னொரு நாளில், அந்தக் கேள்வித்தாளை, காதலியாக நினைத்து வடித்த கவிதை... பல பல வருடங்களுக்கு முற்பட்டது))
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நாங்களெல்லாம் எதிரியைக் கூடக் காப்பாற்றி....
பாசமாய்!! அன்பைப் பொழியும் பரம்பரையாக்கும்....
பின் இணைப்பு:
கடவுளை மற எனச் சொல்லும் கருத்து சரிதானா.. தெரியவில்லை.. மனதுக்கு வாசகம் பிடித்திருந்தது...
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"... அண்ணா.
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
|
Tweet |
|
|||
சூப்பர் அதிரா!! நானும் எப்படி முடியப்போகுதோன்னு பார்த்தா.. வினாத்தாள் :((
ReplyDeleteரொம்ப படிக்காதீங்க பூஸ்!!!
ReplyDeleteஅதிராராராராவ்வ்வ்வ்வ்..சூசூசூசூப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்.டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை படைத்த அதிராவுக்கு இப்பொழுது ஒரு பொக்கே அனுப்புகிறேன் மெயிலில்.
ReplyDeleteகவிதை சூப்பர்.கடவுளை நாம் மறந்தால் அவர் நம்மை அவரை தேடுப்படி வைத்து விடுவார்.அதனால் எப்பவும் உலகைப்படைத்த கடவுள் நினைப்போடு இருப்பது நல்லது.இது என் கருத்து.உங்களுக்காக நான் கிளிக்கிய வெள்ளை தாரா படம் வந்து பாருங்க, காத்துக்கிடக்கு.
ReplyDeleteஹி..ஹி..ஹீ..கறுப்பு டிஷைன் போட்டிருந்த வெள்ளைநிற உடையினிலே ....ஹஹ்..ஹஹ்..ஹா!! ஒண்ணுமில்லை அதிராக்கா..இது ஜீனோவின் பீலிங்க்ஸ்!! புவாஹா...ஹா..ஹா..ஹி..ஹீ!
ReplyDeleteஅதிரா,
ReplyDeleteகவிதை ரொம்ப நல்லா இருக்கு.
அந்த மாண(வி)வர் யாரோ???!!!!
இப்ப மட்டும் என்ன! எத்தனையோ பட்டங்கள் வாங்கித்தானே இருக்கிறீங்கள். ;)
ReplyDeleteமிக்க நன்றி இலா... எனக்கும் ரொம்பப்பிடித்துப்போச்சு.. கவிதையைச் சொன்னேன். நீங்கதானே வாசிப்பது நல்ல பழக்கம் என்றீங்கள்.. அப்பவே பூஸார் புத்தகத்தை திறந்தவர்தான்... இன்னும் மூடவேஏஏஏ இல்லை...கிக்..கிக்..கிக்...
ReplyDeleteஸாதிகா அக்கா!! முதலில் பொக்கே பார்த்தேன் இது ”அது”க்காக்கும் என நினைத்தேன்... இப்போ தான் இதைப்பார்த்தேன்... ஓ இதுக்காக்கும் அனுப்பினனீங்கள் மிக்க நன்றி... இரவல் கவிதைக்கே பொக்கே அனுப்புறீங்கள்:) அப்போ விரைவில் என் சொந்தக்கவிதை வெளிவரும்.. அதுக்கு என்ன தரப்போறீங்களோ... புவஹாஆஆஆஆஆ..(இதுவும் இரவல் சிரிப்புத்தான்.. கிக்..கிக்..கிக் மாதிரி..:)). மிக்க நன்றி ஸாதிகா அக்கா.. இரண்டுக்கும்.
ReplyDeleteஆசியா மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரியே.. கடவுளை எப்படி மறப்பது?. ஆனால் பெரியார் சொன்ன கருத்து வேறாக இருக்கலாம்.
ReplyDeleteவெள்ளைத் தாராவோ... இதோ வருகிறேன்.. நட்பிலேயே எனக்கு நேரம் போய்விடுகிறது.
ஜீனோ... வருகைக்கு மிக்க நன்றி. அக்காவுக்குத்தான் எப்பவும் பீலிங்ஸ் இருக்கும், இப்போ ஜீனோவுக்கும் தொற்றிவிட்டதோ? ஓ..கறுப்பு டிஷைன்... பீலிங்ஷூ.... ஓக்கை... புரியுது புரியுது...க்கி...க்கி....க்கி..
ReplyDeleteநன்றி செல்வியக்கா... இது நான் “பிங்” தொட்டிலில் படுத்திருந்தபோது வெளிவந்த கவிதை, எனக்குப் பிடிக்குமே என, அம்மா கட்டிங் எடுத்து வச்சிருந்தவ... அதால அது மாணவன் அண்ணாவோ அல்லது மாணவி அக்காவோ(எல்லாம் ஒரு மரியாதைதான்) என நேக்குத் தெரியலே...ஹ..ஹா..ஹா....
ReplyDeleteநன்றி இமா... நான் பட்டங்களுக்குச் சொன்னேன்... ஆமாம் ஆமாம்... கொக்கு பற பற கோழி பற பற... சேவல் பற பற.. தாரா பற பற... என் அன்னமே பற பற பற...
ReplyDeleteஊக்கத்துக்கு நன்றி இமா... இன்னும் பட்டம் பெறோணும்....கிக்..கிக்...கிக்....
பிங் தொட்டியில் இருந்து எடுத்த நல்ல கவிதை.
ReplyDeleteஆனாலும்//நாங்களெல்லாம் எதிரியைக் கூடக் காப்பாற்றி....
பாசமாய்!! அன்பைப் பொழியும் பரம்பரையாக்கும்....//
இதுக்கு பதில் இங்க கொடுக்க முடியாது. அடுத்த இழை நட்புபகுதியில் வெளிவரும்.
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். அது தொட்டி இல்லை:) அது பிங் ”தொட்டில்” ஆக்கும்..
ReplyDeleteநட்பில என்ன வரப்போகுது வெளியில???
பின்குறிப்பு:
அதிரா ஒருமாதம் வேலை அலுவலாக வெளியூர் செல்கிறேன்... எங்கட நாட்டுக்குக் கீழே வலதுபக்கமாக இருக்கும் நாட்டுக்கு... அதிரா எஸ்கேப்....
all the best athees. ;)
ReplyDeleteஹா ஹா.. நல்ல கற்பனை அதிரா.. ரசிச்சு சிரிச்சேன்.. நல்லா எழுதியிருக்காரு.. ரொம்ப பட்டுட்டார் போல :))
ReplyDeleteலவ் இஸ் காட், காட் இஸ் லவ் ந்னு சொல்லியிருக்கார் அதீஸ்.. தப்பில்ல.. நிறைய பேர் விழுந்து விழுந்து சாமி கும்பிடுவாங்க.. ஆனா அடுத்தவங்களுக்கு ஒன்னுன்னா கண்டுக்காம போவாங்க.. அவங்களுக்காகச் சொல்லியிருக்கார்.. நாம எல்லாந்தான் நல்லவங்களாச்சே.. ரெண்டையுமே நினைக்கறவங்க :)))
This comment has been removed by the author.
ReplyDeleteஅதிரா இது என்ன நடு சென்ட்ரில் இப்படி எல்லாம் எழுதறீங்க
ReplyDelete//ஒருமாதம் வேலை அலுவலாக வெளியூர் செல்கிறேன்//
பதில் இந்த லிங்கில் இருக்கு
http://haish126vp.blogspot.com/2010/03/blog-post_04.html
பி.கு: ”த.க” லிலா போகிறீர்கள் எதுக்கும் மேலே பார்த்துக் கொண்டு போங்கோ :))
அதிரா ரொம்ப அருமை..
ReplyDeleteபூஸை பார்த்து பார்த்து எனக்கும் இப்ப ரொம்ப பிடித்துவிட்டது.
வீட்டில் கீழே இறங்கினால் நிறைய பூஸ் வரும் இப்ப நான் மனசுக்குள் அதனிடம் அதிரா போல் பேசுகிறேன்.
all the best athees. ;)/// அதிரா நாட்டைவிட்டுப் போறாவென்றால் என்ன ஒரு சந்தோஷம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteமிக்க நன்றி சந்து.... நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீங்க... நாங்க எல்லாம் ரொம்பாஆஆஆஆஆஆஆ நல்லவங்க...
ReplyDeleteபதில் இந்த லிங்கில் இருக்கு
ReplyDeletehttp://haish126vp.blogspot.com/2010/03/blog-post_04.html/// any offer accepted....//// விலைமதிப்பற்றது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
பி.கு: ”த.க” லிலா போகிறீர்கள் எதுக்கும் மேலே பார்த்துக் கொண்டு போங்கோ :))///தண்ணிக்கப்பலில் இல்ல, தங்கக்கப்பலில் ஏற்றிப்போகிறார்கள்... விலைமதிப்பற்ற பூஸாரை... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மேலே பார்த்தேன்..
பூமியைப் பார்த்தேன்...
மனிஷனை இன்னும் பார்க்கலியே...
க்கி.... க்கி...க்கி... இன்னும் கொஞ்ச நாளைக்கு வாசல் கதவு பூட்டியே இருக்கட்டுமாம்..
ஹா... ஹா.. ஹா.. ஜலீலாக்கா... பூஸாரோடு பேசும்போது கவனம்.. அக்கம்பக்கம் பார்த்துப்பேசுங்கோ.... மிக்க நன்றி.
ReplyDeleteஅதிரா இறுதியில் கேள்வித்தாள் பற்றியது என்று படித்ததும் சிரித்து விட்டேன். இது போல ஒரு அனுபவம் விரைவில் ஒரு பதிவாக வரும் :-)
ReplyDelete//ஸாதிகா said...
ReplyDeleteஅதிரா ... டபுள்மீனிங்கில் அசத்தல் கவிதை//
என்னது, டபுள் மீனிங்கா? அய்ய, நான் அதிராவை நல்ல பிள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!! ;-))
மிக்க நன்றி கவிசிவா. விரைவில் எதிர்பார்க்கிறேன்... சாமியாரின் கொதிப்பில் இருந்து இன்னும் நீங்கள் மீளவில்லைப்போல் தெரிகிறது:).. அடுத்த தலைப்பை ஆரம்பியுங்கோ.
ReplyDeleteமிக்க நன்றி திருமதி ஹீசைன்... நன்கு சிரிக்க வைத்திட்டீங்கள்.. வீக்... எண்டிலே..
ReplyDeleteஎன்னது, டபுள் மீனிங்கா? அய்ய, நான் அதிராவை நல்ல பிள்ளைன்னுல்ல நினச்சிருந்தேன்!! ;-))///நீங்க நினைச்சிருந்தது ரொம்ப கரீட்டு... ஆனா எழுதினதுதான் தப்பாக்கும்..:):)
hi hi
ReplyDeleteஎன்னாச்சு ஜலீலா! என்ன இப்பிடி சிரிக்கிறீங்க!!
ReplyDeleteஜலீலாக்கா என்ன இது பூனையோடு பேசிப்பேசி பூனைப்பாஷையோ?:)... இமா நீங்க முன்னேறிட்டீங்க:) ஐ மீன்.. இப்ப நிறைய ரைப் அடிக்கிறீங்கள்:).... கிக்...கிக்...க்கீஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஅதிரா! நல்ல கவிதை! நகைச்சுவை என்பது தெரியாமல் சீரியஸாக நினைக்க வைத்துள்ளது.
ReplyDeleteமாணவன், தேர்வு என்றவுடன் இந்த சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது.
காதல் என்னும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன் நான்........:)
இளமதி மிக்க நன்றி. அடிக்கடி காணாமல் போறீங்கள் எங்கட ..... ....... ப்போல:).
ReplyDeleteவணக்கம் அக்கா,
ReplyDeleteநலமா?
பின்னூட்டப் பெட்டிக்கு நான் வீட்டில் இருக்கும் நேரம் கமெண்டுகளை மொபைலில் பார்த்து டிலீற் செய்யலாம் என்பதால் பூட்டுப் போடுவதில்ல.
ஏனைய நேரங்களில் பூட்டுப் போட்டு விடுவேன்.
காரணம் நிறைய வாசகர்கள் வருகிறார்கள் என்பதனை சாட்டாக வைத்து ஒரு சிலர் ஆபாச தளங்களின் விளம்பர லிங்கினை தமது தளத்தினை விளம்பரப்படுத்தும் நோக்கில் பின்னூட்டம் மூலமாக போடுகிறார்கள்..
கவிதையில் பூடகமாய் இரு பொருள் வரும் வண்ணம் எழுதியிருக்கிறீங்க.
ReplyDeleteநீங்கள் எடுத்துக் கொண்ட கருப் பொருளும், அதனை நாசூக்காய் சொல்லிய விதமும் அருமை.
வாங்க நிரூபன்.... ஓ அதுவா சங்கதி.....
ReplyDeleteஎதுக்கு அடிக்கடி மாத்துறீங்க என குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணியும் கண்டுபிடிக்க முடியாமல் போச்ச்ச்ச்ச்ச்:)).
அது நான் எழுதிய கவிதை இல்லை நிரூபன், பல வருடங்களுக்கு முன், பேப்பரில் படித்ததில் பிடித்தது.
மியாவும் நன்றி நிரூபன்.
"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"... அண்ணா.//
ReplyDeleteசூப்பரான வரிகள் மியாவ்...
//உன் மூத்த சகோதரிகளான
ReplyDeleteபத்துப் பேரையுமே பார்த்துக்கொண்டேன் நன்றாக!!//
கவிதையாஆஆஆ..பயந்தே போயிட்டேன் :-)))
//"எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்"... அண்ணா.//
ReplyDeleteஓடி வந்து நின்றால் மூச்சுவாங்குமே ...!!அவ்வ்வ்வ்வ்வ்
//கடவுளை மற எனச் சொல்லும் கருத்து சரிதானா.. தெரியவில்லை.. மனதுக்கு வாசகம் பிடித்திருந்தது...//
ReplyDeleteசில நேரங்களில் ஓகே..அவ்வளவே..!! :-))