நல்வரவு_()_


Thursday, 18 February 2010

பாட்டி.. (நிறைவுப்பகுதி)


பாட்டி.. தொடர்கிறது...
பாட்டி அந்த நாளில் ஆசிரியராக இருந்தவர். தாத்தா சிங்கப்பூரில் தொழில் புரிந்த சமயம், பாட்டியைத் திருமணம் முடித்தார். பின்னர் பாட்டியும் சிங்கப்பூரிலேயே வசதியாக வாழ்ந்தவர். அவர்களின் ஒரே பிள்ளைதான் எங்கள் அப்பா. தாத்தா மாரடைப்பால் இறந்துவிட, பாட்டி அப்பாவுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்.

பாட்டியின் விருப்பத்தின்படியும், அப்பாவின் விருப்பத்துடனும், அப்பா, அம்மாவை மணம் முடித்தார். அம்மாவுக்கு அம்மா இல்லை. பாட்டியையே தாயாக நினைத்தார். பாட்டி, அம்மாவை என்றைக்குமே மருமகளாக எண்ணியதை நான் காணவேயில்லை. தன் மகளாகவே நடத்தினார்.

எங்கள் குடும்பத்தில் பெண் குழந்தைகள் குறைவென்பதால், நான் அம்மாவின் வயிற்றிலிருந்தபோதே பெண் குழந்தை வேண்டுமென்று நேர்த்தி வைத்தார்களாம். அம்மா சொன்னா, ஒருநாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவின்போது, வெளிவீதியில் நின்று சுவாமி வெளிவீதி சுற்றுவதை பார்த்துக் கும்பிட்டாவாம் “கந்தா!! உனக்கு இரு மனைவிமார், அதில் ஒருவரை எனக்கு மகளாகத் தந்துவிடு” என்று.ம், அக்குழந்தைக்கு உன் மனைவியின் பெயரையே வைப்பேன் என.

நான் பெண்குழந்தையாகப் பிறந்தபோது, எல்லோருமே ஆனந்தப்பட்டார்களாம். பாட்டி எண்ணியிருந்தாவாம், பெண்குழந்தை எனில் “தாரணி” எனப் பெயர் வைப்பதென்று.. எனவே அம்மாவின் நேர்த்திக்கடனையும் பாட்டியின் விருப்பத்தையும் ஏற்று, எனக்கு “வளதாரணி” எனப் பெயர் வைத்தார்கள்(வள்ளி + தாரணி). பாட்டி என்னைச் செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா, அதற்கேற்றபடி நானும் தாராமாதிரி நடப்பேனாம்.



பாட்டி ஒவ்வொரு கதையாகச் சொல்லச் சொல்ல நானும் ரசித்துக் கேட்பேன். அவ தன்னால் முடிந்தவரை என்னைப் பண்படுத்தி வளர்த்துவிட்டா. பாட்டி சொல்லுவா, பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரைஒழுங்கான பாதையில் வழிநடத்திக்கொண்டு வந்துவிட்டால், பின்னர் அவர்கள் குறுக்குப் பாதையில் செல்ல மாட்டார்கள். அதுபோல் உன்னை நான் நேர் வழியில் கொண்டுவந்துவிட்டேன், இனிமேல் நான் இல்லாதுபோனாலும், நீ நேர் பாதையில்தான் போவாய் என்பது எனக்குத் தெரியும் என்று.

ஆமாம், நான் பாட்டியை நினைத்து நினைத்தே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன் ”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?” எனக்கும் புரிகிறது, இருப்பினும், சிலபேரின் சிலநாள் பிரிவையே தாங்க முடியாத மனம், நிரந்தரப் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளும். ஒரு மாதத்துக்கு முன்பு, என்னோடு சிரித்து மகிழ்ந்த பாட்டி, இன்று பூமாலையுடன் சுவரில் படமாகத் தொங்கியபடி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார் எம்மைப் பார்த்து.

நானும் பாட்டியை உற்றுப் பார்க்கிறேன். என் மனதில் ஒரு புதுத்தென்பு வருகிறது. ஆம், நான் பாட்டியின் கனவை நனவாக்க வேண்டும். அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். என்னில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தைக் கண்ட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

நான் பழைய தாராவாக மாறவேண்டும் என்ற பிரார்த்தனையில் இருந்த அம்மா, என்னைக் கட்டித் தழுவுகிறார் ஆனந்தத்தில். நான் பாட்டியை மனதில் நினைத்தபடி புறப்படுகிறேன் பாடசாலையை நோக்கி.

இது என் கற்பனையில் உதித்த கதையே... முற்றுப்பெற்றது.

ஊசி இணைப்பு:
இப்பத்தான் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நேரம்... உடன்பிறப்புக்களைப் பிரிக்க உள்ளுக்குள்ளால சதி:) நடக்குது. அன்பு இலா அக்கா(ஜீனோவின் முறையில்), அன்பாக எனக்கு அனுப்பிய “நீ... கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்..” என ஒரு காட்சி...




ஆனாலும் பூஸாரும் பப்பியும் எப்பவும் இப்படித்தான்.... பூஷாரை உண்ணவிட்டு பப்பி.. பசியிருக்குமாம்....கிக்...கிக்...கிக்... என்னே பாசம்.

கண்படுத்திடாதீங்கோ பிளீஸ்!!!

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

34 comments :

  1. இதிலே வனதாரணி என்பது யார் பெயர் எண்டு ஜீனோக்கு கிஞ்சித்தும் விளங்கேல்லை அதிராக்கா!;) இந்தத் தம்பியின் மெட்டல் மண்டேல ஏறும் அளவுக்கு கொஞ்சம் விளக்கமா, விரிவா..விவரமா சொல்லுங்கோ..ஏனென்டால் ஜீனோ இன்னும் குழந்தைப்பிள்ளையல்லோ இந்த மாதிரி விஷயத்திலெல்லாம்? :D :)

    நம்மை பிரிக்கும் சதியில் எல்போர்டுடன் இலா அக்காவும் சேர்ந்துவிட்டாரோ?? என்னே காலத்தின் கோலம்?? எல்லோரும் இங்கே
    http://picasaweb.google.com/geno.Foo2k9/GenoMopsi?feat=directlink
    வந்து எங்கள் பாசப்பிணைப்பின் ஆதார போட்டோக்களைப் பாருங்கோ..இந்த வதந்தீ எல்லாம் பொய் என்று ஜீனோ இங்கே சொல்லிக்கொல்கிறது:)

    //பூஷாரை உண்ணவிட்டு பப்பி.. பசியிருக்குமாம்....கிக்...கிக்...கிக்... என்னே பாசம்.// கரீக்ட் அதிராக்கா!!
    உம் கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டும் அதிராக்கா..
    என் கண்ணில் பாவையன்றோ..அதிராக்கா..நீங்கள் அன்பான அக்காவன்றோ?
    சாப்பிடுங்கோ அக்கன்..சாப்பிடுங்கோ!!
    ஹும்..ஹும்...ஹும்!! ஜீனோ க்ரையிங்...ஹும்..ஹும்ம்..!!!

    ReplyDelete
  2. //பாட்டி என்னைச் செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா,//

    அதைதான் அதிரா அடிரா சே அதிரா என்று இப்போது புனைபெயரா வைத்து கொண்டீர்களா?

    ReplyDelete
  3. ஜீனோக்கு கண்ணாடி போடும் வயசு வந்திடுச்சோ! அதிராவை ஒரே நாளில் வனத்துக்கு அனுப்பிட்டீங்க! வளதாரணி யை வனதாரணி ஆக்கிட்டீங்களே

    //செல்லமாக “தாரா” தாரா” எனக் கூபிடுவா, அதற்கேற்றபடி நானும் தாராமாதிரி நடப்பேனாம்.//

    அதிரா எங்க ஊரில் "தாரா"ன்னு சொன்னா வாத்துன்னு அர்த்தம் ஹி ஹி

    ReplyDelete
  4. சூப்பர் அதிரா.. கடைசி ரெண்டு படமும் கூட உங்க விளக்கமும்.. ஹா ஹா.. நல்லாக் கொடுத்தீங்கோ...

    உங்க கதை எந்த வயசுல எழுதினது அதிரா? பத்து அல்லது பன்னெண்டு????? :)

    ஆனாலும், எனக்கு எங்க பாட்டி தாத்தா நியாபகம் வந்துடுச்சு அதிரா.. எனக்கும் ரொம்ப பிரியமானவங்க..

    ReplyDelete
  5. அன்பு சகோதரி கவிசிவா

    //அதிரா எங்க ஊரில் "தாரா"ன்னு சொன்னா வாத்துன்னு அர்த்தம் ஹி ஹி//

    இன்னும் சிரிச்சு முடிக்கல.....எங்க வீட்டுல நாங்க “டொணாட்ல்ட்” என்று சொல்லுவோம். சரி யாரவது முதலில் சொல்கிறார்களா என காத்துக்கொண்டு இருந்தேன்.

    ReplyDelete
  6. ஏனென்டால் ஜீனோ இன்னும் குழந்தைப்பிள்ளையல்லோ இந்த மாதிரி விஷயத்திலெல்லாம்? :D :)/// ஜீனோ அக்காக்குத் தெரியாததோ... நீங்க மட்டுமில்ல... எங்கட வட்டாரத்தில பவனிவருகிற எல்லோருமே “டை குழந்தைகள்” தானே...:) கடவுளே என்னால முடியேல்லையே..... அது அக்காதான் ஜீனோ.. வளதாரணி.. நொட் வன... அம்மம்மா முந்திக் கூப்பிடேக்கை நீங்களும் பக்கத்திலதானே இருந்தனீங்கள்..

    அழாதையுங்கோ.. ஜீனோ நான் மூக்கு முட்டச் சாப்பிடுறன் உங்களுக்காக.... ஆமாம் அந்த வரிசையில நிறையப்பேர் இணைவதாக எனக்கும் தகவல்கள் வருது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
    பாசங்களும் பந்தங்களும் “எவர்” பிரித்தாலும் பிரியாதது... அக்கா சாப்பிடுறன்.. சாப்பிடுறன்..

    மிக்க நன்றி ஜீனோ.

    ReplyDelete
  7. ஹைஷ் அண்ணன், இப்போ அந்த வரிசையில் நீங்களும்???:) .. எப்ப பார்த்தாலும் அடிக்கக் கலைக்கினமே...

    அதிரா என்பது புனைபெயரோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    மிகவும் நன்றி...

    ReplyDelete
  8. கவிசிவா, ஜீனோ பிறக்கும்போதே.. கோட் சூட் கண்ணாடியோடுதான் பிறந்தாராம்... அதுதான் இந்த தடுமாற்றம்.. ஜீனோவின் அல்பம் பார்த்தால் எல்லாம் தெரியுது:) நான் ஆடையைச் சொன்னேன்.

    அது தாரா எண்டால் வாத்துத்தான், ஆனால் எவலூஷனில பார்த்தால் அன்னம் தான் தாராவாக மாறியிருக்கு... கிக்..கிக்..கிக்... இப்போ புரியுதோ? தாராக்குள்ள அன்னம் இருக்கு.
    மிக்க நன்றி கவிசிவா.

    ReplyDelete
  9. சந்து... இதென்ன பழக்கம் வயசைப்பற்றியெல்லாம் பப்ளிக்கில் கதைக்கலாமோ பட் நீங்க சொன்னது 100 வீதமும் உண்மையே... பகுதி 1 இல் சொல்லியிருக்கிறேன், இக்கதை 2-3 வருடத்துக்கு முன் எழுதினேன் என... சோ இப்போ என் வயது... இது நமக்குள்ளே இருக்கட்டும்.. நிறையப்பெருக்கு வயிரெரிகிறதாம்...

    பப்பிப்பூனைப் படம் பார்த்து ரசித்திருக்கிறீங்க.. அப்போ என் ரசனை உங்களுக்குப் பிடித்திருக்கு.. மிக்க நன்றி.

    ஹைஷ் அண்ணன் இந்தாங்கோ டிஷ்யூ:) சிரிச்சத்தில கண்ணால தண்ணி வந்திருக்குமே...

    நாங்கள் தாராவை “மியாவ்” மியாவ்” என்றுதான் கூப்பிடுறனாங்கள்... கிக்...கிக்...கிக்...

    ReplyDelete
  10. கதை அருமை.. எனக்கும் இந்த பின்னூட்டங்களை பார்த்து சிரிக்கவே போதுமாயிருக்கிறது....

    ReplyDelete
  11. கதயை நான் இனிமேல் தான் கடைசி பக்கத்தை படிக்கனும். அதுக்குள் இங்கு கவி தாராவை பற்றி எழுதியதை படித்த போது எனக்கு சிரிப்பு தாங்க முடியல்லை, அதை விட ஹைஷ் நாங்க டொனால்ட் சொல்லுவோம் என்பதும் எனக்கு மேலும் சிரிப்பு தொடருகிறது, என்ன அதிரடி அதிரா உங்க பாட்டி நல்ல தாரா என்று சொல்லி தாரகை மந்திரம் ஓதிட்டாங்க. நல்ல பாட்டி எல்லாருக்கும் தான். அதில் நிங்க கொடுத்து வைத்தவங்க.

    ReplyDelete
  12. என்னப்பா அதிரா,
    அழகா கதையை சொல்லி போட்டு,அழகான பாட்டி படத்தையும் போட்டு,அட நம்ம அதிராவோட பாட்டி என்று ஆர்வத்தில் பெரிது படுத்துப்பார்க்க கிளிக் செய்து முடியாமல் கதையை தொடர்ந்து படித்து விட்டு கீழே பார்த்தால்...

    //இது என் கற்பனையில் உதித்த கதையே... முற்றுப்பெற்றது.//

    என்று கொட்டை எழுத்தில் முடித்துவிட்டீர்களே?
    கிக்..கிக்..கிக்..இது சிரிப்பல்ல.அழுகாச்சிதான் இந்த ஓசையில் வருகிறது.

    அதென்ன ஊசி இணைப்பு,ஆணி இணைப்பு,கடப்பாரை இணைப்பு ??இப்படி புதுசு புதுசாக வார்த்தைகள் வருகிறது.?

    அதிரா பதிவென்றால் ஒரு ஊசி..சேச்சே..மினி பதிவு போல் பின்னூட்டம் கொடுப்பதே இந்த ஸாதிகா அக்காவுக்கு வேலையா போச்சு என்று பற்களை கடிக்கிறீர்களா?அதிரா.ஊசியை வைத்து என்னை நீங்க குத்த வருவதற்குள் நான் ஓடிக்கறேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  13. உங்க கதை என்று நினைச்சுப் படிச்சுட்டு வந்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே!!

    நல்லா கத விடுறீங்க!!

    “வளதாரணி” - ஸ்வீட் நேம்!!

    ReplyDelete
  14. நன்றி இலா,
    உண்மைதான் பதிவைவிட பின்னூட்டங்கள்தான் சுவையாக இருக்கின்றன.. எல்லாம் சுவீஈஈஈட் ஆன பின்னூட்டங்கள்:).

    ReplyDelete
  15. நன்றி விஜி.. தாராவை பிடித்திருக்குத்தானே... நல்லாச் சிரியுங்கோ... சிரிப்பதற்காகவென்றாலும் இடையிடை வந்து போங்கோ.

    ReplyDelete
  16. ஸாதிகா அக்கா... ஏன் அதிராவைச் சந்தேகப்படுறீங்க?:), அது அதிராவின் பாட்டிதான்... நான் குட்டியாக மடியில இருக்கிறேன் வடிவாப்பாருங்கோ. ”பொய் என்றால் என் கையை மணந்து பாருங்கோ”.

    ஸாதிகா அக்கா, ஊசி, ஆணி, கடற்பாறையெல்லாம் இருக்கும்வரை... என் பின் இணைப்பும் இருக்குமாக்கும்:).

    அது யார் இலா?/ ஜீனோ? பழக்கிவிட்டது.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

    ஊசி எல்லாம் இல்ல .. என்னிடம் இருப்பது “ஈட்டி” ஒன்றுதான்.... பலமைல்கள் பாயும்:). மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  17. நன்றி ஹூசைனம்மா.. வாங்கோ. நான் உங்களை வேறு யாரோ என்றெல்லோ இதுவரை நினைத்திருந்தேன். என் கதைதானே இது... என்ன இப்படிச் சொல்றீங்கள்... என் பெயரெல்லோ சுவீட்டாகத்தான் இருக்கும்... கிக்...கிக்..கீஈஈஈஈஈ.

    ReplyDelete
  18. கடவுளே! எல்லாத்தையும் ஒண்டா வாசிக்க கண்ணால ஊத்துது. அதுவும் பப்பி ஆல்பம் பார்த்து அதீஸ் போட்ட கமன்ட். ;)))))))))))))

    ReplyDelete
  19. இமா.. கண்டுபிடிச்சிட்டீங்க நீங்களும்:):). ரிசூ வேணுமே?

    ReplyDelete
  20. உண்மையைத்தான் கற்பனை பண்ணி கதையாக வடித்து இருகிறீங்க,
    “நான் பாட்டியின் கனவை நனவாக்க வேண்டும். அறைக்குள் சென்று புத்தகங்களை எடுத்து அடுக்குகிறேன். என்னில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தைக் கண்ட அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.”
    இங்க தான் கொஞ்சம் உதைக்குது.

    ReplyDelete
  21. ஆசியா மிக்க நன்றி.... என்ன உதைக்குது? அது தாராவின் கதையாக்கும் கிக்...கிக்...கிக்...

    இமா ஒற்றைவரிப் பதில் போடக்கூடாதாக்கும்:). கர்*25

    ReplyDelete
  22. அட நம்புங்கப்பா!! இதில் வரும் சிங்கப்பூர் தாத்தா, சிங்கப்பூர் பாட்டி, அப்பா, அம்மா, வாத்து, தாரா எல்லா உருப்படிகளும் அதிராவின் கற்பனையே.
    வாணி(கால் முளைத்த வனி)

    ReplyDelete
  23. ஆ... நம்பமுடியேல்லையே... இது நம்மட க.வாணியோ?.. வெல்கம் வெல்கம்.... மிக்க நன்றி.

    ha haa! hahaha...haa!!! ;)/// தெய்வீகச் சிரிப்பையா உங்களுக்கு:).... கர் * 01

    ReplyDelete
  24. அதிரா பாட்டியின் கதை அருமை.மனதின் வலியை அழகாக சொன்னீர்கள்.

    ஒவ்வொன்னா படிச்சுட்டு வரேன்.எனக்கும் என் பாட்டி ஞாபகம் வந்திடுச்சு.ரெம்பவே மிஸ் பன்றேன்

    ReplyDelete
  25. வாங்கோ ரேணுகா... நல்வரவு. உங்களைப்பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருக்கு. நீங்களும் நானும் பாடிப் பாடி ரெயின் ஓடிய நாட்களை மறக்கவே முடியாது. மிக்க நன்றி.

    ReplyDelete
  26. நாங்க மட்டும் மறந்துருவோமா! ;) எங்களுக்காகவும் ஒரு ட்ரெய்ன் ஓட்டுவீங்கள் எண்டு நினைச்சன். ஹூம். எங்கட லக் அவ்வளவுதான். ;D

    //தெய்வீகச் சிரிப்பையா உங்களுக்கு:)//
    அடடா!!! இப்பதான் பாக்குறன். யார் பூஸ் இந்த 'ஐயா'??

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ இமா, பல ஆண்டுகளின் பின்பு இன்று பதில் போடுகிறேன்:). மிக்க நன்றி.

      Delete
  27. தோழி அதிரா...,பாட்டியின் நினைவுகளையும் படிச்சாச்சு...தாத்தா,பாட்டியின் செல்லமாக நாம் வாழ்ந்து வருவது ஒரு வித மகிழ்ச்சி அல்லவா...?
    நல்ல நடையில் எழுதுகிறீர்கள்.
    ரசித்து படித்தேன்.
    வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் பல... அதிரா...
    ஆங்காங்கே பூஸாரின் பிக்சர்ஸ் கண்னை கவர்கின்றன...
    அது மட்டுமா...?அதற்கேற்றார்போல் வரும் வாசகமும்...படித்து வாய் விட்டு சிரிக்கவும் சிலவை சிந்திக்கவுமே தோணுகிறது அதிரா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அப்சரா, இப்போ நீங்க புளொக்கை விட்டு காணாமலே போயிட்டீங்க:(.. மிக்க நன்றி.

      Delete
  28. நல்லா எழுதியிருக்கீங்க. சிறு வயதில் நல்லபாதையைக் காட்டிவிட்டால் வளர்ந்தபின் பாதை மாறாது. எனக்கு, "தொடரும்" போட்டு காத்திருந்து படிப்பதைவிட இப்படி மொத்தமா படிக்கும்போது சுலபமா படிக்கமுடியுது. கதைகள் (கேட்ட, அனுபவித்த) நிறைய எழுதுங்கள். வாழைத்தண்டு கறிலாம் எல்லாரும் பண்ணலாம். ரசிக்கும் கதை எழுதுவதுதான் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ... முன்பு நான் கொமெண்ட்ஸ் மொடரேஷன் போட்டிருக்கவில்லை, அதனால பழைய போஸ்ட்களுக்கு கொமெண்ட்ஸ் வந்தால் எனக்கு தெரியாமலே போய் விடும். இப்போ மொடரேஷன் போட்டமையால், எங்கு கொமெண்ட் போட்டாலும் கண்டு பிடிக்க முடியுது.

      இது முடிவுப் பகுதிதான், இதுக்கு முன் ஒரு பாகம் எங்கயோ இங்குதான் இருக்கு. எனக்கும் அதிகம் தொடரும் பிடிக்காது, ஓவரா அலட்டுவதும் பிடிக்காது.

      ஆனா இப்போ பெரும்பாலும் எங்கு பார்த்தாலும் கதை எழுதுவோர் அதிகம் இருப்பதனால், நான் எழுதுவதை நிறுத்தி விட்டேன். ஒரு கதை பாதியில் விட்டுவிட்டேன்.

      என் பக்கம் வந்து ரசிச்சு சிரிச்சு போவதுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன், அதனால கதை படிக்க எல்லோரும் விரும்புவதில்லை என விட்டிருந்தேன்.

      இப்போ உற்சாகம் தந்திட்டீங்க முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.
      உண்மைதான் சமையல் குறிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. மிக்க நன்றி.

      இன்னொன்று, என்பக்கம் முகப்பில்.. லேபல்கள் என இருக்கும்.. அதில் நேரமுள்ளபோது பாருங்கோ poosh radio எனும் லேபலில் சில குட்டிக் குட்டிக் கதைகள் எழுதியிருக்கிறேன்...

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.