நல்வரவு_()_


Thursday, 11 February 2010

இது!!! நீங்களும் நானு....ம் (2)

ஒற்றை ரோஜாவே...
எங்கே நீ எங்கே...
ஸ்நோ தாங்க முடியாமல்
தவிக்கிறாயோ?..





ஸ்நோவில் நடந்தபோது, இந்த ஒற்றை ரோஜா, தனியே, ஸ்நோ சுமையோடு இருப்பதைப் பார்த்தேன்... உடனே ஒரு “கிளிக்” செய்தேன்..
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

முந்தைய தொடர்க் கேள்விகளும் பதிலும்...


கேள்வி:
எதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும், என்பதற்காக முடியாத காரியங்களிலும் நம்பிக்கை வைப்பது சரியா?

பதில்:
அறிவு கலந்த நம்பிக்கைதான் ஆரோக்கியம். ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்டார்: “கடவுள் ஒரு பானைக்குள் ஒரு யானையை நுழைய வச்சார், என்று சொன்னால் அதை நீ நம்புவாயோ?"

"நம்புவேன் சேர்"!! என்றான் மாணவன்.

"எப்படி நீ நம்புவாய்?" என்றார் ஆசிரியர்.

"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இருந்திருக்கும்".. என்றான் மாணவன்.



கேள்வி:
காதல் நோய்க்கு மருந்தென்ன?

பதில்:
ஒஷோ சொன்ன ஒரு குட்டிக்கதை ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்.
இளைஞன் ஒருவன் அனுபவ முதிர்ச்சியடைந்த ஒரு பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் கேட்டான்: “நான் காதல் வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளேன், தங்களால் எனக்கு உதவ முடியுமா?"

பெரியவர் சிறிது நேரம் யோசித்தார், பிறகு கூறினார், "காதல் நோயைக் குணப்படுத்த ஒரே ஒரு மருந்துதான் உள்ளது, அதுதான் திருமணம். ஒரு திருமணம் அதைக் குணப்படுத்த முடியவில்லையென்றால், வேறு எதனாலும் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே நீ மணம் புரிந்துகொள். பின்னர் என்றுமே நீ காதலிக்க விரும்ப மாட்டாய்".



கேள்வி:
வயதானவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதுதான், அவர்கள் கோபப்படுவதற்குக் காரணமோ?

பதில்:
சிலர் விஷயத்தில் ஆம்!, சிலர் விஷயத்தில் இல்லை!!.

ஒரு தாத்தாவுக்கு நூறாவது பிறந்த நாள். அவருடைய பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். காலில் விழுந்து எழுந்ததும்:

“தாத்தா! ஆண்டவன் புண்ணியத்தில், அடுத்த வருஷமும் உங்கள் பிறந்த நாளில், உங்கள் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எமக்குக் கிடைக்க வேண்டும்” எனப் பணிவாகச் சொன்னார்கள்.

அதுக்கு அந்தத் தாத்தா என்ன சொன்னார் தெரியுமோ?

“கவலைப்படாதீங்கோ, நிட்சயமாக அது நடக்கும். ஏனென்றால், நீங்களெல்லாம் சின்னப்பிள்ளைகள்தானே... அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது” என்றார்.




கேள்வி:
பொய் சொல்வதும் ஒரு கலைதானே?

பதில்:
பின்னே என்னவாம்? இல்லாவிட்டால் மாட்டுத்தான்:).

தான் வேலை செய்யும் அலுவலகத்தில் விடுமுறை கேட்டார் ஒருத்தர். “சேர், என் தாத்தா அறிவுநினைவில்லாமல் கிடக்கிறாராம், ஒரு நாலு நாள் விடுமுறை வேணும்”

“அய்யோ பாவம் போயிட்டு வாங்க, அடடே எதுக்கு அழுகுகிறீங்க? உங்க தத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது”.

“நான் அழுவது தாத்தாவுக்காக அல்ல, இந்த அலுவலகத்துக்காக, கடமைதான் எனக்கு முக்கியம், செய்வதை திருந்தச் செய் என்று கீதையில் சொல்லியிருக்கு”!!

“அடடே!!! உங்களுக்குத் தத்துவமெல்லாம் தெரியுதே..., உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளணும் என எனக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை”?.

“கேளுங்க சேர்!! ஏதோ அடியேனுக்குத் தெரிந்ததைச் சொல்லித்தருகிறேன்”.
“மரணத்தின் பின்பு, மனிதனுக்கு வாழ்வு உண்டோ?”.

“உண்டுதான் என நினைக்கிறேன்”.

“நீங்களே சந்தேகப்படுறீங்க, எனக்குச் சந்தேகமே கிடையாது. மரணத்தின் பின் வாழ்வு உண்டு! உண்டு!! உண்டு!!!”.

“எப்படி உறுதியாகச் சொல்றீங்க?”.

“போனவாரம் உங்க பாட்டி செத்திட்டதா லீவு எடுத்திட்டுப் போனீங்களே!! ஞாபகம் இருக்கா? நீங்க போன பின்னாடி, அவங்களே உங்களைத் தேடி இங்கே வந்தாங்களே!”.


இக்கதையை ரைப் பண்ணும்போது, ஹைஷ் அண்ணன் தான், இந்த ஞானி... என நினைத்தேன்.. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை... சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்பட்டு ரைப்பண்ணி முடித்தேன்....



கேள்வி:
பொறுமை வேண்டும், பொறுத்தார் அரசாள்வார் என அடிக்கடி சொல்கிறார்களே. .. பொறுமையின் எல்லை எது?

பதில்:
ஒரு துறவியும் சீடனும் அமர்ந்திருந்தார்கள். சீடனுக்கு துறவியைப் பரிசோதித்துப் பார்க்க ஆசை வந்தது.

துறவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

உண்மையான அந்தத்துறவி மறு கன்னத்தையும் காட்டினார்.

சீடன், தன் பலம் அனைத்தையும் திரட்டி, மறு கன்னத்திலும் அறைந்தான். உடனே துறவி, அவனைப் பாய்ந்து பிடித்துப் புரட்டி எடுக்கத் தொடங்கிவிட்டார்..

அலறியபடி அவன் கேட்டான்: நீங்கள் என்ன செய்கிறீங்கள் குருவே? காலையில்தானே ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என உபதேசம் செய்தீர்கள் என்றான்.

துறவி சொன்னார்: "ஆம், ஆனால் எனக்கு மூன்றாவது கன்னம் இல்லையே! ஏசு, மறு கன்னத்தைக் காட்டு என்பதோடு நிறுத்திவிட்டார். அதுக்குப் பிறகு நான் விரும்புவதைச் செய்துகொள்ளலாம்".


------------------------- * * * * * * * * * * * * * * * -----------------------------

இலவச இணைப்பு:
அன்பு ஜலீலாக்கா அன்பாக அனுப்பிய Cat Washing Machine




”பழம் வேண்டுமெனில் பூவைப் பாதுகாக்க வேண்டும்”

............................................................

23 comments :

  1. Nice one athira!!! I like the washing machine kutty.

    ReplyDelete
  2. ஒற்றை ரோஜா அழகோ அழகு..!கேள்வி பதில் சிந்திக்க வைத்தது அதிரா!

    ReplyDelete
  3. ஒற்றை ரோஜா நல்ல ஷாட்..

    ஹா ஹா.. சீடரா யார நினைச்சீங்க அதிரா? :) ஜீனோ வா இருந்தா நல்லாருக்குமா? :)

    ReplyDelete
  4. அந்த போட்டோல பின்னாடி சின்னதா தியானம் பண்ணுவது பூஸாரா? :) ஃபன்னி போட்டோஸ்..

    ReplyDelete
  5. கர்...ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....கிர்..ர்ர்ர்ர்ர்ர்....//ஜீனோ வா இருந்தா நல்லாருக்குமா? :)// விபரீத கற்பனை எல்போர்டு..வவ்வவ்!!வ்வ்!!

    ஜீனோவும் அதிராக்காவும் எப்பவுமே:) பாசமலர்கள்..உங்கட நாரதர் வேலையெல்லாம் இங்கே பலிக்காது.

    ஒற்றை ரோஜா அழகு..கேள்வி பதில்கள் சிரித்து சிந்திக்க வைக்குது. (பட் ஜீனோ சிந்திக்காது, அது வேற விஷயம்,ஹி,ஹி!!)

    //”பழம் வேண்டுமெனில் பூவைப் பாதுகாக்க வேண்டும்”// இதிலே எழுத்துப் பிழையா அதிராக்கா?? பூவை ஆர் பூஸை? ;)

    ReplyDelete
  6. ஸாதிகா அக்கா, எனக்கும் அந்த ரோஜாவைப் பார்த்ததும் படம் எடுக்காமல் போக மனம் வரவில்லை, பொதுவாக வின்ரரில் பூக்கள் உதிர்ந்துவிடும், இது உதிராமல் இருந்திருக்கு, பாருங்கோ இலைகள்கூட இல்லை. மிகவும் நன்றி.உண்மைதான் இவை நகைச்சுவையோடுகூடிய சிந்திக்க வைக்கும் கதைகள்..

    ReplyDelete
  7. சந்தனா.. சீடரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஜீனோ வாணாம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கடிக்கும்.. வவ் என.

    அது பூஸ்தான்... //ஃபன்னி போட்டோஸ்./// funny தானே இது நல்லாவே மொழிபெயர்க்கிறீங்க ஹைஷ் அண்ணன்மாதிரி... :). நான் இதைப் பார்த்ததும் கேட்டேன் பன்னி என்றால் பன்றியாக்கும் என்று ஹா... ஹா... ஹா...நன்றி சந்து.

    ஜீனோ பிளீஸ்.. வெயிட்... பதில் தருகிறேன்... அக்காக்கு இப்போ அவசரம்....

    ReplyDelete
  8. ஜீனோ!!!
    ///ஜீனோவும் அதிராக்காவும் எப்பவுமே:) பாசமலர்கள்..உங்கட நாரதர் வேலையெல்லாம் இங்கே பலிக்காது./// .... புல்லரிக்குது ஜீனோ.... ஆமாம் பலிக்கவே பலிக்காது... நாங்கதான் உடன்பிறப்பாச்சே...

    (பட் ஜீனோ சிந்திக்காது, அது வேற விஷயம்,ஹி,ஹி!!)/// ஏன் ஜீனோக்கு மெமரியில ஏதும் ”அப்படி” இருக்குமோ? ஐ மீன் பிரச்சனையோ எனக்கேட்டேன்...

    இதிலே எழுத்துப் பிழையா அதிராக்கா?? பூவை ஆர் பூஸை? ;)// ஹா... ஹா.. ஹா.. ஜீனோக்கு கிட்னி நல்லா வேர்க் பண்ணுதுபோல... ரண்டும் ஒன்றுதான் ஜீனோ...

    மிக்க நன்றி வரவுக்கு... மீண்டும் பறையலாம்:).

    ReplyDelete
  9. பூனையார் ரொம்ப அழகா போஸ் கொடுக்கிறார்,

    அந்த பனியிலும் ஒத்த ரோசா அழகோ அழகு

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஜலீலாக்கா? ஆமாம்.. எந்தப் பூனையாரைச் சொல்கிறீங்கள்?:). வோஷிங் மெஷினில் கழுவியவரையோ?:).

    ReplyDelete
  11. ஸ்நோ சுமைதாங்கும் ஒற்றை ரோஜா!

    கவிஞர்கள் மலரையும் பெண்ணையும் ஒன்றென வர்ணித்தமையாலோ என்னவோ பாவம் இந்த ரோஜாவும் சுமைதாங்குகிறதோ?......
    மனதில் பதிகின்ற காட்சி! (படம்)

    சேமித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அரிய படம். மிக்க நன்றி அதிரா!

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா....
    என்ற பாடலைப்போல இதயத்தில் எத்தனை கவலைகள் சோகங்கள் வந்திட்டாலும் ஒருமுறை ’என் பக்கம்’ என்னும் உங்கள் பக்கத்தில் வந்திட்டால் மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்கள்.
    அத்தனையையும் மறக்க வைக்கிறீர்கள்.
    முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம்.

    //இக்கதையை ரைப் பண்ணும்போது, ஹைஷ் அண்ணன் தான், இந்த ஞானி... என நினைத்தேன்.. //

    உண்மைதான் அதிரா! மொக்கை கேள்விகள் கேட்டு அவர் பொறுமையை சோதிக்கும்போது கூடுவிட்டு கூடுபாய்பவராக அவர் இருந்தால் இப்படிதான் என்னைப்போன்றோரை பிடித்துப் புரட்டி எடுக்கக்கூடுமென நான் நினைத்துச் சிரிக்கின்றேன்.

    பூவும் பூஸ்குட்டிகளும்கூட நன்றாக இருக்கிறது.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  12. //"அந்தப் பானை, அந்த யானையை விடப் பெரிதாக இருந்திருக்கும்".. என்றான் மாணவன்.// என்ன ஒரு திறந்த மனம் (Open Mind :)

    //அந்த போட்டோல பின்னாடி சின்னதா தியானம் பண்ணுவது பூஸாரா? :) ஃபன்னி போட்டோஸ்.// உண்மைதான் (அது பூஸேதான்)

    இதோ வரேன் எங்கையா? கூடுவிட்டு கூடு பாஞ்சுதான்...

    ReplyDelete
  13. இளமதி..//கவிஞர்கள் மலரையும் பெண்ணையும் ஒன்றென வர்ணித்தமையாலோ என்னவோ பாவம் இந்த ரோஜாவும் சுமைதாங்குகிறதோ?...... /// அழகாகச் சிந்திக்கிறீங்கள்... ஏன் ஆண்கள் சுமைதாங்குவதில்லையோ?:).

    முகத்துதி என நினைக்கவேண்டாம். அவ்வளவு திறமை இருக்கு உங்களிடம்/// மிக்க நன்றி இளமதி... ஆனாலும் கொஞ்சம் கீழே பாருங்கோ... புகைப்போகுது இல்ல?:)

    கூடுவிட்டு கூடுபாய்பவராக அவர் இருந்தால் இப்படிதான் என்னைப்போன்றோரை பிடித்துப் புரட்டி எடுக்கக்கூடுமென நான் நினைத்துச் சிரிக்கின்றேன்/// இண்டைக்குத்தான் கரெக்ட்டாச் சிந்திக்கிறீங்கள்:)... கூடுவிட்டுக் கூடு பாய்வதை.. கண்டுபிடிக்கத்தான் அவர் தலைமறைவுபோல தெரியுது, எதுக்கும் ஜாக்கிரதையாக கதவைப்பூட்டிக்கொண்டிருங்கோ:). மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  14. ஹைஷ் அண்ணன்..//என்ன ஒரு திறந்த மனம் (Open Mind :)// நான் திறந்த புத்தகம் என நினைத்தேன்... மனம் என சொல்கிறீங்கள்:).மிக்க நன்றி.

    உண்மைதான் (அது பூஸேதான்)/// அப்போ நீங்கள் ஞானியேதான்... முறைக்கப்படாது சொல்லிட்டேன்..

    இதோ வரேன் எங்கையா? கூடுவிட்டு கூடு பாஞ்சுதான்.../// ஆ..... அந்த வித்தையும் கற்று முடிஞ்சுதோ?:) அதிரா எஸ்கேஏஏஏஏஏஏஏஏப். காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
  15. ஒற்றை ரோஜா அழகு! தலையை குனிந்து கொண்டது தன்னை விட அழகு பூசாரைக் கண்டதும் :-)

    ReplyDelete
  16. கவிசிவா //தலையை குனிந்து கொண்டது தன்னை விட அழகு பூசாரைக் கண்டதும் :-)/// இது நல்ல அழகான கவிவரிகளாக இருக்கே..

    மிகவும் நன்றி.. வருகைக்கு.

    ReplyDelete
  17. ரோஜாவை கிளிக்கியது மட்டுமல்லாமல் கவிதையும் அருமை.முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல நீங்க ஒரு போர்வையை ரோஜாவிற்கு கொடுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  18. யாருப்பா அது, திரும்ப கடையெழு வள்ளல்களை நினைவு படுத்துறது!!

    முழுக்க வாசிச்சு முடிக்க நேரம் போதேல்ல அதிரா. ஆனபடியால் கடைசிப் பின்னூட்டத்தை மட்டும் வாசிச்சுப் பின்னூட்டம் போடுறன். ;)

    ReplyDelete
  19. வாங்கோ ஆசியா.. நல்வரவு. மிக்க நன்றி. பட்டெனப் படம் எடுத்திட்டேன். இப்போ நினைக்க கன ஐடியாப் பண்ணியிருக்கலாம் எனக் கவலையாக வருது... இமா டிஷ்யூ பிளீஸ்!!!

    ReplyDelete
  20. இமா, அப்போ அவர்களை மறந்தா இருந்தீங்க? நான் வள்ளலைச் சொன்னேன்...

    பின்னூட்டத்துக்குப் பின்னூட்டமா...? பதிவுக்குக் குடுங்கோ இமா... நிறையச் செலவழிச்சு படப்பூசை எல்லாம் பண்ணி பதிவு போட்டிருக்கிறேன்.. அதுபற்றிக் கதைக்காமல்..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நன்றி இமா.

    ReplyDelete
  21. மாணவனின் புத்திசாலிதனம், தாத்தாவின் புத்திசாலிதனம்... சூப்பர்

    ReplyDelete
  22. . சிரித்து சிரித்து.. கண்ணால் நீர் வடிய... கஸ்டப்பட்டு ரைப்பண்ணி முடித்தேன்....
    நானுந்தான்.....

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.