நல்வரவு_()_


Saturday, 1 December 2012

அவ...காடோ?:)

அவ்வ்வ்வ்வ்வ்வ் புளொக்குக்கு இடைவெளி விட்டதால தலைப்பு மாறியிருக்கலாம்:).. ஆனால் என் சமையல் மாறாது:).... இது [AVOCADO] அவகாடோவில(தமிழ் சரிதானே?:)) செய்த சான்விச்... நன்றாகவே இருந்துது...
உஸ்ஸ்ஸ் ரெசிப்பி போட்டாலும் போட்டதுதான்ன்..
எல்லோரும் கியூவில வருகினம் அவகாடோ வாங்க:)
கனிந்த அவகாடோ பழம், கரை நீக்கிய bread  துண்டுகள், ஒரு துளி உப்பு, இரு துளி பெப்பர் தூள்.(துளி என்பது இரு விரல்களால் எடுத்துப் போடும் அளவு:))... அவ்வ்வ்வ் மறந்திட்டேன்ன் அத்தோடு ..பட்டர்.

பழத்தை மசித்து, உப்பும் மிளகும் சேர்த்து, பிரெட்டுக்கு பட்டரைப் பூசி, இதனை மேலே பூசிக்கொள்ளுங்கள்:).. அவ்ளோதேன்ன்.. ச்ச்சோஓஓஓஒ சிம்பிளா இல்ல?:))..
 விரும்பிய வடிவத்தில் கட் பண்ணி எடுங்கள்... இது பார்ட்டிகளின்போது செய்து வைக்க உகந்தது.
ஊசி இணைப்பு:)
அவகாடோ பழத்தில் கொழுப்பிருக்கு என்பினம், ஆனா அது நல்ல கொழுப்பாமே.. உடலுக்கு நல்லதாமே...

குட்டி இணைப்பு:)
என்னடா இது இப்போ அதிராவும் தனிப்பதிவா சமையல் போடத்தொடங்கிட்டாவே எனத்தானே யோசிக்கிறீங்க?:)) இதுக்கு ஒரு விடை விரைவில (இந்த வருடம் முடிய முன்) தந்திடுவன்... இது ஜல் அக்காவின் போட்டியில கலக்குவதற்காக போடுகிறேன்:).... பதிவில் இம்முறை ஏதுமில்லையே என ஓசிச்சிடாதீங்க... விரைவில் வழமைக்குத் திரும்பிடலாம்:)..

ஊசி ரிப்ஸ்:)
வெங்காயம் வதக்கும்போது, சிறிது உப்பு சேர்த்திட்டால் விரைவில் வதங்கிடும். அதுபோல்... இஞ்சி, கார்லிக் பேஸ்ட் போட்டு வதக்கும்போதும் உப்பு சேர்த்திட்டால்ல்.. பாத்திரத்தில் ஒட்டாமல் வதங்கும்... தயாரித்து வழங்கியவர்.:அதிராமியாவ்:).


======================================================
அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்துங்கள், முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்..
......இதைச் சொன்னவர் ஒரு “பெரியவர்”..
======================================================

70 comments :

  1. அச்சச்சோ..ஓ..:)

    எல்லாமே சூப்பர்....:))

    நல்ல அழகான படங்கள், பழங்களோடு அசத்துறீங்கள். அருமை....;)

    ReplyDelete
  2. பழங்களை பூஸார் காவல் காக்கிறாரோ..;) பாலுக்குத்தான் காவல்..இங்கை பழத்துக்கும்ம்..:)

    அவகாடோ எனக்கும் விருப்பமான பழம்தான். மில்க்‌ஷேக் செய்து குடிப்பன். அலாதியா இருக்கும்...:)

    இதுக்கே பட்டர்ஃப்ருட் எண்டு பெயர். அப்ப எதுக்கு மேலதிகமா பிரெட் துண்டுக்கு பட்டர்ர்ர்ர்ர்ர்... கொழுப்புக் கூடிடும்ம்ம்ம்...:)))

    ReplyDelete
  3. mouthwatering healthy sandwiches ,shall come again and read da postavocados are very good for health

    ReplyDelete
  4. vattam sathuram rectangle ellam therigirathu tamil font thavira.karrrr

    ReplyDelete
  5. phonileye comment potten .ella sandwichum enakke parcel.

    ReplyDelete
  6. ச்ச்சோஓஓஓஒ சிம்பிள் ரெசிபிக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. ஜல் அக்காவின் போட்டியில கலக்குவதற்காக போடுகிறேன்://

    வெற்றிபெற வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. æĕćðáàêçċūšßřœůųýŵťŕœßŝŝşšŭøñńņňòķĥģöõōŏńñłŀĺħìîīīññġąæëçà

    ReplyDelete
  10. //அழகாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்... முடிந்தால் வாழ்க்கையை அழகுபடுத்துங்கள், முடியாவிட்டால் அதை அசிங்கப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்..//

    ;))))) அய்கோ அய்கு ! ;)))))

    ReplyDelete
  11. ஆ.. யங்மூன்.. வாங்கோ வாங்கோ.. இம்முறை சான்விச் உங்களுக்கே...

    ஓ இலங்கையிலும் பட்ட ஃபுரூட் எனத்தானே பெயர்.. எங்கள் வீட்டில் எப்பவும் ஒரு சேவண்ட் இருப்பது வழக்கம்.. அவர்கள் பெரும்பாலும் மலைநாட்டைச் சேர்ந்தவர்கள், அப்போ வீட்டுக்குப் போய் வரும்போது இப்பழம் கொண்டு வருவார்கள்.. ச்சாப்பிட்டிருக்கிறேன்ன்.. அதை அவர் கொக்கோப்பழம் எனச் சொன்னதாக நினைவெனக்கு.. ஆனா அது இதுதான்..

    இந்தக் கொழுப்பு ஒண்ணும் ம்ம்ம் பண்ணாதாமே.. மியாவும் நன்றி யங்மூன்ன்..

    ReplyDelete
  12. Nice sandwich Athira..but never had this much avocado! :)

    Had a teeny tiny piece in my sandwich, some guacamole in chipotle veggie bowl..that's it!

    Tram is very pleasing to eyes..Ensoi!

    ReplyDelete
  13. //ஹையோ இதன் அழகைப் பருங்கோ.. இது பரிஸில:)) ஓடும் ட்ராம் அல்ல:)) இது எங்கட பிரித்தானியாவில ஓடுது:).. நானே என் கமெராவில படம் புடிச்சேன்:)).. எங்கேயும் களவெடுக்கேல்லை இதை:).//

    நம்புகிறோம் அதிரா.

    //சரி அதை விடுங்கோ..//

    திஸ் ஈஸ் டூஊஊஊ மச்சூஊஊஊ

    //பாருங்கோ புல்லுக்குள் ட்ராம் போவது என்னா சூப்பரா இருக்கு.. //

    ஆமாம். சூப்பராக்கீதூஊஊஊஊ

    //ஏறியிருக்கோணும்போல வருதே...//

    ஆம். அதே அதே, அதிரபதே !

    ReplyDelete
  14. அவ ....... காடோ? ;)

    தலைப்பைப்பார்தததும் பயந்தே போனேன்.

    பிறகு தான் தெரிந்ததூஊஊஊ

    அவளோட காடு இல்லை.

    அவகாடோ என்ற பழத்தில் செய்த சான்விச் சுன்னு.

    >>>>>>>

    ReplyDelete
  15. athira said... 11
    //ஆ.. யங்மூன்.. வாங்கோ வாங்கோ.. இம்முறை சான்விச் உங்களுக்கே... //

    பாவம் ..... நல்லா மாட்டினாங்கோ !

    ReplyDelete
  16. //உஸ்ஸ்ஸ் ரெசிப்பி போட்டாலும் போட்டதுதான்ன்..

    எல்லோரும் கியூவில வருகினம் அவகாடோ வாங்க:)//

    ஆஹா! ந்ல்ல்தொரு நியாயமான எதிர்பார்ப்பு தான்.

    //ஒரு துளி உப்பு, இரு துளி பெப்பர் தூள்.

    (துளி என்பது இரு விரல்களால் எடுத்துப் போடும் அளவு:))... //

    இருவிரல்களின் நுனி பாகமும் இணைந்து எடுக்கும் ஓர் சிட்டிகை என்று விபரமாச்சொல்லுங்கோ.

    உப்பை அள்ளி நிறையப் போட்டுடப்போறாங்கோ.

    ReplyDelete
  17. பதிவு சிறிய்தானாலும் சிறப்பாக இருப்பது போலத்தெரிகிறதூஊஊஊ.

    ஏனெனில் சான்விச் பற்றியது.
    பழத்தினால் செய்யப்பட்டுள்ளது.
    பட்டர் கலந்துள்ளது
    கொழுப்பு அதிகம் கலந்துள்ளதூஊஊஊ

    கொழுப்பெடுத்த பதிவு என்றாலும் நல்ல கொழுப்புன்னு அதிராவே சொல்லிட்டாங்க.

    முதல் முதலாக சாப்பிடப்போகும் நபர் தான் அது நல்ல கொழுப்பா கெட்ட கொழுப்பான்னு லாப் டெஸ்ட் செய்து பார்த்துச்சொல்லணும்.

    நமக்கு எதுக்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்.
    எஸ்கேப்ப்ப்ப்ப்....... ;)

    ReplyDelete
  18. எனக்கும் ஆவகாடோ சான்விச் விருப்பம். ஆனால்... பட்டர், மாஜரின் எல்லாம் பூசுறேல்ல. தனி ஆவகாடோ தரும் பட்டர் சுவையே எனக்குப் போதும்.

    அதீஸ்.. சான்விச் என்று இல்லாமல் பாதி ஆவகாடோவில் உப்பு மிளகு தூவி கரண்டியால எடுத்து சாப்பிட்டுப் பாருங்கோ. யம்.. ;P

    ReplyDelete
  19. //கொக்கோப்பழம் // வேற மாதிரி இருக்கும் அதீஸ். இது.. அளிபேர - யானைக்கொய்யா. அதனால்... கொய்யாப்பழம் என்று சொல்லி இருப்பா பொல. ;D

    ReplyDelete
  20. Ahhh Anju.. welcome!!.. welcome!!!

    Please.. first repair your pc or buy one immediately:))) okay okay don't karrrrrrrrrrr:))..

    Did u see the tram?..

    Thank you Anju:).

    ReplyDelete
  21. வணக்கம் அதிரா.பூஸாருக்கும் ஒரு வணக்கம்.

    அவகாடோ ஊரில பால்.சீனியோட கிரைண்டரில அடிச்சுக் குடிச்சுத்தான் தெரியும்.இங்க வந்து சலாட்,சாண்ட்விச்செல்லாம் சாப்பிட்டிருக்கிறன்.பராவால்ல. பிடிச்சிருக்கு.ஆனாலும் சீனி பாலோட சேரும் சுவை....இப்பவும் இருந்திட்டு வெயில் காலத்தில அவகாடோ சைக்தா !

    ReplyDelete
  22. அந்தப் படம்...அதுதான் அந்த ட்ராம் படம் முகப்புத்தகத்தில கிடந்திச்சே....’யார்டா புல்லுக்க பஸ் ஓட்டுறானெண்டு’ ஆரோ திட்டிக்கூட இருந்திச்சினம்.....யப்பா மாட்டிவிட்டாச்சு !

    ReplyDelete
  23. அவோக்கா :)) அலிக்கடபேர என்பார்கள் இதை சகோதரமொழியில் எனக்கும் அதிகம் பிடிக்கும் பழம் அதிரா:))

    ReplyDelete
  24. சன்விச் சாப்பிட்டது இல்லை ஆனால் அவோக்கா லக்ஸ்பிறே பால்மாவுடன் கலந்து கொஞ்சம் சீனியும் ஐஸ்கட்டியும் சேர்த்து குழைத்தால் இனிமையாக சுவை தரும் ஊரில் இருக்கும் போது அதிகம் சாப்பிடுவேன்:)) அது எல்லாம் ஒரு காலம் இப்ப சமையல் செய்கின்றேன் அவோக்காவில் :))

    ReplyDelete
  25. பெரியவர் சொன்ன தத்துவம் மிகவும் அருமை அதிரா! மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  26. அதிரா இந்த அவகோடா மும்பையில் கிடைக்குமோ இப்ப சிங்கப்பூரில் இருக்கேன் இங்க என்ன பேர் சொல்லி கேக்க முஸ்தாபா மாலில் கிடைக்காத பொருளே இல்லேன்னு சொல்ராங்கோ தேடிபார்க்கனும்

    ReplyDelete
  27. _()_. காலை மலர்ந்தது நல்ல காலை மலர்ந்தது.....:)

    ReplyDelete
  28. நேற்று வந்திட்டு ஓடீட்டன். சான்விச்.. ம்...யமி...;)

    கைவசம் அவகாடோ இருந்திச்சா செய்து சாப்பிட்டேன்ன்..

    பட்டர் பூசாமலே இது தனியாக பூசி....ஹாஆ... நான் வீட்டிலை தோசைப்பொடி எப்பவும் வைச்சிருப்பேன். நல்ல காரப்பொடி....நான் செமயாய் காரம் சாப்பிடுவேன்...:)
    அதை கலந்து பூசினேன். அதோடு நல்ல்ல ஸ்ரோங்கா ப்ளாக் ரீ வித் ஹொனி...:)
    ரேஸ்ட்...ஸ்..ஸ்...சொல்லி விளங்காதூ.....:)

    ரொம்ம்ம்ப நன்றி அதிரா... இனி இதுதான் ..எனக்கு.....;)

    ReplyDelete
  29. ஊஊஊசிக்குறிப்பு....பெரியவர் கூற்று எல்லாமே சூப்பர்ர்ர்ர்..:)

    நானும் அழகா இருக்க முயற்சி பண்றேன்.. அதுக்காக எந்த ப்யூட்டிபாலருக்கு போனாலும் இப்ப நாங்க ஃபிறீ இல்ல அப்புறம் வாங்கோன்றாங்களேஏஏஏஏ....:)

    அதீஸ் நீங்க எங்க போறனீங்க...;)

    ReplyDelete
  30. அஞ்சூஊஊ... அஞ்சு இல்லாம எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கூ....:(

    அஞ்சு எனக்கும் நிறைய டவுட்டு டவுட்டா இருக்கு. எப்ப வருவீங்க?????....:)

    ReplyDelete
  31. அதிரா! நான் ச்சும்மா சொன்னேன். அவகாடோவின் கொழுப்பு உடலுக்கு நல்லதுதான் செய்யும். எக்ஸ்ட்ரா பட்டரை சொன்னேன். ஆனா அதுவும் பூசாட்டி டேஸ்ட் குறைவுதான்..

    // பாவம் ..... நல்லா மாட்டினாங்கோ !//

    இங்கின ஒருத்தருக்கு இந்த சான்விச் டேஸ்ட் தெரியாம பேசுறார்...:)))

    எதுக்கு மாட்டீஈஈ கர்ர்ர்ர்ர்ர்ர்......:)
    பாவம்..புரிய வையுங்கோ அதிரா..:)

    ReplyDelete
  32. //அதீஸ்.. சான்விச் என்று இல்லாமல் பாதி ஆவகாடோவில் உப்பு மிளகு தூவி கரண்டியால எடுத்து சாப்பிட்டுப் பாருங்கோ. யம்.. ;P//

    இமா....ஏன் பாதி அவகாடோவை மட்டும் அதிரா அப்பிடிச் சாப்பிடோணும்....மீதிப்பாதி...உங்களுக்கோ....ஹா..ஹா..ஹா..:)

    ReplyDelete
  33. ரொம்ப அருமையான ஈசியான, ஹெல்தியான குறிப்பு அதிரா, என் ஈவண்டுக்க்காக பூஸாரும் ஒரு குறிப்பு செய்தது ரொம்ப ரொம்ப ஜந்தோஷம்

    இன்னும் நிறைய கலக்கோனோம்,

    அப்படியே எல்லோரும் அங்கு இனைத்துள்ள்ளது போல் இந்த குறிப்பை இணைத்து விடுங்கள்,

    ReplyDelete
  34. வாங்கோ ராஜேஷ்வரி அக்கா வாங்கோ..

    சிம்பிள் ரெசிப்பி சூப்ப்ரோ? ஹா..ஹா..ஹா.. எல்லோரும் கலைக்கப்பொகினம் என்னை:)).. எனக்கும் டக்குப் பக்கெனச் செய்யும் குறிப்புக்கள்தான் பிடிக்கும். சரி உதை விடுங்கோ..

    நீங்களே சொல்லிட்டீங்கள்..:)) இம்முறை பரிசு எனக்கே:)).. ஆனா பரிசை கப்பலில் போடுவாவோ அல்லது அதிக காசுகட்டி ஸ்பெஷல் டெலிவரில அனுப்புவாவோ இல்ல ஜல் அக்காவே கொண்டு வந்து தருவாவோ.. இல்ல்ல நான் தான் குடும்ப சகிதம் போய் எடுத்து வரவேண்டி வருமோ எண்டெல்லாம் ஓசிக்கிறன்:))..

    மியாவும் நன்றி ராஜேஸ்வரி அக்கா.

    ReplyDelete
  35. திண்டுக்கல் தனபாலன் said... 8
    அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    வாங்கோ வாங்கோ..
    ஒரு குறிப்புத்தானே போட்டிருக்கிறேன்:)) ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.


    ReplyDelete
  36. angelin said... 9
    æĕćðáàêçċūšßřœůųýŵťŕœßŝŝşšŭøñńņňòķĥģöõōŏńñłŀĺħìîīīññġąæëçà

    ஹையையோஒ.. அஞ்சுவுக்கு என்னமோ ஆச்ச்சுது போல.. ஏதோ வைரஸ் எண்டவ.. அஞ்சுவைக் கடிச்சிட்டுதோ?:)) சிவபெருமானே நேக்குக் கையும் ஓடல்ல.. காலும் அசையேல்லை...

    மசமசவெனப் பார்த்துக் கொண்டிருக்காமல் பயர் எஞ்சினுக்கு.. ஹையோ பழக்க தோஷத்தில வந்திட்டுது:))... எமேஜென்ஷிக்கு அடியுங்கோவன் ஆராவது:))


    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன் said... 10

    ;))))) அய்கோ அய்கு ! ;)))))

    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. அச்சச்சோ.. தீபாவளி இனிப்பெல்லாம் ஓவராச் சப்பிட்டு கோபு அண்ணனுக்கு என்னமோ ஆச்சூஊஊஊஉ:).. கொன்ன தட்டுறார்ர்:)).. ஆராவது அம்பூலன்ஸ்க்கு அடியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

    ReplyDelete
  38. வாங்கோ மகி வாங்கோ.. இங்கிலீஷில கொம்ண்ட் போட்டமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))) அஞ்சுவுக்கு எச்சூஸ்:) உண்டு.. ஏனெனில் அவவுக்கு கணனியை எலி கடிச்சிடிட்டு:))))... நீங்க கட்டிலை விட்டு எழும்பி கொமெண்ட் போட அலுப்பிலதானே.. ஐ பாட்டால கொமெண்ட் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    சரி அதை விடுங்கோ... என் வாழ்க்கையிலும் இப்படி சான்விச் செய்தது இதுவே முதல் முறை, ரீவியில் இங்கிலீசு சனலில் செய்து காட்டினவையாக்கும்:))..

    எனக்கு இந்த அவகாடோ ரொம்ப பிடிக்கும் ஏனெனில் கேர்ள் எல்லோ?:)) பெயரில “அவ” வருதே:))..

    வாங்கி வந்து ஆப்புடுவேன் சும்மா:))..

    மியாவும் நன்றி மகி.


    ReplyDelete
  39. Healthy sandwich. I eat with sugar only. Train/tramp looks very nice.

    ReplyDelete
  40. miyaav problem is with wireless router.pc sariyaanalum naan romba bisi ....queen maaligailai assitant cook....naanthen.antha pakkam vaanga udumbu soup tharren.haaaahohee

    ReplyDelete
  41. நச்சுன்னு சின்னதா நல்ல ஒரு குறிப்பு அதிரா. அவகோடா வீட்டுக்கு வந்தா பால்,சுகர் சேர்த்துதான் சாப்பிவார்கள். உங்களோடது வித்தியாசமாக ஈசியாக இருக்கு.

    ReplyDelete
  42. போட்டியில் வெற்றி பெறவாழ்த்துக்கள்.
    ஊசி இணைப்பில் சொல்லிட்டீங்க. இனி நான் சாப்பிடவேண்டியதுதான்.

    ReplyDelete
  43. ////நீங்க கட்டிலை விட்டு எழும்பி கொமெண்ட் போட அலுப்பிலதானே.. ஐ பாட்டால கொமெண்ட் போட்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..///// don't break the secrets in public Miyav! Come on, it's week end! :)

    ReplyDelete
  44. உங்க இடத்திலும் ஸ்னோவா அதிராஆஆ

    ReplyDelete
  45. ஓம் அம்முலூ.... ஒரே இரவில் கொட்டிப் போட்டுது.. எல்லோருக்கும் பதில் தரோணும்.. விரைவில் வாறேன்ன்ன்ன்.. மன்னிச்சுக்கோங்கோ:)

    ReplyDelete
  46. படங்களுடனான பகிர்வும் கொடுத்த கமெண்ஸ்களும் சிறப்பு.

    ReplyDelete
  47. வை.கோபாலகிருஷ்ணன் said... 13
    //ஹையோ இதன் அழகைப் பருங்கோ.. இது பரிஸில:)) ஓடும் ட்ராம் அல்ல:)) இது எங்கட பிரித்தானியாவில ஓடுது:).. நானே என் கமெராவில படம் புடிச்சேன்:)).. எங்கேயும் களவெடுக்கேல்லை இதை:).//

    நம்புகிறோம் அதிரா.
    நம்பாட்டில் வெளியேற விடமாட்டனெல்லோ:))நம்பியே ஆகணும் வேறு வழியில்லை:)

    வை.கோபாலகிருஷ்ணன் said... 15
    athira said... 11
    //ஆ.. யங்மூன்.. வாங்கோ வாங்கோ.. இம்முறை சான்விச் உங்களுக்கே... //

    பாவம் ..... நல்லா மாட்டினாங்கோ !

    ஹா..ஹா..ஹா.. கோபு அண்ணன்... நாளைக்கே மார்கட் போகும்போது ஒண்ணே ஒண்ணு வாங்கியாந்து செய்து சாப்பிட்டுப் பாருங்கோ.. ஆன்ரியே அசந்திடுவா சுவையில...

    இருவிரல்களின் நுனி பாகமும் இணைந்து எடுக்கும் ஓர் சிட்டிகை என்று விபரமாச்சொல்லுங்கோ.

    உப்பை அள்ளி நிறையப் போட்டுடப்போறாங்கோ.
    ஆஆஆஆஆ சிட்டிகை என்பது இதுதானோ? எனக்கது தெரியாமல் போச்சே... நான் துளி என எழுதியதைப் பார்த்து, தண்ணியில் கரைத்து விட்டிடப்போகினமோ என ஓசிச்சேன்...

    ReplyDelete
  48. வை.கோபாலகிருஷ்ணன் said... 17
    பதிவு சிறிய்தானாலும் சிறப்பாக இருப்பது போலத்தெரிகிறதூஊஊஊ.

    மியாவும் நன்றி கோபு அண்ணன்.. கொழுப்பில இருவகை இருக்கெல்லோ.. ஒன்று கெட்டதாம் இன்னொன்று நல்லதாம்.. சொல்லுறாங்கோ.. பழங்கள், காய்கறிகளில் இருப்பது நல்லதாம்.. உங்களுக்குத் தெரியாததோ?..

    வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் மியாவும் நன்றி கோபு அண்ணன்.

    ReplyDelete
  49. இமா said... 18
    அதீஸ்.. சான்விச் என்று இல்லாமல் பாதி ஆவகாடோவில் உப்பு மிளகு தூவி கரண்டியால எடுத்து சாப்பிட்டுப் பாருங்கோ. யம்.. ;Pவாங்கோ இமா வாங்கோ.. நான் எப்பவும் சீனி போட்டுத்தான் சாப்பிடுவேன் அதுதான் பிடிக்கும்.. உப்பு மிளகு சேர்த்ததில்லை:))

    இம்முறைதான் சேர்த்தேன். அவித்த முட்டை வாசம் போல வந்துது:))).. அஞ்சுக்குச் சொல்லிடாதீங்கோ:))


    இமா said... 19
    //கொக்கோப்பழம் // வேற மாதிரி இருக்கும் அதீஸ். இது.. அளிபேர - யானைக்கொய்யா. அதனால்... கொய்யாப்பழம் என்று சொல்லி இருப்பா பொல. ;D

    நான் அப்போ சின்னப்பிள்ளை இமா, சரியாக நினைவில்லை ஆனா கொக்கோ பழம் எனச் சொன்னதும் சுவையும் நினைவிலிருக்கு... உங்களிடம் கொக்கோ பழம் படம் கிடைத்தால் போடுங்கோவன்... பின்பு எங்கேயுமே நான் அப்பெயர் அறிந்ததுமில்லை, சாப்பிட்டதுமில்லை.

    ReplyDelete
  50. மாலை வணக்கம்,அதிரா!அருமையாக இருந்தது,பகிர்வு!சாப்பிட்டதில்லை,முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  51. ஹேமா said... 21
    வணக்கம் அதிரா.பூஸாருக்கும் ஒரு வணக்கம்.

    அவகாடோ ஊரில பால்.சீனியோட கிரைண்டரில அடிச்சுக் குடிச்சுத்தான் தெரியும்.

    வாங்கோ ஹேமா வாங்கோ... நான் அப்படிச் சுவைத்ததே இலை.. பொறுங்கோ அடுத்தமுறை செய்துதான் என்ன வேலையும்:).

    ஹேமா said... 22
    அந்தப் படம்...அதுதான் அந்த ட்ராம் படம் முகப்புத்தகத்தில கிடந்திச்சே....’யார்டா புல்லுக்க பஸ் ஓட்டுறானெண்டு’ ஆரோ திட்டிக்கூட இருந்திச்சினம்.....யப்பா மாட்டிவிட்டாச்சு !

    ஹா..ஹா..ஹா.. கண்டு பிடிச்சிட்டீங்கள் ஹேமா:)).. புல்லுக்குள் போவதும் ஒரு அழகுதான்.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகுமாமே:)).. மியாவும் நன்றி ஹேமா.

    ReplyDelete
  52. தனிமரம் said... 23
    அவோக்கா :)) அலிக்கடபேர என்பார்கள் இதை சகோதரமொழியில் எனக்கும் அதிகம் பிடிக்கும் பழம் அதிரா:))
    வாங்கோ தனிமரம் வாங்கோ.. பேரா என்றால் கொய்யாப்பழமெல்லோ?:)) ஓ இதைத்தான் இமாவும் சொன்னவவோ? எனக்கது புரியவில்லை.. இப்போ விளங்கிட்டுது..

    இப்ப சமையல் செய்கின்றேன் அவோக்காவில் :))
    என்ன சமையல் செய்கிறனீங்களோ? சலாட்டுக்குள் போடுவது தெரியும்.. அடுப்பில் வைத்துச் சமைப்பதுண்டோ? தெரியவில்லை.

    மியாவும் நன்றி வருகைக்கு.

    ReplyDelete
  53. வாங்கோ லக்ஸ்மி அக்கா.. வாங்கோ.. நீங்க இன்னுமா சிங்கப்பூரில் இருக்கிறீங்க.. ஆங்கிலப் பெயர்தான் அவகடோ.. அங்கும் அதே பெயரில்தான் இருக்குமென நினைக்கிறேன்ன்ன்.. அல்லது நெட்டில் படம் பார்த்துக் கண்டுபிடிங்கோ..

    முஸ்தபா மோல் என்றதும் எனக்கு முட்டை ரொட்டிதான் நினைவுக்கு வருது... என்சோய் லக்ஸ்மி அக்கா..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  54. இளமதி said... 28
    நேற்று வந்திட்டு ஓடீட்டன். சான்விச்.. ம்...யமி...;)

    கைவசம் அவகாடோ இருந்திச்சா செய்து சாப்பிட்டேன்ன்..

    பட்டர் பூசாமலே இது தனியாக பூசி....ஹாஆ... நான் வீட்டிலை தோசைப்பொடி எப்பவும் வைச்சிருப்பேன். நல்ல காரப்பொடி....நான் செமயாய் காரம் சாப்பிடுவேன்...:)அவ்வ்வ்வ் செய்து சாப்பிட்டும் விட்டீங்களோ? கையை நீட்டுங்கோ மணந்து பார்த்துத்தான் நம்புவனாக்கும்:))... கிரீன் ரீயில் லெமன் விட்டுக் குடிப்பதும் நல்லதாம்..

    ReplyDelete
  55. இளமதி said... 29
    ஊஊஊசிக்குறிப்பு....பெரியவர் கூற்று எல்லாமே சூப்பர்ர்ர்ர்..:)

    நானும் அழகா இருக்க முயற்சி பண்றேன்.. அதுக்காக எந்த ப்யூட்டிபாலருக்கு போனாலும் இப்ப நாங்க ஃபிறீ இல்ல அப்புறம் வாங்கோன்றாங்களேஏஏஏஏ....:)

    அதீஸ் நீங்க எங்க போறனீங்க...;)

    நான் வீட்டையே பியூட்டிப் ஃபாலராக்கி வச்சிருக்கிறேன்ன்:)).. ஹா..ஹா..ஹா.. எண்ணம் அழகானால்........:))

    அஞ்சுட கொம்... க்கு வைரஸ் ஊசி போட்டு காய்ச்சல் சுகமானதும்தான் வருவாவாம்:)


    இமா....ஏன் பாதி அவகாடோவை மட்டும் அதிரா அப்பிடிச் சாப்பிடோணும்....மீதிப்பாதி...உங்களுக்கோ....ஹா..ஹா..ஹா..:)

    இல்ல மிகுதி பாதிக்கு சீனி:))

    ReplyDelete
  56. வாங்கோ ஜலீலாக்கா..

    அஞ்சுவும் சொன்னா.. தன் பக்கத்தில லோகோ இருக்கதீஸ் இணையுங்கோ என.. எனக்குப் புரியுதில்லை.. இதுவரை எங்கும் பங்கு கொண்டதில்லையெல்லோ... ஈமெயிலில் இணைக்கிறேன்.

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  57. வாங்கோ வான்ஸ்ஸ்.. .

    வேர்க் கிடைச்சிட்டுதோ?.. எல்லோருமே இப்ப ரொம்ப பிஸியாகிவிட்டதுபோல ஒரு பீலிங்ஸ் வருது.. மியாவும் நன்றி.

    ReplyDelete
  58. ammulu said... 42
    போட்டியில் வெற்றி பெறவாழ்த்துக்கள்.வாங்கோ அம்முலு வாங்கோ...

    ஹா..ஹா.. ஹா.. இம்முறை பரிசு எனக்கே:)) அது மாதப் பலனில சாத்திரியார் சொல்லிட்டார் எனக்கு:)))
    மியாவும் நன்றி அம்முலு... அவசராம முடிக்கிறன்.. ஏனெனில் ஒரு புதுத் தலைப்புப் போடோணும்:)) இப்போ..

    ReplyDelete
  59. No.. Anjsu Karrrrrrrrrrrrrrr:)) I only want avocado soup:))).. I am ~pure vegetarian~.. :)).

    ReplyDelete
  60. Sasi Kala said... 47
    படங்களுடனான பகிர்வும் கொடுத்த கமெண்ஸ்களும் சிறப்பு.

    வாங்கோ சசிகலா.. வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி..

    மிக்க நன்றி.

    ReplyDelete
  61. வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. குட்டிப் பதிவைக் கூட எல்லோரும் அருமை என்கிறீங்க... சந்தோசமாக இருக்கு..

    மிக்க நன்றி யோகா அண்ணன்.

    ReplyDelete


  62. Happy Birthday to u...
    Happy Birthday 2 U...

    Happy Birthday Dear ANJU...

    Happy Birthday 2 U.....:)))

    ReplyDelete
  63. அஞ்சுவுக்கு எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க வாழ்கவென அன்போடு வாழ்த்துகிறோம்!!!

    ReplyDelete
  64. அன்பு அதிரா பகிர்வுக்கு மிக்க நன்றி!

    அவசர அவசரமாக செய்து மின் விளக்கு வெளிச்சத்தில் எடுத்த படமாதலால் மங்கலாக இருக்கிறது. வருந்துகிறேன். பொறுத்தருள்க...:)

    ReplyDelete
  65. அன்புள்ள நிர்மலாவுக்கு,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    பிரியமுள்ள,
    கோபு அண்ணா

    ReplyDelete
  66. Atheese, yes. I got a job. Tomorrow will be my first day at job. Feeling nervous. I will visit your sites when ever I get time. Please do not mistake me commenting in English now and in the future.

    ReplyDelete
  67. அலிக்கடபேர -யானைக்கொய்யாப்பழம் என்று மலையகத்தில் சொல்வார்கள் அதிரா !அதன் பொருளில் இமா அக்காள் சொல்லி இருக்கலாம்!
    அவோக்காவினை நடுப்பத்தத்தில்(அதிகம் காயும் இல்லை அதிகம் பழமும் இல்லாத நிலையில்) தோல் நீக்கிவிட்டு சிறுசிறு துண்டாக்கி வெள்ளை வெங்காயம்(நுவரெலியாப்பக்கம் இது அதிகம்) மற்றும் தக்காளியும் சேர்த்து முதலில் ஒரு தாச்சியில் கொஞ்ச விரும்பிய எண்ணெய்யில் வெள்ளை வெங்காயத்தை பொறியவிட்டு(வதங்கவிட்டு) ஒரு சில நிமிடத்தில் வெங்காயம் கலர்ப்பதம் ஆகியபின் அவோக்கா சேர்த்து பின் தக்காளியையும் கலந்து இரண்டு நிமிடம் தாச்சியில் வேகவைத்து இறக்கினால் பின் விரும்பிய மீணுடன் சாப்பிட்டால் மொய் கிடைக்கவில்லை என்று மட்டன் கறி சாப்பிட ஸ்டார் ஹோட்டல் போகத்தேவையில்லை அதிரா:)))))) சுவையானது !(தனிப்பதிவாக தனிமரம் வரும் ஆண்டில் தருகின்றேன் படத்துடன் இப்போது சைவத்தின் பாதையில் :)))]

    ReplyDelete
  68. அதிரா, மிக அருமையான குறிப்பு.பரிசு கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.பகிர்வு அருமை.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.