நல்வரவு_()_


Sunday, 25 August 2019

வெளிநாட்டு மலர்களோடு வாழ்த்துக்கள்👏

நான் போகுமிடமெல்லாம் கண்ணில் காணும் பூக்களைப் படமெடுப்பதில் எனக்கு அலாதி பிரியம், அப்படி முன்பு எடுத்தவைகளில் நிறையப் போடாமலே விட்டு விட்டேன். பூந்தோட்டம் போய்ப் படமெடுப்பதைக் காட்டிலும், ச்சும்மா சும்மா அங்காங்கு அழகாக பூத்திருப்பதை எடுப்பதில் ஒரு மகிழ்ச்சி. 
மீ பார்ட்டிக்கு ரெடீஈஈஈஈஈஈ

அந்த அந்த இடத்தோடு, அங்கெடுத்த பூக்களையும் போடலாம் என நினைச்சிருந்தேன், ஆனால் இன்று  மலர்களாலேயே ஒரு போஸ்ட் போட்டிடலாம் என நினைச்சுத், தொகுப்பாக்கிட்டேன்.

இந்த செம்பரத்தைகள் வோஷிங்டனில் இருந்தவை, ரோட்டோரங்களில் இருந்துது, எந்தாப் பெரிசு தெரியுமோ.. படத்தில் தெரியவில்லை சைஸ், ஒருபெரிய தேங்காயளவு இருந்தன ஒவ்வொரு பூக்களும்.
 (1)

 (2)

 (3)

(3A)

(4)

இது என்ன எனத் தெரிகிறதோ? இதுவும் அங்கிருந்த “கடுகுநாவல்” பூக்கள்.
(5)

பெயர் தெரியவில்லை, அழகானதை எல்லாம் படம் எடுத்தேன்..
(6)

 (7)

(8)
(8A)

(8B)

இவை வோஷிங்டன் சைனா டவுன் ஏரியாவில், ரோட்டோரம் நின்றவை..
(9)

(10)

இதை உங்களுக்கு சொல்லியே ஆகோணும், வோஷிங்டனில் ஏதோ ஒரு மியூஸியத்துக்கு முன்னால் பூ மரங்களோடு தானும் ஒரு ஆளாக பெரிதாக வளர்ந்திருக்குது பாருங்கோ.. “மணத்தக்காழி”

இவை அங்கு ஸ்பேஸ் மியூசியத்தில் இருந்த பூக்கள்.. மிக மிக அழகாக இருந்தன.
(11)

(12)

(13)

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓இடைவேளை💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
ஆஆஆஆ பொயிண்டுக்கு வந்தாச்சு... அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, இடையிலே வந்து கொஞ்சம் புளொக்கை தூசு தட்டி விட்டுப் பின்னர் மீண்டும் பேஸ் புக்கிலேயே:)[அப்படித்தான் நினைக்கிறேன்:)] சங்கமமாகி இருக்கும்..  “பிரியசகி” புளொக் ஓனர் அம்முலுவுக்கு  இன்று இனிய பிறந்தநாள்(26.08.19).

அம்முலு நலமோடும் மகிழ்வோடும், சகல பாக்கியங்களோடும் என்றும் நலமாக இருக்க இறைவனை வேண்டி, இந்த வெள்ளை செம்பரத்தம் பூவைக் குடுத்து வாழ்த்துகிறேன். இது சாதாரண பூவல்ல, நியூயோர்க் ரொஜெஸ்டர் சிட்டியில் இருக்கும் “ராஜராஜேஸ்வரி” அம்மன் கோயிலில் பூத்திருந்த மலர். அம்முலு.. பூ மட்டும்தான் உங்களுக்காக்கும்:)) 
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

இது கனடா நாட்டின் மலர்கள். ஒட்டோவாவில் நின்றபோது, வோட்டர்பார்க் ஒன்றுக்குப் போயிருந்தோம்.. அங்கிருந்த மலர்களே இவை.. பார்க் விபரம் இன்னொரு பதிவில்..
(14)

(15)

இது ஒரு வித காட்டு வாகை/வேம்பு போல, பெரிய விருட்சங்களாக வளர்ந்திருக்கு.. கனடாவில் எங்கும் காணலாம்.. ஆனா இது பூவா இல்லை குருத்துப்போலவா தெரியவில்லை, ஒரு வித அழகு
(16)

(17)

இப்படி நீங்கள் சாப்பிட்டதுண்டோ? பச்சைப் பாதாம் காய்.. ஒருவித வித்தியாசமான சுவையாக இருந்தது, அக்கா வீட்டில் வாங்கி இருந்தார்கள்.. உடைக்க ஈசியாக இருந்தது.

ஊசிக்குறிப்பு


😍😍😍😍

MANY MORE HAPPY RETURNS OF THE DAY.. HAPPY BIRTHDAY அம்முலு
((((((((((((((((((((()))))))))))))))))))))))))

ஆயுதத்தால் மட்டுமில்லை, பூக்களாலும் அனைவரையும் விரட்டி ஓட வைக்க முடியும்:) என்பதனை இப்போஸ்ட் மூலம் அதிரா நிரூபிக்கிறேன் என நினைக்கிறேன்:)).
==============================

91 comments :

  1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTPvnLR2QALXw3qngklj8vLYDNgwjdmcP7peK6zJG8QVxNsUCiM[/im]

    Happy Birthday Ammulu :))))))))))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... அம்முலு பேத்டே வரப்போகுதெனத் தெரியாமல் நித்திரை கொள்ளுவா இப்போ கர்ர்ர்ர்ர்ர்:)...

      பதில்கள் தாமதமாகத்தான் தருவேன் என நினைக்கிறேன் அதுவரை அஞ்சு மற்றும் எல்லோரும் மன்னிச்சுக்கோங்ங்ங்:)...

      என் காப்பைக் கழட்டி வைத்துவிட்டே இக்கொமெண்ட் போடுகிறேன் என்பதனை இங்கு பதிவுசெய்ய விறு:)ம்புகிறேன்ன்ன்ன்ன்:)

      Delete
    2. உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி அஞ்சு 😍

      Delete
  2. ///பூக்களாலும் அனைவரையும் விரட்டி ஓட வைக்க முடியும்:) என்பதனை இப்போஸ்ட் மூலம் அதிரா நிரூபிக்கிறேன் என நினைக்கிறேன்:)).//


    noooooo ..அந்த பூக்களால் என்னை மூச்சடைச்சு கொல்ல ஜதி உள்நாட்டு ஜதீஈ

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பின்ன ஒரேயடியா புளொக்ஸைப் பார்க்காமல் இருந்தால்... இப்பூடி வீட்டுக்குள் மூச்சடைச்சால் வெளியே ஓடி வருவீங்க:)

      Delete
  3. இந்த பச்சை வாதுமை மரம் எங்க முன்வீட்டில் சென்னைல இருந்தது அவங்க வீட்டு காய்கள் எங்க தோட்டத்தில் விழும் அந்த மரத்தில் அணிலும் கிளியும் கூட்டமா இருக்கும் .அதுங்க ஜெல்ப்பில் நானும் சாப்பிட்டிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. இறைவா...... எதையோ பார்த்து ஏதோ நினைத்து பின்னுட்டம் போடறாங்களே சில பேர். அவங்கள்ட பாதாம் பருப்புக்கும், வாதாம் பருப்புக்கும் வித்தியாசம் சொல்லக்கூடாதா? பாதாம் பருப்பு வெளிநாட்டினுடையது (குறிப்பா அமெரிக்கா). வாதா மரம் நம்ம நாட்டில் காணும் இடமெல்லாம் இருக்கும். அதை எடுத்து கல்லை வைத்து உடைத்து சிறிய பருப்பை எடுத்துச் சாப்பிடணும்.

      தமிழ்நாட்டுல என்ன இருக்குன்னு தெரியாம, அதிராவும் 'அப்படியா... ஓஹோ' என்றெல்லாம் மறுமொழி சொல்லிடுவாங்க. நாடு கெட்டுப்போச்சு.

      Delete
    2. ஆஆவ் :) நான் வாதுமைனு தான் எழுதினேன் .பூனைக்கு அதெல்லாம் எப்பவும் புரியாது இப்போ காட்டி கொடுத்தெட்டீங்க :)
      சென்னைல ஆலீவ்ஸ் மரம் இருக்குன்னு சொன்னாலும் அப்டியே நம்பிடும் பூனை தெரியுமோ :) நாம் எவ்ளோனாலும் போய் போய் பேய் காட்டலாம்

      Delete
    3. @அஞ்சு
      ஆஆவ்வ்வ்வ் கோதுமை தெரியும் அதென்ன வாதுமை:)... நல்லவேளை நெல்லைத் தமிழன் புளொக் உலகில் உலாவுவதால், என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாமல் இருக்கூ:)...

      Delete
    4. ஆஆ நெல்லைத் தமிழன் நல்லவேளை நீங்க களம் இறங்கினது:) இல்லை எனில் நான் நம்பியிருப்பேன் கர்ர்ர்ர்ர்ர்:)
      எங்கள் ஊரிலும் முந்திரி மரம்போல பாதாம் மரம் இருந்தது, நிறையக் காய்க்கும் யாரும் தேடுவதில்லை, வெளிப்பகுதி கொஞ்சம் கனிவானதும் கோதை பறவைகள் சாப்பிடும்.
      வெட்டவே முடியாது... சுட்டியலால் அடிச்சு உடைச்சால் உள்ளே குட்டியூண்டு பர்ப்பிருக்கும் கர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
    5. ////
      ஆஆவ் :) நான் வாதுமைனு தான் எழுதினேன் .பூனைக்கு அதெல்லாம் எப்பவும் புரியாது இப்போ காட்டி கொடுத்தெட்டீங்க :)////
      ஆஆஆஅவ்வ்வ் சத்தியமா நெல்லைத் தமிழன் சொல்லியும் நான் “மை”யை கவனிக்கவில்லை:) , இப்போ அஞ்சு தெளிவாச் சொன்னபின்பே புரிஞ்சது ஹா ஹா ஹா இதுதான் சொ செ சூ வைப்பதாக்கும் அஞ்சு:) ஹா ஹா ஹா...

      எனக்கு தமிநாடுபற்றி என்ன தெரியும் , அஞ்சு என்னை மிரட்டிப் பல விசயங்களை நம்ப வைப்பா... கர்ர்ர்ர்ர்ர் பட் மீ ட்றம்ப் அங்கிளை சந்தித்த பின் ரொம்ப சார்ப்பாகிட்டேனாக்கும்:) ஹா ஹா ஹா

      Delete
  4. ஊசிகுறிப்பு சூப்பர் .எத்தனைபெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனம் பாட்டு நினைவுக்கு வந்தது
    17 வது படத்தில் என்ன மரம் ? னு ஆராய்ந்தேன்
    அது
    Rhus typhina

    common நேம் = Vinegar tree

    15 பெயர் தெரில

    14, கட்டப்பா மரம் :)))))))))
    ஹாஹா catalpa ட்ரீ

    ReplyDelete
    Replies
    1. 17 வதின் குளோஸப் போட்டோதான் 16 ஆவது அஞ்சு.
      14.. ஊர்ப் பூவரசம் மரம்போல இருந்துது ஆனா பூ மட்டும் வாகைப்பூப்போல...

      Delete
  5. // ராஜராஜேஸ்வரி” அம்மன் கோயிலில் பூத்திருந்த மலர். அம்முலு.. பூ மட்டும்தான் உங்களுக்காக்கும்:)) //
    நான் உங்களை மாதிரி இல்லை இருங்க நீங்க மட்டும் தான் தருவிங்களோ அம்முலுக்கு கிஃப்ட்டு :)

    அம்முலு அந்த ரெண்டு வளையலும் ஒரு பிரேஸ்லெட்டும் கூட உங்களுக்கே எடுத்துக்கோங்க :)

    ReplyDelete
    Replies
    1. ///அம்முலு அந்த ரெண்டு வளையலும் ஒரு பிரேஸ்லெட்டும் கூட உங்களுக்கே எடுத்துக்கோங்க :)///

      ஆஆஆஆஆஆஆஆ இந்தக் கொடுமையத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ:)).. பகல்க்கொள்ளை நடக்குதே.. என் அநாமிகா நித்திரையோ கர்ர்ர்ர்:)).. தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கதையாப்போச்சே:))

      Delete
  6. //முன்னால் பூ மரங்களோடு தானும் ஒரு ஆளாக பெரிதாக வளர்ந்திருக்குது பாருங்கோ.. “மணத்தக்காழி”//

    [im]https://media.tenor.com/images/6b40464cdd878d207a7f3bee1404b0d7/tenor.gif[/im]

    ஹையோ ஹயாயோ இதில் பெருமையா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லன்னு காட்டிக்க கறுப்பெழுத்தில் போல்டா எழுதியிருக்கு பூனை :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதியிருப்பதால்தான் அது பூனை. இல்லைனா யானை.

      அதிரா - நீங்க உங்க வழக்கம்போல இஷ்டத்துக்கு 'சரியா எழுதறோம்னு' நினைத்து தவறான ஸ்பெல்லிங்கோட எழுதுங்க.

      Delete
    2. //ஹையோ ஹயாயோ இதில் பெருமையா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லன்னு காட்டிக்க கறுப்பெழுத்தில் போல்டா எழுதியிருக்கு பூனை :)//

      நான் வலையுலகம் வரும்வரை ரொம்ப தெளிவாக இருந்தேன்:)) ஆனா இங்கு வந்த பிறகு.. இதுகு இந்த ழ.. அதுக்கு அந்த ள எனச் சொல்வதைக்கேட்டு இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டனே வைரவா:))....

      மோடி அங்கிளுக்கு மனு எழுதிக் குடுத்தும் அவர் இந்த ழ, ள வை நீக்கவே இல்லை கர்ர்ர்:)).. ஒரு ழ இருந்தால் போதாதோ?:))

      [im]https://www.holidogtimes.com/wp-content/uploads/2016/05/crazy-running-cat-1.jpg[/im]

      Delete
    3. //அதிரா - நீங்க உங்க வழக்கம்போல இஷ்டத்துக்கு 'சரியா எழுதறோம்னு' நினைத்து தவறான ஸ்பெல்லிங்கோட எழுதுங்க.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன், தப்பு எனத் தெரிஞ்சு ஆரும் செய்வினமோ:).. நான் மிகத் தைரியமாக நம்பிக்கையாகத்தானே எழுதுறேன்ன்.. அது காலை வாரி விட்டிடுது.. இன்னொன்றும் சொல்லோணும்.. ஸ்பீட்டா ரைப்பண்ணும்போது டவுட்டே வருவதில்லை.. டவுட் வந்தாலாவது செக் பண்ண யோசிக்கலாம் ஹா ஹா ஹா:))

      Delete
  7. 8A ==Kerria japonica

    8b zinnia .அந்த கலர் செம அட்ரக்ட்டிவ் .அதை சுட்டுக்கறேன் குவில்லிங் செய்ய

    ReplyDelete
    Replies
    1. இல்ல அஞ்சு அதை விட 16 ஐ எடுத்துக் குயில் பண்ணுங்கோ... சூப்பரா வரும் நிங்க செய்தால்...

      Delete
  8. கடுகுநாவல்” பூக்கள்//நாங்க LANTANA சொல்வோம் பட்டாம்பூச்சிங்களுக்கு பிடிச்ச செடியும் மலரும் இது .

    செம்பருத்தி மலர்களெல்லாம் அழகு ..மீண்டும் ஒருமுறை அம்முலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் அத்துடன் இந்த பக்கத்தில் உள்ள அசையும் அசையா சொத்துக்களை அம்முலுவுக்கு எழுதி வைக்கின்றேன் பிறந்த நாள் பரிசாக



    ReplyDelete
    Replies
    1. கடுகுநாவல் பழம் நான் சாப்பிட்டிருக்கிறேன் அஞ்சு... ஊர்களில் அது காட்டுமரம்... வெளிநாடுகளில் அது அழகுமரம்...

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கு அசையும் சொத்து நாந்தேன்ன்ன்ன்ன்:).. அம்முலுவிடம் ஜொள்ளுங்கோ பார்ப்பம் அதிராவைத் தூக்கிக்கொண்டு போகச் சொல்லி :) ஹா ஹா ஹா:)

      Delete
    2. ஆ......அஞ்சூஊஊஊஊ 😀 😀 😀 ஆஹா நல்ல வெயிட்டான சொத்து தான் பி.நாளுக்கு இப்படி ஒரு பரிசு வரும் என எதிர்பார்க்கலை. நன்றி நன்றி. ஆனா ஒரு டவுட் அதில் இருப்பது ப்யூர் கோல்ட் மாதிரி தெரியல. அந்த பச்சைகல் நெக்லஸ் என்றால் வேர்த் ஆ இருக்கும். சரி ஓகே..
      //அம்முலுவிடம் ஜொள்ளுங்கோ பார்ப்பம் அதிராவைத் தூக்கிக்கொண்டு போகச் சொல்லி :) ஹா ஹா ஹா:)// எனக்கு இன்று வாழ்த்து சொல்லியிருக்கிறபடியால் அதை செய்யல. தப்பிவிட்டீங்க. ஆனா அஞ்சு தூக்குவா.ஹா...ஹா..ஹா.

      Delete
    3. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஆனா ஒரு டவுட் அதில் இருப்பது ப்யூர் கோல்ட் மாதிரி தெரியல.//
      அப்பாடாஆஆஆ தப்பிட்டேன்ன் இப்போதான் மூக்கில பால் வார்த்ததுபோல இருக்கு மீக்கு ஹா ஹா ஹா:)).

      //அந்த பச்சைகல் நெக்லஸ் என்றால் வேர்த் ஆ இருக்கும். சரி ஓகே..//
      ஹையோ ஆண்டவா இன்னுமோ அதை மறக்கல்ல அம்முலு:), இதனாலதான் அதை ட்றம்ப் அங்கிளின் லொக்கரில வச்சுப் பூட்டிப்போட்டு வந்தேன்..

      முடிஞ்சால்.. கீசாக்கா போறாவாம் சொல்லி எடுப்பியுங்கோ பார்ப்பம்:)) ஹா ஹா ஹா..

      //எனக்கு இன்று வாழ்த்து சொல்லியிருக்கிறபடியால் அதை செய்யல. தப்பிவிட்டீங்க. ஆனா அஞ்சு தூக்குவா.ஹா...ஹா..ஹா.///
      ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அஞ்சு இப்போ அதிராவை விட டபிள் சைஸ் ஆகிட்டா என்பது சேர்மனி:) வரை தெரிஞ்சுபோச்சாஆஆஆஆஆ:))... சே..சே.. அப்பூடி பெரிய குண்டாக எல்லாம் ஆகல்ல அம்முலு அவ.. ஒன்லி 90 கிலோஸ் தேன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)) மீ பெரி பெரி பிஸி:)) என்னை ஆரும் தேட வாணாம்ம்ம்ம்ம்:))

      Delete
  9. இந்தப் பாடல் கேட்டதில்லை. ஆனால் உற்சாகமாக இருக்கிறது கேட்க! பின்னணி இசை ஜாலங்கள் காட்டுகிறது. மனோ குரலும் கேட்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      //இந்தப் பாடல் கேட்டதில்லை.//
      வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பாட்டுப் போடும்போது, அதிலேயே எழுத நினைச்சேன்.. இப்பாடல் ஸ்ரீராம் கேட்கவில்லை என.. ஆனா அது சரியாப்போச்சு... அழகிய மியூசிக்கும் மனதுக்கு மகிழ்வான பாடலும் எல்லோ..

      இதெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறேன் எனத்தானே நினைக்கிறீங்க:).. எல்லாம் என் மியாஸு:) ரேடியோவினால்தான்.. ஹா ஹா ஹா.

      Delete
  10. செம்பரத்தையா, செம்பருத்தியா!

    எனக்குத் தெரிந்து இரண்டாவதுதான் சரி!

    அந்த மஞ்சள் செம்பருத்தியை நானும் படம் பிடித்திருக்கிறேன் - எங்கள் குலதெய்வம் கோவிலில். தேன்சிட்டுக்குருவிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

    ReplyDelete
    Replies
    1. அப்போ செம்பரத்தை என்பது பேச்சு வழக்காக இருக்கும்போல... நான் நினைச்சேன் செம்பருத்தி என்பது இன்னொரு பூ வகை என.

      //எங்கள் குலதெய்வம் கோவிலில். தேன்சிட்டுக்குருவிகள் வட்டமடித்துக்கொண்டிருந்தன.//

      அப்போ இனிப் படம் வரும்..

      Delete
  11. மணத்தக்காழி இல்லை, மணத்தக்காளி! கூகுள் ழி என்று அந்த வார்த்தையில் டைப் அடித்தாலும் ளி என்றே முதல் தெரிவாகக் காட்டுகிறது! அப்படியும் எப்படி தவறு...? தமிழ்ல டி!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்.... நம்ம எனெர்ஜி இதுலலாம் வேஸ்ட் பண்ணக்கூடாது. நீங்க இப்படிச் சொன்னப்பறம் அடுத்த தடவை ஞாபகமா, 'மணட்டக்காளி' ன்னு எழுதுவாங்க. "ளி" கரெக்டா போட்டு இன்னொரு எழுத்துல தவறு செய்வாங்க, இன்னைக்கு டக்காளின்னு எபில எழுதினமாதிரி.

      கேட்டா.... படிக்கறவங்களுக்கு டமிள் தெரியுமான்னு செக் பண்ணினேன். நான் டி எல்லோ என்பாங்க.

      Delete
    2. //கூகுள் ழி என்று அந்த வார்த்தையில் டைப் அடித்தாலும் ளி என்றே முதல் தெரிவாகக் காட்டுகிறது! அப்படியும் எப்படி தவறு...? தமிழ்ல டி!//

      ஹையோ ஸ்ரீராம் எனக்குச் சந்தேகம் வந்தால்தானே கூகிளில் செக் பண்ணத்தோன்றும்:)).. இனிமேல் கூகிளை மனதில் நிறுத்தி வைக்கிறேன். அது பலசமயம் தன்னிலை மறந்து ரைப்பண்ணிப்போகும்போது.. ஏற்கனவே பழக்கப்பட்டதே எனக்கு வருகிறது, கை தானாகத் தட்டிக் கொண்டு போகிறது.. சந்தேகமில்லாமல், நான் என்ன பண்ண:))

      Delete
    3. @ நெ.த//
      ////நீங்க இப்படிச் சொன்னப்பறம் அடுத்த தடவை ஞாபகமா, 'மணட்டக்காளி' ன்னு எழுதுவாங்க. "ளி" கரெக்டா போட்டு இன்னொரு எழுத்துல தவறு செய்வாங்க, இன்னைக்கு டக்காளின்னு எபில எழுதினமாதிரி.///

      ஹையோ ஆண்டவா கோயம்புத்தூரில இடி இடிச்சா:) கடலூரில மழை கொட்டுதாமே:)) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக்கதை:)).. எங்கள்புளொக்கில ஸ்பெல்லிங் மிசுரேக்கு கண்டு பிடிச்சிட்டேன் என்பதற்காக இங்கு வந்து இப்படி ஒரு ஃபிக்சன் ஸ்ரோறி.. ஹா ஹா ஹா ஹையோ இடையில நாக்குத்தடுமாறி இங்கிலீசெல்லாம் வருதே நேக்கு ஹா ஹா ஹா...

      அது வேணுமெண்டுதான் ட போட்டேனாக்கும்.. அது அடிக்கடி போடுவதுதானே.. நீங்கதான் ஸ்ரெடியா இருக்கோணும்:)).

      ///டமிள் தெரியுமான்னு//
      ஆஆஆஆஆஅ ஸ்பெல்லிங் மிசுரேக்கூ.. அது ழ் தான் வருமாக்கும்:)) ஹா ஹா ஹா ஆரியக்கூத்தாடினாலும் அதிரா மிசுரேக்குக் கண்டுபிடிப்பதில கண்ணாயிருப்பேன்ன்... பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ கெயார்ஃபுல்ல்ல்ல்ல்[ஹையோ இது எனக்குச் சொன்னேன்]:))

      ஹா ஹா ஹா முடியல்ல மேல் மருவத்தூர் வைரவா.. என்னால முடியுதில்லை... தமிழ் சொல்லிக்குடுத்தே மீ களைச்சுப் போயிட்டேன்:))

      Delete
  12. ப்ரியசகிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு..

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஶ்ரீராம்.

      Delete
  13. பாதாம் பருப்பு உடைத்துச் சாப்பிட்டதுண்டு. இது போல சாப்பிட்டதில்லை!

    ReplyDelete
    Replies
    1. இது பச்சைப்பருப்பு மரத்திலிருந்து நேரா சூப்பர்மார்கட் வந்திருந்ததாம்... கச்சான் உடைப்பதைப்போல அவ்ளோ ஈசியா உடை பட்டுது.

      Delete
  14. பூக்களாகப் பிறப்பதோ, செடிகளாகப் பிறப்பதோ என் கையிலிருந்தால் அவ்வண்ணமே செய்கிறேன்! இயன்றவரை மரியாதைக்குரிய செயல்களையே செய்ய முயல்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் ஸ்ரீராம்.. நாம் நம் மனச்சாட்சிக்கு குற்ற உணர்வில்லாமல் நடந்தாலே போதும்.

      Delete
  15. னைத்துப் படங்களும் அருமை. பூக்கள் எப்போதுமே அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆ “அ” நாவை ஆமை சாப்பிட்டு விட்டதே ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

      Delete
  16. பிரியசகி அம்முக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    உங்கள் மலர்களை மலர் கொத்தாக ஆக்கி கொடுக்கிறேன் அம்முக்கு.
    என்றும் அன்பாய் இருங்கள் நீங்கள் எல்லோரும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அக்கா.

      Delete
    2. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ... படங்களோடு கலந்து பூக்களையும் போடும் நினைவோடுதான் இருந்தேன், பின்பு அம்முலுவின் பிறந்ததினம் என்பதால்.. அனைத்தையும் ஒரு போஸ்ட்டில் போட்டு வாழ்த்தினேன். மிக்க நன்றி.

      Delete
  17. பாட்டும் கேட்டு ரசித்தேன்.
    அங்கு செம்பருத்தி பெரிதாக இருப்பதை நானும் எடுத்து இருக்கிறேன் நிறைய.
    எங்கள் வீட்டில்(மாயவரத்தில்) பெரிய சிவப்பு செம்பருத்தி வைத்து இருந்தேன்.

    மணத்தக்காளி அங்கு விஷசெடி என்று சொல்கிறார்கள்.
    என் மகன் வீட்டில் நிறைய இருக்கிறது. பறவைகள் அதன் பழத்தை விரும்பி உண்ணும்.

    ReplyDelete
    Replies
    1. //மணத்தக்காளி அங்கு விஷசெடி என்று சொல்கிறார்கள்.//

      ஏன் கோமதி அக்கா அப்படி?
      கனடாவிலும் எல்லா வீட்டு வளவிலும் ஒரே மணத்தக்காளிதான், தானா முளைக்குது மண்ணிலிருந்து.... அங்கு நின்றபோது சாப்பிட்டேன்.

      Delete
  18. பச்சைப் பாதாம் காய்.. படம் அழகு. ஊசிக்குறிப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. சுவையும் நன்றாக இருந்தது கோமதி அக்கா.. மிக்க நன்றி.

      Delete
  19. குருத்துபூ என்றே வைத்துக் கொள்வோம்.
    குருத்து பூ அழகு.

    ReplyDelete
  20. //பூக்களாலும் அனைவரையும் விரட்டி ஓட வைக்க முடியும்:) // - உண்மைதான். ஓரிரு வித்தியாசமான பூக்களைத் தவிர மற்றதெல்லாம் எங்கும் காணும் பூக்கள்தான்.

    எத்தனையோ இடங்களுக்கு பிரயாணம் போயிருப்பீங்க. அதைப் பற்றி ஒன்றும் எழுதாமல் ரோட்டோரப் பூக்களை வைத்து பதிவைத் தேத்துகிறீர்களே..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லை டமிலன் வாங்கோ:)) ஹா ஹா ஹா..

      //உண்மைதான். ஓரிரு வித்தியாசமான பூக்களைத் தவிர மற்றதெல்லாம் எங்கும் காணும் பூக்கள்தான்.//
      ஆனா அது என்னான்னா... எங்கள் ஊரில் இருப்பது, இன்னொரு வெளிநாட்டில் இருப்பதைப்பார்க்க.. பாசம் பொத்துக்கொண்டு வருகிறது அதுதான் உண்மை.. ஊரில் திரும்பிப் பார்க்காத பூக்களை எல்லாம் இப்படி உல்லாசப்பயண நேரம் காணும்போது பயங்கரப் பாசம் வருகிறது அதனில்... உதாரணம்.. கடுகுநாவல்.

      ///எத்தனையோ இடங்களுக்கு பிரயாணம் போயிருப்பீங்க. அதைப் பற்றி ஒன்றும் எழுதாமல் ரோட்டோரப் பூக்களை வைத்து பதிவைத் தேத்துகிறீர்களே..///
      “பூசை ஆகுமுன்னம் சன்னதம் கொள்ளலாமோ...” ஹா ஹா ஹா..

      நீங்கள், ஹையோ போறிங்காக இருக்கே எனச் சொல்லுமளவுக்கு வரப்போகுது இம்முறை படங்கள் ஹா ஹா ஹா.. இது அம்முலுவுக்காகவே ஸ்பெஷல் தொகுப்பு.

      Delete
  21. ப்ளாக்லேர்ந்து களவெடுப்பினமோ - இது என்ன புதுக் கதை... ஒரு வித்தியாசமும் தெரியலையே. படங்களையும் சேமிக்க முடியும், காபி பேஸ்டும் பண்ணமுடியுமே.

    ReplyDelete
    Replies
    1. //ப்ளாக்லேர்ந்து களவெடுப்பினமோ//
      ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் இது வேறு எங்கோ போடும் கொமெண்ட்டை இங்கு மாறிப்போட்டுவிட்டீங்களோ?????. தேடிப்பார்த்தேன், நான் இதுபற்றி ஏதும் பேசவில்லையே... தெரியவில்லை. நான் எந்த லொக்கும் போடவில்லை.. எப்படியும் கொப்பி பண்ணலாம் என் பக்கமிருந்து, ஆனா அநாமிக்காவைக் காவலுக்குப் போட்டிருக்கிறேன்ன் அவ கடிப்பா ஹாஅ ஹா ஹா.

      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.

      Delete
    2. அநாமிகா காவல் என்று வலது பக்க மேல் ஒன்று போட்டிருக்கீங்களே.. அதன் அர்த்தமும் பர்பஸும் என்ன? அதனால்தான் எழுதினேன்

      Delete
    3. @நெ.டமிலன்:)
      ஹையோ ஆண்டவா என்னை ஆராவது தூக்கிப்போய்த் தேம்ஸ்ல போடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா..

      நான் அநாமிக்காவைப்போட்டு அதுபற்றி நாங்க கும்மி அடிக்கும்போது நீங்களும் இருந்தீங்கதானே எங்களோடு.. இப்போ என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க கர்ர்ர்ர்ர்:)).. நான் எந்த லொக்கும் போடவில்லை நெல்லைத்தமிழன்.. அது அநாமிக்காவைப் போட்டது:)).. திருடர் வெளியில இல்லை:)) கூட இருந்தே திருடுறாங்க:)).. அதுவும் பெப்ரவரி மாசம் வந்தாலே திருட்டு ஆரம்பமாகிடுது:)) ஹா ஹா ஹா அந்த என் செக்:)) திருடருக்காகப் போட்டேனாக்கும்:))..

      சே..சே.. வர வர நெல்லைத்தமிழனுக்கு கொமெடி மறந்து:) சீரியசாக ஓசிக்க வெளிக்கிட்டிட்டார்ர்ர்ர்:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:))...

      அது ச்ச்சும்மா அஞ்சுவுக்காக செல்ல மிரட்டல் பண்ணி கொமெடிக்குப் போட்டிருப்பது நெல்லைத்தமிழன்:))...

      Delete
  22. ஹலோ அதிரா இவ்வளவு நாளா நீங்கள் எங்கே இருந்தீர்கள்....உங்களை பற்றி விசாரித்த போது நீங்கள் சிறையில் இருந்தாக சொன்னார்கள்.. இப்போ பரோலில் வெளியே வந்து இருக்கீங்களா?


    பிரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      Delete
    2. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      //ஹலோ அதிரா இவ்வளவு நாளா நீங்கள் எங்கே இருந்தீர்கள்//
      இந்தப் புறுணம்:)) தெரியாதோ ட்றுத்.. வெள்ளைமாளிகையில எல்லோ இருந்தேன்ன்.. ட்றம்ப் அங்கிள் வர விடவே இல்லை என்னை:) பின்பு ஸ்கூல் தொடங்குது எனச் சொல்லித்தான் ஓடிவந்தேனாக்கும் ஹா ஹா ஹா.

      //உங்களை பற்றி விசாரித்த போது நீங்கள் சிறையில் இருந்தாக சொன்னார்கள்.. இப்போ பரோலில் வெளியே வந்து இருக்கீங்களா?///

      ஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இந்த ரகசியமும் வெளியே வந்துவிட்டதோ?:)) அது இன்னும் இல்லை ட்றுத்:)).. ட்றம்ப் அங்கிளுக்கு பதவி போனால் அவர் உள்ளே போகப்போவது உறுதியாம்:)) அவர் உள்ளே போனால் அவரின் பேஷனல் செக்கரட்டரி என என்னையும் எல்லோ தூக்கி உள்ளே போட்டிடுவினம் ஹையொ ஹையோ.. அதுக்கு முன்னமே இப்பூடி கடுகதி வேகத்தில வதந்தி பரவிட்டுதே:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்... நீங்கள் போய் மோடி அங்கிளைத் திட்டுங்கோ:)) அதுதான் உங்கட ஹெல்த்துக்கு நல்லது ஹா ஹா ஹா.. ஹையோ நேக்கு என்னமோ ஆகுதே...:))

      Delete
  23. உங்கள் வால் ஏஞ்சல் எப்படி இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அவ தலை எல்லோ:)).. தலை இருக்க:).. மீ வால்[வாலால] தான் ஆடிக்கொண்டிருக்கிறேன் ஹா ஹா ஹா.

      Delete
  24. மிக்க நன்றி ,நன்றி, நன்றி அதிரா. 🙏 😍.எனக்கும் ரெம்ப பிடிக்கும் செம்பருத்தி பூக்களை. அழகா இருக்கு. அதோடு பூவை பிடித்திருக்கும் பூவையின் அழகான கரங்களையும் பிடித்திருக்கு....... 😍
    மீண்டும் நன்றி அதிரா உங்கள் வாழ்த்துக்கு....மிகுதிக்கு கொஞ்சம் லேட்டா வாறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ.. சனி ஞாயிறு கொஞ்சம் உடல்நலம் சரியில்லை... அதிகம் மினக்கெட முடியமல் போச்சு. மிக்க நன்றி. மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்.

      Delete
  25. "மணத்தக்காழி"

    "மணத்த தக்காழி"

    எது சரி ?

    பிரியசகி அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    //அம்முலு.. பூ மட்டும்தான் உங்களுக்காக்கும//

    நான்கூட வளையலும் சேர்த்தாக்கும் என்று நினைத்தேன்.

    படங்கள் அனைத்தும் அழகு (தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் உள்ளது போலவே)

    குறிப்பாக 16-ஆம் எண் புகைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் தக்காளி.

      Delete
    2. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா ஜீ

      Delete
    3. vஆங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //"மணத்தக்காழி"

      "மணத்த தக்காழி"

      எது சரி ?//
      ஆவ்வ்வ்வ்வ் ரெண்டுமே டப்பூஊஊஊஊஊ ஹா ஹா ஹா அது ளி வரோணுமாக்கும்:)) எனக்கு டமில்ல டி எல்லோ கில்லர்ஜி:)) ஹா ஹா ஹா.. அது மணத்தக்காளி தான் சரி.. பிரிச்செழுதக்கூடாது.. அர்த்தம் மாறுபடும்...

      //நான்கூட வளையலும் சேர்த்தாக்கும் என்று நினைத்தேன்.//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. அதிராவிடம் இருந்து என்னவெல்லாம் பறிச்சுக்குடுக்கலாமோ:) அதைச் செய்வதிலேயே எல்லோரும் துடியாகத் துடிக்கினம்:)) மூஸாலிக் காளியாத்தா என்னைக் காப்பாத்துங்கோ:).

      //குறிப்பாக 16-ஆம் எண் புகைப்படம்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))...
      மிக்க நன்றிகள் கில்லர்ஜி...

      Delete
  26. முதலில் ப்ரியாவுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    இங்கு எங்கள் வீட்டிலும் ஒரு செவ்வரத்தை இருக்கிறது. பூக்கள் பீங்கான் அளவு பெரிதாக வருகிறது.
    கடுகுநாவல் - நாயுண்ணிப்பழம். வெள்ளை, மஞ்சல் நாவல் எல்லாம் இருந்துது. இப்ப காணேல்ல. ;( வண்ணாத்திப் பூச்சி நிறைய வரும்.
    7 - போன வருஷம் வரை இருந்துது. இதையும் காணேல்ல. ;(
    8 - பட்டர் ஃப்ருட்
    11-13 - ப்ரொமீலியாட்ஸ்
    பச்சைப் பாதாம் நானும் சாப்பிட்டிருக்கிறேன்.

    பூக்கள் என்றாலே அழகுதான். பார்த்தால் மனதுக்கு சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....டீச்சர் கனநாளைக்கு பின் பூஸ் பக்கம் வந்திருக்காங்க.
      அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இமா.

      Delete
    2. ஆஆஆஆஆ வாங்கோ றீச்சர் வாங்கோ... ரீச்சர் இம்முறைதான் புதுப்போஸ்டுக்கு வந்திருக்கிறா:) இல்லை எனில் புதுசு இருக்கப் பழசுக்கே கொமெண்ட் போட்டிட்டுப் போவா கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      //இங்கு எங்கள் வீட்டிலும் ஒரு செவ்வரத்தை இருக்கிறது.//
      ஆஆஆஆஆஆ இது 3 வது சொல்..
      ஸ்ரீராம் சொன்னார்ர் மேலே.. செம்பரத்தை, செம்பருத்தி என.. இப்போ நீங்க செவ்வரத்தை என்கிறீங்க... :).

      //கடுகுநாவல் - நாயுண்ணிப்பழம்//
      ஆஆஆஆஆஆ மறந்துபோன பெயரை எல்லாம் நினைவு படுத்துறீங்க.. ஓம் கலர் கலரா ஊரில இருக்கும்..

      ஓ எட்டாவது பட்டர் ஃபுரூட்டோ.. அது அழகுக்காக காய்ச்சிருக்குது.

      மிக்க நன்றிகள் இமா.

      Delete
  27. Replies
    1. ஆஆஆஆஆ மிக மிக நன்றி.. அஞ்சூஊஊஊஊ ஓடிக்கமோன்.. ஒரு சொல்லோடு பதில் போடும் டிடி இன்று அதிகம் எழுதிட்டார்ர் ஹா ஹா ஹா.

      Delete
  28. இதற்கு ஏன் இவ்வளவு கருத்துரைகள்...?

    கொஞ்சம் பொறுங்க... Specilist ஸ்ரீராம் சாரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன்...! haa... ha...

    ReplyDelete
    Replies
    1. டிடி, நீங்க திருக்குறள் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தும்கூட... ஒரு குறளைப்போட்டு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் விட்டிட்டீங்களே.. இது நியாயமோ..

      மிக்க நன்றிகள் டிடி. நீங்களும் இப்போ அதிராவைப்போல அதிகம் பேசப் பழகிட்டீங்க ஹா ஹா ஹா...

      Delete
  29. ஒவ்வொரு படமும் அழகு கொஞ்சி விளையாடுகின்றன ..

    எத்தனை எத்தனை சிரிக்கும் மலர்கள் ..பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு ...

    ரசித்தேன் அனைத்தையும் ..


    அம்முலுவுக்கு எனது வாழ்த்துக்களும் ....

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அனு.

      Delete
    2. வாங்கோ அனு வாங்கோ.. நலம்தானே.. மிக்க நன்றிகள்.

      Delete
  30. வணக்கம் அதிரா சகோதரி

    முதலில் சகோதரி பிரியசகி அம்முலுவுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

    ஒவ்வொரு மலர்கள் படங்களும் மிக அருமையாக கண்ணையும் மனதையும் கவர்கிறது. குறிப்பாக 8 இரண்டும், 10 ஆவதும் மிகவும் அழகாக இருக்கிறது. 16 ம் படம் நீண்டு ஒரு குருத்தைப் போல மலர்கள் ஒருசேர மொத்தமாக சேர்ந்து வளர்ந்திருந்தாலும், ஒற்றுமையுணர்வோடு அழகாக ஜொலிக்கிறது. அத்தனையும் மிக அழகாக இருக்கின்றன.

    பச்சை பாதம் கொட்டைகள் பார்க்க நன்றாக உள்ளது. ஊசிக்குறிப்பு படித்ததும் மனதில் நிறைகிறது.

    இன்று நான்தான் கடைசி பெட்டி போலும். அடுப்பு சரியில்லாமல் (நெட் இணைப்பு) சேமியா கிச்சடியை ஒருவழியாக கிளறி முடித்து இங்கு வருவதற்குள் ஒரு நாளே முடிந்து அடுத்த நாளின் துவக்கம் வந்து விட்டது. ஹா.ஹா.ஹா. ஒருவழியாக அங்கும் அரைச்சதம் தேத்தி விட்டேன். நன்றி அனைவருக்கும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
    2. வாங்கோ கமலாக்கா வாங்கோ.. ரெயின் ஸ்பீட் எடுக்கும் நேரம் ஓடி வந்து ஏறிட்டீங்க:) நல்லவேளை எங்கட கார்ட் அங்கிளிடம் சொல்லி வச்சிருந்தேன்ன் கமலாக்கா கடசியா வருவா கவனமாக பார்த்து ஏத்துங்கோ என, அதனால ரெயினை ஸ்லோப் பண்ண வச்சிட்டாராம்:))..

      அனைத்தையும் அருமை எனப் புகழ்ந்திட்டீங்க.. மிக்க மிக்க நன்றிகள்...

      Delete
  31. எனக்கு உங்க பதிவுக்கு கருத்தெழுத நேரம் கிடைத்தது. முதலில் மீண்டும் உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி,நன்றி அதிரா.
    ஊர்ல செவ்வரத்தம்பூ, செம்பரத்தம்பூ பிடுங்கி வா,அல்ல து ஆய்ந்து வாஎன்பார்கள் .இது பேச்சு வழக்கு. ஆனா எழுத்திலும் நான் இப்படி எழுதியிருக்கேன். செம்பருத்தி சரியான தமிழ். ஆனா ஊர்ல கொஞ்சம் குறைவு இப்படி சொல்வது. நான் இங்கு செம்பரத்தம்பூ பூத்திருக்கு பார்த்தீங்களோ எனத்தான் சொல்வேன் இங்கு.
    1,2 படம் இது அனேகமா இந்த நாடுகளுக்குரிய செம்பரத்தை. இரு 2 காலநிலைக்கும் வளரும்.
    3ஏ படம் எங்கட ஊர் பூ போல இருக்கு. எல்லாமே வடிவான எனக்கு பிடித்த செம்பரத்தம் பூ.
    இந்த கடுகு நாவல் ஊர்ல சும்மா குப்பையா கலர்கலரா வளர்ந்திருக்கும். ஆனா இங்கு ஒரு செடியின் விலை. 5யூரோக்கு குறையாது. அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பா வரும். பக்கத்து டீச்சர் விரும்பி வளர்த்தா. நான் சொல்ல அதிர்ச்சி அவாவுகு..
    4வது படம் கிட்டதட்ட அரளிபூ மாதிரி இருக்கு.
    எனக்கும் வீட்டில் வளர்வதைக்காட்டிலும் ரோட்டோரங்களில் பூச்செடிகள் அழகா இருப்பதாகவே இருக்கும். மிக அழகாக பராமரித்து வள்ர்ப்பார்கள். இங்கு கவுன்சில் தான் அதற்கு பொறுப்பு.
    எங்கட வீட்டில் முன்னால் இந்த பாதாம் மரம் நிண்டது. நானும் இப்படி சாப்பிட்டிருக்கேன். இது பார்க்க கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. இப்படி சாப்பிடுவது நல்ல டேஸ்ட்.
    எல்லா படங்களும் அழகாக இருக்கு. நானும் பாட்டு இப்பதான் கேட்கிறேன். நல்லாயிருக்கு.
    ஊசிக்குறிப்பு, ஊசிஇணைப்பு அருமை.
    //இம்முறை படங்கள் ஹா ஹா ஹா.. இது அம்முலுவுக்காகவே ஸ்பெஷல் தொகுப்பு.//worless athira.
    Thank you very much Athiraaaaaaaaaaaaaaa ❤️ 😍 😍

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன இருக்கு அம்முலு.. முடியும்போது போஸ்ட் போட்டு வாழ்த்துவேன்ன்.. எல்லாம் ஒரு மகிழ்ச்சிக்காகத்தானே...

      //இந்த கடுகு நாவல் ஊர்ல சும்மா குப்பையா கலர்கலரா வளர்ந்திருக்கும். ஆனா இங்கு ஒரு செடியின் விலை. 5யூரோக்கு குறையாது.//
      ஹா ஹா ஹா அதேதான்.

      //பக்கத்து டீச்சர் விரும்பி வளர்த்தா. நான் சொல்ல அதிர்ச்சி அவாவுகு.//
      ஹா ஹா ஹா எனக்கு இங்கு சுரேக்கா எப்பவோ சொன்னது நினைவுக்கு வருது.. வெளிநாட்டில் பூனை நாய் வளர்ப்பதென்பது கொஞ்சம் பெரிய விசயம் தானே.. நம் நாடுகளோடு ஒப்பிடும்போது..

      அப்போ ஒரு வெள்ளை சுரேக்காவிடம் ஏதோ சொன்னதாம் தான் ஒரு பப்பி வளர்க்கிறேன் என.. அதுக்கு இவ சொல்லியிருக்கிறா, ஊரில எங்கட மம்மி 2 பூனை, 3 , 4 பப்பீஸ் வளர்க்கிறவ என்பதுபோல என்னமோ ஹா ஹா ஹா.. அப்போ அந்த வெள்ளை.. ஆ..அவ்ளோ பணக்காரரோ என்பதைப்போல வாயடைச்சு நிண்டதாம் ஹா ஹா ஹா.

      //எங்கட வீட்டில் முன்னால் இந்த பாதாம் மரம் நிண்டது. நானும் இப்படி சாப்பிட்டிருக்கேன். //
      ஊரைச் சொல்றீங்களோ.. அது வேறு அம்முலு.. அது பொல்லாத வைரமாக இருக்கும்.. இது கோது வெரி வெரி சொஃப்ட்.

      மிக்க நன்றி அம்முலு.. நன்றிக்கு நன்றி:)

      Delete
  32. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அம்மு என்றும் மகிழ்வான தருணங்கள் உமதாக நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும் !

    பூஸாரின் பூக்களுக்குப் பதிலை பின்னர் தருகிறேன் வாழ்க நலம் !

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. மிக்க நன்றி வருகை தந்ததுக்கு.

      //பூஸாரின் பூக்களுக்குப் பதிலை பின்னர் தருகிறேன் வாழ்க நலம்//

      அதுக்கு முதல் போன பதிவில நீங்க போகிறபோக்கில ஈசியா ஒரு கவிதையை எறிஞ்சிட்டுப் போயிட்டீங்க.. இங்க நானும் நெல்லைத்தமிழனும்.. கிழக்கும் மேற்கும் கரைகளில நிண்டெல்லோ அடிச்சுப் புரள்ளோம்:)) அதுக்குப் பதில் ஜொள்ளாமல் போகலாமோ கவிஞரே:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.

      Delete
  33. அனைத்துப் படங்களும் அருமை
    ரசித்தேன்

    ReplyDelete
  34. அனைத்தும் அழகான பூக்கள். இயற்கையை மிஞ்ச எவரும் இல்லை என்பதை நிரூபிக்க பூக்கள் மட்டுமே போதும்!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.