இத் தலைப்பை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் குப்புறக்கிடந்து “என் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணான” கிட்னியை யூஸ் பண்ணி, பலமாக சிந்தித்துக் கண்டு பிடித்த தலைப்பூஊஊஊஊ இது...
இது என் கொப்பிரைட் தலைப்பூ:).... இதை ஆராவது களவாடிப்போய் எங்காவது போட்டதைக் கண்டால், உடனேயே எனக்கு சொல்லிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்.... எதுக்கோ? ஓடிப்போய் கட்டிலுக்குக்கீழ ஒளிக்கத்தேன்:).
இது எப்பவோ, பொழுதுபோகாத ஒரு பொழுதில் எடுத்தேன், இங்கு போடுவதற்கென பிளான் பண்ணி எடுக்கப்படவில்லை. இப்போ ஏதோ திடீரென போடலாமே என ஒரு துணிவு வந்துது அதேன்....
பூஸ் குட்டிகள் தெரியுதோ?:)
கிச்சினிலிருந்து பின் கார்டினுக்குச் செல்லும் வாசல்...
=========================================================
==========================================================
ஊசி இணைப்பு:)
==========================================================
|
Tweet |
|
|||
அதிராக்கா, கிச்சனை அருமையா வச்சிருக்கிறீங்க. ஒரியாக்காரர்கிட்ட காமிச்சா எனக்கு தீபாவளிதேன். ஹி ஹி :)
ReplyDeleteஉங்க வீட்டுல் நிறைய பூஸார் இருப்பாருன்னு பார்த்தா பூஸார் படம் மட்டும் காட்டறீங்க??
ஸ்பைடர்மேனும், அதன் அருகில் அழகாய் போஸ் குடுக்கும் குட்டிப்பயலும் அழகோ அழகு. :))
வாவ்..சூப்பர்..அப்புறம் வர்ரேன்.
ReplyDeleteமிக அருமை,அழகு..நல்வாழ்த்துக்கள்.அந்த ஒற்றை இலையும் கவிதையும் சூப்பர்.நான் இப்படி கிச்சன் இருந்தால் கிச்சனை விட்டு வெளியே வரவே மாட்டேன்.நல்ல ரசனை உங்களுக்கு அதிரா...
ReplyDeleteஉங்கள் இதயம் மிக நேர்த்தி என்று அந்த இதயவடிவ இலையே காட்டுகிறது.ஒரு பெரிய சிவப்பு மிளகாயை கிச்சனில் கட்டி தொங்கவிடுங்கோ!கண்ணு படாம இருக்கும்.
ReplyDelete/இது எப்பவோ, பொழுதுபோகாத ஒரு பொழுதில் எடுத்தேன், இங்கு போடுவதற்கென பிளான் பண்ணி எடுக்கப்படவில்லை./கேக்காமலே விளக்கம் கொடுத்துட்டீங்க அதிரா!:)
ReplyDeleteபூஸ் குட்டிகளைக்காட்ட மனசில்லாமல் 'நல்வரவு'சொல்லியிருக்கீங்க,அப்புறம் மனசு மாறிட்டது போலிருக்கே? நான் சொல்வது வேஏஏற பூஸ்குட்டிகள்!! ;)
பெரிய பெரிய செடிகள் வளர்ந்திருக்கே..நல்லா வெயில் வருமோ கிச்சனுக்குள்ளே? வாஷர்-ட்ரையர் கூட அங்கேயே இருப்பது போல தெரியுது. காம்பாக்ட்டா இருக்கு அதிரா.
கிச்சன் டைல்ஸ் கலர் உங்க செலக்ஷனா? அம்முலு அவங்க வீட்டில ஆரஞ்ச் கலர் டைல் பாத்தேன்,இங்கே ப்ளூ! யு.கே.ல எல்லார் வீட்டுக்கிச்சனும் கலர்புல்லாத்தான் இருக்கும் போல! :):)
/ஒரு பெரிய சிவப்பு மிளகாயை கிச்சனில் கட்டி தொங்கவிடுங்கோ!கண்ணு படாம இருக்கும். /என்னது கண்ணு படுமா? ஆசியாக்கா,பூஸுக்கேவா?? ;) :)
அன்னு வாங்கோ, மிக்க நன்றி. “ஒரியாக்காரரோ?” எனக்கு ஒரியாவில் இருந்த ஒருவரை மட்டும்தான் தெரியும்:))))).
ReplyDeleteஇன்னும் சுவரில பூஸார் இருக்கிறாங்க:)... நேரம் வரும்போது அவிங்களையும் காட்டுறேன்.(கீழால ஓடித் திரிகிற பூஸ் குட்டிகளைச் சொல்றீங்களோ? ஹா..ஹா..ஹா...)).
வரவுக்கு மியாவும் நன்றி அன்னு.
ஸாதிகா அக்கா வாங்கோ, அந்தப்புரத்துக்கு வாறீங்களோ? அங்கயும் தேடிட்டேன் உங்களைக் காணல்லே.... பயப்பூடாமல் வாங்கோ... அங்க எங்கட ஆட்சிதான் நடக்குது....:)))
ReplyDeleteசும்மா ஸாதிகா அக்கா... எல்லோரையும் குழப்பிவிடத்தான்...
நீங்க அப்புறமா வாங்கோ நானும் அப்புறம்தான் வருவேன்... நேரமாகிட்டுது..
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா வரவுக்கு.
கிச்சின் கலக்கலா இருக்குது அதீஸ். ;)
ReplyDeleteநான் சொல்வதும்..//பூஸ் குட்டிகளைக்காட்ட மனசில்லாமல் 'நல்வரவு'சொல்லியிருக்கீங்க,அப்புறம் மனசு மாறிட்டது போலிருக்கே? நான் சொல்வது வேஏஏற பூஸ்குட்டிகள்!! // ;)))
வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...!!
ReplyDeleteமுதல் படத்தில நல்வரவுன்னு ஸ்டிக்கர் ஒட்டிய நீங்க அடுத்த படத்தில ஒட்டலையே...!! குட்டீஸ் இரெண்டும் சூப்பர் :-))
இரெண்டாவது படத்தில குட்டியா ஒரு ஸ்டூல் இருக்கே..உயரம் எட்டாதா...ஹி..ஹி...:-))
ReplyDeleteகிச்சனுக்குள்ளே சி டி ரேக் வச்சதை இப்பதான் முதன்முதலா பார்க்கிறேன் ..பூஸ் அதிக நேரம் இருப்பது கிச்சனில்தானா ஹா..ஹா..
ReplyDeleteஅழகா இருக்கு போட்டோ...ச்சே...அழகா இருக்கு கிச்சன் :-)))
ReplyDeleteஅதீஸ், கிச்சன் அழகா இருக்கு. நல்வரவு ஏன்??? இப்படி எழுதி வைச்சா தான் மிஸ்டர். அதீஸ் பயப்பூடாமல் சாப்பிட வருவாரா???
ReplyDeleteகிச்சனில் சி.டி...... ஓ! அதுவா பூஸார் பாடி ரெக்கார்ட் பண்ணிய பாடல்களா இருக்கும்.
என் கிச்சனில் ஸ்டூல் இல்லை. இதிலிருந்து என்ன தெரியுது? நான் அதீஸை விட உயரமாக்கும் ஹிஹி...
ரைஸ் குக்கர், பூச்சாடி, குப்பைத் தொட்டி( garbage bin) .... எல்லாமே அழகு.
வாங்க ஆசியா மிக்க நன்றி.
ReplyDeleteஆமாம் அந்த இலையும் அதிலுள்ள வசனமும் ரொம்பப் பிடித்திருந்தது, அதுதான்.... சுட்டிட்டேன்ன்ன்ன்.
வீடு வாங்கும்போது பார்க்க வந்த இடத்தில் எனக்கு முதலில் பிடித்ததே இந்தக் கிச்சின்தான். எனக்கு இரவு நேரங்களில் கீழ் ஃபுளோரில் தனியே இருக்கப் பயம். கிச்சின் கீழ் ஃபுளோர்தானே, நைட்ல ஒரு அந்தரமாவத்துக்கு கிச்சினுக்குப் போகவேண்டிவந்தால் தனியே கீழே இறங்கிப்போகமாட்டேன், ஜன்னலோரம் ஆராவது நின்றாலும்,அப்படி ஒரு கற்பனைப் பயம்:)).
ஆனால் இந்தக் கிச்சின் எப்படியென்றால்.... நிலத்திலிருந்து(வெளி) கிட்டத்தட்ட 12 அடிக்கு மேல உயரமிருக்கும் கிச்சின் ஜன்னல், மலைப்பகுதி என்பதால அப்படி ஒரு அமைப்பு...கிச்சின் வாசலிலிருந்து படியிறங்கித்தான் கீழே வரவேண்டும்.... அதனால ஆரும் பாய்ந்தால்கூட கிச்சின் ஜன்னலை தொடமுடியாது.... இப்போ சாமத்திலும் கிச்சின் போய் வருவேன் ததததனியா...
வீடு வாங்கிய புதிதில் எல்லாம் தொங்கத்தான் விட்டோம்.... இப்போ நானே போதுமே:):)))
மியாவும் நன்று ஆசியா.
வாங்க மஹி, மிக்க நன்றி. ஒரு கோடைகாலத்திலே எடுத்த படங்கள் அவை.
ReplyDelete///பூஸ் குட்டிகளைக்காட்ட மனசில்லாமல் 'நல்வரவு'சொல்லியிருக்கீங்க,அப்புறம் மனசு மாறிட்டது போலிருக்கே? நான் சொல்வது வேஏஏற பூஸ்குட்டிகள்!! ;)
/// அது வேஏஏஏஏஏற இது வேஏஏஏஏஏஏற.. மஹி. அப்பூடியில்லை, இதில தூரமாகத் தெரியுது, அதில கிட்டடியாகத் தெரியுது அதனால்தான் அப்பூடிச் செய்தேன்...:).
ஓம், கோடையில சூப்பராக வெயில் கிச்சினுக்குள் வரும், வெளியே நம் நாட்டு பயிர்கள் வளராது ... எப்பவும் குளிர் இருக்கும், அதனால்தான் வெண்டி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை உள்ளே வைத்து வளர்ப்பேன்... உ.கிழங்கு, கபேஜ், பீற்றூட், கரட், வெங்காயம்.... இவையெல்லாம் வெளியில் செய்வோம்..... ஹா..ஹா...ஹா.. கமக்காரர்:):).
பிரித்தானியாவில எல்லாமே கிச்சினுக்குள்தான் இருக்கும், இப்போ புதுசாக கட்டும் வீடுகளுக்கு கிச்சினோடு ஒரு குட்டி அறை கட்டி அதில் எல்லா மெஷின்களையும் வைக்கிறார்கள்.
ரைல்ஸ்... வீடு வாங்கும்போதே இருந்தது, நிலம் மட்டும்தான் நாங்கள் வூட் போட்டெடுத்தோம்.
அம்முலு இருப்பது பிரித்தானியாவிலல்ல மஹி.
//என்னது கண்ணு படுமா? ஆசியாக்கா,பூஸுக்கேவா?? ;) // அதானே... நம்மள்ள ஆரும் கண்ணுபோட நாம் விட்டிடுவோமா? கர்ர்ர்ர்ர்ர்... எஸ்ஸ்ஸ்ஸ்.
மியாவும் நன்றி மஹி.
உங்க வீட்டு சமையலறை ரொம்ப அழகா இருக்கு அதிரா!!
ReplyDeleteவாங்க இமா மிக்க நன்றி..... மற்றதுக்கு பதில் மேலே போட்டிட்டனே...:).
ReplyDeleteஆ... ஜெய் வாங்கோ.. ரீ குடிக்கத்தானே இந்த சவுண்ட்ட்ட்ட்ட்ட்ட்.. இஞ்சி ரீ, மசாலா ரீ, லெமன் ரீ, கிரீன் ரீ, சைனீஷ் ரீ, மில்க் ரீ, ........ எதுவும் வாணாமெண்டால் பிளேஏஏஏஏஏஏன் ரீ... எது வேணும் ஜெய்?... ரொம்ப ரயேட்டாகி இருக்கிறீங்கபோல, கீழ போயிருந்தீங்களோ மேல போயிருந்தீங்களோ? ஐ மீன்... மலைக்கோ? கடலுக்கோ?... ஓக்கை ஓக்கை முறைக்க வாணாம்:).
ReplyDeleteகரெக்ட்டா பார்க்க வேண்டியதை விட்டிட்டு.... பார்க்கக்கூடாததைக் கண்டிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்.... ஸ்ரூல்... அது பூஸ் இளைப்பாற:).
கிச்சினில் ரேப்.... ஹா..ஹா...ஹா... அது மரக்கறி ரேப் ஜெய்..., தமிழ் பாட்டு மட்டும்தான் போடுவேன்... கிச்சினில் எவ்வளவு சவுண்டாகப் போட்டாலும் ஆரும் ஒன்றும் சொல்ல மாட்டினம்... ஆனா வெளியில் தமிழ் பாட்டு பலமாகப் போட்டால்... எல்லோருக்கும் (என்னைவிட)முகம் மாறிடும், எனக்காக ஒன்றும் சொல்லாமல் இருப்பினம், ஆனால் முகத்தைப் பார்த்தே நாம் கண்டுபிடிப்பதில கெட்டிக்காரராச்சே:).
//பூஸ் அதிக நேரம் இருப்பது கிச்சனில்தானா ஹா..ஹா..
// நான் கிச்சினில் நிற்பது வீட்டிலிருப்பவர்களுக்கு பிடிக்காது... அவிங்களுக்கு போறிங் வந்துடும்....:)))).
மியாவும் நன்றி ஜெய் போட்டோ பார்த்ததுக்கு சே..சே.. கிச்சின் பார்த்ததுக்கு.....
வாங்க வான்ஸ்ஸ்ஸ்..
ReplyDelete///நல்வரவு ஏன்??? இப்படி எழுதி வைச்சா தான் மிஸ்டர். அதீஸ் பயப்பூடாமல் சாப்பிட வருவாரா???
/// ஹா..ஹா..ஹா.. ஸ்ரிக்ட்லி நோ கொமென்ஸ்ஸ் வான்ஸ்ஸ்(எல்லாம் எங்கட அம்பியிடம் இருந்து கற்றுக்கொண்டது..).
//கிச்சனில் சி.டி...... ஓ! அதுவா பூஸார் பாடி ரெக்கார்ட் பண்ணிய பாடல்களா இருக்கும்.///உப்பூடிச் சொன்னால் பிறகு நான் பாடியிருக்கிற... “சின்னச் சின்னப் பூனை”... பாட்டை இங்க பப்ளிக்கில போட்டிடுவன்...:).
வான்ஸ்ஸ் சமைக்கும்போது பாட்டுப் போட்டால், நேரம் போவது தெரியாமல் டபார்:) கமார்:)... எனச் சமைச்சிடலாம்....:).
///நான் அதீஸை விட உயரமாக்கும் ஹிஹி...
/// ஹா..ஹா...ஹா.... அமெரிக்கா கொஞ்சம் உசரத்திலதான் இருக்கூஊஊஊஊஊ:)... நான் உலகப்படத்தைச் சொன்னேனாக்கும்..
//குப்பைத் தொட்டி( garbage bin) /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆங்கிலத்தில விளக்கம் வேற:)..
மியாவும் நன்றி கால் வச்ச வனி...
வாங்க மேனகா மிக்க நன்றி.
ReplyDelete//இரெண்டாவது படத்தில குட்டியா ஒரு ஸ்டூல் இருக்கே..உயரம் எட்டாதா...ஹி..ஹி...:-)) //
ReplyDeleteஇதைத்தான் நானும் நினச்சேன்... அப்புறம் சரி வீட்டிலிருக்கு பூஸார் உபயோகிப்பார்ன்னு விட்டுட்டேன் :) ஹெ ஹெ
அன்னு said... 21
ReplyDelete//இரெண்டாவது படத்தில குட்டியா ஒரு ஸ்டூல் இருக்கே..உயரம் எட்டாதா...ஹி..ஹி...:-)) //
இதைத்தான் நானும் நினச்சேன்... அப்புறம் சரி வீட்டிலிருக்கு பூஸார் உபயோகிப்பார்ன்னு விட்டுட்டேன் :) ஹெ ஹெ
//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்....:) எத்தனையோ ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து வாங்கின கிச்சினை விட, ரெண்டு பவுண்டுகள் கொடுத்த வாங்கின ஸ்டூலுக்கு இவ்ளோ மரியாதையாக்கிடக்கே.....
சில நேரம் ஏஏஏஏஏஏஏஏஏறி மேல் தட்டில் சாமான் எடுக்க:), சிலநேரம், ஆக்களுக்கு மத்தியில போட்டுவிட்டு இருந்து ரீ குடிக்க .... சிலநேரம் என் சமையலை, வீட்டுக்குட்டீஸ் அதில ஏறி நின்று பார்க்க.... இப்பூடி பல கோணத்தில அவர் சேவை செய்துகொண்டிருக்கிறார்....:):).. உஸ் அப்பாடா முந்தியெண்டால் ஜெய்க்கு மட்டும்தான் சந்தேகம் வரும் ஈசியாச் சமாளிச்சிடலாம்.... இப்போ... பூஸைப் பார்ப்போரெல்லாம் சந்தேகமாகவே பார்க்கினமே... சே..சே.. இனி கட்டிலுக்குக் கீழயே இருந்திடோணும்...:).
வரவுக்கு நன்றி அன்னு..
அதிரா சுப்பர் கிச்சன். டைல்ஸ் கலர் எனக்கு பிடித்த கலர். எல்லாமே அழகு. செடிகள் எல்லாம் கிச்சனில் வைத்து வளர்வது என்றால் கன்னுக்கு ரொம்ப குளிர்ச்சி. ம்.. எங்க ஊரில் மொத்தமே 3 மாதம் தான் வெயில் நிங்க சொல்வது போல் கத்தரி, தக்காளி, வெண்டை ஸுக்கினி இதெல்லாம் தான் வளரும்.
ReplyDelete//கரெக்ட்டா பார்க்க வேண்டியதை விட்டிட்டு.... பார்க்கக்கூடாததைக் கண்டிட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்.... ஸ்ரூல்... அது பூஸ் இளைப்பாற:).//
ReplyDeleteநான் பார்த்த ,கேட்ட ,ஒரு குட்டி சேருக்கே மக்கள்ஸ் இத்தனை கேள்விகள் ஹி..ஹி... இன்னும் அதையும் கேட்டால் ஹா..ஹா...
//உஸ் அப்பாடா முந்தியெண்டால் ஜெய்க்கு மட்டும்தான் சந்தேகம் வரும் ஈசியாச் சமாளிச்சிடலாம்.... இப்போ... பூஸைப் பார்ப்போரெல்லாம் சந்தேகமாகவே பார்க்கினமே..//
ReplyDeleteஇப்போ ச ச சங்கத்துக்கு ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க ...!! :-))
//எத்தனையோ ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து வாங்கின கிச்சினை விட, ரெண்டு பவுண்டுகள் கொடுத்த வாங்கின ஸ்டூலுக்கு இவ்ளோ மரியாதையாக்கிடக்கே.....//
ஓக்கை...அரை லிட்டர் ரைஸ் குக்கர் இருக்கே வீட்டு மக்கள்ஸுக்கு இது போதுமா ? ஹை..இப்ப என்னா செய்வீங்க ..இப்போ என்னா செய்வீங்க...!!
வாங்க விஜி, வரவுக்கு மிக்க நன்றி. எனக்கும் மரம் வளர்த்து காய்கள் பறிப்பதில் ரொம்ப பிரியம்... ஆனால் இக் குளிருக்கு காய்க்குதில்லையே....:(.
ReplyDeleteஎமக்கு வெய்யிலைக் காண்பதே குறைவுதான், ஆனால் சில நாட்கள் நல்ல வெயில் இருக்கும் ஆனாலும் குளிர் குறையாது... மழைதான் அதிகம்.
மியாவும் நன்றி விஜி.
ஜெய்லானி said... 25
ReplyDelete///
இப்போ ச ச சங்கத்துக்கு ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க ...!! :-))
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர், இருக்காங்க இல்ல, ஆட்களைச் சேர்த்திட்டீங்க எனச் சொல்லோணும்..
///ஓக்கை...அரை லிட்டர் ரைஸ் குக்கர் இருக்கே வீட்டு மக்கள்ஸுக்கு இது போதுமா ?///
அதுதானே பார்த்தேன்... சாப்பாடு சம்பந்தமான ஐட்டம்தானே ஜெய் கண்ணுக்குப் படும், இது எப்பூடிப் படாமல் போச்சென:)).
ஜெய் இதில இருந்து தெரிஞ்சுகொள்ளுங்க... நாங்க கொஞ்சூண்டு ரைஸ்தான் சாப்பிடுவோம்.... அதனால சரியான மெல்லிசூ பூஸூ...:).
உஸ் அப்பா, இனி இதைப் பார்த்திட்டு எங்கட தாய்க்குலமெல்லாம் வருவினம்... உண்மையாகவோ அரை லீட்டர்தானோ...?:) என பல சந்தேகத்தோடு.. கர்ர்ர்ர்ர்ர், அதுக்கு முன்னமே சொல்லிடறேன்.. அது 2 லீட்டர்.
சரி இது போகட்டும்... ஜெய் அதெப்படி உங்களுக்கு மட்டும் பெரிசெல்லாம் சின்னன் சின்னனாகவே தெரியுதே ஏன்?....
ஆ..... இல்ஸ்ஸ்ஸ் அரக்கி இருங்கம்மா... மெல்ல மெல்ல அரக்காமல் கொஞ்சம் ஸ்பீட்டா அரக்கினால் என்னவாம்... ஆபத்து கட்டிலுக்குக் கீழயும் வந்திடும்போல இருக்கே..:))))
பூஸார் கார் ஓட்டுவது சூப்பரா இருக்கு.கவனம் பார்த்து பூஸாரை ஓட்டச்சொல்லுங்கோ.இந்தசூட்டோட வரப்போயினம் பாருங்கோ.
ReplyDeleteஅதிராவின் அடுக்களை(யாகவுள்ளது)சூப்பரா இருக்கு.எங்க பழையவீட்டு சமையறையை ஞாபகப்படுத்தியது. அந்த வாசல் சூப்பர்.நானும் வீடு ப்ளான் பண்ணினதும் வெளிப்பக்கமாக வாசல் இருக்கவேணும் என்று சொல்லிட்டன்.சம்மரில நல்லாயிருக்கும்.(கிச்சனுக்காகவே ப்ளாக் ஆரம்பிக்கவேணும் போல்)
அந்த கோனர் என் ச.அ இருக்கு. நானும் படம் வைத்திருந்து பின் எடுத்திட்டன்.
உங்க கிச்சனுக்கு 2 ஜன்னலா?? நல்லா வெளிச்சம் வரும்.
.
கார்டனில் இருப்பதில் யார் துள்ளுவார்கள்!!!!!!!
உங்க குட்டீஸ் அழகாக இருக்கிறார்கள்.
சூப்பர் கவிதை அதிரா. அந்த இலையும் அழகாயிருக்கு.
அழகான அதிரா)வின் அடுக்களை.
ஆஹா...அழகான கிச்சன்..படங்கள் அழகு...calenderயில் பூனை குட்டிகள் அழகாக இருக்கு...
ReplyDeleteஅதிரா.. கொள்ளை அழகாக இருக்கு.. என் அப்பா கேட்டிருந்தார், சில கிட்சன் படங்களை அனுப்பச் சொல்லி.. இதை அனுப்பிப் பார்க்கிறேன்.. இன்னும் முப்பரிமாண தோற்றத்தை உள்வாங்க முடியலை.. மூன்று பக்கங்களும் வர்ற மாதிரி ஒன்று எடுத்துப் போட முடியுமா?
ReplyDelete//அதீஸ், கிச்சன் அழகா இருக்கு. நல்வரவு ஏன்??? இப்படி எழுதி வைச்சா தான் மிஸ்டர். அதீஸ் பயப்பூடாமல் சாப்பிட வருவாரா???//
ஹி ஹி.. எனக்கும் இதே ரவுட்..
பூசோட குட்டிகளும் காணக் கிடைத்தன :))
கிச்சனுள் செடிகளும் பார்க்க நல்லா இருக்கு.. இப்படி வளர்ப்பதை இப்போ தான் கேள்விப்படறேன்.. ம்ம்..
எனக்கு லேடி காகா நினைவுக்கு வர்றார்.. அவரோட படம் ஏதும் வைக்கலையா கிச்சனில்? :))
ReplyDelete//லேடி காகா// ;)
ReplyDelete“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே.. புதையல் தேடி அலையும் உலகில்... என்பக்கம் தேடும் .........................”
ReplyDeleteமுன்னொரு காலத்தில எனக்காகப் பாடின பாட்டு... ஆர் பாடினது எண்டெண்லாம் ஆரும் குறுக்க கேள்வி கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
வாங்கோ அம்முலு மிக்க நன்றி... காணலியே என யோசித்தேன்....
//பூஸார் கார் ஓட்டுவது சூப்பரா இருக்கு.கவனம் பார்த்து பூஸாரை ஓட்டச்சொல்லுங்கோ.இந்தசூட்டோட வரப்போயினம் பாருங்கோ.
/// உங்கட வாய் பொன் வாயாகட்டும்....
இப்போ, என் துவக்கோட இலா மிஸ்ஸிங்:). நான் அண்ணனைத் தேடுவனா? தம்பியைத் தேடுவனா? இல்ஸ்ஸைத் தேடுவனா??... எல்லோரையும் தேடித் தேடியே ரெம்ப வயக்கெட்டுப்போனேன்:((((.
கிச்சினுக்கு 2 ஜன்னல்தான். வெளிவாசல் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கு... சமருக்கு அந்த வாசல் படியில இருந்து ரீ... குடிக்க்கேக்கை... அப்பூடியே ஊர் நியாபகமாகவே இருக்கும்...
///கார்டனில் இருப்பதில் யார் துள்ளுவார்கள்!!!!!!!
/// ஹீ...ஹி..ஹீ அது வடிவுக்காக வச்சிருக்கு:):)))).
மிக்க நன்றி அம்முலு.. வருகைக்கும் கருத்துக்கும்....
வாங்க கீதாச்சல் மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க சந்து வாங்கோ.. உங்க பொஸ் நலம்தானே?
ReplyDelete///மூன்று பக்கங்களும் வர்ற மாதிரி ஒன்று எடுத்துப் போட முடியுமா?
/// மூன்றென்ன ஆறுபக்கம் வாறமாதிரியே எடுத்துப் போடுறேன் கொஞ்சூண்டு வெயிட் பண்ண முடியுமா?:). உங்க அப்பாவுக்காகத்தானே?.
//பூசோட குட்டிகளும் காணக் கிடைத்தன :))
// இதுக்கு முன்பு “அங்க” காணல்லியோ?.. முடிந்தால் போய்ப் பாருங்கோ..
http://www.arusuvai.com/tamil/node/9434
//இப்படி வளர்ப்பதை இப்போ தான் கேள்விப்படறேன்../// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எந்த “உலகத்தில” இருக்கிறீங்க நீங்க?:).
///எனக்கு லேடி காகா நினைவுக்கு வர்றார்.. அவரோட படம் ஏதும் வைக்கலையா கிச்சனில்? :))// இப்போ லேடிகாகா வின் அட்ரஷே இல்லை வீட்ல:):)...
மியாவும் நன்றி சந்து.... ஆரோ சிரிச்சுக்கேக்குது கீழ:).
இமா said... 32
ReplyDelete//லேடி காகா// ;)
//// வந்திட்டாரையா வந்திட்டார்.....
மலையில் மருந்தெடுத்து
மாமலையில் தேனெடுத்து...
பாட்டி வைத்தியமும் பார்த்து...
கைப்பிடி வைத்தியரையும் பார்த்தும்...
இன்னும் சிரிப்பு நிக்கலையே....
இனி எங்க மருந்தெடுப்பேன் நான் ...
நான் ஸ்மைலியைச் சொன்னேன்...:))
மியாவும் நன்றி இமா... அடிக்கடி வாங்கோ.
////பூசோட குட்டிகளும் காணக் கிடைத்தன :))
ReplyDelete// இதுக்கு முன்பு “அங்க” காணல்லியோ?.. முடிந்தால் போய்ப் பாருங்கோ..//
ஹை... டிவின்ஸா...சூப்பர் ...((இது எப்படி என் கண்ணில மாட்டாம போச்)) :-)
////லேடி காகா// ;) //
அப்போ கிச்சனில் இருப்பது அவரா..????ஓரே குயப்பமா இருக்கே.. எவரெஸ்ட்...!!இதோ வந்துகிட்டே இருக்கேன் :-))
அதிரா எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு, நான் கனவு கண்டு வைத்திருப்பது போல் அச்சு அசல் அப்படி யே இருக்கு
ReplyDeleteஆனால் இதை நான் கனவில் மட்டும் தான் கான இயலும்
சான்ஸே இல்லை
இது போல் (சிக்கனில் ) இல்ல கிச்சனில் பால் கனியோடு, நிரைய ஸ்லாபுகள், ஆகா இப்படி கொடுத்த மிக அருமை, இன்னும் நிறைய சமைக்க தோனும்,
இத என் ச்மையலறைன்னு அறுசுவையில் ஓவ்வொருத்தரா அனுப்புராஙக் அங்கு அனுப்புங்களே
ReplyDeleteசூப்பரா இருக்கு
ஹை... டிவின்ஸா...சூப்பர் ...///
ReplyDeleteஇல்ல ஜெய்... ருவின்ஸ் மாதிரி:0... 3 1/2 வயது இடைவெளி...
((இது எப்படி என் கண்ணில மாட்டாம போச்)) :-)கர்ர்ர்ர்ர்ர்ர்... நீங்க “அங்க” இருந்தால்தானே படும்:))
//அப்போ கிச்சனில் இருப்பது அவரா..????ஓரே குயப்பமா இருக்கே.. எவரெஸ்ட்...!!இதோ வந்துகிட்டே இருக்கேன் :-))
/// ஜெய்...ஜெய்... போயிடாதீங்க... பொல்லாத சொப்பனம் நாமும்(நாம் என்றால்... நம்மட கூட்டம்:)))கண்டோம்..
போயிடாதீங்க... மும்மூர்த்தியாக இருந்தவர்களில் இருவரைக் கூட்டிவரவே முடியாமல்.. ரத்தக் கண்ணீர் வடியுது... இப்போ உங்களை மட்டும்தான் பிடிச்சு வச்சிருக்கிறோம்... உடும்புப்பிடியாக... போக விட்டிடுவமா? இல்ல தெரியாமல்தான் கேட்கிறன் போக விட்டிடுவமா????? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இல்ஸ்ஸ்ஸ் அந்த புளொட் இல்லாத துவக்கை ஒருக்கால் இந்தப்பக்கம் திருப்பிப் பிடிங்கோ... எவரெஸ்ட்டாம் எவரெஸ்ட்ட்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
உஸ் அப்பாடா இப்பூடி வியர்க்குதே... மியாவும் நன்றி ஜெய்...
//போயிடாதீங்க... மும்மூர்த்தியாக இருந்தவர்களில் இருவரைக் கூட்டிவரவே முடியாமல்.. ரத்தக் கண்ணீர் வடியுது.//
ReplyDeleteமீதி ரெண்டு மூர்த்தி எங்கேன்னு சொல்லுங்க வலை போட்டு பிடிச்சிடலாம் . (நா பாச வலையை சொன்னேன் ..மீன் வலைன்னு நினைச்சிகிட்டு கத்தியோட எஸ்கேப்பாயிடப்போறாங்க ))
//இல்ஸ்ஸ்ஸ் அந்த புளொட் இல்லாத துவக்கை ஒருக்கால் இந்தப்பக்கம் திருப்பிப் பிடிங்கோ... எவரெஸ்ட்டாம் எவரெஸ்ட்ட்...//
என்னது துவக்காஆஆஆ...நான் ஆடாம அசையாக அப்படியே ஃபிரீஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்....அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஜலீலாக்கா வாங்கோ..
ReplyDelete//ஆனால் இதை நான் கனவில் மட்டும் தான் கான இயலும்
சான்ஸே இல்லை
/// ஏன் அப்பூடிச் சொல்றீங்க ஜலீலாக்கா, இது ஒன்றும் அப்படி பெரியதாக இல்லை. இங்கே சில கிச்சின்கள் பார்க்க முடியாத அழகாக இருக்கும், உங்களுக்கு ஒன்று தெரியுமா? எம்மவர்கள் சிலர்... பெரீஈஈஈஈய வீடு, பெரீஈஈஈய கிச்சினுடன் வாங்கிப்போட்டு, கிச்சினில் சமைப்பதில்லை. கீட் அண்ட் ஈட், அவன் சாப்பாடு, சமரில வெளியில குக்கர் வைத்து மீன் பொரிப்பது.... இப்படியும் கொடுமை எல்லாம் நடக்குது, ஏனெண்டால் கிச்சின் “பழுதாகிடுமாம்”.... இந்தக் கொடுமையை என்ன வென்பது...:).
//ஆகா இப்படி கொடுத்த மிக அருமை, இன்னும் நிறைய சமைக்க தோனும்,
// ஆஹா... தந்தைக்குலமே நோட் திஸ் பொயிண்ட்.... நல்ல அயகான கிச்சின் வாங்கிக்கொடுத்தீங்களெண்டால்... தாய்க்குலம் கிச்சினைவிட்டு வெளியே வரமாட்டார்களாம்... உங்களுக்கு ஜாலிதான்... :).
//இத என் ச்மையலறைன்னு அறுசுவையில் ஓவ்வொருத்தரா அனுப்புராஙக் அங்கு அனுப்புங்களே
சூப்பரா இருக்கு//
ஜலீலாக்கா.... நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்... ஸ்ரிக்ட்லி நோ கொமெண்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆ... அம்பிதான் இதைச் சொல்லித்தந்தவர், ஆனால் கொப்பிரைட் எண்டெல்லாம் அவர் சொல்லேல்லை....:).
மியாவும் நன்று ஜலீலாக்கா... நீங்கள் புளிச்சாதம் சாப்பிட்டு நல்லா இருங்கோ....
ஆ..... கப்படிக்கிற வாசமாக்கிடக்கே எனப்பார்த்தேன்... ஓ எங்கட ஜெய்... ஜெய் குளிக்கும்போதும் ஹெல்மெட்டோட கு”லி”ச்சால் சந்தன வாசமா வரும்?:)...
ReplyDelete///மீதி ரெண்டு மூர்த்தி எங்கேன்னு சொல்லுங்க வலை போட்டு பிடிச்சிடலாம் . (நா பாச வலையை சொன்னேன் ..மீன் வலைன்னு நினைச்சிகிட்டு கத்தியோட எஸ்கேப்பாயிடப்போறாங்க ))
/// யெல்ப் அஸ் ஜெய்... அவிங்க இருவரும்தான் மேல ஹெலிக்குள்.., தம்பி ஆ.கோ றில தலையை வெளில விட்டுப் புறுணம் பார்க்கிறார்....:) அண்ணன்... சரிஞ்சுண்டேஏஏஏஏஏ ஓட்டுறார்.... இலாக்கா குறி வைக்கிறா... வைக்கிறா... இன்னும் வச்சு முடியேல்லையே...:):)..
அவயள் எப்ப வருவினமோ... மீ வெயிட்டிங்.... இனியுமா வராமல் இருப்பாங்க... ஆபத்துக்குப் பாவமில்ல ,, ஜெய் ஒரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. அதுவும் பிங் கலரில தாங்கோ..
///என்னது துவக்காஆஆஆ...நான் ஆடாம அசையாக அப்படியே ஃபிரீஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்....அவ்வ்வ்வ்வ்வ்வ்
/// ஆஹா... துவக்கெண்டால் பயமோ?... அப்போ இல்ஸ்ஸ் காலுக்கு கீழ நீலத்துணியால சுத்தி ஒரு ஏ கே ஃபோட்டி செவின் இருக்கு அதையும் வெளில எடுங்கோ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
அதீசு.. ஆறு பக்கமா உங்கட கிச்சினுக்கு? :)
ReplyDeleteஏற்கனவே பார்த்திருக்கிறேன் அந்தப் புகைப்படத்தை.. இந்த இடுகையைப் படிக்கும் பொழுது நினைவு வரல.. நன்றி..
நான் மேற்கால ஒரு கண்டத்திலே இருக்கேன்.. :)
ஹை... போட்டோவை பார்த்து நான் கேக்கணும் நினைச்சத எல்லாம் முன்னடியே கேட்டுட்டாங்க. முக்கியமா அந்த “ஸ்டூல்” :)
ReplyDeleteமுதல்படத்தில் எதுக்கு அந்த நல்வரவு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
உங்க கிச்சன்ல ”ஸபைடர்மேன்” இருக்குற மாதிரி இருக்கே... சாப்பாடு போட்டு வளர்க்குறீங்களா?
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said... 44
ReplyDeleteஅதீசு.. ஆறு பக்கமா உங்கட கிச்சினுக்கு? :) // ஓம் சந்து, ஆறு(ஆத்துப்பக்கம்:)) பக்கமாத்தான் கிச்சின் இருக்கு:)) ஹா..ஹா..(இது லேடி ஹா..ஹா இல்ல இது வேற ஹா:))
ஏற்கனவே பார்த்திருக்கிறேன் அந்தப் புகைப்படத்தை.. இந்த இடுகையைப் படிக்கும் பொழுது நினைவு வரல.. நன்றி../// வல்லாரை சாப்பிடுங்க சந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
நான் மேற்கால ஒரு கண்டத்திலே இருக்கேன்.. :)/// இந்தக் கண்டத்தைப் பார்த்ததுமே... எனக்கு கறுப்பான கையாலே பாட்டும் பென்குயின்களுமே நினைவு வந்திடுச்சி... ஏன் தெரியுமா?
“தண்ணியால எனக்கு ஒன்றும் கண்டமில்லையே...
ஒரு கன்னியால கண்டமென்று சொல்லவில்லையே”..
மியாவும் நன்றி சந்து....
கவலைக்குறிப்பு:
எங்கட ஜெய்யையும் கடந்த 24 மணித்தியாலமாகக் காணவில்லையே... எவரெஸ்ட்டுக்குப் போயிட்டாரோ இல்ல இந்துமா ஆழிக்கோ... இப்போ கையுதவிக்கு இல்ஸ்ஸ் உம் இல்லை தேட, எங்க போய்த் தேடுவேன் நான்.....:(.
இல்ஸ்ஸ்ஸ் கெதி கெதியா படிச்சு கெதிகெதியா எக்ஸாம் எழுதிட்டு ஓடிவந்திடுங்க ... மீ....யைப்போல:).
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க கவிக்கா மிக்க நன்றி.
ReplyDelete///கவிக்கா... said... 45
ஹை... போட்டோவை பார்த்து நான் கேக்கணும் நினைச்சத எல்லாம் முன்னடியே கேட்டுட்டாங்க. முக்கியமா அந்த “ஸ்டூல்” :)
/// கடவுளே இனி வாழ்க்கையில நான் ஸ்டூல் படமே போடமாட்டேன்..... (இதில, தலையை 10தரம் சுவரில மோதுறமாதிரி அந்த ஸ்மைலியை நினைச்சுக்கொள்ளுங்க... என்னிடம் அது இல்லையே..:).
//முதல்படத்தில் எதுக்கு அந்த நல்வரவு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//
ஆ.. கர் க்கே கர் ஆ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
//உங்க கிச்சன்ல ”ஸபைடர்மேன்” இருக்குற மாதிரி இருக்கே... சாப்பாடு போட்டு வளர்க்குறீங்களா? ///
இல்ல கவிக்கா, சமர் ரைம்ல ஸ்பைடர் ஏதும் உள்ளுக்கு வந்தா பிடிக்கிறதுக்குத்தான்.....:).
உஸ் அப்பாடா... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.... தாமதமா வந்தாலும் கேள்வியில பின்னி எடுக்கினமே.... கட்டிலுக்குக் கீழதான் கொஞ்ச நாளைக்கு றெஸ்ட் எடுக்கோணும்:)))).
மியாவும் நன்றி கவிக்கா.
////// கடவுளே இனி வாழ்க்கையில நான் ஸ்டூல் படமே போடமாட்டேன்..... (இதில, தலையை 10தரம் சுவரில மோதுறமாதிரி அந்த ஸ்மைலியை நினைச்சுக்கொள்ளுங்க... என்னிடம் அது இல்லையே..:).//
ReplyDeleteஹா..ஹா... ஸ்டூல் இவ்வளவு பாப்புலர் ஆகிடுச்சா..ஓக்கை..
ஆஆஅப்புறம்...கிச்சன்ல உருளை கிழங்கு மட்டுமே இருக்கே மத்தது பிடிக்காதோ...!!! :-))
//இல்ஸ்ஸ்ஸ் கெதி கெதியா படிச்சு கெதிகெதியா எக்ஸாம் எழுதிட்டு ஓடிவந்திடுங்க ... மீ....யைப்போல:). //
ReplyDeleteசூப்பர் பிசி போர்டை போட்டுட்டு குழந்தைகிட்ட இப்பதான் தமிழ் கத்துகிட்டு இருக்காங்கப்போல.ஹி...ஹி..
//வல்லாரை சாப்பிடுங்க சந்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். //
ReplyDeleteஇல்ல வேனாம் நல்லா ஆயில் விட்டு ஒரு ஆம்லெட் குடுங்கோ போதும் . இனி நீங்க மறந்தாலும் அவங்க மறக்க மாட்டாங்க ஹா..ஹா.. :-))))))))
ஆ.... ஜெய் வந்திட்டார்.... அப்போ எங்கேயும் காணாமல் போகேல்லை..இப்பத்தான் நெஞ்சுக்குள்ள ரீ (எல்லோரும் தண்ணி என்பினம், அதுதான் ஒரு சேஞ்க்கு:)) வந்தமாதிரி இருக்கு.
ReplyDelete///ஆஆஅப்புறம்...கிச்சன்ல உருளை கிழங்கு மட்டுமே இருக்கே மத்தது பிடிக்காதோ...!!! :-))
///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... உருளைக்கிழங்கில மட்டும்தான் உயிர்ச்சத்து, தாதுப்பொருள், நார்ச்சத்து எல்லாம் இருக்காம்..... நாங்க டயட் ல ரொம்ப சாக்கிரதையானாட்கள்:).
இல்ஸ்ஸ்ஸ் கெதியா வந்திடுவா என நினைக்கிறேன்:)
என்னாது ஆயில் விட்டு ஆம்லெட்டா? உங்கட ரெசிப்பியோ? பெயரைக்கேட்டாலே... கால் நாலும் தன்பாட்டில ஓடுது... பூஸ் எஸ்ஸ்ஸ்.
நன்றி ஜெய்... கூப்பிட்டவுடன் வந்தமைக்கு..
//என்னாது ஆயில் விட்டு ஆம்லெட்டா? உங்கட ரெசிப்பியோ? பெயரைக்கேட்டாலே... கால் நாலும் தன்பாட்டில ஓடுது... பூஸ் எஸ்ஸ்ஸ்.//
ReplyDeleteஹாஹ்ஹா.. அதீஸ் நானும் ஓடிகிட்டே இருக்கேன் :)
நான் காலையில் தான் ஆயில் விட்டு சில்லி ஸ்க்ராம்பில் செய்தேன் :)
நான் காலையில் தான் ஆயில் விட்டு சில்லி ஸ்க்ராம்பில் செய்தேன் :)
ReplyDelete/// சந்து, ஸ்கிராம்பில் எக் சாப்பிட்டா ஓடத்தான் வேணும் ஓடுங்க....:)(இது செமிக்க).
ஜெய்யின் ஆம்லெட் சாப்பிட்டாலும், இருக்கமுடியாது ஓடத்தான் வேண்டும்.... எங்கே எனக் கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
ஹாய் அதிரா...,நலமா..?
ReplyDeleteஎன் சமையல் அறையில் என படிச்சதும் ஒடோடி வந்து பார்த்தேன்.நான் நினைத்தது போல் உங்கள் விட்டு அழகான கிச்சனின் புகைப்படங்கள்.
பலவிதமான வீடுகளை பார்த்தாலும்,என் பார்வைகள் முதலில் நோட்டமிடுவது கிச்சனைதான்.
எனக்கு பிடித்தமான இடமாக்கும்.என் கணவர்க்கூட நான் அதிக நேரம் கிச்சனில் நேரத்தை களிப்பேன்னு அவர் நண்பர்களிடம்(திருமனம் புதிதில்..)\\என் மனைவி கொஞ்சம் விட்டா அந்த கிச்சன்லேயே பாயை போட்டு படுத்துக்குவாடா..// என்று கிண்டல் அடிப்பார்.
இது போன்ற ஒரு அழகிய கிச்சன் இருந்தால் அவர் சொன்னது போல் வெளியே வர மனசில்லாமல் நான் அவ்வாறே படுத்துக்குவேனோ என்னவோ...ஹீ...ஹீ...
மிகவும் அழகா உங்க கிச்சனை செட் பண்ணி வச்சி இருக்கீங்க அதிரா.... என் கண்ணே பட்டுடும் போலிருக்கு.பார்த்துட்டே இருக்கணும்போல இருக்கு.
ஜலீலா அக்காவிற்க்கு தோன்றியதுதான் எனக்கும் தோணுச்சு.ஆனால் அதற்க்கு தன் நீங்க நோ கமெண்ட்ஸ் னு பதில் சொல்லிட்டீங்களே...
அதனால ஜிப் டு மை மவ்த்த்த்த்.............
நீங்க இந்த அழகிய கிச்சனோடு எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமோ...?
கார்டனுக்கு சொல்லும் டோர்க்கு அருகில் சுவரில் இருக்கும்(மிஷின் என நினைக்கிறேன்)அந்த பொருள் என்ன என்று சொல்லுங்களேன்...
சரி சரி ரொம்ப கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.பூஸ் வந்து கர்ர்ர்ர்ன்னு முறைத்து சீறுவதற்க்குள் நான் எஸ்கேப்....
அன்புடன்,
அப்சரா.
ha ha ha .. i enjoyed all the comments.
ReplyDeleteI love the kitchen.Absolutely in love with blue tiles gives a fresh look :)
Will come back later!
Missing the fun here :(
//ஜெய்யின் ஆம்லெட் சாப்பிட்டாலும், இருக்கமுடியாது ஓடத்தான் வேண்டும்.... எங்கே எனக் கேட்டிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).
ReplyDeleteஅவ்வளவு மோசமாவா இருக்கு ஹா..ஹா...!! நான் ஆம்லெட்டை சொன்னேன் :-))
//ha ha ha .. i enjoyed all the comments.//
ReplyDeleteஆ...மயில் வந்துட்டு எஸ்கேப்பாகுது பிடிங்க..பிடிங்க...!! :-))
வாங்கோ அப்ஷரா, மிக்க நன்றி.
ReplyDeleteஎன் கிச்சின் அவ்ளோ அழகாகவோ இருக்கு? நீங்கள் எல்லோரும் சொல்லும்போதுதான் எனக்குத் தெரியுது... எனக்கும் நன்கு பிடித்திருக்கு, ஆனால் இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினால் நன்றாக இருக்குமே என்றுதான் இடைக்கிடை சொல்வேன்( அடங்காதாக்கும்:):)).
பெரும்பாலும் கிச்சினை எப்பவும் பொருட்கள் எல்லாம் உள்ளே எடுத்து வைத்து அழகாகத்தான் வைத்திருப்பேன்... ஆனாலும் திங்கள் காலையில் கொஞ்சம் குழம்பிப்போயிடும்... சனி ஞாயிறில் கொஞ்சம் கையை விட்டுவிடுவேன்.
ஜலீலாக்காவுக்கு தோன்றியதுதான் உங்களுக்கும் தோன்றினதோ? மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).
///அதனால ஜிப் டு மை மவ்த்த்த்த்............./// ஹா..ஹா...ஹா.....
///நீங்க இந்த அழகிய கிச்சனோடு எந்த நாட்டில் இருக்கின்றீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமோ...?/// ஹா..ஹா...ஹா... நீங்க கீழ போட்டீங்க நான் பொறுக்கிட்டன்.... அதாவது... உலகத்திலேயே அழகான கிச்சினுள்ள(ஆரும் முறைக்கபிடாது கர்ர்ர்ர்), அழகாக, அன்பான, பண்பான, புகையில்லாத, பயமில்லாத, புத்தியில்லாத சே சே என்னப்பா இது புத்தியுள்ள..சுவீட் சிக்ஸ் ரீனைத் தாண்டாத மக்கள் எந்த நாட்டில இருக்கினமோ “அந்த வன் அண்ட் ஒன்லி” கன்றியாகிய பிரித்தானியாவிலாஆஆஆஆஆஆஆஆ கேட்குதோ அப்ஷரா? ஆஆஆஆஆஆ கேட்குதோஓஓஓஓ?... :).(ஏன் கிழக்கால புகைக்குதூஊஊஊஊஊஊஊ?:))).
//கார்டனுக்கு சொல்லும் டோர்க்கு அருகில் சுவரில் இருக்கும்(மிஷின் என நினைக்கிறேன்)அந்த பொருள் என்ன என்று சொல்லுங்களேன்...// ஸாதிகா அக்காவுக்கு வந்த சந்தேகம் உங்களுக்கும் வந்திருக்கு. அதுதான் "Boiler", சுடுநீரை உருவாக்கும், சுடுநீர் ராங், வீட்டின் மேலே அட்டிக் இல் இருக்கும்.
மியாவும் நன்றி அப்ஷரா, இன்று நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
ஆ...மயில் வந்துட்டு எஸ்கேப்பாகுது பிடிங்க..பிடிங்க...!! :-))
ReplyDelete///
ஆ.... மயிலோ.. மயிலோ... ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே? ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே?ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே? ஙேஏஏஏஏஏஏஏ... ஆ,, ஜஸ்டு மிஸ்ட்டு.... ஜெய்யின் குரல் கேட்டு மயிலைப்பிடிக்கப் பாய்ஞ்சனா.... கைல இருந்த ரீ காப்பெட்டில ஊத்துப்பட்டு, மற்றக்கையில இருந்த கடைசித் துண்டு சீஸ்கேக்... சின்னன் சின்னதா சுசி பார்த்துச் சாப்பிடலாம் என வைத்திருந்தன், அதுவும் விழுந்து உருண்டு போய் ஸ்ரெப்பில மல்லாக்கக் கிடக்குது... நான் கத்தின கத்தில அதிர்ந்துபோய் பவர் வேற கட்டாயிடுத்து.... சே... இதைவிட மயில் உள்ளேயே இருந்திருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
///அவ்வளவு மோசமாவா இருக்கு ஹா..ஹா...!! நான் ஆம்லெட்டை சொன்னேன் :-))// ஹா..ஹா..ஹா.. கிக்..கிக்..கிக்.... சத்தியராஜின் குளிசையைச் சாப்பிட்டுப்போட்டு, வடிவேல் அங்கிள் நஷனலோட எழும்பேலாமல் இருக்கும் சீன் கண்ணில ஓடுது:))))))). நானும் ஆம்லெட்டுக்குத்தான் சொல்கிறேன்.:)..
மியாவும் நன்றி ஜெய்.. குரல் கொடுத்தமைக்கு.
ஆ.. இல்ஸ்ஸ் வாங்க இல்ஸ்ஸ் மிக்க நன்றி.
ReplyDeleteநீங்க எதையும் மிஸ் பண்ணல்ல... நாங்க வெயிட் பண்ணுறோம் நீங்க ஒயுங்காப் படிச்சு 1ம் பிள்ளையாக வந்து எமக்கு நல்ல பேர் எடுத்துத் தாங்கோ....
அதீஸின்ர ஃபிரெண்ட்தான் வகுப்பிலயே முதலாவதாம் என அமெரிக்காப் பேப்பரில எல்லாம் பெயர் வரோணும்(இப்படியாவது என் பெயர் பேப்பரில வருதா என்று பார்ப்பமே:)).. இங்க வராட்டிலும் ஒன்றும் குறையில்லை... பூஸ் படம் எடுத்து பூஸுக்கு அனுப்புறதையும் விட்டுப்போட்டு... ஒழுங்கா படிச்சு எக்ஷாமை முடியுங்க ஓல் தெ பெஸ்ட் இல்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஊசிக்குறிப்பு:
எக்ஸாம் முடிந்தபின்பும் ஆரும் வராட்டில்... வராட்டில்... வராட்டில்....... அதைப் பிறகு சொல்றேன்:)).. போய்ப் படிங்க.. இல்ஸ்.
மியாவும் நன்றி.
ம்ம்ம்
ReplyDeleteநெஜமாவே நான் நினைக்கும் கிச்சன் இது தான் ஆனால் வாய்ப்பில்ல்லைஎப்பவாவது என் ஆத்துகாரர் பிளாக்க பார்த்தாருன்னாஅ, இத கான்பிக்கனும்
இதில் 25 % ஆவது கிடைக்குதான்னு பார்க்கலாம்.,கூட வே சின்ன பெட் அங்க, அபப்டி தான் அவர் சித்தி செய்துள்ளாங்க, கிச்சனில் சமைத்து விட்டு ஆயாசமா வண்ட்தா உடனே பேன போட்டு படுக்க ஒரு ஆள் மட்டும் படுக்குமாரு பெட்
ம்ம்
இப்பதா 1947 லில் கட்டிய வீட்ட்டை இடித்து இருக்காங்க , இனி கட்ட போறாஙக் , ரூம் ஹால் நல்ல இல்லனாலும் பரவாயில்லை எனக்கு கிச்சன் நல்ல வேனும் என்றேன்.
இதோடு நான் கதைக்கவர வெகு நாட்கள் ஆகும் மறக்கபடாது, : நோ கமெண்ட்ஸ் என்று போட்டுட்டீஙக்லஏ. எனக்கே கை குறுகுறுன்னு வருது காப்பி செய்து அனுப்பிடலாமான்னு
ReplyDeleteஇத மட்டும் அனுப்பினா எலலத்த விட பெஸ்ட் கிச்சன் உங்களுடையது தான்/
ஜலீலாக்கா.... புறப்படும் அவசரத்திலும் வந்து பதிவு போட்டிருக்கிறீங்க மிக்க நன்றி. உங்கள் கனவுக் கிச்சின் சீக்கிரம் நிஜமாகவே கிடைக்கும்... கிடைக்க வாழ்த்துக்கள், அனைத்து ஆசைகளையும் 2012 க்குள் நிறைவேத்திப்போடோணும் ஜலீலாக்கா...
ReplyDeleteஉங்களை மறப்பதா.... என்ன இப்பூடிக் கேட்டுவிட்டீங்க... டிஷ்யூ பிளீஸ்ஸ்...
மியாவும் நன்றி ஜலீலாக்கா.
வீட்டில் உள்ள அனைவருமே பார்த்து பாராட்டினார்கள். அந்த ஸ்டூலை தூக்கி தேம்ஸில் போட்டுவிட்டு, இரண்டு படி வைச்ச் ஏணி வாங்கிடுங்கோ. அப்பதானே தாளிக்கும் போது (இது வேற அது வேற) கடுகு பொரிவது தெரியும்.
ReplyDeleteயாருக்கு என யாரோ கேட்பது தெரியுது!
நானும் தம்பி ஜீனோவும் ஹெலியில் இருப்பதால் எல்லாமே நல்லா தெரியுது :)))) (கடுகு பொரிவதுதான்)
பி.கு: எதுவுமே இல்லை :)
அதுக்கு பி.பி.கு: ஜீனோ தம்பி இப்படி தலையை வெளியே நீட்ட கூடாது. அப்புறம் இலா அக்கா.....
அதிரா,ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்,திட்டாம தொடருங்க! :)
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html
கலக்கீட்டீங்க பகிர்வுக்கு ரொம்ப நன்றி
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
ஆ.. ஆரது சொல்லாமல் பதிவு போட்டிட்டு ஓடினதூஊஊஊஊ....
ReplyDeleteஹைஷ் அண்ணன்.. எப்பூடி.. இப்பூடி?
இல்ஸ்ஸ் ஷேக் காண்ட்ஸ்ஸ்..... புளெட் இல்லாத துவக்கைக்காட்டி அண்ணனை இறக்கியாச்சு.... தம்பி எப்பூடி மிஸ்(இது வேற மிஸ்:)) ஆனார்???.
//அந்த ஸ்டூலை தூக்கி தேம்ஸில் போட்டுவிட்டு, இரண்டு படி வைச்ச் ஏணி வாங்கிடுங்கோ.////
கர்ர்ர்ர்ர்ர் பிளேனில இருந்து பார்த்தாலும் ஸ்டூல் தான் தெரியுதாக்கும்...., அதிரா மட்டின் குருமா செய்யிறன் அது தெரியேல்லையோஒ?
///அப்பதானே தாளிக்கும் போது (இது வேற அது வேற) கடுகு பொரிவது தெரியும்.// அவ்வ்வ்வ்.. எங்களுக்கு ஏறாமலே (ஸ்டூலில்:)) கடுகு பொரிவது தெரியுமாக்கும்....:)
///நானும் தம்பி ஜீனோவும் ஹெலியில் இருப்பதால் எல்லாமே நல்லா தெரியுது :)))) (கடுகு பொரிவதுதான்)
/// ஹா..ஹா..ஹா... பிளேன் எதுக்கு எப்பவுமே சரிஞ்சே போகுதே என அடிக்கடி நினைப்பேன்... இப்பத்தானே தெரியுது :) எதுக்காக என...
////பி.கு: எதுவுமே இல்லை :)///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இப்பூடிச் சொன்னால் விட்டிடுவனோ?:).
///அதுக்கு பி.பி.கு: ஜீனோ தம்பி இப்படி தலையை வெளியே நீட்ட கூடாது. அப்புறம் இலா அக்கா...../// தம்பிக்கு ஆ.கோ அதிகம்...:), அதெப்படி வெளில எட்டிப்பார்க்கிற தம்பிக்கே ஸ்டூல் தெரியேல்லை.... எட்டியே பார்க்காத உங்களுக்கு தெரிஞ்சுபோச்சு.....ஆண்டவா இதுக்குமேல தாங்காது மீ எஸ்ஸ்ஸ்ஸ்...
மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்.
பி.கு: பட்டு வேட்டி சால்வையோடு கலக்குறீங்களாமே.... கலக்குங்கோ கலக்குங்கோ...:).
//அந்த ஸ்டூலை தூக்கி தேம்ஸில் போட்டுவிட்டு, இரண்டு படி வைச்ச் ஏணி வாங்கிடுங்கோ. அப்பதானே தாளிக்கும் போது (இது வேற அது வேற) கடுகு பொரிவது தெரியும்.//
ReplyDeleteரெண்டு ஸ்டெப் போதுமா ..? ரெண்டு ஸ்டெப் மேலே ஏறினால் அடுப்பு தெரியும் ஆனா பேனில் பொறியும் கடுகு தெரியுமா? ஹி..ஹி...
//கர்ர்ர்ர்ர்ர் பிளேனில இருந்து பார்த்தாலும் ஸ்டூல் தான் தெரியுதாக்கும்...., அதிரா மட்டின் குருமா செய்யிறன் அது தெரியேல்லையோஒ?//
ReplyDeleteஹா..ஹா...பாருங்க நான் கேட்டதுக்கு கர்ர்ர்ர் சொன்னீங்களே....இப்போ யாருக்குமே கிச்சின் தெரியல ஸ்டூல்தான் தெரியுது..ஹா..ஹா...
பூஸ் கிச்சன் மூலையில் இருந்த ஸ்டூலை கண்டுபிடிச்ச அன்பு தம்பி ஜெய்லானி வாழ்க! வாழ்க!
ReplyDeleteபி.கு: உண்மையிலேயே எதும் இல்லை :)))))
//ரெண்டு ஸ்டெப் மேலே ஏறினால் அடுப்பு தெரியும் ஆனா பேனில் பொறியும் கடுகு தெரியுமா? ஹி..ஹி...//
ReplyDeleteஜெய் அது எப்படி பேனில் (Fan or Lice) கடுகு பொரியும்?
மஹி.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. என் உண்மைப்பெயரிப் பார்த்து பொய்ப்பெயர் எனச் சொன்னதுமில்லாமல்... தொடருறதோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பொறுங்கோ வாறன் அங்கு.. நேரம் சண்டைப்பிடிக்குதே... மிக்க நன்றி மஹி.
ReplyDeleteயூஜின் வாங்கோ..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் எதைக் கலக்கினேன்...:).
ReplyDeleteமியாவும் நன்றி யூஜின்... நல்லவேளை உங்கட கண்ணுக்கு ஸ்டூல் தெரியேல்லைப்போல... நீங்கதான் ஒயுங்கான பிள்ளை... ஷேக் ரூ (ரெண்டு)காண்ட்ஸ் பிளீஸ்ஸ்ஸ்.
ரெண்டு ஸ்டெப் போதுமா ..? ரெண்டு ஸ்டெப் மேலே ஏறினால் அடுப்பு தெரியும் ஆனா பேனில் பொறியும் கடுகு தெரியுமா? ஹி..ஹி...
ReplyDelete////
வாங்க ஜெய் வாங்க உங்களைத்தான் தேடிட்டேஏஏஏஏஏ இருக்கிறேன்.... சும்மா இல்ல புளொட் போட்ட துவக்கோடு....:) ஏன் எதுக்கெண்டெல்லாம் கேய்க்கப்பூடாது.... என் ஸ்டூலை தேம்ஸ்ல இல்ல, பிளேனின் இடதுபக்க செட்டையில கட்டித் தொங்கவிடப்போறேன்....:) ஏனெண்டால் அதுதான் உலகப் புகழ் பெற்ற ஸ்டூல் ஆச்சே....:):).
ஹைஷ்126 said... 71
ReplyDeleteபூஸ் கிச்சன் மூலையில் இருந்த ஸ்டூலை கண்டுபிடிச்ச அன்பு தம்பி ஜெய்லானி வாழ்க! வாழ்க!
/// ஆஆ..... இதில வாழ்த்து வேறு போகுதோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .. தேம்ஸ் வெயார் ஆ யூ....? ஸ்ட்டுலை எதுக்கு தேம்ஸ்ல போடுவான்... அது அங்கேயே இருக்கட்டும்.. நான் போறேன் தேம்ஸ்க்கு.... என்னை ஆரும் தடுத்திடப்பூடாதூஊஊஊஊஉ:).(ஆ... ஒரு ஃபுளோல, தெரியாமல் சொல்லிட்டேன், ஆரும் தடுக்காமலே இருந்திடுவார்களோ...:)))).
//ஜெய் அது எப்படி பேனில் (Fan or Lice) கடுகு பொரியும்?// கிக்..கிக்..கீஈஈஈஈஈ.. பேன் பார்க்கும்போது வேலியில் போற ஓணானே தெரியுமே... அப்போ கடுகு தெரியாதோ?..:).
//பி.கு: உண்மையிலேயே எதும் இல்லை :)))))
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருக்கு ஆனா..... இல்லை...:).
ஜெய் காதைக் கொண்டுவாங்கோ... கிட்ட இன்னும் கிட்ட.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
என்நிடம் ஊசிக் குறிப்பு இருக்கு:
மியாவும் நன்றி ஜெய் & ஹைஷ் அண்ணன்.
எல்லோரும் எழுதிவிடார்கள் நான்தான் லேட்டு . ஒன்றே ஒன்று கிச்சன் அழகாய் வைத்து இருகிறீங்க. பாராட்டுக்கள்.
ReplyDeleteஐஈஈஈஈஈ.. நிலாமதி... வாங்கோ வாங்கோ நல்வரவு. எங்களிடம் ஏற்கனவே ஒரு மதி இருக்கிறா... அவ “இளமதி”... யங்மூன் என்று கூப்பிடு.....ம்.
ReplyDeleteமுதல்வரவுக்கு மியாவும் நன்றி.
நல்லவேளை உங்களுக்கு கிச்சின் மட்டும்தானே தெரியுது?:) வேற ஒண்டும், கீழ மேல அப்பூடி ஏதும் தெரியேல்லைத்தானே?:)... மிக்க நன்றி நிலாமதி.
//ஜெய் காதைக் கொண்டுவாங்கோ... கிட்ட இன்னும் கிட்ட.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//
ReplyDeleteஆஆஆ...காதுக்குள்ளே இன்னும் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேட்டுகிட்டே இருக்கு .அவ்வ்வ்வ்
////ஜெய் அது எப்படி பேனில் (Fan or Lice) கடுகு பொரியும்?// கிக்..கிக்..கீஈஈஈஈஈ.. பேன் பார்க்கும்போது வேலியில் போற ஓணானே தெரியுமே... அப்போ கடுகு தெரியாதோ?..:).//
http://www.thinkgeek.com/homeoffice/kitchen/a7a9/
ஜெய் நீங்க ரொம்ப அப்பாஆஆஆவியா இருக்கிறீங்களே...:)
ReplyDeleteஹி..ஹி..ஹி... ஜெய், அதொன்றுமில்லை, ஹைஷ் அண்ணன் இங்கிலீஷில கொஞ்சம் வீக்கு:)...(கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க:)) அதனால (பான் ஐ பேன் என) LICE எனப் போட, நான் தலை எழுத்தை நீக்கிப்போட்டுப் படிச்சனா... ஐஸ்(ICE) என வந்துது... குளிர்ந்து போயிட்டேன்....:).
ஜெய், தெரிஞ்சுதான் சொன்னவர் ஹைஷ் அண்ணன்,நீங்க புரியவில்லையாக்கும் என படம் தேடிப் போட்டிருக்கிறீங்க மியாவும் நன்றி.
இந்த படத்துல ஒரு புது விஷயமே இருக்கே சரியா கவனிக்கலையா..? டெம்பரேச்சர் செட் செய்வது :-)) கூல்ல்ல்ல்ல்ல்ல்ல் :-)))))))))))))))))))))
ReplyDeleteஜெய்லானி said... 81
ReplyDeleteஇந்த படத்துல ஒரு புது விஷயமே இருக்கே சரியா கவனிக்கலையா..? டெம்பரேச்சர் செட் செய்வது :-)) கூல்ல்ல்ல்ல்ல்ல்ல் :-)))))))))))))))))))))
/// அதுதான் என்னிடம் வீட்டில இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Athees! did you tell anyone abt my two step ladder in my home... karrrr... will come later :((
ReplyDeleteதென்னையில தேள் கொட்டினா பனை மரத்தில நெறி கட்டின கதையாப்போச்சே...:).. இல்ஸ்ஸ் இப்பூடி பப்ளிக்கில நீங்களே சொல்லிட்டீங்களே... ரெண்டு படிவச்ச ஏணிக்கதையை.... இனி நான் எப்பூடி இலாவைக் காப்பாத்துவேன்....
ReplyDeleteகடவுளே... நான் தலைப்பை மாத்தப்போறேன்... “என் சமையல் அறை அல்ல” ”ஸ்டூல்/ஏணி” என:):):):).
இனி ஸ்ரெயிட்டா தேம்ஸ்க்குத்தேன்.... போறேன்.. ஆராவது இனியும் தடுத்தால்... சொல்லிட்டேன் ஆமா..:).
இல்ஸ்ஸ்ஸ்ஸ் இன்னுமா எக்ஸாம் முடியேல்லை... பேசாமல் குதிரை ஓடிடுங்க இல்ஸ்ஸ்ஸ்...:)
;)))
ReplyDelete85
ஆ... இம்ஸ்ஸ் வந்திட்டா.. விடமாட்டேன் இம்முறை...:)
ReplyDeleteஎன்ன இமா சிரிப்பூ பலமா இருக்கே... மலைப்பாம்பு, கீம்பு சுத்திட்டுதோ எனப் பயம்மாஆஆஆக்கிடக்கு...:) யெல்ப் தேவையெண்டால்.... ஒரு குரல் கொடுங்கோ.. எம் மக்கள் படையோடுவருவேன் காப்பாத்த.... உங்களுக்கில்லாத உதவியா.... :).. ஹெலியும் ரெடியா இருக்கு.... போனும் ஓன் லதான் இருக்கு... அடிச்சவுடன் எடுத்திடுவேன்... நான் போனைச் சொன்னேனாக்கும்..:))))
கிச்சன் அழகோ அழகு! மக்கள்ஸ் எல்லோருமே வந்து ஒரே கூக்கறையா கிடந்ததே!! படிக்க படிக்க ஒரே ஜாலி தான் பூஸ். வாழ்த்துகள்!!
ReplyDeleteவாங்கோ அப்துல் காதர்.. பூஸ் வீட்டுக்கு வந்தால் எல்லோரும் கூடிக் கும்மாளம் போட்டுத்தான் போவினம்... இனி நீங்களும் கலந்து கொள்ளுங்கோவன். மியாவும் நன்றி.
ReplyDeleteஅதிரா எல்லா கமென்ட்டும் பார்த்து மகிழ்ச்சி. ஒரே கல்யாணவீடு மாதிரி கும்மாளமாக இருக்கு.god bless you.
ReplyDeleteகிச்சினா? கிச்சனா?
ReplyDeleteஉங்க "கிச்சின்" (!) நீட் அண்ட் க்ளீன்.