நல்வரவு_()_


Tuesday, 9 October 2012

இது முடிவு.. வைதேகி ஒரு லூஸேதான்:)

பாகம் ஒன்றிலிருந்து தொடர்கிறது... முதலாவது பாகம் படிக்க.. கையை இங்க வைங்க:)
யார் என்னதான் சொன்னாலும், காலம் இப்போ எவ்வளவோ முன்னேறிவிட்டதே என ஊடகங்களில், மீடியாக்களில் புலம்பினாலும், ஒரு பெண்ணுக்கு விலைமதிக்க முடியாத சொத்தெனில் அது அவளுடைய கற்புத்தான். அதைக்கூட நான் விரும்பிய போதெல்லாம் விட்டுத் தந்தாயே வைதேகி. என்னை ஒரு காதலனாக எண்ணாமல், கணவனாக எண்ணி, முழு நம்பிக்கையோடு வாழத் தொடங்கினாய்.

“ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழைய முடியும் என்பார்கள்” அது உண்மையேதான், அந்த நூலாகிய என்னை, நூறு வீதத்துக்கும் மேலாக நம்பியமையால், நுழைய இடம் கொடுத்தாய். ஆனால் என் இளரத்தம், உன்னை மதிக்கத் தவறினேன். என் நட்புக்கே முன்னுரிமை அளித்தேன். ஆனாலும் எப்பவுமே உன்னில் எந்த மாறுதலையும் நான் கண்டதில்லை, எப்பவும் ஒரே மாதிரித்தான் நீ இருந்தாய்.

எம் மூன்று வருடக் காதலில் ஒருநாள் நீ சொன்னாய், “என் உடம்பில் ஏதோ மாற்றம் தெரிகிறது, எனக்குப் பயமாக இருக்கிறது, வாருங்கள் சேஜ்க்குப் போய் மோதிரம் மாத்திடலாம், பதிவுத் திருமணம் செய்திடலாம் என. அப்ப கூட நண்பர்கள்தான் எனக்குப் பெரிதாகத் தெரிந்தர்கள், திருமணம் பற்றி யோசிக்க முன்னமே, நண்பர்களோடு சேர்ந்து நடாத்திய சண்டையில், தவறுதலாக பொதுமகன் ஒருவர் இறக்க,  குற்றம் செய்யாத என்னில் பழி வந்து விழுந்தது.

நான் “கொலைக் குற்றவாளி” எனும் பெயரில் கைது செய்யப்பட்டு உடனேயே பாதாள சிறையில் அடைக்கப்பட்டேன். அதை அறிந்து நீ, எப்படித் துடித்திருப்பாய் வைதேகி.

னக்குக் காச்சல்க்குணமாக, தடிமன்குணமாக இருக்கு எனச் சொன்னாலே.. பத்துத் தரம் விசாரிப்பாய், சூப் செய்து எடுத்து வந்து ஊட்டி விடுவாய், தைலம் பூசி விடுவாய், அப்படிப்பட்ட நீ, இதை எப்படித் தாங்கியிருப்பாய்?.

எனக்குத் தெரியும் நீ என்னை நம்புவாய். நான் கத்துவேன், கூப்பாடு போடுவேன், கோபிப்பேன், ஆனால் கொலை செய்யுமளவுக்குத் துணிய மாட்டேன், அந்தளவு தூரம் கெட்டவனுமல்ல, அவை எல்லாம் உதட்டிலிருந்து உருவாபவையே தவிர உள்ளத்திலிருந்தல்ல என்பது உனக்கு மட்டும் நன்கு தெரியும். என் பெற்றோரைவிட, சகோதரத்தை விட, என் நண்பர்களையும் காட்டிலும் என்னைப் புரிந்து கொண்டவளும், என் மீது தூய அன்பைக் காட்டியவளும் நீதான். நான்தான் அதைக் காலம் தாழ்த்தி உணர்ந்திருக்கிறேன் வைதேகி.

நான் “பயங்கரக் கொலையாளி” யாம், அதனால் வெளித்தொடர்பேதும் இருக்கப் படாதென, யாரையாவது சந்திப்பதையோ அல்லது கடிதத் தொடர்பு வைப்பதையோ தடுத்து விட்டர்கள் வைதேகி, இறுதியாக அன்று, உன்னோடு ஒரு வசனமாவது பேச விடும்படி ஆசைப்பட்டுக் கெஞ்சிக் கேட்டேன், ஆனால் மறுத்து விட்டார்கள் வைதேகி.

ஆரம்பம் நான் சிறைவைக்கப் பட்டிருந்த ஒரு ஜெயிலில், கடைசியும் முதலுமான உன் ஒரு காதல் மடல் என் கைக்குக் கிடைத்தது, அந்த ஜெயிலர் மிகவும் நல்லவர் என்பதனால் என்னிடம் தந்தார். அதில் நீ எனக்காகக் காத்திருப்பதாகவும், நமக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாகவும் எழுதியிருந்தாய்.. சாந்து.. சாந்து என, நீ அன்பைக் கொட்டி எழுதியிருந்த மடல் பார்த்து நான் துடித்துப் போய் விட்டேன் வைதேகி... இப்பகூட அதை என்னுடனேயே வைத்திருக்கிறேன்ன்.. அதை தினமும் அடிக்கடி படிப்பதுதான் என் சந்தோசம், பொழுதுபொக்கு, மன அமைதி எல்லாமே.
னக்கு, என் மனைவி எனும் அஸ்தத்தைத் தரமுன்னமே கைது செய்துவிட்டார்களே வைதேகி. இப்போ நம் மகனுக்கு 11 வயதாகியிருக்கும், நன்கு வளர்ந்திருப்பான், உன்னைப்போலவா இல்ல என்னைப்போலவா இருப்பான்?.

எனக்குத் தெரியும், நீ எப்பவுமே என்னைக் குறை கூற மாட்டாய், அடுத்தவர் கூறினாலே சண்டைக்குப் போவாய், அப்படிப்பட்ட நீ, என்னை ஒரு நல்லவராகவே நம் மகனுக்கு ஊட்டி வளர்த்திருப்பாய். நான் நிரபராதி வைதேகி, அது உனக்கு நன்கு தெரியும்.

இந்தப் 12 வருட ஜெயில் வாழ்க்கையில், நீ கொட்டிய அன்பையும் கூறிய தத்துவங்களையும் மட்டுமே இரைமீட்டிக் காலத்தைக் கடத்தி இருக்கிறேன். உன் அன்பு எனக்குக் கிடைத்திராவிட்டால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் வைதேகி.

நாளைக்கு நாம் சந்திக்கப் போகிறோம், “நீ என்னைத் திட்டுவாயா வைதேகி?”, இல்லை நிட்சயமாக என்னைத் திட்ட மாட்டாய், உனக்குத் திட்டத் தெரியாது. இறைவன் எனக்காக அனுப்பிய ஒரு தேவதையாகத்தான் பார்க்கிறேன் உன்னை இப்போ.

திருமணமாகாமலே கையில் ஒரு கைக் குழந்தையையும் தந்துவிட்டு வந்தேனே..இந்தப் 12 பாலைவன வருடங்களையும், எப்படி நீ கடந்திருப்பாய்? ஊராரின் வசை மொழிகளை எல்லாம் எப்படித் தாங்கியிருப்பாய்?. நான் முடிவெடுத்திட்டேன் வைதேகி, நாளைமுதல், உனக்காகவும் நம் மகனுக்காகவுமே வாழப் போகிறேன்.

இனி நான் பேச மாட்டேன், உன்னையே பேசவிட்டு, 24 மணி நேரமும் உன் பேச்சையே கேட்டு மகிழப் போகிறேன். நான் இப்பொழுது பழைய “சாந்தன்” அல்ல.. மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்டிருக்கும், நீ நம்பிய, நீ எதிர்பார்த்த உன் “சாந்து” வாகத்தான் வெளியே வரப்போகிறேன்.

இந்த ஜெயில் வாழ்க்கையில் உன்னை நினைக்காத நேரமில்லை, நிறையவே உன்னை மிஸ் பண்ணிவிட்டேன். ஒருவேளை, இப்படி ஒரு பழி என்னில் விழுந்திராவிட்டால், உனை நான் புரிந்து கொள்ளாமலே போயிருப்பேனோ என்னவோ?, இப்பிரிவின் மூலம் உன்னை நான் நிறையவே புரிந்து கொண்டேன்.

என்னை அழைத்துச் செல்ல, நாளைக்கு நீயும் மகனும் வருவதாகச் சொன்னார்கள், அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், உனக்கு தூக்குவதுதானே ரொம்பப் பிடிக்கும், நாளை உன்னைப் பார்த்ததும் தூக்கப் போகிறேன், அதை நம் மகன் வெட்கத்தோடு பார்க்கப் போகிறான்.

நிஜமாகவே என்னை விரும்பிய “நீ ஒரு லூஸுதான், எனக்கு மட்டும் நீ லூஸுப் பெண்தான்”

நாளையிண்டைய தீபாவளிதான் நமக்கு “தலைத் தீபாவளி”



அனைத்தும், அதிராவின் “சொந்தக் கிட்னியில்” உருவான கற்பனையே:...
====================================
காதல் என்றால்
தெய்வம் கூட மறுப்பதில்லையே
அது, வேதம் தெரிந்த குருவைக் கூட 
விடுவதில்லையே
சொன்னவர் நம்மட கண்ணதாசன்
==============================================

94 comments :

  1. வணக்கம் பல முறை சொன்னேன்! சபையினர் முன்னே!!

    என்ன வீட்டில ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு!

    வீடு வேற திறந்து கிடக்கு!

    எதுக்கும் கூப்பிடுவம்!

    “அக்கா! அக்கா” ( நிரூபனின் முறையில் )

    அட ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு/ அப்ப எனது வாழ்க்கையில் இன்னொரு 5 பவுணோ??????

    முருகா! இதெல்லாம் உன் திருவிளையாடல் அன்றி வேறேது??? :))))))))))))))

    ReplyDelete
  2. அன்புச் சகோதரி ஹேமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

    என்றென்றும் மகிழ்ச்சியோட வாழ வாழ்த்துகிறோம்!

    ஹேமாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை மணியம் கஃபேயில் புதிய சாப்பாடு கொடுக்கிறோம்! - நாளை மட்டும் :)))))))))))

    ReplyDelete
  3. இது முடிவாக இருக்கக் கூடாது அதிரா. நீங்கள் நிறைய எழுத வேணும். எப்பிடி எழுதி இருக்கிறீங்கள்! அதிராவா இது!

    4 தரம் எட்டிப் பார்த்தேன் காணேல்ல. இப்ப வந்தால்... வாசிக்க வாசிக்க கண்ணை மறைக்குது. கமண்ட் டைப் பண்ணவும் முடியேல்ல. ;(

    ReplyDelete
  4. ஹேமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஹேமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete








  6. அதிரா ரெம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க. பாட்டு நல்ல பொருத்தமா செலக்ட் செய்திருக்கிறீங்க.நல்ல முடிவும் கூட.
    அதிரா கூப்பிடும் கடவுள்களே!!அதிரா வீட்டுக்கு மட்டும் அடிக்கடி மழை கொட்டவேணும். அப்பதானே நிறைய கதை எழுதுவா அதிரா.

    ReplyDelete
  7. மொதல்ல ஹேமா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்......

    ஹப்பி பேர்த் டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஹேமா அக்கா

    ReplyDelete
  8. வைதேகி ஒரு லூசுதான்....
    இந்த லூசு பற்றிய கற்பனை மிகவும் சுவாரஷ்யமாக இருக்கிறது
    உண்மையில் இது உங்க கிட்னியில உதிச்சதுதானே...... :P

    ReplyDelete
  9. நிச்சயமாக பிரிவுகள் தான் உன்மையான பிரியமானவர்களைக் கண்டுகொள்ள உதவும்.....
    காதல் வாழ்வில் பிரிவும் அவசியம்தான் ஆனால் அது நீண்டதாக இருக்கக்கூடாது

    ReplyDelete
  10. கவிதாயினி ஹேமாவுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. அதிரா! நல்லவிதமாக கதையை முடிச்சிருக்கிறீங்கள்:)
    நான் இதுக்கு மாறாய் சோகமுடிவாகப்போகுதோன்னு கொஞ்சம் பயந்துபோய் இருந்தன். நல்ல வேளை அப்பிடி எழுதேலை.

    அசத்துறீங்கள் அதிரா. வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!
    தொடருங்கோ கதை வந்திட்டு, இனி கவிதை! கவிதை!!.
    காத்துக்கொண்டிருக்கிறேன். கெதியா எழுதுங்கோ:)

    ReplyDelete
  12. நல்ல கற்பனை. பிரிவில்தான் உண்மையான அன்பு புரிகிறது பலருக்கு. என்ன செய்கிறது இப்பவாவது சாந்தனுக்கு வைதேகியின் தூய அன்பு புரிஞ்சுதே. அந்தமட்டில் சந்தோஷம்.

    ReplyDelete
  13. (அதி)காலை வணக்கம்,அதிரா!!!!(ஹி!ஹி!ஹி!)அருமையாகச் சொல்லி முடித்து விட்டீர்கள்:):):):)(கதையை)!ஹ!ஹ!ஹா!!!!!!ஹேமாவுக்கு காலம் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ஹேமாக்கு என போட்டிருக்கும் பாடல் என்னையும் எங்கோ கொண்டுபோய்விட்டது. அருமையான பாடல். திரும்பத் திரும்ப கேட்க அலுக்காது.

    அந்தப் பெண்பாடகியின் ஹம்மிங் அப்படியே தாலாட்டுவதாய், வேறோர் உலகிற்கே என்னை இழுத்துச் செல்லுகிறது;))
    பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா!

    ReplyDelete
  15. HAPPY BIRTHDAY HEMA,


    athees !!somethings wrong with my computer ,,iv'e been trying to type this comment ... its taking soooooooooo looooooooong ..
    shall come and read the second part later ..

    ReplyDelete
  16. அவ்வ்வ்வ்வ்வ் என் இசையும் கதையும் படிச்சு எல்லோரும் பீலிங்ஸ்சில இருக்கினம், நான் அதை விட்டுப்போட்டு... இனி மினி மைனி மோ விளையாடுறேனே.... தோ வந்துட்டேன்ன்ன்ன்ன்:)

    ReplyDelete
  17. மாத்தியோசி - மணி said... 1
    வணக்கம் பல முறை சொன்னேன்! சபையினர் முன்னே!!

    என்ன வீட்டில ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு!

    வீடு வேற திறந்து கிடக்கு!

    எதுக்கும் கூப்பிடுவம்!

    என்ன இது அலுமாரி திறக்கும் சத்தம் கேட்குதே:) நல்ல வேளை, ராத்திரித்தான் மாத்தி ஓசிச்சு.. நகையைக் கொண்டோடிப்போய் அரிசிப் பானைக்குள்ள வச்சனான்:)).

    உஸ்ஸ் ஸப்பா.. கும்பிட்ட முருகன் என்னைக் காப்பாத்திப் போட்டார்:).

    ஓஒ.. மணியம் கஃபே ஓனர் வந்திருக்கிறார் வாங்கோ வாங்கோ... வந்து இந்தச் சோஃபால இருங்கோ.. ஆயா மட்டின் புறியாணி(என் கணவருக்கு மிகவும் பிடிச்ச) செய்கிறா நீங்களும் வாங்கோ.

    வீடு எப்பவும் திறந்துதான் இருக்கும், ஆனா மூலைக்கு மூலை கமெராப் பூட்டியிருக்கிறம் என்பதையும் சொல்லி வைக்கிறோம்:).

    ReplyDelete
  18. “அக்கா! அக்கா” ( நிரூபனின் முறையில் )

    அட ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு/ அப்ப எனது வாழ்க்கையில் இன்னொரு 5 பவுணோ??????

    முருகா! இதெல்லாம் உன் திருவிளையாடல் அன்றி வேறேது??? :))))))))))))))

    நிரூபனின் அக்கா எனச் சொல்லிப்போட்டீங்கள்.. அப்போ நிரூபன் ஒரு ரேடியோ நடாத்துறாராம் என அறிஞ்சேன்.... அவரிடம் சொல்லுவீங்களோ என் இசையும் கதையையும் ரேடியோவில வாசிக்கட்டாம் என..

    ஆனா எனக்கு நேரம் அறிவிக்கோணும்.. அப்பத்தானே நான் ஓடிப்போய், ரேடியோவை ஓவ் பண்ணிப்போட்டு கட்டிலுக்குக் கீழ ஒளிக்கலாம்:)).....

    ம்ம்ம்ம்ம் சிலருக்கு ஒரேயடியா பல பவுன் விழுது, ஆனா உங்களுக்கு மட்டும் 5,5 ஆகத்தான் விழுது:) இதுவும் அந்த முனீஸ்வரரின் திருவிளையாடல்தான்:))...

    சரி சரி நேரம் கிடைக்கும்போது வந்து என் இசையும் பூஸும் படியுங்க சொல்லிட்டேன்:))..

    மியாவும் நன்றி உடன் வருகைக்கும்... பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  19. இமா said... 3
    இது முடிவாக இருக்கக் கூடாது அதிரா. நீங்கள் நிறைய எழுத வேணும். எப்பிடி எழுதி இருக்கிறீங்கள்! அதிராவா இது!

    4 தரம் எட்டிப் பார்த்தேன் காணேல்ல. இப்ப வந்தால்... வாசிக்க வாசிக்க கண்ணை மறைக்குது. கமண்ட் டைப் பண்ணவும் முடியேல்ல. ;(

    வாங்கோ இமா வாங்கோ... அது பதிவெல்லாம் ரெடியாகி இருந்துது, ஆனா ஹேமாவின் பிறந்ததினம் என அறிஞ்சதும், பாட்டுப் போடுவமே எனத் தேடினேன் .. அதுதான் தாமதமாகிட்டுது.

    இல்ல இமா, எனக்கு சின்னனிலிருந்து இலக்கியம் நல்லா வரும், இலக்கணம் வராது. தமிழில் கட்டுரையின்போது பத்துக்கு ஒன்பதுக்கு குறைய எப்போதும் எடுத்ததில்லை.

    அதிலும் சோகமெனில் எனக்கு நல்லா எழுத வரும். ஆனா நானே கற்பனை பண்ணி, நானே எழுதும்போது நானே அழுதும் விடுவேன்ன்:).. சிலநேரம் கண்ணால தண்ணி ஒடும், கணவரிடம் ஏச்சும் வாங்கியிருக்கிறேன் இப்படியெல்லாம் பீல் பண்ணக்கூடாது என:).

    அப்படித்தான் ஒருநாள் கணவருக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன், இன்று எல்லோரும் இருக்கிறோம், பத்து வருடத்தால் எங்கட அப்பா அம்மா இருப்பினமோ, உங்கட அப்பா அம்மா இருப்பினமோ.. ஆருக்குத் தெரியும் என.... எனக்கு கொன்றோல் பண்ணவே முடியவில்லை அழுகையை கண்ணால வடியத் தொடங்கிட்டுது... அப்பூடித்தான் நானும் என் பீலிங்ஸும்:). நானும் ஒரு லூஸுதான் ஹா..ஹா..ஹா.

    நீங்கள் எல்லாம் என் எழுத்துப் பிடிச்சிருக்கு, அதிலும் ஃபீல் பண்ண வைத்திடுது என எண்ண ரொம்பப் பெருமையாக இருக்கு.

    ஒரு கதையோ, கவிதையோ படிக்கும்போது, கண்ணீர் வருகிறது அல்லது பலத்த சிரிப்பு வருகிறதெனில், அது எம் மனதைத் தொட்டுவிட்டது என்றுதானே அர்த்தம், அப்போ அது கதாசிரியருக்கான வெற்றிதானே?.... ஹையோ அஞ்சு, கீரி, மகி, வான்ஸ் எல்லாரும் கல்லெடுக்கினமே.... திருத்தணி வேலா என்னைக் காப்பாத்துங்கோ:)) மீ எஸ்கேப்ப்:))).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  20. Mahi said... 5
    me present ya!

    :))))))))//

    வாங்கோ மகி.. என்னாது மீ பிரசண்ட்டோ?:)) உங்களையே பரிசாத் தரப்போறீங்களோ இக் கதைக்காக:))..
    அவ்ளோஓஓஓஒ... நல்..லாஆஆஆஆஆ...வா... இரு...க்க்க்..கூஊஊஊஊஊ?:)..

    ஹ..ஹா..ஹா... சரி சரி முறைக்க வாணாம்ம்.. மியாவும் நன்றி மகி.

    எனக்கும் நேரமாச்சு ஈவினிங் சந்திப்போம்.

    ReplyDelete
  21. // நிரூபனின் அக்கா எனச் சொல்லிப்போட்டீங்கள்.. அப்போ நிரூபன் ஒரு ரேடியோ நடாத்துறாராம் என அறிஞ்சேன்.... அவரிடம் சொல்லுவீங்களோ என் இசையும் கதையையும் ரேடியோவில வாசிக்கட்டாம் என..
    ஆனா எனக்கு நேரம் அறிவிக்கோணும்..//

    அதிராஆஆஆ.... அனக்கும் எப்ப வாசிப்பினமெண்டு அறிஞ்சா சொல்றீங்களே...... ஞானும் கேக்கோனும்:))
    இங்கினை சத்தமா சொல்லமாட்டியளோ..... அப்ப என்ர காதிலை ரகசியமா சொல்லுங்கோ:)....

    அப்பப்ப அந்த ரேடியோ மீயும் கேக்கிறனான்:))) சொல்லிவிடுங்கோ தம்பிமாரிட்டை;)))

    ReplyDelete
  22. வாங்கோ அம்முலு வாங்கோ.. என்னாது மழை கொட்டோணுமோ?:)) ஹையோ வாணாம் ஜாமீஈஈஈஈஈஈ.. எங்களுக்கு வருடம் முழுவதுமே கிட்டத்தட்ட மழைதான்.. இனிமேல் நல்ல வெயில் எறிச்சால்தான் நான் கதை எழுதுவனாக்கும்:)).. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  23. உண்மையில் இது உங்க கிட்னியில உதிச்சதுதானே.....
    வாங்கோ ஜிட்டு வாங்கோ... போனதடவை “மிஸ்” பண்ணிட்டிங்க.. இந்த தடவை மிஸ் ஆகல்ல.. ஏனெண்டால் நீங்க மிஸ்டர் எல்லோ:)) இது வேற மிஸ்டர்:))) எங்கட சின்னவர் மிக்ஸரை.. மிஸ்டர் வேணும் என்பார் :)

    உண்மையில் இது உங்க கிட்னியில உதிச்சதுதானே..... ///
    karrrrrrrrrr:) வேணுமெண்டால் புஷ்பா அங்கிள் கடையில புகைவராத கற்பூரம் வாங்கிச் சத்தியம் பண்ணட்டோ?:)

    சிட்டுக்குருவி said... 10
    நிச்சயமாக பிரிவுகள் தான் உன்மையான பிரியமானவர்களைக் கண்டுகொள்ள உதவும்.....
    காதல் வாழ்வில் பிரிவும் அவசியம்தான் ஆனால் அது நீண்டதாக இருக்கக்கூடாது

    உண்மைதான்.. என்னைப்பொறுத்து எந்த வாழ்க்கையிலும் பிரிவே வேண்டாம் என்றுதான் சொல்லுவேன்ன்.. ஏனெனில் வாழ்க்கை ரொம்பக் குறுகியது.. திரும்பிப் பார்க்க முன் வருடங்கள் ஓடிமறைந்துவிடும்...

    ஆனாலும் பிரிவு தவிர்க்கமுடியாமல் வந்தாலும்.. அது “மறதிக்குக் காரணமாகிடக்கூடாதென” எங்கட கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். மியாவும் நன்றி ஜிட்டு.


    ReplyDelete
  24. வாங்கோ யங்மூன் வாங்கோ..

    சே.. முடிவு சோகமாகினால் கதை எழுப்பமிருக்காது சில படங்கள் தோத்ததே அதனாலயும்தானே....

    என்னாது இனிக் கவிதை எழுதுறதோ?:) ஒரு கொலை செய்திட்டன்:).. அதை ஒரு கவிதையாக்கோணும்:)).. அதுக்கு அம்முலு சொன்னதைப்போல.. வீட்டில் ஒருவருமில்லாத நேரம் மழை கொட்டோ கொட்டெனக் கொட்டோணும்.. டக்கென உதிச்சிடும்:)....நான் கவிதையைச் சொன்னேன்.

    அதெனமோ உண்மைதான்.. பிரிந்திருக்கும்போது அல்லது பிரிந்து போனபின்புதானே பலரின் அருமை புரியுது...

    பாட்டு.. ஓம் சூப்பர்.. டும்மா தேடினேன் பிடிச்சுப் போயிட்டுது காவி வந்திட்டேன்ன்ன்ன்:).

    மியாவும் நன்றி யங்மூன்... உங்களுக்கு நான் யங்மூன் என ஏன் பெயர் வச்சனான் தெரியுமோ? அமாவாசை ஒருநாள் தவிர மற்ற நாளெல்லாம் நீங்க என் பக்கம் வந்து போகோணும் எண்டுதான்.. எப்பூடி என் கிட்னியா?:)

    ReplyDelete
  25. வாங்கோ யோகா அண்ணன்.. மாலை வணக்கம். இசையும் பூஸும் நல்லாயிருக்கோ? மியாவும் நன்றி...

    அப்போ டக்கென இன்னொன்று எழுதட்டோ?:)) ஹையோ ஓடிடாதீங்கோ யோகா அண்ணன்:) மிக்க நன்றி.

    ReplyDelete
  26. angelin said... 16
    HAPPY BIRTHDAY HEMA,


    athees !!somethings wrong with my computer ,,iv'e been trying to type this comment ... its taking soooooooooo looooooooong ..
    shall come and read the second part later ..///

    வாங்கோ அஞ்சூஊஊ என்ன இது மதுரைக்கு வந்திருக்கும் ஜோதனை:)) ஆரோ செய்வினை செய்திட்டினம்போல:)) நேற்றி லட்டு எறிஞ்சீங்க இல்ல:)) அதனாலகூட இருக்கலாம்:))..

    அஞ்சு.. என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ நேக்குத் தெரியது கெதியா திருத்திக்கொண்டு வாங்கோ.

    மியாவும் நன்றி அஞ்சு.

    ReplyDelete
  27. இளமதி said... 22
    // நிரூபனின் அக்கா எனச் சொல்லிப்போட்டீங்கள்.. அப்போ நிரூபன் ஒரு ரேடியோ நடாத்துறாராம் என அறிஞ்சேன்.... அவரிடம் சொல்லுவீங்களோ என் இசையும் கதையையும் ரேடியோவில வாசிக்கட்டாம் என..
    ஆனா எனக்கு நேரம் அறிவிக்கோணும்..//

    அதிராஆஆஆ.... அனக்கும் எப்ப வாசிப்பினமெண்டு அறிஞ்சா சொல்றீங்களே...... ஞானும் கேக்கோனும்:))
    இங்கினை சத்தமா சொல்லமாட்டியளோ..... அப்ப என்ர காதிலை ரகசியமா சொல்லுங்கோ:)....

    அப்பப்ப அந்த ரேடியோ மீயும் கேக்கிறனான்:))) சொல்லிவிடுங்கோ தம்பிமாரிட்டை;)))///
    கொஞ்சம் நில்லுங்கோ யங்மூன்.. ஆரோ ஓடுற சத்தம் கேட்குது:))... ஆராயிருக்கும்.. ஓ கண்ணாடி கறுப்பாத் தெரியுது:))..

    மணியம் கஃபே ஓனரேதான்ன்.. ஓடாதீங்கோ .. ஓடாதீங்கோ... ஹையோ ரேடியோவில வராட்டிலும் பறவாயில்லை.. நீங்க நிண்டு மட்டின் பிரியாணியைச் சாப்பிடுங்கோ...:))

    உஸ்ஸ்ஸ் ஸப்பா முடியல்ல:)).. ஆனாலும் யங்மூன்.... என் இசையும் கதையும் ரேடியோவில வெளிவரத வரைக்கும் நான் “ஓயமாட்டேன்ன்.. ஓயமாட்டேன்”... உண்ணாவிரதம் இருப்பேன்ன்:).. மணியம் கஃபேக்கு முன்னால:))... தீக்குளிப்பேன்ன்:) அஞ்சுவைக் கையில பிடிச்சுக்கொண்டு:)... எண்டெல்லம் சொல்ல மாட்டேன்ன்ன்.. ஏனெண்டால், “நான் ரொம்ப நல்ல பொண்ணு, சிக்ஸ் வயசிலிருந்தே:))”:))...

    சரி சரி... “கல்லை எறி, விழுந்தால் மாங்காய்,போனால் கல்லுத்தானே:))”.. இதுவும் கடந்து போகும்:).....

    அது ஃபோர் எ சேஞ் .. பிபிசில சிட்டுவேஷன் “தத்துவம்” போகுதூஊஊஊஊஉ:).

    ReplyDelete
  28. வைதேகி நல்ல ஒரு பெண் பாவம் இப்படியான கணவன் நிலையை எண்ணி!

    ReplyDelete
  29. கதையில் இனிய பாடல் சேர்த்து இன்னும் மெருகு ஊட்டிய அதிராவுக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  30. கவிதாயினி ஹேமாவுக்கு என் பிந்திய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. கதை முடிவு அருமை..வாழட்டும் வைதேகி பல்லாண்டு,உணமை நிகழ்வு போல் எழுத்து நடை..

    கவிஞர்,எழுத்தாளர் ஹேமாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  32. கர்ர்ர்ர் :))))) மியாவ்
    நான் வந்துட்டேன் :)))))

    ReplyDelete
  33. கதையை ஏன் இவ்ளோ சீக்கிரம் முடிசீங்க மியாவ் ..ஆனா சூப்பர் முடிவு !!
    நீங்க அழகா எழுதரீங்கா ..ஆனா அதுக்காக நாங்க உங்களை கலாட்ட பண்ணாம இருக்க மாட்டோம் ..மியாவ் நீங்க பழைய பாடல்கள் விரும்பி பார்ப்பீங்களா ..
    எனக்கு இந்த பாட்டெல்லாம் தெரியவே தெரியாது

    ReplyDelete
  34. //காதல் என்றால்
    தெய்வம் கூட மறுப்பதில்லையே
    அது, வேதம் தெரிந்த குருவைக் கூட
    விடுவதில்லையே//

    Eyedoss !!!!ஆனாலும் !!ஞானி தான் ...எப்படி பின்னால் வருவதை சரியா சொல்லிருக்கார் :))))

    ReplyDelete
  35. ஆஅ அம்முலு கையை கொடுங்க :)) நல்ல ஐடியா
    மியாவ் மியாவ் !! மழை பெய்யனுன்ம்னு அவசியமில்ல :))
    நீங்க எந்த ரூம்ல இருக்கீங்களோ அந்த கூரை பிரிச்சு ஏறி நான் ரெண்டுஇல்ல இல்ல :))நாலு பக்கட் தண்ணி உங்க மேலே ஊத்துவேனாம் :)))))) நீங்க கதை கதையா எழுதுவீங்களாம் ..டீல் !!! டீல்

    ReplyDelete
  36. வாங்கோ நேசன் வாங்கோ... ஹா..ஹா..ஹா.. வைதேகியை ரொம்ப நல்ல பெண்ணாக வடித்து விட்டேன்:).

    படல்கள் எதைப் போடுவதென யோசித்தேன்... ரெடியோவிலும் ரீவியிலும் போனதை டக்கென தேடிப் போட்டேன்.

    மிக்க நன்றி நேசன்..

    ReplyDelete
  37. வாங்கோ.. ஆசியா.. சிலநேரங்களில் கற்பனை ஊற்றெடுக்கும், ஆனா நான் எழுதியபோது ஊற்றெடுத்த கற்பனையிலும் நிறையவே சுருக்கிட்டேன் பின்பு. ஓவரா எழுதி படிப்போருக்கு போறிங்காகிட்டாலும் எனப் பயம்:).

    மியாவும் நன்றி ஆசியா..

    ReplyDelete
  38. மினி மைனி மோ விளையாடுறேனே.//

    karrrrr :))miyaav

    ReplyDelete
  39. ஆ அஞ்சு என்னாச்சு?.. வந்தாச்சோ? எனக்கும் இன்று ஒரே ரயேட்டாக இருக்கு.. இப்போ வெதர் மாறியதும்.. ஒன்றும் வேண்டாம்.. பேசாமல் இரு எனத்தான் மனம் சொல்லுது.

    எனக்கு அஞ்சு பூஸ் ரேடியோ கேட்கும்போதெல்லாம் புதுமையான பாடல்கள் கிடைக்குது, அதை உடனே தேடி எடுப்பேன் நெட்டில். அப்படிக் கிடைத்ததுதான் மேலே இருக்கும் கார்த்திக்கின் பாட்டு, போனதடவை போட்ட வைதேகி வந்தாளே பாட்டு எல்லாமே.

    அதைவிட ரீவியில் போனாலும் பிடிச்சால் நோட் பண்ணி வைப்பேன்.

    ஒருநாள் கேட்டேன் ஒரு பாட்டு, அதைத் தேடுறேன் கிடைக்குதே இல்லை...

    “அருவியிலே... அருவியிலே குருவி ஒன்று குளிக்குதாம்ம்”...

    இதுதான் பாட்டு, பூஸ் ரேடியோவில் படம் எல்லாம் சொல்லாயினம் அதுதான் பிரச்சனை.

    ReplyDelete
  40. angelin said... 36
    ஆஅ அம்முலு கையை கொடுங்க :)) நல்ல ஐடியா
    மியாவ் மியாவ் !! மழை பெய்யனுன்ம்னு அவசியமில்ல :))
    நீங்க எந்த ரூம்ல இருக்கீங்களோ அந்த கூரை பிரிச்சு ஏறி நான் ரெண்டுஇல்ல இல்ல :))நாலு பக்கட் தண்ணி உங்க மேலே ஊத்துவேனாம் :)))))) நீங்க கதை கதையா எழுதுவீங்களாம் ..டீல் !!! டீல் //

    சே..சே... நிம்மதியா நித்திரைகொள்ளக்கூட முடியாமல் குடையும் கையுமா இருக்க வச்சிட்டியே முருகா!!!!

    ReplyDelete
  41. angelin said... 39
    மினி மைனி மோ விளையாடுறேனே.//

    karrrrr :))miyaav///

    “இனி” யை விட்டிட்டீங்க அஞ்சூஊஊஊஉ:).. அலாப்பக்கூடாது சொல்லிட்டேன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  42. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கண்ணெல்லாம் மங்குது... சிலபேர் 6 மணித்தியாலம் நித்திரை கொண்டுபோட்டு எழும்பி இருப்பினம்:)) நான் இன்னும் ஆசைக்குக்கூட ஒரு நித்திரை கொள்ளேல்லை.. சோ இனி ஏலாது... நாளை சந்திப்போம்ம்..

    அல்லோருக்கும் நல்லிரவு, பொன் நுய்ய்ய்ய்.. மழைக் கனவுகள்.. எனக்கு மட்டும் சிக்கின் பிர்ர்ர்ர்ர்ராஆணிக் கனவுகள் வித் அ.கோ.முட்டை:).

    ReplyDelete
  43. அன்பு அதிரா....நினைக்கவேயில்லை இப்படி ஒரு அருமையான பாட்டோட ஒரு வாழ்த்து...அதுவும் பதிவின் தலைப்பில்....எனக்கு வாழ்த்து சந்தோஷம் அதிரா....விடுமுறைப் பயணம்...உறவுகளோடு....நடு நடுவில் ஓடி வந்து பாத்துக்கொள்றன் பதிவுகளையும் வதனப்புத்தகத்தையும்.அதனால எல்லாரின்ர பெயர் சொல்லி நன்றி சொல்ல கொஞ்சம் நேரம் குறைவு.என் சார்பில் சுவிஸ் கேக்கும் ஒரு கருப்புக் கோப்பியும் எல்லாருக்கும் குடுத்து விடுங்கோ அதிரா....வந்து கணக்கு செட்டில் பண்றன்.ஏமாத்தமாட்டன்.மீண்டும் மீண்டும் நன்றியும் என் கை கோர்த்த அன்பும் அதிராவுக்கும் பூஸாருக்கும் !

    ReplyDelete
  44. வாங்கோ ஹேமா வாங்கோ.. நானில்லாத நேரம் வந்திட்டு ஓடியிருக்கிறீங்க... நலம்தானே...

    அதனாலென்ன கறுப்புக் கோப்பி சரி, எப்படியாவது ஊத்தி எடுத்துக் கொடுத்திடுவேன்:), ஆனா சுவிஸ் கேக்குக்கு நான் எங்கின போவேன்:)..
    எப்படியாவது தேடி வாங்கி வந்து அடுத்த தலைப்புக்கு முன்னம் கொடுத்திடுறேனே:))..

    மியாவும் நன்றி ஹேமா.. எஞ்சோய் யுவ ட்ரிப்.

    ReplyDelete
  45. எப்பூடி பிளாக் கொஃபி செய்யலாம்ம்ம்ம்?
    அஞ்சூஊஊஊஉ யெல்ப் மீஈஈஈஈஈ:)

    ReplyDelete
  46. அதிரா இப்புடி கையால கலக்கி.....ம்ஹும் நக்கு வேணாம்......;)

    //athira said... 40
    அப்படிக் கிடைத்ததுதான் மேலே இருக்கும் கார்த்திக்கின் பாட்டு//
    ங்..கை...... மேலே கார்த்திக்கின் பாஆஆட்.டு....:((

    மேஏஏல இருக்கிறது அவர்ரிட அப்பா முத்துராமனெல்லோ...அங்கை சரியாதேனே போட்டிருக்கிறீங்கள். பிறகு இங்கினை எழுதேக்கை அவ்வ்வ்வ்.......:))))

    சரி அதுபோகட்டும். அடுத்த பதிவு கவிதைதானே எழுதப்போறீங்கள். எழுதுங்கோ எழுதுங்கோ. ஆவலோடை இருக்கிறன். கதை ஒருக்கா கவிதை ஒருக்கா எண்டு மாத்தி மாத்தி.......
    மாத்தியோசிக்கச் சொல்லுறன்.:))))

    ReplyDelete
  47. யாரும் கோப்பி குடிக்க வரேல்லைன்னு
    அதிரா கோவமா இருக்காவாம்:))))

    ReplyDelete
  48. அஞ்சூஊஊ மிக்க நன்றி! மிக்க நன்றி!!
    படம் சேர்க்க சொல்லித்தந்துக்கூஊஊ.

    எனக்கு மட்டும் ஃபீஸ் தேவை இல்லைன்னு சொல்லீட்டா:)))
    ஏன்னாஆஆஆ........

    ReplyDelete
  49. இளமதி said... 49
    அதிரா இப்புடி கையால கலக்கி.....ம்ஹும் நக்கு வேணாம்......;)

    நோஓஓஓ இவ்ளோ தூரம் வீட்டுக்கு வந்திட்டு, ரீ குடிக்காமல் போனால், ஏன் குடுக்கேல்லை என அம்மம்மா நேக்குப் பேசுவா:)

    மேஏஏல இருக்கிறது அவர்ரிட அப்பா முத்துராமனெல்லோ...அங்கை சரியாதேனே போட்டிருக்கிறீங்கள். பிறகு இங்கினை எழுதேக்கை அவ்வ்வ்வ்.......:))))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது வேற மேல:).. அந்த மேல இருக்கிறது முத்துராமன் மாமா, கீழ பதிவில மேல இருப்பது, அவரிட மூத்த மகன் கார்த்திக்...

    ReplyDelete
  50. சரி அதுபோகட்டும். அடுத்த பதிவு கவிதைதானே எழுதப்போறீங்கள். எழுதுங்கோ எழுதுங்கோ. ஆவலோடை இருக்கிறன். கதை ஒருக்கா கவிதை ஒருக்கா எண்டு மாத்தி மாத்தி.......
    மாத்தியோசிக்கச் சொல்லுறன்.:))))

    ஓம்.. நீங்க சொன்னதும் டக்கென மாத்தி ஓசிச்சன்.. நான் ஏன் ஒரு “முழுநிலவு” கவிதை எழுதக்கூடாதென:)).. ஹா..ஹா..ஹா.. யங்மூன் ஓடாதீங்கோ.. ரீயைக் குடிச்சிட்டு ஓடுங்கோ.. ஆஆஆ என்னா ஸ்பீட்டு:)).. கால் வழுக்கிடப்போகுதூ:).

    ReplyDelete
  51. //Mohan P said... 50
    அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது//

    வாங்கோ மோகன் முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    நீங்க கூகிள் + இல் எழுதுறீங்களோ? இதுவரை அப்படி ஒரு பக்கம் போனதில்லை, வருகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  52. // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது வேற மேல:).. அந்த மேல இருக்கிறது முத்துராமன் மாமா, கீழ பதிவில மேல இருப்பது, அவரிட மூத்த மகன் கார்த்திக்...//

    எது கார்த்திக். ராசாத்தி ஒன்னை காணாத பாட்டிலையோ?????
    கிக்கிக்கீஈஈஈஈ:))))))
    அது விஜயகாந்த்.

    ReplyDelete
  53. இளமதி said... 53
    அஞ்சூஊஊ மிக்க நன்றி! மிக்க நன்றி!!
    படம் சேர்க்க சொல்லித்தந்துக்கூஊஊ.

    எனக்கு மட்டும் ஃபீஸ் தேவை இல்லைன்னு சொல்லீட்டா:)))
    ஏன்னாஆஆஆ.......////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னாது... மிக்க நன்றியோ?:) உது இருக்கட்டும்:), கதவை இறுக்கிப் பூட்டுங்கோ முதல்ல:)).. கூகிள்ள இருந்து ஒரு படத்தை ஆரோ சுட்டிட்டாய்ங்களாம் என.. போலீஸ்ஸ்ஸு சல்லடை:) போட்டுத் தேடிட்டிருக்காங்களாம்ம்ம்:))) சுட்டவரை:)..

    ReplyDelete
  54. இளமதி said... 57
    // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது வேற மேல:).. அந்த மேல இருக்கிறது முத்துராமன் மாமா, கீழ பதிவில மேல இருப்பது, அவரிட மூத்த மகன் கார்த்திக்...//

    எது கார்த்திக். ராசாத்தி ஒன்னை காணாத பாட்டிலையோ?????
    கிக்கிக்கீஈஈஈஈ:))))))
    அது விஜயகாந்த்.

    ஹையோ முருகா.. பழனியாண்டவா, திருத்தணி வேல, நல்லூர்க் குமரா, திருப்பரங்குன்றத்துக் குமரா, திருத்தணியை வள்ளிக் கணவா, மஞ்சவனப் பதி முருகா.. இனியும் நான் உயிரோடு இருக்கோணுமோ?:)).. என்னை விடுங்கோ ஆரும் தடுக்கப்பூடா:) தடுத்தால் நான் கொலையாளி ஆகிடுவேன்ன்.. அஞ்சூஊஊஊஉ விடுங்கோ என் கையை விடுங்கோ.. எங்கப்பா என் வலதுகால்.. ஹையோ அதைத்தானே முதல்ல வச்சு இறங்கோணும்:))..

    முத்து முத்து மேடையில பாடுறது ஆரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ கேக்குதோ?:))

    உஸ் முடியல்ல ஜாமீஈஈஈஈ:))

    ReplyDelete
  55. ஓ! ஓ! சரீஈஈஈஈ
    நான்ன்ன்ன்ன்ன் உங்களை ச்சும்மா ரெஸ்ட் பண்ணிப்பாத்தேன். இங்கினை வராம ஒரே தூக்கம்போல எண்டு:)))))

    ஐயோ இனி நிண்டா தாங்காது.....:)

    ReplyDelete
  56. ஓம்.. நீங்க சொன்னதும் டக்கென மாத்தி ஓசிச்சன்.. நான் ஏன் ஒரு “முழுநிலவு” கவிதை எழுதக்கூடாதென:)).. //#


    ஆஆ :))) நல்ல ஐடியா ..நீங்க கவிதை எழுதுங்க நான் அதுக்கு ஒரு மூன் படம் செய்து அனுப்பறேன்

    ReplyDelete
  57. angelin said...
    ஓம்.. நீங்க சொன்னதும் டக்கென மாத்தி ஓசிச்சன்.. நான் ஏன் ஒரு “முழுநிலவு” கவிதை எழுதக்கூடாதென:)).. //#


    ஆஆ :))) நல்ல ஐடியா ..நீங்க கவிதை எழுதுங்க நான் அதுக்கு ஒரு மூன் படம் செய்து அனுப்பறேன்///

    haa..haa...haa.. அஞ்சூஊஊஊஊஉ.. எள் என்னமுன் எண்ணெயா வந்து நிக்கலாமோ..:) வாணாம்ம்.. :) நம்மட ஒப்பந்தம் மீறாமல் இருப்பம்... நாங்க உள்ளுகுள் கதைச்சது டீல்?:)) நீங்க சொன்னபடியே நானும் அது அது... ரைட்?:) ஹையோ உஸ்ஸ்ஸ் சத்தம்:).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:)))..

    பிஸ்ஃபிரைக்கும்... சாரி.. கோல்ட் ஃபிஸ்க்கும்..:).. யங்மூனுக்கும்... மற்றும் அல்ல்ல்ல்ல்ல்லோருக்கும்.. முழுநிலவு.. ஹையோ வாயில சொல்ல வருதேயில்லை:).. அல்லோருக்க்கும் நல்லிரவு.. பொன் நுய்ய்ய். வெள்ளிக் கனவுகள்:) ஐ மீன் வெள்ளிக்கிழமைக் கனவுகள்....

    ReplyDelete
  58. நம்ம பூசார் கதாஆஆ சிரியர் :)) ஆனதும் எங்களுக்கு குடும்பத்தோட சுரம் ச்சே ஜுரம் வந்திடிச்சுப்பா:(( கதை ரெண்டு பாகமும் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி படிச்சு முடிச்சிட்டேன். சும்மா சொல்ல கூடாது பீலிங்க்ஸ் ரொம்ப நல்லாவே இருக்கு. அஞ்சுவுக்கு கூரை மேல ஏறி தண்ணி ஊத்த ஏதும் எல்ப் வேணுமுன்னா நான் ஏணி கொண்டு வரேன் ன்னு என் சார்பில் சொல்லிடுங்க. ஜுரம் சளி இருந்தாலும் எப்புடியாச்சும் வந்திடுவேன் இல்லே. ஒரு வாரமா வேலைக்கு ஸ்கூலுக்கு போகாம குடும்பத்தோட வாட்டி எடுக்குது ஏதோ வைரஸ். அதுதான் லேட் பூச கமெண்ட் போட



    ஹேமாவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. ஆஆஆ.... என்னாதிது.. மூக்கால ஆரோ கதைக்கினம்:) நாங்களெல்லாம் வாயாலதானே கதைப்பம்:)..

    ஓ.. கீரி..கீர்ர்ர்ரீ.. வாங்கோ வாங்கோ.. புளொக்கை இப்பத்தான் ஓபின் பண்ணினேன்.. உடனேயே எனக்கு தும்மிச்சுது:)) சரிதான் கீரியிடமிருந்து மீக்கு தொத்திட்டுதூஊஊஊஊஊஊஊ:))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  60. பாருங்கோவன் இந்தக் கொடுமையை.. ஜூரமாம், கை,கால் நடுஞ்குதாம் படுத்த படுக்கையாம்ம்.. ஆனா அஞ்சுவுக்கு தண்ணி ஊத்த யெல்ப் பண்ண ரெடியாமே:))... முருகா மயிலேறி வாங்கோஓஓஓஓஓஒ:))

    ஃபுளூ இஞ்ஜெக்‌ஷன் கொடுக்கத் தொடங்கிட்டினம் கீரி, சுகமானதும் போட்டிடுங்க....

    ரெஸ்ட் எடுங்க, நல்லா தண்ணி குடிங்க, ரேக் கெயார்.

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  61. // ஓ.. கீரி..கீர்ர்ர்ரீ.. வாங்கோ வாங்கோ.. புளொக்கை இப்பத்தான் ஓபின் பண்ணினேன்.. உடனேயே எனக்கு தும்மிச்சுது:)) சரிதான் கீரியிடமிருந்து மீக்கு தொத்திட்டுதூஊஊஊஊஊஊஊ:))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). //

    அதெப்படி அதிரா கிரியிட்ட இருந்து உங்களுக்கு தொத்தும்?
    நீங்கதானே முந்தநாள் அஞ்சூட்டை வந்து எனக்கு உடம்பு சரி இல்லை என்டிட்டு போனனீங்கள். அப்ப உங்களிட்ட இருந்துதான் கீரிக்கு...........பொறுங்கோ.....ம்..ஹச்சூ...ஹச்சூஊஊ.......
    பாருங்கோ இப்ப எனக்கும் தொத்தீடிச்சூஊஊஊ:)))))))

    ம்..ஹஅ...ச்சூஊஊஊ;))))))))

    ReplyDelete
  62. கற்பனை தான் என்றாலும் கற்சிலை போல அழுத்தமாக மிக நல்லாவே எழுதிருக்கீங்க.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....
    அம்மாடி .....

    பின்னூட்டமிட ஓடியாந்தேன்.

    அடியிலேயே பொட்டியைக்கண்டு பிடிக்கவே இவ்வளவு நாழி ஆயிடுச்சு.

    [பின்னூட்டப்பொட்டியைத் தான் சொல்றேன்]

    அதுக்குள்ளாற அறுபத்தி ஆறு பேரு போட்டாச்சு.

    நான் ரொம்ப லேட்டு. ஏன்னாக்க எனக்குத் தகவலே இல்லை. அழைப்பிதழே இல்லை.

    என் உலக்கைப்பக்கம் நீங்க வந்ததால் நான் அகஸ்மாத்தாக இங்கே வந்தேன்.

    என் பதிவாகிய “சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]” ஐச் சொன்னேன்.

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
  63. இளமதி said... 66
    //
    அதெப்படி அதிரா கிரியிட்ட இருந்து உங்களுக்கு தொத்தும்?
    நீங்கதானே முந்தநாள் அஞ்சூட்டை வந்து எனக்கு உடம்பு சரி இல்லை என்டிட்டு போனனீங்கள். அப்ப உங்களிட்ட இருந்துதான் கீரிக்கு...........பொறுங்கோ.....ம்..ஹச்சூ...ஹச்சூஊஊ.......
    பாருங்கோ இப்ப எனக்கும் தொத்தீடிச்சூஊஊஊ:)))))))

    ம்..ஹஅ...ச்சூஊஊஊ;))))))))//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது உடம்பெல்லோ நலமில்லை என்றேன்:)) இது தலையிலிருந்தெல்லோ தும்முது:).. ஹச்சூம்ம்ம்ம்.. எச்சூச்சுமீ:)).. ஹச்சூம்ம்ம்:))..

    சே.. ஒரு வார்த்தை எழுத முடியுதோ பாருங்கோவன்:)).. இது ஒரிஜினல் கெட்ட கிருமி போல இருக்கே:)).. எனக்கு தொத்தி இருப்பதைச் சொன்னேன்:)).. ஹையோ முருகா இதைக் கீரி பார்த்திடப்பூடா:)

    ReplyDelete
  64. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. ஏன் கூகிள் ரீடர் இருக்கும்தானே உங்களிடம், அதில் மறந்திடாமல் ... அஞ்சுடதை, இமாடதை, அம்முலுவினுடையதை எல்லாம் அழிச்சுப்போட்டு:)).. அதிராவின் புளொக்கை மட்டும் இணைச்சுவிடுங்கோ:))..

    ஹையோ படிச்சதும் கிழிச்சு கன்னியாக்குமரில வீசிடுங்கோ..:)) அவிங்களுக்கு:) பாம்புக் கண்:)).. நரி மூக்கு:)), தவளைக்காது:)).

    நான் ஒரு காலத்தில 10,12 பின்னூட்டத்தோடு இருந்தேன்ன்.. பின்பு உங்கட சமோசா வியாபாரி மஞ்சுபோல, 450 ஐயும் தொட்டேன்ன்.. இப்போ “மீண்டும் கோகிலா:))” வாகிட்டிருக்கிறேன்:)).. காத்து எப்பவும் ஒரேமாதிரி அடிக்காதுதானே... ..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  65. ஏன் அஞ்சுவை இன்னும் காணேல்லை:) ஆரும் பிடிச்சுக் கட்டி வச்சிட்டினமோ?:)

    ReplyDelete
  66. அஞ்சு ஏதோ முழுங்கிக்கொண்டிருக்கூஊஊ!


    :))))))))))))))

    ReplyDelete



  67. ஹப்ப்பாடி !! ஒரு வழியா தேம்சுக்கு கூட்டிப்போறேன் :))))

    ReplyDelete
  68. நாளைக்கு நவராத்திரி.. நாங்க இனி 40 நாட்கள் சுத்த சைவமாக்கும்:)

    ReplyDelete
  69. இந்தாங்க எங்களுக்கு ஃபிஸ் பிரையும் வாணாம்ம்.. பூஸு சைவப் பூஸூஊஊஊஊ:)

    ReplyDelete
  70. 40 நாள்ள நல்லாக் கொழுகொழுவென வளர்ந்திடுவீங்க இல்ல:)) ச்ச்ச்ச்சும்மாதான் கேட்டேன்ன். நான் விரதம்:)

    ReplyDelete
  71. நோ மீ விரதம்.. மணந்தும் பார்க்க மாட்டேன்:)

    ReplyDelete
  72. // நாளைக்கு நவராத்திரி.. நாங்க இனி 40 நாட்கள் சுத்த சைவமாக்கும்:)//

    அம்மாளே, முருகா 40 நாளைக்கு பூஸு சைவமாம்;)
    அஞ்சு நீங்க இதுதான் தருணமெண்டு உங்களின் கைவரிசையை அங்கை காட்டுங்கோ. பூஸ் பார்த்து பெருமூச்ச்ச்ச்சூஊஊ விடட்டும்:)))))

    ReplyDelete
  73. :)))))))))
    Thanks Young Moon:))
    miyaav miyaav poonaikutti
    meesai ponaa poonaikutti .
    haaaaa:)

    elikutti my dil come sooooooooon ))

    ReplyDelete
  74. நாளை முதல் நிலவுக்கு லீவு:))))

    எல்லாருக்கும் இனிய நல்இரவு வணக்கம். சீயா மீயா:)))))

    ReplyDelete
  75. நாளை முதல் நிலவுக்கு லீவு:))))//

    ReplyDelete


  76. பூசார் மூன் பெயண்டே அடிச்சிருக்கார்

    ReplyDelete
  77. கடைசியில் சொல்லியுள்ள வசனம் சூப்பர்.

    ஹேமாவின் பிறந்தநாள் காலம் கடந்து தெரிந்ததால் எதுவுமே செய்ய இயலவில்லை என்பது வருத்தமே... அவர் கனடாவில் குழந்தை நிலாவுடன் அழகாக ஊர் சுற்றுகிறார். இந்த மாதம் அவரை பிடிப்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது... உங்கள் வாழ்த்துகளைப் பார்த்தால் அவர் மிகவும் மகிழ்வார் என்பது மட்டும் உண்மை...

    ReplyDelete
  78. ஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  79. குருவே எப்படி இருக்கீங்க ...அஞ்சு அக்கா ,கிரி அக்கா ,ஜெய் அக்கா எல்லாம் எப்படி இருக்கீங்க ...

    ReplyDelete
  80. எங்க மூன் அக்கா க்கு புயந்த நாள் வாத்துக்கள் ....வாத்துக்கள் ...வாத்துக்கள் ...எப்பவும் ரொம்ப சந்தோசமா நீங்க இருக்கணும் அக்கா ... ...

    ReplyDelete
  81. குருவே கதை செம சூப்பர் ...நடுவில எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருஞ்சி ...கடைசியா ஏதோ சர்ப்ரைஸ் இருக்கும்னு நினைச்சேன் .....நடுவில வந்த டியாலோகுஸ் லாம் ருப்பெர் ....


    அந்த லூசு பயள் பதினோரு வர்சுசம் கழிச்சி திருந்தினதே பெரிய விடயம் ....பதினோரு வருஷமும் வைதேகி கூட இருந்து இருந்தா கூட வைத்தாகி வேல்யு தெரிஞ்சி இருக்காது னு நினைக்கேன் ....

    ReplyDelete
  82. குருவே நேற்று ௨௪ மணி நேரமும் உங்கட ப்லாகில இருந்திணன் ...ஆனா ஒரு கொமேண்டும் போட முடியல வேலையாள ....

    ReplyDelete
  83. இமா said... 3
    இது முடிவாக இருக்கக் கூடாது அதிரா. நீங்கள் நிறைய எழுத வேணும். எப்பிடி எழுதி இருக்கிறீங்கள்! அதிராவா இது!///


    மீ யும் சேம் சேம் பின்ச் அத்தை கூட ....

    ReplyDelete
  84. ஓகே அக்கா ....அஞ்சு அக்காள் வீட்டுக்கு போயிட்டு வாறன் ,...



    .

    ReplyDelete
  85. வாங்கோ இரவின் புன்னகை... முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க நன்றி.

    ஓம் ஹேமா வந்திட்டுப் போயிருக்கிறா.. மகிழ்சியாகக் கொண்டாடிட்டு வரட்டும்.

    மிக்க நன்றி வரவுக்கு.

    ReplyDelete
  86. வாங்கோ கலை.. காணவில்லையே என யோசிச்சேன்ன்..

    புதிய தலைப்பு வந்திட்டுது, நீங்க காணவில்லைப்போலும்.

    மிக்க நன்றி கலை.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.