நல்வரவு_()_


Saturday, 26 December 2009

என்னத்தைக் கண்டேன்???:)


என்னத்தைக் கண்டேன்???:)
(சிலவேளை இதுதான் வாழ்க்கையோ??:):))


ல்லூரிக் காலத்தில்
என் கண்ணசைவுகள்கூட
உனக்குக் கவிதை சொல்லியிருக்கும்

தனால் தானே
என் கண்ணசைவுகளை நீ
அதிகபட்சம் நேசித்தாய்

ப்போது எனக்கு
மீசை கூட
முளைத்திருக்கவில்லை!
இருந்தும் நீ எனக்குப்
பச்சைக்கொடி காட்டினாயே...
எதனால்?

காதல் கடிதம்...
ஓ.....
அது என் மாமாவின்
பழைய கடிதத்தைப்
பார்த்து எழுதியது...
அப்போது எனக்குச்
சுயமாக கடிதம் கூட
எழுதத் தெரியாது!

சும்மா
பரீட்சார்த்த முயற்சியாய்
உனக்குக் கொடுத்தேன்
இப்படியாகுமென்று
யார் கண்டது?...

தன் பின்
நான் என்ன செய்தேன்
எல்லாமே நீதானே!

ப்போதெல்லாம்
உனக்கு என்னைப் பிடிக்கும்!
என் புலம்பல் பிடிக்கும்!
புரியாமல் நான் பேசும்
வசனம் பிடிக்கும்!
நண்பர்கள் உபயத்தில்
நான் சொல்லும்
கவிதைகள்கூட உனக்குப் பிடிக்கும்!

ப்போது மட்டும்
உனக்கு என்ன நடந்தது?

த்தனை தடவை
என் 'செந்தில்' முகத்தைத் தடவி
'கமல்' என்று புகழ்ந்திருக்கிறாய்..?
எத்தனை தடவை
'நீங்கள் இல்லாவிடால்
வாழ்க்கையே இல்லை'
என்று புலம்பியிருக்கிறாய்..?

ப்போது உண்மையில்
'வாழ்க்கை' என்றால் என்னவென்று
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது!

ருப்பினும் வாழ்க்கைபற்றி - நீ
நிறையப் பேசுவாய்!
நான் சொல்லும்
அர்த்தமற்ற தத்துவங்களை
அப்படியே நம்புவாய்!
அதிகமேன்....
தொடர்ச்சியாய் ஆறு வருடம்
"நீ குஷ்பூ மாதிரி இருக்கிறாய்"
என்று நான் சொன்ன பொய்யை
நீ கடைசிவரை நம்பினாயே!
அப்போதெல்லாம் எனக்குள்
எதைக் கண்டாய்?

சொர்க்கத்திற்கான விசா
என்னிடம் இருப்பதாக
யார் உனக்குச் சொன்னது?

ப்பொழுது
கொஞ்ச நாட்களாகத்தான்
உன்னிடம் இந்த மாற்றம்!

"உங்களைக் கட்டிக்கிட்டு - நான்
என்ன சுகத்தைக் கண்டேன்?" என
நீ அடிக்கடி புலம்புவதின்
அர்த்தம் எனக்குப் புரியவில்லை!

சிலவேளை
இதுதான் வாழ்க்கையோ?


ன்னது?
நான் பேசுவது
கழுதை கத்துவதுபோல்
இருக்கிறதா?

யோ!! பிளீஸ்!!
தயவுசெய்து மெதுவாகக் கத்து
நமது மூன்றாவது மகன்
நம்மை முறைத்துப் பார்க்கிறான்!!!

(கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).

இத்துடன் கிறிஸ்மஸ் இலவச இணைப்பு "மொப்பி"..
http://picasaweb.google.com/athiramiya/Moppy

34 comments :

  1. அதிரா!
    காட்சியும் கானமும்(கவிதையும்) நன்றாக இருக்கிறது.

    "உங்களைக் கட்டிக்கிட்டு - நான்
    என்ன சுகத்தைக் கண்டேன்?"
    முத்தாய்ப்பாக அருமை.

    சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது.
    பகிர்வுக்கு மிக்கநன்றி!

    இலவச இணைப்பும் அபாரம். அழகாக இருக்கிறார் மொப்பி!!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. இளமதி மிக்க நன்றி. உண்மைதான், சிரித்தபின் சிந்திக்கவும் வைக்கிறது.

    ReplyDelete
  3. //எத்தனை தடவை
    என் 'செந்தில்' முகத்தைத் தடவி
    'கமல்' என்று புகழ்ந்திருக்கிறாய்..?
    எத்தனை தடவை
    'நீங்கள் இல்லாவிடால்
    வாழ்க்கையே இல்லை'
    என்று புலம்பியிருக்கிறாய்..?//
    கவிதை வரிகள் சிரிப்பை வரவழைத்தது அதிரா.

    ReplyDelete
  4. சந்தனா! சிரித்துக்கொண்டிருக்கிறீங்களோ? மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா மிக்க நன்றி. உண்மைதான் எனக்கும் படிக்கும்போது சிரிக்கவைக்கும் அந்த வரிகள்.

    ReplyDelete
  5. :) சிரிக்கிறதுக்காகவே அடிக்கடி வருவேன் என்று நினைக்கிறேன் அதிஸ்.

    ம்ஹும்! நான் சிரிச்சால் "ஒரு வரிப் பதில் போடாதே!"
    //சந்தனா! சிரித்துக்கொண்டிருக்கிறீங்களோ? மிக்க நன்றி.// ? கர்ர்ர்

    ReplyDelete
  6. மிக்க நன்றி இமா.

    இமா!!நான்கூட யோசிக்காமல்:) விட்டுவிட்டேன். நல்லவேளை காட்டித்தந்திட்டீங்கள்:) சந்தனாவை. அமெரிக்கா எமக்கு பக்கத்திலதானே, விடமாட்டேன்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    கொஞ்சம் சிரிக்க:
    நண்பன்1: நான் எது செஞ்சாலும், என் மனைவி குறுக்க நிற்கிறா.

    நண்பன்2: அப்படியெண்டால் கார் ஓட்டிப்பாரன்......

    (பி.கு:சந்து, காதைக்கொண்டுவாங்கோ, இமாவைச் சமாளிக்கத்தான் எல்லாம்:), இதுக்கெல்லாம் முறைக்கப்படாது ஓகே?:))

    ReplyDelete
  7. நான் பக்கத்துச் சந்திலதான் நிக்கிறன், கவனம்.

    ReplyDelete
  8. இமா, பக்கத்தில நின்றாலும் ஒன்றும் கேட்கேல்லைத்தானே உங்களுக்கு?:).

    ReplyDelete
  9. உண்மையிலேயே வாழ்கையின் யாதார்தம்... அருமையான கவிதை...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஹைஷ் அண்ணன். உண்மைதான், சிந்தித்துப் பார்த்து நம்பத்தான் வேண்டும். இதுதான் வாழ்க்கை.

    ReplyDelete
  11. //என்னத்தைக் கண்டேன்???:) //

    நான் கண்டுட்டேன் ..கமெண்டும் தொடரும் ...இங்கே இல்லே ‘அங்கே’ :-)))


    மொப்ஸ் இதோ ஐயம் கமிங் யா...!! :-)))))

    ReplyDelete
  12. என்ன சொல்றார் பச்சைப்பூ?:)) எனக்கு ஒண்ணுமே பிரியுதில்ல... நாளைய டயட்டை நினைத்து.. இண்டைக்குக் கண்ணில் படுவதை எல்லாம் மளமளவென உள்ளே தள்ளுறேன்:))))...

    இப்ப போய் மொப்ஸ் பற்றி எல்லாம்:))) அஞ்சூஊஊஊஉ உங்களுக்கு ஏதும் பிரியிறதோன்னோ?:))

    ReplyDelete
    Replies
    1. 2012 ல கூப்ட்டிருக்கிங்க ..2018 தான் பார்க்கிறேன் :) வெறி சோரி

      Delete
  13. பேப்பரில் வெளியானதா? என்னடா இது, அதிரா அப்போ எல்லாம் இவ்வளவு சூப்பராக எழுதி விட்டு இப்போ 'கம்'முனு இருக்காங்களேன்னு பார்த்தேன்! ரசிக்க முடிந்த கவிதை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ...

      //பேப்பரில் வெளியானதா? ///

      சே..சே.. தெரியாமல் அதைப் போட்டிட்டனோ:)) எழுதியவர் கவிமாமணி அதிரா எனப் போட்டிருக்கோணும் ஹா ஹா ஹா:)..

      Delete
  14. ஒன்றை அடையும்வரை அதன்மேல் நமக்கு இருக்கும் ஆர்வம், தீவிரம், அதை அடைந்தபின் காணாமல் போய்விடுகிறது. பிறகு, இழக்கும்வரை அதன் அருமை தெரிவதில்லை நமக்கு! (எப்படி? சீரியஸ் கமெண்ட் ஒண்ணு போட்டு அசத்தினேன் இல்லே? அதுவும் தெரியுமே எனக்கு!)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உங்கள் கொமெண்ட் என்னை ஃபிரீஸ் ஆக்கிட்டுதே:) மிக்க நன்றி ஸ்ரீராம்..

      //அதுவும் தெரியுமே எனக்கு!)//
      எங்களுக்கும் தெரியுமே..

      Delete
  15. //கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு, இலங்கைப் பேப்பரில் வெளியானது இது).//

    என்னாது :) 2009 இல் 15 வருஷம் முன்னாடி :) பேப்பரில் வந்தா !!!!
    நீங்க அப்போவே பிரபலம் மியாவ்
    இருங்க கணக்கு போட்டு வரேன் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. 2009 இல எங்கே போயிருந்தீங்க கர்ர்ர்:))..

      என்னடா .. அஞ்சுவையும் காணம்:), நெல்லைத்தமிழனையும் காணம்:) இருவரும் திருந்திட்டினம்போல:) என நினைச்சேன்:))..

      கஸ்டப்பட்டு கணக்கெல்லாம் போடாதீங்க ஏனெனில் அது லைபிரரியில் இருந்து என் கண்ணில மாட்டிச்சுதே:))..

      Delete
    2. போங்க மியாவ் :) ஒரு நாளில் ரெண்டு தரமாது உங்க TAIL புடிச்சி இழுத்தா தான் எங்களுக்கு எனர்ஜி

      Delete
    3. இழுங்கோ இழுங்கோ ஆரு வாணாமெண்டா:) பட் ஒரு கண்டிஷன்:) நித்திரை கொள்ளும்போது மட்டும் டோண்ட் டச்சூஊஊஊஊஊ கர்ர்ர்:))

      Delete
  16. /எத்தனை தடவை
    என் 'செந்தில்' முகத்தைத் தடவி
    'கமல்' என்று புகழ்ந்திருக்கிறாய்..?//
    கர்ர்ர்ர்ர் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா:) கொஞ்சம் மாத்தியும் சொல்லலாம் அஞ்சு:).. அனுக்கா என.. தமனா எனப் புகழ்ந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா.. மியாவும் நன்றி கவி படிச்சமைக்கு.

      Delete
  17. ஹலோவ் மியாவ் உங்க கவிதை தானே ? குளிரில் எல்லாம் மாறி தெரியுது

    ReplyDelete
    Replies
    1. ஹலோ மிஸ்டர் சுவெட்டர் போட்டுக்கொண்டு வந்து படிங்கோ கர்:) ஹா ஹா ஹா:)

      Delete
  18. எச்சூஸ்மீ :) எனக்கு நாலு கவிதை பார்சல் ப்ளீஸ் :)

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு முதலில் நீங்க செந்திலோ? கமலோ? எனச் சொல்லோணுமாக்கும்:)) ஹா ஹா ஹா..

      Delete
  19. இருங்க :) யார்யாருக்குன்னு சொல்றேன் :)
    முதலில் என் பிள்ளை பிரபுவுக்கு ஒரு கவிதை

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அந்தக் குண்டருக்கோ?:) சரி சரி முயற்சிக்கிறேன்:) ஹா ஹா ஹா..

      Delete
    2. கர்ர்ர் :) உங்க மருமகன் மரியாதை கொடுக்கணும்

      Delete
    3. அதனாலதானே ஊக்கே பண்ணியிருக்கிறேன்ன்:) பாருங்கோ மருவாதையைக் கவிதையில:))

      Delete
  20. Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிராவுக்கு இல்லை எண்டதும்.. அன்னை வேளாங்கன்னி கோயிலுக்கு நேர்த்தி வச்சிருப்பீங்க:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.