நல்வரவு_()_


Saturday, 14 May 2011

அம்மாவுக்கு ஒரு கடிதம்...

முன்பு நாம் ஒரு தொடர் கதை எழுதினோம், அதில் நான் தீபுக்குட்டி எழுதினேன், அப்போதே இதையும் தொடர்ந்து எழுதியிருந்தேன், ஆனா இன்றுதான் வெளியிட நேரம் அமைந்திருக்கு... அதே தீபுக்குட்டிதான், இப்போ வளர்ந்திட்டா... :).

இது முளுக்க முளுக்க என் கற்பனையில் உருவாக்கிய மடல்....



அன்புள்ள அம்மாவுக்கு,

உன் மகள் தீபுக்குட்டி எழுதிக்கொள்வது. நான் இங்கு நலமே இருக்கிறேன், அங்கு நீங்கள், தம்பி, தங்கை அனைவரும் நலமே இருப்பீங்கள் என்றே நம்புகிறேன்.

அம்மா!!! நான் உன்னோடு கொஞ்சம் தனியே, மனம் திறந்து கதைக்கப் போகிறேன், உன் மனதைத் திடப்படுத்திக்கொள்ளம்மா.


நான் பல்கலைக்கழகம் வந்த 2ம் வருடத்திலேயே, இங்கு ஒருவரைச் சந்தித்தேன், அவர் இப்போ படிப்பை முடித்து, ஒரு பிரபல கம்பனியில் பொறியியலாளராக இருக்கிறார். அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன், ஆறடி உயரம், என்னைவிட நிறம் குறைவு, கிரிக்கெட் பிளேயரும்கூட. கிரிக்கெட்டில் பல கப்புகள் பெற்றிருக்கிறார், சமீபத்தில் ஒரு பேப்பரில் அவரின் படமும் வெளிவந்தது. அவரை நான் விரும்புகிறேனம்மா (காதலிக்கிறேன் என சொல்லவில்லை, ஏனெனில் அது உனக்குப் பிடிக்காத வார்த்தை என எனக்கு நன்கு தெரியும்).

அவரின் இப்போதைய நிலைமையும், பதவியையும் பார்த்துத்தான், நான் விரும்புகிறேன் எனத் தப்பாக நினைத்துவிடாதே. நான் உன் மகள் அம்மா...நீ எனக்கு பால்சோறோடு பண்புகளையும் பக்குவங்களையும் சேர்த்தேதானே ஊட்டி என்னை வளர்த்தாய். சின்ன வயதிலிருந்தே என்னை உனக்கு நன்கு தெரியுமே, புற அழகையும் பகட்டையும் பார்த்து மயங்குபவளில்லை என்பது.


நான் 2ம் வருடத்தில் இருந்தபோது, அவர் இறுதி ஆண்டில் இருந்தார். எங்கள் குடும்பம்போல், அவருடைய அப்பாவும் சமீபத்தில்தான் காலமானார். அவர்தான் மூத்தபிள்ளை, ஒரே ஒரு ஆண்பிள்ளையும்கூட. இரு தங்கைகள் இருக்கிறார்கள். இப்போ குடும்பப் பொறுப்பு அவரது கையில்தான் இருக்கிறது. நான் இதையெல்லாம் எழுதுவது, என் நிலைமையை உனக்குத் தெரியப்படுத்தி, உன் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளவே. திருமணத்தைப்பற்றி இப்போ நான் கனவிலும் எண்ணவில்லையம்மா.

எனக்கும் தம்பி தங்கை இருக்கிறார்கள், என் குடும்பப் பொறுப்பு என் கையிலே இருக்கிறதென்பதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேனம்மா.


குளிக்கப் போவதானால்கூட உன்னிடம் சொல்லி விட்டுத்தான் போவேன், அப்படிப்பட்ட நான், இன்று உன் அனுமதி இல்லாமல் சம்மதம் சொல்லிவிட்டேனே என ஒருபோதும் தவறாக நினைத்து, மனம் வருந்திவிடாதே. அவர் என்னிடம் சம்மதம் கேட்ட அந்த ஒரு நிமிடம், என்னால் மறுப்புச் சொல்ல முடியாமல், சம்மதம் தெரிவித்து விட்டேனம்மா. என்னதான் இருந்தாலும், நானும் ஒரு சாதாரணப் பெண்தானே?, அவரின் அன்பான பேச்சும், அமைதியான சுபாவமும், எதுக்குமே கோபப்படாமல் நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கவைக்கும் தன்மைகளும் என்னைக் கவர்ந்துவிட்டனவம்மா.


எந்த ஒரு விஷயமானாலும், நான் இலகுவில் கால் வைக்கமாட்டேன் என்பதும் உனக்குத் தெரியும்தானே. உன் எதிர்பார்ப்பைவிட சற்றும் குறைந்த மருமகனாக அவர் இருக்கமாட்டார். நம் நாட்டு வழக்கப்படி, தந்தைக்குப் பின், தந்தையின் பொறுப்பை ஏற்று, தந்தை ஸ்தானத்திலிருந்து குடும்பத்தைத் தாங்குவது மூத்த மருமகன் தானே? அதில் சற்றேனும் அவர் குறைந்தவராக இருக்கமாட்டார்.


நீ அடுத்தமுறை இங்கு வரும்போது, அவர் உன்னைச் சந்திக்க விரும்புகிறாரம்மா. ஒருமுறை கதைத்தாலே உனக்கும் அவரை மிகவும் பிடித்துவிடுமம்மா.


சின்ன வயதிலிருந்தே, உன்னிடம் நான், எந்தச் சின்ன விஷயத்தையும் ஒழித்ததில்லை. அதுபோலவே, என் மனதில் இருந்த பாரத்தை, இன்று, இக்கடிதம்மூலம் இறக்கி வைத்துவிட்டேன். நான் ஆசைப்பட்ட எதையுமே இதுவரை நீ மறுத்ததில்லை, ஏனெனில்.. என் ஆசையில் எப்பவும் ஒரு நியாயம் இருக்கும் என்பதில் உனக்கு நம்பிக்கை என எனக்குத் தெரியும்.


இன்று அப்பா எம்மோடில்லை என்பதற்காக, அப்பாவின் புத்திமதிகளும் இல்லாமல் போய்விடுமோ? நான் எப்பவுமே உன் பிள்ளைதானம்மா.


இப்படிக்கு உன் சம்மதத்தை எதிர்பார்த்து, நம்பிக்கையோடு காத்திருக்கும்,


அன்பு மகள்,
தீபுக்குட்டி.

==========================================================
பின் இணைப்பு:

உஸ்ஸ்ஸ்ஸ்... ஆரோ வாற மாதிரிச் சத்தம் கேட்குதே....

=========================================================
படித்ததில் பிடித்தது:
நான் வற்றிப் போனபின் தான் தெரிந்து கொண்டேன், என்னை
எத்தனைபேர் குடி நீராகப் பாவித்தார்கள் என்பதை
=========================================================

24 comments :

  1. /உஸ்ஸ்ஸ்ஸ்... ஆரோ வாற மாதிரிச் சத்தம் கேட்குதே..../ஓம்,அதிராக்கா! ஆராரோ வருகினம். பயம்மா இருக்கு,வாருங்கோ நம்ம சேஃப்டி ப்ளேஸுக்கு ஓடிருவோம்!

    இம்பூட்டு பெரீய்ய விஷயத்தை அம்மாட்ட நேர்ல சொல்லாம கடிதம் வேறே எளுதிருக்கீங்கோ..என்னாகுமோ ஏதாகுமோ? ஜீனோ வில் க்ளைம்ப் ஆன் தட் மேங்கோ ட்ரீ..யூ க்ளைம்ப் ஆன் யுவர் முருங்கை ட்ரீ,கமான்யா,கரி அப்!!

    ReplyDelete
  2. அதெப்படி அது அம்மாகிட்ட எல்லா விஷயத்தையும் அவங்க தோள்மேல சாஞ்சுக்கிட்டு கொஞ்சி கொஞ்சி சாதிச்சுக்கிறீங்க. இந்த லவ்வுக்கு மட்டும் ஏன் லெட்டர்? கர்ர்ர்ர்ர்ர்....

    ReplyDelete
  3. // நான் வற்றிப் போனபின் தான் தெரிந்து கொண்டேன், என்னை எத்தனைபேர் குடி நீராகப் பாவித்தார்கள் என்பதை//

    எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் மீ எஸ்..

    ReplyDelete
  4. ஆஆஆஆஆ....ஆரோ வந்திருக்கினம்ம்ம்ம்.. வந்திருக்கினம்.... ஓடிவாங்கோ ஓடிவாங்கோ....

    இதென்ன இது இப்பூடிக்கத்தியும் ஒருவரையும் காணேல்லையே... ஒரே புகையாக்கிடக்கே...:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்... இட்ஸ் ஓக்கை நானே இரண்டுகையையும் தட்டுறேன்...

    ஜீனோ வாங்கோ... பாதையை மறந்திட்டீங்களோ என நினைச்சேன்...

    மாமரத்தில ஏறாதீங்க ஜீனோ, கீழ இருந்தால்தான் நல்ல நல்ல பாட்டா வரும்.

    இலாக்காவும் நானும் ஓல்ரெடி/ஆல்ரெடி முருங்கையிலதான் இருக்கிறம், பூப்பறிக்கிறம் வடகம் செய்ய, உங்களுக்கும் வேணுமோ ஜீனோ?.

    மியாவும் நன்றி ஜீனோ, 8ம் திகதி வியாழன்(குரு) மாறினது நல்லாவே தெரியுது:)))).

    ReplyDelete
  5. வாங்க அப்துல்காதர்..
    //இந்த லவ்வுக்கு மட்டும் ஏன் லெட்டர்? கர்ர்ர்ர்ர்ர்....
    // காதைக்கொண்டுவாங்கோ... இதெல்லாம் ஒரு டெக்னிக்:). இப்பூடியான விஷயத்தை நேரில சொன்னால் பளாரென விழுந்தாலும் விழும்:), இப்பூடிச் சொன்னால்... உடன கோபம் வந்தாலும்... பதில் போடுமுன் நிறையச் சிந்திப்பினமெல்லோ... பின் கோபம் ஆறி நல்ல முடிவு வரலாம்..கிக்..கிக்...கீஈஈஈஈஈஈஈ.

    எஸ் ஆனா விட்டிடுவமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    உண்மையேதான் எண்ணம் அழகானால் எல்லாமழகாகும். ஆனாலும் சிலரது வாழ்க்கை அவ் வசனம் போலவும் அமைந்திருந்ததை அறிந்திருக்கிறேன்..

    முக்கியமாக குடும்பத்தைக் காப்பாற்ற என தனியே வெளிநாடு வந்து, உழைத்து உழைத்து அனுப்ப, ஒரு கூட்டமே அங்கு அதை அனுபவித்துவிட்டு, இவர் ஊருக்குப் போனபோது, மனைவிகூட இவரைவிட்டுவிட்டு போய்விட்ட நிலைமை... ஊரில்பேப்பரில் படித்திருக்கிறேன்.

    சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்:)))).

    மியாவும் நன்றி அப்துல் காதர்.

    ReplyDelete
  6. //அவரை நான் விரும்புகிறேனம்மா (காதலிக்கிறேன் என சொல்லவில்லை, ஏனெனில் அது உனக்குப் பிடிக்காத வார்த்தை என எனக்கு நன்கு தெரியும்).//
    அய்யோ அய்யோ...!

    //அவர் என்னிடம் சம்மதம் கேட்ட அந்த ஒரு நிமிடம், என்னால் மறுப்புச் சொல்ல முடியாமல், சம்மதம் தெரிவித்து விட்டேனம்மா. என்னதான் இருந்தாலும், நானும் ஒரு சாதாரணப் பெண்தானே?,//
    ஓஓ சாதாரண பெண் என்றால் உடனே சம்மதம் சொல்லிடுவாங்களோ...? ஹ்ம்ம்ம்


    இந்த கடிதத்தின் மூலம் தெரிவது என்னவென்றால், காதலில் வெற்றி பெற வேண்டுமானால் காதலிப்பவருக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் கடிதம் எழுத பழகிக்கொள்ள வேண்டும்...!

    //இது முளுக்க முளுக்க என் கற்பனையில் உருவாக்கிய மடல்....//

    கற்பனை நல்லா இருக்கு..! காதலித்த பின் பெற்றோருக்கு தெரிவிக்க இப்படி ஒரு கடிதம் எழுதினால் பிரச்சனையே இருக்காது( குறைந்தபட்ச்சம் ”அடி”யிலிருந்தாவது தப்பிக்கலாம் :D)... வீட்டில் எப்படி காதலை தெரிவிப்பது என குழம்பிக்கொண்டிருக்கும் காதலர்களுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்ததற்காக உங்களுக்கு Nobel பரிசே கொடுக்கலாம் ! :P

    ReplyDelete
  7. கற்பனையில் உருவான மடல் ஆக இருந்தாலும், உணர்வுகள் நிஜங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. பேச்சு மொழி வழக்கையும் சேர்த்து கடிதத்தினுள் புகுத்தி, உண்மையான உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்று இருக்கிறது உங்கள் கடிதம்.

    ReplyDelete
  8. ரொம்ப அழகாக எழுதி இருக்கின்றிங்க...இது கற்பனை மாதிரியே தெரியவில்லை...அவ்வளவு சூப்பராக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. ஓ! தீபுக்குட்டி இந்த அளவு வளர்ந்துட்டாவோ அதீஸ்! வேற ஒரு ஆளும் 'அங்க' இப்பிடி (கொஞ்சம் வேற மாதிரி) ஒரு லெட்டர் எழுதி இருந்தவ ஒரு வருஷம் முன்னால. நீங்கள் பார்த்து இருக்க மாட்டீங்கள்.

    அரணும் இங்க நல்லா வளர்ந்து இருக்கிறார். ஆனால் இன்னும் லெட்டர் எழுதுற அளவுக்கு வளரேல்ல.

    ஹாய் பப்பி... ;) கன காலத்துக்குப் பிறகு இந்தப் பக்கம். பார்க்கச் சந்தோஷமாக இருக்கு. திரும்ப நித்திரை கொள்ளப் போறேல்ல, முழிச்சு இருக்க வேணும் எப்பவும். ஜீனோவின் மூலை தூசு பிடிச்சுப் போய் இருக்கு. போய்க் க்ளீன் பண்ணிக் கதவைத் திறவுங்கோ.

    ReplyDelete
  10. வாங்க கவிக்கா....

    //அய்யோ அய்யோ...! //
    என்னாது, நானே இதை வெளியிடலாமா , ஒருவேளை ஆராவது வந்து, நான், விரும்புபவர்களுக்கு ஐடியாக் கொடுக்கிறேன் என திட்டிப்போடுவினமோ எனப் பயந்து கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கிறேன்... நீங்க பிடிச்சே கொடுத்திடுவீங்கபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்:)))).


    //ஓஓ சாதாரண பெண் என்றால் உடனே சம்மதம் சொல்லிடுவாங்களோ...? ஹ்ம்ம்ம்//

    அதுவேற இது வேஏஏஏஏஏற கவிக்கா... கொயம்பிடாதீங்க:)).

    //வீட்டில் எப்படி காதலை தெரிவிப்பது என குழம்பிக்கொண்டிருக்கும் காதலர்களுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்ததற்காக உங்களுக்கு Nobel பரிசே கொடுக்கலாம் // எனக்கு மக்களிடம் அடி வாங்கித்தருவதென முடிவெடுத்திட்டீங்க...:))).

    சரி சரி யாரையும் விரும்பிடாதீங்க எனச் சொன்னால் மட்டும் விரும்பாமல் விட்டிடுவார்களோ..... நடப்பது எதுவாயினும் எழுத்தில் எழுதப்பட்டிருந்தால் நடந்துதான் ஆகும்.

    எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது... ஊரில் ஒரு தூரத்து உறவினருக்கு 3 பெண்குழந்தைகள். மூத்தமகள் மட்டும் காகக்கறுப்பு, ஏனைய இருவரும் நல்ல வெள்ளை, ஆனால் மூவரும் அழகானவர்கள்.

    நடுத்தரக்குடும்பம். , ஒருமுறை, சிலநாள் எம் வீட்டில் வந்து தங்கியிருந்தார்கள். அப்போ அந்தப் பிள்ளைகளி்ன் தாய், என்னோடு ஒரே புலம்பல்.. 3 பெண்களாயிற்றே என்ன செய்யப்போகிறோமே என, எனக்கு அப்போ 17,18 வயதுதான் இருக்கும், கோபம் கோபமாக வந்தது எனக்கு. பெண் பிள்ளைகள் என்றால் என்ன... ஏன் இப்படிப் புலம்புகிறீங்க என ஏசிப்போட்டேன். அப்போ அவ சொன்னா, நான் என் பெண்களிடம் நேராகவே சொல்லிட்டேன், ஆரையாவது லவ் பண்ணி வாங்க நான் மறுக்காமல் முடித்து வைக்கிறேன் என. அப்போது அவர்களுக்கு 13,12, 10 வயதென நினைக்கிறேன்.

    அவ அப்படிச் சொன்னதாலோ என்னவோ பின்னர் அறிந்தேன், மூவரும் எந்த ஒரு சிக்கலிலும் மாட்டாமல், பெற்றோரே மாப்பிள்ளை பார்த்து முடித்து வைத்ததாக.

    கட்டுப்பாடு அதிகமானாலும் பிரச்சனை வரலாம், பேசாதே என்றால்தான் பேசவேண்டும்போல இருக்கும்.

    மிக்க நன்றி கவிக்கா, வரவுக்கும்... கருத்துக்கும்.

    ReplyDelete
  11. வாங்க நிரூபன்...

    எனக்கு எப்பவுமே, தனிமை கிடைத்தால், நிறைய கற்பனைகள் மனதில் ஓடும்... நேராக எதிலும் முட்டி மோதிடாமல் போய் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்திடுவேன், ஆனால் மனம் ரோட்டில் இருக்காது, எத்தனையோ தடவை பலரிடம் ஏச்சு வாங்கியிருக்கிறேன், கை காட்டினேன், கார் லைட்டைப் போட்டுக் காட்டினேன் கவனிக்கவில்லையா என கேட்டு:)). அப்படி யோசித்தே இதையும் எழுதினேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. வாங்க கீதா, நான் பேசும் மொழியை மாற்றாமல் அப்படியே எழுதியிருக்கிறேன், அதுதான் நிஜம்போலவே தெரியுது.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. வாங்க இமா...

    தீபுக்குட்டி எப்பவோ வளர்ந்திட்டா இமா, திருமணம் முடித்திட்டா:), சிலநாட்கள் கணவரைப் பிரிந்து வேறூரில் இருக்கிறா வேலை நிமித்தமாக, அப்போ ஒரு மடல் அனுப்புகிறமாதிரி கணவருக்கு, என எழுதினால் எப்பூடி இருக்குமெனவும் யோசித்தேன் ஆனா அதை இன்னும் எழுதவில்லை:((.

    அரணும் வளர்ந்திருக்கத்தானே வேணும்:)). ஸ்கூல் ஹொஸ்டலில் பெற்றோரைப் பிரிந்திருப்பதுபோலாவது எழுதலாமே இமா... முயற்சி செய்துபாருங்க...

    நல்லாச் சொல்லுங்க இமா, ஜீனோக்கு:)). ஜீனோஸ் கோனர் ஒரு மூலையில, ஜீனோ ஒரு மூலையில இருக்கினம் கன நாளாக... ஆனா ஒன்றுமட்டும் தெரியுது, அவர் சும்மா இருக்கேல்லை, இவ்வளவு நாளும் பிரக்டிஸ் பண்ணி இப்பத்தான் மங்கோ றீ ஏறப் பழகிட்டார்.... இனி அக்காவோட எல்லா மரமும் ஏறுவார் என நினைக்கிறேன்:)... உஸ்ஸ் அப்பா முடியல்ல:)).

    மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  14. நல்ல ஐடியா தான், அதீஸ். ஆனால், எங்க வீட்டில் எப்படி சொன்னாலும் பளார் தான். சரி விடுங்கோ பழசை கிண்டி என்ன வரப் போவுது. நல்லா இருக்கிறா தீபுக் குட்டி. தீபுக் குட்டியின் காதல் நிறைவேறி விட்டதா???

    ReplyDelete
  15. கவிதைகள் அருமை .தங்களின் கவிதைகளை தங்கள் தளத்தில் பதிவிட உங்களின் அனுமதி தேவை

    http://usetamil.net

    ReplyDelete
  16. வாங்க வான்ஸ்ஸ்..

    அதெப்படி சிரிக்காமல் சிரிப்புக்காட்டுறீங்க:)..

    //சரி விடுங்கோ பழசை கிண்டி என்ன வரப் போவுது// நிறைய எழுத நினைச்சேன்.... இதைப் பார்த்ததும் என் வாய்க்கு சட்டர் போட்டிட்டேன்...:))).

    தீபுக்குட்டிக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.... அது லவ் மரீஜ்ஜா இல்ல அரேஞ் மரீஜ்ஜா எனக் கேட்காமல் விட்டிட்டனே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  17. தமிழர்களின் சிந்தனை களம் said... 15
    கவிதைகள் அருமை .தங்களின் கவிதைகளை தங்கள் தளத்தில் பதிவிட உங்களின் அனுமதி தேவை
    ///
    என்னாது, கவிதைகளைப் போடப்போறீங்களோ? கவிதைகளை மட்டும்தானே? ஓக்கே போடுங்க.. ஆனா எங்கிருந்து எடுத்தீங்க என்பதனையும் சுட்டிக்காட்டிப் போடுங்க.

    போகும்போது கூடவே கொண்டுபோகப்போகிறோமா இல்லையே.... அதனால யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

    ReplyDelete
  18. அம்மாவுக்கு கடிதம் நல்லா இருக்கு.என்னைக்கேட்டா, இந்தக் கடிதத்தை எல்லாம் விட,நேரில் சொல்வது பெட்டர்னு சொல்லுவேன்.ஹிஹி!

    கணவருக்கும் கடிதம் எழுதப்போறாங்களா தீபுக்குட்டி? சரி,கலக்குங்க! :)

    ReplyDelete
  19. வாங்க யூஜின் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ஒற்றைவரிப்பதில்.... இனிமேலும் கலக்கிட்டீங்க எனச் சொன்னால் அடிதான் வாங்குவீங்க சொல்லிட்டேன் ஆமா....:).

    மியாவும் நன்றி யூஜின்.

    ReplyDelete
  20. வாங்க மஹி...
    நேரில் சொல்வதற்கு அவ பக்கத்தில இல்லையெல்லோ... தீபுக்குட்டி தூரத்தில ஹொஸ்டல்ல இருக்கிறா, அதுதான் மயில்:))).

    //கணவருக்கும் கடிதம் எழுதப்போறாங்களா தீபுக்குட்டி? சரி,கலக்குங்க! :)
    //
    அவ சரியான ஷை:)).
    எழுதமாட்டா என்றே நினைக்கிறேன்:)).

    மியாவும் நன்றி மஹி.

    ReplyDelete
  21. கதை ரெம்ப அருமையாக எழுதியிருக்கீங்க அதிரா. உங்க எல்லாக்கதைகளும் வாசித்திருக்கிறேன்.யாதார்தமான எழுத்து.

    ReplyDelete
  22. ம்ம் கற்பனை கதை மிக அருமை
    படித்ததில் பிடித்தது டபுள் ஒகே
    இப்படி லவ்வ லெட்டரில் அம்மா விடம் எனக்கேல்லாம் நோ சான்ஸ் ..அங்கே ஒரு கொட்டு விழும்..கிகி,இப்படி எழுதி கொடுக்கும் போது சிந்திக்கவும் செய்வார்கள்.
    எப்படி எடுத்து கொள்வது

    ReplyDelete
  23. உங்கலூக்கு மட்டும் எப்ப்டி பூஸார் படம் இப்படி கிடைக்குது

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.