நல்வரவு_()_

போன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,
கேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..
இப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்

Friday, 13 January 2017

ந்நாளும் நானும்!

ண்மையில் நம்பவே மாட்டீங்க, அன்று நான் பட்ட அவஸ்தையும் மகிழ்ச்சியும் சொல்லில் அடங்காது.... இதுக்குப் போய் இப்படியா எனக் கேட்பீங்க... ச்ச்சும்மா இருந்த என்னை உசுப்பி விட்டதே இந்த புளொக் உறவுகள்தான்...

ண்மையைச் சொல்லப்போனால், திருமணத்துக்கு முதல்நாள் ஒரு பெண் எப்படி இருப்பாவோ,  ஒரு பெண்ணாக இருப்பதனால் உணர்வுகளைச் சொல்றேன், எத்தனை வருடம் கடந்தாலும் எதையும் மறக்க முடியாது வாழ்க்கையில்.... அதாவது வீட்டில் விதம் விதமா சமையல் நடக்கும், பலகாரம் செய்வார்கள், பழைய உறவினர்கள் எல்லோரும் வந்திருப்பார்கள் ஆனா இத்தனைக்கும் மத்தியில் நாமோ, ஏதோ ஒரு கனவுலகில் ஒரு திகிலோடு பறந்து கொண்டிருப்போம்..... அதேபோல, சொல்லமுடியாத ஒரு உணர்வில் நான் இருந்தேன்.

கோடை விடுமுறையின்போது இதுக்காகவே கனடா போனேன், அண்ணன் வீட்டிலிருந்து எம்மைத் தம் வீட்டுக்கு அழைத்துப் போக, அக்கா குடும்பம் வந்திருந்தார்கள்... எம்மை ஏற்றிக் கொண்டு அக்காக்களின் அக்குரா.. முன்னே பறக்க.. என் மனமோ பின்னே பறந்தது... அருகில் அஞ்சு , இமா, ஆசியா, மகி, அம்முலு, இளமதி பறக்கிறார்கள்.. ஏனெனில் தம் புளொக்குகளில் படம் படமா போட்டு என்னை உசுப்பி விட்டதே இவர்கள் தானே...

தில வேறு, ஃபோனில் பேசும்போது அம்மாவிடம்,  “அம்மா அங்கு அக்கா வீட்டில் இருக்காம்மா” எனக் கேட்டேன், உடனே அம்மா சொன்னா “ச்சும்மா ச்சும்மா வேலி ஓரமெல்லாம் முளைச்சிருக்கு, ஏனைய பயிர்களை பழுதாக்குதே என சிலதைப் பிடிங்கி எறிஞ்சேன்” என, என்னம்மா இப்பூடிப் பண்றீங்களேம்மா என அம்மாவுக்குப் பேசினேன், இல்லை நிறைய இருக்கு பயப்படாமல் வா என தைரியம் தந்தா.

க்கா வீட்டுக்குப் போய்ச் சேர இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது, நன்கு இருட்டி விட்டது, அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித் தலை மட்டுமே தெரிந்ததுபோல, எனக்கு அந்நேரம் எதுவுமே தெரியவில்லை அந்த நினைவைத் தவிர.. வீட்டுக்குள் போனதும் நேரே காட்டுங்கோ வாங்கோ கார்டினுக்கு எனக் கேட்டேன், தோட்டப்பக்க லைட்டைப் போட்டுக் காட்டினார்கள் ஓடிச்சென்று அந்த இருட்டிலும் முதன் முதலாக தொட்டு தடவி மணந்து பார்த்தேன்ன்ன்ன்.. அதுதான் மணத்தக்காழிக் கீரையை... நம்ப மாட்டீங்கள், என் வாழ்க்கையில் வந்த எத்தனையோ மகிழ்ச்சிகளில் - இந்த நாளும் ஒரு இடம் பிடித்துக் கொண்டது என்பது உண்மையேதான்.

டெய்லி கறி சமைச்சு சாப்பிட்டேன்...


இதைப்பற்றிய ஏக்கப்:) பதிவு படிக்க இங்கு கொஞ்சம் வாங்கோவன்...

பழம் பறிக்க முடியவில்லை, ஏனெனில் நாம் போனபோதுதான் குட்டிக் குட்டியாக முளைக்கத் தொடங்கிய காலம், சில காய்களும் வந்திருந்தன...

இது அக்கா வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஏனைய மரக்கறிகள்... இப்போதான் முளைக்க, பூக்க ஆரம்பித்த நேரம் அது....
பூசணி, பீன்ஸ், தக்காழி, கீரை, பாவல்

Add caption

வெங்காயம், பயத்தை, ஹேல் லீவ்ஸ், கபேஜ், சோளம், கத்தரி

Add caption
சரி இத்தோடு இம்முறை போதும் மீண்டும் என் வீட்டுத் தோட்டத்தோடு இன்னொருநாள் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஊசிக்குறிப்பு:-
அரசனாக வந்து அடிமையாகி இருப்பதும், அடிமைபோல வந்து அரசியாகி விடுவதும்தான் திருமணபந்தம்... ஹா..ஹா..ஹா..
இதனை உங்களுக்காகக் கண்டு பிடித்து எடுத்து வந்தவர்.. உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா:).
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

38 comments :

 1. ”என்னவோ ஏதோ என்று நினைத்து ‘திக்’..... ’திக்’கென புதுமணப்பெண்ணின் உள்ளம் போல படித்துக்கொண்டே வந்தால் .... கடைசியில் ’சப்’பென்று ஒரு கீரை நியூஸ் ... நியூஸன்ஸ் .... ஆரம்பித்து விட்டது”

  என நான் சொல்லவே மாட்டேன்.

  எனக்கெதற்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  படங்களெல்லாம் ஜோராக்கீதூஊஊஊஊ.

  ஊசிக்குறிப்பு கீரை மசியல் போல ஊசாமல் நல்லாவே இருக்குது.

  பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன், போஸ்ட் பார்த்ததுமே, கூச்சப்படாமல் ஓடிவந்து பின்னூட்டமளித்து ஊக்குவிப்பமைக்கு மிக்க நன்றி.

   அதிகம் எதிர்பார்த்தால் ஏமாற்றமாத்தான் போகும் ஹா ஹா ஹா மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 2. அதிரடி அதிரா + அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ///அதிரடி அதிரா/// நோஓஓ இது போதாது:) அனைத்து அடைமொழிகளையும் எழுதி வாழ்த்தோணும்...
   உங்களுக்கும் இனிய தப்பொங்கல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

   Delete
 3. அம்மாடியோவ் ..ப ப பசுமையா இருக்கே கனடா தோட்டம் ..கண்ணுக்கு குளிர்ச்சி .
  இங்கே எப்பவுமே குளிர் அதுவும் போன வருஷம் வெயில் கொஞ்சூண்டு வந்ததால் மணத்தக்காளி உருளை மட்டுமே நல்ல அறுவடை எனக்கு ..பூக்கள் எல்லாம் அழகு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு, அதேதான் இன்னும் நாங்கள் திரும்பி வந்தபின்பு அக்கா பாவல்கொடியைப் படமெடுத்து அனுப்பினா, அது பெரிய பிளம்ஸ் மரத்தில் ஏறி தொங்கி நிறையக் காய்கள் ரோட்டால் போன ஒரு ஆவ்ரிக்கன் ஒருவர் எட்டிப் பிடுங்கி 2,3 பாவற்காய்களை ஜக்கட் பொக்கட்டில் வைத்துக்கொண்டு போனாராம் ஹா..ஹா..ஹா... எனக்கும் உருளையும் வெங்காயமும் கரட்டும் நல்லா வந்துது.. மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..எப்பவும் போடுவீங்களே அந்த couscous பொங்கலை மற்றும் அருகூட்டு வடை போட்டு எங்களை அலறி ஓட வைக்காததற்கு நன்றீஸ்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கவலைப்படாதீங்க, இன்னும் சமையல் குறிப்பில் கைவைக்கவில்லை ஆனா விரைவில் ஆரம்பிக்கப்படும்:)

   Delete
 5. இப்போ புள்ளிக்கு வரேன் :)
  மணத்தக்காளி ளி ளி ளி :)
  தக்காளி :)
  இம்போசிஷன் எழுதவும் 1000 முறை

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ இது என்ன புயு:) வம்பாக்கிடக்கூஊஊஊஊ:) முன்பு ளி போட்டு தப்பெனச் சொல்லி ழி க்கு சிவ்ட் ஆனதாக எனக்கொரு நியாபகம்:) அதனால்தான் ரொம்ப ரொம்ம்ம்ம்பத் தெளிவா டவுட்டே இல்லாமல் ழி போட்டேன்ன்ன் .. அவ்வ்வ்வ்வ்வ் காலை வாரிடிச்சே:).. இருப்பினும் நேக்குத் தமிழ்ல டி ஆக்கும்.. எங்கிட்டயேவா:).. இதில ஒரு ரன்னிங் பூஸ் படம் போட முடியல்லியே என இப்போ வருத்தமா இருக்கு:)

   Delete
 6. //அர்ச்சுனன் கண்ணுக்கு குருவித் தலை//
  நோ நோ :) பூனை கண்ணுக்கு பார்பெக்யூவில் மீன் தலை என்று வரணும்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மீன் ஒன்று வா/ளைக் கொடுத்து என்னை வெட்டு வெட்டு என்கிறதே:) பிஸ் பாபகியூவா....

   Delete
 7. நான் வாக்கிங் போற ரூட்டில் ஒரு பக்கம் அல்லோட்மன்ட் இருக்கு ..அங்கே புடலங்கா சுரக்கா அப்புறம் பூசணிலாம் மெகா சைசில் வளர்ந்திருக்கும் ..எங்க வீட்டு தோட்டம் மண் ஒரு காலத்தில் COAL டெபொசிட்ஸ் இருந்ததால் மண் நிலம் எப்பவும் ரொம்ப ஈரம் ஸ்லக்ஸ் நத்தை தொல்லையோ தொல்லை ..அதனாலே நான் எல்லாத்தையும் கண்டெய்னர் தோட்டமாக்கிட்டேன் ..

  ReplyDelete
  Replies
  1. எங்களுடையதும் அதேதான் அஞ்சு அத்தோடு குளிரும் மழையும் எப்பவுமே இருக்கும்.... ஆசைக்கு ஒரு கீரை வளருதில்லை, இம்முறை ஒரு இஞ்சி சைஸ் இல் கீரை எல்லாம் வளர்ந்து அப்படியே அதே சைசில் பெரிய பூப் பூத்துது கர்ர்ர்:)

   Delete
  2. Aang appuram neyar viruppam ..We would like to see Bairava movie scenes ..uyarntha ullam very old movie😃😆

   Delete
  3. ஓ பொல்லுப்பிடிச்சு நடக்கிற வயசில.... பைரவா மூவி சீன் கேட்குதோ?:)... நில்லுங்க போட்டுக்காட்டுறேன் சீன்:).. ஹா ஹா ஹா உங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் நேயரே.. இது பூஸ் ரேடியோ.. பிரித்தானிய வானலை நிலையம்...

   Delete
 8. //அடிமைபோல வந்து அரசியாகி விடுவதும்தான் திருமணபந்தம்... ஹா..ஹா..ஹா// HAAA HAAA :)

  ReplyDelete
  Replies
  1. [im]https://s-media-cache-ak0.pinimg.com/originals/42/88/c6/4288c68ab591b006081a070ede467559.jpg[/im]

   Delete
 9. தோட்டம் மனதிற்கு மகிழ்ச்சி...

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ தனபாலன் மிக்க நன்றி, உங்களனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

   Delete
 10. Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

   Delete
 11. ஹா ஹா..நான் வேற ஏதோ எதிர்பார்த்தேன்.. இங்க வாங்க.. கட்டு கட்டா செய்து தாரேன்..

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..:-)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அபி வாங்கோ... உண்மையை ஒளிக்காமல் சொல்லிட்டீங்க ஹா ஹா ஹா...
   ஆவ்வ்வ்வ்வ் உங்களிடமும் கட்டுக் கட்டா இருக்கு.. இது அநியாயம் சொல்லிட்டேன் எனக்கு இந்தக் குளிருக்கு வருகுதேயில்லை:(..

   மிக்க நன்றி அபி.. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

   Delete
 12. ~மணத்தக்காழி~ மணத்தக்காளி

  பதிவையும் படங்களையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சு உங்களுக்கும் காட்டிக்கொடுத்திட்டாவா என் வீக்னெஸ் ஐ:)ஹா ஹா ஹா... என்னை எப்பவுமே இந்த ழியும் ளியும் காலைவாரி விடுதே... இது இன்று நேற்றல்ல 2008 இலிருந்தே என் நட்புக்கள் அப்பப்ப திருத்திக் கொண்டுதானிருக்கிறார்கள்...:) நானும் ஒன்றில் திருந்துறேன் மற்றதில் கோட்டை விட்டிடுறேன் ஹா ஹா ஹா:)..
   மிக்க நன்றி.

   Delete
 13. Replies
  1. வாங்கோ மகி, நீங்க எட்டிப் பார்ப்பதாக கூகிள் அங்கிள் சொன்னவர்:) நேரமில்லைப்போல பார்த்திட்டுப் போயிட்டீங்க என நினைச்சேன்.. மிக்க நன்றி மஞ்சள் பிளவர்:)

   Delete
  2. நீங்க வேற...இப்பல்லாம் லேப்டாப்-ஐ டச் பண்ணவே 4 நாள் ப்ளான் பண்ண வேண்டி இருக்கு அதிராவ்! செல் போன்ல கமெண்ட் போட டிரை செஞ்சு ரயேட் ஆகிப் போனேன்...அதனால ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு ஓடிட்டேன். அவ்வ்வ்வ்!! நைஸ் டு சீ யூ பேக், யு நோ!! :)

   Delete
  3. மிக்க நன்றி மகி.

   Delete
 14. கீரை சமாச்சாரமா!!! ம்ம்ம்... மொக்கை வாங்கியத வெலியெ சொல்லிக்க விரும்பல:)

  இனிய பொங்கல் வாழ்த்துகள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ மகேஷ்... மொக்கை வாங்கிட்டீங்களோ? அப்பூடி என்ன சொல்லிட்டேன் .. நா ஒண்ணுமே சொல்லல்லியே தலைப்பில்.. மிக்க நன்றி மகேஷ்.

   Delete
 15. ரெம்ம்ம்ப அழகா சுத்தமா ஒரு கட்டுக்கோப்பா இருக்கு தோட்டம்.பிரான்ஸ் ல என் அக்கா வீட்ல நான் பல வருசங்களுக்கு முன்ன நட்ட red currant {ribes rubrum}நிறைய கொத்து கொத்தா காய்க்கும் போன மாசம் போனபோது அடிக்கடி போய் தொட்டு பாத்திருக்கேன் இதே உணர்வு

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சுரேக்கா... உண்மைதான், நம் கையால் செய்ததாயின் எதையுமே மறக்க முடியாது, அதில் நமக்கு ஒரு தனி உணர்வு இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்தபோது திருமணத்துக்கு முன்பு, தண்ணித் தொட்டியில் என் பெயரை பெயிண்ட்டால் எழுதியிருந்தேன், சமீபத்தில் அப்பா அம்மா ஊருக்குப் போய் வீடெல்லாம் பெயிண்ட் அடித்தபோது, அப்பா சொன்னாராம் அதிராவின் பெயர் அழிந்திடாமல் அதனை தவிர்த்து பெயிண்ட் பண்ணுங்கோ என.. கேட்டதும் கண் எல்லாம் கலங்கிப்போச்சு:(, மிக்க நன்றி சுரேகா.

   Delete
  2. பசங்க மேல பெற்றோருக்கு எப்போவுமே அன்புதான். சின்னப் பசங்களா இருக்கும்போது என் கார் பின் சீட்ல பையன் விட்டுட்டுப்போன கதைப் புத்தகத்தை இன்றுவரை அகற்றவில்லை. அங்கேயே விட்டுவைத்திருக்கிறேன்.

   Delete
  3. வாங்கோ நெல்லைத் தமிழன்.. உண்மையேதான்.. அருகிலிருப்பதை விட கொஞ்சம் தூரப்போனாலே நினைவுகள் அதிகமாக வந்திடும். மிக்க நன்றி.

   Delete
 16. ரொம்ப அழகா இருக்கு உங்கட அக்கா தோட்டம்!! நீட்டா வைச்சிருக்கிறாங்க...இங்கே அமெரிக்க மணத்தக்காளி ஊர்ல கிடைக்கிற மாதிரியே இருக்குமாக்கும்.. உங்க போட்டோல கீரை இலை பின்னால பர்ப்பிள் கலர் இருக்கு..ஆனா ப்ரெஷ்ஷா சமைச்சாலே தனி ருசிதான்! ஜூப்பரா என்ஜாய் பண்ணிருக்கீங்க!! :) :D

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மகி வாங்கோ.. உண்மையில் மிகவும் சந்தோசமான தருணம் அது எனக்கு. நல்லா இருந்துது ஆனா அங்குள்ள மண்ணில் உரம் அதிகமோ தெரியல்ல, கொஞ்சம் கசப்புத் தன்மை இருந்துது, இனிக்கவில்லை. மிக்க நன்றி மகி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.