நல்வரவு_()_

போன போஸ்ட்டில், கமலாக்காவும், அம்முலுவும் அறிமுகப் படுத்திய பாடல் இது,
கேட்டேன் என்னா ஒரு அழகுப்பாட்டு..
இப்போஸ்ட்டுக்குப் பொருந்துமே எனப் போட்டேன்ன்

Sunday, 5 March 2017

Walk போக வாங்கோ....

சே ..சே... கையை எல்லாம் பிடிக்கக்கூடாது விடுங்கோ... ஆஆஆ பொக்கட்டுக்குள்ளும் கை வச்சு நடக்கக்கூடாது... கையை வெளில எடுங்கோ, குளிர்ந்தால் கிளவுஸ் போடுங்கோ..

கை வீசம்மா கை வீசு...
அஞ்சு அம்மம்மா வீட்டுக்குப் போகலாம்
கை வீசு...
ஜெஸி அக்காவைப் பார்க்கலாம் 
கை வீசு...
மல்ட்டிப் பெரியக்காவோடும் விளையாடலாம்
கை வீசு... 
வல்லாரை யூஸ் குடிக்கலாம் 
கை வீசு..

ஹா ஹா ஹா இது எங்கட டெய்சிக்குப் பாடினேன்... இப்பூடித்தான் கையை வீசி வீசி சுகந்திரமாக நடக்கோணும்...

என் போனில் இந்த Steps counting app இன்ஸ்டோல் பண்ணி வச்சு கொஞ்சக்காலமா நடக்கிறேன், ஆனா சமீபத்தில என் நண்பியோடு போட்டி போட்டு நடக்கத் தொடங்கினேன்.  அதில இருந்து சூடு பிடிக்கத் தொடங்கிட்டுது என் நடை:).

அவ, 5000 நடந்திட்டேன் எனச் சொன்னால், உடனே நான், குல்ட்டால போர்த்துக் கொண்டு படுத்திருந்தால்கூட, ஜம்ப் பண்ணி எழும்பி வீட்டுக்குள்ளேயே நடக்கத் தொடங்கிடுவேன்,  அவவுக்கும் என்னோடு போட்டிபோட்டு நடப்பது அதிக உற்சாகத்தைக் கொடுக்கும் என நம்புகிறேன். இப்போ என்னோடு தொடர்பிலிருக்கும் சொந்த பந்தங்கள் அனைவரையும் வெருட்டி வச்சிருக்கிறேன், டெய்லி குறைந்தது 7000 ஸ்ரெப்ஸ் ஆவது நடக்கோணும் இல்லையெனில், உங்கள் ஃபோனைப் பறிச்சு கடலுக்குள் வீசிடுவேன் என மிரட்டியிருக்கிறேன்:).

ஒரு நாளைக்கு சராசரியாக 10000 அடிகள் எடுத்து வைக்க வேண்டும் நாம். ச்சும்மா நடக்க நினைத்தால் நடப்பது கஸ்டம்.

போனை திறந்து பார்க்கும்போது 500 என காட்டும்.. கொஞ்ச நேரம் நடந்துபோட்டு திரும்ப பார்க்க டக்கென 1000 க்கு மேல் வந்திடும், அது பயங்கர உற்சாகத்தைக் கொடுக்கிறது.  கீழே பாருங்கள் ஃபோன் முகப்பில் தெரிகிறது எத்தனை அடிகள் நடந்துள்ளேன் என்பது. எப்பவுமே ஃபோன் பொக்கட்டுக்குள்ளேயே கொண்டு திரிவேன், அப்போதானே அதிகம் காட்டும்:).

எந்த ஒரு அலுவல் ஆகட்டும், ஏதோ ஒரு உந்துதல், போட்டி இருந்தால் மட்டுமே அதிகம் சாத்தியமாகும்.

எங்கள் கணித ரீச்சர் அடிக்கடி சொல்லுவா, படிப்பிலே போட்டி இருக்கோணும், பொறாமைதான் இருக்கக்கூடாதென.. போட்டி இருந்தால்தான் உற்சாகம் கிடைக்கும். 

நான் இந்தவாரம் நடந்த லிஸ்ட்டைப் பாருங்கோ... இதில் நிறைய விசயங்கள் இருக்கு, குரூப் வோக்கிங் எல்லாம் செட் பண்ணலாம், அதெல்லாம் எனக்கு விருப்பமில்லை, எங்கள் குடும்பத்துள்ளேயே போட்டி போட்டு நடக்கிறோம் இப்போ.

நீங்களும், எல்லோரும், இதுவரை இந்த அப்ப் இல்லாதவர்கள், உடனே இன்ஸ்டோல் பண்ணி, ஆரம்பியுங்கோ.

நான் அடிக்கடி மனதில் நினைக்கும் ஒன்று..
Something is better than nothing...

இப்போ இக்காலத்தில், லாண்ட் ஃபோன் எல்லாம் கோட்லெஸ் தானே, அப்போ யாருடன் பேசுவதாயின் அப்படியே ஃபோபாவில் சாய்ந்தபடி அல்லது கட்டிலில் ஒய்யாரமாய் படுத்தபடி பேசாமல், விட்டுக்குள்ளேயே சுற்றி சுற்றி நடந்துகொண்டே பேசுவேன், அப்போ களைப்பும் தெரியாது போறிங்கும் இருக்காது[எனக்கு கோல் பண்ணுவோர் எல்லாம் மணிக்கணக்கில் பேசுவினம்:)]. நம் உடம்பை மெதுவாக அசைத்தால்கூட கொஞ்சம் எனர்ஜியை இழக்கிறோம், அப்போ பெரிதாக ஓடினால் மட்டுமேதான் உடம்புக்கு நல்லது என எண்ணக்கூடாது... சிறு துளிதானே பெருவெள்ளமாகிறது.

இது நாங்கள் நடைபோகும் எங்கள் ஆத்தங்கரையின் ஒரு பகுதி.... மாலை நேரத்து மயக்கம்:) .Ferry போகிறது.

இதுதான் நடக்கும் ஏரியா... பெரிதாக்கிப் பாருங்கோ கப்பல் ஒன்று நிற்பது தெரியும்.இது நடக்கும் கரையில் இருக்கும் ஒரு மரம், இப்போ வின்ரர் காலம் முடிவுக்கு வந்திருப்பதால் துளிர்க்க ஆரம்பிக்கும் காட்சி, அழகாக இருக்குதெல்லோ..

இது போனகிழமை எங்களுக்கு விழுந்த பனிக் கற்கள்..Gale stones.. பாருங்கோ எந்தாப் பெரிய உருண்டைகள்....
எங்கள் பின் கார்டினில் விழுந்ததை வீடியோ எடுத்தேன், ஆனா இங்கு ஒழுங்கா அப்லோட் ஆகுதில்லையே கர்ர்ர்:).ஊசி இணைப்பு:-
ஹா ஹா ஹா....

77 comments :

 1. புது தொழிற்நுட்பம் போலிருக்கே...! நல்லது "நட"க்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ... என்னாதூஊஊ புது தொழில்நுட்பமா... சத்தியமா நான் நினைச்சேன் எல்லோரது போன் இலும் இருக்குமென ஏனெனில் ஐ போன் உடன் கூடவே வருது, அதைவிடவும் அப்ஸ் கிடைக்குது, வோச் கூட இருக்கே, 3,4 வருடத்துக்கு முன்னமே எனக்கு தெரிந்த அண்ணன் ஒருவர் இந்தியாவில் வாங்கினாரே.
   சரி விடுங்கோ ஒரு மணித்தியாலம் நடந்தால் கிட்டத்தட்ட 7000 ஸ்ரெப்ஸ்கள் வருமென நினைக்கிறேன்.
   மிக்க நன்றி. ஏன் என் வீடியோ வெளிநாட்டினருக்கு தெரியவில்லை???

   Delete
 2. //Walk போக வாங்கோ....///


  நான் வர ரெடி ஒரு விசாவும் ப்ளைட் டிக்கெட்டும் சாப்பாட்டுக்கு பணமும் அனுப்புங்கோ மேடம்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ட் ருத் வாங்கோஒ... என்னாதூஊஊ மேடமாஆஆஆஆ நோஓஓ நான் கன்னீஈஈ.... ஐ மீன்ன் ராசியைச் சொன்னேன்ன்ன் ஹா ஹா ஹா:).

   ஆ எண்டாலும் ஊ எண்டாலும்... வீடு வாங்கி விடுங்கோ, விசா அனுப்புங்கோ ரிக்கெட் போடுங்கோ என பறிக்கிறதிலேயே குறியா இருங்கோ கர்ர்ர்ர்ர்ர்.:)... நீங்க அங்கின அமேரிக்காவில நயகராப் பக்கம் வோக் போய், எங்களுக்கு ஸ்கிறீன் ஷொட் எடுத்து எத்தனை ஸ்ரெப்ஸ் என்பதை மட்டும் அனுப்பி வையுங்கோ...:)

   Delete
 3. இந்த போட்டியை எங்கிட்ட வைச்சா நீங்க கண்டிப்பா தோற்றுதான் போவீங்க காரணம் என் பொழைப்பே நிற்பதும் நடப்பதுதான்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆனா தோற்றாக்கூடப் பறவாயில்லை, போட்டி இருந்தா மட்டுமே உற்சாகம் பிறக்குது. அதிலும் வேர்க் போனால்தான் அதிகம் நடக்க முடியுது, வீட்டில் நின்றாலோ ஊர் சுத்தினாலோ நடக்க முடிவதில்லை.

   Delete
 4. //இக்காலத்தில், லாண்ட் ஃபோன் எல்லாம் கோட்லெஸ் தானே//

  ஓ முன்ன எல்லாம் உங்க போனுக்கு கோட்டு சூட்டு எல்லாம் போட்டுதான் வைப்பீங்களோ

  ReplyDelete
  Replies
  1. haahhahahahaa :) நல்லா கேளுங்க

   Delete
  2. ஹா ஹா :)நாம கொஞ்சம் அமைதியா கலாய்ப்போம் .அடுத்த ரிவ்யூ Keechaka Vatham படமாம்

   Delete
  3. ///முன்ன எல்லாம் உங்க போனுக்கு கோட்டு சூட்டு எல்லாம் போட்டுதான் வைப்பீங்களோ///
   ஹா ஹா ஹா நாகரீகம் வளர வளர ஆடை குறைப்பு மனிசருக்கு மட்டுமில்லை போனுக்கும்தேன்ன்ன்ன்:).

   Delete
  4. ////
   AngelinMonday, March 06, 2017 4:33:00 pm
   ஹா ஹா :)நாம கொஞ்சம் அமைதியா கலாய்ப்போம் .அடுத்த ரிவ்யூ Keechaka Vatham படமாம்
   ////
   வாங்கோ அஞ்சூஊஊ வாங்கோ... என்னாதூஊஊ அமைதியா கலாய்க்கப் போறீங்களா?? இன்னும் கலாய்க்கவே இல்லயே இதில அமைதி வேறையா கர்ர்ர்ர்ர்ர்:).

   Delete
  5. ஹஹஹ்ஹஹஹ் மதுரைத் தமிழனின் கமென்டை ரொமப்வே ரசித்தோம்...

   Delete
 5. //சிறு துளிதானே பெருவெள்ளமாகிறது.//

  அட அட இப்படி எல்லாம் தத்துவம் எல்லாம் சொல்லி அசத்தீறீங்களே....

  ReplyDelete
  Replies
  1. தங்கூஊஉ தங்கூஊ ரொம்ப ஷை ஷையா வருது நேக்கூ:) ஹா ஹா ஹா ...

   Delete
 6. Replies
  1. வாங்கோ சகோ நாகேந்திரா .. மிக்க நன்றி.

   Delete
 7. அருமை புகைபடக்களுக்கும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட் மிக்க நன்றி. உங்களுக்கு புளொக் இருக்கோ?.

   Delete
  2. ஆம்
   தமிழில் கணணி தகவல்கள்
   http://www.tamilitwep.com

   தமிழில் கணணி தகவல்கள்

   Delete
  3. மிக்க நன்றி மொகமட், போய்ப் பார்த்தேன் மிக நல்ல தகவல்களை எழுதி வருகிறீங்கள் வாழ்த்துக்கள், இனி தொடர்வேன்.

   Delete
 8. பூனை இரண்டு காலில் நடக்கும் உல்லாச நடை பிரமாதம்!

  நடப்பதைக் கணக்கெடுக்க எல்லாம் தொ.நு இருக்கா? நடத்துங்க..

  //எனக்கு கோல் பண்ணுவோர் எல்லாம் மணிக்கணக்கில் பேசுவினம்//

  மை காட்... எனக்குப் பொறுமையே போய்விடும்! சமயங்களில் என் பாஸ் கூட சில அழைப்புகளுக்கு மணிக்கணக்கில் பேசுவார்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோதரர் ஸ்ரீராம் வாங்கோ... எல்லோரும் மன்னிக்கோணும், வீட்டு நெட் வேர்க் பண்ணவில்லை, வெதர் பிரச்சனையால் இன்னும் திருத்துப் படவில்லை. அதனால மொபைல் நெட்டையே பாவித்து ஓடித்திரிகிறேன், அதுதான் இம்முறை எல்லோருக்கும் பதில் போட தாமதமாகிவிட்டது. மொபைலில் ரைப் பண்ண எரிச்சலாக வருது:).

   Delete
  2. ஹா ஹா ஹா சின்ன வயதிலிருந்தே எங்கள் வீட்டில் பொறுமையின் சிகரமே நான் தான்:), பொறுமையாக செய்யும் வேலைகள் எல்லாம் என்னிடமே தருவினம், அப்பா அம்மா சொந்தபந்தம் எல்லோருமே அனைத்து நியூஸ் களும் என்னிடம் சொல்வார்கள் காரணம் அவ்ளோ பொறுமையா கேட்பேன் ஆறுதலும் கொடுப்பேன், என் கணவர் பலதடவைகள் சொன்னதுண்டு..... எல்லோரையும் சமாளிக்கோணும் என நினைச்சு , அதிக நேரம் பேசி, நீங்க களைத்திடாமல் சிலருக்கு சொல்லுங்கோ நான் ரயேட் பின்பு பேசுறேன் என, ஆனா எனக்கு அப்படி சொல்லிட்டால் வேதனை படுவினமோ என பயம்... இதுபற்றி நிறைய சொல்லலாம்....:)

   Delete
 9. காணொளிகள் எனக்கு ரன் ஆவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்!

  தம வாக்களித்திருக்கிறேன். அது சுற்றிக்கொண்டே..... ற்றிக்கொண்டே..... றிக்கொண்டே...க்கொண்டே.... கொண்டே... ண்டே...டே....

  ஆ.... விழுந்து விட்டது!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் நீங்கள் பதிவுகளை ஸ்மார்ட் போனில் பார்க்கிறீங்க என நினைக்கிறேன் அதனால்தான் இந்த வீடியோக்களை உங்களால் பார்க்க முடிவதில்லை என நினைக்கிறேன்

   Delete
  2. ஆஆஆஆ விழுந்து விட்டதோஓஓஓ ... மிக்க நன்றி.

   ட் ருத் சொல்வது சரியாத்தான் இருக்கும், எனக்கும் இந்த என் ஐபோனில் வீடியோ பார்க்க முடியவில்லை, கொம்பியூட்டரில்தான் தெரிந்தது. இதேபோலவே டிடி அவர்கள் போட்ட வீடியோவும் மொபைலில் பார்க்க முடியவில்லை.

   Delete
 10. எனது வீட்டு வாசலுக்கு ஒரு பூனை வருகிறது. கொஞ்சம் திருட்டுப் பார்வைதான் பார்க்கிறது. அது வந்தநாளாய் என் வீட்டில் எலித்தொல்லை இல்லை. அதை நட்பாக்கிக் கொள்ள முடியவில்லை என்னால். அஞ்சி அஞ்சி ஓடுகிறது. காலை ஐந்து மணிக்குக்கதவு திறக்கப் போகும் சமயம் திடுக்கென கால்களுக்கு இடையே ஓடி மறையும். திடுக்கெனத் தூக்கிவாரிப் போடும். நாய்கள் எளிதாக நட்பாகும் எனக்கு பூனைகள் அப்படி அல்ல.. முன்னர் முக நூலில் இது பற்றி ஒரு கவிதை (போல) எழுதி இருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அது என்னனா ஸ்ரீராம் ..நீங்க அந்த பூனையை முதல்ல ப்ரண்டாக்குங்க :)அதுக்கு குட்டியூண்டு சீஸ் துண்டு இல்லைனா கால் டீஸ்பூன் தயிர் வச்சா போதும் ..சில பூனைகளுக்கு சப்பாத்தி ஸ்மெல்லும் ப்ரெட் ஸ்மெல்லும் கூட பிடிக்கும் அதையும் வச்சி பாருங்க ..
   அப்புறம் அதுங்களை இஷ்டப்பட்ட பேர் வச்சி கூப்பிடனும் :) பாபு பாப்பு ..ஏதாச்சும் காரணம்பெயர் கூட வைக்கலாம் ..
   அப்புறம் கொஞ்சம் நேரம் அது முன்னாடி சேர் போட்டு உக்காந்துக்கோங்க பூனை மியூசிக் யூ டியூபில் இருக்கு அதை போன்ல போட்டு விடுங்க :) அப்புறம் அது உக்கார்ந்திருக்கும்போது அதன் கண்களை பார்த்து ஸ்லோவா உங்க கண்களை மூடி திறங்க :)
   அது உங்களுக்கு அதையே திருப்பி செஞ்சுச்சுனா :) பூனை உங்களுக்கு ஐ லவ் யூ சொல்லுதுன்னு மீனிங் .
   இதெல்லாம் பூனைகளுக்கு மட்டுமே செய்யணும் :)

   Delete
  2. அச்சச்சோ.... ஒரு அப்பாவி சகோ ஸ்ரீராமை, கண்ணடிக்க வச்சே கம்பி எண்ண வச்சிடுவாபோல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்:), ஹையோ அவசரப்பட்டுக் கண்ணடிச்சிடாதீங்க, முதல்ல என்ன பூஸ் எனப் பார்த்திட்டுக் கண்ணடிங்கோ:)....

   நிறைய எழுத வருது ஆனா இதில ரைப் பண்ணக் கஸ்டமா இருக்கு....

   கவிதைபோல எழுதியிருந்தீங்களோ? அப்போ அதை திரும்படியும் சனிக்கிழமை/ ஞாயிறில் போடுங்கோ .... கவிதைபோல:) படிச்சுப் பார்க்கிறோம்.

   மிக்க நன்றி .

   Delete
  3. தனியாகப் பதிவாக முன்னரே எங்கள் ப்ளாக்கில் போட்டிருப்பேன். என் பூனைக்கவிதையை இங்கேயே தந்து விடுகிறேன். தேடி எடுத்து விட்டேனாக்கும்!

   நட்பில்
   நாயளவு இருப்பதில்லை
   பூனைகள்...

   நன்றியிலும்!

   கண்ணில் தெரிகிறது
   கள்ளத்தனம்.
   நடையில் நரியின் தந்திரம்.
   உணவைப் பார்த்தாலோ
   உலகமே மறந்து போகும்

   ஆனாலும்
   ரசிக்காமல்
   இருக்க முடியவில்லை
   பூனையின்
   கள்ளத்தனங்களை!

   Delete
  4. ஹலோ... ஏஞ்சல்... நீங்கள் சொல்லியிருப்பது பூனையை செட்டப் செய்யத்தானே!! சந்தேகமா இருக்கு!

   Delete
  5. ஹா ஹாங் :) இதென்ன வம்பா போச்சு பூனை மீசை வச்ச நாலு கால் ஒரு வால் வச்ச மியாவ் பூனை தான் :)
   பிரபு கிட்ட அப்படிதான் ப்ரண்டாகி அவன் எனக்கு ஐ லவ் யூனு மியாவ் பாஷைல சொல்லிட்டு போனான் :)

   Delete
  6. பூஸ் கவிதை மிக அழகு. பூஸ் இன் சேஷ்டைகளை ரசிச்சு முடியாது, எங்கட மகள் டெய்சியின் சேட்டைகளை விரைவில் போஸ்ட் போடுறேன்... தேடிப் போட்டமைக்கு மிக்க நன்றி.

   Delete
  7. ஸ்ரீராம்.Thursday, March 09, 2017 3:11:00 pm
   ஹலோ... ஏஞ்சல்... நீங்கள் சொல்லியிருப்பது பூனையை செட்டப் செய்யத்தானே!! சந்தேகமா இருக்கு!////
   ஹா ஹா ஹா அவசரமாப் படிச்சேனா.... சந்தோசமா இருக்கு எனப் படிச்சுட்டேன்ன்ன்ன்:).

   Delete
  8. பூனையை செட்டப் செய்வது கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும் செய்துவிடலாம் தான். நாயார்களைப் போல அவ்வளவு எளிதாக கிட்டே வந்துவிடமாட்டார்கள்!! என்றாலும் ரசிக்க வைப்பவர்கள். மகன் பூனைக் கிளினிக்கில் வேலை செய்ததால் பூனையார்களை மயக்கும் கலை பற்றிச் சொன்னது இதுதான்..ஆனால் ஃப்ரென்ட் ஆகிவிட்டால் காலைச் சுற்றி சுற்றியே வருவார்கள்...காலை உரசிக் கொண்டே இருப்பார்கள்!!!

   கீதா

   Delete
  9. ஓகே... இவை என் மெயிலுக்கு வராமல் சண்டித்தனம் ஏன் செய்ததோ! இப்போ படிச்சாச்சு.

   Delete
  10. //கண்ணில் தெரிகிறது
   கள்ளத்தனம்.
   நடையில் நரியின் தந்திரம்//

   ஸ்ரீராம் பூனைங்களை ரசிச்சி கவிதை எழுதியிருக்கீங்க :) இந்த கள்ளத்தனம் நரிகுணம்லாம் எனோ நம்ம ஊர்லதான் பொருத்தம் இங்கே நானா அப்படி பார்க்கலை ..
   பூனைகள் நாய் போலவே பழகுகின்றன ..therapy cats இங்கே நிறைய இருக்கு ..நாய்களுக்கு சமமாக அவையும் மனஉளைச்சலுக்கு மனிதர்களை சாந்தப்படுத்த உதவுகின்றன .நம்ம ஊரில் பாலை திருடி குடிப்பதால் நாம் திருட்டுபோன்னைன்னு பட்டம் கட்டிட்டோம் இங்கே டேபிளில் உணவிருந்தாலும் தொடாதுங்க பூஸ்கள் .அவங்க தட்டில் உணவிடும் வரை வெயிட் செய்வாங்க ..ஒரு பூனை பார்பெல்ன்னு இங்கே டெய்லி ரோட்டில் அவங்க வீட்டு பெண்களை ஸ்கூல் வாசல் வரை விட்டு பின்பு அழகா பேவ்மெண்ட்டில் நடந்து தெருமுனையில் இருக்கும் அவங்க வீட்டுக்கு போகிறது ..ஆச்சர்யமில்லையா !!

   Delete
  11. வாங்கோ கீதா வாங்கோ.. இல்ல பூஸ் களும் பிரெண்ட் ஆக்குவது ஈசிதான்.. அதுக்கு முதலில் நாங்க பயப்படாமல் ஸ்ரெடியா நிக்கோணும்:).. சகோ ஸ்ரீராம் போல, கதவைத் திறக்க முன் பூனை நிற்கும் என நினைச்சு முதலில் நாம் பாய்ந்து ஓடக்கூடாது:) அப்பூடியெனில் பூஸ் பயந்திடுமெல்லோ.. பின்பு கிட்டே வராது ஹா ஹா ஹா:).

   Delete
  12. ///ஸ்ரீராம்.Monday, March 13, 2017 7:54:00 am
   ஓகே... இவை என் மெயிலுக்கு வராமல் சண்டித்தனம் ஏன் செய்ததோ! இப்போ படிச்சாச்சு.///

   அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே.. ஹா ஹா ஹா:)

   Delete
  13. ஓம் அஞ்சு இங்கு நிறைய பூஸ் ஸ்ரோறீஸ் இருக்குதுதானே...

   Delete
 11. என்னது :) என் அம்மம்மாவா !! அவங்க ஹெவன்ல இருக்காங்க டோன்ட் டிஸ்டர்ப் ஹெர்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் உங்கட அம்மம்மாவை, நான் ஹெவினுக்குப் போகும்போது சந்திக்கிறேன், இது டெய்சி கூப்பிடுறா உங்களத்தான்ன்ன் :) கண்ணுதான் பிரச்சனை எனப் பார்த்தால் காதும்போல:) ஹா ஹா ஹா:).

   Delete
 12. நானும் நடக்கறேனே :) தினமும் 10,000 டு 15,000 எப்படியாவாது நடப்பேன் ..
  வாத்து ஸ்வான்ஸ் யாரும் இல்லையா உங்க கூட துணைக்கு வர :) நான் canal சைட் போகும்போது வாத்துங்க ஓரமா நீந்திட்டே தொடர்வாங்க :) இன்னிக்கு இங்கே வெயில் சுட்டெரிக்குதே நான் வாக் போயிட்டு வரேன்

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர் அண்டைக்கு ஒரேஒருநாள், பக்கத்து வீட்டு அல்செசன் கலைச்ச இடத்தில பார்க்கை சுத்திச் சுத்தி ஓடின இடத்தில ஒருநாள் 15000 ஸ்ரெப்ஸ் காட்டிச்சுது என்றீங்க:), அதை டெய்லி எனச் சொல்லக்குடா கர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா முடியல்ல அஞ்சு:)...

   நடவுப்க்கோ நடவுங்கோ... இந்த அப்ஸ் போட்டதிலிருந்து ஒரே நடக்கச் சொல்லுது என்னையும்.

   எங்கள் ஆத்தங்கரை மிக நீண்டது அஞ்சு... சுவான், வாத்து எல்லாம் வருவினம், படங்கள் தொகுத்துப் போட நேரமில்லாமல் கஸ்டப்படுறேன் நான்...

   Delete
 13. ரெண்டு வீடியோவும் நல்லா தெரியுது ...ஆமா அந்த மேக்கப் :) ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்களுக்கு தெரியுதோ அஞ்சு, எனக்கு கொம்பியூட்டரில் மட்டும் தெரியுது... மிக்க நன்றி அஞ்சு. ஹா ஹா ஹா மேக்கப் நினைக்க நினைக்க சிரிப்பு வருது:).

   Delete
 14. ஐந்தாம் வோட்டு என்னோடது. இன்னும்கூட சுத்திக்கிட்டே இருக்குது. இப்போ கொஞ்ச நேரத்தில் விழுந்துவிடும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஹா ஹா ஹா விழுந்திட்டுதுமிக்க நன்றி.

   Delete
 15. இதில் ஊசிக்குறிப்பு நல்லா இருக்குது ..... ஏனெனில் சிகப்புப்புடவையில் உள்ளவர் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கும் அதிரா போலவே உள்ளார் ..... என்பதால்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இங்கினதான், அதிராவை நீங்க தப்புக் கணக்குப் போட்டிட்டீங்க:), மீ ரொம்ம்ம்ம்ப சார்ப்பூஊஊஊ:), ஹையோ நேக்கு ரொம்பக் குளிருது, நடுங்குது... இப்போ வெளியே வரமாட்டேன்... மழை நிண்டபின் தான் வருவேன் என அடம்பிடிப்பேனே:), லூஸ் மாதிரிப் போய் நனைவேனோ?:).

   Delete
 16. //இது போனகிழமை எங்களுக்கு விழுந்த பனிக் கற்கள்..Gale stones.. பாருங்கோ எந்தாப் பெரிய உருண்டைகள்.... எங்கள் பின் கார்டினில் விழுந்ததை வீடியோ எடுத்தேன்//

  அது எம்மாம் பெரிசு என என்னால் பார்க்க முடியவில்லை. வீடியோ ஓபன் ஆகவில்லை. நல்லவேளையாக உங்கள் பின் மண்டையில் அது விழாமல் இருந்துள்ளதில் மகிழ்ச்சி. :)

  ReplyDelete
  Replies
  1. கோபு அண்ணன், கொம்பியூட்டரில் பாருங்கோ தெரியுமாமே... நோஒ பின் மண்டையில் விழுந்தாலும் ஒண்ணும் ஆகாது:) ஏனெனில் என் கிட்னி, நெற்றிக்குப் பக்கத்திலதான் சேவ் ஆ இருக்குது:).

   Delete
 17. //இது நடக்கும் கரையில் இருக்கும் ஒரு மரம், இப்போ வின்ரர் காலம் முடிவுக்கு வந்திருப்பதால் துளிர்க்க ஆரம்பிக்கும் காட்சி, அழகாக இருக்குதெல்லோ..//

  இல்லை. துளிர்ப்பது தெரியவில்லை. இருப்பினும் மொட்டை மரம் மிக அழகாகத் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. இங்கத்தைய மரங்கள் துளிர் விடுவது இப்படித்தான், பின்பு இன்னும் படங்கள் போடுறேன் பாருங்கோ. அதாவது மொட்டை எனில் குட்டிக் குட்டி குணுக்குகள்போல தெரியாது, இப்போ குட்டிக் கெவர்போல தெரிவதெல்லாம் இனி இலையாக மாறும்...

   Delete
 18. //இது நாங்கள் நடைபோகும் எங்கள் ஆத்தங்கரையின் ஒரு பகுதி.... மாலை நேரத்து மயக்கம்:) .Ferry போகிறது. இதுதான் நடக்கும் ஏரியா... பெரிதாக்கிப் பாருங்கோ கப்பல் ஒன்று நிற்பது தெரியும்.//

  பெரிதாக்காமலேயே தெரிகிறது. Ferry யிலும் கப்பலிலும் ஏறி நானும் 10 லட்சம் அடிகள் வாக்கிங் போவது போன்ற கனவு கண்டேன். அந்தக் கனவே எனக்கு சூப்பராக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நோஓஒ கோபு அண்ணன் உங்களுக்கு கப்பல் கனவெல்லாம் வாணாம்ம்ம் , நீங்க 10 லட்சம் தடவை ஸ்ரீராம ஜெயம் சொல்லுங்கோ:).

   Delete
 19. முதலில் காட்டியுள்ள நடக்கும் பூனைப்படமும் ‘கை வீசம்மா கை வீசு..’ பாட்டும் நல்லா இருக்குது. நீங்கள் நடப்பது உண்மையோ பொய்யோ இருப்பினும் மொத்தத்தில் மிகவும் அழகான பதிவாகக் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையைச் சொல்லோணும்.... அஞ்சு அம்மம்மா வீட்டுக்குப் போகலாம் கை வீசு எனும் வசனம் தானெ நல்லாயிருக்கு?:). ஹா ஹா ஹா பதிவை பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

   Delete
 20. ஆஹா நான் போட்ட அஞ்சு இங்கு வந்தாச்சு !

  ( என் வோட் எண்ணைச் சொன்னேன் 5/5 )

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை ... "போட்ட" அஞ்சு... என்றதால தப்பிட்டீங்க:) .... அனைத்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 21. நேற்று இரவு தூங்க போகும் போது 2 கருத்துக்கள் மட்டும் இட்டேன் இப்ப மீண்டும் வந்துட்டேன்...

  1.இன்று காலையில் உங்க தளம் வந்ததும் ஏஞ்சலின் ரெகமண்டேஷன் இல்லாமல் என் கருத்துக்கள் வந்துவிட்டது ஹீஹீ

  2. நீங்க தினமும் உருண்டு போவதைத்தானே வாக்கிங்க போவது என்று சொல்லி இருக்கீங்க? எப்படியெல்லாம் சந்தஏகம் வருது பாருங்க


  3. உங்க தளத்தின் பேக்க்ரவுன்ட் கலரை மாற்றும் ஐடியா ஏதும் இருந்தால் அதை வெள்ளை நிறத்திற்கு மாற்றவும்

  ReplyDelete
  Replies
  1. விடிய எழுந்து திரும்பவும் வந்தமைக்கு நன்றி ட் ருத்.

   1/- இப்போ அடிக்கடி வெயிட்டிங் கொமெண்ட்ஸ் செக் பண்றேன்:)

   2/- உங்கள் வசனத்தில் பொருட் பிழை இருக்கிறது:), அது உருண்டு அல்ல:) பாய்ந்து.... ஹா ஹா ஹா.

   3/- எதை சொல்றீங்க ட் ருத்? ஓல்ரெடி போஸ்ட் பக்கிரவுண்ட் கலர் வெள்ளைதானே போட்டிருக்கிறேன், தளத்தின் பக்கிரவுண்டால என்ன புரொப்ளம் வருது??? அதுக்கும் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லயே??

   Delete
 22. ஆஹா நீங்க வெளியிட்டு இருந்த காணொளியை பார்த்தேன் மிக அழகாக ஒலி ஒளிபதிவு செஞ்சிருக்கிங்க? ஆமாம் நீங்க திரைப்படம் ஒன்று எடுக்கப்போவதாக ஏஞ்சலின் சொன்னார் அதற்கான முன் முயற்சிதான் இந்த காணொளி என்றும் சொன்னார்கள். ஆமாம் அப்படி திரைப்படம் எடுத்தால் எனக்கு ஹீரோ வேஷம் தருவீங்களா அல்லடி காமெடி வேஷமா.?

  ஹீரோ வேடம் தந்தால் பாடகி சுசித்தராவை ஹீரீயினாக போடுங்கோ அவங்கதான் இப்ப டாப்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹீரோயினுக்கு அண்ணாவாகத்தான் உங்களைப் போடுவேன்:)..

   ஹா ஹா ஹா சுசித்ரா பக்கம் உங்கள் பெயரும் அடிபடுகிறதாமே:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ச்ச்:)

   Delete


 23. நீங்க நதிக்கரையோரம் வாக்கிங் அதுதானுங்க உருண்டு போகும் போது யாரோ ஒருத்தர் ஆத்தா நீ ஆத்தோராமா போறியா நான் பார்த்தா பார்க்கமலே போறியா என்று யாரோ உங்கள் பின்னால் பாட்டு பாடிக் கொண்டிருந்ததாக தகவல் வந்திருக்கு ஆமாம் யாரு அந்த கதாநாயகன்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது கதாநாயகன் இல்லை ... ஹீரோவின் அக்கா... :) , அஞ்சு எண்டு பெயர்:)...

   ஹாஹ் ஹாஅ மொபைல்லயே ரைப் பண்ணுவதால், அதிகம் எழுத முடியவில்லை, அதனால இம்முறை தப்பிட்டீங்க... மிக்க நன்றிகள் ட்றுத்...

   Delete
  2. ஹஹஹ்ஹஹஹ ஐயோ தாங்கலைபபா
   அதிரா....அதிராமல் நடங்கோ..உங்க நடை சத்தம் நியூ ஜெர்சியில் இருக்கும் மதுரையாருக்குக் கேட்குது போல!!ஹிஹிஹிஹி

   கீதா

   Delete
  3. வாங்கோ கீதா.. நல்லாவே ரசிக்கிறீங்க:)

   Delete
 24. உங்க நடைபோகும் ஆத்தங்கரையின் படங்கள்....ஆஹா..ஆஹா....அழகு


  நானும் இந்த steps ...போட்டு பார்க்கிறேன்...புதுசா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. அப் இன்ஸ்டோல் பண்ணி நடவுங்கோ...

   மிக்க நன்றி அனு.

   Delete
 25. இயற்கையை ரசித்தமாதிரியும் ஆச்சு... சுத்தமான வெளிக்காற்று கிடைத்தாற்போலவும் ஆச்சு.. ஆரோக்கியத்துக்கு நடையும் ஆச்சு.... அத்தோடு மனத்துக்கு இதமும்..கூடுதல் சுகம். படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீதா, உண்மைதான் ஒரு கல்லிலே பல மாங்காய்கள்:).. மிக்க நன்றி.

   Delete
 26. அதிரா சகோ/அதிரா நீங்கள் நடக்கும் ஆத்தங்கரை ஆஹா!! என்ன அழகு! இப்படி இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் நடக்கலாம்!!!! அழகு!!

  கீதா: பூனையின் படம்....இதுதான் பூனை நடையோ!! அழகு!! அப்போ அதிரா நீங்களும் பூனை நடைதான் நடப்பீங்களோ ஆத்தங்கரை ஓரமா??!! ஸ்டேஜ் போடச் சொல்லிடலாம்!! ஹிஹீஹ்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. கொஞ்சம் ஏழியா வந்திருந்தால் உங்களையும் கூட்டிக்கொண்டு போயிருப்பேன் நடக்க:) அன்னமும் காட்டியிருப்பேனே:)..

   ஆத்தங்கரை ஓரமெல்லாம் கதிரைகள் இருக்கு.. வாங்கோ இருந்து பேசிப்பேசியே நடக்கலாம் 10 ஆயிரம் ஸ்ரெப்புக்கள்:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 27. கீழே ஓல்ட் பதிவுகள் நியூ பதிவுகள்...அதன் பேக் க்ரவுன்ட் கலர் மாத்திட முடியுமா?? கறுப்பில் எழுத்துகள் தெரியலையே!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. எனக்குப் புரியல்ல கீதா??? அவர்கள் ட்றுத் சொன்னார் போஸ் பக்கிரவுண்ட்டை வெள்ளையாக மாத்துங்கோ என.. மாத்திட்டேன். நீங்க எதை மாத்த சொல்றீங்கள்? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நேரம் கிடைக்கையில் மாத்தி விடுறேன், ஏனெனில் எனக்கு எல்லாம் ஒழுங்காவே தெரியுதே.. மொபைலிலும்....

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.