நல்வரவு_()_


Sunday 3 December 2017

மார்கழித்  “தேவதை:)”  க்கு வாழ்த்துக்கள்!!!...

இது அஞ்சுவின் பிறந்தநாளுக்கு அதிரா செய்த குயிலிங்:).. இம்முறை அல்ல:), படம் புரியுதோ? மீனைப் பிடிப்பதற்காக:) குளக்கரையில் பூஸ் காவல் இருக்குது... லிப்ஸ்ரிக் + மீசையுடன்:))
ஓடி வாங்கோ ஓடிவாங்கோ.. எங்கள் வலையுலகத் தேவதை.. அதிராவின் அன்பு எதிரி:).. பாசக்காரப் பெரியம்மா (டெய்சியின் முறையில ஜொன்னேன்:))..  ஹா ஹா ஹா ஹையோ கலைக்கிறாவே:)
இடிக்கப்பூடாது அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னையும் பேர்த்டேப் போட்டோக்குப் போஸ் குடுக்க விடோணும் :)

இரண்டடிக் ஹீல்ஸ் க்கு சொந்தக்காரர்:).. கிச்சினைத்திறந்து, சமைக்காமலேயே, தான் சமையலில் வில்லி எனச் சொல்லித் திரிபவர்:).. கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருந்தபடியே, தான் பெண்களுக்குக் குரல் கொடுக்கும் தீவிரவாதி:) என முழங்குபவர்:).. கண்ட நிண்ட பூச்சி, புழுக்கள் எது நகர்ந்தாலும்:) அவற்றோடு நின்று, வீட்டில் சமைப்பதைக்கூட மறந்து பேசிவரும்:).. பிரியமான பூச்சிகளின் தோழி:)  இப்பூடிப் பலபல பட்டங்களோடும் புகழோடும் வாழ்ந்து வரும்.. 

காகிதப்பூக்கள் , பேப்பர்கிராஃப்ட் புளொக்குகளின் ஓனர்:) அஞ்சுவுக்குப் .... 04/12/17
பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்...
பிள்ளைகள்போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்....

இதில் வெள்ளையா நடுவில் இருக்கும் அப்பாவிதேன் நான்:).. மற்றது கீதா, அஞ்சு, அம்முலு ஆக்கும்:))

இந்தப் பதினேழாம் ஆண்டில் தனது 66 வது [பிரட்டிப் போட்டாலும் 66 தேன்.. மீ இதில ரொம்ப விபரமாக்கும்:)]  பிறந்ததினத்தைக் கொண்டாடும் அஞ்சுவுக்கு.. ஆண்டவர் நல்ல ஆயுளையும், நிரந்தர மகிழ்ச்சியையும், நலம் நிறைந்த வாழ்க்கையையும்.. மற்றும் அனைத்து செல்வங்களையும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...
ந்தப்பாடல் என் கண்ணில் பட்டு இப்போ கிட்டத்தட்ட ஒரு வருடமாகுது, கேட்ட உடனேயே இதை அஞ்சுவின் பிறந்தநாளுக்கு வெளியிடலாமே என சேஃப் பண்ணிப் பத்திரமாக வச்சிருந்தேன்ன்.. இதை முன்பு எப்பவுமே கேட்டதில்லை நான்.. நீங்கள் கேட்டிருக்கிறீங்களோ? முழுமையாகக் கேழுங்கோ.

==================================================================================
மற்றும் இம்மாதம் 1ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடிய கெள அண்ணனுக்கும், வரும் 8ம் திகதி தன் பிறந்தநாளைக் கொண்டாடும் கோபு அண்ணனுக்கும், திகதி தெரியாது ஆனா டிசம்பரில் பிறந்தநாளைக் கொண்டாடும் சகோ கில்லர்ஜி க்கும்.. , சகோ தனிமரம் நேசனுக்கும் மற்றும் பிறந்தநாளை இம்மாதம் கொண்டாடும் அனைவரையும்.. வலையுலக ஓனர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்..._()_.
==================================================================================
ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்சு:).. கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ.. பிரசண்ட்டை எல்லாம் பவுண்ட்ஸ் ஆ மாத்தி இந்த உண்டியலில் போடுங்கோ:) நான் அஞ்சுவுக்கு வைர நெல்க்லெஸ் செய்து குடுக்கப்போறேன்ன்:))
-----------------------------------------------------------------------------------------------
தமனாக்காவை அன்போடு டச்சு செய்ய:)
_________________()________________

121 comments :

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் அஞ்சலின் அக்காச்சிக்கு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நேசன் :)

      Delete
  2. அருமையான பாடல் இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்தது ஒருகாலத்தில் அதிரா. அதுவும் இரவின் மடியில் மிகமுக்கிய இடம் பிடித்திருக்கும் சில அறிவிப்பாளர்கள் தேர்வில்)))

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறீங்க நேசன் பாடல், நான் பல பழைய பாடல்கள் கேட்டிருப்பினும் இதை முன்பு கேட்டதில்லை...

      ஊசிக்குறிப்பு:
      இவ்ளோ காலமாகப் பழ்கியும் நேசனுக்கும் இம்மாதம் எனத் தெரியாமல் போச்சே.. இப்போ இணைச்சிட்டேன்ன்.. உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் நேசன்.. சபரிமலையில் கொண்டாடுவீங்கள் என நினைக்கிறேன்.. வாழ்க வளமோடு.

      Delete
    2. முன்கூட்டிய வாழ்த்துக்கு நன்றிகள்.எப்போதும் நான் பிறந்தநாளினை கொண்டாடுவது இல்லை. சபரிமலைக்கு எப்போதும் தையில் தான் போவோம் தருசனம் காண கூட்டமாக.

      Delete
    3. ஓ நான் போனமாதமே நீங்க போயிட்டீங்க எனத்தான் நினைச்சிருந்தேன்...

      Delete

  3. ஆஆவ் நான் வந்திட்டேன் :)


    [im]https://makeameme.org/meme/shy-fish[/im]

    ReplyDelete
    Replies
    1. ஜொள்ளவே தேவையில்லை.. புளொக் ஜாமத்தில பலமா ஆடும்போதே கண்ணைத்திறக்காமல் ஜொல்லிட்டனே அஞ்சூ லாண்டட் என:))

      Delete
  4. உண்டியலில் போட காசு எல்லாம் என்னிடம் இல்லை )))இருப்பது சினேஹாவின் புன்னகை மட்டுமே !அதுவே எங்களின் பிறந்தநாள் அன்புப்பரிசாக பொன் நகை போல சேரட்டும் .

    ReplyDelete
  5. மார்கழி தேவதை :)))))) !!! கிக்கிக்கீ டாங்க்ஸு
    அந்த படம் எனக்கு நினைவிருக்கே :) ஆனாபூனையால் இன்னும் மீனை பிடிக்க முடியல்லியே :)

    ReplyDelete
    Replies
    1. நான் விட்டுக் குடுக்கறேன்:) அதனாலதான் பிடிப்பதில்லை மீனை:) இப்போ புரியுதோ மீ ரொம்ப நல்ல பொண்ணு:) சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:))..

      Delete
  6. கில்லர்ஜீயின் பிறந்தநாள் 13/12 என்பது என் நினைவு பார்க்கலாம் கில்லர்ஜீ பொதுவில் சொல்லட்டும்))) இனிய முன்கூட்டிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அணைவருக்கும் .ஐய்யப்பனிடம் எல்லோருக்கும் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நேசன் கில்லர்ஜி சொல்ல மாட்டார். ஆனால் அவரும் இந்த மாதம் தானு கேட்டு மகிழ்ச்சி...ஹை கார்த்திகை என்பதால் ஐயப்பனிடம் வேண்டுதலோ!! சும்மா தமாஷ் பண்ணினேன் நேசன்...உங்கள் நேசம் தெரியும்!!

      கீதா

      Delete
    2. அப்போ கில்லர்ஜி யும் 4ம் நம்பரோ?... வலையுலகில் 4ம் உம் 1 ம் தான் அதிகமா உலாவீனம்போல:)

      Delete
  7. அதிராவின் அன்பு எதிரி // ரைட்டு :)
    டெய்சிக்கு முறையை சரியா சொல்லித்தரல்லையே டெய்சியின் மாம் :)
    டெய்சி நல்லா கேட்டுக்கோ நான் உனக்கு சித்தீ சித்தீ :)

    ReplyDelete
  8. நான் எங்கே இடிக்கிறேன் :) நீங்களே முழு இடத்தையும் அடைச்சிட்டுஉக்காந்திருக்கிங்க :) நான் பாருங்க சாஞ்சி வளைஞ்சு இருக்கேன் :)

    என்னது 2 அடி ஹீல்ஸா :))) சொல்றதில் ஒரு நியாயம் இருக்கணும் flat ஷூ போட்டே நானா விழுந்து சில்லரை பொறுக்காத இடமே இல்லை இந்த அவனியில் :)

    கட்டிலுக்கு கீழே மட்டுமில்லை மரத்தின் மேலேயும் கிளைகளுக்கு நடுவில் ஒளிஞ்சி அடிப்பேன் :)

    //கண்ட நிண்ட பூச்சி, புழுக்கள் எது நகர்ந்தாலும்:) அவற்றோடு நின்று, வீட்டில் சமைப்பதைக்கூட மறந்து பேசிவரும்:).. பிரியமான பூச்சிகளின் தோழி:) //

    ஹாஹா :))))))) உண்மையிலேயே எனக்கு மிக பிடிச்சத்து இந்த வரிகள் தான் :))

    ReplyDelete
    Replies
    1. இரண்டடிக் ஹீல்ஸ் க்கு சொந்தக்காரர்:).. கிச்சினைத்திறந்து, சமைக்காமலேயே, தான் சமையலில் வில்லி எனச் சொல்லித் திரிபவர்:).. கட்டிலுக்குக் கீழே ஒளிச்சிருந்தபடியே, தான் பெண்களுக்குக் குரல் கொடுக்கும் தீவிரவாதி:) என முழங்குபவர்:).. கண்ட நிண்ட பூச்சி, புழுக்கள் எது நகர்ந்தாலும்:) அவற்றோடு நின்று, வீட்டில் சமைப்பதைக்கூட மறந்து பேசிவரும்:).. //

      ஏஞ்சல் முதல்ல இது அவங்க தன்னையே சொல்லிக்கறாங்கனு நினைச்சேன் அப்புறம்தாம் தெரிஞ்சுச்சு உங்களை நு...ஹீல்ஸ் போடாத உங்களை...யெஸ் எனக்கும் அந்தப் பூச்சி வரிகளை வைச்சுத்தான் உங்களைனு கண்டு பிடிச்சேன் அதனால போனா போகுதுனு விடறேன் அவங்கள...அது தான் எனக்கும்...பிடித்த வரிகள்!!!! ஸோ போனா போகுது விட்டுருவோம்...

      கீதா

      Delete
  9. ஹையோ எரர் மாத்தி டைப் பண்ணிட்டிங்க :)
    அந்த மூணு அப்பாவிகளுக்கு me ,ammulu geetha நடுவில் மிரட்டிக்கிட்டு இருக்கிறது நீங்க தான்

    ஆமாம் எனக்கு 66 தான் :) ஆனா அதை இந்த உங்களோட 77 வயதிலும் மறக்கலியே நீங்க :)))))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா ஹா அப்படிப் போடுங்க!! ஏஞ்சல் நான் அவங்க கிட்ட கேக்கணும் நு நினைச்சேன் இதுல யார் கீதானு...சரி சரி நம்மையும் பூஸாரா போட்டுருக்காங்களே நு எனக்கு ஒரே பெருமை....மகிழ்ச்சி பொயுங்கி வந்துருச்சு!!! ஸோ மூழ்கிட்டேன்!!!!

      அந்தப் படம் ஸோ க்யூட்..!!!

      கீதா

      Delete
    2. ஹையோ ஏஞ்சல் அவங்க வயச மாத்திட்டீங்களே எனக்குத் தெரிஞ்சு 88...ஹா ஹா

      கீதா

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு பொய்யை 1000 தடவை ஜொன்னாலும் அது உண்மையாகிடாதாக்கும்:))..
      சுவீட் 16 ஐ ஆராலும் மறக்க முடியாது பாருங்கோ:)).. இப்பொ 77 என்கிறீங்க 88 என்கிறீங்க.. தடுமாறுறீங்க எல்லோரும்:) ஹையோ அதிரா சேஃப்ஃப்ஃப்ஃப்ஃப்:) ஹா ஹா ஹா...

      Delete
  10. ஆவ் !! என் பேரிலையும் பாட்டு வந்திருக்கா !! கண்டுபிடிச்சி போட்டடத்துக்கு தாங்க்யூ மியாவ் :)

    கௌதமன் சாருக்கு இங்கேயும் வாழ்த்திக்கறேன் .கில்லர்ஜிக்கும் கோபு அண்ணாவுக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  11. ஹாஹா :) நேசன் மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு :)
    ஸ்நேகாகிட்ட அரைக்கிலோ புன்னகையோடு கால்கிலோ காசு மாலை யம் சேர்த்து வாங்கி கொடுத்திடுங்க எனக்கு :)

    ReplyDelete
    Replies
    1. சினேஹாவிடம் என்றும் யாசிப்பது புன்னைகையை மட்டுமே )))காசு மாலையைவிட பெறுமதி அதிகம்)))

      Delete
  12. ஏஞ்சலின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    //கௌதமன் சாருக்கு இங்கேயும் வாழ்த்திக்கறேன் .கில்லர்ஜிக்கும் கோபு அண்ணாவுக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)//

    நானும் உங்களுடன் இணைந்து வாழ்த்துச்சொல்லிக்கிறேன். அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா :)

      Delete
  13. பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  14. /Posted by MasterChef:) athira at 12/03/2017 09:36:00 pm
    Labels: Special//
    அவ்வ்வ்வ் :) இந்த அவதாரம் எப்போலருந்து :????

    ReplyDelete
    Replies
    1. கீரை வடை போட்டுட்டாங்களாம் அதான் இப்படி மாஸ்டர் செஃப் போல ஹா ஹா ஹா நேத்துலருந்தோ...

      கீதா

      Delete
    2. ஏஞ்சல் அதை ஏன் கேக்கறீங்க திங்க வுல அதிரா ஸாரி மாஸ்டர் செஃப் "என் கீரை வடையை சாப்பிடறவங்களுக்கு" புளியோதரை ஃப்ரீனு போட்டுருக்காங்க பாருங்க...ஹா ஹா ஹா ஹ

      கீதா

      Delete
    3. அவ்வ்வ்வ்.... மாறிட்டுதா அவதாரம்..!!!! கீரை வடை செய்தபிறகு போல அஞ்சு...

      Delete
    4. ஹா ஹா ஹா இந்த அவதாரம் இன்னும் பல அவதாரங்களை எடுக்க உள்ளது என்பதனைப் பெறுமை:) உடன் தெரிவிக்கிறேன்ன்:)).. ச்ச்ச்சும்மா சாகாமல் இப்பூடி எதையாவது சாதிச்சுப்போட்டுத்தான் சாகோணுமாக்கும்:))

      Delete
  15. பிறந்தநாள்... இன்று பிறந்தநாள்...
    பிள்ளைகள்போலே
    தொல்லைகள் எல்லாம்
    மறந்தநாள்....//

    பாடல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அக்கா.. இந்த ஆரம்பம் தான் எப்பவும் இலங்கை வானொலியில், பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சிக்குப் போடுவினம்...

      நான் நேற்றுவரை நினைச்சிருந்தேன், அது இலங்கை ரேடியோ தயாரித்த பாடல் என... ஆனா நேற்று தேடியபோது.. அது சினிமாப் பாடல் அவ்வ்வ்வ்வ்:)).. ஹா ஹா ஹா.. இதோ இருக்கு லிங்க்...

      https://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY

      Delete
  16. அதிரா செய்த குயிலிங்: அழகு.

    ReplyDelete
  17. சமீபத்தில் ரசித்த பாடலை உச்சியில் வைத்து விடுகிறீர்கள். ஜோவை எனக்குப் பிடிக்குமாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அடிக்கடி கட்சி மாறி நம்மை டைவேர்ட் ஆக்க நினைக்கிறீங்க:) மாறமாட்டோம்ம்:) உங்களுக்கு அனுக்காவை:) மட்டும்தான் பிடிக்கும்:))..

      பாகுபலி 2 ஐ குடும்பத்தை நடத்தியே கூட்டிச்சென்று(ஏதும் வேண்டுதலாக இருக்குமோ என ஒரு டவுட் எனக்கு:)).. சென்னை தியேட்டரில முதேல்ல்ல்ல் ஷோ பார்த்தனீங்க:)

      ஆனா “மகளிர் மட்டும்” அப்பூடிப் போய்ப் பார்க்கலியே:)) ஹா ஹா ஹா விடமாட்டோம்ம்ம்:))

      Delete
  18. அடடே... ஏஞ்சலினுக்குப் பிறந்த நாளா? மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. ஒன்றாம் தேதி கௌ அண்ணனைப் போலவே இரண்டாம் திகதி இன்னொரு ஆசிரியரும் பிறந்தநாளை விளம்பரம் இன்றி கொண்டாடினார். ஞாயிறு படங்கள் வழங்கும், அந்தப் பதிவிலேயே முகம் காட்டிய ஆசிரியர்!

    கௌ சார்பில் நன்றிகள்.

    ReplyDelete
  20. வகை வகையான பூனையார் படங்களைப் போட்டு கவர்ந்து விட்டீர்கள். பொருத்தமான வாசனைகளும் சூப்பர்! வரிசையில் கீதாவும் இடம்பெற்று விட்டார் போல! ம்ம்ம்... நடத்துங்க.. நடத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதாவை நம் கட்சிக்குள் கொண்டு வந்திட்டோம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா “மகளிர் மட்டும்”:)..

      Delete
  21. அஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.​

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் :)

      Delete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    தம+1

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா

      Delete
  23. ஏஞ்சலினுக்கு வாழ்த்துகள். பதிவு தேத்திய உங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லை தமிழன் :)

      Delete
    2. நெல்லைத் தமிழன்Monday, December 04, 2017 2:32:00 am
      பதிவு தேத்திய உங்களுக்குப் பாராட்டுகள்./////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... பாலை வனத்திலயும் புகைக்குதே:)... நீங்கதான் உங்களுடையதைச் சொல்லவே இல்லயே:)...

      Delete
  24. அஞ்சுவுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பொருத்தமான பாடல் பலமுறை கேட்டு இருக்கிறேன்.

    எனக்கு அட்வான்சாக வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி

    "மார்கழித்தேவதை"
    சரி ஆண்பாலுக்கு என்ன ஜொள்ளு"வீர்கள் ???

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சகோ ..#
      ஆங் அப்படிதான் யோசிக்க விடாம கேள்வி கேளுஙங்க :) இலேனா அந்த இடைவெளியில் புது அடைமொழிபெயரை சூட்டிக்கும் குண்டு பூனை :)

      Delete
    2. @கில்லர்ஜி //எனக்கு அட்வான்சாக வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி//

      ஆஅவ்வ்வ் அட்வான்ஸ் ஆஆஆ அப்போ நேசன் சொன்ன டேட் கரீட்டூஊஊஊஊ:).. கீதா கமோன் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:))...

      //"மார்கழித்தேவதை"
      சரி ஆண்பாலுக்கு என்ன ஜொள்ளு"வீர்கள் ???///

      ஹா ஹா ஹா ச்ச்ச்சோ சிம்பிள் மார்கழித் தேவன்:))

      Delete
    3. ஆஆஆவ்வ்வ்வ் புது ஐடியாக் கிடைச்சிருக்கெனக்கூஊ:)
      மார்கழி ஆண்தேவதை:)... இது எப்பூடீஈஈஈ?.

      Delete
  25. முதலில் நம் அனைவரது வாழ்த்துகளும் என்றென்றும் இறைவனின் நல்லாசி கிட்டி மகிழ்வுடன் வாழ்ந்திடம் நம் தேவதை/ஏஞ்சலுக்கு வாழ்த்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மிக்க நன்றி துளசி அண்ணா அண்ட் கீதா :)

      Delete
  26. பாடல்கள் வெரி ஆப்ட் அதிரா..சூப்பர் ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மிக்க நன்றி.. எனக்கும் ரொப்பப் பிடிச்சது.. நேற்ரிலிருந்து இந்த ஏஞ்சல் சோங் மட்டும் பலதடவைகள் கேட்டு விட்டேன்ன்.. நல்லா இருக்கு..

      Delete
  27. அது சரி இந்த வைர நெக்லஸ்தானே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கு...அப்ப புதுஸா வாங்கலையா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இல்ல கீதா.. உண்டியல் நிரம்பட்டும்:) புதுசா வாங்கிடலாம்..:)

      Delete
  28. அது சரி அதிரா இன்னும் மார்கழி பிறக்கவே இல்லையே...இது கார்த்திகை மாதம் அல்லவா....கார்த்திகைத் தேவதை!!! ஏஞ்சல்!! பாருங்க ஏஞ்சல் எப்போதுமே ப்ரைட்!!!! ஒளிர்ந்து எல்லோருக்கும் ஒளி தரும் (ஆம் விழிப்புணர்வு, நல்ல விஷயங்கள் தரும் என்று) வாவ்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கீதா.. டிசம்பர் எனில் அது மார்கழி ஆக்கும்:) டமில் ஆக்கம்:).. தை எனில் ஜனவரி... மாசி எனில் பெப்ப்ப்ப்ப்ப்ப்புரவரீஈஈஈ:) இப்படி வருமெல்லோ:) அந்த வகையில் போட்டேன்ன்... தமிழ்மாதம் அல்ல:)..

      Delete
  29. கில்லர்ஜி, கோபு சார் மற்றும் இம்மாதம் பிறந்த நாள் விழா காணும் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துகள்!!

    ReplyDelete
  30. அன்பின் ஏஞ்சல் அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி துரை அண்ணா :)

      Delete
  31. அதிரா க்வில்லிங்க் ஷூப்பர்!!! ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க!!!

    (ஏஞ்சல் ஹையோ பாராட்டிட்ட்டோமே இப்ப பாருங்க அடுத்த அடைமொழி கலைஞி என்று போட்டுக் கொண்டுவிடுவாரோ ஹா ஹா ஹா ஹா!!!!)

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பட்டப்பெயர் அடைமொழிபெயர் பல்கலைவித்தகி :) வரும்னு பட்சி சொல்லுது கீதா :)

      Delete
    2. //அதிரா க்வில்லிங்க் ஷூப்பர்!!! ரொம்ப அழகா செஞ்சுருக்கீங்க!!!//

      மிக்க நன்றி கீதா, கீழே இளமதி சொன்னதைப்போல.. கன்னிக் குயிலிங் இதெல்லாம்ம்.. இதன் பின்பு பல செய்திருக்கிறேன்ன்.. இங்கும் போஸ்ட்டில் உள்ளது.

      Delete
  32. ஏஞ்சலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ஒரு பழைய ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது அது இங்கே பொருத்தமாக இருக்கும் என கருதி சொல்லுகிறேன்

    ஏஞ்சல்: என்னங்க என் பிறந்தநாளுக்கு நான் போகாத இடத்திற்கு கூட்டிப் போங்க
    ஏஞ்சல் வூட்டுகாரர் : சரி வா உன்னை நான் நம்ம கிச்சனுக்கு கூட்டி போகிறேன்..
    ஏஞ்சல்....ஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
    Replies
    1. Garrrrrrrrrrr :)

      எவ்ளோ சந்தோசம்!!! என்னை கிச்சனுக்கு அனுப்பறத்திலேயே இவர் கண்ணும் கருத்துமாயிருக்காரே :)
      மிக்க நன்றி ப்ரண்ட் வாழ்த்துக்களுக்கு :))

      Delete
  33. Happy Birthday to you...
    Happy Birthday to you..
    Happy Birthday Dear anju
    Happy Birthday to you...

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு.நல்லாரோக்கியத்தோடும்,மகிழ்ச்சியோடும் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன்.

    Zum Geburtstag herzliche Glückwunsche, alles Gute ein wunderbares neues Lebensjahr.



    ReplyDelete
    Replies
    1. Danke für die Geburtstagswünsche. :))

      அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்முலு :)

      Delete
    2. ////
      Zum Geburtstag herzliche Glückwunsche, alles Gute ein wunderbares neues Lebensjahr.////

      கர்ர்ர்ர்ர்ர் பப்பிளிக்குல உப்பூடி இருவரும் கெட்ட வார்த்தை பேசக்கூடா ஜொல்லிட்டேன்ன்ன்ன்:)...

      Delete
  34. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஞ்சு...


    எப்பொழுதும் இது போல் மகிழ்ச்சியாக ....

    அன்பாக....

    சிறப்பாக...

    உங்கள் நாட்கள் அமையட்டும்...


    அழகான கில்லிங் அதிரா...படங்களும் ..பாட்டும் மிக அழகு...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அனு :)

      Delete
    2. ///அழகான கில்லிங் அதிரா...படங்களும் ..பாட்டும் மிக அழகு...//
      மிக்க நன்றி அனு.

      Delete
  35. இந்த பாட்டு நான் கேட்டிருக்கேன் அதிரா.

    //கௌதமன் சாருக்கு இங்கேயும் வாழ்த்திக்கறேன் .கில்லர்ஜிக்கும் கோபு அண்ணாவுக்கும் முன்கூட்டிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)//
    நானும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

    இம்முறையாவது அந்த வைர நெக்லஸ் ஐ கொடுத்திடுங்கோ... ஏமாற்றாமல்......

    ReplyDelete
    Replies
    1. ஓ உங்களுக்கும் தெரியுமோ அம்முலு...

      பொறுங்கோ பொறுங்கோ உண்டியல் நிரம்பட்டும்:).... அதில வள்ளியின் நேர்த்தி வெறு இருக்குதெல்லோ:))

      Delete
  36. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மொகமத் தம்பி :)

      Delete
    2. ///மொகமத் தம்பி :)//
      ஹலோ அஞ்சு பாட்டிபோலவே பேசுறீங்களே.. ஹா ஹா ஹா கர்:)) அது மொகமட் ஆக்கும்:))

      Delete
    3. MasterChef க்கு பொராம.....!

      Delete
    4. //mohamed althafTuesday, December 05, 2017 4:19:00 am
      MasterChef க்கு பொராம.....!///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் சப்போர்ட் தானே பண்ணினேன்:).. நன்மைக்குக் காலமில்ல சாமி:))

      Delete
  37. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அஞ்சு!!!

    கரும்பாக இனிக்கின்ற வார்த்தை பேசிக்
    கவருகின்றாய் கலையரசி ஏஞ்சல் தோழி!
    அரும்பாக அன்புதனை அகத்தில் தாங்கி
    அரும்பணிகள் ஆற்றுகின்றாய் கோடி கோடி!
    விருந்தாகப் படைக்கின்றாய் கலைகள் நேர்த்தி!
    விரைந்தோடி உதவுகின்றாய் பணிகள் பூர்த்தி!
    தரும்பாடல் உளமார உனைநான் வாழ்தித்
    தடம்பதிக்க வேண்டுகிறேன் தமிழ்போல் வாழி!

    நன்நலமும் வளமும் மகிழ்வும் நிறையப்பெற்று
    நீடூழி வாழ இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்!

    அன்பிற்கு இலக்கணமாய் என்றும் எல்லோர் உள்ளத்திலும் இருக்கும்
    அதிராவுக்கும் அனைத்து நட்புறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    அதிரா! உங்கள் மழலைக் காலக் க்விலிங் வேலைப்பாடு இன்றும் அழகு!
    நீங்கள் பதிவில் பகிரும் விடயங்கள் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பு!
    நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆவ் !!! வாங்க வாங்க இளமதி ..சந்தோஷத்தில் மிதக்கிறேன் ..எல்லாரையும் வலையில் தினமும் சந்திக்கிறேன் .உங்களை இங்கே பார்த்ததில் மிக்க சந்தோசம் .இந்த கவிதையை பிரிண்ட் போட்டு வச்சிக்கறேன்..
      அன்பான வாழ்த்துக்கும் அழகான கவிதைக்கும் மிக்க நன்றி :)

      Delete
    2. ஆஆஆஆவ்வ்வ்வ் இதாரிதூஊஊஊ என் கண்களையே நம்ப முடியவில்லையே:)).. எவ்வளவோ பாடுபட்டோம் இப்பூடி வெளியே கொண்டுவர.. இப்போதான் யங்மூன் தலையைக் காட்டியிருக்கிறா.. வெல்கம் இளமதி வெல்கம்...

      என் கையைப் பிடிச்சுக்கோங்க.. இறுக்கிப் புடிங்க.. பயப்பிடாதீங்க.. நா இருக்கேன்ன்ன்ன்:))... அஞ்சு இருக்காக, அம்முலு இருக்காக... கீதா இருக்காக.. மற்றும் பலரும் இருக்காக பயப்பூடாதீங்க.. தொடர்ந்து வாங்கோ... இனியும் காணாமல் போனால் தேம்ஸ்ல தள்ளிடுவேன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:))

      ஹையோ ஏதும் பயம்,பிரச்சனை எனில் ... உடனேயே என்னைக் கூப்பிடுங்கோ இளமதி.. :) அப்போதானே முதல் ஆளாய் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிக்க முடியும் என்னால:))...

      அழகிய கவிதை.. ஒரு கவிஞர் வந்திட்டாக.. மற்ற மேஜர்:) கவிஞரைக் காணல்லியே இன்னும்...

      மிக்க நன்றி இளமதி.. இனி தொடர்ந்து வாங்கோ.. உங்க புளொக்கையும் தூசு தட்டுங்கோ... மிக்க மகிழ்ச்சி.

      Delete
    3. இளமதி நலமா? வாழ்க வளமுடன்.
      எப்படி இருக்கிறீர்கள்?
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      மீண்டும் வந்து கவிதை எழுதுங்கள், க்விலிங் செய்து பகிருங்கள்.

      Delete
    4. கவிதை அருமை.
      வாழ்த்துக்கள்.

      Delete
    5. இளமதி வருக, வருக ......
      அஞ்சுவிற்கு அருமையான கவிதை.சூப்பர்.

      Delete
    6. வணக்கம் சகோ இளமதி !

      அடடா அடடா இளமதி வந்தார்
      அஞ்சுவும் மகிழ்ந்திடவே - தமிழ்
      எடடா எடடா இன்கவி யாளின்
      இறக்கை முளைத்திடவே !

      தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு அப்படியே மெய் சிலிர்த்துப் போய்விட்டேன் எவ்வளவு இனிமையான விருத்தம் என்றும் இவ்வாறே தமிழைத் தந்தால் என்ன ?????????????????????????????????????????????????????????????????

      தங்கள் வாழ்நாள் எல்லாம் மகிழ்வு பிறக்கட்டும் கா வாழ்க வளர்க
      ( எப்படி ஐஸ் வச்சாலும் நீங்க வரமாட்டீங்க ஆனால் அதிராவும் அஞ்சுவும் இருக்கும்வரையில் நீங்க எஸ்கேப் ஆக முடியாதே அவ்வவ்வ்வ்வ் )

      Delete
    7. ///ஆனால் அதிராவும் அஞ்சுவும் இருக்கும்வரையில் நீங்க எஸ்கேப் ஆக முடியாதே அவ்வவ்வ்வ்வ் )///

      ஹா ஹா ஹா அப்பூடிச் சொல்லுங்கோ:))

      Delete
    8. அன்போடு எனைத் தேடி நலம் கேட்டும் கவிதையைப் பாராட்டி வாழ்த்திய
      அதிரா, அஞ்சு, கோமதி அக்கா, பிரியா, சீராளனுக்கு
      என் உளமார்ந்த நன்றிகள்!

      அதிராவால் ஆகாத செயலென்று எதுவும் இல்லை.!
      அன்பெனும் கயிற்றால் அல்லவா கட்டி இழுக்கின்றார்...:)
      இங்கு அதிரா அஞ்சுமட்டுமல்ல அனைத்து அன்புள்ளங்களும்
      என்னை மீண்டும் வலையில் எழுதுமாறு வேண்டுகிறீர்கள். முயல்கின்றேன்.
      கால அவகாசம் இன்னும் தேவையாக இருக்கிறது.
      அதற்குள் இயலும் நேரம் உங்களிடமும் வர முயல்கிறேன்.
      அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றியுடன் என் வாழ்த்துக்கள்!

      அற்புதக் கவிபடைக்கும் அன்புச் சகோ சீராளரே!..

      படபட என்றே உளமது துடிக்கப்
      பணிவுடன் வணங்குகின்றேன்! - என்னை
      அடமுடன் அழைக்கும் அழகினைக் கண்டு
      அடுத்தொரு செயல்மறந்தேன்!

      அதிரடிக் கவிதை தந்து என்னை அடுத்தென்ன எழுதுவதெனத்
      திகைக்க வைத்துவிட்டீர்கள்!..:) அருமை! ரசித்தேன்!
      அஞ்சுவுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதையும் மிகச் சிறப்பு!
      நன்றியுடன் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் சகோ!

      வாழ்க வளமுடன்!

      Delete
    9. எவ்ளோ நாளாச்சு :) இளமதியும் சீராளனும் கவிதையாலே உரையாடுவதை பார்த்து :)

      Delete
    10. விரைவில் தூசு தட்டுங்கோ இளமதி..

      //அதிராவால் ஆகாத செயலென்று எதுவும் இல்லை.!///

      ஆமா..ஆமா என் அடுத்த குறிக்கோள்.. இங்கின.. மீன் ஒன்றைத் தேம்ஸ் இல் தள்ளோணும் என்பதே:)

      Delete
    11. ஆஹா ............................

      இங்கு இன்னுமா சத்தம் கேட்க்குதுஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ அட இளைய நிலா வந்ததால் இன்னும் இதம் பனிக்கிறது போல அவ்வ்வ்வ்


      அடுத்தொரு செயலை மறந்தால் கூட
      அதிரா விடுவாளோ ? - வலி
      விடுத்தொரு பொழுதை விளைக்கும் வரையில்
      விவேகம் தருவாளோ ?

      அதிரடிக் கவிதைகள் அடுக்கிப் போகவும்
      அனுதினம் முடியலையே - அந்தோ
      விதிவழித் தடமற விரைந்துளைத் தாலும்
      விடியல்கள் மகிழலையே !

      அடிக்கடி அதிரா அழைத்திரா விட்டால்
      அடியவன் தொலைந்திருப்பான் - கவி
      இடைக்கிடை யாகிலும் எழுத மறந்தே
      எறும்பாய்க் கலைந்திருப்பான் !

      அலைகட லெழுனுரை அடங்கிய கரைவெளி
      அமைதிபோல் இருந்தாலும் - தமிழ்
      கலையிது மெழுகிய கவிமன முருகியே !
      கனியமிழ் விருந்தாகும் !

      இளமதி அதிரா இனியநல் அஞ்சு
      இருந்திடும் வலைதன்னில் - இவன்
      உளமகிழ்ந் துலவிட வருமொரு நொடிதனும்
      வலிகளும் இலைஎன்னில் !

      சகோ அஞ்சுவின் பிறந்தநாளுக்கு அனைவரும் வந்ததில் மகிழ்வு அதனிலும் மகிழ்வானது இளமதி அக்கா வந்தது அதனால கருத்துகள் நீண்டாலும் நம்ம கிறுக்கல்கள் தொடரும் ( தூங்கும் நேரத்தில் ஒரு மணித்தியாலத்தைக் குறைக்கப் போகிறேன்)எல்லாப் புகழும் பூஸாருக்கே ஏஏஏஏஏஏஏஏஏ

      நன்றி நன்றி உறவுகளா

      பூசாரின் ஊசிக்குறிப்பு பாடல் அடுத்து மயிலிங் கோ குயிலிங் கோ அது வாயுல வரமாட்டேங்குது அதுக்கும் சேர்த்து நாளைக்கு சின்னதா ஒரு புயம் நோ நோ பொயம் ,,அட தமிழிலே சொல்லுவும் கவிதை ஒன்று ( நமக்கு எதுக்கு தெரியாத பாஷையில் மாட்டித் தவிக்கும் வில்லங்கம் ) நாளைக்குப் போடுகிறேன் ன்ன்ன்னன்ன்ன்ன் !



      எவ்ளோ நாளாச்சு :) இளமதியும் சீராளனும் கவிதையாலே உரையாடுவதை பார்த்து :)/// உங்கள் பிறந்தநாள் இந்த நல்ல தருணங்களை எமக்கு உருவாக்கித் தந்ததில் பெருமை கொள்கிறேன் நன்றி கா



      Delete
    12. ///தூங்கும் நேரத்தில் ஒரு மணித்தியாலத்தைக் குறைக்கப் போகிறேன்)//

      ஹா ஹா ஹா இது இது இது யூப்பர் முடிவு:).. இதுக்காகவே உங்களுக்கு ஒரு பிளேட் கம்புத்தோசை கவிஞரே:)..

      ///மயிலிங் கோ குயிலிங் கோ அது வாயுல வரமாட்டேங்குது அதுக்கும் சேர்த்து நாளைக்கு சின்னதா ஒரு புயம் நோ நோ பொயம் ,,அட தமிழிலே சொல்லுவும் கவிதை ஒன்று ////

      அப்பூடியே.. இனி வரப்போகும் என் கம்புத்தோசைக்கும் ஒரு புயம்.. ஹையோ நேக்கும் டங்கு ஸ்லிப் ஆகுதே ஒரு பொயம் இயற்றி வைங்கோ:)).. இது நமக்குள் இருக்கட்டும்.. அஞ்சுக்கு தெரிய வாணாம்ம் பிளீஸ்ஸ்ஸ்:))..

      Delete
  38. ஆவ்வ்வ்வ்வ் இம்முறை வரவேற்புரை.. நன்றி உரையை அஞ்சுவின் பொறுப்பிலே விட்டு விடுகிறேன்ன்ன்ன்:))...

    ReplyDelete
  39. ஆவ்வ்வ்வ்வ் கோபு அண்ணனின் மயில் வந்திருக்கே:)) ஹா ஹா ஹா..


    //////வரும் 8ம் திகதி தன் பிறந்தநாளைக் கொண்டாடும் கோபு அண்ணனுக்கும்,//

    ஆஆஆஆஆஆஆஆ ...... எனக்கே மறந்து போச்சுது. நீங்க நன்றாக நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி, அதிரா ! 🙏😆🙏

    //ஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்தாச்ச்ச்ச்சு:).. கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ.. பிரசண்ட்டை எல்லாம் பவுண்ட்ஸ் ஆ மாத்தி இந்த உண்டியலில் போடுங்கோ:) நான் அஞ்சுவுக்கு வைர நெல்க்லெஸ் செய்து குடுக்கப்போறேன்ன்:))//

    அந்த வசூல்பணத்தில் எனக்கு ஒரு வைர மோதிரமாவது அனுப்பி வைக்க வேண்டும். இப்போதே அட்வான்ஸ் ஆக ஜொள்ளிட்டேன். :)

    அன்புடன் கோபு அண்ணன்
    /////

    ReplyDelete
  40. சகோ அஞ்சு அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    இடையில் தந்திருந்த ஏஞ்சல் பாடல் கேட்டிருக்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது இங்கே கேட்கத் தந்தமைக்கு நன்றி.

    கடைசில இருந்த உண்டியலை நான் பார்க்கவே இல்லை! :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ வெங்கட் :)

      Delete
    2. ஓ நீங்களும் ஏஞ்சல் சோங் கேட்டிருக்கிறீங்களோ.. மிக அருமையான பாடல்...:)...

      ஹா ஹா ஹா உண்டியலைப் பார்க்கவில்லையோ.. அது பறவாயில்லை:) செக் தந்தாலும் ஓகே...:) நான் ஒண்ணும் வாணாம் சொல்ல மாட்டேன்ன்ன்:).

      Delete
  41. இங்கேயும் ஒருமுறையை இல்லை இல்லை பல முறை வாழ்த்துகிறேன் அஞ்சு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ஹை எனக்கு மிகவும் பிடித்த பாட்டுடன் ஆரம்பம் தெங்கு தெங்கு .....உங்கள் குயிலிங்க செம சூப்பர், போட்டோக்கு போஸ்குயூட் ,அப்பாவியின் பார்வையை பாருங்க நான் வால் தனம் பண்ணமுடியாம நடுவுல புடிச்சி போட்டுட்டீங்களானு?:-)))) அஞ்சுக்கான பாடல்தான் ஹைலைட் பதிவில் செம..... கடைசியில் உண்டியலை தூக்கினத்தில் சந்தேகமில்லை வைர நெக்லஸ் அஞ்சுக்குனு சொன்னத்தில்தான் பொய்ங்கிட்டேன்:-)))))))
    அஞ்சு விட்டுடாதீங்க வைரநெக்லஸ் குயிலிங்க்ல செய்துற போறாங்க :-))))))

    இந்த மாதம் பிறந்த நாள் காணும் (இங்கு அதிரா குறிப்பிட்டுளள) அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பூவிழி :)

      Delete
    2. கடைசியில் உண்டியலை தூக்கினத்தில் சந்தேகமில்லை வைர நெக்லஸ் அஞ்சுக்குனு சொன்னத்தில்தான் பொய்ங்கிட்டேன்:-)))))))//

      ஹா ஹா ஹா:)) நீங்களும் என்னை நல்லாத்தான் புரிஞ்சு வச்சிருக்கிறீங்க:)

      ///அஞ்சு விட்டுடாதீங்க வைரநெக்லஸ் குயிலிங்க்ல செய்துற போறாங்க :-))))))//

      ஆவ்வ்வ்வ் இது நல்ல ஐடியாவா இருக்கே:)..

      பாடலை ரசித்தமைக்கு நன்றி பூவிழி.

      Delete
  42. வணக்கம் பூஸாரே !

    இன்று பிறந்தநாள் காணும் அன்பின் அக்கா அஞ்சுவுக்கும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட இருக்கின்ற தேவக்கோட்டையின் கம்பீரம் நண்பர் கில்லர் ஜிக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு !

    ஆடம்பரமான தங்கள் வாழ்த்தில் அப்படியே சொக்கிப் போனேன் பூஸாரே

    என்ன ஹிர்ர்ர்ரர் ....தமன்னாவை காலையிலே டச்சு பண்ணியாச்சு ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ///ஆடம்பரமான தங்கள் வாழ்த்தில் அப்படியே சொக்கிப் போனேன் பூஸாரே //

      ஹா ஹா ஹா இத இத இதைத்தான் மீ எதிர்பார்த்தேன்:).. இந்த ஆடம்பரம் அஞ்சுவுக்கே புரியல்ல:) ஹா ஹா ஹா...

      //தமன்னாவை காலையிலே டச்சு பண்ணியாச்சு ஹா ஹா ஹா//

      நானும் காலையிலேயே கவனிச்சிட்டேனே:) மிக்க நன்றி மேஜரே..

      Delete
    2. அன்பான தெரியும் அதென்ன ஆடம்பரமான ஹா ஹா விம் ப்லீச்ச் .

      Delete
    3. அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :) seeralan

      Delete
    4. விம் இல்லை அஞ்சு என்னிடம், ச்சோ பயப்புயி போட்டு விளக்குறேன்ன்ன்... அது என்னெண்டால் வைர நெக்லெஸ் பற்றிச் சொல்லியிருக்கிறேனெல்லோ அதுதான் ஆடம்பரமான பேர்த்டே பாட்டீஈஈஈஈ:).. ஹா ஹா ஹாக்க்க்க்க்க்:).

      Delete
    5. கவிதை வருமாக்கும்....

      Delete
    6. //சீராளன்Tuesday, December 05, 2017 8:35:00 am
      கவிதை வருமாக்கும்....///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் நம்ப மாட்டேன்ன்:).. போனபோஸ்ட்டுக்கு திரும்ப நிட்சயம் வருவேன் எனச் சொல்லிப் போன மேஜர் வரவில்லையாக்கும்:).. ஹா ஹா ஹா சரி வாங்கோ...:)

      Delete
  43. அன்பு ஏஞ்ஞல்லினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தாமதமாகிவிட்டது..இங்கு எங்கள் மன்னர் ஆட்சிக்கு வந்து 47 ம் வருடம் ஆனதற்க்கு வாரவிடுமுறையுடன் சேர்த்து 5 நாள் தொடர் விடுமுரை.கணீணி பக்கமே வரலை.இன்றுதான் பார்க்க நேரிட்டது

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை மீரா. மிக்க நன்றிப்பா அன்பான வாழ்த்துக்களுக்கு :)

      Delete
    2. வாங்கோ மீரா.. அன்று அங்கு:) உங்களைப் பார்த்ததுக்கு.. இன்று பார்க்கிறேன்ன்.. தேடி வந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  44. வணக்கம் !

    மார்கழித் தேவதை பிறந்த நாளில்
    மகிழ்வைப் போர்த்துகிறோம் - அதிரா
    ஆர்கலித் திங்கே அழைத்திட நாமும்
    அன்புடன் வாழ்த்துகிறோம் !

    நல்லவை யாவும் நயமாய்ச் சொல்வாள்
    நம்மிள அதிராவும் - இன்றோ
    வல்லமை கொண்டு வளரும் ஏஞ்சலை
    வாழ்த்தினாள் புதுராகம் !

    பண்ணுள மொழியும் பனிமுகைத் தேனும்
    பருகிய எண்ணங்கள் - அஞ்சு
    மண்ணுள எழிலின் மகிழ்வைக் கொள்வாள்
    மயங்கிடும் வண்ணங்கள் !

    ஏஞ்சலின் வாழ்வும் ஏற்றம் காணும்
    இன்னிசை பாடுகிறோம் - இவள்
    வாஞ்சனை யாவும் வளமாய் ஆகும்
    வாழ்த்தினைச் சூடுகிறோம் !

    நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோ அஞ்சு
    வாழ்க நூறாண்டு வளத்துடனும் நலத்துடனும் !

    (பூசு அஞ்சு பிறந்தநாளுக்கு வந்த பரிசுப் பொருட்களில் நல்லதை ஆட்டைய போட்டு இருப்பீங்க அதில கொஞ்சம் இங்கிட்டும் அனுப்புறது ஹா ஹா ஹா )


    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் நம்ப மாட்டேன்ன்:).. போனபோஸ்ட்டுக்கு திரும்ப நிட்சயம் வருவேன் எனச் சொல்லிப் போன மேஜர் வரவில்லையாக்கும்:).. ஹா ஹா ஹா சரி வாங்கோ...:)//

    போனவருசம் நடந்தவைகளை இன்னுமா மறக்கல்ல அவ்வவ்வ்வ்வ்

    ஆமா அஞ்சு அக்காவுக்கு வயதை மாற்றிப் போட்டாப்ல ஸ்வீட் 16 னையும் ஒருக்கா மாற்றிப் பார்க்கிறேன் ஆங் ........

    அனைவரின் அன்புக்கும் நன்றி !

    ஆமா பூசாரே ஓராண்டின் பின்னர் தங்கள் யங்மூன் வந்திருக்காங்க கேக் வெட்டிக் கொண்டாடலையா ( செலவு எல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் ) எதாச்சும் பண்ணுங்க



    ReplyDelete
    Replies
    1. ஆஹா இம்முறை சொன்ன வாக்கைக் காப்பாற்றிய மேஜருக்கு.. அஞ்சூஊஊஊஉ அந்த, உங்களுக்குக் கிடைச்ச நீலக் கலர் பொக்ஸ் ஐ, உடைக்காமல் அப்பூடியே குடுங்கோ:)..

      கவிதையில் தேடினேன் என் பெயர் இருக்கோ என:) இருக்குதே.. இல்லையெனில் ஆருக்கும் தெரியாமல் கிழிச்சுத் தேம்ஸ்ல போட்டிருப்பேன்:) ஹா ஹா ஹா:))... எனச் சொல்ல மாட்டேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்ன்:))..

      அழகிய கவிதை மேஜரே.. இம்முறை கம்பன்கழகத்தால் பட்டம் பெற்ற, இரு கவிஞர்களின் கவிதையும் இங்கு கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி...

      இதுக்காக எண்டாலும் அஞ்சு எனக்கு வைர ஒட்டியாணம் தரோணும்:)... இடுப்பின் சுற்றளவு.. ஏழே முக்கால் அங்குலம்:)..

      ///ஆமா அஞ்சு அக்காவுக்கு வயதை மாற்றிப் போட்டாப்ல ஸ்வீட் 16 னையும் ஒருக்கா மாற்றிப் பார்க்கிறேன் ஆங் ........///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவவுக்கு சொல்றதைத்தூக்கி வந்து அதிராவில டெஸ்ட்டூஊ பண்ணிப் பார்க்கப்பூடா:)...

      ///எதாச்சும் பண்ணுங்க ///
      உப்பூடி என்னை உசுப்பி விட்டால், நான் ஓடிப்போய் அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளிப்போடுவன்:)) ஹா ஹா ஹா..

      இல்ல அமளிப்பட்டால் அவ திரும்பவும் ஒளிச்சிடுவா எனப் பயத்தில அடக்கி வாசிக்கிறேன்:).. வீடு பூந்து அடிப்பேன் என மிரட்டி எல்லோ கூட்டி வந்திருக்கிறேன் இளமதியை:)..

      மிக்க நன்றி சீராளன்..

      Delete
    2. மிக்க நன்றி சீராளன் :) அழகான கவிதை .இளமதியோடதும் உங்களோடதும் .இருவரும் பிரான்ஸ் கம்பன் கழக பரிசு பெற்றீங்க இல்லையா ..தாங்க்ஸ் மியாவ் நினைவுபடுத்தியதற்கு :)

      சீராளன் என் கண்ணில் அந்த உடைஞ்ச உண்டியல்பெட்டியின் துண்டுகூட காட்டலை மியாவ்

      Delete
    3. அன்புக்கு நன்றி !

      என்னது உடைந்த துண்டையும் காட்டலையா ..... இதோ நானும் வாறன் ஒரு பெரிய கல்லா எடுத்திட்டு வாங்க இந்தப் ஸ்வீட் சிக்ஸ்டினை கட்டித் தேம்ஸ்ல மிதக்க விடுவோம்....சரியா

      Delete
    4. ஆங் சரி சரி சீக்கிரமா கொண்டாங்க :)

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நா இன்னும் உண்டியலை உடைக்கவே இல்லயே:).. இதுக்குத்தான் சொல்லுவினம்.. பூசை ஆகமுன்னம் சான்னதம் கொள்ளக்கூடா என:))..

      உடைச்சால் சொல்லாமல் இருப்பனோ?:)))).. இல்ல உடைச்சு நெக்லெஸ் வாங்கிட்டுச் சொல்லாமல் இருப்பேனோ?:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்ப பார்த்தாலும் அதிராவை சந்தேகக்கண்ணோடயே பார்த்துக்கொண்டு..:)) ஹா ஹா ஹா இம்முறை அடிக்கடி மீண்டும் மீண்டும் வந்து வாழ்த்திக்..கொமெண்ட்ஸ் போட்ட மேஜருக்கு மிக்க நன்றி.

      ஓகே எல்லோரும் ரெடியாகுங்கோ.. மை கம்புத்த்த்த்த்த்த் ......:)).. கம்மிங் யா:))

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.