நல்வரவு_()_


Tuesday 9 January 2018

எங்கட வீட்டில் முளைச்ச பயறில்மூன்று வகை + Rolls:)

ஓ மை கடவுளே!!! கூட்டம் கூட்டமா வருகினம், என் ரெசிப்பி படிக்க:)

ஹா ஹா ஹா தலைப்பில எல்லாம் புரியுதோ?:).. அப்பப்ப நான் எங்கயாவது எதையாவது பார்த்திட்டால், அது மனதுக்குப் பிடித்ததாகவும் இருந்திட்டால் அதை முயற்சி பண்ணுவேன்.. அப்படி முயற்சித்த ஒரு வகைதான் இது..

இங்கு எங்களுக்கு சும்மாவே ஊறப்போட்டு விட்டு பின்பு தண்ணியை வடிச்சுப் போட்டு மூடி விட்டால் 2,3 நாட்களில் முளைக் கட்டிவிடும், இருப்பினும் இப்படி போத்தலில் செய்து காட்டிச்சினம்.. பார்க்க , நானும் செய்யோணும் எனும் ஆசையில சட்டென பயறை ஊறப்போட்டிட்டேன்ன்...

படம் பார்த்தாலே புரியும் உங்களுக்கு..

இந்த  Screwdriver ஐ சூடுபடுத்திப் படுத்தி, இப்படிப் பல துளைகள் போட்டேன்.. பின்பு இது ஒரு லீட்டர் போத்தல் என்பதனால், 80 கிராம் பயறுதான் போட்டேன், 100 கிராம்ஸ் போட்டிருக்கலாம்...  பயறை இங்கு குளிர் அதிகமென்பதால், 6,7 மணி நேரம் ஊறப்போட்டு, பின்னர் இப்போத்தலில் போட்டு, ஒரு டவலால் சுற்றி வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்தேன்.

அடுத்தநாள் எடுத்து கொஞ்சம் தண்ணீர் பனுக்கி திரும்பவும் அப்படியே வச்சேன்.. 3ம் நாள் இப்படி குட்டி முளைகள் வந்துது..

நான்கு நாட்களில் இப்படி ஆச்சு...


இதனை மூன்று விதமாக சமைத்தேன், ஒன்று, இப்படி முளைக்கட்டியதை அவிக்கக்கூடாது, அதனால ஆவியில் ஸ் ரீம் பண்ணி எடுத்துப் பின், தாளிச்சுப் போட்டுப் பிரட்டினேன்.. இது சுண்டல்:)

இன்னொரு முறை வெங்காயம் போட்டு வதக்கி, கொஞ்சம் கரட் மற்றும் இந்த முளைகள் போட்டு, கொஞ்சம் சோயா சோஸ் போட்டுப் பிரட்டி, இதனுள் ரைஸ் நூடில்ஸ் போட்டு எடுத்தேன்.

ஸ்ஸ்ஸ்ஸ் நூடில்ஸ் ஐ மட்டும் எடுங்கோ:)) என் முத்தில் டச்சூஊஊ பண்ணக்கூடா கர்ர்ர்:))

இது, மேலுள்ள இரண்டு முறையும் பிடிக்காதோருக்காக[முக்கியமாக இப்படிச் செய்தால் பிள்ளைகள் சாப்பிடுவார்கள்].. சோறு சமைத்து முடித்து அடுப்பை ஓஃப் பண்ணப் போகும்போது, இவ் முளைகளைக் கொட்டிக் கிளறி மூடி விட்டால் போதும், அந்த வெக்கையில் பதமாக அவிந்து நன்றாக இருக்கும்...


சரி மேலே சொன்னதெல்லாம் பெரிய சிதம்பர ரகசியமோ:) என்போருக்கு இந்தாங்கோ இம்முறை கிரிஸ்மஸ் க்கு மீ செய்த கேக்கூஊஊஊ:))
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இனிப்பு எண்டிட்டு பக்கெனக் கை வைச்சிடக்கூடா நெல்லைத்தமிழன்.. உள்ளே எக்கூஊ இருக்கூஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்:)..

அடுத்து நியூ இயருக்கு என்ன செய்யலாம் என ஓசிச்சு.. உறைப்பாச் செய்வமே என ரோல்ஸ் செய்தேனாக்கும்.... இதுக்கு கறி உங்கள் விருப்பப்படி, உருளைக்கிழங்கை அவிச்சோ இல்லை பொரிச்சோ எடுத்து.. அதனுள் சைவமோ அசைவமோ சேர்த்து கறியாக்கி எடுத்துக் கொள்ளுங்கோ..

முதலில், செல்ஃப் ரைசிங் ஃபிளவருக்கு, 2 மேசைக்கரண்டி றவ்வை கலந்து, கொஞ்சம் உப்பும் சேர்த்து நல்ல தண்ணிபோல கரைச்சு எடுக்கோணும்.. நன்கு எக் பீற்றரால் அடிச்சு எடுங்கோ அப்போதான் சொஃப்ட் ஆகும் மா. அல்லது பிளெண்டரில்கூட அடிச்சு எடுக்கலாம்.

அடுப்பில் நொன் ஸ்ரிக் பான் வைத்து, நெருப்பை மிகவும் ஸ்லோவாக விட்டிட்டு, எண்ணெய் ஏதும் விடாமல் மெல்லிசா தோசையை வார்த்து எடுக்கோணும்...

ஒவ்வொரு பக்கம் வேக ஒவ்வொரு நிமிடம் போதும்(பிரட்டிப்போட்டும் வேக விடோணும்).. ஒரு தோசையை எடுத்து விட்டு, அடுத்த தோசையை வார்த்து விட்டிட்டு, அது வேகமுன் இதை உருட்டி வச்சிடலாம்.. முக்கியமான விசயம், தண்ணிபோலக் கரைச்சால்தான் மெல்லிய தோசையாக வரும், மொத்தமாகிட்டால் உருட்டுவது கடினம், தோசை முறுகவும் கூடாது முக்கால் பதம் வெந்தால் போதும்.

1. தோசையில் கறி வைக்கும் இடம்.
2. முதலில் தொங்கலை மடிச்சு, பின்னர் இரு பக்கமும் மடிச்சுப் போட்டு, அப்படியே உருட்டி எடுங்கோ.
3. கொஞ்சம் பிளேன் ஃபிளவரை, கட்டியாக குழைச்சு வச்சிருக்கோணும், பசையாகப் பாவிக்க, இந்த உருட்டிய முடிவை, இப்பசை போட்டு ஒட்டி உருட்டி விடவும்...
4. உங்கள் தேவைக்கு ஏற்ப முட்டையுடன் கொஞ்சம் பால் கலந்து சிறிது உப்பு போட்டு கலக்கி எடுக்கவும்... அதில் தோய்ச்சு, பின்னர் பிரெட் கிரம்ஸ் ல உருட்டி எடுக்கவும்.

இது தோசையில் கறி வச்சு உருட்டிய பின்பு..

 ஆவ்வ்வ்வ் எண்ணெயில் போட்டு இப்படிக் கலர் வரும்வரை பொரிச்செடுக்கவும்.. வடை பொரிப்பதைப்போல எண்ணெய் தேவை.. கொஞ்சம் எண்ணெய் போதாது...

ஊசிக்குறிப்பு:
ஆருக்கும் தேவைப்பட்டால், சைவ ரோல்ஸ்.. முட்டையில்லாமலும் செய்து போட மீ ரெடீஈஈஈஈஈஈ:))... காசை இப்பவே என் செக்:) க்கு அனுப்பி விடவும்.. என் பெயர் போட்டு:).

ஊசி இணைப்பு:
()()()()()()()()()()--------------()()()()()()()()()()-----------------()()()()()()()()()()
danks.. danks:)..

()()()()()()()()()()--------------()()()()()()()()()()-----------------()()()()()()()()()()
==========================================================

118 comments :

  1. ரோல்ஸ் செய்வதுண்டு கிட்டத்தட்ட இதேதான்...நீங்கள் செல்ஃப் ரைஸிங்க் ஃப்ளார் யூஸ் செஞ்சுருக்கீங்க நான் மைதா + பேக்கிங்க் பௌடர் நான் கலந்து செய்வது.இங்கு ஒரிரு கடைகளில் மட்டுமே செல்ஃப் ரைஸிங்க் ஃப்ளொர் கிடைக்கும். சில சமயம் அதுவும் கிடைககது. நான் மிக்ஸர் வெஜ், பனீர், சீஸ் வெஜ் இப்படி மாற்றி மாற்றி ஸ்டஃப் செய்து செய்வதுண்டு... அதிரா....உங்கள் குறிப்பையும் எடுத்துக் கொண்டேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ்வ் இம்முறை கீதாதான் 1ஸ்ட்டூஊஊஊஊ:)).. ஹா ஹா ஹா வாங்கோ கீதா வாங்கோ...

      //நான் மைதா + பேக்கிங்க் பௌடர் நான் கலந்து செய்வது.//
      இதுக்காகத்தான் செல்ஃப் ரெய்சிங் பாவிச்சேன்.. ஏதும் கலக்கத் தேவையில்லை எல்லோ:).. அத்தோடு தோசை உருட்டி எடுக்க சொஃப்ட்டா இருந்துது, முன்பு நானும் பிளேன் ஃபிளவர் பாவிச்சேன்.. அது தோசை கொஞ்சம் ஹார்ட் டாக இருந்துது... எனக்கு பேக்கிங் பவுடர் போட்டால் மணம் பிடிப்பதில்லை.. பட்டர் கேக்குக்கு போடாமல்தான் செய்தேன், ஃபுருட் கேக் எனில் வாசனை அதிகம் என்பதான் பேக்கிங் சோடா மணம் தெரியாது..

      ஓ.. நீங்க சைனீஸ் ரோல் மாதிரி செய்கிறீங்க போல... எங்களுக்குப் பிடிச்சது உருளைக்கிழங்கு லீக்ஸ் ஃபில்லிங்ஸ்:))..

      Delete
  2. தமனா இன்னும் சப்மிட் ஆக மாட்டேங்குது...நான் சப்மிட் செய்ய ட்ரை செய்தேன்...அது வேறு எங்கோ செல்கிறது...ஹா ஹா ஹா..

    அப்புறம் இந்தப் பயறை நீங்கள் ஹாட் கேஸ்/பாக்ஸ்/பேக் பாத்திரம் வருமெ ஹாட் பேக் அதில் ஊற வைத்துவிட்டுத் தண்ணீரை நன்றாக வடித்துவிட்டுப் போட்டால் சட்டென்று முளைவிடும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதை ஏன் பேசுறீங்க... blogger ஓபின் ஆகுது ஆனா புளொக் ஓபின் ஆகுதே இல்லை.. பத்து வருடமாகிறது என் புளொக்கின் வயசு.. அதனால ஓவ லோட் என நினைக்கிறேன், இனி புது புளொக் ஓபின் பண்ணோனுமோ என யோசனை வருது..

      இது ஓடி ஓடி ஒவ்வொரு ப்றைளசரா திறந்து முடிவில் மக்ஸ்தொன் இல்தான் தமனாக்காவை கண்ணில காட்டிச்சுது லபக்கென பிடிச்சுப் போட்டிட்டேன்ன்:) அதுதான் லேட்டூ:)..

      கீதா எனக்கு சும்மாவே தண்னியை வடிச்சுப்போட்டு மூடி விடுவேன் முளைச்சிடும்:)).. ஆனா இது போத்தலில் அழகா முட்ட முளைச்சு எழும்பியிருந்ததைப் பார்க்க ஞானும்:)[ஹா ஹா ஹா நெ.தமிழன் டிக்ஸனறியை இப்போ தேடப்போறார்ர்:))] அப்படிச் செய்யோணும் எனும் ஆசை வந்துட்டுதூஊஊஊ:))...

      மற்றும்படி விதம் விதமா கிடைக்குதே ஸ்பிரெளட்ஸ் மேக்கர்..

      https://www.amazon.co.uk/s/?ie=UTF8&keywords=sprout+maker&tag=mh0a9-21&index=aps&hvadid=80539255336525&hvqmt=p&hvbmt=bp&hvdev=c&ref=pd_sl_59ft0ssrqf_p

      Delete
  3. முளைகட்டிய பயறு (பாயில் ஆர் ஸ்டீம் செய்யாமல்) வேக வைத்த நிலக்கடலை, அல்லது கொண்டைக் கடலை, எல்லாவற்றுடன் காரட், வெள்ளரிக்காய், வெங்காயம், சிறியதாகக் கட் செய்து போட்டு, கலந்து க்ரீன் சட்னி, ரெட் சட்னி, புளிப்புச் சட்னி, இனிப்புச் சட்னி(டெட்ஸ் சட்னி) எல்லாம் கொஞ்சம் போட்டு மிக்ஸ் செய்து, ப்ளாக் ஸால்ட் போட்டு, மிக்ஸ் செய்து செர்வ் செய்யும் சமயம் மசாலா பொரி அல்லது வெள்ளைப் பொரி போட்டு அதன் மேல் ஓமப்பொடி தூவியும் சாப்பிடலாம். இதில் சட்னி எதுவும் கலக்காமல், ஜஸ்ட் ப்ளாக் ஸால்ட் போட்டு கொத்தமல்லி இலை கட் செய்து போட்டு மற்றதெல்லாம் சேம் செர்விங்க்...அதுவும் நன்றாக இருக்கும். தக்காளியும் பொடியாகக் கட் செய்து சேர்க்கலாம்...கேபேஜ் சேர்க்கலாம்..பச்சையான சலாட் போல..இதுவும் நல்லாருக்கும். நாமளே கொஞ்சம் ஓசிச்சு ஓசிச்சு, வெரைட்டி செய்யலாம் இப்ப நீங்க செய்திருப்பது போல...நான் கூடியவரை வேக வைக்காமல் முளைகட்டிய பயறைச் செய்வேன். புட்டிற்கு மட்டும் தான் வேக வைத்து தெங்காய் போட்டு செய்வதுண்டு.

    உங்கள் குறிப்புகளையும் நோட் செய்து கொண்டேன்..வேரியேஷன்ஸ்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீதா, இங்கு வெள்ளையர்கள் சலாட் செய்து தானே சாப்பிடுவார்கள்... ஆனா பச்சையாக எனில் நாம் சாப்பிட்டு விடுவோம்ம் பிள்ளைகளுக்கு இறங்காது.. அதிலும் சின்னவர் வாயில் கத்தரிக்காய் தோல் தட்டுப்பட்டாலே ஓங்காளிப்பார்ர்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ஓ ஓமப்பொடி தூவுறது பார்த்திருக்கிறேன்.. மும்பை ரோட்டோர சமையல்களில் .. சூப்பராக இருக்கும்.. சுருளில் போட்டுப் போட்டுக் குடுப்பினம்.. ரிவியில் பார்த்தேன்...

      Delete
  4. சூப்பர் ரெகிப்பிஸ்..அதிரா....
    எனக்கு ரொம்பப் பிடித்த ரெசிப்பிஸ் கூட!!!!!
    கீதா

    ReplyDelete
  5. பூசார் வழக்கம் போல அழகு!!!

    மத்த படங்களும் அயகு!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அதானே பூஸார் பற்றிப் பேசாட்டில் பிறகு பூஸ் குத்தமாகிடும்:)..

      ஹா ஹா ஹா அனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா.

      Delete
  6. பைலட் பிரேம்நாத் படம் பார்க்கும் துணிவும் பெருமையும் அப்போதே இருந்ததில்லை. பாடல் கேட்டிருக்கிறேன். பூனையாரே ஆச்சர்யப்படும் அளவு ரெசிப்பியா! நடத்துங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஓ நீங்களும் படம் பார்த்ததில்லையோ.. நானும் பார்த்ததில்லை, இன்று ரேடியோவில்.. அழகி ஒருத்தி இளநி விக்க்கிற கொழும்பு வீதியிலே பாட்டுப் போச்சுது.. அப்போ அதை இங்கு போடலாமே எனத் தேடினேன்.. அப்போதான் தெரியும் அது இந்தப்படப்பாடல் என.. , ஆனா அந்த வீடியோ கண்ணுக்கு கலங்கலாக இருந்தமையால் இப்பாட்டைப் போட்டேன்ன்..

      //பூனையாரே ஆச்சர்யப்படும் அளவு ரெசிப்பியா! நடத்துங்க!//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
  7. முளைகட்டிய பயறில் வெல்லம் போட்டு சாப்பிட்டிருக்கிறேன். இதல்லாம் முயற்சித்ததில்லை. விதம் விதமாக செய்து பார்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ நாங்கள் முளைக்கட்டாத அவிச்ச பயறுக்குள்தான் சீனியும் தேங்காய்ப்பூவும் சேர்த்து இடிச்சு உருண்டைகளாக்கிச் சாப்பிட்டதுண்டு... ஆனா அது இனிப்பென்பதால், இப்படி தாளிச்ச சுண்டல்தான் அதிகமாக செய்வது..

      Delete
  8. கடைசியாக செய்திருப்பது பார்க்க நன்றாய் இருக்கிறது. முட்டை போடாமல் செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. ///கடைசியாக செய்திருப்பது//
      ஹா ஹா ஹா அதென்ன ரோ.. வாயில சொல்லக் கஸ்டமோ?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      ஓம் அதுதான் முட்டை போடாமல் செய்து தாறேன் கேளுங்கோ செக்:) க்கு செக்:) [இதுவேற செக்:)], அனுப்புங்கோ என்றேன்ன்ன்:)) எல்லோரும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடீனமே:)).. அப்பூடி மீ என்ன ஜொள்ளிட்டேன்ன்ன்:))

      Delete
  9. அம்பேத்கார் பொன்மொழி ஸூப்பர். எல்லோருக்கும் எப்போதும் நல்லவனாய் இருந்துவிட முடியாது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. அதேதான் எல்லோருக்கும் எல்லோரையும் பிடிப்பதில்லையே..

      Delete
  10. தம சமர்த்தா இங்க விழுது. எங்கள் தளத்தில்தான் கண்ணிலேயே படவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஓ மை கடவுளே..... இம்முறை வியூஸ் 10 ஆயிரத்தை நெருங்குதூஊஊஊஊஉ.. போன அட்வைஸ் போஸ்ட் 20 ஆயிரத்தை நெருங்குதூஊஊஊஊஉ ஆதாரம் மேலே இணைச்சு விடுறேன்ன்ன்ன்:))...

      மீ ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்.. அஞ்சூஊஊஊஊ சுட்டாறின தண்ணி எடுத்து வந்து, தலை நனையாமல் தெளிச்சு என்னை எழுப்புங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

      ஹா ஹா ஹா மிக்க நன்றி ஸ்ரீராம்...

      Delete
  11. பாட்டிலில் ஒட்டை போட்டு பயிரு முளைக்க வைத்த சைண்டிஸ்டுக்கு வாழ்த்துக்கள் அய்யகோ ஒரு விஞ்ஞானி பதிவு எழுதி தன் வாழ்க்கையை வீணடித்துவிட்டாரே...அவர் மட்டும் இப்படி தொடரந்து ஆராய்ய்சி செய்து இருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்குமே இப்ப என்னா அவருக்கு குறைச்சல் அவருக்கு 61 வயதாகியதால் இப்போ அவருக்கு நோ பல் தானே என்று ஏஞ்சல் நினைப்பது இங்கே எனக்கு காதில் வந்து விழுகிறது எல்லோரும் மனசுக்குள் நினப்பார்கள் ஆனால் ஏஞ்சல் மட்டும் சத்தமாக சொல்லுகிறார்கள் ஒரு வேளை அவருக்கும் வயதாகிவிட்டதால் காது கேட்பதில் ப்ராப்ளமோ என்னவோ மீ எஸ்கேப் வேலைக்கு போகுணும் இல்லைன்னா ஆத்தா வையும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்றுத் வாங்கோ..

      //சைண்டிஸ்டுக்கு வாழ்த்துக்கள் //
      ஹா ஹா ஹா எனக்குப் புகழ்ச்சி புய்க்காது:)) ரொம்ப அடக்கமான பொண்ணு:) கிரிசாம்பாள் மாதிரி:)

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீக்கு சிக்ஸ் டி வன்ன்ன் ஆகும்போது.. ட்றுத் பொல்லுப்பிடிச்சுத்தானே நடப்பீங்க:))

      Delete
  12. தம 3 போட்டு பதிவுலக கடமை ஆற்றியாச்சு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நமக்கு கடமை தானே முக்கியம் :) ட்றுத் மேலே ஒரு படம் இணைச்சிருக்கிறேன் வியூஸ் பற்றி பாருங்கோ:)..

      மிக்க நன்றிகள்.

      Delete
  13. வந்தேன்ன்ன்ன் :) ஆமா இதென்ன இன்னிக்கு ரெசிப்பி மயமா இருக்கு :)
    முளைகட்டிய பயறு எனக்கும் பிடிக்கும் நானா ஹொட் பேக்கில் இல்லைனா மஸ்லின் துணியில் நீர் தெளித்து முளைக்கட்டவைப்பேன்
    யாரது இங்கே கோ கிறீன் ஆக்டிவிஸ்ட்ஸ் கொஞ்சம் வந்து பூனையை பிடிங்க :) பிளாஸ்டிக் பயன்படுத்தறாங்க முளைக்கட்ட :)

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ... நான் அதிரா செய்முறையைப் பாத்துட்டு, இப்போதான் 1 1/2 லிட்டர் Fanta வாங்கி வச்சேன். அதை குடித்துமுடித்து, அதுல ஓட்டை போட்டு முளைக்கட்டணும்னு நினைச்சேன்.

      Delete
    2. வாங்கோ அஞ்சு வாங்கோ .. இம்முறை நீங்க எஞ்சினில் ஏறவில்லையே:) ஓட முடியாமல் போச்சா?:)..

      ///யாரது இங்கே கோ கிறீன் ஆக்டிவிஸ்ட்ஸ் கொஞ்சம் வந்து பூனையை பிடிங்க :) பிளாஸ்டிக் பயன்படுத்தறாங்க முளைக்கட்ட :)///

      ஹையோ இதென்ன இது புயு வம்பாக் கிடக்கூஊஊஊ.. மீ ஐன்ஸ்டைன் லெவலுக்கு உயர்ந்திட்டேன் எனப் பார்த்தால் இப்போ சங்கிலி வரப்போகுதே:)) பிச்சை வாணாம் நாயைப் பிடிங்கோ கதையாகப் போகுதே ஜாமீஈஈஈஈஈஈஈ:))

      [im]http://2.bp.blogspot.com/-R7amqQ2d9fA/UXYImlxCblI/AAAAAAAALbw/KdgazlehYrA/s1600/RunningCat.jpg[/im]

      Delete
    3. ///நெல்லைத் தமிழன்Tuesday, January 09, 2018 4:33:00 pm
      ஐயையோ... நான் அதிரா செய்முறையைப் பாத்துட்டு, இப்போதான் 1 1/2 லிட்டர் Fanta வாங்கி வச்சேன். அதை குடித்துமுடித்து, அதுல ஓட்டை போட்டு முளைக்கட்டணும்னு நினைச்சேன்.//

      பார்த்தீங்களோ பார்த்தீங்களோ:) மீ கஸ்டப்பட்டு நஸ்டப்பட்டு பாடுபட்டு ஆடுபட்டு.. ஹையோ ஒரு ஃபுளோல வருது ... சரி அடிபட்டு இடிபட்டு:) ரெசிப்பி செய்து போட:).. இந்த முளைக்கட்டிய பயறுக்கு ஒரு “பரம ரசிகர்”[ஒரு பேச்சுக்கு சொன்னா பேசாமல் இருக்கோணும்:) முறைக்கப்பூடா:)].. இந்தக் குளிருக்குள்ளயும் காசைப்பார்க்காமல் களைப்புப் பார்க்காமல் ஓடிப்போய் ஒண்ணேரை லீட்டரில அதுவும் சுவீட்டான பண்டா:) வாங்கி வந்து செய்ய ஆரம்பிக்க:))..

      அது பொறுக்காமல் சூஊஊஊஊனியம் வச்சிட்டினமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மீ ஜொன்னனே.. எனக்கு எடிரி வெளில இல்ல..இல்ல..இல்ல:)) வீட்டுக்குள்ளயேதான்ன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:))..

      Delete
    4. ஹாஹா :) ஒருகாலத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு போஸ்ட் போட்ட என் முன்னடியேவா :)
      @@ நெல்லைத்தமிழன் கண்ணை மூடி தலைக்கு பின்னமா தேம்ஸ் திசையில் வீசுங்க அந்த பிளாஷ்டிக் பாட்டிலை .make sure it reaches Scotland :)

      Delete
    5. நேத்துத்தான் வீசினேன். வேகம் போறலை போலிருக்கு. அது லண்டன்ல லேண்ட் ஆயிட்டேன்னு தகவல் சொல்லிச்சு. உங்க கார்டன்ல பார்த்து நடங்க. பனி இருக்கறதுனால, பாட்டில்மேல கால் வச்சு உடைச்சுடப்போறீங்க.

      Delete
    6. ///@@
      AngelTuesday, January 09, 2018 11:07:00 pm
      நெல்லைத்தமிழன் கண்ணை மூடி தலைக்கு பின்னமா தேம்ஸ் திசையில் வீசுங்க அந்த பிளாஷ்டிக் பாட்டிலை .make sure it reaches Scotland :)//

      ஹலோஓஓஓ மிஸ்டர்:)) தலைக்கு பின்னாடி வீசினா ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியிலதான் போய் விழும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    7. ///நெல்லைத் தமிழன்Wednesday, January 10, 2018 7:09:00 am
      நேத்துத்தான் வீசினேன். வேகம் போறலை போலிருக்கு. அது லண்டன்ல லேண்ட் ஆயிட்டேன்னு தகவல் சொல்லிச்சு. உங்க கார்டன்ல பார்த்து நடங்க. பனி இருக்கறதுனால, பாட்டில்மேல கால் வச்சு உடைச்சுடப்போறீங்க.///

      ஓட்டப்பம் வீட்டைச் சுடும்:))....
      ஆவ்வ்வ்வ்வ்வ் பிபிசி ல பட்டினத்தாரின் பவழ முத்துக்கள்.. நிகழ்ச்சி:) போடுகுதூஊஊஊ...

      ஹையோ அஞ்சு இதைப் படிச்சிட்டும் படிக்காததுபோலவே கண்ணை மூடிட்டுப் போறா:).. மீ விட்டிடுவனோ:)).. ஹலோ அஞ்சு இது உங்களுக்குத்தான் நெல்லைத்தமிழன் சொன்னார்:)).. இனி நீங்க கார்டினில பிளான்ஸ் வளர்ப்பீங்க?:)) ஹா ஹா ஹா..


      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் எந்த நேரம் எக் கட்சியில நிக்கிறார் எண்டே கண்டு பிடிக்க முடியாமல் இருக்கே ஜாமீஈஈஈஈஈ:))

      Delete
    8. ஹாஹா :) வந்துது பாட்டில் ஆனால் கொஞ்சம் டிஸ்டன்ஸ்லயே அதை ஸ்கொட்லாந்துக்கு டைவர்ட் பண்ணிட்டேN :)

      Delete
  14. உங்க ஹீரோ படத்தை ஆசையோட போட்டிருக்கிங்க :) haahaa திடீர்னு ஒரு யோசனை வந்திச்சு அது :) நாமளும் பேசிக்கறதுக்கு பதிலா வீட்டில் ஸீன் பை சீன ஒவ்வொரு சம்பவத்துக்கும் இப்படி பாட்டா பாடினா எப்படியிருக்கும் :))

    ReplyDelete
    Replies
    1. //உங்க ஹீரோ படத்தை//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் எங்கட அப்பாவின் ஹீரோ பட் எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாக்கும்:)).. அஞ்சு எங்கட அப்பாவின் நண்பர்கள் அப்பாவை சிவாஜி எனத்தான் ஒபிஸில கூப்பிடுவினமா:).. அப்பாவில சிவாஜி அங்கிளின் சாயல் இருக்கும்..

      //நாமளும் பேசிக்கறதுக்கு பதிலா வீட்டில் ஸீன் பை சீன ஒவ்வொரு சம்பவத்துக்கும் இப்படி பாட்டா பாடினா எப்படியிருக்கும் :))///

      ஹா ஹா ஹா சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த கதையா:) பிள்ளைகள் நம்மைப் பார்ப்பினம்:)) ஏற்கனவே லூஸு:) இப்போ முழுக்க கழண்டு விட்டதாக்கும் என மனதிலயே நினைப்பினம் ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

      Delete
  15. ஹையோ இத்தினி நாளும் ரோல்ஸ் செய்ய நார்மல் மாவுதான் போட்டேன் /செல்ப் ரைஸிங் தான் போடணுமா ?
    எனக்கு இன்னொரு இடத்தில பாத்தேன் மெலிசா சப்பாத்தியா ஒருபக்கம் சுட்டும் மறுபக்கம் பில்லிங் வைச்சு சுடலாம்

    ReplyDelete
    Replies
    1. நார்மல் மாவிலும் சுடலாம் அஞ்சு. நான் அப்படித்தான் செய்வேன்.frozen sheets வாங்கி செய்வதில்லை. அதிரா செய்வது மாதிரிதான் செய்வேன்.

      Delete
    2. இல்ல அஞ்சு, நோர்மல் மாவில் எதுவும் கலக்காமல் இருப்பதனால் சில நேரம் ஹார்ட் ஆகுது... இது நல்ல சொவ்ட் ஆ வந்துது.. பேப்பர்போல... இரண்டு மாவும் பாவிக்கலாம்..

      அது கறி ரொட்டி என்போம் அஞ்சு, நான் அந்த ரெசிப்பியும் இங்கு போட்டிருக்கிறேன், தேடினேன் கிடைக்குதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    3. அதேதான் அம்முலு... எனக்கென்னமோ இது கூட சொஃப்ட் ஆ இருந்துது...

      Delete
    4. ..நான் இப்போ சொல்றது மெலிசா சப்பாத்தி தட்டி ஸ்ப்ரிங் ரோல் போல் சுருட்டி பொரிக்கிறது

      Delete
    5. ///..நான் இப்போ சொல்றது மெலிசா சப்பாத்தி தட்டி ஸ்ப்ரிங் ரோல் போல் சுருட்டி பொரிக்கிறது//

      ஹலோ மிஸ்டர்...:) அப்போ நீங்க ஆரம்பம் ஜொன்னது?????:)).. சப்பாத்தி தட்டி ஸ்பிரிங் ரோலாஆஆஆஆ.. ஹையோ ஆண்டவாஆஆஆஆஆ இதென்ன ஸ்கொட்லாந்துக்கு வந்திருக்கும் ஓதனை:))...

      Delete
  16. முளைகட்டிய பயறை பிரைட் ரைஸ் நூடில்ஸ் எல்லாத்துக்கும் போடலாம் செம டேஸ்ட் .
    அந்த கேக் நல்ல இருக்கு பார்க்க .நானா தொட மாட்டேன் :)
    அதேபோல ரோல்ஸ் முக்கி எடுக்க கார்ன் FLOUR தண்ணில கரைச்சி முட்டைக்குப்பதில் யூஸ் பண்லாம் மியாவ்

    ReplyDelete
    Replies
    1. ஹை பைவ் அஞ்சு....

      Delete
    2. @அஞ்சு//
      முளைக்கட்டியவைகளில்தான் சத்து அதிகம் என்கிறார்கள்... ஆனா முளைக்கட்ட வைப்பது ஈசி.. அதன் பின் அதைச் சாப்பிட வைப்பதுக்குள் போதும் போதுமென்றாகிடுதே...

      ஓ .... நான் கோன் ஃபிளவர் இல்லை, பிளேன் ஃபிளவரில் தோய்ப்பேன் அஞ்சு..

      Delete
    3. //priyasakiTuesday, January 09, 2018 4:14:00 pm
      ஹை பைவ் அஞ்சு....//

      இப்போ இவுக எதுக்கு கை அஞ்சு:) சொல்றாக:)) கோன் ஃபிளவருக்கோ?:)..

      Delete
    4. @priya [im]https://s-media-cache-ak0.pinimg.com/236x/67/b4/02/67b40217f7e5853c4c37d698854e7944.jpg[/im]

      Delete
    5. [im] http://animalcare.com.mx/wp-content/uploads/2016/06/8.1-Grumpy-Cat-300x169.jpg [/im]

      Delete
  17. /காசை இப்பவே என் செக்:) க்கு அனுப்பி விடவும்.. என் பெயர் போட்டு:).//
    ஓஹ் வில்லங்கம் புடிச்ச பூஸ் :) அப்போதானே பக்கவிளைவுகளை என் மேலே போடலாம் கர்ர்ர் :)

    ReplyDelete
    Replies
    1. என் பெயர் போடாமல் அனுப்பினான்.. நீங்க நினைப்பீங்க ஏதோ உங்கட ராமசேரிக்கு ஓடர் ஓடரா வருதே என கர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
  18. பொன்மொழி சரிதான் .எல்லாரையும் எல்லா சூழலிலும் திருப்திப்படுத்த முடியாது

    ReplyDelete
  19. என்ன என்னவோ செய்றீங்க. ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது. நாங்க வெஜ் ரோல் பண்ண, கடைல frozen sheets வாங்கிடுவோம். இப்போதான் அதை இப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன்.

    சென்னைல கடைகள்ல இப்போ முளைகட்டி பாக்கெட் போட்டு விக்கிறாங்க.

    நீங்க போட்டிருக்கற பொன்மொழியை கொஞ்சம் மாத்தி, எல்லாருக்கும் பிடிச்ச ஐட்டம் போட்டால்தான் உனக்கு நல்ல செஃப் என்ற பெயர் கிடைக்கும்னா, உனக்கு நல்ல செஃப் என்ற பெயர் வேண்டாம்னு, அம்பேத்கர் இல்லை, இந்த அதிரா சொன்னாங்கன்னு எடுத்துக்கறேன்.

    படத்துல போட்டிருக்கற பூசார் சைவப் பூனையா? மூக்கைப் பொத்திக்குது உங்க ரோலைப் பார்த்து.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      // நாங்க வெஜ் ரோல் பண்ண, கடைல frozen sheets வாங்கிடுவோம். இப்போதான் அதை இப்படிச் செய்யலாம் என்று தெரிந்துகொண்டேன். //

      எனக்கு அந்த ஷீட்ஸ் பிடிப்பதே இல்லை, பெரும்பாலானோர் இங்கும் அதில்தான் செய்கின்றனர் ஈசிக்காக, ஆனா இந்த ரோல்ஸ் செய்ய இதுதான் நல்லது, அது ஏதோ பிளாஸ்டிக் பேபர்போல இருக்கும்.

      இந்த ரோல்ஸ் இலங்கையில் பேமஸ்.. இதில் “மிதிவெடி” எனவும் விக்குதே... கடிச்சால் வெடிச்சு உள்ளே அவித்த எக்:) வரும் ஹா ஹா ஹா.. என் ரெசிப்பி போட்டேன் இங்கு தேடினால் கிடைக்குதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      //சென்னைல கடைகள்ல இப்போ முளைகட்டி பாக்கெட் போட்டு விக்கிறாங்க.
      //
      இங்கும் கிடைக்குது, ஆனா அது தனியே முளையாகி மரம்போல ஆகியிருக்கும்.. பயறே இருக்காது.. அது எனக்குப் பிடிப்பதில்லை.. ஆகவும் தண்ணிபோல இருக்கும்:)..

      //உனக்கு நல்ல செஃப் என்ற பெயர் வேண்டாம்னு, அம்பேத்கர் இல்லை, இந்த அதிரா சொன்னாங்கன்னு எடுத்துக்கறேன்.///
      கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா பொன்மொழி ஜொன்னா ஏத்துக் கொள்ளோனும்:) ஆராயக்கூடாது எனப் புல்;ஆலியூர்ப் பூஜானந்தா டெல்லியிருக்கிறார்:)..

      ///படத்துல போட்டிருக்கற பூசார் சைவப் பூனையா? மூக்கைப் பொத்திக்குது உங்க ரோலைப் பார்த்து.//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூனையில் சைவம் கிடையாது:))..

      Delete
  20. முளை கட்டிய பயறு உடலுக்கு நல்லது என்பார்கள் நல்ல முயற்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ...

      ஆவ்வ்வ்வ்வ்வ் மிக்க நன்றீ..

      எல்லோரும் பாருங்கோ ஓடிவாங்கோ.. ஜி எம் பி ஐயா வைப்போல அழகா வாழ்த்தத் தெரியுதோ உங்களுக்கெல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      மிக்க நன்றி..

      Delete
  21. கேக் பார்க்க அழகாய் இருக்கு!
    றோல்ஸ் தோசை சுட்டுச் செய்யும் விதமும் நன்றாக இருக்கு.
    2 கிழமைக்கு முன்பு பிரியாவிடம் கேட்டேன். இதேபோலவே சொன்னா.

    நான் ஈஸி என்று வைற்ப்ரெட் வாங்கி அதன் ஓரங்களை வெட்டி லேசாக தண்ணீரில் அமுக்கி உடனே வெளியே எடுத்து அழுத்தினால் மேலதிகத் தண்ணீர் வெளியே வழிந்திடும். பின்னர் அதன் ஓரத்தில் விரும்பிய உள்ளடன் வைத்துச் சுருட்டிக் கரைத்த மாக்கலவையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ஸ் தூவிப் பொரிப்பேன். நற நறன்னு சூடாகச் சாப்பிட அதுவும் ருசிதான்!

    ஊசி இணைப்பும் அருமை!

    அத்தனையும் சுவைதான் அதிரா!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நான் இதனை முதலும் அனுப்பினேன். கூகுள் ஏதோ சதி செய்து மறைச்சிட்டுதோ..:(
      திருப்பி அனுப்பிறேன்!...

      வணக்கம் அதிரா!..
      முளைவிட்ட தானியத்தில் முப்பரிமாணச் சமையற் குறிப்புகள் அசத்தல் அதிரா!..:)

      எல்லாம் சத்தான உணவுகள்.
      பயறை இப்படி முளைக்க வைத்தீர்களா?
      நானும் செய்து பார்க்கிறேன். அதற்கு முன் போத்தலில் இப்படி ஓட்டை போடணுமே..:0
      அதுதான் பெரீய வேலை..!

      நான் இங்கு எம்மவர் கடையில் முளைவிட்ட தானியம் வாங்கிச் சமைப்பதுண்டு.
      அட...ரொம்ப அவிய விடக்கூடாது என்பதை இன்றுதான் அறிந்தேன்.
      உண்மைதான் சத்தெல்லாம் வீணாகிப் போயிடும்தான்.
      கொஞ்சம் பச்சை வாடை அடிக்கும் அதனால் அவிய விட்டுவிடுவேன். இனிக் கவனத்தில் வைத்துக்கொள்வேன் அதிரா!

      ப. முளைச் சுண்டல் பார்கவே ஆசையைத் தூண்டுகிறது! செய்ய வேண்டும்!

      Delete
    2. வாங்கோ இளமதி வாங்கோ...

      ஓ உங்கள் பிரெட்டில் செய்யும் முறை புதுசா இருக்கே எனக்கு.. அதைச் செய்து படமெடுத்து விரைவில் ரெசிப்பி போடலாமே....

      ஓம் நற நற மொறு மொறு எனத்தான் இருக்கும்.. பிரெட்டைப் பொரிச்சு ஸ்நக்ஸ் ஆக சாப்பிடலாம் என யூ ரியூப் ல பார்த்திருக்கிறேன்..

      Delete
    3. ///பயறை இப்படி முளைக்க வைத்தீர்களா?
      நானும் செய்து பார்க்கிறேன். அதற்கு முன் போத்தலில் இப்படி ஓட்டை போடணுமே..:0
      அதுதான் பெரீய வேலை..!///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது சின்ன வேலைதான் ஆரம்பியுங்கோ.. ஒரு லீட்டர் போத்தல் எனில் 100 கிராம் பயறு எடுங்கோ.. அப்போதான் முளைச்சு முட்டி எழும்பும்.. இங்கத்தைய குளிருக்கு எனக்கு பெரிதாக முளைச்சு எழும்ப மாட்டேனெண்டிட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      இது பச்சையாகத்தானே உண்பினம், அதனால அவிச்சால் கரைஞ்சிடும்... மெதுவா ஸ்லோ ஃபிரை அல்லது ஆவியில் அவிப்பதுதான் நல்லது.

      மிக்க நன்றி இளமதி அனைத்துக்கும்.

      Delete
  22. ஆஹா... இப்ப என் கண்ணில் பட்டுவிட்டதே இப்ப பதிவு. நான் முதலில் றோல்ஸ் ல் இருந்து வாறன். நானும் இப்படித்தான் தோசை மாதிரி செய்து சுட்டு பின் றோல்ஸ் செய்வேன். சாதாரண மா தான் பாவிப்பேன். மஞ்சள் தூள் கொஞ்சமா போடுவேன். எனக்கு ரெடிமேட் றோல்ஸ் பேப்பர் பிடிப்பதே இல்லை. இப்படி செய்தால் நல்ல டேஸ்ட்..

    நான் சும்மாவே பயரை ஊறவைத்து முளைகட்டி பயன்படுத்துவேன். அப்படியும் நல்லா வருது முளைகட்டி. நீங்கள் வித்தியாசமா முயற்சித்திருக்கிறீங்க. ஹாட் பாக் எனக்கு இன்னமும் பிடிபடல. இதில சாலட் செய்யலாம். வெங்காயம்,குடமிளாய்,ஒலிவ் எண்ணெய் ,உப்பு,பெப்பர் போட்டு சாப்பிட நல்லாயிருக்கும். மாங்காய் கிடைத்தால் துருவி போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்.
    உந்த கேக் வேண்டவே வேண்டாம் உங்க்ட டேட்ஸ் கேக் தாங்க.
    உண்மையான தத்துவம் எல்லாரையும் எல்லா நேரத்திலயும் திருப்தி படுத்தமுடியாது. நல்ல தத்துவம்.
    படங்கள் எல்லாம் அழகா எடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ... அதேதான் எனக்கும் ரெடிமேட் பேப்பர் பிடிப்பதில்லை, அது ஷைனீஸ் ரோல்ஸ் ரேஸ்ட்டாகிடும், இதுதான் எங்கள் ஊர் ரேஸ்ட் க்கு வரும்.

      //மாங்காய் கிடைத்தால் துருவி போட்டால் இன்னும் நல்லாயிருக்கும்//
      ஹா ஹா ஹா மாங்காய் போட்டால் எல்லாமே சுவைதான், எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

      //உந்த கேக் வேண்டவே வேண்டாம் உங்க்ட டேட்ஸ் கேக் தாங்க.//
      ஹா ஹா ஹா முட்டை இருப்பதாலோ?:)..

      மிக்க நன்றி அம்முலு இம்முறை ரைமுக்கு ரெயினில ஏறிட்டீங்க:)..

      Delete
  23. ஆனாலும் உங்க கேக் பார்க்க அழகாயிருக்கு.

    சைவ ரோல்ஸ்,சைவ கேக் செய்யத்தெரியும். தேவையெனில் கேக்கிறோம். செய்து பார்த்து சாப்பிட்டு ஒன்னுமே ஆகலை ந்னால் செக் வரும்....

    ReplyDelete
    Replies
    1. ///தேவையெனில் கேக்கிறோம். செய்து பார்த்து சாப்பிட்டு ஒன்னுமே ஆகலை ந்னால் செக் வரும்....//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது இப்பூடி எந்த ரெஸ்டோரண்ட் டில நடக்குதூஊஊஊஊஊ:)).. சாப்பிட்டபின் மாவாட்டத்தான் விடுவினமாக்கும்:)).. முதல்ல செக்:) பின்புதான் ரெசிப்பி:).. ம்ஹூம்ம் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊ:).. ஹா ஹா ஹா..

      Delete
  24. ஊசிக் குறிப்பு பார்த்தேன் Gardenல freeயாருங்க கிடைக்கற வெஜிடபிள்ஸ்க்கு காசு அனுப்பணுமாமே. சரின்னு, 25 சைவ ரோல்ஸுக்கு ஒரு பென்னி செக் மூலமா அனுப்பலாம்னா அனுப்பற செலவு ஒரு பவுண்டுக்கும் மேல ஆகிடுமாமே. என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. ///Gardenல freeயாருங்க கிடைக்கற வெஜிடபிள்ஸ்க்கு காசு அனுப்பணுமாமே.///

      என்னாதூஊஊஊஊஊஊஊ ஃபிரீயாக் கிடைக்குதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது வாய்தடுமாறி:) போனதடவை மட்டும் ஃபிறீயாக் கிடைச்சுதெனச் சொல்லிட்டேன்ன்:)) மற்றும்படி வேர்வை ஜிந்தி:)) அதிராவின் நேரம் முழுக்க கார்டினில் போட்டு விளைய வைப்பதாக்கும்:).. இம்முறை வெள்ளெனவே ஸ்ராட் பண்ணி நிறையச் செய்யோணும் என இருக்கிறேன்ன்.. மழை விட்டுத்தந்தால் கர்ர்ர்:)).

      ///25 சைவ ரோல்ஸுக்கு ஒரு பென்னி///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உந்தக் காசை எங்கட டெய்ஷி கூட திரும்பிப் பார்க்க மாட்டாவே:)).. ஒரு ரோல் வன் பவுண்டு விக்குது இங்கு நெல்லைத்தமிழன்.. அதுவும் என் ரோலை இரண்டாக்கினால்தான் கடை ரோல்ஸ் வரும்:)..

      அதனால அனுப்புக்கூலியும் சேர்த்து ஒரு ரோல் க்கு 2.50 பவுண்டுகள் .. என் செக்கரெட்டரிக்கு:) அனுப்பி வைக்கவும்:)).. அவ தன் ஜொந்தக் கையெழுத்திட்டு உங்களுக்கு பார்சல் அனுப்பி வைப்பா:))..

      ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  25. பாட்டு உங்க பேவரிட்டோ?? அது சரி 3 வகை ரோல்ஸ் என்றிருக்கு. மிச்சம் எங்கே...

    //தண்ணீர் பனுக்கி திரும்பவும் அப்படியே வச்சேன்// பனுக்கி இது எந்த ஊர் சொல்.. எங்க ஊர்ல கேள்விப்படலையே. ஒருவேளை தெளித்து என்றதை அப்படி எழுத்தினீங்களோ..

    ReplyDelete
    Replies
    1. ///பாட்டு உங்க பேவரிட்டோ?? ///

      அப்படி எண்டில்லை... ஆனா எங்களுக்குள் கொஞ்சம் பேமஸ் இப்பாடல்..:) ஏனெனில் ஏதும் பிரச்சனை வந்திட்டால்ல்.. கூ இஸ் த பிளாக் ஸீப் எனப் பாடிப் பகிடி பண்ணுவோம்ம்:)..

      //அது சரி 3 வகை ரோல்ஸ் என்றிருக்கு. மிச்சம் எங்கே...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி எல்லாமோ டவுட்டூ வரும்:)).. முன் பகுதியின் வாலை எடுத்து ரோல்ஸ் க்கு ஒட்டிப்போட்டு.. மிகுதி எங்கே எண்டால்ல்ல்.. மீ எங்கின போவேன்ன்ன்:).. அது பயறில் மூன்று வகை பிளஸ் ரோல்ஸ்ஸ்ஸ்:)) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆஆஆ:)..

      ///பனுக்கி இது எந்த ஊர் சொல்.. எங்க ஊர்ல கேள்விப்படலையே. ஒருவேளை தெளித்து என்றதை அப்படி எழுத்தினீங்களோ..///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஊரில அம்மம்மாக்கள் அப்படித்தானே பேசுவினம்.. கொஞ்சம் தண்ணி பனுக்கி விடு என்பினம்.. தெளித்தல்தான், ஆனா தெளிப்பது நிறைய இடத்துக்கு.. பனுக்குவது கொஞ்சத்துக்கு... எனக்கு ஆச்சரியமா இருக்கு உங்களுக்கு தெரியாதது... இஅளமதிக்கு தெரிஞ்சிருக்கலாம்... நீங்க இந்த “பனுக்கி” படிப்பிச்ச நேரம் கிளாஸ் கட் அடிச்சிட்டு மூவிக்குப் போயிருக்கிறீங்க அதுதான் உங்களுக்குப் புரியேல்லை:)).. ஹா ஹா ஹா..

      என் கணவரிடம் நான் ஏதும் ஏடாகூடமாக் கேள்வி கேட்டால்ல்.. ஹையோ... அன்று மட்டும் நான் கிளாஸ்க்குப் போகவில்லை:) அதனால அது எனக்குத் தெரியாது எனச் சொல்லுவார் ஹா ஹா ஹா:))..

      Delete
  26. சமையல் குறிப்புகளுடன் இன்று அதிராவின் பக்கம் அதிர்கிறது! எல்லாமே அமர்க்களமாக இருக்கிறது!

    ஊறிய பயிரை வடிகட்டும் பாத்திரத்தில் [சல்லடை மாதிரி துளைகள் உள்ள பாத்திரத்தில்] வைத்து ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலே முளை கட்டி விடும். ஹாட் பாக்ஸ் உள்ளே வைத்திருந்தாலும் முளைகட்டி விடும். சென்னை போன்ற இடங்களில் முளைகட்டும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் கிடைக்கின்றது. இரண்டடுக்கு, மூன்றடுக்கு இருக்கும். கீழுள்ள அடுக்கில் தண்ணீர் ஊற்றி மேலேயுள்ள அடுக்குகளில் ஊறிய தான்யங்களைப்போட்டு மூடி வைத்தால் பெரிது பெரிதாக முளை கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ..
      ///இன்று அதிராவின் பக்கம் அதிர்கிறது! எல்லாமே அமர்க்களமாக இருக்கிறது!//

      ஹா ஹா ஹா மிக்க நன்றி..

      //வைத்து ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலே முளை கட்டி விடும்//
      ஃபிறிஜ் இல் வைப்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. இங்கு கிச்சின் குளிரும்.. நான் நினைப்பேன் குளிர்வதாலதான் முளைப்பது குறைவாயிருக்குதென..

      //சென்னை போன்ற இடங்களில் முளைகட்டும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் கிடைக்கின்றது//

      ஓன் லைனில் பல வகைகள் கிடைக்குது மனோ அக்கா, மேலே கீதாவுக்கு லிங் குடுத்திருக்கிறேன், ஆனா எனக்கு இப்படி வித்தியாசமானதை ட்றை பண்ண விருப்பம்...

      மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  27. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் மீயும் லாண்டட்ட்ட்ட்:)).. ஹையோ இப்போ கொஞ்ச நாளா தமிழ் புளொக்ஸ் பலதை ஓபின் பண்ணவே முடியுதில்லை சில நேரத்தில, கொமெண்ட்ஸ் போட்டால்.. 4,5 தரம் இடி இடியெண்டு இடிச்சால்தான் எடுக்குது.. கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் ஆராவது கூகிள் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதி இதுபற்றி முறையிடக்கூடாதூஊஊ?:)..

    ஊசிக்குறிப்பு:
    18 வயதிற்கு மேற்பட்டோர்தான் கடிதம் எழுத உரிமை உண்டு.. அதிராவுக்கு இப்போதானே சுவீட் 16:) அதனால மீ எழுத முடியாது!!!:)..

    ReplyDelete
    Replies
    1. அதிரா உங்களுக்கு மகுடம் கிடைச்சிருக்கூஊஊஊஊஊஊ வாழ்த்துக்கள்... ஹையோ ஓடிப்போய் தேம்ஸ்ல குடிங்கோ சே..சே.. குதிங்கோ:)) ஹா ஹா ஹா:))..

      Delete
  28. பயறு நூடிஸ் அழகாய் இருக்கு )))) கேக் வேண்டாம் ரோல்ஸ் கொஞ்சம் அதிகமாகவே அனுப்பிவையுங்கோ விரைவில்)))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ.. ஓ நீங்க இப்போ சைவம் எல்லோ.. அப்போ இந்த ரோல்ஸ் உம் சாப்பிடக்கூடாதே:)).. ரோல்ஸ் ஐ விரும்பாத நம்மவர்கள் இருக்கவே முடியாதே... உங்களுக்குத்தான் லா ஷபேல் இருக்கே விதம் விதமா வாங்கிச் சாப்பிட.. ஆனா அங்கு மிக மெல்லிய ரோல்ஸ் தானே செய்கிறார்கள் கர்:))

      Delete
  29. ஊசிக்குறிப்பு வழமை போல சூப்பர் .

    ReplyDelete
  30. செக் புத்தகம் முடிந்துவிட்டது அதனால் இப்போது பணம் அனுப்ப முடியாது இந்தியா விசா வந்த பின் அனுப்பிவைக்கின்றேன்)))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்பூடியெனில் இண்டநெட் ஸ்ரான்ஃபெர் பண்ணிடுங்கோ...:)))
      மிக்க நன்றி நேசன்..

      Delete
  31. நேற்று நான் கருத்துரை இடவில்லையோ....

    புகைப்படங்கள் ஆசையை தூண்டுகின்றன...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      கர்:) வரவர உங்களுக்கு மறதி அதிகம்:).. நேற்று வோட் மட்டும் பார்த்தேன்.. ஊரில் இல்லையாக்கும் என நினைச்சேன்ன்ன்..

      மிக்க நன்றி.

      Delete
    2. பத்து தினங்கள் வெளியூர் ஆகவே கருத்துரை இயன்ற அளவு.

      Delete
  32. பல்சுவைப் பகுதியாக உள்ளது. அருமை.

    ReplyDelete
  33. வணக்கம் அதிரா...

    முளைக் கட்டிய பச்சை பயறு...ரொம்ப பிடிக்கும்...

    ஊற வச்சி ...வெறும் டப்பாவில் போட்டு மூடினாலே எனக்கு முளை வந்துடும்..துணில கட்ற வேலை எல்லாம் இல்ல..

    அது ஊறி முளை வரத்துக்குள்ள வே நான் போக வர எடுத்து சாப்பிடுவேன்..அதுல இருக்குற சிறிய இனிப்பு சுவை ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ..

      ஓ அது வெப்பநிலை சரியாக இருப்பின் உடனே முளைத்திடும்போல...

      //அது ஊறி முளை வரத்துக்குள்ள வே நான் போக வர எடுத்து சாப்பிடுவேன்..அதுல இருக்குற சிறிய இனிப்பு சுவை ரொம்ப பிடிக்கும்...//

      ஓ அப்படிச் சாப்பிடுவதுதான் நல்லதாம்.. எனக்கு அதன் பச்சை மணம் பெரிசா பிடிக்காது வயிற்ரைப் பிரட்டும்:)..

      Delete
  34. முளைக்கட்டியதை அவிக்கக்கூடாது, ...அப்படியா ..சில நேரம் சுண்டல் போல் குக்கர்ல போட்டு வேக விடுவேன்... இனி பாத்து செய்யணும்...

    salad, ரைஸ், நூட்லஸ் எல்லாம் சூப்பர்....

    கேக் ..வாவ்...

    ReplyDelete
    Replies
    1. இல்ல இல்ல குக்கரில் எல்லாம் போடாதீங்க.. உங்களுக்கு பச்சையே விருப்பம் எனில்.. கொஞ்சம் ஆவியில்.. அரிசி அவியும்போதுகூட மேலே வச்சு எடுக்கலாம்..

      Delete
  35. சமையல் குறிப்பு அருமை ஊசிக்குறிப்பும் தான்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமட் வாங்கோ..

      மிக்க நன்றி மிக்க நன்றி.. உங்கள் தொடர் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது..

      ஊசிக்குறிப்பு:
      சொந்தமா.. புளொக் ஈசியா திறக்கலாம் தானே, அதனால யாருக்கும் தேவைப்படாது..:) புரிஞ்சிடுச்சா?:) ஹா ஹா ஹா:))

      Delete
  36. ரோலஸ் அருமையா இருக்கு...

    செல்ஃப் ரைசிங் ஃபிளவருக்கு, 2 மேசைக்கரண்டி ...எவ்வளவு மாவுக்கு இந்த ரவை அளவு...

    இந்த மாதரி செஞ்சது இல்ல...நல்லா இருக்கு ...செஞ்சு பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ரவ்வை யாரும் போட்டதாக எனக்கு தெரியாது அனு, ஆனா எங்கட கடியில் வாங்கும் ரோல்ஸ் சாப்பிடும்போது வெறும் தோசை மா மாதிரி இல்லாமல் கரகர என ஒரு சுவையா இருக்கும், அதனாலேயே நான் நினைக்கிறேன்.. கோர் ஃபிளவர், ரவ்வை, பொட்டாட்டோ ஃபிளவர்.. இப்படி ஏதோ ஒரு சீக்ரெட் இன்கிறீடியன்ஸ் மிக்ஸ் பண்ணுகிறார்கள் என..

      அதை மனதில் கொண்டே 250 கிராம் மாவுக்கு 2 மேசைக்கரண்டி போட்டேன்..

      சூப்பரா இருக்கும் செய்து பாருங்கோ.. முக்கியமா தோசை மா தண்ணிபோல இருக்கோணும்.. அடுத்து நன்கு வேகவிடக் கூடாது...

      மிக்க நன்றி அனு..

      Delete
  37. எவ்வொலோ views ...மீ தலை சுத்திங்....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மீ மயங்கிட்டேன் பட் வீட்டிலதான்:)).. அஞ்சுதான் வோட் லயாம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:)..

      Delete

  38. வணக்கம் !

    கட்டாருக்கு ஒரு பார்சல் றோல் ...
    .....

    தமனாவுக்காக ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ...

      என்னாதூஊஊஊ தமனாவுக்கு லஞ்சம் கேக்கிறீங்களோ:)).. ஹலோ ஆரங்கே உடனே வாங்கோ லஞ்சம் கேட்கிறார் பபூளிக்கில ஒருவர்:)) உடனே பிடிச்சு....... ................. .

      .......
      முதலமைச்சர் ஆக்குங்கோ எனச் சொல்ல வந்தேன்ன்ன் ஹா ஹா ஹா:).. மிக்க நன்றி சீராளன்.. என்ன றோல் வேணுமெனச் சொல்லலியே?:).. சைவம் .. பறப்பன.. நடப்பன.. ஓடுவன.. ஊருவன... எது வேணும்?:) ஹா ஹா ஹா:))..

      Delete
    2. கட்டாருக்கு ஒரு பார்சல் றோல் . - சீராளன் நீங்க கத்தார்லயா இருக்கீங்க (Qatar)?

      Delete
    3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இலங்கையில் க்கட்டார்ர் எனத்தான் பேசுவோம்.. அதை அப்பூடியே எழுதியிருக்கிறார் அவர்:)..

      Delete
  39. வணக்கம் பூஸ் !

    அடிக்கடி வராமைக்கு விசாரணை தொடங்கும் முன்னே ஐஸ் வச்சிட்டுக் கெளம்புவோம்.........................................

    களைத்திங்கு வருவோரை நிழலால் தாங்கிக்
    ...களைப்பெல்லாம் போக்கின்ற மரங்கள் போலே
    முளைத்திங்கு பயறெல்லாம் உடலுக் கேற்ற
    ...முழுப்போச ணையெல்லாம் ! தருமாம் நாமும்
    விளைத்திங்கு பிறருக்கும் கொடுப்போம் தேக
    ...வினைபோக்கும் வழிசொல்லித் தடுப்போம் ! வையம்
    தளைத்திங்கு மகிழத்தான் .. அதிரா தன்னைத்
    ...தருவித்தான் இறையோனும் வாழ்த்து வோமே !

    அழகான எண்ணங்கள் அனிச்சம்பூக் கந்தம்
    அதையிட்டால் வளரும்தான் அன்போடு சொந்தம்
    பழசான தென்றில்லை பாட்டுள்ள சந்தம்
    படித்தோர்க்குத் தனித்தாலும் பனுவல்தான் தந்தம் !

    அத்தனையும் அருமைதான் வழக்கம் போல இருந்தும் ஊசிக் குறிப்பு ஊசி இணைப்புகள் வாழ்வின் அர்த்தம் சொல்லும் வரிகள் நன்று !

    ( றோல் பார்சல் வந்த பிறகுதான் தெரியும் மீண்டும் வரலாமா இல்லையா என்பது )

    ReplyDelete
    Replies
    1. Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை. பாராட்டுகிறேன்.

      (போக்குகின்ற என வரணும். அனிச்சம்பூ சொல்லாடல் சரியில்லைனு நினைக்கறேன். அனிச்சம்பூவின் இயல்பு, 'மோப்பக் குழையும் அனிச்சம்'-வாசனை நுகர்ந்தால் வாடிவிடும்.

      Delete
    2. என்னாதூஊஊஊஊஊஊஊ:) ரோஜா, மல்லிகை, செவ்வந்தி என அழகழகா மலர்கள் இருக்க:) .. அனிச்சம்பூவுக்கு ஒப்பிட்டு விட்டாரோ அதிராவின் எண்ண்ணங்களை?:) எனக்கிது தெரியாமல் போச்சே:)).. நில்லுங்கோ அனுப்பிய ரோல் பார்சலை பதி வழியிலயே பிளேனைக் கை காட்டி மறிச்சு இறகி எடுத்திடுறேன்ன்ன்:) பூஸோ கொக்கோ?:))

      Delete
    3. Just like that சரளமா எழுதறீங்க சீராளன். என்ன திறமை. பாராட்டுகிறேன்.

      மிக்க நன்றி !

      (போக்குகின்ற என வரணும்.// கண்டிப்பாக வந்திருக்கணும் ஆனால் கு விடுபட்டுவிட்டது மன்னிக்கவும் எப்படித்தான் கவனமா இருந்தாலும் சில பிழைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை எனக்கு

      // அனிச்சம்பூ சொல்லாடல் சரியில்லைனு நினைக்கறேன். அனிச்சம்பூவின் இயல்பு, 'மோப்பக் குழையும் அனிச்சம்'-வாசனை நுகர்ந்தால் வாடிவிடும்.//

      தங்கள் சந்தேகம் நியாயமானதே அதைத் தெரிந்துதான் எழுதினேன் நுகர்ந்தால் வாடும் அனிச்சம் போலத்தான் அழகிய எண்ணங்களும் சந்தேகம் கொண்டால் எண்ணங்கள் அழகாவதில்லை அதே எண்ணங்கள் போலத்தான் உறவுகளும் அழகான எண்ணங்களால் தான் உறவுகள் வளரும் வாசனை உண்டா இல்லையா என்று அனிச்சம் பூவை நுகர்ந்தால் அது வாடுவது போலத்தான் உறவுகளின் உண்மைத் தன்மையைப் சந்தேகித்தால் உறவுகள் வளராது ...............

      ஆக அனிச்சம் பூவின் வாசனைக்கு ஒப்பாக அழகிய எண்ணங்களைச் சொன்னேன் அதே அழகான எண்ணங்களால் தான் உறவுகளை வளர்க்க முடியும் என்பதையும் காட்டினேன் ....

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் மற்றும் அதிரா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க நலம்

      Delete
    4. athiraமியாவ்Friday, January 12, 2018 10:00:00 am
      என்னாதூஊஊஊஊஊஊஊ:) ரோஜா, மல்லிகை, செவ்வந்தி என அழகழகா மலர்கள் இருக்க:) .. அனிச்சம்பூவுக்கு ஒப்பிட்டு விட்டாரோ அதிராவின் எண்ண்ணங்களை?:) எனக்கிது தெரியாமல் போச்சே:)).. நில்லுங்கோ அனுப்பிய ரோல் பார்சலை பதி வழியிலயே பிளேனைக் கை காட்டி மறிச்சு இறகி எடுத்திடுறேன்ன்ன்:) பூஸோ கொக்கோ?:))

      ஹா ஹா ஹா

      எல்லாம் நன்மைக்கே .................

      Delete
    5. சீராளன். விளக்கம் அருமை. என் புரிதலிதான் தவறு.

      பாருங்க, 'அனிச்சம்' என்ற ஒரு வார்த்தைக்கே எப்படிச் சிந்தித்து கவிதை எழுதவேண்டியிருக்கு. அந்தச் சிந்தனைக்கே உங்களுக்குப் பாராட்டுகள் சீராளன். இன்னும் வளர்க.

      'உண்மைத் தன்மையைச் சந்தேகித்தால்' - ஆமாம் சந்தேகம் என்பது கொடிய தீராத வியாதி. அது எல்லா நல்லனவைகளையும் அழிக்கும் தன்மை உடைத்து.

      நெடு நாட்கள் கழித்து இங்கு வந்தேன். அதனால்தான் தாமதம்.

      இன்று பொங்கல் - இரவுதான் நீங்கள் செய்யவேணுமோ சீராளன்? வாழ்த்துகள்.

      Delete
  40. வணக்கம்.. ஆயுபோவன்:)...
    விசாரணையை தொடங்கு முன் திரும்பி வந்திட்டீங்க அழகிய கவிதையோடு.... அதிலயும் அதிராவை இறைவன் இதுக்காகவே தருவிச்சார் என வேற சொல்லிட்டீங்களா:) பிரீஸ் ஆகிட்டேன்.... ஆனா இது ஒருவருக்குப் பொறுக்காதே:) விடிய வருவார் பாருங்கோ இதுக்கு வெடி வைக்க ஹா ஹா ஹா உங்கள் கவிதையின் அபிமான விமர்சகர்:)....

    புதுச்சொல் பனுவல்... புரியல்ல..

    சீராளன் உங்களுக்கு தெரியுமோ பனுக்குதல்... எனும் சொல்????

    ஹையோ றோல் பார்சல் வருதூஊ வருதூஊ... ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.. ஆயுபோவன்:)... -இதுல அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை மட்டும் விட்டுட்டீங்க. சொல்லியிருந்தால், இலங்கையின் மூன்று இனத்தின் மொழியிலும் வாழ்த்து சொன்னமாதிரி ஆயிருக்கும்.

      Delete
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதிராவை எப்பூடியாவது மாட்டி விடுறதிலேயே இருக்கிறார்:)) உங்களுக்கு ஆயுபோவன் புரியாதென நினைச்சுட்டனே அவ்வ்வ்வ்வ்:))..

      இல்ல அப்படிச் சொன்னால் மதத்தை வைத்து வணக்கம் சொன்னதாகும்.. நான் மொழியை மட்டும் வச்சே சொன்னேன்.. அங்கிருக்கும் மக்கள் இரு மொழிகள்தானே தாய் மொழி... தமிழ், சிங்களம்.

      Delete
    3. //புதுச்சொல் பனுவல்... புரியல்ல..//

      பனுவல் என்றால் நூல் அல்லது புத்தகம்


      //சீராளன் உங்களுக்கு தெரியுமோ பனுக்குதல்... எனும் சொல்????

      தெளித்தலுக்கும் பனுக்குதல் என்று சொல்வாங்க ( இலை காயும் முன் தண்ணீர் பனுக்கு ) வேறு பொருள் தெரியலீங்க ....


      //ஹையோ றோல் பார்சல் வருதூஊ வருதூஊ... ஹா ஹா ஹா மிக்க நன்றி சீராளன்.//

      நன்றி நன்றி நமக்கு எப்போதும் வெஜ் தான் பிடிக்கும் அதனால அதையே அனுப்புங்க ...............

      Delete
    4. ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் ! - அதிரா... இப்படி ஆரம்பித்துதான் ஜனாதிபதி மைத்ரி, ஐ.நாவில் பேச ஆரம்பித்தார் என்று படித்திருக்கிறேன். (இதுபோல்தான் இலங்கையின் பல நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர்).

      பனுவலின் அர்த்தம் எப்போதும் நூல்தான். (இலக்கியத்தில், கவிதைகளில் மட்டும் உபயோகப்படுத்துவார்கள்)

      Delete
  41. ஹையோ, நான் சாவகாசமா வரதுக்குள்ளே 100 தாண்டிடுச்சு போல! :))) இதை அதாவது இந்த ரோல்ஸ் நான் ப்ரெட்டில் காய்கறிக்கலவை வைச்சுச் செய்திருக்கேன். இப்போவும் சில சமயங்கள் செய்வேன். பயறு முளைகட்டியது அடிக்கடி சாப்பிடுவோம். முளைகட்டிய பயறைஉப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கும் வெந்நீரில் பத்து நிமிஷம் வைச்சு வடிகட்டிவிட்டு, காரட், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்துமல்லி நறுக்கிச் சேர்த்து சாலட் மாதிரியும் சாப்பிடுவோம். பச்சையாகவே முளை கட்டிய பயறைத் தயிரில் போட்டும் சாப்பிடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்கா வாங்கோ... நீங்க ஓடி வருவதற்குள் ரெயின் புறப்பட்டு விட்டதே:)).. நல்ல வேளை கார்ட் பெட்டியில வந்து ஏறிட்டீங்க:))

      மிக்க நன்றிகள்.

      Delete
  42. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    ReplyDelete
    Replies
    1. சீராளன்... உங்களுக்கு நேரம் கிட்டட்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். எங்கு எழுதும்போதும் அங்கு ஸ்பெஷலாக எழுதுங்கள். ஏனென்றால் உங்களிடமிருந்து வரும் கவிதையைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

      ஒரு சந்தேகம் சீராளன் (படிக்க நேர்ந்தால்). பங்கஜம்-தாமரை வட மொழியில். இதை பங்கசம் என்று சொல்லாமல் இலக்கியம் பங்கயம் என்றே சொல்கிறது. அதுபோல், கிரிஜா என்ற சொல் பெயர்ச்சொல். இதை கிரிசா என்று சொல்லாமல், கிரியா (கிரியாம்பாள்) என்றுதானே வரவேண்டும்.

      Delete
    2. வாழ்த்துக்கு மிக்க நன்றி சீராளன்.

      நெலைத்தமிழன்.. அது கிரிசாம்பாள் என்பது சும்மா பேச்சு வழக்காக வந்திருக்கலாம்.. ஏனெனில் அது செவிவழிக் கதைதானே....

      Delete
  43. வணக்கம் அதிரா!

    பண்பமுது பொங்கட்டும்! பாசத்தேன் பொங்கட்டும்!
    
பண்ணமுது பொங்கட்டும் பாடு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. Replies
    1. வாங்கோ வியபதி ஐயா.. உங்களைக் கன நாளாகக் காணவில்லையே எனத் தேடினோம்ம்.... வருகை தந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  45. நான் முளைகட்ட‌ வைச்சால் பச்சையாவே சாப்பிட்டு முடிச்சுருவன். :‍)

    ரோல்ஸ் கலக்கலா இருக்கு அதிரா. அடுத்த‌ தரம் செய்யேக்க‌ எனக்கு ஒரு பாசல் ப்ளீஸ்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.