நல்வரவு_()_


Friday, 21 December 2018


💑👫ஸ்கொட்லாந்தில் முதல் நாள்:)👫💑

ஸ்கொட்லாந்தில் வந்து காலை எடுத்து வைக்கிறேன் நிலத்திலே.... சில்லென ஒரு குளிர்... பின்னேரம் ஒரு 3 மணி இருக்கும்.. சுட்டெரிக்கும் வெயில்... அப்படியே எயார்போர்ட்டிலிருந்து வீடு நோக்கிப் பயணம்.. பச்சைப் பசும் புல் வெளிகளும்.. அங்காங்கு செம்மறி ஆட்டுப் பிள்ளைகள்.. கொழுத்த குண்டு மாட்டுக் கண்டுகள், அழகிய மலைகள்.. இடையே ஆறு. இப்படி ரிவியில் பார்த்ததை நேரில் பார்த்தபோது ஏதோ ஒரு பரவசம்... விதம் விதமாக கண்ணில் இடையிடையே பட்டது.. மனதை மிக உற்சாகமாக்கி விட்டது...


வீட்டுக்குப் போன களைப்பில் சாப்பிட்டு விட்டு, நித்திரையாகி விட்டோம்,  திடீரென கண்ணில ஏதோ சுடுவதைப்போல இருந்துது, திடுக்கிட்டு கண் முழிச்சேன், ஜன்னல் கேர்ட்டின் சரியாக மூடுப்படவில்லை, அந்த இடைவெளிக்குள்ளாலே சூரியன் என் கண்ணை கூசப்பண்ணியது..

படாரென துடிச்சுப் பதைச்சு எழுந்தேன், அய்யய்யோ காலை விடிஞ்சு பத்து மணி வெயில்போல இருக்கே[இலங்கையில் அப்படித்தானே],  நேரமும் புரியுதில்ல, எங்கு இருக்கிறேன் எனவும் தெரியவில்லை, இது இலங்கையா இல்ல ஸ்கொட்லாண்ட் வந்து விட்டோமா.. என பதைபதைத்து கொஞ்சம் நிதானத்துக்கு வந்து, நாளைக்கு வேர்க் இருக்கு என ஹஸ்.. சொன்னாரே, எலாம் வைக்க மறந்து விட்டோமே என அவசரமாக கணவரைத் தட்டி எழுப்பினேன், அவர் எழும்பி நேரத்தைப் பார்த்துப்போட்டுச் சொன்னார்.. இப்போ நேரம்- இரவு பத்து மணியாகிறது .. பயந்து விட்டீங்களோ.. இப்பவே வெளிக்கிடுங்கோ வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரலாம் என,  “என்ன? பத்து மணிக்கு இப்படி வெய்யிலா?.. நீங்க பொய் சொல்றீங்க நான் நம்ப மாட்டேன், இது விடிஞ்சுபோச்சு”.. எனச் சொன்ன, அந்த முதல் நாள் இரவு வெயிலை, வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

இங்கு கோடை காலத்தில் இரவு 11 வரை வெயில் இருக்கும்... அதேபோல காலை 3.30-4 மணிக்கே சூரியனார் பளாச் என மின்னுவார்ர்... அதனால இவ்வருடம் சில படங்கள் எடுத்தேன்.. இரவுப் படங்கள்.. ஏதோ ஓடி ஓடி நிறைய எடுத்ததைப்போல இருந்துது, ஆனா இப்போ பார்க்க கொஞ்சம் தான்:).. ஆனா படத்தில வெளிச்சம் குறைவாகக் காட்டுது நேரில் பார்பதை விட..

இந்தப் படம் இரண்டும் ஒரே நேரத்திலேயே எடுத்தேன் நேரம் இரவு 10.30. நிலவு இடது பக்கமும் சூரியன் வலது பக்கத்தில் மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.. ஆனா நிலவு தெரியும் திசை தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...

இது நேரம் சரியாக சொல்லத் தெரியவில்லை, அநேகமாக 10-11 மணிக்கு இடைப்பட்ட நேரம்தான்..

இதில் பாருங்கோ காரில் நேரம் தெரிகிறது, நைட் 9.46 காட்டுது, வெளியே போனபோது ரோட்டில் எடுத்தேன்.. ரோட் லைட் கூடப் பத்தவில்லைப்பாருங்கோ.. அவ்ளோ வெளிச்சம்..

😊😊===============😊😊INTERVAL😊😊==============😊😊
ஆவ்வ்வ்வ்வ்வ் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு:).. இந்தப் பூங்கொத்தை எப்பூடி நெல்லைத்தமிழனிடம் குடுப்பேன், நேக்கு ஒரே ஷை.. ஷையா வருதே ஏனெண்டால்ல்.. புளொக்குகளிலெல்லாம்.. என்னைத் “தமனா” எனச் சொல்லாமல்..  “கொடி இடையாள்”..  “இடையிலாள்”, எண்டெல்லோ சொல்றாராம்.., அதில அவர் இப்போ நெருங்கிட்டாராமே.. ஐ மீன் சென்னைக்கே வந்திட்டாராமே... சீ..... நேக்கு வெய்க்கமா வருது:))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்ன ஸ்ரீராம்.. எதுக்கு இவ்ளோ வெய்க்கப் படுறீங்க?:) நிமிர்ந்து பாருங்கோ:). இந்தாங்கோ பூங்கொத்து... புளொக்குகளிலெல்லாம் என்னை அனுஸ்.. அனுஸ்ஸ் எனச் செல்லமாக அழைக்கிறீங்களாமே.. அப்போ வராத வெய்க்கம் இப்போ எப்பூடி.. வெய்க்கப் படாதீங்கோ ஸ்ரீராம்:))
========================😛😛😛😛=======================

 இந்தப் படங்கள் இரவு பகல் கலந்திருக்குது.. முகில்களைப் பாருங்கோ ஏதும் கதை சொல்லுதோ உங்கள் காதில்:).. கப்பல் போவது இந்த விண்டரில். மலை மீது.. ஸ்னோ இருப்பது தெரியுதெல்லோ...

இது ஒரு மழைநேரம் போல இருக்கே... கண்ணழகிபோல இன்னொரு அழகி போகிறா எங்கள் ஆத்தில்:)..

இது நல்லா இருக்குதெல்லோ?:)

ஹா ஹா ஹா எங்கட குண்டுப்பிள்ளையாரை, குட்டி எலிப்பிள்ளை ஏத்திப் போகுதே.. என்னா தைரியம் :). 

ஹா ஹா ஹா அதானே?:)

ஊசி இணைப்பு:)

  ஊசிக்குறிப்பு
💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑💑

திருவாவடுதுறை முருகப் பெருமானே வள்ளிக்கு இம்முறை ஏமாத்தாமல் வைர மூக்குத்தி போடுவேன் என்னைக் காட்டிக் குடுத்திடாமல் காப்பாத்துங்கோ:)..
()()()()()()()()()()()()()()()()()

136 comments :

  1. [im]https://media.tenor.com/images/c9c2b9ff081fdfaa66798c849032e70a/tenor.gif[/im]

    ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா மேக்கப் போட்டு தலை வாரி வர லேட்டாயிடுச்சி :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. ஹா ஹா ஹா ஜெரி ரொம்ப அழகா, கண்ணாடி பார்க்காமலேயே தலை இழுக்குதே. ஆருடைய ட்ரெயினிங்கோ?:)..

      ஆஆஆஆஆ அஞ்சு நாம் கட்டிய கங்கணத்தை மறந்திடாதீங்க:).. மீ டெய்லி போஸ்ட் போடுவேன் கிரிஸ்மஸ் எனினும் குளிக்கும் நேரத்தில சோப் போடுவதைக் குறைச்சு ரைமை மிச்சப்படுத்தி என் புளொக்குக்கு வந்து கொமெண்ட்ஸ் போட்டிடுங்கோ:).. இல்லை எனில் கெட்ட கெட்ட கனவா வரும் ஜொள்ளிட்டேன்ன்:)..

      Delete
    2. சரியா 26 ஆம் தேதி இரவு நானும் ஆரம்பிப்பேன் :) ஹாஹீஹுரோ

      Delete
    3. ஹா ஹா ஹா நிறையப்பேர் புளொக்குகளுக்கு ஷட்டர் இழுத்து மூடிவிட்டு ஒடும் ஜத்தம்:) கேட்குதே அஞ்சு:).. என்னவா இருக்கும்?:)).. இம்முறை விட்டிடக்கூடாது 2019 ஆம் முடியும்போது 367.5 போஸ்ட் போட்டிடோணும்.. ஹா ஹா ஹா..

      கொம்பியூட்டரை விட்டு நகரவேகூடாது:)).. பூசோ கொக்கோ:)..
      [im] https://media.giphy.com/media/CPBYt44s14Zvq/giphy.gif[/im]

      Delete
  2. ஊசி இணைப்பு :) ROFL ஹாஹாஆ :)
    ஊசிகுறிப்பும் ஜூப்பர் :)
    ஹலோ ஜெனிலியா அப்படி சொல்ல சான்ஸே இல்லை :)
    அந்த ஒன்னொரு அழகி ஜூம் பண்ணினா மீனா இல்லை பா பா சுப்புக்குட்டியா ??

    ReplyDelete
    Replies
    1. அது ஐசூ என இருக்கே:) ஒருவேளை பிக்பொஸ் ஐஸாக இருக்குமோ:)) ஹா ஹா ஹா.

      Delete
  3. ஸ்கொட்லாண்டில் மாதிரி தான் லண்டனிலும் ஆனால் ஜெர்மனியிலும் வித்யாசம் வெயில் கர்ட்டன் வழியே வராதே வராதே :) ஏன்னா எக்ஸ்ட்டிரியர் ஷட்டர்ஸ் முழு வீட்டுக்கும் உண்டு உள்ளிருந்தே மூடலாம் .இங்கே லைட் டிராப்பிங் கர்ட்டன்ஸ் அதான் வெயில் எட்டி பார்க்குது :)

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அனைத்துக்கும் சட்டர் இருக்கே அஞ்சு, எங்கள் வீட்டிலும் ஜன்னல்களுக்கு சட்டர் இருக்கு, ஆனா ஹோல் தவிர றூம் சட்டர் எல்லாம் எப்பவும் மூடுவதில்லை, கேர்ட்டினை மட்டுமே மூடித் திறப்போம்.. ஆனா நான் எப்பவும் டபிள் கேட்டின் போட்டு விடுவேன், குளிருக்கும் நல்லது மற்றும்படி இறுக்கி மூடிவிட்டால் நல்ல கும்மிருட்டாகவே இருக்கும் எந்நேரமும்:).. எனக்கு ஓஓஓஓவென வெளிச்சமாக வீடு இருப்பது பிடிக்காது, எப்பவும் ஒரு மெல்லிய வெளிச்சமாக அல்லது இப்போ குளிர்காலத்தில் கேர்ட்டினை மூடிப்போட்டு லைட்டைப் போட்டு விடுவோம்..

      Delete
    2. யூகேவில் உள்ளே மூடுற ஷட்டர் இருக்கு ஆனா வெளிப்பக்கம் இது வரை பார்க்கல .ஸ்கொட்லான்ட் அட்வான்ஸ்ட் என்று நினைக்கிறேன்

      நீங்க சம்மரா வந்தது ..நான் கடும் ஸ்னோவ்ல் இறங்கினேன் :)

      Delete
    3. நீங்க சொல்வது ஜன்னலுக்கு வெளியே வெளிச்சுவரிலோ?.. அப்படி இங்கில்லை.. உள்ளே கண்ணாடிக்கும் கேர்ட்டினுக்கும் நடுவில் இருக்கும். ஓம் அஞ்சு .. என் கால் பதியக் ஸ்கொட்லாண்ட்:) கொடுத்து வச்ச நேரம் அழகிய சமர்:)) ஹா ஹா ஹா..

      Delete
  4. நானா படு பிசியா இருந்தாலும் இதை சொல்லியே ஆவேன்

    //தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...//
    சூரியன் அங்கிள் :) அங்கிள் எரிப்பார் இப்டிலாம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எழுதினா

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல், உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
      புதுவருட வாழ்த்துக்களும்.
      உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர் அனைவருக்கும்.
      எனக்கும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

      Delete
    2. ஏஞ்சல் மெரி கிறிஸ்துமஸ்!...மகிழ்வான புதுவருட வாழ்த்துகள்! ஷரனுக்கும்! அவர் எதிர்காலம் சிறப்பாக அமைந்திடும்...வாழ்த்துகள்! காட் ப்ளெஸ்!

      கீதா

      Delete
    3. ஹா ஹா ஹா அது எப்பூடி சூனியக்கிழவி: போலாச்சு:)..

      எல்லோரும் சொல்லீனம் மீயும் மீயும் சொல்லுகிறேன்ன்.. கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் அஞ்சு.. பிறகு அதிரா வாழ்த்துச் சொல்லவில்லை என கேக் அனுப்பாமல் விட்டிடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      Delete
    4. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கோமதி அக்கா

      Delete
    5. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதா

      Delete
    6. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மியாவ் ..கேக் கேக் கேக் :)
      மூணு கேக் குடுத்திட்டேன் சாப்பிட்டு சொல்லுங்க

      Delete
  5. ஆனா மியாவ் எனக்கென்னமோ சமீப வருஷங்களா வெதர் கிளைமேட் எல்லாம் மாறிட்டு வர உணர்வு மே பி க்ளோபல் வார்மிங் .#

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதான் அஞ்சு, ஆனா கண்டபடி எல்லோ மாறுது.. போனவருடம் பார்த்தீங்கதானே எங்களுக்கு ஸ்னோ ஸ்டோம் வந்ததை.. நம்பமுடியாத வெதராக இருக்கு இப்போ எல்லாம்.

      வழமையாக ஜனவரியின் பின்புதான் ஸ்னோ வரும்.. இம்முறை எங்களுக்கு பொனவீக்கே வந்திட்டுது ஆனா உடனேயே மழை கொட்டோ கொட்டெனக் கொட்டத்தொடங்கி இன்னும் முடிஞ்ச பாடில்லை..

      Delete
  6. ஸ்ரீராம் வீட்லயும் நெல்லைத்தமிழன் வீட்லயும் ஒரு ஒளி தெரியுது :) நீங்க ஏத்தி வச்ச விளக்கா இல்லை தீப்பந்தமா :) நாளைக்கு தெரியும்

    OK BYE FOR NOW meet you guys after Christmas :)

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்.. உங்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துகளை, *அதிரா*வுக்கு முன்னால தெரிவிச்சிக்கறேன். நன்றாக்க் கொண்டாடுங்கள்.

      Delete
    2. கிறிஸ்துமஸ் கொண்டாடிட்டு நிதானமா வாங்க ஏஞ்சல்! இனிய கிறிஸ்துமஸ் வாத்துகள்.

      Delete
    3. நிதானமா வாங்க ஏஞ்சல்! உங்க க்மேன்ட் பார்த்து சிரிச்சுட்டேன்...இங்க

      கீதா

      Delete
    4. //ஸ்ரீராம் வீட்லயும் நெல்லைத்தமிழன் வீட்லயும் ஒரு ஒளி தெரியுது :) நீங்க ஏத்தி வச்ச விளக்கா இல்லை தீப்பந்தமா :) நாளைக்கு தெரியும்//

      சே..சே.. அவர்கள் இருவரும் நல்லா தக்கினிக்கி தெரிஞ்சவர்கள்:)) அதனால இதை எல்லாம் நெய் விளக்குப் போல மாறித் தப்பிச்சிடுவினம்:))

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வருசப்பிறப்பும் அதுவுமா கலகத்தை உருவாக்கி விட்டிடுவா போல இருக்கே:)) ஹா ஹா ஹா .

      அஞ்சு நெல்லைத்தமிழன் கீழேதான் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்:) நான் மேலே 4 ஆவது கொமெண்ட்டிலேயே சொல்லி விட்டேன் என்பதனை மிகவும் சபையடக்கத்துடன் கூறி அமர்கிறேன்:)).. முட்டை போட்ட கேக் அவர் சாப்பிட மாட்டார்ர்:)).. அதனால முழுவதையும் எனக்கே அனுப்பி வைக்கவும்:))..

      மிக்க நன்றிகள்..

      Delete
    5. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      Delete
    6. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கீதா அக்கா .

      Delete
    7. மியாவ் நான் vegan கேக் தான் செய்ய்வேன் :) அவர் சாப்பிடுவாரே :)

      Delete
    8. @anju
      [im]https://media2.giphy.com/media/1JtHrGjTcfvuo/200w.webp?cid=3640f6095c1e92b94d7a6e45411aaa65[/im]

      Delete
    9. ரொம்ப முன்னால வாழ்த்து சொல்றதை விட கிறிஸ்துமஸ் நாளை நெருங்கி சொல்றதுதான் சரி... இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் ஏஞ்சல். அந்த வகைல நான் சொல்றதுதான் கரெக்ட்டு!

      Delete
    10. நான் சொல்ல வந்தேன் ஏஞ்சல் நீங்க எக்லெஸ் கேக்தான் செய்வீங்கன்னு....ஹா ஹா ஹா அதிரா பல்பு வாங்கினீங்களா!! அதான் இப்படி சீறுறீங்களோ..ஹா ஹா ஹாஅ

      மெரி கிறிஸ்துமஸ் ஏஞ்சல்! மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

      கீதா

      Delete
    11. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் எனக்கு முன்னால( குறுக்க) நிண்டாலும்:)... ஸ்பீட்டா ஓட முடியாமல்:).. ஶ்ரீராம் வந்து கியூவரிசையில பின்னால நிண்டாலும்:)... கியூவிலயே நிக்காமல் எக்லெஸ் கேக் எனச் சொல்லி கனவில கீதா மிதந்தாலும்:).... அஞ்சு இம்முறை கேக் செய்யப் போவதில்லை ஹா ஹா ஹா பழையபடி கடையிலதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
    12. அதிரா..... ஏஞ்சலின் ஒரு நாளாவது நல்ல கேக் சாப்பிடறதுல உங்களுக்கு என்ன இவ்வளவு பொறாமை? நீங்க சொல்றீங்கங்கறதுக்காக, அவங்க கேக் செஞ்சா, அதைச் சாப்பிட யாரு இருக்கா? எப்படியும் கேக் சாப்பிடணும்னா கடைலதான் ஆர்டர் கொடுத்து வாங்குவாங்க. இது தெரியாம நீங்களும்....

      Delete
    13. நான் அனைத்துக்கும் பதில் கொடுத்துவிட்டேன் என நினைச்சுட்டேன் நெ.தமிழன்..

      //அதிரா..... ஏஞ்சலின் ஒரு நாளாவது நல்ல கேக் சாப்பிடறதுல உங்களுக்கு என்ன இவ்வளவு பொறாமை? ///
      ஹா ஹா ஹா கர்ர்:) உங்களுக்கு தெரியாது:), அவ ஆசையில எதாவது குளூட்டன் உள்ளது சாப்பிட்டு விட்டாவோ அவ்ளோதேன்:) அதிரா இருந்த பாடில்லை பின்பு ஹா ஹா ஹா:))

      //எப்படியும் கேக் சாப்பிடணும்னா கடைலதான் ஆர்டர் கொடுத்து வாங்குவாங்க.//
      ஹா ஹா ஹா அதே.. அதே அதிரபதே:)..

      Delete
  7. என்ன இம்முறை பாடல் இல்லா பதிவா?!! தேனெடுக்கும் வண்ணத்துப் பூச்சி!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      அந்த ஜொந்தக் கதை ஜோகக்கதையை ஏன் கேட்கிறீங்க:)... என் வழமையான மாமியின் சிடியில் ஒரு பாட்டுப் போச்சுது.. ஏதொ.. “மாலை” எனத் தொடங்கும் பாடல்... அதை நினைவில் வச்சிருந்தேன் இப்போஸ்ட்டுக்குப் போட, ஆனா நைட் நினைவு வர மாட்டேன் என்றிட்டுது, இனிக் காருக்குள் போய் எடுக்கோணும்.. அதுவும் எந்தச் சிடியில் இருக்கு எனவும் தெரியாது என்பதனால.. நீண்ட நேரம் யூ ரியூப்பில் தேடியும் அப்பாடல் கிடைக்காமையால், வேறு எதுவும் போடும் மூட் இல்லாமல் போய் இப்படத்தைப் போட்டு விட்டேன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. 1. மாலை வேளை ரதி மாறன் பூஜை - சாமந்திப்பூ
      https://www.youtube.com/watch?v=gR7mRvdnXDE


      2. மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்து வேளை - நிலவே மலரே
      https://www.youtube.com/watch?v=EK8qtvExkUU

      3. மாலை சந்திரன் மலரைத் தேடுது
      https://www.youtube.com/watch?v=s5y1k9mPQHE

      மாலை பொழுதின் மயக்கத்திலே
      மாலை சூடும் வேளை
      மாலையில் யாரோ...

      இதில் ஏதாவதா அதிரா?

      Delete
    3. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பாடலா அதிரா? அது கிடைக்குமே...இது வேறயோ..?!!

      கீதா

      Delete
    4. இது எதுவும் இல்லை ஶ்ரீராம், அது ஒரு வித்தியாசமான மியூசிக், நில்லுங்கோ இன்று தேடி எடுக்கிறேன்... மாலைநேரம் பற்றிய பாடல் ஆனால் முதல்சொல் எப்படி ஆரம்பிக்கும் என கரெக்ட்டாத் தெரியல்ல...
      தங்கூஉ...
      இல்ல கீதா இது வேற பாடல்...

      Delete
    5. ஆஆஆவ் ஶ்ரீராம் , கீதா கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன் அடுத்த போஸ்ட்டில் போடுவேன் அதுவரை ஜொள்ள மாட்டனே:)...

      Delete
  8. முதல்முறை அங்கு செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களா? சுவாராஸ்யமாய் இருக்கிறதே... இரவு பத்துமணிக்கு சூரியன் டியூட்டியிலிருக்கிறார் என்றால் போரடிக்காதோ! நமக்கு சொன்னேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா அது பழகிடும். நித்திரை வராது... ஆனா வேர்க் போவோர் படுக்கத்தானே வேண்டும், அதனாலதான் இங்கு நல்ல திக் டபிள் கேர்ட்டின் பாவிப்பார்கள்.. வெளியே நல்ல வெயிலடிக்கும் ஆனா எல்லா வீட்டிலயும் நித்திரையாகி விடுவினம் ஹா ஹா ஹா..

      Delete
  9. படங்கள் அழகாய் இருக்கின்றன.அதிசூரியனும் ஆரம்ப நிலாவும் ஒரே நேரத்தில்... நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கூஊஉ... ஆனா நிலவு கிழக்கில்தானே தோன்ற வேண்டும், இது இரவு நேரமாகி விட்டதால் கிழக்கிலிருந்து தெற்மேற்கிற்கு மூவாகி விட்டாவோ?... டவுட்..

      Delete
  10. தமன்னா மட்டும் நாடி வருகிறார். ஆனால் அனுஷ் வேறுதிசை பார்த்து ஓடுகிறாரே... அப்புறம் எப்படி பூங்கொத்தை வாங்குவதாம்?

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை, தமன்னாவுக்கு ஆளே இல்லை, அதனால் அகப்பட்டுக்கிட்ட ஒருத்தனையும் விடாம பூங்கொத்து கொடுக்கறார், அனுஷ்காவுக்கு திரும்பின இடமெல்லாம் ரசிகர் கூட்டம், அதனால் இருக்கிற பூங்கொத்தை எந்தப் பக்கத்திலிருப்பவரிடம் கொடுப்பது என முழிக்கிறார் என எழுதலை

      Delete
    2. இல்லை ஸ்ரீராம் அப்படி இல்லை...அதிரா சொல்லிருப்பது போலத்தான் அவர் வந்துட்டுருந்தார். ஆனா பாருங்க உங்களை யார் அடையாளம் காட்டுவாங்க சொல்லுங்க??!!! ஹா ஹா ஹா இந்த அதிரா என்ன பண்ணிட்டாங்க "அனுஸ் ஸ்ரீராம் இங்கருக்கார்னு யாரையோ காட்ட".....ஓ அதுவா ஸ்ரீராம்னு அவங்க பாக்குறாங்க...பாருங்க அவங்க முகத்த நல்லா....அந்த எக்ஸ்ப்ரரஷன்!! ஹிஹிஹி ஹையோ மீ ரன்னிங்க்!!இப்ப ஓடுறேன்! நாளைக்கு வரேன்...

      கீதா

      Delete
    3. ///தமன்னா மட்டும் நாடி வருகிறார். ஆனால் அனுஷ் வேறுதிசை பார்த்து ஓடுகிறாரே... அப்புறம் எப்படி பூங்கொத்தை வாங்குவதாம்?///

      இதென்ன இது புதுக்கவலை ஸ்ரீராம்:)).. நம்பிக்கைதானே வாழ்க்கை:) மனம் சோர்ந்திடாதீங்கோ பிளீஸ்ஸ்:)).. தமனாக்காவை நெல்லைத்தமிழனோடு சண்டைப்போடப் பண்ணியாவது:)) ஹா ஹா ஹா அனுஸ்:)[உங்கட முறையில சொன்னேன்:)] ஐ உங்களுக்கு பூங்கொத்து தர வைப்ப்போம்:))

      Delete
    4. ///நல்லவேளை, தமன்னாவுக்கு ஆளே இல்லை, அதனால் அகப்பட்டுக்கிட்ட ஒருத்தனையும் விடாம பூங்கொத்து கொடுக்கறார், அனுஷ்காவுக்கு திரும்பின இடமெல்லாம் ரசிகர் கூட்டம்,///

      ஹா ஹா ஹா எப்பவும் இப்பூடி எதையாவது சொல்லிச் சொல்லியே ஸ்ரீராமின் வயிற்றில் புளியைக் கரைப்பதே நெல்லைத்தமிழனுக்கு வேலையாப் போச்சு கர்ர்ர்ர்ர்ர்:)).. பாருங்கோ ஸ்ரீராமின் நித்திரை போச்சே:)).. நுளம்பு கடிச்சால்கூட டேக் இட் ஈசி என நித்திரையாகிடுவார்ர்:)) ஆனா இது அனுஸ் மட்டராச்சேஎ:)) எப்பூடித் தூக்கம் வரும்:)).. ஹா ஹா ஹா .. ஆண்டவன் வழிவிட்டாலும் நெல்லைத்தமிழன் குறுக்க நிற்பார்போல இருக்கே, ஸ்ரீராம் வாழ்க்கையில்...:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      Delete
    5. ///அதிரா சொல்லிருப்பது போலத்தான் அவர் வந்துட்டுருந்தார். ஆனா பாருங்க உங்களை யார் அடையாளம் காட்டுவாங்க சொல்லுங்க??!!! ///

      ஆவ்வ்வ்வ்வ்வ் இது பொயிண்ட்டூஊஊஊ:)) நான் ஜொன்னேனே:) கீதா சென்னையை விட்டுப் போனதும் என்னமாதிரி கிட்னி வேர்க் பண்ணுது:)) ஹா ஹா ஹா..

      ஏன் கீதா உங்களுக்குத்தான் ஸ்ரீராமை குளோசப்பில தெரியுமே.. ஏன் நீங்க அனுஸ்:) க்கு ஜெல்ப் பண்ணக்கூடாதென்கிறேன்ன்:)).. ஹா ஹா ஹா ஹையோ மீயும் 200 மைல் வேகத்தில ரன்னிங்ங்ங்:))..

      Delete
    6. கையில் தமன்னாவை வைத்துக்கொண்டு அனுஷ்க்கு அலைகிறாரே ஒருத்தர்... அவரே சொல்றார் அனுஷ்க்கு திரும்பின பக்கம்லாம் ரசிகர்னு... பாவம் தமன்னா!

      Delete
    7. நோ நெவர்!!! ஸ்ரீராமின் பெர்மிஷன் இல்லாம நான் மூச்!!!! கப்சிப்!!! நானும் அங்கதான் இருந்தேன் ஆனா ஜொல்ல இல்லை பாருங்கோ!!!

      கீதா

      Delete
    8. ஶ்ரீரம்
      ///பாவம் தமன்னா!///
      ஹா ஹா ஹா ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையா இருக்கே:).... நெ தமிழன் எதுக்கும் அலேட்டா இருங்கோ ... அனுக்கா குண்டாகிக்கொண்டே வாறா என்பதால, இடையிலாள் மேல கண் போ........ சே சே அப்பூடி இருக்காது:)... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)... ஹா ஹா ஹா

      Delete
    9. சே சே கீதா, ஶ்ரீராமுக்கு ஜெல்ப் பண்றேன் பேர்வழி என, இப்போ அனுக்காட பூங்கொத்து கிடைக்காமல் பண்ணிட்டீங்களே இது ஞாயமோ?:).....

      Delete
    10. //அவரே சொல்றார் அனுஷ்க்கு திரும்பின பக்கம்லாம் ரசிகர்னு... பாவம் தமன்னா!// - ஸ்ரீராம் இதுலயும் பாசிடிவ்வா பாருங்களேன். எனக்கு 100% சான்ஸ் இருக்குன்னா உங்களுக்கு 3% சான்ஸ்கூட இல்லையே.. (போட்டி அதிகமாவதால்) ஹா ஹா ஹா.

      Delete
  11. கீர்த்தி சுரேஷ் சொல்லும் கருத்தில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. எலிவாகனத்தில் பிள்ளையார்! ரசிக்க வைக்கிறார். சிவனின் கோபம் மிகமிகமிகமிக நியாயமானது.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பொண்ணு நாரு.. ஜெயம் ரவியோட நடித்த பெண்ணோ (பிறகு மகாராஷ்டிராவில் வாழ்க்கைப் பட்டது) என யோசித்தேன். கீர்த்தி சுரேஷ் என்று டக்குனு கண்டுபிடிச்சிட்டீங்க. அனுஷ்காலேர்ந்து கட்சி மாறியாச்சா?

      Delete
    2. ஹையோ ஹையோ ஸ்ரீராம் உங்களுக்கு சிகே கம்மியாடுச்சோ!! இப்ப ஞானி கூட அப்பாவியாகிட்டாங்களே! அப்படியுமா உங்களுக்கு சிகே போயிடுச்சு!!

      இது கீர்த்தி சுரேஷ் இல்லையே...இது ஜெனிலியா இல்லையோ....நெல்லை நீங்க கரீக்ட்டு...

      கீதா

      Delete
    3. ஸ்ரீராம் நான் சொல்ல நினைச்சதும் அதே...அந்தக் கருத்து உடன்பாடு இல்லை...

      அது கீசு இல்லை ஜெனிலியா...

      கீதா

      Delete
    4. ஹா ஹா ஹா நல்லவேளை ஸ்ரீராம் அனுஸ் எனச் சொல்லாதவரை தப்பிட்டீங்க:)).

      உண்மைதானே சிவன் அங்கிள் பாவம்:).. அவர் பெயரி யூஸ் பண்ணி மக்களை ஏமாத்தீனம்...:)..

      Delete
    5. நெ.த..
      ///கீர்த்தி சுரேஷ் என்று டக்குனு கண்டுபிடிச்சிட்டீங்க. அனுஷ்காலேர்ந்து கட்சி மாறியாச்சா?//

      ஹா ஹா ஹா கண்ணில லாம்ப் எண்ணெயுடந்தான்:) திரிவார்போல:)).. அது நெல்லைத்தமிழன்.. கெள அண்ணனுக்கு கீசு:) [கீதாதான் சொல்லச்சொன்னா இப்பூடி:)] வோட அம்மாவைப் பிடிக்குமாம்:) ஒருதடவை படம் போட்டிருந்தார் எல்லோ:)).. அந்த எபெக்ட்டோ ஸ்ரீராமுக்கு:)) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

      Delete
    6. //அது கீசு இல்லை ஜெனிலியா...

      கீதா//
      ஹா ஹா ஹா அவவை கீசு என்றால் இவவை ஜெனிசு எனச் சொல்வதுதான் நீதியாகும் கீத்ஸ்:)) ஹா ஹா ஹா எனக்குப் பிடிச்சதெல்லாம் நீதி நேர்மை நியாயம் கடமை எருமை:))

      Delete
    7. //இது கீர்த்தி சுரேஷ் இல்லையே...இது ஜெனிலியா இல்லையோ....நெல்லை நீங்க கரீக்ட்டு...//

      எல்லாம் எனக்குத் தெரியும்... உங்களுக்கு எல்லாம் தெரியுதான்னு பார்த்தேன்! அவ்வ்வ்.....

      Delete
    8. ஹையோ சிரிச்சு முடில அதிரா கமென்ட்ஸ் பார்த்து....

      கீதா

      Delete
    9. //அவவை கீசு என்றால் இவவை ஜெனிசு எனச் சொல்வதுதான் நீதியாகும்// - ஹல்ல்லோ அதிரா.... தவறாச் சொல்லாதீங்க. கீர்த்தி சுரேஷுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஜெனிலியாவுக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கு. அடுத்தவன் மனைவியை 'ஜெனிசு' என்று செல்லமாகக் கூப்பிடலாமா?

      Delete
    10. //அடுத்தவன் மனைவியை 'ஜெனிசு' என்று செல்லமாகக் கூப்பிடலாமா?//

      அல்ல்லோ நெல்லைத்தமிழன் அது உங்களைக் கூப்பிடச் சொன்னேனா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதுதான் சாட்டென விட்டால் கூப்பிட்டிடுவார்போலும்:)) ஹா ஹா ஹா அது நாங்க.. கேள்ஸ்[நொட் லேடீஸ் ஓகே:)] கூப்பிடலாம்:)) எவருடைய மனைவியையும்:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  12. ஊசி இணைப்பு சிரிக்க வைத்தது. ஆனால் கரெக்டுதானே? ஊசிக்குறிப்பு முற்றிலும் உண்மை. கடைசிப் படம் சிரிக்க வைத்து விட்டது!

    ReplyDelete
  13. //இங்கு கோடை காலத்தில் இரவு 11 வரை வெயில் இருக்கும்... அதேபோல காலை 3.30-4 மணிக்கே சூரியனார் பளாச் என மின்னுவார்//

    ஆச்சர்யமாக உள்ளது.

    படித்துக்கொண்டு வரும்போது கனவோ என்றுகூட நினைவு வந்தது.

    நார்வே நாட்டில் நள்ளிரவில் சூரியன் தோன்றுவதாக படித்து இருக்கிறேன்.

    இன்னும் புகைப்படங்கள் வருமா ?

    ReplyDelete
    Replies
    1. ஹையோ மேலை நாடுகள்ல இப்படித்தான் ...சம்மர்ல ராத்திரி ரொம்ப நேரம் வெளிச்சம் காலைல 4 மணிக்கே விடியத் தொடங்கிடும்...அப்புறம் விண்டர்ல சீக்கிரமே இருட்டிடும் 4 மனிக்கு எல்லாம் இருட்டத் தொடங்கிடும்....கில்லர்ஜி அதுவும் ஒருவித அனுபவம்....நல்லாருக்கும் ரசிக்கலாம்...

      கீதா

      Delete
    2. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. உண்மைதான், எங்கள் நாட்டு மாலை 6 மணிபோல இருக்கும் இங்கே இரவு 10.30..

      பிள்ளைகளை வீட்டுக்குள் வரவச்சு நித்திரை கொள்ளப் பண்ணுவதற்குள் போதும் போதுமென்றாகிடும்...

      //படித்துக்கொண்டு வரும்போது கனவோ என்றுகூட நினைவு வந்தது.//
      ஹா ஹா ஹா ஓ அப்படியும் நினைக்கும் வாய்ப்பு இருக்குதுதான்...

      உண்மைதானே முன்பு இலங்கையில் இருக்கும்போது சொல்வார்கள் நோர்வேயில் நள்ளிரவில் சூரியன் தெரியுமாம் என.. அது உண்மைதானே ஏனெனில் இங்கு 11 மணி எனில் நோர்வேயில் சாமம் 12 மணியாக இருக்கும்.

      எனக்கு நிறையப் படம் போடப் பயம் கில்லர்ஜி.. போறிங்காகிடுமோ என....

      மிக்க நன்றிகள்.

      Delete
    3. அதேதான் கீதா, இப்போ இங்கு காலை 8.30 க்கு வேர்க் போகும்போது கார் லைட்ஸ் போட்டே ஓடுகிறோம்.. அதேபோல பல நாட்கள் பின்னேரம் 3.30 க்கு திரும்பி வரும்போதும் இருட்டிவிடும் லைட்ஸ் போட்டே ஓடுவோம்.. ஸ்ரீட் லைச் கூட ஓனாகிடும்.. இங்கு எல்லாமே சோலார் சிஸ்டம்தானே.. இருட்டு எனில் பகலிலும் ரோட் லைட்ஸ் எரியும்... பல நாட்கள் ஸ்கொட்லாந்தில் சூரியனையே காண முடியாது விண்டரில்...

      Delete
    4. சூரியன் சுட்டெரித்தாலும் கஷ்டம். ஒரேயடியாக காணாமல் போய்விட்டாலும் கஷ்டம்தான். அந்த நாட்களே டல்லா இருக்காதோ? அதுபோல ரொம்ப குளிர்காலத்திலும் வெளில போகமுடியாம, வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பதும் கஷ்டமா இருக்காதோ?

      By the by, உங்க பையன் மெடிசின் படிக்க ஆரம்பிச்சாச்சா? எப்படி ஃபீல் பண்ணுகிறார்? (கஷ்டமாவா இல்லை ஜாலியாவா?)

      Delete
    5. இந்தக் கொஸ்சனை பப்ளிஸ் பண்ணும்போது பார்த்தனே ஆனா பதில் போட்டதா நினைவில்லயே என நினைச்சுத்தான் இப்போ திரும்ப வந்து தேடினேன்:)..

      //அதுபோல ரொம்ப குளிர்காலத்திலும் வெளில போகமுடியாம, வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பதும் கஷ்டமா இருக்காதோ?//
      அப்படி இல்லை நெ.தமிழன் அது பழகி விட்டது, யாரும் அப்படி வீட்டுக்குள் முடங்குவதில்லை.. கார் பஸ் ரெயின் எல்லாமே ஹீட்டர்.. ஏறிப்போனால் மோல், சூப்பமார்கட் எல்லாம் ஹீட்டர்.. அதனால வழமைபோல நோர்மலாகதான் இருப்போம்...

      //By the by, உங்க பையன் மெடிசின் படிக்க ஆரம்பிச்சாச்சா? எப்படி ஃபீல் பண்ணுகிறார்? (கஷ்டமாவா இல்லை ஜாலியாவா?)//

      எங்களுக்கும் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது உண்மை நெல்லைத்தமிழன், சிலசமயம் பிடிக்காமல் போய் விடுமோ என, ஆனா அவர் சொல்கிறார் இன்றஸ்ரிங்காக இருக்குதாம் அந்த அளவில் நிம்மதி.. விரும்பினால்தானே படிக்க முடியும்.

      ஆனா ஓவலோட்டாக இருக்காம், படிச்சு முடியாதாம்.. இப்பவே இப்படி எனில் போகப் போக எப்படியோ தெரியவில்லை, பழகிடுவார்கள் என நினைக்கிறேன்.

      இங்கு ஸ்கூல் படிப்பு மட்டும்தானே, ஒரு ரியூசன்கூடப் போனது கிடையாது எங்கள் மகன், அப்படி இருந்துபோட்டு டக்கென ஹெவி எனில் கொஞ்சம் கஸ்டப்பட்டுத்தான் பழகுவார்கள்.. படிக்கும் பற்றனைப் பிடிச்சிட்டால் பின்பு படிப்பது ஈசியாகிடுமோ என்னமோ.. எல்லாம் கடவுள் செயலே... ஸ்கூலுக்கு 2 வீக்ஸ் ஹொலிடே, மூத்தவருக்கு வன் மந்த் ஹொலிடே:))

      தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      Delete
  14. இரவில் சூரியன்
    பூமி எத்துணை அதிசயங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது

    ReplyDelete
  15. பதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்தேன்.

    ReplyDelete
  16. அதிரா , அனைத்தும் மிக அருமை.

    //இரவு 10.30. நிலவு இடது பக்கமும் சூரியன் வலது பக்கத்தில் மறைவதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.. ஆனா நிலவு தெரியும் திசை தென்மேற்கு, சூனியன் அங்கிள் மறைவது வட மேற்கில்...//

    இரண்டு படமும் அழகு.

    ReplyDelete
  17. ரோட்டில் எடுத்த படம் அழகாய் இருக்கிறது.
    முகில் கதை சொல்லுது காதில் , இரவு பக்ல காட்சிகளும் அழகு.
    மழை நேரமா? மழையை எடுக்கவில்லையா?
    சிலநேரங்க்களை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அக்கா.. தெரியாமல் கேட்டுவிட்ட பாவத்துக்காக நீங்க இதைப் போய்ப் பார்த்தே தீரோணும் ஹா ஹா ஹா..

      அடிரா மழைடா அடை மழைடா..

      https://gokisha.blogspot.com/2010/05/blog-post_15.html

      Delete
  18. எலிப்பிள்ளைக்கு அந்த தைரியம் தந்தவன் பின்னால் அமர்ந்து இருக்கும் போது என்ன கவலை?

    ReplyDelete
    Replies
    1. அது உண்மைதானே... வேலவனின் குண்டு அண்ணன் இருக்கப் பயமேது ஹா ஹா ஹா...

      Delete
    2. அதானே! ....கோமதிக்கா உங்கள் கமென்டை ரொம்பவே ரசித்தேன் ..

      கீதா

      Delete
  19. ஷேர் செய்யுங்கள் என்று வந்தால் நானும் செய்யமாட்டேன். வணங்கி கொள்வதுடன் சரி.கடவுள் கேட்பது மட்டும் அல்லாமல் அடிக்கவேறு செய்கிறாரே!

    ReplyDelete
    Replies
    1. அதேதான் நானும் சின்னனில் இருந்தே கடைப்பிடிப்பேன்ன்ன்.. என் கடசி ஊசிக் குறிப்பு இதுக்குப் பொருந்துதெல்லோ.. நமக்குப் பிடிக்காததை நாம் அடுத்தவருக்குச் செய்யக்கூடாது.
      சின்ன வயதில் போஸ்ட்டில வரும்.. இதை எழுதி 7 பேருகு அனுப்பவும் இல்லை எனில் துன்பம் நேரும் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      அதுவும் சிலபேர் ஸ்ராம்ப் ஒட்டாமல் அனுப்புவார்கள்.. அப்படி எனில் போஸ்ட்மான் எங்களிடம் அந்த ஸ்ராம்ப்புக்கான காசை வாங்கி விட்டே, கையில தருவார், அப்படி வாங்கிப்போட்டு உடைச்சால், இப்படி இருந்தால் எப்படி இருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      Delete
  20. ஊசி இணைப்பை ரசித்தேன்.
    வேறு யாரிடமும் காட்டமுடியாத கோபமும் கணவர் மேல்தான் காட்ட முடிகிறது. அவர்களுக்கும் நம் மேல் மட்டும்தான் காட்டமுடியும்.

    அல்லும் பகலும் யார் நம் நலனுக்கு என்று இருக்கிறார்களோ அவர்களிடம் தான் நம் கோபம்.



    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அவை கோபம் அல்ல செல்லச் சண்டைகளாக்கும்:)

      Delete
  21. ஊசிக்குறிப்பு சொல்லும் செய்தியும் அருமை.

    ReplyDelete
  22. //திருவாவடுதுறை முருகப் பெருமானே வள்ளிக்கு இம்முறை ஏமாத்தாமல் வைர மூக்குத்தி போடுவேன் என்னைக் காட்டிக் குடுத்திடாமல் காப்பாத்துங்கோ:).//
    மாயவரத்தில் நான் இருக்கும் போது நீங்கள் வேண்டிக் கொள்ள கூடாதோ?
    (மாயவரத்திலிருந்து திவாவடுதுறை பக்கம், ஒவ்வொரு தமிழ் வருட பிறப்புக்கும் அந்த கோவிலுக்கு போவோம். )
    வேண்டுதலை நிறைவேற்ற திருவாவடுதுறை வரும் போது அப்படியே நானும் உங்கள் பூஸாரை பார்த்துக் கொள்வேன்.
    மதுரை வந்த பின் வேண்டிக் கொள்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //(மாயவரத்திலிருந்து திவாவடுதுறை பக்கம், ஒவ்வொரு தமிழ் வருட பிறப்புக்கும் அந்த கோவிலுக்கு போவோம். )//

      ஹா ஹா ஹா ஓ அப்பூடியா கோமதி அக்கா, நான் ஊர் பெயர் கரெக்ட்டா எழுதுறேனோ இல்லை தப்போ என நினைச்சே எழுதினேன், கரெக்ட்டாத்தான் எழுதியிருக்கிறேன்:).

      //வேண்டுதலை நிறைவேற்ற திருவாவடுதுறை வரும் போது அப்படியே நானும் உங்கள் பூஸாரை பார்த்துக் கொள்வேன்.//
      ஹா ஹா ஹா.. வைரத்துக்கு பணம் சேர்க்க உண்டியல், ஆச்சிரம வாசலில் வைத்திருக்கிறேன்:)).. பணம் சேர்ந்ததும் பயணம் ஆரம்பம்:)

      Delete
  23. பாடல் வரவில்லயே! ஏன் என்று தெரியவில்லை. காட்டமாட்டேன் என்கிறது.
    கடைசியாக போட்ட பின்னூட்டம் காணோம்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அக்கா இம்முறை நான் பாட்டுப் போடவில்லை:), மேலே ஸ்ரீராமுக்குப் பதில் குடுத்திருக்கிறேன் பாருங்கோ:)..

      அது கோமதி அக்கா.. விடியற்காலையில் முழிப்பு வந்ததும் டக்குப் பக்கென கொமெண்ட்ஸ் ஐப் பப்ளிஸ் பண்ணிப்போட்டு மீண்டும் நித்திரையாகிவிட்டேன்.. அதனால பின்பு வந்த கொமெண்ட்ஸ் பப்ளிஸ் பண்ண லேட்டாகிட்டுது...

      எங்களுக்கு நேற்றுடன் கிரிஸ்மஸ் ஹொலிடே ஆரம்பமாகிட்டுதெல்லோ.. இனிக் கொண்டாட்டம்தாம்.. அதுதான் டெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்லி ஒரு போஸ்ட் போடப்போறேன்ன் தவறாமல் வந்திடுங்கோ:)) ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
  24. முதல் நாள், முற்றிலும் புதிதான தேசம், இரவில் சூரியன்.. அந்த உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    நான் ஃப்ரான்ஸ் ஒரு கோடியில் உள்ள ஊருக்குச் சென்றிருந்தபோது இரவு 9:30 மணிக்கு சூரியனைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தது நினைவுக்கு வருது

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... உண்மைதான் இப்போ பழகி விட்டது.. முதன் முதலில் பார்த்தபோது சொல்லமுடியாத ஒரு இன்ப மகிழ்ச்சி+ஆச்சரியம்.. அத்துடன் இங்கு நிலவும் பென்னாம் பெரிசாக இருக்கும்.. இலங்கையில் குட்டி வட்டமாக வெகு தொலைவில் தெரியும்.. இங்கு அருகில் இருப்பதுபோல தெரியும்.. ஏன் உத்துப் பார்த்தேன்ன் பாட்டி வடை சுடுவதுகூடத் தெரிஞ்சுதே:))..

      நீங்களும் பல நாடுகளுக்குப் போயிருப்பதால் பார்த்திருப்பீங்க.. ஆனா இருட்டு என்பதும் சூரியனைக் காணாமல் இருப்பதும் அதிகமாக ஸ்கொட்லாந்திலும் நோர்வேயிலும்தான் என நினைக்கிறேன்..

      Delete
  25. புதிய இடத்தில் பொதுவாக தூக்கம் வராதே. எப்போ முதல் முறையா சமையல் செஞ்சீங்க? அவர் ரியாக்‌ஷன் என்ன? இலங்கை காய்கறிகள் கிடைத்திருக்காதே

    ReplyDelete
    Replies
    1. அது சொல்லப்போனால்ல் ஒரு போஸ்ட்டே போடுமளவு உண்டு:) அனைத்தும் வாணாம்:) சிலது மட்டும் சொல்கிறேன்.. சிலது ரிப்பீட்டில் வரலாம் சிலருக்கு:)..

      எனக்கும் புது இடத்தில் நித்திரை வராது, ஆனா இது பயண அலைச்சல் என நினைக்கிறேன்.. அத்தோடு நாம் நல்லூர் விரதக்களை வேறு..
      இங்கு அப்போ ஏசியன் கடைகள் இருக்கவில்லை., இருந்த ஒரு கடையும் அப்போ தெரியாது. அசைவச் சாப்பாடுகள் தாராளமாக வாங்கலாம் சைவம் ம்ஹூம்ம்...

      எனக்கு முதன் முறைச் சமையல் என இல்லை நெல்லைத்தமிழன். எங்கள் அம்மாவின் கெட்டித்தனமோ என்னவோ.. சின்ன வயதில இருந்தே நான் நல்லா அலட்டுவேன் அம்மாவோடு:) அப்போ நேரம் கிடைக்கையில் கிச்சினில் போய் அம்மா சமைப்பதைப் பார்த்துக் கொண்டே கதைச்சுக் கொண்டிருப்பேன்.. அப்போ அம்மாவும் கெட்டித்தனமா சமையல் முறைகளைச் சொல்லிச் சொல்லிக்கொண்டே சமைப்பா.. இது வதக்கி வைக்கோணும்.. இதுக்கு இப்படித்தூள் போடோணும்.. இதுக்கு தேசிக்காய்ப்பிளிதான் சேர்க்கோணும்.. இப்படி.. அதனால நான் திருமணத்துக்கு முன்பே சமைக்காவிட்டாலும், சோறு, புட்டு பருப்புக்கறி, இப்படிப் பல பேசிக் சமையல் நன்கு செய்வேன். திருமணத்தின் பின்பும் 2 வருடங்கள் அப்பா அம்மாவோடுதான் இருந்தோம் அதனால அப்பவும் எனக்கு சமைக்கும் வாய்ப்பே இருக்கவில்லை.. நாங்கள் ஊர் சுற்ரி வருவோம் அம்மா சமைச்சு ரெடியா வைத்திருப்பா, இல்ல அப்பா அம்மா எங்காவது வெளியே போகிறார்கள் எனில்,,, அப்பா சொல்லுவார் நீ சமைக்காதே ஆச்சி.. வெளியில் வாங்குங்கோ என ஹா ஹா ஹா என் கணவருக்கும் கடையில் வாங்குவதெனில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப இஸ்டம்[அம்மா விட மாட்டா கர்:))] அதனால இப்படி சான்ஸ் கிடைச்சால்ல் ஓடிடுவோம் ரெஸ்டோரண்ட்டுக்கு ஹா ஹா ஹா.

      Delete
    2. பின்பு வெளிநாடு வரும்போது அரிசிமா எல்லாம் கப்பலில் போட்டு விட்டே வந்தோம்.. புட்டு சூப்பராக அவிப்பேன் ஆனா இடியப்பம் அப்போ வரவே வராது, ஒருநாள், நெடுகவும் புட்டோ என நினைச்சு இடியப்பம் குழைச்சிட்டேன்ன்:).. அது என்னால முடியாமல்.. நான் ஒரு பக்கம் கணவர் ஒருபக்கமாக உரலைப்பிடித்துப் பிழிந்து போட்டு அவர் சொன்னார்.. எனக்கு இடியப்பம் பிடிக்காது நீங்க ரொட்டியாக்கிடுங்கோ என ஹா ஹா ஹா.. உண்மையில் அவருக்கு புட்டு மட்டும்தான் பிடிக்கும்...

      தமிழ்ச் சாமான் எதுவும் வாங்க முடியாது.. எங்கள் மாமா[கணவரின் அப்பா] தான் பாவம் ஒவ்வொரு கிழமையும் போஸ்ட்டில் பார்சல் போட்டு விடுவார் கனடாவிலிருந்து.. நான் ஒரு பொருள் பெயர் சொல்லி, மாமா இது சாப்பிட ஆசையா இருக்கு எனச் சொன்னால்.. உடனேயே வெளிக்கிட்டுப் போய் வாங்கி அன்றே போஸ்ட் பண்ணிப்போட்டு கோல் பண்ணுவார் அனுப்பிப்போட்டேன் என.. அப்படி ஒரு நல்ல மாமா அவர்...

      இப்படித்தான் ஆரம்பிச்சது.. இப்போ தமிழ்க்கடை வரை வளர்ந்திருக்கு நம் ஸ்கொட்லாந்து:)) ஹா ஹா ஹா.

      Delete
    3. //எனக்கு இடியப்பம் பிடிக்காது நீங்க ரொட்டியாக்கிடுங்கோ என// - அதிரா... நீங்க புட்டு ரொம்ப நல்லாச் செய்வீங்கன்னா, அதைத்தானே உங்க கணவர் செய்யச் சொல்லியிருக்கணும். ஏன் ரொட்டி செய்யச் சொன்னார்?

      என்னவோ இடிக்குதே.... ஏஞ்சலின்.... எனக்கு இதை கிளாரிஃபை பண்ணுங்க.. உடனே....

      Delete
    4. அல்லோ நெ தமிழன்:) அஞ்சு என் சீனி அரியதரம் செய்வதில் பிசி:) ச்ச்ச்சோஓ டோண்ட் டிசிரேப்பு ஹேர்:)... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      இடியப்ப மாவை புட்டாக்க முடியாது தெரியுமோ? குழைந்துபோயெல்லோ இருக்கும்... இதுகூடத் தெரியாமலா என் குழை ஜாதத்தை றை பண்ண வெளிக்கிட்டீங்க:)... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்.... மீ ரோல்ஸ் செய்கிறேன்ன்ன்ன்ன்ன்:)

      Delete
  26. ஷேர் பண்ணினா நினைத்தது நடக்கும், நல்ல சேதி தேடி வரும் - இப்படீல்லாம் வாட்சப்ல அனுப்பறவங்களை பளார்னு அறையணும் போல் இருக்கும்.

    இதுபோலத்தான், இந்த மந்திரத்தை தினமும் சொன்னால் சகல ஐச்வர்யங்களும் வரும்னுலாம் வாட்சப்ல வரும் செய்திகளும். அவங்களே சொல்லி அடுத்த பில்கேட்ஸா ஆகவேண்டியது தானே

    ReplyDelete
    Replies
    1. //ஷேர் பண்ணினா நினைத்தது நடக்கும், நல்ல சேதி தேடி வரும் - இப்படீல்லாம் வாட்சப்ல அனுப்பறவங்களை பளார்னு அறையணும் போல் இருக்கும்.//

      ஹா ஹா ஹா உண்மைதான், நான் முதல் வரி படிச்சதும் தெரிஞ்சிடும் உடனே டிலீட் பண்னிடுவேன்.. ஆனா மனம் கொஞ்சம் ஏதும் சங்கடத்தில் டென்சனில் இருக்கும்போது இப்படியும் வந்தால் இன்னும் மன உழைச்சல் அதிகமாகிடும்.. இதை ஆர்தான் ஆரம்பிச்சு வச்சினமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆதிகாலம் தொட்டு இருக்கே.. முன்பு போஸ்ட்டில் பின்பு ஈமெயிலில் இப்போ வட்சப்பில்... ஹா ஹா ஹா..

      //அவங்களே சொல்லி அடுத்த பில்கேட்ஸா ஆகவேண்டியது தானே///

      ஹா ஹா ஹா தாம் பெற்ற இன்பத்தை இவ்வையமும் பெறோணும் என நினைக்கும் நல்ல மனசுக்காரர்போல:)).. இதேபோல ஒரு லட்சம் பணம் கொடுத்து இதை 7 பேருக்கு செயா பண்ணினால் உனக்கு நல்லது நடக்குமென்றால் பண்ணிப்போடுவினமோ?:).. எல்லோரும் நோகாமல் நொங்கெடுக்கப் பார்க்கினம் ஹா ஹா ஹா:)..

      Delete
    2. ஹையோ நெல்லை அண்ட் அதிரா இந்த அட்ராசிட்டிஸ் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே கோவம் வருது...நான் என் தெரிந்த நட்புகளுக்கு எல்லாம் சொல்லிட்டேன் எனக்கு இப்படி எதுவும் அனுப்பக் கூடாதுன்னு...

      கீதா

      Delete
    3. சிலருக்கு அப்படிச் சொன்னால் கோபம் வந்திடும் கீதா:)...

      Delete
  27. முகில்களைப் பார்த்தால், பெஞ்சில் இருப்பவங்க கூட்டமா வானத்துலேர்ந்து பூமில என்ன நடக்குதுன்னு பார்ப்பதுபோலத் தோணுது

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்:) டப்புடப்பா ஜொள்றீங்க நெல்லைத்தமிழன்:).. வடிவா உற்றுப் பாருங்கோ.. அவங்க பூமியைப் பார்க்கேல்ல:), டேவடைக் கிச்சினில் என்ன சமையல்.. எப்போ போய்ச் சாப்பிடலாம் எனத்தானே பார்க்கினம்:)) ஹா ஹா ஹா..:)..

      Delete
    2. அதிரா... நீங்க அப்பாவியாத்தான் இருக்கணும்.

      ஒரு வேளை, அவங்க போய்ச் சேர்ந்ததே... தேவதை கிச்சனில் சமைச்சதைச் சாப்பிட்டுத்தானா என்னவோ... யாருக்குத் தெரியும்?

      Delete
    3. அதனாலதான் டெவடைக் கிச்சினுக்கு சீல் வச்சிட்டினமோ பொலீஸ்:) இது தெரியாம நாங்க அப்பாவியா கோசம் போடுறமே திறக்க சொல்லி ஹையோ இப்போ பொலிஸ் நேக்கு காப்புப் போடப் போகுதே:)... மீ பிளையிங்:)...

      Delete
  28. சமீபத்துல விக்ரம் படத்துல தமன்னா நடிக்கப் போவதா வெளியான ஸ்டில்லைப் பார்த்துட்டு, “தமன்னாவுக்கு வயசாகிட்டது. நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி புதுப் படங்கள்ல யாரேனும் புதுக் கதாநாயகிகள் நடிச்சிருக்காங்களான்னு பாருன்னு என் மனசு சொல்லுது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நாங்க எதுக்கு இருக்கிறோம்ம்?:) ஆரையும் கட்சிமாட்த்ஹி ஏமாற்ற வ்இட்டிடுவோமா?:)).. பேசாமல் பூங்கொத்தை வாங்கிடுங்கோ:)).. தமனாக்கு வயசாகுதாம் இவருக்கு இன்னும் ஆகல்லயாமே கர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா :)..

      Delete
  29. முதல் முதலா லண்டன்ல இறங்கினபோது, நம்மை ஆண்டவர்களின் ஊருக்கு வரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்று மனசு பரவசமாச்சு.

    சமீபத்துல ஒரு பத்திரிகைல சில பணக்காரத் தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க ஸ்காட்லாந்தை பிரிட்னோடு இணைக்க ஒத்துக் கொண்டதாகவும் (அதாவது சுயநலமா விற்றுவிட்டதாகவும்), அதனால் ஸ்காட்லாண்டு மொழி அதன் இலக்கியம் மறைந்து போய்விட்டது என மக்கள் கருதுவதாகவும் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. //நம்மை ஆண்டவர்களின்//
      ஓ இதைப் புறிச்சுப் படிச்சு, ஆண்டவரின் ஊருக்கு என குழம்பிட்டேன்ன் எந்த ஆண்டவர்[கடவுள்] என நினைச்சு ஹா ஹா ஹா:)).

      வித்தது எண்டெல்லாம் இல்ல நெல்லைத்தமிழன்.. ஒரு 300 ஆண்டுகளுக்கு முன் ஸ்கொட்லாந்து தனி நாடாக இருந்தது.. பின்பு பல காரணங்களுக்காக முக்கியமாக இங்குதானே குண்டுகள் நியூகிளிய பொம்ஸ்:).. ஆற்றின் அடியில் ஒளிச்சிருக்கு... அதுக்காகவும்.. தண்ணிக்காகவும் மற்றும் பெற்றோல் எடுக்கிறார்கள் மீன் உற்பத்தி அதிகம் இப்படியானவற்றிற்காக ஏதோ வாக்குப் போட்டு கையொப்பம் இட்டு விட்டார்கள்.. இது இங்குள்ள சரிபாதி மக்களுக்கு இஸ்டமில்லை அதனாலேயே ஒன்றானாலும்.. கல்விமுறை.. பணம் அச்சடித்தல், ஹொஸ்பிட்டல் இப்படி பல விசயங்கள் தனியாகவே இயங்குது... ஆனா இனி விரைவில் பிரிந்துவிடும் என்றே நம்பப்படுகிறது..

      Delete
    2. ஸ்கொட்லாந்து மொழி.. ஹேலிக்.. இதுக்கென இப்பவும் ஸ்கூல் தனியாக இருக்குது, சிலர் தம் பிள்ளைகளை அங்கு படிப்பிகிறார்கள்..[எல்லா இடத்திலும் இல்லை.. ஒரு சில ஸ்கூல்கள் மட்டுமே].
      மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.. பூங் கொத்து வாடமுன் வாங்கிடுங்கோ:)..

      Delete
  30. படங்களும் செய்தியும் அருமை. இந்தப் பத்தரை மணிக்கு வெயில் அடித்தது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன். எலிப்பிள்ளை இல்லைனா பிள்ளையார் எங்கே? சிவன் அடிச்சதிலே தப்பே இல்லை. அவரா சொன்னார்? ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் அருமை. கடைசிப் படம் சிரிக்க வைச்சது. எங்கே இருந்து எடுக்கறீங்களோ! :)))

    ReplyDelete
    Replies
    1. அதிரா, தமிழ்நாட்டுல 'எங்கே இருந்து எடுக்கறீங்களோ' அப்படிங்கறதுக்கு அர்த்தம், 'எங்க இருந்து களவாண்டதோ' என்பது. அதுனால கீசா மேடம் சொல்வதை 'பாராட்டா' நினைக்காதீங்க. அனேகமா உள்குத்தாக இருக்கலாம்னு எனக்குத் தோணுது. ஹா ஹா ஹா.

      Delete
    2. தொடங்கிட்டீங்களா நெல்லை உங்க நாரதர் வேலைய ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    3. ஆமாம் என்னாச்சு பூஸாரே!! எதுக்கு இப்படி ஸ்ரீராமுக்கும் நெல்லைக்கும் ஐஸோ ஐஸு!!! ஹா ஹா ஹா ஹா...

      ரெண்டுபேரும் இப்ப சில்லுனு குளிர்ந்து போய் இருப்பாங்களே!!

      கீதா

      Delete
    4. வாங்கோ கீசாக்கா வாங்கோ..
      //கடைசிப் படம் சிரிக்க வைச்சது. எங்கே இருந்து எடுக்கறீங்களோ! :)))//

      எனக்கு எல்லாப் பக்கமிருந்தும் இப்படிப் படங்கள் வரும்:).. பூனைப் படம் கண்டலே உடனே எனக்கு போவேர்ட் பண்ணிடுவினம் என் வீட்டினர் உட்பட:)..

      இப்பகூட நான் ஹெயார்ஸ்டைல் மாத்திட்டேன் தெரியுமோ?:).. அதை அறிஞ்சு அஞ்சு ஒரு பூஸ் படம் அனுப்பியிருக்கிறா:).. அடுத்த போஸ்டில் வெளியிடுறேன்:)..

      Delete
    5. நெ.த
      //அதுனால கீசா மேடம் சொல்வதை 'பாராட்டா' நினைக்காதீங்க. அனேகமா உள்குத்தாக இருக்கலாம்னு எனக்குத் தோணுது. ஹா ஹா ஹா.//

      [im]https://media1.giphy.com/media/qLFXp5lsFZprG/giphy.gif?cid=3640f6095c1e92d27970774563977eb6 [/im]
      கீதா
      //
      தொடங்கிட்டீங்களா நெல்லை உங்க நாரதர் வேலைய ஹா ஹா ஹா ஹா ஹா//

      [im]https://media.giphy.com/media/BMR4cgypuglVu/giphy.gif[/im]

      Delete
    6. @கீதா
      //ரெண்டுபேரும் இப்ப சில்லுனு குளிர்ந்து போய் இருப்பாங்களே!! //

      அப்பூடி எண்டால்தான் என் போஸ்ட்டில இருக்கும் எழுத்துப்பிழை:), டமில்ப்பிழையேதும் இருவரின் கண்ணுக்கும் தெரியாது:) எப்பூடி என் தக்கினிக்கு?:)) ஹா ஹா ஹா...

      Delete
    7. நல்ல தெக்கினிக்கு எப்பவுமே உங்க ஊர் ஐஸ் எல்லாம் அவங்க மேல போட்டு இப்பூடியே சூரியன் வருது வரை ஓட்டலாமே...ஹா ஹா ஹா ஹா..ஓ அதான் எதுவுமே சொல்லலை போல ரெண்டு பேரும் அதுவும் நெல்லை!!! ஹா ஹா ஹா ஹா ஹா...ஆனா பாருங்கோ உங்க செக் கண்டுபிடிக்காம போயிட்டாங்க...இப்ப கிறிஸ்துமஸ் பிஸி...போல....(ஏஞ்சல் நோட் திஸ்!!!!!)

      கீதா

      Delete
    8. இவ்ளோ பிஸிலயும் அவ, ஒரு எழுத்துப் பிழை கண்டுபிடிச்ச பெருமையோடுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுறா கீதா:) ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  31. அதிரா சகோதரி படங்களும் உங்கள் அனுபவத் தகவல்களும் ரொம்பச் சிறப்பு. படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    அதிரா இப்பத்தான் பார்க்கத் தொடங்கியிருக்கேன்...வரேன் வரேன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ.. மிக்க நன்றிகள்...

      கீதா வாங்கோ வாங்கோ இனி டெய்லி போஸ்ட் போடப்போறேன்ன் மறக்காமல் மிஸ் பண்ணாமல் டெய்லி வரோணும்:)..

      Delete
  32. நானும் உங்க அனுபவம் போல எக்ஸ்பீரியன் செஞ்சுருக்கேன் அதிரா...ரொம்ப அதிசயித்து ரசித்தேன்...இயற்கையின் அற்புதத்தை நினைச்சு ரொம்பவே ரசிச்சேன். விண்டரையும் ரசித்தேன்....

    படம் எல்லாம் செம...

    ஊசிக்குறிப்பும், இணைப்பும் செம...நல்லாருக்கு

    ஹா ஹா ஹா அவுக்கு நானும் ஹா ஹா ஹா ஹா...

    எலிப் பிள்ளை பிள்ளையாரைச் சுமந்து கொண்டு செல்வது செம க்யூட்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கீதா, இயற்கையை ரசிச்சு முடியாது.. அதிலும் முகில்களை வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்..

      மிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.

      Delete
  33. இன்று பகலே எல்லோருக்கும் பதில் போட்டிட வேணும் என நினைச்சிருந்தேன், ஆனா முடியவே முடியாமல் போச்ச்:)) மன்னிச்சுக்கோங்க...

    ஆனாலும் பாருங்கோ இம்முறை நானும் அஞ்சுவும் கங்கணம்:) கட்டியிருக்கிறோம் இனி கிரிஸ்மஸ் முடிய டெய்லி போஸ்ட் போடுவதென:) எங்கள் புளொக்குக்கும் வெங்கட் க்கும் போட்டியாக:)) பார்த்திடலாம் இந்தியாவோ பிரித்தானியாவோ என:)) ஹா ஹா ஹா:)..

    அதுக்காக உங்கள் எல்ல்லோரது ஆசியையும் வேண்டி நிற்கிறோம்ம்:))...[ஆசி எண்டால் அடிக்க வரக்குடாது:) ஆச்சிரமத்துக்கு வந்து வாழ்த்திச் செல்லவும்:)].

    ReplyDelete
  34. அனைத்து படங்களும், குறிப்புகளும் அருமை... உங்களின் குறும்பு வெகு ஜோர்...

    ReplyDelete
  35. வணக்கம் அதிரா சிஸ்டர் (சரியா?)

    முதன் முதலில் தங்கள் கண்ட ஊர் அனுபவங்கள் மிகவும் நன்றாக இருந்தது. இரவு 11மணிவரை வெய்யில் ஆச்சரியமாக இருக்கிறது. நானும் உங்களுடன் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டு படித்தேன். இந்த மாதிரி வித்தியாசமான அனுபவங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    நிலவு சூரியன் படங்கள், மேகங்கள் ஜாலங்கள் காட்டும் படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.

    அந்த கப்பல் அது கண்ணழகிதானோ என எண்ண வைக்கிறது. சூப்பராக இருக்கிறது.

    ஊசி செய்திகள் மிக மிக அருமை. உங்களுக்கென்று இப்படிபட்ட வாசகங்கள் எப்படி தோணுகிறதோ? உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். நல்ல வளமான தங்கள் கற்பனைகளுக்கு பாராட்டுக்கள்.

    எலிப் பிள்ளையாரின் வாகனமும், பூசுக்குட்டியின் வேண்டுதலும் மிக அருமையாக இருந்தது. உங்கள் பதிவு எப்போதுமே சுவாரஸ்யமானது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலாக்கா சிஸ்டர் வாங்கோ... ஹா ஹா ஹா...
      சிறிது இடைவெளியின் பின்பு மீண்டும் உங்களைக் காண்பது மகிழ்ச்சி.
      உண்மைதான் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவங்கள்...
      அவ கிட்டத்தட்ட கண்ணழகி போலத்தான் இருக்கிறா ஆனா கண்ணழகி அழகூஊ:)..
      நான் எப்பவும் நல்ல வசங்கள் பொன்மொழிகள் பழமொழிகளை கொப்பியில் எழுதி வப்பேன் முன்பு, ஆனா இப்போ வட்ஸப் வைபர் எல்லாம் வந்தபின்பு எழுத்துக்கு வேலையில்லாமல் இப்படி வருகிறது...

      மிக்க நன்றிகள் பாராட்டுக்கும் ரசித்தமைக்கும்.

      Delete
  36. ஊசி இணப்பு,ஊசி குறிப்பு சூப்பர். நானும் சம்மரில தான் ஜேர்மனி வந்து நேரம் காலம் தெரியாமல் அவதிப்பட்டிருக்கேன்.
    போட்டோக்கள் அழகா இருக்கு அதிரா. 2 வது படங்கள் அழகோ அழகு.
    கடவுளே ..அங்கே தொட்டு,இங்க தொட்டு கடைசில திருவாவடுதுறைக்கு போயிட்டீஈஈங்களாஆஆஆ?
    சந்நிதியானை பார்த்ததும் உங்க ஞாபகம்.. ஹி..ஹி..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.