குட்டிக்குட்டியாக சில சம்பவங்கள், அதனை எப்படித் தொகுத்துச் சொல்வதென்று தெரியவில்லை, இருப்பினும் சொல்லாமல் விட மாட்டேன்:).
singgggg in the skyyyyy:))
1)-உங்களில் யாருக்காவது “பேனா நண்பர்கள்”.. பென் ஃபிரெண்ட்ஸ் இருந்திருக்கினமோ?:).. ஹா ஹா ஹா எனக்கு இருந்தார்களே, அப்பாவின் ஓடர், இலங்கையில் மற்றும் தமிழர்கள் வேண்டாம், வேறு யாராவது எனில் ஓகே என, அப்போ எப்படிக் கிடைத்தார்களோ தெரியவில்லை, எனக்கு அமெரிக்காவில் ஒருவர்[சிட்டியை மறந்து போனேன்], பிரித்தானியாவில் ஒருவராக இரு பேனா நண்பர்கள் இருந்தார்கள் தெரியுமோ? அவர்களின் படங்களை இப்பவும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன், என் படங்களும் அவர்களிடம் இருக்குமென நினைக்கிறேன்., ஆனா இருவரும் என்னைவிட மிகவும் பெரியவர்கள்:).
இவ பிரித்தானிய தோழி.. பெயர் யூலியா.. பெரிய இன்றஸ்ரிங்கான பெயர்வழி இல்லையாக்கும்:)).. போறிங்காகவே லெட்டர் போடுவா.. அதனால விட்டிட்டேன்..
=====================
அடுத்து இவர் பெயர் லிஷாண்டர் கோ:) .. இவருக்குப் பிடித்தது, நம் நாட்டு அரசியல்:) ஹையோ அரசியல் பற்றியே கேட்டுக் கொண்டிருப்பார் அப்போ நான் அப்பாவிடம் அல்லது மாமாவிடம் பதில் எழுதச்சொல்லிக் கேட்டு பார்த்து எழுதுவேன் ஹா ஹா ஹா.
இவர் அந்நேரம் யூனிவசிட்டியில் இருந்தார், அப்போ சொன்னார், இலங்கை பற்றி இலங்கைப் பிரச்சனை பற்றி அங்கு தான் பேசியபோது யாருக்குமே எதுவும் தெரியாதென்றார்களாம், அது தனக்குக் கவலையாக இருந்தது என எழுதியிருந்தார். ஊரில் ஒரு அம்மம்மா எனச் சொல்லும் கிறிஸ்தவ குடும்பம் இருந்தார்கள், அவவோடுதான் நாம் சின்ன வயசில் லூடோ, ஸ்னேக் அண்ட் லடர்.. இப்படி பல கார்ட் கேம்ஸ் விளையாடுவோம்...
அவ எங்கட அம்மாவைப் பார்த்ததும் கேட்பா “உங்கட சின்ன மருமகன்[இந்த லிஷாண்டர்பற்றி] என்னவாம்” என ஹா ஹா ஹா:)..
2)-எங்கள் அப்பாவின் ஒபிஷால், ஒவ்வொரு வருடமும் கெட்டுகெதர் நடக்கும், அப்போ ஒரு தடவை அதுக்குப் போனபோது, நானும் அப்பாவோடு வேர்க் பண்ணும் ஒரு அங்கிளின் மகளும்[நல்ல ஃபிரெண்ட்ஸ் நாமிருவரும்] போய்ப் பக்கத்தில பக்கத்தில இருந்தோம். எல்லாம் முடிந்த பின், கெட்டுகெதர் வீடியோப் பார்த்தோம், அதில், நானும் அவவும் காதில ஏதோ சொல்லி விட்டுச் சிரிக்கிறோம்.. அப்போ அந்த இடத்தில் “ரெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா” பாடலைப் போட்டிருந்தார்கள் வீடியோவில் ஹா ஹா ஹா.. அது மறக்க முடியாததாகி, இப்பவும் அப்பாடல் கேட்டால் அந்நினைவு வந்துவிடும்:).
இதிலிருக்கும் எல்லோருமிப்போ கனடாவில்:) நான் மட்டும் இடையில்
பிளேனால குதித்து விட்டேன் ஸ்கொட்லாந்தில்:)
ஹா ஹா ஹா
3)-எங்களுடையது பெண்கள் கொலிச், அங்கு பிறிபெக்ட் ஆக நானும் இருந்தேன். அந்நேரம் அந்த இடத்து சில கொலிச் களை தொகுத்து பிறிபெக்ட்ஸ் ஐ மட்டுமே அழைத்து ஒரு கெட்டுகெதர் வைத்தார்கள்.. அதுக்கு ஆண்கள் கல்லூரியிலிருந்தும் வந்திருந்தார்கள்.. ஆண்,பெண் கலந்த ஒரு கெட்டுகெதர் அது. டான்ஸ், பாட்டு, விளையாட்டு மேடைப்பேச்சு என ஒரே கலகலப்பாக இருந்தது. என்னுடன் பிறிபெக்ட்டாக இருந்தவர்களில் ஒரு பிள்ளை, அவவின் தந்தை ஒரு இஸ்லாமியர் தாய் கிறிஸ்தவர். ஆனா ஏதோ காரணத்தால் பெற்றோர் குழந்தையிலேயே பிரிந்து, இவ தாயுடன் வளர்ந்து வந்தா, தந்தையைத் தெரியாது, அழகாக இருப்பா.. வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ.. அப்பாடலில் வரும் பெண்போல இருப்பா, ஆனா இவவுக்கு தலைமயிர் சுருட்டை இல்லை, நேரான தலைமயிர் நல்ல நீளமாக இருக்கும்.
இலங்கையைப் பொறுத்தவரை, தந்தை இல்லை எனில், தந்தை ஸ்தானத்தில் இருந்து பொறுப்பாகப் பார்ப்பவர் தாய் மாமன்கள். நாங்கள் மாமாவை திருமணம் பண்ண மாட்டோம், அப்பா ஸ்தானத்தில் வைத்தே பார்ப்போம்.
அப்போ இந்தப் பெண்ணையும், அவவின் மாமா ஆட்களே மிக அருமையாக, எந்தக் குறையுமில்லாமல் வளர்த்தார்கள், ஒரு புது பென்சில், ரேசர், பாக், சூஸ்.. எது வந்தாலும் முதலில் போடுவது அவவாகத்தான் இருக்கும். இப்போ அவ திருமணமாகி யூரோப் வந்ததாக அறிந்தேன்.
சரி இப்போ விசயத்துக்கு வருவோம். இவவை பலர் விரும்பினார்கள் சும்மா சும்மா:), ஆனா சீரியஷாக விரும்பியவர் ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த, அதுவும் இவவைப்போல, பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளையான ஒருவர்... அவரும் நல்ல வெள்ளை கொஞ்சம் குண்டு, ஐயரைப் பார்ப்பதைப்போலவே இருப்பார். அவர்தான் விரும்பிக் கேட்டுக் கொண்டே திரிந்தார், ஆனா இவ யாருக்கும் வாக்குக் குடுத்ததாக இல்லை, இவருக்கும் ஓகே சொல்லவில்லை.
அவரும் பிறிபெக்ட் ஆக இருந்தார், அப்போ அவரும் அந்தக் கெட்டுக்கெதருக்கு வந்திருந்தார். அங்கு, இவவுக்காகவே, இவவைப் பார்த்தபடியே மேடையில் அவர் பாட்டுப் பாடினார்ர்... அதுதான் “பூவே செம்பூவே..”:)..
அப்பாடலில் வரும் “உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே.. பலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளைதானே”.. அந்த வசனத்துக்காகவே அதைப் பாடினாராம்.. ஹா ஹா ஹா:).
4)- இன்னும் நிறைய இருக்கு, ஆனா ஒரே ஒரு பாட்டுக் கதை மட்டும் ஜொள்ளட்டோ:).. ஸ்கூலால் ஒரு பாட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம், போய் அழகாக பல்கனியில் ஏறி இருந்து பார்த்தோம், பலபேர் பல பாடல்கள் பாடினார்கள், அதில் ஒரு பாடல்- ஆண்குரலுக்காக ஒரு அண்ணனும், பெண் குரலுக்காக அந்நேரம் நம் வயதை ஒத்த ஒரு boy உம் பாடினார்கள், ஏனோ அப்பாட்டு மட்டும் நெஞ்சை விட்டு அகலவே இல்லை... “ஞாயிறு என்பது பெண்ணாக.. திங்கள் என்பது கண்ணாக”
இது நான் ஸ்ரீராமுக்குச் சொன்னேனே கண்ணீர்ப் பூக்கள் கவிதை-நானும் எழுதி வைத்திருக்கிறேன் என..
ஊசி இணைப்பு:)
ஊசிக்குறிப்பு
))))))))))))))))))))))))))))))_()_((((((((((((((((((((((((((((
|
Tweet |
|
|||
[im]https://media1.tenor.com/images/e78a85199269b5bd9bed207e47c158a3/tenor.gif?itemid=9277268[/im]
ReplyDeleteவாங்கோ அஞ்சு வாங்கோ நல்லவேளை நீங்க ஜெரி லிங் தேடும் ஹப் ல யாரும் புகுந்து விடவில்லை:)
Deleteஆஆஆ :) நான் தான் first
ReplyDelete[im] https://i.pinimg.com/originals/36/89/06/3689063e3e7f8e3d272cc769b833336b.jpg [/im]
Deleteஊசிகுறிப்பு குத்துதே :) ஹலோ அந்த எழுத்துக்களில் எதுக்கு அவ்ளோ டார்க்கா புள்ளி வச்சிருக்கீங்க கர்ர்ர்ர்ர் :) திருஷ்டி பொட்டு மாதிரி இருக்கு .மியூசிக் நோட் fonts போல எழுதினீங்களா :)
ReplyDeleteஹா ஹா ஹா அது ஒரு லுக்:)) காக இருக்கட்டுமே எனப் போட்டேன், இங் பென் என்பதால் அப்பூடி ஆச்ச்ச்:) அஜீஸ் பண்ணுங்கோ:))..
Deleteமிகுதிக்கு நாளைக்கு வாறேனே.. நல்லிரவு அஞ்சு.
கண்ணீர்ப்பூக்களில் ///விளையாட்டாய் //அது ழை இல்லை ளை ஹஹ்ஹஹ்ஹா
ReplyDeleteஎனக்கும் கவிதை எழுதணும் போலிருக்கே :) உங்க நோட்டை பார்த்ததும்
அஞ்சு.....ஹைபைவ்.🖐 படிக்கிற காலத்திலேயே இப்படிதான் பிழையாக எழுதிவராங்க. இந்த லட்சணத்தில அவா தமிழ் ல "டி" எடுத்திருக்கிறாவாம். நம்ப முடிகிறதா...??
Deleteஹஹஹஹ :) எல்லாம் புகழும் அந்த சிமியோன் டீச்சருக்கே
Deleteஹையோ அங்க கீழ கமென்ட் பாக்ஸ்ல ழை இல்ல ளை ந்னு கொடுக்கும் முன் ஏஞ்சல் உங்க கமென்ட் பார்த்துட்டேன்...அதான் இங்க வந்துட்டேன் ஹா ஹா ஹா ஹேய் சொல்லாதீங்கப்பா...தமிழ்ல டி ஆக்கும்.....
Deleteகீதா
ஆஆஆ கண்பட்டதோ நெஞ்சம் புண்பட்டதோ என... போஸ்ட் போட்டதுதான் திரும்ப வர முடியாமல் போச்சு இங்கின...
Delete//அது ழை இல்லை ளை //
ஹையோ அஞ்சு என் இந்த ழ/ள பிழையை முதன் முதலில் கண்டுபிடிச்சு திருத்தியது 2008 இல்.. அதுவும் முதல் பிழை கண்டு பிடிக்கப்பட்டதே இந்த “விளையாட்டில்” தான்.. நானும் திருத்தி எழுதுறேன் தான் ஆனா மெய் மறந்து எழுதும்போது முடியல்ல.. பழக்க தோசம் கை தானா ரைப் பண்ணிடுது:) அவ்வ்வ்வ்வ்வ்:)) ஹா ஹா ஹா.
///எனக்கும் கவிதை எழுதணும் போலிருக்கே :) உங்க நோட்டை பார்த்ததும்//
நான் பேப்பரில், புத்தகத்தில், ரேடியோவில் என எங்கு கேட்டாலும் பார்த்தாலும் எழுதி வைப்பேன், எனக்க்கு எழுதுவது ரொம்பப் பிடிக்கும் அஞ்சு.
///இந்த லட்சணத்தில அவா தமிழ் ல "டி" எடுத்திருக்கிறாவாம். நம்ப முடிகிறதா...??///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதாரது என் “டி” யில கை வைக்கிறது ஹா ஹா ஹா சிமியோன் ரீச்சர் அம்முலுவுக்கு அடிக்கப் போறா சொல்லிட்டேன்:))..
எனக்கு 5ம் வகுப்பு ஸ்கொலஷிப் எக்சாம் ல 200 க்கு 194 மார்க்ஸ்.. அதுக்குக் காரணம் சிமியோன் ரீச்சர்ர்..
எல்லோரும் ஊருக்குப் போக ரெடியாகியாச்சு, ஆனா எனக்கு ஹை ஸ்கூலில் அப்பிளிக்கேஷன் போட்டு[6 இலிருந்து ஹைஸ்கூல்], வந்து ரெஸ்ட் செய்யவும், ரெஸ்ட் ல பாஸ் பண்ணினால்தான் இடம் கிடைக்கும் என லெட்டர் வந்துது. அப்போ ஹொலிடெ நேரம், அம்மா சொன்னா.., அதிரா.. அப்பாவுடன் நின்று ரெஸ்ட் ஐ முடிச்சுப் போட்டு வா, நாங்க போகிறோம் என, நான் ஒரே துள்ளல் அழுகை, இல்லை நான் ரெஸ்ட் செய்ய மாட்டேன்.. ஊருக்கு வரப்போறேன் என, செய்யாதுவிட்டால் நல்ல ஹைஸ்கூல் கிடைக்காது என்ன பண்ணப்போகிறாய் என இப்படி ஒரே போராட்டமாக இருக்கும் போது என் வைரவர் எனக்குக் கை கொடுத்தார்ர்.. ஸ்கொலசிப் ரிசல்ட் வந்துது, எங்கள் ஸ்கூலில்/ அந்த ஏரியாவில் எனக்குத்தான் ஹையஸ்ட்... பிறகென்ன ரெஸ்ட்ட்டும் இல்லை ஒன்றும் இல்லை உடனேயே அதே ஹைஸ்கூலில் இடம் கிடைத்தது.. நீங்கள் விரும்பும் ஸ்கூல் கேளுங்கள் தரலாம் என்றார்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) பார்த்தீங்களோ வைரவரின் புதுமையை:)) ஹா ஹா ஹா.
//AngelThursday, February 14, 2019 8:57:00 am
Deleteஹஹஹஹ :) எல்லாம் புகழும் அந்த சிமியோன் டீச்சருக்கே//
[im] https://media.tenor.com/images/bc8c022dd1f4021c76ea86b7ef95cf07/tenor.gif [/im]
///.அதான் இங்க வந்துட்டேன் ஹா ஹா ஹா ஹேய் சொல்லாதீங்கப்பா...தமிழ்ல டி ஆக்கும்.....
Deleteகீதா//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதானே அறப்படிச்சவர் கூழ்ப் பானைக்குள் விழுந்தாராமே:)) அப்பூடி இருக்குமோ:)) ஹா ஹா ஹா இதைப் படிச்சால் இப்போ நெல்லைத்தமிழன் விளக்கம் சொல்ல வருவார்ர்:))..
அம்மம்மா அப்பவே சொன்னா.. “அதிரா ஓவராப் படிச்சு டி எடுக்காதே:) பின்னாளில் கஸ்டப்படுவாய்” என ஹா ஹா ஹா:)
// ஞாயிறு என்பது பெண்ணாக திங்கள் என்பது கண்ணாக செவ்வாய் கோவைப் பழமாக //
ReplyDeleteஅது பி .சுசீலாம்மாவின் குரலில் வந்த பாட்டு இல்லையா ..எனக்கும் பிடிக்கும் .ஒவ்வொரு நாளும் வருவது போல மைந்த பாடல் அது .
அருமையான பாடல் அஞ்சு, எப்போ கேட்டாலும் எனக்கு அந்த ஸ்கூல் நினைவு வந்துவிடும்.
Deleteஇந்த பேசாதே பேசாதே பற்றி இன்னிக்கு நினைச்சிட்டே நடந்து வந்தேன் சர்ச்சிலிருந்து :) இனிய ஆச்சர்யம் உங்க போஸ்டில் வந்திருக்கு .நானா காலைல நினைச்சா நைட் போஸ்ட்டா வருதே :) இப்படித்தான் லஞ்சபாக்ஸ் பத்தி நினைச்சா அடுத்த நாள் எபியில் போஸ்ட் ஹாஹாஹா :)
ReplyDeleteஹா ஹா ஹா ஏஞ்சல் சூப்பர்...லஞ்ச பாக்ஸ்!!! ஆஆஆஆஆஆஅ ஸ்ரீராம் பார்க்கலையா...ஹா ஹா ஹா ஓகே ஓகே கீழ உங்க கமென்ட் பார்த்துட்டேன்...ஹையோ தமிழ்ல டி வாங்கினவங்ககிட்ட மாட்டிக்கிட்டீங்களே!!!!!
Deleteகீதா
//நானா காலைல நினைச்சா நைட் போஸ்ட்டா வருதே :) //
Deleteஅஞ்சூஊஊஊஊ, அதிராவுக்கு ஒரு வைரக் காப்பு செய்து போடோணும் எனக் காலையில நினையுங்கோ... நைட் போஸ்ட்ல.. ஐ மீன் போஸ்ட்மன் கொண்டு வந்து தரட்டும் எனக்கு:).. ஹா ஹா ஹா..
ஹா ஹா ஹா கீதா போனாப்போகுது எனக்குத்தான் டி ஆனா அஞ்சுவுக்கு டி இல்லை எல்லோ:) அதனால பிழை விட்டாலும் விட்டிடுவன் பெருந்தன்மையாக.. பிக்கோஸ் மீக்கு டமில்ல டி என்பதால்.. பெருந்தன்மையும் வந்து ஒட்டிப்போச்ச்:)).. ஹா ஹா ஹா ஹையோ.. கல்லைக் கீழ போடுங்கோ எல்லோரும்:).
Deleteits lunch box :)
ReplyDeleteஹா ஹா ஹா சொல்லியிருக்காட்டில், லஞ்சம் வாங்கும் பெட்டியாக்கும் என யோசிச்சிருப்போம்:))
Deleteஅஆவ் !! உங்களுக்கு பென் ப்ரண்ட்ஸ்லாம் இருந்தாங்களா !! இப்பவும் தொடர்பில் இருக்காங்களா லிஷாண்டரும் யூலியாவும் .
ReplyDeleteஇந்த பாட்டீஸ்களுக்கு வேலையே இதுதான் சும்மா கொளுத்திப்போட்டு நம்ம மம்மிஸ் வயிற்றில் tamarind கரைச்சி விடறத்தே வேலை :) ஆமா ரெண்டு பேருமே எப்படி ஸ்ட்ரைப் சட்டை போட்டிருக்காங்க :)
நான் அவங்க ரெண்டுபேர் முகத்தைப் பார்த்தேன். அந்தப் பெண் 'வடிவு'தான். ஆனா ஏஞ்சலின் அவங்க டிரெஸைப் பார்த்திருக்கீங்க... இதுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசமோ?
Deleteஆமா அஞ்சு நானும் படம் பார்த்ததும் நினைத்தேன்..எப்படி ஒரே (கிட்டதட்ட)மாதிரி இருக்கே.. 🤔 🤔 🤔
Deleteஹாஹாஹா நெல்லைத்தமிழன் பார்த்திங்களா ப்ரியசகியும் என்னை மாதிரியே உடையயைத்தான் கவனிச்சிருக்காங்க :) பெண்கள் பொதுவா அப்படிதான் ..
Deletebtw :) அந்த வடிவு யார்னு சொல்ல முடியுமா :))))))))) ஹ்ஹாஹ்ஹா
ஹையோ நானும் அதே நினைச்சேன் பாருங்க ஒரே போல சட்டை...அதெப்படி!!! ..கமென்ட் பாக்ஸ் போடறத விட இங்க நீங்க யாராவது நோட் பண்ணியிருக்கீங்களானு சேர்ந்து உங்க கூடக் கும்மி அடிக்கலாமேனுதான் இங்குட்டு வந்துட்டேன்...ஹா ஹா ஹா
Deleteகீதா
//இப்பவும் தொடர்பில் இருக்காங்களா லிஷாண்டரும் யூலியாவும் .//
Deleteஇல்ல அஞ்சு அது நாட்டுப் பிரச்சனையால போஸ்ட் கூட ஒழுங்கா வராது, சிலது தவறியும் விடும், அதனால அப்படியே கைவிட்டுப் போச்ச்ச்ச்:(.
//இந்த பாட்டீஸ்களுக்கு வேலையே இதுதான் சும்மா கொளுத்திப்போட்டு நம்ம மம்மிஸ் வயிற்றில் tamarind கரைச்சி விடறத்தே வேலை :)//
சே..சே.. இல்லை அஞ்சு, அவ நல்ல ஃபோவேர்ட்டான அம்மம்மா ஜோக்காக பேசுவா, எங்கட அம்மாவும் இதுக்கெல்லாம் குறைஞ்ச ஆள் இல்லை நன்கு பகிடியாகப் பேசுவா,
உடனே அம்மா சொல்லுவா... அது அன்ரி, மாப்பிள்ளை கண்ணாடி போட்டிருக்கிறார் அதுதான் யோசிக்கிறேன் என ஹா ஹா ஹா இப்படித்தான் போகும் சம்பாசனை:).
//ஆமா ரெண்டு பேருமே எப்படி ஸ்ட்ரைப் சட்டை போட்டிருக்காங்க :)//
ஹா ஹா ஹா அந்நேரம் அது பாஷனாக இருந்திருக்கும்போல...
//நெல்லைத் தமிழன்
Deleteநான் அவங்க ரெண்டுபேர் முகத்தைப் பார்த்தேன். அந்தப் பெண் 'வடிவு'தான். //
ஹா ஹா ஹா அதிகமான ஆண்கள், அழகைக் கண்டு மயங்குபவர்கள்தானே:))
//priyasakiThursday, February 14, 2019 5:13:00 am
Deleteஆமா அஞ்சு நானும் படம் பார்த்ததும் நினைத்தேன்..எப்படி ஒரே (கிட்டதட்ட)மாதிரி இருக்கே.//
இந்தப் போஸ்ட்டில் இதுபற்றியும் ஒரு தகவல் சொல்ல நினைச்சேன் மறந்திட்டேன்ன்ன்..
பெண்கள் பற்றிய பொதுவான கருத்து உலாவருவது பற்றி:).
//btw :) அந்த வடிவு யார்னு சொல்ல முடியுமா :))))))))) ஹ்ஹாஹ்ஹா//
Deleteஅதுவா அஞ்சு.. அது எதைப்பார்த்தாலும் ஆரைப்பார்த்தாலும் தமனாவைப் பார்ப்பதைப் போலவேஏஏஏஏஏ இருக்காம் நெ.தமிழனுக்கு:)) ஹா ஹா ஹா.
///Thulasidharan V ThillaiakathuThursday, February 14, 2019 12:19:00 pm
Deleteஹையோ நானும் அதே நினைச்சேன் பாருங்க ஒரே போல சட்டை...அதெப்படி!!!///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நாங்க உண்மையிலேயே பெண்கள் தான் என்பதை:), ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறீங்க எல்லோரும் ஹா ஹா ஹா:).
எனக்கு அப்படிலாம் சான்ஸ் அமையலை அதிரா .யார் கூடயும் பழகாம வளர்ந்து விட்டேன் .இப்போதான் வலையுலகில் நிறைய நட்புகள் முகம் தெரியாட்டியும் அன்பாய் பழகும் நட்புகள் கிடைச்சிருக்கு .நட்புன்ன்றது சந்தோஷமான அனுபவம் அது கிடைக்க வேண்டிய ஸ்கூல் டேஸில் சரியா அமையலை எனக்கு .நீங்க லக்கி .
ReplyDelete/இப்போதான் வலையுலகில் நிறைய நட்புகள் முகம் தெரியாட்டியும் அன்பாய் பழகும் நட்புகள் கிடைச்சிருக்கு...// இதை நினைத்து சந்தோஷப்படுங்க. நாங்க இருக்கோம். 🤗 டோன் வொரி அஞ்சு.
DeleteThanks Priya :))))
Delete[im]https://i.pinimg.com/236x/4f/f7/c0/4ff7c09367d2695ab8aba2ce20a0e350--hug-quotes-quotes-for-lover.jpg?b=t[/im]
ஏஞ்சல் எனக்கு நிறைய நட்புகள் அப்பவும் சரி இப்பவும் சரி...இப்ப வலையுலகிலும் சரி நல்ல அன்பாக...
Deleteஆனா சின்ன வயசுல வீட்டுக்கு எல்லாம் கூப்பிட முடியாது...எல்லாம் பள்ளி, கல்லூரியோடு சரி...இப்பவும் பள்ளி நட்புகள் வாட்சப் க்ரூப் இருக்கு...ஆனா நான் தான் அதுல சேரலை. என் கசின் இருக்கா...எல்லாரும் பெரிய பொஸிஷன்ல இருக்காங்க...என்னைதான் கேட்டாங்களாம் என் கஸின்ட...கஸின் சொல்லி முடியலை...ஆனா..ஏனோ நான் சேரலை...அப்புறம் தொடரவும் முடியலை...
கீதா
///AngelWednesday, February 13, 2019 10:38:00 pm
Deleteஎனக்கு அப்படிலாம் சான்ஸ் அமையலை அதிரா .யார் கூடயும் பழகாம வளர்ந்து விட்டேன்//
அஞ்சு அதுக்கு நம் நாட்டில் இன்னொரு காரணமும் இருக்கு:), மூத்த பொம்பிளைப்பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி மிக மிக பாதுகாப்பாக கட்டுப்பாடாக வளர்ப்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எங்கள் வீட்டிலும் அக்கா பாவம், பயங்கர கொன்றோல் அவவுக்கு.. இப்பவும் ஏசுவா தன்னை கொன்றோலாக வளர்த்தது என ஹா ஹா ஹா.. ஆனா நான் கடசி என்பதால் படு செல்லம் படு சுகந்திரம், என் ஆண்நண்பர்களைக்கூட வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறேன்ன்...
ஒரு தடவை வீட்டுக்கு திடீரென 2 boys 3 girls ஐக் கூட்டிப் போயிட்டேன், கூப்பிட்டு சொல்ல ஃபோன் இல்லைத்தானே, வீட்டில் அப்பா அம்மா நின்றவர்கள், மிக்சர், பிஸ்கட் ரீ எல்ல்லாம் கொடுத்து நன்கு சிரித்து கதைச்சு அனுப்பினார்கள்.. அடுத்தநாள் அந்த போய்ஸ் சொன்னார்கள், தாங்கள், இப்படி உங்கட அப்பா அம்மா சிரித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை என.... அதுக்கு எங்கள் அப்பா ஓவர் சுகந்திரம் தருவதும் ஒரு காரணம், அம்மா பயங்கர ஸ்ரிக்ட் ஆனா அப்பாவால விட்டுப்பிடிப்பா என்னை:)) ஹா ஹா..
நானும் எல்லோரோடும் எப்பவும் நல்ல நட்பாகவே இருப்பேன், ஆனா மிக நெருங்கிப் பழகுவது ஒரு சிலரோடு மட்டும்தான்,..
Deleteஅ3 வயசிலிருந்து இன்றுவரை என் நண்பி, இப்பவும் இங்கிருகிறா எனச் சொன்னேனே.. அவவும் அப்படித்தான் என்னோடு தான் எல்லாம் மனம் திறந்து பேசுவா.. அது என்ன விசயமானாலும்.. அவ எனக்கு ஓட்டோகிராப் எழுதும்போது.. ஒரு வசனம் எழுதினா... அது இப்பவும் இருக்கிறது என நினைக்கிறேன் முடிஞ்சால் தேடிப் போடுகிறேன்ன்..
“என் பள்ளி வாழ்க்கையின் பரிசுப் பொருள் நீதான்”.. என.. அதை வச்சுத்தான் நான் ஒரு கவிதை எழுதி இங்கு போட்டேனே...
இந்த லிங்கில் இருக்கு.. அந்நேரம் அஞ்சு என்னோடு பழக்கமில்லையாக்கும்:) அம்முலு இருக்கிறா:).
https://gokisha.blogspot.com/2010/07/blog-post_18.html
prefect ஆ இருந்திங்களா ? நானும் இருந்திருக்கிறேன் :)
ReplyDeleteprefect என்றால் எங்கள் நாட்டில் மானிட்டர் /ஸ்கூல் லீடர் /ஸ்கூல் boy /கேர்ள் என்று சொல்வாங்க
ஓ... இந்த வார்த்தையை இப்போதான் கேள்விப்படறேன். நெட்ல தேடினா நிறைய ஆர்டிகிள்ல பிறிபெக்ட் என்று உபயோகப்படுத்தியிருக்காங்க.
Deleteஓ... இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். என் பின்னூட்டங்கள் போட்டபின்தான் மற்ற பின்னூட்டங்கள் படிப்பது வழக்கம்!
Deleteநான் நினைச்சேன் உங்க பேரெல்லாம் @போட்டு இதை எழுத .:) அப்புறம் எல்லாரும் என்னை மாதிரி கமெண்ட் படிச்சி பார்ப்பீங்கன்னு தோணுச்சு :)))
Deleteஏஞ்சல் அதிராவின் வார்த்தைகள் எல்லாம் இப்போ நமக்கு மனப்பாடமாக்கும்...அங்கேயே நான் மானிட்டர்னு சொல்லிருக்கேன்...நாமதான் இலங்கைல இருந்தோமே!! ஹா ஹா ஹா ஹா ஹா..
Deleteகீதா
ஆவ்வ்வ் பிரிபெக்ட் தெரியாதோ? அது மொனிட்டர் இல்லை மொனிட்டர் எனில் வகுப்பில் ஹெட் ஆக இருப்பது, பிரிபெக்ட் எனில் ஸ்கூல் ஹெட், அது எலக்ஷன் வச்சே செலக்ட் பண்ணுவார்கள்.
Deleteஅப்போ பிரிபெக்ட் எனில் ஸ்பெஷல் badge தருவார்கள், அதை யூனிஃபோமுக்கு மேல் குத்தியிருப்போம், அதைப்பார்த்தாலே பிரிபெக்ட் அக்கா வருகிறா என எல்லோரும் பயப்படுவார்கள்:)).. வெளியேயும் நம்மைப் பார்ப்போருக்கு தெரியும்.. அதனால ஒரு கெத்தாக இருக்கும் நமக்கு:)..
ஏன் இந்தியாவில் இப்படி இல்லையோ ஸ்கூல் ஹெட்?? பிரிபெக்ட் என்றுதான் இலங்கையில் சொல்வோம். இங்கு பிரித்தானியாவில் head boy, head girl என்கின்றனர்.
S P L = School Pupil Leader என்று சொல்வார்கள்!
Deleteஓ நன்றி ஸ்ரீராம்.
Deleteஹ்ஹ்ஹா :) அந்த பூவே செம்பூவே பின்னாடி இப்படி ஒரு இனிய லவ் ஸ்டோரி இருக்கா :) வாவ் சூப்பர் .
ReplyDeleteஸ்கொட்லாந்து பூனையா ப்ளூ சாரில :) சூப்பரா இருக்கு .பழைய படத்தை அழகா பொக்கிஷமா வைச்சிருக்கீங்க க்ரேட் .
ஏஞ்சலின்... அவங்க இமேஜை இப்படியா காலி பண்ணறது? நான் நினைத்தபடி இப்போ அவங்க 61 இல்லையா? 81ஆ இருக்குமோ? நான் வருஷத்தைச் சொன்னேன்.. வயதை அல்ல... ஹா ஹா.
Deleteஅப்பப்போ டைம் கிடைக்கும்போது கலாய்ச்சி வாலை வாரி விட வேண்டியதுதான் :) ஹாஹாஹா
Deleteநெல்லை அவங்க பாட்டிதான் இந்த ஃபோட்டோ லாங்க் லாங்க் லாங்க் லாங்க் எகோ எடுத்ததாக்கும்!!!!!!!! 81 வருஷம் நா சூப்பர் என்னைவிட ரொம்பவே பெரியவங்கதான் ஹா அஹ ஹா ஹா ஹா ஹா
Deleteகீதா
தினசரிச்சந்தைக்குப் போய்ட்டு வரேன்...மீண்டும் கும்மி அடிக்க
Deleteகீதா
படித்த காலப் படங்கள் சில பொக்கிசமாக வைட்த்திருக்கிறேன் அஞ்சு, இத்தனை நாட்டுப் பிரச்சனை மத்தியிலும் அவற்றைக் கைவிடவில்லை, அப்படித்தான் ஓட்டோகிராப் உம்.. ஒன்றிரண்டு தொலைந்து விட்டது, ஒன்று மட்டும் இருக்குது.
Delete//நெல்லைத் தமிழன்Thursday, February 14, 2019 3:51:00 am
Deleteஏஞ்சலின்... அவங்க இமேஜை இப்படியா காலி பண்ணறது? நான் நினைத்தபடி இப்போ அவங்க 61 இல்லையா? 81ஆ இருக்குமோ? நான் வருஷத்தைச் சொன்னேன்.. வயதை அல்ல... ஹா ஹா.//
ஹா ஹா ஹா ஒற்றைக் காலில நிண்டு யோசிச்சாலும்.. தலைகீழாக நிண்டு யோசிச்சாலும் மீ இப்ப்போ சுவீட் 16 ல இருக்கிறேன்ன்:) ஐ மீன்ன்ன்ன்ன் சுவீட் 16 நடக்குதூஊஊஊஊஊ:))
//AngelThursday, February 14, 2019 9:08:00 am
Deleteஅப்பப்போ டைம் கிடைக்கும்போது கலாய்ச்சி வாலை வாரி விட வேண்டியதுதான் :) ஹாஹாஹா//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எந்தக் காலை எனத் தெளிவாச் சொல்லோணும் அஞ்சு:))
///Thulasidharan V ThillaiakathuThursday, February 14, 2019 12:27:00 pm
Deleteநெல்லை அவங்க பாட்டிதான் இந்த ஃபோட்டோ லாங்க் லாங்க் லாங்க் லாங்க் எகோ எடுத்ததாக்கும்!!!!!!!! 81 வருஷம் நா சூப்பர் என்னைவிட ரொம்பவே பெரியவங்கதான் ஹா அஹ ஹா ஹா ஹா ஹா
கீதா///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்னா ஒரு ஜந்தோசம்:) ஒரு நாளைக்கு நேஎரில வருவேன்ன் அப்போ என்னைப் பார்த்து எல்லோரும் பூச்சி மருந்தடிச்ச கரப்பான் போல மயங்கி மயங்கி விழத்தான் போறீங்க ஹா ஹா ஹா:).. தினசரி சந்தையோ அவ்வ்வ்வ் நினைக்கவே ஆசையா இருக்கு.. போயிட்டு வாங்கோ கீதா.
ஹலோவ் நான்தான் தெளிவா வாலை னு சொல்றேனே இங்கே வாலுடன் திரிவது யாராக்கும் :)
Deleteஅவ்வ்வ் :) எல்லார் ப்ரொபைல் நேமும் கருப்பா எழுத்தில் இருக்கு என்னுது மட்டும் எப்பிடி ப்ளூ நிறத்தில் இருக்கு வொய் வொய் ஹவ் ஹவ் ??????????
Deleteஹா ஹா ஹா அஞ்சு, நான் தான் சொன்னேனே என்னில உள்ள கெட்ட பழக்கம்.. ஒரு எழுத்தைப் பார்த்து.. டக்குப் பக்கெனத் தாவிடுறேன்ன்.. அதனால நானே முடிவெடுத்திட்டேன் அது கால் என ஹா ஹா ஹா.
Deleteஇல்லையே எனக்கு எல்லாமே கறுப்பாகத்தான் தெரியுது.
ரெண்டாவது வகை மனைவிங்க :))))))))) ஹையோ ஹையோ நான் ஒன்னும் சொல்லலை சொல்லவும் மாட்டேன்
ReplyDeleteஹா ஹா ஹா சே..சே.. எதுக்கு அஞ்சு இப்பூடிப் பதறுறீங்க.. நாங்கள் எல்லாம் முதலாவது வகையாக்கும் ஹா ஹா ஹா:))
Delete/ வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ.. அப்பாடலில் வரும் பெண்போல இருப்பா,//
ReplyDeleteசேர்ச் பண்ணி பார்த்தேன் அந்த பொண்ணு பேர் டாப்ஸியாம் :)
அப்போ உங்க ஸ்கூல் பொண்ணுமிப்படிதான் இருந்திருப்பாரோ ..
நீங்கதானே அஞ்சு சொன்னீங்க அவ ஒரு பேகர் இனப் பெண் என, கிட்டத்தட்ட அப்படித்தான் இருப்பா, கலர், உயரம் மொத்தம் எல்லாம்..
Deleteஅது நான் சொன்னது ஆண்ட்ரியா ஜெரேமியா :)
Deletethis girl Taapsee is sikh
அல்லோ அப்பவும் இப்பவும், நான், வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ எனும் பாட்டைத்தானே சொல்கிறேன்ன்...
Deleteமுதல் படம் டைட்டானிக் பூஸ்கள் :) அழகா இருக்கு .பதிவில் அழகழகான நினைவுகளை தொகுத்திருக்கிங்க சூப்பர் நாளைக்கு மீண்டும் வரேன் :)
ReplyDeleteஹா ஹா ஹா அதேதான்.. பார்க்கவே நல்லா இருக்கெல்லோ... வாங்கோ வாங்கோ.
Deleteஎல்லாம் நல்லா இருக்கு. ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு உட்பட. அந்த அம்மம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? உங்க கண்ணீர்ப்புக்களைப் பெரிசு பண்ணிப் படிச்சுட்டுத் திரும்ப வரேன். இப்போதைக்கு ஆஜர் மட்டும் வைச்சிருக்கேன். அழகாய் இருக்கிறாய்; கவலையாக இருக்கிறது! என உங்க ஃபோட்டோ பார்த்துட்டுச் சொல்லி இருப்பாங்களோ? :)))))
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ...
Deleteசே..சே.. அந்த அம்மம்மாவும் எங்கட அம்மாவும் நல்ல கொமெடியாகட்த்ஹான் பேசுவினம், அதெல்லாம் பிரச்சனையாக அம்மா எப்பவும் நினைச்சதில்லை, ஒருவேளை இது ஒரு நம் நாட்டு போய் எனில்.. முறைச்சிருப்பாவோ என்னமோ ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் கீசாக்கா.. நேரமுள்ளபோது வாங்கோ. இம்முறை உங்கள் எல்லோரையும் அடிக்கடி இங்கு ஓடிவர வச்சிட்டனே எப்பூடி?:).
பென் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி இரு சம்பவங்கள் நடந்தது அதிரா.
ReplyDeleteஒன்று 1990ல் நெட் வந்த புதிதில், (அப்போதான் எங்க ஊரில் எனக்கு ஏக்சஸ்-ஆஃபீசில் கிடைத்தது), ஒரு பெண் (அவள் பெயர் ஞாபகம் இல்லை ஆனால் அவளுடைய மெயில் என்னிடம் இருக்கு) எனக்கு மெயில் மூலம் அறிமுகமானாள். அவள் அப்போது யூரோபியன் தேசத்தில் இருந்தாள். அவள் கணவன் பிரிந்து, பிள்ளைகளை அவள் வளர்த்துவந்தாள். நல்ல பெண் என்று தோன்றிற்று. படங்கள் பகிரிந்துகொள்ளவில்லை. அப்புறம் அவள் வேறு வேலைக்குச் சென்றதும் என்னுடைய மெயில் காண்டாக்ட் போய்விட்டது.
இன்னொன்று அந்த சமயத்தில், 'சேட்டிங்' அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்தது. நான் ஒரு பெண் பெயரில், இன்னொரு பெண்ணோடு (முதலும் கடைசியுமாக) சேட் செய்துகொண்டிருந்தேன். ஒரு 40 நிமிட சேட்டிங்குக்குப் பிறகு, அந்தப் 'பெண்', 'நான் ஆண், உங்களுடன் பழக விரும்புகிறேன். இருப்பிடம் ஃபோட்டோலாம் ஷேர் செய்ய முடியுமா' என்றான்.
எல்லோரும் ஒரே மாதிரி நினைப்பார்கள் போல!!! உண்மையில் ஐந்து சதவிகித பெண்கள்கூட சேட்டிங்குக்கு இருந்திருக்க மாட்டார்கள்!!
Deleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..
Delete//அவள் பெயர் ஞாபகம் இல்லை ஆனால் அவளுடைய மெயில் என்னிடம் இருக்கு) எனக்கு மெயில் மூலம் அறிமுகமானாள்//
நம் நாடோ? இல்ல யூரோப்பியனோ?
//இன்னொன்று அந்த சமயத்தில், 'சேட்டிங்' அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்தது. நான் ஒரு பெண் பெயரில், இன்னொரு பெண்ணோடு (முதலும் கடைசியுமாக) சேட் செய்துகொண்டிருந்தேன்///
ஹா ஹா ஹா ஸ்ரீராம் சொல்வதைப்போல பேஸ் புக்கில் பல ஆண்கள் பெண் பெயரில் இருக்கிறார்களாம்.. யாரையுமே நம்ப முடியாது, இதனால்தான் நான் பேஸ் புக்கில் யாருடனும் சட் பண்ணியதே இல்லை, நன்கு தெரிந்தவர்கள் பழகியவர்கள் எனில் மட்டும், அவர்கள் தேவையில்லாமல் கதைக்க மாட்டினம்.. ஏதும் தேவைக்காக பேசினால் மட்டும் பேசியதுண்டு, மற்றும்படி பப்ளிக்கில்தான் எல்லாமும்.
இப்போ பாருங்கோ நீங்க ஸ்ரீராம் கூட படம் போட்டுக் காட்டாமையால டவுட் டவுட்டா வருதே ஹா ஹா ஹா சரி சரி சாட்சிக்கு கோபு அண்ணன், கீதா கீசாக்கா எல்லோரும் இருக்கிறார்கள் என்பதால் ஒத்துக் கொள்கிறேன்..:) முறைக்காதீங்கோ:)
கொலிச் - காலேஜா? பிறிபெக்ட் - மாணவர்களா? இந்த வார்த்தையை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஏஞ்சலினுக்கும் புரிந்திருக்காது. புரிஞ்ச மாதிரி நடிக்கறாங்களோ
ReplyDeleteகர்ர்ரர்ர் :) மியாவ் பேச்சு எழுத்து சின்ஸ் 2010 லருந்து பழக்கம் அதில் ஒருமாதிரி அஜீஸ் (with someones help )பண்ணி கண்டுபுடிச்சிட்டேன் :))))))
Deleteஹா ஹா ஹா இன்னும் ரெயினிங் பத்தலப் போல:)).. இன்னும் கொஞ்சக்காலம் பிடிக்கும்போல இருக்கே அதிராவின் பாஷையை முளுசாப்புரிய:).
Delete//இவவைப் பார்த்தபடியே மேடையில் அவர் பாட்டுப் பாடினார்ர்... // - இப்போ வாழ்க்கையில் அந்த இருவரும் இதை நினைத்து என்ன நினைத்துக்கொள்வார்களோ? நானும் நான் செய்ததை நினைத்து எண்ணிச் சிரிக்கிறேன்.
ReplyDelete//நானும் நான் செய்ததை நினைத்து எண்ணிச் சிரிக்கிறேன்.//
Deleteஆ... முயல்குட்டி! அது என்ன நெல்லை?
//நானும் நான் செய்ததை நினைத்து எண்ணிச் சிரிக்கிறேன்//
Deleteஆஆஆ முசல்க்குட்டியாமே.. அதென்னது?:) சொல்லிட்டுச் சிரிக்கலாமெல்லோ ஹா ஹா ஹா:).
பொதுவா நான் அப்சர்வ் பண்ணினது.... ஒருவனது காதல் நிறைவேறணும்னு அவன்/அவள் நண்பிகள் (அல்லது தெரிந்த பெண்களே) ரொம்ப மெனக்கெடுவாங்க. ஆனால் நண்பர்கள் பொதுவா அதைக் கெடுக்கப்பார்ப்பாங்க. அதன் காரணம் என்ன?
ReplyDeleteநானும் ஒரு லவ் க்கு ஜெல்ப் பண்ணியிருக்கிறேன் நெ தமிழன், ஹொஸ்டலில் இருந்தபோது, ஒரு நண்பி தன் லவ் லெட்டேர்ஸ் மற்றும் பரிசுப்பொருட்களைப் பாதுகாத்துத்தா , வீட்டில் வைக்க முடியாது அம்மா கண்டு பிடிச்சிடுவா என்றா, சரி ஓகே பாவம்தானே, லவ்வுக்காக சாப்பிடாமல் இருந்து ஸ்கூலில் மயங்கி விழுந்தவ.. அப்படிப்பட்டவவுக்கு கெல்ப் பண்ணுவோமே என ஓகே பண்ணினேன்.
Deleteவீட்டில் விசயம் தெரிஞ்சு அடிச்ச அடியில சொல்லிப்போட்டா .. அதிராவிடம்தான் அனைத்தையும் கொடுத்து வைத்திருக்கிறேன் என, அவவின் வீட்டுக்கு ஓரிரு தடவை போயிருக்கிறேன் அதனால அவவின் அம்மா பழக்கம்.
அவ நேரே ஹொஸ்டலுக்கு வந்து மேட்ட்டனிடம் சொல்லிட்டா, மேட்டனுக்கு என்னையும் அப்பா அம்மாவை எல்லாம் நன்கு தெரியும், அதனால மேட்டன், எதுவும் கேட்கவில்லை என்னிடம், அதிரா உங்களிடம் இருப்பதை எல்லாம் கொடுங்கோ என மட்டும் சொன்னா.. ஓடிப்போய் எடுத்து வந்து குடுத்திட்டேன்.
பின்பு என்னைக் கூப்பிட்டுச் சொன்னா, இனிமேல் இப்படி எல்லாம் வாங்கி வைத்தால் அப்பா அம்மாவிடம் சொல்லிப் போடுவேன் என ஹா ஹா ஹா.
இல்லையே.. ஆண்கள் தானே அதிகமாக கெல்ப் பண்ணுவார்கள் காதலுக்கு. சைன் வச்ச்சுக் கல்யாணம் நடத்தி விடுவோரும் உண்டுதானே.. பின்பு அடி விழுந்தாலும் பறவாயில்லை என...
மிக்க நன்றிகள் நெ.தமிழன்.
Deleteகீஏகீ :) நானும் ஒரு லவ் ஜோடிக்கு எனக்கே தெரியாம ஜெல்ப் பண்ணேன் .ஒரு அண்ணா ஆங்கிலோ இந்தியர் அவர் லவர்கிட்ட ஒரு புக் குடுக்க சொன்னார் :) நானும் கொடுத்தேன் அடுத்த நாளே ஜோடி ஓடிப்போக டிக்கட் அதில் வச்சிருந்தது எனக்கு தெரியுமா ?? இல்லை அந்த பொண்ணு அவர் லவனுதான் எனக்கு தெரியுமா ?? பாடபுக் குடுக்கறாரேன்னு நினைச்சி குடுத்திட்டேன்
Deleteகிஃளிகள் கல்கத்தா பறந்தன :) ஓடிப்போய் கல்யாணம் பண்ணி செட்டில் ஆனபின் குடும்பத்தோடு சேர்ந்திட்டாங்க இப்போ தாத்தா பாட்டியும் ஆகிட்டாங்க.ரீசண்டா சிஸ்டர் சொன்னா அவங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்தினு .நான் ஜெல்ப் பண்ணப்போ சிக்ஸ்த் ஸ்டாண்டார்ட் நான் .
எங்கம்மாவுக்கு தெரிஞ்சுதுன்னா நான் காலியாகியிருப்பேன் எங்கம்மா காளியாகியிருப்பாங்க
//எங்கம்மாவுக்கு தெரிஞ்சுதுன்னா நான் காலியாகியிருப்பேன் எங்கம்மா காளியாகியிருப்பாங்க//
Deleteஹா ஹா ஹா அஞ்சுவுக்கும் நல்ல எதுகை மோனையில் எழுத வருதே:)...
எனக்கும் பேனா நண்பர்கள் இருந்தார்கள். அது பெரிய கதை. சில சம்பவங்களும் நடந்தன. வீட்டுக்கு அலுத்து சலித்துதான் தபால் கொண்டு வருவார். வெளிநாடு,உள்நாடு என நிறையபேரின் கடிதங்கள் வரும். இன்ரெஸ்டிங் ஆக இருந்த காலம். பிரச்சனைக்குள்ளும் கப்பல் எப்ப வரும் என காத்திட்ட்ருந்தோம். உணவுப்பொருட்களை விட தபால்கள் வந்தனவா என (எதிர்)பார்ப்பதே வேலை.
ReplyDeleteஆ..நீங்க எழுதிவைத்திருக்கும் ஊசிக்குறிப்பு இப்போ ஒரு ஆடியோவா உலா வருது.இன்னும் சிலதை சேர்த்து.. யாரோ உங்கள் குறிப்பை திருடிட்டாங்க அதிரா..இனி வலதுகொப்பி எடுத்துவைங்க..
வாங்கோ அம்முலு வாங்கோ..
Delete//பிரச்சனைக்குள்ளும் கப்பல் எப்ப வரும் என காத்திட்ட்ருந்தோம். உணவுப்பொருட்களை விட தபால்கள் வந்தனவா என (எதிர்)பார்ப்பதே வேலை.//
ஹா ஹா ஹா நானும் கொஞ்சக் காலம் அதனை அனுபவித்திருக்கிறேன்.
//யாரோ உங்கள் குறிப்பை திருடிட்டாங்க அதிரா..இனி வலதுகொப்பி எடுத்துவைங்க..//
ஹா ஹா ஹா இல்ல கொஞ்சக்காலம் முன், ஓடியோவா வலம் வந்ததிலிருந்துதான் எழுதி எடுத்தேன் அம்முலு..
அப்போ வீடியோவில இப்படி பொருத்தமா பாட்டு போடுவது பாஷனாகிவிட்டிருந்தது. பின்பு அந்த பாட்டை கேட்டால் சம்பவங்கள் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அந்த கால பாட்டு எப்படியும் நாங்க அடிக்கடி கேட்கமாட்டோம்தானே. ஹைலட்டா ப்ளூ சாரியில் தெரிகிறீங்க. அயகா இருக்கு...
ReplyDeleteசில பாடல்கள் மறக்கமுடியாததாகிவிடும். அப்ப ஸ்கூலில் இந்தமாதிரி கெட்டுகெதர் வைப்பார்கள்.
நீங்க சொன்னமாதிரியான சம்பவங்களையும் பார்க்க முடியும். தான் விரும்பிய ஆண்ணோ,பெண்ணோ வந்தா பாட்டு பாடுவது... அந்த நேரம் நல்ல இன்ரெஸ்டிங் ஆன
சம்பவங்கள் நடந்தன. நீங்க எழுதியதை வாசிக்க ஞாபகம் எனக்கு வருது.
///அப்போ வீடியோவில இப்படி பொருத்தமா பாட்டு போடுவது பாஷனாகிவிட்டிருந்தது. //
Deleteஅப்போ என்ன, இப்பவும் அதேதானே நடக்குது கல்யாண வீடுகளில்..
// ஹைலட்டா ப்ளூ சாரியில் தெரிகிறீங்க. அயகா இருக்கு...//
ஹா ஹா ஹா தங்கியூ.. அதுவும் ஒரு அழகிய பொற்காலம்..
உண்மைதான், எல்லோருக்கும் அந்த நாள் லவ் எல்லாம் வந்து போகும் நெல்லைத்தமிழனுக்கு வந்ததைப்போல ஹா ஹா ஹா ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:).
ஞாயிறு என்பது கண்ணாக நல்ல பாடல். பேசாதே தத்துவம் அருமையா இருக்கு.ஆனா அதைதானே அனேகமானோர் செய்கிறார்கள். ஹொஸ்பிட்டலுக்கு போய் ஆறுதலான
ReplyDeleteவார்த்தையை விட நோயாளியை அமைதியில்லாமல் செய்துவிட்டு வாறதுதான் செய்கிறார்கள்.
நீங்க எழுதுவது போல நானும் எழுதுவது வட்டமா பொட்டு வைப்பது அது ஏனோ ஒரு ஸ்டைலா இருக்கும். " ப" எழுவதும் சரிவா. அப்போ எழுதுவது ஒரு அழகோடு இருக்கும். யார் எழுத்து அழகா இருக்கு என போட்டி கூட இருக்கும் இப்ப எல்லாமே டைபிங் ஆக போயிட்டுக்கு.ஆனா நான் இப்பவும் எழுதும் பழக்கத்தை விடவில்லை. ஏதாவது நோட் செய்வது எனில் கொப்பியில் எழுதுவதுதான். பின் கையெழுத்தே போடமுடியாமல் போய்விடுமெல்லோஓஓ
அதே அதேதான் ..இப்போ எப்படி எழுதினாலும் எனக்கு ஆங்கில எழுதும் நடுவில் வருது :) நல்லது எழுதி எழுதி வைப்பது
Delete///ஹொஸ்பிட்டலுக்கு போய் ஆறுதலான
Deleteவார்த்தையை விட நோயாளியை அமைதியில்லாமல் செய்துவிட்டு வாறதுதான் செய்கிறார்கள்.///
உண்மைதான் “பல்லிருப்பவர், கடலைமிட்டாய் சாப்பிடுறார்.. உனக்கென்ன இதில்” என்பது போல ஆகிப்போச்சு உலகம், அடுத்தவரைப் பற்றிச் சிந்திப்போர் குறைவுதான்.
//ஆனா நான் இப்பவும் எழுதும் பழக்கத்தை விடவில்லை. //
அதேதான் அம்முலு, நான் சிலசமயம் கையிலிருக்கும் பேபரில் எல்லாம் பாட்டுக்கள் எழுதுவேன்.. எனக்கும் எழுதப் பிடிக்கும், நல்ல அழகா டிசைனா எழுதி லெட்டர் போடப் பிடிக்கும்... இப்போ எல்லாம் நெட் மயமானதால்.. இது ஈசியாக இருக்குதெல்லோ...
இல்ல அஞ்சு இலங்கைத்தமிழர்களைக் கவனிச்சீங்களெண்டால் எழுத்தில் ஆங்கிலம் கலப்பது குறைவு, ஆனா பேசும்போது நிறைய ஆங்கிலம் கலக்கப் பழகிட்டோம் .
மிக்க நன்றி அம்முலு அண்ட் அஞ்சு.
)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Delete//இல்ல அஞ்சு இலங்கைத்தமிழர்களைக் கவனிச்சீங்களெண்டால் எழுத்தில் ஆங்கிலம் கலப்பது குறைவு, ஆனா பேசும்போது நிறைய ஆங்கிலம் கலக்கப் பழகிட்டோம் .//
இல்லல்ல நான் சொன்னது எனக்கு அ m ம் மா /Aதிரா இப்படி இங்கிலிஷ் லெட்டர்ஸ் வருது அதை sன்னேன்
இதென்ன இது புயுக் கொயப்பம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ரைப் பண்ணும்போது கீ போர்ட்டில் அப்படி வரலாம், அது வரும்.. ஆனா கையால எழுதும்போது வருதோ கர்ர்ர்ர்ர்ர்.. சம்திங் றோங்ங்ங்ங்ங்:) ஹா ஹா ஹா... அஞ்சு இண்டைக்கு .. 108 தடவைகள்... “ஹப்பி வலண்டைன்ஸ் டே அதிரா” என எழுதோணுமாக்கும்... ஹா ஹா ஹா ஒரு வலண்டைன்ஸ் வாழ்த்து வாங்கிறதுக்கு எப்பூடி எல்லாம் பாடுபடவேண்டிக் கிடக்கூ:).
Delete/பெரிய இன்றஸ்ரிங்கான பெயர்வழி இல்லையாக்கும்:// இதில் என்ன சொல்ல வாறீங்க இவாட பேர் இன்ரெஸ்டிங் இல்லை என்றா. அல்லது இன்ரெஸ்டிங்கா எழுதுற பேர்வழி இல்லை என்றா. (//பெரிய இன்றஸ்ரிங்கான பேர்வழி இல்லையாக்கும்.//)
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அவ எதுவும் பெரிசா எழுத மாட்டா... ஏனோ தானோ என இருக்கும் லெட்டர், அப்போ ஒவ்வொருதடவையும் நான் எதை எழுதுவது:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி அம்முலு.
Deleteஇன்று நான் தாமத வருகை! காலை நேரமில்லை!
ReplyDeleteஞாயிறு என்பது எனக்கும் மிகவும் பிடித்த பாடல். டி எம் எஸ் குரலும், சுசீலாம்மா குரலும் தேன், சொர்க்கம்.
வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
Deleteபாடல் பிடித்ததோ நன்றி நன்றி... உங்கள் கலெக்ஷனில் போட்டு வைக்கவில்லைத்தானே இதை?..
ஊசிக்குறிப்பில் முதல் செய்தி நியாயமில்லை. பொறாமையில் விளைந்த செய்தியாய் இருக்கிறது. இரண்டாவது உண்மை!
ReplyDeleteஹா ஹா ஹா பக்கத்து வீட்டைச் சொல்ல மாட்டோம்தான் அது ஓகே.. ஆனா நமக்கென வரும்போது எப்பவும்.. எதுக்கு சோதிக்கிறார் எனத்தானே நினைப்போம்ம்?:).
Deleteஊசி இணைப்பு... உண்மைதான். இப்படிதான் எல்லோரும் யோசிப்போம். இதே போலவே இன்னொன்றும் ஏதோ சொல்வர். ஆனால் அது நினைவுக்கு வரவில்லை.
ReplyDelete//ஆனால் அது நினைவுக்கு வரவில்லை//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)
பேசாதே பேசாதே - நல்ல குறிப்புகள். மு மேத்தா கவிதைகள் எழுதியே வைத்திருக்கிறீர்களா? அதைவிட, அதை இன்னும் பாதுகாத்து வைத்திருப்பது ஆச்சர்யம், பாராட்டுக்குரியது.
ReplyDeleteஅது என் பள்ளிக்காலத்திலேயே எழுதியது ஸ்ரீராம், அக்கொப்பியை பாதுகாப்பாக எடுத்து வந்து சேர்த்துவிட்டேன்.. எனக்கென்ன கவலை எனில் நான் இப்படிச் சேர்க்கும், எழுதும் பொன்மொழிகள், கவிதைகள் எல்லாம்.. என்னோடு முடிந்துவிடுமே.. நம் பிள்ளைகளுக்கு எதுவும் புரியாதே என்பதுதான்... அதனால நான் அவற்றை ஏலம் போடப்போகிறேன்ன்ன்ன்ன்:)).. அதாவது கிட்னி கொடுப்பதைப்போல:).. இன்னொருவர் வச்சுப் படிக்கட்டுமே எனக்குப் பிற்காலம்:)... ஹா ஹா ஹா..
Deleteபிறிபெக்ட் என்றால் என்ன? ஓ, பூவே செம்பூவே பாடலின் பின்கதை இதுதானோ? அப்புறம் என்ன ஆச்சு? காதல் ஜெயித்ததா இல்லையா?
ReplyDeleteபிறிபெக்ட் என்றால் என்ன?///
Deleteமேலே விளாக்கம் படிச்சிட்டீங்க...
// ஓ, பூவே செம்பூவே பாடலின் பின்கதை இதுதானோ? அப்புறம் என்ன ஆச்சு? காதல் ஜெயித்ததா இல்லையா?//
அதுதான் சொன்னேனே அவ ஓகே சொல்லவில்லை என.. அது எப்படி சாத்தியமாகும் ஸ்ரீராம், அவவின் அம்மாவும் மதம் மாறி நம்பிப்போய்த்தான் இப்படி ஆச்சு.. அப்போ இவ கொஞ்சம் கெயாஃபுல்லாக இருப்பாதானே.. அவர் விரும்புகிறார் என்பதற்காக அவரது வீட்டிலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் தானே...
அது அத்தோடு முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:). இதேபோல இன்னொரு ஜோடி... அது நண்பர்கள் பகிடியாக பெயர் கூப்பிட்டுக் கூப்பிட்டு பின்பு அவர்கள் ஜொயின் ஆகி இப்போ லண்டனில்தான் இருக்கிறார்கள்.. அவ டொக்டர்.. அவர் எஞ்சினியர்.
முதல்வகை மனைவிகள் கனவில், கதைகளில் மட்டுமே சாத்தியம்!
ReplyDeleteஹா ஹா ஹா துரை அண்ணன் சொல்லியிருக்கும் கதைபோல, அக்காலத்தில் சாத்தியமாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.
Deleteநீங்கள் ரொம்ப உயரமானவர் என்று தெரிகிறது. இருப்பவர்களில் நீங்கள்தான் உயரம்! அதென்ன பின்னணியில் தேர்ச்ச்சிற்பம் போல...?
ReplyDeleteஉயரம்தான் நான் ஆனா ரொம்ப எனச் சொல்ல முடியாது.
Deleteஅது இந்தப்படம் எடுத்தது, யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் முன்னால். அது தேர் முட்டிச் சுவரிலிருக்கும் சிற்ப வேலைப்பாடு என நினைக்கிறேன்.
இரண்டாவது படம் பார்த்ததும் இது காதலர் தினத்துக்கான பதிவோ என்கிற சம்சயம் வருகிறது!
ReplyDeleteஹா ஹா ஹா இல்லை போஸ்ட் போட்ட பின்னர்தான் நினைவு வந்துது, பின்பு நினைச்சேன் ஒரு வாழ்த்தும் சொல்லியிருக்கலாமே என, சரி ஏதோ விடுபட்டு விட்டது, அப்படியே விட்டிடலாம் என விட்டு விட்டேன்.
Deleteலிஷாண்டர் கோ பத்திரிகையாளராய் இருந்திருப்பாரோ என்னவோ... நைஸாய் விவரம் விசாரித்து பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தாரோ...!!
ReplyDeleteஎனக்கும் அந்த சந்தேகம் இருந்தது வந்தது :)
Deleteஹா ஹா ஹா நீங்க கேட்ட பின்னர் எனக்கும் அப்படி நினைக்கத் தோணுது, ஏதும் யூனிவசிட்டிப் புரெஜெக்ட் க்குக்கூட பாவிச்சிருக்கலாம் ... அப்படி துருவித் துருவிக் கேட்பார் அரசியல் பற்றி. அந்நேரம் அரசியலை கடிதத்தில் எழுது அமெரிக்காவுக்கு அனுப்புவதும் பயமெல்லோ:)).. ஹா ஹா ஹா எப்படியோ நான் தப்பிச்சு விட்டேன்:).
Deleteஅய்யய்யோ... யூலியா படம் போட்டு விட்டீர்களே... அவரே பார்த்து விட்டால் என்ன ஆவது!!
ReplyDeleteஹா ஹா ஹா பார்த்தால் தொடர்புக்கு வந்தாலும் வருவா... பார்ப்போம்ம்..
Deleteஇப்போ பேஸ்புக்கின் மூலம் தானே.. பழைய, கைவிட்டுப்போன காதலர்களையெல்லாம் கண்டு பிடிச்சு, அதனால பல குடும்பங்களில் பிரச்சனைகள் பிரிவுகள்கூட வந்ததாக அறிஞ்சேன்.
பேனா நண்பர்கள் பற்றி அப்போது படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படி யாரும் இல்லை, நானும் முயற்சிக்கவில்லை! சுவாரஸ்யமில்லை.
ReplyDeleteஅது ஒருவிதத்தில் சுவாரஸ்யம்தான் ஸ்ரீராம், இப்போ நாம் புளொக் பேஸ்புக், வட்சப் என பல வழிகளில் தொடர்பு கொள்வதால் தெரியவில்லை, முன்பு நம் அட்ரஸ் க்கு நம் பெயரிட்டு லெட்டர் வரும்போது, அது ஒரு வித மகிழ்ச்சி... ஸ்ராம்ப்ஸ் உம் கலெக்ட் பண்ணுவேன் அப்போ...
Deleteமிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteதங்களின் நினைவு தொகுப்புகள் எல்லாமே நன்றாக சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல நட்புகளுடன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணியிருக்கிறீர்கள். தங்களின் சகஜமான நட்புணர்வுகளுக்கு பாராட்டுக்கள். இன்றைய தினத்துக்கு ஏற்ற மாதிரி, பள்ளி, கல்லூரி நினைவுகளை பகிர்ந்தது அழகாக உள்ளது.
"பேசாதே" முழுவதும் ரசித்தேன்.ஆனால் சிலர் அப்படித்தான் பேசி பலரது மனதில் காயத்தை வளர்க்கிறார்கள். என்ன செய்வது.!
மனைவி ஜோக் வாய் விட்டு சிரித்தேன். எல்லாமே மிகவும் கலக்கலாக உள்ளது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Delete//இன்றைய தினத்துக்கு ஏற்ற மாதிரி, பள்ளி, கல்லூரி நினைவுகளை பகிர்ந்தது அழகாக உள்ளது.//
உண்மைதான் .. அது நினைத்துச் செய்யவில்லை, தானாக அமைந்து விட்டது.
//"பேசாதே" முழுவதும் ரசித்தேன்.ஆனால் சிலர் அப்படித்தான் பேசி பலரது மனதில் காயத்தை வளர்க்கிறார்கள். என்ன செய்வது.! //
அதுதான், இதில் அறியாமல் செய்வோரும் உண்டு, அறிஞ்சே செய்வோரும் உண்டு.
மிக்க நன்றிகள் கமலாக்கா.
புலிக்கு பிறந்த பூஸார் அதிரடி அதிரா கேட்ட கேள்வி என்னை ரொம்பத்தான் அலட்டியது. ரூம் போட்டு கைத்தான் பேனுக்கு அடியில் உட்கார்ந்து திங் பண்ணப்போ வந்தது ஞானோதயம். காதல் என்பது கத்தரிக்காய் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. அது அந்த வயதில் தோன்றும் பருவம். பெண்களுக்கு பருவம் வருவது போன்று தான். அதில் இருந்து சாதாரணமான யாரும் தப்பமுடியாது. சிலர் அதில் மிகவும் துன்பம் அடைவார்கள் சேரனின் ஆட்டோகிராப் மாதிரி.சினிமாக்காரர்களின், கவிஞர்களின் கையில் படும்போது சித்திரவதைப்படும்.
ReplyDeleteJayakumar
வாங்கோ ஜேகே ஐயா வாங்கோ.
Delete///ரூம் போட்டு கைத்தான் பேனுக்கு அடியில் உட்கார்ந்து திங் பண்ணப்போ வந்தது ஞானோதயம்//
ஹா ஹா ஹா என் கவிதையை யூம்:) பண்ணிப் படிச்சு யோசிச்சிருக்கிறீங்க...
//அது அந்த வயதில் தோன்றும் பருவம்.//
அப்படியும் ஈசியாச் சொல்லிட முடியாது.. காதல் என்பது மனசு சம்பந்தப்பட்டது.. அதுக்கு வயதேது?:)..
//சினிமாக்காரர்களின், கவிஞர்களின் கையில் படும்போது சித்திரவதைப்படும்.//
ஹா ஹா ஹா நல்லாச் சொல்லிட்டீங்க.
மிக்க நன்றிகள்.
அதிரா இப்பதான் உங்க பதிவுக்கு வர முடிஞ்சுசு....லேட்டாத்தான் பார்த்தேன் உங்க பதிவு...அப்புறம் கரன்ட் போயிடுச்சு இப்பத்தான் வந்துச்சு...
ReplyDeleteஊசிக்குறிப்பு இணைப்பு செம...அதுவ்ம் பேசாதே பேசாதே சூப்பர்...
பூவே செம்பூவேக்குப் பின்னாடி ஆஹா அழகான லவ் ஸ்டோரி அது சரி அந்த லவ் வெற்றியடைஞ்சுதா..ஹையோ இன்று இது மூன்றாவது மண்டைக் குடைச்சல்!!! ஹா ஹா ஹா...
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Deleteபெங்களூரிலயும் கரண்டைக் கட் பண்ணீனமோ கர்ர்:)).. நிலவுக்கொளிச்சுப் பரதேசம் போன கதையா இருக்கு கரண்ட் கதை:).
//அது சரி அந்த லவ் வெற்றியடைஞ்சுதா.//
ஹா ஹா ஹா ஸ்ரீராமும் இதைத்தான் கேட்டிருந்தார், போஸ்ட்டிலேயே சொல்லியிருக்கிறேனே.. அவ ஓகே சொல்லவில்லை என்று, அவவுக்கு அவவின் மாமாக்கள் மாப்பிள்ளை பார்த்து யூரோப்பில் ஒரு நாட்டுக்கு வந்தாவாம் என அறிஞ்சேன்.[மாமா ஆட்களும் அங்குதான் இருக்கிறார்கள் போலும்]
ஓ நீங்களே சொல்லிருக்கீங்க இவ அப்பையனுக்கு யெஸ் சொல்லவில்லைனு....ஓகே ஒகே...அப்ப 2 குடைச்சல்தான் ஹப்பா...ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
ஆஆஆஆஆ நான் இக்கொமெண்ட்டைப் படிக்காமல் மேலே கை வலிக்க கால் வலிக்க:).. கொமெண்ட் போட்டேன் வியக்கமாக:) உங்களுக்கு ஹா ஹா ஹா.
Deleteபென் நண்பர்கள் எனக்கும் இருந்தார்கள்....ஒரு ஆண், இரு பெண்கள்....மூன்று பேர். வெளிநாட்டவர். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க் பீப்பிள். அவர்களும் கல்லூரி என்றுதான் சொல்லிக் கொண்டனர். .ஆனால் படங்கள் எல்லாம் ஷேர் செய்ததில்லை. ஏனென்றால் அப்போ எல்லாம் என் ஃபோட்டோஸ் கிடையாது. ரெண்டாவது எனக்குத் தபால் அனுப்புவது என்பது என் வீட்டிலிருந்து நடக்காது...கஷ்டம். பைசா தரமாட்டாங்க. நான் பஸ்ஸில் செல்லாமல் நடந்து சென்று சேர்த்து வைத்ததைப் பயன்படுத்திக் கொள்வேன். ஆனால் கட்டுப்படியாகலை ஸோ 2, 3 முறைக்குப் பின் தொடர்பை விட்டுவிட்டேன்...ஒரு ஆர்வத்தில் தொடங்கினேன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால்...ஆனால் சூழ்னிலை சப்போர்ட்டிவாக இல்லை....ஹா அஹ ஹா
ReplyDeleteகீதா
///பென் நண்பர்கள்//
Deleteஹா ஹா ஹா இதைப் படிச்சதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது கீதா... ஒரு அக்கா இருந்தா, அவ இப்போ இல்லை:(, அவ பேசும்போது இப்படித்தான் சில வார்த்தைகள் பேசுவா மறந்திட்டேன், அவ சொல்வதைக் கேட்டால் சிரிப்பு வரும்... இப்போ “சித்திரை மந்த்”... இப்படி சில .. நாங்கள் ஏப்ரல் மாதம் என்போம், ஆனா சித்திரை மந்த் எனச் சொல்ல மாட்டோமெல்லோ:).
ஓ... உண்மைதான் கீதா அந்நேரம் இதுக்கெல்லாம் சப்போர்ட் தேவை, அத்தோடு பதில் வந்த உடனேயே நாமும் பதில் போட்டிடோணும்.. இல்லை எனில் அது தொடர்பு குறைஞ்சதுபோலாகி விடுபட்டுவிடும். நீங்க இலங்கையில் இருந்தோ தொடர்பு வச்சிருந்தீங்க.
அதிரா நீங்க உங்க பேனா நண்பர்கள் படங்கள், லெட்டர்ஸ் எல்லாம் பொக்கிஷமா வைச்சுருக்கறதுக்கு பாராட்டுகள்..ஸோ ஸ்வீட்!!! அண்ட் க்ரேட்!!!
ReplyDeleteநானும் இப்படி டயரி மூன்று வைத்திருந்தேன்...அதில் பிடித்த சேயிங்க்ஸ், கவிதைகள், நண்பர்களின் கமென்ட்ஸ், ஆட்டோ கிராஃப்...(ஆட்டோ க்ராஃப் இருக்கு என்று நினைக்கிறேன் தேடி எடுத்துப் போடுகிறேன் பதிவாக....(வடிவேலு ஸ்டைல்ல என்னையே நான் பாயின்ட் செய்து கேட்டுக் கொள்கிறேன் "நீ ....பதிவு...போடப் போறியா..ஹா ஹா ஹா !!) என்னவோ தெரியலை அதிரா நிறைய பதிவுகள் இருக்கு போட ஆனால் போடவே வரமாட்டேங்குது....ம்ம்ம்
வீட்டு வேலை, வேறு வேலைகள்....அப்புறம் பதிவுகள் வாசித்து கமென்ட்ஸ் போட்டு போகும் போது...நேரம் சரியாகிப் போகுது...
கீதா
நாட்டுப் பிரச்சனை இல்லை எனில், என்னிடம் ஒரு அறை அளவு பொக்கிஷம் இருந்திருக்கும்.. நான் எழுதாத நாட்களில், நான் ஏழியாக நித்திரையாகிவிட்டால், என் தலையணைக்குக் கீழே இருக்கும் டயரியை எடுத்து, என்.. மேலே கூறிய பெஸ்ட் ஃபிரெண்ட்[இங்கிருப்பவ] அன்று நடந்ததை எழுதி வச்சுப்போட்டுப் படுப்பா ஹா ஹா ஹா. அடுத்தநாள் எழும்பிப் பார்ப்பேன் டயரி எழுதப்பட்டிருக்கும். இருவரும் எப்பவுமே ஒட்டிக்கொண்டே திரிவதால், எனக்கு தெரிந்தது நடந்தது அவவுக்கும் தெரிஞ்சிருக்கும்:).. அதெல்லாம் தொலைந்து விட்டது.
Deleteபோஸ்ட் போடுங்கோ கீதா.. நாமும் அப்படித்தான் அலுப்பில் போடாமல் விடுவது, ஆனா நான் போடாமல் விடுவதற்கு இன்னொரு காரணம், பதில் குடுக்க ரைம் கிடைக்கும் எனத் தெரிஞ்சால் மட்டுமே போடுவேன்.
இல்லை இடைக்கிடையாவது நம் பக்கத்தையும் தூசு தட்டோணும் கீதா.
உங்க ஃப்ரென்ட்ஸ் உங்கள் சிறு வயது அனுபவங்கள் எல்லாமே நல்ல நினைவுகள் அதிரா..
ReplyDeleteகாலேஜ் மானிட்டரா இருந்தது....நிகழ்ச்சிகள் எல்லாம் எப்படி அதிரா கல்லூரி படிப்பு எல்லாம் அச்சமயம் இலங்கைப் பிரச்சனைகள் எல்லாம் இருந்திருக்குமே.. இல்லையா? கடினமாத்தான் இருந்திருக்கும்..இல்லையா
கீதா
அப்போது அது கஸ்டமாக இருந்தாலும் ஒரு வித மகிழ்ச்சியான காலமாகவே முடிஞ்சு போச்சு, நமக்கு பெரிய இழப்புக்கள் சேதங்கள் வராமையால் அந்நேரம், என்றுகூடச் சொல்லலாம்.. பல நாட்கள் கர்த்தால், கடையடைப்பு என மூடப்பட்டுவிடும்... சரி விடுங்கோ எல்லாம் கடந்து வந்தாச்ச்ச்ச் ஹா ஹா ஹா.
Deleteஉங்கள் பேனா நண்பர் ஷிலாண்டர் ஒரு வேளை எழுத்துக்காரரா இருந்திருப்பாரோ அதிரா..? இலங்கைப் பிரச்சனை பற்றியே பேசியிருக்காரே?!!! உங்கள்ட நியூஸ் கலெக்ட் செய்து என்று....
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா அதைத்தான் ஸ்ரீராம் சொன்னார் அஞ்சுவுக்கும் யோசனை வந்ததாக சொன்னா, எனக்கு இதுவரை அப்படி நினைவு வரவில்லை, இப்போதான் சிந்திக்கிறேன்ன்.. ஏதும் புரொஜெக்ட் செய்யப் பாவித்திருக்கலாம்... தெரியவில்லை, இல்லை எனில் அமெரிக்காவில் படிக்கும் ஒருவருக்கு எதுக்கு அவ்ளோ அக்கறை?:).. ஹா ஹா ஹா.
Deleteஉங்கள் ஃபோட்டோ பேக் க்ரவுன்ட் ரொம்ப அழகா இருக்கே...மகாபலிபுரம் கற்சிலை போல இருக்கே...தேர் யானை என்று....
ReplyDeleteமுதல் பூஸ் படம் பார்த்ததும் டைட்டானிக் நினைவு வந்தது...
கீதா
ஹா ஹா ஹா திரும்பவும் ஸ்ரீராம் கேட்ட கேள்விதான், அதெப்படி தேர்தான் என கரெக்ட்டாக் கண்டு பிடிக்கிறீங்க.. ஓ சில்லு தெரிவதாலோ?... அது தேர்முட்டி.. தேர் விடும் கொட்டகை என்று சொல்லலாமோ.. பெரிய உயரமாகக் கட்டி அதனுள்தான் தேர் இருக்கும்... பின்பு தேர்த்திருவிழாவின்போதுதானே வெளியே இழுப்பார்கள்... அது டைட்டானிக் பூஸ் தான்:)
Deleteஞாயிறு என்பது பெண்ணாக....அருமையான பாடல் மிகவும் பிடிக்கும் அதிரா...இப்பத்தான் தெரியும் காக்கும் கரங்கள் படத்தில் என்று...
ReplyDeleteகீதா
நானும் படம் பற்றி யோசிக்கவில்லை, பார்க்கவுமில்லை கீதா... அழகிய பாடல்தானே..நன்றி.
Deleteஅனைத்துக்கும் மிக்க நன்றிகள் கீதா.
Deleteவணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteமுதல் படம் அழகாய் உள்ளது. ஞாயறு என்பது என்ற அந்த பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.
கண்ணீர் பூக்கள் கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளன. ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன். கடைசி கவிதை "முகிலினங்கள் அலைகின்றதே முகவரிகள் தொலைந்தனவோ..! முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" என்ற மோகன் பாட்டை நினைவு படுத்தியது. சகோதரி பிரியசகி சொல்வது போல தங்கள் கவிதைகளை யாரோ திருடி விட்டார்களோ..! உங்களைப் போலவே, உங்கள் கையெழுத்தும் மிகவும் அழகாக உள்ளது.
ஊசிக்குறிப்பும், ஊசி இணைப்பும் சூப்பர். வட்டப் பொட்டுக்கள் வைத்துக்கொண்ட ஊசிக்குறிப்பின் எழுத்துக்களும், லஷ்மிகரமாய் நன்றாக உண்மையை உரைத்தன. தங்கள் கையெழுத்துகள் அருமையாக இருக்கிறது.
உங்களுக்கு பேனா நண்பர்கள். (நானும் கேள்விபட்டுள்ளேன். ஆனால் நான் முயன்றதில்லை. அதற்குண்டான தைரியமும் இல்லை) எனக்கு என் பேனாவே நான் நட்போடு நேசிக்கும் சமயத்தில் எதிரியாகி, மூக்கை பிளந்து கொண்டு, இங்க் புனலை பேப்பரில் கொட்டி விடும். ஹா. ஹா.
அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா மறுபடியும் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
Delete//ஞாயறு என்பது என்ற அந்த பாடல் கேட்க மிகவும் இனிமையாக இருக்கும். //
உண்மைதான் மனதுக்கு இனிமை.
//ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன்//
ஆவ்வ் ஆனா அவை அனைத்தும் கண்ணீர்ப் பூக்களா தெரியவில்லை..
//"முகிலினங்கள் அலைகின்றதே முகவரிகள் தொலைந்தனவோ..//
ஓ கரெக்ட்டாச் சொல்லிட்டீங்க... அதிலிருந்துதான் பாடல் பிறந்ததோ என்னமோ.. அது பெரிய கவிதை அப்படியே அடுத்த பக்கம் தொடர்கிறது.. அதனால்தான் அம்புக்குறி போட்டிருக்கிறேன்ன்..
//சகோதரி பிரியசகி சொல்வது போல தங்கள் கவிதைகளை யாரோ திருடி விட்டார்களோ..//
ஹா ஹா ஹா எதுவும் என் சொந்தக் கவிதைகளோ பொன்மொழிகளோ கொப்பியில் இல்லை, சொந்தக் கவிதைகள் எனில் நான் புளொக்கில் போடுவதுதான், கொப்பியில் இருப்பவை என் மனதுக்குப் பிடிச்சவற்றை எழுதி வைப்பேன்ன்.. அதனால நான் எப்பூடிச் சண்டைக்குப் போக முடியும் ஹா ஹா ஹா:).
//உங்களைப் போலவே, உங்கள் கையெழுத்தும் மிகவும் அழகாக உள்ளது.//
Deleteஅஞ்சூஊஊஊஊஉ ஓடிக்கமோன்ன்ன்ன்ன் மீ பிளையிங்யா:)).. சே..சே.. இதை எல்லாம் அஞ்சு படிக்க மாட்டாவே:).. கீதா எங்கள்புளொக் சமையல் குறிப்பில், என் பிறந்தநாள் பரிசாக ஒரு பறக்கும் பூஸ் படம் போட்டா... அது நினைவுக்கு வருதே ஹா ஹா ஹா.
//தங்கள் கையெழுத்துகள் அருமையாக இருக்கிறது. //
நன்றி நன்றி.. இதைக் கேட்பதற்காகத்தானே நானும் கஸ்டப்பட்டு எழுதிப் படமெடுத்துப் போடுகிறேன்ன்:)) ஆனா எல்லோரும் சொல்ல மாட்ட்டினமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா...:).
//எனக்கு என் பேனாவே நான் நட்போடு நேசிக்கும் சமயத்தில் எதிரியாகி, மூக்கை பிளந்து கொண்டு, இங்க் புனலை பேப்பரில் கொட்டி விடும். ஹா. ஹா.//
ஆவ்வ்வ் இங் பென் என்றதும் எனக்கு நினைவு வருது.. முதன் முதலில் நான் 5ம் வகுபு ஸ்கொலஷிப்பில் நல்லபடி பாஸ் பண்ணியமைக்காக எனக்கொரு “ஹீரோ இங் பென்” பரிசாக கிடைச்சது.. பலகாலம் வச்சிருந்தேன் அதை..
மிக்க நன்றிகள் கமலாக்கா.
ஞாயிறு - பிடித்த பாடல்...
ReplyDeleteபேசாதே பேசாதே - அருமை...
வாங்கோ டிடி வாங்கோ.. மிக்க நன்றிகள்.
Deleteசுவையான குறிப்புகள். சில நினைவுகள் மறக்க முடியாதவை இல்லையா..... எப்போதாவது இப்படி பழைய நினைவுகளை மீட்டு அக்காட்சிகளை மனதில் ஒரு ஓட்டம் ஓட்டிப் பார்ப்பதுண்டு. நீங்க முடியாத நினைவுகள் சில உண்டு!
ReplyDeleteதொடரட்டும் பதிவுகள்.
வாங்கோ வெங்கட் வாங்கோ.. உண்மைதான் யாராவது தட்டி விட்டால் போதும், அதனைத் தொடர்ந்து அப்படியே பழைய நினைவுகள் வந்துவிடும்...
Deleteமிக்க நன்றிகள் வெங்கட்.
பாடல் பிடித்த பாடல். காக்கும் கரங்கள் படத்தில் வந்த பாடல்.
ReplyDeleteஎன் அண்ணனுக்கு பேனா நண்பர்கள் இருந்தார்கள்.
//இதிலிருக்கும் எல்லோருமிப்போ கனடாவில்:) நான் மட்டும் இடையில்
பிளேனால குதித்து விட்டேன் ஸ்கொட்லாந்தில்:)//
உங்கள் சின்ன வயது படம் அழகு.
கொலுசு சத்தம் கேட்டு ஆவலுடன் திரும்பி பார்த்தவர் ஏமாற்றம் சாபமாய் வருதோ!
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ, கல்யாண வீடு முடிஞ்ச சந்தோசக் களைப்பில் இருப்பீங்க என நினைச்சேன், வந்திருக்கிறீங்க மகிழ்ச்சி எனக்கு.
Delete//உங்கள் சின்ன வயது படம் அழகு.//
நன்றி.
//கொலுசு சத்தம் கேட்டு ஆவலுடன் திரும்பி பார்த்தவர் ஏமாற்றம் சாபமாய் வருதோ!
//
ஹா ஹா ஹா சிலசமயம் நாமும் இப்படி ஏதாவது ஒன்றில் ஏமாறுவதுண்டெல்லோ:)... பஸ் க்கு வெயிட் பண்ணும்போது.. அதே சத்தத்தோடு லொறி வந்தால்ல்ல்:)..
//நாங்கள் மாமாவை திருமணம் பண்ண மாட்டோம், அப்பா ஸ்தானத்தில் வைத்தே பார்ப்போம்.//
ReplyDeleteநாங்களும் அப்படித்தான். தாய்மாமாவை திருமணம் செய்ய மாட்டோம்.
ஓ அப்படியா கோமதி அக்கா? நான் நினைச்சேன் தமிழ்நாட்டில் எல்லோருமே அப்படித்தான் என.. இதேபோல கீழக்கரையிலும், இலங்கையைப்போல பெண்களுக்கே வீடு, காணி குடுப்பினமாம்.. ஸாதிகா அக்கா சொன்னா.
Deleteபேசாதே பேசாதே நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஉண்மைதானே நன்றி.
Deleteகண்ணீர் பூக்கள் கவிதை, ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு அனைத்தும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteஉங்கள் கையெழுத்து மிக அருமை.
ReplyDeleteஎழுத்து பிழை இல்லை.
அப்போ இப்போது எழுத்து பிழை விடுவது வேண்டுமென்றுதானோ?
கோமதி அக்கா, நீங்க எல்லோரும் தப்புத்தப்பா புரிஞ்சு வச்சிருக்கிறீங்க என்னை கர்:)).. எனக்கு ழ/ள மட்டுமே.. மட்டுமே பிரச்சனை.. வேறு எந்த எழுத்துப் பிழையும் கிடையாது.. வேறு எழுத்தில் பிழை எனில் -அருகில் ஒரு ஸ்மைலி போடுவேன், அது வேண்டுமென்றே எழுதுகிறேன் என அர்த்தம்:)) ஹா ஹா ஹா:).
Deleteமிக்க நன்றிகள் கோமதி அக்கா.
குட்டி குட்டி நினைவுகள்...என்றும் நம் மனதில் நீங்காதவை கள்..
ReplyDeleteஇடை இடை யே வரும் பெட்டி செய்திகளும் வெகு சுவை ...
சூப்பர் ..
வாங்கோ அனு வாங்கோ.. மிக்க நன்றிகள்.
Delete