நல்வரவு_()_

Happy Birthday to dear Anju...

Saturday, 23 January 2010

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -4

இனியும் இது வரலாமோ.... ~கோபம்~
()ஒரு மனிதன் கோபம் அடையும்போது, அவர் மனதுக்குள்ளேயே புயல் எழும்புகிறது, மனச்சாட்சியை அது அழித்துவிடுகிறது.

()சூழ்நிலையும் மனிதர்களும் துன்புறுத்தினாலும், ஒரு அறிவாளி, தன் நிலையைவிட்டு அசையாமல், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்க வேண்டும்.

()கோபம் முதற்கட்டத்தில் வென்றதுபோல் தெரிந்தால், நிரந்தரமாகத் தோல்வி அடையப்போகிறது என்று பொருள்.

()எது நடக்கக்கூடாது என்பதற்காக கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது.

()மனதில் பகைமையை அடக்கி வைத்தல், நேரடிப் போரை விடக் கொடியது.()அறுந்த பட்டமும், ஆத்திரக்காரரின் பேச்சும், எதிலே போய் முடியுமென்பது, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

()சீறிச் சினப்பதற்கு 60 தசைகள் இயங்க வேண்டும், ஆனால் சிரிப்பதற்கு 13 தசைகள்தான் இயங்க வேண்டும், ஆகவே வீணே ஏன் நாம் சக்தியை இழக்க வேணும்?

()உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்கவேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

()ஒரு பூனை திருட்டுப்போய்விட்டதென நீங்கள் சட்டத்தை நாடினால், ஒரு பசுவையே இழக்கவேண்டிவரும்.

()கடன் கொடுத்தவருக்கு கோபம் கூடாது, கடன் வாங்கியவருக்கு ரோசம் கூடாது.

()நாய், தன் நாக்கை ஆட்டாமல் வாலை ஆட்டுவதினால்தான், அதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

()உண்மையான வீரன் யார் என்றால், எதிரிகளை அதிகமாகக் கொல்லும் உடல் வலிமையுள்ளவர் அல்ல, தனக்கு வரும் கோபத்தை அடக்கிக் கொள்பவரே.


Cool down பூஸ்.... cool down...
A silent tongue and true heart are the most admirable things on earth. ...
இத்தனை தத்துவ முத்துக்களையும் படித்தபின்பும், கோபம் யாருக்கும் வருமோ?...


பின் இணைப்பு...

பூனை விரட்டி வளர்ப்பவர்களெல்லாம், பூனையைக் கோயிலில் கண்டதும், ஓடிச் சென்று படமெடுக்கிறார்கள், அதுவும் பாருங்கள் கிட்டப்போய் எடுக்கப் பயமாக்கும்... நிழல்பட கருவி, படமெடுத்தவரின் நிழலையும் படமெடுத்துவிட்டதே
பூனையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல், ரின்னிலே அடைத்துவிட்டாராம்.... என்ன கொடுமை இது...


அப்பாடா.. கோபமில்லாமல், பொறுமையாகப் படித்த உங்களுக்கு.... மிக்க நன்றி.

22 comments :

 1. அதிரா.. அப்போ கோபமென்பது ஒரு எக்சர்சைஸ் மாதிரி தானே.. இனிமேல் தினமும் செய்யப் போறேன் :)))

  ReplyDelete
 2. சந்தனா.. எக்‌ஷஷைசைத்தானே? கவனம் மெல்ல மெல்ல ஸ்ராட் பண்ணுங்கோ.. மிக்க நன்றி.

  ஹைஷ் அண்ணன் இப்பத்தான் பார்க்கிறேன், பூனையை ரின்னிலே அடைத்து திருப்பி வைத்துவிட்டு அங்கு யாரோடு கதைக்கிறீங்கள்? ரெட் கலரைச் சொன்னேன்.

  ReplyDelete
 3. நல்ல ததுவங்கள்.சரி சொந்த சரக்கா?இல்லை...?

  ReplyDelete
 4. //()உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்கவேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.////()ஒரு மனிதன் கோபம் அடையும்போது, அவர் மனதுக்குள்ளேயே புயல் எழும்புகிறது, மனச்சாட்சியை அது அழித்துவிடுகிறது.//பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய முத்துக்கள்

  ReplyDelete
 5. ஸாதிகா அக்கா!!!
  “மாமா வீட்டு முற்றத்திலே
  மாமரம் ஒன்று நிற்கின்றது
  பொன்னைப்போலே பூப்பூக்கும்
  பவளம்போலே பழம்பழுக்கும்

  மாமா என்னைக் கூப்பிட்டார்
  மாம்பழம் தந்தார் சாப்பிட்டேன்
  ””பொய்சொல்ல மாட்டேன் எப்போதும்””
  பொய் என்றால் என் கையை மணந்து பாருங்கோ”

  ஸாதிகா அக்கா பாட்டு எப்படி? நான் சொல்லியிருக்கிறேனெல்லோ :Labels பாருங்கோ.

  உண்மையேதான் உணர்... இது எங்கட கண்ணதாசன் சொன்னது.. மற்றதும் அவர்தானோ தெரியவில்லை. மிக்க நன்றி.

  ReplyDelete
 6. /பொய் என்றால் என் கையை மணந்து பாருங்கோ”// கையை கொடுங்கோ மணந்து பார்ப்போம் :)

  ரின்னில் அடைத்து இருப்பது பழைய பூனை, பேசிக்கொண்டு இருப்பது புது பூனை :)

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 7. // தன் நாக்கை ஆட்டாமல் வாலை ஆட்டுவதினால்தான், அதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.// வெறி :) கரெக்ட் அதிராக்கா..ஒண்ணு சொன்னாலும் உருப்படியாச்:) சொல்லிருக்கீங்கள்! வவ்..வவ்..வ்வ்!! ஹி,ஹி!


  அடடா..பூஸை ப்ரிங்கிள்ஸ் ரின்னிலே அடைத்துட்டாங்களா? அந்தோ பரிதாபம்! :(:(
  [ ஆடு நனையுதே என்று நரி.....கதைதான்,ஆரும் கண்டுக்காதீங்க ] இட்ஸ் ஓகே பூஸ்...ஆர்டினரி சவர் க்ரீம் & ஆனியன் கேனிலேதான் அடைத்திருக்காங்க..நாட் இன் ஃபியரி ஹாட் ப்ரிங்கிள்ஸ் கேன்!! ஸோ, ஹேப்பியா இருங்கோ..ஓ..ஓ!!


  ஜோக்ஸ் அபார்ட் அதிராக்கா! தரமான தத்துவ முத்துகளை பொறுமையாய் சேகரித்து பகிர்வதற்கு நன்றி!

  ReplyDelete
 8. கோபம் என்பது ஒரு உணர்ச்சி. எதிபார்ப்பு ஏமாற்றமாகும்போது ஆற்றாமை அவமதிப்பு காரணாமாகவே கோப உணர்ச்சி மேலோங்குகிறது.

  யாராவது உங்கள் மீது கோபப்பட்டால், அவருடைய கோப அதிர்வுகளிலே அகப்பட்டுக் கொள்ளாமல் விலகிவிடும்போது எவ்விதமான ஆதரவோ, எதிர்ப்போ கிடைக்காமல் கோபக்காரரின் கோபம் ஒழிந்துவிடும்.

  இது அனுபவத்தில் கண்ட உண்மை.:)

  சிறந்த தத்துவங்கள். திரட்டித்தரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  அதிரா! பூனையை அழகாக படமெடுத்திருக்கிறார். பூனையும் படமெடுப்பவரும் நன்றாகத்தானிருக்கிறது.
  நிழல் நிஜமாகிறது.......................

  ReplyDelete
 9. நிழல் இருக்கே, நிஜத்தைக் காணவில்லையே எனத் நினைத்தேன்... வந்திட்டார்... மிக்க நன்றி ஹைஷ் அண்ணன்.

  கையை கொடுங்கோ மணந்து பார்ப்போம் :)/// இதென்ன இது? Police Dog மாதிரி... மணந்து பார்க்கப்போறன் என்கிறீங்கள்:)... முதலில் அந்தக் “கிளவுஷை” க் கழட்டிப்போட்டு வாங்கோ பிறகுதான் கை தருவன்... பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கே...

  ரின்னில் அடைத்து இருப்பது பழைய பூனை, பேசிக்கொண்டு இருப்பது புது பூனை :)\\\\ ஆ... தத்துவம் தத்துவம்.. பூனை எப்பவும் பூனைதான்.. ஆனால் அது குட்டியாக இருக்கேக்கை அனுப்பியதாக்கும்.. ஐ மீன் ரின்னில அடச்சதாக்கும்... இப்ப என்றால் முடியாதெல்லோ:):).

  ReplyDelete
 10. மிக்க நன்றி ஜீனோ... நீங்கமட்டும்தான் ஒழுங்கா தத்துவமெல்லாம் படிச்சு.. விளக்கமும் குடுக்கிறீங்கள்.

  ஸோ, ஹேப்பியா இருங்கோ..ஓ..ஓ!!/// ரின்னில் அடைத்தாலும்... தடியால், சொல்லால் அடித்தாலும்... கொஞ்ச நேரம்தான் பூனைக்கு ~மனக்கவலை” பின்பு “என்னைக்கொஞ்சம் மாற்றி...” , Take it easy oorvasi எனக் ஹாப்பிதான்... இல்லாவிட்டால் யாரும் வாழமுடியாதே...

  அதிராக்கா..ஒண்ணு சொன்னாலும் உருப்படியாச்:) சொல்லிருக்கீங்கள்! வவ்..வவ்..வ்வ்!! ஹி,ஹி!/// இதென்ன இது வேதாளம் முருங்கில் ஏறின கதையாக் கிடக்கே... தத்துவத்தைப் படித்துக்கொண்டே.. வவ் வவ் சொல்லலாமோ.... வாலை ஆட்டுங்கோ ஜீனோ!!!

  தொடர்ந்து பங்குபற்றுவதற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு தடவையும் நினைப்பதுண்டு... இத்துடன் ஜீனோ எஸ்கேப் ஆக்குமெண்டு.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. இளமதி வாங்கோ மிக்க நன்றி, உங்கள் அனுபவம் பேசுவது படிக்க அருமையாக இருக்கு.

  பூனையும் படமெடுப்பவரும் நன்றாகத்தானிருக்கிறது/// நிழலே அழகென்றால்,,, நிஜத்தில் பார்க்கும்போது மயக்கம் போட்டு விழுந்துவிடுவோம் என்றுதான் நினைக்கிறேன்... எல்லோரும் நிழலையும், ....... தானே தைரியமாகக் காட்டீனம்:).. முகம் காட்டீனமில்லையே..... எனக்கெதுக்கு ஊர்வம்பெல்லாம்.. இளமதி என் முகம்தான் பக்கம் பக்கமாக என் புளொக்கில் வெளியாகுதே... தைரியமான பூனை:).

  %) ஆகாது...

  ReplyDelete
 13. அதிரா! தத்துவம் எல்லாம் ரொம்ப அருமை... எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்.. யார் பிரின்கிள்ஸ் சாப்பிட்டது.. சாப்பிட்ட கை தான் பூஸை அதில் அடைத்துவைத்ததா??!!!

  ReplyDelete
 14. நன்றி இலா.

  நான் அப்படி நினைக்கேல்லை இலா... பூனைக்குக் குடுக்காமல் சாப்பிட்டிருக்கலாம், பூனையார் சாப்பிடுவம் என ஏறிக்குதித்து, இறங்கமுடியாமல் கண்களை உருட்டியபடி...

  ReplyDelete
 15. கோபம் பற்றிச் சொல்லி இருக்கிறது எல்லாம் வடிவாச் சொல்லி இருக்கிறீங்கள் அதீஸ்.
  கூடவே பூனைப் பிரியர்கள் முகம் காட்ட மாட்டாங்கள் எண்டும் சொல்லி இருக்கிறீங்கள். :)

  எனக்கு ஏற்கனவே எப்ப ப்ரிங்கிள்ஸ் டப்பா பார்த்தாலும் உங்கட நினைவு வரும். படம் வடிவாக இருக்கு. ஆனாலும் பூஸ் பாவம். ;(

  இங்க சில வருடங்கள் முன்னால ஒரு நாள் யாரோ தபால் பெட்டியில குட்டி ஒன்றைப் போட்டிட்டாங்கள். எப்பிடி என்று தெரியேல்ல. பிறகு தபால் பொதி பிரிக்கேக்கதான் இது தெரிஞ்சு இருக்குது. டீவீ நியூசில எல்லாம் காட்டினாங்கள். ;(

  ReplyDelete
 16. //ஒவ்வொரு தடவையும் நினைப்பதுண்டு... இத்துடன் ஜீனோ எஸ்கேப் ஆக்குமெண்டு.// OMG!!!ஆரை ஜீனோ எஸ்கேப் ஆக்குமெண்டு நினைத்தீங்கள் அதிராக்கா?
  ஜீனோ ரிபீட்ஸ்..ஜீனோ இஸ் ஆல்வேஸ் எ ஹார்ம்லெஸ் க்ரீச்சர்! ஆரையும் கடிக்கவே கடிக்காது!எஸ்கேப்பும் ஆக்காது!!!


  இன்னும் தமிழ் உங்களுக்கு வி'ழை'யாட்டுத்தான் காட்டுது..அது "ஆக்குமெண்டு" இல்லை..ஆகுமெண்டு!! ஹஹ்..ஹஹ்..ஹா!!

  ReplyDelete
 17. கூடவே பூனைப் பிரியர்கள் முகம் காட்ட மாட்டாங்கள் எண்டும் சொல்லி இருக்கிறீங்கள். :)/// அது வேறொன்றுமில்லை இமா.. பூனை என்றாலே பயமாக்கும்.. பிறகெப்படி முகத்தைக் காட்டுவது... பத்தடி தள்ளி இருந்து படமெடுப்பதைப் பார்த்தாலே தெரியுதெல்லோ... ஆதிகால வீரம்பற்றி... கடவுளே எனக்கெதுக்காக்கும் ஊர்வம்பு.

  எனக்கு ஏற்கனவே எப்ப ப்ரிங்கிள்ஸ் டப்பா பார்த்தாலும் உங்கட நினைவு வரும்/// இனி.. கூடவே நிழலின் நினைவும் வரும் இமா... அதுசகஜம்தான்... எனக்கெண்டாப்போல என்ன.. சங்கிலியைப் பார்த்தால் டேலியா.. தான் ...

  பூனைக்குட்டி எண்டால்... ரீவி்யில எல்லாம் காட்டுவினம் இமா... ஆனால் குட்டி..பப்பி என்றால் உப்படியெல்லாம் நடக்குமோ?? கடவுளே இதுக்கு மேலயும் நான் பேசமாட்டேன்....:):).

  ReplyDelete
 18. ஜீனோ!!! பப்பி எண்டாலும் கிட்னி பெரி”தாக்கும்”... எங்க பார்த்தாலும் ஒரே ஆராய்சி ”தானாக்கும்” நடக்குது..இதுவல்ல ஜீனோ இது, அது.

  நான் சொன்னது
  ஜீனோ சாப்பிட்டதாக்கும்
  ஜீனோ குளிச்சதாக்கும்..
  ஜீனோ விளையாடியதாக்கும்... இந்த ஆக்குமாக்கும்...
  பெயர்தான் தமிழ்நாடாக்கும்...(கோபிக்கக்கூடாது யாரும்..). அங்கிருப்பவர்களுக்கு.. தமிழ் புரியாதாக்கும்... செல்வியக்காவே சொல்லுறா... ஆங்கிலத்துக்கு சரியான தமிழ் தெரியேல்லையாம்... கடவுளே அவ இதைப் பார்ப்பதி்ல்லை என நம்பி எழுதிட்டேன்... யாரும் தப்பா எடுக்கப்படாதாக்கும்...

  ஜீனோ புரிஞ்சுதோ? இல்ல குழப்பிட்டேனோ?

  ReplyDelete
 19. அதிரா எல்லா பாயிண்டும் சும்மா நச் தத்துவம் , சூப்பர்.

  கோபம், மனிதாபிமானத்தையே அழித்து விடும்.
  தத்துவத்தோடு உள்ள பூனையாரின் போட்டோக்கள் ரொம்ப மனதை கொள்ளை கொள்ளுது.

  ReplyDelete
 20. கோபம் இனி வந்தால் பூஸ் துப்பாக்கியோடு இருப்பது தான் நினைவிற்கு வரும்.

  ReplyDelete
 21. மன்னிச்சுக்கொள்ளுங்கோ ஜலீலாக்கா... எப்படித் தவறவிட்டேன் இதை??? மிக்க நன்றி.

  ReplyDelete
 22. ஆசியா உண்மைதான்.. கோபம் வந்தால் இதை நினையுங்கோ... பஞ்சாப் பறந்திடும்.. கோபம்தான்.. மிகவும் நன்றி.

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.