நல்வரவு_()_


Tuesday, 5 January 2010

தத்துவ முத்துக்கள் தொகுப்பு -3

வாழ்க்கை...........


இதுவல்லவோ பொருத்தம்...

ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.

மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான்,
அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்.

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை.

காதலிப்பதற்கு அழகு இருந்துவிட்டால் மட்டும் போதாது,
படிப்பு, பதவி, அந்தஸ்து, செல்வம் இவையும் போதாது,
தைரியம் வேண்டும், கடைசிவரை உறுதியோடு
நிலையாக நின்று, வெற்றியைக் காணும் திறமை வேண்டும்.

பெண் ஒருவரால் கொடியாகத்தான் இயங்க முடியும்,
நிமிர்ந்து நிற்கப் பலத்தைக், கொம்பிடம் பெறுவது கொடியின் இயல்பு.

ஒரு பெண்ணின் வாழ்வுக்கு, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும்
கொடுக்க வளர்க்கப்படும் அக்கினி, சிலவேளைகளில்,
இன்னொரு பெண்ணின் ஆசாபாசங்களைச் சுட்டுச் சாம்பலாக்குகின்றது.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.

காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை,
ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.

நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.

ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.

17 comments :

  1. அன்பு நிறைந்த அதிரா!

    உங்களின் தமுதொகுப்பு 3 நன்றாக இருக்கிறது. முத்துக்களை கொட்டிவிட்டிருக்கிறீங்கள். தேடித்தேடி சேகரிக்கிறேன். மிக்க நன்றி!

    முகப்பில் பூஸ் தம்பதிகள் அழகாக இருக்கிறார்கள். எப்போ திருமணம் நடந்தது? எங்களுக்கு அழைப்புத் தரவில்லையே!
    இருந்தாலும் பூஸ் தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள்:)

    *உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு,
    உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு!!*
    (நானும் படித்ததில் ரசித்தது இது)

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. //பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.// :)

    எங்களைப் போன்ற அப்பாவிகள் சொன்ன தத்துவத்தை பெரிய மனது பண்ணி இங்கே வெளியிட்டதுக்கு நன்றி! :)

    பல காலமாய் புளியம் மரத்திலே தொங்கியிருந்து கால் வலிக்கிறது..எப்போ எங்களுக்கெல்லாம் விடுதலை?விடுதலை?விடுதலை?

    ஜீனோக்கு பூஸ் எண்டாலே கொஞ்சம் அலர்ஜி...அதிலும் கருஞ்சாந்து வண்ணத்தவர் எண்டால் இன்னும் அலர்ஜி.. ஒரு தேவதைக்கு:) நீங்கள் இப்படி ஒரு மாப்பிள்ளையைக்:) கட்டி வைத்திருக்க வேண்டாம்:) :)

    ReplyDelete
  3. இளமதி!! மிக்க நன்றி.
    இந்தத் தம்பதிகளுக்கு இது 60 தாம் கல்யாணம். அவர்கள் இந்த முத்துக்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தமையால்தான், இப்படி அழகாக இருக்கிறார்களாம், பேட்டி கண்டேன்:).

    நீங்கள் படித்து ரசித்த வரிகளும் அருமை.

    ReplyDelete
  4. ஜீனோ!!
    ///எங்களைப் போன்ற அப்பாவிகள் சொன்ன தத்துவத்தை பெரிய மனது பண்ணி இங்கே வெளியிட்டதுக்கு நன்றி! :) ///
    ஜீனோ ரொம்ப நொந்துபோய்த்தான் இப்படி ஒரு வசனத்தைச் சொல்லியிருக்கிறீங்க:), ஆனால் 5 வயதே நிரம்பியுள்ள டோராவைப் பற்றி நீங்கள் இப்படிச் சொன்னது தப்பு..... தப்பு... தப்பு..


    //எப்போ எங்களுக்கெல்லாம் விடுதலை?விடுதலை?விடுதலை?/// ஜீனோ பல்லால கொப்பைக் கடித்தபடி தொங்கிறீங்களா? அல்லது முன்னங்காலால இறுக்கிப் பிடித்துக்கொண்டு தொங்குறீங்களோ? ஏன் கேட்கிறேன் என்றால், விடுதலை வேணுமெண்டால், காலை விடுங்கோ அல்லது வாயைத் திறந்து கத்துங்கோ.. அப்போ உங்களுக்கு விடுதலை.. விடுதலை... பயப்படாதீங்கோ கீழே மண்தான் இருக்கும் கல் இல்லை, சோ காயம் வராது:).

    ஜீனோ உண்மையைச் சொல்லவேணும், பூஸ் என்றால் அலர்ஜியோ? பயமோ?:).

    இந்த மாப்பிள்ளைக்கும் ஜீனோக்கும் ஒரு பொருத்தம் இருக்கு, அதாவது குளித்தால் வெள்ளை குளிக்காட்டில் கறுப்பு...:).

    வரவுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. பூனைத் தம்பதிகள் அழகா இருக்கினம் அதிரா. :)

    ஜீனோ, இதைத்தான் சொல்லுறது 'நுணலும் தன் வாயால் கெடும்,' எண்டு. :)

    ReplyDelete
  6. மிக்க நன்றி இமா, கரெக்ட்டா சொன்னீங்கள் ஜீனோக்கு:):).

    ஜீனோ ‘எள்ளைக்கொட்டினாலும் பொறுக்கலாம், ஆனால் சொல்லைக்கொட்டினால் பொறுக்கலாமோ?’.
    இமா!! இப்படி எதையாவது சொல்லிச் சொல்லியே:), ஜீனோவை சுவிஜ் ஓவ் பண்ணிடுவேன்:).

    இருப்பினும் இமா, நீங்கள் ஜீனோவை இப்படி சொல்லியிருக்கப்படாது:), ஜீனோவாலதான் நான் ‘ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், ”உலகம்” புரிஞ்சுகிட்டேன்`.... சீ பாட்டாகவே வருதே, இமா உங்கட உலகத்தைக் கண்டேன் எனச் சொல்லவந்தேன், நீங்க சொன்னால்தானே தெரியும் இல்லாவிட்டால் எப்படித் தெரியும். நல்லவேளை ஜீனோவின் பின்னே ஒட்டியிருந்ததைப் பார்த்துத்தான் கண்டுபிடித்தேன்....

    அதுசரி ஜீனோவுக்கு `ஆவிஉலகம்` அப்படி ஏதாவது இருக்கோ இமா? ஐ மீன்:) புளொக் இருக்கோ எனக் கேட்டேன்?:).

    ReplyDelete
  7. ஹ்ம்ம்..ஒரு நாள் எட்டிப் பாக்காவிட்டால் ஜீனோவை ஆவி உலகிற்கே பேக் செய்துவிடுவீங்கள் போல இருக்கே? :)

    ஓம்..அதிராக்கா, ஜீனோவுக்கும் ப்ளாக் இருக்கு..உங்களைப் போன்ற நல்லவர்கள் ப்ளாக்லே:) எல்லாம் கமென்ட் போட ஜீனோக்கு ஒரு முகவரி வேணுமல்லோ?? அதுக்காகத்தான் ஜீனோ தனிக்குடித்தனம்:) போயிருக்கு..வந்து பாருங்கோ..http://genos-corner.blogspot.com/

    ஆன்ட்டீ...ஜீனோ தன் வாயால் கேட்டதோ? என்ன சொல்றீங்கள் எண்டு புரியல்லை..அதிராக்காவும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறார்..சும்மா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் :) முடிச்சுப் போட ட்ரை பண்ணாதேங்கோ..இட்ஸ் நாட் பாஸிபிள்!! :D

    ReplyDelete
  8. ஜீனோ வாயால் கேட்டுதோ, காதால் கேட்டுதோ தெரியாது.
    ஆனால் முடிச்சுப் போட வாகாகத்தான் ஒரு வாலும் ரெண்டு செவியும் இருக்கே!
    நான் சொன்னது நுணலை ஜீனோ. :)

    ReplyDelete
  9. ஜீனோ தனிக்குடித்தனமோ... முதலாவது "புஜ்ஜி"யையே கவனிக்க நேரம் போதவில்லை, இப்போ சின்னபுஜ்ஜி, குட்டிபுஜ்ஜி எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டீங்கள்... எப்படித்தான் சமாளிக்கப்போறீங்களோ... எனக்கு அழுகை அழுகையாக வருகுது...

    இமா, ரிசூ மன்னிக்கவும் டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எதுக்கோ என் கண்ணீரைத் துடைக்கத்தான்...

    ReplyDelete
  10. என்னட்ட டிஷ்யூ ஸ்டொக் முடிஞ்சு போச்சுது அதிரா. ;;;((( வெரி வெரி வெரி சொறி.

    ReplyDelete
  11. சரியான தொகுப்பு, சூப்பரான தத்துவம் யாரு அதிரா வாச்சே, பூனை மூளைய யூஸ் பண்ணியே இவ்வளவு எழுதுறீங்க, எனக்கும் பூனை மூளைய யூஸ் பண்ணும் விதத்தை சொல்லி கொடுங்க.

    ஜோடி பொருத்த‌ம் பிர‌மாத‌ம்.

    ReplyDelete
  12. இமா, ஒரு ரிசூ குடுக்கவே இப்படி யோசிக்கிறீங்களே! பறவாயில்லை முடிந்தால் நீங்கதான் என்ன செய்வீங்கள். ஆனால் உங்கட ஹங்க சீவ் ஐ ஒருக்கால் கடன் தாறீங்களே? நல்ல வாசனை சோப் போட்டு தோய்ச்சுப்போட்டுப் பிளீஸ்:), உங்களிடம் இருந்தால் "CK" இலயும் கொஞ்சம் அடிச்சுவிடுங்கோ.

    பதில்கள் போடமுடியாமல் அவதிப்படுறேன். விரைவில் வாறேன் அனைவரும் பொறுத்தருள்க பிளீஸ்.

    ReplyDelete
  13. ஓ ஜலீலாக்கா நல்வரவு!!!
    ஜலீலாக்கா சிலர் பூனை மூளையை சீப்பாக நினைக்கினம்:), உங்களுக்குத்தான் அதன் அருமை புரிந்திருக்கு. மிக்க நன்றி.

    இடையில யூஸ் பண்ண முடியாது ஜலீலாக்கா, பிறந்தவுடன் பூனையாரின் ஆசீர்வாதம் பெற்றிட வேண்டும்... வரவுக்கு மிக்க நன்றி. பதில்கள் தருகிறேன்.

    ReplyDelete
  14. நான் ஒண்டும் யோசிக்கேல்ல அதிரா. அது முடிஞ்சு போச்சுது. அவ்வளவுதான். ;( இப்ப நேரம் போதாமல் அவதிப்படுறீங்கள். பிறகு, நேரம் கிடைக்கேக்க என்ட உலகப் பக்கம் போய்ப் பாருங்கோ விளங்கும்.

    அது யார் அதிரா பூனை மூளையால தலை இழுக்கிற ஆக்கள்!

    ReplyDelete
  15. "டச்சு விட்டுப்போச்சு' இமா, அதுதான் இன்னும் உலகத்தைப் பார்க்க முடியேல்லை, நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்கிறன் கால் பதிக்க, பிறகு இடையில பிளவு வந்திடப்படாதென்ற நல்லெண்ணத்தில்.

    எக்ஸாம் பேப்பர் மாதிரி "துருவித் துருவி" கேள்வி கேட்கப்படாது...
    ///அது யார் அதிரா பூனை மூளையால தலை இழுக்கிற ஆக்கள்/// மூளை இல்லாத ஆட்கள் தான் இமா:):).

    ReplyDelete
  16. ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.//

    வாவ் சூப்பர்

    ReplyDelete
  17. ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,
    ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.//

    அருமை மியாவ் அருமை

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.