மம்மி நான் சந்தைக்குப் போகப்போறேன்:)
ஹா ஹா ஹா இம்முறை எப்படியாவது அஞ்சு செய்த வாழைத்தண்டு தோசை செய்திடோணும் எனத்தான் நினைச்சிருந்தேன், எங்கட தமிழ்க் கடைக்குப் போய், அங்கு இருந்தால் வாங்கி வரலாம் என அஞ்சுவிடம் ஐடியாக் கேட்டேன், வாழைத்தண்டு இல்லை எனில் பிசுக்கங்காய் இருந்தாலும் செய்யலாமே என்றா. கடைக்குப் போனால் வாழைத்தண்டு இல்லை, ஆனா பிசுக்கு இருந்துதா.. வாங்கி வந்து தோசை சுட்டுவிட்டேன்.
வழமையான அரிசித்தோசையை அரைச்சு வச்சு, விடிய எடுத்து அதில் பிசுக்கங்காயைத் தோலை நீக்கி விட்டு அரைத்துச் சேர்த்தேன் தோசை மாவில். சரி தோலை எறிஞ்சிடாதீங்க அதில் சட்னி செய்யுங்கோ என இரண்டாவது ஐடியாத் தந்தா அஞ்சு.. ஹா ஹா ஹா அப்படியே ஆகட்டும் என சட்னியும் செய்தேன் இரண்டுமே சூப்பர். இனிப்பாக இருந்துது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஆஆஆஆ:)
என் தோசை மா, ஒரு இரவில் இங்கு புளிக்காது, அதனால புளிக்காமலேயே சுட்டேன்.
இதில் சட்னி செய்வது, ஒரு மேசைக்கரண்டி உழுந்தையும் செத்தல் மிளகாயையும் கொஞ்ச எண்ணெயில் நன்கு வதக்கி எடுத்துவிட்டு, அதனுள் இந்தத் தோலைப்போட்டு நன்கு வதக்க வேண்டும், பச்சை இல்லாமல் வதங்கியதும் அதனுள் பழப்புளியையும் தேங்காய்ப்பூவையும் போட்டு கொஞ்சமாக வதக்கியபின், உப்புச் சேர்த்து, தண்ணி சேர்க்காமல் அரைத்து எடுத்தேன்.
சைட்டிலே மடித்து இருப்பது நல்லெண்ணெய் விட்டு முறுகலாக சுட்ட எண்ணெய்த்தோசையாக்கும். இதில் அரைக்கும்போது புளிப்புக்காக ஒரு பீஸ் பிரெட் சேர்ப்பது வழக்கம், இம்முறை வைட் பிரெட் இல்லாமையால் பிறவுண் பிரெட் சேர்த்தேன் அதுதான் கலரை டார்க் ஆக்கி விட்டது:(.
இது கால் கப் உழுந்துக்கு, அரை கப் அவித்த கினோவா மாவும், அரைக் கப் பச்சை ரவ்வையும் சேர்த்து, புளிக்க வச்சுச் சுட்ட கினோவாத் தோசை:).
இதேபோல ரவ்வை தோசைக்கு, அரைக்கப் உழுந்தை ஊறப்போட்டு அரைச்சு, அதுக்கு பச்சை ரவ்வை 1.5-2 கப் சேர்த்துக் குழைச்சுப் புளிக்க வச்சுச் சுடுவோம். இதேபொல் இட்டலிக்கு உழுந்துடன் ரவ்வையை நன்கு அவித்து ஆற விட்ட பின்னர் சேர்ப்போம்[தகவல்: நெல்லைத்தமிழனுக்காக:)]
((((((!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இடைவேளை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!))))))
பாருங்கோ, ஒரு செக்கரட்டறி எப்பூடி இருக்கோணும் என்பதைப் பாருங்கோ:).. அதாவது, ட்றம்ப் அங்கிளுக்கு செக்கரட்டறியாக இருப்பதால், என் அழகிய டமில் பேசப் பழக்கி விட்டிட்டிருக்கிறேன்:).. இல்லை எனில் டமில்ல டி எடுத்தேன் எனச் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கென நீங்களே சொல்லுங்கோ?:))
((((((!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!&&&&&&&&&!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!))))))
இது இப்போ எங்கள் கார்டினில் வளர்ந்திருந்த கபேஜ் லீவ்ஸ்.. இந்தக் குளிருக்குள்ளும் கிசுகிசு என வந்திருந்துது, பாருங்கோ ஒரு புளு பூச்சிச் சேட்டை இல்லை இலைகளில்.. அவ்ளோ குளிரெல்லோ, அனைத்து இலையும் அப்படியே எந்த சேதமுமில்லாமல் இருக்குது. சுண்டல் செய்தேனாக்கும் இன்று.
இது பயறை நன்கு முளைக்கப் பண்ணி விட்டு, மோர் மிளகாயை நன்கு வதக்கி, அதனுள் வெங்காயம் போட்டு வதக்கி, அதனுள் இந்த முளைத்த பயறைக் கொட்டி நன்கு பிரட்டி எடுத்தேன் அவிக்காமலேயே... சூப்பராக வந்துதே...
இந்தாங்கோ இதில எது வேணுமெண்டாலும் எடுத்துக் கொள்ளுங்கோ:)... இப்போ எங்கள் கடைக்கும் சப்போட்டா வருகிறதே..
============================================
இன்று ஒரு டகவல்:)
நான் பிசுக்கங்காய் சட்னி டொல்லித் தந்தேன், ஓசை டொல்லித்தந்தேன் .. அதற்காக என் ஃபீசைத்தாங்கோ.. இப்பவே தாங்கோ என என்னை ஒழுங்கா தோசை சப்பிடவும் விடவில்லை அஞ்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), ஆனாப் பாருங்கோ நட்புக்குள் காசு குடுக்கிறது வடிவில்லை எல்லோ?:) அதனால என்ன கிஃப்ட் குடுக்கலாம் என, வானம் பார்த்துப் பூமி பார்த்து கிழக்கால மேற்கால எல்லாம் பார்த்து ஓசிச்ச இடத்தில காசி தெரிஞ்சுது கண்ணில:)) டக்கென அஞ்சுவுக்கு ரிக்கெட் புக் பண்ணிட்டேன்.. இனியும் மாட்டேன் எனச் சொல்லுவாவோ?:) பாருங்கோ அஞ்சுவுக்கு மட்டும்தேன், அம்முலுவும் அல்ல:))
இதென்ன புரொம் சென்னை என இருக்கே.. எனத்தானே யோசிக்கிறீங்க? அது இங்கிருந்து காரில சென்னை போகிறோம்.. மீதான் ட்றைவர்:))
=========================================
அமேசனில் தேடினேன் மண்சட்டி கிடைக்கிறதே[விதம் விதமாக அனைத்தும்], அதுவும் இது கரண்ட் அடுப்பில் சமைக்கும் விதமாக, ஆனா விலை என்ன தெரியுமோ 42 பவுண்ட்ஸ்:) ஹா ஹா ஹா தொட்டதும் உடைஞ்சிட்டால்ல் என்ன ஆகும்ம்:)..
====================================================
ஊசி இணைப்பு:
ஊசிக்குறிப்பு:
=====================================================
“மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது "யோகா".
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்".
யோகாவும் தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்”.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
|
Tweet |
|
|||
பீர்க்கங்காய்க்குப் பேர், பிசுக்கங்காயா? இஷ்டப்படி பேர் வச்சுருவீங்களோ?
ReplyDeleteவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...
Deleteஹா ஹா ஹா அது பிசுக்கங்காய்தான்:)) பீர்க்கங்காய் என்பதை எனக்கு நிரூபியுங்கோ நம்புறென்ன்ன்:))..
மாங்காயைப் போட்டிட்டு மாவடு என்பாராம்:)) ஆனா நங்க சொன்னா மட்டும் ஜண்டைக்கு வாறாரே ஹா ஹா ஹா:))
முன்னாலலாம் முதல்ல வந்தவங்களுக்கு பரிசும், ரெண்டாவதா வந்தவங்களுக்கு ஆயாவையும் கொடுப்பீங்களே... மறந்துடுச்சா... இருக்கும். வயசானா மறதி வரத்தானே செய்யும்..
Deleteஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அது வந்து அதிரா எப்போ ஆயாவைக் கொடுப்பேன் எப்போ கொடுக்க மாட்டேன் என எனக்கே தெரியாது:) இம்முறை கொடுக்காததுக்குக் காரணம், ஆயா ரொம்ம்ம்ப யங்:)) அதோடு நல்ல பிரிட்டி:)) அதனாலதான் குடுக்கவில்லை:) இப்போ ஹப்பியோ நீங்க?:) ஹா ஹா ஹா...
Deleteமுதலாவதாக வந்த உங்களுக்கு ஓசையை:) டிஸ் உடன் தந்திருப்பேன்.. ஆனா தொசை நல்லாயில்லை எனச் சொல்லிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதனாலதான் ஹா ஹா ஹா.
//மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளாவிட்டால் அது "தியானம்". //
ReplyDeleteநான் இதுநாள்வரை, மனைவி சொல்வதை 'கவனிக்காமல் இருந்தால்' அதுதான் தியானம்னு நினைத்தேன். அப்புறம் எனக்கு சந்தேகம். அப்படி கவனிக்காமல் தியானமாக இருந்தால் ஏன் திட்டுகிறார் என்று.... இனிமே திட்டும்போதும் 'கவனிக்கக் கூடாது' போலிருக்கு.
அதிரா இதில் ஏதும் உள்குத்து இல்லையே... ஃபேமிலில பிரச்சனை உண்டாகிடாதே..
ஆச்சுன்னா, பிசுக்கங்காய் தோசை செய்து உங்களுக்கே அனுப்பிப் பழிவாங்கிடுவேன்..ஜாக்கிரதை
///இனிமே திட்டும்போதும் 'கவனிக்கக் கூடாது' போலிருக்கு.//
Deleteஹா ஹா ஹா அதில ஒரு தெக்கினிக்கி இருக்கு நெ.தமிழன்.. திட்டும்போது, அது யாருக்கோ திட்டு விழுகுது என்பதுபோலவும் இருக்கக்கூடாது:)).. கவனிக்கோணும்.. அப்பாவியாக முகத்தை வச்சிருக்கோணும்.. ஆனா காதில வாங்கவும் கூடாது எதிர்த்துப் பேசவும் கூடாது ஹா ஹா ஹா:))..
///ஆச்சுன்னா, பிசுக்கங்காய் தோசை செய்து உங்களுக்கே அனுப்பிப் பழிவாங்கிடுவேன்..ஜாக்கிரதை//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) எய்தவர் இருக்க அம்பை நோகலாமோ:)).. டக்கெனச் செய்து அஞ்சுவுக்கு அனுப்பிடுங்கோ:))
//நான் கேட்டு எந்தப் பெண்ணும் நம்பர் கொடுக்காமல் சென்றதில்லை// - இது எந்த உலகத்துல? பெண்களுக்கெல்லாம் ரீசார்ஜ் செய்வது ஆண்கள்தானே... இதுதானே 15 வருடங்களா வழக்கத்தில் இருக்கு. இது என்ன புதுசா?
ReplyDelete///பெண்களுக்கெல்லாம் ரீசார்ஜ் செய்வது ஆண்கள்தானே... இதுதானே 15 வருடங்களா வழக்கத்தில் இருக்கு. இது என்ன புதுசா?///
Deleteஹா ஹா ஹா எல்லோரும் முற்பிறவியில் ஏதும் கடன் பட்டிருக்கக்கூடும் பெண்களிடம்:))
மீதான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ
ReplyDeleteகீதா
/ஊஊன்னு கனவு கண்டுகொண்டிருக்கிறேன்//- ஹாஹா
Deleteவாங்கோ கீதா வாங்கோ.. ஹா ஹா ஹா சே சே சே இண்டைக்கு ஏப்ரல் ஃபூலாக்கிட்டாரே கீதாவை நெ.தமிழன் முந்தி வந்து:))
Deleteமண்சட்டி - அமேசானில் - நம்ம ஊரில் மண்பானைகள் வாங்குவது குறைந்துவிட்டது என்பதால் நிறைய வனைஞர்கள் வேலை இழந்துவிட்டார்கள். ஆனா அமேசான்ல 42 பவுண்டா? இந்தப் பானையை 80 ரூபாய் என்று சொன்னாலே, கொஞ்சம் கொறைச்சுக் கொடுன்னு இங்க கேட்பாங்க.. அமேசானுக்கு வந்த வாழ்வு
ReplyDeleteஅமேஷனில் தேடினால் நிறைய நல்ல நல்ல அழகிய டிசைனில் செட் செட்டா கிடைக்குது, கப் அண்ட் சோஷர் கூடக் கிடைக்குது ஆனா எல்லாம் ஆனை விலை:)) யார் வாங்கப் போகினம்.
Deleteஇங்கு தமிழ்க் கடையில் சட்டியும் பானைகளும் கிடைக்குது நெ.தமிழன்..
ஒரளவான சட்டி 8 பவுண்டுகள். கொஞ்சம் பெரிசு 10 பவுண்டுகள் என விற்கிறார்கள். ஆனா இவை எல்லாம் ஹாஸ் அடுப்பில்தான் வைக்கலாம்.. என்னிடம் இருப்பது ஹாஸ் தான்.. அமேஷனில்தான் இப்படிக் கரண்ட் அடுப்புக்கு ஏற்ப செய்திருக்கிறார்கள்.
வெத்தலை, பாக்கு, நெல்லி, மாங்காய் - அங்கேயும் வர ஆரம்பிச்சாச்சா? ஆச்சர்யமா இருக்கு. ஆமாம்... இந்த வெத்தலை சாப்பிடற ஆசாமிகள் கண்ட கண்ட இடத்துலயும் துப்புவாங்களே... எப்படி அனுமதிக்கறாங்க?
ReplyDeleteநெல்லிக்காயும் மாங்காயும் வெற்றலையும் இப்போ எப்பவும் கிடைக்குது தமிழ்க் கடையில்.
Deleteஎங்கள் வீட்டில் அந்த வெத்தலை ஆசாமி நாந்தேன்ன்ன்ன்:)).. இல்லையே இக்காலத்தில் ஆருமே துப்புவதில்லை.. சுவீட் சாப்பிடுவதைப்போல சாப்பிட வேண்டியதுதான்.. ஏனெனில் காரம் சுண்ணாம்பு சேர்த்தால்தானாக்கும் அப்படி.
இது பீடா மிக்ஸ் கிடைக்கிறது, அத்தோடு சாப்பிட்டால் சூப்பர்.
கேபேஜ் இலைகளில் நீங்கள் செய்யும் சுண்டல் - இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை. எங்களுக்கு கேபேஜ் இலைனா, அந்தப் பூவிலிருந்து கிடைக்கும் இலைகள்தான். அதை வைத்துத்தான் கறி, கூட்டு செய்வோம் (கோஸ் உப்புமா, கோஸ் வடைலாம் சாப்பிட்டிருக்கீங்களா? நீங்க எங்க சாப்பிட்டிருக்கப்போறீங்க. அது முளைப்பதற்குள் இலைகளை ஸ்வாஹா பண்ணுறீங்க)
ReplyDeleteநான் இலைவகை எனில் சுண்டல்தான் செய்வேன்... நான் சுண்டல் என்பதை நீங்க பொரியல் என்பீங்க.. ஆனா அது டப்பெல்லோ ? எண்ணெயில் பொரிச்சால்தான் அது பொரியல்:)) கர்:))..
Deleteநான் கடுகு இலை, மேத்தி இலை, கபேஜ் இல் இங்கு பல பல வகை இலைகள் கிடைக்குது அத்தனையும், ஹேல் இலைகள், கரட், பீற்றூட் இலைகள்.. நோக்கிள் இலைகள், வாழைப்பொத்தி, குறிஞ்சா... இப்படி எந்த இலை கிடைச்சாலும் சுண்டல்தான் செய்வேன்.. வீட்டிலும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வெங்காயத் தாள் சுண்டல் ரெசிப்பி போட்டேனெல்லோ அப்பூடித்தான் அனைத்தையும் சுண்டுவது சூப்பராக இருக்கும். ஆகவும் வதக்காமல் முக்கால் வாசி வதங்கியவுடன் இறக்கோணும்.
வீட்டில் வளர்ப்பதால் இப்படி இலை பறிக்க முடியுது இது கடையில கிடைக்காது.. இது என்ன இலைகள் தெரியுமொ? புரோக்கோலி, ஹொலிபிளவர் இலைகள்.. ஹா ஹா ஹா பூ வரவில்லை குட்டியா ஒரு குட்டிப்பூ வந்துது.. இலைகள்தான் நிறைய.
/////(கோஸ் உப்புமா, கோஸ் வடைலாம் சாப்பிட்டிருக்கீங்களா? /////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோச்/கபேஜ் ஜில் அடிக்கடி ரொட்டி செய்வேன்.. நிறைய கோஸ் கொஞ்சம் கோதுமை மா, மற்றும் மானே தேனே எல்லாம் போட்டு... இங்கும் பலதடவை போட்டிருக்கிறேனே:)) நீங்க அப்போ இல்லையாக்கும்:))
உப்புமா மரக்கறிகள் போட்டுச் செய்வேனே.. எப்பவாவது.
//அது முளைப்பதற்குள் இலைகளை ஸ்வாஹா பண்ணுறீங்க)
///
ஹா ஹா ஹா இது போன சமரில் நட்ட செடிகள்.. போனவருடம் இலை வந்து, சுண்டி, பின்ன்பு குளிருக்குப் பட்டு இப்போ திரும்ப விடாக்கண்டனாக இலைகள் வந்திருந்துது.. இனிக்குது சுண்டல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
//கேபேஜ் இலைகளில் நீங்கள் செய்யும் சுண்டல் - இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லை.//
Deleteஅதைப்பார்த்ததும் நான் நம்ம ஊர் எருக்க இலையோ என நினைத்து பயந்தே பூட்டேன். ரத சப்தமியன்று தலையில் வைத்து மந்திரம் சொல்லி ஸ்நானம் செய்யும், காம்பினில் விஷப் பால் வடியும், எருக்க இலைகளைப்போய், சுண்டல் செய்து சாப்பிட்டதாகச் சொல்லுகிறார்களே என மிகவும் கவலைப் பட்டேன், ஸ்வாமீஈஈஈஈஈஈ.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ....
Deleteஹா ஹா ஹா உங்கட ஸ்வாமிக்கு எருக்கலை தெரியுமோ என்னமோ:)) .
ஓ அப்போ எருக்கலையும் பயன்பாட்டில இருக்கோ.. தலையில் வைத்து மந்திரம் சொல்வதாயின்.. அதில் ஏதோ ஒரு விஷேசம் இருக்கத்தானே வேண்டும்...
கோயிலில் தேவிக்குப் பூஜை அதில் ஊமத்தம் பூவுக்க்கேன் ஆசை.. என்பதைப்போல எருக்கலையையும் யாரும் தீண்டா இலை என நினைச்சிருந்தேன்...
//என மிகவும் கவலைப் பட்டேன், ஸ்வாமீஈஈஈஈஈஈ.///
உலகத்துச் சனங்களுக்கு ஆயிரம் கவலை:)) கோபு அண்ணனுக்கோ என்னவென்னமோ கவலை ஹையோ ஹையோ ஹா ஹா ஹா..
வரவுக்கு நன்றி கோபு அண்ணன்.
எனக்கு பாதத்தில் வலி இருக்கு. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளும்போது தரையில் கால் வைக்கமுடியாதபடி ரொம்பவும் வலி. வீட்டில் எம்.சி.பி. என்று சொல்லும் செருப்பு போட்டுக்கொண்டுதான் நடக்கிறேன்.
Deleteஅதற்கு ஒரு சித்த வைத்தியர், செங்கல்லை அடுப்பில் சுட வைத்து, பிறகு அதை தரையில் வைத்து, அதன் மேல் 2 எருக்க இலைகளைப் போட்டு, அதன் மீது பாதத்தை வைத்துக்கொள்ளவேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், பாத வலி மறையும் என்றார்.
இதைச் செய்யச் சோம்பல். அதனால் இன்னும் செய்யலை. சித்த வைத்தியத்துல எருக்கை உபயோகப்படும்.
எருக்க இலை என்று சொன்னவுடன் இரண்டு விஷயம் ஞாபகத்துக்கு வருது. 1. அயோத்தியா பக்கத்தில் (குப்தார் காட் பக்கத்தில்), எருக்க மரம் கோவிலில் பார்த்தேன். அதாவது அந்தச் செடி 20 அடி உயரம் இருந்ததுபோல் நிறைய கிளைகளோடு இருந்தது.
2. சின்ன வயதில் (6வது படிக்கும்போது), கரட்டான் என்று சொல்லப்படும் ஓணானை சின்னப் பசங்க அடித்ததில் அது காயமுற்று செத்துவிட்டது (மயக்கமாயிடுச்சு). அப்போ அந்தப் பசங்க, எருக்க இலையைப் பிடிங்கி, அந்த பாலை அதன் வாயில் விட்டார்கள். திரும்ப முழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது.
மற்றபடி வேறு எதுவும் எனக்குத் தெரியாது அதிரா.... கோபு சார்..
நெல்லைத்தமிழன் ஏன் நீங்க ஒரு foot massager வாங்கிப் பாவிக்கக்கூடாது... அமேசனில் கிடைக்கும்.. நிறைய வகைகள், விலைகளில் கிடைக்குது... லெக் பசாஜரை விட விலை மலிவு.. முயற்சி செய்து பார்க்கலாமே.
Deleteவெயிட்டைக் குறையுங்கோ கர்ர்ர்ர்:)).
//அப்போ அந்தப் பசங்க, எருக்க இலையைப் பிடிங்கி, அந்த பாலை அதன் வாயில் விட்டார்கள். திரும்ப முழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது//
குருவி இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக இருக்குமோ.. எருக்கலம் இலையை ஆடு மாடு கூடச் சாப்பிடாதே.. அது நஞ்சு எனச் சொல்லி, கிட்டப் போகவே விட மாட்டினமே...
தோசை கடைசிப் படம் நல்லா இருக்கு (நெட்ல சுட்டதோ?). அதுக்கு முந்தின படம் அழகா வரலை. ஏதோ, பக்கத்துக் கடைலேர்ந்து தோசையை அவசர அவசரமா சுருட்டிக்கிட்டு வீட்டுக்கு ஓடிவந்த மாதிரி இருக்கு. நிறம் நல்லா வரலை.
ReplyDeleteஹர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெட்ல எங்கே கிடைக்கப்போகுது கினோவா ஓசை?:)... அது நெல்லைத்தமிழன் மா புளிச்சு பொங்கி எழும்பினால்தான் தோசை சூப்பரா வரும், அதனால நான் எப்பவும் 2 நாள் குடுப்பேன் பொங்க.. அப்படிக் குடுத்தாலும் பல சமயம் பொங்காது.
Deleteஇம்முறை பொங்கவும் இல்லை புளிக்கவுமில்லை அத்தோடு பிசுக்கை அரைச்சுச் சேர்த்ததும் கொஞ்சம் தண்ணியாகிட்டுது.. மாவின் கலர் வெளிர் பச்சை நிறமாக அழகாக இருந்துது, ஆனா சுட்டபின் கலர் மாறிப்போச்சு... காரணம் நான் அதுக்கு பிரவுண் பிரெட் சேர்த்ததுதான்:)) ஹா ஹா ஹா..
மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.
நீங்க சட்னியை விட்டிட்டீங்களே.. தோலை வதக்கி செய்த சட்னி.. நல்ல சூப்பர் சுவை.. அதுக்காக நிட்சயம் அஞ்சுவுக்குப் பரிசு குடுக்கோணும்:).
பிசு பிசுக்கு தோசைனு சொல்லி நான் ஒரு எச்சரிக்கை எல்லாம் கொடுத்திருந்தேன்...ஏப்ர்ல ஃபூஃப்ல் செய்வாரோ தீர்க்கதரிசினு...கூடவே ஸ்ரீராமும் நீங்க பேய்க்காட்டிட்டீங்கனு ஹா ஹா ஹாஹ் ஆ
ReplyDeleteகீதா
//கூடவே ஸ்ரீராமும் நீங்க பேய்க்காட்டிட்டீங்கனு ஹா ஹா ஹாஹ் ஆ//
Deleteஹா ஹா ஹா இதுவும் ஒருவகை ஏப்ரல் ஃபூல் தான்:))
//தோலை எறிஞ்சிடாதீங்க அதில் சட்னி செய்யுங்கோ// - நல்லா இருந்ததா? பொதுவா ஏஞ்சலின் உங்களுக்கு ஐடியா தந்தால் அதில் நிச்சயம் உள்குத்து இருக்குமே
ReplyDelete//நல்லா இருந்ததா? //
Deleteசூப்பரா இருந்துது. கிட்டத்தட்ட நான் முன்பு செய்து எங்கள்புளொக்கில் போட்ட நோக்கி?ள் சட்னியைப்போலவே...
//பொதுவா ஏஞ்சலின் உங்களுக்கு ஐடியா தந்தால் அதில் நிச்சயம் உள்குத்து இருக்குமே//
அவ்வ்வ்வ்வ்வ்வ் இதைப் படிச்சதும் ஓடிப்போய் மிச்சத்தைப் பிரிஜ்ஜில வச்சிட்டேன்ன்ன்.. எங்கிட்டயேவா?:)
பாட்டு சுமார்..... பாத கொலுசு சத்தம் நதில எங்கயாவது கேட்குமா? வீட்டில ஓடும்போதோ நடக்கும்போதோ கேட்கும்.... ஏன் இன்னைக்கு நல்ல பாட்டு கிடைக்கலையா?
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது எவ்ளோ அழகான அருமையான மனதை வருடும்.. என்னமோ பண்ணும் பாட்டுத்தெரியுமோ?:)).. பொசுகெனச் சொல்லிட்டீங்க சரியில்லை என ஹா ஹா ஹா கர்ர்:)).
Delete//பாத கொலுசு சத்தம் நதில எங்கயாவது கேட்குமா?///
ஹா ஹா ஹா வைரமுத்து அங்கிள் என்ன ஜொள்ளியிருக்கிறார்ர்ர்ர்ர்?:) கவிஞர்கள் பொய் சொல்பவர்கள்:))
பூசார் கடைசி படத்தில் இருப்பதுபோல் கணவன் தியானம் பண்ணினால், மேலே எழுந்து கீழே வருவதற்குள், சுடச் சுட தோசைக் கல்லை மனைவி வைத்துவிட நிறைய சான்ஸ் இருக்கு.
ReplyDeleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ரொம்பவும்தான் பயந்துபோயிருக்கிறீங்க போல தெரியுதே:)).. மிக்க நன்றிகள் நெ.தமிழன்.
Deleteபீர்க்கங்காய் தோசை சூப்பர்!!! நேத்தே சுட்டுப் போட்டு நாங்கா ஆறிச் சாப்பிடனுமோனு நினைச்க்சேன் இப்ப சூடா சாப்பிட்டாச்சு!ஹ ஹா ஹா
ReplyDeleteநாமும் இந்தச் தோசை, சட்னி இதே முறையில் செய்யறது. வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.
அப்புறம் உளுந்து போட்டு ரவை போட்டு ரவா இட்லி தோசை செய்வதுண்டு...
இதிலும் வெங்காயம் போட்டுச் செய்யலாம்
கீதா
//ரவை போட்டு ரவா இட்லி தோசை// - கீதா ரங்கன்... தமிழ் நல்லா எழுதவேண்டாமா? அதிராவுக்குப் புரிய வேண்டாமா? பாருங்க.. நானா இருந்தா இப்படித்தான் எழுதியிருப்பேன்.
Deleteரவ்வ்வ்வ்வ்வ்வ்வை போட்டு றவ்வ்வ்வ்வ்வ்வா இட்லி ஓசை
படிச்சுட்டு மயங்கி விழாதீங்க... என்ன பண்ணறது... இலங்கைல டமிள் சொல்லிக்கொடுக்க ஆட்கள் இருப்பதுபோல் தமிழ் சொல்லிக்கொடுக்க ஆட்கள் இல்லை போலிருக்கு
அஞ்சுவும் சொன்னா கீதா வெங்காயம் போடுங்கோ என.. நான் எதுவும் போடவில்லை, ஆனா நேற்றையதை விட இன்று மா பொங்கியிருந்தது, தோசை நன்றாக வந்துது.
Deleteநைட் பாதி போஸ்ட் ரெடி பண்ணினேன் பின்பு விட்டு விட்டேன்... மிகுதியை மோனிங் முடிச்சேன்.. இருந்தாலும் 2 வதாக வந்த கீதாவுக்கு ஏன் ஆயாவைக் கொடுக்கவில்லை என நெல்லைத்தமிழனுக்குக் கோபம்:)).. ஏன் கொடுக்கவில்லை என்பதை அறிஞ்சால் சந்தோசப்படுவார்ர்:)). அதை அவர் கொமெண்ட்டிலேயே குடுக்கிறேன்ன்:))
//ரவ்வ்வ்வ்வ்வ்வ்வை போட்டு றவ்வ்வ்வ்வ்வ்வா இட்லி ஓசை//
Deleteஹா ஹா ஹா கர் நெ.தமிழன்.. அது ரவ்வா இட்லி அல்ல.. ரவ்வை இட்டலி ஆக்கும்:)) ஹா ஹா ஹா...
நான் றம்ப் அங்கிளுக்கே டமில் சொல்லிக் கொடுத்திட்டேன்.. இதில போய் குறை சொல்லலாமோ:)).. உங்களுக்குப் பொறாமை அதிரா நல்ல வடிவா தமிழ் எழுதுறா என. ஹா ஹா ஹா ஹையோ இப்போ அஞ்சு இதைப் பார்த்தால் ஒரு கப் மோர் மடமடவெனக் குடிப்பா:).
அதிரா இவ்வளவு நேரம் கரன்ட் இல்லாம இருந்துச்சு வந்ததும் கம்ப்யூட்டர் ஆன் செஞ்சா உங்க போஸ்ட் முதல்ல கண்ணுல பட்டுச்சு 7 மினிட்ஸ்னு சொல்லிச்சா உடனே ஃபர்ஸ்ட் நாமதான்னு நினைச்சு கமென்ட் போட்டாச்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ ஜெர்ரியைமும் முந்திங்க் கொண்டு னு நினைக்கிறேன்...ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
அது போஸ்ட் பண்ணிய உடனேயே 7 மினிட்ஸ் எனக் காட்டிச்சுது கீதா.. ஏனெனத்தெரியவில்லை... நான் போஸ்ட் பண்ணியவுடனேயே நெல்லைத்தமிழன் ஓடி வந்திட்டார்ர்ர்ர்:)) எங்கள் புளொக்கில் கொமெண்ட் போட்டுக் கொண்டிருந்தமையால உடன பப்ளிஸ் பண்ணாமல் இருந்தேன்.. அதுக்குள் நீங்க வந்து 1ஸ்ட் என நினைச்சிட்டீங்க....:).
Deleteபூஸார் தீர்க்கதரிசி தியானத்தில் இருக்கார் போல!! தோசைய பார்த்துட்டு பிச்சுக்கு நு யாரும் ஓடினாக் கூட கண்ணை மூடிட்டு இருந்தா எஸ் ஆகிடலாம்னு தானே!! ஹா ஹா ஹா ஹா
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா அது பூஸார் பத்து வருடமா பிரக்டீஸ் பண்ணி:), தியானத்தில மேலே எழும்புகிறார்ர்:))
Deleteபாட்டு சூப்பர் பாட்டு ரொம்பப் பிடிக்கும் பிடித்த பாட்டு
ReplyDeleteகீதா
அதேதான் கீதா, இது பேமஸ் ஆன பாட்டுத்தானே... ஏன் நெல்லைத்தமிழனுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரியவில்லையே... ஸ்ரீராம் கேட்கவே இல்லை என்கிறார் கர்:))..
Deleteரேடியோவில் அடிக்கடி போகும் பாட்டுக்களில் இதுவும் ஒன்று..
அது சரி எப்ப தோசை வாலி ஆனீங்க!! ஹா ஹா ஹா
ReplyDeleteஹப்பா ஏஞ்சல் நோட் திஸ் இப்பவாச்சும் க்ரெடிட்ஸ் கொத்துட்டாங்க உங்களை வம்புக்கு இழுக்காம!!! இதுல ஏதோ இருக்கு...ஜெர்ரி கவனமாகவே இருங்க ஹா ஹா ஹா ஹா
கீதா
ஹா ஹா ஹா சே..சே... அதனாலதானே காசிக்கு ரிக்கெட் நானே அஞ்சுவுக்கு புக் பண்ணியிருக்கிறேன்ன்ன்:)).. காரில கூட்டிப்போய்ப் பின்பு பிளேனில கூட்டிப் போகப்போறேன் :))
Deleteஅதிரா இந்த மாதிரி பங்களூர் கத்தரிக்காய் அதாவது சௌ சௌனு உங்க ஊர்ல ஸ்க்வாஷ்னு சொல்லுவாங்க அது தோல் கூட சட்னி செய்யலாம் இது போல!..பீர்க்கங்காய் தோல் அப்புறம் காயுமே சட்னி செய்யலாம்.
ReplyDeleteநானும் ஏஞ்சல் செய்திருந்த புடலங்காய் தோசை செய்தேன் ஃபோட்டோ கூட எடுத்து வைத்திருக்கேன்....என்னவோ பதிவே போடும் உத்வேகம் இன்னும் வரலை...
கீதா
கத்தரிக்காயையா செளசெள என்கிறீங்க.. செளசெள என்பது ஒருவித காயெல்லோ.. மாங்காய்போல இருக்கும். அதிலயும் எவ்ளோ மருத்துவக் குணங்கள் இருக்காமே.. நான் அதை மைசுர் பருப்பு போட்டு பால் விட்டு கறியாக்குவேன்.. அல்லது சும்மாவே மெலிய சொதிபோல செய்வேன் நல்லா இருக்கும். தோல் சீவ மாட்டேன் அதுக்கு.
Deleteவாழைக்காய் கத்தரிக்காய் பூசனிக்காய் உருளைக்கிழங்கு இவை எல்லாம் தோலுடனேயே சமைப்பேன்.
க்பேப்பிள் கத்தரி எனில், எங்கட மாமி, தோலை சீவி எறிஞ்சுபோட்டு வாழைக்காய் போட்டு வெள்ளைப்பால் கறி வைப்பா.. பார்க்க வெள்ளையா பளாபளா என நல்லாயிருக்கும்.
ஓ புடலங்காய் நேற்று அங்கிருந்துது கடையில்.. அதை நான் மறந்திட்டேன்ன்.. வாழைத்தண்டு இல்லாட்டில் பிசுக்கங்காய் என நினைச்சுக் கொண்டே போனமையால் வேறெந்த ஓசனையும்:) வரேல்லை:))
அது Chayote ச்சியோட்டே னு ப்ரனவுன்ஸ் .squash variety
Deleteநாங்க chow chow வை பெங்களூர் கத்திரினும் சொல்வோம் பிசுக்கங்கா cat :)
//நாங்க chow chow வை பெங்களூர் கத்திரினும் சொல்வோம்//
Deleteஓ இன்றுதான் அறிகிறேன்ன்ன்.. நீங்க மட்டும் செள செள வைப்பார்த்து கத்தரிக்காய் என்கிறீங்க:) நான் பிசுக்கங்காய் என்றால் மட்டும் தமிழ்க் கொலை என்கிறீங்க..:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது நியாயமே இல்ல.. எனக்குத்தேவை நீதி நியாயம் கடமை நேர்மை எருமைஈஈஈஈஈஈஈ:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா ரெம்ம்ம்ம்ம்ம்ப ரயேட் ஆகிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா..
//பிசுக்கங்கா cat :)//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:))
சீமைத்தினை நானும் வைச்சுருக்கேன் அதுல நிறைய டிஷ் செய்யலாம். சிறுதானியம் தானே..
ReplyDeleteகேக் கூட செய்யலாம்...
கீதா
அது தினை இல்லை கீதா.. கினோவா எனத்தான் சொல்கிறார்கள்.. அவிச்சுப்போட்டு ரைஸ் க்குப் பதில் சாப்பிடுவோம்ம்.. நல்லாயிருக்கும். இது அவிச்சால் பளபளப்பாக கிட்டத்தட்ட வெள்ளைக்கறையான் தெரியுமோ? அதேபோலவே இருக்கும் பார்க்க.
Deleteஎங்கட சித்தப்பாவுக்கு கினோவா நல்லது சாப்பிடுங்கோ என ரைஸ் க்குப் பதில் ஆன்ரி குடுத்தாவாம்.. சே..சே.. இது கறையான் போல இருக்குது எனக்கு வேண்டாம் என்றிட்டாராம் ஹா ஹா ஹா... இங்கு சூப்பமார்கட்டுக்களில் சமைத்தும் கிடைக்குது... காபோஹைதரேட் குறைஞ்சது.. மிக மிகக் குறைவு ஆனா மினரல்ஸ்/விட்டமின்ஸ் அதிகம் இருக்காம்.
தோசை சுட்டு தட்டில் வைச்சுருக்கறாது பார்க்கவே அழகா கீது!!!!!சூப்பரா இருக்கு அதிரா
ReplyDeleteட்ரம்ப் தாத்தாவுக்கு டமில் கத்துக் கொடுத்தது இருக்கட்டும் உங்க செக் குக்கு நீங்க கொடுக்க வேண்டிய பாக்கி எல்லாம் கொடுத்திட்டீங்களா ஏஞ்சல் நீங்க சொல்லுங்க! அந்த பச்சைக்கலர வைர அட்டி...
கீதா
//ரஅந்த பச்சைக்கலர வைர அட்டி...//
Deleteஸ்ஸ்ஸ்ஸ் அதைத்தான் கேட்டவ.. நான் காது கேளாததுபோல பேச்சை மாத்திப்போட்டன்:)) ஹா ஹா ஹா அதைவிடக் காசிக்குக் கூட்டிப் போவது எக்ஸ்பென்சிவ்வானதெல்லோ:)).
ஹையோ அதிரா கேபேஜ் லீவ்ஸ் பத்தியும் சிசு கிசு வாஆஆஆஆஆஆஆ ஆ என்ன அநியாயம் !!ஹிஹிஹி
ReplyDeleteகீதா
சிசு.... ஸ்பெல்லிங் மிஸ்ரேக் கீதா:).. நேக்கு டமில்லயும் டி எல்லோ:)) ஹா ஹா ஹா.
Deleteகேபேஜ் லீவ் சுண்டல் நல்லாருக்கு...பொரியல் சுண்டல்!!
ReplyDeleteஅதிரா முளை கட்டிய பயறு வேக வைக்கவே வேண்டாம் புரட்டி எடுத்தாலே நல்லாருக்கும் தான். நீங்க செய்திருக்கறதும் நல்லாருக்கு..
கீதா
///அதிரா முளை கட்டிய பயறு வேக வைக்கவே வேண்டாம் புரட்டி எடுத்தாலே நல்லாருக்கும் தான்///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா.. வேக வைக்காமல் செய்திருக்கிறேன் எனத்தான் சொல்லியிருக்கிறேன்ன்.. ஏனெனில் இதுவரை முளைக்கட்டிய பயறை ஆவியில் அவித்து பின்பு இப்படி தாளிச்சுக் கொட்டுவேன்ன்.. இம்முறை வித்தியாசமாக செய்தமையால் இங்கு போட்டேன்ன்.. மிக்க நன்றிகள் கீதா....
எனக்கு வெறும் அரிசி மாவு தோசை தான் பிடிக்கும். சும்மாவே இந்த பீர்க்கங்காய் எல்லாம் பிடிக்காது. இதுல பீர்க்கங்காய் தோசை வேறயா. ஆளை விடுங்க.
ReplyDeleteவாங்கோ சகோ சொக்கன் வாங்கோ...
Delete//சும்மாவே இந்த பீர்க்கங்காய் எல்லாம் பிடிக்காது. இதுல பீர்க்கங்காய் தோசை வேறயா//
ஹா ஹா ஹா இது இது இதுக்காகத்தான் இப்பூடித்தோசை சுடுவது:)) இதுவும் ஒரு தெக்கினிக்கி தேன்ன்:) அதாவது பீர்க்கங்காய், வாழைத்தண்டு எல்லாம் பொதுவாக சாப்பிட மாட்டார்கள்.. அப்போ இப்படி நைசாப் போட்டு விட்டால் உள்ளே போய் விடும்.. அது வித்தியாசம் தெரியாது சொன்னால் தவிர...:).. இனிமையாக இருந்துது..
//ஹா ஹா ஹா தொட்டதும் உடைஞ்சிட்டால்ல் என்ன ஆகும்ம்:)..//" - புதுசா வேற ஒன்னு வாங்கணும். அப்பத்தான் மண் சட்டியை செய்யுறவனுக்கு வியாபாரம் பெருகும்.
ReplyDeleteஇங்கே தமிழ் கடைகளிலே கிடைக்குதே.
நானே இந்தியாவிலிருந்து இங்கு இறக்குமதி செஞ்சு தமிழ் கடைகளுக்கு சப்ளை செய்யுறேனே .
அங்க தமிழ் கடைகளில் கிடைக்குமாக இருக்கும். நல்லா தேடிப்பாருங்க சகோ.
//அப்பத்தான் மண் சட்டியை செய்யுறவனுக்கு வியாபாரம் பெருகும். //
Deleteஉண்மைதான் ஆனா செய்வோருக்கு போவது கொஞ்சக் காசுதானே.. மண் பாத்திரம் செய்வதும் கஸ்டம்தான்..
//இங்கே தமிழ் கடைகளிலே கிடைக்குதே.//
எங்களுக்கும் கிடைக்குது, நான் வாங்கிச் சமைக்கிறேன்.. அதை ஒரு போஸ்ட்டாகவும் பெருமையோடு போட்டேஎன் எங்கு:)).. கடையில் 8-10 பவுண்ட்டுகள்.
ஆனா பானையும் சட்டியும் மட்டுமே இங்கிருக்கு.
மேலே தோசைக்கு அருகில் ஒரு குட்டி டிஸ் இல் சட்னி வைத்திருக்கிறேனெல்லோ பாருங்கோ.. அதுவும் மண் டிஸ் தான்.. அது எனக்கு ஒராள் தந்த கிஃப்ட்.
//நானே இந்தியாவிலிருந்து இங்கு இறக்குமதி செஞ்சு தமிழ் கடைகளுக்கு சப்ளை செய்யுறேனே //
ஓ அப்படியா அவ்வ்வ்வ்வ்வ்.. எனக்கு இப்போ விதம் விதமாக மண் பாத்திரம் வச்சிருக்கோணும் எனத்தான் விருப்பம் ஆனா கிடைக்குதில்லை.
மிக்க நன்றிகள் சொக்கன்.
...அப்படியே அந்த காசி ரிக்கெட்டை ஸ்ரீராம்கு கொடுத்திருங்க!! காசிக்குப் போறாராக்கும்!!!!!
ReplyDeleteநீங்க அடிக்கடி காசி காசினு சொல்லி இப்ப ஸ்ரீராம் காசிக்கு யாத்திரை போறார்!! காசியாத்திரை!!! ஹா ஹா ஹா ஹா இதுக்கு அர்த்தம் அவரிடமே கேட்டுக்கோங்க!!
கீதா
நீங்கதான் ஸ்ரீராம் காசி யாத்திரை போறதாச் சொல்றீங்க.... எனக்கு என்னவோ அவர் 'காசி அல்வா' சாப்பிடறேன்னு சொன்னதாத்தான் ஞாபகம்.
Deleteஅவ்வளவு நகைச்சுவையாய் போச்சு நான் யாத்திரை போவது....! பெருமாளே....!
Delete///அப்படியே அந்த காசி ரிக்கெட்டை ஸ்ரீராம்கு கொடுத்திருங்க!! காசிக்குப் போறாராக்கும்!!!!! ///
Deleteகுச் குச் கோத்தா ஹை:)) ஹா ஹா ஹா கீதா வடிவா திரும்பவும் கேளுங்கோ.. எனக்கெனமோ அது “காசினி”:)) எனச் சொன்னது உங்களுக்குக் காசி எனக் கேட்டிருக்குது போல:)) ஹா ஹா ஹா...
எனக்கு ஆராரோ அடி ஆராரோஒ அட அசட்டுப்பயபுள்ள ஆராரோ பாட்டுத்தான் நினைவுக்கு வரும் காசி என யாராவது சொன்னாலே ஹா ஹா ஹா..
//இதுக்கு அர்த்தம் அவரிடமே கேட்டுக்கோங்க!!//
அவர் இப்போ உண்மை ஜொள்ளுவதைக் கைவிட்டு அஞ்சு நாளாகுதாம்.. உபயம் நெல்லைத்தமிழன்:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))
ஹா ஹா ஹா நெலைத்தமிழன் அது காசினியைப் பார்க்க:)) ஹா ஹா ஹா...
Delete// பெருமாளே....!//
ஸ்ரீராம்.. காசியிலும் பெருமாளோ இருக்கிறார்ர்.. திருப்பதிக்குப் போய்ப் பார்க்க முடியல்ல என்று இப்போ காசிக்குப் போகப் போறீங்களோ பார்க்க.. போனால் அஞ்சுவுக்கும் எனக்கும் ஒரு நல்ல றூம் புக் பண்ணி விடுங்கோ பிளீஸ்ஸ்... ஹா ஹா ஹா.
ஸ்ரீராம்... திருப்பதியைப் பற்றி எழுதினது என் மனசிலேயே இருக்கு (மனசுக்கு வருத்தமா). எப்படி அவ்வளவுதூரம் போய் பெருமாளை தரிசனம் பண்ணலைன்னு தோணுது. நானே கையைப் பிடிச்சு கூட்டிக்கொண்டு போயிட்டு வரலாமான்னு தோன்றியது. (குறிப்பா அவங்க மாமியாரோட)....
Deleteமண் பாத்திரங்கள் நிறைய கிடைக்குது அதிரா...மண் தாவா கூட இது போல கிடைக்குது ஆனா நடுல கொஞ்சம் குழிவா இருக்கற தாவா வாங்கிடாதீங்க...அது சப்பாத்தி போட்டால் நடுவில வேக மாட்டேங்குது. அத்தனை நல்லா இல்ல.
ReplyDeleteஃப்ளாட் தாவானா வாங்கலாம். மற்றபடி மண் பாத்திரம் எதுவா இருந்தாலும் நல்லா ருக்கும் சீக்கிரம் சூடு பிடித்து நல்லா குக் ஆகும்..
கீதா
உங்களுக்கு அங்கு நிறையக் கிடைக்கும் கீதா, இங்கு எங்களிடத்தில் அப்படிக் கிடைக்காது. சட்டி கிடைச்சதே பெரிய விசயம். ஊருக்குப் போனால் வாங்கி வரலாம். ஆணன் ஊரிலிருந்து 2 செட் வாங்கிப் போனாராம்.. அது லக்கேஜ் இல் போட்டமையால் ஒரு செட் உடைஞ்சு போச்ச்ச்ச்:))... என்னவெனில், இங்கு கரண்ட் அடுபுக்கேற்றது கிடைக்குதில்லை, கீழே கொஞ்சம் குண்டாளம்போலதான் கிடைக்குது.. அதனால ஹாஸ் அடுப்பு இருப்போர் மட்டுமே பாவிக்கலாம்.
Deleteஉண்மைதான் மண் சட்டியில் சமைச்சால் விரைவில நீரை உறிஞ்சி விடுது கீரைக்கெல்லாம், நொன் ஸ்ரிக் எனில் நீண்ட நேரம் எடுக்கும் தண்ணி வத்த.
ஹலோவ் மியாவ் இருங்க ஒரு பஞ்சாயத்து இருக்கு நெல்லைத்தமிழனோட :) மாவடு பஞ்சாயத்து முடிச்சிட்டு வரேன் இங்கே
ReplyDeleteவாங்கோ அஞ்சு வாங்கோ... நாங்க இந்தக் கிழமையும் டமில்க் கடை போக இருக்கிறோம்ம்.. பார்ப்போம் மாவடு கிடைக்குதோ என...
Deleteபிசுக்கங்காய் ஓசையின் ஓனரே இப்பூடி லேட்டா வந்தால்ல்.. பிறகு காசி ரிக்கெட்டைக் கான்சல் பண்ணிடப்போறேன்ன்ன்:))
42 பவுன்ட்ஸ் விலை அதிகம் இந்தியக் கணக்குப்படி பார்த்தா....இல்லையோ?!! எங்களுக்கு இங்க சட்டி பானை எல்லாம் நல்ல்லா கிடைக்குது..
ReplyDeleteவடிவேலு ஆடு லோன் மீம்ஸ் பார்த்ததும் பார்த்திபன் வடிவேலு ஒரு காமெடி நினைவுக்கு வந்துச்சு..இந்த மீம்ஸ் ஊசி இணைப்பு.ஹா ஹா ஹா ..படம் வெற்றிக் கொடி கட்டு ல வருமே...அது
ஊசிக்குறிப்பும் நல்லாருக்கு...பாஸிங்க் களவுட்ஸ் தானே எல்லாமே...சிமிட்டும் இமை அந்த வரி சூப்பர்..
லாஸ்ட் வடிவேலு ஜோக் ஹா ஹா ஆ ஹா ரிசார்ஜ்ஜுக்கு என்னா அல்டாப்பு!!
நீங்க எதுக்கு இப்ப தியான மோட்ல இருக்கீங்கனு தெரியுமே எல்லாம் அந்த பிசு பிசு தோசை!!! ஹா ஹா ஹா நெல்லை என்ன சொன்னாலும் காதுல விழாம எஸ் ஆகறதுக்கு!!
நெல்லை போட்டு வாங்கிடுவார் பாருங்க!
கீதா
//42 பவுன்ட்ஸ் விலை அதிகம் இந்தியக் கணக்குப்படி பார்த்தா....இல்லையோ?!! //
Deleteஇந்தியக் கணக்கென்றில்லை இங்கத்தைய பவுண்ட்ஸ்க்கும் விலை ரொம்ப அதிகம்தான் கீதா...
நல்ல தரமாக பிராண்ட்டட் நொன் ஸ்ரிக்கூட இடைக்கிடை 25/20 பவுண்ட்டுகளுக்கு சேல் போடுவார்கள்.. அப்படி வாங்கி வச்சிருக்கிறேன் நான். ஆனா அதுக்கு பயப்பிடாமல் விலை கொடுக்கலாம்.. இது நம்பி எப்படி வாங்குவது உடைஞ்சிட்டால்.
// நெல்லை என்ன சொன்னாலும் காதுல விழாம எஸ் ஆகறதுக்கு!!
நெல்லை போட்டு வாங்கிடுவார் பாருங்க!
///
ஹா ஹா ஹா கரெக்ட்டாக் கண்டு பிடிச்சிட்டீங்க:))
ஒன்னு சொல்ல விட்டுப் போச்சு முள்ளங்கி, பீட்ரூட் இலையையும் இப்படி சுண்டல் செய்யலாம் அதிரா..
ReplyDeleteகீதா
செய்திருக்கிறேன் கீதா, மேலே நெ.தமிழனுக்குக் குடுத்த பதிலைப் படியுங்கோ.. புடலங்காயிலும் இப்படித்தான் செய்வேன்.
Deleteமிக்க நன்றிகள் கீதா அனைத்துக்கும்.
ஹலோ மியாவ் :) நான் பீர்க்கங்காய் தான் சொன்னேன் ..பிசுக்கங்காயினு ஒன்னு இருக்கா ??
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அஞ்சு நீங்க உங்கட புடலங்காயைச் சொல்ல மறந்திட்டீங்க.. அதைத்தான் நான் நோக்கிளில் செய்தீங்க எனக் கேட்டேன் ஹா ஹா ஹா:).
Deleteபீர்க்கங்காய் துவையல், சட்னி செய்வோம், தோசை செய்தது இல்லை. செய்து பார்த்து விடுகிறேன்.
ReplyDeleteநல்ல காயை ஏன் இப்படி வேறு பெயர் கொடுத்து?
வாங்கோ கோமதி அக்கா வாங்கோ..
Deleteஎன்ன சொல்றீங்க.. நான் நாங்கள் பேசுவதைத்தானே எழுதுகிறேன்.
சில சொற்கள் வேணுமென்றே எழுதுவேன் கோமதி அக்கா, ஆனா இலங்கையில் பிசுக்குக் கொடி, பிசுக்கங்காய் எனத்தான் சொல்லுவோம். சரியான பெயர் தேட வேண்டும்.
Deleteஓ சரி சரி, சிலர் குழந்தை பேசுவது போல் சொல்வார்கள்.
Deleteநெல்லை உங்களுக்கு புச்சுக்கு தோசை ஒட்டிக்கிச்சுத்தானே!!!
ReplyDeleteஅதை ஏன் கேக்கறீங்க எனக்கு இன்னும் ஒட்டினது போலையாக்கும்...
ஒரு வேளை பூஸார் இப்ப எந்த ஹேன்ட் வாஷுக்கும் அம்பாசிடர் ஆகிட்டாரோ!!!!!
கீதா
ஹா ஹா ஹா என் ஓசையை விட்டுப்போட்டு எல்லோரும் பிசுக்கிலயே நிற்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
Deleteஓ இது தான் தோசையா...?
ReplyDeleteநன்றி சகோதரி...
வாங்கோ டிடி வாங்கோ..
Delete//ஓ இது தான் தோசையா...?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஹா ஹா ஹா நன்றி.
கேபேஜ் லீவ் சுண்டல் பச்சை கலர் மாறாமல் அழகாய் இருக்கிறது.
ReplyDeleteபுசு புசு என்று வளரும், இது என்ன கிசு கிசு என்று வளருது!
இப்படிச் சுண்டல் வகைகள் நன்கு வதங்க விடக்கூடாது கோமதி அக்கா, கொட்டிப் பிரட்டி டக்கென இறக்கிடோணும்..
Deleteஅது பூனைக்குட்டி பப்பீஸ் தான் புசு புசு என வளரும்:)) செடிகள் கிசு கிசுவென வளரும்.. விதைகள் கிலுகிலு வென முளைக்கும் ஹா ஹா ஹா என்னோடு பேசினால் உங்களுக்குத் தலை சுத்தும்:))
முளைகட்டிய பயிறு வெல்லம், தேங்காய் பூ போட்டு சாபிட்டாலும் நன்றாக இருக்கும், வெள்ளிரிக்காய், மாங்காய், தேங்காய் பல் போட்டு பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டியும் சாப்பிடலாம். மாங்காய் இல்லைஎன்றால் எலுமிச்சை பிழிந்து சாப்பிடலாம்.
ReplyDeleteஉங்கள் செய்முறையும் நன்றாக இருக்கிறது.
ஓ இதில் பல விதமாகவும் செய்யலாம் போலும். நாங்கள் அவித்த பயறுக்கு தேங்காய்ப்பூ, சக்கரை போட்டு இடித்து எடுத்துச் சாப்பிடுவோம் முன்பு.. இப்போ இங்கு அப்படி இனிப்பு வகை ஆருக்கும் பிடிப்பதில்லை.
Deleteநெல்லி, மாங்காய் , சப்போட்டா எடுத்துக் கொள்கிறேன், வெற்றிலை போடும் பழக்கம் இல்லை.
ReplyDeleteஹா ஹா ஹா விரும்பியதை எடுங்கோ.. வெற்றிலை செமிபாட்டுக்கு நல்லது. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.
Deleteஹலோவ் மியாவ் ..முதலில் ஒன்றை தேவதை கிச்சன் சார்பாக பதிய விரும்புகின்றேன் .
ReplyDeleteஅது தோசை இட்லி அரைக்கும்போது இப்படி பல கூட்டு பொருட்களை சேர்க்காதிங்க ஐ மீன் ப்ரெட் சாதம் இதெல்லாம் போட்டா உடம்புக்கு கெட்டது .
வேணும்னா அவல் பொரி கொஞ்சமா சேர்க்கலாம்
//மீன் ப்ரெட் சாதம் இதெல்லாம் போட்டா உடம்புக்கு கெட்டது .
Delete//
ஹா ஹா ஹா மீன் என நினைச்சிடப்போகினமே ஆட்கள் ஹையோ வைரவா:)).. உண்மைதான் அஞ்சு, ஆனா அதெல்லாம் போடாவிட்டால் புளித்துப் பொங்காதே எனும் பயத்தில மனம் கேட்காமல் போட்டு விடுவேன்.
சரி தோசை புளிக்க நான் சொன்ன அந்த மிளகாய் காம்புடன் சேர்க்கும் ஐடியாவைப்பத்தி மூச்சு விடல்லையே இங்கே ??
ReplyDelete....ஙேஙேஙே... கிரடி ஐ மொத்தமாக வாங்காமல் விட மாட்டா போல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
Deleteதோசை புளிப்பதற்கு பச்சை மிளகாயைக் காம்புடன் போடோணுமாம் என அஞ்சு ஜொள்ளித் தந்தவ:).. ஆனா அஞ்சு அது போட்டாலும் ஒரு நாளில் எனக்கு பொயிங்கவே பொயிங்காது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) 2 நாள் வேணும் புளிக்க.
ரவை தோசையா... இல்லை ரவ்வை தோசையா.... குசம்பி போயிட்டேன்...
ReplyDeleteதலைப்பே தலையை உருட்டுதே...
வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. கலகம் பிறந்தால்தானே தெளிவு கிடைக்கும் ஹா ஹா ஹா நன்றி.
Delete/என் தோசை மா, ஒரு இரவில் இங்கு புளிக்காது, அதனால புளிக்காமலேயே சுட்டேன்.//
ReplyDeleteபுளிச்சா எனக்கு இஷ்டமில்லையே :) புளிக்கணும்னு அவசியமில்லை புளிச்சா உடம்புக்கும் கெட்டது
அதோட அந்த முந்திக்காலத்தில் மாவை சுடுதண்ணி விட்டு கரைச்ச உங்களோட பிரதாபங்களையும் சொல்லணும் ஒவ்வொருமுறையும்
இல்ல அஞ்சு புளிச்சு மா பொயிங்கி எழும்பியிருந்தால்தான் அது தோசை.. கல்லில வார்க்கும்போதே குட்டிக் குட்டி ஓட்டையோடு பொங்கி எழுந்து வரும்.. சூப்பராக இருக்கும்.. இல்லை எனில் கோதுமைத்தோசைபோல ரொட்டிபோல வரும்.. அது எங்களுக்குப் பிடிக்காதே...
Delete//அதோட அந்த முந்திக்காலத்தில் மாவை சுடுதண்ணி விட்டு கரைச்ச உங்களோட பிரதாபங்களையும் சொல்லணும் ஒவ்வொருமுறையும் //
[im] https://thelittersitter.files.wordpress.com/2014/03/angry-cat.jpg?w=337&h=211 [/im]
ஏஞ்சலை ஏமாற்றி குரு தட்சிணையும் கொடுக்காமல் காரில் சென்னையா?தோசை வாலி பட்டம் வேறு வைத்து கொண்டீர்களா?
ReplyDeleteஅதில் குருவின் பேரை கெடுப்பது போல் பீர்க்கங்காய் என்று அவர் சொன்னதை சொல்லாமல் பிசுக்காங்காய் என்று வேறு சொல்கிறீர்கள் .
///ஏஞ்சலை ஏமாற்றி குரு தட்சிணையும் கொடுக்காமல் காரில் சென்னையா//
Deleteசே..சே... நல்லது செய்தாலும் விடமாட்டேனென்கிறீங்களே ஹா ஹா ஹா.. அவவுக்கும் காசி பார்க்க ஆசையாம்ம்:) அதனாலதான் கூட்டிப் போகிறேன் கிஃப்ட் க்கு:)).. காசியில போய்க் குடுப்பேன் குரு டெட்சணை:)).
//தோசை வாலி பட்டம் வேறு வைத்து கொண்டீர்களா?//
இது கோமதி அக்கா பிரித்தானிய சமையல் கழகத்தினரால் வழங்கப்பட்ட பட்டம்:)) ஹையோ எதுக்கு கோமதி அக்கா இப்போ முறைக்கிறா:)).. ஐயனார் கோபிச்சிடப்போறாரே:)..
அது பீர்க்கங்காயோ பிசுக்கங்காயோ என அஞ்சுவுக்கே டவுட்:)) இப்போ பீர்க்கங்காஅய்க்கே வோட் அதிகம் என்றதும் டக்குப் பக்கெனக் கட்சி மாறி நிக்கிறா:)) கர்ர்ர்ர்ர்ர்:)) ஆனாலும் கோமதி அக்கா.. அவ கட்சி மாறினாலும்:) நான் சொன்னது சொன்னதுதான்:)) ஏமாத்தாமல் காசிக்குக் கூட்டிப் போவேன்ன்:) உடுப்படுக்கச் சொல்லுங்கோ.. இன்னும் அடுக்காமல் ஊர் உலாத்திக் கொண்டு திரிகிறா கர்ர்ர்:))..
ஹா ஹா ஹா மிக்க நன்றி.
/ரவ்வை //
ReplyDeleteஇதை பாக்கும்போதெல்லாம் ஹார்ட் பீட் எகிறுதே எங்களுக்கு
ரவ்வை, மைத்தா, கோத்துமை, அர்ர்ரிசி.....!!!
Deleteஆம்பார் :) சுசி கைப்பு
Deleteஇன்னும் இருக்கு இட்டலி :) ஒட்டீஈஈ ,
Deleteஹா ஹா ஹா நாட்டு மக்களுக்கோர்ர் நற்செய்தி.. இப்போ என்னாலதான் பயத்தில பலபேர் கவனமாக ஸ்பெல்லிங் செக் பண்ணிப் பண்ணியே கொமெண்ட் போடீனம்:)).. ஏன் தெரியுமோ..
Deleteஎனக்கு அஞ்சு மெயில் போட்டிருந்தா... அதில.. அதிரா ரவ்வை தோசை:)) என எழுதியிருக்கிறா ஹா ஹா ஹா பின்ன விடமாட்டமில்ல:)).. திரும்பத் திரும்பச் சொல்லி பாடமாக்கித் தந்திடுவேன் என் பாஷையை ஹா ஹா ஹா:))
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம் அது கோதுமை தான்:)) த் வராதே:)).. தமிழில் எப்பூடிப் பேசினாலும் நீங்க கண்டு பிடிக்கிறீங்களோ எல்லோரும் எனும் நல்லெண்ணம்தேன்:))
//அதில.. அதிரா ரவ்வை தோசை:)) என எழுதியிருக்கிறா ஹா//
Deletethat naarodu serntha poovum moment :)))))))))
ஹா ஹா ஹா வெற்றி எனக்குத்தேன்ன்.. இப்போ மணமோ முக்கியம்:))
Deleteமண் பாத்திரம் அழகாய் இருக்கிறது.
ReplyDeleteஒரு காலத்தில் வித விதமாய் மண்பானையில் சமைத்தேன், மண்பானை தண்ணீர் வைத்து குடிப்பேன். இப்போது ஒன்றும் இல்லை.
மண்கூசாவில் தண்ணி விட்டு வைத்துக் குடிப்பது என்னா ஒரு சுவை... ஆனா சூட்டு நாடுகளுக்குத்தான் அது தேவை, இங்கு மெல்லிய சூடாக்கி விட்டே நான் குடிப்பேன்.
Deleteஹாஹா :) இது ட்ரம்ப் அங்கிளுக்கு :) அவர் பழமொழி வித்தகர் அந்நிய பாசைக்கூட பேசுவார்
ReplyDelete///பழமொழி வித்தகர்////
Deleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ நெல்லைத்தமிழன் ஓடி வாங்கோ.. ஸ்பெல்லிங் மிசுரேக்க்கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ:)) .. நேக்கு டமில்ல டி எல்லோ விடமாட்டேஎன்ன்:)) ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட ஆரையும் விடவே மாட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா...
ஒரு படத்தில் பாரதிராஜா மகனுக்கு இங்கிலிஷ் சொல்லி கொடுப்பார் ஒரு டீச்சர் அவர் நிலை தான் இப்போ எனக்கு :)
Deleteஅநேகமா நான் தமிழை மறக்கும் கட்டத்துக்கு வந்துட்டேன் :) எல்லா புகையும் சேசே புகழும் தோசை வாலிக்கே
இப்போ situation சோங் //தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியில மான் போல வந்தவளே (னே )
Deleteயாரடிச்சாரோ யாரடிச்சாரோ ( இங்கே தேம்பி தேம்பி அழறேன் )
கடைசியில் என்னையே ழ /ல வித்யாசத்தை உணரக்கூட முடியாம பண்ணிட்டிங்களே மியாவ் .
ப்ரீயா ப்ளீஸ் சேவ் மீ ....
உங்க கையை பிடிக்ககூட முடியாம நானே விழுந்திட்டேன் தலைசுத்தி.. போகிறபோக்கில் எனக்கும் தமிழ் மறந்திடும் போல அஞ்சு....
Delete///அநேகமா நான் தமிழை மறக்கும் கட்டத்துக்கு வந்துட்டேன் :) எல்லா புகையும் சேசே புகழும் தோசை வாலிக்கே//
Deleteஹா ஹா ஹா எதுக்கு டங்கு இப்போ ஸ்லிப்பாகுது அஞ்சுவுக்கு:)).. தமிழ் பேசும்போது டங்கு ஸ்லிப்பாகிடாமல் பார்த்துக்கணும் அஞ்சு:)) இல்லை எனில் டமில் ஒழுங்கா வராது:))
///கடைசியில் என்னையே ழ /ல வித்யாசத்தை உணரக்கூட முடியாம பண்ணிட்டிங்களே மியாவ் .
Deleteப்ரீயா ப்ளீஸ் சேவ் மீ ....///
ம்ஹூம்ம்ம் தடக்கி விழுவதற்கெல்லாம் என் பெயரைச் சொல்லிடுங்கோ நல்ல விசயத்துக்கெல்லாம் , கிரடிட்டை உங்க பெயரில கணக்கு வைங்கோ:)) இதுக்குத்தான் காசிக்கு வாங்கோ எனக் கூப்பிடுறேன்ன்ன்.. ஏதோ குறை இருக்கு:)) காசி தீர்த்தத்தில மூழிகினால் எல்லாம் நோர்மலாகிடும்:)) ஹா ஹா ஹா..
//priyasakiTuesday, April 02, 2019 9:04:00 am
உங்க கையை பிடிக்ககூட முடியாம நானே விழுந்திட்டேன் தலைசுத்தி.. போகிறபோக்கில் எனக்கும் தமிழ் மறந்திடும் போல அஞ்சு....///
ஹா ஹா ஹா தமிழ் மறந்தாலும் டமில் மறக்காது உங்கள் எல்லோருக்கும்:))
ஹலோ மியாவ் எனக்கு டிக்கட் புக் பண்ணின பணத்தை மட்டும் அனுப்பிடுங்க ஒரு டிக்கட்டில் நீங்களே காசிக்கு போய் முங்கி எழும்புங்க :) அப்புறம் அங்கேயே ஒரு தோசை தாபா போட்டு செட்டில் ஆகிடுங்க :)
ReplyDeleteஅஞ்சு அது கான்சல் பண்ண முடியாத புக்கிங்:)).. அதனால நீங்க வந்துதான் ஆகோணும்:)).. உங்களுக்கு கழுத்துக்கு காசியில காசு மாலை வாங்கித்தாறேன்ன்.. சுடச்சுட அண்ணாச்சி கடையில பருப்பு வடை வாங்கித் தருவேன்:)).. குழைசாதமும் கிடைக்குமாமே:))..
Deleteநோ நோஓ செட்டில் ஆகப் போகல்ல நான்:).. எனக்கொரு நேர்த்தி இருக்கு:) அதை நிறைவேத்தத்தான்:)).. அங்கு போய் கடல்ல குளிச்ச பின்புதான் நேர்த்தி என்ன எனச் சொல்லுவேனாக்கும்:)). அதுவும் கடலில் இறங்கும்போது அஞ்சுட கையைப் பிடிச்சுக்கொண்டே. ஸ்நானம் பண்ணுவேன் என்பதும் நேர்த்தியில் ஒரு பார்ட்:))
அடடே மண்சட்டி கைப்பிடியுடன் இருக்கே :) ஆனா எனக்கு வேணாம் . எங்க புது hob ல வைக்க முடியாதே
ReplyDeleteஊசி இணைப்பு குறிப்பு எல்லாம் நல்லாருக்கு :) எங்க ஏரியாவில் வெயில் கொட்டிங் அதனால் நேத்து சாப்பிட்ட உளுந்து வடை காம்பென்செட் செய்ய மீ 150000 ஸ்டெப்ஸ் நடந்துட்டு வரேன்
இந்த மண் சட்டி எந்த அடுப்பிலும் வைக்கலாம் அஞ்சு.. உங்களுக்கு விருப்பமில்லை எனில் என் பேர்த்டேக்கு கிஃப்ட் டா வாங்கித் தரலாமே:) நான் என்ன வாணாம் என்றா ஜொள்ளப்போறேன்:))..
Deleteபோன கிழமை சூப்பர் வெதர்.. நேற்று விண்டர் போலக் குளிர்.. இன்று நல்ல வெதர்.. நானும் 9000 ஸ்ரெப்ஸ் நடந்தேனே இன்று:)) பூஸோ கொக்கோ:))
ஊசி இணைப்பு, ஊசிக் குறிப்பு அனைத்தும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteயோகா, தியானம் செய்யும் பூஸார் அழகு.
திட்டுவதை காதில் வாங்காம்ல் தியானத்தில் இருக்கும் கணவர் ஏன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார்?
//திட்டுவதை காதில் வாங்காம்ல் தியானத்தில் இருக்கும் கணவர் ஏன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார்?//
Deleteஅது ஓவர் ஆக்டிங் கோமதி அக்கா ஹா ஹா ஹா அனைத்துக்கும் நன்றி நன்றி.
ஹையோ, அதுக்குள்ளே இத்தனை பேர் வந்துட்டுப் போயிட்டாங்களா. அதென்ன பிசுக்கங்காய்? தோசைனும் சொல்லத் தெரியலை! ஓசைனே சொல்லிட்டுத் தமிழிலே டி எல்லோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனால் ட்ரம்ப் அங்கிளும் அந்த இன்னொருத்தர் பெயர் என்ன? ரெண்டு பேரும் நல்லாவே தமிழில் கதைக்கிறாங்க! இஃகி, இஃகி, சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குது!
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ.. பிசுக்கங்காய் என்பது பீர்க்கங்காய்போல இருக்கும்:)) அதை நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ம்.. நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம்:)) ஹா ஹா ஹா
Deleteஎப்பூடி ட்றம்ப் அங்கிளுக்கு என் ட்ரெயினிங்:)).. இதோடு அவர் என் சம்பளத்தையும் ஏத்திட்டாராக்கும்:))....
ஆனா என் செக்கைப் பாருங்கோ:)) அவவுக்கு இருந்ததும் இல்லாமல் போகுது வரவர:)) அப்போ எப்பூடி டம்பளத்தை ஏத்துவேன் ?:)) ஹா ஹா ஹா...
பயறு முளைக்கட்டிச் சுண்டல் நானும் பண்ணுவேன். சுவையாக இருக்கும். வெங்காயம், தேங்காய், ஜீரகம், மிவத்தல் அரைச்சு விட்டு க்ரேவியாகவும் பண்ணினால் சப்பாத்தி, ஜீரா ரைஸ் ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட நல்லா இருக்கும்.
ReplyDeleteஓ நன்றி கீசாக்கா..
Deleteதியானம் செய்யும் பூஸார் அருமையா தியானம் செய்யறார்! ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் அருமை. இன்று ஒரு டகவல் இஃகி, இஃகி
ReplyDeleteஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க நன்றி.. என்பக்கம் வருவோர்ர் சிரிச்சபடி திரும்பிச் செல்வதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி...
Deleteஇந்தப் பாடல் இதுவரை நான் கேட்டதில்லை. ஆச்சர்யம் எஸ் பி பி பாடல்! ஆனாலும் கேட்டதில்லை. காட்சியைப் பார்த்தால் பட்டணத்துப் பொண்ணைக் காதலிக்கும் அவமானப்படப்போகும் அத்தை பையன்! கடைசியில் இவன்தான் ஜெயிப்பான். டிராயர் போட்ட பொண்ணு இவன் ஜெயிக்கும் காட்சியில் பாவாடை தாவணியோ, புடைவையோ கட்டி இவன் பாதம் பணிந்திருப்பாள்!
ReplyDeleteவாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.
Deleteஆவ்வ்வ்வ் அதெப்பூடி இப்பாட்டுக் கேட்காமல் விட்டீங்க.. கொஞ்சம் பேமஸ் ஆன பாட்டுத்தானே...
அதெப்படி படக்கதை மட்டும் கரீட்டா??:)).. ஹா ஹா ஹா நானும் படம் பார்த்ததில்லை, ஆனா பாட்டு மனதைத்தொட்ட பாட்டு.
பரவாயில்லை.... கடைசிப்பெட்டியில் ஏறாமல் நடுப்பெட்டியிலேயே ஏறிட்டேன் போலவே.....!
ReplyDeleteஹா ஹா ஹா ரெயின் இன்னமும் ஸ்ராட் ஆகாமல் ஸ்கொட்லாந்து ஸ்ரேசனிலேயே நிக்குது:))..
Deleteஎன்னாலும் உடன் பதில் தர முடியவில்லை எல்லோருக்கும் மன்னிக்கவும். இன்று முழுக்க வீட்டில் இருக்கவில்லை.
இப்படி உடனுக்குடன் பதில் போட முடியாதெனும்போதுதான் போஸ்ட்டே போடாமல் அமைதியாக இருக்க நினைப்பேன்ன்.. மனதுக்கு கஸ்டமாக இருக்கும் உடன் பதில் கொடுக்காட்டில்.
பிசுக்கங்காய்! இதைப் படித்தால் தேய்க்காத எண்ணெய்ச் சட்டி நினைவுக்கு வருகிறதே!!! சரி... சரி... பீர்க்கங்காய் நாங்கள் எப்போதாவது சமைக்கும் ஒரு காய். போதையைப் பெயரில் வைத்திருக்கும் காயாம். இன்று ஒரு புதிரில் படித்தேன்!
ReplyDeleteஅதை நீங்க சொல்வதுபோலவும் சொல்லலாம், நான் சொல்வதுபோலவும் சொல்லலாம்ம் அதுவா முக்கியம் தோசைதான் முக்கியம் ஹா ஹா ஹா..
Delete//போதையைப் பெயரில் வைத்திருக்கும் காயாம். இன்று ஒரு புதிரில் படித்தேன்!//
ஓ புதிரில இதுகூடச் சொல்கிறார்களோ ஹா ஹா ஹா.. இதில் நிறைய நல்ல மருத்துவக் குணங்கள் உண்டு.
எங்கள் வீட்டில் சாதத்துக்கு கலந்துகொள்ள பீர்க்கங்காயத் துவையல் செய்வதுண்டு. தோசையில் போட்டதில்லை. எனக்கென்னவோ தோசை அதன் தோற்றத்தில் ஒரு கவர்ச்சியை இழந்து வயதான நடிகை போலத் தோற்றம் தருவதாகத் தோன்றுகிறது!!!! மன்னிக்கவும்!
ReplyDeleteநாங்கள் பெரும்பாலும் பிசுக்கில் பால் விட்ட வெள்ளைக்கறிதான் வைப்போம். அல்லது கொஞ்சம் மைசூர் பருப்புச் சேர்த்து பால் விட்டு பிரட்டல் கறி.. துவையல் எல்லாம் பண்ணியதில்லை.
Delete//எனக்கென்னவோ தோசை அதன் தோற்றத்தில் ஒரு கவர்ச்சியை இழந்து வயதான நடிகை போலத் தோற்றம் தருவதாகத் தோன்றுகிறது!!!! ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போகூட நடிகையாம்ம்.. நடிகன் எனச் சொல்ல வாய் வரவில்லை:)) நான் பொயிங்கப் போறேன்ன்ன்ன்:)) காசிக்கரையில யாகம் ஆரம்பிக்கப் போறேன்ன்ன்ன்:)).. அஞ்சு கெதியா வாங்கோ.. அம்முலு வேண்டம்ம்:)) ஹா ஹா ஹா.
தோசை கொஞ்சம் தண்ணியாப்போச்ச்ச்ச்ச்:) அதுதான் அப்பூடியாக்கும்:)).. கோழி குருடானாலும்.. அந்தப் பயமொயியை நினைச்சுக் கொள்ளோணும் இங்கு:)).
//மன்னிக்கவும்!//
நோஓஓஓஓஓஓஓஓஓஓ இதை எப்பூடி மன்னிப்பது.. இது பெண்கள் பிரச்சனை.. மானப் பிரச்சனை.. நாங்க காசிக் கரையில யாகம் ஆரம்பிச்சே தீருவோம்ம்ம்:)) ஹா ஹா ஹா..
டிரம்ப் தமிழ்!! கேபேஜ் இலை சுண்டலும், பயறுச் சுண்டலும் பார்க்க நன்றாய் இருக்கிறது. காசி கயாவுக்குச் செல்ல போட்டி அதிகமாகிறதே!
ReplyDelete///காசி கயாவுக்குச் செல்ல போட்டி அதிகமாகிறதே!//
Deleteஅதானே பாருங்கோ ஸ்ரீராம்.. இப்போ நீங்களும் ரெடியாகிட்டீங்க என கேள்விப்பட்டேனே:)).. மொத்தப் பலனையும் அதிராவுக்கே அந்த விசுவநாதர் குடுத்திடப்போறார்ர்.. இடையில புகுந்து பாதியைப் பறிச்சிடுவோம் எனும் ஐடியாத்தானே ?:) ஹா ஹா ஹா..
எதுக்கும் காசியில “குளூட்டன் ஃபிறீ” உணவுகள் கிடைக்குமோ எனக் கொஞ்சம் கேட்டிட்டு வாங்கோ ஸ்ரீராம்:).. ஏனெனில் எனக்கு கல்லுக்கூடச் செமிச்சிடும் ஆனா அஞ்சுவும் வாறா எல்லோ என்னோடு.. அப்போ இதை எல்லாம் நான் விசாரிக்கத்தானே வேணும்:))..
ஹா ஹா ஹா என்னாலயே சிரிச்சு முடியல்ல:))... நானே எழுதி நானே சிரிக்கும் பரம்பரையாக்கும் என் பறம்பறை:))
ஊசி இணைப்பு - ரசித்தேன். ஊசிக்குறிப்பு - நெகிழ்ந்தேன்! ரீசார்ஜ் கடைக்காரன் - சிரித்தேன். (எந்தப்பெண்ணையும் சொன்ன உடனே சிரிக்க வைக்க போட்டோ எடுப்பவரால் மட்டுமே முடிகிறது என்பதுபோல!)
ReplyDelete//(எந்தப்பெண்ணையும் சொன்ன உடனே சிரிக்க வைக்க போட்டோ எடுப்பவரால் மட்டுமே முடிகிறது என்பதுபோல!)///
Deleteஆஆஆஆஆஆஅ ஸ்ரீராமும் தன் வரவுக்கு ஒரு ஜோக் சொல்லிட்டுப் போயிருக்கிறார்ர் ஹா ஹா ஹா.
மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.
ஏனையோர் மன்னிக்கவும்.. மிகுதிப் பதில் நாளைக்குத் தருவேன்.
வணக்கம் அதிரா சகோதரி
ReplyDeleteவழமை போல் தங்கள் பதிவு அமர்க்களம்.. அருமை. பீர்க்கங்காய் தோசை நன்றாக இருக்கு. சட்னியும் அருமையாக உள்ளது. நான் இதைப் போட்டு தோசை செய்ததில்லை. இனி ஒரு சமயம் இது போல் செய்து பார்க்கிறேன். ஆனால் சட்னி செய்திருக்கிறேன். எ.பியில் கூட "திங்க" பதிவாக வந்திருக்கிறது. ஏன் இந்த பெயர் மாற்றம்? ஒருவேளை இதை நீங்கள் இப்படித்தான் அழைப்பீர்களோ?
தோசை படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. கோஸ் இலைகளை வைத்து சுண்டல் செய்தீர்களா? பார்க்கவே அருமையாக இருக்கின்றனவே.! பாராட்டுக்கள்.
பயிறு சுண்டலும் அருமை.
காசிப்பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள்.
ஊசி இணைப்பு, ஊசிக்குறிப்பு அனைத்தையும் ரசித்தேன். ரீசார்ஜ் காமெடியை ரசித்தேன்.
பூஸாரின் தியானப்படம் அழகாக உள்ளது. இதைப்பார்த்தாவது அனைவரும் தியானம் எப்படி செய்ய வேண்டும் என்று முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். (குறிப்பாக ஆண்பால்) ஹா ஹா ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ..
Deleteஅது நான் பாவிக்கும் பெயர், அதனால மாற்றமில்லாமல் போட்டேன்ன்ன்:) எனக்கு இன்னும் பெயரில சந்தேகம் இருக்கு:).
//காசிப்பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள். //
ஹா ஹா ஹா நன்றி நன்றி... அஞ்சுவுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன்..:).
//(குறிப்பாக ஆண்பால்) ///
ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கமலாக்கா அனைத்தையும் ரசித்தமைக்கு.
யோகாவும் தியானமும் எதற்கென்று இன்றுதான் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோ..
Deleteஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.
பாடல் இன்று தான் கேட்க முடிந்தது, நன்றாக இருக்கிறது இனிமையாக.
ReplyDeleteநன்றி கோமதி அக்கா.
Delete//ட்றம்ப் அங்கிளுக்கு செக்கரட்டறியாக இருப்பதால், என் அழகிய டமில் பேசப் பழக்கி விட்டிட்டிருக்கிறேன்://
ReplyDeleteசூப்பராக தமிழ் பேச பழக்கி விட்டீர்கள்! வாழ்த்துக்கள் அதிரா.
ஹா ஹா ஹா நன்றி.
Deleteஹா..ஹா..ஹா.. நான் கற்பனை செய்து பார்த்தேன் ட் ரம்ப் அங்கிள் எங்க்ட் ஊர்களின் பெயர்களை எப்படி சொல்வார் என... வீடியோ சூப்பர்..
ReplyDeleteஉங்க தமிழால் நான் எழுத வந்ததையும் மறந்து எனக்கு வீடியோதான் முதல்ல வந்தது. அவ்வளவு பிசுபிசுபாவா இருந்தது காய். பீர்க்கைகொடி என சொல்லுவினம். எங்க டவீட்டில வளர்ந்தது. நல்லா முத்தின பிறகுதான் ஆய்ந்து சமைக்கவேண்டும் என சொல்லுவாங்க. ரவை என்ன பாடுபடுது உங்க கிட்ட..
நான் முன்பே சொன்னேனே வட்டவடிவில தோசையில என்ன கொடுத்தாலும் எங்க வீட்டில ஓகே. பீர்க்கங்காய் எனக்கு கிடைக்கும்.அடுத்தமுறை இத்தோசை செய்துவிடுகிறேன். நான் தோலில் சட்னி செய்யவில்லை. மாமியும் சொல்லுறவா. ஆனா பீர்க்கங்காய் சட்னிதான் அடிக்கடி செய்வதுண்டு.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... யாரவது பிரட் சேர்ப்பாங்களா.. புளிக்க மிளகாய்காம்பு 4,5 மாவினுள் புத்து விடுங்கோ.நான் இட்லிக்கு அப்படி செய்து ஓவனுக்குள் வைத்து லைட் போட்டுவிடுவேன். அடுத்தநாள் புளித்து பொங்கியிருக்கும். தோசை காலையில் ஊறவைத்து மதியம் அரைத்து இரவு வார்பேன். 1000 கண்கள் விழும். (இரவு ஊறவிட்டு காலையில் அரைத்து இரவு வார்ப்பேன்.இப்படியும் செய்வதுண்டு.). இங்கு தோசை புளித்தால் அவ்வளவா பிடிப்பு இல்லை. ஆனா அடுத்தநாள் இன்னும் நல்லாவரும். புளிப்பா சாப்பிடாதீங்க. நெஞ்செரிச்சல் வரும்.
உங்க தோசை என்னவோ பார்க்க நல்லாயிருக்கு. சரியான குழப்படி அதிரா நீங்க. டீச்சர் இல்லாததால கூடிப்போச்சு.
பாட்டு நான் கேட்டிருக்கேனே. எனக்கும் பிடிக்கும்.
சுண்டலும் சூப்பரா இருக்கு. ஆவ்வ்வ் பீடா. என்க்கும் பிடிக்கும். சப்போட்டா தவிர மற்றையு எல்லாம் கிடைக்கிறது.
/பாருங்கோ அஞ்சுவுக்கு மட்டும்தேன், அம்முலுவும் அல்ல:)///..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நான் இம்முறை ஊரிலிருந்து மண்சட்டி,சுளகு (சின்னது) கொண்டுவந்தேனே. என்ன ம்ண்சட்டி ஹாண்ட் லக்கேஜில் பத்திரமா கொண்டு வரவேண்டியிருந்தது. தின்னவேலி சந்தையில பொங்கல்நாளில் வாங்கினேனாக்கும். அந்நேரம் சந்தைக்கு போகவேகூடாது என்னா கூட்டம்..அவ்வ்வ்வ்.
ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு சூப்பர். தியானம்,யோகா தத்துவம் செம...
வாங்கோ அம்முலு வாங்கோ...
Deleteஆஆஆஆஆஆ எந்தாப்பெரீஈய கொமெண்ட்.. பிரிச்சுப் போட்டிருக்கலாம். சரி அது போகட்டும்..:)).
//உங்க தமிழால் நான் எழுத வந்ததையும் மறந்து எனக்கு வீடியோதான் முதல்ல வந்தது. //
ஹா ஹா ஹா...
//உங்க தமிழால் நான் எழுத வந்ததையும் மறந்து எனக்கு வீடியோதான் முதல்ல வந்தது. //
நான் ஜொன்னேனே ஜொன்னேனே எனக்கு எடிரி:)) வீட்டுக்குள்ளேயேதேன்ன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்:)).. நீங்க ஸ்ரீமா அம்மம்மாக்குப் பேத்திபோலும்:)).
//நல்லா முத்தின பிறகுதான் ஆய்ந்து சமைக்கவேண்டும் என சொல்லுவாங்க. //
சே..சே இது என்ன புதுக்கதை கர்ர்ர்:)) இல்ல அம்முலு இது முத்தவே கூடாது, நல்ல பிஞ்சிலதான் சமைக்கோணும். அதுவும் இங்கு கடையில் கிடைப்பது சீட்ஸ்கூட அப்படியே கரையுமளவு பிஞ்சு..
இது முத்தினால் அப்படியெ தூக்கணாம் குருவிக்கூடுபோல வரும்.. அதைக் காயவைத்து ஸ்பொஞ் ஆகவும் பாவிப்பினம், சிலர் சோப்புடன் போட்டு உடம்பில், உடுப்புத்தோய்க்கவும் பாவிப்பதுண்டு.
//ரவை என்ன பாடுபடுது உங்க கிட்ட..//
ஹா ஹா ஹா நீங்க எங்கட பக்கத்து ஊர்தானே.. நீங்க ஏன் என்னைப்ப்போல பேச மாட்டேன் என்கிறீங்க கர்:)).. நீங்க இங்குள்ளவர்களுடன் சேர்ந்து பேசிப்பழகி பாஷையை மாத்திட்டீங்க:)) ஹா ஹா ஹா..
//நான் தோலில் சட்னி செய்யவில்லை.///
ஓ நல்ல சுவை அம்முலு செய்து பாருங்கோ..
// மாமியும் சொல்லுறவா. ஆனா பீர்க்கங்காய் சட்னிதான் அடிக்கடி செய்வதுண்டு.//
இது என்ன முழுக்காயில் சட்னியோ? இது புதுசா இருக்கே.. அப்படியே வதக்கி அரைப்பீங்களோ.
//யாரவது பிரட் சேர்ப்பாங்களா.. புளிக்க மிளகாய்காம்பு 4,5 மாவினுள் புத்து விடுங்கோ.நான் இட்லிக்கு அப்படி செய்து ஓவனுக்குள் வைத்து லைட் போட்டுவிடுவேன். அடுத்தநாள் புளித்து பொங்கியிருக்கும்.//
Deleteஇல்ல அம்முலு உங்கள் இடத்துக் குளிர் வேறு, இங்கு எப்பவும் எவ்வளாவு ஹீட்டரிலும் ஒரு குளிர் இருக்கும்.. ஆற்றங்கரையும் என்பதாலாக்கும்.. அதனால புளிக்க வைக்க நான் படும் பாடு பெரும்பாடாக இருக்கு.. அதனால்தான் இந்த பிரெட்.. சோறு இப்படி எதையாவது சேர்ப்பேன்...
//இங்கு தோசை புளித்தால் அவ்வளவா பிடிப்பு இல்லை.//
புளிப்பு வந்திடக்கூடாது. பொங்கியிருக்கோணும்.. நான் பொங்கட்டும் பொங்கட்டும் என 2,3 நாட்கள் வெயிட் பண்ணும்போது பொங்காமல் புளிச்சு.. பல தடவை மாவைக் கொட்டிய வரலாறும் உண்டு ஹா ஹா ஹா.
//சரியான குழப்படி அதிரா நீங்க. டீச்சர் இல்லாததால கூடிப்போச்சு.//
ஹா ஹா ஹா இமா றீச்சரைத்தானே சொல்றீங்க.. அவ எப்போ வருவா எப்போ வரமாட்டா என சாத்திரம் பார்த்தாலும் சொல்ல முடியாது ஹா ஹா ஹா...
ஓ நீங்க தின்னவேலிச் சந்தைக்குப் போனீங்களோ நானும் போயிருக்கிறேனே..:)
மிக்க நன்றிகள் அம்முலு.
சமையல் குறிப்புகள் எல்லாமே சுவாரஸ்யம் அதிரா! அதுவும் முட்டைக்கோஸ் இலை பொரியல் அழகு! சுவைத்தாலும் அப்படி இருக்குமா? பிசுக்கங்காய் பிர்க்கை என்பதை படத்தில் அறிந்தேன்.
ReplyDeleteவாங்கோ மனோ அக்கா வாங்கோ..
Delete//அதுவும் முட்டைக்கோஸ் இலை பொரியல் அழகு! சுவைத்தாலும் அப்படி இருக்குமா?//
100 வீதமும் இதுக்கு கரண்டி தருவேன்ன்.. அவ்ளோ இனிமையாக இருக்கும். அதிலும் இங்கு பிரித்தானியாவில் விதம் விதமான கபேஜ், மற்றும் கபேஜ் லீவ்ஸ் கிடைக்கும்.. அத்தனையையும் வாங்கி விதம் விதமாக இப்படி சுண்டுவதே எனக்கும் வீட்டிலும் அனைவருக்கும் பிடிக்குது, கறி சமைச்சால் சாப்பிட மாஅட்டினம், இப்படிச் செய்தால் எந்தச் சத்தமும் இல்லாமல் சாப்பிடுவினம்.
மிக்க நன்றிகள் மனோ அக்கா.
சூப்பர் சூப்பர் ...எல்லாமே நல்லா இருக்கு ..
ReplyDeleteஅந்த பீர்க்கங்காய் சட்னி செய்வோம் ...கூட்டு, சாம்பார் இப்படி தான் தோசை எல்லாம் செஞ்சது இல்ல அதிரா
கேபேஜ் இலை சுண்டல் அட்டகாசமா இருக்கு ...பளிச் ன்னு பச்சை வண்ணத்தில் ...
வாங்கோ அனு வாங்கோ...
Deleteநானும் இதுவரை செய்ததில்லை.. இது அஞ்சு உபயத்தில் செய்தேன்.. இனிமையான தோசையாக வந்தது.
மிக்க நன்றி.
பீர்கங்காயைத்தான் பிசுக்கங்காய் என்கிறீர்களா? என்று எல்லோரும் கேட்டு விட்டதால், நான் கேட்கவில்லை. செய்து பார்க்க வேண்டும். ஏஞ்சலிடம் அவரின் சமையல் குறிப்புகளுக்கு காபி ரைட் வாங்க சொல்லவேண்டும்.
ReplyDeleteமிஸ்டர் அதிரா தினமும் தியானமும், யோகமும் செய்கிறார் என்று அறிகிறேன்.
எருக்கம் இலை விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது.
வாங்கோ பாஅனுமதி அக்கா.. அதே அதே அதிரபதே:).
Delete//ஏஞ்சலிடம் அவரின் சமையல் குறிப்புகளுக்கு காபி ரைட் வாங்க சொல்லவேண்டும்.//
ஹா ஹா ஹா கர்ர்ர்:)).
//மிஸ்டர் அதிரா தினமும் தியானமும், யோகமும் செய்கிறார் என்று அறிகிறேன்.//
ஹா ஹா ஹா .
ஓ எருக்கம் இலைத்தகவல் புதிது எனக்கு.
மிக்க நன்றிகள் பானுமதி அக்கா.
பீர்க்கங்காய் தோசை.... புதிதாக இருக்கிறது. முயற்சி ச்ய்து பார்க்கிறேன்.
ReplyDeleteஊசிக் குறிப்புகள் :)
தோசைகளும் துவையலும் அற்புதம். ஜோக்ஸ் அதைவிட அற்புதம். :)
ReplyDeletehttps://thanimaramnesan.blogspot.com/
ReplyDeleteஊசிக்குறிப்பு என்றும் போல அருமை.தியானம் நல்லதே![[[[
ReplyDeleteபாதக் கொலுசு பாடல் ஒரு காலத்தில் நெஞ்சம் தொட்டது.
ReplyDelete