நல்வரவு_()_

****

Wednesday, 27 March 2019

பள்ளிக்கூடம்...💃💃

ப்படிப் பள்ளிக்கூடம் என எழுதும்போதே, கொஞ்சம் டவுட்டாகவும், ஏதோ புதுசா எழுதுவதுபோலவும் இருந்துது:), பலதடவை.. எழுத்துக்கள் எல்லாம் சரிதானா எனவும் செக் பண்ணினேன், ஏன் தெரியுமோ, இப்படித்தமிழில் பள்ளிக்கூடம் என யாராவது சொல்லுவதுண்டோ? வயதான /ஆங்கிலம் தெரியாதோர் கூட ஸ்கூல் எனத்தான் சொல்கின்றனர்.. நாங்களும் ஸ்கூல் எனச் சொல்லித்தானே பழக்கம்... அதனால எழுதும்போது புதுச்சொல்லாக இருந்துது, இப்படி புளொக் எழுதுவதனாலேயே இச்சொல் இன்னும் புழக்கத்தில் இருக்குது என எண்ணிப் பெருமைப்பட்டேன்ன்.. எனக்கு நானேதேன்ன்ன்ன்ன்:).

சரி சரி எனக்குப் பாருங்கோ அலட்டுவது பிடிக்காது:).. அதனால ஸ்ரெயிட்டா ஸ்கூலுக்குள் போவோமா?:).
என்னை ஆஜீர்வாதம்:) பண்ணுங்கோ குருவே:)
ங்கத்தைய பிரைமறி ஸ்கூல்கள் பற்றிச் சொல்லப்போனால், இப்பவே ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சால் என்ன எனும் ஆசைதான் வருது. பிள்ளைகள் ஸ்கூலுக்கு எதுவும் கொண்டுபோகத் தேவையில்லை..

கொப்பி புத்தகம் பென்சில் ரேசர்.. சகலதும் ஸ்கூலில் இருக்கும்.. அங்கேயே எடுத்து எழுதி, பின்பு அனைத்தையும் அங்கேயே கபேட்களில் வைத்துவிட்டு வீட்டுக்கு சும்மா போவார்கள். ஹோம் வேர்க்குக்கென கொப்பி இருக்கும், அதுவும் ஸ்கூலால் குடுக்கப்படும், அதை மட்டும் வீட்டுக்கு எடுத்துப் போகலாம்.

இதைவிட, கிராவ்ட் வேர்க் எனில், ஒரு ரூமில்.. சகலவிதமான பொருட்களும்,,, மினுங்கல் பேப்பரில் இருந்து பல பல வகைகள் அனைத்தும் இருக்கும். பெயிண்டிங்குக்கு என புறிம்பாக பெயிண்ட்கள், விதம் விதமாக கலர் கலர்ப் பேப்பர்கள், பென்சில்கள்... அத்தனையும் ஸ்கூலில் இருக்கும்.

தேவைக்கு பிள்ளைகளுக்குக் குடுப்போம், வேலை முடிஞ்சதும் அப்படியே அந்தந்த இடத்தில் அவர்களே வைப்பார்கள். களவு எல்லாம் கிடையவே கிடையாது.. தொட்டில் பழக்கம். அதேநேரம் எந்த ஸ்ரிக்ட்டும் இல்லை, பிள்ளை களாவெடுக்க விரும்பினால் தாராளமாகக் கொண்டு போகலாம், ஆனா அப்படி செய்ய மாட்டினம். எங்காவது சில பிள்ளைகளில் அப்படிப் பழக்கம் இருக்கலாம்... அது பேரன்ஸ் கொஞ்சம் குடி, றக்ஸ் அப்படிப்பட்ட குடும்பங்களாக இருக்க வாய்ப்பிருக்கு.

இப்படி ஒருநாள் 4ம் வகுப்புப் பிள்ளைகளுக்கு “சொக்கலேட் பக்டரி” யை தலைப்பாக எடுத்து, புரொஜக்ட் செய்வதற்காக படிப்பிச்சுக் கொண்டிருந்தோம், அப்போ மற்ற ரீச்சர் என்னிடம் ஐடியாக் கேட்டா, இதுக்கு ஏதாவது சுவரிலே செய்து போட்டால் நன்றாக இருக்கும், உங்களுக்கு ஏதும் செய்ய வருமோ என.. எனக்குத்தான் கிராஃப்ட் வேர்க் நன்கு பிடிக்குமே, செய்யலாமே எனச் சொல்லிக்கொண்டு இருவரும் கூகிளில் தேடினோம் நிறைய ஐடியாக் கிடைச்சுது, இதை நானே செய்கிறேன் என்றேன், பிள்ளைகள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, அவர்களிடமே, கிச்சின் பேப்பர், ரொயிலட் ரிசூக்கள் சுற்றிவரும் அந்த கார்ட்போர் குழல், மற்றும் சீரியல் பெட்டிகள் கொண்டு வரச் சொன்னோம்.

மிகுதி அனைத்தும் ஸ்கூலில் இருக்கும்.

நானே இந்த சொக்கலேட் பக்டரியை, கொம்பியூட்டரில் அழகாக பிரிண்ட் செய்து எடுத்து, பக் பண்ணி, சுவரில் செய்து முடித்தேன். முடிவில் பிள்ளைகளைக் கொண்டு சொக்கலேட் போல பேப்பரில் செய்து போட வச்சோம்.. எப்பூடி என் சொக்கலேட் பக்டரி?:).


இது நான் செய்தது[சொக்கலேட் பக்டரியில் வரும் கரெக்ட்டர்], இதை பிள்ளைகளையும் செய்ய வச்சேன்.. மற்ற ரீச்சருக்கு படிப்பிக்க மட்டும்தேன் தெரியும்:), இப்பூடி எல்லாம் வராது என்பதால் அவவுக்கு ஹப்பி:).. இது ரிசூ கொலாஜ் முறையில் செய்தேன்.

↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜↝INTERVEL↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜

 அதுதானே.. பேசினால் என்ன குறைஞ்சா போயிடப்போறார்ர் ஹா ஹா ஹா:))
↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜↝முடிஞ்சு போச்ச்ச்:))↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜↝↜
ப்போ கடந்த ஒரு மாதமாக மீன்களைப் பாதுகாக்கும்/பராமரிக்கும் இடத்திலிருந்து ஒருவர் வந்து, பிள்ளைகளுக்கு இங்கத்தைய ஆற்றில் ஓடும் மீன்கள் பற்ற்றியும், அதனை பராமரிப்பது பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார், அப்போது மீன் குஞ்சுகள் கொண்டு வந்து வகுப்பிலே வைத்து கொஞ்சக்காலம் வளர்க்கப்பட்டது. 

பின்பு போனகிழமையில் ஒருநாள், ஒவ்வொரு பிள்ளையின் கையில் கொஞ்ச மீன் குஞ்சுகள் போடப்பட்ட டப்பா குடுத்து, எல்லோரையும் ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி, இங்கு இருக்கும் ஒரு  ஏரியாவுக்கு அழைத்துச் சென்றோம் [காம்பிங் செய்வதற்காக இந்த ஏரியா அமைக்கப்பட்டதுபோல இருக்கு].

அங்கு அழகிய நீரோடை ஓடிகிறது, இது எங்கள் வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கு, ஆனா நமக்குத் தெரியாது.. இப்படி ஸ்கூல் ட்ரிப் மூலம் எவ்ளோ இடங்கள் தெரிய வருது].

இதுதான் மீன் குஞ்சு டப்பா:).

பஸ் இலிருந்து இறங்கி, இப்படிப் பாதையால நடந்துபோக, அருகிலே நீரோடை ஓடுது...இதிலே அந்த மீன் குஞ்சுகளைக் கலக்க விட்டாச்சு...:).. வளரட்டும் பிடிச்சுக் குழம்பு வைக்கலாம்:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பூடி எல்லாம் ஜொள்ளக்கூடாது:) அது பாவமெல்லோ:)..

ஸ்பெஷல் இணைப்பு:).. 😍
படம் பார்த்தால் நீங்களே.. புரிஞ்சிடுவீங்க:)).. நான் கோடிட்ட இடங்களை எல்லாம் என் வாயால இங்கின ஜொள்ளி, தேம்ல குதிக்க ரெடி இல்லை:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).  “அந்த ஒன்று” மட்டும் ஜூப்பராப் பொருந்தியதால காவி வந்திட்டேன்ன்:)... எங்கிட்டயேவா?:) இனியும் ஆராவது வருத்தம் என ஜொள்ளிப்பார்க்கட்டும்:)) ஹையோ வழி விடுங்கோ:)..
============================================

இது ஜும்மா:)

 ஊசி இணைப்பு:ஊசிக்குறிப்பு:
 “என்னதான் நாற்றமெடுத்த நதியானாலும் , 
கங்கையிலே கலந்துவிட்டால் புனிதமாகிவிடுகிறது..”
இவ்வரிய தத்துவத்தை, கண்ணதாசன் அங்கிளிடமிருந்து வெற்றிகரமாகக் களவாடி வந்திருப்பவர்:).. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்.

 சொல்ல வேண்டிய குறிப்பு ஒன்று..
அதாவது என் முந்தைய பதிவில், கொமெண்ட்ஸ் 200 க்கு மேல் போய் விட்டமையால, 2ம் பக்கத்துக்குப் புதுக் கொமெண்ட்ஸ் போயிருக்கு.. ஏன் சொல்கிறேன் என்றால், என் பக்கம் புதுசாக சகோ.. Chokkan Subramanian  வந்து கொமெண்ட் போட்டிருந்தார், சிலசமயம் அவர் முன் பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, தன் கொமெண்ட்டை அதிரா பப்ளிஸ் பண்ணவில்லைப் போலும் எனத் தப்பாக நினைச்சிட்டாலும் என்றே இதைச் சொல்கிறேன். முன்பக்கத்தில் load more...  என அடியில் தெரியும், அதனை கிளிக் பண்ணினால் 2ம் பக்கம் திறக்கும். நோட்டிபிகேசன் வைக்காதோருக்கு கொமெண்ட்ஸ் தெரிய வாய்ப்பில்லை:). நன்றி.

     
 .. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. எங்களுக்கு ஈஸ்டர் ஹொலிடே                           ஆரம்பமாகுது இக்கிழமையுடன்.. ஓ லலலாஆஆஅ:)
காசெல்லாம் வாணாம்:)

150 comments :

 1. [im]https://dumielauxepices.net/sites/default/files/tom-and-jerry-clipart-pooh-799375-9739077.gif[/im]

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு ஜெரிப்பிள்ளை இப்பூடி விக்கித்துப் போய் நிக்கிறார்ர் ஹா ஹா ஹா :). வாங்கோ அஞ்சு வாங்கோ... ஸ்ஸ்ஸ் என்னா ஸ்பீட்டா வந்திருக்கிறீங்க என்பது என் புளொக் ஒருபக்கம் சரிஞ்சதை வச்சே கண்டுபிடிச்சேன்ன்:).. இப்பவும் சரிஞ்சபடியேதான் இருந்து கொமெண்ட் போடுறேன்:)..

   Delete
  2. பின்னே ஒரு பக்கம் ஒல்லியான மீ அடுத்த பக்கம் குண்டான நீங்க :) பிளாக் சரியாம நேராவா நிக்கும் :)

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்:) எல்லோரும் உசாராத்தான் இருக்கிறீங்க:) ஆனா நேற்று நெல்லைத்தமிழன் மட்டும், வாய் தடுமாறிச்:) சொல்லிட்டார்ர்:) மீ பொறுக்கிட்டேன் ஹா ஹா ஹா:))

   Delete
 2. ஹலோவ்வ் குண்டு பூனை :) இதோ வந்திட்டேன் படிச்சிட்டு வரேன் .
  பூவை வாங்கிக்கிட்டேன் :) ஆன்னா எனக்கு ஒரு குட்டி ஸ்னீசிங் வரட்டும் அப்புறம் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஐயா ஜாமீஈஈஈஈ இதென்ன புயு வம்பாக் கிடக்கூஉ:) பொல்லுக் குடுத்தே அடி வாங்க வைக்கிறீங்களே வைரவா..:))
   [im] https://fscomps.fotosearch.com/compc/PSK/PSK005/cat-climbing-a-tree-stock-image__1574r-23055.jpg [/im]

   Delete
 3. //புதுச்சொல்லாக இருந்துது, இப்படி புளொக் எழுதுவதனாலேயே இச்சொல் இன்னும் புழக்கத்தில் இருக்குது என எண்ணிப் பெருமைப்பட்டேன்ன்.. எனக்கு நானேதேன்ன்ன்ன்ன்:).//

  இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லியா ?? கர்ர்ர் பள்ளிக்கூடம் னு படம் வந்திருக்கு தெரியுமா :))))))
  எங்க ஊர்ல தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயர் எழுதி மாட்டி வச்சிருப்பாங்க

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆ அஞ்சு நீங்க ~பள்ளிக்கூடம்~ படம் பார்த்தீங்களோ? நான் பார்த்தேன், பாதிவரை சூப்பரா போய்ச்சுது.. ஓகே ரிவியூ எழுதிட வேண்டியதுதான் என ரெடியானேன்ன்.. ஆனா மிகுதிப் பாதி சோகமோ சோகம்.. அதனால எழுதாமல் விட்டு விட்டேன்..

   அல்லோ மிஸ்டர்.. டமில்ல எழுதியிருந்தாலும் நாங்க டமில்ல பேசி எழுதி எவ்ளோ நாளாச்சு.. அதைச்ஜொன்னேன்.. அது செரி:) இப்போ வருத்தமெல்லாம் சுகமோ?:) இல்ல ஜூம்மாதான் கேட்டேன்:).

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. அல்லோ என்னாச்சூஊஊஊஊஊ நேக்கு வேணும் இக் கொமெண்ட்ஸ் எல்லாம்:)).. ஸ்ரீராமிடம் கேடு வாங்கித்தாங்கோ:).. நான் டிலீட் பண்ணினால் அவரைத்தானே கேய்ப்பிங்க ஹா ஹா ஹா:)..

   Delete
 4. அஆவ் அந்த சாக்லேட் factory அங்கே பார்த்த நினைவு வருதே :) இன்னும் பத்திரமா வச்சிருக்காங்களா உங்க ஸ்கூலில் அதை .
  அதோடு அந்த வில்லி wonka வும் மிக அழகான ஐடியா ..
  பிரைமரி ஸ்கூல்ஸ் பற்றி சொன்னது மிக சரியே .பிள்ளைங்க பல நல்ல விஷயங்களை அங்கிருந்து கத்துக்கறாங்க போஸ்ட் பாக்ஸ் ரோட் க்ராஸிங் அப்புறம் ஒவ்வொரு விஷயமும் எத்த்னை தெளிவா சொல்லித்தாரங்க இங்கே .எங்க மகள் நிறைய அரட்டை க்ராப்ட்ஸ் செஞ்சது இருக்கு எல்லாத்தையும் பெட்டியில் போட்டு loft இல் வைச்சிருக்கோம் வீசவே மனசு வரல்ல

  ReplyDelete
  Replies
  1. wonkaavaiyum அங்கே பார்த்திருக்கேன் :)

   Delete
  2. அதேதான் அங்கு பார்த்திருக்க்கிறீங்க. இல்ல அஞ்சு நான் தொடர்ந்து ஒரு ஸ்கூலில் இல்லாததால் தெரியாது.. இடைக்கிடை மாறி விடுவேன்.

   உண்மைதான் பிரைமறி ஸ்கூல் லைஃப் மிகவும் மகிழ்ச்சியானதும்.. படிப்பொடு நிற்காமல் நிறைய விசயங்கள் சொல்லிக் குடுக்கப்படுது.

   Delete
 5. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் **********வடை எனக்கில்லையா ************கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ ட்றுத் வாங்கோ.. என்னாச்சூஊஊ எறும்பு கிறும்பு கடிச்சுப் போட்டுதோ?:) ஹா ஹா ஹா.. ட்றுத்துக்கு இப்போ கண்ணுபட்டுப்போச்ச்ச்ச்ச்ச்:))...

   எங்குமே கொஞ்சநாளா முதலிடம் இல்லைப்போல தெரியுது:).. எல்லாம் மோடி அங்கிளின் நேர்த்தியாகத்தான் இருக்கும்:) ஹையோ படிச்சதும் கிழிச்சு நயந்தாராவில சே சே டங்கு ச்லிப்பாகுதே:) நயகராவில் போட்டு விட்டு... உடனடியாக ஒரு குண்டுப்பூசணிக்காயாப் பார்த்து வாங்கி.. நயகரா கரையில ஓங்கி அடிச்சு விடுங்கோ:))

   ஹா ஹா ஹா நன்றி வருகைக்கு:).

   Delete
  2. இடம் அறிந்த பேசு துணுக்கும், அதுக்கு கீழ் உள்ள புகைப்படமும் மதுரைத் தமிழனை நினைவு படுத்துகிறது. ஓ, அது தான் நண்பருக்கு கோவமா........

   Delete
  3. ஹா ஹா ஹா அது சகோ சொக்கன்.. என்ன நடந்தாலும் ட்றுத்துக்கு கோபம் வராது:) ஆனா மோடி அங்கிளைக் கொஞ்சம் புகழ்ந்து பேசிப்பாருங்கோ:)) அப்போ என்ன வருது எனத் தெரியும் ஹா ஹா ஹா:))... அவர் எதிரி இல்லை எனினும் நான் எதிரியாக்கி விட்டிடுவேன் மோடி அங்கிளோடு:) எங்கிட்டயேவா ஹா ஹா ஹா:)..

   Delete
 6. ஹலோ அந்த மீன் குஞ்சுகளை தொட கூடாது அது நீரில் ஓடும் நீந்தும் எல்லாம் பிரித்தானிய அரசிக்கு சொந்தம் தெரியுமோ ? :)
  எதுக்கும் ஸ்கொட்லாந்து யார்ட்கிட்ட சொல்லி வைக்கணும்

  ReplyDelete
  Replies
  1. நோஓஓஓஓஓஒ மீ தொடவே மாட்டேன்.. இது அந்த மீன்குஞ்சின்மீது ஜத்தியம்:).. குயின் அம்மம்மா இந்த ஸ்கொலாந்து ஆறைப்பார்க்கும் பொறுப்பை என்னிடமெல்லோ தந்திருக்கிறா..:))

   Delete
 7. ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா அப்படியே எங்கேயோ போயிட்டீங்க :) உங்க விளக்கத்தை பார்த்து //சொல்ல வேண்டிய குறிப்பு // ஹா ஹா ,
  என்னது உங்களுக்கு ஈஸ்டர் ஹொலிடேயா பரவால்ல எங்களுக்கு இன்னும் ஒரு வீக் கழிச்சே ஆனா ஈஸ்டருக்கு அப்புறமாவும் இருக்குமே லீவ்

  ReplyDelete
 8. இண்டெர்வெளில் பேச்சாளர் சொன்னது :)) ஹாஹாஹா இதுக்குதான் சொல்றது எல்லா இடத்திலும் ஒரே பதில் வினையை எதிர்பார்க்க கூடாதது .அந்த ஹாஸ்பிடல் சீன பார்த்து இங்கே ஒன்னு நினைவு வந்தது ஒரு பஞ்சாபியர் முதலில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை கல்யாணம் செஞ்சு பிறகு பிரிந்து இரண்டாவதா ஊரிலிருந்து ஒரு சீக்கியப்பெண்ணை மணமுடித்து வந்தார் :) முதல் மனைவியின் நம்பரை ஒரு னால கணவர் போனில் பார்த்து மூன்று இரவு வெளியில் கதவை சாத்தி வச்சிடுவாராம் . போனில் தானே பேசினார் அது தப்பான்னு புலம்பிங் எல்லார்கிட்டயும் :) இந்த படத்துக்கு அது எவ்ளோ பெட்டர்

  ReplyDelete
  Replies
  1. //மூன்று இரவு வெளியில் கதவை சாத்தி வச்சிடுவாராம் //

   ஹா ஹா ஹா அதுதான் சரி:) பின்ன வேண்டாம் என விட்டிட்டு பிறகென்ன பேச்சு வேண்டிகிடக்கு ஹா ஹா ஹா:)..

   Delete
 9. ஹஹ்ஹா :) அந்த வெளிநாட்டு பெண்கள் ஹையோ ஹயாயோ சிரிச்சி முடியலை :)
  கர்ர் என்ன சிக்னாலும் பெட் காபி மட்டும்தான் வாங்கி குடிப்பேன் மற்ற சமையலுக்கு நானேதான் கஷ்டப்பட்டாச்சும் செய்யணும் இல்லைனா கிச்சன் தலைகீழா யிருக்கும் :) .
  வருத்தம்னாதும் ஒன்று நினைவுக்கு வருது ..இலங்கை தமிழர் வருத்தம்னா சிக் அதவது ill
  நாங்க உடம்பு சரியில்ல அப்படீம்போம் .ஒரு அக்கா ஜெர்மனில என்கிட்டே சொன்னாங்க //எனக்கு சரியான வருத்தம் ..//அப்போ நானா போன புதிதா எனக்கு புரியாம ஏன் அக்கா நீங்க sad அப்படின்னு கேட்டுட்டேன் :) ஹையோ ஹையோ அவங்க இப்பவும் எப்பவாக்காகும் போன் பண்ணும்போது அதை சொல்லி சிரிப்பாங்க

  ReplyDelete
  Replies
  1. ஓ வருத்தம் என்றால் சாட் என நினைப்பீங்களோ.. நாங்கள் சாட் எனில் கவலை என்போம்.. வருத்தம் எனச் சொல்ல மாட்டோம்ம்.. உடல்நலமில்லை எனில்தான் வருத்தம் என்போம் அல்லது சுகமில்லை என்போம்.. ஹா ஹா ஹா.

   Delete
 10. ஊசி இணைப்பு குறிப்பு எல்லாமே சூப்பர் :) நடந்ததை அப்படியே இணைச்சிடறீங்க :)
  சரி ஓகே கமெண்ட் போட்டு முடிச்சேன் எப்படி நானா நீங்க போஸ்ட் போட்டதை கண்டுபிடிச்சேன் சொல்லுங்க :)
  ஒரே ஒரு புள்ளி மட்டும் வச்சி ஒரு மெயில் போட்டீங்க :) அப்போவே டவுட் ஆஹா சம்திங் fishy னு நினைச்சி குடுகுடுன்னு சும்மா டேஷ்போர்டில் பாத்து வந்தேன்

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு புள்ளி போட்டால் நீங்க கோலமே போடுறீங்களே:))

   ஹா ஹா ஹா நீங்க நேசனைச் சொல்றீங்க:).... நேசன் தான் எனக்கு ஒரு எழுத்தை மட்டும் போட்டு கொமெண்ட் ஒன்று போட்டார்ர் கர்:) ஏதோ கைமாறி வந்துவிட்டதுபோலும் என டிலீட் பண்ணிட்டேன்...ஹா ஹா ஹா.

   Delete
 11. பாட்டு சும்மா கேட்டு பார்த்தேன் சித்ரா குரல் என்னமா தேனாய் ஓடுது சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பாட்டு என் கார் சிடியில் இருந்தது.. அது எந்தப் படப்பாடல் எனவும் தெரியாமல் தேடி எடுக்க நான் பட்டம் கஸ்டம் அந்த கோட்:) க்கே தெரியும்:)).. ஹா ஹா ஹா எனக்கு வசனங்கள் பிடிச்சிருக்கு.

   மிக்க நன்றிகள் அஞ்சு.

   Delete
 12. அந்த சிற்றோடை என்னா அழகூ அழகோ அழகு :) குளுமையான இடம் இங்கே ஒரு இடம் இருக்கு நானும் அடிக்கடி பார்ப்பேன் பெரிய பெரிய மீன்ஸ் இருக்குமே .ப்ரெட் போட்ட வந்து சாப்பிடும் அங்கே நாலைஞ்சி குண்டு பூஸ்களும் சுத்தும் அநேகமா மீல்ஸ் காக்கத்தானு நினைக்கிறேன் .சரி எல்லா பிள்ளைகளும் தனித்தனியா அந்த மீன் பேபிசை தண்ணில விட்டார்களா ?

  ReplyDelete
  Replies
  1. இந்த இடத்துக்கு தனியாகப் போக முடியாது அஞ்சு.. கூட்டமாகப் போனால்தான் பயமிருக்காது. அன்று கொஞ்சம் மழையும் சரியான குளிரும்.

   ஒவ்வொருவராக குனிஞ்சு தண்ணியில் குஞ்சுகளை விட்டார்கள்.. படமெடுத்தோம் விடும்போது.

   Delete
  2. எனக்கும் அந்த இடத்தின் படங்களைப் பார்த்தபோது, காஞ்சுரிங் படத்தில் வரும் அந்தப் பெண், மரத்தின் கிளையில் தொங்குவதுபோலவே தோன்றியது.

   அது சரி..அங்கெல்லாம் என்ன பயம்?

   Delete
  3. பயமென நான் சொல்வது நெ.தமிழன்.. எனக்கு எதுக்கெடுத்தாலும் பயம் அதனால நானும் போக மாட்டேன் யாரையும் விடவும் மாட்டேன்.:)..இருவரும் சேர்ந்து போகும்போது பயமிருக்காதுதான் ஆனாலும் அது எப்படி எனில்.. அப்படியே மலைக்குள் காடுபோல போகுது.. அங்கு நரி, மான், முயல், மரை இருக்கும். ஒரே நீரோடைச் சத்தம்.. வழுக்கி விழுந்தால்கூட கூப்பிட்டாலோ கத்தினாலோ ஆருக்கும் கேட்க வாய்ப்பில்லை.. பொதுவா இங்குள்ளவர்கள் காலை மாலை பப்பீஸ் உடன் நடக்கப் போகக்கூடும் மற்றும்படி தெரியவில்லை.

   இதைவிட இங்கு திரும்பும் இடமெல்லாம் அழகிய ஆற்றங்கரைகள் நடப்பதற்கென்றே கட்டியிருக்கே.. அதை விட்டுப்போட்டு இந்தப் பாதை எதுக்கு.. இப்படித்தான் நான் நினைப்பது:)..

   Delete
  4. மேடம்.... 'மரை' என்றால் என்ன? தமிழ்ல மானுக்கு 'மரை' என்று ஒரு பெயர் உண்டு. அதனால்தான் தாமரை என்பதற்கு தாமரைப்பூ என்ற ஒரு அர்த்தமும், தாவுகின்ற மான் - தா மரை - என்ற அர்த்தமும் உண்டு.

   ஏதேனும் விளக்கத்தைச் சொல்லிட்டு, நான் டமிள்ல டி என்று சொல்லாதீங்க

   Delete
  5. //நெல்லைத் தமிழன்Saturday, March 30, 2019 9:55:00 am
   மேடம்...//

   ஹையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீ மேடம் இல்ல கன்னீஈஈஈஈஈஈஈஈ நான் ராசியைச் சொன்னேன்[இங்கின பொய் சொலியிருக்கிறேனாக்கும்:)]

   ///'மரை' என்றால் என்ன? தமிழ்ல மானுக்கு 'மரை' என்று ஒரு பெயர் உண்டு. ///

   நோஓஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன் மான் என்றால் கொம்பிருக்கும் லைட் பிரவுண் கலர்... புள்ளி இருக்கும்/இல்லாமலும் இருக்கும்:)

   மரை எனில் கொம்பிருக்காது/சிலதுக்கு இருக்காம்:)) ஹா ஹா ஹா கொஞ்சம் டார்க் கலர்.. பார்க்க ஊர் ஆடுபோல ஆனா கொஞ்சம் உயரமாக இருக்கும்..

   கூகிளில் மான் எனவும் மரை எனவும் தனித்தனியாகப் போட்டுத் தேடுங்கோ வித்தியாசம் தெரியுது..

   இப்போ கொஞ்ச நாளா இரவில இந்த மரைப்பிள்ளை வந்து உலாவுறார் எங்கள் முன் கார்டினில். சாணியும் போட்டு என்ர டஃபடில்ஸ் குருத்தை இழுத்துக் கடிச்சு எறிஞ்சிட்டுப் போயிருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   Delete
 13. இங்கே ஸ்கூலில் முட்டை இன்குபேட்டரில் வைத்து அது கோழி குஞ்சு வந்து சில நாட்கள் வைத்து மகள் ஸ்கூலில் காட்டினாங்க .அதேபோல் ப்ளூ பீட்டர் கேள்விப்பட்டிருப்பீங்க அவங்க வந்து ஒவ்வொரு பிரைமரி பள்ளியிலும் காய்கறி கார்டனிங் போட்டு படமெடுத்தாங்க .பிள்ளைகளுக்கு மிகவும் அழகா புரியும் இயற்கை உணவு வழக்கம் எல்லாம் .

  ReplyDelete
  Replies
  1. நானும் இங்கு பல ஸ்கூல்களுக்குப் போவதால் கவனிக்கிறேன், ஒவ்வொரு ஸ்கூல் முறையும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது.. அது ஹெட் ரீச்சரைப் பொறுத்ததாகவும் இருக்கலாம்.

   Delete
 14. வாரம் ஒரு நாள் pond dipping என்று கூட்டிட்டு போய் நீர்வாழ் உயிரினங்களை காட்டுவாங்க இங்கே .
  அகல் என்ன செஞ்ச அதெரியுமா :) தவளை முட்டைகளை எடுத்து வந்தா ஆனா அது பொரியலை பிறகு அவ கசின்ஸ் கிட்ட கேட்டு 5 முட்டைகளை கடன் வாங்கி வீட்டில் பாட்டிலில் போட்டு வளர்த்தோம் உங்களுக்கு நினைவிருக்கா :)) நேத்துதான் நானும் மகளும் அந்த பராக்கிரமங்களை பேசிட்டிருந்தோம் இன்னிக்கு அதே மாதிரி உங்க போஸ்ட் :)

  ReplyDelete
  Replies
  1. //நேத்துதான் நானும் மகளும் அந்த பராக்கிரமங்களை பேசிட்டிருந்தோம் இன்னிக்கு அதே மாதிரி உங்க போஸ்ட் :)//

   [im] https://i.ytimg.com/vi/IWwZAg9zt8U/hqdefault.jpg[/im]

   Delete
 15. //இப்பவே ஸ்கூலுக்குப் போய்ப் படிச்சால் என்ன எனும் ஆசைதான் வருது.//

  ஓஓஓஓ தாராளமா ஏராளமா போகலாமே நீங்க இப்பகூட முதியோர்கல்விக்கு அப்பிளிக்கேஷன் வாங்கி தரேன் ஜாயின் பண்ணுங்க

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு சுவீட் 16 ஐப்பார்த்துப் பேசுற பேச்சோ இது:) இதைப் படிச்சால்.. இப்போ “அநஸ்”..[அதாவது அநாமிகா வைச் செல்லமாகச் சொன்னேன்:) அது டப்போ?:)] உங்களைக் கடிக்க வருவா தெரியுமோ?:) ஹா ஹா ஹா:)..

   டாங்ஸ் அஞ்சு ... நாளைக்கு உஞ்களுக்கு ஆலு சமோசா செஞ்சு அனுப்பி விடுறேன்:).

   Delete
  2. ஹா..ஹா..ஹா.. அஞ்சூஊஊஊ.. சிரிச்சு முடியல. 😂 😂 😂 😂 😂

   Delete
  3. @ammulu:)

   [im] https://image.shutterstock.com/image-photo/angry-cat-thai-260nw-523216438.jpg [/im]

   Delete
 16. நான் பள்ளிக் கூடத்துக்கு வந்துட்டேன்!! ஆஜர் ரீச்சர்!!! ஹா ஹா ஹா...கொஞ்சம் ப்ரேக் கொடுங்கோ இதோ வாரேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆஆஆஆஆஆஅ கீதா பிரசண்ட் ரிச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா வாங்கோ கீதா வாங்கோ..

   இங்கு.. ரெஜிஸ்டர் மார்க்கிங்கின்போது.... பெயரைக் கூப்பிட்டால்ல் உடனே “மீ” என்பினம்... பிரசண்ட் எண்டெல்லாம் சொல்வதில்லை.

   Delete
  2. தமிழ் வாத்தியார் வகுப்பு என்றால் 'உள்ளேன் ஐயா'. ஆங்கிலம்னா 'பிரெசண்ட் டீச்சர்/சார்'.

   Delete
  3. அதேதான் நெல்லைத்தமிழன். ஆனா நம் ஊரில் உள்ளேன் ஐயா எனச் சொல்வதில்லை..
   “இருக்கிறேன்” எனச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

   Delete
 17. பள்ளிக்கூடம் என்பது சரிதானே? பூனாச்சு கண்களில் தெரியும் மீன்கள் படம் சூப்பர். ஆசீர்வாதம் படமும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. பள்ளிக்கூடம் என்பது சரிதான், ஆனா இப்படி தமிழில் எழுதி பல நாளாகுது எனச் சொன்னேன்.. புளொக்குகளில்கூட ஸ்கூலுக்குப் போனேன்ன்.. இப்படித்தானே எழுதி வருகிறோம்.. அதைச் சொன்னேன்..

   ஹா ஹா ஹா ரசித்தமைக்கு நன்றி.

   Delete
 18. அங்கத்தைய பள்ளிகளின் நிலை பொறாமைப் படத்தான் வைக்கிறது. பைகொள்ளா நோட்டுப் புத்தகங்களோடு முதுகில் ஏற்றப்பட்ட சுமையை என் முதுகு இப்போதும் Feel செய்கிறது!

  ReplyDelete
  Replies
  1. இங்கு பள்ளிக்கூடங்கள் பிரைமறியில் இருந்து ஹை ஸ்கூல் வரை இப்படித்தான் ஸ்ரீராம்.. தண்ணி வசதி ரொயிலட் வசதி.. எல்லாம் 5 ஸ்டார் ஹோட்டேல் போல பளபள என இருக்கும்.. ரொயிலட்டுக்குள் கீழே இருந்து விளையாடுவினம் சில குட்டீஸ்:).

   இன்னொன்று ரொயிலட் ரிசூ மற்றும் கை துடைக்கும் ரிசூ அனைத்துமே பண்டில் பண்டிலாக கொண்டு வந்து அடுக்கி வைப்பினம், ரொயிலட் போனால் சோப் போட்டுக் கை கழுவி, ரிசூ எடுத்து துடைத்து விட்டுத்தான் வகுப்புக்குள் வர வேண்டும்.

   ... சில பிள்ளைகள்.. கை துடைக அப்படியே 8-10 பேப்பரை கொத்தாக அள்ளி எடுத்து துடைத்து விட்டு எறிவார்கள்.. நான் பார்த்தால் விடுவதில்லை.. 2 எடுத்தால் போதும் எனச் சொல்வேன்ன்.. என்னதான் அரசாங்கக் காசாஅயினும்.. பழகத்தானே வேணும்.. அடுத்தவர் சொத்தையும் பத்திரமாகவே பாவிக்க வேண்டும் என.

   ஹைஸ்கூல் பிள்ளைகள் தூக்க முடியாத மூட்டையுடந்தான் ஸ்கூல் போய் வருவார்கள், சின்னவர் அடிக்கடி சொல்வார்ர் முதுகு நோகிறதென...

   ஆனா அவை அத்தனையும் ஸ்கூலால் வழங்கப்படுபவை புத்தகங்கள்.... எழுதும் கொப்பி முடிய முடிய கொடுப்பார்கள். ஒரு புரொஜக்ட் எனில், அதுக்கு என்ன என்ன பொருட்கள் தேவையோ அத்தனையையும் ஸ்கூலில் இருந்து எடுக்கலாம்... பெற்றோருக்கு எந்தத் தொல்லையும் இல்லை:) சாப்பாட்டை ஒழுங்காக் குடுத்துவிட்டு புளொக் எழுதலாம் ஹா ஹா ஹா:)..

   Delete
  2. இந்தியன் பள்ளிகள் (கல்ஃப்பில் நடக்கும் பள்ளிகளும்தான்), ப்ராஜக்ட் என்று அந்த ஷீட் வாங்கணும், இதை வாங்கணும் என்று சொல்லிடுவாங்க. நாங்க அதற்கென இருக்கும் கடைகளுக்குப் போய்க் கேட்டால் அவங்க கொடுத்திடுவாங்க. ஆனா அதுல என்ன பிரயோசனம்னு நான் நினைப்பேன்.

   Delete
  3. நானும் இதுபற்றி நீயாநானா போன்ற புரோகிராம் மூலம் அறிகிறேன் நெ.தமிழன். பிள்ளைகளின் படிப்பில் பாதி வேலையை பெற்றோரும் சேர்ந்து செய்ய வேண்டி இருக்குதாமே.


   உண்மைதான்.. இதுவும் ஒரு வித பிஸ்னஸ்தான்... ஏனெனில் ஸ்கூல்களால் அப்படிக் கடைகளுக்கு வருமானம்.

   இங்கு யூனிஃபோம் மட்டும் அப்படித்தான். அதற்கென ஷொப்ஸ் இருக்கு அங்கு போய்த்தான் வாங்கோணும். அது மட்டும் அரசாங்கம் கொடுப்பதில்லை.. ஆனா இன்கம் குறைந்த குடும்பங்களுக்கு யூனிஃபோமுக்கெனவும் குடுப்பார்கள்.. ஸ்கூல் மீலுக்கெனவும் கொடுப்பார்கள்.

   Delete
 19. மினுங்கல் பேப்பர் - அட! ஹா.. ஹா... ஹா..

  //ரொயிலட் ரிசூக்கள்//

  ????

  ReplyDelete
  Replies
  1. டாய்லட் டிஷ்யூஸ். 'ர' போடற இடத்தில் 'ட' போட்டுப் பாருங்கள் ஸ்ரீராம்.

   Delete
  2. ஹா ஹா ஹா ஸ்ரீராம் .. பாருங்கோ நெல்லைத்தமிழனுக்கு இப்போ என் பாசைக்கு டிக்‌ஷனறி தேவையில்லை:) .

   Delete
 20. பின்விளைவின் வேகம் அறியாதவர் போலும் அந்த பூரிக்கட்டை அடிவாங்குநர்!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இல்ல சிலருக்கு திரும்பத்திரும்ப அதே தவறைச் செய்து அடி வாங்குவதிலும் ஒரு சுகம் போலும்:)).. நான் ட்றுத் ஐச் சொல்லவில்லை:))

   Delete
 21. //வளரட்டும்... பிடிச்சு கொழம்பு வைக்கலாம்//

  ஹா... ஹா... ஹா... குழந்திகள் கையில் கொடுக்கும் முன்னரே கமிஷன் அடித்து குழம்புக்கு எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் சரி!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா பிரித்தானியாவில் ஸ்கொட்லாண்ட் தான் மீனால் வருமானம் பெறும் இடம்... இங்கு நிறைய நல்ல வகை மீன்கள் கிடைக்கும்... ஏற்றுமதி மூலம் நிறைய பணம் கிடைக்கிறதாம் ஆனா அதை இங்கிலாந்து அபேஸ் பண்ணுகிறது என்றுதான்.. எங்களைப் பிரிய விடுங்கோ என பாதிக் ஸ்கொட்டீஸ் பாதிக் கால்ல நிக்கினம்:))

   Delete
 22. வெளிநாட்டு பெண்கள் கதம்பம் சுவாரஸ்யம்.

  ஜும்மா உண்மை!

  ஊசி இணைப்பில் விடலைகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது!

  selfie யின் வரலாறு அழுகையை வரவழைத்தது.

  ஊசிக்குறிப்பு மணக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. அதுல என்ன 'வெளிநாட்டு' - உள்நாட்டுலயே அந்த லட்சணத்துலதான் இருக்கு இப்போ.

   Delete
  2. //வெளிநாட்டு பெண்கள் கதம்பம் சுவாரஸ்யம்//
   இதில முக்கால்வாசியும் உண்மைதான் ஸ்ரீராம்.. நிறைய வீடுகளில் இதுதான் நடக்குது... உண்மையில் வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எதுக்கும் சண்டைபோடுவது குறைவு.. அதிகமாகவே விட்டுக்குடுத்து அஜஸ்ட் பண்ணியே நடக்கிறார்கள்.. அதனால பெண்களும் ஈசியாகவே வேலை பார்க்கிறார்கள்.. பெரும்பாலும் இருவருமே உழைப்பதால்... களைப்பு இருவருக்கும் உண்டென நிறையவே விட்டுக்குடுப்புக்கள் இருக்கு. [விதிவிலக்குகள் எங்கும்/இருவரிலும் உண்டுதானே].

   //ஜும்மா உண்மை!//
   ஹா ஹா ஹா பெண்களைப்போல கண்டுபிடிக்கும் திறமையும் ஆண்களுக்கு குறைவு, அதேபோல ஒரு களவு செய்தால் அதைக் கெட்டித்தனமாக ஒளிக்கும் திறமையும் அவர்களுக்குக் குறைவு:) இந்த லட்சணத்தில:).. எந்த நம்பிக்கையில பொய் சொல்ல வெளிக்கிடுகினம் என்றே புரிவதில்லை ஹா ஹா ஹா:).

   //ஊசி இணைப்பில் விடலைகளின் நம்பிக்கை வியக்க வைக்கிறது! //

   ஹா ஹா ஹா அதுதான் பொஸிடிவ் திங்கிங்:)).

   செல்ஃபி உண்மைதான்.. உண்மையை அறியும்போது வலிக்கும் என்பினமெல்லோ:)) அதுதான் கவலை வருகிறது.. ஆனா அந்த செல்ஃபியை இப்போ ஹபியாக எல்லோ கொண்டாடி எடுக்கிறோம் விதம் விதமாக.

   Delete
  3. ஹா ஹா ஹா உண்மைதான் நெல்லைத்தமிழன்.. உள்நாட்டுப் பழக்க வழக்கங்களும் வெளிநாடுபோல மாறி வருது...

   Delete
 23. ஈஸ்டர் ஹாலிடே வாழ்த்துகள். பாடல் பற்றி நோ கமெண்ட்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஸ்ரீராம் பாடல் பிடிக்கவில்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு முந்தைய காலப் பாடல்கள்தான் அதிகம் பிடிக்குதுபோல தெரியுது. அது உண்மைதான் ஆனா பிந்திய பாட்டுக்களிலும் பலது மனதை அள்ளும் பாடல்களும் வருதே... நாம் கேட்பது தான் குறைஞ்சிருக்கு புதுப்பாடல்களை.

   ஆனாப் பாருங்கோ.. இங்கு வந்திருக்கும் நம் பாலார் அனைவருக்கும் இப்பாட்டுப் பிடிச்சிருக்காம்:)..

   மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.

   Delete
 24. ஹையோ அதிரா ரீச்சர் எனக்கும் என் பழைய நினைவுகள் வந்துருச்சே!! என் மகனுக்குச் செய்த ப்ராஜெக்ட்டுகள்...இப்படித்தான் நிறைய செய்ததுண்டு. எல்லாமே நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் கொண்டு. வெளிநாடுகளில் பெரும்பாலும் நீங்கள் சொல்லியிருக்கும் வகுப்பறைதான். வீட்டிற்கு எதுவும் கொண்டு வரத் தேவை இல்லை. எல்லாம் பள்ளியிலேயே. சூப்பரா இருக்கும்.

  எனக்கும் அப்படியான பள்ளிகள் இங்கு இந்தியாவில் வராதா என்று தோன்றியதுண்டு.

  உங்க ப்ராஜெக்ட்ஸ் செமையா இருக்கு. ரொம்ப அழகா செஞ்ச்ருக்கீங்க....பாராட்டுகள்!! ரொம்ப அழகு...நீட்டா செஞ்சுருக்கீங்க ரெண்டுமே...உங்கள் திறமைக்கு சல்யூட்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் கீதா, அதனாலதான் எனக்கு இப்போ போய்ப் படிக்கோணும் எனும் ஆசை வருது... என்னதான் இல்லை இங்கு ஸ்கூலில்... சரியாகத்தெரியவில்லை, ஆனா இங்கு சில ஹைஸ் ஸ்கூல் பெண்கள் பார்த்ரூம் களில்.. நப்கின்ஸ் கூட இலவசமாக கிடைக்குமாம்.

   //எனக்கும் அப்படியான பள்ளிகள் இங்கு இந்தியாவில் வராதா என்று தோன்றியதுண்டு.//
   அது கஸ்டம் கீதா, முதலில் மனிதனின் அடிப்படைத்தேவையைப் பூர்த்தி செய்தபின்புதானே இதைக் கொண்டுவர முடியும்.. அங்கு அது சாத்தியப்படுமோ?.

   //ரொம்ப அழகு...நீட்டா செஞ்சுருக்கீங்க ரெண்டுமே//
   இதில மட்டும் என் குணட்த்ஹைச் சொல்றேன்.. எனக்கு எப்பவும் “செய் அல்லது செத்துப்போ” என்பதே நினைவுக்கு வரும்.. அதனால செய்வதை திருந்தச் செய் எனத்தான் எதையும் செய்வதுண்டு.. ஏனோ தானோ என எந்த வேலையையும் செய்ய மாட்டேன்.. பிடிக்கவில்லை எனில் செய்யாமலே இருப்பேன்:). மிக்க நன்றி கீதா.

   இப்படி குட்டிக் குட்டியாக நிறைய வகுப்பில் செய்வதுண்டு. அனைத்தையும் படமெடுப்பதில்லை எடுத்தாலும் பலது அழிஞ்சும் போயிடும் மொபைல்ல இருந்து:).

   Delete
 25. நாங்களும் இங்கு பள்ளிக் கூடம் என்று அடிக்கடி சொல்லுவதுண்டு. (சென்னையில் இருந்தப்ப...நாம் பழகிய சாதாரணக் குழந்தைகள் தமிழில்தானே பேசுவார்கள். அப்படி...இங்கு பங்களூர் வந்த பிறகு ஸ்கூல்!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஊரில சொல்லியிருக்கிறோம் கீதா ஆனா இங்கு அப்படி சொல்வது இல்லாமலே வந்திட்டுது...

   Delete
 26. ஹா ஹா ஹா ஹா அதானே இடம் அறிந்து பேச வேண்டும்..

  அந்த ஜோக்கில் வருபவர் மதுரை தமிழந்தானே!!!!!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா போஸ்ட்டில அவரின் பெயரைக் குறிப்பிட மறந்து போனேன்:).. அதனாலகூட கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிட்டு ஓடிட்டார்போல ஹா ஹா ஹா:)..

   Delete
 27. ஏஞ்சல்,ஸ்ரீஎராம், நெல்லை, கீதாக்கா கோமதிக்கா பானுக்கா, துரை அண்ணா எல்லோரும் கேட்டுக்கோங்க...நம்ம தீர்க்கதரிசி பாட்டிகள் பள்ளிக்குப் போகப் போறாங்களாம்...குருவிடம் ஆசி கூட வாங்கறாங்க பாருங்க!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //நம்ம தீர்க்கதரிசி பாட்டிகள் பள்ளிக்குப் போகப் போறாங்களாம்.//

   [im]https://img2.thejournal.ie/inline/938267/original/?width=222&version=938267 [/im]

   Delete
 28. //நானே இந்த சொக்கலேட் பக்டரியை, கொம்பியூட்டரில் அழகாக பிரிண்ட் செய்து எடுத்து, பக் பண்ணி, சுவரில் செய்து முடித்தேன். முடிவில் பிள்ளைகளைக் கொண்டு சொக்கலேட் போல பேப்பரில் செய்து போட வச்சோம்.. எப்பூடி என் சொக்கலேட் பக்டரி?:).//

  சூப்பர் அதிரா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. மிக்க நன்றி. நான் பேஜ் டிசைனிங் ஓரளவு செய்வேன் கோமதி அக்கா. பிடித்த விசயமும் கூட.

   Delete
 29. இடம் அறிந்து பேசு படித்து சிரிப்பு வந்தது. அது சொல்லும் நீதி அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மைதான்.. ஜோக் பண்ணுவதும் எல்லா இடத்திலும் சரிவராது:)

   Delete
 30. மீன் கொண்டு விட்ட இடம் சூப்பரா இருக்கு அதிரா...ஹையோ அங்கேயே இருந்துவிடலாம் போல இருக்கு...உங்க வீட்டுலருந்து பக்கத்துலதானே இருக்கு அப்ப இனி நீங்க அடிக்கடிப் போய்வரலாம் ஒரு ரிலாக்சேஷன்...எனக்கு இப்படி ஒரு இடம் அருகில் இருந்தால் சென்றுவிடுவேன்...அடிக்கடி...உங்க ஊர்ல எல்லாம் இப்படி அழகா இயற்கை இருக்கு!! ஏக்கமாகவும் இருக்கு அதிரா...

  அந்த சின்ன அருவி, நீரோடை கொள்ளை அழகு! இதுக்காகவே உங்க ஊருக்கு, உங்க வீட்டுக்கு வரணும்...!!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இங்கு திரும்பும் இடமெல்லாம் இப்படி நீரோடைகள் நடைபாதைகள் நிறைய இருக்குது கீதா, அதனாலதானே ஸ்கொட்லாண்ட் அழகிய நாடு எனும் பெயர் இருக்குது.

   Delete
 31. //அதுதானே.. பேசினால் என்ன குறைஞ்சா போயிடப்போறார்ர் ஹா ஹா ஹா:))///
  எப்படி பேசுவார்?

  இரண்டு அடிக்கே இப்படி என்றால் !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அதானே:)).. அதிலயும் என்னா தைரியம் பாருங்கோ.. அருகில் போய்க் கேட்கிறா சிம்பிளா கதையுங்கோ என.. எதுவுமே நடக்காததுபோல கர்ர்ர்ர்:))

   Delete
 32. ஆந்த நீரோடை 2 கிமீ என்றால் நடந்தே போய்விடலாம் போல!! நான் இங்கு நடப்பது தினமும் 5 கிமீ!! போக வர என்று...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஏ...அப்பா... அவ்வளவு தூரமா? வேலையையும் கம்பைன் பண்ணி நடக்கறீங்களோ? நாங்க பெங்களூர் வந்த பிறகு, நீங்க நடந்தே எங்க வீட்டுக்கு வந்துடலாம் (18 கிமீ தூரம்தான்)

   Delete
  2. நடக்கலாம்தான் கீதா.. இங்கு குளிர் ஒத்துழைக்காது:)..

   ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் என்ன இப்பூடி ஏங்குறீங்க.. 5 கிலோ மீற்றர் நாங்களும் நடப்போமாக்கும்:)). இங்கு இன்னொரு பிரச்சனை என்னவெனில் குளிருடன் ஏற்ற இறக்கம் இருக்கும்.. அதுதான் கொஞ்சம் மூச்சு வாங்கும்.. நேரான ரோட் எனில் சூப்பராக நடக்கலாம்.

   //நாங்க பெங்களூர் வந்த பிறகு, நீங்க நடந்தே எங்க வீட்டுக்கு வந்துடலாம் (18 கிமீ தூரம்தான்)//
   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா.

   Delete
 33. மீனை பிடிக்க கற்றுக் கொடுப்பது போல் மீன் குஞ்சை நீரோடையில் விடவும் கற்றுக் கொடுத்தது அருமை.
  குழந்தைகளுடன் மகிழ்வாய் இருந்த நேரம் இல்லையா?
  நாள் முழுவதும் குழந்தைகளுடன் இருப்பதால் தான் குழந்தை மனமோ அதிராவிற்கு?
  நீரோடை படங்கள் அழகு. செயல்முறை கலவியும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இங்கு கோமதி அக்கா, ஆண் பெண் பேதமில்லாமல் அனைத்துப் பிள்ளைகளுக்கு, சகலதையும் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்..9ம் வகுப்பு வரை. பின்னர்தான் அவர்கள் விரும்பும் பாடத்தை சூஸ் பண்ண முடியும். அதனால தையல், சமையல், தச்சு வேலை, பெயிண்டிங் இப்படி சகல கை வேலைகளும் ஓரளாவு பழக்கி விடுகிறார்கள்.

   ///நாள் முழுவதும் குழந்தைகளுடன் இருப்பதால் தான் குழந்தை மனமோ அதிராவிற்கு?//
   அது நான் குழந்தையாக இருந்த காலம் தொடங்கி கோமதி அக்கா, குழந்தைகளோடும் வயதானோரோடும்தான் நான் அதிகமாக ஒட்டுவேன். எங்கட ஊரில்- அயலில் நான் தூக்காத குழந்தைகளே இல்லை எனலாம் ஹா ஹா ஹா. இப்பகூட எனக்கு குழதை தூக்க வளர்க்க பிடிக்கும்.. நம்பித்தாங்கோ என் பிள்ளையை விடவும் பத்திரமாகப் பார்ப்பேன்...

   Delete
 34. அந்த அடிவாங்கியவர் தொடந்த படம் சூப்பர்....நம்ம மதுரை வாய் மூடி இருப்பார்னு நினைக்கறீங்களோ?!!! ஹிஹிஹிஹி

  வடிவேலு ஜோக் ஹா ஹா ஹா ஹா ஹா...

  ஊசிக்குறிப்பும் ரசித்தேன்...ஊசி இணைப்பும்...ஹா ஹா

  ஸ்பெஷல்இணைப்பு ஹா ஹா ஹா நீங்க ஏஞ்சலுக்கு அதில ரவுன்ட் செஞ்சது போல....நெல்லையும் ஏஞ்சலும் உங்களுக்கு அதுல ரவுன்ட் அடிக்க நிறைய இருக்கு போலருக்கே!!! சரி சரி இதை நான் அவங்களுக்கு ரகசியமா சொல்லிக்கறேன்!!

  செல்ஃபி கொஞ்சம் வேதனையாகவும் இருந்தது ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ////நீங்க ஏஞ்சலுக்கு அதில ரவுன்ட் செஞ்சது போல....நெல்லையும் ஏஞ்சலும் உங்களுக்கு அதுல ரவுன்ட் அடிக்க நிறைய இருக்கு போலருக்கே!!! ///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நல்லவேளை நான் தப்பித்து விட்டேன்.. மிக்க நன்றிகள் கீதா.

   Delete
 35. இணைப்பு வெளி நாட்டு பெண்கள். அங்கு இருந்து கொண்டே அங்கு இருப்பவரை இப்படி காலை வாரக்கூடாது.

  வேலைக்கு போவோர் , வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சூடாய் தினம் புதிதாக செய்து சாப்பிடுவோர் இருக்கிறார்கள்.

  இங்கும் பழசை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
  வேலை பளு என்று சொல்லி விட்டு பழைய உணவை சூடு செய்து சாப்பிடுவது கெடுதல்தான்.
  கொஞ்சமாய் சமைத்து அளவாய் உண்டு வளமாய் வாழலாம்.

  விறகு அடுப்பு பற்ற வைத்து உணவு செய்ய வேண்டும் அந்த காலத்தில் மூன்று வேளையும்.
  இப்போது வசதியாக 78 அடுப்புகள் வந்து விட்டது வேலையை எளிதாக்க. இப்போதும் பழைய உணவை சாப்பிடுவேன் என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

  ReplyDelete
  Replies
  1. ///இணைப்பு வெளி நாட்டு பெண்கள். அங்கு இருந்து கொண்டே அங்கு இருப்பவரை இப்படி காலை வாரக்கூடாது.//
   ஹா ஹா ஹா கோமதி அக்கா இதில் காலை வார என்ன இருக்குது.. உண்மையில் இதிலிருப்பது நகைச்சுவைபோல தோன்றினாலும். முக்கால்வாசியும் உண்மை.. பெண்கள் ஆண்கள் என நான் பாகுபாடெல்லாம் பார்ப்பதில்லை:).. எனக்குத்தேவை நீதி நேர்மை கடமை எருமை:)).

   //வேலைக்கு போவோர் , வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சூடாய் தினம் புதிதாக செய்து சாப்பிடுவோர் இருக்கிறார்கள்.
   //
   அதுதான் கோமதி அக்கா .. இதில் எல்லாப் பெண்களும் அடங்காது ஆனா பலபேர் இப்படித்தான் ஆனா முக்கியமாக நம் நாட்டுப் பெண்களில் அந்த ஒருக்கா உடுத்த சாறி உண்மையிலும் உண்மை. திரும்ப உடுக்காயினம்.

   //கொஞ்சமாய் சமைத்து அளவாய் உண்டு வளமாய் வாழலாம்.///

   இதுதான் உண்மை, எனக்கு வேலைக்கள்ளம் இல்லை, சமைப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா என்னில் உள்ள ஒரு குறை.. கொஞ்சமாகச் செய்ய கை வராது.. எப்பவும் அள்ளிப்போட்டே செய்து.. மிஞ்ச வைப்பேன்.. பின்பு அதைக் கொட்ட மனமில்லாமல் பிரிஜ்ஜில் தூக்கி வைப்பது...

   ஆனா இப்போ சில வருசமாக நிறையவே என்னை மாற்றி வருகிறேன்.. முதல் தடவையாக இந்த புதன் கிழமை றால் கறி வச்சு. அன்றே சாப்பிட்டு முடிக்குமளவாகச் செய்து மிச்சம் வைக்காமல் வந்துது பெரும் மகிழ்ச்சி எனக்கு.

   அதுக்கு காரணம் என்னவெனில் நான் எப்பவும் நினைப்பது மிஞ்சினால் பறவாயில்லை ஆனா போதாமல் வந்திடக்கூடாது என, எங்கள் குடும்பத்து ஆண்களும் சரி வந்தவர்களும் சரி -என் கணவர், அத்தான்.. அவர்களும் சொல்வது கொட்டினாலும் பறவாயில்லை மட்டுமட்டாக எதுக்கு செய்யோணும் என்பதே.. அதனாலகூட அப்படி பழக்கம் வந்து விட்டது எனக்கு..

   தோசை இட்லி இடியப்பம் எல்லாமே ஓவராக போட்டு மிகுதி இழுபட்டுக் கொட்டுவேன் 3,4 நாட்களால:).. புதுசாக் கொட்ட மனம் வராது:)..

   நேற்றுக்கூட அஞ்சுவிடம் கேட்டு கொஞ்சமாக ஒரு நேரம் மட்டும் செய்ய என, தோசை அளவு எடுத்து வச்சிருக்கிறேனாக்கும்:)) ஹா ஹ ஹா.

   ஊரில் இப்பவும் நம் குடும்பங்கள் டெய்லி மூன்று வேளையும் புதுசா செய்தே சாப்பிடுகிறார்கள்.. மிஞ்சிவிட்டால் மாடு ஆடு கோழிகுக் குடுத்திடுவார்களாம் பிரிஜ் விளையாட்டெல்லாம் இல்லை:)).

   பிரிஜ்ஜில் வச்சு உண்ணும் உணவுகளாலும்தான் அதிக வருத்தம் வருது மக்களுக்கு. ஆனா இப்போ கடையிலும் அப்படித்தானே செய்கிறார்கள். அனைத்தையும் ரெடி பண்ணி ஃபிரீசரில் போட்டு வைத்துவிட்டு, உடனுக்குடன் செய்து தருகிறார்கள்.

   ஒரு தடவை ஒரு கடையில் வடை வாங்கப்போனோம், இருங்கோ தருகிறோம் என்றார்கள் பார்த்தால் ஃபிரீசரால் எடுத்து மைக்குரோவேயில் டிபிரீஸ் பண்ணி, டக்கெனப் பொரிச்சுத் தந்தார்கள்.. காலம் எங்கயோ போய்க் கொண்டிருக்கு கோமதி அக்கா:))

   Delete
 36. களவாடி வந்த தத்துவம் நன்றாக இருக்கிறது.
  பாட்டு கேட்கவில்லை , கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் கேட்கிறேன்.
  ஏஞ்சல் பாடல் இனிமை எங்கிறார்கள் கேட்டுப்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. பாட்டுக் கேளுங்கோ..

   Delete
 37. பள்ளியும் நீரோடையும் மனதைக் கவர்கிறது
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கரந்தை அண்ணன் வாங்கோஒ.. மிக்க நன்றி.

   Delete
 38. சொக்கலேட் பக்டரி சூப்பர்...

  தீர்க்கதரிசி to பொறுமையரசி...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ ..

   ஹா ஹா ஹா எனக்குப் பட்டப்பெயர்கள் வரவரக்கூடுது.. ஆனா பொறுமை உண்மையில் என்னிடம் அதிகம் இருக்குது:).. சின்ன வயதிலிருந்தே வீட்டில் சொறி:) வேலைகளெல்லாம் நான் தான் செய்து குடுப்பேன்:))... பொறுமையாக இருந்து இலை வகைகள் குட்டியாக வெட்ட்டிக் குடுப்பது.. வாழைப்பொத்தி கெத்திடுவது இப்படி:)).

   மிக்க நன்றி.

   Delete
 39. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழுங்கள்.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் கோமதி அக்கா... ஹொலிடே என்றாலே ஒரு குதூகலம் வந்துவிடுகிறது..

   Delete
 40. சொக்கலேட் பக்டரி...ம்ம்ம்ம்

  சாக்லேட் பாக்டரி ..அருமையா செஞ்சு இருக்கீங்க ....


  ரிசூ கொலாஜ் ..ரொம்ப அழகு ..


  அந்த நீரோடை ஆஹா ஆஹா...இங்க கொளுத்தும் வெயிலுக்கு அதை பார்க்கவே இதமா இருக்கு ...

  ஊசி குறிப்பு எல்லாமே சுப்பர் ...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ...

   உண்மைதான் வெயில் காலத்தில் இப்படிப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கும். இங்கு எங்களுக்கு வெயில் வந்தாலும் குளிர் இருந்துகொண்டுதானிருக்கும்.

   மிக்க நன்றிகள் அனு.

   Delete
 41. பள்ளிக்கூடம் என்று எங்க வீட்டில் அம்மம்மா சொல்லுவா. ""பள்ளிக்கூடம் விட்டு வந்தாச்சோ,அல்லது இன்றைக்கு இல்லையோ,"" எனக்கேட்பா. அவாவுக்கு அப்படியே சொல்லுவோம்.ஊரில் இருந்தபோது அடிக்கடி பாவித்த சொல்தான்.
  படம் சோகமென்றாலும் நல்லபடம்தானே.
  //பலதடவை.. எழுத்துக்கள் எல்லாம் சரிதானா எனவும் செக் பண்ணினேன்,//ஓமோம் நீங்க செக் செய்யவேணும் உங்களுக்குதான் ழ்,ள் நல்லா எழுத வருமே.. தமிழ்ல வேறு டி எடுத்திருக்கிறீங்க.

  பிரைமறி என்றால் அவங்களுக்கு ஜாலிதான் கையை வீசிக்கொண்டு வருவாங்க. சின்ன பாக் கொண்டுபோகோனும்.அதில் தண்ணீர்,ஜுஸ்,பிஸ்கட் தான் இருக்கும்.அஞ்சு சொன்னமாதிரி ரோட் க்ராஸ் செய்வது எப்படி என்பது போன்ற விடயங்களை எல்லாமே சொல்லித்தருவாங்க. மகனுக்கு பொலிஸ்,தீயணைப்பு படை அவர்கள் எப்படி வேர்க் செய்றாங்க எனவும், அவங்களை ஸ்கூலுக்கே அழைத்து சொல்லிக்கொடுத்தாங்க. இன்னமும் அவர் செய்த க்ராப்ட் ,ஸ்கூல் வேர்க் எல்லாமே அப்படி பாக்ஸ் ல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அம்முலு வாங்கோ..

   ஊரில சொல்வதுதான் பின்பு வெளிநாட்டில் காதில கேட்டிருக்கிறீங்களோ? எழுதும்போதும் இங்கின ஸ்கூல் எனத்தானே எழுதி வருகிறோம்..

   //படம் சோகமென்றாலும் நல்லபடம்தானே.//

   ஓ நான் படம் இன்னும் பார்க்கவில்லை அம்முலு... அப்போ பார்க்கட்டோ...

   //தமிழ்ல வேறு டி எடுத்திருக்கிறீங்க.//
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதனாலதான் செக் பண்ண வேண்டிக் கிடக்கூஊஊஊ:) அதவது சும்மாவோ எங்கட மூதாதையர் சொல்லியிருக்கினம்.. காய்த்த மரம்தான் கல்லெறி படும் என:)) அதுபோலத்தான் இதுவும்.. ஹா ஹா ஹா ஹையோ ஓவரா முறைக்கப்பிடாது:) பெண்ணுக்கு அழகு புன்னகை:)) ஹா ஹா ஹா.

   உண்மை அம்முலு.. ஒவ்வொரு பாதேர் டே, மதேர்ஸ் டேக்கெல்லாம் கார்ட் அழகழகா செய்து வீட்டுக்கு எடுத்து வருவார்கள்... குழந்தைப் பருவம் என்பதும் ஒரு அழகிய பருவம்தானே.. எதுவும் முடிந்துவிட்டால் திரும்ப வராது...

   மிக்க நன்றிகள் அம்முலு.

   Delete
 42. தாலி - பார்ட்டிகளுக்கு மட்டும் அணிவது.
  ம்...ம்... நல்லாத்தான் போகுது உலகம்.

  200 கருத்துரைகள் "வாவ்"

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. நீங்க தாலியையும் கொமெண்ட்ஸ் ஐயும் மட்டும்தான் கவனிச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

   Delete
 43. சாக்லேட் பாக்டரி, willywonka நானும் பார்த்திருக்கேனே.. நல்ல அழகா செய்திருக்கிறீங்க இரண்டையும். சின்னபிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களுடன் டைம் ஸ்பெண்ட் பன்னுவது எவ்வளவு நல்லாயிருக்கும். அவங்களுக்கு சொல்லிக்கொடுப்பது ஒரு கலை. நானும் கிண்டகார்ட்னில் படிப்பித்தபோது பாடம் படிப்பதை விட க்ராப்ட் எனில் குஷியாகிவிடுவினம். நல்ல இன்ரெஸ்டா செய்வினம். டீச்சர் வேலை என்பது நல்லதொரு வேலை பூஸ்.அதுவும் சின்னவர்களுக்கு கற்பிக்க நிறைய பொறுமை,சகிப்புதன்மை வேணும்.
  பேச்சாளர் பேசிய பேச்சும்,கீழே நீங்க போட்டிருக்கும் ஹாஸ்பிட்டல் படமும் (2ம் வேறுவேறு என்றாலும்) பொருந்திப்போகிறது.ஹா..ஹா..ஹா...தெரிந்து போட்டீங்களா,தற்செயலா..
  வா.வ் அழகான நீரோடை. இப்படி சின்ன நீரோடை எங்க வீட்டருகில் இருக்கு. இப்ப 4நாளா பெய்த மழையால் நிரம்பி ஓடுகிறது. அந்த இடத்துக்கு தனியபோகமுடியாது போல...
  ஸ்பெஷல் இணைப்பு சூப்ப்ப்ப்ப்பர்.. அதில அஞ்சுவையும் இழுத்துவிட்டிருக்கிறீங்க. சரி எங்களுக்கு வருத்தமெனில் யாராம் பார்ப்பது,சமைப்பது... உண்மையில் இந்த வருத்தம் என்ற சொல் நாங்கள்தான் கூடுதலா பாவிக்கிறம் அதிரா. நாட்டுநடபெல்லாம் பிட்டுபிட்டு வைச்சிருக்காங்க. ஊரில நடந்த சம்பவம். சாப்பாடு விடயம் எல்லாருமே இப்படிதான் நினைத்து வைத்திருக்காங்க. ஆனா என் வீட்டில் முதல்நாள் உணவு வைக்கமுடியாது. அதனால் இப்போ அளவா சமைக்க கற்றுக்கொண்டாச்சு. அதனால் ப்ளானிங் தான். தோசை மட்டுமே விதிவிலக்கு. நான் இதை சுட்டுக்கொள்கிறேன் பூஸ்.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் அந்நேரம் தியேட்டரில் பார்த்தோம் பிள்ளைகளுக்காக நல்ல படம்தான்.

   //பேச்சாளர் பேசிய பேச்சும்,கீழே நீங்க போட்டிருக்கும் ஹாஸ்பிட்டல் படமும் (2ம் வேறுவேறு என்றாலும்) பொருந்திப்போகிறது.ஹா..ஹா..ஹா...தெரிந்து போட்டீங்களா,தற்செயலா..//

   அது வேறு வேறாகத்தான் கிடைச்சது, ஆனா போடும்போது பொருந்துகிறதே எனத்தான் சேர்த்துப் போட்டேன்:).

   //உண்மையில் இந்த வருத்தம் என்ற சொல் நாங்கள்தான் கூடுதலா பாவிக்கிறம் அதிரா. //
   அது இலங்கையில வருத்தம் எனத்தானே சொல்லுவோம். அந்தக் கோர்ட் உம் இலங்கையர் யாரோ எழுதியதுதான்..

   //நான் இதை சுட்டுக்கொள்கிறேன் பூஸ்.//
   எதையாக்கும்?:).. என் அநாமிகாவிடம் சொறி அநஸ் இடம் பெமிஷன் வாங்குங்கோ சுட முன்:)) பிறகு கையைக் கடிச்சுப்போட்டா என என்னிடம் பஞ்சாயத்துக்கு வரக்கூடா:)).. ஹா ஹா ஹா நன்றி அம்முலு.

   Delete
 44. ஜும்மா,ஊசி இணைப்பு,ஊசிகுறிப்பு ஜுப்ப்ப்பர். பாட்டு இப்போதான் கேட்கிறேன். இனிமையா இருக்கு.
  கர்ர்ர்ர்..ஈஸ்டருக்கு இன்னும் நாள் இருக்கே. இப்பவே லீவா... சரி சரி enjoy holidays.

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் எங்களுக்கு ஏப்ரலில் ஆரம்பித்து மூன்று கிழமை லீவு வரும் அம்முலு:).. இந்தாங்கோ இந்தாங்கோ மோர் குடியுங்கோ:)).. இதைப் பார்த்து அஞ்சு ஓடிப்போய் கமோமைல் ரீ குடிச்சுப் புகையை அடக்குவா இப்போ:)) ஹா ஹா ஹா:)..

   Delete
 45. பாட்டு இப்போது தான் புதிதாக கேட்பது போல் இருக்கிறது.
  இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அக்கா.. இப்பாடலை நானும் திரும்பத் திரும்பப் பலதடவைகள் கேட்டு விட்டேன்... வசனங்கள் பிடிச்சுப்போச்சு...

   Delete
 46. கம்ப்யூட்டர் பாக்டரி ப்ரோக்ராம் ப்ளோ சார்ட் மாதிரி இருக்குது.
  மனைவியிடம் போய் சொல்லாதீங்க என்று எழுதியது ஏன். அதுதான் உண்மையை சொல்லி ஒருத்தர் அடிவாங்கி வைத்தியசாலையில் படுத்திருக்கிறாரே மேலே? அப்போ பொய்யோ உண்மையோ எதையும் மனைவியிடம் சொல்லாமல் இருப்பது நலம். அப்படித்தானே?
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

   ஹா ஹா ஹா இல்ல ஆண்களுக்கு பொய் சொல்லத்தெரியும் ஆனா அதை முழுமையாக மறைக்கும் கெட்டித்தனம் கிடையாது:).. எங்காவது ஒரு சொல்லில் வார்த்தையை விட்டு அகப்பட்டுவிடுவினம்:) அதைவிட உண்மையைச் சொல்லிடுவது மேல் எல்லோ:)..

   உண்மையில் நானும் சரி, வீட்டிலும் சரி நான் சொல்லியிருப்பது பொய் சொல்லக்கூடாது.. உண்மை சொல்லி திட்டு வாங்கினாலும் அது பெரிய பிரச்சனை ஆகிடாது.. அத்தோடு முடிஞ்சுபோகும் ஆனா ஒரு பொய் சொல்லி.. அது இன்னொருவர்மூலம் நமக்கு பொய் எனத் தெரியவரும்போது அதன் விளைவிருக்கே:)) அதை சமாளிப்பது ரொம்ப ரொம்ப குஸ்டம் சே.. சே.. கஸ்டம் ஹா ஹா ஹா.

   இதில இன்னொன்றும் இருக்கு.. கணவன்மாரோ இல்லை குழந்தைகளோ பொய் சொல்ல வெளிக்கிடுவார்கள் எப்போ தெரியுமோ? உண்மை சொல்லும்போது மனைவி பத்திரகாளி ரேஞ்சுக்குப் போவதால்தான்.. அப்படி ஆகிடாமல்.. என்ன இருந்தாலும் உண்மையைச் சொல்லிட்டீங்க இனி இப்படி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என மனைவி அதை அன்போடு ஏற்றுக் கொள்ளும் இடங்களில் ஆரும் பொய் சொல்ல மாட்டினம் என்பது என் கருத்து.

   மிக்க நன்றிகள்.

   Delete
 47. //நீதி: இடம் அறிந்து பேசு//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதனால் நான் இத்துடன் எஸ்கேப்.

  ”அதுதானே.. பேசினால் என்ன குறைஞ்சா போயிடப்போறார்ர் ஹா ஹா ஹா:))”

  என்று அதிரா முணுமுணுப்பதும் எனக்குக் கேட்கிறது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா

  ReplyDelete
  Replies
  1. /பேசினால் என்ன குறைஞ்சா போயிடப்போறார்/ - நம்ம பேசப் பேச நம்ம எடை குறையும் என்ற மாதிரி இருந்தால், நீங்களும் நானும் நாள் முழுதும் சும்மாவா இருப்போம் கோபு சார்... பேசித் தள்ளிவிட (இது அந்த 'தள்ளி' இல்லை) மாட்டோமா?

   Delete
  2. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... ஆவ்வ்வ்வ் இடையில காணாமல் போய் மீண்டும் வந்திருக்கிறீங்க மகிழ்ச்சி.

   //ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதனால் நான் இத்துடன் எஸ்கேப்.//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  3. @ நெ.தமிழன்
   ///நம்ம பேசப் பேச நம்ம எடை குறையும் என்ற மாதிரி இருந்தால், நீங்களும் நானும் நாள் முழுதும் சும்மாவா இருப்போம் கோபு சார்... பேசித் தள்ளிவிட (இது அந்த 'தள்ளி' இல்லை) மாட்டோமா?//

   ஹா ஹா ஹா அவரவர்க்கு அவரவர் பிரச்சனை:)).. உண்மைதான் பேசிக்கொண்டிருந்தால் உடம்பு மெலியும் என இருந்தால்... அதிரா. ஓமக்குச்சியை விட ஒல்லியாகிடுவேனே ஹா ஹா ஹா.... எல்லோரும் கொமெண்ட்ஸ் ரைப் பண்ணுவதுக்க்குப் பதில், வொயிஸ் ரெகோர்ட் பண்ணி விடுவினம் இங்கு ஹா ஹா ஹா:)

   Delete
 48. ஆறு மிக அழகாக இருக்கிறது. (ஓடை போலத்தான் எனக்குத் தோணுது). பசங்களை இந்த மாதிரி இயற்கையான இடங்களுக்குக் கூட்டிச்செல்வதும் கற்பதில் ஒரு பகுதிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ..

   அது ஆறு இல்லை.. மலையிலிருந்து நீர் வீழ்ச்சியாகி... ஓடையாக ஓடி ஆற்றிலே கலக்கிறது..

   நல்ல விண்டரில் சில இடங்களில் நீர்வீழ்ச்சி அப்படியே ஐஸ் ஆகி தொங்கும்.. பார்க்க அதுவும் ஒரு அழகு.

   Delete
 49. சாக்கலேட் ஃபேக்டரி - அழகாச் செய்திருக்கீங்க. எனக்கு அவ்வளவு பொறுமையெல்லாம் கிடையாது.

  ReplyDelete
  Replies
  1. கைவேலைகளுக்கு மற்றும் தையல் வேலைக்கெல்லாம் மிகவும் பொறுமை வேணும்தான். அதுக்கு இன்னொரு காரணம் நமக்கு பிடிச்ச விசயத்தில்தான் நாம் பொறுமையைக் கையாளுவோம்ம்... இப்பொ ஒரு உதாரணம் சொல்லப்போனால்.. எங்கட அம்மா யூ ரியூப் இல் தேடித்தேடி நாள் முழுக்க விட்டாலும் பல புரோகிராம் நியூஸ் என பொறுமையாக எஞோய் பண்ணிப் பார்ப்பா, ஆனா ஒரு படம் பார்க்கச் சொல்லுங்கோ.. எழுத்தோட்டம் முடிவதற்குள் எழும்பிப் போய் விடுவா ஹா ஹா ஹா...

   Delete
 50. ரொம்ப அழகாயும் மிகப் பொறுமையாகவும் சாக்லேட் ஃபாக்டரி செய்திருக்கீங்க! வாயும் வாய்! கையும் கை! :)))) வாழ்த்துகள். பிள்ளைகளுக்கு என இத்தனை மெனக்கெடவும் ஓர் மனசு வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கீசாக்கா வாங்கோ..

   //வாயும் வாய்! கையும் கை! :))))///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைப்படிச்சு நிறைய நேரம் சிரிச்சேன்ன்:)..

   எனக்கு குழந்தைகளோடு மினக்கெட ரொம்பவும் பிடிக்கும்...இங்கு கொஞ்சம் தற்பெருமை:) பேசட்டோ?:) ஹா ஹா ஹா.

   ஒருநாள் ஸ்கூல் பிரேக்கின் போது பிள்ளைகளோடு வெளியே நின்றிருந்தேன்.. அப்போ 2 குட்டீஸ்.. மூன்றாம் வகுப்பு.. வந்து இருவரும் இருபக்கமாக என் கையைப் பிடிச்சுக் கொண்டு நடந்தார்கள். அப்போ ஒரு குட்டி கேட்டுது... உங்களுக்குத் தெரியுமோ.. கூ இஸ் த பெஸ்ட் ரீச்சர் இன் த வேல்ட்? என...

   நான் திடுக்கிட்டு விட்டேன், ஹையோ தெரியாதென எப்பூடிச் சொல்வது? ஆனாலும் என்னில ஒரு குணம் தெரியாட்டில் தெரியாது தேடிக் கண்டுபிடிக்கலாம் எனச் சொல்லிடுவேன். அப்போ நான் நினைச்சேன் கூகிளில் தேடியிருப்பா போலும் என.. உடனே சொன்னேன்.. எனக்குத்தெரியாதே.. கூகிளில் தேடினீங்களோ ? உங்களுக்கு தெரியுமோ என... யேச்ச்ச்ச்ச் என்றா.. அது யார் எந்த நாடு என்றேன்ன்ன்.. உடனே சொன்னா தட்ஸ் யூஊஊஊஊஊஊ என.. எனக்கு கண்ணெல்லாம் கலங்கிப்போச்சு:)).. இப்படிப் பல இனிமையான நிகழ்வுகளும் நடக்கும்..

   அத்தோடு உங்கட தோடு வடிவா இருக்கு சூஸ் வடிவா இருக்கு மஃப்ளர் வடிவா இருக்கு.. பிளவுஸ் வடிவா இருக்கு இப்படி எல்லாம் சொல்வார்கள்.. இப்படிக் கேட்டுக் கேட்டு அவர்களோடு பழகும்போது மனம் மிகவும் சந்தோசப்படும்...

   மிக்க நன்றிகள் கீசாக்கா...

   Delete
 51. நாங்க எல்லாம் இப்போவும் பல சமயங்களிலும் பள்ளிக்கூடம் என்றே சொல்லுவோம். என் மாமியார் வீட்டில் "பள்டம்" என்பார்கள்! முதல்லே புரியவே இல்லை! அப்புறமாப் புரிஞ்சது! சாக்லெட் ஃபாக்டரி செய்யும்போது நிஜம்மான சாக்லேட்டே பயன்படுத்தி இருக்கக் கூடாதோ?

  ReplyDelete
  Replies
  1. //"பள்டம்" ///

   ஹா ஹா ஹா ஊரில பள்ளிக்குடம் எனத்தான் சொல்வதாக நினைவு:).

   //சாக்லெட் ஃபாக்டரி செய்யும்போது நிஜம்மான சாக்லேட்டே பயன்படுத்தி இருக்கக் கூடாதோ?//

   ஹா ஹா ஹா கர்ர்ர்:)

   Delete
 52. மீன்களை விடுவதற்கெனத் தேர்ந்தெடுத்த நீரோடை அழகோ அழகு!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.. அருகில் நிற்கும்போது பெரிய சத்தமாக இருந்துது.

   Delete
 53. பள்ளிக்கூடம் என்று தான் இன்றும் சொல்வது என் வழக்கம். அத்தோடு பள்ளிக்கூடம் படத்தில் நடித்த்து சினேஹா என்பதும் மறக்க முடியுமா!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ நேசன் வாங்கோ..

   //அத்தோடு பள்ளிக்கூடம் படத்தில் நடித்த்து சினேஹா என்பதும் மறக்க முடியுமா!!!!!!!!!//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லையே.. நான் பார்த்த பள்ளிக்கூடப் படம் போன வருடம்தானே வந்திருந்துது.. ரவிக்குமார் அவர்கள் அப்பாவாக நடிக்கிறார்..

   நேசன் கவனிச்சிங்களோ உங்கள் டொமைன் இன் காலம் முடிஞ்சுபோச்சாம்ம் இப்போ எதுவும் தெரியவில்லை உங்கள் புளொக்.. 3 கிழமைக்கு முன் நீங்க போட்ட “வசந்தம் வருமா” எனும் தலைப்புக்குப் பின் எந்த நோட்டிபிகேசனும் வரவில்லை எனக்கு..

   இப்போ போய்த் தேடினால் புளொக்கையே காணம்.. இப்படிச் சொல்லுது..

   //NOTICE: This domain name expired on 3/7/2019 and is pending renewal or deletion.///

   Delete
 54. மீன் வளர்ப்பு, கல்வியல் முறை எல்லாம் இங்கே தனித்தும் தான்.அருவி அழகு.

  ReplyDelete
 55. ஊசிக்குறிப்பு அருமை.

  ReplyDelete
 56. விடுமுறையை இனிதே கொண்டாடுங்கோ.

  ReplyDelete
 57. பாடல் முன்னர் இலங்கை வானொலியில் கேட்டது நினைவு எங்கேயோ பறக்குது![[

  ReplyDelete
  Replies
  1. ஓ இலங்கையில் இருந்தபோதே இப்படம் வெளிவந்துவிட்டதோ.. நான் ரேடியோவில் கேட்டதில்லை... மிக்க நன்றிகள் நேசன்.

   Delete
 58. வணக்கம் அதிரா சகோதரி

  தங்கள் பதிவு வழக்கம் போல அருமையாக உள்ளது. நான்தான் கொஞ்சம் தாமத வருகையாக போச்சு. மன்னிக்கவும்.

  நாங்களும் பள்ளிக் கூடம் என்றுதான் சொல்வோம். முதல் படமாக்கிய மீன்களை ) ப(க)டித்து சுவை உணரும் பூசலாரும், குருவிடம் ஆசி பெறுபவரும் மிக அழகு. தங்களின் கற்பனை சக்தியால் செய்த சாக்லெட் ஃபாக்டரி மிகவும் அழகாக உள்ளது. தங்களின் கற்பனை வளத்திற்கு வாழ்த்துகள்.இந்த மாதிரி ஒரு டீச்சரை பெற அப்பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தங்களிடம் பயிலும் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

  இடம் பொருள் தெரியாமல் பேசி மாட்டிக்கொள்கிறவர்கள் பாடு அவஸ்த்தைதான். ஹா ஹா ஹா. ஜோக் நன்றாகவே உள்ளது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கமலாக்கா வாங்கோ..

   இல்ல நீங்க தாமதம் இல்லை.. என் பதில்தான் ரொம்ப டாமதம்:) ஆகிப்போச்ச்ச்ச்:)).

   ///இந்த மாதிரி ஒரு டீச்சரை பெற அப்பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

   ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ ஊரெல்லாம் புகை வாறமாறிக்கெடக்கேஏஏஏஏஏ:)) ஹா ஹா ஹா:)

   [im] https://cuteanimalsland.files.wordpress.com/2016/03/cat-with-rose.jpg?w=700 [/im]

   Delete
 59. 'தீர்க்கதரிசி அதிரா'...நல்லாயில்ல.

  இனி, 'தீர்க்கதரிசினி அதிரா'வா மாறிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ அறிவிலி நம்பி .. முதன்முதலா வந்திருக்கிறீங்க நல்வரவு..

   நீங்க இன்னும் போஸ்ட் படிக்காமல் ஆரோ தர்சினியிடம் என்னை அடி வாங்க வைக்கும் ஐடியாச் சொல்றீங்க:)..

   மிக்க நன்றிகள்.

   Delete
 60. 2012-ம் ஆண்டு, ’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற தலைப்பில் கோபு அண்ணன் கொடுத்துள்ள சிறிய தொடருக்கான இணைப்புகள் இதோ:

  http://gopu1949.blogspot.com/2012/03/1.html

  http://gopu1949.blogspot.com/2012/03/2.html

  http://gopu1949.blogspot.com/2012/03/3.html

  http://gopu1949.blogspot.com/2012/03/4.html

  http://gopu1949.blogspot.com/2012/03/5.html

  http://gopu1949.blogspot.com/2012/03/6.html

  http://gopu1949.blogspot.com/2012/03/7.html

  http://gopu1949.blogspot.com/2012/03/blog-post_17.html

  இந்த மேற்படித் தொடருக்கு 22 பெண்களும், 28 ஆண்களுமாக மொத்தம் 50 நபர்கள், அன்புடன் வருகை தந்து, வரிந்து கட்டுக்கொண்டு, பல்வேறு பின்னூட்டங்கள் இட்டும், அதிராவும், அஞ்சுவும் எட்டியே பார்க்கவில்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எதையும் படிக்க ஓர் கொடுப்பினை வேண்டும். உங்கள் இருவருக்கும் அது சுத்தமாக இல்லவே இல்லையாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ///கோபு அண்ணன் கொடுத்துள்ள சிறிய தொடருக்கான இணைப்புகள் இதோ: ///

   ஹையோ மீ பெயிண்டாகிறேன்ன்ன்ன்ன்ன்ன்:) ஆராவது சுட்டூஊஊஊஊ ஆறிய தண்ணியாத் தெளிச்சு எழுப்பிவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. குளிர் எனக்கு ஒத்துக்கொள்ளாதாக்கும்:))..

   //அதிராவும், அஞ்சுவும் எட்டியே பார்க்கவில்லை.//

   அந்தக் காலத்தில நான் ஃபிஃபிஃபிஃபிஃபிரெண்டூஊஊஊஊஉ ஆகல்லியே கோபு அண்ணன் உங்களோடு.. அப்படித்தான் நினைக்கிறேன்.. இல்லை எனில் வந்திருப்பேனே..

   //எதையும் படிக்க ஓர் கொடுப்பினை வேண்டும்.///

   ஆஆஆஆஆஆ தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈ:) விடுங்கோ என் கையை விடுங்கோ நான் காசிக்குப் போகப்போறேன்ன்ன்ன்:))..

   ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.. புதுப்போஸ்ட்களுக்குப் போகவே முடியாத நிலையாக இருக்கு.. இதில பழசுக்கெல்லாம் எப்போ போய்?... பார்ப்போம்:)..

   Delete
 61. வணக்கம் அதிரா சிஸ்டர்

  2 வது ஜோக்கும் அருமை. இரண்டு அடியையும் கூடுதலாக வாயிலேயே போட்டு விட்டால் எங்கிருந்து வாயை திறந்து பேசுவது? ஹா ஹா ஹா.

  நீரோடை அழகு. இயற்கை அழகுடன் கலந்த அழகான நீரோடை படங்கள். மீன்குஞ்சுகளுக்கு நீந்த கற்று கொடுக்க வேண்டுமா என்ன? ஆமாம்.. விட்டது போல் விட்டு விட்டு மறுபடியும் பிடிக்கப் பார்க்கிறீர்களே.!கொன்றால் பாவம்.. தின்றால் போச்சு கதையா? ஹா ஹா ஹா.

  ஸ்பெஷல் இணைப்பு ஒவ்வொன்றும் சூப்பர். நிதர்சனமான உண்மை. அனைத்தையும் ஒன்று விடாமல் ரசித்தேன்.

  வடிவேலு காமெடி அருமை.. உண்மையை சொன்னாலே ஆயிரம் டவுட் வரும். இதில் பொய் சொல்லி வேறு தப்பிக்க முடியுமா?

  ஊசி இணைப்பு.. ஜோர்..என்ன ஒரு சமாளிப்பு. .! ஊசிக்குறிப்பு தத்துவம் அருமை. செல்ஃபி காரணம் தெரிந்து கொண்டேன். அனைத்தும் அருமை. தங்களுக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. // இரண்டு அடியையும் கூடுதலாக வாயிலேயே போட்டு விட்டால் எங்கிருந்து வாயை திறந்து பேசுவது? ஹா ஹா ஹா.//

   ஹா ஹா ஹா அதேதான் என்ன ஒரு அழகாக கற்பனை பண்ணி படமும் கீறி எழுதியிருக்கிறார்கள்..

   //ஆமாம்.. விட்டது போல் விட்டு விட்டு மறுபடியும் பிடிக்கப் பார்க்கிறீர்களே.!கொன்றால் பாவம்.. தின்றால் போச்சு கதையா? ஹா ஹா ஹா. //

   இல்லையே.. விட்டது ஓடையில:) ஆனா பிடிக்கப் போவது கடலில்:)) ஹா ஹா ஹா இங்கு இப்படி ஓடைகள் ஓடி ஆற்ற்ரிலே கலக்கும் ஆறு அப்படியே கடல்- சமுத்திரத்தோடு சங்கமமாகிறது...

   //அனைத்தையும் ஒன்று விடாமல் ரசித்தேன். //
   மிக்க நன்றிகள்.

   //உண்மையை சொன்னாலே ஆயிரம் டவுட் வரும். இதில் பொய் சொல்லி வேறு தப்பிக்க முடியுமா?//
   ஹா ஹா ஹா இது வேறையோ?:)

   மிக்க நன்றிகள் கமலாக்கா.

   Delete
 62. நேற்றே உங்கள் பக்கத்திற்கு வந்தேன். ஆனால் பதிவு பெரிதாக இருப்பதால் நிதானமாக படிக்க இயலவில்லை.
  இப்பொழுது தான் படித்து முடித்தேன்.
  பள்ளிக்கூடம் - இங்கும் அதே மாதிரியான ஒரு சூழல் தான். சாக்லேட் பாக்டரி மிகவும் அருமை. தங்களின் கற்பனா சக்திக்கு வாழ்த்துக்கள்.
  என் மகளின் பள்ளிக்கூட அனுபவங்களை 6 பகுதிகளாக இதில் எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் வசைத்து பாருங்கள்.

  https://oviyavinpage.blogspot.com/


  வெளிநாட்டு பெண்கள் - அப்படியே அச்சு அசலாக புட்டு புட்டு வைத்தருக்கிறீர்கள். அது சரி, தங்களின் அனுபவமும் இதில் இருக்குமல்லவா...

  இது ஜும்மா:),ஊசி இணைப்பு: - சூப்பர்

  Selfie இப்படி ஒரு அர்த்தம் இருக்குதோ!

  இப்பவே ஈஸ்டர் விடுமுறையா, இங்கே பள்ளிகளின் விடுமுறைக்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ சொக்கன் வாங்கோ...

   ///பள்ளிக்கூடம் - இங்கும் அதே மாதிரியான ஒரு சூழல் தான்//
   இங்கத்தைய நாடுகள் பொதுவாக ஒரேமாதிரித்தானே இருக்கும்..

   //என் மகளின் பள்ளிக்கூட அனுபவங்களை 6 பகுதிகளாக இதில் எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் வசைத்து பாருங்கள்.//
   ஓ... நன்றி.

   //வெளிநாட்டு பெண்கள் - அப்படியே அச்சு அசலாக புட்டு புட்டு வைத்தருக்கிறீர்கள். அது சரி, தங்களின் அனுபவமும் இதில் இருக்குமல்லவா... ///

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது நான் எழுதியது இல்லையே:)) யாரோ ஒரு நொந்து நூடில்ஸ்சான இலங்கையர் எழுதியிருக்கிறார்:) நான் காவி வந்திட்டேன் இங்கு:)..

   இங்கு ஏப்ரல் முதலாம் திகதிக்கு லீவு விட்டு விடுவார்கள் பின்பு ஈஸ்டர் முடிஞ்சே ஆரம்பமாகும்.

   மிக்க நன்றிகள்.

   Delete
 63. ஊசி இணைப்பு, குறிப்புகள், நீங்கள் செய்த சாக்லெட் ஃபேக்டரி என பதிவு முழுவதுமே சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வெங்கட் வாங்கோ மிக்க நன்றிகள்.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.