நல்வரவு_()_


Sunday 18 July 2010

என் பரிசுப்பொருள் நீதான்..

நான், என் நண்பியைப் பிரிந்து வந்தபின்னர், முதன்முதலாக அவவுக்குப் போட்ட கடிதத்தோடு, இக் கவிதையையும் எழுதியிருந்தேன்.

இதை, உண்மைகளோடு, சில கற்பனைகளையும் சேர்த்து எழுதியுள்ளேன்.


என் நண்பியே!!!
ஏனோ தெரியவில்லை
இன்று உன் ஞாபகம்
அடிக்கடி வருகிறது
இதயமெல்லாம் வலிக்கிறது..

ஓ.. இப்போதுதான் தெரிகிறது
இன்று திகதி ஆகஸ்ட் 4
நாம் பல்கலைக்கழகத்திலிருந்து
பிரிந்து வந்த இறுதி நாள்,
நாம் நண்பராய்ப் பிரிந்த
அந்தக் கொடிய நாள்
எமது 15 வருட பள்ளி,
கழக நட்பின் கடைசி நாள்..

நான் பிரியாவிடை பெற்று
பிரிந்தபோது - நீ
என் முகம் பார்த்து
வழியனுப்ப முடியாமல்
நிலம் பார்த்து நின்றாயே..

நான் என் அப்பாவுடன்
வண்டியில் ஏறிச்
சென்றபோது நம் வாகனத்தின்
சிகப்பு விளக்குகள்
பத்திப் பத்திச் சென்று
எம் ரீ கடைச் சந்தியில்
மறைந்திருக்குமே..

இல்லை
நீ அதை நிட்சயம்
பார்த்திருக்க மாட்டாய்
ஏனெனில் உன் கண்ணீர்
அவற்றை மறைத்திருக்கும்


நண்பியே - நீ
அடிக்கடி சொல்வாயே
பிரிந்தபின் சந்திக்க நேர்ந்தால்
பரிவுடன் ஓடிவந்து
பழைய நண்பர்களாகவே
கதைக்க வேண்டும்
இவைதான் என்
எதிர்பார்ப்புகள் என்று
என்னுடையதும் அதே...


“நெஞ்சிருக்கும் வரை
நினைவிருக்கும்
அந்த நினைவினில்
உன் முகம் நிறைந்திருக்கும்”
நண்பியே!!!
என் கல்விக்கால
வாழ்க்கையின்
பரிசுப்பொருள் நீதான்!!!!.


இதை இப்போது படிக்கும்போது, பெரிதாக ஏதும் தோன்றவில்லை, ஆனால் அப்போதிருந்த பிரிவின் வேதனை, நெஞ்செல்லாம் கனத்ததுபோல, சாப்பிடமுடியாமல்... எதைப் பார்த்தாலும் நண்பியின் நினைவாக... அந்த வயது.... எல்லாம் சேர்ந்து, இக்கவிதை கிடைத்ததும், நண்பியிடமிருந்து பதில் வந்தது, அன்று முழுவதும் தான் சாப்பிடவுமில்லை, அழுத அழுகை யாருக்குமே தெரியாதென.

அதுக்கு முக்கியமாக இன்னொரு காரணம் நம் நாட்டுப் பிரச்சனை. நினைத்தவுடன் போக முடியாது, இனிமேல் நாம் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம். நாம் இருவரும் பக்கத்துக்கட்டிலிலேயே, நித்திரையாகும் வரை கதைப்போம், ஒன்றாக உடையணிந்து, சாப்பிட்டு, கதைத்து.... இருவருமாகவே இருந்துவிட்டமையால்... திடீரெனப் பிரிந்ததும் சொல்ல முடியாத ஒரு துன்பம்.

பின்னர் அவவின் திருமணம் முடிந்து கணவரோடு எயார்போட்டுக்கு போனபோது, சொன்னார், ஒரு வீட்டிலே நிற்பேன் எப்படியாவது வந்துவிடுங்கோ, இதை விட்டால் இனி எப்போ சந்திப்போமோ தெரியாதென, நான் அப்பாவுடன் ஓடிச் சென்றேன், அவவைப் பார்த்ததும், கணவரைக்கூடக் கவனிக்காமல், ஓடிச்சென்று பாய்ந்து கட்டிப்பிடித்து அழுதது.... (பூனை என்றால் பாயும்தானே என நினைத்திடாதீங்கோ... அது அந்நேரத்து பீலிங்ஸ்ஸ்ஸ்..:)) இப்பவும் கண்ணில் நிற்கிறது.


நேற்று, அந்த நண்பி போன் பண்ணிச் சொன்னார், அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம் என, அதுதான் அந்த நாள் ஞாபகம் வந்துவிட்டது.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நண்பன் நல்லவன் என்றால் நம்பிவிடு
தீயவன் என்றால் விலக்கிவிடு,
நம்பியவனை விலக்காதே
விலக்கியவனை நம்பத் தொடங்காதே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

39 comments :

  1. ஐ பிட்சா எனக்குதான் :)

    ReplyDelete
  2. அருமையான கவிதைகள். நல்லா என்ஜாய் பண்ணுங்கோ அடுத்தவாரம்.

    வாழ்க வள்முடன்

    ReplyDelete
  3. நல்லா இருக்கு பூஸ். தோழியோடு நன்கு சந்தோஷமாக நாட்களை களியுங்கள். அப்புறம் அனுபவங்களை இங்கே கவிதையாய் கதையாய் சொல்லிப் போடுங்கோ

    ReplyDelete
  4. தோழியுடன் நல்லா என்சாய் பண்ணுங்க அதிரா...அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  5. ஹைஷ் அண்ணன், இட்ஷா பிட்ஷா உங்களுக்குத்தான். இப்பட எங்க சுவீட் சிக்ரீன் ஆயா, பிட்சா, கட்லட், மிதிவெடி... இப்பூடித்தான் செய்யிறவ.

    அருமையான கவிதைகள்//// கள் இல்லை... ஹைஷ் அண்ணன்... தை தான். மிக்க நன்றி, வரவுக்கும் முதலாவதாக வந்து ஊக்குவித்தமைக்கும்.

    ReplyDelete
  6. மிக்க நன்றி கவி. நினைத்தவுடன், கொப்பியில் இருந்ததைப் பார்த்தெழுதி, சுடச்சுட இங்கே போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி மேனகா. இப்போ நாங்கள் இடையிடை சந்தித்துக்கொள்வோம். நல்ல குடும்ப நண்பர்களாக இருக்கிறோம், அதை நினைக்க பூரிப்பாக இருக்கு.

    ReplyDelete
  8. ஆ வந்துட்டேன் ..வந்துட்டேன்...((ச்சே யாரே கூப்பிட்ட சத்தம் கேட்டதே.. கனவா ஒரு வேளை ))

    ReplyDelete
  9. இத்த பட்சதும் ஓரே பீலிங்ஸா கீதுமே எனக்கு அத்னால நா அப்பாலிக்கா வரேன் ..

    :-))

    ReplyDelete
  10. //நண்பன் நல்லவன் என்றால் நம்பிவிடு//

    அதெப்படி நல்லவன்னு நம்பறது

    //தீயவன் என்றால் விலக்கிவிடு,//

    அதெப்படி கண்டு பிடிக்குறது

    //நம்பியவனை விலக்காதே //

    அதெப்படி விலக்காம இருக்குரது

    //விலக்கியவனை நம்பத் தொடங்காதே //

    ஒரே கொயப்பமா கீதே...

    ReplyDelete
  11. அதீஸ்.. நல்லா எழுதியிருக்கீங்க - அதுவும் அந்த வயதிலேயே.. கண் கலங்குது படிச்சவுடனே.. பரவாயில்லயே.. நினைத்தவுடன் வந்து நிற்கும் தூரத்தில் இன்று நண்பி இருக்கிறாரே.. ம்ம்.. எனக்கு கல்லூரி கால நினைவுகள் வந்தன..

    நானும் இப்பிடி ஒரு கவிதை எழுதினேன், என் பக்கத்து வீட்டு தோழியின் கல்யாணத்தின் போது.. அப்புறம், யாராவது கிண்டல் அடித்திடுவாங்களோ என நினைத்து கொடுக்க வில்லை (எங்க மக்கள் எல்லாரும் கிராமத்தாட்கள்.. குத்தலுக்கு நக்கலுக்கு குறைவில்லாதவர்கள்..)

    நாலு வரிக்கும் நாலு சந்தேகம் கேக்க ஜெய்லானியால் தான் முடியும் போலிருக்கிறது :))

    ReplyDelete
  12. ஆ... ஜெய்..லானி, இப்போ அடிக்கடி கனவு காண்றீங்களே... சுவர் என்னத்துக்காகும்?:).

    உண்மையேதான்.... இன்று முழுக்க ஒரே பீலிங்சாப்போச்சு:)... சே..சே..

    //ஒரே கொயப்பமா கீதே...// ஜெய்..லானி, இதுக்கு ஒரே வழிதான், உங்கள் நண்பனை ஒருவிரலால் தொட்டுப்பார்த்தீங்களெண்டால், கண்டுபிடித்துவிடுவீங்கள்:)), மீ எஸ்ஸ்ஸ்.

    மிக்க நன்றி ஜெய்..லானி. அடிக்கடி கனவு காணுங்கோ... அப்பத்தான், இப்பக்கம் நினைவுவரும்.

    ReplyDelete
  13. வாங்கோ சந்து, மிக்க நன்றி. நானும் எதிர்பார்க்கவில்லை, இருவரும் ஒரு நாட்டுக்கே வருவோம் என்று... எல்லாமே கடவுளின் செயல்தானே.

    யாராவது கிண்டல் அடித்திடுவாங்களோ என நினைத்து கொடுக்க வில்லை /// இப்போதான் புளொக் இருக்கே, தயங்காமல் போடுங்கோ.

    நாலு வரிக்கும் நாலு சந்தேகம் கேக்க ஜெய்லானியால் தான் முடியும் போலிருக்கிறது :)) /// அதனால்தான் அவர், சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் சங்கத் தலைவராக இருக்கிறார்:).
    (ஜெய்..லானி, எனக்கு முதன் முதலில் அறிமுகமானதே, இந்த வசனத்தோடுதான் கவிசிவாவின் புளொக்கில், அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).

    ReplyDelete
  14. அதீஸ், கவிதை சூப்பர். உங்கள் தோழியோடு இனிமையான பொழுதாக அமையட்டும்.

    எனக்கு இருந்த நட்பு எல்லாம் எந்தக் கண்டத்தில் இருக்கிறார்களோ தெரியாது. நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். அதனால் நிறைய நண்பிகள் இருந்தார்கள். ஆனால், எப்போதும் கண்டம் விட்டு கண்டம் தாவிய படியா எதுவுமே நிலைக்கவில்லை. இப்போ இணையத்தில் மட்டுமே சில நண்பிகள்.

    // அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).//
    அப்ப ஜெய் ஆணா??? ( யாரும் அடிக்க வராதீங்கப்பா )

    ReplyDelete
  15. //(ஜெய்..லானி, எனக்கு முதன் முதலில் அறிமுகமானதே, இந்த வசனத்தோடுதான் கவிசிவாவின் புளொக்கில், அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்)//

    பூஸார் வெண்டைகா நிறைய சாப்பிடுவீங்கலா..ஹி..ஹி...


    //// அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).//
    அப்ப ஜெய் ஆணா??? ( யாரும் அடிக்க வராதீங்கப்பா ) //


    நல்ல வேளை வாண்ஸ் ஒரே சந்தேகத்தோடு விட்டுடீங்க நடுவிலயான்னு கேக்காம.ஹய்யோ..ஹய்யோ..

    ReplyDelete
  16. //ஒரே கொயப்பமா கீதே...// ஜெய்..லானி, இதுக்கு ஒரே வழிதான், உங்கள் நண்பனை ஒருவிரலால் தொட்டுப்பார்த்தீங்களெண்டால், கண்டுபிடித்துவிடுவீங்கள்:)), மீ எஸ்ஸ்ஸ்.//

    என்னோட நண்பர் ஒரு முள்ளம் பன்றியா இருந்தா அப்ப என் கதி..ஹி..ஹி...

    ReplyDelete
  17. அதோ கதிதான் :))

    ReplyDelete
  18. வாணி, மிக்க நன்றி.

    எனக்கும் நண்பிகள் அதிகம் வாணி, ஆனால் பெஸ்ட் ஃபிரெண்ட் என்றால் எப்பவும் ஒருவரைத்தான் தெரிவுசெய்வேன்(அமைந்துவிடும்).

    எம் இருவருக்குமிடையில் எந்தவித ஒளிப்பு மறைப்பும் அப்போ இருந்ததேயில்லை. அதனால்தான் கல்வி வாழ்க்கை இப்பவும் நினைக்க நினைக்க இனிக்கிறது.

    //// அப்போ அவர் ஒரு பெண் என நினைத்தேன்).//
    அப்ப ஜெய் ஆணா??? ( யாரும் அடிக்க வராதீங்கப்பா ) /// அப்பூடியா வாணி, என் சந்தேகத்தைக் கிளறி விட்டிட்டீங்களே.... இப்போ ஆரைப் பிடித்து இதைக் கன்போம் பண்ணலாம்... ஆ...... நான் மர உச்சியில இருக்கிறேன்... என்னை ஆரும் காட்டிக் கொடுத்திடவாணாம்:)))

    ReplyDelete
  19. பூஸார் வெண்டைகா நிறைய சாப்பிடுவீங்கலா..ஹி..ஹி... // சே..சே... இல்ல ஜெய், இப்போ அத்திப்பயம் மட்டும்தேன்... இமாஉலகத்தில் படம் பார்த்ததிலிருந்து... என்ன ஒரு அயகான அத்திப்பயம்:).

    என்னோட நண்பர் ஒரு முள்ளம் பன்றியா இருந்தா அப்ப என் கதி..ஹி..ஹி... // ஓ.. அவரா நீங்க?:)) பேப்பரில் படித்தேன், முள்ளம்பன்றியை ஒருவர் தொட்ட இடத்தில, முள்ளுப்பண்டியின் நிலைமை கவலைக்கிடமாம்:).

    எதுக்கு ஜெய்..லானி இப்பூடியெல்லாம் பண்ணுறீங்க??

    அருமையான நண்பர்கள்... சந்த்தூஸ், வான்ஸ்ஸ், கவிசிவாஸ்ஸ்ஸ் எல்லோரும் இருக்கும்போது எதுக்கு மு.ப ஆசை?:)))) உங்களுக்கு வாணாம் விட்டுடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்..

    உஸ் அப்பா முடியல, மரக்கொப்பில இருந்து வழுக்கி விழுந்திடுவேனோ எனப் பயம்மாஆஆஆஆஅக்கிடக்கே...

    கவி.... அதோகதிதான்// கிக்..கிக்..கிக்...

    இன்று ஜெய்... சூப்பர் மாட்டி.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  20. ஹலோ!
    ஹல்லோ!!!
    யார், அதிர்ர்ராவா கதைக்கிறது!!
    அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம். ;)

    ஒன்றும் இல்லை. சும்மா பூஸை விரட்டிப் பார்ப்போம் என்று ஒரு எண்ணம் வந்துது. ;)

    ReplyDelete
  21. இமா!!! இதென்ன இது, ஆற்றையோ வீட்டுக்குள்ள வருவதுபோல யோசித்து யோசித்து வாறீங்கள்... அதிரா வீடுதானே... எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்கள்.... அதிரா எப்பவுமே ஒரே மாதிரித்தான்....

    அதிரா வாற கிழமை உங்களிடம் வருவதாக இருக்கிறோம். ;)/// நல்வரவு இமா. ஆனாலும் ஒன்று என்னைச் சந்திப்பதாயின், நான் கட்டிலுக்குக் கீழதானே:) எப்பவும் இருப்பேன், நீங்களும் பிரக்டிஸ் பண்ணிக்கொண்டு வாங்கோ:), இல்லையெண்டால் கஸ்டப்படுவீங்களெல்லோ:))).

    மிக்க நன்றி இமா.

    ReplyDelete
  22. ஆ அதிரா கவிதை,கவிதை சூப்பர்.உங்கட‌நண்பி கொடுத்துவைத்தவா.அவாவிடம் நான் சுகம் விசாரிக்கிறேன். சொல்லவும்.
    உங்க ஸ்லைட் ஷோவும் நன்றாக இருக்கு.
    //ஆற்றையோ வீட்டுக்குள்ள வருவதுபோல யோசித்து யோசித்து வாறீங்கள்... //
    உங்க வீட்டுக்கு பக்கத்தில பெரிசாஆஆ ஓடுதெல்லோ அதிரா.அதுதான் அவா யோசிக்கிறா போல.
    நண்பியுடன் நல்ல பொழுதாக அமையட்டும்.

    ReplyDelete
  23. கவிதை அருமை. ஆரஞ்ச் பூனை படமும் அழகாயிருக்கு. தோழியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்க அதிரா!

    ReplyDelete
  24. எங்கே போனாலும் இப்பிடி ரவுண்ட் கட்டியா என்னை அடிக்கிரது. கொஞ்சம் கேப் குடுத்து அடிங்க அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. ஐ..அதீஸ் சொந்தமா கிட்னியை யூஸ் பண்ணி அழகா கப்பி அடிக்காமல் கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார்.சபாஷ்!

    ReplyDelete
  26. அதிரா உங்களின் நட்பு தொடர வாழ்த்துக்கள்.சந்த்தித்த பின்பும் ஒரு கவிதை எழுதுங்க.அருமை.

    ReplyDelete
  27. ஆ... அம்முலு வாங்கோ மிக்க நன்றி.
    நண்பி குடும்பம் வந்து போய்விட்டார்கள்.
    கதை கதையெனக் கதைத்து.... இன்னும் முடிக்கவில்லை:).... அடுத்தமுறைக்கு மீதி வைத்திருக்கு.

    ஓ.. ஆற்றைச் சொல்றீங்களோ? :), நான், 6 ஆக்கும் என நினைத்தேன்.:).

    ReplyDelete
  28. மிக்க நன்றி மகி.
    கொஞ்ச நேரமும் வேஸ்ட் பண்ணாமல், நண்பியோடு கதைத்தே பொழுது போனது இம்முறை. ஒவ்வொரு தடவையும் எல்லோருமாக ஊர் சுற்ற வெளிக்கிட்டுவிடுவோம், அதனால் கதைக்கும் நேரம் குறைவாக இருக்கும்.

    இம்முறை எங்கும் போகாமல் வீட்டிலேயே பொழுது கழிந்ததால் சந்தோசமாக இருக்கு.

    ReplyDelete
  29. கொஞ்சம் கேப் குடுத்து அடிங்க அவ்வ்வ்வ்வ் /// ஜெய்..லானி, சைக்கிள் ஹப் கொடுத்தாலே பிளேன் ஓட்டுறீங்களே!!:), அதுதான் ஹப் இல்லாமல்... ஆங்......:).

    ReplyDelete
  30. மிக்க நன்றி ஸாதிகா அக்கா, இப்பவெல்லாம் நீங்கள் சரியான மோசம், அடிக்கடி காணாமல் போறீங்கள்:).கிட்னியை யூஸ் பண்ணினால் எல்லாமே எழுதலாம்:)))).

    ReplyDelete
  31. ஆசியா மிக்க நன்றி...

    அவர்கள், 2 நாள் நின்று போய்விட்டார்கள்.... இனியும் கவிதையோ? அது தானா வரோணும்...:).

    ReplyDelete
  32. mmmm enakku antha naal nadpu naapakam vanthathu.

    ReplyDelete
  33. வாங்க ஜலீலாக்கா... என்ன திடீரென பழைய பதிவெல்லாம் படித்து ஃபீல் பண்ணுறீங்கள்:).... நட்பு நட்புத்தான், அதிரா அதிராதான், பூஸ் பூஸ்தான்....:)).

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  34. வார்த்தைகளில் இல்லை, உணர்வுகளில் இருக்கிறது. தோழியின் மீது அவ்வளவு பிரியமோ! அப்புறம் எப்போது சந்தித்தீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ ஸ்ரீராம், கவிதை எழுதி இப்போ ஒன்பது வருடத்தால வந்திருக்கிறீங்க...

      அவவும் பிரித்தானியாவில்தான் இருக்கிறா, நான் இங்கு முதன் முதலில் வந்தபோது, தங்களிடம் வந்து தங்கிவிட்டுத்தான் ஸ்கொட்லாண்ட் போகோணும் எனச் சொல்லிட்டா, அதனால அங்கு இறங்கி ஒருநாள் நின்றுவிட்டே, இங்கு வந்தோம்.. இப்பவும் இடைக்கிடை போய் வருவோம்... நெருங்கிய நட்பு என்பதற்காக அடிக்கடி எல்லாம் பேச மாட்டோம்ம்.. 3,4 மாதத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி, போன் பண்ணினால் 2 மணித்தியாலங்களாவது பேசிவிட்டுத்தான் வைப்போம் ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள்.

      Delete
  35. அஆவ் சூப்பரான கவிதை அழகான நட்பு அழகஅழகான நினைவுகள் .இப்படி கிடைப்பது அரிது .என்ஜோய் யுவர் ப்ரெண்ட்ஷிப் :)
    இந்த தோழிதானே //எதுக்கு சிரிச்சீங்கன்னு அந்த சிங்கள பேபியின் அப்பாவை பார்த்து //நீங்க ஸ்மைல் செஞ்சதுக்கு கோச்சிக்கிட்டவங்க :)))))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ.. 2010 இல் ஏன் நீங்க வரவில்லை கர்ர்:) ஹா ஹா ஹா.

      ஹா ஹா ஹா அவவேதான்.. அடிக்கடி கோபிச்சு முறைச்சுக் கொள்வோம், பின்பு ஓடிப்போய்க் கட்டிப்பிடித்து அழுது ஒன்றாகிடுவோம்:).. அது பேகர் இன பேபி :)

      மிக்க நன்றிகள் அஞ்சு.

      Delete
    2. அப்போ நான் ப்ளாக்கர் இல்லை :)

      பிப்ரவரி 2011 தான் ஸ்டார்ட் பண்ணேன் .ஆனா 2010 இல் தமிங்கிலீஷ் பின்னூட்டம் ஆசியா ஜலீக்கு ஆச்சிக்கு கொடுத்திருக்கேன் .இவங்களை இன்ட்லி ப்லாகில் பார்த்து போவேன் .அப்போ தமிழ் கமென்டலாம் எப்படின்னு தெரியாத அப்பாவிக்காலம்

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.