நல்வரவு_()_


Saturday 31 July 2010

எங்கட ஊர் “இயற்கை ராணி”

நான் பூவைச் சொல்கிறேன்:)


முதலில் எல்லோரும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேணும், படம் பார்த்து ஆரும் அடிக்க வரக்கூடாது:).... ரோஜாவைப் பிடிப்பவர்கள் எல்லோரும் வந்து ரசியுங்கோ....

இமாவின் உலகில், இமாவுக்கு இதன் மேல் சந்தேகம்:), பெயர் தெரியவில்லை என்றார், அப்போ தொடங்கியது என் ஆராய்ச்சி, அந் நேரம் இவை மொட்டும் மலருமாக இருந்தன. அப்போ தொடக்கம் தினமும் வோக் போகும்போது ஒவ்வொரு இடமாகத் தேடித்தேடி, பழமாகும் வரை படமெடுத்தேன். இப்போ கிட்டத்தட்ட, பூக்கள் முடிந்துபோய், பழங்களாகிவிட்டன.

இங்கு எல்லா இடங்களிலும் இதனைக் காணலாம். வருடத்தில் ஒருமுறைதான் பூக்கிறது. கண்ணில் காண்போரிடமெல்லாம் கேட்டேன் இதன் பெயர் என்னவென, யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை, ஆனால் இது “a kind of rose” என்று மட்டும் சொன்னார்கள். இது இந்நாட்டின் இயற்கை ரோஜாக்களில் ஒன்று. ஒருவர் சொன்னார், மணந்து பார்த்தால் நல்ல ஸ்மெல் வரும் என்று. (இலா அங்கு சொன்னது நினைவுக்கு வந்தது.. பன்னீர் ரோஜா), நான் ஏனோ மணந்து பார்க்கவில்லை(என் மூக்கில், நான் வலு கவனம், பூச்சி கீச்சி உள்ளே போய்விட்டால்?:))).

இனிப் படம் பார்த்துக் கதைப்போம்.

 

பூக்களின் கீழே, குட்டிக்குட்டியாக காய்கள் உருவாவது தெரியுதோ?


இது ரோட்டின் ஓரமாக அழகுக்காக வெட்டி வைத்திருக்கிறார்கள்.


இதில் வெள்ளைப் பூக்களும் உண்டு.

இங்கு, வெட்டாமல் விட்டிருக்கிறார்கள், அதனால் பெரிய பற்றைபோல வளர்ந்திருக்கு.


இந்த வீட்டுக்குப் போனபோது பார்த்தேன், மதில் கரையெல்லாம் இவர்தான்... வளர்கிறார்.


காய்கள் பெரிதாகின்றன.



காய், பழமாகிறது... தண்டைப் பாருங்கள், குட்டிக் குட்டி முட்கள் தெரிகின்றன.



ஆ..... பழுத்துவிட்டன....



இது “லபக் டபக்” ஒலி அல்ல:)),  “புஸுக் பூஸ், புஸுக் பூஸ்”, என பூஸின் இதய ஒலி, கேட்குதோ?:)))).


பழங்களை வெட்டினால், உள்ளே வெண்டிக்காய் விதைபோல இருக்கு.


உஸ் அப்பா இதுக்கு மேல என்னாலும் முடியவில்லை:), நான் எடுத்த படங்களின் சுருக்கம்தான்(டோண்ட் சே கர்ர்ர்ர்ர்ர்ர்:))) இது, விரிவாக்கம் என் பிகாசா ஆல்பத்தில் விரைவில் வரும்:).
இப்போ திருப்தியோ இமா?.


பின் இணைப்பு:
நான் இத் தலைப்பு முடியும்வரை இங்குதான் இருப்பேன்:), பயமில்லை, எல்லாம் ஒரு தற்காப்புக்காகத்தான்:).


பயமோ எனக்கோ?? தம்பியிருக்கப் பயமேது?:)).


££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££
KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN FRIEND
... from(மபொர) haish 126.
££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££

63 comments :

  1. ஐ எனக்கே எனக்கு :)))

    ReplyDelete
  2. ரசித்தவைகள்:

    //நான் ஏனோ மணந்து பார்க்கவில்லை(என் மூக்கில், நான் வலு கவனம், பூச்சி கீச்சி உள்ளே போய்விட்டால்?:))).//என்ன வீட்டு டாக்டர் கிட்ட காட்டும் போது மூக்கு கீழ சமாதானம் ஆகிவிடுவார். (நான் பூச்சி/கீச்சியை சொன்னேன்) :::ஜெய்லானி பதில்வில் கடன் வாங்கியது:::

    //இது “லபக் டபக்” ஒலி அல்ல:)), “புஸுக் பூஸ், புஸுக் பூஸ்”, என பூஸின் இதய ஒலி, கேட்குதோ?:)))).//ஏஏஏன் முருங்கையில் உட்கார்ந்து இருப்பது பயமாயிருக்கோ:)) அதான் பூஸூ கண்ணை மூடி தானே உட்கார்ந்து இருக்கு, அப்ப பூஸூக்கு மட்டும் பூலோகம் இருண்டுதானே இருக்கும்? பயம் ஏன்?

    //பயமோ எனக்கோ?? தம்பியிருக்கப் பயமேது?:)).// பூஸ் முகத்தில் இருக்கும் பயத்தை விட ஜீனோ முகத்தில் இருக்கும் பயம் அதிகம். இருவரின் முகத்தின் உணர்வுகள் மனிதர்களை விட அருமையான வெளிப்பாடுகள். சூப்பர் நிழல்படம்.

    ReplyDelete
  3. ஐ இது ஏதாவது விஷ தக்காளி இல்லையே :(( இருங்க செக் பண்ணீட்டு வந்து எடுத்து கிட்டு போறேஏன் :)))

    ReplyDelete
  4. ஹை! ஹாமில்டன் மாஜிக் தக்காளி. ;)

    ReplyDelete
  5. ////நான் ஏனோ மணந்து பார்க்கவில்லை(என் மூக்கில், நான் வலு கவனம், பூச்சி கீச்சி உள்ளே போய்விட்டால்?:))).//என்ன வீட்டு டாக்டர் கிட்ட காட்டும் போது மூக்கு கீழ சமாதானம் ஆகிவிடுவார். (நான் பூச்சி/கீச்சியை சொன்னேன்) :::ஜெய்லானி பதில்வில் கடன் வாங்கியது::://

    கிக் கிக் கிக். ;)

    ReplyDelete
  6. 5 பேர் வந்துட்டாங்களே..
    ஓக்கீ
    அண்ணே
    ஆன்ரீ
    தானே
    ஜீனோ இஸ் தி நெக்ஸ்ட்!
    இருங்கோ படிச்சிட்டுவரன்.

    ReplyDelete
  7. பார்த்தீங்களோ மக்கள்! இதுக்குத்தான் சொல்றது... கிட்னி உள்ள பூஸ் எல்லாம் ஃப்ரெண்ட் பிடிச்சு வைக்கோணும் என்று.

    பாருங்கோ, நான் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடினதை... என்னில இருக்கிற பாசத்தால (ஹார்ட் எவ்வளவு வடிவா இருக்கு என்று பாருங்கோ, விளங்கும்.) இப்பிடி ஒரு ப்ரொஜெக்ட் ஆகவே எடுத்து நடத்தி இருக்கினம் ஆக்கள். மனசு ஜில்லென்று குளிர்ந்து போச்சுது.

    கொஞ்ச நாள் முன்னால இந்தச் செடி நினைவு வந்தது, ஒரு போட்டோ பார்க்கேக்க. ஆனாலும் அப்ப, சோஸ் செய்யிற தக்காளி என்று தப்பா நினைச்சுப் போட்டன். இப்ப காலைல லைட்டா லைட் பத்திச்சுது. இப்ப 'பளிச்' ;D

    ம்.. அதீஸ் குறுக்கு வெட்டுமுகம் எல்லாம் எடுத்துக் காட்டி இருக்கிறீங்கள். 'மியாவும் நன்றி' ;) இந்த 'பிப்ஸ்' இல் ரீ போடலாமோ? முளைக்குமோ!! நட்டுப் பார்த்துச் சொல்லுங்கோ. முந்தி இருந்த வீட்டில வேற சாதி ரோஸ் விதை விழுந்த இடமெல்லாம் கண்டபடி முளைத்துக் கிடக்கும். (மொப்பிங் ஸ்டிக்கால எனக்கு அடிக்க வரப் போறா மொப்ஸி.)

    எதுக்கும் தொடர்ந்து விசாரிச்சுக் கொண்டு வாங்கோ. யாராவது ஒரு பாட்டியம்மாவுக்குச் செடியின்ர பேர் தெரிஞ்சு இருக்கும்.

    எனக்காக... எனக்கே எனக்காக இவ்வளவு பிரயாசை எடுத்ததுக்கு... 12345 12155
    ;) x 64646464646464646646

    ReplyDelete
  8. தேங்கூஊ இமா :)))x???

    ReplyDelete
  9. அதீஸ், அடடா! எங்கள் வீட்டுக்கு பின்பக்கமும் நிறைய மரங்கள், செடிகள், கொடிகளில் காய்கள் இருக்கு. அதெல்லாம் என்னவென்று கொஞ்சம் கண்டு பிடிச்சு சொல்ல முடியுமோ?? நாளைக்கே போட்டோ எடுத்து என் வலைப்பூவில் போடுறேன். உங்கள் கிட்னி, இருதயம், இரைப்பை இப்படி எதை வேண்டுமானாலும் பாவியுங்கோ..ஆனால் பதில் வேண்டும்.
    நல்ல பொறுமை தான் போங்கள்.
    மரத்தில் இருக்கும் பூஸார், கீழே இருக்கும் பூஸார் என்று 2 பூஸ்களும் அழகு.

    ReplyDelete
  10. நான் மரத்து மேல மெல்ல மெல்ல ஏறிகிட்டு இருக்கேன்..

    உங்கட ஆராய்ச்சியில இமா குளிர்ந்து போய்க் கிடக்காங்க அதிரா.. அதுவும் அந்த இதயத்தப் பாத்து ரொம்பவே :)) பெருசா போர்வை ஒன்னு அனுப்பிவிடலாமான்னு இருக்கேன் :)

    இமாவோட குழப்பத்த தீர்த்து வச்சதுக்கு எங்க சார்பா நன்றிஸ் :)))))))))

    ReplyDelete
  11. /நான் மரத்து மேல மெல்ல மெல்ல ஏறிகிட்டு இருக்கேன்.. / பாத்து சந்தூஊஊ..உந்த மரம் வழுக்கு மரமாம். அங்கை அக்கா-தம்பிக்கு மட்டும்தான் இடமாம்.

    நீங்கோ மெல்ல மெல்ல ஏறினால் வெகுவேகமாக சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கீழே விழுந்துடுவீங்கள் என்று மரத்தின் மேலே கட்டில் போட்டு,கட்டிலடியில் ஒளித்து அ.கோ.மு. சாப்பிடும் அக்கா-தம்பி கூட்டணி தங்களை எச்சரிக்கிறது.உஷார்,உஷார்!

    அடிராக்கா,நோ வொரீஸ் யா..தம்பி இஸ் தேர் பார் யுவர் ப்ரொடக்ஷன்..ஜீனோ இப்பம்தான் வேகமாக மரமேறுவது எப்படீன்னு கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிருக்கு. ஆரும் அருகில் வ்ந்தால் ஒசரமான மரத்துக்கு தாவிடுவம்.ஓக்கை? :)

    ReplyDelete
  12. //KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN FRIEND//

    அதிஸ் பாட்டி இந்த தெரிஞ்ச பிசாசு யாருன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்..ஏன்னா ..........க்கி..க்கி....

    ReplyDelete
  13. ////நான் ஏனோ மணந்து பார்க்கவில்லை(என் மூக்கில், நான் வலு கவனம், பூச்சி கீச்சி உள்ளே போய்விட்டால்?:))).//என்ன வீட்டு டாக்டர் கிட்ட காட்டும் போது மூக்கு கீழ சமாதானம் ஆகிவிடுவார். (நான் பூச்சி/கீச்சியை சொன்னேன்) :::ஜெய்லானி பதில்வில் கடன் வாங்கியது /

    அதானே..!! ஹி..ஹி..(( அடடா ஹார்ட்ட டச் பண்ணிட்டீங்களே..))

    ReplyDelete
  14. பூஸோட பார்வையில ஜீனோ நடுங்கிகிட்டுல்ல இருக்கு . அப்புறமென்ன தம்பி இருக்கே பயமேன். ஜீனோஓஓஓஒ இப்பிடி சொல்லுங்கோஒ அக்கா இருக்க தம்பிக்கு பயமேன்ன்ன்ன்ன்

    ReplyDelete
  15. //ஜீனோஓஓஓஒ இப்பிடி சொல்லுங்கோஒ அக்கா இருக்க தம்பிக்கு பயமேன்ன்ன்ன்ன்// Well Said:)))

    ReplyDelete
  16. ஜெய்லானி said...
    பூஸோட பார்வையில ஜீனோ நடுங்கிகிட்டுல்ல இருக்கு . அப்புறமென்ன தம்பி இருக்கே பயமேன். ஜீனோஓஓஓஒ இப்பிடி சொல்லுங்கோஒ அக்கா இருக்க தம்பிக்கு பயமேன்ன்ன்ன்ன்///

    ஹைஷ்126 said...
    //ஜீனோஓஓஓஒ இப்பிடி சொல்லுங்கோஒ அக்கா இருக்க தம்பிக்கு பயமேன்ன்ன்ன்ன்// Well Said:)))

    ஆ..... என்னால இனியும் பொறுக்க முடியேல்லை..... ஒவ்வொன்றுக்கும் சிரிச்சதில வயிறு நோகுது, கண்ணும் மெதுவா இருட்டுது.....:))), விரைவில் வாறேன்...

    பி.கு:
    [(இப்பத்தான் நானும் வடிவாப் பார்த்தேன், தம்பியைப் பார்க்க உண்மையிலயே பயப்புடுறார்போல தெரியுது:))))], ஆங் ஆரது தம்பிக்குப் பயமெண்டெல்லாம் சொன்னது.... தம்பி சிங்கம்ல..சிங்கம்ல.....

    ReplyDelete
  17. //[(இப்பத்தான் நானும் வடிவாப் பார்த்தேன், தம்பியைப் பார்க்க உண்மையிலயே பயப்புடுறார்போல தெரியுது:))))],//


    பயமெண்டா அப்படி ஒரு பயம் தலைய தூக்காததிலேயே தெரியலை.. அவ்வ்வ்..வவ்..வவ்

    சிங்கமா யாரது புதுசா...வேர புது தம்பியோஓஓஒ

    ReplyDelete
  18. //சிங்கமா யாரது புதுசா...வேர புது தம்பியோஓஓ// ஒம் ஜெயலானி அது என் தம்பி, இது அதிராவின் தம்பி :))))

    ReplyDelete
  19. ஹைஷ் அண்ணன், உங்கள் பதிவு பார்த்த நேரம் தொடங்கி சிரிச்சதில... ஒரு மாதிரி ஆகிவிட்டேன்:)).

    அத்தனை ரோஜா ஆப்பிளும் உங்களுக்குத்தான், முடிந்தால் சோஸ் அல்லது சாதம் செய்யுங்கோ:)).

    //என்ன வீட்டு டாக்டர் கிட்ட காட்டும் போது மூக்கு கீழ சமாதானம் ஆகிவிடுவார்/// உப்பிடியெல்லாம் சொன்னாலும் நான் கடசிவரைக்கும் நோசால:)) ம.....ணந்து பார்க்கமாட்டேன்:))).

    ஏஏஏன் முருங்கையில் உட்கார்ந்து இருப்பது பயமாயிருக்கோ:)) /// எப்பூடி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? பொல்லுக்கொடுத்து அடிவாங்குவதே எனக்கு தொழிலாப்போச்சு, தம்பியைப்போல:)(ஒரு கதைக்குச் சொன்னேனாக்கும்:))).

    அது பயத்தால எழுந்த ஓசையில்லை:)), ஹார்ட்.... அதுதான் பூஸ் இதயவறையிலிருந்து கேட்கும் பாஆஆஆஆஆஆஆச ஒலி:)... உஸ் அப்பா முடியல்ல:)).

    ///பூஸ் முகத்தில் இருக்கும் பயத்தை விட ஜீனோ முகத்தில் இருக்கும் பயம் அதிகம். இருவரின் முகத்தின் உணர்வுகள் மனிதர்களை விட அருமையான வெளிப்பாடுகள். சூப்பர் நிழல்படம். /// ஹைஷ் அண்ணன், நீங்கள் சொன்னதன் பின்புதான் உற்றுப்பார்த்தேன், உண்மையிலேயே, கப்சனுக்கும் படத்துக்கும் பொருத்தமாக இருக்கு, பூஸைவிட ஜீனோவின் கண்களில் அப்படியே பயம் தெரியுது.

    மிக்க நன்றி. உடன் வருகைக்கும் கருத்துக்கும்.

    இதில சோஸ் செய்யலாம் எண்டு இமா ரீச்சர்தான் சொன்னவ:), வேணுமெண்டால் செய்து பாருங்கோ..:), பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..... கம்பி எண்ண நான் ரெடி இல்லை:).

    பி.கு:
    இமாவுக்குச் சங்கிலி எண்டால் நல்ல விருப்பம்:).

    ReplyDelete
  20. இமா.... இது தக்காளி இல்லை:)) கர்ர்ர்ர்ர்ர், பூஸின் ரோஸ் ஆப்பிள்:)))))))).

    பார்த்தீங்களோ மக்கள்! இதுக்குத்தான் சொல்றது... கிட்னி உள்ள பூஸ் எல்லாம் ஃப்ரெண்ட் பிடிச்சு வைக்கோணும் என்று.
    //// மக்கள்ஸ்ஸ்ஸ், இவ்வளவு நாளும் தவற விட்டிருந்தால், இனியாவது ஃப்பிரெண்ட் புடிச்சிடுங்கோ....:))), பூஸை:)).

    (ஹார்ட் எவ்வளவு வடிவா இருக்கு என்று பாருங்கோ, விளங்கும்.)/// மக்கள்ஸ் பாருங்கோ.... வடிவாப்பாருங்கோ... எல்லாம் புரியும்:).

    //மனசு ஜில்லென்று குளிர்ந்து போச்சுது./// மிக்க நன்றி இமா. நான் எப்பவும் எல்லோர் மனதும் குளிரோணும் என்றுதான் பதிவுகள் போடுவேன், ஆனால் சில நேரங்களில் நான் ஒன்றை நினைத்து எழுத, படிப்பவருக்கு வேறொரு கருத்தைக்கொடுத்து..... ஜில்ல்ல்ல் இல்லாமல் ஆகி...., சரி வாணாம் விட்டிடுவோம்.

    ஆனாலும் அப்ப, சோஸ் செய்யிற தக்காளி என்று தப்பா நினைச்சுப் போட்டன். இப்ப காலைல லைட்டா லைட் பத்திச்சுது. இப்ப 'பளிச்' ;D
    // அப்பா... இப்பவாவது பத்திட்டுதே......:))).

    இந்த 'பிப்ஸ்' இல் ரீ போடலாமோ? முளைக்குமோ!! நட்டுப் பார்த்துச் சொல்லுங்கோ./// நீங்கள் சொன்னபிறகுதான் நானும் யோசிக்கிறேன் இமா, இந்த ரோஜா, இங்கு காட்டுப் பகுதியிலும் தானாக வளருது. ஓரிடத்திலும் தனி மரமாக இல்லை.... பெரிதாக பரந்திருக்கு... எனவே, பருப்பிலிருந்துதான் முளைக்கிறதாக்கும்....... இங்கு ரோஜா மட்டும் சூப்பராக வரும், அதிலும் குட்டிக்குட்டி பேபி ரோஸ்..... தன்பாட்டில் திரும்புமிடமெல்லாம் பூத்துக்குலுங்குது.... ஆனால் எங்கள் வீட்டில் ரோஜா நட அனுமதி இல்லை.

    அதூஊஊஊஉ வேறொன்றுமில்லை, ஒரு ரோஜா(அது நாந்தே...ன்... ஆ அடிக்கப்பூடாது:)):) இருக்க இன்னொன்று என்னத்துக்கு என்றுதான்:))).

    விடமாட்டேன், விசாரிக்கிறேன் பெயரை.

    எனக்காக... எனக்கே எனக்காக இவ்வளவு பிரயாசை எடுத்ததுக்கு... 12345 12155
    ;) x 64646464646464646646 ////// என்ன பொருத்தம் அடடா என்ன பொருத்தம்..... நான் “நெம்பரை”ச் சொன்னேன்:). மிக்க நன்றி இமா.... உஸ் மெதுவாக் கதையுங்கோ.... எலிக்காது, கழுகுக்கண், பாம்பு மூக்கோடை ஆட்கள் திரிகினம்:)).

    ReplyDelete
  21. ஹைஷ்126 said...
    தேங்கூஊ இமா :)))x???
    /// ஹைஷ் அண்ணன்.... உது உங்களுக்கு இல்லை, நீங்கள் காக்கா போகோணும்:), இது இமாவுக்கும் எனக்குமிடையிலான இன்சைட் டீஈஈஈஈல்:))))

    ReplyDelete
  22. வாணி.... வாணீஈஈஈஈஈஈ... இந்த புரெஜெக்ட் செய்து முடித்ததிலயே, நான் பாதியாக இளைத்திட்டேன்:), இனியும் செய்யச் சொல்லப்போறீங்களோ?:)). உங்களுக்காகத்தான், அன்று கண்ட மானைப் படமெடுக்க யோசித்து நடு ரோட் என்பதால் தவறிவிட்டது, இனி எங்காவது வின்ரர் தொடங்கமுன், வெளியே வந்தால் படம்புடிக்க்க்க்க்க்கிறேன் ஓக்கை:))).

    மரத்திலிருக்கும் பூஸார்... சும்மா ரெஸ்ட் பண்றார்:)) கீழே இருக்கும் பூஸார்.... சும்மா...சும்மா தம்பியோடு கதைத்துக்கொண்டிருக்கிறார்... இருவருக்கும் பயமில்லை:)))).

    மிக்க நன்றி வாணி.

    ReplyDelete
  23. ஆ.... சந்து, மரமேறுரீங்களோ??? சும்மா ஏறாமல், நிறைய சீனி போட்டு ஒரு ஸ்மூதியும் கொண்டு வாங்கோவன்.... சரியான வெக்கையாக இருக்கூஊ:)).

    உங்கட ஆராய்ச்சியில இமா குளிர்ந்து போய்க் கிடக்காங்க அதிரா.. அதுவும் அந்த இதயத்தப் பாத்து ரொம்பவே :)) /// அது பார்த்ததால வந்த எபெக்ட் இல்லை சந்து, அது “புஸுக் பூஸ்” என்ற ஒலி கேட்டதால வந்த எபெக்ட்:).

    இமாவோட குழப்பத்த தீர்த்து வச்சதுக்கு எங்க சார்பா நன்றிஸ் :))))))))) /// கட்சி வேற ஆரம்பித்திருக்கிறீங்களோ???:), வாணிக்கும் கட்சி இருக்கு:)... ஜெய்க்கும் கட்சி, சங்கம் எல்லாம் இருக்கு:).... நடத்துங்கோ நடத்துங்கோ:))))))).

    மியாவும் நன்றி சந்து.

    ReplyDelete
  24. உந்த மரம் வழுக்கு மரமாம். அங்கை அக்கா-தம்பிக்கு மட்டும்தான் இடமாம்.
    /// வழுக்குமரம்?:), அப்ப நல்ல முசுப்பாத்தியாக இருக்கும் ஜீனோ.... வழுக்கி வழுக்கி விளையாட சந்துவையும் கூப்பிடுவம் கிக்..கிக்..கீஈ..

    கட்டிலடியில் ஒளித்து அ.கோ.மு. சாப்பிடும் அக்கா-தம்பி கூட்டணி தங்களை எச்சரிக்கிறது.உஷார்,உஷார்! /// ஆ.... எங்களுக்கும் கட்சி இருக்கெனச் சொன்ன தம்பிக்கு நன்னி, நன்னி, நன்னி,.... ஒன்னொரு அ.கோ.மு எடுத்து பெப்பரில தொட்டுச் சாப்பிடுங்கோ தம்பீஈஈஈ..

    //அடிராக்கா,நோ வொரீஸ் யா..தம்பி இஸ் தேர் பார் யுவர் ப்ரொடக்ஷன்/// மிக்க நன்றி தம்பி.... சிங்கம்போல தம்பி இருக்க... பயமெதுக்கு நேக்கு:)).

    ஆரும் அருகில் வ்ந்தால் ஒசரமான மரத்துக்கு தாவிடுவம்.ஓக்கை? :) ///தம்பீஈஈஈஈ அதெப்பூடி???? இதுக்குத்தான் ஜெய்..லானி, நான், நீங்க மூவரும் “அந்தப் பெரியவரின்:)” படம் போட்டமோ??::)).

    மிக்க நன்றி ஜீனோ.... சிரிக்க வைத்தே, ப்ரொடக்ட் பண்ணுறீங்கோஓஓஓஓஓஒ:)).

    ReplyDelete
  25. அதிஸ் பாட்டி இந்த தெரிஞ்ச பிசாசு யாருன்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்..ஏன்னா ..........க்கி..க்கி.... //// ஆ.... கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் கோயில்ல ஒரு கொடுமை நின்றதாமே:):)..... ஆரிட்டை நான் சொல்லி அழுவேன்.. இந்தப் பாட்டி கதையை:)).. இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ஜெய்... அது, டெவில் எல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு மிக மிகப் பிடித்துப் போய்விட்ட தத்துவ வசனம்... அதனால்தான் இணைத்தேன்.

    //ஜெய்லானி பதில்வில் கடன் வாங்கியது /
    /// அதானே..!! ஹி..ஹி..(( அடடா ஹார்ட்ட டச் பண்ணிட்டீங்களே..))//// எந்தக் ஹார்ட்டை சொல்றீங்க ஜெய்..லானி?:))), இஞ்ச, நிறையக் ஹார்ட் எல்லோ இருக்கு... சரி சரி முறைக்கப்பிடாது.

    மிக்க நன்றி ஜெய்..லானி.... சகோஸ் எல்லோருமே.... சிரிக்க வைப்பதில் வல்லுனர்களாக இருக்கிறீங்களே..

    ReplyDelete
  26. மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  27. ஜெய்லானி said...
    சிங்கமா யாரது புதுசா...வேர புது தம்பியோஓஓஒ//// கிக்..கிக்..கீஈ, அக்காவுக்குத் தம்பி எப்பவும் சிங்கம்தேஏஏஏஏஏஏஏன்:),

    ஜீனோ... ஜீனோஒ.. எடுங்கோ அந்தப் போட்டோவை எல்லாம், ஆருமே நம்ப மாட்டினமாமே....:)))

    ReplyDelete
  28. ஹைஷ்126 said...
    //சிங்கமா யாரது புதுசா...வேர புது தம்பியோஓஓ// ஒம் ஜெயலானி அது என் தம்பி, இது அதிராவின் தம்பி :))))
    //// ஆ... பதுங்கி இருந்து, தருணம் பார்த்து அட்டாக் பண்ணீனமே..:)). இனியும் பொறுக்கேலாது, கொஞ்சம் பொறுங்கோ... தம்பியோ சிங்கமோ என்பதை, ஜீனோ அடுத்த பதிவில போடப்போகும் படத்தைப் பார்த்துத்தான் எல்லோரும் தெரிந்துகொள்ளவேணும்:),

    ஜீனோஓஓஓஒ.... அண்டைக்கு, அக்காவைத் துரத்திய சிங்கத்தை, சிங்கிள் சிங்கமாக நிண்டு, ஒரு உதையில:), உயிரை விடப்பண்ணிய போட்டோவைக் கெதியாப் போடுங்கோ என்ன?:)).

    உஸ்... முடியல்ல... ஒரு இஞ்சி ரீ குடிச்சிட்டு வாறன்:).

    மிக்க நன்றி ஜெய்..லானி & ஹைஷ் அண்ணன்.

    ReplyDelete
  29. அதிரா உங்கள் நெயில் பாலிஸ் சூப்பர்ப்...பழங்களும் படங்களும் அருமை...எங்களுக்காக தேடி தேடி போட்டோ எடுத்து பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  30. அதீஸ்! இங்க வந்து பூவைப் பார்த்து பதில் போட்டேன்னு நினைச்சேன்...வர வர.. எங்க போறேன் வாரன்னு புரியலை பிரெண்ட்...

    ReplyDelete
  31. கீதா ஆச்சல் வாங்கோ. விடுமுறை முடிந்துவிட்டதோ?.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  32. இலா வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்:), அது தானா வந்திட்டுது வேறொன்றுமில்லை.

    //வர வர.. எங்க போறேன் வாரன்னு புரியலை பிரெண்ட்// கவனம் இலா, பார்த்து பத்திரம். கதவைத் திறக்கும்போது ஒரு தடவைக்கு இரு தடவை நன்கு உற்றுப் பார்த்திட்டுத் திறவுங்கோ.. அது வீரா அண்ணந்தானா என:)).

    மிக்க நன்றி இலா.

    இமா said...
    கிக் கிக் @ இலா. ;)/// இமா என்னாச்சு இமா என்ன ஆச்சு?:))).

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. சரி சரி இந்த காயை என்ன செய்வீங்களாம்?

    ReplyDelete
  35. அடுத்து இந்தக்காயை வைத்து சமைத்து படங்களுடன் குறிப்பு போட்டு விடுங்களேன் அதீஸ்.

    ReplyDelete
  36. பிரித்தானியாவில் ஒரு பெண்ணொருவர் எப்பொழுதும் கையில் கேமராவும் கையுமாக அலைந்து திரிந்த வண்ணமாக இருக்கின்றார் என்று பி பி சி செய்தில் பார்த்தேன்..இப்பதான் ஆரென்று பிடிபட்டுவிட்டது எனக்கு

    ReplyDelete
  37. அட,அட,அட!!! அக்கா என்னமாய் ஃஸர்ஃப் பண்ணறீங்கள்? ஜீனோக்கு பார்க்கேக்க திரில்ல்ல்ல்ல்ல்லாய் இருக்கேஏஏஏஏ!

    அதுசரி,கண்ணை எதுக்காக்கும் உப்படி "ப்ளிங்க்" பண்ணறீங்கள்???

    கிக்,..கிக்...கிக்!!

    ReplyDelete
  38. சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா? அது பெண்ணல்ல பூஸ்னு இப்பதான் டிஸ்கவரில காமிச்சாங்க. இந்த பூஸ் எப்பவும் கழுத்தில் கேமரா தொங்க விட்டுட்டே அலையுதாம். மேலே ப்ளேன் பறக்கேக்க கட்டிலுக்கு அடியில் மறைஞ்சுக்குதாம். கம்போடா ஆராச்சும் வந்த மரத்துமேல ஏறி பம்மிக்குதாம்.

    ReplyDelete
  39. ஸாதிகா அக்கா, வாங்கோ.... இது படமெடுப்பதற்காக பிடுங்கிய காய், மற்றும்படி ஒன்றுமே பண்ணமுடியாது, ஆருக்கும் இதுபற்றித் தெரியாதாமே..:((

    ///அடுத்து இந்தக்காயை வைத்து சமைத்து படங்களுடன் குறிப்பு போட்டு விடுங்களேன் அதீஸ்/// கர்ர்ர்ர்ர்ர்ர்:), நான் உப்பூடியெல்லாம் தற்கொலை பண்ணமாட்டேன்:), எவ்வளவு கஸ்டப்பட்டு வளர்த்த அருமந்த உடம்பை:), உந்தக் காய் சாப்பிட்டு..... பொசுக்கென்று போயிடச் சொல்றீங்கள்:))).

    பி பி சி செய்தில் பார்த்தேன்..இப்பதான் ஆரென்று பிடிபட்டுவிட்டது எனக்கு /// ஓம் ஸாதிகா அக்கா, அது டயானாவின் ஆவியாம்:)).... கமெராவும் கையுமாக அலைகிறாவாம்.. சால்ஸைத்தேடியோ தெரியேல்லையே... எனக்கெதுக்கு ஊர்வம்பு:)).

    மிக்க நன்றி ஸாதிகா அக்கா வரவுக்கு.

    ReplyDelete
  40. ஜீனோக்கு பார்க்கேக்க திரில்ல்ல்ல்ல்ல்லாய் இருக்கேஏஏஏஏ!/// அக்காவுக்கு உதெல்லாம் “தண்ணி” மாதிரி ஜீனோ:)), விழுந்தாலும் தலையை நன்கு தண்ணிக்குள் வைத்து அரைமணி நேரத்துக்கு மேலாக நீச்சல் பண்ணவும் பழகியிருக்கிறேனே:)), நம்புங்கோ ஜீனோ:)). வேணுமெண்டால் பயப்பூடாமல் பின்னால ஏறி கயிறை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ அக்கா அயகா பயக்கிவிடுறன் ஓக்கை:).

    அதுசரி,கண்ணை எதுக்காக்கும் உப்படி "ப்ளிங்க்" பண்ணறீங்கள்??? /// அது ஒன்றுமில்லை ஜீனோ, மீன் குஞ்சுகிஞ்சேதும் பாய்ந்திடாலும் என உற்றுப்பார்க்கிறேன்:).... கிக்:)))).

    ரசித்தமைக்கு நன்றி ஜீனோ.

    ReplyDelete
  41. வாங்கோ கவிஸ்ஸ்ஸ்
    ///சாதிகாக்கா நல்லா பார்த்தீங்களா? அது பெண்ணல்ல பூஸ்னு இப்பதான் டிஸ்கவரில காமிச்சாங்க/// கர்ர்ர்ர்ர்:))). ஜீனோ சொன்னவர் பூஸ் கமெராவில படமெடுப்பதால எல்லாம் குட்டிகுட்டியா வருதாம்.... அதுதான் இப்ப பூஸைவிடக் கமெரா பெரிசூஊஊஊஊ:), அதைத்தானே டிஸ்கவரில சொன்னார்கள்... இல்லையா கவி?:))).

    மேலே ப்ளேன் பறக்கேக்க கட்டிலுக்கு அடியில் மறைஞ்சுக்குதாம். கம்போடா ஆராச்சும் வந்த மரத்துமேல ஏறி பம்மிக்குதாம். /// கெதியாக் கொண்டுவாங்கோ அந்த சிவப்புமட்டைபோட்ட கின்னஸ் புத்தகத்தை:), கண்டுபிடிப்புக்களும் கண்டு பிடித்தவர்களும் வரிசையில இப்ப கவி:)))).

    மியாவும் நன்றி கவி. உங்கட பதிவு பார்க்க எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வருது....

    “மருதமலைக் காட்டுக்குள்ள(சரிதானே?)) யானை ஒண்ணு இருந்திச்சாம்...
    டிங் டிங் என்று மணியோசை கேட்கும்படி நடந்திச்சாம்...
    கடைவீதிப் பக்கம்போனா சுத்திச் சுத்திப் பார்க்குமாம்....
    தும்பிக்கையை நீட்டி நீட்டி துட்டுகளைக் கேட்குமாம்......”

    ReplyDelete
  42. @@@இலா--//அதீஸ்! இங்க வந்து பூவைப் பார்த்து பதில் போட்டேன்னு நினைச்சேன்...வர வர.. எங்க போறேன் வாரன்னு புரியலை பிரெண்ட்..//


    சமீபத்துல கஜினி படம் எதுவும் பாத்தீங்கலா ..ஹி..ஹி..

    ReplyDelete
  43. Bலின்க்
    ப்link
    ச்மிட்ஸ் ;))

    ReplyDelete
  44. ஜெய்..லானி....,
    இலா... கஜினியின் எதிர் வீடாம் அதுதேன் அப்பூடி:))).

    இமா..இமா... ஸ்ரொப்... ஸ்ரொப்.... இல்லையில்லை ஸ்டொப்:).... எப்போ எல்கேயில ஜொயின் பண்ணினனீங்கள்??.

    கடவுளே.... இந்த பேபி பாஷையை எனக்குப் புரிய வைக்கப் பட்டபாஆஆஆடு...

    பூஸாரின் கண்கள் எப்பவுமே... ப்ப்ப்ப்ப்ப்ப்லிங் தான்ன்ன்ன்ன்:)).

    ReplyDelete
  45. வழக்கம்போல அழகான படங்கள். இந்தப் பூக்கள் இங்கும் இருக்கு,ஆனா இப்படி பழம் பழுத்த மாதிரி தெரியலை. நல்லா அப்ஸர்வ் பண்ணிருக்கீங்க அதிரா!

    பின்னூட்டமெல்லாம் படித்து சிரிக்கவே அரைமணி நேரமாகுது.நல்லா காமெடி பண்ணறீங்க எல்லாரும்!:)

    ReplyDelete
  46. ஐ.... இப்பவும் நானேதான் ஐம்பதாவதூஊஊஊஉ, கடலைவடையும் ஷனா டால் சட்னியும் எனக்கே எனக்குத்தான்.... ஒருவருக்குமில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
  47. மகி , இதேபோல இன்னொரு ரோஜாவும் இருக்கு, ஆனால் அதில் காய் வராது, இலையும் கிட்டத்தட்ட இதுபோலவேதான். நான் அதையும் இதுதான் என நினைத்துப் படமெடுத்திட்டேன் பின்பு பார்த்தேன் “அவர் இவரல்ல”:).

    மிக்க நன்றி மகி.
    .....................................

    இமா said...
    அப்பிடியா? ஓகே. ;))
    //// ஐ...ஐ....ஐ.... இமா எல்கேஜி ல பாஷாகிட்டாஆஆஆஆஆஅ.... ஆரங்கே.. எடுங்கோ அந்த ஆராத்தித் தட்டை:)))... உஸ் அப்பா முடியல்ல:)).

    ReplyDelete
  48. அப்படியே தோட்டத்த சுற்றி பார்த்த்து போல் ரொம்ப நல்ல் இருக்கு, எங்கு எங்கு பூஸார் கண்ணில் படுகிறாரோ அப்போதேல்லாம் அதீஸின் நினைப்பு தான் எனக்கு , அடிக்கடி புரை யோருதோ..

    ReplyDelete
  49. ஜலீலாக்கா, நோன்பு எப்படிப் போகிறது? நோன்பு ஆரம்பித்ததும் எல்லோரும் ரயேட் ஆகிவிட்டதுபோல தெரியுது.

    ஆ.... இப்பத்தானே தெரியுது, என்னைச் சாப்பிட, தண்ணிகுடிக்க விடாமல் புரையேற்றிக்கொண்டிருப்பது நீங்கதானோ?:))).

    நன்றி ஜலீலாக்கா. ஒன்று ஒன்றாகப் படிக்கிறீங்கள்போல இருக்கு.

    ReplyDelete
  50. தெரியாத தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி யூஜின்.. மிக்க நன்றி.

      Delete
  51. வந்தேன். ரோசாப்பழம் கண்டு களித்தேன்.

    ஜோராக்கீதூஊஊஊஊஊ.

    சந்தோஷம்.

    ReplyDelete
  52. எனக்கும் இது விஷத்தக்காளி போலத்தான் தெரிந்தது. விதவிதமாய் மலர்கள். ஒருமலரைப்பார்த்தால் நித்யகல்யாணியின் உடன்பிறப்பு போல இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம்.. ஓ விஷத்தக்காளி எனவும் ஒன்றிருக்குதோ? உண்மைதான் இவற்றில் அடுக்கு இதழ்கள் காணவில்லை. மிக்க நன்றி.

      Delete
  53. Replies
    1. வாங்கோ அஞ்சு.. ஓ இது சயண்டிபிக் நேம் ஓ? தமிழ்ப்பெயரும் இருக்கும் என நினைக்கிறேன்

      Delete
  54. செய்வாங்க அதில் ஆயில் செய்வாங்க அந்த றோஸ் ஹிப் வைச்சி அங்கே ஒரு பின்னூட்டம் தந்தேன் .
    ஆமா 2011 இல் ஆகஸ்டில் இருந்துதான் உங்களை அஞ்சு தேவதை பிடிச்சிச்சு :)

    ReplyDelete
    Replies
    1. //ஆமா 2011 இல் ஆகஸ்டில் இருந்துதான் உங்களை அஞ்சு தேவதை பிடிச்சிச்சு :)//

      அவ்ளோ லேட்டாவா? ஹா ஹா ஹா ஓகே மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.