மியாவ் படம் பார்த்து ஆரும் சிரிச்சால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))) |
ஒரு அரச சபையிலே, ஒரு மந்திரி இருந்தாராம். அவர் மிகவும் புத்திசாலியாம். அங்கு எப்படிக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லியே அனைவரையும் மடக்கிடுவாராம். அதனால அரசருக்கு கொஞ்சம் இந்த மந்திரியில் பொறாமையாம்.
அரச சபையில் அவர் இருப்பது, அரசருக்கு நல்லதுதானாம், இருப்பினும் பொறாமை காரணமாக, இந்த மந்திரியை எப்படியும் கலைத்திட வேண்டும் என அரசர் முடிவெடுத்தாராம். அவர் மிகவும் புத்திசாலி என்பதால், அவரை கலைப்பது சுலபமில்லை. எனவே ஏதும் முடியாத வேலையாக சொல்ல வேண்டும் என எண்ணி....
அந்த மந்திரியை அழைத்துச் சொன்னாராம், “எனக்கு அணிந்துகொள்ள ஒரு மோதிரம் வேண்டும், அந்த மோதிரத்தை, நான் துக்கமாக இருக்கும்போது பார்த்தால், எனக்கு சந்தோசம் கிடைக்க வேண்டும், அதேபோல சந்தோசமான நேரம் பார்த்தால், உடனே மனம் துக்கமாகிட வேண்டும்”, என்று.
அதுவும் ஆறு மாதங்களுக்குள் கண்டுபிடித்து தர வேண்டும், இல்லையெனில் அரச சபையை விட்டு ஓடிப்போயிட வேண்டும் எனவும், அரசர் கட்டளையிட்டாராம்.
இதைக் கேட்டு, மோதிரத்தைத் தேடி மந்திரி புறப்பட்டாராம். ஒவ்வொரு இடமாக, ஊராகத் தேடுறாராம் எங்கேயும் அப்படி மோதிரம் கிடைக்கவில்லையாம்.
ஆறுமாதங்கள் முடியும் நாள் நெருங்கி விட்டதாம், மந்திரி, இனிச் சரிவராது என நினைத்த வேளை, ஒரு ரோட்டோரத் தட்டிக் கடையில், மோதிரங்கள் இருப்பதைக் கண்டு, அங்குபோய், இந்த நிபந்தனையைச் சொல்லிக் கேட்டாராம், உடனே கடைக்காரர் என்னிடம் இருக்கிறதே அப்படி மோதிரம், எனச் சொல்லி, எழுத்துக்கள் போட்ட மோதிரம் ஒன்றைக் கொடுத்தாராம்.
மந்திரிக்கு அதைப் பார்த்ததுமே கவலை மறைந்து மகிழ்ச்சி வந்துவிட்டதாம். அதை எடுத்துக்கொண்டு அரச சபைக்குப் போய்ச் சேர்ந்தாராம்.
இவரின் வரவைக் கண்டதும் அரசருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம், ஏனெனில், மோதிரம் எங்கே கிடைத்திருக்கப் போகிறது, முடியவில்லை எனச் சொல்லிவிட்டு போயிடப் போகிறார் என சந்தோஷப் பட்டுக்கொண்டிருக்கும்போது, மந்திரி மோதிரத்தைக் கொண்டு வந்து “இந்தாருங்கள் அரசே, கண்டு பிடித்துவிட்டேன்” எனக் கொடுத்தாராம்.
அந்த மோதிரத்தைப் பார்த்ததுமே, அரசருக்கு சந்தோசம் மறைந்து, துக்கம் வந்துவிட்டதாம், காரணம் மந்திரி கண்டு பிடித்துவிட்டாரே என.
அந்த மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தது.. “இதுவும் கடந்து போகும்” எனும் மூன்று வார்த்தைகள்தானாம்.
இதேபோல்தான் மனித வாழ்வில் இன்பமோ துன்பமோ எதுவுமே நிலையில்லாதது, இன்று மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகம் துள்ளப்படாது, இதுவும் கடந்து போகும் என எண்ண வேண்டும். அ-து.. அடடடடக்கி வாசிக்க வேண்டும்:)))))...
அதேபோல, அதிக துன்பத்தில் இருக்கும்போதும், மனதில் எண்ண வேண்டும் “இதுவும் கடந்து போகும்”.
இன்றிருப்பது போலவேதான், நாளையும் இருக்குமென்றில்லை... “இதுவும் கடந்து போகும்”
பின் இணைப்பு:
தொப்பி போட்டு, மவ்ளர் கட்டி....
கிளவுசும் போட்டாச்சூஊஊஉ:))..
குளிர் ஆரம்பமாகிவிட்டது.... “இதுவும் கடந்து போகும்”.
ஊசிக்குறிப்பு:
தொப்பி, மவ்ளர் கலர் பார்த்து ஆரும் சட்லைட்மூலம் என்னத்தேடிடாதீங்க:), ஏனெனில் எனக்கு பொழுதுபோக்கே, மவ்ளர், தொப்பி, மணிக்கூடுகள் வாங்கிச் சேர்ப்பது, அதனால அடிக்கடி கலர் மாறிக்கொண்டிருக்கும்:)))).
===================================================
என்ன, என் பதிவு பார்த்துக் கோபம் வருதோ?:)))..
===================================================
|
Tweet |
|
|||
Me the first!
ReplyDeleteIruntha..laptop - ku varen. No Tamil here!
ReplyDeleteBTW ..... Toppi :) paathaa nadigar karthick gnabagam varuthu! Hihihi!
ஆ... வாங்க மகி...
ReplyDeleteமுதலில் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பயந்திடாதீங்க உங்களுக்கில்ல, லபு டொப்புக்கு:))).
ஆ.... முத்துராமன் மாமாவின் மகன் கார்த்திக்கைத்தானே சொல்றீங்க:))) எனக்கு மிக மிகப் பிடித்த நடிகராச்சே அவ்வ்வ்வ்வ்வ்:)))).
மியாவும் நன்றி மகி.
இந்தாங்கோ அதிரசம் எடுத்துக்கோங்க.. இது அஞ்சுட:))).
தயிர் சாதம் & அ.கோ.மு. சாப்பிட்டுட்டு இருக்கேன்.சாப்பிடவரீங்களா?!;)
ReplyDeleteஅதிரசத்துக்கு டாங்க்ஸ்! இருங்கோ மிகுதியையும் படிச்சுட்டூ வரேன்!;)
என்னாது தயிர்ச் சாதத்துக்கு முட்டையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))). நான் மத்தியானம் அவிச்ச கோழி முட்டை சாப்பிட்டனே:))
ReplyDelete'இதுவும் கடந்து போகும்' உண்மை அதிரா!எங்கக்காவும் உங்களை மாதிரியேதான் சொல்லுவா. அப்படியே அக்கா பேசினதை கேட்டமாதிரியே இருக்கு! :)
ReplyDeleteமியாவ் மீசை எல்லாம் வச்சிருக்கு?? ;)
/தயிர்ச் சாதத்துக்கு முட்டையா / ஆமாம்,புது காம்பினேஷனா இருக்கில்ல?? ;) நல்லா இருக்கு,தைரியமாச் சாப்புடலாம்!ஹிஹி! போட்டோ எடுத்து வைச்சிருக்கேன்,விரைவில் வெள்ளித்திரையில் (ப்ளொகில்;)) எதிர்பாருங்கள்! :))))))))
ReplyDeleteகதை சூப்பர்..ஏற்கனவே கேட்டிருந்தாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத கதை.
பட் யுவர் ஹானர்,
////இவரின் வரவைக் கண்டதும் அரசருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லையாம், ஏனெனில், மோதிரம் எங்கே கிடைத்திருக்கப் போகிறது, முடியவில்லை எனச் சொல்லிவிட்டு போயிடப் போகிறார் என சந்தோஷப் பட்டுக்கொண்டிருக்கும்போது,/// இதிலே plot கொஞ்சம் இடிக்குதல்லோ?? மந்திரி போயிடுவார் என்று எதிர்பார்த்த ராஜா ஏமாற்றமல்லோ அடையணும்?!;)
ஆங்..சொல்ல மறந்துட்டேனே! மகி கிச்சன்ல உங்க கமென்ட் பாத்துட்டுதான் அ.கோ.மு. அவிச்சேன்.லன்ச்சுக்கு தயிர்சாதம் காலைலயே செய்தாச்சு,சோ ஆல் க்ரெடிட் கோஸ் டு அதிரா! ஹாஹா!
ReplyDeleteமியாவ் மியாவ் பூனா....
ReplyDeleteமீசை இல்லாப் பூனா....
பாட்டு மனதில ஓடுது மகி:)).
இது பூஸ் ரேடியோவில் ஒரு பிரசங்கத்தில் சொன்னார்கள், காதால் கேட்டதை கையால் எழுதிட்டேன்... இதுவும் கடந்து போகும்... சொல்லச் சொல்ல நல்லா இருக்கில்ல?:)).
மியாவும் நன்றி மகி... தூக்கம் தழுவுது கண்களை... ரைப்பண்ணித் தோள் உளையுது:))
// இதிலே plot கொஞ்சம் இடிக்குதல்லோ?? மந்திரி போயிடுவார் என்று எதிர்பார்த்த ராஜா ஏமாற்றமல்லோ அடையணும்?!;)
ReplyDelete9 November 2011 22:32 //
அதேதான் மகி. சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்த அரசருக்கு, மோதிரம் கைக்கு வந்ததைப் பார்த்ததும் ஏமாற்றத்தில் கவலையாகிவிட்டது.. அப்போ சரிதானே:)))....
ஓ... பினூட்டம் பார்த்து அ.கோ.மு ஆஆஆஆஆஆஆஅ?:)))). ஒரேயடியாக நிறையச் சாப்பிட அசைதான், கூடாதென்பதால ஒன்றுக்குமேல சாப்பிட மாட்டேன்:))).
நாங்க தயிரோடு அசைவம் சேர்த்து உண்ண மாட்டோம் மகி.
meeeeeeeeeeeee the firstuuuuuuuuuu
ReplyDeleteபூசார் படம் மிகவும் அருமை
ReplyDeleteஅட எதுவும் கடந்து போகும் போல இருக்கே
என்ன கொடும சிவா எது கோழி மொடையாம்
ReplyDeleteதயிர் சாதமாம் அவ்வ
என்கிட்டே கேட்டு இருந்த
தயிர் சதாம் (சாதம் )எப்படி என்ன கம்பினதியன் நல்லா இருக்கும் எண்டு சொல்லி இருப்பேன்.
தயிர் சாதம் = மாங்கா ஊறுகாய் + மிளாகாய் வறுத்தது
எது கோழி மொடையாம் //
ReplyDeleteதவறு வருந்துகிறோம் :((
இது.!! கோழி முட்டையாம்
கையுறை எல்லாம் போட்டுக்கிட்டு
ReplyDeleteஎங்கோ போறது போல இருக்கே ..
தொப்பி போட்டு கிட்டு இருக்கிற அக்கா யாரு ?
அதேபோல, அதிக துன்பத்தில் இருக்கும்போதும், மனதில் எண்ண வேண்டும் “இதுவும் கடந்து போகும்”.//
ReplyDeleteஆமாம்.its true
எனது பதிவை படித்து பாக்கும் போதும்
நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய கருத்து ஆகும்
Awesome post.interesting read.Luv it Athira
ReplyDeleteபடத்தில் உள்ள tamil elutthu (ithuvum kadanthu pogum)
ReplyDeleteகுண்டு குண்டா அழகா இருக்கே
.ம் போதும் am கோயன் அப்பரம் கம்மிங் :)
20...
ReplyDeleteஹையா....பூஸ் வெளியில் வந்தாச்சூஊஊஊ
ReplyDeleteநல்ல தத்துவத்தை மினிக்கதையாக சொல்லிட்டீங்க பூஸம்மா
ReplyDeleteகஷ்டம் தோன்றும் பொழுது “இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தை மனதுக்கு தெம்பை தருவதென்னமோ உண்மைதான்.அதேநேரம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது இந்த வார்த்தை ஞாபகம் வர மாட்டேன்கிறது பூஸ்.இப்ப பூஸ் சொல்லியாச்சு இல்லே.இனி கடைபிடிக்க வேண்டியதுதான்.
ReplyDeleteவாழ்வியலை மிக எளிமையா சொல்லி போட்டுட்டீங்க பூஸ்.
ReplyDeleteஅதென்ன அங்கே வந்து காணவில்லை காணவில்லை என்று கூப்பாடு போட்டுட்டு போய் இருக்கீங்க.நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டீர்களா?நேற்று அக்கா ஒன்பது மணிக்கே நித்திரைக்கு போய்ட்டினம்.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்........
ReplyDelete////அந்த மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தது.. “இதுவும் கடந்து போகும்” எனும் மூன்று வார்த்தைகள்தானாம்.
ReplyDelete/////
அட அமைச்சர் அறிவாளிதான்.........அமைச்சரைவிட அந்த மோதிரக்கடைக்காரன் புத்திசாலி......
வணக்கம் தோழி
ReplyDeleteஇதுவும் கடந்து போகும் என்ற மனநிலை பல்வேறு மனநிலையும் சமநிலைப் படுத்தும் .
அருமையான கருத்து .பகிர்வுக்கு நன்றி
இதுவும் கடந்து போகும் - நல்ல பகிர்வு.
ReplyDeleteநானும் இன்று தான் நினைத்தேன்,வெளியில் ஏசி போட்டாச்சு,வீட்டில் ஏசியை ஆஃப் செய்ய வேண்டும் என்று.
ஆஆஆஆஆ இம்முறையும் சிவாதான் 1ஸ்ட்டாஆஆஆஆஆஅ?:)) நம்பவே முடியேல்லை, தொடர்ந்து முதலாமிடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் சிவாவுக்கு வாஆஆஆஆஆஆஅழ்த்துக்கள்... :))) ........... இதைப் படிச்சதும் கிழிச்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்..
ReplyDelete--------------------------------------
வாங்க சிவா வாங்க...
ஓம் சிவா, இதுவும், எதுவும், பஸ்,ரெயின், பூஸ், பப்பி எல்லாமே கடந்து போகும்... முருங்கைமரமும், புளியமரமும் மட்டும்தான் அங்கினயே நிற்கும்.... இது எப்பூடி?:))))
//எது கோழி மொடையாம் //
ReplyDeleteதவறு வருந்துகிறோம் :((
இது.!! கோழி முட்டையாம்//
ஹா..ஹா...ஹா... என் பக்கத்தில் உடனே பிழை திருத்தம் ஆகவில்லையாயின், அது சபைக்கு வந்துவிடும் கிக்...கிக்..கீஈஈஈஈஈ:)).
//தயிர் சாதம் = மாங்கா ஊறுகாய் + மிளாகாய் வறுத்தது///
இதுவும் சூப்பரு, எனக்கும் இது பிடிக்கும்ம்ம்ம்ம்.. ஆனா இது ஓல்ட் பாஷன்:))), மஞ்சள் பூவினுடையது நியூ மொடலாக இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்:)))
//தொப்பி போட்டு கிட்டு இருக்கிற அக்கா யாரு ///
அது பக்கத்து வீட்டுப் பரிமளமக்கா.. ஹா..ஹா..ஹா..
//ஆமாம்.its true
ReplyDeleteஎனது பதிவை படித்து பாக்கும் போதும்
நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய கருத்து ஆகும்//
ஹா..ஹா..ஹா... நோ..நோ... எல்லாத்துக்கும் சொல்வோம் ஆனா சிவா பக்கத்தில மட்டும் கண்மூடிக்கொண்டு, இதுவும் கடந்துபோகும் சொல்லிட மாட்டோம்.... குடைந்து குடைந்து கேள்வி கேட்டு, கடக்க விடாமல் அங்கயே நிற்போம்ம்ம்ம்:)))...
மியாவும் நன்றி சிவா.
வாங்க கிரிஸ்டின் மிக்க நன்றி.
ReplyDeleteரொம்ப அமைதியாக ஒரு வரியில பதில் போட்டுவிட்டுப் போயிட்டீங்க:).
//siva said... 18
ReplyDeleteபடத்தில் உள்ள tamil elutthu (ithuvum kadanthu pogum)
குண்டு குண்டா அழகா இருக்கே
.ம் போதும் am கோயன் அப்பரம் கம்மிங் ://
சிவாவைப்போலவா?:)).
அப்புறம் என்றால் எப்புரம் வருவீங்க அவ்வ்வ்வ்வ்வ்:))) சொன்னபடி வராவிட்டால், பொரி விளாங்காய் ரெடி பண்ணுறா அஞ்சு:))).. கரெக்ட்டா அடிப்போம்:)))).
வாங்க ஸாதிகா அக்கா...
ReplyDelete//ஸாதிகா said... 20
ஹையா....பூஸ் வெளியில் வந்தாச்சூஊஊ///
ஹா..ஹா..ஹா... நான் எப்போ உள்ளுக்குள் போனேன்.:)))
//அதேநேரம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது இந்த வார்த்தை ஞாபகம் வர மாட்டேன்கிறது //
இது உண்மையேதான், ஏனெனில் நம்மனம் விரும்புவது மகிழ்ச்சியைத்தானே? அது எப்பவும் நீடிக்க வேணும் என்றுதான் நினைப்போம், கடக்க விரும்ப மாட்டோமே அவ்வ்வ்வ்வ்வ்:))))..
//அதென்ன அங்கே வந்து காணவில்லை காணவில்லை என்று கூப்பாடு போட்டுட்டு போய் இருக்கீங்க.நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டீர்களா?நேற்று அக்கா ஒன்பது மணிக்கே நித்திரைக்கு போய்ட்டினம்.///
ReplyDeleteஹா..ஹா..ஹா... பின்ன, பின்னூட்டத்துக்கு பதிலையும் காணவில்லை, ஆளையும் காணவில்லை, சென்னை ரபிக்கில... தைரியமா குரொஸ் பண்ற ஸாதிகா அக்காவாச்சே:))) அதுதான் பதறிப் போயிட்டேன்:))))... கிக்..கிக்....கீஈஈஈஈஈஈஈ
மியாவும் நன்றி ஸாதிகா அக்கா... மகியைப் பாருங்கோ அ.கோ.முட்டை சாப்பிடுறாவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
வாங்கோ ராஜ் வாங்கோ....
ReplyDeleteஉண்மைதான்... அந்தப்புத்திசாலியால இப்போ நாங்களும் புத்திசாலியாகிறோம்:))).
மிக்க நன்றி ராஜ்.
வாங்க ரமேஸ்... இம்முறை ரொம்ப அமைதியாக வந்து பதில் போட்டிட்டுப்போவதுபோல இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
ReplyDeleteமியாவும் நன்றி.
வாங்க ஆசியா வாங்க...
ReplyDelete///வெளியில் ஏசி போட்டாச்சு,வீட்டில் ஏசியை ஆஃப் செய்ய வேண்டும் என்று.///
உங்களிடத்திலும் வெளியே குளிர் வருமோ? நான் நினைத்தேன் அங்கு எப்பவும் வெப்பம்தானென.
மிக்க நன்றி ஆசியா. சொல்ல மறந்திட்டேன், சமீபத்தில் இங்கும் ஒரு ஆசியாவைக் கண்டேன்(பாகிஸ்தான் நாட்டவர்) அவவை இங்குள்ள வெள்ளையர்கள் “ஏசியா” என்றுதான் கூப்பிடுகிறார்கள்...:)) நீங்க புலம்பியது நினைவுக்கு வந்துது:))).
பூஸாரெே எப்படி இருக்கீங்க
ReplyDeleteஆஆ அதிரா கொஞ்சம் முந்தி வந்திட்டேன்.
ReplyDeleteதங்கப்பதக்கம் படப்பாடல். இந்தப்பாட்டு நினைக்காத ஆட்களில்லை.துன்பமான,கவலையான சிட்டிவேஷனில் இதன் முதல் வரி ஞாபகம் வந்துவிடும்.நான் இந்தப்படத்தை 3 தடவை பார்த்தேன். சிவாஜி ஓவர் ஆக்டிங் என்று(சில படத்தில்)சொல்வார்கள்.என்றாலும் "நடிப்பிற்கு சிவாஜி,பாடலிற்கு கவியரசு.
("நல்லதொரு குடும்பம்(உங்க),சுமைதாங்கி சாய்ந்தால்,தத்தி செல்லும் பாடல்களும் நல்ல பாடல்கள்.)
தயிர் சாத்த்துக்கு முட்டை நல்ல காம்பினேஷன்ன், உப்பு மிளகாய் தூள் போட்டு பொரித்து இருக்கனும்
ReplyDeleteகைக்கு இவ்வளவு அடர்த்தியா போடும் அள்வு குளிரா?
ReplyDeleteஇங்க்ம் இப்ப தான் ஆரம்பம்
காலையில் எழ்ந்ததும் கால் நடனாம்டு், வாய் டைப் அடிக்கும்.
பூஸார் என்ன அழகாக உறங்குகிறார்
ReplyDelete:)
ReplyDeleteதத்துவவித்தகியே(வேறு யார்.நீங்கதான்) நல்லதொரு வாழ்க்கை தத்துவம் சொல்லியிருக்கிறீங்க. இல்லை பூஸ் ரேடியோ(வில்)சொல்லியிருக்கு.சூப்பர்.
ReplyDelete//இதுவும் கடந்து போகும்... சொல்லச் சொல்ல நல்லா இருக்கில்ல?:)).//
நல்லா இருக்கு.
இது ட்ரான்ஸ்லேட் செய்து என்னுடன் பணிபுரியும் நண்பிக்கு சொல்லவேண்டும்.அவாவுக்கு மிகப்பொருந்தும்.
ஸ்னோவை நினைத்தால்.....ஆனால் 4மாதம்தானே "இதுவும் கடந்து போயிடும்."வாசித்தபின் வந்ததுதான்.
ReplyDeleteமப்ளர்,ஷால் என்னிடம் நிறைய கலெக்ஷன் இருக்கு அனுப்பிவிடவா. இங்கே என் பக்கத்துவீட்டு பாட்டிக்கு பொழுதுபோக்கே மப்ளர்,ஷால்,சொக்ஸ்,கிளவுஸ் என்று தன் கையால் பின்னி எல்லாருக்கும் கொடுப்பது.
ReplyDeleteபிங்க் நிறத்திலா க்யூடெக்ஸ் அடித்திருக்கிறீங்க அதிரா.
//என்ன, என் பதிவு பார்த்துக் கோபம் வருதோ?:)))..//இதுவும் கடந்து போகும்.
ReplyDeleteமியாவ் படம் பார்த்து ஆரும் சிரிச்சால்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))///
ReplyDeleteரசிச்சால்..
நல்ல காலம் ரெட் லைன் போடமுதல் வந்தாச்சு.
ReplyDeleteம்ம் இதுவு...வேண்டாம்.எஸ்ஸ்கேப்.
வணக்கம் சகோதரி..
ReplyDeleteநல்லாதான் கலந்து கட்டி விடுறீங்க..!! தங்கச்சி எனக்கொரு சந்தேகம் இந்த அரசர்களே இப்படித்தானா..?
"இதுவும் கடந்து போகும்".. அந்த காலத்தில கஷ்டத்தில இருக்கிறவங்களுக்கு ஆறுதல் சொல்ல பயன்படுத்திய வார்த்தைய இப்ப சில சோம்பேறிங்க பயன்படுத்துகிறாங்க உழைக்காம மற்றவர்களின் கைய எதிர்பார்த்து.. ஹி ஹி "இதுவும் கடந்து போகும்" நல்லதோர் குட்டிக்கதை..
ReplyDeleteஆஹா நேத்து ஒரு பதிவாஆஆஆஆ.. பாக்கலையே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇன்றைக்கும் சூர்யா வீட்டின் முகப்பில் இந்த எழுத்து தான் மின்னுதாம்.... இதுவும் கடந்து போகும்...
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்.... என்பது சாதாரண வார்த்தையே அல்ல... இதை உணர்ந்தால் வாழ்வில் எப்பொழுதும் சமநிலையிலேயே இருக்கலாம்...
ReplyDeleteகிட்ட தட்ட என் கையெழுத்து போலவே இருக்கூஊஊஊஊஊ
ReplyDeleteபடத்துல வர்ற வில்லனுங்க மாதிரி போஸூஊஊஊ.... அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் எதுவும் சொல்லல... ஆராவது இந்த கமேண்ட அழிச்சிருங்கோ
ReplyDeleteமந்திரிக்கு கிளைமாக்ஸில் கடவுள் உதவியிருக்கிறார்.... ;-))))
ReplyDeleteஇந்த மஃப்ளர் ஸ்டில்ஸ பாக்கும்போது.. ஜேம்ஸ்பாண்ட் படம் தான் ஞாபகத்துக்கு வருதூஊ.. டடாண்டடேன்...டுமீல்....
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்.. கடந்து போயிட்டு பிறகு வாறேன்....
ReplyDeleteஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
ReplyDeleteநான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல
காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
ReplyDeleteஅந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
ReplyDeleteஅதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
சோதனை மேல் சோதனை .... எஸ்கேப்... ;-))))
ReplyDeleteammulu said... 40
ReplyDeleteஆஆ அதிரா கொஞ்சம் முந்தி வந்திட்டேன்.
தங்கப்பதக்கம் படப்பாடல். இந்தப்பாட்டு நினைக்காத ஆட்களில்லை.துன்பமான,கவலையான சிட்டிவேஷனில் இதன் முதல் வரி ஞாபகம் வந்துவிடும்.நான் இந்தப்படத்தை 3 தடவை பார்த்தேன். சிவாஜி ஓவர் ஆக்டிங் என்று(சில படத்தில்)சொல்வார்கள்.என்றாலும் "நடிப்பிற்கு சிவாஜி,//
இந்த கருத்தை படித்தவுடன்... சிவாஜியின் பேட்டி ஞாபகத்துக்கு வருது... நீங்கள் ஓவர் ஆக்டிங் செய்வதாக பேச்சுவருதே என ஒரு பேட்டியில் கேட்க.... அதற்கு சிவாஜி.... என்னிடம் சிலர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள்.. அவர்களிடமே பேணா வாங்கி கையெழுத்து போடுகிறேன்.. ஒருவர் ரெனால்டு தருகிறார்... இன்னொருவர் ஸ்கெட்ஜ் தருகிறார்... கையெழுத்து என்னுடையது தான்.. ஆனால் பேனாவோ, ஸ்கெட்ச்சோ தருபவர்களை பொருத்து கையெழுத்து வடிவம் மாறும்....என்று சொன்னார்...
தொப்பி, மவ்ளர் கலர் பார்த்து ஆரும் சட்லைட்மூலம் என்னத்தேடிடாதீங்க:),//
ReplyDeleteஆமா அப்புறம் சாடிலைட்ல நான் தெரிவேன் // ஏன் என்றால் என் விண்டர் கோட்டும் தொப்பியும் அதே கலர் .ப்ளீஸ் யாராவது அதிராவை நல்லா கிள்ளுங்களேன்
see in a while crocodile
ReplyDeletesee you in a minute Rabbit
ReplyDeletesee you later alligator
ReplyDeletesee you in a while snail
ReplyDelete.:))).:))).:)))
ReplyDeleteவாங்க ஜலீலாக்கா...
ReplyDeleteஇருந்த மாதிரியே இருக்கிறன் ஜல் அக்கா...:)).. அடடா தயிர் சாதத்துக்கு முட்டைப் பொரியலா அவ்வ்வ்வ்வ்:))).... எங்க போனாலும் என் முட்டையிலதான் எல்லோருக்கும் கண்:)))).
//கைக்கு இவ்வளவு அடர்த்தியா போடும் அள்வு குளிரா?
//
முறையான குளிர் தொடங்கிட்டால்... கிளவுஸ் நல்லதில்லையெனில் கை விறைத்துவிடும். ஆனா இங்கு நிலைமையைச் சொல்ல முடியவில்லை... 4,5 நாட்களாக பேய்க்குளிர், 3 நாளாக சூரியன் இல்லை லைட் போட்டுத்தான் வாகனம் எல்லாம் போனது, அப்போ இப்படியான உடை தேவைப்பட்டுது, இன்று திடீரென நல்ல வெய்யில், 2 கிழமையாக ஓனிலேயே இருந்த ஹீட்டரையும் ஓவ் பண்ணிட்டோம்... இப்படி இருக்கு நிலைமை.
//பூஸார் என்ன அழகாக உறங்குகிறார்//
ஆமா இல்ல?:)) அவர் உறங்கும்போதும் அழகுதான்போல:))).
மியாவும் நன்றி ஜல் அக்கா.
வாங்கோ அம்முலு வாங்கோ... கொஞ்சம் முந்தித்தான் வந்திட்டீங்கள், ஆனாலும் அதிரசத்துக்குப் பிந்திட்டீங்கள்:))))..
ReplyDeleteஎனக்கு சிவாஜியின் படப்பாட்டுக்கள் படங்கள் அனைத்துமே பிடிக்கும். ஒரு ஞாபகம் வருது... எங்கட அப்பா இளமையாக இருந்தபோது அவரை “சிவாஜி” என்றுதான் ஒபீஷில் அழைப்பார்களாம்:))).
ஓவர் என எதைச் சொல்றீங்களெனத் தெரியவில்லை, எப்படி ஓவராயினும் அவரின் நடிப்பு ரசிக்கக்கூடியது, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களாக இருக்கும்.
என்னைப்பொறுத்து ஓவர் என்றால் அது கமல்தான்:), அவர்தான் ஓவராக இருப்பார், குடும்பத்தோடு, பெற்றோரோடு சேர்த்து பார்க்க சிலசமயம் சங்கடமாக இருக்கும், அதனால்தான் எனக்கு அவரைப் பெரிதாகப் பிடிப்பதில்லை.....
அதே ஸ்டைலில் இப்போ தனுஷ் இருப்பதுபோல ஒரு பீலிங்சூஊஊஊஊஉ எனக்கு... அதனால் அவரையும் பெரிதாகப் பிடிக்காது.... இது என் மனக்கருத்து, நான் குறையேதும் கூறவில்லை ஆரும் சண்டைக்கு வந்திடாதையுங்கோ.... கட்டிலுக்குக் கீழ ஒளிக்க முடியாமல் இருக்கு, ஏணெண்டால் கை நோகுதெனக்கு அவ்வ்வ்வ்வ்:)))).
எனக்கு ஆரம்ப காலத்தில் ஹைஷ் அண்ணன் சொன்னார்: எந்த நிலைமையிலும்(இன்பத்திலும், துன்பத்திலும்)இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்... “இதுவும் கடந்து போகும்” இது நல்லது என. ஆனா அந்த நேரம் எனக்கு அதன் பவர் புரியவில்லை, அதனால பேசாமல் இருந்தேன்.... ஆனா இப்போ பூஸ் ரேடியோ பிரசங்கத்தில் விளக்கமாக கதையாகக் கேட்டபோதுதான் நன்கு பதிந்து, பிடித்துப் போயிட்டுது:)).
ReplyDelete1. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
2. இதுவும் கடந்து போகும்....
இவை இரண்டையும் மனதில் நிறுத்தினாலே... கோபம், பிரச்சனை, சண்டை , கவலை, இப்படியானவற்றிலிருந்து கொஞ்சம் விலகி வாழலாம் எனப் படுதெனக்கு:))).
//இது ட்ரான்ஸ்லேட் செய்து என்னுடன் பணிபுரியும் நண்பிக்கு சொல்லவேண்டும்.அவாவுக்கு மிகப்பொருந்தும்.///
ஜேர்மன் பாஷையில்தானே? நானே மொழிபெயர்த்துத் தாறேனே இப்படியே போய்ச் சொல்லிடுங்கோ....ங்கோ....ங்கோ..:))).
“மிஸ்ருறியே ஹிஸ்வா ருஸ்மானி”... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))).
எங்கட அம்மாவும் நல்லாப் பின்னுவா, முன்பு சுவெட்டரிலிருந்து அனைத்தும் பின்னியிருக்கிறா, இப்போ மறந்துபோனா, இம்முறை வந்து நின்றபோது, மவ்ளர் பின்னித்தந்தா எல்லோருக்கும், ஒருநாளைக்குப் படமெடுத்துப் போட வேண்டும்.
ReplyDeleteஎனக்கு சிலவற்றில் பைத்தியம், வாங்கி வாங்கிச் சேர்ப்பேன்...
1. வோஜ்ஷஸ்
2. காண்ட் பாக்
3. மவ்ளர், தொப்பி...
4. பாதணிகள்.
//பிங்க் நிறத்திலா க்யூடெக்ஸ் அடித்திருக்கிறீங்க அதிரா.//
பிங்தான் எப்பவும் பாவிப்பேன், எப்பூடி??? எங்கின தெரியுது?:))))avvvvvvvvvvvvvvvv:))).
//ammulu said... 49
ReplyDeleteமியாவ் படம் பார்த்து ஆரும் சிரிச்சால்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))///
ரசிச்சால்///
[im]http://images.cheezburger.com/completestore/2009/12/23/129060557379564340.jpg[/im]
/ammulu said... 50
ReplyDeleteநல்ல காலம் ரெட் லைன் போடமுதல் வந்தாச்சு.
ம்ம் இதுவு...வேண்டாம்.எஸ்ஸ்கேப்//
இல்ல நாளைக்கு காலையில இருந்துதான் ரெட்லைன் போடுவார் பூஸார்:)))).
மியாவும் நன்றி அம்முலு. இமாவை எங்காவது கண்டனீங்களே?:(((((
அதாரது ஒற்றைவரியில ஸ்மைலி போட்டுவிட்டுப் போறது:)) ஓ.. சிவா... அதுதானே பார்த்தேன்.. பொரிவிளாங்காய் என்றதும் ஓடிவந்திட்டார் ஹா..ஹா..ஹா... இனி நிறைய ஸ்ரொக் சேர்த்து வச்சிருக்கோணும், இல்லாட்டில் ஆருமே பயப்புட மாட்டினமாம்:)))).
ReplyDelete///காட்டான் said... 51
ReplyDeleteவணக்கம் சகோத///
வாங்கோ புரோக்கர் மாமா வாங்கோ:)))).....
ஹையோ வாய் மாறி வந்திட்டுது மன்னிச்சுக்கொள்ளுங்கோ....:))).
//தங்கச்சி எனக்கொரு சந்தேகம் இந்த அரசர்களே இப்படித்தானா..?//
சே..சே..சே... எல்லாரும் அப்படியில்லை, அந்த அரசர் மட்டும்தான் அப்புடியாம்... அந்த மந்திரிதான் சொன்னவர்....:))) ஹையோ எனக்கிண்டைக்கு என்னமோ ஆகிப்போச்ச்ச்ச்ச்... இனிக் கொஞ்சம் நல்ல பிள்ளையாகக் கதைப்பம்:)).
/அந்த காலத்தில கஷ்டத்தில இருக்கிறவங்களுக்கு ஆறுதல் சொல்ல பயன்படுத்திய வார்த்தைய இப்ப சில சோம்பேறிங்க பயன்படுத்துகிறாங்க உழைக்காம மற்றவர்களின் கைய எதிர்பார்த்து.. ஹி ஹி///
ReplyDeleteமனைவி: இஞ்ச பாருங்கோ!!! இப்படியே நீங்க வேலைக்குப் போகாமல் இன்ரநெட்டே கதி எனக் கிடந்தால், நான் எப்படிக் குடும்பம் நடத்துறது?:))
கணவன்: பேசாமல் இரு, இதுவும் கடந்து போகும்.....
ஹா....ஹா....ஹா..... நீங்க சொன்ன பின்புதான் இப்படியும் ஒரு பக்கம் இருக்கென்பதையும் யோசித்தேன்... உண்மைதான், பல நல்ல நல்ல விஷயங்களை சிலர் தீய முறைகளுக்கெல்லாம் கையாள்கிறார்கள்...
“திருந்தாத உள்ளங்கள்/ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்”...
நாங்கள் நல்ல பக்கத்தை மட்டும் நினைப்போம்..
மியாவும் நன்றி.. நீங்க உங்கட சிவலயனைக் குளிப்பாட்டும் நேரத்தில:), எனக்காகவும் ஒதுக்கி, வந்து பின்னூட்டமிட்டமைக்கு, நீங்க போய் சுயம்வரத்தை நடத்துங்கோ:))).
ஐ..நான்" டீச்சரை யாராவது பார்த்தனீங்களோ" என எழுதிப்போட்டு அழித்துவிட்டேன்.போஸ்ட் பண்ணவில்லை. நான் நினைத்தை நீங்களும் நினைத்திருக்கிறீங்க.அவா பிசி என்று நினைக்கிறன். கிறிஸ்மஸ் வருது. கேக் செய்துகொண்டு டிசம்பரிலதான் வருவா.
ReplyDelete"ஓவர் ஆக்டிங் என்று(சில படத்தில்)சொல்வார்கள்"//நான் சொல்லவில்லை.சிலர் சொல்வார்கள்.எனக்கும் சிவாஜி பிடிக்கும்.அதுவும் கே.ஆர்.விஜயா ஜோடி என்றால் ரெம்ப பிடிக்கும்.
ReplyDeleteஎனக்கும் தனுஷ் பிடிக்காது.
வாங்கோ மாயா வாங்கோ...
ReplyDelete//மாய உலகம் said... 53
ஆஹா நேத்து ஒரு பதிவாஆஆஆஆ.. பாக்கலையே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு கிழமையாக நேரம் கிடைக்காமல், இரவிரவா முழிச்சிருந்து ரைப்பண்ணி ஒரு பதிவு போட்டால்... உடனே ஓடிவராமல், குருவி, கொக்குப் பறப்பதை எல்லாம் ரசிச்சுக்கொண்டிருந்துபோட்டு, இப்ப வந்து பர்க்கல்லியாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...
அதிராவின் மனச்சாட்சி: ஒக்கே அதிரா ஓக்கே “இதுவும் கடந்து போகும்”....
ஓக்கை ஓக்கை....படிச்சதும் கிழிச்சு எறிஞ்சிடுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்:))).
நான் கொஞ்சம் லேட்டா வாறேன் மாயா மிகுதிக்கு.... மிகுதிக்கு...
அஞ்ஞ்ஞ்ஞ்ஞ்..... நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவேன் ஆனா... முடிவில என்னை நத்த்த்த்த்த்தை எனச் சொல்லியதை மட்டும் தாங்க முடியல்லியே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))...
கொஞ்சம், கனக்க இல்லை, ஒரு 5 மணிநேரம் நில்லுங்கோ:)), நான் ஓடிப்போய்க் கண்ணைத் துடைச்சிட்டு வாறேன் அஞ்சு... பதிலடிக்கு...சே..சே... என்னப்பா இது, பதிலுக்கு..
மியாவ் மியாவ்... மாயா அண்ட் அஞ்சுவுக்கு.
ஆ... அம்முலு இங்கின வந்திருக்கிறீங்கள். டீச்சர்.. கேக் அடிக்கிறாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிராவைவிடக் கேக் முக்கியமாப்போச்சாமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteஇல்லை இல்லை இல்லவே இல்லை நான் எந்தக் கூண்டிலும் ஏறிநின்று சாட்சி சொல்ல தயார், அம்முலுதான் சிவாஜி அங்கிளைப் பற்றி அப்பூடிச் சொன்னவ:)))))))))))..... பொய்யெண்டால் மாயவைக் கேட்டுப் பாருங்கோ....
சாட்சிக்கூண்டில் அதிரா: நான் சொல்வதெல்லாம் பொய், பொய் தவிர வேறில்லை..
நீதிபதி: எங்கே காவலர்கள், இவவை இழுத்துப் போய் 4 சாத்துச் சாத்துங்கோ....
அதிரா: இதிலயும் 4ம் நம்பரு, ஐ லக்கிதான் இண்டைக்கு...
கனம் நீதிபதி அவர்களே... எனக்காக மாயா ரெடியாக இருக்கிறார், தர விரும்புவதத்தனையும் மாயாவுக்கே கொடுங்கோ... நான் வாரி வாரி வளங்குவதில் வள்ளல் பரி வீட்டுக்கு ஒட்டிய வீடாக்கும்( அதாவது செமி டிட்டாஜ் ஹவுஸ்:)))).
மாயா..: ..ங்ஙேஙேஙேஙேஙெஙே... ஓடுறார் ஓடுறார்.. தொபுக்கடீர்.... தேம்ஸ்ஸில குதிச்சிட்டார்:))))...
இன்னும் என்ன ...ஙே..ஙே.. என வேடிக்கை, சீன் முடிஞ்சு ஷட்டரும் போட்டாச்ச்ச்ச்ச்ச்ச்:))))...
அனைவருக்கும் வயக்கம், மிக்க நன்றி... விரைவில் சந்திப்போம், குறையாக ஏதுமிருப்பின் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
வள்ளல் பரி //
ReplyDeleteபாரி வள்ளல் / ஹா ஆ ஹா
//ஜேர்மன் பாஷையில்தானே? நானே மொழிபெயர்த்துத் தாறேனே இப்படியே போய்ச் சொல்லிடுங்கோ....ங்கோ....ங்கோ..:))).
ReplyDelete“மிஸ்ருறியே ஹிஸ்வா ருஸ்மானி”... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))).//
போலிஷ் பாஷைல மொழிபெயர்த்துட்டு ஜெர்மன்னு சொன்னா நாங்க நம்பிருவோமா ???
எனச் சொல்லியதை மட்டும் தாங்க முடியல்லியே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))...//
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்....:D):))):))):)))
இந்தாங்கோ அதிரசம் எடுத்துக்கோங்க.. இது அஞ்சுட:))).//
ReplyDeleteமகி இது ஸ்டார்டர், மெய்ன் கோர்ஸ் யானை முடி வச்ச அந்த மோதிரமும் உங்களுக்கே கே ஏ:))):))):)))
மிக்க நன்றி ஆசியா. சொல்ல மறந்திட்டேன், //
ReplyDeleteஹா ஆ நானும் மறந்துட்டேன் இதோ அங்கே வரேன் .
போஸ் தமிழ் ஷாப்ல முருங்க கீரை வாங்கி செய்தேன் சூப்பர்
பூஸ் நான் கண்ணை அசந்து மூடர நேரம்பார்த்து புது போஸ்ட் போட்டுடீங்க
ReplyDeleteகர்ர்ர்ர்
மணிக்கூடுகள் வாங்கிச் சேர்ப்பது, //
ReplyDeleteமணிக்கூடுகள் WHATS THIS???
உண்மையிலேயே அருமையான வாழ்வியல் தத்துவம் அதிரா .
ReplyDeleteஎதுவும் நிலையற்ற வாழ்வில்//இதுவும் கடந்து போகும்....// இதை நினைத்தாலே போதும்
SUPERB POST
என் பக்கத்தில் உடனே பிழை திருத்தம் ஆகவில்லையாயின், அது சபைக்கு வந்துவிடும் கிக்...கிக்..கீஈஈஈஈஈ:)).//
ReplyDeleteஅதுக்குதானே நாம இருக்கோம் ஹெ ஹெ ஹெ .எதோ நம்மாலான உதவி
இதுவும் கடந்து போகும்'
ReplyDeleteஅருமையான ஆக்கம்..
பின்னூட்டங்களோடு ரசிக்க சுவாரஸ்யம்.
பூஸாரை ரொம்பவே ரசிக்க வைத்தீர்கள்.
பாராட்டுக்கள்..
//குளிர் ஆரம்பமாகிவிட்டது.... “இதுவும் கடந்து போகும்”//
ReplyDeleteஆமாம் ஆனால் நாலஞ்சு மாதம் கழிச்சுதான் கடந்துபோகும்
இங்கேயும் குளிர் தொடங்கிட்டுது. உங்க ஒரு கையா? அல்லது இரண்டு கையுமா படத்தில் தெரிவது!!!!. சரி முறைக்க வாணாம். நான் 4 வருடங்களுக்கு முன்பு வாங்கிய கறுப்பு கலர் கையுறையை ( அடிக்கடி தோய்ச்சு தான் ) இன்னமும் வைச்சிருக்கிறேன். ஜாக்கெட் மட்டும் விதம் விதமாக போட ஆசை. இந்த முறை ரெட் கலரில், முழங்கால் வரை வரும் ஜாக்கெட் வாங்கியிருக்கிறேன். என் கணவருக்கு ரெட் கலர் முன்பெல்லாம் பிடிப்பதில்லை. ஆனால் இந்த முறை அவரே விரும்பி வாங்கித் தந்தார்.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும் கதை நல்லா இருக்கு.
ஓ... பினூட்டம் பார்த்து அ.கோ.மு ஆஆஆஆஆஆஆஅ?:)))). ஒரேயடியாக நிறையச் சாப்பிட அசைதான், கூடாதென்பதால ஒன்றுக்குமேல சாப்பிட மாட்டேன்:))).//
ReplyDelete// அசைதான்//gRRRRRRRRRRRRRRRR
நூறாவது மெகா சைஸ் பொரிவிளங்கா உருண்டை
ReplyDeleteஎனக்கே எனக்கு
வாழ்வியலை மிக எளிமையா சொல்லி போட்டுட்டீங்க
ReplyDeleteகதை நல்லா இருக்கு...!
ReplyDeleteபடத்தில் பூனைக்கு வால் கொஞ்சம் நீளம் ஆயிடிச்சுனு நினைக்கிறேன்...! உங்களை மாதிரியே... [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im] :)
வாங்கோ மாயா வாங்கோ... வரவர ஆள் சரியான பிஸியாகிடுறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ReplyDelete//இன்றைக்கும் சூர்யா வீட்டின் முகப்பில் இந்த எழுத்து தான் மின்னுதாம்.... இதுவும் கடந்து போகும்...//
இனிமேல் சூரியாபற்றிக் கதைக்கப்படா:)), இனிச் சொல்லோணும், அதிரா வீட்டு புளொக்கிலயும் இப்பவும் இதுதான் எழுதியிருக்கென ஓக்கை?:)))).
//இதை உணர்ந்தால் வாழ்வில் எப்பொழுதும் சமநிலையிலேயே இருக்கலாம்..//
உண்மைதான்.... அதை உணரவும் காலநேரம், பக்குவம் வரவேணும்போல, ஏனெனில் இது கிடைச்சு 2 வருஷமாகுது, ஆனா இப்பத்தானே எனக்கும் பல்ப் பத்தியதுபோல புரிந்தது...... ஆஆஆ எனக்கும் பக்குவம் வந்திட்டுதூஊஊஊஊஊஊஊ:))).
//கிட்ட தட்ட என் கையெழுத்து போலவே இருக்கூஊஊஊஊ//
ஆஆஆஆ உண்மையாகவோ?, ஏதும் எமேஜென்சி எண்டால் ஆள் மாறிச் சைன் பண்ணிடலாம், உஸ்ஸ்ஸ்ஸ் வெளியில காட்டாமல் கிழிச்சிடுங்க:))))) இங்குள்ள பழையவர்களுக்கெல்லாம் என் கையெழுத்து ஏற்கனவே தெரியும்...
///படத்துல வர்ற வில்லனுங்க மாதிரி போஸூஊஊஊ.... அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் எதுவும் சொல்லல///
ReplyDeleteஹா..ஹா..ஹா... இப்பூடிப் போஸு குடுத்தல்தான் இமேஜை டமேஜ் ஆகிடாமல் பாதுகாக்கலாம், இல்லையெனில் ஆரும் பயப்புடுறமாதிரியே இல்லை அவ்வ்வ்வ்வ்:)).
//ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல//
இதில் கடைசி வரி... அந்த திருநாளை அவன் கொடுத்தான், ஆரிடம் சொல்ல.. இப்படித்தான் நான் நினைப்பதுண்டு... இது கொயப்புறீங்களே:))))!!!.
//அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா//
அடி தாங்கா உள்ளமிது இடி தாங்குமா? இடிபோலே பிள்ளை வந்தால் மடி தாங்குமா?..
சூப்பர் பாடல்... சிவாஜியின் பதில் அழகான பதிலே....
மியாவும் நன்றி மாயா... விண்வெளியில நிலநடுக்கமாமே கேள்விப்பட்டனீங்களோ?:)).. அங்கின லொக்கேஷன் பார்க்கப் போன பச்சைப் பூவை இன்னும் காணல்லே(அஞ்சு உபயம்:)))... எனக்கு பக்குப் பக்கென இருக்கு:)),இண்டைக்கும் வராட்டில், நேர்த்திக் கடன் வைக்கோணும் புளியமரத்துக்கு:)))).
ReplyDeleteமுருங்கை கீரை போட்ட அடை சுட்டு சாப்பிடும்போது யாரது என்னை நினைச்சது ஊ ஊ
ReplyDeleteஆஆஆ எங்கின விட்டேன் சாமீஈஈஈ..:)))..
ReplyDeleteவாங்கோ அஞ்சூஊஊஊ..
//angelin said... 66
தொப்பி, மவ்ளர் கலர் பார்த்து ஆரும் சட்லைட்மூலம் என்னத்தேடிடாதீங்க:),//
ஆமா அப்புறம் சாடிலைட்ல நான் தெரிவேன் // ஏன் என்றால் என் விண்டர் கோட்டும் தொப்பியும் அதே கலர் .ப்ளீஸ் யாராவது அதிராவை நல்லா கிள்ளுங்களே///
ஹையோ ஹையோ... அஞ்சுவைப் பிடிங்க.... இதேதான் இதேதான்... போனவருடம் மோல்ல கழட்டி வைக்க ஆரோ அடிச்சிட்டுப் போயிட்டினம், அது அஞ்சுதான்... ஓடுறா பிடிங்க... என் லக்கித் தொப்பியும், ஜக்கெட்டும்:)))))
அவ்வ்வ்வ்வ்வ்.. அஞ்சூஊஊஊ இப்பத்தான் எனக்கும் போன் வந்து முருங்கை இலை பார்ஷல் பண்ணியாச்சாம்... நாளைக்கு வந்திடுமே..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆருக்கும் தரமாட்டேன்ன்ன்ன்:))).. அடை சாப்பிடுறாவாம் அடை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
ReplyDeleteஎனக்கு அஞ்சு, ரொம்ப ரயேட், அல்லது நித்திரை தூக்கியடிக்கும்போது, கை தட்டவே வராது, அப்படியான நேரம், அரவு, குத்தெல்லாம் வராது, நானும் கவனிக்காமல் பதில் போட்டிடுவம் எனப் போடுவேன்.... அதுதான், பாரி... பரி ஆன கதை:)))).
ReplyDeleteஇப்பக்கூட நித்திரை விரட்டுது, கை அடிக்குதில்லை:)))).
//மகி இது ஸ்டார்டர், மெய்ன் கோர்ஸ் யானை முடி வச்ச அந்த மோதிரமும் உங்களுக்கே கே ஏ:))):))):)))
///
நோஓஓஓஓஓஒ இது தரமாட்டேன், என் நடுவிரலுக்குப் போட என வாங்கினது, முந்தின பச்சைக்கல்லை ஒருமாதிரிக் காப்பாத்த, இப்போ பூனை சே..சே.. ஆனை முடிக்கு ஐடியாப் போடீனம்:))), தேம்ஸ்ல அடியில எறிஞ்சால் ஆராலேயும் எடுக்கேலாது பத்திரமாக இருக்கும்:))))).
//angelin said... 93
ReplyDeleteஎன் பக்கத்தில் உடனே பிழை திருத்தம் ஆகவில்லையாயின், அது சபைக்கு வந்துவிடும் கிக்...கிக்..கீஈஈஈஈஈ:)).//
அதுக்குதானே நாம இருக்கோம் ஹெ ஹெ ஹெ .எதோ நம்மாலான உதவி//
ஹையோ இப்ப என் பக்கம் வரவே... அஞ்சுவை நித்திரையாக்கி, மாயா நித்திரையோ எனச் செக் பண்ணி, பூனை நடை நடந்து வரவேண்டியதாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).... இதுவும் கடந்து போகும்:))))))))
//போலிஷ் பாஷைல மொழிபெயர்த்துட்டு ஜெர்மன்னு சொன்னா நாங்க நம்பிருவோமா ???///
ReplyDeleteஹா..ஹா..ஹா.. அது போலிஸ் பாஷையோ அவ்வ்வ்வ்வ்:))), எனக்கு 64 1/2 பாஷை தெரியும், அதுதான் எந்தப்பாஷை எனத் தெரியாமல் கொஞ்சம் கொயம்பிட்டேன்:))).
அந்த அரைப்பாஷை என்ன பாஷை என யோசிப்பீங்கள்:)) அது பஞ்சாபி:))).... ஜய்..ஜய்...:)) மீதி கற்று முடியேல்லை:))).
வாங்க ராஜேஸ்வரி...
ReplyDeleteரசித்தீங்களோ?.. உண்மைதான் இதுவும் கடந்து போகும்.
மிக்க நன்றி வருகைக்கு.
தேம்ஸ்ல அடியில எறிஞ்சால் ஆராலேயும் எடுக்கேலாது பத்திரமாக இருக்கும்:))))).//
ReplyDeleteமாயாவுக்கு குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து தேம்சுக்குள்ள நீந்த சொன்னா
கண்டுபிடிச்சு கொடுத்திடுவார் எப்பூடி ஹா ஹா ஹா
பஞ்சாபி பெண் சம்ஜே அல்லது ஹான்ஜி என்றா சொல்றார்
ReplyDeleteஹா அஆவ்வ் எனக்கும் தூக்கம் வருது நல்லிரவு வணக்கம்
ReplyDeleteசாக்லேட் ட்ரீம்ஸ்
வாங்க வான்ஸ்ஸ்ஸ்...
ReplyDelete//vanathy said... 96
உங்க ஒரு கையா? அல்லது இரண்டு கையுமா படத்தில் தெரிவது!!!!////
நினைச்சேன், அமெரிக்காவில இருந்து இன்னமும் புகையைக் காணல்லியே என:))), அது சுனாமியா வந்திருக்கு அவ்வ்வ்வ்வ்வ்:)))).
//நான் 4 வருடங்களுக்கு முன்பு வாங்கிய கறுப்பு கலர் கையுறையை ( அடிக்கடி தோய்ச்சு தான் ) இன்னமும் வைச்சிருக்கிறேன்.//
உது எனக்கு எப்பவோ தெரியுமே:)))).
எங்கட வீட்டிலும், எம் இருவருக்கும் ரெட் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதைவிட, கொஞ்சம் பயம், அபாயக்கலரென்பதால், தனி ரெட்டில் எதுவும் வாங்க மாட்டேன். ஆரும் தரும் பிரசண்ட் உடுப்புத்தான் சிலது ரெட்டில் இருக்கு. அதுவும், சும்மா இடங்களுக்கு மட்டும் பாவிப்பேன், நல்ல விஷயங்களுக்குப் போடமாட்டேன்.
எனக்கு ஒரே கோர்ட் போடப் பிடிக்காது, எங்கபோனாலும் ஒரே மாதிரியே இருக்குமென்பதால, நிறைய எல்லாம் இல்லை, 2,3 வைத்து மாற்றி மாற்றிப் போடுவேன்... குளிர் குறைவான நாளெனில்.... இறங்காமல் காரில் எனில்... சுவெட்டரும், மேலே வேறு ஏதும் ஸ்பிரிங் கோட் அப்படிப் போடுவேன்...
இதுவும் கடந்து போகும்.
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.
ஹா..ஹா..ஹா.. அஞ்சு இப்போ குளிரால தேம்ஸ் பிரீஸ் ஆகிட்டுது, மாயாவுக்கு கால் வைக்கவே தலை சுத்துதாம், இதில எங்கின அடிக்குப் போறது அவ்வ்வ்வ்வ்வ்வ் எங்கிட்டயேவா?:)))))).
ReplyDelete//angelin said... 114
பஞ்சாபி பெண் சம்ஜே அல்லது ஹான்ஜி என்றா சொல்றா//
இல்ல.. அவ அடிக்கடி வார்த்தைக்கு வார்த்தை ஜய் ஜய் என்பா... ஆம் என அர்த்தம் எடுத்துக்கொண்டேன், கேட்கவில்லை:))).
ஹான்ஜி அல்ல ஒவ்வொரு சொல்லின் முடிவிலும் த்தா ... த்தா என முடிப்பார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... நான் சிரிப்பதும் தலை ஆட்டுவதும் மட்டும்தான் என் வேலை...மிகுதி எல்லாம் அவவே கதைப்பா:))))))))))))))))))
//angelin said... 100
ReplyDeleteநூறாவது மெகா சைஸ் பொரிவிளங்கா உருண்டை
எனக்கே எனக்///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உங்களுக்கு எதுக்கது?:)) நேரே லக்குப் பார்த்து ஸ்பேசுக்கு எறியுங்கோ... திரும்பி வந்தால் நான் கச் பண்றேன்.. இல்லையெண்டால் ஆள் வரும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
வாங்க லக்ஸ்மி அக்கா,
ReplyDeleteஒரு சின்ன வசனத்தில எவ்வளவு விஷயம் அடங்கியிருக்கு..... சொல்லிப் பார்க்கும்போதே, மனதுக்கு கொஞ்சம் அமைதி கிடைப்பதைப்போல இருக்கு.
மிக்க நன்றி.
வாங்க கவிக்கா வாங்க...
ReplyDelete//படத்தில் பூனைக்கு வால் கொஞ்சம் நீளம் ஆயிடிச்சுனு நினைக்கிறேன்...! உங்களை மாதிரியே... :)///
ஹா..ஹா..ஹா... ஆருமே வாலைக் கவனிக்கவில்லையோ என நினைச்சேன்....:)))... என்னாது என்னை மாதிரியோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).
அது கோபம் வந்தால் வால் ஆடாது, அப்போதான் எல்லோருக்கும் தெரியும் கோபம் வந்திட்டுதாக்கும் என:)))).
தமிழ்த்தோட்டத்தில் ஓடுவதை விட வேகமாப் பப்பி ஓடுது என் பக்கத்தில்:)))))... பப்பிக்கும் தெரிஞ்சிட்டுதுபோல நான் 1500 மீட்டர் ஓட்டத்தில 2ம் இடம் என அதுதான் பிடிச்சிடுவேன் எனப் பயந்து இந்தப் ஸ்பீஈஈஈஈஈஈஈட்டூஊஊஊஊஊஊ:))))..
எங்கிட்டயேவா:))))).
மியாவும் நன்றி கவிக்கா....
ஓக்கை..... குட் நைட்டூஊஊஊஉ அஞ்சுவுக்கும்... அனைவருக்கும்...
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=PTidptvsvxo&feature=related
[im]http://1.bp.blogspot.com/_PJHZHxXwMzM/THPuBTm25vI/AAAAAAAAAjA/oj5e9Klq5Rk/s320/eggs.JPG[/im] DREAMS.....
crocodile Rabbit alligator snail // இதெல்லாம் ஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூஊஊஊஊஊஊ.. ;-)
ReplyDeleteangelin said... 113
ReplyDeleteதேம்ஸ்ல அடியில எறிஞ்சால் ஆராலேயும் எடுக்கேலாது பத்திரமாக இருக்கும்:))))).//
மாயாவுக்கு குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து தேம்சுக்குள்ள நீந்த சொன்னா
கண்டுபிடிச்சு கொடுத்திடுவார் எப்பூடி ஹா ஹா ஹா//
அப்ப குருவி ரொட்டி... அவ்வ்வ்வ்வ்வ்
கனம் நீதிபதி அவர்களே... எனக்காக மாயா ரெடியாக இருக்கிறார், தர விரும்புவதத்தனையும் மாயாவுக்கே கொடுங்கோ... நான் வாரி வாரி வளங்குவதில் வள்ளல் பரி வீட்டுக்கு ஒட்டிய வீடாக்கும்( அதாவது செமி டிட்டாஜ் ஹவுஸ்:)))).
ReplyDeleteமாயா..: ..ங்ஙேஙேஙேஙேஙெஙே... ஓடுறார் ஓடுறார்.. தொபுக்கடீர்.... தேம்ஸ்ஸில குதிச்சிட்டார்:))))...
//
ஆஹா வாரி வளங்குறதுக்குள்ள எதுக்கும் புல்லட் புரூஃப் போட்டுக்கடா இல்லன்னா .. பாட்டி நிறைய மஃப்ளர் தர்றாங்களாம் அதை வாங்கி 10, பதினைஞ்சு போட்டுக்கடா ராஜேஷேஏஏஏஏஏ... அப்ப தான் வாரி வாரி தந்தாலும் சிரிச்சுகிட்டே ஓடலாம்....
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமாயா ஓடாதீங்க, ஆசையாக வாரித்தருவதை, வாங்கிட்டு ஓடுங்க:))))).
ReplyDeleteஇன்று இங்கெல்லாம் 2ம் உலகப்போரில் உயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளாகக் கொண்டாடுவார்கள்.ஒவ்வொருவருடமும் 11.11, அன்று காலை 11 மணி 11 நிமிடத்தில் 2 நிமிடம் மெளன அஞ்சலியும் எல்லா இடத்திலும் நடக்கும்.
அதன் நினைவாக “பொப்பி” என பூக் குத்துவார்கள். இன்று அனைவரும் இந்த பொப்பியோடுதான் உலாவுவார்கள், ஸ்கூல் பிள்ளைகள் உள்பட.
மிக்க நன்றி மாயா வாழ்த்துக்கு.
[im]http://conservativehome.blogs.com/.a/6a00d83451b31c69e20120a63db80d970b-150wi[/im]
# மாய உலகம் (228)
ReplyDelete# angelin (210)
# ஜெய்லானி (34)
இதுவும் கடந்து போகும்....:-)
ஆஆஆஆஆஆஆஆஆஆஅ....பச்சைப்பூ... பிடிங்க பிடிங்க.... ஹையோ.. எனக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல...:))), அஞ்சு பெரீஈஈஈய பொரிவிளாங்காய் திரும்பி வராதபோதே நினைத்தேன்... சிதறிப்போச்சுதென:))))... ஹையோ நான் பொரி விளாங்காயைச் சொன்னேனாக்க்கும்...க்கும்...க்கும்...:))))
ReplyDeleteஆஆஆஆஆஆஆஆஆஆஅ....பச்சைப்பூ... பிடிங்க //
ReplyDeleteமெகா பொரிவிளாங்காய் வெற்றி வெற்றி
ஜெய் லொகேஷன் பார்த்தாச்சா
விண்வெளி எப்பூடி இருக்கு
அதிரா இம்மாவின் ப்ளோக்ல தொன்போஸ்கோ
ReplyDeleteபற்றிய லிங்க் தந்திருக்கேன் மெயில் தெரிஞ்சா அவங்க கிட்ட பக்க சொல்லுங்க அவரோட மெழுகு RELIC இலங்கைக்கும் செல்கிறதாம் .
ஜெய்லானி said... 127
ReplyDelete# மாய உலகம் (228)
# angelin (210)
# ஜெய்லானி (34)
இதுவும் கடந்து போகும்....:-)//
ஹா ஹா இது நான் சொல்லலான்னு நினைச்சுக்கிட்டெ இருந்தேன்... எப்படி மறந்தேன்... ஆஹா நண்பர் ஜெய் முந்திக்கிட்டாரு.... ;-)
இதுவும் கடந்து போகும்..
சரி நான் முருங்கை அடை சாப்பிட்டு வந்துடுறேன்... இல்லைன்னா கிடைக்காது... அவ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஎப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.
ReplyDeleteஎல்லோரயும் சிரிக்க வைக்க எங்கு கற்றுக் கொண்டீர்கள்.
//அதிரா இம்மாவின் ப்ளோக்ல தொன்போஸ்கோ
ReplyDeleteபற்றிய லிங்க் தந்திருக்கேன் மெயில் தெரிஞ்சா அவங்க கிட்ட/// பக்க ///சொல்லுங்க அவரோட மெழுகு RELIC இலங்கைக்கும் செல்கிறதாம் .///
ஆஆஆஆஆஆஅ ஓடிவாங்க... அஞ்சு ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டாஆஆஆஆஆஆஆஅ:) என்கிட்டயேவா?:))))...
ஓக்கை சொல்லிடறேன், ஆனா நான் சொன்னா அதுக்காக இமா எனக்கு கிரிஸ்மஸ் கேக்கும், அஞ்சு எனக்கு முருங்கை இலை அடையும் தரோணும்... டீலிங் ஓக்கேயா?:))))....
மாயாக்கு அடை கொடுக்காதீங்க, நேற்றுத்தான் வயிற்றுவலி என எங்கினமோ சொன்னாரே:)))))))).
அஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஉ சொல்ல மறந்திட்டேன்.... இண்டைக்கு முருங்கை இலைப் பார்ஷல் வந்திட்டுதூஊஊஊஊஊ:))))).
//ஜெய் லொகேஷன் பார்த்தாச்சா
ReplyDeleteவிண்வெளி எப்பூடி இருக்கு//
அஞ்சு... இப்ப போய் வெந்த புண்ணில வேல் பாய்ச்சுற மாதிரிக் கேள்வியெல்லாம் கேட்கிறீங்க:)))))))))) அவரே அங்கின நிலநடுக்கம் என பயந்துபோய், இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக்குடா என ஓடிவந்திட்டார், மீண்டும் எங்கட 2012 இல அழியப்போகிற உலகுக்கு:)))).
ஹா..ஹாஅ..ஹா.... வழி விடுங்க தேம்ஸ் ஐப் பார்த்து பல நாளாகுது, இண்டைக்கு எப்படியும் பார்க்கோணும் நான்:))))
//மாய உலகம் said... 132
ReplyDeleteசரி நான் முருங்கை அடை சாப்பிட்டு வந்துடுறேன்... இல்லைன்னா கிடைக்காது... அவ்வ்வ்வ்வ்வ்///
கூல் மாயா..கூல்...:))) இதுவும் கடந்து போகும்:)))).
வாங்க நிலாமூன் வாங்க...
ReplyDeleteவந்த வரத்திலேயே பொய் சொல்லப்பிடா...:))).. அதுசரி எங்கட யூஜினை எங்காவது கண்டனீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்... படிச்சதும் கிழிச்சிடுங்க, அவர் ஏற்கனவே கொதிச்சுப்போய் இருக்கிறார் என்மேல:))))...
மியாவும் நன்றி நிலாமதி.
இனிய மாலை வணக்கம் அக்கா,
ReplyDeleteஐ மிஸ்ட் திஸ் போஸ்ட்...
அவ்வ்வ்வ்வ்
ஆமா இந்தப் பதிவு புதன் கிழமை போட்டிருக்கிறீங்களே...
இருங்க என்ன விடயம் என்று பார்ப்போம்
அக்கா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கிற சாட்டில தானும் படம் கீறிப் படிக்கிறாவோ?
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்
ஓவியம் நல்லாத் தான் இருக்கு!
ஒரு அரச சபையிலே, ஒரு மந்திரி இருந்தாராம். //
ReplyDeleteஒரு சபையில ஒரு மந்திரி தானே இருப்பார்.
பின்னே என்ன நான்கு மந்திரியா இருப்பார்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆமா இப்படி எம்புட்டு நாளைக்குத் தான் ஒரு ஊரில என்று தொடங்குவீங்க?
அந்த மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தது.. “இதுவும் கடந்து போகும்” எனும் மூன்று வார்த்தைகள்தானாம்.
ReplyDelete//
ஹி...ஹி...
அதிரா அக்க சாமியாராகப் போறா என்பதற்கான அடையாளம் தானே இந்த நீதிக் கதை!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கதை நல்லா இருக்கு! பகிர்விற்கு நன்றி!
தொப்பி போட்டு, மவ்ளர் கட்டி....//
ReplyDeleteஅட முகத்தை இப்படி மறைத்துப் போஸ் கொடுக்கலாமோ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நல்ல வேளை நீங்க ஹீட்டர் போட்டு, குயில்ட்டால் மூடி நித்திரையும் கொண்டு,
கனவினிலே எழுந்து கமெண்டும் போடும் பதிவர்களே கேளும் என்று பாடல் எழுதலை?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
குளிர் ஆரம்பமாகிவிட்டது.... “இதுவும் கடந்து போகும்”.
ReplyDelete///
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அப்ப உங்கே ஸ்னோ தானே
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதிரா அக்கா கார் ஓடப் போறாவா?
ReplyDeleteநம்பவே முடியலை?
உங்க வீட்டில உண்மையிலே பூஸார் இருக்கிறாரா?
இனிய வீக்கெண்ட் வாழ்த்துக்கள் அக்கா!
ReplyDeleteஅப்புறம் உங்க பசங்களை எல்லாம் சுகம் கேட்டதா சொல்லி விடுங்க.
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும்!
ReplyDeleteஆஆஆஆஆஆஅ ஓடிவாங்க... அஞ்சு ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டா//
ReplyDeleteஇமாவுக்கு அந்த செய்தி போகனும்ற அவசரத்தில் மிஸ்டேக் வந்திருச்சு
அஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஉ சொல்ல மறந்திட்டேன்.... இண்டைக்கு முருங்கை இலைப் பார்ஷல் வந்திட்டுதூஊஊஊஊஊ:))))).//
ReplyDeleteஆசியா சொன்ன ரெசிப்பிபடி செய்யுங்க சூப்பர் டேஸ்ட் .அடை சுடும்போதும் வறுத்து சேர்த்து சுடுங்க அப்புறம் சுறா பிட்டு செய்யும்போதும் சேர்த்து செய்யுங்க சூப்பர் ஆக இருக்கும் .
அவரே அங்கின நிலநடுக்கம் என பயந்துபோய், இருக்கிறதை விட்டுப்போட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக்குடா என ஓடிவந்திட்டார், //
ReplyDeleteபொரிவிளங்காய் நல்லாவே வேலை செய்யுது
ஏவ்... ஹா ஹா தயிர் சாதம் எனக்குதான் ஒடுங்க முட்டையாவது எடுத்துக்கோங்க
ReplyDeleteவாங்கோ நிரூபன் வாங்கோ...
ReplyDelete//நிரூபன் said... 138
இனிய மாலை வணக்கம் அக்கா,
ஐ மிஸ்ட் திஸ் போஸ்ட்...
அவ்வ்வ்வ்வ்
ஆமா இந்தப் பதிவு புதன் கிழமை போட்டிருக்கிறீங்களே///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சிங்கப்பூர் மலேசியா எனச் சுத்திப்போட்டு வந்து உப்பூடிக் கதைக்கப்பிடா:)).
உங்கட புரோக்கர் மாமாவே தேடி வந்திட்டார் உடனே.. உங்களாலதான் வரமுடியேல்லை... விடுவனோ நான் , அவரின் சுயம்வரத்தில போய் வச்சிட்டன் வெடி நிரூபனுக்கு.... எங்கிட்டயேவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..... ஹையோ... நான் 3 நாளைக்கு லீவு, இப்பக்கம் தலையும் காட்ட மாட்டேன்:))).
//ஓவியம் நல்லாத் தான் இருக்கு!//
க்க்க்க்க் வெக்கம் வெக்கமா வருது:))))
//ஒரு சபையில ஒரு மந்திரி தானே இருப்பார்.///
ReplyDeleteஇது என்ன புதுக்கதையாக்கிடக்கு? பல மந்திரிமார் என நினைச்சிருந்தேன்..... இப்போதைய எம்பிமார்தானே முந்தின மந்திரியின் இடத்துக்கு இருக்கிறார்கள்..
//அதிரா அக்க சாமியாராகப் போறா என்பதற்கான அடையாளம் தானே இந்த நீதிக் கதை!////
நோ..நோஓஓ.. சாமியார் இல்லை..... மீ பூஸானந்தா:)))).
//அட முகத்தை இப்படி மறைத்துப் போஸ் கொடுக்கலாமோ?
////
தொப்பியைத் தூக்கிப்போட்டுப் பாருங்கோ நிரூபன்..... முகம் தெரியுமென்னேன் அவ்வ்வ்வ்வ்வ்:)))
//நல்ல வேளை நீங்க ஹீட்டர் போட்டு, குயில்ட்டால் மூடி நித்திரையும் கொண்டு,
கனவினிலே எழுந்து கமெண்டும் போடும் பதிவர்களே கேளும் என்று பாடல் எழுதலை///
உந்தப்பாட்டிருக்கட்டும்.... இசையும் நிரூபனும் என்னா ஆச்சு?:))).
//அப்ப உங்கே ஸ்னோ தானே
ReplyDelete////
உஸ்ஸ்ஸ்ஸ் ஞாபகப்படுத்தாதீங்க இன்னும் வரவில்லை... ”நல்லாப் பிந்தி வரக் கடவது”
//உங்க வீட்டில உண்மையிலே பூஸார் இருக்கிறாரா?//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) இந்தக் கேள்வியை நான் படுவன்மையாகக் கண்டிக்கிறேன்:))))).
//நிரூபன் said... 147
தாமதத்திற்கு மன்னிக்கவும்////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே எண்டெல்லாம் சொல்ல மாட்டேன்..... மியாவும் நன்றி நிரூபன்... நீங்கபோய் சுயம்வரத்தில கலந்து கொள்ளுங்கோ... ஓல் த பெஸ்ட்டூஊஊஊஉ:)))).
ஆஆ... அஞ்சு நாங்க நண்டுக்கறி, ஒடியல்கூழ்... இவறுக்குத்தான் முருங்கை இலை சேர்ப்போம், மற்றும்படி வறை மட்டுமே.... அடை செய்துதான் பார்க்கோணும்... நேரம் கிடைக்கோணும்:))).
ReplyDeleteஅ.கோ.மு அமுக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))).
நல்லிரவு... சுவீட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
///கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
ReplyDeleteமாய உலகம் (230)
angelin (205)
நிரூபன் (38)
ஜெய்லானி (33)///
ஹையோ ஹையோ... இந்தக் கொடுமையைக் கேட்க ஆருமே இல்லையோ? பாவியார் போற இடம் பள்ளமும் திட்டியுமாமே....:))))) டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) எனக்கில்ல... அங்கின... ப்ப்பு... மர.... பெயர் சொல்லவும் பம்மாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))))
//மாய உலகம் (230)
ReplyDeleteangelin (204)
நிரூபன் (38)
ஜெய்லானி (33)
ஸாதிகா (33)///
ஹையோ ஹையோ ...கி கிக் கிக் கீ ஈ
இதுவும் கடந்து போகும் ஹா ஹூ .
எனக்கொரு சந்தேகம் எங்க வீட்டுக்காரர் மரத்தை வெட்டி எடுத்துட்டு வந்துட்டாரோ ஃ பிரிட்ஜ் முழுக்க முருங்கை இலை
ReplyDeleteபோற இடம் பள்ளமும் திட்டியுமாமே....:))))) //
ReplyDeleteஎல்லாம் பொரிவிளங்காய் மகிமை ஹஹா .
குட் நைட் அதிரா .
ஸீ யூ லேட்டர்............fill in the blank .
angelin said... 158
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம் எங்க வீட்டுக்காரர் மரத்தை வெட்டி எடுத்துட்டு வந்துட்டாரோ ஃ பிரிட்ஜ் முழுக்க முருங்கை இலை////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).இதுவும் கடந்து போகும்.. :)
ஊர் வீட்டில வளவுக்குள் 2,3 மரங்கள் நிற்குது. அப்ப அருமை தெரியேல்லை... இப்போ ஆசைப்படவேண்டிக்கிடக்கு.
ஊர் உறங்கினதுபோல இருக்கு... ஆரையும் காணேல்லை, மாயாவையும் காணேல்லை... ஒண்ணுமே புரியேல்லை....
எதுக்கும்.... வரப்போற இரவு குட்டு இரவா அமையட்டும் அனைவருக்கும்.... மியாவ் மீயாவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
Me the 161....
ReplyDeleteவம்ப விலைக்கு வாங்கும் வயசு இது...ada வம்ப விலைக்கு வாங்கும் வயசு இது
ReplyDeleteஅ.கோ.மு அமுக்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))).
ReplyDelete/// why you always eating a.k.mutai...:)
//siva said... 162
ReplyDeleteவம்ப விலைக்கு வாங்கும் வயசு இது...ada வம்ப விலைக்கு வாங்கும் வயசு இது///
இதுவும் கடந்து போகும்:))))... அதுசரி என்ன வம்பை விலைக்கு வாங்கப்போறீங்க சிவா?:))).
எல்லோரும் ஓடி ஓடித்தனிவீடு கட்டி, புதுசுக்கு வெள்ளைகட்டி வெழுத்த கதையாக எல்லோரும் கூத்துப்போட்டுவிட்டு, இப்போ பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கோ என்பதுபோல.... ஆராவது என் புளொக்கை குத்தகைக்கு எடுங்கோ எங்களை விடுங்கோ... என ஓடிப்போய்... பக்கத்தில இருக்கிற, மின் கம்பம், கறண்ட் கம்பி, புளியமரம் என உச்சியில ஏறி, அதுவும் கீழ விழுந்திடாமல் இறுக்கிப்பிடிச்சுக்கொண்டிருக்கினம்.
ReplyDeleteஆனாலும், இருக்கிறது மேலதான் எண்டாலும், பார்வை எல்லாம் கீழுக்குள்ள புளொக்கிலதான்:))).. என்ன நடக்குது, என்ன பேசுறாங்க என்ற விடுப்ஸ் மட்டும் இன்னும் குறையேல்லை(ஜூம்தான்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
//கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
ReplyDeleteமாய உலகம் (230)
angelin (204)
நிரூபன் (38)
ஜெய்லானி (33)///
கடவுளே..... எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))))).
சுட்டாறின தண்ணி "????What is this..you mean suduthanni.?
ReplyDelete//சிva said... 167
ReplyDeleteசுட்டாறின தண்ணி "????What is this..you mean suduthanni.//
ஹையோ ஹையோ... அது சுடவைத்து ஆறிய தண்ணி, நல்ல பதமான சூடாக இருக்கும்:)).
இல்லையெனில் அவசரத்துக்கு ரப் வோட்டரை முகத்தில தெளிச்சுப்போடுவினம், அது ஐஸ் வோட்டர் மாதிரி:))), நாங்க இதில ரொம்ப விபரமாக்கும்:))).. சொல்லிப்போட்டுத்தான் மயங்குவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))))))).