நல்வரவு_()_


Thursday, 17 November 2011

நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)


இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).



பார்ஷல் போஸ்ட் பண்ண வேண்டியிருந்தது. ஸ்கூலுக்குப் போகும்போது போஸ்ட் பண்ணிடலாம் என இருந்தேன். வேலை முடித்து வெளிக்கிட, நேரம் மட்டுமட்டாக இருந்துது. 25 நிமிடங்களே இருந்தன ஸ்கூல் முடிய.

கொஞ்சம் விரைவாகப் போனால் நேரம் போதும், ஸ்கூலுக்கு கொஞ்சம் தள்ளி போஸ்ட் ஓபிஸ், அங்குபோய் மீண்டும் திரும்பி வர வேண்டும் ஸ்கூலுக்கு.

சரி இன்று எப்படியாவது பார்ஷலை அனுப்பிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டேன்:) (நான் தான் சொன்னேனே, எதையாவது நினைத்தால், அதை உடனே முடிக்காதுவிட்டால், எனக்கு ஏதோபோல் இருக்கும்).

வழியில் ரோட் வேலை நடக்கிறது. அப்போ ஒரு பக்கம் கார்கள் பார்க் பண்ணியிருக்கு, மறுபக்கம் ரோட் திருத்தும் மெஷின்கள் பார்க் பண்ணி வேலை நடக்குது...

ரோட்டின் நடுவிலே உள்ள இடைவெளியால் போக வேண்டும். அது போதும் போகலாம். ஆனா எதிரே ஒரு பெரிய கார்.. அதில் ஒரு நல்ல வயதானவதான் ரைவர்.. அவ அந்த இடைவெளியால் எடுக்க முற்பட்டுவிட்டு, பயத்தில போலும், முன் பக்கத்தை மட்டும் கரைக்கு திருப்பி விட்டு, பின் பகுதி நடு ரோட்டிலே நிற்குது கார்.        எதிரே வந்து, கரையில் நின்ற என்னை, வா..வா.. என லைட் போட்டா, அவவின் பின்னாலும் பல கார்கள், என் பின்னாலும் பல கார்கள்.

இங்கே ஒரு முறை இருக்கிறது, கார் லைட்டை அடித்தால், நீங்கள் முதலில் காரை எடுங்கள், அல்லது வழி விடுகிறேன் போங்கள் என அர்த்தம்.

ஆனா அவதான் வர முடியும் நான் போக முடியாது, அப்போ நான் லைட் அடித்தேன் நீ வா என... அவ கையைக் காட்டினா நீ வா என.. கிழிஞ்சுது போ என எண்ணிக்கொண்டு, சரி அவ கூப்பிடுறா, வயதானவ, நான் கிட்டப்போவம் என, ஒரு மாதிரி வெட்டி எடுத்தேன், ஆனா அங்கால போக முடியாது....

 அவவின் கார் பின்பக்கம் புளொக் பண்ணிச்சுது, அவவோ அசையாமல் நிற்கிறா, அப்போ நான் விண்டோவைத் திறந்து மரியாதையாகச் சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் முன்னுக்கு எடுங்கோ என, அப்போ அவ சொன்னா, நான் பேவ்மண்ட்டில எல்லாம் ஏத்த மாட்டேன் என....  வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக என்னைக் கூப்பிட்டுப்போட்டு, இப்படிச் சொன்னால்... நான் என்ன பண்ணுவது..

நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்.... ஆனா இது எப்படியும் 70 வயதிருக்கும், சரியான மேக்கப்பும் போட்டிருக்கிறா, காரும் நல்ல புதுக்கார், இங்குள்ள வயசானோருக்கு, நல்ல பெரிய ரோட்டில் நேராக போய் பார்க் பண்ணித் திரும்புவினம், ஆனா இப்படி ஏதும் இடக்கு முடக்கென்றால், அவர்களால முடியாது, ரிவேசும் பண்ணக் கஸ்டப்படுவார்கள்... அதனால அப்படியே அசையாமல் நிற்பார்கள், நாம்தான் வெட்டி எடுக்க வேண்டும்.... அதுதான் பிரச்சனையே..

 என்னாலும் கோபிக்க முடியவில்லை, ஆனா ஒருவித விசராகிட்டேன், என் பக்கம் பேவ்மண்டும் இல்லை, இருந்திருந்தால் ஏத்தியிருப்பேன்..பின்பு மீண்டும் விண்டோவைத் திறந்து சொன்னேன், பிளீஸ் கொஞ்சம் அப்போ, பின்னால எடுக்கிறீங்களோ என, பின்னால் நின்ற காரெல்லாம் ரிவேஸ் எடுத்து, இடம் விட்டுவிட்டார்கள், இவவின் கார் boot  மட்டும் நடு ரோட்டில், அப்போ அவ சொன்னா.. என்ன ஜோக் பண்ணுகிறாயா? என்னால் பின்னுக்குப் போக முடியாது என்று...., சும்மா நிண்ட என்னை அவதானே வா வா எனக் கூப்பிட்டா, நான் நம்பியெல்லோ வந்தனான்... என மனதில எண்ணினேன், அதன்பின் மெதுமெதுவாக வெட்டி வெட்டிப் பின்னுக்கு எடுத்தா.... நான் கடந்து போய் விட்டேன்...

 “இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஆனாலும் உடம்பு ஒருவித டென்ஷனாகிவிட்டது, மனதில் ஒரு அரியண்டமான உணர்வு ஏற்பட்டது, கோபமல்ல. அதில் பத்து நிமிடம் போய் விட்டது.

பறவாயில்லை, போஸ்ட் ஓபிஷில் பார்க்கிங் இருக்கோணும் ஆண்டவா.. என எண்ணியவாறு விரைந்து போனேன், அங்கு பக்கத்திலே பொலீஸ் ஸ்டேஷன் இருக்கு, அதன் முன்னால்தான் சில நேரம் பார்க்கிங் கிடைக்கும் . அதில் சில பார்க்கிங் போலீசுக்கென ரிசேவ் பண்ணப்பட்டிருக்கும். அப்போ நினைத்தேன் பார்க்கிங் கிடைத்தால் இன்று, கிடைக்காதுவிட்டால், இன்று போய் நாளை வருவோம்.... இனி என்ன செய்வது என. ஆனா அங்கு ஒரு பார்க்கிங் இருந்துது. அப்பாடா என பார்க் பண்ணினேன்.

நல்ல மழை ஊஊ எனக் காத்தோடு பெய்து கொண்டிருந்தது. தொப்பியெல்லாம் போட்டு, கீழே இறங்கி பார்ஷல்களையும் நனைந்திடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொண்டு, விறுவிறு என போஸ்ட் ஒபீஷை நோக்கி நடந்தேன்... அப்போ பின்னாலிருந்து பீம்...பீஈஈஈஈஈம் என கார்க் கோன் சத்தம் கேட்டுது.

இங்கு யாருமே கோன் பண்ணுவதில்லை, அப்படிப் பண்ணுவதாயின், ஆரையும் அவசரமாகக் கூப்பிட, அல்லது ஆராவது தவறு செய்தால் மட்டுமே. அப்போ கோன் சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தேன், என் ஜீப்பின் பக்கத்திலே போலீஸ் கார், அவர்கள்தான் கோன் பண்ணினார்கள்... எனக்கு ஏற்கனவே இருந்த டென்ஷனோடு, இன்னும் டென்ஷனாகிட்டேன். தொட்டில் பழக்கம்:), இப்பவும் போலீஸ், ஆமியைக் கண்டால் மனம் பதட்டமாகிவிடுது.

அப்போ, நான் அவர்களிடத்தில் பார்க் பண்ணிவிட்டேனோ, இல்லையே, சரியாகத்தானே பார்க்பண்ணினேன்... என்னில் எந்தப் பிழையும் இல்லையே, அப்போ ஏன் கூப்பிடுகிறார்கள், சரி புதுசாக ஏதும் சட்டம் வந்திட்டுதோ, அதில் பார்க் பண்ணப்படாதென, எனக்குத் தெரியாதுதானே, தெரிந்து செய்தால்தான் பயப்பட வேணும்.. என எண்ணியபடி திரும்ப நடந்து கிட்டப் போனேன், போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்.... கிட்டப் போய்க் கேட்டேன்... என்னையோ கூப்பிட்டீங்கள் என...

அப்போதுதான் திடுக்கிட்டவர்களாக... நான் உன்னை அழைக்கவில்லை....... என்றார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). (பயந்திடாதீங்க... வெள்ளையர்கள்தான்:)) இவ்வளாத்துக்கும் 20 நிமிடம் செலவாகியிருக்கும், துன்பம் வரும்போது சிரிங்க... என அடிக்கடி நான் மனதில் எண்ணுவதுண்டு, அப்படித்தான் நினைத்து மனதில் ஹா..ஹா..ஹா.. என சிரித்துக்கொண்டே...

மீண்டும் போஸ்ட் ஓபிஷை நோக்கி ஓடினேன்.... நல்லவேளை அங்கு கியூ இருக்கவில்லை. பார்ஷல்களைப் போஸ்ட் பண்ணிவிட்டு, ஸ்கூல் வாசலுக்கு வரவும் பெல் அடிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.

இதைப் பின்னூட்டமாகப் போட நினைத்தே ரைப் பண்ணினேன்... ஆனா நீஈஈஈஈஈண்டு விட்டதால்... இதுக்கடிச்சது யோகம்... ஒரு தலைப்புப்போடக் கொடுத்து வச்சிருக்கு:))).

ஊசி இணைப்பு:
இதுதான் வழி எனத் தெரிந்தால், 
முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால் 
எது வழி எனத் தெரியாதபோது,
என்ன செய்ய முடியும்?..  
                                                                                                      .....கண்ண......தாசன்.
(((((((((((((((((((((((((((((((((*******************)))))))))))))))))))))))))))))))))

121 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பார்சலில் அட்ரஸ் சரியா எழுதினீங்களா .

    ReplyDelete
  3. ஜேசுதாஸ் பாட்டு .மம்மீஈ ஈ eee

    ReplyDelete
  4. Parcel will reach safely,don't worry!

    ReplyDelete
  5. இப்ப மகி தான் first

    ReplyDelete
  6. அத்தீஸ் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட இல்லையே

    ReplyDelete
  7. இவ்ளோ சிரமப்பட்டு அனுப்பிய பார்ஷல்கள் நேர காலத்தோடு, உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்//

    பத்திரமா போய் சேரும் டோன்ட் வொரி

    ReplyDelete
  8. கிளி பால் குடிக்குமா ....doubt????

    ReplyDelete
  9. ஏஞ்சல் அக்கா,ஏன் இப்படி ஒருவரி கமென்ட்டா போடறீங்க? நிறைய்ய டைப் பண்ணி ஒரேஏஏஏ கமென்ட்டாப் போடலாம்ல?:)

    பூஸ் போஸ்ட்டைப் பப்ளிஷ் பண்ணிட்டு எஸ் ஆகிட்டாங்க போல..ஆளைக்காணோம்?

    ReplyDelete
  10. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நித்திரை வந்திட்டுது, அப்பவும் எட்டிப்பார்க்கலாமெ என வந்தேன்...

    இதில ஆர் 1ஸ்ட்டு? ஆர் செகண்டூஊஊஊஊ.... கொஞ்சம் இருங்க இனி மினி மைனி மோ.. போட்டுப் பார்க்கிறேன்:)))

    ReplyDelete
  11. எல்லாமே மஞ்சள் மயம்:))).. மஞ்சள்பூ அண்ட் மஞ்சள் பிஸ்சூஊஊ:)))... இருவருக்கும் நல்வரவு....

    மியாவும் நன்றி... நான் பட்டபாடு இன்று ஹையோ ஹையோ...

    நல்லிரவு, பார்ஷல் ட்ரீம்ஸ்ஸ்ஸ் மியாவ் மியாவ் மகி அண்ட் அஞ்சு:)).

    ReplyDelete
  12. பார்சல் அனுப்பியாச்சில்ல?? வேலைய முடிச்ச சந்தோஷ அலுப்போடு தூங்குங்க அதிரா! கனவிலும் பார்ஷ;)ல் வரும்,ஜாக்கிரதை! ஹிஹி! குட்நைட்!

    ReplyDelete
  13. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?.//

    வேற ஒரு புதிய வழியை
    நாம்தான் கண்டு பிடிக்க வேண்டும்
    இல்லை என்றால் புதிய வழியாய்
    நாம் உருவாக்க வேண்டும்

    ReplyDelete
  14. யாரப்பா அது எங்கட பேபி அதிராவின்
    காரை வழிமறிப்பது
    கவலை வேண்டாம்
    பார்சல் நல்லபடியா போய் சேர்ந்து விடும்
    (ஓகே எனக்கும் ஒரு பாகெட் சாக்லேட் பார்சல் அனுப்புங்க

    ReplyDelete
  15. angelin said... 1
    This post has been removed by the author.
    17 November 2011 22:11//

    no no

    meeeeeeeeeeeeeeeeee the firstu

    ReplyDelete
  16. மேடம்.மேடம்..............
    நான் உன்னை(உங்களை)
    அழைக்கவில்லை....ஹி.ஹி.ஹி.ஹி

    செம பல்பு வாங்கியிருக்கீங்க

    ReplyDelete
  17. இனிய காலை வணக்கம் அக்கா,

    ஆய்! அக்காச்சி பதிவு போட்டிருக்கிறா! இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம்!

    ReplyDelete
  18. நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)
    //

    இது எங்கேயோ கேட்ட பாடல் மாதிரி இருக்கே!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  19. இன்று ஒரு பகிடி ...:)) என் சொந்தக்கதை சோகக்கதையைக் கேளுங்கோ:))).//


    ஆய் சொந்தக் கதையா! அப்போ ரொம்ப நல்லா இருக்குமில்லே!

    ஏன்னா நமக்குத் தானே மத்தவங்க விடுப்பு கேட்பது அலாதிப் பிரியம் ஐ மீன் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும்!
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  20. நம்ம அக்காச்சியை சீண்டிய Old lady யாரு?
    விடுங்க ஒரு வழி பண்ணிடுவோம்?

    ReplyDelete
  21. சே! ஒரு பார்சல் அனுப்ப இவ்ளோ தடைகளா! எல்லாம் நல்ல படியாக நடகும்! நோ கவலை!

    கும்மியடிக்க மனசு வரவில்லை!

    ReplyDelete
  22. angelin said...
    பார்சலில் அட்ரஸ் சரியா எழுதினீங்களா .//

    இங்க பாருங்க! ஏஞ்சலின் அக்கா பண்ற காமெடியை!

    மலையால விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையா நொந்து போய் இருக்கும் அதிரா அக்காவை சீண்டுறா!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  23. "நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)"//

    அட சிட்டுவேசன் சாங்ஸ்
    வலியப் போயி வம்பிழுக்கவில்லை என்று சொல்ல வாறீங்க!

    ReplyDelete
  24. கண்ணதாசனின் வரிகள் பதிவுக்கு மகுடமாய் அமைந்துள்ளது!

    ReplyDelete
  25. நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை
    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை
    வந்து பிறந்துவிட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
    அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா
    அம்மா………… விவரம் புரியாதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

    என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை
    உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை
    இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா…
    இரக்கம் பிறக்காதா

    நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
    கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
    நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை
    பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை

    அழகிய பாடல்.நானும் தேடி எப்படியும் அதிராவிடம் சப்மிட் பண்ணி டாக்ட்ரேட் பட்டம் வாங்கிடுறேன்.

    ReplyDelete
  26. ஹையா..கண்டு பிடித்து விட்டேன்சீக்கிரம் டாக்டரேட் பட்டம் கொடுங்க.பட்டமளிப்பு விழாவுக்கு எல்லா பிளாக்கர்களையும் அழைத்து விருந்து வைக்கவேண்டும்.பூஸம்மா செலவில்.ஒகை..?

    ReplyDelete
  27. பூஸ்..பர்சல் எனக்குத்தானே அனுப்பினீங்க..இன்னும் வந்து சேரலியே...

    ReplyDelete
  28. நானோ என் கணவரோ, கார் ரயர் எல்லாம் பார்க்க மாட்டோம், பேவ்மண்டில் ஏத்தோணும் என்றாலும், கல்லோ முள்ளோ ரயர் போனால் மாத்தலாம், முதலில் பிரச்சனை தீரட்டும் என்றுதான் முடிவெடுப்போம்..//நல்ல பாலிசி...ஒகை..வேலை தலைக்கும் மேலே இருக்கு.காலங்காத்தாலே பிசி முன்னாடி உட்கார்ந்து கொண்டு இருக்கேன் அப்புறம் வர்ரேன் பூஸ்,.

    ReplyDelete
  29. //ஏஞ்சல் அக்கா,ஏன் இப்படி ஒருவரி கமென்ட்டா போடறீங்க? நிறைய்ய டைப் பண்ணி ஒரேஏஏஏ கமென்ட்டாப் போடலாம்ல?:)//
    bed time so
    எனக்கு கமென்ட் இன்ஸ்ட்டால்மேன்ட்ல தான் வருது தூக்கமா இருந்ததா
    ஒன் லைன் கமென்ட் எழுதினேன் .

    ReplyDelete
  30. //angelin said... 34
    //ஏஞ்சல் அக்கா,ஏன் இப்படி ஒருவரி கமென்ட்டா போடறீங்க? நிறைய்ய டைப் பண்ணி ஒரேஏஏஏ கமென்ட்டாப் போடலாம்ல?:)//
    bed time so
    எனக்கு கமென்ட் இன்ஸ்ட்டால்மேன்ட்ல தான் வருது தூக்கமா இருந்ததா
    ஒன் லைன் கமென்ட் எழுதினேன்///

    அஞ்சு...உங்களுக்கு எது வசதியோ அப்படியே எழுதுங்கோ, எந்தப் பிரச்சனையுமில்லை... எனக்கு நோ புரொப்ளம்.... மகிழ்ச்சி, சந்தோஷம், ஹாப்பி:))), கொமெடி.... ஆரவாரம்தான் எனக்கு விருப்பம்.

    ReplyDelete
  31. angelin said... 3
    பார்சலில் அட்ரஸ் சரியா எழுதினீங்க///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) மாறிக்கீறி ஸாதிகா அக்காவின் பெயரைப்போட்டேனோ என்னவோ:))))).

    //angelin said... 5
    ஜேசுதாஸ் பாட்டு .மம்மீஈ ஈ ee//

    மம்மியிடம் சொல்லுங்கோ.. உங்களுக்கு ஒரு பார்ட்னர் பிரித்தானியாவில இருக்கிறா என:))).

    ReplyDelete
  32. //angelin said... 8
    அத்தீஸ் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட இல்லை//

    கிக்..கிக்...கீஈஈஈ இருக்கு ஆனா இல்லை:)) எனக்கு பறவாயில்லை என எழுதுவதுதான் விருப்பம், ஆனா அது தப்பாம், பரவாயில்லைத்தானாம் சரி... ஆனா எனக்கு அப்படி எழுத விருப்பமே இல்லை நான் என்ன செய்வேன்... அதனால பறவாயில்லை என்றே எழுதியுள்ளேன்:))).

    //angelin said... 10
    கிளி பால் குடிக்குமா ....doubt???//

    இப்போ எதுக்கு கிளிக்கதை?:)).... எனக்கும் டவுட்டு:)))

    மியாவும் நன்றி அஞ்சு.

    வானிலை அறிக்கை:
    இங்கு மேகம் இருட்டாக இருக்கு மழை தூறிக்கொண்டிருக்கு.... ரோட்டில் வாகனங்கள் லைட் போட்டு ஓடுது, சன்:)) மாமாவைக் காணவில்லை:))))

    ReplyDelete
  33. மஞ்சள்பூ மகி.... எல்லோரும் சொல்றீங்க அதனால பார்ஷல் இம்முறை தவறாது...

    மியாவும் நன்றி மகி... இப்போ நீங்களுக்கு குட் நைட்...

    ReplyDelete
  34. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ பின்பு வாறேன்... மேடம் ராஜ்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மீ ட பெஸ்ட் பேபி:))

    ரெட் லைனுக்கு முன் நிரூபன் வந்திட்டார்... இப்போ சொல்றேன் டீசண்ட் டிசிப்பிளினன பிள்ளை:))).

    ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆ கலக்குறீங்க...

    நான் பின்பு வாறேன் அனைத்து பதிலுக்கும் .. அதுவரை மன்னிச்சுக்கோங்க:))

    ReplyDelete
  35. angelin (190)
    மாய உலகம் (187)
    நிரூபன் (68)
    ஸாதிகா (37)
    ஜெய்லானி (33)


    Guck mal!:))):))).

    ReplyDelete
  36. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?..


    நீங்கதான் புது வழிகண்டுபிடிச்சு உங்க வேலையையும் கச்சிதமா முடிச்சுகிட்டீங்களே பிறகு என்ன? ஜமாய்ங்க.

    ReplyDelete
  37. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?.. //

    வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... மிக அற்புதமான வரிகள்... கண்ணதாசனுக்கும்.. உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  38. உரிய இடத்தில் கிடைத்திட வேண்டுமென, வேண்டச்சொல்லி நீங்களையும்:) கேட்டுக்கொள்கிறேன்.
    //

    ஆண்டவா அந்த பார்சல் மிக சரியாக போய் சேர்ந்துவிடவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... வேண்டிக்கிட்டேன்... ;-))))))

    ReplyDelete
  39. போலீஸ்காரர்கள், வானம் பார்ப்பவர்கள்போல இருந்தார்கள்....//

    மழை நிக்குமான்னா?...அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  40. angelin said... 1
    This post has been removed by the author.//

    அப்பாடா ஆத்தரே ரிமூவ் பண்ணிட்டாங்க... அப்ப மி தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊ

    ReplyDelete
  41. நாஆஆஆன் உன்னை அழைக்கவில்லை:)//

    என்னது அழைக்கவில்லையா... அப்படின்னா போயிட்டு பிறகு வருவோம்ம்ம்ம்... ;-)))))))))))))))))

    ReplyDelete
  42. அப்பாடா ஆத்தரே ரிமூவ் பண்ணிட்டாங்க... அப்ப மி தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊ//
    thats for my little sister mahi

    ReplyDelete
  43. அங்கயும் மழையா? பொதுவா நல்லவங்க இருக்குற இடத்தில் தானே மழை பெய்யும் சொல்லுவாங்க...

    //வேலில போன ஓணானை, வீட்டுக்குள் எடுத்துவிட்ட கதையாக//

    இந்த பழமொழி எங்க ஊரில் வேற மாதிரி சொல்லுவாங்க...!

    அனுபவ பகிர்விற்கு நன்றி...! :)

    ReplyDelete
  44. அதிரா & அஞ்சு அக்கா,சும்மா விளையாட்டுக்குத்தான் ஒரு வரி கமென்ட் போடறீங்க என்று கேட்டேன். மற்றபடி உங்க வசதிப்படி கமென்ட்டுங்கோ. நான் இப்படி சொல்லிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம்,நன்றி,வணக்கம்!:)

    ReplyDelete
  45. //உங்க வசதிப்படி கமென்ட்டுங்கோ. நான் இப்படி சொல்லிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம்,நன்றி,வணக்கம்!:)//



    ஹையோ ஹையோ .இதுக்கெல்லாம் யாரவது ஃபீல் பண்ணுவாங்களா .
    அதிரா இந்த பேபிய பாருங்க

    ReplyDelete
  46. மேலே இருப்பது sad kitty! இதோ இது mischievous kitty! ;)



    bye angel akka..see you!

    ReplyDelete
  47. ஹையோ நானும் வந்திட்டேன்....... என்ன ஒரே பீலிங்சாக்கிடக்கூஊஊஊஊஊ:))

    ReplyDelete
  48. //மகி said... 49
    அதிரா & அஞ்சு அக்கா,சும்மா விளையாட்டுக்குத்தான் ஒரு வரி கமென்ட் போடறீங்க என்று கேட்டேன். மற்றபடி உங்க வசதிப்படி கமென்ட்டுங்கோ. நான் இப்படி சொல்லிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம்,நன்றி,வணக்கம்!://

    மகி.... அதெல்லாம் ஒன்றுமே இல்லை, கதைக்கும்போது மனதில தோன்றுவதை சொன்னீங்க அவ்வளவுதான் அதில என்ன இருக்கு...

    அதெல்லாம் ஒன்றுமே இல்லை, நான் அப்பவே மறந்திட்டேன்... அந்தா காக்கா தூக்கிட்டுப் போகுது சூ...சூஉ... ஓடிட்டுதாம்:))))

    ReplyDelete
  49. இன்று நேரமே கிடைக்கவில்லையே.... ஆஆஆஆ... எங்கின விட்டேன் சாமி:)).....

    வாங்க சிவா வாங்க...

    புது வழியை உருவாக்குவதோ அவ்வ்வ்வ்:)).. சிலதுக்கு ஓக்கே... ஆனா அனைத்துக்கும் முடியாதே:).

    சிவாவுக்கும் ஒரு பார்ஷல் வந்திட்டே இருக்கு:)), வாசல் கதவைத் திறந்தே விடுங்க, போஸ்ட்மான் தட்டிப்போட்டுப் போயிடப்போறார்:)).

    உங்களுக்காகத்தான் அஞ்சு அக்கா போட்ட கொமெண்ட்டை டிலீட் பண்ணினவ:)))... முடிஞ்சால் அதிலபோய்ப் போடுங்க பார்ப்பம்:)))..

    மியாவும் நன்றி சிவா.

    ReplyDelete
  50. வாங்கோ ராஜ்...

    //K.s.s.Rajh said... 21
    மேடம்.மேடம்..............
    நான் உன்னை(உங்களை)
    அழைக்கவில்லை....ஹி.ஹி.ஹி.ஹி////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதுதானே பார்த்தேன்... நாந்தான் கன்னி ஆச்சே:))... நான் ராசியைச் சொன்னேனாக்கும்:)))).

    ///செம பல்பு வாங்கியிருக்கீங்க///
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) எவ்ளோ அடிச்சாலும் தாங்கிடலாம் ஆனா இதை மட்டும் என்னால தாங்க முடியல்லியே அவ்வ்வ்வ்வ்வ்:))).

    மிக்க நன்றி ராஜ்.

    ReplyDelete
  51. வாங்கோ இளைய தளபதி... இண்டைக்கு மேள தாளத்தோடு:)) ரெட் லைன் போடமுந்தி வந்திட்டீங்கள்:)) குட் போய்:)).

    //இது எங்கேயோ கேட்ட பாடல் மாதிரி இருக்கே!//

    அதேதான்.... “எங்கிருந்தோ வந்தாள்”... பார்த்திராவிட்டால் பாருங்க..... நான் படத்தைச் சொன்னேனாக்கும்....க்கும்...க்கும்:)).

    //ஏன்னா நமக்குத் தானே மத்தவங்க விடுப்பு கேட்பது அலாதிப் பிரியம் ஐ மீன் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும்!//

    தமிழருக்கு மட்டுமில்ல, அனைத்து மனிதருக்கும்தான்:))

    ReplyDelete
  52. //நிரூபன் said... 25
    நம்ம அக்காச்சியை சீண்டிய Old lady யாரு?
    விடுங்க ஒரு வழி பண்ணிடுவோம்//

    வீட்டுக் கதவை லொக் பண்ணி, திறாங்கும் போட்டுவிட்டுத்தானே இந்த சவுண்டு விடுறீங்க:))))).

    //மலையால விழுந்தவனை மாடேறி மிதிச்ச கதையா நொந்து போய் இருக்கும் அதிரா அக்காவை சீண்டுறா!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

    அதுதானே... வடிவாக் கேளுங்க நிரூபன்:))).. நான் கட்டிலுக்குக் கீழதான் இருக்கிறேன்:))).

    மிக்க நன்றி நிரூபன்... அப்ப அந்த சைனீஸ் கேர்ள் என்னமாதிரி? பேச்சைத் தொடர்றதோ?:))))))))))))

    ReplyDelete
  53. ஆஆஆஆ அட நம்ம ஸாதிகா அக்கா... வாங்கோ... பாட்டெல்லாம் பலமா இருக்கே.... நல்ல பாட்டு, இது யூ ரியூப்ல இருந்துது சேவ் பண்ணி வச்சேன், 2 மாதத்துக்கு முன், என் விவாகரத்து தலைப்புக்கு போட இருந்தேன் மறந்திட்டேன் அப்போ, இப்போ போட்டால் அது இல்லையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). இருப்பினும் பாட்டு லிங் தேடித்தந்த ஸாதிகா அக்காவுக்கு சென்னை மரீனா பீச்சில, ஜெய்.. தலைமையில, டைரக்டர் மாயாட செலவில, நாங்களெல்லாம் கெஸ்ட் ஆக வந்து ஒரு பார்ட்டி வைக்கிறோம் ஓக்கேயா?:)))... நீங்க வராதீங்க நான் உங்களுக்கு பிங் லிமோ கார் அனுப்புறேன், அதில வந்து ஸ்டைலா இறங்கோணும் ஓக்கை?:)).

    ReplyDelete
  54. //டாக்டரேட் பட்டம் கொடுங்க//

    No....No.....oo...oo...oo... அசுக்கு புஸுக்கு:)) வீடியோ சோங் டவுன்லோட் பண்ணித் தந்தால் மட்டுமே டாக்டர் ரேட்டு:)))) ஓக்கே?:)).

    //பூஸ்..பர்சல் எனக்குத்தானே அனுப்பினீங்க..இன்னும் வந்து சேரலியே.///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மரம் நட்டவுடனேயே பழம் பிடுங்க ஆசைப்படலாமோ?:)).. எங்கேயும் போயிடதீங்க வீட்டிலேயே, வாசல்ல இருங்க போஸ்ட் வரும்:))..ஓக்கை?:))))

    மியாவ் மியாவ் ஸாதிகா அக்கா... நேரம் கிடைக்கேல்லை, இப்போ நித்திரை லெவ்ட் ரைட் என தூக்கியடிக்குது அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  55. வாங்க லக்ஸ்மி அக்கா...
    மியாவும் நன்றி.

    ReplyDelete
  56. வாங்கோ மாயா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் லேட்?:)))) சரி சரி முறைக்காதீங்க..

    //வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... மிக அற்புதமான வரிகள்... கண்ணதாசனுக்கும்.. உங்களுக்கும் நன்றி.//

    தங்கூஊஊஉ.. தங்கூஊஊஊஊஊ:))).

    //ஆண்டவா அந்த பார்சல் மிக சரியாக போய் சேர்ந்துவிடவேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... வேண்டிக்கிட்டேன்... ;-))))))//
    நிஜமாத்தான் வேண்டினீங்களோ?:)))

    //என்னது அழைக்கவில்லையா... அப்படின்னா போயிட்டு பிறகு வருவோம்ம்ம்ம்... ;-)))))))))))))))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஓடுற மீனில நழுவுற மீனாகிட்டீங்க:))).... தெரியுது மாயா, ரொம்ப busy லயும் எட்டிப்பார்த்திருக்கிறீங்க மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது வாங்க.... கையோடு ஜெய் அண்ணாவையும்.. ( உங்க முறைக்கு:))) கூட்டி வாங்க பிளீஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  57. வாங்கோ கவிக்கா...

    //*anishj* said... 48
    அங்கயும் மழையா? பொதுவா நல்லவங்க இருக்குற இடத்தில் தானே மழை பெய்யும் சொல்லுவாங்க..///



    //இந்த பழமொழி எங்க ஊரில் வேற மாதிரி சொல்லுவாங்க...!
    //
    karrrrrrrrrrrrrrrrrr வீட்டுக்குள்ள விடாமாட்டாங்கபோல:)))) எனக்கெதுக்கு ஊர் வம்பு:)... நான் தான் ரொம்ப நல்ல பொண்ணாச்சே... 6 வயசிலிருந்தே:)).

    மியாவும் நன்றி கவிக்கா... 4 பப்பி:)) லக்கி நம்பர் அதுதான் ஓடித்தப்பிட்டீங்க:))

    ReplyDelete
  58. உங்களுக்காகத்தான் அஞ்சு அக்கா போட்ட கொமெண்ட்டை டிலீட் பண்ணினவ:)))... முடிஞ்சால் அதிலபோய்ப் போடுங்க பார்ப்பம்:)))..//
    no no see this
    angelin said... 47
    அப்பாடா ஆத்தரே ரிமூவ் பண்ணிட்டாங்க... அப்ப மி தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊ//
    thats for my little sister mahi

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. தலைப்பே என்னை வர வேண்டாம் என்கிறது நான் என்ன செய்வேன் ?

    ReplyDelete
  61. இருந்தாலும் வருகிறேன்

    ஆங் ...சொல்ல மறந்துட்டேன்
    வணக்கம் தோழி

    எனக்கு அந்த பார்சல் வரவில்லை

    அட்ரஸ் சரியா எழுதீநீங்களா

    சரி சரி டென்சன் ஆகாதீங்க
    ப்ளைட் ஏறி ,கப்பல் பிடிச்சி ,கடலில் நீந்தி
    ஆகாயத்தில் பறந்து ,பேருந்து ,ரயிலில் எல்லாம் ஏறி

    ட்ராபிக்கில் மாட்டி ஏன் வீடு வந்து சேர நாளாகும்

    வந்த வுடன் உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்

    ReplyDelete
  62. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?..


    அருமையான வார்த்தைகள் . சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்

    பை பை வருகிறேன் .

    ReplyDelete
  63. அருமையான வார்த்தைகள் . சிந்திக்க வைக்கும் சிந்தனை துளிகள்

    ReplyDelete
  64. என்னது சைனீல் கேளா?
    எனக்கு Chunky ஆளுங்களை ஐ மீன் சப்பை ஆட்களைப் பிடிக்காது!

    ReplyDelete
  65. வாங்க ரமேஷ் வாங்க...

    இல்லை இல்லை உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன்,.... உன்னை அழைக்கவில்லை என அது ... அங்கின அந்த குருவிக்குச் சொன்னது:))... ஹையோ எப்பூடியெல்லாம் சமாளிக்கவேண்டிக்கிடக்கு:)).

    ////எனக்கு அந்த பார்சல் வரவில்லை

    அட்ரஸ் சரியா எழுதீநீங்களா //

    ஹா...ஹா..ஹா.. நீங்களுமா?... வாசல் படியிலயே இருங்க ரமேஸ்... வீட்டுக்குள் போயிடாதீங்க..... வரும்... பார்ஷல் வரும்:))

    //வந்த வுடன் உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்///

    இது...இதுதான் ஒழுங்கான பிள்ளைக்கு அழகு... கிடைச்சதும் சொல்லிடோணும்:))).

    வாங்க வாங்க.. மிக்க நன்றி.

    ReplyDelete
  66. ஆஆஆஆஆஅ... தலைகீழ் ஆசனம் கலைஞ்சுபோச்சு டும்...டும்..டும்....
    கூப்பிட்டது கேட்டுவிட்டுது டும்...டும்...டும்.....

    அஞ்சு... இன்னும் பொரிவிளாங்காய் மிச்சம் இருக்கோ?:)) சூப்பரா வேர்க் பண்ணுது....:)))).

    ஆஆஆஆஆ ஜெய் வாங்கோ வாங்கோ... எங்கிட்டயேவா உடனேயே மேல மாத்திட்டமில்ல:)))...

    ஸாதிகா அக்கா... ஜெய்க்குத்தான் டாக்டர் ரேட்டு:)) பட்டம்ம்ம்:))... உங்கட அந்த ரெஸ்ரோரண்டிலேயே வச்சிடலாம் ஓக்கை.... மாயா... முதலை வாணாம், அந்த blue ரீ ஷேர்ட்டையும்,. சன் கிளாஸையும் போட்டுக்கொண்டு கெதியா வாங்க:)))).

    மியாவும் நன்றி ஜெய்... நான் நேற்று முழுக்க குப்புறக்கிடந்து யூ ரியூப்ப்ல தேடினனே அவ்வ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  67. வாங்க ராஜா வாங்க...

    பதிவு படிக்க வருகிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  68. அடடா எப்பூடிக் கூப்பிட்டாலும் தெரியாதபோல போவினம், கல்யாணப்பேச்சென்றதும் ஓடி வந்த வேகத்தைப் பாருங்கோ:))).... ஓக்கை ஓக்கை... நான் நிரூபனுக்குச் சொல்லுவனோ:)))..... அது இங்க சும்மா கதைக்கிறேன்:))..

    வாங்க நிரூபன்..

    //நிரூபன் said... 75
    என்னது சைனீல் கேளா?
    எனக்கு Chunky ஆளுங்களை ஐ மீன் சப்பை ஆட்களைப் பிடிக்காது//

    என்னாது மீன் சப்புற ஆட்களோ? அவ்வ்வ்வ்வ்:))... சரி சரி பிடிக்கவில்லை எனச் சொல்லிட்டீங்க, விருப்பமில்லாட்டில் ஃபோஸ் பண்ணிச் செய்யப்புடா, அது பிரச்சனைதான், அதனால சைனீஸ் வாணாம்...

    எங்கட குயினின்ர பேத்தி... இருக்கிறா, அவவில எனக்கு ஒரு கண்:)))... அவவைக் கேட்டுப் பார்க்கட்டோ நிரூபன்?:)) நாளைக்கு அந்தப்பக்கம்தான் போறம், ஒரு கல்லில 2 மாங்காய்... இதையும் பேசிட்டு வந்திடுவம்... எதுக்கும் நிரூபனின் முடிவு தேவை:)))

    ReplyDelete
  69. கொஞ்சம் நில்லுங்க வாறேன்:)
    angelin (188)
    மாய உலகம் (177)
    நிரூபன் (67)
    ஸாதிகா (35)
    ஜெய்லானி (34)////

    இதுவும் கடந்து போகு(ம்)மில்லை:))))... போயிட்டுது அவ்வ்வ்வ்:))

    ReplyDelete
  70. போடும் பாட்டுக்கள் சூப்பராக இருக்கு.அதிரா.கே,ஜே பாட்டு ரெம்ப பிடிக்கும்.
    இங்கு வயதானவர்களின் அடம் தாங்கமுடியாது. அதே நேரம் சில நல்ல குணங்களும் இருக்கு. அனுபவக்கதை நன்றாக இருக்கு.

    //கிக்..கிக்...கீஈஈஈ இருக்கு ஆனா இல்லை:)) எனக்கு பறவாயில்லை என எழுதுவதுதான் விருப்பம், ஆனா அது தப்பாம், பரவாயில்லைத்தானாம் சரி... ஆனா எனக்கு அப்படி எழுத விருப்பமே இல்லை நான் என்ன செய்வேன்... அதனால பறவாயில்லை என்றே எழுதியுள்ளேன்:))).// பழமொழி இருக்கு.நான் ஒன்னுமே சொல்லேல.

    கடைசிப்படம் பார்க்க பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.

    ReplyDelete
  71. பார்சல் அனுப்புகிறதென்ற ஒரு சின்னவிசயத்திலை தொடங்கி பதிவை சுவாரசியமாக ஒரு கைதேர்ந்த எழுத்தாளரிற்குரிய திறமையுடன் நகர்த்திச்சென்றவிதம் ரொம்பவும் ரசிக்கும்படியாக இருந்தது. அந்த old Lady ஐ அழகாக பார்சல் பண்ணிட்டிங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  72. அஞ்சு... இன்னும் பொரிவிளாங்காய் மிச்சம் இருக்கோ?:)) சூப்பரா வேர்க் பண்ணுது....:)))).//


    எல்லாம் விடா முயற்சி தான் .பொரிவிளங்கா உருண்டையோட வெங்காய வெடி வச்சித்தானே வீசறேன் .very effective :)))) ROFL:))))

    ReplyDelete
  73. ஃஃஃஃஃ “இதுவும் கடந்து போகும்” என மனதில் எண்ணிக்கொண்டேன்... ஃஃஃஃஃ

    அட இங்க கூட அது தானா... ஹ..ஹ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  74. பூசார்ன்னா சும்மாவா சும்மா சொடக்குபோட்டு எழுதினமாதரியிருக்கு.

    3 நாளா இந்த பூசார் குட்டிபோட்டுகிட்டு எங்கவீட்டப்படுத்தருதிருக்கே அப்பப்பா. பாவமுன்னு பாத்துக்கிட்டு இருக்கேன் பால ஊத்தி.. ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  75. அதிராவின் 63 வது கமன்டிற்கு ப்ளூகிராஸ் தேடுதாமே என்ன காரணமாக இருக்கும்? !!!!!

    சத்தியமா நான் எட்டப்பன் இல்ல .. ஹி ஹி ஹி

    ReplyDelete
  76. வாங்க அம்முலு... வாங்கோ....
    என்னாது ஜெய்யின் பாட்டுக்கள் பிடிக்குமோ? “திங்க திங்க ஆசை” அதைத்தானே சொல்றீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்?:))))))).

    //இங்கு வயதானவர்களின் அடம் தாங்கமுடியாது. அதே நேரம் சில நல்ல குணங்களும் இருக்கு. அனுபவக்கதை நன்றாக இருக்கு.//

    இல்ல அம்முலு இங்கு வயதானவர்கள்தான் அனைவரிலும் நல்லவர்கள், நகர விடாமல் கதைப்பார்கள், பிள்ளைகளை ஆசையாகக் கதை கேட்பார்கள்... ஆனா இப்படி சில விதிவிலக்குகளும் உண்டு.

    இன்னுமொன்று, அந்த வயதான ஆன்ரி நல்லவவாகத்தான் இருப்பா:))( இங்கு தெரியாதோரை ஆன்ரி என்றால் அவ்ளோதான் அடிக்க வருவார்கள், நீ என்ன எனக்கு உறவுமுறையா என:))), ஆனா அவவால முன்னுக்கு பின்னுக்கு வெட்ட முடியேல்லை, அதைச் சொல்ல விரும்பாமல், என்னால முடியாது என ராங்கி பேசியிருக்கலாம்:))))).

    ReplyDelete
  77. வாங்கோ அம்பலத்தார்...
    ஏற்கனவே நீங்க இங்கு இணைந்திருப்பதைப் பார்த்தேன், இன்று நல்ல நேரம் பார்த்து உள்ளே வந்திருக்கிறீங்க.. நல்வரவு... மிக்க மகிழ்ச்சி.

    ////நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு

    புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும்.//
    உங்கள் புரொபைல் பார்த்தேன், அழகாகச் சொல்லியிருக்கிறீங்க, உண்மையே.

    ReplyDelete
  78. //பதிவை சுவாரசியமாக ஒரு கைதேர்ந்த எழுத்தாளரிற்குரிய திறமையுடன் நகர்த்திச்சென்றவிதம் ரொம்பவும் ரசிக்கும்படியாக இருந்தது. //

    ஹையோ நீங்க அதிகம் சொல்லிட்டீங்க... நான் சின்ன வயதிலிருந்தே நடந்த விஷயத்தை அப்படியே விபரிப்பேன், அதுபோல இப்போ வளர்ந்திட்டேன் எல்லோ:))

    அதனால படிப்பவர்களுக்கு போறிங் வந்திடக்கூடாது என்பதில கவனமாக இருக்கிறேன்.

    அது ரசிக்கக்கூடியதாக இருக்கு எனச் சொன்னமைக்கு மிக்க நன்றி... நான் இதை ஒரு தலைப்பாகவே எண்ண வில்லை, இதெல்லாம் ஒரு பதிவோ என்றுதான் நினைத்து

    பின்னூட்டம் போடவே எழுதினேன், ஆனால் பெருத்துவிட்டதால், தலைப்பாக்கினேன்.. இப்போ மகிழ்ச்சியாக இருக்கு.

    //அந்த old Lady ஐ அழகாக பார்சல் பண்ணிட்டிங்க. வாழ்த்துக்கள்.//

    ஹா..ஹா..ஹா.... அப்போ பார்ஷல் ரிஷீவ் பண்ணப்போறவருக்கு கொண்டாட்டம்தான்...:))) நல்லவேளை ஓல்ட் லேடி... ஹையோ ஹையோ... என்னால கற்பனை பண்ண

    முடியேல்லை:))).

    மிக்க நன்றி..அம்பலத்தார், வரவுக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  79. அஞ்சூஊஊஊஊஊ

    //எல்லாம் விடா முயற்சி தான் .பொரிவிளங்கா உருண்டையோட வெங்காய வெடி வச்சித்தானே வீசறேன் .very effective :)))) ROFL:))))//

    ஏதோ பொரிவிளாங்காய் புரூவ்:)) ஜாக்கெட் கண்டுபிடிச்சாச்சுப் போல:))) அசைவில்லாமல் இருக்கு... அனுக்கம் மட்டும்தானே கேட்குது ஹையோ ஹையோ... நான் ஒண்டுமே சொல்லல்லே:))))))

    ReplyDelete
  80. வாங்கோ மதி சுதா...

    நான் உங்கள் பக்கத்தை என் ரகசிய:)).. வாசிப்புப் பகுதியில் இன்னும் இணைக்காததால.. புதுத்தலைப்பு வந்தாலும் அறிய முடியேல்லை.. இன்று எப்படியும் இணைத்துவிடுவேன் அதில்.. பின்பு தெரியும் ஒழுங்காக.

    மிக்க நன்றி மதி சுதா... இதுவும் கடந்து போகும்:)))

    ReplyDelete
  81. ஆ... நீண்ட காலத்துக்கு முன்பு கேட்ட குரலா இருக்கே:)).. வாங்க மலிக்கா வாங்க...

    என்னாது உங்கட பூஸார் குட்டி போட்டிட்டாரோ அவ்வ்வ்வ்வ்வ்:))).

    முந்தி ஊரில எங்கட பூஸாரும் குட்டி போடுறவர், ஒன்றே ஒன்றுதான் ஒவ்வொரு முறையும் போடுவார், நான் அடிக்கடி பார்த்து தூக்கித் தூக்கி பால் குடிக்க விடுவேன் தாயில்... புஸு புஸுவென ஆசையாக இருக்கும் குட்டி வளரும்போது...

    மிக்க நன்றி மலிக்கா.

    ReplyDelete
  82. வாங்க ரமேஸ்...

    இன்று காலையில இருந்தே நான் கட்டிலடியை விட்டு வெளில வரவேயில்லை... 10,15 போன் கோல்கள்.. போலீஸிடமிருந்து வந்திட்டுது... நான் என்ன சுட்டு விழுத்திட்டேனோ.. இன்னும் குருவி விழேல்லையே அதுக்கு முன்னமே இப்பூடியா... அது யாராயிருக்கும் காட்டிக்கொடுத்ததென யோசிச்சேன்..:)))

    //சத்தியமா நான் எட்டப்பன் இல்ல .. ஹி ஹி ஹி//

    இல்ல இல்ல இல்லவே இல்லை.. இது வேற இல்ல:)))).

    ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி ரமேஸ்.

    ReplyDelete
  83. அதீஸ், என்னவோ சொல்ல வெளிக்கிட்டு, எதிலோ முடிஞ்சது போல இருக்கு ( சரி!! முறைச்சுக் கொண்டே கல் எறியப்படாது ). பார்சல் போய் சேர்ந்துவிட்டது தானே.

    பிள்ளைகளின் ஸ்கூலில் volunteer வேலை செய்வதால் முன்பு போல ப்ளொக் பக்கம் வர முடிவதில்லை. நிறையப் பதிவுகள் படிக்க நேரம் வருவதில்லை.

    ReplyDelete
  84. வாங்க வான்ஸ்...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) சிரிச்சுக்கொண்டுதான் கல் எறிகிறேன்:)))) எங்கிட்டயேவா:)))..

    //பிள்ளைகளின் ஸ்கூலில் volunteer வேலை செய்வதால் //
    அட அங்கேயுமோ? இங்கு நானும் கிழமையில் ஒருநாள் போவேன் பிள்ளைகளின் ஸ்கூலுக்கு வொலன்ரியராக......

    நேரமுள்ளபோது வாங்க... உங்க புளொக்கையும் தூசு தட்டுங்க..

    மிக்க நன்றி வான்ஸ்ஸ்..

    ReplyDelete
  85. மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர்பதிவை தொடர உங்களை அழைத்திருக்கிறேன் .நேரமிருக்கும்போது எழுதுங்கள்

    ReplyDelete
  86. மியாவ் மியாவ் பூஸ் ...நான் உங்களை அழைத்து விட்டேன் ஹா ஹா ஹா

    ReplyDelete
  87. பொரிவிளங்கா வேலை செய்யாட்டி ரவா லட்டு இருக்கே

    ReplyDelete
  88. அதுவும் இல்லன்ன கிறிஸ்மசுக்கு ..அதாவது போன கிறிஸ்மசுக்கு செய்த கல் கல்ஸ் இருக்கு .ட்ரை பண்ணலாம் உருட்டி விட்டு

    ReplyDelete
  89. நான் நூத்தி ஒண்ணு ...... மாயா மாயா எல்லாம் மாயா... சாயா சாயா.. ஆஹா சாயா நியாபகம் வந்திடுச்சு.... நான் ரீ சாப்பிட்டுவிட்டு பிறகு வாரேன்.. ;-))))))))))))))))))))))

    ReplyDelete
  90. அஞ்சு மீஈஈஈஈஈ சூப்பர் மாட்டி... அஞ்சுவிடம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... மாயாவிடம் கேடுக் கேட்டுத்தான் எழுதப்போறேன் குழந்தைகள் உலகம் பற்றி:))...

    மச மசவெனப் பேசிக்கொண்டிருக்காமல் மளமளவென எடுத்து எறியுங்க அஞ்சு... புளியமரத்துக்கு... இனியும் என்ன தாமதம்?:))) கவனம் பார்த்து மாறிக்கீறி இங்கின எறிஞ்சிடாதீங்க... எதுக்கும் ஒரு சேஃப்டிக்காக நான் கட்டிலுக்குக் கீழதான்:)))

    ReplyDelete
  91. ஆஆஆஆஆ..மாயா என்ன அடிக்கடி காணாமல் போறீங்க... அப்படி ஏதும் சே..சே.. இருக்காது நான் தான் பொண்ணு பார்க்கிறேனே மாயாவுக்கு:)))..

    ஐ நான் 103 :))))))

    ReplyDelete
  92. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?..

    சிறப்பான ஆக்கத்துடன் அருமையான வாசகம்!...
    அது சரி இந்தப் பூனைக் குட்டி நிஜமாவே
    மௌசால டஸ் பண்ணினாக் கடிக்குமா?..ஹா ..ஹா ..ஹா ..சொல்லி வையுங்க சகோ நான் உங்க வீட்டுப் பிள்ளை என்று .வாழ்த்துக்கள் அன்பு சகோ அருமையான படைப்பு .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  93. நான் வருவதற்குள் கமெண்ட் சதத்தை தாண்டியாச்சா?வழக்கம் போல பகிர்வு இண்ட்ரெஸ்டிங்,பின்னூட்டம் போடவும் திறமை வேணும் போல,நம்ம கிட்ட அந்த தெம்பு இல்லை.

    ReplyDelete
  94. /பின்னூட்டம் போடவும் திறமை வேணும் போல,நம்ம கிட்ட அந்த தெம்பு இல்லை. /ஆசியாக்கா??!!!!
    :)))))))))))))))

    ReplyDelete
  95. வாங்கோ அம்பாளடியாள் வாங்கோ...

    //அது சரி இந்தப் பூனைக் குட்டி நிஜமாவே
    மௌசால டஸ் பண்ணினாக் கடிக்குமா?..ஹா ..ஹா ..ஹா ..சொல்லி வையுங்க சகோ நான் உங்க வீட்டுப் பிள்ளை என்று ///

    ஹா..ஹா..ஹ... ஒயுங்கா:)) வந்தீங்களெண்டால் கடிக்கமாட்டார்.... இடைவெளி விட்டு வந்தால் கடிப்பார்:)) ஏனெண்டால் அவர் பேபி எல்லோ முகம் மறந்திடுவார்:)))))...

    மிக்க நன்றி வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  96. வாங்க ஆசியா வாங்க....

    உண்மையிலயே நீங்க வந்திட்டீங்க என்றெல்லோ நினைச்சுக்கொண்டிருந்தேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோரும் கார்ட் பெட்டியிலயே ஏறீனம்... நான் இலவச இன்ரநெட் வசதியை கார்ட்பெட்டியில் வச்சது தப்பாப் போச்ச்ச்ச்:))).. இனி அதை 1 வது கொம்பார்ட்மெண்ட்டுக்கு மாத்தோணும்:)))..

    //,பின்னூட்டம் போடவும் திறமை வேணும் போல,நம்ம கிட்ட அந்த தெம்பு இல்லை.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் இப்பூடிச் சொல்லித் தப்பவும் திறமை வேணும்போல:))) அந்தத்தெம்பு என்கிட்ட இல்லை:))))... நான் எப்பவும் இழிச்சவாய்தான்... ஹையோ ஹையோ:))).

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  97. மகி... எப்போ வந்தீங்க.. அவ்வ்வ்வ்வ் நான் நித்திரையாகிப்போனேனே....:)))

    ReplyDelete
  98. இழிச்சவாய்தான்...//

    spelling mistake karrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  99. //angelin said... 110
    இழிச்சவாய்தான்...//

    spelling mistake karrrrrrrrrrrrrrrr///

    ஹையோ..ஹையோ... சுதந்திரமா ஒரு பின்னூட்டம் போடவும் பயமாக்கிடக்கூஊஊஊஊஊஉ... தேடித்தேடித் தாக்குறாங்கப்பா:))))... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

    அப்போ இளிச்சவாயா கரீட்டு:)))

    வெடி சொடி.. எனக்கு இந்த “ளி” புடிக்காது:)) அதனாலதான் அந்த ழி போட்டேனாக்கும்:)))))).

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடியெல்லாம் தப்ப வேண்டிக்கிடக்கு.... ஒண்டு செய்வமோ.... எல்லோருமே சேர்ந்து ஒரு முடிவெடுப்பம்.... ழ அல்லது ள.... இதில ஒண்டை மட்டும் பாவிப்பம் மற்றதை இல்லாமல் ஒளிச்சிடுவமே பிளீஸ்ஸ்ஸ்ஸ்( ஹையோ இதிலயும் கனக்க ள வந்திட்டுதே))) சாமீஈஈஈஈ நான் ஓடிப்போய் சிக்கின் பிரட்டலை வைப்பதுதான் இப்போதைக்கு பெட்டர்...ட்டர்..ட்டர்...:)))

    ReplyDelete
  100. ஹா ஹா அப்ப இன்னிக்கு உங்க வீட்டில பட்டர் சிக்கன்

    ReplyDelete
  101. அதீஸ் சும்மா ஜாலிக்கு தான் கிண்டல் செய்தேன் எனக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுத வரும் ஆனா தேம்ஸ் ராணி உங்கள மாதிரியும் தங்க தாரகை மஞ்சள் மலர் மகி மாதிரியெல்லாம் அழகா கோர்வையா எழுத வராது

    ReplyDelete
  102. //ஒளிச்சிடுவமே //

    ok ok hide it ROFL:))):))):))):)))

    ReplyDelete
  103. //angelin said... 113
    அதீஸ் சும்மா ஜாலிக்கு தான் கிண்டல் செய்தேன்//

    நானும் அப்பூடித்தான்:))))... இன்று இருக்கிறோம் நாளை என்னவோ ஆருக்குத் தெரியும்... இருக்கும்வரை ஏதோ முடிந்தளவு கலகலப்பாக இருப்போமே....:))..

    ஹையோ... நான் ஒளிக்கிறேன்:)), பொருட்களை ஒழித்து:) வைக்கிறேன்... இப்போ ஓக்கேயா?:))))
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... உதவிக்கு கை கொடுக்க மாயாவையும் காணேல்லை..... ஆரோ சாயாவாம் தேடிப்போனார் என்னாச்சோ ஏதாச்சோ:)))))...

    ReplyDelete
  104. athira said... 102

    அஞ்சு மீஈஈஈஈஈ சூப்பர் மாட்டி... அஞ்சுவிடம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... மாயாவிடம் கேடுக் கேட்டுத்தான் எழுதப்போறேன் குழந்தைகள் உலகம் பற்றி:))...//

    ஹா ஹா ஒரு மீசை வைத்த குழந்தையிடம்.. குழைந்தைகள் உலகம் பற்றியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-)))))))))))))))))

    ReplyDelete
  105. athira said... 103

    ஆஆஆஆஆ..மாயா என்ன அடிக்கடி காணாமல் போறீங்க... அப்படி ஏதும் சே..சே.. இருக்காது நான் தான் பொண்ணு பார்க்கிறேனே மாயாவுக்கு:)))..//

    ஹா ஹா ஹா அம்பது வருசமானாலும் வெய்ட் பண்ணுவேன் பொறுமைய பாருங்க... ஆமா காட்டான் மாம்ஸ் கொவிச்கிக்கமாட்டாரா... அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  106. உதவிக்கு கை கொடுக்க மாயாவையும் காணேல்லை..... ஆரோ சாயாவாம் தேடிப்போனார் என்னாச்சோ ஏதாச்சோ:)))))... //

    சாயாங்குறது சாயா சிங் இல்ல.. அவ்வ்வ்வ்வ்வ் இதோ ஏஞ்சலின் சரியா சொல்லிட்டாங்க.... ஹா ஹா... எகைன் சாயா சாப்பிட்டு வரேன்... ;-))))

    ReplyDelete
  107. ஆஹா.. சாயா என்றால் இதுவா? அவ்வ்வ்வ்:)) நான் நினைத்தேன், மாயா போல அதுவும் ஒரு பெயராக்கும் என:)).

    //ஹா ஹா ஹா அம்பது வருசமானாலும் வெய்ட் பண்ணுவேன் பொறுமைய பாருங்க... ஆமா காட்டான் மாம்ஸ் கொவிச்கிக்கமாட்டாரா... அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    ஹா..ஹா...ஹா... உங்களுக்கு 60 வயதானாலும் அவர் பொண்ணு தரமாட்டார்.. அப்பவும் சுயம்வரம்தான் நடத்துவார்:)))))... ஹையோ.. படிச்சதும் கிழிச்சிடுங்க மாயா.. சாயா:))

    ReplyDelete
  108. இதுதான் வழி எனத் தெரிந்தால்,
    முள்ளிலேயும் நடந்துவிட முடியும் - ஆனால்
    எது வழி எனத் தெரியாதபோது,
    என்ன செய்ய முடியும்?..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.