நல்வரவு_()_


Saturday, 25 August 2012

மறக்க முடியாத பிறந்த நாட்கள்!!



வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்தித்திருப்போம், எத்தனையோ பிறந்தநாளைக் கொண்டாடியிருப்போம், ஆனா அவற்றில் சில மனதில் நீங்காததாகிவிடும். அப்படியானவற்றில் இரண்டு.....

கொஞ்சக்காலம் அப்பாவோடு, குவாட்டேஷில் இருந்தகாலம். பக்கத்துக் குவார்ட்டேஷில் என்னை விட இளைய ஒரு தங்கை, பெயர் சிந்து. ஆனா நாம் இருவரும், நல்ல திக் ஃபிரெண்ட்ஸ். அவவின் அக்காவுக்கும் எனக்கும் ஒரே வயது, ஆனா அக்காவோடு நான் ஒட்டில்லை, சிந்துவும் நானும்தான் எல்லாமே கதைப்போம்.

சிந்து கிட்டத்தட்ட ஒரு நல்ல புரிந்துணர்வுள்ளவ.  நீதி, நியாயம் எனத்தான் நாம் கதைப்போம்:), அதுக்காக எதிர்த்து சண்டையும் பிடிப்போம்:). ஆனா இவவின் புரிந்துணர்வை வீட்டில் ஆரும் ஏற்பதில்லை:). அவ கடைசிப் பிள்ளை என்பதால் செல்லமும் கொஞ்சம் ராங்கியும். அதனால வீட்டில் வாய் காட்டி ஏச்சும் வாங்குவா:). ஆளும் அழகானவ. அதனால பிரச்சனைகளும் அவவுக்கு அதிகம். வீட்டில் எதையும் சொல்ல முடியாது, ஏனெனில் அவர்களுக்கு பொஸிட்டிவ்வாக எடுக்கத் தெரியாதாம், இவவுக்குத்தான் ஏச்சு விழுமாம். அதனால எல்லாம் பிரச்சனைகளும் எனக்கே சொல்லுவா.

நான் தான் ஞானி:) ஆச்சே... எங்கட கண்ணதாசன் சொன்னதிலிருந்து, தத்துவங்கள், பொன் மொழிகள் எல்லாம் சொல்லி, ஆளைப் பாதுகாப்பேன், ஆறுதலைக் கொடுப்பேன். அவவும், நான் என்ன சொன்னாலும் அப்படியே ஆமோதித்து கேட்டு நடப்பா.

அவவுக்கு பிறந்ததினம் ஜனவரி 12 ஆம் திகதி. என் பிறந்ததினத்துக்கும் மறக்காமல் பரிசு தருவா, நானும் அதேபோல் கொடுப்பேன்.

ஒரு தடவை அவவுக்கு பிறந்ததினம் வரப்போகிறதெனத் தெரிந்து, நல்ல ஒரு அழகான ஸ்கேட் அண்ட் பிளவுஸ் வாங்கினேன். கார்ட்டும் வாங்கி, எல்லாம் பக் பண்ணி எடுத்து வைத்துவிட்டேன்.

எனக்கு ஆருக்காவது ஒரு குட்டிப் பரிசுப்பொருள் வாங்கினாலும், அதை உடனே கொடுக்கோணும், அதுக்கு அவர்கள் உடனே பதில் தரோணும், அது அவர்களுக்குப் பிடிக்குமோ என்றெல்லாம் எண்ணுவேன். இப்படித்தான், அந்தத் தடவை, மனதிலே பெரிய மனக்கோட்டை கட்டினேன்.

என்னெண்ணா:)). 12ம் திகதி விடியவே ஃபோன் பண்ணி விஸ் பண்ணுவனாம், பின்பு 9 மணிபோல, எல்லோரும் வேர்க் க்குப் போயிடுவினம், பெண்கள் ஆட்சியாக இருக்கும், பெரீய குவாட்டேர்ஷ், பெரீய வளவு, காலையில் சில்லெனக் காத்தடிக்கும், மாமாரங்கள் அசையும்... அந்த 9 - 11 காலை நேரம், அந்நேரத்து அமைதி.. அதெல்லாம் எப்பவுமே எனக்குப் பிடிக்கும், .... அந்த நேரம் ஒரு சொல்லவொண்ணா சந்தோசமாக இருக்கும். 

அப்போ நல்ல அழகாக வெளிக்கிட்டு, சிந்து வீட்டுக்குப் போய், நேரில் விஷ் பண்ணி, பிரசண்டையும் கொடுக்கோணும் என, மனக்கோட்டை ரெக்கை கட்டிப் பறக்குது எனக்கு:).  [குட்டிக்குறிப்பு:): சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:))]. அவவுக்குப் பிரசண்ட் வாங்கியதிலிருந்து.. ஒரே இந்த நினைப்புத்தான், ஆருக்கும் என்னவும் வாங்கிட்டால், அதைக் கொடுக்கும்போதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கும்.

என்னில் ஒரு பழக்கம், கடனே என எப்பவுமே எதுவும் செய்ய மாட்டேன், அப்படியே மனம் வைத்து, கிட்டத்தட்ட அப்பொருளில் என் மனம் இருக்கும், அப்படித்தான் கொடுப்பேன், அதில் எனக்கு வரும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது.

இப்படியே கற்பனை வானில் மிதந்து,ஜனவரி 10 ம் திகதியும் வந்திட்டுது, அதில ஏதோ ஒரு மயக்கமாகி, என் கண்ணை விதி மறைச்சு:), 12 ம் திகதி அன்று, அதாவது பிறந்தநாளன்று, 11ம் திகதி என நினைச்சிட்டேன். அப்போ அன்று காலை முழுக்க இதே நினைவு....  நாளைக்கு சிந்துவுக்கு பேர்த்டே... விடியப் போகோணும்.. இப்படி எல்லாம். இத்தனைக்கும் எங்கட குவாட்டேஷிலிருந்து ஒரு 40,50 அடி தூரம்தான் அவர்களுடைய குவாட்டேர்ஸ்.:). பக்கத்தில பக்கத்தில.

அப்போ அன்று காலை, நான் வீட்டில் இருக்கிறேன், ஒரு 11 மணிபோல, சிந்துவின் அக்கா வந்து என்னமோ தந்தா.

என்ன.....  என்றேன்...
இது கேக் என்றா.... ஒரு புன்னகையோடு...

நானும் வாங்கிட்டு வந்தேன், அப்பகூட என்ன நினைத்தேன் தெரியுமோ.... சிந்துவுக்கு நாளைக்கு பேர்த்டேக்கு கேக் செய்திருக்கினம், இன்று சும்மா சாம்பிளுக்கு தந்திருக்கிறா என்றுதான். நாங்கள் வழமையாக உணவு வகைகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். என் கிட்னியில் கொஞ்சம் கூட சந்தேகமே எழவில்லை, ஏனெனில் அன்று 11ம் திகதியேதான் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன்(என்னில் அவ்வளவு நம்பிக்கை எனக்கு:)).

சரி இது முடிஞ்சு நாங்க லஞ்சும் முடிச்ச பின்பு, நானும் அம்மாவும் படுத்திருப்பது வழக்கம், இருவரும் நன்கு கதைப்போம்..  அப்போ நான் அம்மாவிடம் சொன்னேன், நாளைக்கு 12ம் திகதி, நான் விடியவே போய் சிந்துவுக்கு பிரசண்ட் கொடுக்கப் போறேன் என.

உடனே அம்மா கேட்டா, இண்டைக்கெல்லோ 12? கலண்டரைப் பார் என... எனக்கு கறண்ட் கம்பி அறுந்து என்மேல் விழுந்துவிட்ட உணர்வு, படுத்திருந்தே கலண்டரைப் பார்த்தேன், அன்றுதான் 12.  அப்படியே கட்டிலால் பாய்ந்தேன் கீழ.. அச்சம்பவம் இப்பவும் கண்ணுக்குள் நிக்குது.  “கடவுளே!!! அம்மா.. சிந்து என்ன நினைக்கப்போறா, கேக் தந்தும் நான் பேசாமல் இருந்தேனே” எனப் புலம்பியபடி, ஓடிப்போய் முகம் கழுவி வெளிக்கிட்டுப் பறந்தேன் சிந்து வீட்டுக்கு.. நேரம் 2.30 இருக்கும்.

போய் மூச்செடுக்காமல், மேலே எழுதியதெல்லாம் புலம்பி, உண்மையைச் சொல்லி பிரசண்ட்டையும் கொடுத்து விட்டு வந்தேன். சிந்துவுக்குத் தெரியும், என்னைப் பற்றி, நான் வேண்டுமென எதுவும் செய்ய மாட்டேன், இது ஏதோ ஒன்று கண்ணை மறைத்து விட்டது என.

இதை ஆராவது, இல்லை நீ மறந்தது தப்பு, எப்படி மறக்கலாம் எனக் கேட்க முடியுமோ? அது நியாயமோ? ஏனெனில் பேர்த்டே வரப்போகுதென, நான் கட்டிய கோட்டையும், பின்பு திகதி மாறுப்பட்டதும், நான் துடித்த துடிப்பும் எனக்குத்தான் தெரியும், அதை உணராமல் மறந்தது தப்பு என ஆரும் சொல்ல முடியுமோ... சொன்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது..:)).
======================================================
இப்பதிவே நீண்டு விட்டது, அடுத்ததை எப்பூடி எழுதுவேன் சாமி:)).. ஆனாலும் எழுதிடுறேனே. இது ஏற்கனவே “அங்கின” ஒரு கதையில் சொல்லியிருப்பதாக நினைவு... இருப்பினும் வலையுலகில் தெரியாமையால் எழுதுகிறேன்.
என்னில் ஒரு குணம், எனக்குப் பிடித்தோருக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வேன்(பிறந்ததினம் தெரிந்தால்), அதிலும் சிலருக்கு , சாமம் 12 க்கே சொல்ல வேணும், அதுவும் நான் தான் முதல் ஆளாகச் சொலோணும் எனத் துடிப்பேன், இல்லாட்டில் எனக்கு கவலை வந்திடும்.

அப்படித்தான் ஒரு தடவை, என் கணவரின் பிறந்ததினம், மறுநாள் விடுமுறையாக்கும், நாம் படுக்கவில்லை, அப்போ 12 க்கு நான் தான் முதல் ஆளாக விஸ் பண்ணுவேன் என அவருக்கும் தெரியும். அப்படியிருக்க, அவரின் ஒன்றுவிட்ட தங்கை, 11.45 அப்படி ஃபோன் பண்ணிக் கதைச்சுக் கொண்டிருந்தா, அவவும் 12 க்கு விஸ் பண்ணும் ஐடியாவோடு,கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா..ஹா..ஹா..

அப்போ நேரம் 12 ஆகியது, கணவருக்கு தெரியும்:), நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால்,  உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) ச்சும்மா ஒரு கதைக்குச் சொல்கிறேன்ன்:), பிறகு என்னை எப்பூடியாம் சமாளிக்கிறது:), அதனால ஃபோன் கதைச்சுக் கதைச்சு எனக்கு கையைக் கையை நீட்டுறார், என்னவெனில் விஸ் பண்ணுங்க என, எனக்கு இலகுவில் புரியாது:) அன்று டக்கென பத்திட்டுது:)), ஓடிப்போய்க் கை கொடுத்து முதலாவதாக விஸ் பண்ணிட்டேன்,... இதெல்லாம் ஒரு குழந்தைப் பிள்ளை விளையாட்டுத்தான், என்றாலும் அதில எனக்கொரு பெரு மகிழ்ச்சி:).

ப்படித்தான், ஹொஸ்டலில் இருந்த காலத்தில், என் பெஸ்ட் பிரெண்ட், இங்கிருக்கிறாவெல்லோ, அவவுக்கு பிறந்ததினம்.  ஹொஸ்டலில் ஒரு பழக்கம், இரவில் படித்துக் கொண்டிருப்போர், நண்பர்களுக்கு பிறந்ததினம் எனத் தெரிந்தால், நித்திரை கொள்வோராயினும் தட்டி எழுப்பி 12 க்கு விஸ் பண்ணுவினம்.

அதனால நான் வலு கவனம், என் நண்பிக்கு நான் தான் முதல் முதலா வாழ்த்துச் சொல்லோணும் என்று. அவவும் அப்படித்தான் எனக்குச் சொல்வா. இப்ப கேட்டுப் பாருங்கோ அதிராவுக்கு எப்போ பி.தினம் என..?:), அதிராவுக்கு எப்ப? இப்படித்தான் கேட்பா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). ( எண்டு நினைக்கிறன்).

சரி அன்றும் அப்படித்தான், ரூம் லைட் போட்டபடி,  பெட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தோம், விஸ் பண்ணும் நினைப்பிலேயே நானும் நித்திரையாகிட்டேன்,  நித்திரையானபோது 10 மணியிருக்குமாக்கும். நண்பியும் நித்திரையாகிட்டா, இருவரும் பக்கத்து பக்கத்துக் கட்டில், ஒட்டப் போட்டு வைப்போம். ஏனையோர் (என் அக்கா உட்பட) படிச்சுக் கொண்டிருக்கினம்.

நான் நன்கு நித்திரையாகிட்டேன்.. டீப் ஸ்லீப். டக்கெனக் கண்ணை முழிச்சேன், அதேபோல எல்லோரும் படிச்சுக் கொண்டிருக்கினம், நண்பி நல்ல நித்திரை. நான் என்ன நினைத்தேன் என்றால், விடிந்து விட்டது, எல்லோரும் எழும்பிப் படிக்கினம் என. உடனே நண்பியை உலுக்கி உருட்டினேன், தட்டி எழுப்பினேன், அவ பாதிக்கண்ணைத் திறந்தபடி எழும்பினா, எட்டிக் கையைப் பிடிச்சு இழுத்து ஹப்பி பேர்த்டே என விஸ் பண்ணினேன்.....

உடனே படிச்சுக் கொண்டிருந்தோரெல்லாம் பெரிய சத்தமாகச் சிரிக்கினம்... எமக்கு எதுவும் புரியவில்லை, அப்போதான் சொன்னார்கள் நேரத்தைப் பாருங்கோ என:) பார்த்தேன் .....ஙேஙேஙேஙேஙே... 11 மணி, அவர்கள் ஒருவரும் படுக்கவில்லை:))... பின்பு எல்லோரும் சேர்ந்து சிரிச்சதில் நித்திரை போய் விட்டது, நாமும் முழிச்சிருந்து 12 க்கு ஒயுங்கா:) விஷ் பண்ணிட்டுப் படுத்தேன். இதெல்லாம் வாழ்க்கையில் மனதை விட்டு நீங்க நினைவுகள்.

ஊசி இணைப்பு:
அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... 
சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)

=====================================================
 “சில நேரங்களில் உண்மையான அன்பும் தோற்றுவிடும்,
உரிமை இல்லாதவரிடம் காட்டும்போது”
====================================================

137 comments :

  1. பேசாமல் பிறந்தநாள் பல்புக்கள் என்று தலைப்பை வைத்திருக்கலாம்.

    ReplyDelete
  2. ////[குட்டிக்குறிப்பு:): சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:)////

    ஆமா நீங்க மட்டும்தான் அப்படியாக்கும் உலகத்தில முக்காவாசி பெண்கள் இப்படித்தானே இருக்காங்க

    ஒரு பெண்ணின் உண்மையான அழகை பார்கனும் என்றால் அவள் காலையில் கண்விழித்ததும் பார்கனும் என்று எங்கோ படித்த ஞாபகம் ஏன் என்றால் அப்பறம் மேக்கப் போட்டுவிடுவார்களாம் அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. Make up போட்டுக்கிட்டீங்களா? அதான் கமெண்ட் போடப்போறேனே.. பிறந்த நாளைப்பற்றி பல உண்மைகளை மனம்திறந்து சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. உங்கள் கணவர் உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். முதலில் விஷ் பண்ணாவிட்டால் பிறந்த நாளைக்கொண்டாட முடியாமல் அடம்பிடித்துவிடுவாள். எதுக்கு வம்பு என்று நினைத்திருப்பார்.

    ReplyDelete
  5. உரிமை இல்லாதவரிடம் எதுக்கு அன்பு காட்டுகிறீர்கள்?

    ReplyDelete
  6. அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... அப்போ.... லட்டு கொடுத்தால் லட்டைப்பெறுவோமா!

    ReplyDelete
  7. மேக் அப் போட்டுக்கிட்டு விளையாட , ம்ம் ஹி
    ஹி
    அனைவருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் அதிகம் அதில் இது


    ஹிஹி

    // அதனால ஃபோன் கதைச்சுக் கதைச்சு எனக்கு கையைக் கையை நீட்டுறார், என்னவெனில் விஸ் பண்ணுங்க என, எனக்கு இலகுவில் புரியாது:)

    என்ன் மாதிரியே...

    ReplyDelete
  8. அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்....
    சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)

    ithu eppaa???

    ReplyDelete
  9. நான் தான் முதல் ஆளாக விஸ் பண்ணுவேன் //

    இது மட்டும் உடனே கண்ணில் பட்ருச்சி ..இப்ப அரவசம வெளில போறோம் ...வந்து விலா வரியா விளக்கறேன் ,,,

    ReplyDelete
  10. அம்முலுவுக்கு இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  11. அம்முலுவுக்கு என் இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    பகிர்வுக்கு மிக்க நன்றி அதிரா!
    நேரம் போதவில்லை மீண்டும் வருவேன்:)

    ReplyDelete
  12. வணக்கம்,அதிரா!எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியசகி ஓனர் மகிக்கு.கிராமத்துக் கருவாச்சியும்(கலைச்செல்வி)தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறார்.

    ReplyDelete
  13. angelin said...

    நான் தான் முதல் ஆளாக விஸ் பண்ணுவேன் //

    இது மட்டும் உடனே கண்ணில் பட்ருச்சி ..இப்ப அரவசம வெளில போறோம் ...வந்து விலா வரியா விளக்கறேன் ,,,//////தப்புத்,தப்பா டைப்பிய அஞ்சலின்,கருவாச்சி "கலை"யின் வேண்டுகோளுக்கிணங்க பென்ச் மேல் ஏறி நிற்கவும்!

    ReplyDelete
  14. Happy Birthday to Ammulu!

    Athira,//12 ம் திகதி அன்று, அதாவது பிறந்தநாளன்று, 11ம் திகதி என நினைச்சிட்டேன்.// how is it possible??!? ggggrrrrrrrrr!*1000!!

    //அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், // kik kik kik! :D :D


    //நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால், உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) // Poor Mr.Athira! ;) :)

    Nice photos and cool video! :) :)

    ReplyDelete
  15. வாங்கோ ராஜ் வாங்கோ.. இம்முறை பேர்த்டே கேக் உங்களுக்கே...

    ///K.s.s.Rajh said...
    பேசாமல் பிறந்தநாள் பல்புக்கள் என்று தலைப்பை வைத்திருக்கலாம்.///

    ஹா..ஹா..ஹா.. இது...தான் பல்ப்புகளோ?..இவை எல்லாம் சொகமான:) நினைவுகளெல்லோ:).

    ReplyDelete
  16. K.s.s.Rajh said... 2
    ////
    ஆமா நீங்க மட்டும்தான் அப்படியாக்கும் உலகத்தில முக்காவாசி பெண்கள் இப்படித்தானே இருக்காங்க///

    karrrrrrrrrrrrrrrr:) நான் மேக்கப் எனச் சொன்னது, பிங் பவுடர் போட்டு:), லிப்ஸ்டிக் அடிப்பதை அல்ல:), முகம் கழுவி, தலை இழுத்து, நல்ல உடுப்பு மாத்தித்தான் போவேன் என்னேன் கர்ர்ர்ர்:)).., அது பக்கத்து வீட்டு முற்றத்தில் நின்று விளையாடக் கூப்பிட்டாலும் கூட:), நின்றபடியே ஓடிட மாட்டேன்ன்:)..

    சரி அதை விடுங்கோ... நெஞ்சில வலது கையை டச்சு பண்ணிச் சொல்லுங்கோ:) மேக்கப் போடு, ஸ்டைலா ட்ரெஸ் பண்ணு என உலகில் பெண்களை ஊக்குவிப்பது ஆர்?:))) பெண்களா பெண்களை ஊக்குவிக்கினம்?:))) ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஊ:).

    மியாவும் நன்றி ராஜ்.

    ReplyDelete
  17. வாங்கோ விச்சுசூசூ.. வாங்கோ...இண்டைக்கு விச்சுவை சூ..சூ.. என விரட்ட மாட்டனே:) ஏன் தெரியுமோ... ஹா..ஹா..ஹா.. கீழ படியுங்க:)


    \\\\\விச்சு said... 3
    Make up போட்டுக்கிட்டீங்களா? அதான் கமெண்ட் போடப்போறேனே.

    ஹா..ஹா..ஹா.. மேக்கப் போட்டது நான் மட்டுமில்ல:) எங்கட ஆயாவும்தான்:).. ஹையோ விச்சு ஓடாதீங்க... என் புளொக் வழக்கப்படி 2வதாக கொமெண்ட் போடுபவரோடு, இருமிக்கொண்டிருக்கும் 90 வயசு ஆயாவை அனுப்பி வைப்பது வயக்கம்:)...

    அதுதான் ஆயா அடம்புடிச்சு மேக்கப் பண்ணிக்கொண்டிருக்கிறா:), பத்திரமா அவவை ஏசி போட்ட காரில கூட்டிட்டுப் போங்கோ:)... ஆடாமல் அசையாமல் காரை ஓடோணும்:)... ஏனெனில் அவ ஹார்ட் பேஷண்ட்:)))).

    ஆவ்வ்வ் என்னால சிரிச்சு முடியுதில்ல, கற்பனை பண்ணினேன் முடியுதில்லை:).. நேரமாகுது பின்பு வருகிறேன் மிகுதிப் பதில்களுக்கு, அதுவரை மன்னிப்பூஊஊஊஊஊ:).

    ReplyDelete
  18. அழகான பதிவு மிக மிக அழகு......
    நிறையப்பேருக்கு இப்படி சம்பவங்கள் நடந்திருக்கும் ஆனால் அவற்றினை இப்படி ஞாபகம் வைத்திருந்து அழகாக தொகுத்து தருவதென்பது சிரமமான காரியம்....

    நான் கூட எத்தனையோ பேரிடம் இப்படி ஏமாந்துள்ளேன் என் நண்பன் என யாரனெ அறிமுகம் இல்லாதவரிடம் கதைத்துவிட்டு பிறகு அவரிடம் வலிந்தது என் ஞாபகத்துக்கு வந்தது பதிவினை படிக்கும் போது...

    ReplyDelete
  19. [குட்டிக்குறிப்பு:): சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:))].
    //////////////////////////////////////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....சுறா படத்துல ஓப்பனிங் சீன் ஞாபத்துக்கு வருகுது

    ReplyDelete
  20. இதை ஆராவது, இல்லை நீ மறந்தது தப்பு, எப்படி மறக்கலாம் எனக் கேட்க முடியுமோ? அது நியாயமோ? ஏனெனில் பேர்த்டே வரப்போகுதென,...///////////////////////////////////////////////////////

    தப்பு என சொல்ல முடியாது ஆனாலும் பக்கத்து பக்கத்து குவாட்டசில் இருக்கும் மற்றைய குவாட்டசில் நடக்கும் விசேசம் விளங்காமளா உங்கள் ஆசைக் கற்பனைகளை வளர்த்தீர்கள்..... கேக்கெல்லாம் செய்திருக்கிறார்கள் அப்போ விமர்சையாகத்தான் கொண்டாடியிருப்பார்கள் .... உங்கள் அம்மா கூட அதில் கலந்து கொள்ளவில்லையா....

    ReplyDelete
  21. “சில நேரங்களில் உண்மையான அன்பும் தோற்றுவிடும்,
    உரிமை இல்லாதவரிடம் காட்டும்போது”
    //////////////////////////////

    உண்மை...:) வாழ்வில் அனுபவிக்க வில்லை வலையுலகில் அனுபவித்துள்ளேன்....

    ReplyDelete
  22. //அதுவும் நான் தான் முதல் ஆளாகச் சொலோணும் எனத் துடிப்பேன், இல்லாட்டில் எனக்கு கவலை வந்திடும்.//

    :))))


    ReplyDelete
  23. இது ஏதோ ஒன்று கண்ணை மறைத்து விட்டது என.//

    may be fish :)))ROFL

    ReplyDelete
  24. மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:))].//

    எப்பிடி எப்பிடி ??நின்றபடி எப்படி ஓட முடியும் ..
    ஜெய் உடனே வாங்க ..விளக்கப்படுத்துங்க

    ReplyDelete
  25. நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால், உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) ச்சும்மா ஒரு கதைக்குச் சொல்கிறேன்ன்:), //

    ஹா ஹா :))) உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு அதீஸ் KEEP IT UP :))

    ReplyDelete
  26. உண்மை அதிரா!. எல்லோருக்கும் நிச்சயம் மனதைவிட்டு அகலாத நினைவுகள் நிறையவே இருக்கும்.
    அப்படி உங்கள் நினைவலைகளை நீங்கள் மீட்டியபோது எங்களையும் எமது நினைவுகளை அசைபோட வைத்துள்ளீர்கள்;))
    நல்ல பதிவு!

    பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே.......

    ReplyDelete
  27. சிரிச்சுச் சிரிச்சு எனக்குக் கண்ணெல்லாம் நிரம்பிப் போச்சுது. ;)

    பிரியாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. athira said...//என் புளொக் வழக்கப்படி 2வதாக கொமெண்ட் போடுபவரோடு, இருமிக்கொண்டிருக்கும் 90 வயசு ஆயாவை அனுப்பி வைப்பது வயக்கம்:)அதுதான் ஆயா அடம்புடிச்சு மேக்கப் பண்ணிக்கொண்டிருக்கிறா:), பத்திரமா அவவை ஏசி போட்ட காரில கூட்டிட்டுப் போங்கோ:)... ஆடாமல் அசையாமல் காரை ஓடோணும்:)... ஏனெனில் அவ ஹார்ட் பேஷண்ட்//
    ஆஆஆ...(கமல் பாணியில் அழுவுறேன்) எனக்கு இதயமுள்ள ஒரு ஆயா. அதான் ஹார்ட் பேசண்ட்டுன்னு சொன்னீங்களே... ரொம்ப நன்றி athira . அவங்களை ஆடாமல் அசையாமல் பத்திரமா பார்த்துக்கிடுவேன். மேக்கப் ரொம்ப போடவேண்டாம். பிறகு ஹன்சிகான்னு நினச்சுருவேன். ஆயாவோட அப்படியே அந்த ஏஸி போட்ட காரு எனக்குத்தான?

    ReplyDelete
  29. Happy birthday Ammulu akka..

    wish you happy birthday to you..
    wish you happy birthday to you..
    wish you happy birthday to you......

    ReplyDelete
  30. உண்மையில் அழகான பழக்கம்
    உங்களுடையது
    எங்க போனாலும் மேக்கப் போட்டு போறது (இதை சொல்ல வில்லை )
    அனைவருக்கும் முதலில் வாழ்த்த வேண்டும் நினைக்கும் எண்ணமே அழகு
    அதில ஒரு சந்தோசமும் வரும்
    ஊசி குறிப்பு சூப்பர்

    ReplyDelete
  31. அம்முலுவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    //இதெல்லாம் ஒரு குழந்தைப் பிள்ளை விளையாட்டுத்தான், என்றாலும் அதில எனக்கொரு பெரு மகிழ்ச்சி:).//
    எனக்கும்..

    ReplyDelete
  32. //விச்சு said... 4
    உங்கள் கணவர் உங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார். முதலில் விஷ் பண்ணாவிட்டால் பிறந்த நாளைக்கொண்டாட முடியாமல் அடம்பிடித்துவிடுவாள். எதுக்கு வம்பு என்று நினைத்திருப்பார்.//


    ஹா..ஹா..ஹா.. இந்த எதிர்ப்பாலாரே இப்பூடித்தான்:) எப்பவுமே நெக்கட்டிவாவே திங் பண்ணுறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எந்த வீட்டிலாவது எந்தக் கணவனாவது தன் பேர்த்டேயைத் தானே கொண்டாடுவதுண்டோ?:).. நாமதான்(அதாவது மனைவிமார்) துள்ளிக் குதித்து கொண்டாடுவோம்..:))..

    இதில எங்கயாம் நாங்க குழப்புறது.... இதெல்லாம் ஒருவித அதீத அன்பின் வெளிப்பாடென எடுக்காமல்... மாத்தி ஓசிச்சு:) பிறந்த நாள் குழம்பிடும் எனக் கை கொடுத்திருப்பாராம் கர்ர்ர்ர்:))

    சரி அதை விடுங்கோ.. இங்கின அட்டகாசமாகக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒருவர்:)).. பூஸுக்கு இரையாகுபவர்:))(முடிஞ்சாக் கண்டுபிடிங்க:) எனக்கு மெயில் அனுப்பியிருந்தா,
    “அதிரா இதேதான் எங்கட வீட்டிலயும், நான் ஃபோன் வயரைக் கழட்டி, மொபைலை எல்லாம் சுவிஜ் ஓவ் பண்ணி விட்டிடுவேன், நாமதானே முதல்ல விஷ் பண்ணோனும்..” என:).

    இப்ப புரியுதோ? எங்கட வீட்டில மட்டுமில்ல எல்லா வீட்டிலயும் இதுதான் நடக்குது:)).. ஆனா பூஸிட துணிவு ஆருக்கும் இல்ல:)) அதுதான் உண்மை..சொல்லமாட்டாங்க என்னேன்....:)).. ஹையோ வெயா இஸ் மை முருங்க்ஸ்ஸ்ஸ்:))..

    ReplyDelete
  33. //விச்சு said... 5
    உரிமை இல்லாதவரிடம் எதுக்கு அன்பு காட்டுகிறீர்கள்?//

    ஹையோ முருகா.. விச்சு இம்முறை ஒரே குரொஸ் குவெஷனாக்:) கேட்கிறார் முருகா.. இதையெல்லாம் பார்த்திட்டும் காக்கா போறீங்களே முருகா:))..

    இல்ல விச்சு, இது என் அனுபவம் இல்லை, படிச்சதில் பிடிச்சது, நல்லா இருந்துது சுட்டிட்டேஏஏஏஏஏன்ன்ன்:)).

    ஆனா இதில எனக்கு தெரிஞ்ச கருத்து என்னவெனில், உரிமை இல்லாதவரிடம் ஏன் அன்பு காட்டுறீங்க என்பதல்ல... அன்பு என்பது தானாக வருவதுதானே, அடுத்தவர் சொல்லி வருவதல்ல... அப்படி அன்பாகப் பழகும்போது, அந்த அன்பைப் புரிஞ்சு கொள்ளாமல்... மனம் நோகும்படி அவர் நடப்பின்... ஏண்டா அன்பு வச்சோம், உரிமை கொண்டாடினோம் எனக் கவலை வருமெல்லோ.... அதுதான்....
    [“அதாவது, உண்மை அன்பு என்ன பண்ணுமெனில், ஒருவர் சொன்னதைக் கவனிக்காது, அவர் சொல்ல வந்ததைத்தான் கவனிக்கும்...” இது ஏற்கனவே பூஸ் ரேடியோவில் சொலியிருக்கிறென்ன்... தேடினேன் இப்போ கிடைக்குதிலை.]

    அந்தக் கவலையும் எல்லோரோடும் வராது, மனதால உண்மையான அன்பு வச்சுப் பழகினால் மட்டுமேதான் கவலை வரும், இல்லையெனில் ஆரும் திட்டினாலும்.. ஆஆஆஆ காகம் திட்டி மாடு செத்திடுமோ எண்டுதான் எண்ண வரும்.

    ReplyDelete
  34. //விச்சு said... 6
    அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... அப்போ.... லட்டு கொடுத்தால் லட்டைப்பெறுவோமா!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஏன் உதரணத்துக்குக்கூட திருப்பதி லட்டுத்தான் கிடைச்சுதோ?:) ஒரு ஐ ஃபொன், ஐ பாட்.. சம்சங் கலக்‌ஷி.. இப்பூடிச் சொன்னல் என்னவாம்?:))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி விச்சு.

    ReplyDelete
  35. வாங்கோ ஜலீலாக்கா வாங்கோ..

    //
    // அதனால ஃபோன் கதைச்சுக் கதைச்சு எனக்கு கையைக் கையை நீட்டுறார், என்னவெனில் விஸ் பண்ணுங்க என, எனக்கு இலகுவில் புரியாது:)

    என்ன் மாதிரியே...//

    ஹ..ஹா...ஹா...

    //Jaleela Kamal said... 8
    அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்....
    சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா:)

    ithu eppaa???//

    ஹா..ஹ...ஹா.. நேற்றுத்தான்:)).

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  36. வாங்கோ அஞ்சு வங்கோ..
    //angelin said... 9
    நான் தான் முதல் ஆளாக விஸ் பண்ணுவேன் //

    இது மட்டும் உடனே கண்ணில் பட்ருச்சி //

    ஹா...ஹா..ஹா... புரியுது... புரியுது:) “ஒத்த அலை வரிசை”:)

    ReplyDelete
  37. வாங்கோ யங்மூன் வாங்கோ.. நேரம் கிடைக்கும்போது வாங்கோ...
    மியாவும் நன்றி.

    ReplyDelete
  38. வாங்கோ யோகா அண்ணன்...

    //Yoga.S. said... 12
    வணக்கம்,அதிரா!எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியசகி ஓனர் மகிக்கு.//

    வாழ்த்துக்கு நன்றி.
    அது மகி இல்ல யோகா அண்ணன், அம்முலு என்கிற பிரியா:).

    //கிராமத்துக் கருவாச்சியும்(கலைச்செல்வி)தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறார்.//

    கலை இன்னும் நாடு:) திரும்பவில்லைப் போலும்:).

    ReplyDelete

  39. Yoga.S. said... 13

    தப்புத்,தப்பா டைப்பிய அஞ்சலின்,கருவாச்சி "கலை"யின் வேண்டுகோளுக்கிணங்க பென்ச் மேல் ஏறி நிற்கவும்!///

    இல்ல யோகா அண்ணன்.. இப்ப மாத்தி யோசிச்ச இடத்தில, தண்ணி இல்லாத கடல்ல நீந்தச் சொல்லோணும்:))) அதுதான் பணிஸ்மெண்ட்:).

    ReplyDelete
  40. வாங்கோ மகி வாங்கோ..

    Mahi said... 14
    Happy Birthday to Ammulu!

    Athira,//12 ம் திகதி அன்று, அதாவது பிறந்தநாளன்று, 11ம் திகதி என நினைச்சிட்டேன்.// how is it possible??!? ggggrrrrrrrrr!*1000!! ///

    ஏன் சூப்பமான் படட்தில, உலகத்தைப் பின்னுக்கு கொண்டு வருவாரெல்லோ அவர்?:)) அவிங்களை எல்லாம் குரொஸ் குவெஷ்ஷன் கேக்காயினம்:), ஒரு அப்பாவி, சுவீட் 16 பேபியை:) உருட்டி உருட்டிக் கேக்கினம்:)).

    ////நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால், உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) // Poor Mr.Athira! ;) :) ///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    மியாவும் நன்றி மகி, கெதியா வாற வழியைப் பாருங்க:)) இங்கு தனகுவதுக்கு எனக்கு ஆள் இல்லாமல் இருக்கு:)).

    ReplyDelete
  41. எக்ஸ்கியூஸ் மீ! வீட்டில ஆக்கள் ஆரேன் இருக்கினமோ? ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு! இதுதான் சரியான சந்தர்ப்பம்! ம்ம்ம்.... இண்டைக்கு என்னத்தையாவது வசமா சுருட்டோணும்! இப்பவெல்லாம் ஆக்கள் வலு உசாராம்! சாமம் 12 மணிக்கும் முழிப்பாய் இருப்பினமாம்!....... பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லத்தான்!



    சரி சரி எதுக்கு தேவையில்லாத கதை? சுருட்ட வேண்டியதைச் சுருட்டுவோம்!

    ReplyDelete
  42. முதலில் பிறந்தநாளைக் கொண்டாடும் அம்முலு மேடத்துக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  43. மறக்க முடியாத பிறந்த நாட்கள்!!/////

    அப்ப மறக்க முடிந்த பிறந்தநாட்கள் என்றும் ஏதாவது இருக்கோ??

    இல்ல.... ச்சும்மா ஒரு டவுட் அடான் கேட்டனான்!

    ReplyDelete
  44. வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்தித்திருப்போம், /////

    அப்பிடியோ? ஆனா நான் ஆக்களை வாழ்க்கையில சந்திக்கிறேலை! எங்கயாவது கோயில், குளம், ஸ்கூல், மார்க்கெட் இந்தமாதிரி இடங்களில தான் சந்திக்கிறனான் :-))

    ReplyDelete
  45. ஆனா நாம் இருவரும், நல்ல திக் ஃபிரெண்ட்ஸ். அவவின் அக்காவுக்கும் எனக்கும் ஒரே வயது //////

    ஓஹோஓஓஓஓ! அப்ப அவவின் அக்காவுக்கு எத்தினை வயசு? அவவும் ஸ்வீட் 16 தான் இருக்கிறாவோ?

    இதுவும் ஒருடவுட் தான் :-)

    ReplyDelete
  46. ஆளும் அழகானவ. அதனால பிரச்சனைகளும் அவவுக்கு அதிகம். /////

    அழகா இருந்தா பிரச்சனை வருமோ? அப்ப ஏன் எனக்கு இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் வரேலை??

    ReplyDelete
  47. நான் தான் ஞானி:) ஆச்சே... எங்கட கண்ணதாசன் சொன்னதிலிருந்து, தத்துவங்கள், பொன் மொழிகள் எல்லாம் சொல்லி, ஆளைப் பாதுகாப்பேன், ////

    உது உண்மையோ? என்னால நம்பவே முடியேலை!

    உப்புடித்தான் நான் பாலர் வகுப்புப் படிக்கேக்க, எங்கட ஸ்கூல ஏ எல் படிக்கிற ஒரு அண்ணை வந்து, தனக்கு காதல் தோல்வி எண்டும், தன்னை ஏதாவது சொல்லி ஆறுதல் படுத்தச் சொல்லியும் கேட்டார்!

    உடன நான் அவருக்கு பொன்மொழிகள், பழமொழிகள், திருக்குறள், நாலடியார், ஆசாரகோவை, நாலடியார், திருவாசகம், திருவெம்பாவை, திருச்சிற்றம்பலம், திருப்புகழ், திரு வீடியோ விஷன், திரு சுப்பர் மார்க்கெட் எல்லாம்..... சொல்லி ஆறுதல்படுத்தினன்!

    அந்தாள் தலை தெறிக்க ஓடி்ட்டார்! ஏன் ஓடினவர் எண்டுதான் தெரியேலை :-))

    ReplyDelete
  48. வாங்கோ ஜிட்டு வாங்கோ...

    //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....சுறா படத்துல ஓப்பனிங் சீன் ஞாபத்துக்கு வருகுது//
    ஹா...ஹா.. ஹா... சூசைட் பண்ணும்போதும் மேக்கப் போட்டுத்தான் பண்ணுவமாக்கும்:).

    ReplyDelete
  49. சிட்டுக்குருவி said... 20
    தப்பு என சொல்ல முடியாது ஆனாலும் பக்கத்து பக்கத்து குவாட்டசில் இருக்கும் மற்றைய குவாட்டசில் நடக்கும் விசேசம் விளங்காமளா உங்கள் ஆசைக் கற்பனைகளை வளர்த்தீர்கள்..... கேக்கெல்லாம் செய்திருக்கிறார்கள் அப்போ விமர்சையாகத்தான் கொண்டாடியிருப்பார்கள் .... உங்கள் அம்மா கூட அதில் கலந்து கொள்ளவில்லையா....////

    இல்ல ஜிட்டு, அப்படியெல்லாம் கொண்டாட்டமேதுமில்லை, கேக் என்பது சும்மா வீட்டில் செய்வதுதானே..

    ReplyDelete
  50. சிட்டுக்குருவி said... 21

    உண்மை...:) வாழ்வில் அனுபவிக்க வில்லை வலையுலகில் அனுபவித்துள்ளேன்....///

    ஆஆ மிக்க நன்றி ஜிட்டு அனைத்துக்கும்.

    ReplyDelete
  51. angelin said... 24
    மேக்கப் பண்ணியே போவேன், நிண்டபடி ஓடமாட்டேன்:))].//

    எப்பிடி எப்பிடி ??நின்றபடி எப்படி ஓட முடியும் ..
    ஜெய் உடனே வாங்க ..விளக்கப்படுத்துங்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உப்பூடிக் கூப்பிடக்கூடா:)) 4 தேள், 5 நட்டுவாக்கலி, 3 பாம்பு முட்டை, 2 கொசு முடை இருக்கு ஜெய்ய்ய்ய்ய்ய்ய் ஓடிவாங்கோஓஓஓஓ.... இப்பூடித்தான் கூப்பிடோணும்...

    ReplyDelete
  52. angelin said... 25
    நான் முதலாவதாக விஸ் பண்ணாவிட்டால், உருண்டு பிரண்டு கத்துவனெல்லோ:) ச்சும்மா ஒரு கதைக்குச் சொல்கிறேன்ன்:), //

    ஹா ஹா :))) உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு அதீஸ் KEEP IT UP :))///

    ஆஆஆஆஆஅ நேக்குச் ஷை ஆ வருது:)

    ReplyDelete
  53. அதிராஆஆ ரெம்ப ரெம்ப‌ நன்றிகள். எனக்கு பிறந்தநாள்வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு.

    ReplyDelete
  54. உங்க நல்ல குணத்துக்கு இக்கதைகள் ஒரு சான்று அதிரா.மிகவும் நகைச்சுவையாகவும் இருந்தது.இப்படியே தொடர்ந்து இருங்கோ.படங்களும்,வீடியோவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  55. பிறந்தநாள்வாழ்த்துக்கள் கூறிய அன்புள்ளங்கள் ஆன அஞ்சு,இளமதி,யோகாஅண்ணன்,மகி,இமா,சிவா ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  56. //மாத்தியோசி - மணி said... 42

    முதலில் பிறந்தநாளைக் கொண்டாடும் அம்முலு மேடத்துக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!//
    படத்துடன் கூடிய வாழ்த்து போட்டத்துக்கும்,உங்க வாழ்த்துக்கும் மணியம் கஃபே ஓனருக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  57. மாமாரங்கள் //
    நீங்க நினைவுகள்.//

    மியாவ் மியாவ் பூசார் பதிவிலேயே ரெண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பது கலை கண்ணுக்கு தெரியலா ஆனா ...நான் அரவசமா அவ்வவ் அவசரமா டைப்பினது எப்பூடி கண்ணுக்கு கலை கண்ணுக்கு பட்டது அவ்வ்வ்வவ் :)

    ReplyDelete
  58. அதீஸ் நீங்க கேள்வி ஏதும் கேட்டீங்களா ??? ஆமா யார் அது :))

    ReplyDelete


  59. இப்படியா(WITH MAKE UP ) போவீங்க :)விஷ் செய்ய ?:))

    ReplyDelete
  60. அன்பு நிறைந்த அதிரா!
    உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    இன்று திருமணநாள் காணும் நீங்கள்
    நோய் நொடி துன்பங்கள் இன்றி
    நிறைந்த ஆயுள் ஆரோக்கியமுடன்
    பல்லாண்டு காலம் இனிதே வாழ வேண்டும் என்று
    உளமார வாழ்த்துகின்றேன்!

    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  61. அன்பு சகோதரர்களே! இன்று எங்கள் அன்பிற்குரிய அதிராவின் திருமணநாள். அவரின் இந்த பதிவினூடாக உங்களுக்கும் இவ்விஷயத்தை தெரிவிப்பதில் மனம் மகிழ்வுறுகிறேன்:)
    நன்றி!

    ReplyDelete
  62. நான் ஜேர்மனிய நேரப்படி 27ம் திகதி ஆனவுடன் வாழ்த்திவிட்டேன். அதிராவின் திருமணநாள் 27.08.12 ஆகிய இன்றுதான்.

    ஐரோப்பிய லண்டன் நேரக்குழப்பம். பொறுத்துக்கொள்ளுங்கள்:))

    அதிரா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  63. ஆஹா! நன்றி இளமதி.

    திரு & திருமதி அதிராவுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

    ReplyDelete
  64. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா.
    இன்றுபோல் எப்பொழுதும் இனிய,மனமொத்த தம்பதியினராக வாழ வாழ்த்துகிறேன்.

    நன்றி இளமதி.

    ReplyDelete
  65. // Asiya Omar said...

    அம்முலுவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
    //இதெல்லாம் ஒரு குழந்தைப் பிள்ளை விளையாட்டுத்தான், என்றாலும் அதில எனக்கொரு பெரு மகிழ்ச்சி:).//
    எனக்கும்..//
    உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  66. அடடே!இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அதிரா!!!!!!!!

    ReplyDelete



  67. ..இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  68. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அதிரா.மனமொத்த தம்பதியினராக பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  69. இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அதிரா!!

    ReplyDelete
  70. //சின்ன வயதிலிருந்தே எனக்கொரு பழக்கம், அருகில் இருக்கும் வீட்டுக்கு விளையாடப் போவதாயினும், மேக்கப் பண்ணியே போவேன், //


    //நிண்டபடி ஓடமாட்டேன்:))].//
    நின்றபடி நீங்க மட்டுமில்ல, யாருமே ஓட முடியாது... ஓடியபடிதான் ஓடனும் :)

    //சிந்துவுக்கு நாளைக்கு பேர்த்டேக்கு கேக் செய்திருக்கினம், இன்று சும்மா சாம்பிளுக்கு தந்திருக்கிறா என்றுதான்.//
    என்னங்க இது கொடுமையா இருக்கு... பெர்த்டே கேக் கூடவா ஒருநாள் முன்னாடி சாம்பிளுக்கு தருவாங்க..?

    //அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... //
    ஆள் தெரியாம அன்பை கொடுத்த அடி பெறவும் வாய்ப்புள்ளது :)

    பின்குறிப்பு: நீங்க Aunty அப்படிங்குற விடயம் இங்க யாருக்கோ தெரிஞ்சிருக்கு.. :)


    ReplyDelete
  71. உங்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் !! :) (ஸ்ஸ்ஸ்ஸ் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்) :):)

    ReplyDelete
  72. ///இளமதி said... 62
    நான் ஜேர்மனிய நேரப்படி 27ம் திகதி ஆனவுடன் வாழ்த்திவிட்டேன். அதிராவின் திருமணநாள் 27.08.12 ஆகிய இன்றுதான்.///

    இண்டைக்கு நான் மூனைப்(ய்ங்மூனை:)) பிடிக்காமல் விடமாட்டேன்ன்ன்ன்...:)) காத்திருந்து.. சொல்லி.. சும்மா இருந்த சங்கை:) எல்லாம் ஊதிக் கெடுத்த கதையாக்கிடக்கே ஜாமீ:)))

    காதைக் கொண்டு வாங்கோ.. எதுக்கு இதெல்லாம்... மியாவும் நன்றி.

    சரி நான் மேல இருந்து வாறேனே பதில்களுக்கு.

    ReplyDelete
  73. ஹையோ எங்கின விட்டேன் சாமீஈஈஈஈஈ:)) ஆ.. பிடிச்சுட்டேன்ன்ன்ன்:) நான் விட்ட இடத்தைச் சொன்னேன்ன்ன்ன்:)...

    //இளமதி said... 26
    உண்மை அதிரா!. எல்லோருக்கும் நிச்சயம் மனதைவிட்டு அகலாத நினைவுகள் நிறையவே இருக்கும்.
    அப்படி உங்கள் நினைவலைகளை நீங்கள் மீட்டியபோது எங்களையும் எமது நினைவுகளை அசைபோட வைத்துள்ளீர்கள்;))
    நல்ல பதிவு!

    பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே.......//

    மியாவும் நன்றி யங்மூன்.

    ReplyDelete
  74. வாங்கோ இமா...

    //இமா said... 27
    சிரிச்சுச் சிரிச்சு எனக்குக் கண்ணெல்லாம் நிரம்பிப் போச்சுது. ;)//

    டிஷ்யூ வேணுமோ இமா?:))..
    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி....

    ReplyDelete
  75. விச்சு said... 28

    ஆஆஆ...(கமல் பாணியில் அழுவுறேன்) எனக்கு இதயமுள்ள ஒரு ஆயா. அதான் ஹார்ட் பேசண்ட்டுன்னு சொன்னீங்களே... ரொம்ப நன்றி athira . அவங்களை ஆடாமல் அசையாமல் பத்திரமா பார்த்துக்கிடுவேன். மேக்கப் ரொம்ப போடவேண்டாம். பிறகு ஹன்சிகான்னு நினச்சுருவேன். ஆயாவோட அப்படியே அந்த ஏஸி போட்ட காரு எனக்குத்தான?


    ஹா..ஹா..ஹா.. ஆயாவுக்கு ஹார்ட் இருக்கு:)) ஆனா எப்ப நிக்குமோ ஆண்டவனுக்கே ஐ மீன் நம்மட முருகனுக்கே வெளிச்சம்:))

    ஆசையைப் பாருங்கோவன்:)) எங்காவது ஹயர் பண்ணியாவது ஏசிக்கார் கொண்டு வந்து ஏத்திப் போங்கோ:)) ஏசியைக் கூட்டி வைக்க வேணாம்:), அவவுக்கு அதிகம் குளிரும் ஒத்து வராது:)

    ReplyDelete
  76. வாங்கோ குட்டிச் சிங்கம் சிவா...

    //Siva sankar said... 30
    உண்மையில் அழகான பழக்கம்
    உங்களுடையது
    எங்க போனாலும் மேக்கப் போட்டு போறது (இதை சொல்ல வில்லை )///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) மியாவும் நன்றி சிவா......

    ReplyDelete
  77. வாங்கோ வாங்கோ மணியம் கஃபே ஓனர்போல தெரியுது, ஆனா ஏன் முகத்தை மூடியிருக்கிறார் எனத் தெரியேல்லையே:).

    ///மாத்தியோசி - மணி said... 41
    எக்ஸ்கியூஸ் மீ! வீட்டில ஆக்கள் ஆரேன் இருக்கினமோ? ஒருத்தரும் இல்லைப் போல கிடக்கு! இதுதான் சரியான சந்தர்ப்பம்! ம்ம்ம்.///

    ஹையோ இன்னும் குல தொழிலைக் கைவிடேல்லைப்போல இருக்கே சாமீஈஈ.., முருகா இது என்ன சோதனை, அங்கின உந்த முகமூடி தலை ஆட்டும் எண்டு பயந்துதானே வெளிநாட்டுக்கு வந்தோம்ம்.. இங்கயுமோ... ஆஆஆஆ ......

    ReplyDelete
  78. //மாத்தியோசி - மணி said... 43
    மறக்க முடியாத பிறந்த நாட்கள்!!/////

    அப்ப மறக்க முடிந்த பிறந்தநாட்கள் என்றும் ஏதாவது இருக்கோ?? //

    நாம் எல்லாம் ஆர்? வழிப்போக்கர்தானே? நாம் பயணம் செய்யும் வழியில் எத்தனை பேரை வாழ்த்தியிருப்போம், கார்ட்கூட வாங்கிக் கொடுத்திருப்போம், எல்லாமே நினைவில் இருக்காதுதானே:) ......

    ReplyDelete
  79. மாத்தியோசி - மணி said... 44
    வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்தித்திருப்போம், /////

    அப்பிடியோ? ஆனா நான் ஆக்களை வாழ்க்கையில சந்திக்கிறேலை! எங்கயாவது கோயில், குளம், ஸ்கூல், மார்க்கெட் இந்தமாதிரி இடங்களில தான் சந்திக்கிறனான் :-//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  80. மாத்தியோசி - மணி said... 45

    ஓஹோஓஓஓஓ! அப்ப அவவின் அக்காவுக்கு எத்தினை வயசு? அவவும் ஸ்வீட் 16 தான் இருக்கிறாவோ?

    இதுவும் ஒருடவுட் தான் :-)//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எல்லோருமே பூஸைமாதிரி:)) சுவீட் 16 லதான் இருப்பினம் என எதிர்பார்க்கப்பூடா:)))... இது ஆண்டவன் கொடுக்கிறான்ன்.. அதிரா இருக்கிறா.. நான் சுவீட் 16 ஐச் சொன்னேனாக்கும்:) ......

    ReplyDelete
  81. மாத்தியோசி - மணி said... 46

    அழகா இருந்தா பிரச்சனை வருமோ? அப்ப ஏன் எனக்கு இதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் வரேலை??///

    அழகா இருந்தால் மட்டும்தானே பிரச்சனைகள் வருமெனச் சொன்னேன்ன்ன்:))).. ஹையோ:) மணியம் கஃபே ஓனர்.. பொல்லுக் கொடுத்தே அடிவாங்குறாரே:).. விடுங்கோ விடுங்கோ வழிவிடுங்கோ:).. ......


    ReplyDelete
  82. மாத்தியோசி - மணி said... 47

    அந்தாள் தலை தெறிக்க ஓடி்ட்டார்! ஏன் ஓடினவர் எண்டுதான் தெரியேலை :-))///

    haa..haa...haa... உங்கட தேவாரம், திருப்புகழைவிடக், காதல் தோல்வி எவ்ளோ பெட்டர் என ஓடியிருப்பார்ர்:)). ......

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  83. வாங்கோ அம்முலு வாங்கோ...

    எங்கட அம்மாவுக்கும் உங்களுக்கும் ஒரே நாளில் பிறந்ததினம், எங்கட மாமிக்கும்(கணவரின் அம்மா) எங்களின் திருமணநாளும் ஒரே நாளில்.. அதாவது இன்று. அதனால எதையும் மறக்க முடியாது.

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  84. angelin said... 57
    மாமாரங்கள் //
    நீங்க நினைவுகள்.//

    மியாவ் மியாவ் பூசார் பதிவிலேயே ரெண்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பது கலை கண்ணுக்கு தெரியலா ஆனா ...நான் அரவசமா அவ்வவ் அவசரமா டைப்பினது எப்பூடி கண்ணுக்கு கலை கண்ணுக்கு பட்டது அவ்வ்வ்வவ் :)///

    ஹா..ஹா..ஹா... அதுதானே சொல்லுவினம், குரு செய்தால் குற்றமில்லை என:) எங்கிட்டயேவா?:).

    ReplyDelete
  85. angelin said... 58
    அதீஸ் நீங்க கேள்வி ஏதும் கேட்டீங்களா ??? ஆமா யார் அது :))///

    ஹா..ஹா..ஹா... கேள்வி கேட்டிருந்தேன், ஆனா அது கோல்ட் ஃபிஸ்:)தான் என்பதை ஆரும் கண்டு பிடிக்கேல்லைப்போல:).

    பிங் தொப்ப்பியும், பிங் போ..வும் அயகு:)

    ReplyDelete
  86. //இளமதி said... 60
    அன்பு நிறைந்த அதிரா!
    உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!!//

    மியாவும் நன்றி.
    ஆளை பாக்கில போட்டு ஷிப்பையும் பூட்டிப் பார்த்தேன், அதை உடைத்துக்கொண்டு வந்து, பப்ளிக்கில அவிட்டு விட்டிட்டா:))

    ReplyDelete
  87. மியாவும் நன்றி.
    இமா, அம்முலு, யோகா அண்ணன்.. அஞ்சு...

    ReplyDelete
  88. வாங்கோ சங்கீத நம்பி.. மிக்க நன்றி.

    ReplyDelete
  89. வாங்கோ மனோ அக்கா.. நானும் நீண்ட நாட்களாக அங்கு வரத் தவறிட்டேன், மன்னிக்கவும். வாழ்த்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  90. Sharon said... 72
    Happy Anniversary Aunty!

    :DD

    Hi Sharon Bunny!! how are you?..

    Thank you very much for your lovely wishes..
    this is for you dear...



    ReplyDelete
  91. ஆஆஆஆஆஆ.. அதரது நம்மட கவிக்காவோ?:))) என்னல நம்பவே முடியேல்லையே:) எங்க போயிருந்தீங்க இவ்ளோ காலமும்?...

    சரி வாழ்த்த வயதில்லை என்றிட்டீங்க:)) வயதானோர் எல்லோரும் வணங்கத்தான் செய்வினம்:)..


    //என்னங்க இது கொடுமையா இருக்கு... பெர்த்டே கேக் கூடவா ஒருநாள் முன்னாடி சாம்பிளுக்கு தருவாங்க..?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))




    ReplyDelete
  92. ////அன்பைக் கொடுங்கள்... அன்பைப் பெறுவீர்கள்.... //
    ஆள் தெரியாம அன்பை கொடுத்த அடி பெறவும் வாய்ப்புள்ளது :)//

    ஒருவரின் அன்புக்காக எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆள் தெரியாதோருக்கு எதுக்கு, வலியப் போய் அன்பைக் கொடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    //பின்குறிப்பு: நீங்க Aunty அப்படிங்குற விடயம் இங்க யாருக்கோ தெரிஞ்சிருக்கு.. :)
    ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) லேட்டா வந்தாலும், இதெல்லாம் ஒயுங்கா தெரிஞ்சிடுதே..:)..

    மியவும் நன்றி கவிக்கா... இனிக் காணாமல் போயிடாமல் அடிக்க..டி(க்க) வாங்கோ...

    ReplyDelete
  93. அதீஸ்! யாருமில்லா நேரத்திலை வந்து ரகசியமாய்ய்ய் எல்லாருக்கும் பூ குடுத்துட்டு ஓடீட்டிங்களா:)))

    சரி சரி உங்க கட்டுப்பாடையும் மீறி வெளியாலை பப்ளிக் பண்ணீட்டன்னு உர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர் வேண்டாமே;)

    பாருங்கோ எல்லோர் முகத்திலும் எம்புட்டு சந்தோஷம் ;)
    எல்லாரும் எங்களின் தோழர்கள். அவர்களுக்குத்தானே சொன்னேன்:)))


    ஆ... உங்க அத்தைக்கும் எங்களின் வாழ்த்துக்கள்! இல்லை இல்லை வணக்கங்கள்_()_

    ReplyDelete



  94. புதிதாக ஒரு பூஸார்!!!!

    ReplyDelete
  95. வாலாட்டம்மா ரெம்ப நல்லாஇருக்கூஊஊஊஊ
    3 வது வாலாட்டம்மா வில் ஒரு ட் சேருங்கோ.

    ReplyDelete
  96. :) 101
    பதிவில் போட்டதைவிட,சைட்டில் போட்டதும் அழகு கூடிட்டுது பூஸாருக்கு.

    ReplyDelete
  97. ம் ம். பூஸார் எப்பவுமே எங்கை நின்னாலுமே அயகுதானே;)

    பிரியா! அது பூஸார் ரொம்ப வாலை ஆட்டினாங்களா அதுதான் 3வதுதரம் ஆட்டும்போது ஆஆஆட்டம் ஜாஸ்தி ஆகி ட் வுழுந்து போச்ச்ச்ச்ச்:)))

    ஐயோ நான் ஒண்ணும் சொல்லலைப்பா! அம்முதான் ஆரம்பிச்சா நான் பின் பாட்ட்ட்ட்ட்.....

    ReplyDelete
  98. முதலில் அம்முலுவுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பூஸ் நீங்க முதல்ல வாழ்த்து சொல்லலேன்னா ஜோகம் ஆயிடுவீங்கன்னு எனக்கு தெரியுமே எப்புடின்னேல்லாம் கேக்க கூடாது :)) உங்க அனுபவங்கள் எல்லாம் அருமை. ஆனா உங்க வீ.காரர் எ நெனைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு :))

    இங்கினே எனக்கு ஒரு டவுட்டு. உங்க பையனுங்களுக்கு திருமணம் ஆகும் போது அவங்க பொண்டாட்டிங்க தானே முதல்லே வாழ்த்து சொல்லுவாங்க அப்போ என்ன பண்ணுவீங்க ?????

    நிண்டபடியே ஓடுறத பத்தி எல்லாரும் டவுட்டு கேட்டுட்டாங்க அதனால உங்கள டென்ஷன் பண்ணலே :))

    வாலாட்டம்மா ரொம்ப அழகா பூ வெச்சுகிட்டு இருக்காங்க

    ReplyDelete
  99. //
    இளமதி said...
    அதீஸ்! யாருமில்லா நேரத்திலை வந்து ரகசியமாய்ய்ய் எல்லாருக்கும் பூ குடுத்துட்டு ஓடீட்டிங்களா:)))

    சரி சரி உங்க கட்டுப்பாடையும் மீறி வெளியாலை பப்ளிக் பண்ணீட்டன்னு உர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர் வேண்டாமே;)//

    ஹா..ஹா..ஹா... விடமாட்டனில்ல, உடனேயே ஆக்‌ஷெப்ட் பண்ணிட்டா. உலகம் என்னை என்ன நினைப்பினம்:)).. கொஞ்சம் உப்பூடித்தான் லெவல் காட்டோணும்:)) சரி சரி படிச்சதும் கிழிச்சு, ரோல்ஸ் பொரிக்கும் எண்ணெய்க்குள் போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்::)

    ReplyDelete
  100. //ஆ... உங்க அத்தைக்கும் எங்களின் வாழ்த்துக்கள்! இல்லை இல்லை வணக்கங்கள்_()_
    //

    மிக்க நன்றி யங்மூன்...

    ReplyDelete
  101. //
    priyasaki said...
    வாலாட்டம்மா ரெம்ப நல்லாஇருக்கூஊஊஊஊ
    3 வது வாலாட்டம்மா வில் ஒரு ட் சேருங்கோ.//

    சேர்த்திட்டேன்ன்ன்ன்..

    //
    priyasaki said...
    :) 101
    பதிவில் போட்டதைவிட,சைட்டில் போட்டதும் அழகு கூடிட்டுது பூஸாருக்கு.///

    ஆவ்வ்வ்வ்வ் ஊரெல்லாம் புகைப் புகையாத் தெரியுதே ஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்?:))

    ReplyDelete

  102. இளமதி said...
    ம் ம். பூஸார் எப்பவுமே எங்கை நின்னாலுமே அயகுதானே;)

    பிரியா! அது பூஸார் ரொம்ப வாலை ஆட்டினாங்களா அதுதான் 3வதுதரம் ஆட்டும்போது ஆஆஆட்டம் ஜாஸ்தி ஆகி ட் வுழுந்து போச்ச்ச்ச்ச்:)))

    ஐயோ நான் ஒண்ணும் சொல்லலைப்பா! அம்முதான் ஆரம்பிச்சா நான் பின் பாட்ட்ட்ட்ட்....///

    இண்டைக்கு விடமாட்டேன்ன் நேற்றும் கலைச்சேன்ன் ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஉ:)) இண்டைக்கு நோ மிஸ்ட்டூ:)) பிடிச்சே தீருவேன்ன்ன்.. நான் மூனைச் சொன்னேன்:))

    ReplyDelete
  103. // இமா said...
    ..டு ;)))//

    மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் ஓடிவாங்கோ றீச்சர் இங்கிலீஸில பிழையாச் சொல்றா....:)) வன் எண்டுதானே ஆரம்பிக்கோணும்.. அவ ரூ என ஆரம்பிக்கிறா:)))..ஹையோ போற வழியில புண்ணியம் கிடைக்கும் என்னை ஆரும் காடிக்கொடுத்திடாதையுங்கோ:))

    ReplyDelete
  104. ஆஆஆஆஆஆஅ.. வாங்க கீரி வாங்க... இப்பத்தான் வாறீகளோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க ஓல்ரெடி வந்திட்டீங்க எண்டெல்லோ நினைச்சேன்ன்:)))

    // En Samaiyal said...


    பூஸ் நீங்க முதல்ல வாழ்த்து சொல்லலேன்னா ஜோகம் ஆயிடுவீங்கன்னு எனக்கு தெரியுமே எப்புடின்னேல்லாம் கேக்க கூடாது :)) உங்க அனுபவங்கள் எல்லாம் அருமை. ஆனா உங்க வீ.காரர் எ நெனைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு :)) ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவர் சும்மா இருந்தாலும், இப்பூடிச் சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விட்டிடுவினம்போல இருக்கே முருகா...:)))

    ReplyDelete

  105. En Samaiyal said...

    இங்கினே எனக்கு ஒரு டவுட்டு. உங்க பையனுங்களுக்கு திருமணம் ஆகும் போது அவங்க பொண்டாட்டிங்க தானே முதல்லே வாழ்த்து சொல்லுவாங்க அப்போ என்ன பண்ணுவீங்க ????? ///


    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது நாமதான் விட்டுக்கொடுக்கோணும், உங்களுக்கு ஒன்று தெரியுமோ? பெற்றோர் பழக்குவதுதானே பிள்ளைகளுக்கு வரும்....

    எங்கட மாமா, மாமி(கணவரின் பெற்றோர்) தன் மகனுக்குச் சொல்வது,
    அதிராவைக் கேட்டு முடிவெடுங்க....

    ஒரு கருத்தைச் சொல்லிச் சொல்லுவினம், இது எங்கள் விருப்பம், ஆனா அதிராவோடு கலந்து ஆலோசித்து அவவின் விருப்பப்படி முடிவெடுங்க...

    இப்படி அவர்கள் சொல்லிக் கொடுத்தேதான் என் கணவரும் அப்படியே பழகிட்டார், ஆனா மாமா மாமி இப்படிச் சொல்வதனால், எனக்கும் அதுக்கு மேலால அவர்களுக்கு விட்டுக்கொடுக்கோணும் எனும் எண்ணம்தான் எப்பவுமே வரும்.... இப்போ மாமா இல்லை:(.

    ReplyDelete
  106. //நிண்டபடியே ஓடுறத பத்தி எல்லாரும் டவுட்டு கேட்டுட்டாங்க அதனால உங்கள டென்ஷன் பண்ணலே :)) ///

    அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //வாலாட்டம்மா ரொம்ப அழகா பூ வெச்சுகிட்டு இருக்காங்க//

    அதில ஒரு ரகசியம் இருக்கு:)) பதிவில் போட்டேன்ன் ஆருமே அதைப்பற்றிச் சொல்லவில்லை, எனக்கோ கவலை, அதனால தூக்கி மேலே போட்டேன், இப்போ எல்லோர் கண்ணும் அதன்மேலே:)) எனக்கும் மகிழ்ச்சி...

    இதுக்குத்தான் அன்றே நம்மட கண்ணனின் தாசன் சொல்லிட்டாரோ..

    இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்ல் எல்லாம் அழகுதான்ன்ன்:)).. ஆவ்வ்வ்வ்வ்:))..

    மியாவும் நன்றி கீரீஈஈஈஈ.. அடிக்கடி வாங்கோ.. ஐ மீன் வாலாட்டும் பூஸு பார்க்க:).

    ReplyDelete
  107. ஆனா உங்க வீ.காரர் எ நெனைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு :)) ///

    சே சே !!! நான் அப்படி சொல்லமாட்டேன்
    ரொம்ப பாவம் //இப்படித்தான் சொல்வேன் ஹாஆ :)))))))
    மியாவ் வாலாட்டம்மாவை நேத்திக்கே பார்த்தேன் ..
    ஆனா பதிவின் சுவாரஸ்யத்தில் விடுபட்டிச்சு ..

    ReplyDelete
  108. angelin said... 113
    ஆனா உங்க வீ.காரர் எ நெனைச்சா கொஞ்சம் பாவமா இருக்கு :)) ///

    சே சே !!! நான் அப்படி சொல்லமாட்டேன்
    ரொம்ப பாவம் //இப்படித்தான் சொல்வேன் ஹாஆ :)))))))////

    karrrrrrrrrrrrrrrrrr:))..

    //மியாவ் வாலாட்டம்மாவை நேத்திக்கே பார்த்தேன் ..
    ஆனா பதிவின் சுவாரஸ்யத்தில் விடுபட்டிச்சு ..///
    again karrrrrrrrrrrrrrr:)

    ReplyDelete
  109. தன்கியூ ஃபிரெண்ட்:)) இப்போ கை எட்டுது:)) இதோ 2 நிமிடத்தில் ஃபிஸ் ஃபிரை ரெடீஈஈஈஈஈ:)) சுவீட் சில்லி சோஸும், கெச்சப்பும் எடுங்கோ:))

    ReplyDelete



  110. haaa a:))))))))))

    ஓஹோ !! இது தான் எழுபது /முப்பது ரேசியோவா:))))ஆனா அவர் பாவம் உங்க பிரண்டைதான் சொன்னேன் :)))))))

    ReplyDelete
  111. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது நாமதான் விட்டுக்கொடுக்கோணும், உங்களுக்கு ஒன்று தெரியுமோ? பெற்றோர் பழக்குவதுதானே பிள்ளைகளுக்கு வரும்....//

    ஆஅ ஆ :)) அப்படின்னா என் பொண்ணு ?????????
    ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா ??????

    ReplyDelete
  112. நான் போட்ட பின்னூட்டங்களுக்கு, எனக்கு மிகவும் பிடிச்ச கிரீன் கலரில ஆரோ பின்னூட்டம் போட்டிருக்கினம் எண்டு,பி பி ஸி யில சொல்லிச்சினம்! அதைக் கேட்டு மகிழ்ச்சியில ஓடோடி வந்தா, இஞ்ச ஒரே பிங் கலர்ல கிடக்கு!

    முருகா, உன்னோட பக்தைகள் எல்லாம் ஏன் இப்படி இருக்கினம் எண்டு கேட்டுச் சொல் முருகா :-))

    ReplyDelete
  113. angelin said... 116
    haaa a:))))))))))

    ஓஹோ !! இது தான் எழுபது /முப்பது ரேசியோவா:))))ஆனா அவர் பாவம் உங்க பிரண்டைதான் சொன்னேன் :)))))))////

    haa..haa...haa...

    ReplyDelete
  114. //angelin said... 117
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது நாமதான் விட்டுக்கொடுக்கோணும், உங்களுக்கு ஒன்று தெரியுமோ? பெற்றோர் பழக்குவதுதானே பிள்ளைகளுக்கு வரும்....//

    ஆஅ ஆ :)) அப்படின்னா என் பொண்ணு ?????????
    ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா ??????//

    ஹா..ஹா.... என்னாச்சு அஞ்சூஊஊஉ?..

    பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளைச் சேருமடி... என்பதும் உண்மையாம்ம்ம்... மாம் விதை போட்டால் மாமரம் முழைக்காமல் புளியமரமா முளைக்கும் எண்டெல்லாம், எங்கட “ஞானி”.. அதாவது பூஸானந்தா தீட்சையின்போது ஜொல்லித் தந்தவை:)))

    ReplyDelete
  115. //மாத்தியோசி - மணி said... 118
    நான் போட்ட பின்னூட்டங்களுக்கு, எனக்கு மிகவும் பிடிச்ச கிரீன் கலரில ஆரோ பின்னூட்டம் போட்டிருக்கினம் எண்டு,பி பி ஸி யில சொல்லிச்சினம்! அதைக் கேட்டு மகிழ்ச்சியில ஓடோடி வந்தா, இஞ்ச ஒரே பிங் கலர்ல கிடக்கு!//

    ஆஆஆஆஆஆ பிரான்ஸில ஏதோ பீரங்கிக்குள்ள ஏறி இருந்தவையாம்:) அது வெடிச்ச வெடியில பிரித்தானியாவில வந்து விழுந்திருக்கினம்போல:)) விழுந்த வேகத்தில கேள்வியைப் பாருங்கோவன்:)).

    நான் முருகனோட கொஞ்சம் தனியாப் பேசோணும்:-

    “முருகா, காதைக் கழுவிட்டு நான் சொல்றதைக் கேழுங்கோ முருகா”:)... எங்கட எதிர்ர்பாலார் “சிலர்” இருக்கினம் முருகா:), எதுக்கெடுத்தாலும் சந்தேகம் போல முருகா!!:)... நல்லதையே நினைக்காயினமாம் முருகா:)..

    பச்சையில வராட்டில் என்ன சொல்லியிருக்கோணும்:), அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:), அவ பச்சையிலதான் எழுதியிருப்பா:), அது வெளிவரும்போது ஏதோ பை மிஸ்ரேக் ஆகிப்போச்சுதாக்கும் என நினைக்காமல்... பீரங்கிக்குள்ள இருந்து வந்த வெடிமாதிரி எல்லே முருகா துள்ளீனம்:)).. புரிஞ்சே கொள்ளயினமாம் முருகா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ முருகா வெடி சொடி இந்தக் கர்ர்ர்ர்ர்ர் உங்களுக்கில்ல:)).

    நான் டார்க் கிரீன் எண்டுதான் முருகா போட்டனான், வெளியிடும்போது “டார்க்” என்பதை அழிக்க நினைச்சன் முருகா:), ஆனா மறந்திட்டன்:) இது தப்போ முருகா:).. இங்கிலீஷில கிரீன் முருகா, ஆனா டமில்ல பிங்ல வருதே:)... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    இப்ப பபபபபச்சை எல்லாம் தெரியுதோ?:)

    அடுத்தவரை மகிழ்விப்பதே நம் மகிழ்ச்சி...., அதுக்காக நாம் என்னவும் செய்வோம்ம்.. எதையும் தாங்குவோம்ம்:).. ஐ மீன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம்ம்:)).. சொன்னவர் புலாலியூர் பூஸானந்தா அடிகளார்:))

    ஹையோ என்னை ஆராவது காப்பாத்துங்கோ.. நான் அந்தப் பீரங்கிக்குள் போய் ஒளிக்கப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))).



    //முருகா, உன்னோட பக்தைகள் எல்லாம் ஏன் இப்படி இருக்கினம் எண்டு கேட்டுச் சொல் முருகா :-))//

    நாங்க முருகனைக் கூப்பிடுவோம், கற்பூரம் கொழுத்துவோம், நேர்த்தி வைப்போம், ரகசியம் பேசுவோம், ஆனா பக்தை ஆக மாட்டோம்ம்ம்ம்:))) இது எப்பூடி?:)) எங்கிட்டயேவா:)).

    ReplyDelete



  116. மியாவ் :)) எனக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் கழித்துதான் சமைக்கவே அதாவது ஒயுங்கா சமைக்க கத்துக்கிட்டேன் அந்த ஹிஸ்டரி
    ரிப்பீட் ஆகுமான்னு கேட்டேன் பூசானந்தா ஆ ஆ .

    ReplyDelete
  117. வாழ்க்கையில் மனதை விட்டு நீங்காத அருமையான நினைவுகள்.

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  118. angelin said... 122
    மியாவ் :)) எனக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் கழித்துதான் சமைக்கவே அதாவது ஒயுங்கா சமைக்க கத்துக்கிட்டேன் அந்த ஹிஸ்டரி
    ரிப்பீட் ஆகுமான்னு கேட்டேன் பூசானந்தா ஆ ஆ

    //அவ்வ்வ்வ்வ் உதையோ கேட்டீங்க?:)).. அது ரிப்பீட் ஆகுவதுதான் பெட்டரூஊஊஊ:))

    ஏனெனில் இப்போ பெண்களை விட ஆண்கள்தான் சமையல் வல்லுனர்கள், அத்தோடு அவர்களுக்குத்தான் சமையலில் ஆர்வமும் அதிகம்:))).. ஹையோ ஹையோ... இப்போ எட்டடி பாய்ஞ்சல் வருங்காலம் 16 அடி பாயுமெல்லோ.. நான் எதிர்ப்பாலாரைச் சொன்னேன்ன்ன்:)))

    சோ டோண்ட் வொரி அஞ்சு:))

    ReplyDelete
  119. பூஸ்ஸ்ஸ் ஒன்று புறப்படுதே.. ஜிங்கமாக:)).. [அ]சிங்கமாக:)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

    ReplyDelete
  120. This comment has been removed by the author.

    ReplyDelete
  121. பக்கத்துக் குவார்ட்டேஷில் என்னை விட இளைய ஒரு தங்கை, /////

    இளையவ வாவா இருந்தால் தானே அவ தங்கை! இல்லாட்டி அக்கா எல்லோ? :-))

    ReplyDelete
  122. ////karrrrrrrrrrrrrr:)) பூந்து பூந்து படிச்சு மாத்தி மாத்தி ஓசிச்சு, போட்டுப் போட்டுத் தாக்கீனம் முருகா...:)) எனக்குத்தான் தங்கையே இல்லை, மீ தான் இங்கின தங்கை ஆச்சே:)).. ..//

    ReplyDelete
  123. 01. சிந்து கிட்டத்தட்ட ஒரு நல்ல புரிந்துணர்வுள்ளவ.//////

    யாரோட?:-)))

    02. நீதி, நியாயம் எனத்தான் நாம் கதைப்போம்:), ////

    அப்ப நேர்மை பற்றிக் கதைக்க மாட்டீங்களோ?:-)))

    03. அதுக்காக எதிர்த்து சண்டையும் பிடிப்போம்:). ////

    யாரோட?:-)))

    04. அவ கடைசிப் பிள்ளை என்பதால் செல்லமும் கொஞ்சம் ராங்கியும். ///

    ராங்கி என்றால் என்ன?:-)))

    05. அவவும், நான் என்ன சொன்னாலும் அப்படியே ஆமோதித்து கேட்டு நடப்பா./////

    06. அவவும், நான் என்ன சொன்னாலும் அப்படியே ஆமோதித்து கேட்டு நடப்பா.//////

    தனிய நடக்கிறது மட்டும் தனோ?:-))) அப்ப ஓட மாட்டாவோ? அவ இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் போது, நீங்கள் “ கமோன் சிந்து! கமோன் கமோன்” என்று கத்தினாலும், அவ அதை ஆமோதித்து நடந்தோ போவா?:-))) ஓடமாட்டாவோ?:-)))

    07. என் பிறந்ததினத்துக்கும் மறக்காமல் பரிசு தருவா,/////

    அப்ப உங்களுக்குத் தர மாட்டாவோ?:-)))

    08. இப்படித்தான், அந்தத் தடவை, மனதிலே பெரிய மனக்கோட்டை கட்டினேன்.//////

    அந்தக் கோட்டை என்ன கலர்?:-))) அதற்கு எத்தனை வாசல்? சீமெந்தால கட்டினதோ? அல்லது கருங்கல்லால கட்டினதீ? :-)))

    ReplyDelete
  124. ம்ம் சிலநேரத்தில் அதிகம் உசார்கூட அழுதுவடிக்க வேண்டியநிலை தோழி போல!ம்ம் கணவர் கெட்டிக்காரர்!ம்ம்ம்

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.