குயில் கார்ட் செய்ய வருது எனச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
நான் சொல்வதெல்லாம் உண்மை:) உண்மையைத் தவிர வேறில்லை:))
இது இமாவுக்காக இல்ல:)
இது அஞ்சுவுக்காக இல்லை:)
இதில எங்க வீட்டு லேடி ஹாஹா வும்:), இந்த அஞ்சுவும்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பி :)) ஃபிஸ்ஸும் ஒரே மாதிரி இருக்கா?:)
இந்தமுறையும் அவசரப் பதிவாகவே முடிஞ்சுபோச்சு.... மீண்டும் விரைவில அதிராவாகப்:) பதிவுபோட வேண்டும் என திருச்செந்தூர் முருகனுக்குப் பால் காவடி எடுக்க நேர்த்தி வச்சு:)) நிறைவு செய்கிறேன்:)).
இதை மட்டும் நான் செய்யேல்லை..:)
நான் சொல்வதெல்லாம் உண்மை:) உண்மையைத் தவிர வேறில்லை:))
இது இமாவுக்காக இல்ல:)
இதில எங்க வீட்டு லேடி ஹாஹா வும்:), இந்த அஞ்சுவும்.. சே..சே.. டங்கு ஸ்லிப்பி :)) ஃபிஸ்ஸும் ஒரே மாதிரி இருக்கா?:)
இந்தமுறையும் அவசரப் பதிவாகவே முடிஞ்சுபோச்சு.... மீண்டும் விரைவில அதிராவாகப்:) பதிவுபோட வேண்டும் என திருச்செந்தூர் முருகனுக்குப் பால் காவடி எடுக்க நேர்த்தி வச்சு:)) நிறைவு செய்கிறேன்:)).
========================================================
வெற்றி என்பது எதில் தங்கியிருக்கும் என்பது சொல்லத் தெரியவில்லை, ஆனால் ஒரு வெற்றியை நோக்கிய பயணத்தின் போது, எம்மோடிருக்கும் அனைவரையும் திருப்திப் படுத்தித்தான், நாம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் என நினைச்சோமாயின், அது தோல்வியில் தான் முடியும்.. எனெனில் அனைவரையும் திருப்திப் படுத்துவதென்பது முடியாத காரியம். இதுபோலவேதான் வாழ்க்கையிலும், 100 வீதம் எல்லாமும் கரெக்ட்டாகவே இருக்கவேணும் என எண்ணினால் வாழவே முடியாது.. ஒரு வாழ்க்கைக்கு முக்கியமானவை என நாம் எண்ணுபவை கரெக்ட்டாக இருந்தாலே, அதை வச்சு ஏனையவற்றை அஜஸ் பண்ணி நகர்ந்தோமாயின், அந்த வாழ்க்கை வெற்றிதான்ன்..
எங்கோ ஒரு பிரசங்கத்தில் கேட்டது.....
“தொகுத்து வழங்கியிருப்பவர்... புலாலியூர் பூஸானந்தா:)
========================================================
|
Tweet |
|
|||
தொகுத்து வழங்கிய புலாலியூர் பூஸானந்தாவுக்கு நன்றி! ;)
ReplyDeleteநல்ல தத்துவம் அதிரா! எல்லாரையும் எல்லா நேரமும் திருப்திப்படுத்தவே முடியாது..எல்லாருக்கும் நல்லவரா இருப்பது ரொம்ப கடினமல்லோ? தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவது கெட்டவர் ஆகியிருப்போம்! :) ;)
ReplyDelete/ஒரு வாழ்க்கைக்கு முக்கியமானவை என நாம் எண்ணுபவை கரெக்ட்டாக இருந்தாலே, அதை வச்சு ஏனையவற்றை அஜஸ் பண்ணி நகர்ந்தோமாயின்,/ கரெக்டுதான்,,ஆனா இப்பல்லாம் இந்த அனுசரித்துப் போவது என்பது குறைஞ்சுகிட்டே வருதே! ஒத்துவந்தால் சேர்ந்திருப்போம், இல்லன்னா நீ உன் வழி -நான் என் வழி என போவது சகஜம் ஆகிட்டு வருவது வருத்தமான விஷயம்தான்! ஹூம்...
லேடி ஹாஹா??! சூப்பரா இருக்காங்க. ஹாம்ஸ்டர் வாங்கியிருப்பதாகவல்லோ சொல்லியிருந்தீங்க? அதெப்படி ஹாஹா-வா மாறிச்சு?! ங்ங்ங்ஙேஏஏஏ! ;))))
க்வில்லிங் கார்டுகள் அழகாய் இருக்கு! தேறீட்டீங்க, பாராட்டுக்கள்!
இமா ரீச்சருக்கு இம்பூட்டு அட்வான்ஸா வாழ்த்து சொல்லீட்டிங்க!?! நானும்சொல்லிக்கிறேன்! ஹேப்பி பர்த்டே றீச்சர்ர்ர்ர்ர்ர்! :))
அதிரா சகலகலாவல்லி என்பது நல்லாவே தெரியுது. சூப்பரா இருக்கு அதிரா.மேலும் தொடரவும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅதிராக்கா, சூப்பருங்க. உங்க பேச்சு மொழியே மிகவும் ரசனைக்குறியதாக இருக்கிறது. குயில் கார்டெல்லாம் சூப்பரா செய்திருக்கீங்க. இது இமாவுக்காக இல்ல, இது அஞ்சுவுக்காக இல்ல, அப்ப இது எனக்காக்த்தானே:))))))தாங்க்ஸ்.
ReplyDeleteromba nalla iruku.. naanum try pannum endru thaan neenaikuren mudiyalai..
ReplyDeleteஹாஆஆ...அதிரா....சூப்பர்...சூப்பர்...:)))
ReplyDeleteஸ்.ஸ் ஸப்பாஆ...அழகா இருக்கு க்விலிங் கார்ட்ஸ் எல்லாம்..
பூஸார் கார்ட் எம்பூட்டு அழகா இருக்கூ..ரொம்ம்ப நேர்த்தியா அழகா செய்திட்டீங்க...தேறீட்டீங்க...
அருமை..அருமை..
உங்க க்விலிங் கார்ட்ஸ் என்னை முக்கியமான விஷயத்தை மறக்க வைக்கப் பாத்திடிச்சு...:)
ReplyDeleteஅன்புத்தோழி இமாவுக்கு பிறந்ததினமா...ஆஹா..சரி நானும் உங்களுடனே சேர்ந்து அட்வான்ஸா வாழ்த்திடுறேன்..:)
எங்களின் அன்புத்தோழி ஆசான் மதிப்புக்குரிய இமா ரீச்சருக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாழ்வில் நோய் நொடி துன்பம் இல்லாமல் நீடுழி காலம் வேண்டுவன எல்லாம் கிடைக்கப்பெற்று நிறைந்த வாழ்வு வாழ இறை அருளை வேண்டி வாழ்த்துகிறேன்!!!
வாழ்க வளமுடன்!!!
ஹாங்ங்..இருங்க..இப்பதான் பூஸார் மேலுக்கு //இதை மட்டும் நான் செய்யேல்லை..:)// எழுதியிருக்கிறதை நான் பார்த்தேன்...ச்சும்மாதானே சொல்லுறீங்க...என்னா அவை அடக்கம்...நம்பீடுவோமாக்கும்...ம்ஹும்....:)))
ReplyDeleteஹாஆ..அதிரா..அந்த ஆமையார், மற்றும் மீன் குட்டீஸ் அவைகளும் நல்லாவே செய்திருக்கிறீங்க...:)
மீன் குட்டீஸுக்கு இன்னும் கொஞ்சம் பேப்பர் ரோலை நெருக்கமாக்கினா பெரீய பெரீய இடைவெளி இல்லாம தவிர்க்கலாம்..ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு..ரசனை என்பது அவங்க அவங்க மனசையும் பொறுத்ததுதானே...:)))
ம்.ம். தொடருங்கோ..சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் எண்டு சொல்லியிருக்கினம் எல்லோ...
செய்யச் செய்ய கை படிஞ்சிடும்.. பழகீடும்...
வாழ்த்துக்கள் அதிரா..இமாவின் பிறந்ததினப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..:)))
”வெற்றி என்பது எதில் தங்கியிருக்கும்.........”
ReplyDeleteசிந்திக்கத் தூண்டும் சிறப்பான பூஸானந்தா மொழிகள்...:)
சத்தியமான வார்த்தைகள்..
திருப்தி என்ற வார்த்தை உள்ளத்தில் வராத வரைக்கும் எதிலுமே திருப்தி காணமுடியாது...
முதலில் தன்னிலேயே திருப்தி வரவேண்டும் அதன்பிறகே ஏனையவர்களில் ஏனையவற்றில் வரும்.
அதுதான் நம்ம கண்னதாசன் சொல்லி இருக்கிறாரே..
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை....
100வீதம் திருப்தி அடைகின்ற மனம் வந்துவிட்டால் ஞானி ஆகிவிடலாமே...:)))
ஆ..அதிரா அழகாக செய்திருக்கிறீங்க குயில்கார்ட். ஏன் எனக்கு செய்ய
ReplyDeleteவருகுதில்லை எனச்சொன்னனீங்க. இளமதி சொன்ன மாதிரி "சித்திரமும் கைபழக்கம்.. தான்.
அழகா இருக்கு உங்க மீன். ஆமையும் அழகாக இருக்கு. நல்ல கலர் எடுத்திருக்கிறீங்க.சூப்பர் அதிரா.
எனினும் வழமையான அதிராவின் பதிவை எதிர்பார்க்கிறோம்.
இமாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க்கையின் வெற்றியைப் பற்றி நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார். யாரையும்,யாரும் திருப்தியடையவைத்ததே இல்லை.திருப்தியடைந்ததும் இல்லை.வாழ்க்கையே அஜஸ்பண்ணிபோவது. நல்ல கருத்து.
ReplyDeleteMahi said... 1
ReplyDeleteதொகுத்து வழங்கிய புலாலியூர் பூஸானந்தாவுக்கு நன்றி! ;)///
[co="purple"] ஆவ்வ்வ்வ்வ் மகி வந்திருக்காக... வங்கோ மகி... பூஸானந்தவும் தத்துவமும்தான் முதல்ல தெரிஞ்சிருக்கு உங்களுக்கு.. அது பூஸ் ரேடியோவில கேட்டது:)[/co]
ReplyDeleteMahi said... 2
நல்ல தத்துவம் அதிரா! எல்லாரையும் எல்லா நேரமும் திருப்திப்படுத்தவே முடியாது..எல்லாருக்கும் நல்லவரா இருப்பது ரொம்ப கடினமல்லோ? தெரிந்தோ தெரியாமலோ யாருக்காவது கெட்டவர் ஆகியிருப்போம்! :) ;)
[co="purple"] அதேதான்ன்.. எல்லோரும் நல்லவருமில்லை, எல்லோரும் கெட்டவருமில்ல. ஆனா இதில சொல்லப்படுவது மகி, ஒரு வெற்றியை நோக்கிப் போகும்போது எம்மோடிருக்கும் பத்து நண்பரும் ஏற்றுகொண்டால்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன் என நினைச்சால்.. முடியாது.. 7,8 பேர் ஒத்துப்போனாலே அடுத்த அடியை எடுத்து வைத்திடோணும் என சொல்லியிருக்கு... இதில் நல்லவர் கெட்டவர் என இல்லை.. சிலருக்கு சிலது பிடிக்கும் சிலருக்கு சிலது பிடிக்காது அவ்ளோதான்.... இதைத்தான் அஜஸ்ட் பண்ணி போகோணும் எனச் சொல்லுகிறார் பிரசங்கத்தில். [/co]
கரெக்டுதான்,,ஆனா இப்பல்லாம் இந்த அனுசரித்துப் போவது என்பது குறைஞ்சுகிட்டே வருதே! ஒத்துவந்தால் சேர்ந்திருப்போம், இல்லன்னா நீ உன் வழி -நான் என் வழி என போவது சகஜம் ஆகிட்டு வருவது வருத்தமான விஷயம்தான்! ஹூம்...
ReplyDelete[co="purple"] உண்மைதான் எல்லோருக்கும் எம்மால் தனியேயும் வாழ முடியும் எனும் துணிவு இப்போ இருக்கு அதுதான் காரணம்.
ஆனா வாழவே முடியாது ஒத்துப் போகவே போகாது என நன்கு தெரிஞ்சபின்பும்... ஆதிகாலம்போல ஒட்டிட்டே இருக்காமல்.. துணிஞ்சு பிரிந்து தமக்கொரு நல்ல நிலையைப் பெறுவதிலும் தப்பில்லை எண்டுதான் சொல்லுவேன்.
திருமணப் பொருத்தத்தில்கூடப் பாருங்கோ பத்துப் பொருத்தம் பார்க்கினம், ஆனா அந்தப் பத்திலும் சிலது முக்கியாமாக பொருத்தம் பார்க்கினம்(தாலி) போன்றவற்றை. ஏனையவற்றை பொருந்தாட்டிலும்.. அது பிரச்சனையில்லை முக்கியமானது பொருந்துது எனச் சொல்லி விடுகினம்.
வாழ்க்கைக்கும் அப்படித்தான் .. என்னைப் பொறுத்து மெயினானது அன்பு பாசம்... அது இருந்தா ஏனையவற்றை எல்லாம் அஜஸ் பண்ணிப் போயிடலாம்ம்.. அது இல்லையெனில் ஏனையவற்றை அஜஸ் பண்ணி என்ன பலன்?:)... நைட்லயே இருட்டுக்குள் வெளிக்கிட்டு ஓடிடோணும்:) ஹையோ என்னத்திலயோ தொடங்கி எங்கயோ போயிடிருக்கிறமே:)) நம்மட மக்கள்ஸ் தப்பா நினைச்சிடப்போகினம்...:). நான் ஆட்களுக்கு ஐடியாக் குடுக்கிறன் என அடிக்கப்போயினம்:)). அப்பூடி என்ன தப்பாச் சொல்லிட்டேன்ன்ன்:)).
இல்ல, நேற்று விஜய் ரீவில் ஒரு டொக்டர் கதைக்கிற... ஒரு பேஷன்ட் வந்து சொன்னாவாம்ம், தன் கணவர் தன்னை பெரிதாக நிருங்குவதில்லையாம் என. அப்போ கணவரைக் கூப்பிட்டுக் கேட்ட இடத்தில் அவர் சொல்றாராம் எனக்கு என் மனைவியில் இன்ரஸ்ட்டே இல்லை என... அப்ப என்ன கோதாரிக்கு குடும்பம் நடத்தீனம்:).. ஹையோ... விட்டிட்டு ஓடிடோணும்:)).
கதைக்க நினைச்சால் கனகதை சொல்லுவேன்ன் வாணாம்ம்ம்... நிறுத்திடுறேன்ன்ன்ன்:)).[/co]
Mahi said... 2
ReplyDeleteஇமா ரீச்சருக்கு இம்பூட்டு அட்வான்ஸா வாழ்த்து சொல்லீட்டிங்க!?! நானும்சொல்லிக்கிறேன்! ஹேப்பி பர்த்டே றீச்சர்ர்ர்ர்ர்ர்! :))
[co="purple"] அவ்வ்வ் என் சொந்தக் கதை யோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்க..மகி... இமாவுக்கு 13 தான் பி.தினம் எனத் தெரியும்.. ஆனா அது இண்டைக்கு 13 என நினைச்சுட்டேன்... ஆத்துக்காரருக்கும் டேட் சொல்லாமல்.. நாளைக்கு இமாக்கு பேர்த்டே போஸ்ட் போடப்போறனே.. என சொல்லிக்கொண்டே சாமம் சாமமா இருந்து ரெடி பண்ணி.. போஸ்ட் பண்ணும்போது ரைமை செட் பண்ணுவமே என பார்த்தால் 12 என டேட் காட்டிச்சுதா:)... கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொம்பியூட்டரில டப்புடப்பா டேட் காட்டுதே என நினைச்சு.. திரும்பவும் பார்த்தால் சண்டேதான் 13.. .... ஙேஙேஙேஙேஙே.....:))...
மியாவும் நன்றி மகி.[/co]
பிறந்த நாள் வாழ்த்துக்கள் டீச்சர் (அட்வான்ஸ்)
ReplyDeleteபூஸ் உங்க குவில்லிங் அழகோ அழகு. தத்துவம் சூப்பர்.
அஞ்சு வந்து போயிங்க போறாங்க:))
ஒரு வெற்றியை நோக்கிய பயணத்தின் போது, எம்மோடிருக்கும் அனைவரையும் திருப்திப் படுத்தித்தான், நாம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் என நினைச்சோமாயின், அது தோல்வியில் தான் முடியும்.. //
ReplyDeleteதெய்வமே !!!!!!!!!!!!!!ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா ..புல்லா அரிக்குதே ..
உண்மைதான் அதிஸ் ..எல்லாரையும் எப்பவும் திருப்திபடுத்த முடியாது ..இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்க என்பதிலேலே காலம் ஓடிடும் .
தலைவி தலைவிதான் கலக்கிட்டீங்க
This comment has been removed by the author.
ReplyDeleteஅதிஸ் நீங்க செய்த எல்லா காட்சும் ம் அழகு
ReplyDeleteகிரி இந்த கதையை சோக கதையை கேளுங்க
ReplyDeleteபனிரெண்டு மணிக்கு போஸ்ட் போடறேன் என்று என்கிட்டே சொல்லி ..ஒரு பிள்ளையை பனிரெண்டு மணி வரைக்கும் கண் விழிக்க வச்சதுக்கு மியாவுக்கு என்ன தரலாம்னு னு சொல்லுங்க
மாலை வணக்கம்,அதிரா!உங்கள் நண்பிக்கு என் வாழ்த்துக்களும்!////கூடவே தமிழர் திருநாள் 'பொங்கல்' வாழ்த்துக்களும்,அனைவருக்கும் உரித்தாகட்டும்!
ReplyDeleteதத்துவம் சூப்பர் அதிரா அழகிய படங்கள். முன்கூட்டிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா :))
ReplyDeleteஅன்புள்ள அதிரா,
ReplyDeleteவணக்கம்.
பூனை கார்டு
+ஆமை கார்டு
+கலர்மீன் கார்டு
+தத்துவம்
எல்லாமே அய்கோ அய்ய்கூகூ.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்
கோபு அண்ணன்
அன்புள்ள அதிரா,
ReplyDelete2
=
ஸ்ரீராமஜயம்
============
செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,
சிந்துகின்ற புன்னகையால்
துன்பம் நீக்கி,
மதமதத்த வளையணிந்த
கைகள் வீசி,
மங்களாம்
“தை” என்னும்
மங்கை வருவாள்!
பொங்கியெழும்
புத்தின்ப உணர்ச்சி
தருவாள்!!
தங்களுக்கும் தங்கள் இல்லத்திலும்
உள்ளத்திலும் உள்ள அனைவருக்கும்
என் இனிய பொங்கல் வாழ்த்துகள்! ;)
அன்புடன்
கோபு அண்ணன்
:) சந்தோஷம் அதிரா. பூஸ் குரல் கேட்டு இங்கு வாழ்த்த ஒன்றுகூடிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நன்றிகள். தைத்திருநாள் கொண்டாடுபவர்களுக்கு, என் அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDelete//உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், டிக்ஷியோடும்:)// & //என்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்....// ;) நன்றி, நன்றி, நன்றி.
//2008 இல், கூட்டுக் குடும்பத்தில் ஆரம்பித்த நம் நட்பு... தனிக்குடித்தனம் வந்தும் தொடர்கிறது... இன்னும் இனிதே தொடர எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரியட்டும்.// எங்கள் இருவருக்காகவும் மட்டுமல்ல, கூ.கு உறவுகள் அனைவருக்காகவும் என் பிரார்த்தனைகள் அதுதான்.
அவ்வ்!!! காட் சுப்பரா இருக்கே! கலக்கல் பூஸ். ம்... கையில பரஷூட்தான் காணேல்ல! ;)
ஆஹா! கலர் கலராக இமயவரம்பன்! நல்ல வடிவாக இருக்கிறார். தாங்ஸ் அதீஸ்.
ஏஞ்சலை இவ்வளவு வடிவாக மல்டிகலரில ஒருவரும் செய்யாகினம். அப்பிடி வடிவா இருக்கு.
நல்ல பிரசங்கத்துக்கும் ;)) தாங்ஸ்.
பாட்டு... இதூ... பொங்கலா, தீபாவளியா! ;)
என் அன்புக்குரிய
ReplyDeleteஇனிய
இசைபோன்ற
இமா,
தங்களுக்கு என் இனிய
பிறந்த நாள் வாழ்த்துகள்.
இன்று போல என்றும்
மகிழ்ச்சியுடன் நீடூழி
வாழ வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு உங்கள்,
கோபு அண்ணா.
//சண்டேதான் 13.. ....// ;) இணையம் உறவுகளை இணைக்கும் விதத்தில் 'அட்வான்ஸ்' 'பிலேட்டட்' எல்லாம் பார்க்கக்கூடாது. சற்றுமுன் மருமகள் தொலைபேசினார். அவருக்கு இன்றுதான் 'சண்டே 13'. ;D
ReplyDelete'அட்வான்ஸ்ட்' ஆக வாழ்த்திய அதிரா, மகி, இளமதி, அம்முலு,கிரி, யோகா, ஏஞ்சல் & 'பிலேட்டட்' ஆக வாழ்த்திய கோபு அண்ணா அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
அன்புள்ள அதிராஆஆஆஆ
ReplyDelete//அதிராவுக்கும் வருதூஊஊஊஊ:))//
என்ற தலைப்பைப்பார்த்ததும் எனக்கு மிகவும் சிரிப்பு வந்ததூஊஊஊ
ஏதேதோ எழுதணும் என்ற கற்பனையும் வந்ததூஊஊஊ
ஆனாலும் நாளும் கிழமையுமா அதுபோல எல்லாம் எழுதக்கூடாது என்ற எண்ணமும் வந்ததூஊஊஊ
அதனால் எனக்கும் வந்ததை [எண்ணத்தை] வராமல் அடக்கிக் கொண்டேன் அதிரா. மூக்கைப் பிடித்துக்கொண்டே எஸ்கேப் ஆகிட்டேன்.
கோபு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஎன் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அன்புத்தேர் இழுப்போம்...
பேரெழிலாம் அன்புதனை
பெருமை சிறிதும் இல்லாமல்
பாரிலுள்ளோர்க்கு உதாரணமாய்
பகலும் உன்விந்தை வியந்தேனம்மா.
ஊரிழந்து உறவிழந்து உலகமெல்லாம்
சீர்குலைந்து சிதறி வாழும் எங்கள்
வேர் அறுந்து வீழ்ந்திடாமல் தோழமைத்
தேர் இழுப்போம் ஒன்றுகூடி...
பி.கு:காலையிலிருந்து நீங்கள் புதிய பதிவு போட்டாலுமென காத்திருந்து முடியாமல் இதிலேயே வாழ்த்திவிட்டேன்...:)
வணக்கம் சகோதரி...
ReplyDeleteஇன்று தன தங்கள் தளத்திற்கு என்னுடைய
முதல் வருகை..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...
Super cards. Iniya pongal vazththukkal.
ReplyDeletewish u a Happy Pongal Athira.
ReplyDelete[co="dark green"]வாங்கோ விஜி நலம்தானே? இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="dark green"]வாங்கோ ராஜேஸ்வரி அக்கா.. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். [/co]
ReplyDeleteஇது இமாவுக்காக இல்ல, இது அஞ்சுவுக்காக இல்ல, அப்ப இது எனக்காக்த்தானே:))))))தாங்க்ஸ்.
ReplyDelete[co="dark green"]வாங்கோ பூந்தளிர்... ஹா..ஹ..ஹா.. எடுத்துக்கொள்ளுங்க.. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. மியாவும் நன்றி. [/co]
[co="dark green"]வாங்கோ பாயிஜா .. உங்கட பக்கம்தான் என நினைக்கிறேன்ன்.. ஸ்ரொக்கிங்ஸ் ரோஸ் செய்து போட்டிருந்தீங்க நானும் செய்யோணும் பார்ப்போம். மியாவும் நன்றி. [/co]
ReplyDelete[co="dark green"]வாங்கோ யங்மூன்ன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) உந்தப் பூஸாரை நான் செய்யவில்லை.. அதுதான் மேல போட்டிருக்கிறேனே:).. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. மியாவும் நன்றி. [/co]
ReplyDelete:))))
ReplyDeleteபாம்பே பயப்பிடும்.. வான்ஸ்:)// இந்த அடைமொழியை நான் இப்பதான் கவனித்தேன். சூப்பர்.
ReplyDeleteHappy birthday..
ReplyDeletebelated wishes..
Poosananthaavukkum....
Engal Pongal vaalthukkal.
ReplyDeleteஇளமதி said... 10
ஹாஆ..அதிரா..அந்த ஆமையார், மற்றும் மீன் குட்டீஸ் அவைகளும் நல்லாவே செய்திருக்கிறீங்க...:)
மீன் குட்டீஸுக்கு இன்னும் கொஞ்சம் பேப்பர் ரோலை நெருக்கமாக்கினா பெரீய பெரீய இடைவெளி இல்லாம தவிர்க்கலாம்..ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு..ரசனை என்பது அவங்க அவங்க மனசையும் பொறுத்ததுதானே...:)))
[co="dark red"] ஓம் இளமதி நானும் அப்படித்தான் நினைக்கிறேன், ஆனா இது நெட்டில பார்த்துச் செய்தேன்ன் அவர்களும் உப்படித்தான் செய்திருக்கினம் நெருக்கமாகச் செய்யேல்லை ... ஆனா நான் நினைக்கிறன் கீழ் பேப்பர் மஞ்சள் கலரில பாவிச்சிருந்தால் இடைவெளி பெரிசாக தெரிஞ்சிருக்காதாக்கும்... [/co]
100வீதம் திருப்தி அடைகின்ற மனம் வந்துவிட்டால் ஞானி ஆகிவிடலாமே...:)))
ReplyDelete[co="dark white"] சே..சே... அப்பூடியில்லை.. ஆனா ஓரளாவுக்கு.. இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் மனநிலையை நாம்தான் உருவாக்க வேண்டும்..
மியாவும் நன்றி இளமதி. [/co]
aaaaaaaaaa happy birthday teacherrrrrrrrrrrrrrrrrrrrr...
ReplyDeleteeppavum santhosamaa irukkanum neenga ...konjam nalla saapitu kndu pappa vaaga vaanga teacher ...
[co="dark blue"]வாங்கோ அம்முலு நிஜமாத்தான் சொல்றீங்களோ அழகாக இருக்குத்தானே? வீட்டுக்கு வந்து போவோரும் ஓஹோ எனப் புகழ்ந்து கொண்டு போகினம் :) எனக்கு ஒரே ஷையா வருது.
ReplyDeleteஉண்மைதான் விட்டுக்கொடுப்பது, திருப்தியடைவது, அஜஸ்பண்ணிப் போவது இவை எல்லாம் நல்ல குடும்பத்தை உருவாக்க உதவும் அத்தியாவசியப் பொருட்கள்..
மியாவும் நன்றி அம்முலு. [/co]
aa athiraa akkaa ungalukkum varuthaa....syuper ....ellam cardyum mikka alagu ..... anju akkal meen maariye iruppago ....nicce ....
ReplyDeleteiniya pongal vaalthukkal akkaa ....
meendum santhippam
[co="dark red"] ஆவ்வ்வ்வ்வ் கீரீஈஈஈ கீரீஈஈஈஈ.. நானில்லாத நேரம் வந்திட்டு ஓடியிருக்கிறா? நலம்தானே கீரி?.. பொங்கல் எல்லாம் எப்படிப் போய்ச்சுது?..
ReplyDeleteமுடியும்போது வந்து போங்க... மியாவும் நன்றி கீரி. [/co]
[co="dark red"] ஆவ்வ்வ் அஞ்சு வாங்கோ வாங்கோ.. எப்பூடி கோல்ட் ஃபிஸ்ஸூ குயிலிங்:)) [/co]
ReplyDelete//தெய்வமே !!!!!!!!!!!!!///
[co="dark red"] என்னையா அழைத்தீர்கள்?:)) கையில கிள்ளிப்பார்த்தேன் உணர்விருக்கு:) ஹா..ஹா..ஹா..[/co]
உண்மைதான் அதிஸ் ..எல்லாரையும் எப்பவும் திருப்திபடுத்த முடியாது ..இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்க என்பதிலேலே காலம் ஓடிடும் .
தலைவி தலைவிதான் கலக்கிட்டீங்க
[co="dark red"] கரீட்டு.. :)) நாங்க நாங்க சரியா நடந்தால் சரிதான் ஓவரா மற்றாக்களுக்குப் பயந்து என்னபலனைக் காணப்போகிறோம்ம்.. “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் , உனக்கு நீயே நீதிபதி”..:)) ஆஆஆஆஆ அதாரது இந்த நேரத்தில கலைக்கிறது.. அது தத்துவம் சொன்னேனக்கும் :)
[/co]
angelin said... 23
ReplyDeleteகிரி இந்த கதையை சோக கதையை கேளுங்க
பனிரெண்டு மணிக்கு போஸ்ட் போடறேன் என்று என்கிட்டே சொல்லி ..ஒரு பிள்ளையை பனிரெண்டு மணி வரைக்கும் கண் விழிக்க வச்சதுக்கு மியாவுக்கு என்ன தரலாம்னு னு சொல்லுங்க
[co="dark purple"]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) தனிய இருக்கப் பயமா இருக்கு.. என்னோட விழிச்சிருங்க 12 மணிவரைக்குமாவது எனச் சொல்லும்போதே:) சொல்லியிருக்கலாமில்ல.. “இல்ல அதிரா, நாளைக்கு 12ம் திகதிதானே ஏன் அவதிப்படுறீங்க.. காலையில போடுங்களன் எண்டு”... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஒரு அப்பாவி சுவீட் 16 பிள்ளையை கண் முழிக்க வைச்ச பாவத்துக்காக.. ஒருநாள் முழுக்க, ரீ குடிக்கப்படாதென அஞ்சுவுக்கு பிரித்தானிய மேன்மை தங்கிய, பெருமதிப்புக்குரிய நீதிபதி(அது நாந்தேன்ன்:)) ஆணையிட்டுள்ளார்:))..
மியாவும் நன்றி அஞ்சு.[/co]
[co="dark green"] வாங்கோ யோகா அண்ணன் வாங்கோ.. தவறாமல் வருகை தருவதுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்... அனைத்துக்கும் மியாவும் நன்றி யோகா அண்ணன்...
[/co]
[co="dark red"] வாங்கோ தோப்பாகிவிட்ட நேசன் வாங்கோ.. உங்களுக்கும் இவ்வருடம் வாழ்வில் எல்லா இன்பங்களாஇயும் அள்ளித் தரட்டும்..
ReplyDeleteமியாவும் நன்றி.
[/co]
[co="dark red"] ஆவ்வ்வ்வ்வ் வாங்கோ கோபு அண்ணன்...
ReplyDeleteஉங்களுக்கும், வீட்டில் அனைவருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் கோபு அண்ணன்...
பதில் தொடரும்....
[/co]
வை.கோபாலகிருஷ்ணன் said... 32
ReplyDeleteஅன்புள்ள அதிராஆஆஆஆ
//அதிராவுக்கும் வருதூஊஊஊஊ:))//
என்ற தலைப்பைப்பார்த்ததும் எனக்கு மிகவும் சிரிப்பு வந்ததூஊஊஊ
ஏதேதோ எழுதணும் என்ற கற்பனையும் வந்ததூஊஊஊ
ஆனாலும் நாளும் கிழமையுமா அதுபோல எல்லாம் எழுதக்கூடாது என்ற எண்ணமும் வந்ததூஊஊஊ
அதனால் எனக்கும் வந்ததை [எண்ணத்தை] வராமல் அடக்கிக் கொண்டேன் அதிரா.
[co="dark green"] ஸ் றீ ராம ஜெயம் சொன்னமைக்கு மிக்க நன்றி கோபு அண்ணன்...
அது அது.. மனதில் தோன்றும் அனைத்தையும் எழுதிடக்கூடாது :) சபை நாகரீகம் என ஒன்றிருக்கெல்லோ:)) அதை நாங்கள் கடைப்பிடிக்கிறோம் நீங்களும் கடைப்பிடியுங்கோ :)).. ஹையோ முருகா எப்பூடி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டி இருக்கு:)....
மியாவும் நன்றி கோபு அண்ணன்... உங்கள் வாழ்த்துக்கு றீச்சர் நேரிடையாகவே நன்றி சொல்லிட்டா.
[/co]
அன்புத்தேர் இழுப்போம்...
ReplyDelete[co="dark green"] ஆவ்வ்வ் இளமதி சூப்பரா கவிதை வருதே உங்களுக்கும்... அன்புத்தேர் அருமையான தேர்ர்... மியாவும் நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கும். அருமையான கவிதைக்கும்...
[/co]
[co="dark green"] வாங்கோ மகேந்திரன் அண்ணன்.. முதன்முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.. புதிய வருடம் இனிய வருடமாக அமையட்டும்.
மிக்க நன்றி வரவுக்கு.
[/co]
[co="dark green"] வாங்கோ வான்ஸ்ஸ் வாங்கோ.. நீங்களும் பின்னூட்டப் பெட்டியை அமெரிக்க கடல்ல வீசிட்ட்டீங்கபோல?:) வை திஸ் கொல வெறி?:).. உங்களுக்கும் இனிய பொங்கல், தைத்திருநாள் வாழ்த்துக்கள் மியாவும் நன்றி.
ReplyDelete[/co]
Vijiskitchencreations said... 36
ReplyDeletewish u a Happy Pongal Athira.
[co="dark green"] Thank you Viji, same to you all.
[/co]
[co="dark green"] வாங்கோ சிவா வாங்கோ போனவருடம் நீங்க சொல்லித்தானே றீச்சரின் பிறந்ததினம் எங்களுக்குத் தெரிய வந்தது... பொங்கல் எப்படி போய்ச்சுது சிவா? பொன்னியைச் சந்திச்சனீங்களோ? எப்படி இருக்கிறா?:) வளர்ந்திட்டாவோ?..
ReplyDeleteமிக்க நன்றி சிவா.
[/co]
[co="dark green"] ஆ.. வாங்கோ கலை வாங்கோ இப்பவெல்லாம் உங்களைக் காணவே கிடைக்குதில்லை.. நலமோ கலை.. அதுசரி யூஜினின் வெடிங்க்குப் போகவில்லையா?..
ReplyDeleteபொங்கலுக்கு ஊருக்குப் போயிருப்பீங்களென நினைக்கிறேன்ன்ன்.. இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் கலை.. மியாவும் நன்றி, குருவை மறக்காமல் எட்டிப் பார்ப்பமைக்கு.[/co]
கார்ட் எல்லாம் சூப்பரா இருக்குங்க...!
ReplyDelete(மாட்டு)பொங்கல் வாழ்த்துகள் [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im] [im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im][im]http://i15.photobucket.com/albums/a384/themarbleintheoatmeal/smilies/animal0019.gif[/im]
அழகாகத்தான் இருக்கு எல்லாமும். தத்துவமும் சூப்பரா இருக்கு... நானும் இனிமே அஜஸ் பண்ணியே வாழுறேன்.
ReplyDelete[im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcT6oaPIRVKXL1DPHtaJAfRocZnKWuNRBKtms9dxtuL-zdCEtPSW[/im]
ReplyDeleteஅதிரா......
பேச்சுலர் சமையல் போட்டில
வெற்றிபெற்றிருக்கிறீங்களாம்..
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!.....:)))
வாழ்த்துக்கள் அதீஸ்.
ReplyDelete(இளமதி கொடுத்த அதே பூங்கொத்தை நானும் உங்களுக்கு அன்பாகக் கொடுக்கிறேன். :) )
வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள் கலை.
ReplyDeleteஅதிரா வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள். பரிசு பெற்றமைக்கு.
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஒ :).. மீ பெயிண்டிங் யா :)).. வெண்டிட்டமில்ல... இது ஆனந்தப் ஃபெயிண்டிங்:)
ReplyDelete[im]http://i172.photobucket.com/albums/w13/Babetheke/House%20of%20Chaos/Freyamultitasking.jpg[/im]
இமாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.ஆஹா ஆல் இன் ஆல் அதிரான்னு தான் இனி நாங்க அழைக்கவேணும் போல.அனைத்தும் சூப்பர் அசத்துங்க..
ReplyDeleteஅவசரப் பகிர்வு என்றாலும் அட்டகாசமான பகிர்வு.வாழ்க புலாலியூர் பூஸானந்தா.
நன்றி நன்றி.. இளமதி, இமா, அம்முலு.....
ReplyDeleteவாங்கோ ஆசியா வாங்கோ... ஆல் இன் ஆல்ல்ல்... ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள் ஆசியா.
ReplyDeleteவாங்கோ கவிக்கா... கவனிக்காமல் விட்டிட்டேன் உங்கட பின்னூட்டத்தை மிக்க நன்றி, மன்னிச்சுக் கொள்ளுங்கோ.
ReplyDelete
ReplyDeleteவிச்சு said... 64
அழகாகத்தான் இருக்கு எல்லாமும். தத்துவமும் சூப்பரா இருக்கு... நானும் இனிமே அஜஸ் பண்ணியே வாழுறேன்.///
வாங்கோ விச்சு... என்னாது ? அப்போ இவ்ளோ நாளும் அஜீஸ் பண்ணாமலோ வாழ்றீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). உடனே கவனிக்காமல் விட்டிட்டேன் உங்கட பின்னூட்டத்தை மிக்க நன்றி, மன்னிச்சுக் கொள்ளுங்கோ.