நல்வரவு_()_


Friday, 16 August 2013

பூஸும் குயிலும்:)

என்னாது தலைப்பைப் பார்த்ததும், எல்லோருக்கும் தலை சுத்தி, தங்களின் முதுகை, தாமே பார்க்கும் பாக்கியம் அதிராவால கிடைச்சிருக்குமே:)). அது குயிலிங் கார்ட்டை சோட் அண்ட் சுவீட்டா குயில் எண்டமாக்கும்:)).. 

ஸ்ஸ்ஸ்ஸ் “இந்தாட்டிக்கா போய் வந்ததுதான், இன்னும் கிளீன் பண்ணி முடியுதில்ல”
============================================
சரி சரி மீ இந்தாட்டிக்காவால வந்ததும் வராததுமா செய்த முதல் வேலை இதுதான்.. இன்று என் இங்கத்தைய வைட் நண்பியின் பிறந்ததினம், என் முன்னைய குயிலிங் கார்ட்டைப் பார்த்து, ஒரு மணித்தியாலம் அதுபற்றி ரசிச்சு ரசிச்சுப் பேசுவா.. அவ்ளோ ஆசை:)).. அப்போ அஞ்சுவின்.. இளமதியினதைப் பார்த்தால்ல்:)) மீ காட்டமாட்டனே:)) [ஹையோ ஒரு பேச்சுக்குச் சொன்னேன்:))... ]அதனால்தான் அவவுக்கு இதைச் செய்தேன், இப்போ ஷோ கேஷில் இதை வச்சிருப்பா.. வீட்டுக்குப் போவோருக்கெல்லாம் காட்டுவா:).


X Box Games விளையாட வாங்கிய மைக் பொக்ஸ்ஸில், இப்படி இரு கார்ட் இருந்துது, பயன்படுமே என எடுத்து வச்சேன்ன்.. யூஸ்ஃபுல் ஆச்சு..


அதற்கு இப்படி பேப்பர் ஒட்டி அழகாக்கிட்டு...



 கார்ட்டை செய்து முடிச்சிட்டேன். மேல் மூலையில் பலூன்போல செய்தேன், ஆனா சரியான வடிவம் வரவில்லைப்போலும்.


=======================INTERVAL=========================
நான் “இந்தாட்டிக்கா” வால வந்ததும், தங்கட கார்டினில் பூத்த, இந்த, “அஞ்சு” இதழ் பூவை அனுப்பி வரவேற்றவர்... சே..சே.. பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது.. நீங்களே கண்டுபிடியுங்கோ:).


================முடிஞ்சு போச்ச்ச்ச்.. இடைவேளை:)==============
சரி இப்போ மீ பொயிண்ட்டுக்கு வந்திட்டேன்:).. இம்முறை “இந்தாட்டிக்கா” வில வாங்கினேனாக்கும் இவற்றை. 

இதில் ஒழுங்கா கலர் புரியுதில்லை, திரும்ப படம் எடுத்து போட ரயேட்டாக இருந்திச்சா.. விட்டிட்டேன். இதில் மேலே இருப்பது அழகான புலூ கலர். கீழே கடசியில் இருப்பது ஒரேஞ் கலர்.. போனமுறை லூட்ஸ்ஸில வாங்கிய பிரேஸ்லட்டுக்கு சூப்பரா மச் பண்ணுது.. மகி நோட் திஸ் பொயிட்:)).

அதுசரி, ஏன் மேலே ஒருவர் சோடி இல்லாமல் இருக்கிறார் என யோசிப்பீங்களே:) அந்த சொந்தக் கதை... யோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கோ:))) அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:).

அது அழகான வெள்ளைக் கல்லு பதிச்ச தோடு, கணவர் சொன்னார் அனைத்திலும் அதுதான் நம்பர் வன் என.. சரி அப்போ முதலாவதா அதைப் போடுவமே என போட்டனா.. வீட்டுக்கு திரும்பி வந்தால் ஒரு காதைக் காணம்:))... இன்னொரு டிஷ்சூ பிளீஸ்ஸ்:)).

இதுவும் எனக்கு சேகரிக்க பிடிக்கும் விதம் விதமா.. இங்கு வெளியில் போகும்போது வைப்பது குறைவு, ஆனாலும் கண்டால் வாங்காமல் விடுவதில்லை.

ஆங்ங்ங்ங்  ஆரும் டச் பண்ணப்பூடா... தொட்டாலும் கறுக்காத தங்கம்.. 32 கேரட் ஹையோ இது வேற கரட்:)) ஓவரா புழுகிட்டமோ?:) இதுவும் அங்கின வாங்கியதுதான், இங்கு எங்க போடப்போறேன், இனி போட்டாலும் தெரியாது குளிர்காலம் தொடங்குது, ஆனாலும் இவை எல்லாம் வாங்கி வாங்கி சேர்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இது கறுக்காதாம் என கடைக்கார அங்கிள் சொன்னார், கறுத்தால், ரிக்கெட் செலவு பார்க்காமல் கொண்டு வருவேன் உடனே என சொல்லிட்டுத்தான் வந்தேன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ:).

குட்டி இணைப்பு:
இவற்றை “மே”யில நட்டேன், இப்போ வந்து பார்த்தால் இப்பூடி விளைஞ்சிருக்கு:) விளைச்சல் எப்பூடி? நான் வெங்காயத்தைக் கேட்டனாக்கும்:)).
=================================================================
கோபம் மனதில் இருக்க கூடாது 
வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!! 
அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது 
மனதிலும் இருக்க வேண்டும்...!!
இந்த அரிய தத்துவத்தை,
 உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்.. 
புலாலியூர்ப் பூஸானந்தா:)

=================================================================

71 comments :

  1. நான் தான் பர்ஸ்ஸ்ஸ்டு. சொல்லிட்டேன்.


    >>>>>

    ReplyDelete
  2. //ஸ்ஸ்ஸ்ஸ் “இந்தாட்டிக்கா போய் வந்ததுதான், இன்னும் கிளீன் பண்ணி முடியுதில்ல”//

    கிளீன் பண்ணும்போதும் பூஸார் அழகோ அழ்கு ... ஸாரி ..... அய்ய்ய்கோ அய்ய்ய்கு.

    >>>>>

    ReplyDelete
  3. //கார்ட்டை செய்து முடிச்சிட்டேன். மேல் மூலையில் பலூன்போல செய்தேன், ஆனா சரியான வடிவம் வரவில்லைப்போலும்.//

    எல்லாம் வந்தவரை போதும். இதுவே திருஷ்டிபடும்போல அய்ய்ய்கா இருக்கு.

    தங்கள் சினேகிதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  4. நல்லாருக்கு கார்டு

    ReplyDelete
  5. வருக வருக !!!!! ..
    அதிஸ் இது ரிசைக்க்ளிங் அண்ட் க்விலிங் ..அருமையான ஐடியா .
    கலர் காம்பினேஷன் சூப்பர்ப் .மஞ்சள் மலர்கள் அழகா பின்னணிக்கு பொருத்தமா இருக்கு

    ReplyDelete
  6. //நான் “இந்தாட்டிக்கா” வால வந்ததும், தங்கட கார்டினில் பூத்த, இந்த, “அஞ்சு” இதழ் பூவை அனுப்பி வரவேற்றவர்... சே..சே.. பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது.. நீங்களே கண்டுபிடியுங்கோ:).//

    அஞ்சு இதழ் பூவை அனுப்பி வைத்தது யார் ..... நம் அஞ்சுவா?

    ’ஷை’ யாக இருப்பதாக நீங்க சொல்வதால் புரிஞ்சிடுத்து.

    அதிராவை அதிராவே வரவேற்றுக்கொண்டாள் !

    எப்பூடீடீடீ என் அரிய பெரிய கண்டுபிடிப்பூஊஊஊ? ;)))))

    ReplyDelete
  7. அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:).//

    ok request granted

    ReplyDelete
  8. //வீட்டுக்கு திரும்பி வந்தால் ஒரு காதைக் காணம்:))... //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

    நீங்க சொல்லும் இநதக்கதையை யாரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

    எல்லோருக்கும் காதிலே பூ வைக்கிறீங்கோ, அதிரா.

    >>>>>

    ReplyDelete
  9. அந்த தேன் கலரில் இருக்கும் காதணி என்கிட்டயும் இருக்கே இப்பதான் வாங்கினேன் நானும் ..சேம் பிஞ்ச ...எல்லா கம்மலும் அழகு அந்த ஓரஞ் அந்த ஹான்ட்பாகுக்கு மேட்சிங்கா இருக்கும் :))

    ReplyDelete
  10. //ஆனாலும் இவை எல்லாம் வாங்கி வாங்கி சேர்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். //

    பொம்பளைங்க எல்லோருமே இப்படித்தான், எல்லாவற்றையும் வாங்கி வாங்கி சேர்த்துக்கொள்ளும். ஒண்ணுமே போடாது.

    //இது கறுக்காதாம் என கடைக்கார அங்கிள் சொன்னார், கறுத்தால், ரிக்கெட் செலவு பார்க்காமல் கொண்டு வருவேன் உடனே என சொல்லிட்டுத்தான் வந்தேன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ:).//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    சுண்டைக்காய் கால் பணம். சும கூலி முக்காப்பணம் என்பது இது தான் அதிரா. சூப்பர்.

    >>>>>

    ReplyDelete
  11. //இவற்றை “மே”யில நட்டேன், இப்போ வந்து பார்த்தால் இப்பூடி விளைஞ்சிருக்கு:) விளைச்சல் எப்பூடி?//

    அடியிலே [காட்டி] உள்ள வெங்காயம் ஜோராவே விளைஞ்சிருக்கு.

    //நான் வெங்காயத்தைக் கேட்டனாக்கும்:)).//

    நானு மேலே உள்ள வளையல்கள் தான் விளைஞ்சிருக்கோன்னு நினைச்சேனாக்கும். ஹுக்க்க்கும்.;)

    >>>>>

    ReplyDelete
  12. //கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!
    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது
    மனதிலும் இருக்க வேண்டும்...!!//


    தெய்வமே !!!!!!!!! பூசானந்தா வாழ்க !!!!

    ReplyDelete
  13. //கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!

    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது. மனதிலும் இருக்க வேண்டும்...!!//

    நல்ல தத்துவம். சூப்பர்.

    //இந்த அரிய தத்துவத்தை,
    உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்..
    புலாலியூர்ப் பூஸானந்தா:)//

    படிக்கும்போதே நினைத்தேன், இது நிச்சயமாக களவாடியதாகத்தான் இருக்கோணும் என்று.

    வாழ்த்துகள் அதிரா. நல்ல பதிவு.
    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  14. அனைத்து கார்டும் அழகாக உள்ளது...

    கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!
    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது
    மனதிலும் இருக்க வேண்டும்...!!

    அழகான தத்துவம்... சிறப்பான பதிவு..

    ReplyDelete
  15. வெங்காயம் சூப்பர் ..ஆமா அந்த பூவில் எட்டு இதழ் இருக்கே ..நீங்க அஞ்சு இதழ் என்கிறீங்க
    நான் உடனே இங்கு வருமாறு கணித மேதை மணியை அழைக்கிறேன் ..
    எனக்கு உடனே உண்மை தெரியனும் !!!!

    ReplyDelete
  16. welcome back baby athira.....

    eppadikku agila ulaga rasigarmandram

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நான் தான் பர்ஸ்ஸ்ஸ்டு. சொல்லிட்டேன்.///

    அடடா கோபு அண்ணன் வாங்கோ வாங்கோ... சொல்லாட்டிலும் இம்முறை நீங்கதான் 1ஸ்ட்டு:) அதை அஞ்சுவாலகூட மாத்த முடியாது:)..

    முதலாவதா வந்த உங்களுக்கு, இங்கின தோடு தர முடியாது, பொட்டும் தரமுடியாது.. அப்போ என்ன தருவதென ஓசிக்கிறேன்ன்.. கொஞ்சம் இருங்க ஆரியபவானில தாளி ரைஸ் ஓடர் பண்ணுறேன்ன் ஆடி வெள்ளியாச்சே...

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //

    கிளீன் பண்ணும்போதும் பூஸார் அழகோ அழ்கு ... ஸாரி ..... அய்ய்ய்கோ அய்ய்ய்கு.
    ///

    ///எல்லாம் வந்தவரை போதும். இதுவே திருஷ்டிபடும்போல அய்ய்ய்கா இருக்கு.///
    ஹையோ மிக்க நன்றி கோபு அண்ணன். அப்போ நீத்துப் பூசனிக்காய் வாங்கி, குங்குமம் பூசிப்போட்டு எங்கட வீட்டுச் சந்தியில ஓங்கி உடைக்கட்டோ..?:).. திருஷ்டி கழிக்க?:).

    தங்கள் சினேகிதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    மியாவும் நன்றி. அவ கார்ட் ஓபின் பண்ணினாவாம்ம் சூப்பரா இருக்காம் தங்கூ தங்கூ என ரெக்ஸ்ட் அனுப்பிட்டா:).

    ReplyDelete
  19. குட்டன் said...
    நல்லாருக்கு கார்டு

    வாங்கோ குட்டன் வாங்கோ.. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கிறீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  20. Cherub Crafts said...
    வருக வருக !!!!! ..
    அதிஸ் இது ரிசைக்க்ளிங் அண்ட் க்விலிங் ..அருமையான ஐடியா .
    கலர் காம்பினேஷன் சூப்பர்ப் .மஞ்சள் மலர்கள் அழகா பின்னணிக்கு பொருத்தமா இருக்கு//
    வாங்கோ அஞ்சு வாங்கோ.. முருகா அஞ்சுவுக்கு இன்னும் ஏன் ஸ்கூல் ஸ்ராட் பண்ணல்ல?:))(இது மைண்ட் வொயிஷாக்கும்:))..

    அடடா கேம் கார்ட்டைப் பாவித்தமையால் றிசைக்கிளிங் என்கிறீங்களோ? ஓ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வ்வொரு பெயர்... நான் எல்லாத்தையும் குயில் என்றிடுவேனே:))..

    மியாவும் நன்றி அஞ்சு... எத்தனையோ குயிலிங் பார்த்துத்தான் இப்படி சன் ஃபிளவர்போல் செய்யலாம் எனும் முடிவுக்கு வந்தேன்.

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //நான் “இந்தாட்டிக்கா” வால வந்ததும், தங்கட கார்டினில் பூத்த, இந்த, “அஞ்சு” இதழ் பூவை அனுப்பி வரவேற்றவர்... சே..சே.. பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது.. நீங்களே கண்டுபிடியுங்கோ:).//

    அஞ்சு இதழ் பூவை அனுப்பி வைத்தது யார் ..... நம் அஞ்சுவா?//

    :))

    ’ஷை’ யாக இருப்பதாக நீங்க சொல்வதால் புரிஞ்சிடுத்து.

    அதிராவை அதிராவே வரவேற்றுக்கொண்டாள் !

    எப்பூடீடீடீ என் அரிய பெரிய கண்டுபிடிப்பூஊஊஊ? ;)))))

    ஹா..ஹா..ஹா.... முதலில கரெக்ட்டாச் சொல்லிட்டு, கீழ குழம்பிட்டீங்களே.. அதுதான் இல்லை.. கண்டு பிடிப்பு தப்பு கோபு அண்ணன்... நான் எழுதிய பந்தியிலயே பெயர் இருக்கே:)).

    ReplyDelete
  22. அட இது எப்ப...
    நான் இப்பதான் வந்து கண்டேன்...:)

    க்விலிங்க் நல்லா இருக்கு அதிரா. நல்ல கலர்ப் பொருத்தம். பிங் கார்ட் றீ சைக்ளிங் அதுவும் நல்லா இருக்கு.
    க்விலிங்கில் பலூன் எண்டு சொன்னபிறகே கண்டேன். இன்னும் கொஞ்சம் ரைட்டா நீளம் கூட எடுத்து கொயில் சுற்றி இருக்கலாம். பூக்களும் இலைகளும் அழகு.!

    தொடர்ந்து செய்யுங்கோ. கை படியும். நல்லா வரும்.
    நண்பிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. ம். தோடு, காப்பு, பொட்டு கலக்‌ஷனும் கலக்கல்.

    ”அஞ்சு” இதழ்பூவோடை வரவேற்றவர்...
    விளங்கீட்டுது. அதுவும் அழகுதான்.

    வெங்காயம் சமைச்சு முடிஞ்சுதோ...:) வீட்டில நிண்டு பராமரிச்சிருந்தா இன்னும் நல்லா விளைஞ்சிருக்கும்... ஆனாலும் சின்னக் குடும்பத்துக்கு சின்ன வெங்காயம் காணும்தான்...:)

    பூஸானந்தாவின் மொழிகள் அற்புதம். ஆழமான நல்ல கருத்துக்கள்.
    எல்லாமே சூப்பர்!.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. முருகா அஞ்சுவுக்கு இன்னும் ஏன் ஸ்கூல் ஸ்ராட் பண்ணல்ல?:))(இது மைண்ட் வொயிஷாக்கும்:))..//


    கர்ர்ர்ர்ர்ர்ர் :)))) மைண்ட் வாயசை வீட்டிலிருந்து யோசிச்சிருக்கணும் ...மலை மேலிருந்து ஒசிச்சதால்
    உடனே எக்கோ கேட்டுடிச்சி

    ReplyDelete
  25. Cherub Crafts said...
    அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:).//

    ok request granted//

    தங்கூ தங்கூ.. ஆனா இது வெள்ளையா எல்லோ இருக்குதூஊஊஊஊ:))

    ReplyDelete
  26. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வீட்டுக்கு திரும்பி வந்தால் ஒரு காதைக் காணம்:))... //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

    நீங்க சொல்லும் இநதக்கதையை யாரும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

    எல்லோருக்கும் காதிலே பூ வைக்கிறீங்கோ, அதிரா.///

    ஹையோ ஹையோ கோபு அண்ணனுக்கு நான் திருக்குறள்:)) சொல்லிக் கொடுக்கவேண்டியிருக்கே:)).. அதில அவ்வையார் என்ன சொன்ன்னார்ர்?:)).. “வரப்புயர” என மட்டும்தானே சொன்னார்ர்:)).. அப்பூடித்தான் மீயும் சொன்னேன்:))...

    ஹையோ முருகா.. சிவனின் இளைய மகனே!!!! எனக்கு இந்த திருக்குறள் சொல்லிக்கொடுக்க எல்லாம் நேரமில்லையப்பனே:))..

    அங்கின என்னடாண்டா எங்கட “குயின் அம்மம்மா” பாதிக் கால்ல நிக்கிறா:)) அதிரா வந்துதான் தன் பூட்டனை “தொட்டிலில் போடோணும் என:)) நான் என்ன பண்ணுவேன்ன்.. மீக்கு தலைக்கு மேல வேலை இருக்கே சாமீஈஈஈ:)).

    ReplyDelete
  27. Cherub Crafts said...
    அந்த தேன் கலரில் இருக்கும் காதணி என்கிட்டயும் இருக்கே இப்பதான் வாங்கினேன் நானும் ..சேம் பிஞ்ச ...எல்லா கம்மலும் அழகு அந்த ஓரஞ் அந்த ஹான்ட்பாகுக்கு மேட்சிங்கா இருக்கும் :))

    ஆ அஞ்சு.. அப்பூடியா? அது போடவும் நல்லா இருக்கு, பாரமில்லை பெரிதா.

    ஹா..ஹா..ஹா.. ஒரேஞ்சில ஒரு கலக்‌ஷனே சேர்ந்திட்டுது எனக்கு... விரைவில அப்பதிவும் போடோணும்.. எத்தனை நாள்தான் ஜல் அக்காவைக் கண்டு, காணாததுபோல மேசைக்கு கீழ ஒளிப்பது:)))

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஆனாலும் இவை எல்லாம் வாங்கி வாங்கி சேர்ப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். //

    பொம்பளைங்க எல்லோருமே இப்படித்தான், எல்லாவற்றையும் வாங்கி வாங்கி சேர்த்துக்கொள்ளும். ஒண்ணுமே போடாது.//

    //// நோஓஓஓஒ மீ அப்படியில்லை கோபு அண்ணன், ஆர் பார்த்தாலும் பார்க்காட்டிலும் வீட்டிலாவது போட்டு கண்ணாடியில் பார்ப்பேன்.. அதெல்லாம் ஒரு பொழுதுபோக்கெனக்கு:))

    ஆனா கண்டதெல்லாம் சேர்ப்பதில்லை.. என் பைத்தியம்..
    காண்ட் பாக்
    மவ்ளர்
    சூஸ்/ பாதணி வகை
    வோச்
    தோடுகள்..
    இவைதான் அதிகம் சேர்க்க பிடிக்கும்.. வாங்காவிட்டாலும்.. நின்று ஒவ்வொன்றா ரசிசு பார்ப்பேன்:)) ஏனையவை ஆசைப்பட்டால் மட்டும் வாங்குவதுண்டு


    //இது கறுக்காதாம் என கடைக்கார அங்கிள் சொன்னார், கறுத்தால், ரிக்கெட் செலவு பார்க்காமல் கொண்டு வருவேன் உடனே என சொல்லிட்டுத்தான் வந்தேன்:) எங்கிட்டயேவா?:) அதிராவோ கொக்கோ:).//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    சுண்டைக்காய் கால் பணம். சும கூலி முக்காப்பணம் என்பது இது தான் அதிரா. சூப்பர்.

    // ஹா..ஹா..ஹா.. பின்ன இவ்ளோ தூரம் போய் நம்பி வாங்குறேன்ன்ன்:)) அதுவும் நான் கேட்டது, சென்னையில் ஒருகிராம் தங்கம் என கிடைக்குதாம் அப்பூடி இருக்கா உங்களிடம் என... அதுக்கு அவர் சொன்னார் இது தங்கமில்லை ஆனா கறுக்காது நம்புங்கோ என:)).. //

    ReplyDelete
  29. Cherub Crafts said...
    //கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!
    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது
    மனதிலும் இருக்க வேண்டும்...!!//


    தெய்வமே !!!!!!!!! பூசானந்தா வாழ்க !!!!

    ஹா..ஹா..ஹா.. என்னாது பூஸானந்தாவையா தெய்வம் எண்டீங்க?:)) இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே..:) ஒரு உண்டியலை முன்னால வச்சிட்டு சாமியாகிடலாம்போல இருக்கே:))... ஆனா, மணி(ஹையோ மீ பணத்தைச் சொன்னேன்:)) கலக்ட் பண்ணி என் எக்கவுண்டில் போடுவது அஞ்சுவின் வேலை:)))

    ReplyDelete
  30. சரி உங்களது வெள்ளைக் கார நண்பிக்கு என் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள் சகோதரி பூசானந்தா எல்லாமே போடா போட்ட இடத்தில் கிடக்கக் கூடாது கொஞ்சம் அடுக்கியும் வைக்க வேணும் .அதுதான் இங்கின இருந்த பல பொருட்களையும் நானே எடுத்துச் செல்கின்றேன் .உங்களுக்குத்
    தான் கோபம் மனதில இருக்காதே வரட்டுமா பூசானந்தா :))))))

    ReplyDelete
  31. வை.கோபாலகிருஷ்ணன் said...

    நல்ல தத்துவம். சூப்பர்.

    //இந்த அரிய தத்துவத்தை,
    உங்களுக்காக வெற்றிகரமாகக் களவாடி எடுத்து வந்தவர்..
    புலாலியூர்ப் பூஸானந்தா:)//

    படிக்கும்போதே நினைத்தேன், இது நிச்சயமாக களவாடியதாகத்தான் இருக்கோணும் என்று.

    வாழ்த்துகள் அதிரா. நல்ல பதிவு.
    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நோஒ.. இது அநீதி.. நீதியில்லை.. அது எப்பூடி படிக்கும்போதே களவெடுத்ததென முடிவெடுக்கலாம்:)).. அதிராவை டக்குப் பக்கெனத் தப்பா நினைத்த குற்றத்துக்காக.. கோபு அண்ணனை உடனடியாக நீதிமன்றம் வரும்படி...:)) நோ வாணாம்ம்.. பெரிய மனது பண்ணி விட்டிடுறேன்ன்.. ஏனெனில் மீக்கு நேரமில்லை நான் குயின் அம்மம்மாவின் பூட்டனை தொட்டிலில் கிடத்த போகோணும்:)))

    உடன் வருகைக்கும், அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

    ReplyDelete
  32. வெற்றிவேல் said...
    அனைத்து கார்டும் அழகாக உள்ளது...

    அழகான தத்துவம்... சிறப்பான பதிவு..///

    வாங்கோ வெற்றிவேல் வாங்கோ.. இரவின் புன்னகையாக வந்தீங்க இப்போ வெற்றிவேலாக வந்திருக்கிறீங்க... மியாவும் நன்றிகள் வரவுக்கும் கருத்திட்டமைக்கும்.

    ReplyDelete
  33. Cherub Crafts said...
    வெங்காயம் சூப்பர் ..ஆமா அந்த பூவில் எட்டு இதழ் இருக்கே ..நீங்க அஞ்சு இதழ் என்கிறீங்க ///
    ஹா..ஹா..ஹா... அஞ்சுதான் பொயிண்ட்டைப் பிடிச்சிருக்கிறா, இதுவரை ஆரும் கவனிக்கல்ல:))

    நான் உடனே இங்கு வருமாறு கணித மேதை மணியை அழைக்கிறேன் ..
    எனக்கு உடனே உண்மை தெரியனும் !!!!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ வைரவா இப்போ எதுக்கு ச்சும்மா இருக்கிற சங்கை எல்லாம் ஊதிக் கெடுக்கிறீங்க:)).. தான் வந்தாலும் பறவாயில்லை புதுசா ஒரு தம்பியோடல்லவா என் பக்கம் வருகிறார்:)).. தன் பாதுகாப்புக்காக்கும்:))..

    அஞ்சூஊஊஊஊ அது கணக்கு சரி.. அதாவது பூத்தபோது படமெடுத்தது அது, பின்பு நான் எழுதும்போது அஞ்சு:) இதழ்களே இருந்தன.. மிச்சம் கொட்டிப்பூட்டுதூஊஊஊஉ:)).. இப்போ கணக்கு சரியா:))ஹையோ ஆண்டவா எப்பூடி எல்லாம் தப்ப வேண்டிக்கிடக்கூ:))..

    முருகா உந்தத் தோட்டில ஒரு சோடி வள்ளிக்குப் போடுவன், என்னைக் காப்பாத்துங்கோ.. இந்த அக்கா - தம்பியிடமிருந்து:).

    ReplyDelete
  34. Siva sankar said...
    welcome back baby athira.....

    eppadikku agila ulaga rasigarmandram//

    அடடா... பில்லா சிவா.. வாங்கோ வாங்கோ.. நீங்க நலமோ மற்றும் பொன்னி நலமோ.. பட்டாம்பூச்சி நலமோ..?:))..

    என்னாது ரசிகர் மன்றமோ? அவ்வ்வ்வ்வ்:)) இது எப்போ ஆரம்பிச்சீங்க?:) சொல்லவேயில்ல:)).. தலைமை ரசிகர் எங்கட றீச்சரோ?:)) ஹையோ படிச்சதும் கிழிச்சு சிங்கப்பூர் முஸ்தஃபா ஹோட்டேல் அடுப்பில போட்டு எரிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்:))..

    மியாவும் நன்றி சிவா..

    ReplyDelete
  35. இளமதி said...
    அட இது எப்ப...
    நான் இப்பதான் வந்து கண்டேன்...:)//

    வாங்கோ இளமதி வாங்கோ.. எல்லாமே அவசரா போட்டதால அறிவித்தல் தர முடியவில்லை.. மன்னிக்கவும்.

    க்விலிங்க் நல்லா இருக்கு அதிரா. நல்ல கலர்ப் பொருத்தம். பிங் கார்ட் றீ சைக்ளிங் அதுவும் நல்லா இருக்கு.
    க்விலிங்கில் பலூன் எண்டு சொன்னபிறகே கண்டேன். இன்னும் கொஞ்சம் ரைட்டா நீளம் கூட எடுத்து கொயில் சுற்றி இருக்கலாம். பூக்களும் இலைகளும் அழகு.!

    // இது 3மிமீ ஸ்ரெடர் வாங்கி அதில்தான் செய்தேன், அதனால் முன்பை விட எவ்ளோ பெட்டர் எனத்தான் எனக்கும் படுது. ஓம் பலூன் செய்யும்போது நேரம் இரவு 11 ஆகிவிட்டதால, முடிச்சால் போதுமென.. ச்சும்மா முடிச்சுவிட்டேன்.. இனிமேல் பார்ப்போம். //

    தொடர்ந்து செய்யுங்கோ. கை படியும். நல்லா வரும்.
    நண்பிக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!


    // மியாவும் நன்றி.... எனக்கும் நிறைய விதம் விதமா செய்து ஆட்களுக்கு கொடுக்கோணும், ச்சுவரில ஃபிரேம் பண்ணி மாட்டோணும் எண்டெல்லாம் ஆசை இருக்கு.. நேரம் போதாது, எனக்கிதுக்கு நிறைய நேரமெடுக்குதே:).

    ReplyDelete
  36. இளமதி said...
    ம். தோடு, காப்பு, பொட்டு கலக்‌ஷனும் கலக்கல்.

    ”அஞ்சு” இதழ்பூவோடை வரவேற்றவர்...
    விளங்கீட்டுது. அதுவும் அழகுதான்.

    ஹா..ஹா..ஹா..:)

    வெங்காயம் சமைச்சு முடிஞ்சுதோ...:) வீட்டில நிண்டு பராமரிச்சிருந்தா இன்னும் நல்லா விளைஞ்சிருக்கும்... ஆனாலும் சின்னக் குடும்பத்துக்கு சின்ன வெங்காயம் காணும்தான்...:).

    அதுதான் என் கவலை இம்முறை எதுவும் பயிர் செய்யவில்லை. வெங்காயம் மட்டும் போட்டேன். வழமையாக சின்ன வெங்காயம்தான் நடுவேன், இதழ்/தாள் சுண்டுவதுக்காக, நன்றாக வரும்.

    இம்முறை அது கிடைக்கவில்லை, இது இங்கத்தைய பெரிய வெங்காயம்:)).. ஆனா அரைக் கிலோவுகு மேல வந்திருக்கு.


    பூஸானந்தாவின் மொழிகள் அற்புதம். ஆழமான நல்ல கருத்துக்கள்.
    எல்லாமே சூப்பர்!.. வாழ்த்துக்கள்! மியாவும் நன்றி வரவுக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  37. Cherub Crafts said...
    முருகா அஞ்சுவுக்கு இன்னும் ஏன் ஸ்கூல் ஸ்ராட் பண்ணல்ல?:))(இது மைண்ட் வொயிஷாக்கும்:))..//


    கர்ர்ர்ர்ர்ர்ர் :)))) மைண்ட் வாயசை வீட்டிலிருந்து யோசிச்சிருக்கணும் ...மலை மேலிருந்து ஒசிச்சதால்
    உடனே எக்கோ கேட்டுடிச்//

    haa..haa..haa.. no..no.... mee is under the bed:))

    ReplyDelete
  38. Ambal adiyal said...
    சரி உங்களது வெள்ளைக் கார நண்பிக்கு என் சார்பிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி விடுங்கள் சகோதரி பூசானந்தா //

    அடடா ஆரிது.. ஓ அம்பாளடியாள்.. வரலஸ்மி பூஜையன்று அம்பாளா வந்திருக்கிறீங்க வாங்கோ வாங்கோ.. நீண்ட நாட்கள் எல்லோரையும் சந்திக்காத ஒரு பீலிங்ஸூ:)).. மியாவும் நன்றி வாழ்த்துக்கு.

    எல்லாமே போடா போட்ட இடத்தில் கிடக்கக் கூடாது கொஞ்சம் அடுக்கியும் வைக்க வேணும் .அதுதான் இங்கின இருந்த பல பொருட்களையும் நானே எடுத்துச் செல்கின்றேன் .உங்களுக்குத்
    தான் கோபம் மனதில இருக்காதே வரட்டுமா பூசானந்தா :))))))//

    ஆவ்வ்வ்வ்வ்வ் முடிவில ஆப்பு வச்சிட்டீங்களே:)).. இது வழமையா மணியம் கஃபே ஓனரின்:)) வேலையாச்சே:)) நீங்க எப்போ.. இப்பூடி மா....றி... ..னீங்ங்ங்:))... ஆவ்வ்வ் என்னாது கோபம் மனதில இருக்காதோ?:) நானே எனக்கு சூனியம் வச்சிட்டனோ:)))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அம்பாளடியாள்.. டெய்லி வாங்கோ..:).

    ReplyDelete
  39. இனிய வணக்கம் தங்கை அதிரா...
    அழகான வேலைப்பாடு..
    கண்களைக் கவரும் வண்ணம்...

    ReplyDelete
  40. அது குயிலிங் கார்ட்டை சோட் அண்ட் சுவீட்டா குயில் எண்டமாக்கும்:)).. ///

    அட இதுதானா? நான் என்னமோ எல்லாம் நினைத்துவிட்டேன்! சரி பேர்த்டே கார்ட்டை எப்படி சுருக்கமாக சொல்வீர்கள்?

    க்ளியர் மை டவுட்!!

    ReplyDelete
  41. இன்று என் இங்கத்தைய வைட் நண்பியின் பிறந்ததினம், ////

    என்னது வைட் நண்பியா? அவ்ளோ அகலமாவா இருப்பா? போட்டோ போடுங்க ப்ளீஸ் :)))

    ReplyDelete
  42. என் முன்னைய குயிலிங் கார்ட்டைப் பார்த்து, ஒரு மணித்தியாலம் அதுபற்றி ரசிச்சு ரசிச்சுப் பேசுவா.. ///

    ஹா ஹா அவவுக்கும் பொழுது போகணுமே??

    ReplyDelete
  43. அதனால்தான் அவவுக்கு இதைச் செய்தேன், இப்போ ஷோ கேஷில் இதை வச்சிருப்பா.. வீட்டுக்குப் போவோருக்கெல்லாம் காட்டுவா:). ///

    அதுசரி அவ வீட்டில் பூ பெல் இருக்குன்னு செக் பண்ணினீங்களா?

    ReplyDelete
  44. அதுக்கு முதல்.. அஞ்சூஊஊ டிஷூ பிளீஸ்ஸ்:)).. பிங் கலரிலதான் வேணும்:). ///

    நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்! இனிமே உங்க ப்ளாக்குக்கு வர முன்னாடி, ஒரு லாரி நிறைய டிஷூ அனுப்பிவிட்டுத்தான் வருவதென! அடிக்கடி நீங்க டிஷூ கேட்க, நாங்க அந்தரப்பட்டு தேட வேண்டி இருக்கு :))

    அதுசரி மாசத்துல எத்தனைவாட்டி அழுவீங்க??? :))))

    ReplyDelete
  45. ஆமா அந்த பூவில் எட்டு இதழ் இருக்கே ..நீங்க அஞ்சு இதழ் என்கிறீங்க
    நான் உடனே இங்கு வருமாறு கணித மேதை மணியை அழைக்கிறேன் .. ///

    அக்கா, உங்களுக்கு மட்டும் அந்த மாபெரும் உண்மையைச் சொல்றேன்! அதாவது பூஸார் கனடாவுக்கு போய், சன் கிரீம் பூசிக்கிட்டு வெயிலெல்லாம் திரிஞ்சாவாம்! அதுனால கொஞ்சம் பார்வை மங்கிடுச்சாம்!

    அதான் சரியா எண்ண முடியாம இப்படி போட்டிருக்கா!! இது ஒரு தற்காலிக ப்ராப்ளம்தான்! போக போக சரியாகிடும்!!!

    ReplyDelete
  46. "ஓவரா புழுகிட்டமோ?:""பெயர் சொல்ல எனக்கு “ஷை”யா வருது." 'திரும்ப படம் எடுத்து போட ரயேட்டாக இருந்திச்சா..' " தங்களின் முதுகை, தாமே பார்க்கும் பாக்கியம்" 'சொந்தக் கதை... யோகக் கதையை' இவற்றையெல்லாம் ரசித்துப் படித்தேன்.

    ''கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!
    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது மனதிலும் இருக்க வேண்டும்...!!'' உண்மையிலும் உண்மையான வார்த்தைகள்.

    ReplyDelete
  47. இது அதிரா-ட ப்ளொக் தானா? இல்லாட்டி எதானும் ஃபேன்ஸி ஸ்டோர் வெப் பேஜ்-ஆ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்! கம்மல், பொட்டு, வளையல்னு ஜகஜகன்னு ஜொலிக்குதே!! :)))))

    வெங்காய அறுவடை சூப்பர். ஆள் இல்லாமலே இத்தனை வெங்காயம் காய்ச்சிருக்கே! :)

    பிறகு அந்த வெல்கம் பக்- பூவை எங்கயோஓஓஓஓ பார்த்த மாதிரி இருக்கு அதிராவ்! எனக்கும் இப்படி ஒரு பூ அஞ்சு இதழோட வந்துச்சு, ஒரே பூவை வைச்சு பலபேர ஏமாத்துறாங்க! உஷார், உஷார்! :)

    க்வில்ட் கார்ட் அழகா இருக்கு. இன்னும் பல கார்டுகள் செய்து உங்க நண்பியை அசத்த வாழ்த்துக்கள்!

    ஹ்ம்ம்ம்...எல்லா மேட்டரையும் கவர் பண்ணிட்டனான்னு தெரிலை, இருந்தாலும் இப்போதைக்கு இந்த கமெண்ட்டை மட்டும் வைச்சுக்குங்க. அப்பால வாரேன். பை, பை! ஹேப்பி வீகெண்ட்!

    ReplyDelete
  48. //போனமுறை லூட்ஸ்ஸில வாங்கிய பிரேஸ்லட்டுக்கு சூப்பரா மச் பண்ணுது.. மகி நோட் திஸ் பொயிட்:)).// ஓஹோ! படு ஜோர்! செட்டா பத்திரமா பேக் பண்ணி, இங்ஙன அனுப்பி விட்டுருங்கோ. கூடவே மேட்சிங் பொட்டும், வளையலும் வைக்க மறக்கவேண்டாம், புரியறதா? ;)))))))


    ஹஹாஹா! சூப்பர் கலெக்‌ஷன்ஸ் அதிராவ்!

    ReplyDelete
  49. அவ்வ்வ்வ் :)) கர்ர்ர்ர் 4 மகி நான் உங்களுக்கு Gladiolus அனுப்பினேன் மகி :)) அதை பூஸ் கிட்ட சொல்லாதீங்க .இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும் :))
    பொறுமையா இருந்தா தம்பி மணி கிட்ட சொல்லி இங்கிருக்க bangles and கம்மல்களில் மூனில் ஒரு பங்கு உங்களுக்கு தருவேனாம் :))

    ReplyDelete
  50. பூஸார் கனடாவுக்கு போய், சன் கிரீம் பூசிக்கிட்டு வெயிலெல்லாம் திரிஞ்சாவாம்! அதுனால கொஞ்சம் பார்வை மங்கிடுச்சாம்! //


    thanks thambi :))))

    ReplyDelete
  51. தோடு எல்லாம் வடிவா இருக்கு. எனக்கும் ஒரு சோடி அனுப்பி வையுங்கோ அதீஸ். நானும் இப்பிடி ஒற்றை நிறைய வைச்சிருக்கிறன். அனேகம் ஃப்ளட்ல, காரில தூரப் பயணம் போகேக்கதான் துலையுது. சிலது திரும்ப வாங்கக் கிடைக்கும். அப்பிடிக் கிடைச்சால் இருக்கிற ஒற்றையை செய்ன்ல மாட்டுவன். ஒன்று.. 4 கல். அதை இரண்டாகப் பிரிச்சு ஒரு சோடியாக்கினன். டிசைனைப் பொறுத்து ப்ரூச்சாகவும் பயன்படுத்தலாம்.

    க்வில்லிங் வடிவா இருக்கு. நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பா. உங்கட தோழிக்கு என் வாழ்த்துகள்.

    நான் பொட்டு சேர்க்கிறேல்ல. ஆனால் காப்பு வாங்கிற விசர் இருக்கு. போடத்தான் சந்தர்ப்பம் அமையாது. ;(

    வெங்காயம் உங்களைப் பார்க்காமல் விளைஞ்சிருக்கு.
    தத்துவம் அருமை.
    அது சரி... உங்கட செல்லம் எப்பிடி இருக்கிறார்?

    ReplyDelete
  52. Super card, ear rings and everything. In Canada i have seen those gold plated bangles but did not buy it. Next time i will buy those.

    ReplyDelete
  53. Wow athira card spur. Your way of writing very very nice.

    ReplyDelete
  54. மகேந்திரன் said...
    இனிய வணக்கம் தங்கை அதிரா...
    அழகான வேலைப்பாடு..
    கண்களைக் கவரும் வண்ணம்...
    //
    வாங்கோ மகேந்திரன் அண்ணன் வாங்கோ.. நலம்தானே? நீங்களும் நீண்ட நாட்களாகப் பதிவு போடவில்லையே..

    மிக்க நன்றி.

    ReplyDelete
  55. மாத்தியோசி மணி மணி said...
    அது குயிலிங் கார்ட்டை சோட் அண்ட் சுவீட்டா குயில் எண்டமாக்கும்:)).. ///

    அட இதுதானா? நான் என்னமோ எல்லாம் நினைத்துவிட்டேன்! சரி பேர்த்டே கார்ட்டை எப்படி சுருக்கமாக சொல்வீர்கள்?

    க்ளியர் மை டவுட்!!

    வாங்கோ மணி வாங்கோ.. வரும்போதே சந்தேகத்தோடயே வந்திருக்கிறீங்க:).. அதனை பேர்த்டேகார்ட் எண்டும் சொல்லலாம்ம். பேகாட்....டு :) எனவும் சொல்லலாம்:).. உஸ்ஸ் அப்பாடா தப்பித்தேன்:).

    ReplyDelete
  56. மாத்தியோசி மணி மணி said...
    இன்று என் இங்கத்தைய வைட் நண்பியின் பிறந்ததினம், ////

    என்னது வைட் நண்பியா? அவ்ளோ அகலமாவா இருப்பா? போட்டோ போடுங்க ப்ளீஸ் :)))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவ சரியான மெல்லிசு.. என்னைப்போலவே:)..

    மாத்தியோசி மணி மணி said...

    அதுசரி அவ வீட்டில் பூ பெல் இருக்குன்னு செக் பண்ணினீங்களா?

    ஓ இருக்கே:)) பெல் அடிச்சால்தான் கதவு திறக்கும்:) வாசல்லேயே பூ இருக்கும்:)).. இதைத்தானே கேட்டீங்க:)) வேற ஏதும் பிரெஞ்சு கிரெஞ்சு பேசல்லியே:))

    ReplyDelete
  57. மாத்தியோசி மணி மணி said...

    அதுசரி மாசத்துல எத்தனைவாட்டி அழுவீங்க??? :))))

    அது எத்தனை வாட்டி சமைக்கிறேனோ:) அத்தனை வாட்டி அழுவேன்:)) ஏனெனில் அப்போதானே வெங்காயம் உரிப்பேன்:).. எங்கிட்டயேவா?:))

    ReplyDelete
  58. மாத்தியோசி மணி மணி said...
    இது ஒரு தற்காலிக ப்ராப்ளம்தான்! போக போக சரியாகிடும்!!///

    அப்பிடீங்கிறீங்க:))).. சரி சொல்லிட்டீங்க நம்பிட்டேன்ன்.. ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மணி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும்.

    ReplyDelete
  59. Viya Pathy said...
    "//// இவற்றையெல்லாம் ரசித்துப் படித்தேன்.

    '//// உண்மையிலும் உண்மையான வார்த்தைகள்.///

    வாங்கோ வையாபதி வாங்கோ.. மியாவும் நன்றிகள்.

    ReplyDelete
  60. Mahi said...
    இது அதிரா-ட ப்ளொக் தானா? இல்லாட்டி எதானும் ஃபேன்ஸி ஸ்டோர் வெப் பேஜ்-ஆ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்! கம்மல், பொட்டு, வளையல்னு ஜகஜகன்னு ஜொலிக்குதே!! :)))))

    ஆவ்வ்வ் வாங்கோ மகி வாங்கோ.. இப்பவே ஜொலிக்குதா?:) அப்போ அதிரா இதையெல்லாம் போட்டால்ல்?:)) ஒரு கண்ணை மட்டில் மூடிக் கற்பனை பண்ணினேன் ...:) முடி...யல்ல:)))

    வெங்காய அறுவடை சூப்பர். ஆள் இல்லாமலே இத்தனை வெங்காயம் காய்ச்சிருக்கே! :)
    // வெங்காயம் காய்க்கிறதா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது இம்முறை நாங்கள் இல்லையெனப் பார்த்து நல்ல வெதராம் அதுதான். போன வருடம் பக்கத்தில நின்று பராமரித்தும், தொடர் மழையால.. ஒரே வேர்தான் வந்துது.

    பிறகு அந்த வெல்கம் பக்- பூவை எங்கயோஓஓஓஓ பார்த்த மாதிரி இருக்கு அதிராவ்! எனக்கும் இப்படி ஒரு பூ அஞ்சு இதழோட வந்துச்சு, ஒரே பூவை வைச்சு பலபேர ஏமாத்துறாங்க! உஷார், உஷார்! :) //

    ஆவ்வ்வ்வ்வ் சத்தியமா?:)) எனக்கொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்:)) பிங்லதான் வேணும்:))

    க்வில்ட் கார்ட் அழகா இருக்கு. இன்னும் பல கார்டுகள் செய்து உங்க நண்பியை அசத்த வாழ்த்துக்கள்!//

    மிக்க மிக்க நன்றிகள்.

    ஹ்ம்ம்ம்...எல்லா மேட்டரையும் கவர் பண்ணிட்டனான்னு தெரிலை, //

    //இல்ல இல்ல முழுக்க கவர் பண்ணல்ல.. கை கால் எல்லாம் தெரியுதே எனக்கு.. ஹா..ஹா..ஹா.. மகி சூப்பர் மாட்டி:))

    ReplyDelete
  61. Mahi said...
    //போனமுறை லூட்ஸ்ஸில வாங்கிய பிரேஸ்லட்டுக்கு சூப்பரா மச் பண்ணுது.. மகி நோட் திஸ் பொயிட்:)).// ஓஹோ! படு ஜோர்! செட்டா பத்திரமா பேக் பண்ணி, இங்ஙன அனுப்பி விட்டுருங்கோ. கூடவே மேட்சிங் பொட்டும், வளையலும் வைக்க மறக்கவேண்டாம், புரியறதா? ;)))))))


    ஹஹாஹா! சூப்பர் கலெக்‌ஷன்ஸ் அதிராவ்!

    அதிராவோ கொக்கோ.. உடனேயே கொண்டுபோய் லொக்கரில வச்சு லொக் போட்டிட்டேன்ன்:)).. இப்போ குயின் அம்மம்மாட பூட்டனை தொட்டிலில் போடப் போகவும்,அந்த ஒரேஞ் இல்லையே என ஓசிக்கிறேன்ன்:)))..

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  62. Cherub Crafts said...
    அவ்வ்வ்வ் :)) கர்ர்ர்ர் 4 மகி நான் உங்களுக்கு Gladiolus அனுப்பினேன் மகி :)) அதை பூஸ் கிட்ட சொல்லாதீங்க .இந்த ரகசியம் நமக்குள்ளேயே இருக்கட்டும் :))
    பொறுமையா இருந்தா தம்பி மணி கிட்ட சொல்லி இங்கிருக்க bangles and கம்மல்களில் மூனில் ஒரு பங்கு உங்களுக்கு தருவேனாம் :))////

    அடடா.. நான் ரிக்கெட் எடுத்து போய் வாங்கி வந்தா:)) இங்க பங்கு புறிக்க பிளான் நடக்குதே.. இது என்ன கொடுமை வைரவா?:)).. முருகா இங்கிருக்கும் அத்தனையும் வள்ளிக்கே போடுவேன்ன் என் பொருட்களைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்:))..

    மகி பொயிங்கி எழுங்கோ:))

    ReplyDelete
  63. Cherub Crafts said...
    பூஸார் கனடாவுக்கு போய், சன் கிரீம் பூசிக்கிட்டு வெயிலெல்லாம் திரிஞ்சாவாம்! அதுனால கொஞ்சம் பார்வை மங்கிடுச்சாம்! //


    thanks thambi :))))



    ஆரைப் பார்த்து இந்தக் கொலை வெறி:)) என, ஆரும் என்னைக் குரொஸ் குவெஷன் கேட்கப்பூடா சொல்லிட்டேன்ன்ன்:))

    ReplyDelete
  64. இமா said...
    தோடு எல்லாம் வடிவா இருக்கு. எனக்கும் ஒரு சோடி அனுப்பி வையுங்கோ அதீஸ்.//

    வாங்கோ இமா வாங்கோ... “அந்த 7 நாட்கள்” கேக் எல்லாம் சாப்பிட்டு முடிச்சும்:) நலமாக இருக்கிறீங்கதானே?:)).. வான்ஸ் அண்ட் மகி நோட் திஸ் பொயின்ட்:))

    நானும் இப்பிடி ஒற்றை நிறைய வைச்சிருக்கிறன். அனேகம் ஃப்ளட்ல, காரில தூரப் பயணம் போகேக்கதான் துலையுது. சிலது திரும்ப வாங்கக் கிடைக்கும். அப்பிடிக் கிடைச்சால் இருக்கிற ஒற்றையை செய்ன்ல மாட்டுவன். ஒன்று.. 4 கல். அதை இரண்டாகப் பிரிச்சு ஒரு சோடியாக்கினன். டிசைனைப் பொறுத்து ப்ரூச்சாகவும் பயன்படுத்தலாம்.

    ஆஹா.. இப்படியும் ஐடியாக்கள் இருக்கோ? எனக்கு இப்படி கல்லுகள் வைத்தது அதிகம் ஒற்றை தொலைந்திருக்கு, அதை பெரும்பாலும் எறிந்திடுவேன்ன், மினக்கெடுவதில்லை.. இப்போ உங்கள் ஐடியா நல்லா இருக்கே..

    க்வில்லிங் வடிவா இருக்கு. நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பா. உங்கட தோழிக்கு என் வாழ்த்துகள்.

    மிக்க நன்றி இமா.. ஓம்.. இனிக் காணும்போதெல்லாம்.. கட்டிப்பிடிச்சு தாங்ஸ் சொல்லுவா:)

    நான் பொட்டு சேர்க்கிறேல்ல. ஆனால் காப்பு வாங்கிற விசர் இருக்கு. போடத்தான் சந்தர்ப்பம் அமையாது. ;(

    நான் காப்பு சேர்க்கிறேல்லை, வைபவங்களுக்கு போவதாயின் பவுன் மட்டும்தான், ஆனா, சமர் என்பதால கை வெளியே தெரியும், அதனால பார்த்ததும் போடும் ஆசை வந்து வாங்கினேன், மற்றும் படி இப்படிக் காப்புகள் என்னிடம் இல்லை, ஆனா கொஞ்சம் விதம் விதமான பிரேஸ்லெட்ஸ் வைத்திருக்கிறேன்(பான்ஷி)..

    வெங்காயம் உங்களைப் பார்க்காமல் விளைஞ்சிருக்கு.
    தத்துவம் அருமை.
    அது சரி... உங்கட செல்லம் எப்பிடி இருக்கிறார்?

    // செல்லம் நலமே இருக்கிறார்:) நன்மை தீமை, நாம் போனது வந்தது, எதுவும் அவருக்குத் தெரிஞ்சமாதிரித் தெரியேல்லை:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி இமா.

    ReplyDelete
  65. vanathy said...
    Super card, ear rings and everything. In Canada i have seen those gold plated bangles but did not buy it. Next time i will buy those.

    வாங்கோ வான்ஸ் வாங்கோ.. கனடாவில் இல்லாததே இல்லை, சொல்லப்போனால் இலங்கையில் கிடைக்காததெல்லாம் கனடா தமிழ்க் கடைகளில் கிடைக்குது.

    நெக்ஸ்ட் டைம் வாங்குங்கோ அதுவும் கறுக்காததா கேட்டு வாங்குங்கோ.. இது கோல்ட் பிளேட்டட் எனச் சொல்ல முடியாது, ஆனா கறுக்காது என்றார்:).. எதுக்கும் பொறுங்கோ.. இப்போ மீ தானே லாப் எலி:) கொஞ்சக்காலம் போகட்டும் கறுத்துதா இல்லையா எனச் சொல்லுவேன்:))..

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  66. Vijiskitchencreations said...
    Wow athira card spur. Your way of writing very very nice.//

    அடடா நீண்ட நாட்களுக்குப் பின்னர்ர்.. வாங்கோ விஜி வாங்கோ.. ஹொலிடே எல்லாம் எப்படிப் போகிறது..

    மியாவும் நன்றி விஜி.

    ReplyDelete
  67. ரிசைக்க்ளிங் அண்ட் க்விலிங் அருமையான ஐடியா .
    கலர் காம்பினேஷன் சூப்பர்ப் ....

    ReplyDelete
  68. என்னாது ஒரு காதை காணுமா?
    ஏன் நீங்களும் என்னை மாதிரியே
    நானும் அதே கம்ம்மல் ப்ரவுன் கலர் அதே போல் புளு எடுத்து காலை காதில் போட்டு கொண்டு மாலை பார்த்தால் ஒரு காதை காணும், ( ஒரு கம்மலை காணும்)
    குவில்லிங்க் ரொம்ப நல்ல இருகும்

    ReplyDelete
  69. VijiParthiban said...
    ரிசைக்க்ளிங் அண்ட் க்விலிங் அருமையான ஐடியா .
    கலர் காம்பினேஷன் சூப்பர்ப் ....//

    வாங்கோ விஜி பா.. வாங்கோ.. மியாவும் நன்றி.

    ReplyDelete


  70. Jaleela Kamal said...
    என்னாது ஒரு காதை காணுமா?
    ஏன் நீங்களும் என்னை மாதிரியே
    நானும் அதே கம்ம்மல் ப்ரவுன் கலர் அதே போல் புளு எடுத்து காலை காதில் போட்டு கொண்டு மாலை பார்த்தால் ஒரு காதை காணும், ( ஒரு கம்மலை காணும்)
    குவில்லிங்க் ரொம்ப நல்ல இருகும்

    அடடா வாங்கோ ஜல் அக்கா வாங்கோ நலம்தானே? நோன்பெல்லாம் நல்லபடி முடிஞ்சுதோ?..

    என்னாது உங்களுக்கும் ஒரு காதைக் காணமா?:)) ஹா..ஹா..ஹா.. இருக்காதா பின்ன:) நீங்களும் 4ம் நம்பராச்சே:)).. இதெல்லாம் “காது” வாழ்க்கையில் சகஜம் ஜல் அக்கா.. குட்டியா இருந்தபோது குட்டிக் குட்டித் தங்கத் தோடுகள் தொலைத்தோம்ம்.. இப்போ பெரீய பெரீய... வைர.. சே.சே.. தோடுகள் தொலைக்கிறோம்:)..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  71. /கோபம் மனதில் இருக்க கூடாது
    வார்த்தையில் தான் இருக்க வேண்டும்..!!!

    அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது. மனதிலும் இருக்க வேண்டும்...!!/

    தத்துவம் சொன்ன பூசார் வாழ்க..!

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.