ஆவ்வ்வ்வ் என்னா இது இப்பூடிக் கிரவுட்டாக் கிடக்கே...:)).. உஸ்ஸ்ஸ்.. இவ்ளோ பேருக்கும் துன்பமா?:) சரி சரி எல்லோருக்குமே விடுதலை கிடைக்கும்:).. முதல்ல கியூ வரிசையா:) நில்லுங்கோ:).. அதாரது இடிக்கிறது?.. அக்கா அக்கா அந்தக் குட்டித் தம்பியை இடிக்காதையுங்கோ:).. அண்ணா.. உங்களைத்தான்.. கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ:)..ஹையோ ஆச்சி.. ஏன் இடையில நுழையுறீங்கள்..:) எல்லோருக்கும் விடுதலை வாங்கித் தருவன்:).. துன்பங்களில் இருந்துதான்ன்.. நம்புங்கோ அதிராவை:))
சரி இனி விஷயத்துக்கு வருவோம்ம்.. துன்பங்கள் எதனால் வருகின்றன? அதற்குப் பல காரணங்கள் உண்டுதானே. பல காரணங்களாலும் வரும் துன்பங்கள் நிவர்த்தி செய்யப்படக்கூடியவை.. ஆனா இந்த “நோயால்” வரும் துன்பம் இருக்கே... அது பூரண மருந்துகள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டாலும்.. நோய் ஒன்று வந்துவிட்டதென்றாலே துன்பம்தானே, மனம் சோர்ந்து விடுகிறார்கள்.
அப்போ இத் துன்பத்தை போக்க நாம் “வருமுன் காப்போனாக” இருப்பது நல்லதல்லவா?.. அதையும் தாண்டி ஏற்படுமாயின்.. அதுகுத்தான் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் அது “விதி”... “அதனை மாற்ற முடியாதே” என, விதியில் பழியைப் போட்டு, எம் மனதுக்கு நிம்மதி வாங்கிக் கொடுக்கிறோம்.
அதுசரி, இப்போ வருமுன் காப்போனாக இருக்க என்ன பண்ணோணும் என்றுதானே கேட்கிறீங்க?:)) ச்ச்சோஓஒ ஈசி:).. அதிராவின் சமையலைச் சாப்பிடுங்கோ:))(ஹையோ ஏன் உந்த முறைப்பூஊஊஊ?:)).
அதிராவின் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்:)..
அதிராவின் சனிக்கிழமை ஸ்பெஷல்:)
எனக்கு இலை வகைகளில் வறை செய்து சாப்பிட ரொம்பவும் பிடிக்கும், ஆரம்பம் கரட் இலைகள் பார்த்தபோது, கரடுமுரடாக இருக்கே என நினைத்து பயப்பிட்டேன்ன், இமா றீச்சர் தான் சொன்னா வறை செய்யலாம் என, அப்போ என் கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில், வறையை சொஃப்ட் ஆக்க, கரட்டையும் சேர்த்தேன், சூப்பரோ சூப்பர்.
அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம்.
![]() |
ஸ்ஸ்ஸ் தியானத்தில் இருக்கும்போது டிஸ்ரேப் பண்ணப்பூடாது:) .. இப்போ நான் பேஷனலாப் பேசுகிறேன்ன்.. ஆண்டவனோடு:)) |
அப்போ இத் துன்பத்தை போக்க நாம் “வருமுன் காப்போனாக” இருப்பது நல்லதல்லவா?.. அதையும் தாண்டி ஏற்படுமாயின்.. அதுகுத்தான் ஒரு பெயர் வைத்திருக்கிறோம் அது “விதி”... “அதனை மாற்ற முடியாதே” என, விதியில் பழியைப் போட்டு, எம் மனதுக்கு நிம்மதி வாங்கிக் கொடுக்கிறோம்.
அதுசரி, இப்போ வருமுன் காப்போனாக இருக்க என்ன பண்ணோணும் என்றுதானே கேட்கிறீங்க?:)) ச்ச்சோஓஒ ஈசி:).. அதிராவின் சமையலைச் சாப்பிடுங்கோ:))(ஹையோ ஏன் உந்த முறைப்பூஊஊஊ?:)).
அதிராவின் வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்:)..
வரகரிசிக் கஞ்சி.
ஒரு கப் வரகை, கழுவி, குக்கரில் அவியவிட்டு, அதனோடு நிறையச் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு் விடோணும். பாதி வெந்ததும் ஒரு பூண்டு உள்ளியை முழுதாக உரித்துப் போடோணும். அளவுக்கு உப்பும் போட்டு, இறக்கும் தறுவாயில் ஸ்பினாஜ் கீரை குட்டியாக அரிந்து போட்டு, கொஞ்சம் பால் சேர்த்தேன்.. ஓவ் பண்ணியதும்.. பாதி தேசிக்காய் பிளிந்து விட்டுக் குடிக்க, சூப்பர் சுவையாக இருக்கும்.அதிராவின் சனிக்கிழமை ஸ்பெஷல்:)
கரட் இலை சுண்டல்..
அதாவது இப்போ எல்லா இடமும் கரட், இலைகளோடு கிடைக்குது, அதனை எடுத்து நன்கு கழுவிவிட்டு, தண்டோடு, மிகவும் குட்டியாக அரிந்து, அதனோடு ஒன்றிரண்டு கரட்டை எடுத்து, ஸ்கிரேப் பண்ணி கொஞ்சம் தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள்(கொஞ்சம்), உப்பு சேர்த்து பிசைந்து, வெங்காயம்,செத்தல் தாளித்து அதனுள் இதைக் கொட்டி மெல்லிய நெருப்பில் மூடி...பிரட்டி, மூடி அவிய விட்டு பிரட்டி இறக்கவும். ஒரு இனிப்போடு கூடிய சுவை கிடைக்கும்.எனக்கு இலை வகைகளில் வறை செய்து சாப்பிட ரொம்பவும் பிடிக்கும், ஆரம்பம் கரட் இலைகள் பார்த்தபோது, கரடுமுரடாக இருக்கே என நினைத்து பயப்பிட்டேன்ன், இமா றீச்சர் தான் சொன்னா வறை செய்யலாம் என, அப்போ என் கிட்னியை ஊஸ் பண்ணிய இடத்தில், வறையை சொஃப்ட் ஆக்க, கரட்டையும் சேர்த்தேன், சூப்பரோ சூப்பர்.
=======================இடைவேளை===========================
இடைவேளையில் ச்சும்மா இருக்காமல், இப்பூடி ஏதாவது உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருக்கோணும். சமீபத்தில் இங்கத்தைய ஒரு புரோகிராமில் சொல்லிச்சினம், உடம்பு மெலிவதற்கு, முதல் வேலையாக, நம்மை எப்பவுமே ஆக்டிவாக வைத்திருக்கட்டாம். இப்படி இருந்தாலே உடம்பு மெலியும் வாய்ப்பு அதிகமாம்.அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம்.
============உஸ்ஸ்ஸ் இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்ச்:))===========
ஆங்ங்ங் இது அதிராவின் செவ்வாய்க்கிழமை ஸ்பெஷல்:)..
இஞ்சி மோர்..
எப்பவுமே சாப்பிட்டுக் கொண்டிருக்காமல், அடிக்கடி நீராகாரமும் உட்கொள்ளோணும்[(ஆவ்வ் எப்பூடி என் தமிழ்?:) அழகா இருக்கோ?:) இருக்காதா பின்ன:)) நாங்களெல்லாம் தமிழ்ல “டி” எடுத்த ஆட்களாக்கும்..க்கும்..க்கும்..:))]..
அதனால, இப்பூடியெல்லாம் விதம் விதமா செய்து குடிக்கோணும்:).இது ஒரு இஞ்சி சேர்த்த மோர். அதாவது ஒரு சின்ன துண்டு இஞ்சி, 4,5 சின்ன வெங்காயம், கொஞ்சூண்டு உப்பு,அத்தோடு தயிர் சேர்த்து அடித்து, முடிவில் கொஞ்சம் தேசிக்காய் சேர்த்துக் கொள்ளோணும். இதுவும் ஒருவித மருத்துவக் குறிப்புத்தான்.
உணவில் பழப்புளி சேர்ப்பது, உடம்புக்கு நல்லதல்லவாம்.. இது எனக்கொரு, “நாட்டு வைத்தியர்” சொன்னார். அதுக்குப் பதில் எலுமிச்சை சேர்ப்பது மிகவும் நல்லதாம். எலுமிச்சம் புளியை உணவில் அதிகம் சேர்த்தால்,நமது தோல் பழபழப்பாகுமாம்.
அடுத்து இஞ்சி உணவில் சேர்க்கும்போது, எப்பவும் நன்கு தோல் நீக்க வேண்டுமாம், அதன் தோலில் ஒருவித நச்சுத் தன்மை உள்ளதாம். தினமும் இஞ்சி சேர்த்து வந்தால் பல நோய்கள், தொல்லைகளிலிருந்து விடுபடலாமாம்.
இப்போ சொல்லுங்கோ.. இனி, துன்பங்களிலிருந்து விடுதலைதானே?:)).
ஊசி இணைப்பு:
வழமைபோல எம் இடத்தில் கிரான்பெரீஸ் எல்லாம் பூத்து, காய்த்து பழுத்து, தேடுவாரில்லாமல் உதிர்ந்து போகுது... என் கை சொல்லுக் கேட்கவில்லை, கொஞ்சம் ஆய்ந்து வந்தேன்...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குண்டூசி இணைப்பூ:)..
அக்கா பிளீச்ச்ச்ச்ச்ச்:)) வாறீங்களா ஓட்டுப் போட?:) வந்து தமிழ்மணத்தில, ரெண்டு ஓட்டுப் போட்டு:), அதிராவை “மகுடம் சூட்ட” வைக்கிறீங்களோ?:))
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Tweet |
|
|||
துன்பங்களிலிருந்து விடுதலை பெற:) //
ReplyDeleteஉங்க ப்ளாக் படிக்கறத நிறுத்தணுமா? :)
ஆவ்வ்வ்வ் என்னா இது இப்பூடிக் கிரவுட்டாக் கிடக்கே...:)).. உஸ்ஸ்ஸ்.. இவ்ளோ பேருக்கும் துன்பமா?:) சரி சரி எல்லோருக்குமே விடுதலை கிடைக்கும்:).. ///
ReplyDeleteஎன்ன பூஸார் ஜீவிக்கிறாரா? :)))
முதல்ல கியூ வரிசையா:) நில்லுங்கோ:).. அதாரது இடிக்கிறது?.. அக்கா அக்கா அந்தக் குட்டித் தம்பியை இடிக்காதையுங்கோ:).. ///
ReplyDeleteகுட்டித் தம்பிக்கு :)) என்ன துன்பம்? என்ன பிரச்சனை? பொதுவாக பெரியவர்களுக்குத்தானே துன்பம் வரும்? விளக்கம் ப்ளீஸ்!! :))
ஹையோ ஆச்சி.. ஏன் இடையில நுழையுறீங்கள்..:) ///
ReplyDeleteஹா ஹா அந்த ஆச்சிக்கும் துன்பமா? கோவிந்தா :))
ஸ்ஸ்ஸ் தியானத்தில் இருக்கும்போது டிஸ்ரேப் பண்ணப்பூடாது:) .. இப்போ நான் பேஷனலாப் பேசுகிறேன்ன்.. ஆண்டவனோடு:)) ///
ReplyDeleteஎங்களுக்கும் இஸ்கு இஸ்கு என்றுதான் கேட்கிறது :))))))
துன்பங்கள் எதனால் வருகின்றன? அதற்குப் பல காரணங்கள் உண்டுதானே. பல காரணங்களாலும் வரும் துன்பங்கள் நிவர்த்தி செய்யப்படக்கூடியவை.. ///
ReplyDeleteசரி எனக்கு எந்த துன்பமும் தற்சமயம் இல்லை என்பதால், என் நண்பன் சார்பாக ஒரு கேள்வி கேட்கிறேன்!
எனது நண்பன் ஒருவன்..... நண்பன் தான்! நம்போணும் சொல்லிட்டன்! அவன் ஒரு பெண்ணை துரத்தி, துரத்தி, விரட்டி விரட்டி, கலைச்சு கலைச்சு லவ் பண்ணினான். 6 மாசமா அந்த பொண்ணு ஓகே சொல்லவே இல்லை!
இப்ப திடீரென்று லவ்வுக்கு ஓகே சொல்லிட்டா! அதனால் என் நண்பன் மிகவும் துக்கத்தில் இருக்கிறான்!
இந்த துன்பத்தில் இருந்து அவன் எங்ஙனம் விடுதலை பெறலாம்??
பூஸாரிடம் எனி ஐடியா இருக்கோ?? :)))
ஒரு கப் வரகை, கழுவி, குக்கரில் அவியவிட்டு, ///
ReplyDeleteஎங்கள் சித்தப்பா, இணுவிலில் இருக்கிறார் - அவர் வீட்டில் குக்கர் இல்லை. அப்படியானால் அவர் எப்படிச் சமைப்பார்??
விளக்கம் ப்ளீஸ்!!
அதாவது, ஓரிடத்தில் இருக்க வேண்டாமாம். உடம்பை எப்பவும் அசைத்து ஆட்டி எதாவது செய்யட்டாம். ///
ReplyDeleteஐயோ, உங்கட கதையைக் கேட்டு நான் பக்கத்து வீட்டு மதிலில் ஏறி குதிது, பின் பக்க சுவரால் ஏறி, பூஜை அறைக்குள் குதித்தேன். உடனே பிடித்து கட்டி வைத்துவிட்டார்கள்!
ச்சே, உடற்பயிற்சி செய்தது குற்றமா?? :)))
,நமது தோல் பழபழப்பாகுமாம். ///
ReplyDeleteஉங்களுக்கு தமிழில் டி போட்டவர் யார்??
அவரை நான் சந்திக்கோணும் :)))
தோல் பழபழப்பாகுமாம்.//
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா :)) எப்படியோ கண்ணில் பார்த்து விட்டேன்
மேட்டாம் :)0ஸ்பெல்லிங் மிஸ்டேக் ..அது பள பளப்பு
தினமும் இஞ்சி சேர்த்து வந்தால் பல நோய்கள், தொல்லைகளிலிருந்து விடுபடலாமாம்.//
ReplyDeleteokay :))
//பூஸாரிடம் எனி ஐடியா இருக்கோ?? :)))//
ஹா ஹா ஹா அவர இஞ்சி சாப்பிட சொல்லுங்க பல தொல்லைகள் இலிருந்து விடுபடலாம்னு மேடம் சொல்றாங்க ..
அடுத்து இஞ்சி உணவில் சேர்க்கும்போது, எப்பவும் நன்கு தோல் நீக்க வேண்டுமாம், அதன் தோலில் ஒருவித நச்சுத் தன்மை உள்ளதாம். தினமும் இஞ்சி சேர்த்து வந்தால் பல நோய்கள், தொல்லைகளிலிருந்து விடுபடலாமாம். ///
ReplyDeleteஇஞ்சி பற்றி எனக்கு ஒரு டவுட்டு, நான் பாலமோகினி டீச்சரிடம் சங்கீதம் படிச்ச காலத்தில் இருந்தே இருக்கு!
க்ளியர் பண்ணுவீங்களோ?
அதிஸ் கரட் இலை கூட்டு பார்க்க சூப்பரா இருக்கு நானும் செய்ய போறேன் .
ReplyDeleteநீராகாரம் .. ஜிஞ்சர் :))..சும்மா கலக்குறீங்க மியாவ் எங்கியோ போயிட்டீங்க :))
அடுத்த பதிவு வந்த பின் காப்பது பற்றியா :))
ReplyDeleteஎனக்கும் நிறைய டவ்ட்ஸ் வருது ..ஆனா சுடும் பணி ))சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது வந்து கேக்கறேன் ..இப்போதைக்கு உத்தரவு வாங்கிகறேன் ..தமிகிட்ட பொறுப்பை கொடுத்து :))
தமிகிட்ட //
ReplyDeleteதம்பிக்கிட்ட
துன்பங்களிலிருந்து விடுதலை பெற:) //ஆஹா அப்ப ஆச்சிரமம் தொடங்கிவிட்டாள் போச்சு!ஹீ
ReplyDeleteஇஞ்சி மோர் சூப்பர் தகவல்.
ReplyDeleteஎக்சசைஸ் பூனைப்படம் சூப்பராக இருக்கு எப்படித்தான் இப்படித்தோன்றுதோ!
ReplyDeleteஅதிராவிண்ட ரெசிப்பியை சாப்பிட்டாப் போறாது, அதிரா கையாலயே சாப்பிடணுமாம், அப்பத்தான் துன்பம் அண்டாது என புளியமரத்தடி சோசியரின் கிளி (ராசாத்தி) சொல்லிருக்கா அதிராவ். ஒய் டோண்ட் யு மைக்ரேட் ஃப்ரம் யு.கே. டு யு.எஸ்.?? இங்கதான உங்கட சிஷ்யகோடிகள் நிறைய்ய்ய்ய்ய்ய பேர் இருக்கோம்? ;)))))
ReplyDeleteஎல்லா ரெசிப்பிஸும் அருமை. கொஞ்சம் முன்னால சொல்லிருந்தா நானும் கேரட் இலையை சமைச்சிருப்பேன். கர்ர்ர்ர்ர்! சரி..இருக்கட்டும், அடுத்த தபா செய்துடலாம். ;)
//MaaththiYosi Jeevan said...
ReplyDeleteதுன்பங்களிலிருந்து விடுதலை பெற:) //
உங்க ப்ளாக் படிக்கறத நிறுத்தணுமா? :)//
வாங்கோ வாங்கோ மாத்தி யோசிக்கும்.. ஜீவன்:)... முதலாவதா வந்திருக்கிறீங்க..என்ன குடிக்கிறீங்கள்?.. மோர் குடிப்பீங்களோ? இஞ்சி போட்டது..:)..
ஹையோ இப்போதான் பார்க்கிறேன்ன் என்னாது?:)) படிப்பதை நிறுத்தப் போறீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அப்போ இஞ்சி மோர் கான்சல்ட்ட்ட்ட்:)))
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஎன்ன பூஸார் ஜீவிக்கிறாரா? :)))//
ஆவ்வ்வ்வ்வ் என்ன கொடுமை இது?.. ஜீவிக்கிறதெண்டால்ல்ல்ல்.. ஊரில சொல்லுவினம் சீவிக்கிறதென அதுதானே?.. அதாவது உயிரோடிருப்பது:)))... என்ர வைரவா.. இதென்ன என்பக்கத்துக்கு வந்திருக்கும் யோதனை:)).. கொஞ்சம் இருங்க.. என்னைக் கொஞ்சம் கிள்ளிப் பார்க்கிறேன்ன்:))
ஆ.. நோகுது.. அப்போ நான் ஜீவிக்கிறேன்ன்:))) ஹா..ஹா..ஹா..:))
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteகுட்டித் தம்பிக்கு :)) என்ன துன்பம்? என்ன பிரச்சனை? பொதுவாக பெரியவர்களுக்குத்தானே துன்பம் வரும்? விளக்கம் ப்ளீஸ்!! :))
அதை ஏன் கேட்கிறீங்க மணி.. இந்தக் காலத்தில குட்டீஷுக்குத்தான் துன்பம் அதிகம்.. எங்கட வீட்டில சின்னவர் சொல்வார் ஐ ஆம் வெரி சாட் .. என.. ஏன் எனக் கேட்டால்ல், தன்னை படிக்கச் சொல்லியாச்சாம்ம்:)).. துன்பத்துக்கு தெரியுமா பெரியவர் சின்னவர் எனும் பாகுபாடு?:))
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஸ்ஸ்ஸ் தியானத்தில் இருக்கும்போது டிஸ்ரேப் பண்ணப்பூடாது:) .. இப்போ நான் பேஷனலாப் பேசுகிறேன்ன்.. ஆண்டவனோடு:)) ///
எங்களுக்கும் இஸ்கு இஸ்கு என்றுதான் கேட்கிறது :)))))
ஹா..ஹா..ஹா.. ஒரு கல் (அடிச்சு) ஒரு கண்ணாடி... உடைஞ்சாலும் அப்பூடித்தான் கேட்கும்:)).. நாங்களும் பார்த்திட்டமாக்கும்:).
MaaththiYosi Jeevan said...

ReplyDeleteஇந்த துன்பத்தில் இருந்து அவன் எங்ஙனம் விடுதலை பெறலாம்??
பூஸாரிடம் எனி ஐடியா இருக்கோ?? :)))
ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓஓஒ சிம்பிள்:).. டக்குப் பக்கென அவரை ஞானியாகிடச் சொல்லுங்கோ:))
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஒரு கப் வரகை, கழுவி, குக்கரில் அவியவிட்டு, ///
எங்கள் சித்தப்பா, இணுவிலில் இருக்கிறார் - அவர் வீட்டில் குக்கர் இல்லை. அப்படியானால் அவர் எப்படிச் சமைப்பார்??
விளக்கம் ப்ளீஸ்!!
டக்கென ஒண்டு வாங்கி அனுப்பி விடுங்கோ:)).. இது கூடச் செய்யாமல் பெறாமகனாய் இருந்தென்ன பலன்?:))...
எங்கிட்டயேவா?:)) விடமாட்டமில்ல:)).
MaaththiYosi Jeevan said...
ReplyDeleteஐயோ, உங்கட கதையைக் கேட்டு நான் பக்கத்து வீட்டு மதிலில் ஏறி குதிது, பின் பக்க சுவரால் ஏறி, பூஜை அறைக்குள் குதித்தேன். உடனே பிடித்து கட்டி வைத்துவிட்டார்கள்!
ச்சே, உடற்பயிற்சி செய்தது குற்றமா?? :)))
ஹா..ஹா..ஹா.. நல்ல வேளை பூஜை அறையில் குதிச்சமையால்ல் கட்டி மட்டும் வைத்தார்கள்:), மாறிக்கீறி வேலைக்காரம்மாவின் அறையில் குதிச்சிருந்தால்ல்ல்:))..
MaaththiYosi Jeevan said...
ReplyDelete,நமது தோல் பழபழப்பாகுமாம். ///
உங்களுக்கு தமிழில் டி போட்டவர் யார்??
அவரை நான் சந்திக்கோணும் :)))
என்னாது தமிழில டீயோ??? நோஓஓஓஓஒ என்னை ஒருவரும் தமிழில டீ போட்டுக் கதைக்கிறேல்லை:))...
ReplyDeleteMaaththiYosi Jeevan said...
இஞ்சி பற்றி எனக்கு ஒரு டவுட்டு, நான் பாலமோகினி டீச்சரிடம் சங்கீதம் படிச்ச காலத்தில் இருந்தே இருக்கு!
க்ளியர் பண்ணுவீங்களோ?///
நோஓஓஓஓ நோஓஓஓஓ :) அது அப்படியே இருக்கட்டும்:) அதுதான் சொன்னனே சிலதை “விதி” என விட்டிடோணும் என:))..
ஸ்ஸ்ஸ் அதிரா ரொம்ப விபரமாக்கும்:)) உப்பூடியெல்லாம் சிலருக்கு டவுட் வந்தாலும் வரலாம் என நினைச்சுத்தான்ன்:)).. “விதி” பற்றியும் ஏற்கனவே சொல்லிட்டேன்ன்ன்:))..
ஆஆஆஆஆ.. அப்பாடா... போயிட்டார்போல:)).. இனி கட்டிலடியை விட்டு வெளியே வந்து பின்னூட்டம் போடலாம்:))..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மணியம் கஃபே ஓனர்... இங்கின உங்கட அக்காவைக் கண்டனீங்களோ?:) அவவை ரெண்டு நாளாக் காணேல்லை:))
Cherub Crafts said...
ReplyDeleteதோல் பழபழப்பாகுமாம்.//
ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா :)) எப்படியோ கண்ணில் பார்த்து விட்டேன்
மேட்டாம் :)0ஸ்பெல்லிங் மிஸ்டேக் ..அது பள பளப்பு///
ஆஆ.. அஞ்சுவோ வாங்கோ அஞ்சு வாங்கோ..
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வலது காலை எடுத்து வைக்கும்போதே பளபளாவாம்ம்ம்ம்ம்ம்:))... வந்ததுதான் வந்தம்.. ஒரு துன்பத்திலிருந்து விடுதலை பெற என்ன பண்ணலாம்ம் எனக் கதைக்கிறதை விட்டுப் போட்டு:) பெரிய கண்டு பிடிப்பார்ம் கண்டு பிடிப்பு:)).. ஹா..ஹா..ஹா..
முன்பும் ஆரோ பாம்புச் செட்டை “பளபளக்கும்” என திருத்தி விட்டது இப்பதான் கிட்னியில் வருது:))
அது என்ன தேசிக்காய்? தமிழ்நாட்டு தமிழில் அல்லது ஆங்கிலத்தில் பெயர் சொல்லுங்கள்!
ReplyDeleteCherub Crafts said...

ReplyDeleteஅதிஸ் கரட் இலை கூட்டு பார்க்க சூப்பரா இருக்கு நானும் செய்ய போறேன் .//
செய்யுங்க அஞ்சு அது பார்க்க முரடுமாதிரி, ஆனா சமைச்சதும் சூப்பர் ரேஸ்ட்.
நீராகாரம் .. ஜிஞ்சர் :))..சும்மா கலக்குறீங்க மியாவ் எங்கியோ போயிட்டீங்க :))//
மீ இங்க இருக்கேன்ன்ன்:))
Cherub Crafts said...
ReplyDeleteஅடுத்த பதிவு வந்த பின் காப்பது பற்றியா :))
ஹா..ஹா..ஹா.. இங்கின ஆரும் அப்பூடி இருக்கினமோ?:) எல்லோரும் வருமுன் காப்போனாகத்தான் தெரியுது:))
எனக்கும் நிறைய டவ்ட்ஸ் வருது ..ஆனா சுடும் பணி ))சப்பாத்தி சுடும் பணி எனை அழைக்குது வந்து கேக்கறேன் ..இப்போதைக்கு உத்தரவு வாங்கிகறேன் ..தமிகிட்ட பொறுப்பை கொடுத்து :))
நீங்க சுடுங்க:) சப்பாத்தியைத்தான்:) அதுக்காக உத்தரவு வாங்கறீங்க அதில ஒரு நியாயம் இருக்கு:)).. ஆனா எதுக்கு இப்போ பொறுப்பை உங்கட “அப்பியிட்ட” ஒப்படைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி அஞ்சு.. சென்று வருக... சுட்டுவிட்ட்டு வெற்றியுடன் திரும்பி வருக:) சப்பாத்தியைத்தான்:).
ReplyDeleteவாங்கோ தனிமரம் வாங்கோ.. என்னாது ஆச்சிரமமோ??:)).. நோஓஓஓ அதெல்லாம் வீண் செலவு.. எங்களுக்கு ஆலமரம் போதும்.. தியானம் செய்ய..:) மியாவும் நன்றி நேசன்.
Mahi said...
ReplyDeleteஅதிராவிண்ட ரெசிப்பியை சாப்பிட்டாப் போறாது, அதிரா கையாலயே சாப்பிடணுமாம், அப்பத்தான் துன்பம் அண்டாது என புளியமரத்தடி சோசியரின் கிளி (ராசாத்தி) சொல்லிருக்கா அதிராவ்.//
வாங்கோ மகி வாங்கோ.. வாழ்க.. ஓசியரின் ராசாத்தி:))..
ஒய் டோண்ட் யு மைக்ரேட் ஃப்ரம் யு.கே. டு யு.எஸ்.?? இங்கதான உங்கட சிஷ்யகோடிகள் நிறைய்ய்ய்ய்ய்ய பேர் இருக்கோம்? ;))))) //
அப்பூடியோ?.. உது தெரியாமல் போச்சே இவ்ளோ நாளா..:)).. அதனாலென்ன இப்பவே மைக்கிரேட் பண்ணுறேன்ன்.. அதுக்கு முதல்ல “மணியை”.. பவுண்டில என் எக்கவுண்டில போட்டு விடுங்கோ:).. பின்ன நீங்க இவ்ளோ சொன்ன பின்பும் நான் வராமல் இருந்தால்ல் அது அயகாகுமோ?:))
எல்லா ரெசிப்பிஸும் அருமை. கொஞ்சம் முன்னால சொல்லிருந்தா நானும் கேரட் இலையை சமைச்சிருப்பேன். கர்ர்ர்ர்ர்! சரி..இருக்கட்டும், அடுத்த தபா செய்துடலாம். ;)
உங்கட புளொக்கில படம் பார்த்ததும் சொன்னேன்ன்.. அதுக்குள் அவ்ளோ இலையையும் எறிஞ்சிட்டீங்களோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
மியாவும் நன்றி மகி..
துன்பங்களிலிருந்து விடுதலை பெற என்ற தலைப்பைப் பார்த்து எங்கேயோ கூட்டிகிட்டு போறீங்கனு நினைச்சேன். உள்ளே படிச்ச பிறகுதான் புரிந்தது உடல் ஆரோக்கியத் திற்கான செய்முறை குறிப்பு சொல்லி இருக்கிறீர்கள் என்று. எக்ஸசைஸ் செய்யும் பூனைகள் படம், இஞ்சிக் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்
ReplyDeleteu r great Pulaaliyur Poosaanantha. ;)
ReplyDeleteஎத்தனை சமையல் குறிப்புகள் , உடற்பயிற்சிகள் ,
ReplyDeleteஉடல் நலக்குறிப்புகள் ...
கலக்கிட்டீங்க அதிரா.. பாராட்டுக்கள்..!
அட..ஓட்டுப்பட்டை இணைத்தாச்சா வெரி குட்.உங்க ஓட்டுப்பட்டை மட்டும் கலர் ஃபுல்லா மின்னுதே.என் ஓட்டு டன்..!
ReplyDeleteதுன்பங்களிலிருந்து விடுதலை எண்டவுடனே ஓடோடி வந்தா ....
ReplyDeleteநீங்க என்னென்னமோ சொல்லுறீங்க அதிரா..:)
எக்ஸசைஸ் எண்டவுடனே பாருங்க மணியை,...
ஓடிக் குத்திச்சு தாவித் தடக்கி விழுந்து ஸ்ஸ்ஸ்ஸ் படுற பாடு...:)))
ம்... நல்ல நல்ல பூஸ் எக்ஸசைஸ் படங்கள். அருமை!
சமையல் குறிப்பு புதுசுபுதுசா தினுசுதினுசா இருக்கு!
சூபர்தான் எல்லாம்!
இதுவரைக்கும் கரட் இலையை ஒருவிதமாயும் செய்து பார்த்தில்லை.
செய்திடுவோம்....:)
த ம.7
உங்க வீட்டுத் தோட்ட - மழையில் நனைந்து ஈரமான - ரோஜாவுடன்
ReplyDeleteபூஸானந்தாவின் தத்துவம் அருமை!
மழையதன் ஈரமென
மனமதில் சில்லிட்ட வரிகள்!
அனைத்தும் அருமை அதிரா! வாழ்த்துக்கள்!
ஆதிரா வளர்க்கும் பூனைக் குட்டிகள் என்ன அழகாய் எக்சசயிஸ் பண்ணுதுக
ReplyDeleteபார் .நீயும் தான் இருக்கிற எந்த நேரமும் சாப்பிடுவதும் தூங்குவதும் தான்
வேலை. மாத்தியோசி மணியைப் பார்த்து அவக அம்மா திட்டக் கேட்ட சத்தம் இது :))))
பயனுள்ள அருமையான பகிர்வு தோழி வாழ்த்துக்கள் .
ரைட்டு பிறகு வாரேன்
ReplyDelete//வழமைபோல எம் இடத்தில் கிரான்பெரீஸ் எல்லாம் பூத்து, காய்த்து பழுத்து, தேடுவாரில்லாமல் உதிர்ந்து போகுது// grrrrrrrrrr! Those are blackberries ms.myaav! Cranberries are red in color and they are single fruits, not clusters like blackberries!
ReplyDeleteVery Nice Post Athira. Congratulations.
ReplyDeleteMy computer System at my home is now OUT OF ORDER. I am typing this from a Browsing Centre [outside] .
Yesterday I have released 6 Posts in my Blog. You have just visited ONLY the 6th ONE alone.
You are requested to visit all the six posts and leave your Valuable Comments.
45/1/6 is starting one:
Link:
http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html
Part-45/2/6 is ONLY ABOUT ATHIRA & IT IS VERY VERY IMPORTANT ONE
ANBUDAN GOPU
இனிவரப்போகும் காலத்திற்கும் ஏற்ற உணவுதான் இது நான் குளிர்காலத்தை சொன்னேன். குளிருக்கு இந்த கஞ்சி ஸ்..ஸ்ஸ் நல்லா இருக்கும்.
ReplyDeleteகாரட் இலை நானும் செய்திருக்கிறேன்.செய்கிறேன்.நல்ல டேஸ்ட்டீஈஈ.இதே மாதிரி கோல்ராபியிலும்Kohlrabi செய்யலாம்.சூப்பரா இருக்கும்.
உங்கள் நீராகாரம் நல்லதொரு ரெசிப்பி.பழையசோற்று தண்ணிக்கு அம்மா இப்படிச்செய்து தருவா.ஞாபகம் வந்துவிட்டது.
//சும்மா இருக்காமல், இப்பூடி ஏதாவது உடற்பயிற்சிகள் செய்த வண்ணம் இருக்கோணும்.// உண்மைதான் அதிரா. எவ்வளவு அழகாக பூஸார் உடற்பயிற்சி செய்கிறார்.படங்கள் அழகு.
நல்ல உபயோகமான நல்லதொரு பகிர்வு அதிரா.அதை சொன்னவிதம் மிக நன்றாக இருக்கு.நன்றி.
வாங்கண்ணா பாடலையும் கேட்டாச்சு.
அதிரா வலையைப் பார்க்க
ReplyDeleteஆயிரம் கண்கள் வேண்டும்
அழகிய படங்கள் கொண்டே
அடுக்கிய வார்த்தைகள் கண்டேன்
தினமொரு உணவை சொல்லி
தீரா நோய் போக்கும் வழிகள்
திடமுடன் வாழும் கலைகள்
தீட்டிய முறைகள் நன்றே...!
பரிவினால் அன்பை மெழுகி
புரிதலை விதைத்து பதிவில்
சிந்திப்பை சேர்த்து உள்ளே
சிரித்திட ஈன்றதும் அழகே
இனிவரும் காலம் தோறும்
இயல்பாய் நீ தந்திட தகவல்
இறையிடம் ஆசி கேட்பேன்
இன்புற்று தருவாய் என்றும்...!
கலக்கல் பதிவு அதிரா
துன்பங்களில் இருந்து விடுதலை என்றதும்
நற்செய்திக் கூட்டமோ என்று
வாசிக்காமல் ஒதுங்க பார்த்தேன்
நல்லவேளை உங்க தோழன்
உடற்பயிர்ச்சி படங்கள் கண்ட பின்னே
வாசிக்க தொடங்கினேன்,,,,,
சோ சுப்பர் வாழ்த்துக்கள்....
ஒ மிஸ்ஸிங்......... மியாவ் சொல்லிடுங்க...!
ஒ ஒட்டு போட்டத சொல்ல மறந்துட்டேன் ஒன்பதாவது கல்ல தூக்கி வச்சிருக்கேன் மேல எறிப்போங்கோ
ReplyDeleteஹி ஹி ஹி ஹி
இங்கே எங்களுக்கு குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கினாலும் தொடங்கியது, கோடை போல வெயில் கொளுத்துகிறது. தினமும் இஞ்சிமோர்தான் இதமளிக்கிறது. வரகரிசிக்கஞ்சி செய்துபார்க்கிறேன். துன்பங்களிலிருந்து விடுபட எளிமையான சூட்சுமங்களைச் சொல்லி அசத்தியமைக்கும் சூப்பரான தத்துவத்துக்கும் நன்றி அதிரா.
ReplyDeleteஆங்ங்ங்ங்ங் ஓடிவாங்கோஓஓ அதிரா மகுடம் சூடிவிட்டாஆஆஆஆஆஆ:))..

ReplyDeleteஅதை ஏன் கேட்கிறீங்க... எனக்கு ஆருமே மகுடம் சூடல்ல:) அதனால எனக்கு நானே சூடிட்டேன்ன்:)) பூஸோ கொக்கோ:) எங்கிட்டயேவா:)
நம்பள்கி said...//
ReplyDeleteவாங்கோ நம்பள்கி வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு. மிக்க நன்றி.
Viya Pathy said...
ReplyDeleteதுன்பங்களிலிருந்து விடுதலை பெற என்ற தலைப்பைப் பார்த்து எங்கேயோ கூட்டிகிட்டு போறீங்கனு நினைச்சேன்.
வாங்கோ வியபதி வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. எல்லோரையும் ஜிம்முக்கு கூட்டிப் போகிறேன்ன்..
மிக்க நன்றி வரவுக்கும் கருத்துக்கும்.
இமா said...

ReplyDeleteu r great Pulaaliyur Poosaanantha. ;)//
Welcome Reachcher:)).. Thank you.
இராஜராஜேஸ்வரி said...//
ReplyDeleteவாங்கோ ராஜேஷ்வரி அக்கா வாங்கோ.. மியாவும் நன்றி.
ஸாதிகா said...
ReplyDeleteஅட..ஓட்டுப்பட்டை இணைத்தாச்சா வெரி குட்.உங்க ஓட்டுப்பட்டை மட்டும் கலர் ஃபுல்லா மின்னுதே.என் ஓட்டு டன்..!
வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. இங்கின ஓட்டுப் பட்டைமட்டும்தான் மின்னுதா?:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
அப்பாடா.. பெரிய ஒரு கர்ர்ர்:) சொல்லி... என்னை நானே சமாதானப் படுத்திட்டேன்ன்ன்:))..
ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.
இளமதி said...
ReplyDeleteதுன்பங்களிலிருந்து விடுதலை எண்டவுடனே ஓடோடி வந்தா ....
நீங்க என்னென்னமோ சொல்லுறீங்க அதிரா..:)
வாங்கோ இளமதி வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. அப்போ அந்தக் குட்டித் தம்பியை இடிச்சது நீங்கதானோ?:)) கியூவில நிண்டு:))..
வோட் போட்டமைக்கு மிக்க நன்றி... பதில்தான் தாமதமாகிட்டுது.. மன்னிச்ச்ச்ச்:)))..
மியாவும் நன்றி இளமதி.
Ambal adiyal said...
ReplyDeleteஆதிரா வளர்க்கும் பூனைக் குட்டிகள் என்ன அழகாய் எக்சசயிஸ் பண்ணுதுக
பார் .நீயும் தான் இருக்கிற எந்த நேரமும் சாப்பிடுவதும் தூங்குவதும் தான்
வேலை. மாத்தியோசி மணியைப் பார்த்து அவக அம்மா திட்டக் கேட்ட சத்தம் இது :))))
பயனுள்ள அருமையான பகிர்வு தோழி வாழ்த்துக்கள் .
வாங்கோ அம்பாளாடியாள் வாங்கோ.. என்னாதிது?:)) அவரின் பக்கம் போடும் பின்னூட்டத்தை இங்கின போட்டுவிட்டீங்களோ?:)) ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.
Jaleela Kamal said...
ReplyDeleteரைட்டு பிறகு வாரேன்//
வாங்க ஜல் அக்கா வாங்கோ.. இஞ்ச நில்லுங்கோ சொல்லிட்டுப் போங்கோ ஓடாதீங்கோ?:))).. எது ரைட்டு?:)), இல்ல எந்த ரைட்டு?:))... ஹா..ஹா..ஹா...
மியாவும் நன்றி.
Mahi said...
ReplyDelete//வழமைபோல எம் இடத்தில் கிரான்பெரீஸ் எல்லாம் பூத்து, காய்த்து பழுத்து, தேடுவாரில்லாமல் உதிர்ந்து போகுது// grrrrrrrrrr! Those are blackberries ms.myaav! Cranberries are red in color and they are single fruits, not clusters like blackberries!//
ஹா..ஹா..ஹா..ஹா... அது டங்கு ஸ்லிப்பாச்சு:)) கண்டு பிடிச்சிட்டீங்களே:)) ஹையோ எழுத்துப் பிழை பிடிக்க ஒரு கூட்டம் பின்னால முன்னால திரிகினம்:)).. இலக்கணப் பிழை:) பிடிக்க ஒரு கூட்டம் திரிகினமே முருகா:)).. ஏன் அதிராவுக்கு மட்டும் இவ்ளோ பாதுகாப்பூஊஊஊஊஊஊஊஊ:)))..
ஹா..ஹா..ஹா.. தப்பா எழுதியாச்சு:) இனி என்ன வழமைபோல கீழ விழுந்தாலும்.. கன்னத்தில மண் ஒட்டேல்லை:) கதையா:)) பலத்து சிரிச்சு சமாளிச்சுட வேண்டியதுதான்ன்ன்ன் ஹா..ஹா..ஹா.... ஹா..ஹா.. கிக்கிக்கீஈஈஈஈஈஈஈஈஈஈ:))
மியாவும் நன்றி மகி..
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteVery Nice Post Athira. Congratulations.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...
My computer System at my home is now OUT OF ORDER. I am typing this from a Browsing Centre [outside] .
இதென்ன திருச்சிக்கு வந்திருக்கும் சோதனை.. ஏன் கொபியூட்டரை எலி கடிச்சிருக்குமோ?:)
Yesterday I have released 6 Posts in my Blog. You have just visited ONLY the 6th ONE alone.
ஓ .. அது கடசி மட்டுமே கண்ணுக்கு தெரிஞ்சுதா.. அது ஒருபதிவுந்தான் என நினைச்சிட்டேன்ன்.. நீங்க அப்படியெனில்.. கடசிப் பதிவின், கடசிப் பந்தியின், கடசி வரியில சொல்லியிருக்கோணும்.. இதுக்கு முன் 5 பதிவிருக்கு அனைத்தையும் படிங்க என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் பார்க்கவில்லையோ.. அந்த உச்சிப் பிள்ளையாருக்கே வெளிச்சம்:).
You are requested to visit all the six posts and leave your Valuable Comments.
நிட்சயமா.. வலியூயபிள் இல்லாட்டிலும்:)) போடுவேன்ன்:)).. போடாட்டில்தான் விட்டிடுவீங்களா என்ன...?:)).. ஹா..ஹா..ஹா..
மியாவும் நன்றி கோபு அண்ணன்.. வெளியே வந்தும் தேடிப் பின்னூட்டம் போட்டமைக்கு...
ammulu said...
ReplyDeleteஇனிவரப்போகும் காலத்திற்கும் ஏற்ற உணவுதான் இது நான் குளிர்காலத்தை சொன்னேன்.
வாங்கோ அம்முலு வாங்கோ.. ஓ.. சூடு குளிர் எல்லாக் காலத்துக்கும் ஏற்றது... காலம் எதுவாயினும் எங்கட பிரசனை “துன்பங்களிலிருந்து விடுதலை:)” கிடைக்கோணும்:):):).
இதே மாதிரி கோல்ராபியிலும்Kohlrabi செய்யலாம்.
இதென்ன இது கண்ட நிண்ட பாஷையில கதைக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))).. ஹா..ஹா..ஹா.. அதென்ன ஒருவகை இலையோ அம்முலு?.. நேக்கு தெரியாது.
மியாவும் நன்றி அம்முலு.. பாட்டும் கேட்டீங்களோ? படம் பார்த்தீங்களோ?.. மீ பார்க்கல்ல:).
சீராளன் said...
ReplyDeleteவாங்கோ சீராளன் வாங்கோ.. ஆவ்வ்வ்வ்வ் என்னமா கவிதையில் பின்னூட்டமிடுறீங்க.. சூப்பர்.. அதுவும் ஓரிரு வரிகளிலல்லாமல்.. பெரீய கவிதை சொல்லிட்டீங்க.. மியாவும் நன்றி.
சீராளன் said...
ReplyDeleteநல்லவேளை உங்க தோழன்
உடற்பயிர்ச்சி படங்கள் கண்ட பின்னே
வாசிக்க தொடங்கினேன்,,,,,
சோ சுப்பர் வாழ்த்துக்கள்....
ஒ மிஸ்ஸிங்......... மியாவ் சொல்லிடுங்க...!
ஹா..ஹா..ஹா... சொல்லிப் பார்த்தேன்ன்.. ஆனா அவர் ஜிம்னாஸ்டிக்கில் பிஸி:))
ஒ ஒட்டு போட்டத சொல்ல மறந்துட்டேன் ஒன்பதாவது கல்ல தூக்கி வச்சிருக்கேன் மேல எறிப்போங்கோ
ஹா..ஹா..ஹா.. மிக்க மிக்க நன்றீ.. எவ்ளோ ஏறியும் மகுடம் எட்டல்ல:)) அதிராவோ கொக்கோ.. உடனே ஓடிப்போய் சூப்பமார்கட்டில ஒரு மகுடம் வாங்கி எனக்கு நானே சூடிட்டேன்ன்ன்ன், மேலுள்ள பின்னூட்டம் பாருங்கோ புரியும்:))... மானம்தானே நமக்குப் பெரிசூ:))..
(ஹையோ ஏன் இங்கின தேம்ஸ் கரையில இருந்து கல்லுகள் வருதூஊஊஉ:)).. நோ நோ அஞ்சூஊஊஊ.. பீ குவைட்:)).. ..
ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி சீராளன்.
கீத மஞ்சரி said...
ReplyDeleteஇங்கே எங்களுக்கு குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கினாலும் தொடங்கியது, கோடை போல வெயில் கொளுத்துகிறது. தினமும் இஞ்சிமோர்தான் இதமளிக்கிறது//
வாங்கோ கீதமஞ்சரி வாங்கோ.. ஓ நீங்களும் இஞ்சி மோர் தானோ?.. மிகவும் நல்லது.
வருகைக்கும் கருத்துக்கும் மியாவும் நன்றி.