நல்வரவு_()_


Friday, 4 October 2013

ச்சும்மா.. சும்மா முளைக்குதாமே:)

ன்னது  “ச்சும்மா சும்மா” முளைக்குதா?:) அதென்னது எண்டுதானே எல்லோரும் மூச்சிறைக்க:) ஓடிவாறீங்க:).. வெயிட் வெயிட் முதல்ல கன்றோல் பண்ணுங்க:) உங்கட மூச்சுக்குச் சொன்னேன்:)..

 “இது மணத்தக்காழியாக இருக்குமோ”?:)
கொஞ்சம் “சும்மா” இதில இருங்கோ, என் சொந்தக் கதை:) யோகக் கதை:) சொல்றன் கேளுங்கோ:)..

நானும் எவ்ளோ நாளைக்குத்தான் நல்லபிள்ளையாகவே நடிப்பது?:) இல்ல ”சும்மா” சொல்லுங்கோ?:) எவ்ளோ நாளைக்குத்தான்?:).. அதனாலதான் இன்று பொயிங்கிட்டேன்ன்ன்:)).. எரிமலை எப்படிப் பொறுக்கும்?:) .ம்ம்ம்ம்ம்ம்ம்:).

சரி பொயிண்ட்டுக்கு வருவம்:).. இலங்கையில் இருந்த காலத்தில நான் சாப்பிடாத இலைவகை இல்லை எனலாம்...
1)பசளிக்கீரை, புளிக்கீரை, தட்டைக் கீரை, குப்பைக் கீரை,அறக்கீரை, மரக்கீரை, மிகுதி நினைவிலில்லை.

2)அடுத்து, இலைவகையில்.... குறிஞ்சா, முசுட்டை,அகத்தி இலை, மொசுமொசுக்கை இலை, காணாந்தி இலை, முள்முருக்கம் இலை, முருங்கை இலை,பாஷன்ஃபுரூட் இலை, வாதநாராணி இலை, லெச்சகட்டை இலை,தூதுவளை இலை,செம்பரத்தம் இலைகூட நல்லதெனச் சொல்லி சுண்டிய நினைவு:)...

3)அடுத்து பொன்னாங்காணி, வல்லாரை, பீற்ரூட் இலை,
4)வெளிநாட்டுக்கு வந்தபின்னர்...
கரட் இலை(இப்போ கண்டுபிடிச்சது:)), மேத்தி இலை, மல்லி இலை, கடுகு இலை...

இன்னும் இருக்கலாம், நினைவில் இப்போ இருப்பது இவ்ளோதான்ன்... இத்தனையும் சாப்பிட்டிருக்கிறேன், ஆனா..ஆனா.. இந்த மணத்தக்காழி என்பது... பெயரே மீ கேள்விப்படவில்லை... 2008 ம் ஆண்டு அறுசுவைக்குள் நுழைந்தபோதுதான், முதன் முதலில் இப்பெயர் கேட்டு, இப்படியும் இருக்கோ என வியந்துபோய்.. வேர்த்திருந்தேன்:)).. சரி அதுவும் போகட்டும்...

அது முடிந்து போன வருடம்.. ஆசியா பக்கம் என நினைக்கிறேன்,வோக் போனபோது,“ச்சும்மா சும்மா” மணத்தக்காளி நிறைய முளைத்திருப்பதைக் கண்டு, ஆய்ந்து வந்து சமைத்து, குறிப்புப் போட்டிருந்தா... சரி இருக்கட்டும் என விட்டிருந்தேன்ன்..:))

அடுத்து இமா பக்கத்திலே... குருவி போட்ட எச்சத்தாலோ என்னவோ. “ச்சும்மா சும்மா” முளைச்சுதே மணத்தக்காளி என படம் போட்டு.. பழமும் சாப்பிட்டேன் எனக் கூறியிருந்தா...:)) அதையும் பார்த்திட்டு:), என் கிட்னி:), என் மனதுக்கு சொல்லியது “இங்க பார், நீ இருக்கும் நாடு அப்படி:), முழு வெள்ளைகள் இருக்குமிடம், அதனால கன்றோல் பண்ணிக்கொண்டு இரு என”:).. சரி என மனமும், கேட்டுவிட்டுப் பேசாமல் இருந்துது:).

கொஞ்ச நாளால், சமீபத்தில் பார்க்கிறேன்ன்ன்..  “எங்க வீட்டு தொட்டியில் “ச்சும்மா சும்மா” ஒரு மணத்தக்காளி முளைச்சு.. இங்கின பாருங்கோ பழங்களை.. எவ்ளோதான் நானும் சாப்பிடுவது.. பிரிஜ்ஜிலும் வச்சு, இப்போ குழம்பு செய்தோம்” என குறிப்பு போட்டிருந்தா.. மஞ்சள்பூ மகி:).. இதைக் கேட்டதும்.. என் மனம் கொன்றோலை இழந்து:).. பொயிங்க:) ஆயத்தமானது:).. கிட்னி சொல்லிச்சுது:)..  “அடங்கு அடங்கு... அடுத்த தடவை கனடா போகும்போது, நிட்சயம் வாங்கிப் பார்த்திடலாம்” என:)..  சரி அதுவும் சரிதான் என.. ஒருமாதிரி, மோர் எல்லாம் குடிச்சு:).. நோர்மலுக்கு வந்த வேளை:))..


===============================INTERVAL================================
இதேபோலவே, முன்பும் நான் பொயிங்கிய:) ஒரு பதிவு:).. 

அன்று வாங்கிய ஒரியினல் “அகரகர்” இன்றும் செய்யாமல், என் கிச்சின் றோயரிலே, அதைத் திறக்கும் போதெல்லாம் “என்னை எப்போ பிள்ளை..... நீ செய்யப்ப்ப்ப்ப்போறேஏஏஏஏஏ?:) எனக் கேட்குது:))
=========================முடிஞ்சு போச்ச்ச்ச்:)============================

சரி, அடுத்து போனகிழமை எனக்கொரு படம் வந்திச்சே..:))..
 “அதீஸ்.. இது என்ன மரம்?:) கண்டு பிடிங்க பார்க்கலாம்”?:))என.. நான் கொஞ்சமும் டவுட்டே இல்லாமல்:).. “ஓ நேக்குத் தெரியுமே.. இது கத்தரி”:) எண்டேன்ன்ன்... உடனே பதில் வந்திச்சா.. “இல்ல இல்ல இது மணத்தக்காளி”:) நான் நடல்ல:), எங்க வீட்டு கார்டினில் “ச்சும்மா சும்மா”:) முளைச்சிருந்துது.. நான் கன்ஃபோமா கண்டு பிடிச்சேன்ன் இது மணத்தக்காளிதானாம்:))” என.. கோல்ட் பிஸ்ஸு அஞ்சு சொன்னாவா...:))...

இதுக்கு மேலும்.. ஒரு சுவீட் 16 பிள்ளை:) ச்சும்மா இருக்குமோ?:) நீங்களே சொல்லுங்கோ?:) மீ பொயிங்கிட்டேன்ன்:)... இன்று காலை லேசான மழை... வானம் கறுத்திருந்தது, பெரிதாக குளிரவில்லை.... இப்படிப் பொழுதிலே.. பூஸ் ஒன்று புறப்பட்டது “ச்சும்மா வோக்” போகலாமே என:))

என் கணவர், என் வலது கையைப் புடிச்சு இழுத்துச் சொன்னார்:) “அதிரா.. நீங்க ஓல்ரெடி சுவீட் 16 தானே:) இந்த மழை குளிருக்குள் வோக் வாணாமே:).. இன்னும் எதுக்கு மெலியோணும்:) ஏதும் சுகயீனமாகிடப்போகுது” என:).. மீ சொன்னேன் “இஞ்ச பாருங்கோ.. நான் ஒரு இலட்சியத்துக்காகப் போகிறேன்ன்:)) என்னை வாழ்த்தி அனுப்பி வையுங்கோ”:) என சொல்லிப்போட்டு:) “ச்சும்மா“ தான் போனேன்ன்.. ஆத்தங்கரைக்கு வோக் பண்ண....

நான் என்பாட்டிலே நடந்து போனனா:).. அங்கின ஒரு குட்டிமரம்.. பார்க்க அஞ்சுவின் மணத்தக்காளி போலவே இருந்துது:).. சே..சே.. அப்படி இருக்காதே..:) என எண்ணிக்கொண்டு தொடர்ந்து நடந்தனா.. குட்டி குட்டியா நிறைய மரங்கள்.. நிறையப் பூ கொஞ்சம் காய்களோடு... உடனே பாதையை விட்டு, மணலில் இறங்கிட்டேன்ன்ன்.. படம் எடுக்கத்தான்ன்ன்:):)..

ஒரு தக்காளி மரத்தை ஆரும் கிட்ட கொண்டுவந்தால், கண்ணை மூடியபடி அதன் வாசத்தை வைத்தே சொல்ல முடியுமெல்லோ இது என்ன மரம் என.... அப்படித்தான், இதனிலிருந்தும் ஒரே தக்காளி வாசம்.. கமகமத்தது...

இப்போ மணத்தக்காளி ஸ்பெஷலிஸ்ட்.. இமா றீச்சரும்.. மஞ்சள் பூ மகியும்... இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?:).. தெரிந்தவர் எல்லோரும் வந்து என் டவுட்டைக் கிளியர் பண்ணிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்.. நான் எடுத்ததும் இப்போ சமைக்க மாட்டேன்ன்../ இல்ல சமைக்கலாமோ? ஆனா, கன்ஃபோம் பண்ணினா,  கன்றுகள் பிடுங்கி வந்து எங்கட கார்டினில் நடலாம் எனும் ஓசனை:).. 


 காய்கள் கொஞ்சம் பெரிதாக இருக்கே....
 வேறு தாவரத்தோடு பின்னிப் பிணைந்து முளைச்சிருக்கினம்...



பூ தெரியுதெல்லோ?

குண்டூசி:) இணைப்பு:
இம்முறைக் கோடைகாலம் வழமையை விட நல்ல வெயிலாக இருந்ததாம், அதன் காரணத்தால் எங்கு பார்க்கிலும் ஒரே பழங்களாக பழுத்துக் கிடக்கு.. அதிகம், பிளாக்பெரீஸ், கிரான்பெரீஸ்..  இன்றும் கொஞ்சம் பிளாக்பெரீஸ் புடுங்கி வந்தனே...


இதேபோல ஆற்றங்கரையில் பிடுங்கி, அதில் செய்த கிரான்பெரி ஜாம், என் ஃபிரெண்ட் ஒருவர் தந்தா... சூப்பராக இருக்கு...

ஊசி இணைப்பு:
இது எங்கட வீட்டுக்கு அருகாமையில்... ஆப்பிள் பழங்கள் பழுத்து சொரிந்து விழுகுது.. ஆரும் தேடுவதில்லை.. ரோட்டோரம் நிற்கும் மரத்தில் மட்டும், நான் எட்டிப் பிடுங்கி வந்து உப்போடு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கு... இங்குள்ளவர்கள் கடையில் பக் பண்ணி வருவதை மட்டுமே வாங்கி உண்கின்றனர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

============================================================
கணவன் - மனைவி.. குடும்ப உறவில்...உடலைத் தாண்டி, அதனுள் அடங்கியிருக்கும் ஆன்மா குளிர்ச்சியாக இருக்க வேண்டும், இருவரும் துன்பங்களைப் பங்கு போட்டுக் கொள்பவர்களாக அமைய வேண்டும்,இன்பத்தில் பங்குபெற எவ்வளவோ பேர் கிடைப்பார்கள், தமக்கு வரும் சோதனைகளைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை உருவாக்குபவர்களே.. அபூர்வமான கணவன், மனைவி...
 இவ் அரிய தத்துவத்தை.. கண்ணதாசனின் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து... படித்து எடுத்து வந்தவர்.. 
மேன்மைமிகு:) புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)..
============================================================

86 comments :

  1. இது செர்ரி டொமாடோ :))) மணத்தக்காளி .....இல்லவேயில்லை என்பதை உங்கள் ஒரேஞ் பை மற்றும் பவழ பிரேஸ்லெட் மீது அடித்து சத்தியம் செய்கின்றேன்

    ReplyDelete
  2. yeah yeah... u r the first... வாங்கோ அஞ்சு வாங்கோ..

    ஆயா..ஆயா... அஞ்சுவுக்கு சுடச்சுட நாலு சமோஷா எடுத்து வாங்கோ:).. அப்பூடியே அந்த மணத்தக்காளிக் குழம்பிலும் கொஞ்சம் எடுத்து வாங்க:)

    ReplyDelete
  3. மணத்தக்காளி மிளகு அளவுதான் வரும் ...:))இதற்குமேல் மண தக்காளி யில் /cultivation // முனைவர் பட்டம் வாங்கிய இமா அவர்களும் சின்ன டாக்டர் மகியவர்களும் வந்து தங்களது சந்தேகத்தை தீர்த்து வைப்பார்கள் :))நான் இப்போதாம் பி எச் டி செய்றேன் :))

    ReplyDelete
  4. Cherub Crafts said...
    இது செர்ரி டொமாடோ :))) மணத்தக்காளி .....இல்லவேயில்லை என்பதை உங்கள் ஒரேஞ் பை மற்றும் பவழ பிரேஸ்லெட் மீது அடித்து சத்தியம் செய்கின்றேன்//

    என்ர வைரவா.. இது என்ன பூஸுக்கு வந்திருக்கும் சோதனை?:) நிஜமாவோ?:) ....ஙேஙேஙே.... ஓ செரி ரொமாட்டோ வாங்கியிருக்கிறன்.. அதுவா இது.... ஆனா எனக்கு செரி ரொமாட்ட்டோ ஓவல் சேப்லதான் கிடைக்குதே.. இது வட்டமாக இருக்குது பயம்:))...

    ReplyDelete
  5. இப்போ மூணு சோளக்கதிர் வந்திருச்சே ஏ ஏ :)) எங்க வீட்டு விளைச்சல்

    ReplyDelete
  6. Cherub Crafts said...
    மணத்தக்காளி மிளகு அளவுதான் வரும் ...:))இதற்குமேல் மண தக்காளி யில் /cultivation // முனைவர் பட்டம் வாங்கிய இமா அவர்களும் சின்ன டாக்டர் மகியவர்களும் வந்து தங்களது சந்தேகத்தை தீர்த்து வைப்பார்கள் :))நான் இப்போதாம் பி எச் டி செய்றேன் :))//

    ஆங்ங்ங்ங்... டிஷூ பிளீஸ்ஸ்ஸ்.. கண் துடைக்கத்தான்ன்:)).. மீயும் ஓசிச்சேன்ன் பழங்கள் பெரிதாக இருக்கே என:).. ஆனா இலைகள் கொஞ்சம் பேப்பிளாக இருந்துது.. அதனால டவுட்டா இருந்துது...

    ReplyDelete
  7. Cherub Crafts said...
    இப்போ மூணு சோளக்கதிர் வந்திருச்சே ஏ ஏ :)) எங்க வீட்டு விளைச்சல்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்கெல்லாம் நாங்க அழமாட்டமே:) ஏனெண்டல்ல்ல் சோளன் இங்கு வாங்கலாமேஏஏஏஏஏஏஏ:))..

    ReplyDelete
  8. இது என்ன தனிமரம் என்னைப்போய் இப்படி பல படம் பிடிச்சு தோப்பு என்று கேள்வி கேட்டாள் நான் என்ன செய்வது பூசாரே:))))

    ReplyDelete
  9. தக்காளி மரம் என்பது என் கணிப்பு அதிரா!

    ReplyDelete
  10. இறுதியில் காட்டிய பழம் புரூன் என்று பிரெஞ்சில் சொல்லுவார்கள் சுவை அதிகம் தான்!

    ReplyDelete
  11. நான் அதிகம் இலங்கையில் விரும்பிச் சாப்பிட்டது தாமரைக்கிழங்குக்கீரை (கோகிலா கீரை என்பார்கள் பேச்சு வழக்கில்)

    ReplyDelete
  12. there are several varieties in tomatoes cherry ,berry grape pear shaped :))))

    ReplyDelete
  13. அஞ்சுக்காளுத்துத்தான் முதல் பால்க்கோப்பியா வேலையின் பிறகு வந்து வாக்குப்போட்டுவிட்டு மங்கோ யூஸ்குடிக்க வாரன் :))))

    ReplyDelete
  14. தனிமரம் said...
    இது என்ன தனிமரம் என்னைப்போய் இப்படி பல படம் பிடிச்சு தோப்பு என்று கேள்வி கேட்டாள் நான் என்ன செய்வது பூசாரே:))))

    வாங்கோ தனிமரம்.. வாங்கோ... ஹா..ஹா..ஹா.. நீங்கதான் இப்போ தோப்பாகிட்டீங்களாமே:).. இப்பவும் தனிமரம் எனச் சொல்றீங்க இது ஞாயமோ?:))

    ReplyDelete
  15. தனிமரம் said...
    தக்காளி மரம் என்பது என் கணிப்பு அதிரா!

    ஹா..ஹா..ஹா.. மிகவும் புத்திசாலித்தனமான பதில் சொல்லி எஸ்கேப் ஆகிறீங்க:).. தக்காளிதான்ன் ஆனா என்ன தக்காளி என்பதில்தான் இப்போ பிரச்சனையே:))

    ReplyDelete
  16. சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. cc tvயில் உங்க படம் மாட்டிக்கிச்சு :))

    ReplyDelete
  18. தனிமரம் said...
    இறுதியில் காட்டிய பழம் புரூன் என்று பிரெஞ்சில் சொல்லுவார்கள் சுவை அதிகம் தான்!

    எதைச் சொல்றீங்க நேசன்? புரூன் பழங்கள் வேறு... இங்கு இறுதியில் போட்டிருப்பது ஆப்பிள்.

    ReplyDelete
  19. தனிமரம் said...
    நான் அதிகம் இலங்கையில் விரும்பிச் சாப்பிட்டது தாமரைக்கிழங்குக்கீரை (கோகிலா கீரை என்பார்கள் பேச்சு வழக்கில்)

    ஓ இப்படியும் ஒரு கீரை இருக்கோ? நான் அறியவில்லை நேசன்.. எனக்கு விதம் விதமா கீரை வகைகள் சமைக்கப் பிடிக்கும்.. நீங்க சொல்வது தாமரை இலையையோ?

    ReplyDelete
  20. Cherub Crafts said...
    there are several varieties in tomatoes cherry ,berry grape pear shaped :))))

    ஓம் அஞ்சு உண்மைதான், ஆனா புறுணம்:) என்ணெண்டால்ல்ல்.. நாங்க தக்காளி வகை எதுவுமே வாங்குவதில்லை.. அலர்ஜி:).. ஆரும் விசிட்டேர்ஸ் வரும்போது சிலவேளை வாங்கி வித்தியாசமாக சட்னி செய்வதுண்டு:).. அதனால பெரிதாக தெரியாது நேக்கு:).

    ReplyDelete
  21. தனிமரம் said...
    அஞ்சுக்காளுத்துத்தான் முதல் பால்க்கோப்பியா வேலையின் பிறகு வந்து வாக்குப்போட்டுவிட்டு மங்கோ யூஸ்குடிக்க வாரன் :))))

    மியாவும் நன்றி நேசன்.. வரவுக்கும் கருத்துக்களுக்கும்.. புதுக் கீரை ஒன்றை அறிமுகம் செய்தமைக்கும்...

    ReplyDelete
  22. Cherub Crafts said...
    cc tvயில் உங்க படம் மாட்டிக்கிச்சு :))

    ஹா..ஹா..ஹா.. மியாவ் மியாவ்வ் அஞ்சு. எனக்கு நேரமாகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    வரவுக்கும் பின்னூட்டங்களுக்கும் மியாவும் நன்றி அஞ்சு.. ஆனாலும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 செரி எனச் சொன்னமைக்கு:(( அப்போ மணத்தக்காளிகு எங்கின போவேன் சாமீஈஈஈஈஈ:)


    ReplyDelete
  23. மணத்தக்காழி //

    கர்ர்ர்ர் :00ஸ்பெல்லிங் தப்பா எழுதி அதில் அண்டர் லைன் வேறா :))

    ReplyDelete
  24. திண்டுக்கல் தனபாலன் said...
    சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    வாங்கோ தனபாலன் வாங்கோ.. இம்முறை குட்டியாக்கிட்டீங்களே பின்னூட்டத்தை:))

    மியாவும் நன்றி உடன் வரவுக்கு...

    ReplyDelete
  25. மண தக்காளிக்கு //அதிஸ் நான் ஒரு ஐடியா தரேன் அதபடி செய்து பாருங்க :)) ஆனா முதலில் என் அக்கவுண்டில் ஃபீஸ் வந்ததுதான் சொல்வேனாம் :)0

    ReplyDelete
  26. Cherub Crafts said...
    மணத்தக்காழி //

    கர்ர்ர்ர் :00ஸ்பெல்லிங் தப்பா எழுதி அதில் அண்டர் லைன் வேறா :))///

    ஹா..ஹா..ஹா... கிக்..கிக்..கீஈஈஈஈஈ:) அப்பூடியாஆஆஆஆ தெரியுதூஊஊஊஊஊஊ?:))

    ReplyDelete
  27. Cherub Crafts said...
    மண தக்காளிக்கு //அதிஸ் நான் ஒரு ஐடியா தரேன் அதபடி செய்து பாருங்க :)) ஆனா முதலில் என் அக்கவுண்டில் ஃபீஸ் வந்ததுதான் சொல்வேனாம் :)0//

    ஹா..ஹா..ஹா.. பீஸ் பற்றி எல்லாம் ஓசிக்காதீங்க:).. அதெல்லாம் ஒரு மெசேஜ் அனுப்பினா.. உங்கட அம்பி:) அதான் மணியம் கஃபே ஓனரின் மேசை லாச்சியில் இருந்து பணம் எடுத்து அனுப்புவினம்:))(ஆர் அனுப்புறது எண்டெல்லாம் கேட்கப்பூடா:) அதுக்கெல்லாம் நேக்கு ஆட்கள் இருக்கினம்:)) நீங்க விஷயத்தைச் சொல்லுங்கோ...

    ஸ்கூலுக்கு நேரமாச்ச்ச்ச்ச்ச்.. மீண்டும் ஈவினிங் சந்திக்கிறேன்ன்.. பாய் பாய்(இது வேஎற பாய்:) டொல்ஃபின்:))

    ReplyDelete
  28. இமெயிலில் சொல்லிட்டேன் :)) நான் பேடன்ட் அப்ளை செஞ்சிருக்கேன் அதனால் நோ பப்ளிக் டிஸ்கஷன் :))

    ReplyDelete
  29. Cherub Crafts said... இது செர்ரி டொமாடோ :))) மணத்தக்காளி .....இல்லவேயில்லை என்பதை..//

    நானும் உறுதியாகச் சொல்கிறேன் அதிரா...:)))

    த ம.3

    ReplyDelete
  30. எங்கட கார்டனில் போன வருடம் ச்சும்மா சும்மா தானே முளைத்து
    நாங்கள் பிடுங்கியது போக நெத்தாகி கீழே விழுந்து
    இவ்வருடமும் முளைத்த மணத்தக்காளி காய்த்து கொண்டிருக்கும் படத்தை
    உங்களுக்காக இதோ.. சுடச்சுட இப்ப எடுத்தது...:)



    இதுதான் மணித்தக்காளி..:)))

    ReplyDelete
  31. அவ்வ்வ்.. அதிரா.. 2 தரம் முயற்சி பண்ணியும் உங்களின் சைட்டில படம் இம்மாம் பெரீசா வருது..
    எனக்கு என்ன செய்கிறதெண்டு தெரியேலை..
    பார்த்துட்டு அழிச்சிடுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்...:(

    ReplyDelete
  32. இம்மாம் பெரீசா வருது..//
    ஹாஆ ஹா ஹஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் :)) இனி பூஸ் அவ்ளோதான் எல்லாருமா உசுப்பி விட்டு:))
    பாவம் இந்த இளமதி வீட்டு மனதக்கா ளியை பார்த்தா தேம்ஸ் கரையில் பார்க்கலா பூனையை ..atheees noooo dont go ont go ..before you jump write the willfor me and mahi :))))orange bag and bracelet we shall share them :))

    ReplyDelete
  33. மணத்தக்காளி கொத்துக்கொத்தாய் குட்டிக்குட்டிப்பழங்களாக இருக்கும்..

    நீங்கள் படம் பிடித்த செடி இலைகளும் வித்தியாசமாக இருக்கிறது..
    காய்களும் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது..கண்டங்கத்தரி செடி மாதிரி இருக்கிறது..அதில் முள் இருக்கும்..

    சுண்டைக்காய் செடியோ..!

    விஷச்செடியாக இருக்கப்போகிறது..சாப்பிட்டு விஷப்பரிட்சை செய்யாதீங்கோ..!

    ReplyDelete
  34. பூனை வணங்கி என்றொரு செடி இருக்கிறது.. குப்பை மேனி என்ற செடியைத்தான் அப்படி சொல்லுவோம்..

    அந்த செடிக்குப் பக்கத்தில் பூனைகள் சென்றால் மண்டியிட்டு வணங்குவது போல் செய்துவிட்டு , அந்த செடிப்பக்கமே போகாதாம் ..

    ReplyDelete
  35. http://www.grannytherapy.com/tam/wp-content/uploads/2011/08/vb32.jpg

    இது குப்பைமேனி..

    ReplyDelete
  36. இளமதி said...
    Cherub Crafts said... இது செர்ரி டொமாடோ :))) மணத்தக்காளி .....இல்லவேயில்லை என்பதை..//

    நானும் உறுதியாகச் சொல்கிறேன் அதிரா...:)))

    த ம.3///

    வாங்கோ இளமதி வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் கலையில இருந்து ஒரே சந்தோஷமாக இருந்தேன்ன்.. மணத்தக்காளியைக் கண்டு பிடிச்சிட்டேன் என:) அத்தனையும் கானல் நீராப்போச்சே:))

    டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)

    ReplyDelete
  37. Cherub Crafts said...
    இமெயிலில் சொல்லிட்டேன் :)) நான் பேடன்ட் அப்ளை செஞ்சிருக்கேன் அதனால் நோ பப்ளிக் டிஸ்கஷன் :))

    ஓகே.. பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) மியாவும் நன்றி அஞ்சு.. பீஸையும் கொசுவாரே:) மெயிலில் கொண்டுவந்து த்ருவார்ர்:) என்னைக் கேட்கப்பூடா என்பதனை பப்ளிக்கில் தெரிவித்துக் கொள்கிறேனாக்கும்:)

    ReplyDelete
  38. இளமதி said...
    எங்கட கார்டனில் போன வருடம் ச்சும்மா சும்மா தானே முளைத்து
    நாங்கள் பிடுங்கியது போக நெத்தாகி கீழே விழுந்து
    இவ்வருடமும் முளைத்த மணத்தக்காளி காய்த்து கொண்டிருக்கும் படத்தை
    உங்களுக்காக இதோ.. சுடச்சுட இப்ப எடுத்தது...:)//

    ஹையோ வைரவா:) உங்கட வீட்டிலயும் “ச்சும்மா சும்மா”தான் முளைச்சதாஆஆஆஆஆ?:) இதுக்கு மேலயும் மீ உயிரோடிருப்பது அழகாஆஆஆஆஆ?:)) தேம்ம்ம்ஸ்ஸ்ஸ் வெயா ஆ யூஊஊஊஊஊஊஊஊஊ?:)))

    ReplyDelete
  39. இளமதி said...
    அவ்வ்வ்.. அதிரா.. 2 தரம் முயற்சி பண்ணியும் உங்களின் சைட்டில படம் இம்மாம் பெரீசா வருது..
    எனக்கு என்ன செய்கிறதெண்டு தெரியேலை..
    பார்த்துட்டு அழிச்சிடுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்...:(//

    படம் பார்க்க அயகோ அயகா இருக்கு.. இது அச்சு அசலில் சுண்டங்கத்தரி மாதிரியே இருக்கே.. ஊரில் எங்கட வீட்டில் நிண்டது சு.கத்தரி.. கொத்துக் கொத்தா காய்ச்சுக் கொட்டும்...

    அப்படியே இருக்கே இது:).. ஆனா இதன் இலைகள் சமைக்கலாமெல்லோ? அதுதான் நேக்கு வேணும்ம்ம்:)..

    படம் பெரிசாத்தான் இருக்கு.. அஞ்சுடதும் அப்படித்தான் இருக்கு.. இருக்கட்டும், பெரிசும் ஒரு அழகுதான்ன்ன்:)..

    மியாவும் நன்றி இளமதி வருகைக்கும் வோட் பண்ணியமைக்கும்..


    ReplyDelete
  40. எதைச் சொல்றீங்க நேசன்? // புரூன் பழங்கள் வேறு..//இதே கறுப்பு பழங்களைத்தான் புரூன் பழம் என்று சொல்லுகின்றார்கள் எதுக்கும் உயர் அதிகாரி மணியம் கடையாரிடம் சந்தேகம் கேட்டு திருத்தி விட்டு மீண்டும் வருகின்றேன்!
    ஹா ஹா!
    .

    ReplyDelete
  41. Cherub Crafts said...
    இம்மாம் பெரீசா வருது..//
    ஹாஆ ஹா ஹஹ்ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் :)) இனி பூஸ் அவ்ளோதான் எல்லாருமா உசுப்பி விட்டு:))
    பாவம் இந்த இளமதி வீட்டு மனதக்கா ளியை பார்த்தா தேம்ஸ் கரையில் பார்க்கலா பூனையை ..atheees noooo dont go ont go ..before you jump write the willfor me and mahi :))))orange bag and bracelet we shall share them :))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அடுத்த வருஷம் இந்நேரம் அதிரா வீட்டுத் தோட்டமெல்லாம்:) மணத்தக்காளியாகவே இருக்கோணும் வைரவா:).. நான் வள்ளீக்கு பட்டுக் குடை வாங்கி, மழைக்குப் பிடிக்கக் குடுப்பன்:))..

    அதுக்குள், வில் வேற எழுதி வைக்கட்டாம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. உப்பூடியெல்லாம் நடக்குமெனத் தெரிஞ்சுதான்ன் நாங்க அதை ஏலம் போட்டிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்பதனை இங்கு பப்ளிக்கிலயே சொல்லிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:)) ஸ் ஸப்பா.. அதுக்குள் இப்பூடி வியர்க்குதே சாமீஈஈஈஈஈஈஈ:))


    ReplyDelete
  42. இராஜராஜேஸ்வரி said...
    மணத்தக்காளி கொத்துக்கொத்தாய் குட்டிக்குட்டிப்பழங்களாக இருக்கும்..
    வாங்கோ ராஜேஷ்வரி அக்கா வாங்கோ.. ஓம் இளமதியின் படம் பார்க்க நல்ல வடிவா விளங்குது மரம் எப்படி இருக்குமென..

    நீங்கள் படம் பிடித்த செடி இலைகளும் வித்தியாசமாக இருக்கிறது..
    காய்களும் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது..கண்டங்கத்தரி செடி மாதிரி இருக்கிறது..அதில் முள் இருக்கும்..
    இல்ல கண்டங் கத்தரி எனக்குத் தெரியும்.. அது பார்த்திருக்கிறன், அது ரொம்ப பெரிசு இதோடு ஒப்பிட... இதுஞ்சு சொன்னதுபோல, செரி ரொமாட்டோ இனமாகத்தான் இருக்கோணும்:) .. வாசமும் தக்காழி வாசம்...

    சுண்டைக்காய் செடியோ..!
    இல்ல அதுவும் தெரியுமெனக்கு:)

    விஷச்செடியாக இருக்கப்போகிறது..சாப்பிட்டு விஷப்பரிட்சை செய்யாதீங்கோ..!
    ஹா..ஹா..ஹா.. பழுக்கட்டும் தக்காளி எனில் ஆய்ந்து வந்து சமைக்கலாமே என நினைச்சேன்ன்:) ஆனா நீங்க சொன்னதும் உண்மையில் பயமாகத்தான் இருக்கு...

    ஆற்றங்கரையில் எந்நாட்டிலிருந்தெல்லாம் வந்து, விதைகள் கரை ஒதுங்கி முளைக்குதோ தெரியவில்லை...:) நான் சமைக்க மாட்டேன்ன்.. மிக்க நன்றி.

    ReplyDelete
  43. இராஜராஜேஸ்வரி said...
    பூனை வணங்கி என்றொரு செடி இருக்கிறது.. குப்பை மேனி என்ற செடியைத்தான் அப்படி சொல்லுவோம்..

    அந்த செடிக்குப் பக்கத்தில் பூனைகள் சென்றால் மண்டியிட்டு வணங்குவது போல் செய்துவிட்டு , அந்த செடிப்பக்கமே போகாதாம் ..//


    ஹா..ஹா..ஹா.. ஓம் நானும் அறிந்திருக்கிறேன்ன்.. முன்பு ஹைஸ் அண்ணன் இதுபற்றி ஒரு பதிவு போட்டவர்... குப்பை மேனிக்கு இன்னொரு பெயர் “பூனை விரும்பி” யாம்ம்ம்:).. பூனைகள் போகாதெண்டில்லை.. பிடிக்குமெல்லோ? நான் மாறிச் சொல்கிறேனோ?...

    ஏனெனில் அச்செடியில் இலையைக் காயவைத்து, போல் போல செய்து கடைகளில் கிடைக்குதாம், பூனைகள் அதனோடயே விளையாடுவினமாம்:)..

    குப்பைமேனி லிங் போட்டமைக்கு மிக்க நன்றி.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மியாவும் நன்றி ராஜேஷ்வரி அக்கா.

    ReplyDelete
  44. தனிமரம் said...

    இவைதான் புரூன்ஸ் பழங்கள் நேசன்(Prunes)


    அதிகமாக இவை உலர் பழங்களாகக் கிடைக்குது.. இதில் யூசும் கிடைக்கும்.. இதை அதிகமாக மலச்சிக்கலைப் போக்க உண்கிறார்கள்.. பெரும்பாலும் வயதானோர் இந்த யூஸ் குடிக்கின்றனர். நன்றி தனிமரம்.


    ReplyDelete
  45. :))))))

    அதிராவ்வ்வ்வ்வ்வ்வ்....இப்படி புரட்டாசி வெள்ளிக் கிழம பல்பூ வாங்கிட்டீங்களே!! அதும் அடாது மழைலயும் விடாது வோக்:) போயி ஒரு செரி டொமட்டோவை மழையில் நனைய நனையப் படம்பிடிச்சுக்கொண்டு வந்துட்டீங்களே!!! ;)))))

    நான் வரதுக்குள்ளயே என் அன்புத் தமக்கைகள் எல்லாரும் படம் போட்டு, கதை சொல்லி கலக்கிட்டாங்களே! :) யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்! இருந்தாலும் என் பங்குக்கு இந்தாங்கோ ஒன் படம்! ;)
    http://3.bp.blogspot.com/-VYNmj1ubc2k/UhuSC4FGpnI/AAAAAAAAOsA/vHSHs95ocSk/s400/2-Artist+Loft+-+Class.jpg,/im>



    ReplyDelete
  46. avvvvvv...படம் வரல்லே!! சாரி! அந்தக் கருத்துக்களை எடுத்துருங்க அதிராவ்!

    ஆகமொத்தம் "இது" "அது" அல்ல, அல்ல, அல்ல!

    ReplyDelete
  47. நலமா அதிரா அக்கா ?

    மச்சானை குப்பை எல்லாம் அள்ள சொல்லுங்க....-:)

    ReplyDelete
  48. செடிகொடி ஆராய்ச்சியில் இறங்கி விட்டீர்கள் போலிருக்கு.

    எதையாவது எடுத்துவந்து மணத்தக்காளியாக்கும்ன்னு நினைச்சு சாப்பிட்டு வைக்காதீங்கோ.

    அது ஆபத்தாகி விடும். அதிரா.


    >>>>>

    ReplyDelete
  49. மணத்தக்காளிக் கீரை + காய்கள் இங்கு திருச்சியில் சீசன் நேரத்தில் கிடைக்கும்.

    மணத்தக்காளி வற்றல் எப்போதும் இங்குள்ள மளிகைக்கடைகளில் கிடைக்கும்.

    மணத்தக்காளி வற்றல் போட்டு செய்யும் வற்றல் குழம்பு ரொம்ப ஜோராக டேஸ்டோ டேஸ்டாக இருக்கும், அதிரா.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    வழக்கம்போல எல்லாமே அழகோ அழகாக இருக்குது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.


    ReplyDelete
  50. சும்மா சும்மா மணக்கும்
    சூடு தந்தால் இனிக்கும்

    வட்ட வட்ட பூவில்
    மணத்தக்காளி காய்க்கும்

    எட்டிப்பறித்து சமைத்தால்
    எல்லோர் நாவும் ஊறும்

    அதிரா சொன்ன சொற்பதம்
    அனைவருக்கும் அற்புதம்

    கிட்னி என்று சொன்னது
    கிறுக்கு மூளையை ஒத்தது

    வந்து நானும் அறிந்தேன்
    வம்பாக சிரித்தேன்

    மீண்டும் மீண்டும் வருவேன்
    மியாவுக்காக ரசிப்பேன்....!

    நகைச்சுவையாய் பதிவிட உங்களுக்கு சொல்ல தேவை இல்லை அதிரா
    வந்தேன் ரசித்தேன் அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. நான் என்னத்தைச் சொல்லுறது இனி! படம் எல்லாம் போட்டு விளக்கி இருக்கினம் எல்லோரும். ;)

    ReplyDelete
  52. அதிரா, உங்களை வெறுப்பேற்ற என் பங்குக்கு நானும் ஒன்று சொல்லவா? ஆஸ்திரேலியாவிலும் சாலையோரத்தில் சும்மாச்சும்மா இந்த மணித்தக்காளிச்செடி தளதளவென்று வளர்ந்து காய்த்துக் குலுங்கிக்கிடக்கும். இங்கு வந்த புதிதில் ஹை...இங்கேயும் மணித்தக்காளி கிடைக்குதே என்று பறிக்கப்போன என்னை என் கணவர் தடுத்துவிட்டார். ஏதேனும் விஷச்செடியாக இருக்கலாம். தொடாதே என்று. ஆனால் நம்மால் சும்மா இருக்கமுடியுமா? ஒருநாள் அவருக்குத் தெரியாமல் கொஞ்சம் கீரைகளை ஆய்ந்துவந்து சமைத்து நான் மட்டும் முதலில் சாப்பிட்டேன். கொஞ்சம் பயம்தான். ஆனாலும் இது மணித்தக்காளிதான் என்று உள்ளுக்குள் ஒரு பலமான நம்பிக்கை. நல்லவேளையாக எனக்கொன்றும் ஆகவில்லை. பிறகு அந்தப் பழங்களைப் பறித்து வந்து தோட்டத்தில் விதைத்து வீட்டிலேயே வளர்த்த கீரைகளை சமைத்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். காய்பழங்களை வற்றல் போட்டேன். மணி மணியாய் தக்காளி போன்ற புளிப்புடன் இருப்பதால் மணித்தக்காளி என்று சொல்வோம்.

    நீங்கள் காட்டியிருப்பது செர்ரி டோமேடோஸ். ஓவல் வடிவத்தில் குட்டி குட்டியாய் இருப்பவை கிரேப் டோமேடோஸ். கவலைப் படாதீங்க. தக்காளிச்செடியையே கண்டுபிடித்த உங்களால் மணித்தக்காளிச்செடியைக் கண்டுபிடிக்க இயலாமல் போகுமா?

    ReplyDelete
  53. அது சரி... அகரகர் இன்னும் இருக்கோ!! ;)

    நானும் கனகாலம் சாப்பிடாமல் பறவைக்கு விட்டுக் கொண்டுதான் இருந்தனான் அதீஸ். தக்காளி அலர்ஜி என்றால் இதுவும் அலர்ஜியாக இருக்கப் போகுது என்று பயமாக இருந்தது. பிறகு... தெரிவில இருந்த செடிகள் சிலதில் காய் நறுக்கின அடையாளம் தெரியவும்தான் நிச்சயமாக்கிக் கொண்டேன். இது தக்கா'ளி' போல அலர்ஜியாக இல்லை. ;D

    பூ.. வெள்ளைப்பூ. நிச்சயம் செய்யாமல் தெருவில் பிடுங்க வேண்டாம். இது போல சில தாவரங்களில பச்சைப் பகுதிகள் நச்சுத்தன்மையோட இருக்கும். உருளைக்கிழங்கில காய் & இலை நஞ்சு என்று தெரியும். (முதல் ஒரு ரோஸ்... தக்காளி போல காய்ச்சிருந்தது போஸ்ட் போட்டனீங்கள்.) மற்றது... பப்பீஸ் வோக் போற இடம்.

    அஞ்சூஸ் சொன்னது என்னவென்று கெஸ் பண்ணீட்டன். நடத்துங்க. ;)))

    ReplyDelete

  54. இதேபோல ஆற்றங்கரையில் பிடுங்கி, அதில் செய்த கிரான்பெரி ஜாம்,//அட...வித்தியாசமாக இருக்கே..

    ரோட்டோரோமா ஆப்பிள் பழமா?பலே..

    ReplyDelete
  55. மணத்தக்காளி கொத்துக்கொத்தாய் குட்டிக்குட்டிப்பழங்களாக இருக்கும்..
    நகைச்சுவையாய் பதிவிட உங்களுக்கு நிகர் யாரும் இல்லை அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  56. Mahi said...
    :))))))

    அதிராவ்வ்வ்வ்வ்வ்வ்....இப்படி புரட்டாசி வெள்ளிக் கிழம பல்பூ வாங்கிட்டீங்களே!! அதும் அடாது மழைலயும் விடாது வோக்:) போயி ஒரு செரி டொமட்டோவை மழையில் நனைய நனையப் படம்பிடிச்சுக்கொண்டு வந்துட்டீங்களே!!! ;)))))

    வாங்கோ மகி வாங்கோ... என்னாது புரட்டாசியில வெள்ளியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எங்கின போய் என் காலை:) முட்டுவேன் சாமீஈஈஈஈஈஈ:)..

    பிள்ளையார் பிடிச்சிட்டேன் எனச் சந்தோசப்பட்டேன்ன்.. பறவாயில்லை விழுந்தாலும் மண் ஒட்டாத கதையா..:) செரி ரொமாட்டொவை கண்டு பிடிச்சிட்டமில்ல:)...

    அதன் இலைகள் கொஞ்சம் சொவ்ட்டா இருப்பதுபோல இருந்திச்சா:) ச்சோ சமைக்கக்கூடியதா இருக்கே.. அப்போ மணித்தக்காளியேதான் என.. வானத்தில பறந்திட்டேன்ன்ன்ன்ன்:))..

    வந்த வேகத்தில.. வோக் போன ரயேட்டையும் மறந்து:), மளமளவெனப் பதிவு போட்டிட்டேன்ன் என்றால் பாருங்கோவன்.. ஒரு மணத்தக்காளி எனக்கு எவ்ளோ எனர்ஜி கொடுத்திருக்கு:))


    ReplyDelete
  57. Mahi said...
    :))))))

    நான் வரதுக்குள்ளயே என் அன்புத் தமக்கைகள் எல்லாரும் படம் போட்டு, கதை சொல்லி கலக்கிட்டாங்களே! :) யூப்பர்ர்ர்ர்ர்ர்ர்! இருந்தாலும் என் பங்குக்கு இந்தாங்கோ ஒன் படம்! ;)

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எல்லோர் வீட்டிலயும் “ச்சும்மா ச்சும்மா” முளைக்குதாமே?:) ஏன் எங்கட வீட்டிலயும், ஸ்ஸும்மா::) முளைச்சால் என்னவாம்ம்?:) அதிராட்டயும் கார்டின் இருக்கெல்லோ?:))

    ஓயமாட்டேன்ன்.. ஓயமாட்டேன்ன்ன்.. முளைக்கும்வரை ஓயமாட்டேன்ன்ன்:)

    அஞ்சு கொசுமெயிலில ஒரு சீக்ரெட் சொன்னவவாக்கும்:)) அதைக் கடைப்பிடிக்கப் போறேன்ன்ன்ன்:)).. வத்தல் வாங்கி.. அதை விதைச்சு.. ஹையோ உளறிட்டனா.. நோஓஓஓஓஓஓஓஓ:)))


    ReplyDelete
  58. மியாவும் நன்றி மகி... வின்ரறுக்கு படாதோ மரம்?



    ReplyDelete
  59. ரெ வெரி said...
    நலமா அதிரா அக்கா ?

    வாங்கோ ரெவெர் வாங்கோ.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் வாறிங்க.. நாங்க அனைவரும் நலம்.. நீங்களும் வீட்டில் அனைவரும் நலம்தானே...

    மச்சானை குப்பை எல்லாம் அள்ள சொல்லுங்க....-:)

    ஹா..ஹா..ஹா... அப்போ நான் சேகரிப்பவை எல்லாம்:) “குப்பையே” தான் எனும் முடிவுக்கே வந்திட்டீங்களாஆஆஆஆஆ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... இதுக்கு முக்கால்வாசியும் காரணம்.. அஞ்சுவேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சு தேம்ஸின் மற்றப்பக்கம் வீசுடுங்க ரெவெரி:)..

    மியாவும் நன்றி.




    ReplyDelete
  60. வை.கோபாலகிருஷ்ணன் said...
    செடிகொடி ஆராய்ச்சியில் இறங்கி விட்டீர்கள் போலிருக்கு.
    வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ...

    எதையாவது எடுத்துவந்து மணத்தக்காளியாக்கும்ன்னு நினைச்சு சாப்பிட்டு வைக்காதீங்கோ.

    அது ஆபத்தாகி விடும். அதிரா

    ஹா..ஹா..ஹா.. அதேதான்ன்.. நான் நன்கு அலசி ஆராய்ந்தபின்புதான் சமையலுக்கு எடுப்பேன்ன்... முன்பும் இப்படித்தான் ஆரம்ப காலம் திரும்பும் இடமெலாம், கிரான்பெரி, பிளாக்பெரீஸ்ஸ் காய்த்துக் குலுங்கும்... எனக்கு தொடப் பயம்.. கணவரும் விடமாட்டார்ர்...

    பின்னர் பலரைக் கேட்டுத்தான் இப்போ சாப்பிட எடுக்கிறேன்.

    இங்கு முக்கியமாக வயதானோருக்கு இப்படியான விஷயங்கள் நன்கு தெரியும்.. அப்படியாரோரைப் பிடித்து வைத்துத்தான் கதை கேட்பேன்ன்.. அவர்களும் ரொம்பப் பொறுமையாக விளக்கம் சொல்லுவினம்.


    ReplyDelete
  61. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மணத்தக்காளிக் கீரை + காய்கள் இங்கு திருச்சியில் சீசன் நேரத்தில் கிடைக்கும்.

    மணத்தக்காளி வற்றல் எப்போதும் இங்குள்ள மளிகைக்கடைகளில் கிடைக்கும்.

    இங்கும் தமிழ்க் கடைகளில் கிடைக்குமாமே... எங்களுக்கு தமிழ்க் கடைகள் ஏரியாவிலயே இல்லை..

    இம்முறை வத்தல் வாங்காமல் விடமாட்டேன்ன்.. அதிராவோ கொக்கோ?:))..

    மியாவும் நன்றி கோபு அண்ணன்.


    ReplyDelete
  62. சீராளன் said...
    சும்மா சும்மா மணக்கும்
    சூடு தந்தால் இனிக்கும்

    வட்ட வட்ட பூவில்
    மணத்தக்காளி காய்க்கும்//

    வாங்கோ சீராளன் வாங்கோ...

    இன்றும் ஒரு அழகான கவிதை இயற்றிப் பின்னூட்டமாக போட்டுவிட்டீங்க.. நன்றிகள்..


    கிட்னி என்று சொன்னது
    கிறுக்கு மூளையை ஒத்தது

    வந்து நானும் அறிந்தேன்
    வம்பாக சிரித்தேன்
    ஹா..ஹா..ஹா... எங்கட பாஷை இப்போ உங்களுக்கும் பழக்கமாச்சோ?:)..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  63. அன்புள்ள அதிரா,

    வணக்கம்.

    என் தொடர் பதிவினில் இதுவரை 60 பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

    தாங்கள் பெரும்பாலான பகுதிகளுக்கு தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    விடுபட்டுப்போய் உள்ள கீழ்க்கண்ட ஒரேயொரு பகுதிக்கும் வருகை தந்து கருத்தளித்து விடுமாறு, என் கணக்குப்பிள்ளைக் கிளி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

    http://gopu1949.blogspot.in/2013/10/60.html

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  64. இமா said...
    நான் என்னத்தைச் சொல்லுறது இனி! படம் எல்லாம் போட்டு விளக்கி இருக்கினம் எல்லோரும். ;)//

    வாங்கோ இமா வாங்கோ.. என்னத்தை விளக்கியும்:)) அது மணித்தக்காளிதான் என ஒருவரும் சொல்லேல்லை இமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    ReplyDelete
  65. கீத மஞ்சரி said...
    அதிரா, உங்களை வெறுப்பேற்ற என் பங்குக்கு நானும் ஒன்று சொல்லவா? ஆஸ்திரேலியாவிலும் சாலையோரத்தில் சும்மாச்சும்மா இந்த மணித்தக்காளிச்செடி தளதளவென்று வளர்ந்து காய்த்துக் குலுங்கிக்கிடக்கும்.//

    வாங்கோ கீத மஞ்சரி வாங்கோ..

    சொல்லுங்கோ சொல்லுங்கோ.. தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறியென்ன?:) முழம் ஏறியென்ன?:) நீங்க சொல்லுங்கோ?:))) ஹா..ஹா..ஹா... துன்பம் வரும்போது சிரிக்கோணும் என அம்மம்மா சொல்லித் தந்தவ எனக்கு:) அதுதான் சிரிக்கிறனாக்கும்:)))..



    ஒருநாள் அவருக்குத் தெரியாமல் கொஞ்சம் கீரைகளை ஆய்ந்துவந்து சமைத்து நான் மட்டும் முதலில் சாப்பிட்டேன். கொஞ்சம் பயம்தான். ஆனாலும் இது மணித்தக்காளிதான் என்று உள்ளுக்குள் ஒரு பலமான நம்பிக்கை. நல்லவேளையாக எனக்கொன்றும் ஆகவில்லை. ///
    அடக் கடவுளே!!! தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாச்சே....:).. இருந்தாலும், ஆரையும் கேட்காமல் இப்படி விஷப் பரீட்சையில் இறங்கப்பூடா...

    ReplyDelete
  66. கீத மஞ்சரி said...
    பிறகு அந்தப் பழங்களைப் பறித்து வந்து தோட்டத்தில் விதைத்து வீட்டிலேயே வளர்த்த கீரைகளை சமைத்து எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். காய்பழங்களை வற்றல் போட்டேன். மணி மணியாய் தக்காளி போன்ற புளிப்புடன் இருப்பதால் மணித்தக்காளி என்று சொல்வோம். //

    ஆவ்வ்வ்வ் கேட்கவே ஆசையா இருக்கு.. வளர்ந்தால்ல் இப்படி நிறைய வளரும்போல இருக்கே..

    நீங்கள் காட்டியிருப்பது செர்ரி டோமேடோஸ். ஓவல் வடிவத்தில் குட்டி குட்டியாய் இருப்பவை கிரேப் டோமேடோஸ். கவலைப் படாதீங்க. தக்காளிச்செடியையே கண்டுபிடித்த உங்களால் மணித்தக்காளிச்செடியைக் கண்டுபிடிக்க இயலாமல் போகுமா?

    ஹா..ஹா..ஹா... அதானே.. பூஸோ கொக்கோ?:) ஓயமாட்டேன்ன்.. ஓயமாட்டேன்ன்ன்:)) மணித்தக்காளி வளரும்வரை ஓயமாட்டேன்ன்:)..

    மியாவும் நன்றி கீத மஞ்சரி வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

    ReplyDelete
  67. இமா said...
    அது சரி... அகரகர் இன்னும் இருக்கோ!! ;)

    ஓம் இமா.. அப்படியே இருக்கு.. செய்திருந்தால் இங்கு போட்டிருப்பனே:)

    ////தெரிவில இருந்த செடிகள் சிலதில் காய் நறுக்கின அடையாளம் தெரியவும்தான் நிச்சயமாக்கிக் கொண்டேன்.//// இது தக்கா'ளி' போல அலர்ஜியாக இல்லை. ;D
    என்ன இமா இந்த வசனம் புரியவில்லை எனக்கு... இதன் படம் பார்க்க சுண்டங்கத்தரி போலவேதானே இருக்கு.. அதனால் அலர்ஜி இருக்க சான்ஸ் இல்லைத்தான்..

    மற்றது... பப்பீஸ் வோக் போற இடம்.
    // இல்ல இமா.. மேலே 3,4 அடி உயரத்திலே நடை பாதை.. இது கீழே மணலில் முளைச்சிருக்கு.. துப்பரவான இடம்...

    அஞ்சூஸ் சொன்னது என்னவென்று கெஸ் பண்ணீட்டன். நடத்துங்க. ;)))
    ஹா..ஹா..ஹா... எப்படியாவது எனக்கு ம.த முளைச்சால் சரிதான்ன்:))

    மியாவும் நன்றி இமா...

    ReplyDelete
  68. ஸாதிகா said...

    இதேபோல ஆற்றங்கரையில் பிடுங்கி, அதில் செய்த கிரான்பெரி ஜாம்,//அட...வித்தியாசமாக இருக்கே..

    வாங்கோ ஸாதிகா அக்கா வாங்கோ.. ஓம் இங்கு பழங்கள் பழுத்துக் கிடக்கு.. பெரிதாக ஆரும் மினக்கெட்டு ஆய்வதில்லை.. அவ பிடுங்கிய பழங்களில் கிட்டத்தட்ட எனக்கு தந்திருப்பதுபோல 15 பொட்டில்களில் நிரப்பினாவாம்ம்.. முறை சொல்லித் தந்தவ.. செய்து பார்த்து சரி வந்தால் இங்கு போடுகிறேன்ன்.

    ரோட்டோரோமா ஆப்பிள் பழமா?பலே..

    ஓம் வீட்டாக்கள் நட்டதுதான், அது ரோட்டோரம் இருப்பதால் இலகுவாக பிடுங்க முடியுது.. ஏனைய வீடுகளில்.. உள் கார்டினில் காய்த்துப் பழுத்துக் கொட்டுது... போய் ஆய முடியாதெல்லோ:)

    மியாவும் நன்றி.


    ReplyDelete
  69. Viya Pathy said...
    மணத்தக்காளி கொத்துக்கொத்தாய் குட்டிக்குட்டிப்பழங்களாக இருக்கும்..
    நகைச்சுவையாய் பதிவிட உங்களுக்கு நிகர் யாரும் இல்லை அருமை பாராட்டுக்கள்

    வாங்கோ வாங்கோ.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. என்னைத் தவிர, இங்கு எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கு மணித்தக்காளியை.

    ReplyDelete
  70. வை.கோபாலகிருஷ்ணன் said...
    விடுபட்டுப்போய் உள்ள கீழ்க்கண்ட ஒரேயொரு பகுதிக்கும் வருகை தந்து கருத்தளித்து விடுமாறு, என் கணக்குப்பிள்ளைக் கிளி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

    வருகிறேன்ன் வருகிறேன்ன்.. கிளிக்கு ஒரு , நாட்டு மருத்துவரிடம் சொல்லி லேகியம் வாங்கி வச்சிருக்கிறன்:) அதையும் எடுத்து வாறன்:)).. அது கணக்கெடுப்பு செய்ய முன்பு, ஒரு மேசைக்கரண்டி, தேனோடு குழைத்துச் சாப்பிடச் சொல்லுங்கோ:)) மிக்க நன்றி தகவலுக்கு.

    ReplyDelete
  71. //வந்த வேகத்தில.. வோக் போன ரயேட்டையும் மறந்து:), மளமளவெனப் பதிவு போட்டிட்டேன்ன் என்றால் பாருங்கோவன்.. ஒரு மணத்தக்காளி எனக்கு எவ்ளோ எனர்ஜி கொடுத்திருக்கு:))// அடடா.ஒரு மணத்தக்காளிக்கு இவ்வளவு பாடுபட்டிருக்கிறீங்க.விடுங்க ம.தக்காளியை கெதியில வளர்த்து ஒரு பதிவேற்ற வேண்டியதுதான். முயற்சி திருவினையாக்கும்.
    சொன்னால் நம்பமாட்டீங்க.நான் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன் அதிரா. காயோ,பழமோ எனக்கு பார்த்த ஞாபகமே இல்லை.ஆனா ஊரில சொல்ல சிரிக்கினம். ஏனென்றா எங்கடவீட்டில சமைத்தவையாம்.கர்கர்.கர்.கர்.
    //ஏனைய வீடுகளில்.. உள் கார்டினில் காய்த்துப் பழுத்துக் கொட்டுது... போய் ஆய முடியாதெல்லோ:)// இங்கும் இம்முறை அப்பிள் நிறையகாய்த்து விழுந்து கிட‌க்கு.பக்கத்திலிருந்தால் அருமை தெரியாது போல.

    ReplyDelete
  72. வாங்கோ அம்முலு வாங்கோ.. மீயும் பொறுமையா இருக்கிறேன் மணத்தக்காளி எப்படியும் உருவாக்கிடுவேன் எனும் நம்பிக்கையோடு. இன்னுமொன்று, எங்களிடம் ஓவர் குளிர் அண்ட் எப்பவும் மழை அதிகம், அதனால அது எப்படி வளருமோ தெரியாது.

    இங்குள்ளவர்கள் அனேகமா, பழம் பிடுங்கி சாப்பிடுவதில்லை, ஒரேயடியாக பிடுங்கி ஜாம் செய்து விடுகின்றனர் எனத்தான் இப்போ மீ கண்டு பிடித்தேன்ன்.. இன்று பார்க்கிறேன், ஒரு வீட்டில் குட்டிக் குட்டிப் பிளம்ஸ் காய்த்து பழுத்து குலுங்குது.. ஆனா எட்டி ஆயும் தூரத்தில் இல்லாமையால் பிடுங்க முடியல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  73. இப்ப தான் பார்க்கிறேன்,இது மனத்தக்காளி இல்லவே இல்லை.ஆனால் இது தக்காளி இனம் தான்..மண்டையே குழம்பி போய் விட்டேன்...

    ReplyDelete
  74. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_14.html?showComment=1386988215252#c2283658728372207094

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  75. இப்பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்தபோது பல தப்புக்கள் மனதை உறுத்துகின்றன.
    1) மணத்தக்காளிச்செடி எந்தவகையிலும் தக்காளிச்செடி போன்றிருக்காது. இரண்டும் வேறுபட்ட இனங்கள்.
    2) "தாமரைக்கிழங்குக்கீரை (கோகிலா கீரை என்பார்கள் பேச்சு வழக்கில்)" என்பது தவறு. கோகிலாக் கீரைக்கும் தாமரைக்கும் சேற்றில் வளர்வதைத் தவிர வேறு சம்பந்தங்கள் கிடையாது.
    3) கீத மஞ்சரி என்பவர் ஆஸ்திரேலியாவில் சாலையோரத்தில் மணித்தக்காளிச்செடி கண்டெடுத்து அதனை வீட்டிலுள்ள எல்லோருக்கும் சமைத்து வேறு கொடுப்பதாகக் கூறியுள்ளதைப் பார்த்தபோது நெஞ்சு திக்கென்றது. மணித்தக்காளிச்செடியைப் போன்றே இருக்கும் அச்செடி உணவிற்குப் பயன்படும் மணித்தக்காளிச்செடி அல்ல. அதே தாவர வகுப்பைச் சேர்ந்த அச்செடி இந்திய/இலங்கை பகுதிகளில் காணப்படும் வகையை விட வேறுபட்டது. அது குறிப்பிடத்தக்க அளவு விஷத்தன்மை கொண்டசெடியென ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு விஷத்தன்மை பற்றிய அறிவூட்டலுக்கான புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். (read http://en.wikipedia.org/wiki/Solanum_americanum)

    ReplyDelete
  76. இப்பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்தபோது பல தப்புக்கள் மனதை உறுத்துகின்றன.
    1) மணத்தக்காளிச்செடி எந்தவகையிலும் தக்காளிச்செடி போன்றிருக்காது. இரண்டும் வேறுபட்ட இனங்கள்.
    2) "தாமரைக்கிழங்குக்கீரை (கோகிலா கீரை என்பார்கள் பேச்சு வழக்கில்)" என்பது தவறு. கோகிலாக் கீரைக்கும் தாமரைக்கும் சேற்றில் வளர்வதைத் தவிர வேறு சம்பந்தங்கள் கிடையாது.
    3) கீத மஞ்சரி என்பவர் ஆஸ்திரேலியாவில் சாலையோரத்தில் மணித்தக்காளிச்செடி கண்டெடுத்து அதனை வீட்டிலுள்ள எல்லோருக்கும் சமைத்து வேறு கொடுப்பதாகக் கூறியுள்ளதைப் பார்த்தபோது நெஞ்சு திக்கென்றது. மணித்தக்காளிச்செடியைப் போன்றே இருக்கும் அச்செடி உணவிற்குப் பயன்படும் மணித்தக்காளிச்செடி அல்ல. அதே தாவர வகுப்பைச் சேர்ந்த அச்செடி இந்திய/இலங்கை பகுதிகளில் காணப்படும் வகையை விட வேறுபட்டது. அது குறிப்பிடத்தக்க அளவு விஷத்தன்மை கொண்டசெடியென ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு விஷத்தன்மை பற்றிய அறிவூட்டலுக்கான புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். (read http://en.wikipedia.org/wiki/Solanum_americanum)

    ReplyDelete
  77. வாங்கோ ரூபன் மிக்க நன்றி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  78. சும்மா என்கிற வார்த்தையை மூன்று முறைக்குமேல் சொல்லி இருப்பதால் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்!  ஹா...  ஹா.... ஹா....

    குப்பைமேனி பற்றி மறைந்த ராஜராஜேஸ்வரி அம்மா சொல்லி இருக்கும் குறிப்பு எனக்கு வியப்பான புதிய தகவல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
      ஹா ஹா ஹா..சும்மா சும்மா 5 மணிக்கு சும்மா சும்மா அவரும் நானும் என ஒரு பாட்டிருக்குது தெரியுமோ? படம் சார்லி சப்ளின் என நினைவு.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.. கொமெண்ட்ஸ்களையும் படிச்சிட்டீங்க..:)

      Delete
  79. கீரைகளில் இவ்வளவு வகைகளா ?

    படங்கள் நல்ல தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ.. இன்னும் சிலவகை இலைகள் இருக்குது பெயர் மறந்திட்டேன், மேலே எழுதியது அத்தனையும் நான் சின்ன வயதில் சாப்பிட்டவைகளே..

      மிக்க நன்றி.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.