நல்வரவு_()_


Monday, 30 September 2013

ஆதவன் பார்த்த அதிரா :)


வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ... என்ன இது ஆதவன் எண்டால்ல்.. சூரியன்:) அப்போ சூரியன் பார்ப்பது என்ன.. புளொக்கில் போடுமளவுக்கு பெரிய விஷயமோ என்றுதானே ஓசிக்கிறீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுதான் இல்ல:) இது வேற  “ஆதவன்”...:) இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :)..

அதாவது “மணியம் கஃபே ஓனர்”, மாத்தி ஓசிப்பவர்.. மணி, எப்பவோ ஒருநாள், சினிமா விமர்சனம் ஒன்று எழுதுங்கோ என அன்போடு கேட்டுக் கொண்டார், மைண்டில போட்டு வச்சேன்ன்... இன்று திடீரென ஒரு உஷார் வந்திச்சா.. அதுதான் மளமளவென எழுதுறேன்ன்.

சரி இது என் கன்னி.. சினிமா விமர்சனமென்பதால், தவறுகள் தப்புக்கள் ஏற்படலாம்ம்.. பொறுத்துக்கொண்டு படிங்கச் சொல்லி, மேன்மை மிகு பிரித்தானிய ஹைகோர்ட் ஜஜ்:) ஆணையிடுகிறார்:).

இது புதுப் படம் அல்ல, ஆனாலும் அலுக்காமல் பார்க்கக் கூடிய படம். சூரியாவும் நயந்தாராவும் மெயினாக இருக்கிறார்கள். வடிவேல் அங்கிள் ஆரம்பம் முதல் முடிவுவரை தூள் கிளப்புகிறார். அவரின் நகைச்சுவைக்காகவே இடையில் நிறுத்த மனமில்லாமல் படம் பார்க்க தோன்றியது.

சூரியாவின் பெயர்தான் ஆதவன். சூரியா ஒரு கோஸ்டியில் சேர்ந்து, அவர்கள் கூறும் வேலைகளை.. அதாவது தடயம் ஏதுமில்லாமல் ஆட்களை முடிப்பது, மிகச் கச்சிதமாக நடத்திக் கொடுக்கிறார். அப்போ அவருக்கு ஒரு ஓடர் கொடுக்கப்படுகிறது, மிகவும் பிரபல்யமான ஜஜ் ஒருவரை முடிக்கச் சொல்லி.

அப்போ அந்த ஜஜ் வீட்டுக்குள் எப்படியும் உள்ளே போனால்தான் இது சாத்தியம் என நினைக்கிறார். அந்த ஜஜ் வீட்டில் சமையல்காரராக வடிவேல் இருக்கிறார். ஜஜ் வீடு பெரிய கூட்டுக் குடும்பமாக இருப்பதனால் தன்னால் தனிய சமைக்க முடியாது தன் மருமகனை அழைத்து வருகிறேன் என புறப்படுகிறார் வடிவேல். மருமகன் கல்கத்தாவில் “அவுரா Bridge” அருகே நிற்பதாக சொல்கிறார். அழகான ஒரு  bridge அது. அங்கு வடிவேல் “புறம்போக்கு” என்பதற்கு ஆங்கிலத்தில் அழகான விளக்கம் கூறூவார் நேரில் பார்த்து ரசியுங்கோ:).  வடிவேலின் மருமகனை இந்த சூரியா கோஸ்டி கடத்தி விடுகிறது, கடத்திப் போட்டு வடிவேலிடம் சொல்கிறார்கள், சூரியாவை மருமகனாக அந்த வீட்டுக்குக் கூட்டிப் போகும்படி. தவிர்க்கமுடியாமல் வடிவேல் சூரியாவை தன் மருமகன் எனக்கூறி ஜஜ் வீட்டுக்குள் கூட்டிப் போய் விடுகிறார்.
===========================INTERVAL===============================
நான் ஆரியா - நயந்தாரா நடித்து வெள்ளிக்கிழமை வெளிவந்த “ராஜா ராணி” படம் பார்த்து விட்டேன்ன்.. சூப்பர்ர்.. பார்க்க விரும்புவோர் பாருங்கோ...
அடடா 4D ல பார்க்கிறபோது,
 என்னா ஒரு அழகாக இருக்கிறா நயந்தாரா:)
=======================இடைவேளை முடிஞ்சு போச்ச்ச்ச்:) =========================
சூரியா... காய்கறிகள், மீன் எனக் கொண்டு போகிறார் ஜஜ் வீட்டுக்கு, இரவு, ஒவ்வொரு மரக்கறிகளையும் உடைப்பார், உள்ளே ஒளித்து வைத்திருந்த புளட்டுகள், துவக்கு எல்லாம் வெளியே வரும் அதனை வடிவேல் பார்த்து, வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படும் அவஸ்தை ரசிக்கக் கூடியதாக இருக்கு.

அங்கு ஜஜ்ஜின் மருமகளாக நயந்தாரா இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் ஜஜ்சைக் கொல்ல வெளிக்கிட்டு, அது தோல்வியில் முடிகிறது... முடிவில் ஜஜ்ஜைக் கொல்கிறாரா...? ஜஜ் ஆர்? சூரியா ஆரு என்பதை நேரில் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கோ...

எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? . இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கோ.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊசி இணைப்பு:


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 “நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” .. 
இவ் ரோஷமுள்ள:) அரிய தத்துவத்தை, உங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன் சுட்டு வந்தவர்.. 
உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

70 comments :

  1. நான் தான் பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டூ

    >>>>>

    ReplyDelete
  2. ஊசி இணைப்பு : என்னவொரு அழகு...!

    ReplyDelete
  3. // இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :)..//

    எங்கள் அதிராவே ஒரு கன்னியல்லவோ!

    பதிவும் கன்னியோ !

    OK OK

    >>>>>

    ReplyDelete
  4. //சரி இது என் கன்னி.. சினிமா விமர்சனமென்பதால், தவறுகள் தப்புக்கள் ஏற்படலாம்ம்.. பொறுத்துக்கொண்டு படிங்கச் சொல்லி, மேன்மை மிகு பிரித்தானிய ஹைகோர்ட் ஜஜ்:) ஆணையிடுகிறார்:).//

    பொறுத்துக்கொள்கிறோம். வேறு வழி?

    மஹா கனம் [95 கே.ஜி.க்கு மேல் இருக்குமோ] கோர்ட்டாரின் ஆணை வேறு ;)

    >>>>>

    ReplyDelete
  5. //அடடா 4D ல பார்க்கிறபோது, என்னா ஒரு அழகாக இருக்கிறா நயந்தாரா:)//

    ஆஹா, 4D யோ ! சூப்பர்.

    பூஸாரை விட அய்ய்ய்கோ?

    >>>>>

    ReplyDelete
  6. //எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? . இதுவரை பார்த்திராதவர்கள் பாருங்கோ.//

    ரொம்ப ஸ்வீத்தோ ஸ்வீத்தூஊஊஊஊ ;)))))

    திகட்டி விட்டதூஊஊஊஊ.

    கொஞ்சூண்டு காரம் தாங்கோ.

    >>>>>

    ReplyDelete
  7. பேபி அதிரா அய்ய்க்கோஓஓஓ அய்ய்ய்க்காக இருக்குதூஊஊ.

    அதை உள்ளேக் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ.

    >>>>>

    ReplyDelete
  8. சுயமதிப்பை இழந்து, சுட்டுவந்துள்ள தத்துவம் சூப்பரோ சூப்பர்.

    >>>>>

    ReplyDelete
  9. நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” ..
    இவ் ரோஷமுள்ள:)

    அரிய தத்துவத்தை,எங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன்
    சூடாக சுடச்சுட சுட்டு வந்து தந்ததற்கு பாராட்டுக்கள்..நன்றிகள்..

    சூடாக சுடச்சுட

    ReplyDelete
  10. ஆதவன் பார்த்து பகிர்ந்த
    அதிராவுக்கு பாப்கார்ன் பார்சேல்...!

    ReplyDelete
  11. அன்புள்ள அதிரா,

    என் தொடரின் பகுதி-52க்கு வராமல் பகுதி-53, 54 + 55க்கு வந்துள்ளீர்கள் என என் கணக்குப்பிள்ளைகிளி ம்கவும் கடுப்பில் இருக்கிறார்.

    பகுதி-54 க்கு ஏனோ தானோ என வருகை தந்து விட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களாம்.

    அதையும் அந்தக்கிளிப்பிள்ளை சொல்லச்சொன்னார்.

    அதுபோல பகுது-56 + 57க்கும் ஆளையே காணும் என சொல்லச்சொன்னார்.

    இதெல்லாம் அதிராவின் தகவலுக்காக மட்டுமே.

    ஜோரான கன்னி முயற்சிப்பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பூனை, டி.வி.யில் படம் பார்க்கும் படம் ஜோர் ஜோர்.

    -oOo-

    ReplyDelete
  12. ஆஹா.. அதிரா.. படவிமரிசனமோ.. இருங்கோ நானும் படம் பார்க்கேலை..

    இப்ப இங்கை வந்ததும் ஒரு ஹலோ சொல்லத்தான்..
    நான் கொஞ்சம் பிஸி..:)

    மீண்டும் தொடர்வேன்...:)

    எங்கை தமிழ்மண வோட்டுப் பெட்டியைக் காணேலை... :(

    ReplyDelete
  13. ஆஆவ் !!very nice review

    விமரிசனம் நல்லாருக்கே ..விரைவில் ராஜா ராணி விமர்சனம் எதிர்பார்கின்றோம் :))

    ரொம்ப பிடித்தது ரோஷமுடன் சுட்டு வந்த தத்துவம் :))

    ReplyDelete
  14. பட விமர்சனமோ!!! முதன்முதலா படத்தை விமர்சித்து ஒரு பதிவு.வாழ்த்துக்கள் அதிரா.ராஜாராணியே விமர்சித்திருக்கலாம்? சரி நான் பார்த்திட்டேன்.எனக்கு பிடித்துவிட்டது.நயன்தாரா மீண்டும். அழகாக இருக்கிறார்.
    ஆதவன் பட விமர்சனம் அது ஏதோ என்ன எழுதினாலும் உங்கள்வழி தனீஈஈ வழி.நன்றாக எழுதியிருக்கிறீங்க.திரும்ப பார்க்க வேணுமெண்ட ஆவலை உங்க விமர்சனத்தால் ஏற்படுத்திவிட்டீங்க.
    வடிவேலு காமடி சூப்பரா இருக்கும்.
    வா..வ்வ் அழகான பேபி அதிரா.சூப்பரா இருக்கிறா.சுட்ட தத்துவமென்றாலும் சூப்பரு.

    ReplyDelete
  15. ஆவ்வ்வ்வ் எல்லோரும் இங்கினதான் இருக்கினம்ம் படம் பார்த்துக்கொண்டு:) வாங்கோ வாங்கோ எல்லோரும் வாங்கோ.. இதோ ஆரியபவானில ஓடர் கொடுத்திட்டேன்ன்.. இடியப்ப வெஜ் பிர்ராஆஆஆணிக்கு.. ஏனெனில் இங்கு ஒருவர் தவிர அனைவரும் சுத்த சைவம்ம்ம்ம்ம்ம் :)) விரைவில அதாவது ஒரு நாலு மணி நேரம் கழிச்சு வருகிறேன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
  16. அதிரா.நீங்கள் அதில வாறபாட்டுக்கள் பற்றி ஒன்றுமே சொல்லேல்லை. நல்ல பாட்டுக்கள்.(அசிலி பிசிலி, வாராயோ) அதுவும் ஹாரீஸ் ஜெயராஜ் எல்லோ மியூசிக்.ஹாரீஸ் ரசிகர் வரப்போறார் ஏன் சொல்லேல்லை என்று.

    ReplyDelete


  17. பட விமர்சனத்தை எழுத முடிவெடுத்து எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் நிறுத்திவிடாமல் தொடருங்கள்.
    “நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” .இதுபோன்ற அருமையான கருத்துக்களை சுடுவதில் தவறு இல்லை என்று யாரோ சொல்லி இருக்கிறார்களே!

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நான் தான் பர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டூ////

    அடடா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.. நீங்கதான் 1ஸ்ட்டூ:) அதனால 1ஸ்ட்டா இருக்கும் இந்தக் கலறி:) சீட் உங்களுக்கே..:).. எதுக்கோ? ராஜா ராணி பார்க்கத்தான்:)..

    பக்கத்தில எம்ரியா ஒரு சீட் இருக்கே இது ஆருக்கு.. நயந்தாராவாக இருகுமோ எண்டெல்லாம் யோசிச்சிடாதீங்க:).. அது இங்கின செகண்ட் என சொல்லி வந்திருக்கிறார் உங்களை அடுத்து, அவருக்கே:) ஹா..ஹா..ஹா... அப்பாடா கலரி டிக்கெட் எல்லாம் வித்துட்டேன்ன்ன் :))

    ReplyDelete
  19. திண்டுக்கல் தனபாலன் said...
    SECOND...!
    /// வாங்கோ தனபாலன் வாங்கோ.. நீங்கதான் இங்கின செகண்ட்:) ஆனாலும் உங்களுக்கு படம் பார்க்க முதல் வரிசையில ரிக்கெட் தந்திருக்கிறம்:).

    ராஜா ராணி படம் சூப்பர்...!
    அட அப்போ பார்த்திட்டீங்க... தியேட்டரில் ரிக்கெட் கிடைக்குதில்லையாம்ம் வெளிநாடுகளிலும்..

    ஊசி இணைப்பு : என்னவொரு அழகு...!//
    ஹா..ஹா..ஹா.. ஊசி இணைப்பு எப்பவுமே அழகுதான்ன் ... மியாவும் நன்றி உடன் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    // இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :)..//

    எங்கள் அதிராவே ஒரு கன்னியல்லவோ!

    பதிவும் கன்னியோ !

    OK OK

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
    பூஸாரை விட அய்ய்ய்கோ?//
    சே..சே.. அப்பூடிச் சொல்லிட முடியாது:))

    வை.கோபாலகிருஷ்ணன் said...
    சுயமதிப்பை இழந்து, சுட்டுவந்துள்ள தத்துவம் சூப்பரோ சூப்பர்.
    ஹா..ஹா..ஹா.. ஒரு நல்ல விஷயத்துக்காக, சிலதை இழப்பதில் தவறில்லைத்தானே?:)

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரி said...
    இவ் ரோஷமுள்ள:)

    அரிய தத்துவத்தை,எங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன்
    சூடாக சுடச்சுட சுட்டு வந்து தந்ததற்கு பாராட்டுக்கள்..நன்றிகள்..

    சூடாக சுடச்சுட ஹா..ஹா..ஹா.. வாங்கோ ராஜேஸ்வரி அக்கா வாங்கோ.. சுடச்சுட வந்து பின்னூட்டமிட்டமைக்கு மியாவும் நன்றி.

    ஆதவன் பார்த்து பகிர்ந்த
    அதிராவுக்கு பாப்கார்ன் பார்சேல்...!

    ஒரு சின்ன றிகுவெஸ்ட்:).. எனக்கு சோல்ட் பொப்கோன்தான் பிடிக்கும்:)) ஹா..ஹா..ஹா.. மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் said...
    /// என் கணக்குப்பிள்ளைகிளி ம்கவும் கடுப்பில் இருக்கிறார்.///

    ///பகுதி-54 க்கு ஏனோ தானோ என வருகை தந்து விட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களாம்.

    அதையும் அந்தக்கிளிப்பிள்ளை சொல்லச்சொன்னார்///

    ஹையோ முருகா போற வழியில டபிள் புண்ணியம்ஸ்ஸ்:) கிடைக்கும்.. எனக்கு ஆராவது நல்ல ஒரு “சூனியக் காரரின்”:) அட்ரஸ் தருவீங்களோ?:)) இனியும் பொறுக்க முடியாது அந்தக் கிளியின் தொல்லை:).. சூனியம் செய்து, கிளிக்கு மறதிக் குணம் உண்டாக்கப் போறேன்ன்ன்ன்ன்ன்:)).

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி கோபு அண்ணன், அது ஏதோ இடையில மிஸ்சாகிட்டுதுபோல.. அனைத்துக்கும் வருகிறேன்.

    நெட்டுக்கு வர நேரம் கிடைக்குதில்லை.. அப்போ கிடைக்கும் நேரத்தில் முடிந்தவரை எல்லா வீட்டிலும்,பின்னூட்டம் போடவே சரியாகிடுது, அதனால கொஞ்சம் பின்னூட்டத்தை போடாமல் நிறுத்தி பதிவை போட்டேன்ன்.. இனி வருவேன்.

    மிக்க நன்றி கோபு அண்ணன், வரவுக்கும் கருத்துக்களுக்கும்.


    ReplyDelete
  23. இளமதி said...
    ஆஹா.. அதிரா.. படவிமரிசனமோ.. இருங்கோ நானும் படம் பார்க்கேலை..

    இப்ப இங்கை வந்ததும் ஒரு ஹலோ சொல்லத்தான்..
    நான் கொஞ்சம் பிஸி..:)

    மீண்டும் தொடர்வேன்...:)
    வாங்கோ இளமதி வாங்கோ... பிரச்சனை இல்லை, மெதுவா படிச்சுப் போட்டு ஐபாட்ல படம் பாருங்கோ, மீயும் அதிலதான் பார்த்தேன்.. சூப்பர் நகைச்சுவைகள்..

    எங்கை தமிழ்மண வோட்டுப் பெட்டியைக் காணேலை... :(//
    அதைக் கழட்டி தேம்ஸ்ல வீசிட்டேன்ன்:).. நான் ஆரம்பமே வாணாம் என இருந்தேன்.. பின்பு மணிதான் சொன்னார் போடுங்கோ போட்டால் நல்லதுதானே என... இப்போ அதுக்கு வோட் பண்ணீனம் இல்லையே எனும் கவலைதான் அதிகமாகுது:( அதனால பேசாமல் இணைக்காமல் விட்டுவிட்டேன்ன் :)..

    மியாவும் நன்றி இளமதி.

    ReplyDelete
  24. Cherub Crafts said...
    ஆஆவ் !!very nice review

    அட அஞ்சு.. வாங்கோ வாங்கோ..

    விமரிசனம் நல்லாருக்கே ..விரைவில் ராஜா ராணி விமர்சனம் எதிர்பார்கின்றோம் :))

    ஹா..ஹா..ஹா.. புதுப்படத்துக்கு நிறையப்பேர் எழுதுவினம்... அதனாலதான் மாத்தி ஓசிச்சு மீ பழைய படத்துக்கு எழுதினேனாக்கும்:) பூஸோ கொக்கோ:))..

    ரொம்ப பிடித்தது ரோஷமுடன் சுட்டு வந்த தத்துவம் :))///

    ஹா..ஹா..ஹா.. தத்துவத்தைவிட அந்த பூஸானந்தாவின் ரோஷம்தான் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு:))..

    மியாவும் நன்றி அஞ்சு...

    ReplyDelete
  25. priyasaki said...
    பட விமர்சனமோ!!! முதன்முதலா படத்தை விமர்சித்து ஒரு பதிவு.வாழ்த்துக்கள் அதிரா//

    வாங்கோ அம்முலு வாங்கோ.. ஆமாம்ம்.. இனி விமர்சிப்பேனோ?:) ஆண்டவனுக்கே வெளிச்சம்ம்:)
    ராஜாராணியே விமர்சித்திருக்கலாம்?

    அதுதான் மேலே அஞ்சுவுக்கு சொல்லியிருக்கிறேன் பதில்.. புதுசை எல்லோரும் விமர்சிப்பினம் என்பதால்.. மீ சைலண்ட் ஆகிட்டேன்ன்ன்:)).. எடுத்த எடுப்பில புதிசை விமர்சிக்கப் போய் ஏதும் ஏடாகூடாமாகிட்டாலும் எனப் பயம்:))

    ReplyDelete
  26. I have seen this movie twice, because of vadivelu thaththa ( ungallukku uncle means meekku ....grandpa ). Comedy is super.

    ReplyDelete


  27. priyasaki said...

    ஆதவன் பட விமர்சனம் அது ஏதோ என்ன எழுதினாலும் உங்கள்வழி தனீஈஈ வழி.நன்றாக எழுதியிருக்கிறீங்க.திரும்ப பார்க்க வேணுமெண்ட ஆவலை உங்க விமர்சனத்தால் ஏற்படுத்திவிட்டீங்க.
    வடிவேலு காமடி சூப்பரா இருக்கும்.
    வா..வ்வ் அழகான பேபி அதிரா.சூப்பரா இருக்கிறா.சுட்ட தத்துவமென்றாலும் சூப்பரு. மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  28. priyasaki said...
    அதிரா.நீங்கள் அதில வாறபாட்டுக்கள் பற்றி ஒன்றுமே சொல்லேல்லை. நல்ல பாட்டுக்கள்.(அசிலி பிசிலி, வாராயோ) அதுவும் ஹாரீஸ் ஜெயராஜ் எல்லோ மியூசிக்.ஹாரீஸ் ரசிகர் வரப்போறார் ஏன் சொல்லேல்லை என்று.

    ஹா..ஹா..ஹா.. நானும் பாடல்கள் பற்றி நினைச்சேன் அம்முலு, ஆனா இது கொஞ்ச நாட்களுக்கு முன் பார்த்து மனதில் எடுத்து வைத்தேன் குறிப்பு... பாடல் பார்க்க திரும்ப தேடோணும்.. அத்தோடு பதிவைப் பெரிதாக்கினாலும் அலட்டல் போலாயிடுமெனப் பயமெனக்கு.. அதனாலேயே விட்டிருந்தேன்ன்.. நீங்க பிடிச்சுக் கொடுத்திடுவீங்கபோல இருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  29. Viya Pathy said...


    பட விமர்சனத்தை எழுத முடிவெடுத்து எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் நிறுத்திவிடாமல் தொடருங்கள்.//

    வாங்கோ வியபதி வாங்கோ.. ஹா..ஹா..ஹா.. இது தொடருமோ தெரியவில்லை:).. இது ஆரம்பமா முடிவா என எனக்கே புரியுதில்லை:))


    “நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” .இதுபோன்ற அருமையான கருத்துக்களை சுடுவதில் தவறு இல்லை என்று யாரோ சொல்லி இருக்கிறார்களே!
    ஹா..ஹா..ஹா.. நிஜமாவோ? :) நீங்க சொல்வது முற்றிலும் சரிதான்ன்.. ஒரு நல்லது நடக்கோணும் என்பதுக்காக என்ன வேணுமெண்டாலும் செய்யலாம்தான்ன்...

    மியாவும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  30. vanathy said...
    I have seen this movie twice, because of vadivelu thaththa ( ungallukku uncle means meekku ....grandpa ). Comedy is super.//

    அடடா வான்ஸ் வந்திருக்கிறாக:) அதாவது வடிவேல் அங்கிளின் பேத்தி வந்திருக்கிறாக:) வாங்க வான்ஸ் வாங்க..

    ஹா..ஹா..ஹா.. நல்லவேளை வடிவேல் அங்கிளோடயே நிறுத்திட்டீங்க பிரச்சனையை:).. 2 தரம் படம் பார்த்தேன் எண்டீங்க.. ஹையோ என் பதிவில் ஏதும் பிழை பிடிச்சிடப்போறாவே கன்னிப் பதிவாச்சே.. என:) நேக்கு கையும் ஓடல்ல காலும் நடுங்கல்ல:))...

    ஊசிக்குறிப்பு:
    அது “தாத்தா” என்பது ஓல்ட் பாஷனாம்ம்:) அதாவது 70 டீஸ்.. 80 டீஸ்லதான் அப்பூடிக் கூப்பிடுறதாம்:)).. இப்போ எல்லாமே அங்கிள்தானாம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)) ஹையோ அஞ்சுட கண்பார்வை இங்கின படமுன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))))

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ். றீச்சர் எங்கே போயிட்டா?:)

    ReplyDelete
  31. !! ?? ;)

    ஏதாவது விஷயம் இல்லாமல் தேடமாட்டீங்களே!

    ReplyDelete
  32. அந்த ஜஜ்... பிரித்தானிய நீதிமன்றத்து ஆளோ!! ;)

    வாழ்க பூஸானந்தா.

    ReplyDelete
  33. ஆதவன் படம் இதுவரை பார்க்கலை, மியாவின் விமர்சனம் பார்த்த பிறகு பார்க்காமல் இருக்க முடியுமா? விரைவில் பார்த்துட்டுச் சொல்கிறேன் மிஸ்.மியாவ்பெயார்! :)))

    //இவ் ரோஷமுள்ள:) அரிய தத்துவத்தை, உங்களுக்காக, மிகவும் பயபக்தியுடன் சுட்டு வந்தவர்..
    உங்கள் பேரன்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:).//

    என்னாது...பேரன்பா? அதாரு இப்புடி வதந்தியெல்லாம் கிளப்பி விடறது? பெரும்வம்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா என்று சொல்லிருந்தாப் பொருத்தமா இருந்திருக்குமல்லே? ;))

    எடுப்பதே களவு, இதில சுடச்சுட வேற எடுத்தாகளாம், பார்த்து...கை சுட்டுக்கப் போகுது!! ;)) பின்னே ஒரேஞ்ச் கலர் ப்ரேஸ்லெட், பச்சைக்கல் மோதிரமெல்லாம் போடமுடியாது, எனக்குத்தான் கிஃப்ட்டா அனுப்போணும், ஜாக்கிரதை!! ;))))

    ReplyDelete
  34. ஆதவன் விமர்சனம் அருமை. நல்லா எழுதியிருக்கீங்க அதிரா. பேபி அதிரா க்யூட். பூஸானந்தாவின் தத்துவம் சுடுகிறது. உண்மை சுடுமல்லவோ...

    ReplyDelete
  35. யாரது, நாங்கள் பதிவுலகத்தை விட்டு, வெளியே வந்து.......,

    ஃபேஸ்புக் உலகில், காணி வாங்கி, வீடு கட்டி, கலியாணம் முடிச்சு :))) , மனைவி சுவமில்லாமல் இருக்கிற இந்த நேரத்தில....., :))))

    மறுபடியும் நாங்கள் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க பதிவு போட்டது??

    ஆக்‌ஷுவலி, நாங்கள் ஃபேஸ்புக்கில் பிஸியாக இருப்பதால், விமர்சனம் எழுதச் சொல்லி கேட்டதையே மறந்துட்டோம் ஆக்கும்ம் :)))

    சரி சரி, நாங்கள் மறந்தாலும், நீங்கள் மறக்கல இல்ல?? :))

    அங்கதான் நீங்க நிக்குறீங்க :)))

    சரி, வை தமிழ் மணம் சப்மிட் நஹி?? :)))

    ReplyDelete
  36. போற காரில :) புண்ணியம் கிடைக்கும் மக்கள்ஸ்ஸ்:) எனக்காராவது டிஷ்யூ தாங்கோ:) அதுவும் பிங் கலரிலதான் தாங்கோ.. அப்போதான் துடைக்கும்போதே ஒரு சந்தோஷம் கிடைக்கும்:)..

    சரி இந்தப் புலம்பல் ஏன் எதுக்கு எண்டுதானே கேட்கிறீங்க?:).. அதுவந்து நாளையோட மீ 35/40 நாட்களுக்கு அவிச்ச கோழிமுட்டை சாப்பிட முடியாதாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அதுக்காக நாளைக்கே மொத்தமா சாப்பிட முடியுமோ சொல்லுங்க?:)..

    நான் இண்டைக்கு சைவம்.. பிறகு வியாழன் வெள்ளி சைவம்.. பிறகு சனிக்கிழமை நவராத்திரி ஆரம்பமாமே... அது அப்பூடியே கேதாரகெளரியாக மாறி.. கந்தசஷ்டி கண்டு.. சூரனின் தலையை விழுத்தும்வரை:).. மீ சுத்த விரதம்ம்ம்ம்ம் :).. இந்த முறை கந்தசஷ்டி பாறணைக்கு எல்லோரும் எங்கட வீட்டுக்கு வாங்கோஓஓஓஓஓஒ:)..


    ReplyDelete
  37. இமா said...
    !! ?? ;)

    ஏதாவது விஷயம் இல்லாமல் தேடமாட்டீங்களே!///

    ஆவ்வ்வ்வ் வாங்கோ இமா வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு அக்கறையில தேடினால்:) அந்த நல்ல எண்ணத்தைப் புரிஞ்சு கொள்ளாமல் பாருங்கோவன் கேட்கிற கேள்வியை:)... சே..சே.. இப்போ எதுக்கு கூப்பிட்டேன்ன்ன்ன்ன்ன்?:)) இமா கேட்ட கேள்வியால கூப்பிடதும் மறந்துபோச்சுப் போங்கோ:))

    இமா said...
    அந்த ஜஜ்... பிரித்தானிய நீதிமன்றத்து ஆளோ!! ;)

    வாழ்க பூஸானந்தா.///

    ஹா..ஹா..ஹா.. வாழ்க புலாலியூர்ப் பூஸானந்தா எண்டு சொல்லோணும் இமா:))..

    மியாவும் நன்றி றீச்சர்.. விரைவில உங்களிட்ட ஒரு சந்தேகம் கேட்பன், தீர்த்து வைக்க ரெடியா இருங்கோ:) இங்கினதான்:).

    ReplyDelete
  38. Mahi said...
    ஆதவன் படம் இதுவரை பார்க்கலை, மியாவின் விமர்சனம் பார்த்த பிறகு பார்க்காமல் இருக்க முடியுமா? விரைவில் பார்த்துட்டுச் சொல்கிறேன் மிஸ்.மியாவ்பெயார்! :))) //

    அவ்வ்வ்வ் மஞ்சள் பூ வந்திருக்கிறாக.. வாங்க மகி வாங்கோ.. பாருங்கோ பாருங்கோ இப்போ எனக்கும் ஒருக்கால் திரும்ப பார்க்கோணும் என ஆசையா இருக்கு...:)

    என்னாது...பேரன்பா? அதாரு இப்புடி வதந்தியெல்லாம் கிளப்பி விடறது? பெரும்வம்புக்குரிய புலாலியூர்ப் பூஸானந்தா என்று சொல்லிருந்தாப் பொருத்தமா இருந்திருக்குமல்லே? ;))///
    ஹா..ஹா..ஹா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது, “பெரும் ரோஷமுள்ள” எனத்தான் போட்டிருக்கோணும்.. மிஸ்சாகிட்டுது:).

    ReplyDelete
  39. Mahi said...
    எடுப்பதே களவு, இதில சுடச்சுட வேற எடுத்தாகளாம், பார்த்து...கை சுட்டுக்கப் போகுது!! ;)) பின்னே ஒரேஞ்ச் கலர் ப்ரேஸ்லெட், பச்சைக்கல் மோதிரமெல்லாம் போடமுடியாது, எனக்குத்தான் கிஃப்ட்டா அனுப்போணும், ஜாக்கிரதை!! ;))))//
    கிக்..கிக்...கீஈஈஈஈஈ:) பின்ன ஆறினால் ஆருக்கும் பிடிக்காதெல்லோ:) .. ஹையோ முருகா லொக்கரில வச்சதை, இனி வெளில எடுத்துப் போடுவம்:), மகி மறந்திட்டா எண்டெல்லோ நினைச்சிருந்தேன்ன்ன்:))...

    மியாவும் நன்றி மகி.

    ReplyDelete
  40. கீத மஞ்சரி said...
    ஆதவன் விமர்சனம் அருமை. நல்லா எழுதியிருக்கீங்க அதிரா. பேபி அதிரா க்யூட். பூஸானந்தாவின் தத்துவம் சுடுகிறது. உண்மை சுடுமல்லவோ...

    வாங்கோ கீதமஞ்சரி வாங்கோ.. அதானே உண்மை எப்பவும் சுடும்:) பொய்யும் சுடும்தான்:).. அது எப்பவெனில்.. பொய் எனத் தெரியவரும்போது:))..

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  41. MaaththiYosi Jeevan said...
    யாரது, நாங்கள் பதிவுலகத்தை விட்டு, வெளியே வந்து.......,

    ஃபேஸ்புக் உலகில், காணி வாங்கி, )//

    வாங்கோ மணியம் கஃபே ஓனர் வாங்கோ... நீங்க இப்பெல்லாம் ரொம்ப பிசியாயிட்டீங்க என்றுதான் அறிஞ்சேன்ன்:) எதில பிசி எண்டெல்லாம் கேட்க மாட்டேன்ன் ஏனெண்டால் மீ ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே :).
    வீடு கட்டி, கலியாணம் முடிச்சு :))) , மனைவி சுவமில்லாமல் இருக்கிற இந்த நேரத்தில....., :)))
    அச்சச்சோ என்னாச்சு அவவுக்கு?:) ஏன் எங்காவது விழுந்து கிழுந்து அடிபட்டிடிச்சா?:).. சே..சே.. என்ன நீங்க? பத்திரமா பார்த்திருக்கவே
    நம் அவவி?:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்:) எனக்கு ஊர் வம்பு பேசுறது பிடிக்காது பாருங்கோ:)..


    அங்கதான் நீங்க நிக்குறீங்க :)))///
    இல்ல இல்ல இப்ப நாங்க பிரித்தானியா வந்திட்டமாக்கும்... ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி மணி.

    ReplyDelete
  42. வாழ்க புலாலியூர்ப் பூஸானந்தா!!! ;)

    ReplyDelete
  43. அதிரா...
    திரும்ப இங்கை வாரதுக்குள்ள எத்தினை தடைகள்.. ஸ்..ஸ். எல்லாத்தையும் விலத்தி வாறதுக்குள்ள போதும் போதுமெண்டாச்சு... இது வேற ஒண்டுக்கு போதும்..:)..
    உங்களின்ர விமர்சனம் பார்த்தாப்பிறகுதான் நேற்று நான் ஆதவன் படம் ஐபாட்டில பார்த்தன்..
    சூர்யா நடிப்பு எப்புடி எண்டாலும் எனக்குப் பிடிக்கும்..
    வடிவேலுவின் நகைச்சுவை நினைச்சு நினைச்சு சிரிக்கவைக்குது..
    இனி உங்களின் விமர்சனம் கேட்டப்பிறகுதான் நான் படம் பார்க்கிறதென முடிவாகிட்டான்..:)
    அடுத்தது ராசாராணிதான்!..:))

    சுட்ட வரிகள் சரியான சூடா இருக்கு.. அருமை..:)

    ReplyDelete


  44. அதுசரீஈஈஈ எங்கட அன்னப்பட்சிகள் எப்புடி இருக்கினம்... குளிரும் மெல்ல மெல்ல வரத்தொடங்கீட்டுது...
    போய்ப் பார்த்தனீங்களோ...

    அதைப்பற்றி ஒண்ணுமே தகவல் சொல்லேலை இன்னும் நீங்கள்...

    ReplyDelete
  45. இமா said...
    வாழ்க புலாலியூர்ப் பூஸானந்தா!!! ;

    ReplyDelete
  46. நான் செய்த பிஸ் கட்லட்.. எல்லோரும் ஒண்ணு ஒண்ணு எடுங்கோ.... இது பொரிக்க முன் எடுத்த படம்ம்ம்ம்

    ReplyDelete
  47. மீண்டும் வாங்கோ இளமதி.. என்னாது ஆதவன் பார்த்திட்டீங்களோ? ...ஙேஙேஙேஙேஙே... :) பிறகென்ன சூப்பர்.. உங்களுக்கு கட்லட் தரமுடியாதே.... சரஸ்வதி பூஜைக்கு வடை சுட்டுத் தாறன்:).

    என்ன அடுத்தது ராசா:)ராணியோ?... என்ர முருகா.. இனிமேல் நினைச்சுப் பார்ப்பனோ தெரியாது சினிமா விமர்சனத்தை:)

    சுவான் தம்பதிகள் குழந்தைகளோடு தூரத்தில, ஆற்றில போகும்போது கண்டேன்ன் படமெடுத்தேன் சரியா வரவில்லை... இப்போ குளிரென்பதால் அடிக்கடி போவதில்லை நான்.. போனால் , பார்த்தால் படம்புடிச்சு வாறேன்ன்...

    மியாவும் நன்றி இளமதி..

    ReplyDelete
  48. உருளைக்கிழங்குக்கு ப்ரெட்க்ரம்ஸ் கோட் பண்ணி வைச்சு இருக்கிறீங்கள். நான் ஏமாறமாட்டேன். ;D
    இதில ஒன்றை மட்டும் எடுத்து நாங்களே பொரிச்சு சாப்பிடுறதோ!! எ.கொ.அ.இ!!!

    பு.பூ அழகாக இருக்கிறார்.

    ReplyDelete
  49. இமா said...
    உருளைக்கிழங்குக்கு ப்ரெட்க்ரம்ஸ் கோட் பண்ணி வைச்சு இருக்கிறீங்கள். நான் ஏமாறமாட்டேன். ;D ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இல்ல இமா.. உருளைக்கிழங்குக்கு மினக்கெட்டு ஆரும் இப்படிச் செய்வினமோ?.. இது பிஸ் அண்ட் கிழங்கு சேர்ந்த்த கட்லட். நான் உருண்டையாகத்தான் செய்வேன்.

    ஆனா இது எங்கட அம்மா செய்யும் ஸ்டைல்:).. அதனால் மீயும் இப்பூடிச் செய்தேன்ன்... நீங்க விரும்பிய ஒயில்ல பொரிச்செடுங்கோ:).. பொரித்தபின் படமெடுக்க மறந்தே போனன்:)) எல்லாம் முடிஞ்சு போச்ச்ச்:))

    ReplyDelete
  50. ஆதவன் பார்த்த அதிரா :) //

    என்னது ஆதவன் என்பவர் அதிராவை பார்த்திட்டாரோ??? ச்சே, என்ன இது கொடுமையா இருக்கு.

    அவரை பிடிச்சு ஒருக்கா வெருட்டோணும் - நான் ஆதவனைச் சொன்னேன் :) :) :)

    ReplyDelete
  51. இது அதிராவின் “கன்னிப் பதிவாக்கும்” :).. ///

    நானும் 4 தடவை படிச்சுப்பார்த்திட்டன். எந்த கன்னியையும் பற்றி எழுதல. எவ்வ்ளோ கவலையா இருந்திச்சு தெரியுமா?? :))))))))))

    கன்னிகளைப் பற்றி எழுதப்போகிறீர்களாக்கும் என்று ஓடோடி வந்தேனாக்கும்ம் ( இது நிரூபனின் மைண்ட் வாய்ஸ் )

    ReplyDelete
  52. இன்று திடீரென ஒரு உஷார் வந்திச்சா.. அதுதான் மளமளவென எழுதுறேன்ன். //

    அப்போ, இவ்வளவு நாளும் உஷார் :)
    இல்லாம இருந்தீங்களா?? டவுட்!

    சொல்லியிருந்தா நம்ம மணியம் கஃபேயில இருந்து, டீ அனுப்பி இருப்பேனே :) :)

    ReplyDelete
  53. வடிவேல் அங்கிள் ஆரம்பம் முதல் முடிவுவரை தூள் கிளப்புகிறார். //

    என்ன தூள்?? மிளகாய் தூளா? நான் படத்தில் காணவே இல்லையே:)))))?

    ReplyDelete
  54. நான் ஆரியா - நயந்தாரா நடித்து ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆர்யா - நயன் தாராவுடன் தானும் நடிச்சவாவாம்! என்ன கொடுமை இது??

    ReplyDelete
  55. எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? //

    ஓம் ஓம் திறமா இருக்கு! சொல்லி வேலை இல்லை! அடித்து, பின்னி, பிளந்து தூள் கிளப்பிடீங்க! :))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  56. “நம் சுயமதிப்பை இழந்துதான், ஒருவரின் அன்பையோ ஆதரவையோ பெறமுடியுமென்றால், அதைவிட நாம் அநாதையாக இருப்பதே மேல்” .. //

    ஹா ஹா தத்துவம் நல்லாத்தான் இருக்கு! ஆனா சிலர் சுய மதிப்பை பாதுகாக்கிறோம் என்று கட்டிய கணவனிடம் சுயமதிப்பை இழக்க கூடாது என்று, பிழை செய்தாலும், அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பார்கள்!

    அதேபோல, தன் மனைவியிடம் சுயமதிப்பை இழக்க கூடாது என்று, சில கணவர்கள் வெளிப்படையாக இருக்காமல், புரியாத புதிராக இருப்பார்கள்!

    என்ன கொடுமை இது??

    ReplyDelete
  57. அதாவது “மணியம் கஃபே ஓனர்”, மாத்தி ஓசிப்பவர்.. மணி, எப்பவோ ஒருநாள், சினிமா விமர்சனம் ஒன்று எழுதுங்கோ என அன்போடு கேட்டுக் கொண்டார் ///

    மிக்க நன்றி அதிரா. எனது வேண்டுகோளை ஏற்று விமர்சனம் எழுதியமைக்கு. உண்மையில் நான் கேட்டு, நீண்டநாளாகிவிட்டது என்பதால், நீங்கள் மறந்துபோய்விட்டீர்கள் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால், இவ்வளவு நாள் கழித்து, ஞாபகம் வைத்திருந்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள்!

    நான் உங்களிடம் கேட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. உங்கள் எழுத்து நடை எம் எல்லோருக்கும் பிடிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், ஒரு சாதாரண விஷயத்தையும், உங்கள் பாணியில் மிக சிறப்பாக சொல்வீர்கள்!

    முக்கியமாக சமையல் குறிப்பு எழுதும் போதுகூட, வழக்கமான பாணியை விட்டு, அதிலும் நகைச்சுவை கலந்து எழுதுவீர்கள்.

    அப்போதுதான் யோசித்தேன் நீங்கள் சினிமா விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்று??

    ஆனால் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே எழுதியிருக்கிறீர்கள். வகுப்பிலே டீச்சர் கதை சொல்ல, உட்கார்ந்து இருந்து கேட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

    பாடல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்! அத்துடன் சூர்யா - நயன் தாராவின் படம் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். காரணம் சினிமா விமர்சனத்துக்கு அது அவசியம் :)))))))))))))

    இந்த விமர்சனம் எழுதியமைக்கு மிக்க நன்றிகள்!!

    அடுத்ததாக ராஜா ராணிக்கு விமர்சனம் எழுதவும் :))))))) ( Advance Booking ) :))

    ReplyDelete
  58. // இது பொரிக்க முன் எடுத்த படம்ம்ம்ம்// ஹ்க்க்க்க்கும்! கட்லட் தாரதா இருந்தா நல்லாப் பொன்னிறமாப் பொரிச்சுத் தரவேணாமா..இப்படித்தான் பச்சையா:) தருவாகளா?

    நமக்கென்னப்பா...பிஸ்:) சாப்பிடறவக பாடு, பூஸ் பாடு...ஆனா சைவப் பட்சணம் தாரப்ப "ரெடி டு ஈட்"-ஆகத்தான் தரோணும்..விரும்பிய எண்ணெயில் பொரியுங்கோ, ஆவியில வேகவையுங்கோ என்டெல்லாம் சொல்லப்படாது, கேட்டோ மிஸ்.பிஷ்...சாரி, பூஸ்? ;))))

    ReplyDelete
  59. அன்புள்ள அதிரா,

    என் தொடரின் பகுதி-52க்கு வராமல் பகுதி-53 TO 59 க்கு வந்துள்ளீர்கள் என என் கணக்குப்பிள்ளைகிளி இன்றுவரை மிகவும் கடுப்பில் இருக்கிறார்.

    உடனே வாங்கோ அதிரா.

    இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2013/09/52.html

    நிறைய நினைவூட்டல்கள் இதுவரை கொடுத்தாச்சு. ;(

    ReplyDelete
  60. கன்னிப் பதிவினிலே அதிரா
    காட்டும் திறமையெல்லாம்
    வெல்லும் மனங்களையும்
    வெல்லமதை உண்டதுபோல்...!

    நன்றே சொல் மாந்தர்
    நாசுக்காய் புகழ்வதில்லை
    என்றேநான் இயம்புகிறேன்
    எனக்கும் ஸ்வீட் தாங்கோ...!

    அருமை அதிரா
    சுருக்கமாய் அழகாய் சொல்லி இருக்கீங்க
    வாழ்த்துக்கள்.

    மியாவிடம் சுகம் கேட்டதா சொல்லவும்

    ReplyDelete
  61. // MaaththiYosi Jeevan said...
    ஆதவன் பார்த்த அதிரா :) //

    என்னது ஆதவன் என்பவர் அதிராவை பார்த்திட்டாரோ??? ச்சே, என்ன இது கொடுமையா இருக்கு.

    அவரை பிடிச்சு ஒருக்கா வெருட்டோணும் - நான் ஆதவனைச் சொன்னேன் :) :) :)//

    அவ்வ்வ்வ்வ் “மீண்டும் மணியம் கஃபே ஓனரோ?” வாங்கோ வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது வேற ஆதவனாக்கும்:).. பதிவைப் படிக்காமல்.. ச்சும்மா..ச்சும்மா...:))

    நானும் 4 தடவை படிச்சுப்பார்த்திட்டன். எந்த கன்னியையும் பற்றி எழுதல. எவ்வ்ளோ கவலையா இருந்திச்சு தெரியுமா?? :))))))))))

    கன்னிகளைப் பற்றி எழுதப்போகிறீர்களாக்கும் என்று ஓடோடி வந்தேனாக்கும்ம் ( இது நிரூபனின் மைண்ட் வாய்ஸ் )
    ஹா..ஹா..ஹா.. நாங்க இதில வலு உஷாரக்கும்:) கடகடவென எல்லோரையும் சுடச்சுடக்:) கைப்பிடித்துக் கொடுத்து விடுகிறோமே:)).. அதனால .. வாணாம் இதுக்கு மேல மீ ஒண்ணும் சொல்ல மாட்டேன் சாமீஈஈஈஈ:)

    ReplyDelete
  62. MaaththiYosi Jeevan said...
    நான் ஆரியா - நயந்தாரா நடித்து ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆர்யா - நயன் தாராவுடன் தானும் நடிச்சவாவாம்! என்ன கொடுமை இது??//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவிங்க நடிச்சா.. ஓடிப்போய் ரிக்கெட் எடுத்துப் பார்க்கிறீங்க:)).. நாங்க, ஒரு சுவீட் 16:), நல்லவர், வல்லவர்:) நாலும் தெரிஞ்சவங்க(என்னைச் சொன்னேன்ன்:)) நடிச்சால்ல் கொடுமையோ ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. மீண்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  63. MaaththiYosi Jeevan said...
    எப்பூடி என் விமர்சனம்? சோட் அன்ட் சுவீட்டாக இருக்கோ? //

    ஓம் ஓம் திறமா இருக்கு! சொல்லி வேலை இல்லை! அடித்து, பின்னி, பிளந்து தூள் கிளப்பிடீங்க!///

    இது “உயர்வு நவிற்சி” இல்லையே?:) ஹா..ஹா..ஹா..:)

    ReplyDelete
  64. MaaththiYosi Jeevan said...
    அதேபோல, தன் மனைவியிடம் சுயமதிப்பை இழக்க கூடாது என்று, சில கணவர்கள் வெளிப்படையாக இருக்காமல், புரியாத புதிராக இருப்பார்கள்!

    என்ன கொடுமை இது??

    ஹா..ஹா..ஹா.. இது மிகவும் கொடுமைதான்ன்:) ஹா..ஹா..ஹா.. உங்கள் பின்னூட்டத்தில் இது மட்டும்தான் என் கண்ணுக்கு தெரியுதாக்கும்:)) வேறெதுவும் தெரியல்ல:))

    ReplyDelete
  65. MaaththiYosi Jeevan said..

    பாடல்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்! அத்துடன் சூர்யா - நயன் தாராவின் படம் கட்டாயம் போட்டிருக்க வேண்டும். காரணம் சினிமா விமர்சனத்துக்கு அது அவசியம் :)))))))))))))
    ஓ.. மிக்க நன்றி மணி.., எனக்கது தெரியாமல் போச்சே... அதனால்தான்ன்... தமிழ்மணத்தில் இணைக்கவில்லை இம்முறை.. சரிபிழை தெரியாமல்.. “நானும் ரவுடிதான்”:) என வெளிக்கிடப்பூடா என நினைச்சேன்ன்:))


    இந்த விமர்சனம் எழுதியமைக்கு மிக்க நன்றிகள்!!

    அடுத்ததாக ராஜா ராணிக்கு விமர்சனம் எழுதவும் :))))))) ( Advance Booking ) :))
    அனைத்துக்கும் மியாவும் மியாவும் நன்றி மணி.. என்னாது?:) ராஜா ராணிக்கு விமர்சனமோ? எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:)

    ReplyDelete
  66. Mahi said...

    நமக்கென்னப்பா...பிஸ்:) சாப்பிடறவக பாடு, பூஸ் பாடு...ஆனா சைவப் பட்சணம் தாரப்ப "ரெடி டு ஈட்"-ஆகத்தான் தரோணும்..விரும்பிய எண்ணெயில் பொரியுங்கோ, ஆவியில வேகவையுங்கோ என்டெல்லாம் சொல்லப்படாது, கேட்டோ மிஸ்.பிஷ்...சாரி, பூஸ்? ;))))

    haa..haa..haa.. இதோ விரைவில் வருது.. உங்களுக்காகவே ஒரு பதிவு:) அடுத்தது...:)

    ReplyDelete
  67. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அன்புள்ள அதிரா,

    என் தொடரின் பகுதி-52க்கு வராமல் பகுதி-53 TO 59 க்கு வந்துள்ளீர்கள் என என் கணக்குப்பிள்ளைகிளி இன்றுவரை மிகவும் கடுப்பில் இருக்கிறார்.

    உடனே வாங்கோ அதிரா.

    இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2013/09/52.html
    ஹா...ஹா... நான் நினைச்சேன்ன் எல்லாத்துக்கும் வந்துட்டனாக்கும் என:).. பூஸ் ஒன்று புறப்படுதே...:)பின்னூட்டம் போடத்தான்ன்:).

    நிறைய நினைவூட்டல்கள் இதுவரை கொடுத்தாச்சு. ;(

    நோ..ஓ...நோஓஓஓஒ ஓய்ந்திடாதீங்க:) இப்படியே தொடரோணும் உங்கள் சேவை:).. மிக்க நன்றி கோபு அண்ணன்...

    ReplyDelete
  68. சீராளன் said...
    கன்னிப் பதிவினிலே அதிரா
    காட்டும் திறமையெல்லாம்
    வெல்லும் மனங்களையும்
    வெல்லமதை உண்டதுபோல்...!

    நன்றே சொல் மாந்தர்
    நாசுக்காய் புகழ்வதில்லை
    என்றேநான் இயம்புகிறேன்
    எனக்கும் ஸ்வீட் தாங்கோ...!

    வாங்கோ சீராளன் வாங்கோ.. ரெயின் புறப்பட்டுவிட்டது, ஆனாலும் “கார்ட்” பெட்டியில் வந்து ஏறிவிட்டீங்க:).. அதில் ஏற்பவர்களுக்காகவும் சுவீட்ட் வச்சிருக்கு எடுத்துக்கோங்க..:)

    அருமை அதிரா
    சுருக்கமாய் அழகாய் சொல்லி இருக்கீங்க
    வாழ்த்துக்கள்.

    மியாவிடம் சுகம் கேட்டதா சொல்லவும்

    ஹா..ஹா..ஹா.. மியாவும் நன்றி.. கவிதையில் பின்னூட்டமிட்டமைக்கும்... வரவுக்கும்..

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.