நல்வரவு_()_


Friday 19 February 2016

எக்லெஸ் டேட்ஸ் கேக்

Eggless Dates Cake (-_-)



சரி சரி தலைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்... வலையுலகில் எல்லோரும் நலம்தானே?:) அதிராவை நினைவிருக்கோ?:) இருக்காதே.. அதனால்தான் இனிப்பா கொண்டு வந்திருக்கிறேன், கேக் சாப்பிட்டதும் நினைவு வந்திடும் உங்களுக்கு:)

இது மிக மிக சுவையான, சுசியான:) இலகுவில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி... நிட்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் செய்து பாருங்கோ.

வதனப்புத்தகத்தில் என்னிடம் ரெசிப்பி சொல்லெனக் கேட்டு, ஏசி, திட்டி எல்லோரும் களைச்சுப்போய்:) இந்தக் கேக் புளிக்கும் எனும் நிலைமைக்கு வந்திட்டினம்:) அதனாலதான் அவசரமா இப்பதிவு:)..

தேவையானவை:
பேரீச்சப் பழம் விதை நீக்கியது - 250 கிராம்ஸ்
ரெட்லி ரீ பாக்ஸ் - 3(Tetley tea bags)
கொண்டென்ஸ் மில்க் - 1
றவை/செமலினா - 75கிராம்ஸ்
சீனி/சுகர் - 100-150 கிராம்ஸ்
மாஜரின் -250 கிராம்ஸ்
பிளேன் ஃபிளவர் - 200 கிராம்ஸ்
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

செய்முறை:
Tea bags க்கு 1.5 டம்ளர் அளவு கொதிநீர் விட்டு, சாயம் ஊறியதும், அச்சாயத்தில் இந்தப் பேரீச்சம் பழங்களை கொட்டி ஊறவிடவும்... அதாவது சாயத்தின் அளவு, இப்பேரீச்சம் பழங்கள் மூழ்கும் அளவாக இருத்தல் வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவேண்டும்.


மாஜறினை கொஞ்சம் உருக்கி அதனுள் சீனி சேர்த்து அடிக்கவும், பெரிதாக கஸ்டப்பட வேண்டாம், மெதுவாக கையால், மரக் கறண்டியால் கலக்கினாலே போதும் சீனி கரைந்தால் போதும்.[ என்னிடம் 2 வகை எலக்றிக் பீற்றர் இருந்தும் அதைப் பாவிப்பதில்லை நான்... ஆராம் கழுவி வைக்கிறது பின்பு:)].

அதனுள் கொண்டென்ஸ்ட் மில்க்கை விட்டு கலக்கவும்.

இந்த ஊறிய பேரீச்சம் பழங்களை மெதுவாக பிசைந்து எடுக்கவும், அல்லது பழம் வாயில் கடி படுவதை விரும்பாதோர் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அடித்து எடுத்து, அதனையும் இதனுள் போட்டு கலக்கவும். நான் கையால் பிசைந்தே சேர்ப்பேன், அதுதான் சுவை அதிகம்.

மாவை எடுத்து, அதனுள் பேக்கிங் பவுடர் + சோடா சேர்த்து, 4,5 தடவை அரிதட்டால் அரித்து எடுத்து, இதனுள் போட்டு கலக்கி, பேக்கிங் ட்ரேயில் போட்டு பேக் பண்ணவும்.

என்னிடம் இருப்பது Gas oven என்பதால் நான் வைக்கும் அளவு, 3.5 இல் வைத்து கிட்டத்தட்ட 50 - 60 நிமிடங்கள் எடுக்கும் வெந்து வர.

இன்னுமொன்று லோ கீற்றில் வைத்து பேக் பண்ணுவதே நல்லது, ஏனெனில் கேக்கின் மேல் பகுதி விரைவில் வெந்து போகிறது, இதனால் கவனிக்காமல் விடும்போது, மேல் பகுதி கொஞ்சம் அதிகமாக வெந்து விடும், இடைக்கிடை திறந்து பார்த்து, எப்பூடியாவது பத்திரமா இறக்கிடுங்கோ டொயிங்.. டொயிங்,,,...:).

இதற்கு, கஸ்ராட் புடிங் செய்து, கேக் பீஸ் மேல் சுடச்சுட ஊத்தி, நட்ஸ் பொரிச்சு சேர்த்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்...


ஊசிக்குறிப்பு:
அஞ்சுவின் மிரட்டலுக்குப் பயந்தே:) புளொக்கை தூசு தட்டியிருக்கிறேன்:).



32 comments :

  1. ’எக்லெஸ் டேட்ஸ் கேக்’ என்ற பெயரில் வெகு நாட்களுக்குப்பின் எதையோ அவசர அடியாகப் பகிர்ந்து கொண்டுள்ள அதிராவைக் ’கேக்’க ஆளில்லை போலிருக்கிறது.

    ReplyDelete
  2. //ஊசிக்குறிப்பு:
    அஞ்சுவின் மிரட்டலுக்குப் பயந்தே:) புளொக்கை தூசு தட்டியிருக்கிறேன்:).//

    அச்சச்சோ, எனக்கு ஒரே டஸ்ட் அலெர்ஜியாக்கும். அதனால் இத்துடன் எஸ்கேப்.

    தூசி லாரிக்கணக்கா இருக்கும் போலிருக்கே !

    ReplyDelete
  3. ஆஹா !வருக வருக பூனையே :)

    ReplyDelete
  4. //அஞ்சுவின் மிரட்டலுக்குப் பயந்தே:) புளொக்கை தூசு தட்டியிருக்கிறேன்:).//

    அந்த பயம் இருக்கட்டும் :)✍(◔◡◔)

    ReplyDelete
  5. (ɔ◔‿◔)ɔ ♥வேணாம்னு நினைச்சாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பற்றி சொல்லாட்டி எனக்கு தூக்கம் வராது :)

    மரக் //கறண்டி//

    ReplyDelete
  6. (>‿◠)✌ இன்னும் நிறைய மிஸ்டேக்ஸ் இருந்தாலும் :) ரொம்ப நாள் கழிச்சு தூசி தட்டினதுக்காக மன்னிச்சு விடறேன் மியாவை

    ReplyDelete
  7. ஆமாம் தத்துவத்தில் உங்க ட்ரேட் மார்க் முத்திரை எங்கே ??
    //புலாலியூர் பூசானந்தா //

    ReplyDelete
  8. நீண்ட நாட்கள் பிறகு வலையுலக பக்கம் வந்திருக்கும் அக்காவை வருக வருக என்று,

    ஆமாம் செய்முறை மட்டும் எழுதிட்டு எஸ்கேப்பானா எப்படி,
    தம்பிக்கு ஒரு பார்சல் கேக் அனுப்பிவெச்சாதான்
    வரவேர்ப்பேன்:)))

    ReplyDelete
  9. அம்மாடி... இந்த அதிராக்கா பேஸ்புக்கில் லிங்க் போடவும் தூக்கத்தில் முதல் லைக் போட்டு தூங்கியாச்சு... இப்பதான் ஞாபகம் வந்து பார்க்கிறேன்... அசத்தல்.. சூப்பர்... இப்படியே அங்கன போடுற போஸ்ட்ல ஒன்னு இரண்டு இங்கிட்டும் போடணும்னு மிரட்டி கேட்டுக்கிறேன்...

    ReplyDelete
  10. ரொம்ப நாட்கள் கழித்து பூஸாரின் வலைக்குள் சூப்பர் ஹெல்தி கேக்

    அப்படி எங்க சீஸ் கேக்கையும் வந்து பார்வையிடலாமஏ நாளை போஸ்ட் பண்றேன்

    ReplyDelete
  11. ஆ..... என்னை ஒருக்கா கிள்ளிப்பார்க்கிறேன். நான் கனவுகாணேல்லைதானே. அப்பாடா இது கனவில்லை.நிஜம்தான். ம்... என்ன செய்வது சிலபேர் வீட்டை கொள்ளையடித்தால்தான் வீட்டை திறக்கினம். பாராட்டுக்கள்,கைதட்டல் எல்லாமே அஞ்சுஊஊஊ...க்கு!!
    ஒருமாதிரி தூசு தட்டியாச்சு.ஆனா இன்னும் கொஞ்சம் இருக்கு.அதையும் கெதியா தட்டுங்கோ பூஸ்.
    கேக் ரெசிப்பியோட ப்ளாக் ஓபன் செய்தமைக்கு நன்றி அதிராவ்.நல்வரவாகட்டும். செய்துபார்த்து சொல்றன்.

    ReplyDelete
  12. எனக்கும் டேட் கேக் விருப்பம். எக்லெஸ் சாப்பிட்டுப் பார்க்கேல்ல. ஒரு துண்டு பாசல் ப்ளீஸ். :-)

    ReplyDelete
  13. மிக அருமை அதிரா! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. Oye ! எங்களை எல்லாம் ஞாபகம் இருக்கா?
    எப்படி இருக்கீங்க? :)

    ReplyDelete
  15. எப்படியோ வலையை தூசு தட்டி ரஜனிமுருகன் பாட்டோடு வந்தாச்சு வாங்க வாங்க !

    ReplyDelete
  16. கேக் செய்து பார்க்க ஆசை முயற்ச்சிப்போம்[[[

    ReplyDelete
  17. இது என்ன பூசார் வலையை பூட்டி வைத்து[[[மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

    ReplyDelete
  18. இம்பூட்டு நாளா ப்ளொக்கை பூட்டி போட்டுபிட்டி மூஞ்சி பொஸ்தவத்துல பிஸி ஆகிட்டிங்க போல......நல்லா தூசி தட்டிபோட்டு சுறு சுறுனு வரிசயா பதிவு போட்டுபோடோணும் அதுக்கு முன்ன "கேக்" ஒரு பார்சலு..........

    ReplyDelete
  19. கேக் டேஸ்ட்டா இருக்கே
    உங்கள் தளத்தில்
    நான் பார்த்த முதல் பதிவே இனிப்பு ....
    தொடர்ந்து
    இனிப்பான பதிவை வழங்குங்கள் தோழி...

    ReplyDelete
  20. எக்லெஸ் கேக் இடுகையை மீண்டும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு. டேட்ஸ், இல்லைனா உலர் திராட்சை/கட் பண்ணிய செர்ரிப்பழங்களும் இதுக்கு நன்றாக இருக்கும்.

    ஆனால் பாருங்க, நான் இதெல்லாம் சாப்பிடுவதை விட்டு பல வருடங்களாச்சு. என் பெண் சில பல கேக்குகள் செய்தால், அவள் முக தாட்சண்யத்துக்காக ஒரு ஸ்பூன் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். நான் டிபிகல் தமிழ் உணவு மட்டும்தான் விரும்பிச் சாப்பிடுவேன்.

    நான் பார்த்த இடுகையிலேயே (இந்தத் தளத்தில்) இதில்தான் 20க்கும் குறைவான பின்னூட்டங்களைப் பார்க்கிறேன். முன்னெல்லாம் 'பின்னூட்டம்' போடறவங்களுக்கு பதில் போடுவதில்லை போலிருக்கு. (பதில் போடுவதுதான் நல்ல முறை என்று எனக்குத் தோன்றுகிறது. அப்போதான் interaction இருக்கும்).

    இந்த கிறிஸ்துமஸ், புது வருடத்துக்கு இதேபோல் ஒரு கேக் செய்து கொண்டாடுங்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாங்கோ நெல்லைத்தமிழன்...

    /// என் பெண் சில பல கேக்குகள் செய்தால், அவள் முக தாட்சண்யத்துக்காக ஒரு ஸ்பூன் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிடுவேன்.///
    இதைக் கொப்பி பண்ணி மகளுக்கு அனுப்பி விடுங்கோ.

    //நான் பார்த்த இடுகையிலேயே (இந்தத் தளத்தில்) இதில்தான் 20க்கும் குறைவான பின்னூட்டங்களைப் பார்க்கிறேன்.///
    ஹா ஹா ஹா உண்மை அதுக்குக் காரணம், நான் 2014 இலேயே புளொக்கை விட்டு வெளியே போய் விட்டேன்.. அதனால இங்கு முழுவதும் டச்சூஊஉ விட்டுப் போய் விட்டது, பேஸ் புக்கிலேயெ இருந்தேன், அப்போ பேஸ் புக்கில் கேக் படம் போட்டதும், ரெசிப்பி கேட்டிச்சினம், ரெசிப்பியை இங்கு போட்டால்தான் எப்பவும் தேவைக்கு எடுக்கலாம் என நினைச்சு, இங்கு ஒரு போஸ்ட் போட்டு விட்டு லிங் கொடுத்தேன் பேஸ் புக்கில், அதனால எல்லோரும் அங்கயே பேசிக்கொண்டார்கள்...

    ///முன்னெல்லாம் 'பின்னூட்டம்' போடறவங்களுக்கு பதில் போடுவதில்லை போலிருக்கு. (பதில் போடுவதுதான் நல்ல முறை என்று எனக்குத் தோன்றுகிறது. அப்போதான் interaction இருக்கும்).///

    சட்டை கிழிஞ்சுதுன்னா... தச்சு முடிச்சிடலாம்ம்ம்ம்:).. நெஞ்சு கிழிஞ்சிடுச்சேஏஏஏஏஏ:) எப்பூடி தைச்சிடுவேன்ன்ன்ன்ன்:))... ஹையோ இந்த வலையுலகிலேயே நான் ஆரம்பிச்ச காலம் தொடங்கி- இன்றுவரை யாரையும் வரவேற்காமல் விட்டதுமில்லை.. பின்னூட்டத்துக்குப் பதில் போடாமல் அடுத்த போஸ்ட் போட்டதுமில்லை.... இப்போதான் பலரும் வரவேற்கவும் பதில் குடுக்கவும் செய்கிறார்கள்.. நீங்கள் சாம்பிளுக்கு சிலரின் பழைய போஸ்ட் பார்த்தால் புரியும்... ஆனா என் குறிக்கோளே போஸ்ட் போடுவதைத்தாண்டி, வருவோரோடு சந்தோசமாகப் பேசிக் கதைப்பதுதான்... இதே கொள்கையையே பேஸ் புக்கிலும் கடைப்பிடிச்சேன்.. அதனால இரு தோணியில் கால் வச்சால் எதையும் ஒழுங்காக நடத்த முடியாது என நினைச்சு, புளொக்கை நிறுத்தி இருந்தேன். என் கொள்கை.. “செய் அல்லது செத்துப்போ”:)

    ஆனா அஞ்சுதான் , தான் கதை எழுதுகிறேன் எங்கள்புளொக்கில்.. அங்கு வந்து கட்டாயம் தனக்கு பின்னூட்டம் போடோணும் என விடாப்பிடியாக இழுத்து வந்தா கர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. அதனால 2016 ம் ஆண்டு மார்வழி:)) ஹா ஹா மாதம் 20 ஆம் திகதி மீண்டும் வலையுலகில் கால் வச்சேன்ன்ன்ன்ன்.... அதிலிருந்து என் புளொக்கையும் தூசு தட்டினேன்.

    இன்னொன்று எனக்கு வரும் கொமெண்ட்ஸ்க்குப் பதில் போடாமல் புதுப் போஸ்ட் போடமாட்டேன், அப்படி பதில் போடாமல் இருக்குதாயின் அது, புதுப்போஸ்ட் வந்தபின்பு ஆராவது பழசுக்கு கொமெண்ட் போட்டால் பின்பு பதில் போடலாமே என விடுபட்டதாயிருக்கும்.


    ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடாஆஆஆ... அந்த வகையில் இது, நான் இங்கில்லாமையாலும், இனி புளொக் எழுதுவதில்லை எனக் கங்கணம் கட்டி இருந்தமையாலும்.. இப்போட்டில் யாருக்கும் பதில் போடவில்லை யான்:))...

    நன்றி நெல்லைத்தமிழன்:).. என்னை இன்னொரு போஸ்ட் எழுத வச்சிட்டீங்க கொமெண்ட்டாக:))

    மக்கள்ஸ்ஸ்ஸ் என்னை மன்னிச்ச்ச்ச்ச்சுக்க்க்க்கோங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)).

    ReplyDelete
    Replies
    1. பதிலைப் படித்தேன். நீங்கள் 'யான்' என்று பல இடங்களில் எழுதுகிறீர்கள். இது உங்கள் மக்களிடத்தில் புழங்கும் சொல்லா அல்லது நீங்கள் மட்டும் எழுதுவதா? 'யான்' என்பது தூய தமிழ். இலக்கியங்களில்தான் வரும்.

      Delete
    2. ஹா ஹா ஹா இல்லை நெல்லைத்தமிழன் இது நம் பாஷை இல்லை:).. வலம்புரி ஜான்:)) போல நானும் ச்ச்சும்மா ஜான் போடுகிறேன்ன்:)).. எனக்கு எழுதும்போது ஏதாவது உதிக்கும் புதிசுபுதுசா:) அதை கூச்சப்படாமலும், பயப்படாமலும் எழுதிவிடுவேன்:)).. அடிவிழுந்தாலும் ஜமாளிக்கலாம்:) எனும் நம்பிக்கையில்:))

      Delete
  22. நானும் கவனிச்சேன். ஆனாலும் என்னோட பதிவுக்கெல்லாம் அதிகமா இருபது கருத்து வந்தாலே பெரிசு. அதனால் நான் கவலைப்படுவதில்லை. எதுவுமே வராமலும் இருந்திருக்கு. இருந்தாலும் கடமையைக் காஃபி ஆற்றுகிறாப்போல் ஆற்றி விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதாக்கா.. பாருங்கோ கிட்டத்தட்ட 2 வருடத்தால இப்போஸ்ட் புத்துயிர் பெறுகிறது:)...

      நல்லவேளை நெல்லைத்தமிழன் கேட்டமையால் விளக்கம் கொடுத்தேன்.

      நீங்க கடமையைக் காஃபி, ரீ ஆத்துவதனாலதான் இப்போ உங்கள் பின்னூட்ட எண்ணிக்கை வானைத்தொடுது:)).. நன்றி கீதாக்கா.

      Delete
  23. இந்த முட்டையில்லாக் கேக் பேரீச்சை இல்லாமல் செய்திருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்க நிட்சயம் எலக்‌ஷனில் நிக்க வேண்டியவர் கீதாக்கா:)).. ஸ்ரீரங்கம் தொகுதி உங்களுக்கே:))

      Delete
  24. //ஆனா என் குறிக்கோளே போஸ்ட் போடுவதைத்தாண்டி, வருவோரோடு சந்தோசமாகப் பேசிக் கதைப்பதுதான்... //


    இதை இந்த வாரம் சீராம எழுதியிருக்கும் மாலா கூட என்னிடம் தெரிவித்தார். உங்கள் தொக்கு பதிவு படித்து விட்டு 'எவ்வளவு சௌஜன்யமான உரையாடல்கள்' என்று நெகிழ்ந்து போனார்.

    ஆரம்ப காலங்களில் நாங்கள் நிறையவே பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் பின்னர் குறைந்து விட்டிருந்தது. உங்கள் வருகைக்குப்பின் அது மீண்டும் மலர்ந்து விட்டது.

    அதிராவின் மறுபெயர் உற்சாகம். நீங்களும் அஞ்சுவும் நல்ல தோழிகள்,

    ReplyDelete
  25. வாங்கோ ஸ்ரீராம்..

    ///இதை இந்த வாரம் சீராம எழுதியிருக்கும் மாலா கூட என்னிடம் தெரிவித்தார். உங்கள் தொக்கு பதிவு படித்து விட்டு 'எவ்வளவு சௌஜன்யமான உரையாடல்கள்' என்று நெகிழ்ந்து போனார்.///

    ஓ மிக்க சந்தோசம், ஆனா இத்தனை சமையல் குறிப்புக்களில் நாம் அதிகம் உரையாடாமல் விட்டது என் தொக்கு போஸ்ட்தான்.. அதுக்கே இப்படி எனில் நம் ஏனைய பதிவுகள் படிச்சிருந்தால் மாலா மயங்கியிருப்பா:) ஹா ஹா ஹா... இப்படியான விசயங்களை நீங்க வெளியே சொல்லும்போதுதானே ஸ்ரீராம் நாமும் அறிகிறோம் அதனால சந்தோசமும் உற்சாகமும் பெருகுது:))..

    /// உங்கள் வருகைக்குப்பின் அது மீண்டும் மலர்ந்து விட்டது.

    அதிராவின் மறுபெயர் உற்சாகம்//

    அச்சச்சோஓஓஓஓஒ மெய்சிலிர்த்திட்டேன்ன்ன்ன் மிக்க நன்றி மிக்க நன்றி:).. இப்போ எல்லா இடத்தாலயும் புகை வரப்போகுதூஊஊஊஊஉ:))..

    ////நீங்களும் அஞ்சுவும் நல்ல தோழிகள்,///

    ஹா ஹா ஹா மிக்க நன்றி ஆனா அடிக்கடி டிவோஸ் எடுக்கலாமா எனவும் யோசிப்போம்:)) ஹா ஹா ஹா:)).

    ReplyDelete
    Replies
    1. ஹலோ !!மிஸ்டர் மியாவ் .இந்த கேக் செம ருசி ஆனா அந்த ரவையும் மைதாவும் என்னை பாடாய்படுத்திடுச்சி ..ஆனாலும் நியூ இயருக்கு திருப்பி செய்வேன் :)

      Delete


    2. //ஊசிக்குறிப்பு:
      அஞ்சுவின் மிரட்டலுக்குப் பயந்தே:) புளொக்கை தூசு தட்டியிருக்கிறேன்:).//

      அது :)

      Delete
    3. @ஸ்ரீராம்

      அது பொதுவாவே எனக்கு அமையும் நட்புக்கள் என் குணத்தில் இருப்பதால் அப்படியே அழகா வாழ்க்கை போகுது :)

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.