ஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)

Tuesday, 14 February 2017

மூட் அவுட் ஆ??? அப்போ கொஞ்சம் இக்கரைச் சூடு:)

ஹா ஹா ஹா அதென்ன அது மூட் அவுட் என்றால்??.. இப்போ பலபேர் அடிக்கடி சொல்றார்கள், ஒரு சின்னப் பிரச்சனை மூடவுட் ஆகிட்டேன் அதனால வெளியே வரவில்லை, கொமெண்ட்ஸ் ஏதும் போடவில்லை:), பேசாமல் இருந்திட்டேன்..னசே சரியில்லை அதனால நைட் தூக்கமே வரவில்லை, ஒழுங்கா வேலையைக் கவனிக்க முடியவில்லை எனப் பல குட்டிக் குட்டிக் குற்றச் சாட்டுக்கள்...

ண்மைதான் இக்காலத்தில் இது சகஜம்தான். நாம் என்னதான் கலகலப்பான பேர்வழி ஆனாலும், ஏதோ ஒரு விசயத்தால் எப்பவாவது என்றாலும் ஓவ் ஆகிப்போயிடுவோம், ஆனா இதில் முக்கிய விசயம், ஓவ் ஆனாலும் சிலர் டக்குப் பக்கென நோர்மல் ஆகிடுவினம், சிலபேரை நோர்மலுக்குக் கொண்டுவர நாட்கணக்காகும்.

ப்படி எமக்கு மனக் கஸ்டம் வரும்போது என்னவெல்லாம் பண்ணி நம்மை நோர்மல் ஆக்கலாம் என சிலர் சொல்லியிருப்பதைக் கவனிச்சேன், அப்பப்ப பூஸ் ரேடியோவிலும் ஏதும் குட்டிக் குட்டிப் பிரசங்கங்கள் பண்ணுவார்கள்.

தில் அவர்கள் சொல்வது என்னவெனில், முக்கியமா நாம் விரும்பும் மியூசிக் கேட்க சொல்கிறார்கள், வீட்டில் நல்ல நல்ல குத்துப் பாட்டுக்கள் போட்டு விட்டு நடனமாடச் சொல்லுகிறார்கள், கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரச் சொல்கிறார்கள்.

மூச்சுப்பயிற்சி செய்தாலும் நல்லது, மொத்தத்தில் நம் ஹார்ட்டின் வேகத்தைக் கூட்டி, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்போது, நம் மனமும் சந்தோசமடையும் என்பதுதான் அடிப்படை.

தில் இன்னொரு முக்கிய விடயம், நல்ல நகைச்சுவைகள் பார்க்கோணும்/கேட்கோணும் அல்லது நல்ல நகைச்சுவையாகப் பேசும் நண்பர்கள் இருப்பின் அவர்களோடு உரையாடுங்கோ மனம் இலகுவாகும் என்கிறார்கள்.

ங்கு எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது. அதாவது சிலர் நகைச்சுவையாகப் பேசுகிறேன் எனச் சொல்லி, மனக் கஸ்டத்தில் இருப்போரை இன்னும் கஸ்டப்படுத்தியும் விடுவார்கள். நகைச்சுவையாகப் பேசிக் கலகலப்பாக இருப்பதுதான் நல்லது ஆனா அதுக்கும் இடம் பொருள் இருக்குதுதானே, எந்தெந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென தெரிஞ்சிருக்கோணும்.

நான் 6ம் வகுப்பில் இருந்தபோது எனக்கு நல்ல ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட் இருந்தா. அவ என்னோடு நன்கு பேசுவா, அவவுக்கு குடும்பத்தில் பிரச்சனை இருந்தது, என்னோடு கவலைப்பட்டு செயா பண்ணுவா அனைத்தையும்.., நானும் நன்கு ஆறுதல் கொடுப்பேன் (பார்த்தீங்களோ..அப்பவே நான் ரொம்ப நல்ல பொண்ணு, நம்மளைப் பற்றி நாமேதானே புகழோணும்:) அடுத்தவங்களோ புகழுவினம்?:))

வவும் கலகலப்பாக பேசுவா. அப்போ ஒருநாள் ஸ்கூலில் இருந்த ரோஜாக் கன்றிலிருந்து ஒரு முள்ளுக் குத்தி என் விரலால் கொஞ்சம் ரத்தம் வந்துது, அப்போ நான் குட்டிப்பிள்ளைதானே:),  ரத்தம் பார்த்ததும் கண் எல்லாம் கலங்கியதுபோல ஒரு மாதிரி ஆகிட்டேன், உடனே இந்த நண்பியிடம் ஓடிச்சென்று காட்டி சொன்னேன், இங்கே பார் ரோஜா முள்ளுக் குத்திப்போட்டுது என..

தை அப்படியே ஒரு ஸ்டைலாக திரும்பி பார்த்து அவ சொன்னா.. “ohhhh sooo beautiful” என... எனக்கு அந்நேரம் ஏந்தான் இவவுக்கு காட்டினமோ என மனம் இன்னும் கனத்தே விட்டது. இன்றுவரை அச்சம்பவம் இன்னும் நினைவில் உள்ளது எனில், அப்போ அச்சம்பவம் என்னை எந்தளவு தூரம் பாதிச்சிருக்கிறது என்பது தெரிகிறதெல்லோ?..

ன்னுமொன்று இந்த அடிக்கடி மூட் அவுட் ஆகுவோரால் அவரைச் சுற்றி இருப்போருக்குத்தான் கஸ்டம் அதிகம். எங்கள் வீட்டில் கடவுள் புண்ணியத்தில் எல்லோரும் எப்பவும் கலகலப்பாகவே இருப்பது வழக்கம். சமீபத்தில் மகனின் ஃபிரெண்ட் வந்திருந்தார் இவரோடு விளையாட, அப்போ என்னாச்சோ தெரியவில்லை அவர் திடீரென ஓவ் ஆகிட்டார்ர்.. பேசாமல் தன் ஃபோனையே பார்த்தபடி இருந்தார், இதைப் பார்த்ததும் மகன் ஓடிவந்து அம்மா கீ இஸ் நொட் ரோக்கிங்.. என சொல்லிக்கொண்டிருந்தார், திரும்ப திரும்ப அவரைப் பேச வைக்க மகன் ட்ரை பண்ணுறார், இதைப் பார்த்த எனக்கும் கஸ்டமாகிட்டுது, ஏன் உடம்புக்கு ஏதும் செய்கிறதா என்றெல்லாம் கேட்டேன், நோ.. ஐ ஆம் ரயேட் என மட்டும் சொன்னார்...

விட்டு விட்டேன், கொஞ்ச நேரமானபின் திரும்ப நோர்மலுக்கு வந்திட்டார், ஆனா அதுவரை எங்கள் எல்லோருக்குமே கொஞ்சம் கஸ்டமாகியிருந்தது.

நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை, குழந்தைகள் மூட் ஓவ் ஆகிறார்கள் எனில் பெரும்பாலும் அது பெற்றோர்களின் பிரச்சனையே, பெற்றோர் எப்பவும் கலகலப்பாக சிரிச்சுப் பேசிக்கொண்டிருக்கும் குடும்பங்களில், பிள்ளைகளும் கலகலப்பாகவே இருக்கிறார்கள். எனவே பிள்ளைகளைக் குறைகூற முடியாது, பெற்றோராகிய நாம் தான்  கலகலப்பாக இருக்கோணும்.

தனால் அடுத்தவர்களுக்காக எனினும் நாம் மூட் அவுட் ஆகாமல் அல்லது முடிந்தவரை நம்மை கலகலப்பாக வைத்திருக்க முயற்சி செய்வது நல்லதே.

எங்கே எல்லோரும் ஒருக்கால் சிரிச்சிட்டுப் போங்கோ பார்ப்பம்:))

ஊசி இணைப்பு:-
நான் எழுதும் என் Diary:) இலிருந்து[ மீ ரொம்ப உசார் ஆக்கும்:) டயறிக்கு:) சொன்னேன்:)]

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

ஊசிக் குறிப்பு:வாணாம் வாணாம் இண்டைக்கும் ஊசிக் குறிப்பேதும் வாணாம்ம்ம்:)
எனச் சொல்பவர் உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்..

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

=================================================================================

87 comments :

 1. ஓம் நீங்க சொன்னமாதிரி சிரிச்சுட்டன் .முழுக்க முழுக்க உண்மை பாஸ் நீங்க சொல்லி இருக்கிறது . கண்டிப்பா கலகலப்பானவர்களோட
  சேர்ந்தாலே கல கலப்பாகி விடுவம்.முந்தீல இருந்து மீ வருஷக்கணக்கா உங்களுக்கு பின்னால நாய்க்குட்டி மாதிரி வாறதுக்கு இதுவும் பெரிய காரணம்.

  எங்கட வீட்ல ஒருக்கா இப்பிடித்தான் ஒரு 50 பவுணுக்கு மேல நகை களவு போட்டுது . எங்கள் 4 பேரோடது.எனக்கு அடுத்த கிழமை கலியாணம் வேற .
  சுவிஸ் போய் தேவையான நகை வாங்கி வந்து வெளியதான் வச்சிருந்தனான்.
  நகை போடுறேல்ல அதால கலியாணத்துக்கு எதுவும் இல்லை வாங்கினான்.

  வேலையால வீட்ட வந்தால் வீடு முழுக்க பொலிஸ்

  பிறவு எல்லா அண்ணா ,அக்காஸ் குட்டிகள் எல்லாரும் வந்திச்சினம் நாங்கள் எல்லாரும் சேர்ந்த உடன சிரிச்சு பேசி கலக்லப்பாகீட்டோம்.
  போலீஸ் மாமு சொன்னார் நீங்க சரியான பணக்காரர் போல எண்டு .நாங்க சொன்னோம் இல்ல நாங்கள் அழுகுனிகள் இல்ல எண்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ் வாங்கோ சுரேக்கா வாங்கோ... இம்முறை வடை உங்களுக்கே....:)

   என் புளொக் வழக்கப்படி, ரெண்டாவது கொமெண்ட் போடுபவரோடு வடை சுடும் ஆயாவை பரிசாக:) அனுப்பி வைப்பேன்:)) ஹா ஹா ஹா பார்ப்போம் யார் அகப்படுகிறார்கள் என:)..

   ஆயா ரொம்பபபப இருமுறா:) அதனால சீக்கிரமா அவவை அனுப்பிப்போட்டு புது ஆயா வைக்கப்போறேன்ன் ஹா ஹா ஹா..
   இதுக்குப் பயந்தே யாரும் கொமெண்ட் போடாமல் ஓடிடப்போகினமே முருகா:)

   Delete
  2. //ஓம் நீங்க சொன்னமாதிரி சிரிச்சுட்டன் .//
   ஹா ஹா ஹா இந்தாங்கோ சுரேக்கா சிரிச்சத்துக்காக:)..
   [im]https://www.petpremium.com/wp-content/uploads/2015/02/cat-valentine.jpg[/im]

   Delete
  3. //முழுக்க முழுக்க உண்மை பாஸ் ///
   என்னாதூஊஊஊஊ பாஸ் ஆஆஆஆ?:) ரைப் அடிக்கிறதையும் விட்டுப்போட்டு ஓடிப்போய் கண்ணாடி பார்த்தேன்ன்ன் இல்ல இல்ல மீ பாஸ்னி:) யேதான்ன்ன்:)).. பாஸ் க்கு எதிர்ப்பால்:).. ஹா ஹா ஹா

   ///முந்தீல இருந்து மீ வருஷக்கணக்கா உங்களுக்கு பின்னால நாய்க்குட்டி மாதிரி வாறதுக்கு இதுவும் பெரிய காரணம்.///
   மீக்கு ரொம்ப ஷை ஷையா வருது:) பாஸ் என்றீங்க:) பினாலயே வருவேன் என்றீங்க:) ஹையோ இப்போ மீக்கு டவுட்டு டவுட்டா வருதே என்னிலதான்:) இருங்கோ இன்னொருக்கால் கண்ணாடி பார்த்துக் கன்ஃபோம் பண்ணிட்டு ஓடியாறேன்ன்ன்ன்..:)

   ஹையோ இப்போ பார்த்து அஞ்சுவையும் காணல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

   Delete
  4. ///எல்லாரும் சேர்ந்த உடன சிரிச்சு பேசி கலக்லப்பாகீட்டோம்.
   போலீஸ் மாமு சொன்னார் நீங்க சரியான பணக்காரர் போல எண்டு///

   ஹா ஹா ஹா.. இப்போ எனக்கு நீங்க 2009 இல் சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வருது.... யாரோ ஒரு கனேடியரோடு பேசும்போது, எங்கட மம்மி வீட்டில, ஊரில 4 டோக்ஸ், 4 பூஸ்கள் நிண்டதெனச் சொல்ல.. அந்தாள் இவர்கள் பெரிய பணக்காரர்போல என நினைச்சிட்டார் என:)) ஹா ஹா ஹா இவ்வூரில் அப்படித்தானே.

   உண்மைதான் சுரேக்கா, துன்பத்தை மறக்கடிக்க நகைச்சுவையாளர்கள் + நிறைய உறவுகள், நட்புக்கள் தேவை.

   அதனால்தானே நம் ஊர்களில் ஒரு செத்தவீடெனில் எல்லோரும் கூடியிருப்பார்கள், ஆனா இவ் வெளிநாடுகளில், பகலில் விசிட் பண்ணிட்டு நைட் தம் வீடுகளுக்கு ஓடிடுவார்கள், அதனாலேயே இங்கு டிப்பிரெஸ்ட் அதிகமாகுது மக்களுக்கு.

   மிக்க நன்றி சுரேக்கா... எங்கட றீச்சர் எங்கே???:). கொஞ்சம் இக்கடச்சூடு எனச் சொல்லுங்கோ:)

   Delete
 2. ///மூட் அவுட் என்றால்??//

  உங்க கால் முட்டி அவுட் ஆகிடுச்சுன்னு அர்த்தம் அதாவது காலை மடக்க நீட்ட முடியாமல் இருப்பதை தான் மூட் அவுட் என்பார்கள் இது உங்க வயது ஆட்களுக்கு வருவது சகஜம்தானம்மா

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ ட்ருத் வாங்கோ... வந்ததும் வராததுமா நல்ல அருமையான விளக்கம் வேறு தந்திருக்கிறீங்க.. இத நான் எதிர்பார்க்கல்லியே:))..

   ///இது உங்க வயது ஆட்களுக்கு /// அப்பூடியெனில் அஞ்சுவையா சொல்றீங்க?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  2. உண்மையின்படி வடை சுட்ட ஆயாவை உங்களிடம்தான் ஒப்படைச்சிருக்கோணும்:) நீங்கதானே 2 வதா வந்திருக்கிறீங்க:) ஆனா ஏதோ அதிர்ஸ்டவசமா, ஸ்பாம் ல ஒளிச்சிருந்தமையால்.. ச்ச்ச்சும்மா இருந்த கோபு அண்ணன் தலையில கட்டி அனுப்பிட்டேன்ன்ன்.. ஹா ஹா ஹா.. அடுத்த தடவை இந்த தப்பு நடக்காது:)

   Delete
  3. ///AngelinWednesday, February 15, 2017 6:43:00 pm
   Haaa haaa 😃😀////
   [im]https://d.ibtimes.co.uk/en/full/1571929/donald-trump.jpg?w=400[/im]

   Delete
 3. ///நான் 6ம் வகுப்பில் இருந்தபோது//

  நிஜம்வா சொல்லுறீங்க நீங்க ஆறாம் வகுப்புக்கு எல்லாம் போனீங்களா

  ReplyDelete
  Replies
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் எங்கே “போனேன்” எனச் சொன்னேன்?:) இருந்தேன் எனத்தானே சொன்னேன்?:) இதைக் கேட்கத்தான் அமேஏஏஏஏஏஏஏரிக்கால இருந்து வந்தீங்களோ?:))...

   ஆவ்வ்வ்வ் மிக்க நன்றி ட்ருத்... வந்தமைக்கும் ஸ்பாம் ல:) ஒளிச்சிருந்தமைக்கும்:).

   Delete
 4. தமிழ்மண வோட் 2 என்னோடதாக்கும்.

  தயவுசெய்து வடை சுடும் ஆயாவை அனுப்பாதீங்கோ.

  சுடச்சுட முறுகலான, சாஃப்ட்டான வடைகளை மட்டும் அனுப்பி வையுங்கோ, ப்ளீஸ்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ.... ஆயா மேக்கப் எல்லாம் போட்டு ரெடியா இருக்கிறா ஹா ஹா ஹா காரின் முன் சீட்டில இருக்கவச்சு பத்திரமாக் கூட்டிப் போங்கோ, பின் சீட் எனில் அவவுக்கு சத்தி வந்திடும்:).
   ஹையோ பள்ளம் மேடு பார்த்துக் காரோட்டச் சொல்லுங்கோ இல்லையெனில் பொசுக்கெனப் போயிடப்போறாவே:)....
   ஹா ஹா ஹா என்னால முடியல்ல சாமி:)
   ஊசிக்குறிப்பு:-
   ஆயாக்கு ஏசி ஒத்துக்கொள்ளாது, கார் ஜன்னலைத் திறந்து வைக்கவும், பத்திரம் ஆயா....

   Delete
 5. ஒரு சின்னப் பிரச்சனை மூடவுட் ஆகிட்டேன் அதனால வெளியே வரவில்லை, கொமெண்ட்ஸ் ஏதும் போடவில்லை:), பேசாமல் இருந்திட்டேன்..

  மனசே சரியில்லை அதனால நைட் தூக்கமே வரவில்லை, ஒழுங்கா வேலையைக் கவனிக்க முடியவில்லை

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா என்ன கொப்பி பேஸ்ட்டோ???

   Delete
 6. //அதை அப்படியே ஒரு ஸ்டைலாக திரும்பி பார்த்து அவ சொன்னா.. “ohhhh sooo beautiful” என...//

  இதுபோல ஸோ பியூட்டிஃபுல்லாகச் சொல்லியிருப்பதால் அது நிச்சயம் நம் அஞ்சுவாகத்தான் இருக்கணும். அவவுக்கு நன்றிகள். :)

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ கோபு அண்ணன் ஓடுங்கோ ஓடிப்போய் மேசைக்குக் கீழே ஒளியுங்கோ .... அஞ்சு துரத்தி வாறா.... நல்லவேளை இன்று உங்களுக்கு வெள்ளி துலாவில:) ஏனெனில் அஞ்சு அஞ்சிஞ்சி ல ஹீல்ஸ் போட்டிருப்பதால் ஸ்பீட்டா ஓட முடியவில்லை அவவால... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்பூஉ மீ ரொம்ப நல்ல பொண்ணு... சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்.

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கெதுக்கு 5 இன்ச் ஹை ஹீல்ஸ் ..அதெல்லாம் உங்களுக்கு தான் நான் ஹீல்ஸ் போடாமலேயே 5.7 உயரமாக்கும்

   Delete
  3. ஆவ்வ்வ்வ் பத்திக்கிட்டுது பத்திக்கிட்டுது.. திஸ் வட் ஐ வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:)) மீ எஸ்கேப்பூஊ:)

   Delete
 7. நடுவில் உள்ள குட்டியூண்டு வீடியோவில் பூனை டான்ஸ் முதலியன நல்லா இருக்குது.

  ReplyDelete
  Replies
  1. ஓ ரசித்தமைக்கு நன்றி கோபு அண்ணன் , அது ஒரு யூஸ் க்கான அட்வெடைஸ்மெண்ட்:).

   Delete
  2. @Gopu anna ..அண்ணா அது நானில்லை ..நானா இருந்தா அடுத்த விரலிலும் முள்ளு குத்தி ஜோடியா ரத்தம் வர வச்சிருப்பேன் பிக்காஸ் எனக்கு தனிமை லோன்லி புடிக்கவே பிடிக்காது

   Delete
  3. //Angelin Friday, February 17, 2017 1:57:00 pm

   @Gopu anna ..அண்ணா அது நானில்லை ..நானா இருந்தா அடுத்த விரலிலும் முள்ளு குத்தி ஜோடியா ரத்தம் வர வச்சிருப்பேன் பிக்காஸ் எனக்கு தனிமை லோன்லி புடிக்கவே பிடிக்காது//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ..... வெரி குட். சரியான போட்டி.

   Delete
  4. அதிராவும் அஞ்சுவும் .... சரியான ஜோடி .... ஜாடிக்கேற்ற மூடி :)

   Delete
  5. எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகோணும் கோபு அண்ணன்??? இதில ஜாடி ஆர்? மூடி ஆர்ர்ர்ர்???
   ஜாடி கறுப்பு , மூடி வெள்ளையாத்தான் இருக்கும் அப்போ அஞ்சுதான் ஜாடியா இருப்பா ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்.... ஹையோ ஓட முடியல்ல தேம்ஸ்ல தள்ளிடப் போறாவேஏஏஏஏஏஏஏ

   Delete
  6. [img]https://www.etsy.com/uk/listing/498627790/black-mason-jar-flower-vase-makeup?ga_order=most_relevant&ga_search_type=all&ga_view_type=gallery&ga_search_query=mason%20jar%20wedding%20decorations&ref=sr_gallery_16[/img]

   Delete
  7. கருப்பு ஜாடி அதிரா :) அந்த வெள்ளை லிட் நானேதான்

   Delete
  8. எதையும் தாங்குவது ஜாடிதான், ஏன் உந்த மூடியைக்கூட ஜாடிதானே தாங்குது??:)

   எதையும் தாங்கும் இதயமிருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.... கலரில என்ன இருக்கு, அதனால நான் ஜாடியா இருப்பதில் பெருமைப் படுறேன் எனச் சொல்லிக்கொண்டு:),

   ஹையோ இதுக்கு மேல பிஸ்ஸூ தேம்ல குதிச்சால் அதுக்கு நான் பொறுப்பில்லை:) இனிமேல் நடக்க இருக்கும் சூசைட்டுக்கள் அனைத்துக்கும் கோபு அண்ணனே பொறுப்பாளி என, நல்ல சுய நினைவோடு இந்த வெள்ளைத்தாளில் கையொப்பமிட்டுக்கொண்டு.....

   இதோ கச்சான் வறுக்கிறேன்ன்ன் ... சாப்பிட்டுக்கொண்டே புதினம் பார்க்க... ஹாஅ ஹா ஹா முடியல்ல சாமீஈஈஈஈஈ:)

   Delete
  9. //athira Friday, February 17, 2017 10:01:00 pm

   எதையும் தாங்குவது ஜாடிதான், ஏன் உந்த மூடியைக்கூட ஜாடிதானே தாங்குது??:)//

   மூடி மட்டும் இல்லாவிட்டால் ஜாடிக்கு ஏது மதிப்பு? ஜாடிக்கு மூடி என்ற பாதுகாப்பு கிரீடம் இன்றி, அது திறந்தே கிடந்தால் யார் அதனை சீந்துவார்கள். பூச்சி புழுக்கள் எனக் கண்டவைகளும் உள்ளே புகுந்துவிடுமாக்கும்.

   //எதையும் தாங்கும் இதயமிருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.... கலரில என்ன இருக்கு, அதனால நான் ஜாடியா இருப்பதில் பெருமைப் படுகிறேன் எனச் சொல்லிக்கொண்டு:), //

   ’கலரில என்ன இருக்கு’ எனச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் கலரிலே தான் எல்லாவிதமான கவர்ச்சியும் மயக்கமுமே இருக்குது என்பது கோல்ட் கலர் பிஷ்ஷுக்கும், எனக்கும் நன்கு தெரியுமாக்கும்.

   ஆனாலும் ஒன்று .... என்னதான் வீடு பளிச்சின்னு பெயிண்ட் அடித்து படு சுத்தமாக இருந்தாலும், அந்த அடுப்பங்கரை மட்டும் கொஞ்சம் இருட்டா கருப்பாகத்தான் இருக்கும்ன்னு சொல்லுவாங்கோ. :)

   //ஹையோ இதுக்கு மேல பிஸ்ஸூ தேம்ல குதிச்சால் அதுக்கு நான் பொறுப்பில்லை:)//

   பிஷ்ஷு தேம்ஸில் குதித்தால்தான் அது ஜாலியாக நீந்துக்கொண்டு உயிர் வாழ முடியும். பூசாரைப் பிடித்து தேம்ஸில் அமுக்கினால் அது அத்தோடு மூச்சுத் திணறி காலியாகிவிடும்ன்னு அந்த பிஷ்ஷு சொல்வதுபோல என் காதில் இப்போ விழுகுது.

   //இனிமேல் நடக்க இருக்கும் சூசைட்டுக்கள் அனைத்துக்கும் கோபு அண்ணனே பொறுப்பாளி என, நல்ல சுய நினைவோடு இந்த வெள்ளைத்தாளில் கையொப்பமிட்டுக்கொண்டு..... இதோ கச்சான் வறுக்கிறேன்ன்ன் ... சாப்பிட்டுக்கொண்டே புதினம் பார்க்க... ஹாஅ ஹா ஹா முடியல்ல சாமீஈஈஈஈஈ:)//

   நல்லாவே கடலை வறுக்கிறீங்கோ. கச்சான் என்றால் உங்கள் பாஷையில் கடலை என அஞ்சு எனக்கு அஞ்சு வருஷம் முன்பே சொல்லியிருந்தாங்கோ. அதனை இன்னும் நான் நினைவில் வைத்துள்ளேன். எப்படி என்ன நினைவாற்றல்? இதற்காக இப்போ ஜோராக் கைத்தட்டுங்கோ அல்லது வறுத்த கச்சானை கொஞ்சம் அனுப்பி வையுங்கோ. :)

   Delete
  10. இதற்கு நான் ஒரு பதில் போட்டிருந்தேன். அது எங்கே????? ஏன் வெளியிடவில்லை. ஒருவேளை அது SPAM இல் சிக்கியிருக்கலாம்.

   அர்ஜெண்டா பாருங்கோ அதிரா ..... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

   Delete
  11. தகவல் சொன்னமையால்ல்ல் கதிரைக்குக் கீழ மேசைக்குக் கீழே எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சுப் போட்டிட்டேன் கோபு அண்ணன்.... பூஸோ கொக்கோ... ம்க்கும்... ஹா ஹா ஹா மன்னிச்சுக்கோங்கோ...

   Delete
  12. அஞ்சூஊஊஊஊஊஊ ..... ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஊஊ .... நீங்க ரோசாப்பூ மாதிரி நல்ல சொகப்ப்ப்ப்ப்பாஆ இருக்கிறீங்க, உங்களைப் போய்க் கறுப்பெண்டு சொல்வேனோ...... ஹையோ ஐஸு கிய்ஸூ வச்சாத்தான் அலுவல் நடக்கும்:).........
   கொஞ்சம் அந்த கான்சல் ஆக்கிய கிரெயினை திரும்ப கொண்டுவாங்கோ அஞ்சு:) , உச்சிப் பிள்ளையார் கேணியில தண்ணி இல்லையாம்ம்:)...

   சோஓஓஓ திருச்சியில் வாணாம்ம்ம் நாங்க டெல்லியில் மூவாறும் சங்கமிக்கும் இடத்தில அமுக்கிடலாம்ம்:)... (இப்ப பார்த்து அந்த பெயரை மறந்திட்டேன்ன் கர்ர்ர்)...

   செலவைப் பற்றி யோசிக்காதீங்க, குயின் அம்மம்மாட்டைக் கேட்டு வாங்கித் தாறேன்ன்ன்ன்:)...

   ஸ்ஸ்ஸப்பாஆஆ இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக் கிடக்கூஊஊஊ:)

   Delete
 8. //ஊசிக் குறிப்பு:வாணாம் வாணாம் இண்டைக்கும் ஊசிக் குறிப்பேதும் வாணாம்ம்ம்:)//

  மிக்க நன்றி ..... தப்பித்தோம். சந்தோஷமாக உள்ளது. :)))))

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இச்சந்தோசம் நீடிக்கோணும் என உச்சிப் பிள்ளையாருக்குத் சிதறு தேங்காய் உடையுங்கோ...

   Delete
 9. டைரி தகவல் சூப்பர் !

  ’ஒரு பூனை திருட்டுப்போய் விட்டது என்று சட்டத்தின் உதவியை நாடினால், நீ ஒரு யானையையே இழக்க நேரிடும்’

  என்று இருந்தால் எதுகை-மோனையுடன் மேலும் அழகாக இருந்திருக்கும்.

  எனினும் பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுகள் + நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஓ உண்மைதான், இது நான் ஸ்டோரி புக்ஸ் படிக்கும்போது , அதில் வரும், எனக்குப் பிடித்த வசனங்கள், பொன்மொழிகளை அப்படியே எழுதிவிடுவது வழக்கம்.

   மிக்க மிக்க நன்றி கோபு அண்ணன்.... ஆயா பத்திரம்:), ரொம்ப இருமுறா., ஏதும் கசாயம் வச்சுக் குடுங்கோ... ஹா ஹா ஹா.

   Delete
 10. என்ன கஷ்டம் வந்தாலும் சரி, முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்காமல், ஜாலியா சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்றீங்க.

  மூட் அவுட் ஆகிட்டா உங்கள் தளம் திறந்து பார்த்தால் போதும்.... ஹா ஹா ஹா... எப்பவும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்களை அருகில் வச்சுக்கனும்னு சொன்னீங்களே..

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சரவணன் வாங்கோ...

   ///என்ன கஷ்டம் வந்தாலும் சரி, முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருக்காமல், ஜாலியா சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்றீங்க.///
   இல்ல அப்படிச் சொல்லவில்லை, அதெப்படி எக் கஸ்டம் வந்தாலும் சிரிச்சிட்டே இருக்க முடியும்.... மனிதராக இருக்கும் எமக்கு, தும்மல் இருமல் சிரிப்பு அழுகை வருவதுபோலத்தான் இதுவும் வரும், ஆனா அதுக்கு கதிரை போட்டு உட்கார வைக்கக்கூடாது எனத்தான் சொல்கிறேன்.

   எவ்வளவு சீக்கிரம் எனினும் நோர்மல் ஆகிடோணும், மூட் அவுட்டுக்கு என்ன காரணம் என்பதை முதலில் கண்டு பிடிச்சு, அது ஏதும் தனிப்பட்ட ஒருவர் எனில் அவரோடு மனம் திறந்து பேசி அல்லது திட்டியாவது நோர்மலாகிடோணும்..

   மனத்திலயே அனைத்தையும் அடக்கி வச்சுக்கொண்டிருந்தால் ரைம் எடுக்கும்.

   ///மூட் அவுட் ஆகிட்டா உங்கள் தளம் திறந்து பார்த்தால் போதும்.../// ஹா ஹா ஹா நிஜம்மாத்தான் சொல்றீங்களோ? மிக்க நன்றி சரவணன்.

   [im]http://r.hswstatic.com/u_0/w_480/gif/laughing-bonobo-crop.jpg[/im]

   Delete
  2. Haiyo pavam antha thambi. .unga photo parthu mayakamaagidaporaar. .

   Delete
 11. முகக்கண்ணாடியை முன்னே வைத்து, சிறிது நேரம் நம்மை பார்த்தால்... மூட் அவுட் காணாம போயிங்...!

  அட...! blogspot.com - பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா நல்ல ஐடியாத்தான்.. ஆனா அப்படிக் காண்ணாடியில் பார்க்கும்போது முன்பக்கத்தில குட்டியா ஒரு வெள்ளை நிற மயிர் தெரிந்திட்டால்ல் அவ்ளோதேன்ன்ன்ன் ஹா ஹா ஹா மூட்ட் அவுட்டாவே போயிடுமே ஹா ஹா ஹா... பிள்ளையார் பிடிக்கப்போய்...... அந்தக் கதையாவெல்லோ முடிஞ்சிடும்.

   யேஸ்ஸ் இப்போ டொட் கொம் ஏ தான்... மிக்க மிக்க நன்றிகள்.

   Delete
  2. Engayachum inime sweet 16 nu sollunga 😆😃

   Delete
  3. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு உதாரணத்துக்கு சொன்னா, உடனேயே அது அதிராவுக்குத்தான் என முடிவெடுத்திடுவா குறைமாத பிஸ்ஸு:)).. இப்போ சுவீட் 16 க்குத்தான் வெள்ளை தெரிஞ்சாலும் தெரியுது... 35 தாண்டினாலே யாருக்கும் வெள்ளை மயிரே இல்லயே:)))...

   எங்கட சொந்தக் கார அண்ணன் ஒருவர் சொன்னார்... “இப்போ எல்லோரும் டைக்:) குழந்தைகள் தானே” என.. ஹாஅ.. ஹா..ஹா...:)

   Delete
 12. ஆமாம் அதிரா நீங்க சொன்னது மிக சரியே ..இந்த சூடு அன்ட் சுடு மூஞ்சீஸ் கூட பழகுவதை தவிர்ப்பதே நல்லதுஎப்பவும் சிரிச்சுகிட்டே ஹாப்பியா இருக்கவங்க அவங்க கிட்ட இருக்கும் சந்தோஷத்தை பரப்புவாங்க ஆனா இந்த சண்டைக்கார சூட்டு மூஞ்சீஸ் அதுங்க கோபத்தையும் அதுங்க கெட்ட குணத்தையும் நம்மகிட்ட தாரை வார்த்துட்டு போயிருங்க .அதனால் அதுங்ககிட்டருந்து ஒரு ஸ்டெப் தள்ளி இருப்பதே பெட்டர்

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. என்ன வரும்போதே இவ்ளோ சூடாக வாறீங்க.. முதல்ல இருங்கோ இதில இருந்து இந்தாங்கோ லெமன் ஜூஸ், எங்க வீட்டு மரத்தில பிடுங்கிய லெமனில செய்தேன்ன்ன்.. குடிங்கோ:). இந்த விசயத்தில நீங்களும் ரொம்ப நொந்திருப்பீங்க போல தெரியுதே... உண்மைதான் தொட்டதுக்கெல்லாம் கோபப்படுவோரையும் சமாளிக்க முடியாது, மூட் அவுட் ஆவோரோடும் சமாளிக்க முடியாது,,

   ஆனா டக்குப் பக்கெனக் கோபப்படுவோரைக் காட்டிலும்... இந்த ஓவ் ஆவோர் மேல்தான் எனக்கு அதிக கோபம்.. ஏன் ஆனார்கள் எதுக்கு ஆனார்கள் எனத் தெரியாமலே, அருகில் இருப்போரும் சேர்ந்து அவஸ்தைப் படுவதைக் காட்டிலும் சிடுமூஞ்சீஸ் கொஞ்சம் பறவாயில்லை என எண்ணத் தோணுது...

   நேரே திட்டினால் கூட பறவாயில்லை, என்ன பிரச்சனை எனத் தெரிஞ்சிட்டால் விளக்கம் ஆவது கொடுக்கலாம்.. ஆனா திடீரென உம்ம்ம்ம்ம் என இருப்போரை என்ன பண்ண முடியும்.

   ஸ்கூல் லைவ்ல ஒரு நண்பி... என்னோடு நல்ல ஒட்டு ஆனா இருந்தாற்போல பேசாமல் இருப்பா, என்ன காரணம் என கடசி வரைக்கும் சொல்ல மாட்டா... வாயே திறக்க மாட்டா... பின்னர் 2,3 நாட்கள் ஆனபின்னர்தான் மூட் நோர்மலாகி றீசன் சொல்லுவா... அதுவரை அவவுக்கு அது ஓகே யாக இருக்கலாம் ஆனா கூடவே இருக்கும் எனக்கு அந்நேரம் எவ்வளவு கஸ்டம் தெரியுமோ? படிக்கவே முடியாமல் கஸ்டப்படுவேன்...

   மிகுதிக்கு கொஞ்சம் லேட்டா வாறேன் அஞ்சு:))..

   Delete
  2. Haaa haaa curious gundu cat 😆😉

   Delete
 13. எனக்கும் ஒன்னு புரியலை அடுத்தவங்ககிட்ட ஏதாச்சும் பிடிக்காத விஷயம் இருந்தா அவங்களை விட்டு விலக்கறது பெட்டர் அதைவிட்டு அதையே பிடிச்சு தொங்கிட்டு இருப்பதும் முட்டாள்தனம்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அது கரீட்டு:) அஞ்சு, ஆனா அப்படியானவர்களையும் எங்கட மூட்டுக்கு:) கொண்டுவந்திடலாமே எனத்தான் நினைப்பேன்..

   இன்னொன்றையும் யோசிக்கோணும்.. விலகக்கூடிய இடம், விலக முடியாத இடம் எனவும் இருக்கெல்லோ...அடிக்கடி சந்திக்கும் வேலை இடம், சொந்த பந்தம் எனில்?:)

   Delete
 14. அதிரா crusha குடிச்சிட்டு செம டான்ஸ் ஆடறீங்க :)))))))))

  ReplyDelete
  Replies
  1. டாங்ஸ்ஸ்..

   [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxiJFETqZo2nBVmaDiGtj2vo6zvMsmiWUCc9dvQkMTZdgxZmDT5w[/im]

   Delete
 15. உங்க மகனின் ப்ரண்டை போலத்தான் என் மகளின் தோழியும் அவங்க பேரன்ட்ஸ் ரெண்டுபேரும் வேலைக்கு போறவங்க அதனால் பிள்ளை எப்பவுமே சூடு மூஞ்சி டைப் பெற்றோர் பணம் பணம்னு பார்த்தால் பிள்ளை சந்தோஷமிலாம இருந்து அதன் விளைவா எப்பவுமே மூட் அவுட் ஆகிடுது

  ReplyDelete
  Replies
  1. இது உண்மையேதான், அதே நேரம் எப்பவும் நொய் நொய் எனச் சண்டைப் பிடிக்கும் பேற்றோரோடு இருக்கும் பிள்ளைகளும் இப்படித்தான் இருக்கிறார்கள்...என்ன பண்ணுவது கவலையான விசயம்.. அவரவர் பிரச்சனை அவர்களுக்குத்தான் தெரியும்..

   Delete
 16. அப்புறம் முக்கியமான விஷயம் ..நான் லேசில் மூட் off ஆக மாட்டேன் அப்படி அப்செட் ஆனாலும் ஜெசி கூட மல்டி கூட ஓடி புடிச்சி விளையாடுவேன் அப்பறம் pond பக்கம் போய்டுவேன் நம்ம ப்ரண்ட்சுங்க நம்மை பார்த்து காலாட்டிட்டு வாலாட்டிட்டு சிறகாட்டிட்டு வருவாங்க அதைவிட சந்தோஷமேது :) எல்லாவற்றையும் ரசிக்க கற்றுக்கொண்டவர்களால் மூட் அவுட் லேசில் ஆக முடியாது ..அதைவிட ம் உக்கிரம் அதிரா பிறரது சந்தோஷத்தையும் நினைச்சு பார்க்கணும் எதையும் குற்றம் சாடும் மனப்பான்மையுடன் நமது கருத்தை வெளிப்படுத்தும்போது அதுவும் பிறரை மூட் ஆக்கிடுமே :) ஆதலால் மூட் அவுட் ஆகாதீர் மூட் அவுட் ஆக்காதீர் :)
  என்று சொல்லி கொண்டு ........ ஒரு பன்னீர் ஜோடா ப்ளீஸ் ....ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு கமெண்ட்ஸ் எழுதி நான் அப்புறம் வரேன் :)

  ReplyDelete
  Replies
  1. //எதையும் குற்றம் சாடும் மனப்பான்மையுடன் நமது கருத்தை வெளிப்படுத்தும்போது அதுவும் பிறரை மூட் ஆக்கிடுமே :) ஆதலால் மூட் அவுட் ஆகாதீர் மூட் அவுட் ஆக்காதீர் :)//என்னைக்கேட்டால் கருத்து மோதல்கள் எங்கிறது கொஞ்சம் ஆரோக்கியமான விஷயம்தான்.
   தெளிவோ ,முடிவோ அதில் பிறக்கலாம் .
   ஆனால் இன்னும் சிலர் ஆரையாச்சும் எதையாச்சும் பற்றி நெகட்டிவ் ஆவே மனசில வச்சு சம்மந்தமில்லாமல் எதையாச்சும் சொல்லிகுட்டு
   தங்களுக்கு தாங்களே ரெம்பா நல்லவன் நு சொல்லி சொல்லி அலையுங்க பாருங்களேன் .அப்ப எனக்கு லைட்ட் ஆ மூட் அவுட் ஆகும் .ஒரு பேப்பரை எடுத்து பீஸ் பீஸ் ஆ கிழிச்சு
   தூக்கி போட்ருவன்.அத்தோட முடிஞ்சிரும்.
   முடியாட்டில் சந்தர்ப்பம் கிடைக்கறப்போ ஆளையே கிழிச்சு தொங்க போட்டுட்டு லிஸ்ட் ல இருந்து அடியோட தூக்கிர வேண்டியதுதான்.

   எனக்கு மூட் அவுட் எங்கிறது சின்ன சின்ன விஷயங்களுக்கு வருறதில்ல.பெரிய பெரிய இழப்புகள் கவலைகளுக்கு வார மூட் அவுட் க்கு உடனே ப்ளான் பண்ணி வக்கேஷன்,அல்லது பிக்னிக்,அல்லது எங்காச்சும் 2 நாள் ஹொட்டேல் ல போய்
   தங்குறது இப்டி எதையாச்சும் செய்து சீக்கிரம் வெளிய வந்துடுவோம்.

   Delete
  2. Haaa haa true. ..but paper pavam adhai kizhika koodaathu. .better to ignore .enakku stress relief seyya niraiya 4 legs irukkaanga avanga kooda pesuven. .Prabu karu jessie athira மியாவ் haaa haaa😄😃😁😀😊☺

   Delete
  3. ///ஆதலால் மூட் அவுட் ஆகாதீர் மூட் அவுட் ஆக்காதீர் :)
   என்று சொல்லி கொண்டு ........ ஒரு பன்னீர் ஜோடா ப்ளீஸ் ....ரொம்ப டயர்ட் ஆகிடுச்சு கமெண்ட்ஸ் எழுதி நான் அப்புறம் வரேன் :)///

   ஹா ஹா ஹா ரொம்பத்தான் ரயேட் ஆகிட்டீங்க என தெரியுது:), இருப்பினும் மூட் அவுட் ஆகிடாமல் ஸ்ரெடியாஆஆஆ இருக்கிறீங்க :) கீப் இட் மேலே:))..

   Delete
  4. @ சுரேக்கா///என்னைக்கேட்டால் கருத்து மோதல்கள் எங்கிறது கொஞ்சம் ஆரோக்கியமான விஷயம்தான்.
   தெளிவோ ,முடிவோ அதில் பிறக்கலாம் .//

   அதேதான் நேரே ஏசி சண்டைப்பிடிக்கலாம், அப்போ மனமும் இலேசாகிடும் பின்பு வழமைக்கு திரும்பிடலாம், ஆனா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என இருப்போரைப் பார்த்தால்தான் எனக்கு பெரீஈஈஈஈஈய வாள்:) எடுத்து:) குட்டிப் பேப்பரை வெட்டோணும் போல வரும்:) ஹா ஹா ஹா:)).

   ///ஆனால் இன்னும் சிலர் ஆரையாச்சும் எதையாச்சும் பற்றி நெகட்டிவ் ஆவே மனசில வச்சு சம்மந்தமில்லாமல் எதையாச்சும் சொல்லிகுட்டு
   தங்களுக்கு தாங்களே ரெம்பா நல்லவன் நு சொல்லி சொல்லி அலையுங்க பாருங்களேன் ///
   ஹா ஹா ஹா இதையெல்லாம் பார்த்து சிரிச்சுக் கொண்டு காக்கா போயிடோணும்.. மனதோடு விட்டிடோணும்.. கிட்னிக்கு:) எடுத்துச் சென்று யோசிக்கக்கூடா:))... இப்படியானோரைப் பார்த்து என்றைக்குமே நான் மூட் ஓவ் ஆனதில்ல:).. நகைச்சுவையாவே தெரிவாங்க என் கண்ணுக்கு:).

   ////பெரிய பெரிய இழப்புகள் கவலைகளுக்கு வார மூட் அவுட் க்கு ///
   இது கவலை எனும் கட்டகரிக்குள் அடங்கும் என நினைக்கிறேன்.. இவர்களைப் பார்க்கும்போது கோபம் வராது.. ஆறுதல் கூறோணும் எனத்தான் மனம் துடிக்கும்...

   ///உடனே ப்ளான் பண்ணி வக்கேஷன்,அல்லது பிக்னிக்,அல்லது எங்காச்சும் 2 நாள் ஹொட்டேல் ல போய்
   தங்குறது இப்டி எதையாச்சும் செய்து சீக்கிரம் வெளிய வந்துடுவோம்.////

   ஆவ்வ்வ்வ் சுரேக்காவின் கவலைகள் தீர்க்க நிறையச் செலவாகும்போல இருக்கே:).. ஒரு லொலிபொப் தந்தால் ஆறிடாதோ?:) ஹா ஹா ஹா... நல்ல விசயம் சுரேக்கா... இதுவும் ஒரு சிறந்த வழிதான்.

   Delete
  5. ///Prabu karu jessie athira மியாவ் haaa haaa😄😃😁😀😊☺///
   karrrrrrrrrrrrr ... இண்டைக்குப் பிஸ் ஃபிரைதேன்ன்ன்ன்ன்:))
   [im]https://thumbs.dreamstime.com/z/cat-gold-fish-19532988.jpg[/im]

   Delete
  6. கலரில் என்ன இருக்குன்னு மேலே கேட்டுப்போட்டீங்களே :(

   இந்தக் கண்ணாடி ஜாடிக்குள் உள்ள பிஷ்ஷின் கலரின் மேல் ஜொள்ளு விட்டுத்தானே மேலே அந்த பூசார் நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு எட்டிப் பார்க்குது !!!!!

   இதில் ஜாடியின் மூடியை வேறு இப்போது காணோம். மூடி என தன்னை ஒத்துக்கொண்ட அஞ்சு சுதர்சனச் சக்கரம் போல மூடியை சுழற்றிக்கொண்டு ஓடியாந்து, பூசாரின் பின் மண்டையில் பலமாகக் தாக்கக்கடவது. :)

   Delete
 17. :)//அதைவிட ம் உக்கிரம் //

  அது ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதைவிட முக்கியம்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா என் போஸ்ட் படிச்சு பிஸ் க்கு பிறஸர் ஏறிப்போச்ச்ச்ச்ச்சுப் போல:)) ஓவர் டென்சன்ல இருக்கிறமாதிரி தெரியுதே அவ்வ்வ்வ்:)).

   ஹா ஹா மியாவும் நன்றி அஞ்சு..

   Delete
 18. இன்று என்னவோ தமிழ்மணம் வாக்கு பளிச்சென்று விழுந்து விட்டது! மின்னல் வேகம். இது மாதிரி எல்லாவற்றிலும் எளிதாக நடந்தால் மூட் அவுட் எல்லாம் ஆகாது இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா இப்படியான மூட் அவுட் எல்லாம் ஒரு ஹானா சோங் கேட்டாலே பறந்திடும்....:))

   Delete
 19. எல்லோருக்கும் ஏதோ ஒரு நேரம் மனம் சுணங்கும் கணங்கள் வரத்தான் செய்யும். வராமல் இருக்குமா? என்ன? எவ்வளவு எளிதாக, வேகமாக அதிலிருந்து விடுபடுகிறோம் என்பதில்தான் நம் மனத்தெளிவு இருக்கிறது. உண்மையைச் சொன்னால் இரண்டு நாட்களாக எனக்கும் மூட் அவுட்தான். இப்போ பரவாயில்லை!

  ReplyDelete
  Replies
  1. உண்மையேதான், வரவே வராது எனச் சொல்ல முடியுமோ? வரத்தான் செய்யும், ஆனா நாம் அதுக்கு அதிக இடம் கொடுத்து, நம்மைச் சுற்றி உள்ளோரையும் மூட் ஓவ் ஆக்கிடாமல் விரைவா ஏதாவது பண்ணி வெளியே வந்திடோணும்:))... பலமா சிரிச்சாலே மூட் அவுட் எல்லாம் பறந்து போஓஓய்....டும்ம்ம்ம்ம்ம்:)).

   என்னாது 2 நாட்களாகவா????, மனதில் குழப்பம் ஏற்படலாம் ஆனா அதுக்காக கதைக்காமல் பேசாமல் இருந்திடக்கூடாது, கூட இருப்போரோடு.. அதுதான் கஸ்டமானது.. அப்பாடா நல்லவேளை இப்போ ஓகேயாகிட்டீங்க:) இல்லையெனில் கொமெண்ட்டும் போட்டிருக்க மாட்டீங்களோ:).. ஹா ஹா ஹா..

   Delete

 20. நம்முடைய மனச் சுணக்கத்தால் மற்றவர்களின் உற்சாகத்தையும் கெடுக்காமல் நாம் தனிமையில் சென்று மீண்டு விடலாமோ! எனக்கு முன்பெல்லாம் பாடல்கள் கேட்டால் போதும். இப்போதெல்லாம் ஓரிரண்டு நாட்கள் ஆனால் எவ்வளவு பெரிய பிரச்னையும் தானாகக் கரைந்து / குறைந்துகொண்டே வந்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. என் குட்டி ஆராய்ச்சியின்படி, பெரும்பாலானோர் இப்படியான மூட் அவுட்டுக்கு தனிமையை நாடுகின்றனர்... ஆனா இது ரைம் எடுக்கும்.. அதே நேரம் அடுத்தவருக்கும் தெரிந்துவிடும்... இவர் மூட் அவுட்டில் இருக்கிறார் என.... அது அடுத்தவர்களுக்கு எரிச்சலையும் கொடுக்கலாம்..

   என்ன ஆனாலும் சம்பந்தப்பட்டவரோடு மனம் திறந்து பேசி/திட்டி விடுவதே நல்லது, அல்லது பொதுவான ஏதும் விசயத்தால் மூட் அவுட் ஆனால்.. அதாவது.. வெதர்.. சன நெரிசல், சிலபேருக்கு பசி அதிகமானாலே மூட் ஓவ் ஆகிடுவினம்... இப்படியானவற்றை, நம்மோடு கூட இருப்போருக்கு சொல்லுவதன் மூலம் மனதை நோர்மல் ஆக்கிடலாம் என்பதே என் கருத்து.

   ஆனா கூட இருப்போரும் அதைப் புரிந்து கொண்டு, ஆறுதல் படுத்தக் கூடியவராக இருந்தால் மட்டுமே பேச முடியும்... நான் போஸ்ட்டில் எழுதியதுபோல... சிலர் இன்னும் மனநிலையை மோசமாக்கியும் விடுவர். எப்படியாயினும் நமக்கு ஏற்படும் மூட் அவுட்டால் அடுத்தவருக்கு பாதிப்போ, கவலையோ இல்லாமல் இருக்கோணும் அதுதான் முக்கியம்...

   உண்மைதான் அனுபவங்கள் அதிகமாகும்போது... பெரிய பெரிய விசயங்களெல்லாம்... சின்னதாகவே தெரியும்...

   மிக்க மிக்க நன்றி அனைத்துக்கும்.

   Delete
 21. நானும் 2 நாளா மூட் ஸ்விங்ல இருந்ததால்...பதிவுகளை மட்டும் படுச்சுட்டு ஓடி போய்டேன்..எங்கேயும் யாருக்கும் reply போடல...

  இப்ப ஓகே அதான்.. மூட் அவுட் ஆ??? அப்போ கொஞ்சம் இக்கரைச் சூடுக்கு:..பதில்..

  ஹாய்...

  நல்ல பகிர்வுகள்...

  ஓகே bye

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ, ஹா ஹா ஹா இனிமேல் மூட் அவுட் வந்தா, உடனேயே சரிப்படுத்த நாங்க எல்லாரும் பேசியிருக்கும் முறையைப் பின்பற்றுங்க்கோ.

   எதையும் மனதில் அடக்கி வைக்காமல் , யாரையாவது பிடிச்சு வச்சு நல்லா திட்டு திட்டென திட்டிடுங்கோ... மூட் நோர்மலாகிடும்.... ஹாக்க்க்க் ஹா மிக்க நன்றி அனு.

   Delete
 22. அதிரா அன்ட் சுரேஜினி .
  இன்னிக்கு காலைல ஷாப்பிங் போயிட்டு வரும்போது ஒரு ஆள் கோக் பாட்டிலை பாதி குடிச்சி நடு ரோட்ல வீசினான் எனக்கு அவனை பார்த்தது பயங்கர மூட் அவுட் இதில வேகமா வந்த ஒரு கார் அதில் ஏறி உடைஞ்சி ஸ்பிளாஸ் வேறா ஆச்சு ..கோபத்தோட முகத்தை வேறு பக்கம் திரும்பினா நம்ம மார்லி ஆப்போசிட் ஸைட்லருந்து பௌ பௌய்ச்சு :) நானா அப்படியே க்ராஸ் பண்ணி ஓடினேன் மார்லிகிட்ட ..ரெண்டு நிமிஷம் அது உடம்பை தடவி விட்டதில் என் கோபமே காணோம் ..பிறகு பொறுமையா அந்த எருமை வீசிப்போட்டு நசுங்கின பாட்டிலை குப்பைத்தொட்டியில் எடுத்து வீசிட்டு வந்தேன்

  ReplyDelete
 23. ஆஆவ்வ்வ்வ் அஞ்சு, இப்போவெல்லாம் நாம் மூட் அவுட் ஆகிட்டால், உடனேயே தெரிகிறதுதானே மூட் அவுட் ஆகிட்டேன் இதை நோர்மலாக்கோணும் என,,, இப்படி நம் மனதுக்கு தெரிஞ்சாலே, நாம் அடுத்த செக்கனே நோர்மலாகிடுவோம்ம்ம் ... :)

  குட் ரைமிங்:), மாலிக்குத்தான் தாங் பண்ணோணும்.

  ReplyDelete
  Replies
  1. ஹெஹெ இன்னிக்கும் ஒரு மூட் அவுட்டோட நடக்கும்போது parapet வால் மேலே ரோட்டோரம் ஒரு ஜிஞ்சி cat படுத்து புரண்டு என்னை பார்த்து டான்சிங்
   செம ஹாப்பியாகிட்டேன்

   Delete
  2. அது சரி... ஆனா டெய்லி மூட் அவுட் ஆகிடுறீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

   Delete
  3. ஒரு டவுட்டூஊஊஊஊ.

   மூட் அவுட்டா ..... மூடி அவுட்டா ?????

   (மூடி மீன்ஸ் ஜாடியின் மூடி)

   Delete
  4. ரெண்டுமே அவுட்டூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:)

   Delete
 24. ''இதனால் அடுத்தவர்களுக்காக எனினும் நாம் மூட் அவுட் ஆகாமல் அல்லது முடிந்தவரை நம்மை கலகலப்பாக வைத்திருக்க முயற்சி செய்வது நல்லதே.;; கள உண்மையான வார்த்தைகள். நானும் fபின்பற்றுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ.. மறவாமல் அப்பப்ப வந்து போகிறீங்க மிக்க நன்றி.

   Delete
 25. ///அது சரி... ஆனா டெய்லி மூட் அவுட் ஆகிடுறீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)///

  20 speedla poka vendiya area vil oru man fasta drive pannaan and with loud blasting horn ..that particular area has three elders care homes..kovam vanthathu thapaa? ...???

  ReplyDelete
  Replies
  1. தப்பில்ல தப்பில்ல ஆனா தப்புப் பண்ணிட்டீங்களே:).. ஒரு கல்லெடுத்து கார்க் கண்ணாடிக்கு எறிஞ்சு உடைச்சுப் போட்டு ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கோணும்:) ஏதும் தேவை எனில் நான் வந்திருப்பேன் ஹெல்ப்புக்கு:).. அதிரா இருக்கப் பயமேன்ன்:))

   Delete
  2. மூட் அஉட் நோ....நோ...வந்தாலும்....பஞ்சாய் பறக் க வைத்திட முயற்சி எடுத்திடுவோம்....மொபைல் விரிவாக பதில் இட முடியால

   Delete
 26. நல்ல பகிர்வுகள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ மொகமட்.. மிக்க நன்றி.

   Delete
 27. ''' ஒரு பூனை திருட்டுப் போனது என்று சட்டத்தை நாடினால், ஒரு பசுவையே இழக்க நேரிடும்'' மிக அருமையான அர்த்தமுள்ள கோட். வழக்கு தொடுக்கும் ஒவ்வொருவரும் அறியவேண்டிய நற்கருத்து

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.

   Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.