ஆவ்வ்வ் மை முத்துராமன் மாமா:), பாடுபவர் மை பேவரிட் ஜேசுதாஸ் அங்கிள்:)

Tuesday, 7 February 2017

நான் பெத்த மகனே!!!  

ப்பவுமே, நகைச்சுவை, நகைச்சுவையான சினிமாக்கள் தான் அதிகமா தேடிப் பார்ப்போம். அந்த வகையில் போனகிழமை தேடிய இடத்தில்.. “நான் பெத்த மகனே” படம் கைக்குக் கிடைத்தது.

டிகர்கள் யாரென பார்த்தபோது, அத்தனை நகைச்சுவையாளர்களும் இருந்தார்கள்... மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேல்... இவர்களோடு ஊர்வசி.. மற்றும் ராதிகா, நிழல்கள் ரவி.

ப்போ என் சந்தோசத்துக்கு எல்லையே இல்லை, இதனை இப்பவே பார்த்து முடிக்க வேண்டும் என ஆரம்பித்தால்... முடிவு வரை நிறுத்தவே மனம் வரவில்லை எண்டால் பாருங்கோவன்... அவ்ளோ ஆர்வமா நகர்த்தியிருக்கிறார்கள் கதையை.

==========================இடைவேளை===========================
அப்போ எங்கட டொக்டர்- பிரின்சிபல்- செஃப் ... தாமோதரம்பிள்ளை அங்கிளைப் பார்த்தால் திருமணம் முடிச்சவர்போலவா தெரியுது:)).. ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))

=========== சரி சரி லைட் ஓவ் பண்ணியாச்சு, தடக்குப் படாமல் உங்கள் உங்கள் seat  களில் எல்லோரும் வந்து இருந்திடுங்கோ.. மாறிக்கீறி இருந்திடாதையுங்கோ....... இடைவேளை முடிஞ்சுது===_()_

ல்ல விடுப்ஸ் கதை:).. நல்ல நகைச்சுவையான காட்சிகள். ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், இடங்கள் பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.

மாமிமார்கள் எல்லோரும் ஒரு கட்சியாகவும், மருமகள்மார் எல்லோரும் ஒரு கட்சியாகவும் கூடி இருந்து பேசுவது, சந்தைக்குப் போய் வருவது எல்லாம் பார்க்க, அவ்விடத்தில் நாமும் இருந்தால் நன்றாக இருக்குமே எனும் ஆசை வருது..(மருமகளாக..,மாமியாராக இல்லை:)).. இதையெல்லாம் ஒழுங்காச் சொல்லிடோணும்)).

லோயராக கவுண்டமணியும், அவரிடம் கஸ்டமராக செந்திலும், செந்திலுக்கு மகனாக வடிவேல் வருகிறார். வடிவேலுக்குத் திருமணம் முடிந்து விட்டது, ஆனால் முதலிரவு நடப்பதற்குள்.. சம்பந்திமாருக்குள் பிரச்சனை ஏற்பட்டு வழக்கு தொடர்கிறது... தனக்கு எப்போ முதலிரவு நடக்கும் என பகல் கனவில் மிதக்கிறார் வடிவேல்ல்ல்.. நடந்ததா என்பதை அறியப் படம் பாருங்கோ:)).

னா நகைச்சுவைக்கு மத்தியில் நல்ல ஒரு படிப்பினையையும் ஒளித்து நகர்த்துகிறார்கள்.. ஒரே ஒரு மகனாக நிழல்கள் ரவி .. தன் மகனே உலகம் என வாழும் அம்மாவாக மனோரமா வருகிறார்.

தானாகவே விரும்பி மருமகளை செலக்ட் பண்ணுகிறார்..  ஒரு, தாய் தந்தை இல்லாத பெண்ணை, அப்போதான் மருமகள் தனக்குள் அடங்கி நடப்பார் என தப்புக் கணக்குப் போடுகிறார்... அம்மாவுக்காக  தன் காதலை விட்டுக் கொடுத்து, இப்பெண்ணை மணம் முடிக்கிறார் மகன்..

னா கொஞ்சம் ஓவராக, மனைவி கணவனுக்கு ஆசையாகச் செய்யும் பணி விடைகளை, மனைவியைச் செய்ய விடாமல் தானே செய்கிறார்.. மனோரமா., இதனால் மகனுக்கு எரிச்சல் வருகிறது... பின்பு மருமகளும் கொஞ்சம் மாமியை எதிர்க்க தொடங்குகிறார்.

வீட்டுக்குள் பூகம்பம் ஆரம்பம்... முடிவு கவலையான முடிவுதான்.. லோயர் ஆக ராதிகா வந்து நன்கு வாதாடுகிறார்.... விரும்பினால்.. பொழுது போகாதுவிட்டால் நிட்சயம் இப்படம் பாருங்கோ...  முடிவு கவலை எனினும் பார்க்கக்கூடிய படம், முடிவை சற்று மாற்றி அமைத்திருக்கலாம். மற்றும்படி படம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

சில கிராமங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தின் தழுவலாக இருக்கலாம் கதை.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதிராவும் சினிமா விமர்சனம் எழுதிட்டேன்ன்ன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஊசிக்குறிப்பு:
போனதடவை சிலபேர் வோட் பண்ணவில்லை என கறுப்புப் பூஸ் படைத்தலைவர் அறிவிச்சார்ர்:)) அதனாலதான் இம்முறை கண்காணிப்புப் படைத் தலைவரை:) இங்கின காவலுக்குப் போட்டிட்டேன்ன்:)).. சே சே சே எப்பூடி மிரட்டினாலும், சிலபேர் வோட் பண்ண மாட்டினமாமே:))
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

38 comments :

 1. ஊசிக்குறிப்பு : அவ்வப்போது செத்துப் போகிற ஒரு திரட்டிக்கு இந்த குறிப்பு தேவையா...? முந்தைய பதிவிலே சொன்னேன்... உங்கள் தளம் எதுவும் ஆகாது... உலகில் உள்ள எல்லா நாட்டவரும் உங்கள் தளத்தை பார்க்க வேண்டாமா...?

  படிப்பினை என்பதை யார் சொன்னால் கேட்பீர்கள்...? என்னமோ போங்க...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ டிடி வாங்கோ..

   /// அவ்வப்போது செத்துப் போகிற ஒரு திரட்டிக்கு இந்த குறிப்பு தேவையா...?///
   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க?:) அது உண்மைதான் எனக்கும் பலதடவை தெரியுதே இல்ல, ஸ்பீட்டும் இல்லாமல் இருக்கு என் பக்கம் மட்டும்...

   நான் மாற்ற மாட்டேன் எனச் சொல்லவே இல்லை.. மாத்தப்போறேன் என்றுதான் சொன்னேன்ன், ஆனா என்ன.. அந்த வேலையை விட, போஸ்ட் போடுவது கொஞ்சம் இன்றஸ்ட்டாக இருந்துது.. ஆர்வக்கோளாறில் போட்டிட்டேன்ன்...

   இப்பூடி ஏசிப்போட்டீங்க:).. இதோ பொயிங்கிட்டேன்ன்ன்ன்.. இப்பவே மாத்துறேன்ன் நடப்பது நடக்கட்டும்.. ஹா ஹா ஹா பூஸ் ஒன்று புறப்படுதே:))... மிக்க நன்றி.

   Delete
  2. வாவ்வ்வ்வ்வ் பூஸோ கொக்கோ மாத்திப்போட்டேன்ன்ன்.. டொட் கொம் ஆகிட்டுதூஊஊஊ.. இனி அப்போ எல்லோரும் வோட் பண்ணி மீ தான் டாப்பூ தமிழ் மணத்தில:)) ஹா ஹா ஹா....

   மிக்க மிக்க நன்றி சகோ தனபாலன்...(அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவாயினம்.. ஹா..ஹா..ஹா..).

   Delete
 2. இந்த கதை எப்போ வந்தது ..நான் பிறப்பதற்கு முன்னே வந்திருக்கும் அதான் பார்க்கக்கிடைக்கலை :)
  நான் வோட் பண்ண போறேனாக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஓமோம் நீங்க பிறப்பதுக்கு முதல்நாள்தான் றிலீஸ்ஸ் ஆச்சாம்ம்.. அதாவது 1818 ஆம் ஆண்டிலயாம்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

   ///நான் வோட் பண்ண போறேனாக்கும் :)///
   ஹா ஹா ஹா வெருட்டி வோட் போட வைப்பதிலயும் ஒரு ஹப்பி கிடைக்குது எனக்கு... எதுவுமே இல்லாட்டில் ஆரும் ஏதாவது செய்வினமோ?:) ஹா ஹா ஹா..

   Delete
  2. அஞ்சூஊஊஊஉ நீங்களும் டொட் கொம் ஆக்கிடுங்கோ...

   Delete
 3. நீங்க எதுக்கு தாமு அங்கிள் tummy மேலே கண்ணு வைக்கிறீங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அவர் சமைச்சுப்போட்டு அவரே சாப்பிடுவார்போல:)).. எல்லா சமையலும் ஸ்பூன் பாவிப்பார்கள் அதிகமா.. ஆனா இவர் மட்டும் மிளகாய்த்தூளை புளித் தண்ணியில் போட்டு(கையால் அள்ளிப் போட்டு).. கையாலேயே கலக்குவார்ர்.. பார்க்கவே வயிற்றைக் கலக்கும்.. கை எரியாது?... வித்தியாசமாக இருந்தாலே திரும்ப பார்க்கத் தோணுது:)..

   Delete
 4. நீங்க எதுக்கு மனுஷங்க படத்தை பார்க்கிறீங்க :)நியாயப்படி நீங்க ஸ்ட்ரீட் காட் பாப் படத்தைதான் பார்த்து ரிவ்யூ எழுதியிருக்கணும் :)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் தியேட்டரில் நித்திரை கொள்ளாமல் பார்த்து முடித்த முழுப்படம்.. “பூஸ் இன் பூட்ஸ்” தான்:))...

   மியாவும் நன்றி அஞ்சு.

   Delete
 5. நாலாம் நம்பர் வோட் என்னோடதாக்கும்.


  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா வாங்கோ கோபு அண்ணன்... கால் எடுத்து உள்ளே வைக்கு முன்பே வோட் பண்ணிடுறீங்க..... இதை எப்பவும் மறக்காமல் கொண்டினியூ பண்ணிடுங்கோ:))... காசா பணமா.. வோட் போடுவது எனக்குப் பிடிக்குது...உற்சாகம் கிடைக்குது.. அவ்ளோதான்...

   மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 6. Replies
  1. ஆவ்வ்வ் அதில் நிறைய இருக்குது கோபு அண்ணன்.. அனைத்தும் ரசிக்கும்படியா இருக்கு... முற்காலத்திலும் இதில் சில போட்டிருக்கிறேன்.

   Delete
 7. GIRLS & BOYS ..... SINGLE & MARRIED CARTOON SUPER ஆக இருக்குது.

  பல உண்மைகளைப் புட்டுப்புட்டுச் சொல்லுது.

  ஒல்லியான பெண்கள் திருமணம் ஆனபின் போந்தாக்கோழி போலவும், காற்றடித்த சைக்கிள் டியூப் போலவும் பருத்து விடுகிறார்கள் :)

  அதே நேரம் நல்லா இருக்கும் ஆண்கள் திருமணம் ஆனபின் உரித்த கோழிபோல உருப்படாத தோற்றத்துடன் ஆகிவிடுகிறார்கள் என்பது உண்மையே

  கருத்துள்ள படங்களைப் பார்த்து ரஸிக்க முடிந்தது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ////அதே நேரம் நல்லா இருக்கும் ஆண்கள் திருமணம் ஆனபின் உரித்த கோழிபோல உருப்படாத தோற்றத்துடன் ஆகிவிடுகிறார்கள் என்பது உண்மையே ////

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) திருமணத்துக்குப் பின்பு எந்த ஆந்தான் மெலிந்திருக்கிறார் சொல்லுங்கோ:)).. எல்லோரும் ஒருபடி பெருத்துத்தான் விடுகிறார்கள்.. பொய் எனில் உங்கள் போட்டோக்களையே ஒப்பிட்டுப் பார்த்து எனக்குச் சொல்லுங்கோ:))..

   ஆனா அஞ்சு வீட்டில மட்டும் இப்படம் கரிட்டாப்ப்ப் பொருந்துது:)).. ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:))... தேம்ஸ்ல தள்ளினால் நான் பிரீஸ்ஸ்ஸ் ஆகிடுவேன் இப்போ ரொம்பக் குளிருது தேம்ஸ்ஸ்ஸ்:))

   Delete
 8. //போனதடவை சிலபேர் வோட் பண்ணவில்லை என கறுப்புப் பூஸ் படைத்தலைவர் அறிவிச்சார்ர்:)) அதனாலதான் இம்முறை கண்காணிப்புப் படைத் தலைவரை:) இங்கின காவலுக்குப் போட்டிட்டேன்ன்:)).. சே சே சே எப்பூடி மிரட்டினாலும், சிலபேர் வோட் பண்ண மாட்டினமாமே:))//

  வோட் .... வோட் .... என அலைகிறீர்களே. இதனால் என்ன எம்.எல்.ஏ., அல்லது எம்.பி. பதவி கிடைத்து, அதன்பின் மந்திரிப்பதவியுமா கிடைக்கப்போகிறது ???????

  சுத்த வழுவட்டையான எதிர்பார்ப்புகள் மட்டுமே இவை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆவ்வ்வ்வ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வை திஸ் கொலவெறி கோபு அண்ணன்?:).. என்னில் ஒரு குணமிருக்கு.. எந்த விசயமாயினும் “செய் அல்லது செத்துப்போ” என்பது போல நடப்பேன்.. அதனால்தான் ஆரம்பம் பல காலம் தமிழ்மணம் இணைக்காமல் இருந்தேன், பின்பு இணைந்தபின், சும்மா ஏனோ தானோ என வச்சிருக்காமல் இருந்தால் ஒழுங்கா வோட் பண்ணி நல்லா இருக்கோணும், இல்லையா இருக்கப்படாது:) இதனால்தான் :).. ஒருவேளை குயின் அம்மம்மாவின் இடம் எனக்கே கிடைச்சிட்டால்ல்ல்ல்?:).. ஹா ஹா ஹா.. மிகுதிக்கு நாளை பதில் போடுறேன்...

   Delete
 9. வெற்றுத் துப்பாக்கியைக் கையில் பிடித்துள்ள பூனைப்படை தளபதி படம் நல்ல தேர்வு.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. மொத்தத்தில் இன்று என் போஸ்டை நன்கு ரசித்திருக்கிறீங்க, ரசித்ததோடில்லாமல் அதை வெளிப்படையா சொல்லியும் இருக்கிறீங்க... அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.

   Delete
 10. அதிரா உங்க ப்ளாக் திறக்க ரொம்ப நேரமெடுக்குது இப்போ லாப்டாப்லயும் ..

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அதேதான் அஞ்சு.. ஏதோ Html problem என அடிக்கடி சொல்லும்.. நான் அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை:) பேசாமல் போ எனச் சொல்லிட்டு என் வேலையைப் பார்க்கிறேன்ன்.. கிடைக்கும் நேரத்தில் கொமெண்ட்ஸ் போடுவதே பெரிய விசயம்.. அதில இதை எங்கே நோண்டிப்பார்ப்பதாம்ம்ம்:))

   Delete
 11. //இடைவேளை====//
  இது செல்லாது எங்கூர்ல இடைவேளைக்கு பாப்கார்ன் முறுக்கு கோலி சோடா பிஸ்கட்லாம் freeya கொடுப்பாங்க நீங்களும் தரணும் இல்லைன்னா அவ்ளோதான்

  ReplyDelete
  Replies
  1. ஓஓஒ ஓசில சினிமா ரிவியூ படிச்சதுமில்லாமல் ஓசியில பொப்கோன், முறுக்கு கோலி சோடா எல்லாம் கேட்குதோ?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒழுங்கு முறையா ரிவியூ படிச்சதுக்கான பணத்தைக் கொடுத்திட்டு வெளியே போங்கோ:))... haa haa haa...

   [im]http://68.media.tumblr.com/ae011c1daacec7ecec92832279ac9c07/tumblr_oab6n1QCmm1s6dcs3o1_500.jpg[/im]

   Delete
 12. ஹாய்..

  நானும் அந்த படம் பார்த்து இருக்கேன்...ம்ம்ம் ஆன sooo so சோகம்..பட் காமெடீஸ் செம்மய இருக்கும்..  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அனு வாங்கோ.. அச்சச்சோ அனுவின் புளொக்கை இன்னும் நான் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.. அடிக்கடி நினைப்பேன் பட் மறந்திடுறேன்...:(..

   படிப்பினையான ஒரு மூவி... முடிவைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... ஆனா இப்படியான முடிவுகள் இன்றும் தமிழ்நாட்டில் தொடருகிறது என்பதை அறியும்போதுதான் மிக வேதனையாக இருக்கும்.

   மிக்க நன்றி அனு.

   Delete
  2. இன்னும் என் பக்கமே நீங்க வரலையா...பரவால்ல...அங்க ஒன்னும் பெருசா இல்ல ரொம்ப மொக்க பதிவுகள்தான்...அதனால அவசரம் இல்லாம மெதுவா பூனை படையோட வாங்க..

   தமிழ்...
   https://anu-rainydrop.blogspot.in/

   இங்கிலீஷ்..
   http://anu-rainydrops.blogspot.in/

   Delete
  3. ஹா ஹா ஹா... மியாவும் நன்றி அனு... பூனைப்படை பாதுகாப்போடு வந்து பார்த்தேன் அங்கு மாரியம்மன் துணை நிக்கிறா:).

   Delete
 13. இந்தப் படம் நான் பார்த்திருக்கிறேன். மனோரமா ஆச்சி சிறப்பாக நடித்திருப்பார். இதே போல இன்னொரு படமும் உண்டு. அதில் எஸ் வி சேகர் கணவன் என்று நினைவு. ஆனால் சரியாக நினைவில்லை.

  ஒவ்வொரு வாட்டியும் நான் எந்த பிளாக் போனாலும் தம வாக்கு அளித்து விடுவேன். இங்கும், இப்போதும். ஆனால் தம சுற்றிக்கொண்டே இருக்கிறது. சுற்றிக்கொண்டே இருந்தாலும் அப்புறம் வாக்கு விழுந்துவிடும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ... ஓ நீங்களும் படம் பார்த்திருக்கிறீங்க... சோகமான முடிவாயினும் பார்க்கும்போது நிறுத்த முடியவில்லை.. நன்றாகப் போனது.

   ஓம் தமிழ்மணம் கையை வச்சு லொக்கின் போட்டு விட்டு.. சுத்தத் தொடங்கியதும், நான் அதை விட்டு விட்டு என் வேலையைப் பார்ப்பேன்ன்.. ஆனா அதுவும் கரெக்ட்டா தன் வேலையைப் பார்க்கும்... பழைய ரெம்பிளேட்டையே வைத்திருப்பதனாலோ என்னமோ..

   இன்னொன்று நானும் என் கண்ணில் தெரியும் இடங்களில் வோட் போட்டுவிடுவேன், ஆனா பல நேரங்களில் தமிழ்மண வோட் கண்ணுக்கு தெரிவதில்லை புளொக்களில்... மொபைலிலும் தெரியாது. இதுக்காகவே கொம்பியூட்டர் திறக்கவேண்டி இருக்கு.

   மிக்க நன்றி.

   Delete
 14. தம செத்துப்போய்விட்டது என்று டிடி பலமுறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். பயனோ இல்லையோ..., இருந்தாலும் நீண்டகாலப் பழக்கம்! அதனால் வாக்களித்து விடுகிறேன்!!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எனக்கு எதுபற்றியும் தெரியாது, ஆனா முன்பு தமிழ்மணத்தில் இணைந்த ஆரம்பத்தில் என் புளொக் 57 ஆம் இடத்தில் இருந்துது, பின்னர் இடையே கைவிட்டுவிட்டேன், மீண்டும் இப்போ ஆரம்பித்தபோது 789 என்னமோ எனக் காட்டியது.. இப்போ அடிக்கடி போஸ்ட் போடுவதால்... அது கடகடவெனக் குறைந்துகொண்டே வருது, இன்று பார்க்க 312 எனக் காட்டுது...

   இதில் ஒன்றுமில்லை ஆயினும் .. டயட் பண்ணிவிட்டு வெயிட் செக் பண்ணும்போது 2,3 கிலோ குறைச்சுக் காட்டினால்.. இன்னும் இதை தொடரலாமே எனும் ஒரு உற்சாகம் பிறப்பதுபோல...:)

   இப்படி குறையும்போது.. அடிக்கடி புளொக் எழுதோணும் எனும் ஆர்வம் தூண்டுது... அவ்வளவுதான் .. காசா பணமா?... சின்னச் சின்னச் சந்தோசங்கள்தானே...

   Delete
  2. இன்னுமொன்று... உங்கள் புளொக் தமிழ்மணத்தில் 3ம் இடத்தில் இருப்பதாக காட்டுது...
   அதை எப்படியாவது 1ம் இடத்துக்கு கொண்டு வந்திட முடியுமா என மனதில் அடிக்கடி நான் நினைப்பதுண்டு... அதனாலேயே நேரம் கிடைக்கையில் அதிகம் கும்மி போடுவதும் உண்டு:).. இதை அஞ்சுவுக்கும் சொல்லியிருக்கிறேன்... எதனாலும் எதுவும் கிடைக்கப்போவதில்லை, ஆனா குட்டிச் குட்டிச் சந்தோசங்கள் கிடைக்குது.. ஒரு உற்சாகம் கிடைக்குது...

   மிக்க நன்றி...

   Delete
  3. //உங்கள் புளொக் தமிழ்மணத்தில் 3ம் இடத்தில் இருப்பதாக காட்டுது...
   அதை எப்படியாவது 1ம் இடத்துக்கு கொண்டு வந்திட முடியுமா என மனதில் அடிக்கடி நான் நினைப்பதுண்டு... அதனாலேயே நேரம் கிடைக்கையில் அதிகம் கும்மி போடுவதும் உண்டு:).. இதை அஞ்சுவுக்கும் சொல்லியிருக்கிறேன்...//

   ஆஹா.... அதிரா... தன்யர்களானோம்! நன்றி. மிகவும் நன்றி.

   Delete
 15. இப்படி ஒரு படமா? பார்த்த நினைவும் இல்லை ப்டம் வந்ததாகவும் தெரியலை...தேடிப் பார்த்துடனூம் ....பூஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்காங்க...

  காவலாளி பூஸ் கிட்ட நாங்க தப்பிச்சுடுவம்...ஓட்டுப் போட்டா அது போட மாட்டேங்குது அதுக்கு நாங்க என்ன பண்றதாம்..சொல்லிப்போட்டுப் போங்கோ!!! பூசாரே கண்ணை மூடிக்கோங்கோ...நாங்க ஓட்டுப் போட்டுட்டம்னு சொல்லிக்கறம்...ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ துளசி அண்ணன், கீதா வாங்கோ... எனக்கும் தெரியாது தேடிய இடத்தில் கிடைச்சுதே...

   //பூஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்காங்க...//
   டாங்ஸ்ஸ்:)

   ///காவலாளி பூஸ் கிட்ட நாங்க தப்பிச்சுடுவம்...///

   ஹா ஹா ஹா சரி சரி இம்முறை மட்டும் காக்கா போயிட்டாராம் பூஸார்ர்( கண்டும் காணாமல் போயிட்டார் எனச் சொன்னேன்:)).

   மிக்க மிக்க நன்றிகள் வருகைக்கு.

   Delete
 16. உங்கள் பதிவில் கடிதமும் பதில்களும் மிக அருமை. அப்போ பதிவு நல்லா இல்லையா என கேட்கக்கூடாது. அதுவும் அருமையே

  ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.