என்ன இது எல்லோருமே கறுப்புக் கறுப்பாத் தெரிகினமே?:) என்னாச்சு?.. ஓவரா சன் பாத் எடுத்திருப்பினமோ...
வீட்டிலிருந்து எடுத்த படம்.. நேவி ஷிப் போவது தெரியுதா?:) பீ கெயாஃபுல்:)[ஹையோ எனக்குச் சொன்னேன்].
எங்கள் இடத்தில் மார்ச் மாதம் தொடங்கினால், ஒக்டோபர் வரை ஒரே பூ மயமாகவே இருக்கும்.. ஒவ்வொரு மாதத்துக்குமென ஒவ்வொரு வகையான பூக்கள்... வோக் போகும்போது பூக்களை ரசிக்கவே நேரம் போதாது... அத்தோடு உல்லாசக் கப்பல்களின் வருகையும் அதிகரிக்கும் ஆற்றில்....
வீட்டிலிருந்து எடுத்த படம், ஸ்னோ மலை தெரிகிறதோ?..
ரீ குடிக்கிறேன்ன் அதனால வெரி சோரி:)
எழுந்து நின்று படமெடுக்க அலுப்பாக இருக்கு:)
இது கொஞ்ச நாள் முன்பு எடுத்தேன், முன்பின் தெரியாத பாதை.. ஸ்கூல் அருகில் இருக்கு, சரி நேராக இருக்கே நடந்தால் ஸ்ரெப்ஸ் எண்ணிக்கை கூடுமே என நடக்கத் தொடங்கிட்டேன்.. மனதிலே வைரவைக் கூப்பிட்டுக்கொண்டே:).., மரங்கள் இலை வரவில்லை ஆதலால்.. ஓபினாக இருந்துது.
ஆத்தங்கரையாலயே நடக்கலாம் வாங்கோ...
மலையின் பின்னால் சூரியன் ஒளிக்கிறார்.. ச்சும்மா வோக் போகப் போக எடுத்த படங்கள்.
ஸ்ஸ்ஸ் ரொம்ப ரயேட்டா இருக்குது, கொஞ்ச நேரம் இதில நிண்டு புறுணம் பார்த்திட்டுத் தொடருவோமே:)..
எங்கள் ஆத்தைப் பார்த்துப் பயப்பிடாமல் வாங்கோ.. நிறைய Mackerel,, Salmon மீன்கள் உண்டு...
ஏப்ரல் மாதம் முழுக்க இவை பிங் அல்லது வைட் கலரில் ஊரெல்லாம் காட்சி தரும்.. பெரும்பாலும் மழை பெய்தே அழகை கெடுத்து விடும், இம்ம்முறை மழை இன்னும் வரவில்லை அதனால பூக்கள் எல்லாம் அப்படியே மரத்தில் அழகோ அழகு..:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதைப் படிச்சதில இருந்து, நானும் இனிக் கோபப் படலாம் என நினைக்கிறேன்:).. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?:)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவையும் இங்கு மார்ச் ஏப்ரல் மாதத்தில் பூக்கத் தொடங்கும்..
எங்களிடமும் இருக்கு..
கீழே வலது பக்கம் இருப்பது, ஒரு மலையிலிருந்து.. கீழே இறங்கும் பாதை[நடை பாதை மட்டும்], பார்க்க தெரியவில்லை.. ஆனா மெதுவாக இறங்கும்... ஸ்ரெப்ஸ் கவுண்டருக்காக எங்கெல்லாம் நடக்க வேண்டி இருக்குது பாருங்கோ:)
இது, விண்டருக்கு வெறும் கிளைகள் மட்டுமே இருந்த மரம், இப்போ முதன் முதலில் வெள்ளைப் பூக்களை வெளியில் விட்டிருக்கு.. இனித்தான் இலைகள் வரும்... எல்லாம் அதிசயமாகவே இருக்கு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இது எங்க வீட்டு மகாராணிகள்:).. இலையிலாமல் இருந்து, இப்போ எப்படி குருத்துக்கள் வருகின்றன எனப் பார்க்க எடுத்தேன்.
இவையும் எங்கள் வீட்டு முற்றத்து முல்லைக் கொடிகள்.. உற்றுப் பாருங்கோ தடித்த மொட்டுப்போல வருகிறதே.. அவை இப்போ இலைகளாக விரிந்து விட்டன.. இவ எங்கட பிங்கி ராணி.. இப்போ நிறையப் பூத்திட்டா..[சுவாமிப் படத்துக்கு வச்சனே நினைவிருக்கோ?:)]
இப்போ இங்கு மக்கள் + ஸ்கூல் பிள்ளைகள் கேம், ஃபோன் என இருப்பதால் சாப்பிட்டுச் சாப்பிட்டுக் குண்டாகீனம் என... நடக்கும் இடங்களில், இப்படி ஃபிரீ ஓபின் ஜிம் வசதி...செய்து கொடுத்திருக்கிறது அரசாங்கம்..
என்ன அழகு.. எத்தனை அழகு.. கோடிமலர் கொட்டிய அழகு.. எங்கும் அதிராக்குப் பிடிச்ச பிங்ங்ங்ங் மயம்:)
நடக்கும்போதே... சிந்திச்சேன்ன்.. உண்மைதானே இது?. காசா பணமா, எம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவோமே..
இந்த ரோட் முழுவதும் இப்படியேதான் இருக்கும்..
ஊசி இணைப்பு:
இது யாருடைய வீட்டு நிகழ்வாக இருக்கும்?:) .. எனக்கு தெரியவே தெரியாது:).
எனக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்.. இம்முறை உங்களுக்கு என் போஸ்ட் பிடிக்காதென்பது, ஆனா ஒவ்வொரு தடவையும் நிறைய எழுதி, உங்கள் கண்ணுக்கும் கிட்னிக்கும் வேலை வைக்கிறேன் என்பதால், இம்முறை கண்ணுக்கு குளிச்சியாக மட்டும்:)..
கேட்டதில் பிடிச்சுப்போச்சு.. அதனால அதை இங்கே காவி வந்திருப்பவ்ர்.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாத்திரமான புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்:
“முகிலிடை இருக்கும்வரை - நிலவு
ஒளியற்றுத்தான் இருக்கும்”
=====================================================================
இம்முறை நான் யாரையும் வோட் போடும்படி கேட்கமாட்டேனாக்கும்:).. ஏனெனில் இம்முறை என் போஸ்ட் பிடிக்காது என்றே நம்புகிறேன்ன்.. இருப்பினும் லிங் இணைப்பது..///// ' த ம ' ன்னா வாக்களிப்பது ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம் நிறைவேற்ற இதோ லிங்க்///
[இந்த எழுத்துக்களை நான் எங்கேயும் களவெடுத்து வரவில்லை:)]
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459106
=====================================================================
இம்முறை நான் யாரையும் வோட் போடும்படி கேட்கமாட்டேனாக்கும்:).. ஏனெனில் இம்முறை என் போஸ்ட் பிடிக்காது என்றே நம்புகிறேன்ன்.. இருப்பினும் லிங் இணைப்பது..///// ' த ம ' ன்னா வாக்களிப்பது ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம் நிறைவேற்ற இதோ லிங்க்///
[இந்த எழுத்துக்களை நான் எங்கேயும் களவெடுத்து வரவில்லை:)]
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459106
|
Tweet |
|
|||
[//சுவாமிப் படத்துக்கு வச்சனே நினைவிருக்கோ?:)]//
ReplyDeleteஆமா யெஸ் :) அது பக்கத்து தட்டில் ஸ்கொட்டிஷ் கரன்சி கூட இருந்ததே :)
அது பிரிட்டிஷ் பவுண்ட் (20 etc) என்றல்லவா நினைத்தேன்.
Deleteவாங்கோ அஞ்சு வாங்கோ... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அன்று நைட்டே அந்த தட்டோடு பணத்தைக் காணமே:) அப்பவே நினைச்சேன்ன் அது அஞ்சுவாத்தான் இருக்குமென.. சபை நாகரீகம் கருதி இங்கின சொல்லல்லே:)
Deleteவாங்கோ நெல்லைத் தமிழன்.. ஒரு காலத்தில் ஸ்கொட்லாந்து தனிநாடாக இருந்தது.. பின்னர் இந்த இங்கிலீசுக் காரர்கள்[England]கைல கால்ல விழுந்து கெஞ்சி.. ஒரு நாடாக்கித்தான் “பிரித்தானியா” எனப் பெயரிட்டார்கள். United Kindom. ஆனா ஸ்கொட்லாந்து ஒன்றாகச் சேர்ந்தாலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவில்லை... படிப்பு, பணம், மருத்துவம் அனைத்திலும் தனித்தே நிற்கிறது. ஏன் தெரியுமோ... அதிகம் அறிவாளிகள் ஸ்கொட்டிஸ் தான்... உலகின் பல விஞ்ஞானிகள் ஸ்கொட்டிஸ்தான்... ரெலிபோனைக் கண்டுபிடிச்ச பெல் கூட.. பிறந்தது ஸ்கொட்லாந்து... நெட்டில் சேர்ஜ் பண்ணுங்கள் காட்டும்..:) ஹா ஹா ஹா புகையப்போகுது விட்டிடலாம்.
Deleteஇந்த பவுண்ட்ஸ் தாம் நம்முடையதும்... பெயரும், அதிலிருக்கும் படங்களும் தான் மாறியிருக்கும்.. பெறுமதி ஒன்றேதான்... அது இங்கிலண்ட் பவுண்ட்ஸ் என்போம்.. இது ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்.. கூகிளில் Scottish pounds என பாருங்கோ.
'நீங்க சொல்றது உண்மைபோல் தெரியலையே. ஸ்காட்லாந்த் யார்டு உலகிலேயே ஃபேமஸ். அப்படின்னா, மற்றவர்களைக் கண்காணிப்பதிலும் குற்றத்தைக் கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்த் மக்கள் பெஸ்டுன்னு ஒத்துக்கிடலாம். ஆனால், அறிவாளி இனம் என்று சொல்லப்படுவது யூதர்கள்தானே. ஒருவேளை, நீங்கள் அந்த நாட்டுக்குப் போனபிறகு, அறிவாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகிவிட்டதோ?
Deleteஹாஹாஆ :) நெல்லைத்தமிழன் வெரி குட் ..இந்த ஸ்கொட்ஸ் இப்படித்தான் சும்மா பில்டப் ..நான் வந்து நிறைய சொல்றேன்
Deleteக்கும் :) கலர் கலரா பிள்ளைங்க விளையாடுற பணம் மாதிரி இருக்கு :) எங்க பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் போல வருமா வருமா வருமா
Deleteஆம் செம பில்டப்புதான்..கஹஹஹ
Deleteகீதா
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லைத் தமிழன்.... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ம்ம்ம்ம்ம்:) என்னைப் பார்த்தா போதுமே .... ஸ்கொட்டிஸ் எல்லோருமே அறிவாளிகள் என்பதை நிரூபிக்க....:) ஹையோ வழி விடுங்கோ வழி விடுங்கோ மீ முருங்கில ஏறிடுறேன்ன்ன்ன்ன்ன்:)
Delete///AngelinTuesday, May 09, 2017 9:06:00 am
Deleteஹாஹாஆ :) நெல்லைத்தமிழன் வெரி குட் ..இந்த ஸ்கொட்ஸ் இப்படித்தான் சும்மா பில்டப் ..நான் வந்து நிறைய சொல்றேன்
///
ஸ்ஸ்ஸ்ஸ் நீங்க ஸ்கூலுக்குப் போன அந்த சைக்கிளைக் கண்டு பிடிச்சதும் ஸ்கொட்டிஸ் தான் தெரியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்... இல்லையெண்டால்ல்ல் நீங்க நடை ராணியாத்தான் போயிருக்கோணும்....
ஸ்ஸ் ஒண்ணுமே த்ர்ரியாது ஆனா தனக்கு எல்லாம் தெரியுமெண்ட பில்டப்பூ வேற:)
ஆங்ங்ங் கீதா... நீங்க சமீபத்தில போன ரெயின் எஞ்சினைக் கண்டு பிடிச்சதும் நாமதேன்ன்ன்ன்:)... நேக்கு தற்புகழ்ச்சி பிடிக்காதாக்கும்:)
Deletehe first chocolate bar was created by JS Fry & Sons of Bristol in 1847.
DeleteBarometer, anemometer, and hygrometer (invented or improved) - Robert Hooke
* Hooke's Law (equation describing elasticity) - Robert Hooke
* Electrical generator (dynamo) - Michael Faraday
* Galvanometer - William Sturgeon
* Infrared radiation - discovery commonly attributed to William Herschel.
* Newtonian telescope - Sir Isaac Newton
* Micrometer -
The first lawn mower was invented by English engineer Edwin Beard Budding in 1827.
பீரியாடிக் டேபிள் கண்டுபிடிச்சது ஜான் அலெக்ஸ்சாண்டர் நியூலன்ட்
The Law of Gravity - Sir Isaac Newton
Delete* Newton's laws of motion - Sir Isaac Newton
* DNA fingerprinting - Sir Alec Jeffreys
* Smallpox Vaccination - Edward Jenner
* Electromagnet - William Sturgeon
Daylight saving time - William Willett [16]
* Bayko - Charles Plimpton
* Linoleum - Frederick Walton [17]
* Meccano - Frank Hornby
* Crossword puzzle - Arthur Wynne
* Gas Mask - John Tyndall and others
* Steel-ribbed Umbrella - Samuel Fox
ஹாஹா ஹாரி பாட்டர் எழுதியதே எங்க பிரிட் அக்கா தானே
Deleteஸ்மால் பாக்ஸ் வாக்சின் கண்டுபுடிச்ச எட்வார்ட் ஜென்னர் , மீடியா நெட்ஒர்க் ட்ரெயின் ஓனர் ரிச்சர்ட் பிரான்சன் பிரிட்டிஷ்
Deleteடேவிட் அட்டன்பரோ ,டேவிட் பெக்கம் ,ஷேக்ஸ்பியர், சர்ச்சில் ,பால் மெக்கார்ட்னி ,ஜான் லெனான் ,jane austen ஸ்டஈவன் ஹாக்கிங் சார்லி சாப்ளின் ,மைக்கேல் பாரடே ,சார்ல்ஸ் டார்வின் எல்லாருமே பிரிட்டன்ஸ் :)
ஹா ஹா ஹா ஹலோ பிஸ்ஸு.. எதுக்கு இவ்ளோ போட்டி?:) இங்கிலாந்தில் இருப்போர் எதையும் கண்டு பிடிக்கவில்லை எனச் சொனேனா இல்லயே கர்:)..
Deleteநாங்க[ஸ்கொட்டிஸ்] நிறைகுடம் போல ஆக்கும்..க்கும்..க்கும்.. தளம்ப மாட்டோம்:).. அதிக விஞ்ஞானிகள் உருவாகிய இடம் ஸ்கொட்லாண்ட் தான் என ஆராட்சி முடிவுகள் சொல்லுது.. பிரித்தானியாவில்..
பிரிட்டன் [Britain]என்பதுக்குள் ஸ்கொட்லாந்தும் அடங்கும்.. இங்கிலாந்து [England]என்பது மட்டுமே தனி நாடாகும்...
சரி சரி விடுங்கோ.. நம் நாடு இது இல்லையே... பிரிட்டிஸ் பாஸ்போர்ட் எடுத்து விட்டாலும், பிறந்த நாடுதானே நம் நாடாகும்.. பிறகெதுக்குப் போட்டி நமக்குள்.
[im]http://brilliantmaps.com/wp-content/uploads/England-vs-GB-Vs-UK.gif[/im]
ஹா ஹாங் :) எல்லை தாண்டிய பயங்கர வாதம் தெரியுமே ரியுமே யுமே மே :) உண்மையை சொல்லட்டா :)
ReplyDeleteஹா ஹா ஹா உங்களுக்கு தெரியாட்டில்.. அஞ்சுவுக்கு டிமென்ஸியா ஆரம்பமாகிட்டுது எனச் சொல்லியிருப்பனே:).. ஹா ஹா ஹா.. தலைமறைவு:).
DeleteMe landed here in mobile ms.myaaaaav!!!😎
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ் மஞ்சள்பூ மகி லாண்டட்... வாங்கோ மகி வாங்கோ... கரெக்ட்டா வந்தீங்க 2 வதா மகி.. ஆயா உங்களுக்கே...:) ரெண்டு குட்டீஸ் உடன்.. ஆயாவையும் பத்திரமா பாருங்கோ மகி.. இந்தக் குளிர் அவோக்கு ஒத்துக்கொள்ளல்லையாம்.. ஒரே இருமல் காச்சல்:).. என்னால முடியல்ல.. கூட்டிப்போய் பத்திரமா ஏதும் சூப் வச்சுக் குடுங்கோ பிளீஸ்ஸ்.. ஹா ஹா ஹா..
Deleteமியாவும் நன்றி மகி.. ஆயா பத்திரம்:).
/காசா பணமா, எம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவோமே//ஆமாம் எனக்கும் மிகவும் பிடிச்சது இதே
ReplyDeleteஅப்போ இனி சமையல் குறிப்பேதும் போட மாட்டீங்க என சத்தியம் பண்ணுங்கோ:)...
Deleteமீதி கமெண்ட்ஸுக்கு நாளை வரேன்
ReplyDeleteஒரு கப் வெஜ் சூப் செய்து எடுத்து வாங்கஞ்சு... அப்போதானே மீ உசாரா பைட் பண்ண முடியும் இங்கின:)
Deleteவணக்கம்
ReplyDeleteஒவ்வொரு படங்களும் அழகு இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்கோ ரூபன் வாங்கோ.. மறக்காமல் அப்பப்ப வந்து போகிறீங்க மிக்க நன்றி.
Deleteஆஹா... ஆத்தோரத்தில் வீடா.. அருமை. இந்நேரம் நானாயிருந்தால் ஏகப்பட்ட கவிதைகள் எழுதி பத்து புத்தகங்கள் புஸ்தகாவில் ரிலீஸ் செய்திருப்பினம்!
ReplyDeleteகிட்டத்தட்ட இப்போது இருக்கும் இடம் ஆற்றோரம்போல்தானே (நான் மரத்தடியைச் சொன்னேன் :)) ). கவிதை ஏதும் வந்ததா ஸ்ரீராம்?
Delete///நெல்லைத் தமிழன்Tuesday, May 09, 2017 6:29:00 am
Deleteகிட்டத்தட்ட இப்போது இருக்கும் இடம் ஆற்றோரம்போல்தானே (நான் மரத்தடியைச் சொன்னேன் :)) )//
ஹா ஹா ஹா முதலில் எனக்கிது புரியவில்லை... லேட்டாத்தான் பத்திச்சுது ஹா ஹா ஹா.. அந்த மொட்டைமாடியை நேர்நோக்கும்.. பெரிய மரம் சுவாமிப்படம் மாட்டி கழட்டி எறிஞ்ச.... வெள்ளம் .... ஆறு.. ஹா ஹா ஹா ஹையோ ஸ்ரீராம் அடிக்கப்போறாரே:).
யாரது ஸ்ரீராமை கிண்டல் பண்றது ஐ அம் வெரி ஆங்க்ரி
Deleteநான் இருக்கும்போது என்னோட சேர்ந்து கலாட்டா பண்ணனும் டீல் ஓகே :))))))))))
ஏஞ்செலின்... கோத்துவிடாதீங்க. சும்மா ஜாலிக்காக எழுதுனது. ஸ்ரீராம் என்னைவிட ரொம்பப் பெரியவராக்கும் (இதுலயும் வம்பு இழுத்துவிடாதீங்க). ரொம்ப வருஷமா வலைத்தளத்துல இருக்கறதுனால (எனக்கு முன்னமேயே) அவர் என்னைவிடப் பெரியவராக்கும்.
Deletehaa haa :)
Deleteவாங்கோ சகோ ஸ்ரீராம்.. இம்முறை விடிய எழும்பி உங்கள் கொமெண்ட்ஸ் பார்த்து நான் ஷாக்ட் ஆகிட்டேன்ன் சந்தோசத்தில.. அவ்ளோ கொமெண்ட்ஸ்:)..
Deleteஉண்மைதான், இப்படியான லொக்கேசனில் கவிதை, கதை எழுத தோணும்... ஆனா எங்களுக்கு அலுத்து விட்டது.. பல சமயம் கேட்டினையே திறக்காமல் விட்டிடுவோம்.. ஹா ஹா ஹா.. அண்ணன் வந்து நின்றபோது பேசினார்... இவ்ளோ அழகான வியூவை வச்சுக்கொண்டு கேட்டினைப் பூட்டி வைக்கிறீங்களே என..:).
//கவிதைகள் எழுதி பத்து புத்தகங்கள் புஸ்தகாவில் ரிலீஸ் செய்திருப்பினம்!///
ஹா ஹா ஹா புஸ்தகாவில் ரிலீஸ் பண்ணியிருப்பீங்க.. அதில கொஞ்சம் ஃபிரீயா எனக்கும் அனுப்பியிருப்பீங்க(ச்சும்மா ஒரு நம்பிக்கையில் சொல்றேன்ன்).. அதை வாசிச்சு.. இந்நேரம் ரிவியூவும் எழுதியிருப்பேன்:)..
ஊசிக்குறிப்பு: அஞ்சு ரிவியூ எழுதியிருக்க மாட்டாவாக்கும்:) ஹா ஹா ஹா.
யாழ்ப்பாணத்தமிழ் இப்போ நீங்களும் பேசத் தொடங்கிட்டீங்களோ? ஹா ஹா உங்களைப்போலத்தான் பகவான் ஜீ உம் பேசுறார் பச்சைப் பிழை பிழையா ஹா ஹா ஹா.. அது அடுத்தவர்களைச் சொல்லும்போதுதான்.. பண்ணியிருப்பினம்.. செய்திருப்பினம் என வரும்.. நம்மைச் சொல்லும்போது அப்படி வராதாக்கும் கர்ர்ர்ர்:)
///நான் இருக்கும்போது என்னோட சேர்ந்து கலாட்டா பண்ணனும் டீல் ஓகே /// நீங்க எப்போ இருப்பீங்க? கர்ர்ர்ர்ர்ர் எப்ப பார்த்தாலும் ரோட்லயே நிக்கிறீங்க?:).. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் ஏதோ ஒரு ஃபுளோ சொல்லிட்டார்ர் இப்போ பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்காம்ம்ம்:)... ஹா ஹா ஹா
Delete///ரொம்ப வருஷமா வலைத்தளத்துல இருக்கறதுனால (எனக்கு முன்னமேயே) அவர் என்னைவிடப் பெரியவராக்கும்.///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோ நான் இதுக்கு இப்போ ஸ்ரீராம் பக்கம்:).. ஏனெனில் அப்படிப் பார்த்தா மீ ரொம்ப வயசில பெரிசூஊஊஊஉ எனச் சொல்லிடப்போறீங்க:) அதனால ஸ்ரீராமை ரொம்பப் பெரியவர்:) எனச் சொன்னதை வன்மையாக் கண்டிக்கிறேன்ன்:) ஹா ஹா ஹா ஹையோ இப்பூடியே போனால் என் இமேஜ் என்ன ஆகிறது?:)
@நெல்லை தமிழன் வலைப்பூ சீனியாரிட்டி பார்த்தா அதிரா நமக்கெல்லாம் பெரியக்கா @:)
Deleteசின்ஸ் 2007
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஒரு சுவீட் 16, வலையுலகில் அதிகம் மூத்தவரா இருக்கே என உங்கள் எல்லோருக்கும் பொறாமை:).
Deleteஆத்தோரத்தில் (ஆலமரம் காணோமே) இருந்தாலும் அந்த ரெண்டு மரங்கள் மொட்டையாக இருக்கிறதே ஏன்? ஒரு ஹிந்திப் பாடல் நினைவுக்கு வருகிறது.. சாகர் மேரே கித்னா பாஸ் ஹை.. பிர் மேரே மன் மே கித்னா பியாஸ் ஹை...
ReplyDeleteஹா ஹா ஹா இங்கு ஆல மரமும் இல்லை.. அதிலுறங்கும் கிளியும் இல்லை..:).
Deleteஅந்த மரங்கள்... அது இங்கு விட்டரில் எல்லா மரமும் இப்படித்தான் இருக்கும்.. இலை ஏதும் இல்லாமல்.. இப்போ இளவேனிட் காலம் தொடங்கிட்டுது.. அவைதான் பிங்கி பிங்கியாப் பூத்துக் குலுங்குகிறார்கள்.. இனி இலைகள் வந்து பச்சைப்பசேலென ஆகிடும்...
நீங்கள் நிட்சயம் என் இந்தப் போஸ்ட் பாருங்கோ.. புரியும்..
ஓ பாட்டு... பகூத் அச்சா:).
http://gokisha.blogspot.com/2011/06/blog-post.html
பாடல்நா ன் சொன்னது காசி (விக்ரம் நடித்தது) ஆத்தோரத்தில ஆலமரம் ஆலமரம்.... ஹரிஹரன் பாடியது. மனோ பாடிய ஆத்தங்கரை மரமே அல்ல!
Deleteஓ நீங்க காசி படப் பாடலைச் சொல்றீங்களோ.. அதுவும் நல்ல பாட்டு.. மறந்தே போயிட்டேன் அதை.. மரத்தையும் ஆற்றையும் வைத்து எத்தனை பாடல்கள் வந்திருக்கின்றன...
Deleteஆத்தோரத்தில் ஆலமரம்...
ஆத்தோரமா அந்தப் பக்கம் குருவிக்கூடு...
ஆத்தா ஆத்தோரமா..
ஆத்தங்கரை மரமே...
மிக்க நன்றி ஸ்ரீராம்.
புறுணம் என்றால் என்ன என்று கேட்க வந்தேன். அதை ரைப் (!!) செய்தால் கூகிள் புராணம் என்று தருகிறது. ரைட்டா?
ReplyDeleteஇதுக்கு மட்டும் விடை சொல்லிட்டு ஓடிடுறேன்.. பின்பு வாறேன் அனைத்துப் பதில்களுக்கும்...
Deleteஹா ஹா ஹா என் பாசைக்கு எந்த டிக்ஷனறியும் பதில் இருக்காது:). அது “புதினம்”.. விடுப்ஸ்.. அதைத்தான் புறுணம் என்பேன்ன் கொஞ்சம் ஸ்டைலா:) ஹா ஹா ஹா:).
ஆண்டவா... விளக்கமும் தப்பா. 'புதினம்' என்றால் நாவல் என்றால் பெரிய கதைப் புத்தகம். 'விடுப்ஸ்' - இது என்ன. விடுமுறையை ஷார்ட்டா சிலர் சொல்லுவினம். அல்லது விடுகதையா? அதிரா சொல்ற வார்த்தைகளை டிக்ஷனரியிலும் பார்க்கமுடியாது. கூகுள் செர்ச் எஞ்சினும் தேடித் தேடி மூச்சு பேச்சு இல்லாமல் படுத்துவிட்டது.
Deleteஅஞ்சூஊஊஊ பீஸ்ஸ்ஸ் மேடைக்கு வரவும்:).. விளக்கம் கொடுக்க:)
Deleteஹையோ ஹையோ இந்த பூனைக்கு செக்கரட்டரியா இருந்து நானா படற பாடு :)
Deleteநெல்லைத்தமிழன் புதினம்னா ஆச்சர்யம் :) ஸ்ரீலங்கன்ஸ் அப்படிதான் சொல்வாங்க
இது என்ன புதினம் அப்படினா ..இதென்ன அதிசயமாருக்கு அப்படின்னு எடுத்துக்கணும் ..
ஒரு ஒரு இலங்கை அக்கா என்கிட்டே அவங்க வீட்டுக்கு போனப்போ கொஞ்சம் நில்லுங்களேன் அப்டினாங்க அப்படினா வெயிட் ப்ளீஸ் அப்படின்னு அர்த்தமாம் அந்தக்கா சொல்லிட்டு வடை சுட்டு திரும்பும் வரைக்கும் நானா ஸ்டாண்டிங் :)
அவங்க சிறிசிஜிட்டே சொன்னாங்க ..இல்லமா நிக்க சொல்லலை னு
இப்போ அதிரா கூட சேர்ந்து நானும் தெனாலி ஆகிட்டேன் :))))))
ஜெய் ஓடியாங்க போரடிக்குது
//விடுப்ஸ்// this is gossip in athiramiyaavs dictionary :))
Deleteவிடுப்ஸ்னா ..இப்போ ஒளிஞ்சி பார்த்துட்டு ஏன்னா நடக்குதுன்னு நைசா ஒளிஞ்சி பார்க்கிறார்களே அது விடுப்ஸ் கியூரியாசிட்டி :)
Vidups is inquisitive
Deleteஆவ்வ்வ்வ் பார்த்தீங்களோ என் செக்கரட்டறியின் திறமையை.. அக்குவேறு ஆணிவேறா விளங்கப்படுத்திட்டா:)..
Deleteஅது என்னண்டால்ல்ல். சுவீட் 16 இன் பாசைகள் பெரியாட்களுக்குப் புரியாதுதானே:).. என்னைப்போல சுவீட் 16 ஆட்களுக்கு மட்டுமே புரியும்:) ஹையோ வழி விடுங்கோ.. ஓசை சாப்பிட்டதால ஓடவும் முடியுதில்லயே முருகா:).
///இப்போ அதிரா கூட சேர்ந்து நானும் தெனாலி ஆகிட்டேன் :))))))
Deleteஜெய் ஓடியாங்க போரடிக்குது///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அல்லாவே என, தானுண்டு தன்பாடுண்டு என இருக்கும் ஜெய் ஐ எதுக்கு இப்போ கூப்பிடுறீங்க?:).. சேர்ந்து என்னைத் தேம்ஸ்ல தள்ளவோ?:).. அவரின் தியானத்தைக் கலைக்காதீங்க:)
"கொஞ்சம் நில்லுங்க" - இதையும் நாங்க உபயோகப்படுத்துவோம். இல்லாட்டா, 'ஒரு நிமிஷம்.. வந்துர்றேன்' அப்படின்னாலும், இங்கனயே இருங்க, இதோ வந்துடறேன்னு அர்த்தம்.
Deleteநாகூர் ஹனீபா பாட்டு கேட்டிருக்கீங்களா? 'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. திரு நபியிடம்போய் சொல்லு.. சலாம் சொல்லு".
ஆவ்வ்வ்வ் அப்போ நில்லுங்கோ எனும் வார்த்தை அங்கும் இருக்கா... எனக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்ர்.. எவ்ளோ நேரம்தாம்மா நான் நிற்கிறது என:).. அதனாலயே இப்போ நான்... ”இருங்க” எனச் சொல்லப்பழகி வருகிறேன்:).
Deleteகேட்டிருக்கிறேனே.. ஓ அது நாஹூர் ஹனிபாவின் குரலா..
டி ஜோக் சிரிப்பு (பின்னணியில் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா)
ReplyDeleteஹா ஹா ஹா கேட்குது கேட்குது:)
Deleteகண்ட்ரோல் ஏ போடும்போது கு விட்டுப்போச்சு மன்னிக்கவும்! என்னிடமே நின்று விட்டினம்!
ReplyDeleteஹையோ ஸ்ரீராம்.. ஹா ஹா ஹா கை எடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன்ன்.. நீங்க உங்க தமிழ்ழயே பேசுங்கோ ஹா ஹா ஹா முடியல்ல முருகாஆஆஆஆஆஆ:).. நானே போய் தேம்ஸ்ல குதிச்சிடுவன் போல இருக்கே:).. இந்த சுவீட் 16 லயே போயிடுவனோ என எனக்கு இப்பூடி வியர்க்குதே:)
Deleteஆற்றுத் தண்ணீர் கொஞ்சம் அழுக்கா, கருப்பா இருக்கோ! டவுட்டு.
ReplyDeleteஅது இந்த ஆறு இப்படியே போய் சமுத்திரத்தில் கலக்கிறது.. அதனால்தான் கப்பல்கள் வந்து போகிறது... கப்பல்கள் வந்து போவதால் தண்ணி பளிங்காக இல்லை.. அத்தோடு பயங்கர ஆளம்.. பெயர்தான் ஆறு.. ஆனா கடல்போலத்தான்.
Deleteநாம் நாமாக இருந்தால் போதும் (பெட்டிச் செய்திக்கு பதில்!)
ReplyDeleteஅது உண்மைதான்,, நமக்கென இயல்பாக இருக்கும் குணங்களை மாற்ற வெளிக்கிட்டால்ல். பின்பு நடிப்பதுபோலாகிடும்.. நடிப்பு நிலைக்காது.
Deleteஅப்பா... எத்தனை படங்கள்? ஊசிக்குறிப்பைத் தேடித்தேடி கண்கள் களைத்துப் போயின...
ReplyDeleteஉண்மைதான், இதனால்தான் நான் படங்கள் போட விரும்புவதில்லை.. கப்பல் படங்கள் எல்லாம் போட ஆசை.. ஆனா பார்ப்போருக்கு கஸ்டம் என விட்டு வைத்திருக்கிறேன் இப்போதைக்கு.. அதேநேரம் இரு பதிவாகப் போட்டு இன்னும் போரடிக்காமல் ஒரே மூச்சில் போட்டேன்ன்:)
Delete
ReplyDeleteதம வாக்கிட்டேன். அது பூமி சுற்றுவது போலச் சுற்றிக்கொண்டே இருந்தது. ஒரு வழியாய் விழுந்து விட்டது. சுற்றிக் கொண்டிருந்ததை பாதியிலேயே கழுத்தைப்பிடித்து நிறுத்தி ரெப்ரெஷ் செய்தேன். விழுந்துவிட்டது வாக்கு!
நேற்று இதுக்கு கஸ்டப்பட்டுப் பதில் போட்டேன்ன், ஆனா சரியாகப் போஸ்ட் பண்ணுப்படவில்லை கர்:).. தமிழ் மணம் நேற்று முழுவதும் இயங்கவில்லை.. அது அடிக்கடி தப்பு தப்பா எல்லாம் காட்டுது.. கோபம்தான் வருது.. தமிழ்மணம் போல வேறு ஏதாவது சைட் இருப்பின் அதில் இணைஞ்சு போட்டி போடலாம் எனத் தோணுது..
Deleteமிக்க மிக்க நன்றி.. இங்கு வந்தவர்களில், இன்னும் ஒருவர் மனம் வைத்திருந்தால்கூட மகுடம் சூட்டியிருக்கலாம் ஓகே.. போகட்டும்...
புகைப்படங்கள் அனைத்தும் இரசித்தேன் ஸூப்பர்.
ReplyDeleteத.ம. பிறகு.
வாங்கோ கில்லர்ஜீ வாங்கோ சோட் அண்ட் சுவீட்டாக முடிச்சிட்டீங்க உரையை..
Deleteஅனைத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல பகிர்வு. படங்கள் வெகு அழகு.
ReplyDeleteவாங்கோ வெங்கட் வாங்கோ.. மிக்க நன்றி.
Deleteதினமும், 10,000 ஸ.டெப்ஸ் நடக்கிறேன்னு அத்துவான ரோடு, மலைப் பாதைலாம் படமாப் போட்டிருக்கீங்களே, 5000 ஸ்டெப்ஸ் போய்ட்டு திரும்பி 5000 ஸ்டெப்ஸா அல்லது ஒரேயடியாக 10,000 ஸ்டெப்ஸா?
ReplyDeleteஒவ்ஙொரு காலமும் மரங்களின் தோற்றம் அழகுதான். படங்கள் நல்லா இருந்தது
நெல்லை..இப்படி ஸ்டெப்ஸ் னு போட்டா அதிரா குழம்பினம் ஆகிடுவங்க.....ரெப்ஸ்...னு சொல்லணும்....இல்லையா ..ஏஞ்சல்..சரிதானே....ஹஹஹ
Deleteகீதா
குழம்பினம் = குழம்பு + இனம். அதிராவை வெந்தயக்குழம்பு, பருப்புக்குழம்பு, மோர்க்குழம்பு வகையறாவுல சேர்த்துட்டீங்களே....
Deleteஇனி ஒவ்வொரு இடுகைக்கும், கடைசில, பூசானந்தாவுக்குப் பதிலா, அதுல போட்டிருக்கிற புதிய வார்த்தைகளுக்கு அர்த்தமும் போடச்சொல்லிடுங்க.
ஹாங் ஹா :) பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக வார்த்தைகளுக்கு அர்த்தம் போடப்போறது அதிரா மியாவாகத்தான் இருக்கும் :)
Deleteகடவுளே எங்களை காப்பாற்றுங்க :)
///நெல்லைத் தமிழன்Tuesday, May 09, 2017 5:19:00 am
Deleteதினமும், 10,000 ஸ.டெப்ஸ் நடக்கிறேன்னு அத்துவான ரோடு, மலைப் பாதைலாம் படமாப் போட்டிருக்கீங்களே, 5000 ஸ்டெப்ஸ் போய்ட்டு திரும்பி 5000 ஸ்டெப்ஸா அல்லது ஒரேயடியாக 10,000 ஸ்டெப்ஸா?//
வாங்கோ நெல்லைத் தமிழன் வாங்கோ..
சே..சே.. அப்படி எல்லாம் இல்லை.. நேரம் கிடைக்கும்போது ஒரு ரவுண்ட்... பின்னர் இன்னொரு ரவுண்ட்.. டெய்லி 10000 எல்லாம் நடக்க ரைம் கிடைப்பதில்லை எனக்கு.. நான் நடப்பதை விட ஒழுங்கா ஜிம்முக்குத்தான் போவேன்ன்.. இப்போ கொஞ்ச மாதமா இடையில் விட்டிருந்தேன்.. திரும்ப ஆரம்பிச்சுவிட்டேன்.
எங்களிடத்தில் எப்பவும் நடப்பது சாத்தியமில்லை.. அதிகம் மழை பெய்யும்.. குளி.. காத்து அதிகமாக இருக்கும்.. வெயில் எறித்தாலும் குளிரும்.. வருசத்தில் எண்ணிச் சில நாட்கள் மட்டுமே கொஞ்சமா வியர்க்கும்[காலநிலையால்].
///ஒவ்ஙொரு காலமும் மரங்களின் தோற்றம் அழகுதான். படங்கள் நல்லா இருந்தது//
Deleteஇந்த அழகையும் கொஞ்சம் போய்ப் பாருங்கோ...
http://gokisha.blogspot.com/2012/10/blog-post_25.html
///அதிரா குழம்பினம் //
Deleteயூ ரூஊஊஊஊ கீதா... ஹா ஹா ஹா.. ஏதோ ஒரு முடிவோடுதான் எல்லோரும் கிளம்பியிருக்கிறீங்கபோல ஹா ஹா ஹா:).. இனி எனக்குக் கவலை இல்லை.. நான் இல்லையெனினும் என் டமில் வாழும்:) ஹா ஹா ஹா:)..
நான் சொன்னனே என்னோடு சேரும் எல்லோருக்கும் தம் தமிழ் மறந்திடும்:) ஹா ஹா ஹா.. சந்தோசம் பொயிங்குதே:).
//இனி ஒவ்வொரு இடுகைக்கும், கடைசில, பூசானந்தாவுக்குப் பதிலா, அதுல போட்டிருக்கிற புதிய வார்த்தைகளுக்கு அர்த்தமும் போடச்சொல்லிடுங்க.///
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் 4 நெல்லைத் தமிழன்.. அதெல்லாம் இல்ல:) நீங்க டிக்ஷனறியில் தேடிப் பாருங்கோ:) ஸ்ரீராம் கூகிளில் தேடியிருக்கிறார்.. என் தமிழுக்கு அர்த்தம்.. ஹா ஹா ஹா போன பதிவில் நான் சொன்னது சரிதான் போல.. தமிழ் மேதை(என்னைச் சொன்னேன்)..
///AngelinTuesday, May 09, 2017 1:23:00 pm
Deleteஹாங் ஹா :) பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக வார்த்தைகளுக்கு அர்த்தம் போடப்போறது அதிரா மியாவாகத்தான் இருக்கும் :)////
நோ நோ நோநோ.... எனக்கு அதுக்கெல்லாம் ரைம் இருக்காது:) வேணுமெண்டால் பீஸ் அனுப்புங்கோ ஓன்லைன் வகுப்புக்கள் நடத்துறேன்:) இல்லை எனில் டிக்ஷனறில தேடிக் கண்டு பிடிச்சு எனக்கு அர்த்தம் சொல்லுங்கோ:)..
த.ம. வாக்களித்துவிட்டேன் என்று சொல்கிறது. செக் பண்ணிச் சொல்லவும்.
ReplyDeleteM இல் ஆரம்பிப்பதுதானே உங்கள் வோட்?:) ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடிச்சோம்ம்[கூட்டு முயற்சி.. ஹா ஹா ஹா]... யேஸ்ஸ் விழுந்துவிட்டது... மியாவும் நன்றி.
Deleteஒவ்வொரு படங்களும் அழகு இரசித்தேன்.
ReplyDeleteவாங்கோ மொகமட் வாங்கோ தவறாமல் வருகை தருவது மகிழ்ச்சி..மிக்க நன்றி.
Deleteட்டிலிருந்து எடுத்த படம்.. நேவி ஷிப் போவது தெரியுதா?:) பீ கெயாஃபுல்:)[ஹையோ எனக்குச் சொன்னேன்].
ReplyDeleteபோலீஸ் போலீஸ் பூனை எங்க நேவி ஷிப்பை படமெடுத்து போட்டிருக்காங்க அரீஜ்ஸ்ட் :))))))
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) எனக்கும் பயம் தான்.. இவற்றைப் படமெடுத்துப் பப்ளிக்கில் போடுவது சரியோ தப்போ என நினைச்சு... ஆனாலும் போலீஸ் எங்கட வீட்டுக்கு வந்தால்.. உங்களைக் கைகாட்டிவிட்டு நான் தப்பிடுவேன் எனும் தெகிறியத்தில்.. அப்பப்ப போட்டு விடுகிறேன்..
Deleteஅனைத்துக்கும் மிக்க மிக்க நன்றிகள் அஞ்சு.
#பகவான் ஜீ மேடைக்கு வரவும்... வோட் போட்டீங்க,,, மொய் எங்கேஏஏஏஏஏஏஏஏ????:) கர்ர்ர்ர்ர்ர்:).#
ReplyDeleteநானும் அரைமணி நேரமா உங்க கூடத்தான் வாக்கிங் வந்து கிட்டிருக்கேன் ,வீட்டுக்கே போக மனசே வருதில்லா !நல்ல லொகேஷன்!
# ' த ம ' ன்னா வாக்களிப்பது ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம் நிறைவேற்ற இதோ லிங்க்///
[இந்த எழுத்துக்களை நான் எங்கேயும் களவெடுத்து வரவில்லை:)]#
என் லிங்குடன் களவான்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் :)
haaaahaaa :) superb
Deleteவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒவ்வொருத்தரையும்.. கத்தி, அரிவாள், துவக்கு என விதம் விதமாக் காட்டி மிரட்டித்தான் வோட் போட வைக்கோணும்.. கொமெண்ட் போட வைக்கோணும் என ஆச்சு என் நிலைமை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இந்த ரேஞ்சில போனால் நான் விரைவில ஐ சி யூ ல தான் இருக்க வேண்டி வரப்போகுதே முருகா..:)..
Delete///என் லிங்குடன் களவான்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் :)///
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நான் இதில எல்லாம் வலு உஷாராக்கும்:)..
மிக்க நன்றி பகவான் ஜீ.. இம்முறைதான் மிரட்டி கொமெண்ட் போட வச்சேன்:) அடுத்தமுறை.. தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன் ஜாக்க்க்க்க்ர்த்தை.. ஹையோ இது எனக்குச் சொன்னேன்:)
//என் லிங்குடன் களவான்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் :)//
Deleteஇதுக்குத்தானே...
//AngelinTuesday, May 09, 2017 11:52:00 am
haaaahaaa :) superb//
இப்பூடிச் சிரிப்பூஊஊஉ கர்ர்:).
அப்போவே பாத்து கருத்திட்டு கருத்திட்டு...கொம்ப்யுயூட்டர்...சூடாகி. ஆப் ஆகிடுச்சு..இப்போ மோபைல் வழி....அதுக்குள்ள நிரைய கமெண்ட்ஸ் வந்தாச்சு....ஹம்...இந்த கீதா ரொம்ப சோம்பேறி....ரீ ப்ளீஸ்..அதிரா
ReplyDeleteகீதா
ஆவ்வ்வ் வாங்கோ கீதா, துளசி அண்ணன் வாங்கோ..
Deleteஇந்தாங்கோ ரீ ... ஆனாலும் குடிக்க முன்..வோட் போட்டனீங்களோ இல்லயோ என்பதனை தெளிவாச் சொல்லுங்கோ..
[im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/fd/69/48/fd6948546b0b2de1150e50f95ef37c78.jpg[/im]
ஏஞ்சல் அதிரா பில்டப் பாத்தீங்களா....ரீ குடிக்கறதுனால..எழுந்து நின்னு போட்டோ. எடுக்க முடியலையாம்.....ஸ்பா. என்ன பில்டப்பு
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா நிஜமாத்தான்:).. டெய்சி வேற அருகில ஒட்டிக்கொண்டிருந்தா தெரியுமோ?:).
Deleteபடங்கள் அத்தனையு அழகு. ஆறும் ரொம்ப அழகா இருக்கு....உங்கள் வீடு நதிக்கரையிலா கொடுத்து வைச்சுறுகண்ணும்....ரசித்தோம்....
ReplyDeleteமிக்க நன்றி கீதா, இந்த வியூவைப் பார்த்தவுடனே, என் கணவருக்கு இதைத்தான் வாங்கோணும் எனும் ஆசை அதிகமாகி, உடனேயே ஏஜென்சிக்கு அடிச்சுச் சொல்லிட்டார்ர் நாங்க வாங்குகிறோம் என.
Deleteஅதிரா...சகாட்டலாந்து ரோமவாழகா இருக்கும்னு கேட்டுருக்கோம்...உங்கள் படம் அதை சொல்லுது....
ReplyDeleteநதியா அது? எவ்வளவு பெரிசா இருக்கு...ஏதோ கடல் போல...தண்ணி நல்ல தண்ணிய...இல்லை உப்பு தண்ணிய....
கீதா
ஆமா நதி.. ஆறுதான் கீதா.. ஆனா கப்பல்கள். கொண்டெயினர் ஷிப், மற்றும் நீர் மூழ்கிக் கப்பல் எல்லாம் வந்து போகும்... அதுக்காக ஆற்றில் ஆளத்தை தோண்டி அதிகப்படுத்தியிருக்கிறார்களாம் எனவும் கேள்விப்பட்டேன்.
Deleteஇதுபோய் சமுத்திரத்தில் கலப்பதால்.. தண்ணியில் உப்பும் கொஞ்சம் கலந்துதான் இருக்கிறதாம். நான் ரேஸ்ட் பண்ணிப் பார்த்ததில்லை:).
அந்தக் கடைசி படம் நம்ம மதுரை சகோ...ஹஹஹ...கேரளத்துக் களரி போல பிரிக் கட்டையை கேச் பண்ண ஒரு கேடயம் அனுப்புடலாம்.....கேடயம் வைச்சு பாகுபலி போல எப்படி சுழட்டி சுழட்டி கேச் பண்ரார்னு.. ஒரு வீடியோவும் போட சொல்லலாம் ஹஹஹ
ReplyDeleteகீதா
ஹா ஹா ஹா இனிமேல் அவர் பூரிக்கட்டை பற்றி வாயே திறக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்ன்:).. ஆனாலும் வந்து வோட் பண்ணியிருக்கிறார் தெரியுமோ:).. அதனால இனி பூரிக்கட்டையை அமெரிக்காவில ஒழிக்கோணும் எனப் போராடப்போறேன்ன்:) ஹா ஹா ஹா.
Deleteபடங்கள் எல்லாம் ரொம்ப அழகு....அந்தப் பாதை செம....ஆற்றங்கரை ஓரம்.ஆஹா சொல்லுது....பூசார் கூலிங் க்ளாஸ் ஏ ன் போட்டுருக்கினம்....தெரியாதாக்கும்....ஹிஹிஹி
ReplyDeleteகீதா
உண்மையிலயே மிக அழகான இடங்கள்.. சில இடங்களுக்கு ட்றைவ் போகும்போது மலைகளின் அழகைப் பார்க்க அதிலயே விழுந்து சாகலாம் போல வரும்..
Deleteஇன்னுமொன்று இங்கத்தைய மக்களும் நல்ல உசாரானவர்கள்.. காசு செலவளித்து நிறைய பூ க்கன்றுகள் வாங்கி வாங்கி நடுவார்கள்.. அவை எல்லாம் ஒரு மாத்தத்தில் பூத்து முடிய பட்டு விடும்.. ஆனாலும் ஒவ்வொரு மாதமும்.. ஒவ்வொரு வருடமும் வாங்கி நட்டு கார்டினை அழகாக வைத்திருப்பார்கள்.. ரோஜா போன்ற சில செடிகள் மட்டுமே விண்டருக்குள் நிண்டு பிடிக்கும். செவ்வந்து, சிதம்பரத்தை எல்லாம் சீசனுக்கு சீசன் நடவேண்டும்.
மிக்க நன்றி உங்கள் இருவருக்கும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
வோட் போட நினைத்தேன். முயற்சித்தேன். மீண்டும் மீண்டும் இதுபோலவே வருகிறது:
ReplyDeleteThis site can’t be reached
tamilmanam.net took too long to respond.
Try:
Checking the connection
Checking the proxy and the firewall
ERR_CONNECTION_TIMED_OUT
இருப்பினும் மென்மேலும் முயற்சித்துக்கொண்டே வருகிறேன். இந்த வலைத்தளத்திற்கு மட்டும் நான் வோட் போட்டு முடித்து விட்டுத்தான் பதிவினையே படிப்பது, என் வழக்கமாக்கும்.
வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... தாமதமானா பதிலுக்கு மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்ங்:).
Delete///இந்த வலைத்தளத்திற்கு மட்டும் நான் வோட் போட்டு முடித்து விட்டுத்தான் பதிவினையே படிப்பது, என் வழக்கமாக்கும்.//
எங்களுஇடையேயான நட்பை/ உறவை.. பாலம் போட்டுக் காப்பாற்றி வருவதே இந்த வோட் தேன்ன்:).. அதனால பாலத்தை எப்பவும் உடைச்சிடாதீங்கோ:).. ஹையோ ஒரு வோட்டுக்காக எப்பூடி எல்லாம் பேச வேண்டிக்கிடக்கூஊஊ:)..
ஹா ஹா ஹா.. தெரியும் கோபு அண்ணன்.. மிக்க நன்றி.
ஒருவழியாக எட்டாவது வோட்டை எட்டிப்பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
ReplyDeleteமிகவும் களைப்பாகி டயர்டு ஆகி விட்டேன் ..... ஒரு சொம்பு நிறைய மோர் வாங்கிக் குடித்துவிட்டு ..... மீண்டும் வரலாம் என நினைக்கிறேன்.
நீங்க எத்தனை செம்பு எண்டாலும் வாங்கிக் குடிங்கோ.. ஆனா கொமெண்ட்ஸ் மட்டும் ஒழுங்காப் போட்டிடுங்கோ ஹா ஹா ஹா:).
Deleteமலையோரம் வீசும் காற்று :) பாடிட்டே நடுங்க அப்போ கவுன்டர் இன்னும் கூட்டி காட்டும் .அழகான மலர்கள் கார்டீனியா டூலிப்ஸ்
ReplyDeletecherri பிளாசம்ஸ் எல்லாம் இங்கும் பூத்து குலுங்குது காலைல காதுக்கு காரெல்லாம் ரோடெல்லாம் இதழ்கள் தான் ..எவ்ளோ அழகு காத்துக்கு விழுவதுதான் கஷ்டமாருக்கு
அதேதான் அஞ்சு, ஆனா எனக்கு இங்கு, காத்துக்கு விழுந்தால்கூட பறவாயில்லை.. பாய் விரிச்சதுபோல நிலத்தில்.. அதுவும் ஒரு அழகுதான்..
Deleteஇது மழை வந்துவிடும், மரத்தோடு எல்லாம் அழுகியதுபோல கருகிவிடும்.. மழை முடிஞ்சால் மொட்டுக்கூட இருப்பதில்லை அதுதான் கவலை, ஆனா இம்முறை மழை வரவில்லை அதனால கொள்ளை அழகு இவ்வருடம்..
நான் போட ஏராளமான தடவைகள் முயற்சித்ததால் - நீண்ட நேரம் சுற்றிக்கொண்டே இருந்த அது ஒருவழியாகக் கீழ்க்கண்ட தகவலை பிரஸவித்துள்ளது:
ReplyDeletethamizmanam
இடுகைத்தலைப்பு:
ஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
சன்னலை மூடு
ஹா ஹா ஹா இல்ல கோபு அண்ணன், அது சுத்திக் கொண்டே இருக்கும் ஒரு அந்து சந்து இல்லாமல்... ஆனா பாதியில என் புளொக்கை றிபிரெஸ் பண்ணிப்பாருங்கோ விழுந்திருக்கும்... வோட் போட்ட உடனேயெ என் பக்கத்தில் காட்டிவிடும்.
Deleteஎல்லை தாண்டிய பயங்கரவாத விளக்கம் அருமை.
ReplyDeleteஅப்படியா? அனுபவம் இல்லயே?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.
Deleteஎன்னைப்போலவே தாங்களும் தினமும் வோக் செய்வது உண்மைதான் என நாங்கள் நம்பணும் என்று ஏராளமான படங்களை எங்கெங்கெல்லாமோ இருந்து களவாடி வந்து காட்டியுள்ளீர்கள். ஒரு படத்தில்கூட உங்களை எங்களால் பார்க்கவே முடியவில்லை.
ReplyDeleteஎனினும் தங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
///என்னைப்போலவே தாங்களும் தினமும் வோக் செய்வது ///
Deleteஅபச்சாரம் அபச்சாரம்.. என்னாதூஊஊஊஉ கோபு அண்ணன் வோக் போகிறாரா? உங்கள் கட்டிலோடு கொழுவி விட்டிருக்கும் அந்த பாக்குகளுக்குள்ளிருக்கும் நொறுக்குத் தீனியைக் கொறிக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது.. இதில வோக்கிங் ஆஆஆஆஆ:).
///ஒரு படத்தில்கூட உங்களை எங்களால் பார்க்கவே முடியவில்லை///
ஆதாரத்தோடு போட்டால் கூட இது அதிரா இல்ல:) அதிராவின் டூப்:) என வாதாடுவீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
படங்கெல்லாம் அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்கு !
ReplyDeleteம்ிக்க மிக்க நன்றிகள்.
Delete//இதைப் படிச்சதில இருந்து, நானும் இனிக் கோபப் படலாம் என நினைக்கிறேன்:)..//
ReplyDeleteஆஹா ..... வெரி குட் ..... கோபப்படுங்கோ.
//இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?:)//
என்னத்தை நினைக்க. கோபம் கோபமாக வருகிறது !
அச்சச்சோ ஹா ஹா ஹா இதனால நீங்க கோபக்காரர் ஆகிடுவிங்க போல இருக்கே:).
Deleteஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)
ReplyDeleteதலைப்பைப் படித்ததும் ..................
ஆத்தா ..... ஆத்தோரமா ...... பாடல் நினைவுக்கு வந்திடுச்சு.
நான் போட்ட தலைப்பின் பாடல்.. ஊர் ஓரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு..
Delete//வீட்டிலிருந்து எடுத்த படம்..//
ReplyDeleteநம்பிட்டோம்
//நேவி ஷிப் போவது தெரியுதா?:)//
தெரியுது. அந்த ஷிப்பிலிருந்து போட்டோ எடுத்தால் உங்க வூடு பெரிசா தெரியுமாக்கும்.
ஹா ஹா ஹா யேஸ்:)
Deleteபாட்டில் மூடி தொலைந்து போனதால் மட்டுமே தான் குடித்ததாக அவன் ரோட்டில் உருண்டு பிரண்டு சத்தியம் செய்து சொல்வது நியாயமாக உள்ளது. குடித்திருந்தாலும் என்னைப்போலவே மிகவும் ஸ்டெடியாக பதில் சொல்லியுள்ளார். வாழ்க !
ReplyDelete/// குடித்திருந்தாலும் என்னைப்போலவே மிகவும் ஸ்டெடியாக பதில் சொல்லியுள்ளார்///
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்ர் உங்களுக்கு இப்பழக்கம் உண்டோ?:)
அனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்..
ஆறு, மலை, பூக்கள் எல்லாமே அழகு.!
ReplyDeleteஎல்லைதாண்டிய பயங்கரவாத ஜோக் நெடுநேரம் சிரிக்க வைத்தது.
ஆங்கில தத்துவம் புரியவில்லை. ( காரணம் ஆங்கிலம் தெரியாது. A க்கு அடுத்தது C என்பதே போன மாதம்தான்..... :) )
தமிழ்மணம் சென்று கவனமாக வாசித்து பதிவு செய்தேன். மெயில் அனுப்புவதாகச் சொன்னார்கள். ஒரு வாரம் ஆச்சு.. எதையும் காணோம். எப்படித்தான் ஓட்டு போடுவது?
வழக்கம் போல சுவாரசியமான பதிவைத் தந்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி.
வாங்கோ வெண்ணிறப் புரவி.. மறக்காமல் மீண்டும் இம்முறை வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
Delete///ஆங்கில தத்துவம் புரியவில்லை. //
ஹா ஹா ஹா புரியாட்டில் விட்டிடுங்கோ கிட்னிக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடாது:).
//எப்படித்தான் ஓட்டு போடுவது?//
என்னாது அப்போ நீங்க வோட் போடவில்லையா?:) இப்பூடித்தெரிஞ்சிருந்தால் உள்ளே அனுமதிச்சிருக்க மாட்டேனே...:)
அது உங்களுக்கு புதுசா வந்திருப்பதால் தெரிஞ்சிருக்காது.. டமில்மணம் செத்து ரொம்ப நாளாச்சாம்ம்:)... ஏதோ முன்பு இணைஞ்சோரை வச்சு ஓடிட்டு இருக்குதுபோல...
மிக்க நன்றி.
எங்க ஏரியாவிலும் இந்த ஓபன் ஜிம் செஞ்சு வச்சிருக்காங்க ஆனா வாத்துங்க புறா ஸ்வான்ஸ் ஏறி உக்கார்ந்திருக்கு அந்த சீட்டில் பெரும்பாலும் ....பிக்காஸ் வி பிரிட்ஸ் ஆர் நொட் குண்டூஸ் லைக் ஸ்கொட்ஸ் :)))
ReplyDelete///ஆனா வாத்துங்க புறா ஸ்வான்ஸ் ஏறி உக்கார்ந்திருக்கு அந்த சீட்டில் பெரும்பாலும்//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அந்த வாத்துப் புறாக்களைக் கேட்டுப்பாருங்கோ ஃபுரொம் ஸ்கொட்லாண்ட் எனச் சொல்லுவினம்:)..
இல்ல அஞ்சு இங்கு முக்கியமா கலப்பு இல்லாத ஸ்கொட்டிஸ் மட்டுமே இருப்பதால் பெரும்பாலும் நல்ல கிளீனாவே இருக்கும்.. நல்ல ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிப்பினம்.. அதே நேரம் கிளீனிங் வேலையும் ஒழுங்கா நடக்கும்.. படங்களைப் பாருங்கோ ரோட்டுக்கள் எல்லாம் எவ்ளோ நீட்டாக இருக்குது.
அது கொஞ்சம் உண்மைதான் ஸ்கொட்டிஸ் குண்டுகள்தான் அதிகம்... ஆனா நல்ல செந்தளிப்பானவங்க.. எப்பவும் சிரிச்சு ஹாய் ஹலோ என்றபடியே திரிவார்கள்.
இங்கத்தைய குழந்தைகள் ரொம்ப ரொம்ப அழகு... அது ஏனோ தெரியல்ல ஸ்கூல் பிள்ளைகள் ச்ச்ச்சோ கியூட்ட்.. இதைச் சொல்லாதவர்கள் இல்லை என்னிடம்..வெளிநாட்டிலிருந்து வருவோர்.
நீர் நிலை பக்கமா வீடு வேணும்ங்குறது என் கனவு. அதனால உங்க வீட்டை எனக்கு கொடுத்திடுங்க ஆதிரா
ReplyDeleteவாங்கோ ராஜி வாங்கோ... உங்களுக்கில்லாததா... தோஓஓஓஓஒ இப்பவே தந்திடுறேன்ன்.. முதலில் செக்கை என் எக்கவுண்டுக்கு அனுப்பிடுங்கோ:) ஹா ஹா ஹா மிக்க நன்றி ராஜி.
Deleteநான்ன்ன்ன் வந்திட்டேன்ன்ன்.. என்ன இது எல்லோரும் கும்மி அடிச்சிட்டு.. ஓடிப்போய் நித்திரையாகிட்டினம் போல:) இப்போ நான் தனிய நிண்டு பேச வேண்டி இருக்கே.. இருந்தாலும் பல மாதங்களுக்குப் பின்னர்.. இன்று சூப்பர் ஆம்பாறு:) வச்சு.. ஓசையும் சுட்டு சட்னியும் செய்தேன்ன்ன்ன்ன் ஆவ்வ்வ்வ்வ்வ் சொல்லி வேலையில்லை:) ஒரே மயக்கம் மயக்கமா வருது...
ReplyDeleteசரி அது போகட்டும் எங்கின விட்டேன் ஜாமீஈஈஈஈஈஈ.. கடவுளே.. நில்லுங்க வாறேன்ன்.. கண்டுபிடிச்சுத் தொடர்றேன்ன்:).
குறை நினைச்சிடாதையுங்கோ.. மிகுதி அனைவருக்கும் நாளைக்குப் போடுவேன் பதில்...p;ease..
ReplyDelete[im]https://m.popkey.co/d84166/gqXgg_f-maxage-0.gif[/im]
என்ன கமெண்ட் போட? உம்ம்ம்ம்ம்ம்ம்ம் 9வது வோட்டு என் வோட்டுதான்
ReplyDeleteஆவ்வ்வ் வாங்கோ ட்றுத் வாங்கோ... கொமெண்ட்ஸ் ரொம்ப நீண்டு விட்டதோ... சரி சரி பறவாயில்லை வந்தது சந்தோசம்.. மிக்க நன்றி வோட்டுக்கு...
Deleteஅந்த முக்கியமான படம்.. பூரிக்கட்டை தெரிந்ததோ இப்போ தெரியவில்லை எனக்கு.. தேடி திரும்ப போட வேண்டும். வோட் போட்டமைக்கும் மிக்க நன்றி.
மிக்க நன்றி ட்றுத்.
படங்கள் எல்லாம் வடிவா இருக்கு. நல்ல இடத்தில இருக்கு உங்கட வீடு.
ReplyDeleteபுறாக்கள் சொல்லும் கருத்து - பிடித்திருக்கிறது.
ஆவ்வ்வ்வ்வ் றீச்சர் வந்திருக்கிறாக.. வாங்கோ இமா வாங்கோ.. நீங்க அப்பப்ப வந்து போவது தெரியும்.. ஆனா ஏன் உள்ளே வருவதில்லை என ஒரு கவலை:(.
Deleteமிக்க சந்தோசமாக இருக்கு பார்க்க, மிக்க நன்றி இமா. முடியும் போது வந்து போங்கோ.
அதிரா புகைப்படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteரெண்டு டிக்கெட் போட்டு கொடுத்திடுங்கோ. நானும், எங்காத்துக்காரரும் வந்துடறோம். இவ்வளவு அன்பா யாரு கூப்பிடுவா.
ஆத்தங்கரையிலே நடக்க வாரோம். வோக் போகவும் வாரோம்.
அதிரா உங்களுக்கு ஜே மாமியின் மனமார்ந்த, உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
வாங்கோ ஜே மாமி.. வாங்கோ.. ஹா ஹா ஹா ரிக்கெட்டும் அனுப்பிக் கூப்பிட்டு ஆத்தங்கரையில நடக்க விடோணுமோ ஹா ஹா ஹா:) உங்களோடு சேர்ந்து நடப்பதை நினைத்துப் பார்த்தேன் ரொம்ப சந்தோசமா இருக்கு.
Deleteமிக்க மிக்க நன்றி ஜே மாமி.
#காசா பணமா, எம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவோமே..#
ReplyDeleteஎன் கொள்கையும் அதுதான் !'தம'ன்னா மகுடம் வென்றதற்கு வாழ்த்துகள் :)
என்னாதூஊஊஊஊஊஊஉ மகுடம் கிடைச்சிருக்காஆஆஆஆஆஆ ஆவ்வ்வ்வ் நான் கவனிக்கவில்லையே... நேக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல... எப்பூடி தமன்னா பக்கம் போய்ப் பார்ப்பேன்ன்ன்ன்:).. தகவல் சொன்னமைக்கு மிக்க நன்றி பகவான் ஜீ...
Deleteதமிழ்மணம் மகுடம்
ReplyDeleteகடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
ஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:) - 11/11
இந்த சந்தோசத்தைக் கொண்டாட அதிராவைக் காணாமே ,அஞ்சுகிட்டே கேட்கலாம்னா அவர் இருக்கிற அட்ரசும் இல்லையே :)
ஊசிக்குறிப்பு: அஞ்சு வீட்டில நீங்க ரீ குடிச்சால்தான் அட்ரஸ் சொல்லுவா உங்களுக்கு:)
Deleteவழிவிடுங்கோ.. வழிவிடுங்கோ.. இந்த சந்தோசமான செய்தியைக் காவி வந்த பகவான் ஜீக்கு... இது..
[im]http://www.xa-xa.org/uploads/posts/2014-06/thumbs/1403662541_originalorl.jpg[/im]
செர்ரிப்பூக்களின் அழகே அழகு! மேக்நோலியாக்கள் உங்கள் ஊரில் அதிகம் இலையா!
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை).
வாங்கோ வாங்கோ... விரைவில் சென்னையில் இருந்து வரவும் வாழ்த்துக்கள்.
DeleteMagnolia இங்கும் இருக்கின்றன.. மேலே போட்ட அந்த வெள்ளைப் பூக்களும் இவைதான். இப்போதான் இங்கு இவற்றின் சீசனும்.... மிக்க நன்றி.
[im]http://2.bp.blogspot.com/-pim8bfslwDo/VqyRREPikRI/AAAAAAAABg8/u09_gJPit1g/s400/magnolias-rosas.jpg[/im]
அருமை
ReplyDeleteவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.
Deleteஆகா...! கொடுத்த வைத்த சகோதரி... வாழ்க வளமுடன்...
ReplyDeleteவாங்கோ டிடி வாங்கோ.. முதலாவதா வரும் நீங்க கொஞ்சக் காலம் வரவே இல்லை, ஆனா வேலை அலுவல் என முன்பு சொன்னதால் தேடவில்லை.
Deleteஎன்பக்கம் தமிழ்மண ட்றபிக் ட்ராங் ல 6 எனக் காட்டுதே அவ்வ்வ்வ்வ்:).. இது நிஜமோ?:)..
மிக்க நன்றி.
முந்தைய பதிவிலேயே தமிழ்மணம் இணைப்பு கொடுத்து இருந்தீர்கள்... ஆனால் அது காப்பி செய்து , browser-ல் பேஸ்ட் செய்ய வேண்டும்... இந்த பதிவில் இணைப்பாக உள்ளது... அனைவருக்கும் வாக்கு அளிக்க எளிதாக இருக்கும்...
Delete6: பாராட்டுக்கள்...
கண்ணுக்குக் குளிர்சியான பதிவு
ReplyDeleteபதிவைப் படிக்க் உடன் வாக் வந்ததைப் போல
உணர முடிந்தது
கமெண்ட் பாக்ஸுக்கு வரத்தான்
மூச்சுத் திணறிப்போனது
வாழ்த்துக்களுடன்..
வாங்கோ வாங்கோ... ஹா ஹா ஹா என் பக்கம் கொமெண்ட்ஸ் பொக்ஸ் க்காக கேர்சரை ஸ்குறோல் பண்ணியே கை வலித்திடும்:)..
Deleteவரவுக்கு மிக்க நன்றி.
ஆ..அதிரா நலம்தானே.. உங்க இடம் பற்றி சொல்லியாச்சு. அழகான இடம்.இம்முறையும் அழகான படங்கள் போட்டு வெறுபேத்துறீங்க. இங்கன இப்பதான் எல்லாமே வருகினம். பூக்கள் லேட்டாதான் பூக்கப்போயினம். இம்முறை வெதரால் அப்படி. சின்ன சின்ன குறிப்பு வழமைபோல் கலக்கல். ஜோக் ,சின்னகுறிப்பு வாசித்துவிட்டுதான் உங்க போட்டோ பார்த்தேன். உங்க பக்கம் வர வழி சொன்னவா அஞ்சுதான். நன்றி அஞ்சு.
ReplyDeleteசில நாட்கள் வரவில்லை கோவிக்காதேங்கோ...
/என் பக்கம் கொமெண்ட்ஸ் பொக்ஸ் க்காக கேர்சரை ஸ்குறோல் பண்ணியே கை வலித்திடும்:)..// very true
படங்கள் அருமை காலநிலைக்கு ஏற்ற இயற்க்கையின் கொடைகள்.
ReplyDeleteஎல்லைதாண்டிய பயங்கர வாதம் சிரிப்பு வெடி)))
ReplyDeleteநீண்ட பதிவை கொஞ்சம் சுறுக்கினால் அழகாய் இருக்கும்)))
ReplyDeleteமுகிலிடை இருக்கும்வரை - நிலவு
ReplyDeleteஒளியற்றுத்தான் இருக்கும்”//
அருமை.
படங்கள் கொள்ளை அழகு.
எல்லை தாண்டிய பயங்கர வாதம் படித்து சிரித்தேன்.