நல்வரவு_()_


Monday, 5 June 2017

அதிரா வீட்டில் புய்ப்பம்:)

வாங்கோ வாங்கோ.. அதிரா வீட்டுப் பூங்காவைச் சுத்திப் பார்க்கலாம் வாங்கோ... எனக்கொண்ணும் தரவேண்டாம்.. ச்சும்மா பாருங்கோ:) ஆனா கையில மை வச்சு,  மொய் எழுதாமல் போனால்.. நுளம்பு வந்து காதில கடிக்கும் டொல்லிட்டேன்ன்ன்ன்:)
எங்கள் வீட்டுக்கு இயற்கைப் பூக்கள் வாங்கி வைப்பேன்ன்.. சிலது 10 நாட்கள் வரை அப்படியே இருக்கும், சிலது 2 கிழமைக்கு இருக்கும்.. முக்கியமா ரோஜா. சிலது ஒரு வாரத்தில் வாடிவிடும். இப்படி வைப்பனவற்றை அப்பப்ப படமெடுத்து வருகிறேன். அதில் சிலதை மட்டும் இங்கு போடுகிறேன்,  அதில் சிலதைக் காணவில்லை.. ஆரோ இங்கின களவெடுத்திட்டினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சரி அதெல்லாம் போகட்டும் இன்று நான் மிகவும் சீரியசாகவே பேசப்போகிறேன்:).

தாந்தான் குடும்பத் தலைவராம்:) சோபாவிலிருக்கிறார்:).






=====================================இடைவேளை==================================
இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒருவரை எப்பவும் திட்டி, இகழ்ந்து, அவர் எதுக்குமே உதவாக்கரை எனச் சொல்லிப் பாருங்கள்.. பதிலுக்கு அவரிடம் இருக்கும் கூடாத குணங்கள்தான் வெளிப்படும். அதேநேரம், ஒருவரை நீ மிக அழகு, நல்ல குணம், தங்கம், வைரம் கெட்டிக்காரி எனச் சொல்லிப் பாருங்கள்.. இதனைக் கேட்டு அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் வெளியே எட்டிப்பார்க்கும்... ஆக மொத்தத்தில் ஒருவர் நல்லவராகத் தெரிவதும் கெட்டவராகத் தெரிவதும்... நம் கையில் தான் இருக்கிறது.

==========================================================================================




இது எங்கள் ஊர் ரோட்டோரம் இருக்கிறது, பாருங்கோ கறுப்பு ரியூலிப்ஸ்.. எங்காவது பார்த்ததுண்டோ?

ஊசி இணைப்பு:
புளொக் எழுத ஊக்குவிப்போர் இருக்கினமோ இல்லயோ:) ஆனா தேம்ஸ்ல தள்ள மட்டும் கமோன் ஜம்ப் என உற்சாகப்படுத்த நிறையப்பேர் இருக்கினம்:).. நாம ஆரூஊஊஉ.. ஜம் பண்றமாதிரி நடிச்சுக்கொண்டு தப்பி ஓடிவந்திடுவமே:) எங்கிட்டயேவா?:).

ஊசிக்குறிப்பு:
அதிராவின் போஸ்ட் பார்த்ததும் ஓடி வந்து, வந்த வேகத்தில.. எங்கே லிங் ?,வோட் போடோணும் எனத் தேடுவீங்களே... நான் உங்களை ஏமாத்துவேனோ.. 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மகுடம் கிடைச்சிட்டுதூஊஊ மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஉ தங்கூ தங்கூ:).. இதில் 2 வது படம்:) எனக்கு மகுடம் கிடைச்சமைக்குப் போட்டேன்ன் ஹா ஹா ஹா:)..

125 comments :

  1. thamizmanam

    இடுகைத்தலைப்பு:
    அதிரா வீட்டில் புய்ப்பம்:)

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

    சன்னலை மூடு


    VOTE No. 1 is mine....... :)

    ReplyDelete
  2. வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ முதன் முதலா வந்து முதல் வோட்டும் போட்டுவிட்ட உங்களுக்கு ஏதாவது தரோணுமே என யோசிச்சேன்ன்ன்.. ஆங்ங்ங்ங் அந்த குண்டு ரெடி பெயார் உங்களுக்கே:)..

    எனக்கு கடமை முக்கியம் என போஸ்ட்டைப் போடு விட்டு, ஏனைய வீடுகளுக்கு கொமெண்ட் போடப் போயிட்டேன், உங்கள் கொமெண்ட் பார்த்தே திடுக்கிட்டு ஓடிவந்து வோட்டும் போட்டு, லிங்கும் இணைச்சேன்ன் மியாவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் இரண்டாவதாக அனுப்பிய பின்னூட்டம் எங்கே போனது? அதை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடுங்கோ.

      கோபம் பொய்ய்ய்ங்கிப் பொய்ய்ய்ங்கி வருகிறது எனக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

      Delete
    2. பொயிங்கிடாதீங்க.. பொயிங்கிடாதீங்க... பிபி அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்திடுவீங்க:) பிறகெப்பூடி என் போஸ்ட்டுக்கு ஓடிவந்து கொமெண்ட்ஸ் உம் வோட்டும் போட முடியும் சொல்லுங்கோ?:) அந்தப் பயத்திலயே வெளியிட்டு விட்டேன்ன்ன்... :)

      Delete
  3. முதல் படத்தில் இடுப்பில் ஒரு மெல்லிய வளையத்தை மட்டும் ஆடைபோல அணிந்துகொண்டு சும்மா ஆட்டு ஆட்டுன்னு ஆட்டும் பூனையார் ....... அருமை.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சபை நாகரீகம் கருதி பேசாமல் விட்டேன்ன்ன்:) நீங்க பொயிங்கியதால் வெளியிட்டுவிட்டேன்ன்:) எனக்கென்ன ஆகப்போகுதூஊஊ:).. ஹா ஹா ஹா:)..

      Delete
  4. //ஒருவரை நீ மிக அழகு, நல்ல குணம், தங்கம், வைரம் கெட்டிக்காரி எனச் சொல்லிப் பாருங்கள்.. இதனைக் கேட்டு அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள் வெளியே எட்டிப்பார்க்கும்... ஆக மொத்தத்தில் ஒருவர் நல்லவராகத் தெரிவதும் கெட்டவராகத் தெரிவதும்... நம் கையில் தான் இருக்கிறது.//


    கரெக்ட்டூஊஊஊஊ. நான் உங்களிடம் நடந்துகொள்வதை அப்படியே புட்டுப்புட்டுச் சொல்லி இருக்கீங்கோ. சபாஷ் ! :)

    ReplyDelete
    Replies
    1. அப்போ உங்களுக்கு நான் ரொம்ப நல்ல பிள்ளையாகவா தெரிகிறேன்ன்ன்:) ஹா ஹா ஹா:).

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா சிரிப்பூ:) நம்மள நாமளே புகழ்ந்தால்தான் உண்டூஊஊஊ:) அடுத்தவங்களோ வந்து புகழப்போகினம்?:)..

      Delete
    3. asha bhosle athira Tuesday, June 06, 2017 9:12:00 am
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா சிரிப்பூ:) நம்மள நாமளே புகழ்ந்தால்தான் உண்டூஊஊஊ:) அடுத்தவங்களோ வந்து புகழப்போகினம்?:)..//

      ரொம்ப ரொம்ப கரெக்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.

      இதுதான் அதிராவிடம் எனக்கு மிகவும் பிடித்ததாகும்.

      நம்மள நாமளே புகழ்ந்தால்தான் உண்டூஊஊஊ ! வேறு ஒரு பயலும் புகழப் போவது இல்லை எனச் சொல்லிட்டீங்கோ ... அதில் எங்கட கோபு அண்ணனைத் தவிர என சேர்த்துக்கொள்ளக்கூடாதோ !

      இன்று நள்ளிரவு 12.05 க்கு வைரத்தோடு தருவதாக உள்ளேனாக்கும் ! :)

      Delete
    4. ஏஞ்சல் சைக்கிள் கேப்ல லாரியே ஓட்டிடுவாங்க அதிரா!!!!ஹஹஹஹ

      Delete
    5. ////அதில் எங்கட கோபு அண்ணனைத் தவிர என சேர்த்துக்கொள்ளக்கூடாதோ !///

      ஹா ஹா ஹா அது என் தப்புத்தேன்ன்ன் அது டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்சு:)..

      ////இன்று நள்ளிரவு 12.05 க்கு வைரத்தோடு தருவதாக உள்ளேனாக்கும் ! :)///

      ஹா ஹா ஹா தாறதுதான் தாறீங்க பகல்ல தந்தால் ஒரு பப்புளிக்குட்டியாவது கிடைக்குமெல்லோ நேக்கு:).. இது இரவோடு இரவாக தாறதால ஆரும்கும் அதிராவின் புகழ் தெரியாமலே போயிடுது ஹா ஹா ஹா:)..

      ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சுவுக்கு கேட்டிடாமல் பார்த்துக்கொள்ளுங்கோ:).

      Delete
    6. ///Thulasidharan V ThillaiakathuTuesday, June 06, 2017 9:35:00 am
      ஏஞ்சல் சைக்கிள் கேப்ல லாரியே ஓட்டிடுவாங்க அதிரா!!!!ஹஹஹஹ//

      ஹா ஹா ஹா நல்லவேளை கீதா, லாரி எனத்தான் சொல்லியிருக்கிறீங்க.. பிளேன் எனச் சொல்லல்ல:).

      Delete
  5. //இது எங்கள் ஊர் ரோட்டோரம் இருக்கிறது, பாருங்கோ கறுப்பு ரியூலிப்ஸ்.. எங்காவது பார்த்ததுண்டோ?//

    இல்லை. இல்லை. இதுவரை பார்த்ததே இல்லை. இனியும் பார்க்கப்போவதும் இல்லை. உங்கள் ஊரின் ரோட்டோரம் எனக்கென்ன வேலையாம் ?????

    ReplyDelete
    Replies
    1. அதானே நீங்க எதுக்கு அந்தக் கட்டிலையும் கொம்பியூட்டரையும், கட்டிலில் தொங்கும் நொறுக்குத் தீனிகளையும் விட்டுப்போட்டு வெளில வரப்போறீங்க:).. நீங்க வீட்டுக்குள்ளேயே இருங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
  6. அனைத்துப் படங்களும் அனைத்துப் பொன்மொழிகளும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். நாளை நள்ளிரவு நம் கச்சேரிகளை, நேற்று போல நாம் தொடரலாம். குட் நைட்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா.. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாகத்தான் இருக்கிறீங்க:).. நாளைக்கு மீ அந்தாட்டிக்க்கா போகிறேன்ன்.. ட்றம்ப் அங்கிளுக்கு அவசரமா ஒரு லெட்டர் எழுதித் தரட்டாம்ம்ம்.. மறுக்க முடியுமோ.. :)..

      மிக்க நன்றிகள் கோபு அண்ணன்.

      Delete
  7. மலர்ப்படங்களுடன்
    இடையிடையே சொல்லிப்போன
    பொன்மொழிகளும் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    (இன்றுதான் நான் சரியான
    நேரத்திற்கு உங்கள் தளத்திற்கு
    வந்திருக்கிறேன் போல )

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ.. இல்லை என் போன பதிவுக்கு முந்தின பதிவுக்கும் இப்படி உடனேயே வந்து வோட்டும் போட்டிருக்கிறீங்க... மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.. அடுத்த முறையும் இப்படி உடனே வாங்கோ:).. ஹையோ இதுக்கெல்லாம் முறைச்சிடக்கூடாது:) ஹா ஹா ஹா.

      Delete
  8. ஹாஹா :) மதியாதோர் வாசல் அப்போ ஏணி வச்சி ஏறித்தான் போகணும்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... ஹா ஹா ஹா அதேதான் வாசலைத்தானே மிதியாதே எனக் கண்ணதாசன் அங்கிள் சொன்னார்:) வீட்டுக்குள் போகாதே என அவர் சொல்லலியே ஹா ஹா ஹா:).

      Delete
  9. எங்க ஏரியால இருக்கு அதிரா பிளாக் tulips நான் லாங் ஷாட்ல முன்பு எடுத்தேன் எங்கேன்னு தெரில ஆனா அழகு இல்லையா பிளாக் அப்புறம் பர்பிள்

    ReplyDelete
    Replies
    1. ஓ அப்படியா நிட்சயம் இருக்கும் தானே, இது முன்பும் இருந்திருக்கும் என் கண்ணுக்கு பெரிசாப் படவில்லை.. இப்போ புளொக்கில் படம் போடும் யோசனையில.. அனைத்தையுமே கலைக்:) கண்ணோடு பார்ப்பதால் எல்லாமே தெரியுது:)..

      உங்களுக்குத் தெரியுமோ அஞ்சு.. ரியூலிப்ஸ் க்குப் பெயர்போன இடம் நெதர்லாண்ட்.... இந்த மலர்களைப் பார்க்கவே அங்கு மார்ச் ஏப்ரலில் உல்லாசப்பயணிகள் வருகை அதிகமாகுமாம்ம்.. இது என் ஜென்ரல் நொலேஜ் ஆக்கும்:).

      Delete
    2. ப்ளாக் டுலிப்ஸ் பார்த்தது இல்லை. ஆமாம் பூஸார்...நெதர்லேன்ட்ஸ் டுலிப்ஸ்குப் ஃபேமஸ்...

      கீதா

      Delete
    3. ஓ கீதாக்கும் தெரிஞ்சிருக்கு.. நான் ஜென்ரல் நொலீஜ் க்குச் சொன்னேன்:) ஹா ஹா ஹா:).

      Delete
  10. https://www.popscreen.com/prod/MTU1NTE4Mjkz/Tom-and-Jerry-Kids-Cartoon-Bumper-Sticker-5x4

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா சமாதானமாப் போயிடலாம்ம்:)..
      [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQoGKVgG0h8k9_RCylvhoUh2RQrlaC1WL21XOqtvLZgIVP7_6Wc[/im]

      Delete
  11. வணக்கம் பூசாரே !

    சிந்தனைகள் செய்யச் சிறப்பாய்ப் பதிவிட்டாய்
    வந்தனை செய்கிறேன் வரிந்து !

    படங்களில் எழுதிய தத்துவங்கள் நன்று பூசாரே
    ஊசிக் குறிப்பும் உன்னதம் வாழ்த்துகள்

    தமன்னா வாக்கு மேலும் ஒன்று !

    ஆமா இப்போ வீட்டுக்கு போலாமா இல்ல இங்கேயே ஓரங்காரமா இருந்து பொழுதைப் போக்கிடலாமா திங்கிங் .....

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மேஜரே வாங்கோ.. போஸ்ட் போட்ட உடன் நீங்க வருகை தந்திட்டீங்க இம்முறை.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

      //சிந்தனைகள் செய்யச் சிறப்பாய்ப் பதிவிட்டாய்
      வந்தனை செய்கிறேன் வரிந்து !//

      சிந்தனைக்கான பதிவோ?:) ..ங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏ?:).. ஓ பூக்களைப் பார்த்தால் கவிஞர்களுக்குக் கவிதை வருவது இயல்புதானே அதைத்தானே டொல்றீங்க?:).

      ///தமன்னா வாக்கு மேலும் ஒன்று !///
      மியாவும் நன்றி.. விடிய எழும்போதே தலையில் மகுடம்.. எப்பூடி இருக்கும் நேக்கூஊஊஊஊ?:). நன்றி நன்றி.

      //ஆமா இப்போ வீட்டுக்கு போலாமா இல்ல இங்கேயே ஓரங்காரமா இருந்து பொழுதைப் போக்கிடலாமா திங்கிங் .....///
      ஹா ஹா ஹா பூக்களைப் பற்றியும் கவிதைகள் கொஞ்சம் எழுதிட்டுப் போங்கோ.. நா ஒண்ணும் வாணாம் சொல்லலியே:)..

      மிக்க நன்றி சீராளன்.

      Delete
    2. வணக்கம் மியாவ் !

      மாக்களாய் இருக்கும் இந்த
      மனிதர்கள் முன்னே நாறும்
      பூக்களைப் பற்றிப் பாட
      புதியவை இல்லை பாரில்
      பாக்களாய் முன்னோர் தந்த
      பனுவல்கள் நூல கத்தில்
      தேக்கமாய் இருக்கும் அங்கே
      தெரிந்ததைப் படித்துக் கொள்வீர் !

      காலையில் விழிக்கும் கன்னி
      கண்களில் புதுமை சேர்க்கும்
      மாலையில் மடிந்தும் மண்ணில்
      மகிழ்வுடன் பிறப்பை மெச்சும்
      சாலையில் சைகை காட்டிச்
      சட்டென மறையும் ! ஒன்றாய்
      வேலையில் சேர்ந்த பெண்ணை
      விரும்புதல் சொல்லிச் செல்லும் !

      பிறப்பிலும் எம்மைச் சேர்ந்து
      பிரியமும் சொல்லிச் செல்லும்
      இறப்பிலும் இதங்கள் சேர்க்க
      இருட்டறை கூடச் செல்லும்
      மறப்பினும் மனதைத் தேத்தும்
      மருத்துவம் ஆகும் !பூக்கள்
      சிறப்பினைச் சொல்ல என்றன்
      சிந்தனை போத வில்லை !

      கேட்டதால் சொன்னேன் என்னுள்
      கிளர்ந்திடும் வார்த்தை கொட்டி
      வாட்டமோ வலியோ இல்லை
      மகிழ்வுதான் வாழ்வின் எல்லை
      ஓட்டமும் நடை யுமாக
      உதிர்ந்திடும் காலத் துள்ளே
      நாட்டமும் கொள்வீர் இந்த
      நறுமலர் வாசம் போலே !

      ஒரு பத்து நிமிடக் கவிதைதான் பூசாரா நேரம் கிடைக்கும் போது நீண்ட கவிதை அனுப்புகிறேன் அன்புக்கு நன்றி வாழ்க வளத்துடன் !

      Delete
    3. கவிதையை ரசித்தேன். "காலையில் விழிக்கும் கன்னி...." இந்தப் பாடல் சிறப்பாக இல்லை, சரியான அர்த்தம் இல்லாததால் . "பிறப்பிலும் எம்மைச் சேர்த்து"- பிறந்த உடனே குழந்தைக்கு நறுமலர்கள் சேர்க்கமாட்டார்களே என்று நினைத்தேன். ஒருவேளை பூந்தொட்டிலாக இருக்குமோ? பூச்சி வரும் என்று உபயோகப்படுத்தமாட்டார்கள். மற்றபடி இந்தப் பாடல் அர்த்தமுள்ளது. "நாட்டமும் கொள்வீர்" - எதில்? மகிழ்ச்சியாக இருப்பதிலா? அதற்குப் பதில், பூக்களைப்போல் பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதில் என்று இருந்தால் அருமையாக இருந்திருக்கும். பாடலின் சந்தம் அருமை. வாழ்த்துக்கள்.

      Delete
    4. வணக்கம் நெல்லைத் தமிழன் !

      '' காலையில் விழிக்கும் கன்னி '' காலையில் மலரும் கன்னி என்று சொல்லி இருந்தால் புரிந்திருக்கும் அல்லவா ஆனால் விழிக்கும் சொன்னது பெண்ணையும் குறிக்கும் அந்த மலரையும் குறிக்கும் அதுதான் அவ்வாறு சொன்னேன் அடுத்து ! "பிறப்பிலும் எம்மைச் சேர்த்து"- இங்கே முக்கியமாக எண்ணிக்கொண்டது குங்குமப் பூவைத்தான் கருவுற்ற பெண்களுக்கு பாலோடு சேர்த்துக்கொடுப்பார்கள் ( உடல் உபாதைகள் போக்கவும் பிறக்கும் குழந்தையின் திடகாத்திரத்திற்காகவும்) இல்லையா ஆதலால்தான் பிறப்பிலும் என்று சொன்னேன் பிறந்ததும் என்று சொல்லாமல் அடுத்து '' நாட்டமும் கொள்வீர் '' இங்கே கடைசி நாலு வரிகளையும் ஒன்றாகவே படியுங்கள்

      ஓட்டமும் நடை யுமாக
      உதிர்ந்திடும் காலத் துள்ளே
      நாட்டமும் கொள்வீர் இந்த
      நறுமலர் வாசம் போலே !

      இங்கே நாட்டம் என்பதற்கு விருப்பு என்று பொருள் கொள்ளுங்கள் எதற்கு எதனில் விருப்பு கொள்ளுதல் என்பதை வாசகர்தான் தீர்மானிக்க வேண்டும் கடைசியில் பூக்களின் வாசம் போலே என்பதை கவனிக்கவும் , ஆக பூக்களின் வாசம் களங்கம் கலப்பு எதுவும் அற்றது அதுபோல வாழ்க்கையில் விருப்பு வம்சத்தில் விருப்பு எல்லாவற்றிலும் விருப்புக் கொள்ளுங்கள் ! என்று பொருள் ( உதிர்ந்திடும் காலம் - வாழ்க்கை குறுகியது அதற்குள் விருப்புக் கொள்ளுங்கள் எல்லாவற்றிலும் )

      தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் வாழ்க நலம்

      Delete
    5. //ஒரு பத்து நிமிடக் கவிதைதான் பூசாரா நேரம் கிடைக்கும் போது நீண்ட கவிதை அனுப்புகிறேன் அன்புக்கு நன்றி வாழ்க வளத்துடன் !///

      வாங்கோ வாங்கோ மேஜராகிய கவிஞரே..
      கவிஞராகிய மேஜரே....
      என் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...
      அருமையான கவிதை கேட்டதற்காக உடன் எழுதிப் போட்டு விட்டீங்க மிக்க மிக்க நன்றிகள்... ஆனா உப்பூடி அதிகம் இலக்கணம் சேர்த்து எழுதினால் நேக்குப் புரியாது தெரியுமோ?:)..ஹா ஹா ஹா.

      Delete
    6. நெல்லத்தமிழனின் விளக்கமான கேள்விகளும்.. அதுக்கு விளக்கம் கொடுத்துள்ள சீராளனின் பதில்களும் பார்த்து நான் வியக்கேன்ன்ன்:) ஏனெனில் எனக்கு எதுவும் புரியல்லே.. வாழ்க உங்கள் தமிழ்... வளர்க என் டமில்:).. மிக்க மிக்க நன்றிகள்.. இருவரது மீள் வருகைக்கும்.

      Delete
  12. கறுப்பு ரியூலிப்ஸ் பார்த்ததில்லை...

    பொன்மொழிகள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ... நீங்க உங்க போஸ்ட்டை திரும்பவும் மேலே கொண்டு வந்திட்டீங்க.. வோட் போட ஓடினேன்ன்.. ஏற்கனவே போட்டாச்சு எனக் காட்டிச்சுதா.. 15 வோட்ஸ்சும் இருந்துதா மீக்கு லெக்ஸும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல:).. ஹையோ டிடி பறிச்சிடப்போறாரே மகுடத்தை என:).. பின்புதான் தெரிஞ்சது.. இப்படி போடும் போஸ்ட் டமில் மணத்தில் வராதென்பது.. பின்புதான் மீ நெஸ்டமோல்ட் ரீ ஊத்திக் குடிச்சேன்ன்:) ஹா ஹா ஹா.

      உண்மைதான் கறுப்பு ரோஜாவும் இருக்கு.. ஆனா நான் இன்னும் பார்த்ததில்லை.

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  13. மலர்களும்
    பொன்மொழிகளும்
    அருமை அருமை
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாங்கோவாங்கோ.. உங்கள் படம் பார்க்கும்போதெல்லாம் எங்கள் சித்தப்பா மனதில் வந்து போகிறார்.. அவர் இப்போ கனடாவில் இருக்கிறார்ர்.. உங்களின் ருவின்ஸ் பிறப்பு எனச் சொல்லலாம்ம்ம்.. அப்படியே அதே மீசை அதே கண்கள்.. உலகில் ஒரேமாதிரி 7 பேர் இருப்பார்களாமே.. அது எவ்வளவு உண்மை...

      நானும் என்னைப்போல இருக்கும் மிகுதி 6 அதிராவையும் தேடித்திரிகிறேன்ன்:)..

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  14. ஊஙிக்குறிப்பு வெடிச்சிரிப்பை வரவழைத்தது.

    பூக்கள் அனைத்தும் அழகு.
    தத்துவங்களை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ... ஹா ஹா ஹா என் பக்கம் வருவோர் ரசிக்காமல் போகலாம் ஆனா சிரிக்காமல் போயிடக்கூடாது என்பதே என் விருப்பம்.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      பகவான் ஜீ.. பயங்கர பிஸியாக இருப்பதால் மகுடம் என் கைக்கு மாறியதுகூட அவருக்குத் தெரியல்லே.. ஆனா எனக்கு வோட்டுப் போட்டிட்டார்ர்ர் ஹா ஹா ஹா....:).

      Delete
    2. நொடிகள் ஒவ்வொன்றிலும் என்ன நடக்கிறது என்பது செல் மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ,வோட்டும் போட்டு விட முடிகிறது ...செல் மூலம் தமிழ் டைப் செய்யத்தான் முடியவில்லை :)

      Delete
    3. ///நொடிகள் ஒவ்வொன்றிலும் என்ன நடக்கிறது என்பது செல் மூலம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்//

      ஓ மை கடவுளே..:) இனிமேல் நான் ஜாக்க்க்க்க்ர்த்தையாத்தான் இருக்கோணும்:) பகவான் ஜீ இன் சத்தத்தைக் காணல்ல ஆள் இங்கின இல்லை எனும் தைரியத்தில் ஓவராகத் துள்ளக்குடா போல இருக்கே:)..

      Delete
    4. பகவான் ஜீ இப்போ எந்த ஃபோனிலும் செல்லினம் டவுன்லோட் பண்ணினால் ஈசியா தமிழில் ரைப்பண்ண முடிகிறதே.. ட்றை பண்ணிப் பாருங்கோ.

      Delete
  15. த ம +1. அப்புறம் படிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. எங்கட அம்மம்மா அப்பவே சொன்னா.. நெல்லைத்தமிழன் ரொம்ப நல்லவர் என.. அது கரீட்டுத்தானே:).. பிஸி எனினும் ஓடிவந்து வோட் போட்டிட்டீங்க.. மிக்க நன்றி.

      Delete
  16. Replies
    1. ஆங்ங்ங் வாங்கோ ட்றுத் வாங்கோ... இது இது அமெரிக்காவுக்கே அயகு சேர்க்குதூஊஊஉ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.. உங்கள் சேவை எமக்கு எப்பவும் தேவை:).

      Delete
  17. //எங்கள் வீட்டுக்கு இயற்கைப் பூக்கள் வாங்கி வைப்பேன்ன்///


    உங்க வூட்டுக்கு வந்தால் வந்தவர்களின் காதிலும் பூ வாங்கி வைப்பிங்கள்தானே

    ReplyDelete
    Replies
    1. //உங்க வூட்டுக்கு வந்தால் வந்தவர்களின் காதிலும் பூ வாங்கி வைப்பிங்கள்தானே//
      என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க கர்ர்:) பல நேரங்களில் வாறவங்கதான் நேக்குப் பூக்கொண்டு வந்து தாறாங்கோ:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி ட்றுத்.

      Delete
    2. ஹஹஹஹஹ் மதுரை!!!!

      கீதா

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கீதா:). கீதா அவர் மதுரை இல்லையாமே.. கர்:) இப்போதானே தெரியும்.. அவர் காஃப் ஒஃப் மதுரை:).. பெயரை மாத்தச் சொல்லிட்டேன்ன் இன்னும் மாத்துறாரில்லை:)

      Delete
  18. வண்ண வண்ணப் பூக்களும் வகை வகையான பொன்மொழிகளும் அதிரா வெறும் விளையாட்டுச் சிறுமி[மட்டும்] அல்ல, அழகுணர்ச்சி மிக்க அறிவுஜீவி என்பதைப் பறைசாற்றுகின்றன!

    ReplyDelete
    Replies
    1. வாவ்வ்வ்வ்வ் வாங்கோ வாங்கோ “அறிவுப்பசி பரமசிவம்” ஜி.. வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

      //அழகுணர்ச்சி மிக்க அறிவுஜீவி என்பதைப் பறைசாற்றுகின்றன!//
      ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ:) ஊரெல்லாம் புகைஞ்சு.. வெக்கை அதிகமாகிடப்போகுது இன்னும்:)..

      ஹா ஹா ஹா வலதுகாலை எடுத்து வச்சுத்தானே வந்தீங்க.. மிக்க நன்றி வரவுக்கும் வோட்டுக்கும்.... இனி மகுடம் எல்லாம் நேக்குத்தேன்ன்ன்ன்:)).

      Delete
  19. என் பக்கத்து டீச்சர் வீட்டில இருக்கு இந்த கறுப்பு tulip.இடையில் தத்துவங்கள் மிக அருமை. ஒரு படம் 2தரம் போட்டு இருக்கீங்க...ப்ளவர் வாஸ் பக்கத்தில இருப்பது மெழுகுதிரியா.. இங்கு இப்படி பூங்கொத்து கொஞ்சம் விலை அதிகம். அனேக பூக்கள் பிங்க்....ஹா.ஹா...
    முதலில வோட் போட்டுவிட்டதுதான் வாசிக்கவேண்டியிருக்கு. டெரர் ஆவெல்லே இருக்கு இந்தப்பக்கம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ..

      //ஒரு படம் 2தரம் போட்டு இருக்கீங்க// ஹா ஹா ஹா நீங்க சொன்னபின்பு பார்த்தேன்ன்ன் அதெப்பூடி எனத் தெரியல்ல...:).

      //ப்ளவர் வாஸ் பக்கத்தில இருப்பது மெழுகுதிரியா//

      இல்ல அது பிரம்பால் பின்னி மூடி போட்டிருக்கு.. அதுக்குள் சுவீட்ஸ் வாங்கிப் போட்டு வைப்போம்:) ஆனா எங்கள் சின்னவரே முடிச்சிடுவார்ர்:) கர்:).

      முதலில் வோட்ட்ட்.. ஹாஅ ஹா ஹா இல்லாட்டில் நுளம்பு கடிச்சுப்போடுமெல்லோ:).. வோட்டுக்காக நுளம்புக்கெல்லாம் லஞ்சம் கொடுத்து வச்சிருக்கிறேன்ன்:).

      மிக்க மிக்க நன்றிகள் அம்முலு... நீங்க எப்போ ஆரபிக்கப்போறீங்க?:).

      Delete
    2. பூசாரே ! அம்முவையும் பதிவு போடச் சொல்லலாமே நாங்க சொன்னா
      ஹூ ஆர் யு அப்படின்னுட்டா நல்லாவா இருக்கும் அவ்வ்வவ்வ்

      Delete
  20. அதிரா வீட்டு புஷ்பங்கள் அழகு.
    புய்ப்பம் என்றும் புஷ்பம், பூக்கள் என்றும் சொல்லாம்தானே!
    அழகான பூக்கள் அலங்காரம்.
    பெட்டி செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை.

    இது எங்கள் ஊர் ரோட்டோரம் இருக்கிறது, பாருங்கோ கறுப்பு ரியூலிப்ஸ்.. எங்காவது பார்த்ததுண்டோ?
    இல்லை.

    ஊசி இணைப்பு அருமை அதிரா யாரு?
    ஊசிக்குறிப்பு அருமை.

    ஓட்டு அளித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

      //ஊசி இணைப்பு அருமை அதிரா யாரு?//
      ஹா ஹா ஹா அதானே?:)..

      ///ஓட்டு அளித்து விட்டேன்.///

      ஆவ்வ்வ்வ் அதனால்தான் எனக்கு காலையிலேயே மகுடம் கிடைத்து விட்டதூஊஊஊ நான் கழட்டி இனி ஆருக்கும் கொடுக்க மாட்டேன் டொல்லிட்டேன்ன்ன்:).. ஹா ஹா ஹா மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
  21. நல்லா இருக்கு ஆதிரா. அதிலயும் ஆப்பிள் தொங்குதே அந்த பூச்ச்சாடி கொள்ளை அழகு...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜி வாங்கோ... ஆப்பிள் தொங்குதோ.. இருக்கும் சிலது பொக்கே வாங்கும்போது அழகுக்காக சில பிளாஸ்ரிக்குகளை செருகி விடுவார்கள்.

      ராஜி மட்டும் எதுக்கு எப்பவும் தனியே நிக்கிறாவே.. நம் கும்மிக்குள் குதிக்காமல் என அடிக்கடி நினைப்பதுண்டு...

      Delete
  22. ஓட்டு போட்டுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் ராஜியை வோட் போட வைக்கப் பலகாலம் பாடுபட்டேன்ன்ன்.. வோட்டுப் பெட்டியே தெரியவில்லை அவவுக்கு... ஹா ஹா ஹா மிக்க நன்றி ராஜீ.. நேக்கு மகுடம் கிடைச்சிட்டுதோன்னோ:)..

      Delete
  23. ஆவ்வ்வ்வ்வ்வ் மகுடம் அதிராவின் தலைக்கு வந்திட்டுதூஊஊஊஉ வோட் போட்டு மகுடம் சூட்டிய அனைவருக்கும் மியாவும் நன்றீஈஈஈஈஈ... நேக்கு என்ன பண்ணுவதென்றே புரியல்ல... மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன் மசமசவெனப் புறுணம் பார்க்காமல் ஃபயபிரிகேட்டருக்கு அடிச்சு அதிராவைக் காப்பாத்திடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)..

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஜம்புங்க :) நாங்க பார்ட்டி வச்சிட்டு வெகேஷன் போயிட்டு வந்து fire brigade கூப்பிடறோம்

      Delete
    2. ஹா..ஹா.. அஞ்சு..!!


      Delete
    3. ///AngelinTuesday, June 06, 2017 8:58:00 am
      நீங்க ஜம்புங்க :) நாங்க பார்ட்டி வச்சிட்டு வெகேஷன் போயிட்டு வந்து fire brigade கூப்பிடறோம்///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இண்டைக்குச் செவ்வாய்க்கிழமை.. செவ்வாயில தனியே போகாதாம் ஆன்மா:) கூடவே இன்னொருவரையும் இழுத்துப் போகுமாமே:) என்னால பாவம் அஞ்சுவுக்கு தண்டனை கொடுக்கக்கூடா என என் முடிவை மாத்திட்டேன்ன்ன்:)..

      அம்முலுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 475623389:).

      Delete
  24. அதிரா வன்மையான கண்டனங்கள் :) இந்த போஸ்டை நேற்று காலை போட்டிருந்தா :) நான் நாலுபேருக்கு எடுத்து கொடுத்திருப்பேனில்ல :))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) என் புளொக்கில் இருந்த பூக்கள் பொருட்கள் எல்லாம் போய்ய்ய்ய்.. அதனால நான் அழுத கண்ணீரிலும் என் பூஸ் அழுத கண்ணீரிலும் அவசர அவசரமாக மொட்டு விட்டுப் பூத்த மலர்கள் இவை தெரியுமோ?:).. ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பாஆஆ.. வரவர களவு ரொம்ப அதிகமாகுது.. இனிக் கறுப்புப்பூனைப் படை பாதுக்காப்புப் போடப்போறேன்:).

      Delete
  25. ஸ்டாண்டிங் அலோன் :) யெஸ் அதுவே பெட்டர் பிரச்சினை வந்தாலும் யாரையும் குற்றம் சொல்ல வாய்ப்பிருக்காது ..தனியாவே ஆதி வாங்கிட்டு வந்திடுவேன் நான் இதனாலேயே

    ReplyDelete
    Replies
    1. அவ்வ் அது ஸ்பெல்லிங் டைப்பிங் மிஸ்டேக் //தனியாகவே அடி //

      Delete
    2. கூட்டமாக இருந்து மனஸ்தாபப் படுவதைக் காட்டிலும் தனியே இருந்து என்சோய்:) பண்ணுவது பெட்டர்தானே.

      Delete
  26. பூக்கள் எல்லாம் அழகு அதிரா .எனக்கு வைக்க ஆசை ஆனா வைக்க முடியாது அந்த வாசனை இன்க்ரீஸ் பண்ணும் அலர்ஜியை

    ReplyDelete
    Replies
    1. ஓஒ கர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆ எண்டாலும் அலர்ஜி ஊ எண்டாலும் அலர்ஜி.. யூ அலர்ஜி ஃபிஸ்:) ஹா ஹா ஹா:).. பூஸ் அலர்ஜி இல்லைத்தானே?:)

      Delete
  27. அநீதி அவமானம் பழிவாங்கல் கூடாது எல்லாம் கேக்க படிக்க நல்லா இருக்கு ஆனா நடைமுறையில் ?? பெட்டர் செய்தொரையும் சம்பவத்தையும் மறப்பதே ,,
    அப்புறம் பெரிய விஷயங்களுக்கு கோபப்படுறவங்க என்னாவாங்கன்னு அதையும் விளக்கவும் :))))))))

    ReplyDelete
    Replies
    1. இல்ல அஞ்சு நமக்கு நடந்த அநீதி, அவமானங்களை நினைவில் வைத்துக் கொண்டால்ல்.. அதை நாம் அடுத்தவருக்குச் செய்திடாமல் இருக்கலாம் எல்லோ.. நமக்குப் பிடிக்காதது எது எனத் தெரிஞ்சால்தானே அதை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்க முடியும்.. அப்படிச் சொல்லப்படுது.

      பெரிய விசயங்களுக்குக் கோபப் படுவோரின் கோபத்தில் நியாஆஆஆஆயம் இருக்கும்:) அடிராவைப்போல:) ஹா ஹா ஹா:).

      Delete
  28. Good People Bring Out the Good in People

    ஓகே ஓகே எனக்கு புகழ்ச்சி பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுமே மியாவ் :))

    ReplyDelete
    Replies
    1. தெறியும்:) தெறியும்:) ரொம்ப நல்லாவே தெரியும்:).. அஞ்சூஊஊஊஊ உங்கட வாழைப்பூ ரசம் என்னா சூப்பர் தெரியுமோ?:).. ஹா ஹா ஹா.. மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.

      Delete
  29. ஓட்டு போட்டாச்சு....இங்கன கை வையுங்கோ....ஹஹஹ் இன்று உங்கள் பதிவில் பெட்டி தெரியவே இல்லை கம்ப்யூட்டரிலும்...எனவே கை வைக்காமல் சுண்டெலிதான் பெட்டியை எடுத்துக் கொடுத்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ... இனிமேல் எதுக்குப் பெட்டி பற்றிய கவலை.. லிங் இல் கை வச்சாலே வோட்டுப் போட்டிடலாம்ம்ம்ம்ம்:). என்னாதூஊஊஊஊஉ சுண்டெலியாஆஆஆ ...ங்ங்ங்ங்ஙேஏஏஏஏ:).

      Delete
  30. பூக்களும், உங்கள் கமென்டுகளும், மற்றும் சேயிங்க்ஸும் அருமை...அதிரா சகோ!

    கீதா: மேலே சொன்ன கருத்துடன்.....நமக்குத் தீங்கிழைப்பவரை மறத்தல் நல்லது இல்லையா??!! கோபமே நல்லதில்லை...அதில் சிறிய விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி கோபம் தலைக்கேறினால் தலைவலிதான்!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் மிக்க நன்றி.

      உண்மைதான் கீதா, கோபத்தை முடிந்தவரை கட்டுப்படுத்திடோணும்.. ஆனா சிலர் கோபமாகும்வரை விடமாட்டார்கள் ஹா..ஹா...ஹா:).

      Delete
  31. வடிவேலு படத்தின் ஊசிக் குறிப்பு அஹஹ்ஹாஹ்ஹஹஹ் செம செம....சிரிச்சு தள்ளிட்டோம் இருவருமே...

    ReplyDelete
  32. ஊசி இணைப்பு:
    புளொக் எழுத ஊக்குவிப்போர் இருக்கினமோ இல்லயோ:) ஆனா தேம்ஸ்ல தள்ள மட்டும் கமோன் ஜம்ப் என உற்சாகப்படுத்த நிறையப்பேர் இருக்கினம்:).. நாம ஆரூஊஊஉ.. ஜம் பண்றமாதிரி நடிச்சுக்கொண்டு தப்பி ஓடிவந்திடுவமே:) எங்கிட்டயேவா?:).// ஆமாம் பூஸார் குதித்தால் சரியாக லேன்ட் செய்துவிடுவார். எங்கும் அடிபடாமல் சரியாக லேன்ட் செய்துடுவார். அப்படியிருக்க பூசாருக்கு அவ்வப்போது அடிபடும் காரணம் சரி சரி இதுக்கும் தேம்ஸ்ல குதிச்சுக் காட்டப் போறீங்களா??!!!..ஹிஹிஹி

    கீதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ///ஆமாம் பூஸார் குதித்தால் சரியாக லேன்ட் செய்துவிடுவார்//

      நிலத்தில் லாண்ட் ஆவதைப் பற்றித்தானே பேசுறீங்க கீதா?:) தண்ணியில இல்லியே?:).. மீ பயந்துட்டேன்ன்ன்ன் தண்ணிக்குள் குதிக்கச் சொல்லிடுவீங்களோ என:).

      Delete
    2. ஆவ்வ்வ்வ் அனைத்துக்கும் மிக்க நன்றி கீதா, துளசி அண்ணன்.

      Delete
  33. தோட்டத்துல புய்ப்பம் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஐயா வாங்கோ.. தோட்டத்துப் பூக்களும் அழகழகாப் படமெடுத்துள்ளேன்ன் போடுகிறேன்ன்.. 6 மாதம் பூக்கள் சொல்ல முடியா அழகில் ஜொலிக்கும் பின்பு 6 மாதம் வெறிச்சுப்போய் இருக்கும்.

      மிக்க நன்றி.

      Delete
  34. மேலே என் மகுடப் படம் இணைச்சிருக்கிறேன்ன்.. நேரமிருப்பின் திரும்ப ஒருக்கால் போஸ்ட் படங்கள் பாருங்கோ ஹா ஹா ஹா:).

    ReplyDelete
  35. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் குறிப்பு அருமையான குறிப்பு. பாடம் சொல்லும் குறிப்பு.

    அடுத்ததும் ஒரு பாடம் சொல்கிறது. இடைவேளையில் சொல்லியிருக்கும் விஷயம் அருமை. காரணம் இல்லாமல் ஒருவர் மீது கோபப்படுவதோ, அதிருப்தி கொள்வதோ தேவை இல்லாத, நிம்மதியைக் கெடுக்கும் விஷயம்.

    எல்லாக் குறிப்புகளுமே அருமையாகத்தான் இருக்கிறது. படங்களும்.

    மகுடம் கிடைத்த பின்னும் 18 வதாக விழுந்திருக்கும் வோட்டு என் வோட்டு. என் வோட்டால் பயனில்லையோ!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ .

      ///மகுடம் கிடைத்த பின்னும் 18 வதாக விழுந்திருக்கும் வோட்டு என் வோட்டு. என் வோட்டால் பயனில்லையோ!//

      என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க.. ஒருவேளை நாளைக்கெனில்.. தமிழ்மணத்தில் இருந்து தள்ளியிருப்பார்கள்.. இது போஸ்ட் போட்டு 24 மணி நேரத்துக்குள் வந்திட்டீங்களே சந்தோசம்.

      பூஸோ கொக்கோ.. ஓடிப்போய் புயுப் படத்தை இணைச்சிட்டேன் மேலே:) ஹா ஹா ஹா.

      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  36. #இதில் 2 வது படம்:) எனக்கு மகுடம் கிடைச்சமைக்குப் போட்டேன்ன் ஹா ஹா ஹா:)..#
    எனக்கும் பொறாமையா இருக்கு ,உங்களுக்கு மகுடம் கிடைத்ததற்கு இல்லை ...அந்த வழுக்கையை பார்க்கும் போது :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ பகவான் ஜீ வாங்கோ...

      ஹா ஹா ஹா நிங்க உண்மையை ஓபினா சொல்லிட்டீங்க:) பலர் சொல்லாமல் புகை விட்டுக்கொண்டிருப்பார்கள்:) ஹா ஹா ஹா விதி உண்மைதானே?:).

      ... நானும் மகுடத்துக்குச் சொல்லல்ல:).. எனக்கு அடுத்த மகுடத்தையும் நீங்க சந்தோசமாக விட்டுத் தருவீங்கள் எனத் தெரியுமே:) ஹா ஹா ஹா..

      மிக்க நன்றி பகவான் ஜீ.

      Delete
  37. பூக்கள் மிக அழகு இதில் எதை எடுப்பது என்ற ஆவலில் )))

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நேசன் வாங்கோ... எதுக்கு பூங்கொத்தை எடுக்கப்போறீங்க? ஸ்நேகாவுக்குக் கொடுக்கத்தானே?:)..

      Delete
  38. பிரியாணி எனக்கு கிடைக்கல))) சினேஹாவே போதும்))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) நீங்க சொன்னால் போதுமோ? ஸ்நேகாவுக்கு ஃபிரான்ஸ் மாப்பிள்ளை வேண்டாமாமே:)..

      Delete
  39. தேம்சில் பூசாரைத் தள்ளுவதில் கூட தனிச்சுகம்))) நெக்கிலஸ் எடுக்கலாம்))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் நெக்லெஸ் பிரச்சனை நேசனுக்குக்கூடத் தெரிஞ்சுபோச்சா?:).. எல்லோரும் தேம்ஸ்ல தள்ளுவதிலும், நெக்லெஸ் இலுமே கண்ணாக இருக்கினம்:)

      Delete
  40. தமிழ்மண மகுட ராணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. aனைத்துக்கும் மிக்க நன்றி நேசன்.. 20 வோட்ஸ் கிடைச்சிருக்கு இம்முறை.

      Delete
  41. வோட் போட்டு மகுடம் சூடப்பண்ணிய அனைவருக்கும் மிக்க மிக்க நன்றிகள்.

    [im]https://s-media-cache-ak0.pinimg.com/736x/f2/08/e0/f208e0c2fec7987385a32a5373252ae8.jpg[/im]

    ReplyDelete
  42. வணக்கம்
    ஒவ்வாரு படங்களும் சொல்லிய கருத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரூபன் வாங்கோ.. மறந்திடாமல் அப்பப்ப வந்து போறீங்கள் மிக்க நன்றி.

      Delete
  43. Replies
    1. வாங்கோ வாங்கோ மிக்க நன்றி. அடுத்த தடவை இரு சொல்லில் பின்னூட்டம் போடோணும் நீங்க:).

      Delete
  44. [im]http://ageheureux.a.g.pic.centerblog.net/original_2.gif[/im]

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ் மிக்க நன்றி அஞ்சு:) நான் பாரமாக இருக்குதென்று :) கழட்டி பகவான் ஜீ இடம் குடுத்திட்டேன்ன்ன்ன் ஹா ஹாஅ ஹா.. படிச்சதும் கிழிச்சு விடவும் பிளீஸ்ஸ்ஸ்:).

      Delete
  45. தத்துவங்கள் நல்லாத்தான் இருக்கு. ஆனா உங்களின் வழமையான அந்த கலகலப்பு இம்முறை மிஸ்ஸிங்.

    அடுத்த பதிவில் நிறைய கொமெடி எதிர்பார்க்கிறேன்.

    என்றாலும் கடைசியா போட்டிருக்கும் தத்துவம் சிரிப்பு வெடி :) :)

    பதிவில் கலகலப்பு குறைந்தாலும் பின்னூட்டங்களில் வெளுத்து வாங்கீட்டீங்க.. உங்கள் பக்கம் வருவதே அதிகம் பின்னூட்டம் படிக்கத்தான்.

    உங்களைப் பற்றியும் கொஞ்சம் வரலாறு :) எழுதலாமே? ( எங்க பிறந்தீங்க, வளர்ந்தீங்க, படிச்சீங்க இப்படி )

    அதோட கிழமையில 4 பதிவு போடவும். ( ரசிகர் சங்கத்தின் வேண்டுகோள் )

    நன்றி.
    அடுத்த பதிவில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ சகோ வெண்ணிறப்புரவி வாங்கோ:).. வர வர சந்தேகம் அதிகமாகுது:) ஆணோ பெண்ணோ என:) கர்ர்ர்:).. .. முந்தி இப்படித்தான் “எலிக்குட்டி” என ஒருவர்.. ஓடித்திரிந்து .. பின்பு காணவில்லை.

      சரி ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு அதிராவைக் கடிக்காதவரை ஓகே:).

      //கலகலப்பு மிஸ்ஸிங்///

      உண்மைதான்... நேரம் கிடைப்பதில்லை, நீண்ட நாட்கள் ஆகுதே என, ரயேட்டுடன் போஸ்ட் எழுதினால் இப்படித்தான் ஆகிறது.

      Delete
    2. //அடுத்த பதிவில் நிறைய கொமெடி எதிர்பார்க்கிறேன். //
      [im]http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg[/im]

      Delete
    3. ///உங்களைப் பற்றியும் கொஞ்சம் வரலாறு :) எழுதலாமே? ( எங்க பிறந்தீங்க, வளர்ந்தீங்க, படிச்சீங்க இப்படி )///

      ஆங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்திட்டீங்க:).. நீங்க கறுப்போ சிவப்போ.. உயரமோ குள்ளமோ... என்பாலோ எதிர்ப்பாலோ எந்த நாடோ ஊரோ என எதுவும் தெரியாமல் இருக்கும்போது... என்னைப் பற்றிய விடுப்ஸ் கேய்க்கிறீங்க கர்ர்ர்ர்ர்:)..

      ஐ ஆம் ஒரிஜினலி ஃபுறொம் அப்றிக்கா:).. வளர்ந்தது அந்தாட்டிக்கா.. இப்போ இருப்பது எங்கட வீட்டில:)...

      எங்கட வீட்டுக்குப் பக்கத்தில ஒரு ஆச்சி கடை இருக்கு:)(கஃபே).. அங்கு அதிகமா ஒரு வயதான ஆச்சி நிற்பதால் நாம் வைத்த பெயர் ஆச்சி கடை:).. அந்தக் கஃபே க்கு வந்தால் ரீ குடிச்சுக்கொண்டே சொல்றேனே.

      ஆனா ஒண்ணு.. ஒரு கப் ரீயை ஒரு மணித்தியாலமா வச்சு வச்சுக் குடிக்கோணும்:) அதுதான் இங்குள்ள வெள்ளையர்களுக்கு பிடிக்கும்... எதும் பேசுவதாயின் கஃபே போகலாம் வாங்கோவன் என்பினம்... போனால் இதுதான் நடக்கும்:).

      //அதோட கிழமையில 4 பதிவு போடவும். ( ரசிகர் சங்கத்தின் வேண்டுகோள் ) //
      ஹா ஹா ஹா ரசிகர் சங்கமோ.. அதுக்காவது ஊர் .. பெயர் இருக்கோ?:)..

      மிக்க நன்றிகள் வெண்ணிறப்புரவி.. வோட் பண்ணியமைக்கும்.

      Delete
  46. அனைத்தும் அருமை...
    நானும் ஓட்டு போட்டுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தம்பி மொகமட் வாங்கோ.. மிக்க நன்றி. உங்கள் வோட்டுடன் 21 ஆனது.. உடனேயே மேலேயும் படத்தை மாத்தி விட்டேன்:).

      Delete
  47. நெல்லைத் தமிழன்Thursday, June 08, 2017 9:08:00 am
    இதுலாம் ப்ராப்தம் என்று சொல்லிவிட்டுக் கடந்து சென்றுவிட வேண்டியதுதான். அதைவிட, அந்தக் கணவன், அழகை ரசிக்கத் தெரியாதவனாக அமைந்துவிட்டால்தான் கொடுமை. நான் பெரும்பாலும் பார்த்த, 'காதல் செய்து கல்யாணம் செய்துகொண்டவர்களில்', எதைக் கண்டு இவன் இவளைத் தேர்ந்தெடுத்தான், அவள் இவனைத் தேர்ந்தெடுத்தாள் என்று யோசிக்கும்படித்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறது. ரெண்டும் சம்பந்தமில்லாத ஜோடியாக இருக்கும். ஒரு வேளை, 'மனசு' என்பதுதான் காரணம் என்றால், அந்த 'மனசு' கடைசி வரை அப்படியே இருக்கட்டும் என்றுதான் வேண்டுவேன்.

    "நாகூர் பிரியாணி" - இந்த மாதிரி மற்றவர்கள் சொல்லுவதும் தவறுதான் இல்லையா? நமக்குக் கிடைத்ததை நாம் எப்படி வைத்துக்கொள்கிறோம் என்பதும் ஒரு அளவீடுதானே. We get what we deserve. இல்லையா?//

    வாங்கோ நெல்லைத்தமிழன்.. மீள் வருகைக்கு நன்றி.

    மேலே அஞ்சு சொல்றா தன் கொமெண்ட்டை டிலீட் பண்ணப்போவதாக.. அவவுக்கே பிடிக்கவில்லை அது.. அதில் ஒன்றும் தப்பில்லை இருப்பினும் அவவின் விருப்பத்துக்கேற்ப, அதை டிலீட் பண்ணி விடுகிறேன்.. நீங்க கஸ்டப்பட்டு ரைப் பண்ணிய உங்கள் கொமெண்ட்டை இங்கு போட்டு விட்டேன்ன்.. .

    நிறையப்பேர் காதலிக்கும்போது எதையும் கவனிப்பதில்லை.. ஆனா திருமணமானபின்... இப்படியானோருக்குள் அநாவசியமாகச் சந்தேகங்கள் வந்து துன்பப்படுவதைப் பார்க்கிறேன்ன்...

    ஒரு திருமணம் எனும்போது.. ஓரளவுக்கு இருவரும்... அனைத்தாலும் கிட்டத்தட்ட சமனாக இருக்கும்போது பிரச்சனைகள் வருவது குறைந்து விடுகிறது என்பது என் கணிப்பு.


    நான் அறிந்து சில அழகிய பெண்களை.. பணம் இல்லாத காரணத்தால், பொருத்தமில்லாத ஆண்களுக்கு(பணத்தோடு இருப்பதனால்) கட்டிக் கொடுத்து விட்டனர்.. பின்னாளில் அப் பெண்கள் நல்லவர்களாக இருந்தும்.. கணவன் பயங்கர சந்தேகப்பட்டு குடும்பம் சீரளிந்ததைப் பார்த்திருக்கிறேன்.[ஏனெனில் இப்படியான திருமணங்களில் மனம் ஒத்துப் போனாலும்... தான் அழகில் குறைவு.. என்னை விட்டு விட்டு வேறு யாரோடாவது போய் விடுவார்களோ எனும் தாழ்வு மனப்பான்மையே சந்தேகத்துக்கு வழி அமைக்கிறது.

    ஆனா நாகூர் பிரியாணி என்பதெல்லாம் நகைச்சுவைக்காகத்தானே... சிலதை பார்த்து சிரிப்பதோடு விட்டு விட வேண்டும் ஆராயப்போகக்கூடாது:)..ஹா ஹா ஹா:)

    /// ஒரு வேளை, 'மனசு' என்பதுதான் காரணம் என்றால், அந்த 'மனசு' கடைசி வரை அப்படியே இருக்கட்டும் என்றுதான் வேண்டுவேன்.//

    இது நிஜம்தான்.. அதே மனதோடு இறுதிவரை எல்லோராலும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTEiTuwGbL490q1uOQ2EdDAILBYLTgqo-9RKPJtSoxITQcmOqvS[/im]

      இப்போ பழம்தானே :) சொல்லுங்க நெல்லை தமிழன் ..

      அய்யாங் இனிமே கனவு வந்தா சொல்லவே மாட்டேன் பப்லிக்ல

      Delete
    2. [im]http://farm8.static.flickr.com/7395/27315832153_c67680a045.jpg[/im]

      Delete
    3. எனக்கு எந்தக் கருத்துக்காக நான் எழுதியது என்பது நினைவில் இல்லை (பெரும்பாலும் அப்போது தோன்றுவதை எழுதுவதால்). அதுவும்தவிர, நான் சொன்னது பொதுக்கருத்துத்தான். நானும்கூட எல்லோரும் எண்ணுவதுபோல்தான் எண்ணியிருப்பேன். ஆனால் இப்போது வேறு மாதிரி (அப்படி குறை கூறுவது தவறு) எண்ணத்தோன்றுகிறது.

      தேவயானி ராஜகுமாரன் நம்ம எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். (இன்னொன்று அனன்யா, ஆஞ்சனேயலு) அழகு மட்டும் இல்லாமல், அறிவிலும் இருவருக்கும் பொருத்தமில்லை. ஆனால் ஏதேனும் நியாயமான காரணம் இருக்கவேண்டும். பொதுவாக திரை உலகில் பெண்கள், மனதுக்கே முதலிடம் கொடுப்பதால் (காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். பெரும்பாலானவர்கள் நுகர்ச்சிப்பொருளாகக் கருதுவதால்), கணவரின் அழகை அவர்கள் ஒரு குவாலிபிகேஷனாகக் கருதுவதில்லை.

      Delete
    4. //Angeliன்...அய்யாங் இனிமே கனவு வந்தா சொல்லவே மாட்டேன் பப்லிக்ல///

      அது அது அது:) பீ கெயார்ஃபுல்ல்ல்ல்(இது எனக்குச் சொன்னேன்:))

      Delete
    5. //நெல்லைத் தமிழன்Friday, June 09, 2017 2:38:00 pm
      எனக்கு எந்தக் கருத்துக்காக நான் எழுதியது என்பது நினைவில் இல்லை (பெரும்பாலும் அப்போது தோன்றுவதை எழுதுவதால்).//

      ஹா ஹா ஹா நானும் இப்படித்தேன்ன்ன்:)..

      Delete
  48. இரண்டு படங்களும் அருமை ஏஞ்சலின். சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்தியது. சின்னவங்களா இருக்கும்போது, கள்ளமில்லாத்தன்மை, பிறரை ஏமாற்றாமை, பணத்தை வைத்து/குலத்தை வைத்து நட்பைப் பேணாமை, சண்டையும் காய்/பழம், டூ/சேக்கா என்பதோடு முடிந்துவிடும். (என் பையன் 'கட்டி' என்பான்) வயது ஏற ஏறத்தான் எல்லாவித கள்ளத்தனங்களும் மனிதர்களுக்கு வந்துவிடுகிறது.

    காக்காக்கடி என்று சொல்லி, சட்டைக்கு உள்ளே மிட்டாயைவைத்து, கடித்து விகல்பமில்லாமல் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் தன்மையை இரண்டு படங்களும் நினைவுபடுத்தின. நல்ல தேர்வு.

    ReplyDelete
    Replies
    1. //காக்காக்கடி என்று சொல்லி, சட்டைக்கு உள்ளே மிட்டாயைவைத்து, கடித்து விகல்பமில்லாமல் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் தன்மையை இரண்டு படங்களும் நினைவுபடுத்தின. நல்ல தேர்வு.///

      ஹா ஹா ஹா விளக்கம் அருமை... எனக்குப் படம் பார்க்கப் புரியவில்லை.
      ஹா ஹா ஹா..

      Delete
  49. புய்ப்பங்கள் அழகோ அழகு.

    அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது அதிராவின் இடைச் செருகல் கருத்துக்கள்.

    இந்த பொண்ணு கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.

    ReplyDelete
  50. இடைவெளிக்கு மேல‌ இருக்கிற‌ பூ... நல்ல‌ வடிவா இருக்கு அதீஸ்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.