நல்வரவு_()_


Saturday 10 March 2018

வசந்த கால நதிகளிலே........................:)

அனைத்துப் பெண்களும் அன்னையரே.. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.


இம்முறை பிரித்தானியாவில் 11ம் திகதி மார்ச் மாதம் - அன்னையர்தினம் கொண்டாடப்படுகிறது...

ங்கள் வீட்டில் அப்பப்ப அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள்... என்னிடம் இருக்கும் சில கடந்த கால, இனிமையான.. பசுமையான.. சுவையான நிகழ்வுகளை இந்த அன்னையர் தினத்தோடு வெளியிடலாமே என நினைச்சேன்.. இவற்றில் சில பேஸ்புக்கில் இருந்தபோது அப்பப்ப எழுதியிருந்தேன். அத்தனையும் எங்கள் சின்னவரின் கூத்துக்கள்..:)..

இது ஒருநாள் அவருக்கு காய்ச்சல் வந்தபோது நடந்த சம்பாசனை:)..

நேரம் - இரவு 1.30.
I feel cold.. I feel cold.. ammaa please hug mee...
தொட்டுப் பார்த்தால் நல்ல காய்ச்சல் காயுது.. உடனே மருந்து கொடுத்தோம். நான் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தேன்...
Do I have a fever? how did I get this?
ஓம்... நேற்று ஸ்கூலில் ஸ்னோவில் விளையாடினீங்களோ?
Yes we made snow man...
அதுதான் காய்ச்சல் வந்திருக்குது பார்த்தீங்களோ...
I don't like fever amma... hug me hug me very cold...

Amma will u get fever?
இல்ல பேபி..
why?
நான் ஸ்னோவில் விளையாடவில்லை.. குளிருக்குள் போகவில்லை...
Ohh good... I don't like you get fever amma, I don't want you to get sick..
எனக்கு காய்ச்சல் வராது பேபி.. டோண்ட் வொரி.. ஸ்லீப்...

2 மினிட்ஸ் லேட்டர்.... நேரம் 3 மணி...
Amma.. Ammaa are you sleeping?
இல்ல பேபி..
I don't want you sleep before me..
இல்ல பேபி நான் நித்திரையாகவில்லை... பின்பு அவரோடயே நித்திரையாகிவிட்டேன்.

காலை 6.30 ..
Amma.. I am very very sad...
ஏன் குட்டி?
I can't walk.. I can't sleep.. I feel sick... I don't like sick..
இல்ல அது இன்னும் கொஞ்ச நேரத்தில் சுகமாயிடும்..
at what time?
10 o clock க்கு..
Ohh that's a long time... Can I watch TV?
இப்போ வேண்டாம்.. சாட்(sad) எனில் ரீ வி பார்க்கக்கூடாது.. ஸ்லீப் பண்ணோனும்...
no ammaa.. if people feeling sad, they watch TV....


ஹா ஹா ஹா:)..
=======================================================================
யூஸ் அடிச்சு வச்சிட்டு... கூப்பிட்டேன்..

1. “ஓடிவாங்கோ, வந்து “குடிங்”...கோ:)...

ஓடிவந்து கேட்டார்ர்....

2.வெயா இஸ் த “புடிங் “?? வெயா இஸ் த “புடிங் “?

1.நோஓஓ ஐ டிடிண்ட் சே புடிங்:) ஐ செட் குடிங்:).. கோ:)...

2.நோஓஓஓஓஓஓஓஒ யூ செட் புடிங்... ஐ வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் புடிங் நவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................... [பெரிய சத்தமாக.] ஹா ஹா ஹா.

====================================================================================
முதலாவது பிறந்த தினத்தின்போது:)


வீட்டில் பெரும்பாலும் ஏதும் ஒரு விளையாட்டுக் கண்டுபிடித்து விளையாடுவது வழக்கம்:) அதில் மெயின் கரெக்டர் நான் தேன்:).. வீடு எப்பவும் கலகலப்புக்கு குறைவில்லை. என்னை அம்மா எனப் பார்ப்பதை விட, தங்கட ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட்டாகவே பெரும்பாலும் பார்ப்பினம்:).

ஒருநாள் திடீரென, மகன் ஒரு புது ஸ்டைலில்.. அடிக்கடி என்னை ஏமாத்த தொடங்கிட்டார்ர்:).. ஓடி வந்து கிஸ் பண்ணிப்போட்டு.. தன் கண்ணைப் பொத்திக் கொண்டு படுப்பார்,  ஹையோ என் தோடு குத்திவிட்டதாக்கும்:) எனப் பதறி அடித்துப் பார்த்தால்.. அது கொமெடிக்கு:).. விழுந்து விழுந்து சிரிக்கிறார்:)..

ஸ்ரெப்ஸ்சால் விழுந்துபோய் ஆ.. ஊ அம்மாஆஆ.. என்பார் ஓடிச்சென்று பார்த்தால் சிரித்தார்...

என்னதான் கூப்பிட்டாலும் இனி ஓடுவதில்லை என மனதில கங்கணம் கட்டிக்கொண்டிருந்தாலும், ஆ.. ஊ எனக் கத்தும் அந்த ஒரு கணம் என்னை அறியாமல் ஓடிச் சென்று ஙேஙே:):) என திரும்ப வேண்டியதாப்போச்ச்ச்ச்:).

சரி அன்றோடு முடிஞ்சுதாக்கும் என நினைச்சால்:) மறுநாளும் தொடர தொடங்கியது:) இனியும் விட்டால் சரிவராது, அந்த ஓநாய்.. ஆட்டுக்குட்டி.. சிறுவன் கதையை சொல்லியே தீரோணும் என:).

வாங்கோ ஒரு கதை சொல்றேன் என கூப்பிட்டு.. 

ஆரம்பித்தேன்ன்.. ஒரு ஊரிலே(இப்பூடித்தானே தொடங்கோணும்??:).. என தொடங்கிட்டு சின்னதா ஒரு டவுட் வரவே.. நிறுத்திக் கேட்டேன்ன் .. “ஊர்” என்றால் என்ன?:)..


உடனே சொன்னார்.. ஐ நோ.. ஐ நோ.. அது church:).

இதுக்கு மேலயும், இனி இந்த உசிர் உடம்பில இருக்கும்வரை நான் ஆருக்கும் கதை சொல்ல வெளிக்கிடுவேன் என்றா நினைக்கிறீங்க:) .


======================================================================================
நட்புக்களை வீட்டுக்கு அழைச்சு வந்து.. ரீவி பார்த்து.. விளையாடும்போது...


தமிழில் பேசோணும் என அடிக்கடி சொல்வோம்.. அதனால டமிலில் பேசுறாராமாம்:))

1.நேற்று இதிலதானே வச்சேன்.. பார்த்தனீங்களோ?

2.நோ.. அம்மா.. ஐ டிடிண்ட் பார்க்க....:).. 

ஒருநாள்.. ஒரு book புதுசா வந்திருக்கு வாங்கித்தாங்கோ எனக் கேட்டு வாங்கிக் கொடுத்தோம். அடுத்த நாள் நான் கேட்டேன்..

1.“நேற்று உங்களுக்கு நியூ புக் வாங்கித்தந்ததெல்லோ.. பார்க்காமல் இருக்கிறீங்களே அதை” என... அதுக்கு அவர் சொன்ன பதில்..

2.“நோ அம்மா... ஐ பார்க்கிங் யெஸ்டடே:)”... 

இப்படி குட்டிக் குட்டியா நிறைய சம்பவங்கள்... சமீப காலமாக என் மேல் சொல்லப்படுவது... யூ ஆ த பாட் மம்மிஈஈஈஈஈஈஈஈஈ இன் த வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎல்ல்ட்ட்ட்ட்:))).. ஏனெனில் 6 மணிக்கு பின்பு ஃபுட் போல் விளையாடப் போக அனுமதிக்கிறேன் இல்லையாம்:)).. எமக்கு எப்பவும், இவரின் செயல்களால் கோபமே வருவது கிடையாது.. உருண்டு பிரண்டு சிரிப்புத்தான் வரும்:))..

இந்தாங்கோ அனைத்து அன்னையர்களும் பூ எடுத்துக்கோங்ங்ங்ங்ங்ங்:))


ஊசி இணைப்பு:
 “பழம் வேண்டுமென்றால் பூவைப் பாதுகாக்க வேண்டும்”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~_()_~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

92 comments :

  1. [im]https://media1.tenor.com/images/e78a85199269b5bd9bed207e47c158a3/tenor.gif?itemid=9277268[/im]
    நான் வந்திட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டீங்க சரி. யாருக்கும் கொடுக்காமல் இப்படி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்களே... இதுக்கு ஒரு நாளைக்கு 90,000 ஸ்டெப்ஸ்னா நடக்கணும்!!

      Delete
    2. ஹாஹாஹா :) ஒரு குட்டி சுண்டெலி இத்துனூண்டு சீஸ் சாப்பிட்டா பரவால்ல :)
      அது நெல்லைத்தமிழன் எங்காத்துக்காரர் 3 நாள் லீவ் எடுத்திருக்கார் .விடுவேனா சான்சை அதன் சீஸ் சாப்பிட்டு 3டைம்ஸ் 10000 ஸ்டெப்ஸ்சுக்கு பிளான் பண்ணிட்ட்டேன் :)

      Delete
    3. வாங்கோ அஞ்சு வாங்கோ... என்னாதூஊ சீஸ் ஐ எறிஞ்சு எறிஞ்சு சாப்பிடுறீங்களோ கர்ர்ர்ர்:)) தொண்டையில சிக்கிடப்போகுதூ:))

      Delete
    4. ///இதுக்கு ஒரு நாளைக்கு 90,000 ஸ்டெப்ஸ்னா நடக்கணும்!!///

      என்னோட ஜிம்முக்கு வரச் சொல்லுங்கோ நெ.த:).

      [im]https://i.ytimg.com/vi/elb5QeDKvGY/hqdefault.jpg[/im]

      Delete
    5. ///விடுவேனா சான்சை அதன் சீஸ் சாப்பிட்டு 3டைம்ஸ் 10000 ஸ்டெப்ஸ்சுக்கு பிளான் பண்ணிட்ட்டேன் :)//

      கர்ர்ர்:) மதேர்ஸ் டேயைச் சாட்டி:) அவரை வச்சு விதம் விதமா சமைக்கச் சொல்லி வேலை வாங்கத் தானே இந்தப் பிளான்:)

      Delete
    6. ம்க்கும் :) எனக்கு தேவை தயிர் சாதமும் க்ரீன் ஸ்மூத்தியும் அதை அவருக்கு செய்ய கத்துக்குடுத்திட்டேன் :)

      Delete
    7. /விதம் விதமா சமைக்கச் சொல்லி வேலை வாங்கத் தானே//
      கர்ர்ர்ர் :) நானே கடுகோரை பாகற்காய் உப்புசார் கருவேப்பிலை ரைஸ் லாம் செஞ்சு இப்போ அவர் விதவிதமா கேக்கிறார் :) நான்தானே சமைக்கணும் :)

      Delete
    8. ஓ அப்போ விதம் விதமாச் சமைச்சுப் பழக்கிட்டாலும் டப்பு:) என்கிறீங்க?:) அப்போ கவனமாத்தான் இருக்கோணும்போல ஹா ஹா ஹா:))

      Delete
  2. ஹாஹ்ஹா :) soo ச்வீட் குட்டீஸ் எப்பவும் கியூட்டிஸ் :)

    //இனிமையான.. பசுமையான.. சுவையான நிகழ்வுகளை இந்த அன்னையர் தினத்தோடு வெளியிடலாமே என நினைச்சேன்..//

    ஆம் மியாவ் ப்படி பட்ட விஷயங்களை பதிவா போடும்போது பிறகு திரும்பி சில வருஷனங்கள் கழிச்சி பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் .

    காய்ச்சல் மேட்டர் // ஹையோ 5 வயசு வரை நான் படாத பாடில்லை இரவெல்லாம் விழித்திருப்பேன் .
    என் வீட்டு தேவதை பிறந்தது முதல் பகலெல்லாம் தூங்கி நைட் ஐடி கம்பெனி வேலை நினைப்பில் முழிச்சிருப்பா :) இதில் ஜுரம் வந்தா அவ்ளோதான் .

    டிவி பார்க்க எவ்ளோ கொஞ்சல்ஸ் மம்மியை :)

    :)

    புடிங் /குடிங் ..இதெல்லாம் அந்த குழந்தைக்கு தெரிய சான்ஸில்லை நீங்கதான் கத்துகுடுத்திருப்பீங்க :)

    ReplyDelete
    Replies
    1. //ஆம் மியாவ் ப்படி பட்ட விஷயங்களை பதிவா போடும்போது பிறகு திரும்பி சில வருஷனங்கள் கழிச்சி பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும் ///

      அதேதான் அஞ்சு.. பலதை மறந்துவிடுகிறோம்.. பின்பு நினைவூட்டிப் பார்க்கும்போது எவ்ளோ ஹப்பியா இருக்கும்..

      ///புடிங் /குடிங் ..இதெல்லாம் அந்த குழந்தைக்கு தெரிய சான்ஸில்லை நீங்கதான் கத்துகுடுத்திருப்பீங்க :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) நான் இங்கு உங்களுக்குப் புரியட்டும் என்றுதான் பிரிச்சு எழுதியிருக்கிறேன்:) மற்றும்படி குடிங்கோ:) என த்தான் ஜொன்னேன்:))

      Delete
  3. அந்த பெர்த்டே படத்தில் நீங்க காட்டியிருப்பது காப்பர் சல்பேட் ப்ளூவா ??? அழகான கலர்.
    நானும் பார்க்கிறேன் நீங்க புடவை நல்லா கட்டறீங்க :)
    அடுத்த கிறிஸ்த்மசுக்கு வாரீங்களா எங்க வீட்டுக்கு வந்து எனக்கு சாரி கட்டி விடத்தான் :)
    மகன் கேக்கை பார்க்கிறாரா ? எங்க பொண்ணுக்கு ரெட் கலர் டிரஸ் :)

    ReplyDelete
    Replies
    1. ///காப்பர் சல்பேட் ப்ளூவா ??? அழகான கலர்.//

      அது நல்ல ஒரு டார்க் கிரீன் அஞ்சு... மகனின் உடுப்பும் ஒருவித சாணாகப் பச்சை என்பினம் பிறவுனிஸ் கிரீன் போல இருக்கும்...

      //அடுத்த கிறிஸ்த்மசுக்கு வாரீங்களா எங்க வீட்டுக்கு வந்து எனக்கு சாரி கட்டி விடத்தான் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்த கிரிஸ்மஸ்க்கு வரச்சொல்லிப்போட்டு ஒழிச்சு ஓடிட்டீங்க:))..

      ஓ மகளுக்கு ரெட் கலர் ட்றெஸ் ஆ? பாபி டோல் போல இருந்திருப்பாவே.. அம்மா சாறி கட்டினாவோ?:)

      //மகன் கேக்கை பார்க்கிறாரா ? எங்க பொண்ணுக்கு ரெட் கலர் டிரஸ் :)//

      அது கட் பண்ணும் நேரம் என நினைக்கிறேன் அதனாலதானே மேலே இருந்து பலூன் போல ஒன்று உடைச்சு விட்டார்கள்.. அதனுள்ளிருந்து நிறைய கொட்டுது:)).. அது கனடாவில போய் ஹோல் புக் பண்ணி செய்தோம்.. எல்லாம் ஹோல் கணக்கு.

      Delete
    2. /மகளுக்கு ரெட் கலர் ட்றெஸ் ஆ? பாபி டோல் போல இருந்திருப்பாவே.. அம்மா சாறி கட்டினாவோ?:)//

      டிரெஸ்னா frock ..மம்மி ஸாரியா :) ஹாஹாஹா ஹையோ நான் கல்யாணத்துக்கு அப்புறம் 2016 டிசம்பர் தான் கட்டினேன் :)
      நமக்கு முடியலை ..ஜீன்ஸ் அண்ட் சுரிதார் தான் :)
      எங்க செலிப்ரேஷன் வெரி சிம்பிள் :) கணவரின் பிரதர்ஸ் குடும்பம் டோட்டலா எங்களையும் சேர்த்து 16 பேர்தான் :)
      வீட்டில்தான் கேக் கட்டிங் ஒன்லி கேக் கட்டிங்த்தான் வேறெந்த கட்டிங்குமில்லை :)
      டின்னர் ஒரு ஸ்ரீலங்கன் குடும்பம் செய்து தந்தாங்க .

      Delete
  4. / ஒருநாள் திடீரென, மகன் ஒரு புது ஸ்டைலில்.. அடிக்கடி என்னை ஏமாத்த தொடங்கிட்டார்ர்:).//

    நல்லா கவனிச்சா ஒன்னு புரியுது :) உங்க சன்ஸ் அதிலும் சின்னவர் அப்படியே உங்களை கொண்டு பிறந்திருக்கார் :) naughty மாம் போலாவே குட்டி naughty மகன்
    எங்க வீட்ல என் பொண்ணு அமைதியான குழந்தை வாயில்லா பூச்சி :) அப்டியே நான்தானே :)

    ReplyDelete
    Replies
    1. //எங்க வீட்ல என் பொண்ணு அமைதியான குழந்தை வாயில்லா பூச்சி :) அப்டியே நான்தானே :)//

      மகளைச் சொல்லுங்க ஒத்துக்கறேன்:)) ஆனா உங்களையும் சந்தடி சாக்கில சேர்த்து சொல்லிட்டீங்க பாருங்கோ:)).. பூச்சிக்கு மருந்தடிச்சதுபோல பொத்தென மயங்கி விழுந்திட்டேன் படிச்சதும் ஹையோ ஹையோ:))

      Delete
  5. என தொடங்கிட்டு சின்னதா ஒரு டவுட் வரவே.. நிறுத்திக் கேட்டேன்ன் .. “ஊர்” என்றால் என்ன?:)..//

    ஹையோ மியாவ் புரியாத பூஸா இருக்கீங்களே :) நாம் கேட்டா இப்படித்தான் வில்லங்கமா ரிப்லை வரும் .அவங்களா கேட்ட சொல்லணும் :)
    செம பல்ப் வாங்கி பூஸ்

    ReplyDelete
    Replies
    1. //வில்லங்கமா ரிப்லை வரும் .அவங்களா கேட்ட சொல்லணும் :)//

      ஹா ஹா ஹா இல்ல அஞ்சு.. இப்பகூட நான் ஏதும் சொல்லிட்டே போவேன்ன் தலை ஆட்டி ஓகே ஓகே என்பார் ஏதோ நன்கு புரிஞ்சதுபோல:).. எங்கே என்ன சொனேன் சொல்லுங்கோ எண்டால்.. தப்புத்தப்பா புரிஞ்சிருப்பார்:)).. அதனாலயே எதுக்கு லூஸ்போல மீ சொல்லிட்டே போகோணும்:) என டவுட் வந்துதா அதுதான் கேட்டேன்ன்ன் ஹா ஹா ஹா:))

      Delete
  6. ஹாஹா :) தமிழ் என் பொண்ணு பேசும்போது முந்தி புல்லுகள்ஸ் மரங்கள்ஸ் இப்படி சொல்வா :) ரொம்ப நாள் ரசிச்சோம் அப்புறம் மாத்திட்டா :)
    / எமக்கு எப்பவும், இவரின் செயல்களால் கோபமே வருவது கிடையாது.. உருண்டு பிரண்டு சிரிப்புத்தான் வரும்:))..//
    ஆமா இதிலென்ன ஆச்சர்யம் :) குண்டு பூனை உருள்றதும் பிரள்றது சகஜம்தானே :)

    [im]https://im-01.gifer.com/2vuf.gif[/im]

    ReplyDelete
  7. “பழம் வேண்டுமென்றால் பூவைப் பாதுகாக்க வேண்டும்”//

    ஹலோவ் மக்களே இதை நம்பாதீங்க :) மல்லிப்பூ விலிருந்து பழம் வருமா ???
    இல்லை தாமரைப்பூவில் இருந்து பழம் வருமா ??
    இல்லை தாழம்பூவில் இருந்து பழம் வருமா முள்ளைப்போவில் இருந்து பழம் வருமா :)
    துரை அண்ணாக்கு தாங்ஸ் சொல்லிக்கறேன் இங்கே பூக்கள் பேர்களை நினைவுக்கூற வச்சதுக்கு :))

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சலின்... இந்தப் பூக்கள் எல்லாம் இல்லைனா எப்போப் பார்த்தாலும் கனி கொடுக்கும் மரத்துப்பூவையே வண்டுகள் மொய்த்துக்கொண்டே இருந்தால் அவகைகளிலிருந்து பழங்கள் எப்படி வரும்? அதிசயமா கஷ்டப்பட்டு சிந்தித்து அபூர்வமா அதிரா உண்மையை எழுதினால் அதில் குற்றம் கண்டுபிடிக்கலாமா?

      தலை நரைக்க ஆரம்பித்துவிட்டது என்பதால் நீங்களும் என் பதவிக்கு (நக்கீர்ர்) ஆசைப்படலாமா?

      Delete
    2. ஹையோ எனக்கு தலையும் நரைக்க வேணாம் நக்கீரர் பதவியும் வேணாம் :) நீங்களே நக்கீரரா இருங்க :)
      எனக்கு நாலைஞ்சு க்ரே ஹேர் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும் :) இனிமே மச்சம் குடை எல்லாம் விட்டுட்டு வேற மாதிரி disguise பண்ணிட்டு போணும் போலிருக்கே :)
      ஓகே bye சர்ச்சுக்கு போயிட்டு வந்து தொடர்கிறேன்

      Delete
    3. முல்லை பூ //ஸ்பெல்லிங் மிஸ்டேக்காகிடுச்சி :)

      Delete
    4. //இல்லை தாமரைப்பூவில் இருந்து பழம் வருமா ??
      இல்லை தாழம்பூவில் இருந்து பழம் வருமா முள்ளைப்போவில் இருந்து பழம் வருமா :)///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏதோ தாழம்பூவை.. முல்லைப்பூவை எல்லாம் நேரில பார்த்தமாறி:))யேஏஏஏஏஏ பேச்சு வேற:))...

      பழம் வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது:))

      Delete
    5. ///அதிசயமா கஷ்டப்பட்டு சிந்தித்து அபூர்வமா அதிரா உண்மையை எழுதினால் அதில் குற்றம் கண்டுபிடிக்கலாமா?///

      ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் நில்லுங்கோ.. இப்பவே ஓடிப்போய் நல்ல குண்டுப் பூசணிக்காய் வாங்கி.. தேம்ஸ் கரைச் சந்தியில சிதற உடைச்சுப் போட்டு வாறேன்ன்ன்ன்ன்:)).. ஹையோ இண்டைக்கு நெ.த அதிராவுக்கு சப்போர்ட்டாக் கதைச்சிருக்கிறாரே:)).. கண்ணு பட்டிடாமல் இருக்கோணும் ஜாமீஈஈஈ:))..

      ///தலை நரைக்க ஆரம்பித்துவிட்டது என்பதால் நீங்களும் என் பதவிக்கு (நக்கீர்ர்) ஆசைப்படலாமா?///

      ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊ நில்லுங்கோ:) ஜொன்னாக் கேழுங்கோ:).. தேம்ஸ்ல குதிக்க வாணாம்ம்ம்ம்ம்:))... அதை எல்லாம் டை பண்ணிச் சரிப்பண்ணிடலாம்ம்:).. மீ இருக்கேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. அஞ்சுக்கு இன்னும் செல்ல நரையே வரல்ல என புஷ்பா அங்கிள் புகை வராத கற்பூரத்தில அடிச்சுச் சத்தியம் பண்ணிடுவேன்ன்ன்:)).. ஹா ஹ ஹா.. என்ன சத்தத்தைக் காணம்:).. அப்போ இன்னும் குதிக்கல்லயா?:))

      Delete
    6. ///AngelSunday, March 11, 2018 8:52:00 am
      ஹையோ எனக்கு தலையும் நரைக்க வேணாம் நக்கீரர் பதவியும் வேணாம் :) நீங்களே நக்கீரரா இருங்க :)//

      ஹா ஹா ஹா நெ.த நுக்கு தனியே சபையில் இருக்கப் பயம்ம்ம்ம்மாஅக்கிடக்காம் அதுதான் ஜெல்ப் க்கு ஆள் தேடுறார்:) அஞ்சு.. ஹா ஹா ஹா..

      Delete
  8. புடிங், குடிங் குழந்தைகளுக்கும் இப்படித்தான் பயிற்சி கொடுக்கிறீங்களோ... ?

    அப்பளம் வேண்டுமென்றாலும் பூவை பாதுகாக்க வேண்டுமோ ?
    அப்படியானால் எந்த பூ ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      ஹா ஹா ஹா கர்:) நான் ஒயுங்காத்தான் பேசுறேன்.. தமிழில் இங்கிலீசு தேடினால் இப்பூடித்தானே ஆகும்:))..

      அப்பளமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பூடி எல்லாம் ஜிந்திக்கிறாங்க:))..

      மிக்க நன்றி.

      Delete
  9. இந்தப் பாடல் கேட்டதில்லை. பெரும்பாலும் புதிய பாடல்கள் என் இளைய மகன் கேட்கும் பாடல்களைக் கொஞ்சம் சோதித்த்துப் பார்ப்பேன். அவன் கொஞ்சம் நல்ல பாடல்களாகக் கேட்பான். //நேரம் இரவு 1.30
    2 மினிட்ஸ் லேட்டர்...நேரம் 3 மணி..././ அப்படியா! அங்கல்லாம் வேற மாதிரி ரைமா? சே டைமா? காணொளியை மிகவும் ரசித்தேன். குழந்தைகள்!உங்கள் மகன் அருமையாக கிடார் வாசிப்பார் போலவே... குழந்தையாயிருக்கும்போது எனக்கு உடம்பு சரியில்லாமல் போக விரும்புவேன். காரணம் எப்போதும் கடுகடுவென இருக்கும் என் அப்பா அப்போ என்னை அருகில் இருந்து தலையை எல்லாம் தடவிப் பார்த்துக் கொள்வார். வீட்டுக்கு கொண்டு வந்திருக்கும் அலுவலக வேலையைக் கூட என் அருகில் அமர்ந்து செய்வார். (என் அண்ணன், என் தங்கைக்கெல்லாம் உடம்பு சரியில்லாமல் போனாலும் அப்படித்தான்). பையன் பொய்யாய் அடிபட்டது போல நடித்து அழும்போது எனக்கும் அதன் சீரியஸ் பின்கதைதான் நினைவுக்கு வந்தது. பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள். அநேகமாக அவனும் அந்த விளையாட்டைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கவேண்டும். அதுதான் என்று நினைக்கிறேன்! தமிழில் பேசுவது சுவாரஸ்யம். அதுசரி. குழந்தைகள் தினத்துக்குப் போடவேண்டிய பதிவை அன்னையர் தினத்தில் போட்டிருக்கிறீர்களே, அன்னையர்தினத்தில் போடவேண்டியதை குழந்தைகள் தினத்தில் போடுவீர்களோ! அன்னையர் தின வாழ்த்துகள்.. ஊசி இணைப்பையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ.. இம்முறை ஒரு கூடையில் அனைத்தையும் அள்ளி வந்து கொட்டிட்டீங்க:)..

      //இந்தப் பாடல் கேட்டதில்லை.//

      இது 2015 இல் வந்த படம் என நினைக்கிறேன்.. ரோமியோ - யூலியட்... தியேட்டரில் பார்த்தோம் சூப்பர் படம்.. ஒரே கொமெடிதான்.. சிரிச்சு சிரிச்சு வயிற்று நோ வந்துவிட்டது:)).. நான் கண்ணை மூடவே இல்லையே.. அதாவது தியேட்டரில் நித்திரையே வரவில்லை எனில் பாருங்கோ படம் எப்பூடி இருந்திருக்கும் என:)..

      //பெரும்பாலும் புதிய பாடல்கள் என் இளைய மகன் கேட்கும் பாடல்களைக் கொஞ்சம் சோதித்த்துப் பார்ப்பேன். அவன் கொஞ்சம் நல்ல பாடல்களாகக் கேட்பான்.///

      ஓம் இப்போ பிள்ளைகள் செலக்ட் பண்ணிக் கேட்பார்கள்.. நல்லதாவே இருக்கும்..

      //நேரம் இரவு 1.30
      2 மினிட்ஸ் லேட்டர்...நேரம் 3 மணி..././ அப்படியா! அங்கல்லாம் வேற மாதிரி ரைமா? சே டைமா?//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அந்த 2 மினிட்ஸ் லேட்டர்.. ஏன் போட்டேனோ தெரியல்லியே:)).. நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணம்:))

      Delete
    2. //உங்கள் மகன் அருமையாக கிடார் வாசிப்பார் போலவே...//

      ஓரளவுக்கு வாசிப்பார்...

      //குழந்தையாயிருக்கும்போது எனக்கு உடம்பு சரியில்லாமல் போக விரும்புவேன். காரணம் எப்போதும் கடுகடுவென இருக்கும் என் அப்பா அப்போ என்னை அருகில் இருந்து தலையை எல்லாம் தடவிப் பார்த்துக் கொள்வார். வீட்டுக்கு கொண்டு வந்திருக்கும் அலுவலக வேலையைக் கூட என் அருகில் அமர்ந்து செய்வார்.///

      ஓஓ.. இதிலிருந்து என தெரியுது.. பெரும்பாலான அப்பாக்களுக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரிவதில்லை... அதனால கடுகடுப்பாக இருப்பதுபோல நமக்கு தெரியும்... இப்படி வருத்தம் வரும்போது அவர்களால் தாங்க முடிவதில்லை..

      //அநேகமாக அவனும் அந்த விளையாட்டைப் பாதியிலேயே நிறுத்தியிருக்கவேண்டும்.//

      ஹா ஹா ஹா அத்தோடு விட்டு விட்டார்..

      Delete
    3. ///அதுசரி. குழந்தைகள் தினத்துக்குப் போடவேண்டிய பதிவை அன்னையர் தினத்தில் போட்டிருக்கிறீர்களே, அன்னையர்தினத்தில் போடவேண்டியதை குழந்தைகள் தினத்தில் போடுவீர்களோ!//

      இல்ல ஸ்ரீராம்.. எப்பவும் எக் கொண்டாட்டத்துக்கும் நான் வாழ்த்துப்போட்டு ஆர்ப்பரிக்க விரும்புவதில்லை... ஏதும் பொருத்தமாக அமையும்போது போட்டால் சரி மற்றும்படி எனக்கிதில் விருப்பமில்லை... காரணம் ... யார் மனதும் என் போஸ்ட் பார்த்துக் கஸ்டப்பட்டிடுமோ எனப் பயப்படுவேன்.. ஏனெனில் அம்மாவின் நினைப்பை தூண்டிவிடுவதுபோலாகிடும் பலர் வாழ்க்கையில்ல்..
      இருப்பவர்களுகு ஓகே, இல்லை எனில் மனக் கஸ்டம் எல்லோ அதனாலேயே எந்த வாழ்த்தும் போடுவதை தவிர்ப்பேன்..

      இதுகூட, மகனின் கதைகளைப் போடலாமே என எழுதினேன்.. பார்த்தால் அன்னையர்தினமும் அணைந்து வந்துது அதனால போட்டு விட்டேன் அவ்ளோதேன்ன்:))..

      மிக்க நன்றி.

      Delete
  10. ஹாஹாஹா, அதிரடியையே அசர அடிச்ச மகன்! ஜந்தோஷமா இருக்கு! அதிரடிக்கும் இங்கே வரும் அனைத்துத் தோழிகளுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். போன வருஷம் அம்பேரிக்காவில் இருந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீசாக்க்கா வாங்கோ...

      //அதிரடியையே அசர அடிச்ச மகன்! ஜந்தோஷமா இருக்கு///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சிலநேரம் புத்திமதியும் சொல்லுவார்.

      சமீபத்தில் எங்கட டெய்சிப்பிள்ளை ஒரு எலி பிடிச்சு சாப்பிடுவதை பார்த்தேன், கூப்பிட்டேன் அவ வரல்ல ஓடிட்டா.. எனக்கு கொஞ்சம் கோபம்.. உடனே வந்து சின்னவரிடம் சொன்னேன்.. டெய்சி ரட் சாப்பிட்டவ.. அதனால உங்கட பெட்டில் படுக்க விடாதீங்க கொஞ்ச நேரத்துக்கு என..

      உடனே அவர் சொன்னார்ர்.. கட் எனில் ரட் பிடிப்பது நச்சுறல் அம்மா.. அவவை அப்படி சொல்லாதீங்கோ என...

      அது கேட்டு.. என் அறிவுக்கண் டக்கெனத் திறந்துதே.. அது உண்மைதானே... பூனைகள் எனில் எலி பிடிப்பது இயற்கை தானே.. இதுக்காக பெட்டில் படுக்கக்கூடாது எனச் சொல்வது எவ்ளோ தப்பு என.. என் தவறை எண்ணி கவலைப்பட்டேன்ன்...:))

      ///போன வருஷம் அம்பேரிக்காவில் இருந்தேன்///
      அம்பேரிக்காவில மே.. யூனில தான் வரும் என நினைக்கிறேன் கீசாக்கா.. இது பிரித்தாவில மட்டும் ஸ்பெஷல்:)).. அதிரா இருப்பதனாலயாத்தான் இருக்கும்:))

      Delete
  11. அதிரடி, உங்க பையர் தமிழ் பேசறமாதிரித் தான் என் நாத்தனார் குழந்தைங்க தமிழ் பேசுவாங்க. ஆனால் ஹிந்தி கலந்து. பாத்திரம் தேய்க்கணும் என்பதற்கு அவங்க சொல்வது பாத்திரம் மாஞ்ச்கே அப்புறம் வீடு போச்சா கர்னா! அதுக்கு அர்த்தம் பாத்திரம் தேய்ச்சுட்டுப் பின்னர் வீட்டைப் பெருக்கித் துடைக்கணும் என்பது. நீங்க எழுதி இருப்பதைப் பார்க்கையில் அது நினைவில் வந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா உண்மைதான் கீசாக்கா.. இரு மொழிகள் கலக்கும்போது அவர்களும் கலந்து கதைப்பினம்.. பார்க்க ஆசையாகவே இருக்கும்..

      நான் ஒரு 10 வயசாக இருக்கும்போது ஒரு 4 வயசுக் குழந்தை லண்டனில் இருந்து ஊருக்கு வந்து நின்றா... எனக்கு அப்பவும் சரி இப்பவும் சரி குழந்தைகள் எனில் பைத்தியம்:).. அதிலும் தூக்குவதுதான் பிடிக்கும்.. முக்கித்தக்கி தூக்கிடுவேன் ஆரையும்:))..

      அப்போ இக்குழந்தையையும் தூக்கி திரிஞ்சேன்.. அவ ஒரு பேப்பரை என்னிடம் தந்து சொன்னா.. அக்கா.. கிழிச்சுக் கிஃப் மீ:)) என ஹா ஹா ஹா:)).. ஆனா கிழிச்சு என்பது தமிழில் நுட்பமான வார்த்தை எல்லோ... அதை தெளிவா சொன்னா.

      Delete
  12. எங்க குழந்தைங்களுக்கு முன்பெல்லாம் எண்கள், கிழமைகள் தமிழில் சொன்னால் கொஞ்சம் தடுமாறும். ஆங்கிலத்தில் சொல்லணும்! இப்போல்லாம் பரவாயில்லை. :)

    ReplyDelete
    Replies
    1. ஆனா எனக்கு ஒன்று மட்டும் புரியுதே இல்ல கீசாக்கா... அதெப்பூடி தமிழ்நாட்டில் இருக்கும் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்க்கப் படுகிறார்கள்? இங்கிலிஸ் மீடியம் என்றாலும்.. அங்கு தமிழ் ஒரு பாடமாக இல்லையோ?.. ரியூசனுக்கு விட்டாவது சொல்லிக் குடுக்கலாமே... இங்கு தமிழ் ரியூசன் வசதி இல்லை... நான் சொல்லிக் குடுத்தேன்.. இங்கு ஸ்கூலில் சொல்லி.. ஸ்கூலில் என்னை வந்து அங்கு வைத்து அவர்களுக்கு தமிழ் சொல்லிக் குடுக்கச் சொல்லி[தாய்மொழி கட்டாயம் என ஸ்கொட்டிஸ் கவண்ட்மெண்ட் சொல்கிறது].. ஒரு ஸ்கொட்டிஸ் ரீச்சர்.. தமிழ்ப் புத்தகம் சிடி எல்லாம் கலெக்ட் பண்ணி வருவா.. நான் போய் அவவோடு சேர்ந்து இவர்கள் இருவரோடு இனொரு சென்னைக் குடும்ப மகனும் இருந்தார்.. மூவருமே இந்த ஏரியாவிலேயே தமிழ்.. சொல்லிக் கொடுத்தேன்.. நன்றாகத்தான் போச்சுது பின்பு ஏதோ தடங்கல் வந்து நின்று விட்டது... இப்போ அனைத்தையும் மறந்து விட்டனர்.

      என்னைப்பொறுத்து எத்தனை பாசை தெரிஞ்சிருந்தாலும் பெருமை தானே.

      இலங்கையில் இங்கிலிஸ் மீடியத்தில் விட்டாலும்.. தமிழ் ஒரு லங்கேஜ் ஆக எடுக்க முடியும்..

      Delete
    2. அதிரடி, எங்க குழந்தைகள் பல மாநிலங்களில் வளர்ந்தவங்க. அடிக்கடி ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் போக வேண்டி இருந்ததாலேயே அவங்களை கேந்திரிய வித்யாலயாவில் சேர்த்தார் நம்ம ரங்க்ஸ். அதிலே நாம் எந்த மாநிலத்தில் இருக்கோமோ அந்த மாநிலத்தின் மொழி தான் மாநில மொழியாகச் சொல்லிக் கொடுப்பாங்க. அந்த வகையில் சென்னையில் இருந்தப்போக் கொஞ்ச காலம் எங்க பொண்ணு தமிழ் படிச்சா. பையர் மலையாளம் படிச்சார். அவர் படிக்கையில் தமிழ் ஆசிரியர் கிடைக்கலை. பின்னர் இரண்டு பேருக்கும் மறந்து விட்டது. ஆனாலும் பேசுவது முழுக்க முழுக்கத் தமிழில் தான். பொண்ணு கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக் கூட்டித் தமிழ் படிப்பா!

      Delete
  13. அதானே ஏஞ்சல், மல்லிப் பழம், தாமரைப்பழம், தாழம்பூப் பழம்னு கேட்டதே இல்லையே! பவளமல்லிப் பழம், முல்லைப் பழம்? ம்ஹூம்! அதுவும் கேட்டதில்லை. அதிரடிக்கு மட்டும் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ.. இதனாலதான் போனதடவை ஞானிஆக்க வெளிக்கிட்டேன் எல்லோரையும்.. அதுவும் முடியாமல் போச்ச்ச்:)).. ஞானி ஆகியிருந்தீங்களெனில்:) இப்பூடி எல்லாம் கேள்வி கேட்டிருப்பீங்களோ கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி கீசாக்கா.

      Delete
  14. தமிழில் பேசும் முயற்சி அபாராம்.

    ReplyDelete
  15. ஆகா...
    இனிய நினைவுகளுடன் அழகான பதிவு...

    வாழ்க நலம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துரை அண்ணன் மிக்க நன்றி.

      Delete
  16. >>>> ...தாழம்பூவில் இருந்து பழம் வருமா?....<<<<

    தாழையின் பழத்தை நாம் உண்பதில்லை...

    ஆயினும் தாழங்காய் தாழம்பழத்தை திருவிழாக்களின் போது தோரணங்களில் கட்டுவது பாரம்பர்ய வழக்கம்...

    ஆனாலும்,
    இன்னொரு தாழம் பழத்தை நாம் உண்டு களிப்போம்!...

    அது என்ன!?...

    பிறகு சொல்கிறேன்!...

    ReplyDelete
    Replies
    1. ஓஓ அஞ்சு .. கீசாக்கா ஓடியாங்கோ... தாழம்பழம் இருக்காமே... எனக்கு தாழம்பூக்கூடக் கண்டதில்லை பழத்துக்கு எங்கே போவது...

      //அது என்ன!?...

      பிறகு சொல்கிறேன்!...///

      ஹா ஹா ஹா போஸ்ட் போடுங்கோ வருகிறோம்.. மிக்க நன்றி.

      Delete
  17. அம்மா... அன்னையே.... இந்தச் சிறு பையனின் வாழ்த்துகள் உங்களுக்கு. பிறகு வருகிறேன் அன்னையே. கோபம் வேண்டாம் தாயே.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ...

      //பிறகு வருகிறேன் அன்னையே. ///
      ஹா ஹா ஹா யூஊஊஊஊஊஊஉ ஆ எ பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் தமிழன் இன் த வேல்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:))..

      அங்கு துரை அண்ணன்.. தாடி நரைச்ச நக்கீரர் என்கிறார்:)).. ஸ்ரீராம் தான் குழந்தை என்கிறார்:).. நீங்க இன்னும் பிறக்காத பேபி:) என்கிறீங்க:) என்ன நடக்குதிங்கே:) ஒண்ணுமே பிரியல்ல நேக்கு:)) ஹா ஹா ஹா:)..

      Delete
  18. Replies
    1. வாங்கோ சகோ டிடி வாங்கோ, நலம்தானே.. நீண்ட நாட்களின் பின்பு உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்குது.. நன்றி..நன்றி.

      Delete
  19. இனிமை. இந்த சம்பாஷணைகள் என்றைக்கும் மறக்க முடியாதவை. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வெங்கட் வாங்கோ.. உண்மைதான் நினைக்க நினைக்க இனிமை.. ஆனா திரும்புவதற்குள் வளர்ந்து விடுகிறார்கள்... மிக்க நன்றி.

      Delete
  20. அன்னையர்தின வாழ்த்துக்கள் அதிரா.
    தாயும், சேயும் அன்பை பரிமாறிக் கொள்ளும் காணொளி அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ...

      யேஸ் அந்த வீடியோ சூப்பரா இருக்குதென்ன... அந்தக் குட்டிக்கு ஒரு 6-8 மாதங்கள்தான் இருக்கும்போல.. இப்போதானே பால்பற்கள் வந்திருக்கு.. ஆனா என்னமாதிரி சொல்லுது...

      Delete
  21. இனிமையான.. பசுமையான.. சுவையான நிகழ்வுகளை இந்த அன்னையர் தினத்தோடு வெளியிடலாமே என நினைச்சேன்.//

    அருமையான நினைவு ! அதனால் எங்க்களுக்கு அன்பான பாசமான தாய், மகன் உரையாடல் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் ரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதி அக்கா.. இப்படிப் பல நினைவுகள் இருக்கு இன்னும்:).

      Delete
  22. படங்கள் எல்லாம் அழகு.
    சின்ன வயது அதிரா அழகு. குட்டி மகன் அழகு.

    ReplyDelete
    Replies
    1. ///சின்ன வயது அதிரா அழகு.///
      ஆரூஊஊஊஊ பேபி அதிராவையா சொல்றீங்க?:) கோமதி அக்கா... ஹா ஹா ஹா அந்தபிள்ளை எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்:)) ஹா ஹா ஹா.

      Delete
    2. இல்லை மகனுடன் சிரித்துக் கொண்டு இருக்கும் சின்ன வயது அம்மா அதிரவை சொல்கிறேன்.

      Delete
  23. ஆரம்பித்தேன்ன்.. ஒரு ஊரிலே(இப்பூடித்தானே தொடங்கோணும்??:).. என தொடங்கிட்டு சின்னதா ஒரு டவுட் வரவே.. நிறுத்திக் கேட்டேன்ன் .. “ஊர்” என்றால் என்ன?:)..//
    ஆரம்பித்தேன்ன்.. ஒரு ஊரிலே(இப்பூடித்தானே தொடங்கோணும்??:).. என தொடங்கிட்டு சின்னதா ஒரு டவுட் வரவே.. நிறுத்திக் கேட்டேன்ன் .. “ஊர்” என்றால் என்ன?:)..


    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா மிக்க நன்றி.. மீ இதிலெல்லாம் வலு உசாராக்கும்..:).

      Delete
  24. முதலாவது பிறந்த தினத்தின்போது:)//

    உங்கள் ஜாடைதான் மகன்.
    என்ன அழகான சிரிப்பு, அதிராவின் சிரிப்பு.

    பூவானம் தூவ் தூவ பாடல் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சின்னவர் அப்படியே உருவத்திலும்.. குணத்திலும் என்னைப்போல:).. மூத்தவர் அப்படியே அப்பாவைப்போல... ஆனா உணவு முறையில் மட்டும் மாறி:)..

      சின்னவருக்கு அப்பாபோல பாஸ்ட் ஃபூட்.. இனிப்பு வகைகள்தான் பிடிக்கும்.

      மூத்தவருக்கு என்னைப்போல உறைப்பு புளிப்புக்களே அதிகம் பிடிக்கும். தமிழ்க்கடைக்கு வந்தால்.. விதம் விதமான ஊறுகாய்கள் தேடி எடுப்பார்.. அடுத்து அவருக்கு பன்னீர்க்கறி/ டோஃபுக் கறி எனில் சரியாஆஆஆஆஆஆஆன விருப்பம்.

      மிக்க நன்றி கோமதி அக்கா.

      Delete
    2. குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்வதில் தாய்மார்கள் சந்தோஷம் அளவிட முடியாது

      Delete
    3. ஹா ஹா ஹா உண்மைதான் கோமதி அக்கா... அதிலும் அவர்களுக்கு கொடுப்பதை அவர்கள் விரும்பி விளையாடும்போதோ இல்லை சாப்பிடும்போதோ.. அதை விட ஹப்பியாக இருக்கும்.

      Delete
  25. உங்கள் மகண் டமிலில் பேசுறது அருமை
    எங்கயோ பெய்டிங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மொகமட் வாங்கோ..

      ஹையோ என் டமில் பார்த்து வரவர மொகமட் க்கும் டமில் தட்டுப்படுதே ஹா ஹா ஹா.. சத்தியமா இதுக்கு மீ பொறுப்பல்ல:)) மிக்க நன்றி மொகமட்.. தவறாமல் வருகிறீங்க மிக்க மகிழ்ச்சி.

      Delete
  26. பதிவை ரசித்தேன். இந்த மாதிரி, 'தாய் மகன்' உரையாடல்களைப் படிக்கும்போது, நம் குழந்தைகளின் நினைவும் வந்துவிடும். நாங்கள் வீட்டில் எப்போதும் தமிழில்தான் பேசுவதால், தமிழ்ப்பேச்சில் அவ்வளவு பிரச்சனை இல்லை. இருந்தாலும், குழந்தைகள் இரண்டுபேரும் பேசிக்கொண்டால் (இங்கு இருக்கும்போது), அவர்கள் ஆங்கிலத்தில்தான் சுலபமாகப் பேசுவார்கள். இதுக்காகவே, சந்தர்ப்பம் கிடைக்கும்போது, நாங்கள் நால்வரில் யார் கடைசிவரை தமிழை விட்டு வேறு மொழியை உபயோகப்படுத்தாமல் இருக்கிறார்கள் பார்ப்போம் என்று சவால் விடுவேன். ஆச்சர்யமாக என் பெண் அதில் வெற்றிபெற்றுவிடுவாள் (அவள் இலக்கியத் தமிழில்தான் பேசுவாள், பழைய கால படங்களைப் பார்த்து-பக்திப் படங்களை சிறுவயதில் காண்பித்ததனால்).

    பசங்களுக்கு முடியவில்லை என்றால் (உடல் நலக் குறைவு), தங்களை ரொம்ப விசாரிக்கவேண்டும் அம்மா என்று நினைப்பது சகஜம்தான்.

    ReplyDelete
    Replies
    1. //இருந்தாலும், குழந்தைகள் இரண்டுபேரும் பேசிக்கொண்டால் (இங்கு இருக்கும்போது), அவர்கள் ஆங்கிலத்தில்தான் சுலபமாகப் பேசுவார்கள்.//

      அது உண்மைதான், இதனால்தான் தமிழ் பழக கஸ்டபடுகிறார்கள்.. அத்தோடு நம்மோடு பேசுவதை விட, அதிக நேரம் அவர்கள்தானே ஒன்றாக பேசி விளையாடுகிறார்கள்.. அதனால ஆங்கிலம் அவர்களுக்கு ஈசியா இருக்கு..

      //ஆச்சர்யமாக என் பெண் அதில் வெற்றிபெற்றுவிடுவாள் (அவள் இலக்கியத் தமிழில்தான் பேசுவாள், பழைய கால படங்களைப் பார்த்து-பக்திப் படங்களை சிறுவயதில் காண்பித்ததனால்)///

      இது உண்மைதான், நாடகம் படம் பார்த்தே நிறையக் குழந்தைகள் தமிழ் பழகுகிறார்கள். எங்கள் அண்ணாவின் மகளும் பயங்கரமா தமிழ் கதைப்பா.. நாடகம் எல்லாம் அத்துப்படி.. அம்மா எதாவது கட்டம் மிஸ் பண்ணிட்டால் அவவிடம் கேட்டே தெரிஞ்சு கொள்ளுவா:)).. ஆனா நம் பிள்ளைகளை தமிழ்ப் படம் பார்க்கக் கூப்பிட்டால்ல் மரியாதை குடுத்து வந்து கொஞ்ச நேரம் இருந்திட்டு.. தண்ணி குடிப்பதைப்போல நைசா எழும்பி ..அப்படியே போய் விடுவார்கள்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ///பசங்களுக்கு முடியவில்லை என்றால் (உடல் நலக் குறைவு), தங்களை ரொம்ப விசாரிக்கவேண்டும் அம்மா என்று நினைப்பது சகஜம்தான்.//

      அதேதான்.. இதில் சின்னவர் அப்படியே என்னைப்போல:) நானும் சின்ன வயதில் எனக்கு வருத்தம் எனில்.. ஏன் வந்தது என அழுவேன்:).. அப்படியேதான் இவரும்.. அழுவார் தனக்கு விருப்பமில்லை சிக் ஆவது என சொல்லிச் சொல்லி ஹா ஹா ஹா... குழந்தையில் மடியிலேயே வைத்துக் கொண்டிருப்ப்பேன்.. பாவமா இருக்கும் இறக்கி விட..

      Delete
  27. குழந்தையின் முதலாவது பிறந்ததின படம், ஒரு பொக்கிஷம்தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே... அனைத்துமே பொக்கிசங்கள்.. எல்லாமே வீடியோ மயமாகி விட்டமையால்.. நினைச்ச நேரம் போட்டு ரசிக்கலாம்...

      Delete
  28. நான், பசங்க சின்னவங்களா இருக்கும்போது (ஏன்.. சமீபத்திலும்தான்), ஏதேனும் புதிதாக வாங்கித் தரச் சொன்னால், 'அதை எத்தனை வருடங்கள் வைத்துக்கொள்வார்கள், எதற்கெல்லாம் உபயோகப்படுத்தமாட்டார்கள் - மொபைலா இருந்தா, கேம்ஸுக்கு போன்று, என்று எழுதி கையெழுத்திட்டு தா' என்று சொல்லுவேன். அதேபோல், சின்ன வயசுல, டிவி பார்க்க வந்தால், சரி... எவ்வளவு மார்க் வரும் எக்சாமில் எடுப்ப என்று எழுதித்தா என்பேன். அப்படி அவங்க எழுதித் தந்த கடிதங்கள் சில, இப்போ படிக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் இடுகை, இவற்றையெல்லாம் நினைக்க வைத்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ///'அதை எத்தனை வருடங்கள் வைத்துக்கொள்வார்கள், எதற்கெல்லாம் உபயோகப்படுத்தமாட்டார்கள் - ///
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது ஓவரா வெருட்டுவிங்கபோலிருக்கு:).. ஆனா அதன் அருமை தெரிஞ்சு வாங்கிக் கொடுப்பது நல்லதே.

      //என்று எழுதி கையெழுத்திட்டு தா' என்று சொல்லுவேன்.///

      ஹா ஹா ஹா ஹையோ.. இதேபோலவே சின்னவருக்கும் செய்வோம்.. மூத்தவர் கொஞ்சம் ஒழுங்கு சொல் பேச்சு கேட்பார், மீற மாட்டார்ர்ர்.. இந்த சின்னன் தான் பொல்லாதவர்:)) அதனால கேம்ஸ் வாங்கித் தரச் சொன்னால்.. x box.. அது ஒரு கேம் -- 60 பவுண்ட்ஸ்,.. புதுசு புதுசா வர வாங்கிக் குடுக்கோணும்.. லெட்டர் எழுதி சைன் பண்ணித்தாங்கோ ஒவ்வொரு நாளும் ஒழுங்கா படிப்பேன், திங்கள் முதல் வியாளன் வரை கேம் விளையாட மாட்டேன் எனக் கேட்டு எழுதி சைன் பண்ணச் சொல்லி வாங்கி வைப்போம்:)).. அதைக் கிழிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பார் கேம் கிடைச்சதும் ஹா ஹா ஹா கர்ர்:)).

      //இப்போ படிக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் இடுகை, இவற்றையெல்லாம் நினைக்க வைத்துவிட்டது.//

      உண்மைதான் சந்தோசமான நினைவலைகள்..

      Delete
  29. ஊர் - சர்ச் - இது என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் சென்றுவிட்டது. உங்க பசங்க (புலம் பெயர்ந்தவங்களோட பசங்க) இழப்பது, நாம் பெற்றிருந்த 'நம் ஊரின்' வாசம், சூழல், அனுபவங்கள், நம்ம கலாச்சாரம் போன்ற எல்லாவற்றையும். அதுவும் அவங்களுக்கு புது அனுபவம்தானே.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் பிள்ளைகளைப் பொறுத்து அவர்களுக்கு இதுதானே சொந்த ஊர்போல ஆகிவிட்டது... அதனால எங்களுக்குத்தான் கவலையே தவிர அவர்களைப் பொறுத்து இழப்பு என்பதெல்லாம் இல்லை... ஊருக்குக் கூப்பிட்டாலும் பயப்பிடுகிறார்கள்.. அங்கு பூச்சி இருக்குமோ? ஸ்னேக் வருமோ? இப்படிக் கேட்கிறார்கள் ஹையோ ஹையோ..

      ஆனா ஒன்று நம்மைப்போலவே பிள்ளைகளையும் பழக்கி வச்சிருக்கிறோம்ம்.. எந்தக் குப்பையிலும் இருந்து எழும்போணும்.. எங்கு வேண்டுமென்றாலும் படுத்து எழும்போணும்.. அஜஸ்ட் பண்ணி நடக்கோணும் என..

      ஏனெனில் சின்ன வயதில் நான் அவதானிச்ச விசயம்.. சிலர் பிள்ளைகளை வெளி நாட்டிலிருந்து ஊருக்கு கூட்டி வருவினம், குழந்தை கால் வச்சாலும் பெற்றோர் விட மாட்டினம்.. ஓவர் லெவல் காட்டுவினம்.. ஓஒ பிள்ளை வெறுங்காலில் நடக்க மாட்டா... அவ ஊத்தை இருந்தா அங்கு போக மாட்டா.. இதெலாம் சாப்பிட மாட்டா.. நிலத்தில படுக்க மாட்டா இப்படி.. அது எனக்குப் பிடிப்பதில்லை... எந்த சூழலிலும் எப்படிப்பட்ட இடத்திலும் பிள்ளைகள் லெவல் காட்டாமல் இருந்து எழும்போணும் என்பதே நம் ஆசை அப்படியே பழக்கியும் இருக்கு...

      ஆனா இந்த பூச்சி ஒன்றுதான்.. அது பயம் அவர்களுக்கு:)..

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்..

      Delete
    2. சிலர் பிள்ளைகளை வெளி நாட்டிலிருந்து ஊருக்கு கூட்டி வருவினம், குழந்தை கால் வச்சாலும் பெற்றோர் விட மாட்டினம்.. ஓவர் லெவல் காட்டுவினம்.. ஓஒ பிள்ளை வெறுங்காலில் நடக்க மாட்டா... அவ ஊத்தை இருந்தா அங்கு போக மாட்டா.. இதெலாம் சாப்பிட மாட்டா.. நிலத்தில படுக்க மாட்டா இப்படி.. அது எனக்குப் பிடிப்பதில்லை... எந்த சூழலிலும் எப்படிப்பட்ட இடத்திலும் பிள்ளைகள் லெவல் காட்டாமல் இருந்து எழும்போணும் என்பதே நம் ஆசை அப்படியே பழக்கியும் இருக்கு...//

      நன்றாக சொன்னீர்கள் அதிரா.
      என் மகனும் உங்களைப் போல் தான் எல்லாம் பழக வேண்டும் என்பான்.

      Delete
  30. உங்களுக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்.
    ப்ர்ஸ்ட் ப்ர்த்டே படத்தில் அழகாய் இருக்கிறீங்க நீங்க. மகனும் அழகு. சின்ன வயதில் செய்யும் சேட்டைகள், கதைகள் எல்லாமே க்யூட்டா இருக்கும். ஆனா என்ன வருத்தம் வந்தால்தான் கொஞ்சம்கஷ்டம். இன்னும் என் மகன் பேசும் சில வார்த்தைகளை திருத்தமுடியல. விட்டிட்டேன். அவர் டொச் ல யோசிச்சு சொல்வார்.
    ஆஹா... மகனிடம் செமையா பல்ப் வாங்கியாச்சு போல.
    சில நேரம் நினைத்துப்பார்த்தால் காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது. இப்போதான் கிண்டர்கார்டன் கைபிடித்து கொண்டே விட்டிட்டு வந்த மாதிரி இருக்கு. ஆனா அதற்குள் வளர்ந்திட்டினம். ம்.ம் இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்முலு வாங்கோ...

      //ப்ர்ஸ்ட் ப்ர்த்டே படத்தில் அழகாய் இருக்கிறீங்க நீங்க//
      இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்:) ஹா ஹா ஹா:)..

      //அவர் டொச் ல யோசிச்சு சொல்வார். //
      உண்மைதான் அதுதானே அவர்களுக்கு தாய் மொழிபோல... ஏன் ஜேர்மனியில் ஜேர்மன் பாசைதானே? டொச் எப்படி வந்துது?..

      //சில நேரம் நினைத்துப்பார்த்தால் காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிவிடுகிறது. இப்போதான் கிண்டர்கார்டன் கைபிடித்து கொண்டே விட்டிட்டு வந்த மாதிரி இருக்கு. //

      அதேதான் அம்முலு.. நாமே இப்படி நினைக்கிறோம் ஆனா எங்கட அம்மா, எங்கள் குழந்தைப்பருவத்தைப் பற்றி அப்பப்ப கதைப்பா.. அதுக்குள் இப்படி வளர்ந்திட்டோம் என ஹா ஹா ஹா..

      உண்மைதான் இதுவும் கடந்து போய்விடும்..

      மிக்க நன்றி அம்முலு.

      Delete
    2. மியாவ் :) அம்முலு சொல்றது deutsch..ஜெர்மன்காரங்க Deutschland (டொய்ஷ்லன்ட் ) பேசும் மொழியை Deutsch டொய்ட்ச் என்றுதான் சொல்வாங்க ..நீங்க சொல்றது டச் /Dutch /holland

      Delete
    3. ஓ புரிஞ்சுபோச்சு அஞ்சு.. நாம் ஜேர்மன் என்பதை அவிங்க Deutsch என்கிறார்கள்:))

      Delete
    4. krrrrr..... அடிக்கடி உங்கட செக் வரவேணும்போல. க்ளியர் செய்ய. ஸ்..ப்பா அஞ்சுவுக்கு ஒரு ஹெல்தி யூஸ் கொடுங்கோ களைச்சு போனா உங்களுக்கு விளங்கப்படுத்தி..

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நாந்தேன்ன்ன்ன் அவோக்கு தெளிவுபடுத்தியிருக்கிறேன் முடிவில:)

      Delete
  31. அன்னையர் தின வாழ்த்துக்கள் அதிரா...

    படங்கள் எல்லாம் பொக்கிசங்கள் ...அனைத்தும் வெகு அழகு...

    நோ.. அம்மா.. ஐ டிடிண்ட் பார்க்க....:).கடவுளே...ஹா...ஹா..

    அனைத்தையும் வெகு அருமையா சொல்லிருகீங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. ரசித்தமைக்கு மிக்க நன்றி...

      Delete
  32. அன்னையர் தின வாழ்த்துக்கள் அதிரா!
    பதிவு ரொம்பவும் அழகு! அம்மாவும் பிள்ளையும் எங்கேயிருந்தாலும் இப்படித்தான் கொஞ்சிக்கொள்வார்கள்! அதை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ மனோ அக்கா வாங்கோ.. மிக்க நன்றி.

      Delete
  33. பதிவை ரொம்ப ரசித்தேன் அதிரா...என் மகனுடனான் இனிய நினைவுகள் பல வந்தது...
    குழந்தைகளுடன் ஆன தருணங்கள் வாழ்வின் பொக்கிஷங்கள்...நானும் என் ம்கனும் ஃப்ரென்ஸ்தான்...இப்போதும் நேரம் கிடைப்பின் உலக விஷ்யங்களில் இருந்து இசை வரை பேசித் தீர்ப்போம்....ரெண்டு பேரும் ஆர்க்யூமென்டும் செய்வோம்...ஆனால் ஹெல்தியாகத்தான்...

    அவன் சிறு வயதில், பனானா என்று சொல்லிக் கொடுத்தால், புனானி என்று சொல்லுவான்....அது பொன்று சுகியன்/சீயன் என்ற ஸ்வீட்டை அவன் சியான் என்பான் (விக்ரம் கேரக்டர்!!) அவனும் அப்படித்தான் உடல் நலக் குறைவு என்றால் நான் அவன் அருகில் இருக்கணும்....

    இப்பொதும் ரொம்ப மிஸ் பண்ணுகிறான்...நானும் தான் அவனை...மிஸ் பண்ணுகிறேன்...

    அப்புறம் நாங்கள் சிறு வயதில் ஆங்கிலத்தில் பேசணும் என்று ஸ்கூலில் ரூல் போட்டப்பா...."சமைச்சுஃபையிங்க், அயர்ன் ஃபையிங்க்/அயர்ன் ஃபைடய்ட்....துவைஹ்சு ஃபைட்ட் ....கேர்ல் கம் கோ..யு சிட் ஸ்டான்ட் என்று சும்மா இப்படி பேசி பொழுதை ஓட்டிவுட்டு ஃபைன் லிருந்து தப்பிப்போம்....

    என் மகனும் தமிழில் தான் பேசுவான்...ஆங்கிலத்தில் பேசினால்....ம்மா ப்ளீஈஸ் தமிழில பேசு...அதுதான் க்ளோஸ் ஃபீலிங்க் தருது...ஆங்கிலம்னா ஃபார்மலா...எஞ்சாய் பண்ணி பேச முடியய்லை என்பான்...இப்ப அமெரிக்காவில் இருந்தாலும்....தமிழ் மக்கள் என்றால் தமிழ் தான்...

    உங்கல் மகனின் உரையாடல் செம!!! ரசித்துச் சிரித்தேன்...தமிழில் பேசுவது அருமை!!!

    எல்லா தினமும் நாம் அம்மாக்கள்தானே அதனால அன்னையர் தின வாழ்த்துகள்!!ஓகே மை நெட் டைம் ஓவர்....ஓவராகிப் போச்சு...குட் பை....ஃபார் நௌ...

    கீதா

    ReplyDelete
  34. உங்கட சின்ன ஆக்கள்ட பகிடிகள்... பூசாரைப் போலவே குட்டிகள். :)

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.