நல்வரவு_()_


Tuesday, 1 January 2019

கணேசா கணபதி நமக!!🙏

திரும்பிப் பார்ப்பதற்குள் 2018 முடிவுக்கு வந்து விட்டது... 2018 ஐ சந்தோசமாக நன்றி சொல்லி வழியனுப்பி வைத்து விட்டு, 2019 ஐ இனிய வாழ்த்துச் சொல்லி.. பயபக்தியோடும்.. மரியாதையோடும், வணக்கத்தோடும் வரவேற்போம்... இனித்தானே ஆரம்பமாகப்போகுது அப்போ மரியாதையா வரவேற்பது தானே நல்லது...
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான் வழமையாக புதுவருடத்துக்கு புதுப் போஸ்ட் போடுவதில்லை. ஆனா நேற்று நைட் திடீரென ஒரு ஒன்பது மணிபோல பிள்ளையாரைச் செய்து ஒரு புதுப் போஸ்ட் போட்டால் என்ன எனும் ஆசை எழும்பியது.. தடாரென குல்ட்டைத்தூக்கி எறிஞ்சு.. கட்டிலால ஜம்ப் பண்ணி, என் குயிலிங் கிட் அனைத்தும் அடங்கிய கேஸ் ஐ எடுத்து வச்சு, வேலையை ஆரம்பித்தேன், என்னை கொஞ்சம் கூட எதுவும் செய்ய விடவில்லை டெய்சிப்பிள்ளை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. தோற்றுப்போய், திரும்ப கண்ணை மூடிகொண்டு படுத்து விட்டேன்.

இருப்பினும் மனதில் எழும்பிய சுவாலை.. தீப்பிளம்பாகி வீறு கொண்டு எரிந்தது.. பகலோ நேரமே கிடைக்கவில்லை.. போனால்.. போகட்டும்..... இந்த பூமியில் நிலையாய் குயிலிங் செய்தவர் யார... எனப் பாடிக்கொண்டே அமைதியாகி இருந்தேன்.. என் ஜொந்தக் கதை ஜோகக் கதை அறிஞ்சு பூஸ்ட் குடுத்தா டொங்கியாகிட்ட அஞ்சு:)[ஹையோ இதை நான் ஜொள்ளள்ளே:) அவவே ஆதாரத்தோடு நிரூபிச்சிருக்கிறா:)] அப்போ அடங்கிய சுவாலை மீண்டும் உயிர்த்தது, ஈவினிங் மீண்டும் தூக்கினேன் ஆயுதத்தை.. பிள்ளையாருக்கு உயிர் கொடுத்தேன்ன்:)..

எப்பூடி... பிள்ளையாருக்கு உயிர் கொடுத்த பெருமை அடிராவுக்கே சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே அதிராவுக்கே...:)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


ஆக்கம்: அதிரா
ஊக்கம்: அஞ்சு
உருவாக்கம்: அதிரா
ஐடியா உதவி: அஞ்சு
கமெரா உதவி: புலாலியூர்ப் பூஸானந்தா[மீ யைச் சொன்னேன்:))]
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

இது என்னால ஆச்சரியம் தாங்க முடியவில்லை, அதனாலேயே இங்கு இணைக்கிறேன், என் கழுத்திலிருக்கும் இந்த பென்ரனைப் பாருங்கோ.. ஓம் பென்ரன். இதை எங்கள் மூத்தவர், கிறிஸ்மஸ் க்கு கிஃப்ட்டாகத் தந்தார். நான் அப்படியே ஷொக்ட்ட்ட் ஆகிட்டேன்ன்.. ஏன் தெரியுமோ, இவருக்கு எப்படி இது ஓம் என தெரிஞ்சது என.. ஏனெனில் எனக்கே இந்த ஓம் எழுத்து, ஏழு கழுதை வயசானபின்பே தெரிஞ்சு கொண்டேன்:).. இத்தனைக்கும், எப்பவும் சின்னனில், எங்கள் சுவாமி அறைக் கதவில், சந்தனத்தால், அப்பா இந்த ஓம் எழுதியிருப்பார்.. ஆனா அது ஏதோ சுவாமி அடையாளம் என கெயாலெஸ்ஸாக விட்டிருந்தேன். இப்போ இங்கு வளரும் மகனுக்கு எப்படி தெரிந்தது என ஆஆஆஆஆஆடிப்போயிட்டேன்:).. ஆனா அஞ்சு இப்பூடி எல்லாம் ஷொக்ட் ஆக மாட்டா ஏனெனில்.. காதைக் கொண்டு வாங்கோ சொல்றேன்ன்ன்... அவவுக்கு இது தெரியாதாக்கும் ஹா ஹா ஹா:).



ஊசி இணைப்பு:
ஹா ஹா ஹா:)

ஊசிக்குறிப்பு
💥💥💥💥💥💥💥💥💥💥💥🙏💥💥💥💥💥💥💥💥💥💥

91 comments :

  1. ஹலோவ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குண்டு மியாவ் :)

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் வாங்கோ அஞ்சு வாங்கோ.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

      ஒரு சிறு திருத்தம்.. “ஒல்லி மியாவ்” ஓகே?:))

      Delete
    2. அதிரா @ ஏஞ்சல் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிமை உங்கள் வாழ்வில் பெருக்கட்டும் வசந்தத்தின் வாசம் எந்நாளும் வீசட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
    3. வாங்கோ ட்றுத் வாங்கோ...
      /இனிமை பெஉகட்டும் //
      என்றால் உங்களைப்போல சுவீட்டான ஆட்களாக மாறோணும்( இது வேற சுவீட்).. என வாழ்த்துறீங்களோ ஹா ஹா ஹா...
      மிக்க நன்றி ட்றுத்.

      Delete
  2. சூப்பரா வந்திருக்கார் கணேஷா :)
    //பிள்ளையாரைச் செய்து ஒரு புதுப் போஸ்ட் போட்டால் என்ன எனும் ஆசை எழும்பியது//
    இப்படி அடிக்கடி நிறைய செய்ய ஆசை வரணும் வரட்டும் .

    ஹாஹா டெய்சி ஜெசி இவங்களுக்கு நம்ம டூல் பாக்ஸை கண்டா கிளுகிளுப்பு :)

    ReplyDelete
    Replies
    1. உண்மையில சூப்பரோ? நான் உலகமெல்லாம் வட்ஸப்பில அனுப்பிட்டேன்ன்ன்.. எல்லோரும் என்ன இது எனக் கேட்டினம்.. பிள்ளையார் என்றேன் கர்ர்:) அக்கா கேட்டா எங்கே பிள்ளையார் என:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அது பக்தி இருந்தா மட்டும்தான் தெரிவார் என்றிட்டேன்ன் எங்கிட்டயேவா பூஸோ கொக்கோ ஹா ஹா ஹா:)..

      //இப்படி அடிக்கடி நிறைய செய்ய ஆசை வரணும் வரட்டும் .//
      அது நாட்டுக்கு நல்லதில்லையெல்லோ:))

      அதேதான் அஞ்சு.. அந்த பேப்பர் சரச்ர எனச் சத்தம் போட்டால் அவவால இருக்கவே முடியுதில்ல கர்:))

      Delete
  3. ஹலோவ் :) உங்களுக்கும் வேணும்னா ஒரு மாஸ்க் செஞ்சு தரட்டுமா :) அந்த மாஸ்க் 2005 இல் செஞ்சது :)

    எனக்கென்னவோ இது ஸ்கொட்லாந்து யூகே கூட்டு சதியோன்னு தோணுது என்னை கழுதையாக்கினத்தில் உங்க பங்கு எதுனா இருக்கா :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நீங்களும் எத்தனையோ பட்டங்கள் உங்களுக்கு வச்சிருக்கிறீங்க ஆனா எனக்குப் பிடிச்சது உங்கட இந்தப் பட்டம்தேன்ன்ன்ன்ன்:)).. என்னா அழகு நீங்க அதில்:)..

      Delete
    2. [im]https://i.pinimg.com/originals/63/27/ee/6327ee46a9b8d0bc3b1b5c78e901e3cc.jpg[/im]

      grrrrrr

      Delete
    3. ஆவ்வ்வ்வ்வ் இதில ரொம்ம்ம்ம்ம்ப அழகு:)

      Delete
  4. கர்ர்ர் :) எவ்ளோ சந்தோசம் நான் டொங்கியானதில் ..கொஞ்சம் கிட்ட வாங்க ஒரு உதை விடறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏற்கனவே கால் நோவில் இருப்பதை மறந்திட்டா:)..

      Delete
  5. உயிர் கொடுத்த பிள்ளையார் மிகவும் அழகு ..இன்னும் சில டிசைன்ஸ் அனுப்பறேன் சீக்கிரம் செய்து போடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஹையோ பிள்ளையாரே.. இருப்பதற்குள் வெரி வெரீஈஈஈஈஈஈ ஈசியானதே இதுதான்:).. இவரைச் செய்யவே மீயும் டெய்சியும் பட்ட பாடிருக்கே ஹா ஹா ஹா.. இல்ல்ல அடுத்தது பார்ட்டி ஃபுறொக் அஞ்சு:))

      Delete
  6. ஹலோவ் நம்ம பிள்ளைங்க நம்மை மாதிரி இல்லை :) பூனைக்கு புலிக்குட்டி பிறந்திருக்கு :)

    அந்த ஓம் செம அழகு ..இதே டிசைனில் மகனுக்கு ஒன்னு செஞ்சு குடுங்க குவில்லிங்கில்

    ReplyDelete
    Replies
    1. //பூனைக்கு புலிக்குட்டி பிறந்திருக்கு :)//
      ஹா ஹா ஹா அது உண்மைதான் அஞ்சு, ஆனா பல விசயங்களுக்கு நான் விடுவதில்லை.. என் பயத்தால அவர்களையும் விட மாட்டேன்ன்.. முக்கியமாக கடலில் பயணிப்பது.. அது ஏரியாயினும் எனக்கு விடப்பயம்...

      ஓம் ஓம்பென்ரன் பார்த்து அதேபோல கல்லு வச்சு செய்யலாம் தான்..

      Delete
  7. இந்தப் பாடல் இதுவரை கேட்டதில்லை. எனக்கு ஏனோ சிவகார்த்திகேயன் என்றாலே அலர்ஜி வேறு!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..

      ஓ உங்களுக்கு அவரைப் பிடிக்காதோ? அவரின் நகைச்சுவையாலேயே எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.. இது இப்போ கடசியாக வந்த “சீமைராஜா” படப் பாடல்.. பார்க்கலாம் படமும் பாடலும்..

      Delete
  8. தமிழ்த்துளி சூப்பர் ..அனுபவிக்காமல் உணர முடியாதே இறைவனின் அன்பையும் இறைவனையும்

    ReplyDelete
  9. //திரும்பிப் பார்ப்பதற்குள் 2018 முடிவுக்கு வந்து விட்டது..//

    ஆனாலும் இவ்வளவு மெதுவாகத் திரும்பிப் பார்க்கக் கூடாது சாமி....

    வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ///ஆனாலும் இவ்வளவு மெதுவாகத் திரும்பிப் பார்க்கக் கூடாது சாமி...///
      ஹா ஹா ஹா அரைச்ச மாவையே அரைச்சிட்டேனோ?:) புதுசாச் சொல்லியிருக்கோணும் விட்டிட்டேன் ஹா ஹா ஹா..

      மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. மிகுதிப் பதில்கள் 2மோரோ க்கு:))

      Delete
  10. ஹாஹா ஊசி இணைப்பு :) ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார் போல் அந்த கணவன் :)

    ReplyDelete
  11. விநாயகர் உருவம் நன்றாய் இருக்கிறது. டெய்சிக்கு விநாயகர் மேல் என்ன கோபமாம்?!! உதவிய அஞ்சுவுக்கு அஞ்சு பாராட்டுகள். ஹேப்பி நியூ இயர் அஞ்சு..

    ReplyDelete
    Replies
    1. ஆங் :) தேங்க்ஸ் தேங்க்ஸ் :) .டைம் போனதே தெரிலா:) உங்களுக்கும் இனிய ஹாப்பி நியூ இயர் :)

      Delete
    2. டெய்சிக்கு விநாயகர் மேல் கோபம் இல்லை:) அந்த குயில் பேப்பர் மேல ஒரு கண் ஹா ஹா:)..

      Delete
  12. // காதைக் கொண்டு வாங்கோ சொல்றேன்ன்ன்... அவவுக்கு இது தெரியாதாக்கும் ஹா ஹா ஹா:).//
    ஹலோ கம்ப பாரதி :) சீதைக்கு லவ குச தம்பிங்களான்னு யாரோ சொன்னாங்க நினைவிருக்கா :)))))))))
    be கேர்புல் :) கழுதை கெட்டப்பில் வந்துடுவேன் கடிக்க உதைக்க

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்:) உதைக்க காலைத் தூக்கினால் பின்னாலே தடாரென விழுந்திடப்போறீங்க:)... புல்லுத் தடக்கினாலே விழுவோரெல்லாம் உதைக்கப் போயினமாம் கர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா:)...

      Delete
  13. இப்பல்லாம் குழந்தைங்க ரொம்ப பாஸ்ட். மேலும் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமல்லோ... அதான்...

    கடவுள் 1000 வருஷம் படம் எங்கள் தளத்தின் என் கடவுள் காலம் சிறுகதையை நினைவு படுத்தியது!

    ReplyDelete
  14. ஊசி இணைப்பு படித்ததும் டாக்டர் நம்மிடம் "உங்களுக்கு ஊசி வேண்டாம், வெறும் மாத்திரை மட்டும் போதும்" என்று சொல்லும்போது வரும் புன்னகை போல புன்னகைக்க வைத்தது!

    ReplyDelete
  15. கண்ணதாசனின் இந்த வரிகளை பலமுறை படித்து ரசித்துள்ளேன்.

    நன்றி அதிரா... இப்போதைக்கு விடு ஜுட்... அடுத்த பக்கத்துக்குப் பார்க்கறேன்... நேரமேயில்லை!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் அங்கிளுடையது எல்லோருமே படித்திருப்பார்கள்... இருப்பினும் படிக்க படிக்க நன்று...

      உண்மைதான் சிலசமயம் எல்லோர் வீட்டிலும் நியூ போஸ்ட் இருக்கும்.. எப்படிக் கொமெண்ட்D போட்டு முடிக்கப் போகிறோம் என ரென்சனாக இருக்கும் ... மிக்க நன்றிகள் ஶ்ரீராம்.

      Delete
  16. அதிரா உங்கள் போஸ்ட் வந்திருக்குமே என்று ப்ளாகரில் தேடிக் கொண்டே இருந்தேன் எபியில கும்மி அடித்துக் கொண்டே...ஆனாஅல் அப்ப காணலை...

    அப்புறம் இப்ப பார்த்தா உங்க போஸ்ட்!! தெரியுது...பாருங்க ப்ளாகர் சதீயீயீயீயீயீயீயீயீயீயீயீ பண்ணுது...

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...மெடிக்கக் படிக்கும் உங்கள் பையருக்கு (கீதாக்கா!!!) இனிய வாழ்த்துகள்.. இவ்வருடம் உங்கள் எல்லோருக்கும் நல்ல மகிழ்ச்சியைக் கொடுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகள்!!

    கிச்சன் வேலை முடித்துவிட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கீதா வாங்கோ..

      ஏன் எங்கள்புளொக்கிலும் நான் போஸ்ட் போட்டதும் செக் பண்ணுவேன், போஸ்ட் வந்திருப்பது தெரிகிறதா என, உடனே தெரியுமே...

      உங்கள் அனைவருக்கும் துளசி அண்ணன் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா.

      Delete
    2. //மெடிக்கக் படிக்கும் உங்கள் பையருக்கு (கீதாக்கா!!!) இனிய வாழ்த்துகள்..//
      கீதா அம்மம்மா எனச் சொல்லிட்டேன்ன்ன்..

      Delete
  17. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  18. இனிய புத்தாண்டு வாழ்துகள்.

    ஆக்கம் - உருவாக்கம் வெவ்வேறா ?

    சில காலம் முன்பு ஒருவர் பிள்ளையாரை பால் குடிக்க வைத்தார்.

    இன்று நீங்கள் பிள்ளையாருக்கு உயிர் கொடுத்ததாக சொல்கிறீர்கள்!

    எனக்கு இதில் டவுட்டு ?

    முன்பே உயிர் இல்லாதபோது பால் எப்படி குடித்திருக்க முடியும் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கில்லர்ஜி வாங்கோ..

      //ஆக்கம் - உருவாக்கம் வெவ்வேறா ?//
      அவ்வ்வ்வ்வ்வ் ஒரு ஃபுளோல வந்திட்டுது:).. தொகுப்பு என வந்திருக்கோணுமோ?:)..

      //எனக்கு இதில் டவுட்டு ?

      முன்பே உயிர் இல்லாதபோது பால் எப்படி குடித்திருக்க முடியும் ?//
      இங்கினதான் நீங்க தப்புக் கணக்குப் போட்டிட்டீங்க கில்லர்ஜி:).. பிள்ளையார் உயிரை விட்டதே.. அந்தப் பாலைக் குடிச்சுத்தான் ஹா ஹா ஹா:).

      மிக்க நன்றி.

      Delete
  19. பிள்ளையார் மிக அழகாக இருக்கிறார்…அவர் தம்பியைப் பிரியமாட்டாரோ..ஓ ஆமாம் தம்பிதானே ஓடிப் போய் பழநியில உக்காந்தார்…..ஆனாலும் பாருங்கோ அதிரா பிள்ளையார் தம்பியைப் பிரிய மனமில்லாமல் தன் இரு கண்களைப் போல் வைச்சுருக்கார்!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பிள்ளையாரை அழகில்லை எனச் சொன்னால் கீதாஅ.. உங்கள் வீட்டு கபேஎர்ட்டுக்குள் எலிக்குஞ்சுகளை அனுப்பி வைப்பார்ர் ஹா ஹா ஹா:)..

      தம்பி இங்கே எங்கே வந்தார்ர்? ஓ ஓம் ஐச் சொல்றிங்களோ?:).. இல்ல மாஅறி வரும்.. தம்பி அண்ணனைப் பிரிய மாட்டாராக்கும்.. பிக்கோஸ்ஸ் அண்ணன் லவ்வுக்கு [வள்ளியின்] சப்போர்ட் பண்ணியவராச்சேஎ:)... ஹா ஹா ஹா.

      Delete
  20. பாருங்க அதிரா மீண்டும் தம்பிதான் வரார்..நீங்க பிள்ளையார் போட்டாலும்…ஹா ஹா யாமிருக்க பயமேன், அஞ்சேல் அஞ்சேல் நு அஞ்சு/ஏஞ்சல் வந்துட்டாங்க பாருங்க ஊக்கம் கொடுத்து உதவிட!!!! ஏஞ்சல் பாராட்டுகள் வாழ்த்துகள்!
    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதேதான் கீதா.. இப்போ ஒரு வருடத்துக்கும் மேலாக என்னை குயிலிங் செய்யச் சொல்லி சொல்லிட்டே இருந்தா.. எனக்குத்தான் நேரம் பொறுமை குறைவாகப் போயிட்டுது.

      Delete
  21. பூஸாரின் வேலை தொடங்கிருச்சு பாருங்க ஏஞ்சல் உங்களுக்கு ஓம் தெரியாதாம்…ஹா ஹா ஹா ஹா
    அதிரா ஆமாம் நீங்க சொல்லுறது சரிதான்…… உங்களைப் போல ஏஞ்சலுக்கு கம்ப மகாபாரதம், இராம மகாபாரதம் எல்லாம் எழுத வராதுதான்!!!
    ஜோக்ஸ் அபார்ட்….பென்ரன் ரொம்ப அழகா இருக்கு…மகனுக்குச் சொல்லிடுங்கோ,,,நல்லா அழகாக வாங்கிருக்கார்ன்னு…

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பாருங்க ஏஞ்சல் உங்களுக்கு ஓம் தெரியாதாம்…ஹா ஹா ஹா ஹா //

      ஹா ஹா ஹா அவவுக்கு தெரியாது தெரியாது:)..

      //உங்களைப் போல ஏஞ்சலுக்கு கம்ப மகாபாரதம், இராம மகாபாரதம் எல்லாம் எழுத வராதுதான்!!! //

      எழுதுவதென்ன:) அவவுக்கு அதுபற்றி ஒழுங்கா தெரியாது:)).. பின்ன சீதை காட்டுக்குள் ஷவரில குளிச்ச கதை எல்லாம் நான் சொல்லித்தான் தெரியும்:))..

      பென்ரன் அழகாத்தான் இருக்குது.. எனக்கு அழகை விட ஆச்சரியம்.. இவருக்கு எப்படித் தெரிஞ்சது என.. ஆனா இங்கு ஸ்கொட்டிஸ் சிஸ்டம் எப்படி எனில்.. பிள்ளைகளுக்கு தம் சமயம், தம் தாய் மொழி தெரிஞ்சிருப்பது முக்கியம் என வலியுறுத்துகின்றனர்.

      கொஞ்சக்காலம் பிரைமறி ஸ்கூலில் கூப்பிட்டு என் பிள்ளைகளுக்கு நானே தமிழ் சொல்லிக் கொடுத்தேன்... அது லோக்கல் கவுன்சில் ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்.. அதுபோல சைனீஸ் க்கும்.. வேறு தமிழாக்கள் இல்லை என்பதால் நமோடு அது முடிஞ்சு போச்சு.

      Delete
  22. வாய்விட்டுச் சிரிங்க// ஹா ஹா ஹா ஹ இது ஏஞ்சலின் சித்தப்பா ஸ்டைல் போல இருக்கே…!!

    கீதா

    ReplyDelete
  23. ஊசி இணைப்பு ஹா ஹா ஹா ஹா……

    கீதா

    ReplyDelete
  24. கண்ணதாசன் அங்கிளின் வரிகளை ஏற்கனவே வாசித்து ரசித்ததுண்டு அதிரா. இப்ப மீண்டும் ரசித்தேன்…..பல நாட்களுக்குப் பிறகு…

    கீதா

    ReplyDelete
  25. வணக்கம் அதிரா சிஸ்டர்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    புத்தாண்டில் அனைத்து வளங்களும் நிறையப் பெற்று நீங்கள் சிறப்புடன் வாழ விநாயகரை வலம் வந்து வேண்டிக் கொள்கிறேன். (மானசீகமாக...) (என் கைபேசியை தாங்கள் உருவாக்கிய விநாயகர் படத்துடன் வைத்து வலம் வந்தேன் என சொல்ல மாட்டேன். ஹா ஹா ஹா ஹா.)

    விநாயகர் படம் மனதை அள்ளுகிறது. சூப்பர். எப்படிச் செய்தீர்கள்? வாழ்த்துகள்.. மற்றவற்றையும் பார்த்த பின்னர் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கமலா சிஸ்டர் வாங்கோ.. வாழ்த்துக்களுக்கு நன்றி.

      //(என் கைபேசியை தாங்கள் உருவாக்கிய விநாயகர் படத்துடன் வைத்து வலம் வந்தேன் என சொல்ல மாட்டேன். ஹா ஹா ஹா ஹா.) //
      ஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் உண்மையாவோ.. கேட்கவே மகிழ்ச்சீ:) ஆஅனா மறக்காமல் சொல்லோணும் எல்லோருக்கும்.. இது அதிராதான் செய்தவ என ஹா ஹா ஹா..

      ///எப்படிச் செய்தீர்கள்?//
      இது பேப்பர் குயிலிங் எனும் முறையில் செய்வது, பேப்பரை மெல்லிசா கட் பண்ணி உருட்டி செய்வது.. மிக்க நன்றிகள்.

      Delete
  26. சகோதரி அதிரா உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    இடையில் பதிவுகள் வாசிக்க இயலவில்லை. கிறிஸ்துமஸ் விடுமுறை உறவினர் வருகை என்று போனதால்.

    பிள்ளையார் சுழியுடன் புத்தாண்டுப் பதிவைத் தொடங்கியுள்ளீர்கள். வெற்றிகரமாய் இருக்கட்டும்!!

    அழகாகச் செய்துள்ளீர்கள். நகைச்சுவை நன்றாக இருக்கிறது. கவிஞரின் வரிகள் அருமை.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ துளசி அண்ணன் வாங்கோ.. மிக்க நன்றி... உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      விடுமுறை வந்தால் புளொக்கில் கும்மி போடலாம் எனத்தான் நானும் நினைச்சிருந்தேன். ஆனா அந்நேரம்தான் இன்னும் கஸ்டமாக இருக்கு :) ஹா ஹா ஹா.

      மிக்க நன்றிகள் துளசி அண்ணன்.

      Delete
  27. பாட்டு கேட்டேன் அதிரா...இந்தப் பாட்டெல்லாம் எனக்குப் புதுசு கேட்டதில்லை...(ஆமாம் கீதா என்னவோ அப்படியே நிறைய பாட்டு கேட்டுட்டாப்ல சொல்லறீங்கனு கேய்க்கப்படாது!!! ஹிஹிஹி)

    பாட்டு நல்லாருக்கு அதைவிட ஒரு ரகசியம் சொல்லறேன் அதிரா கண்டிப்பா ஏஞ்சல் கிட்ட சொல்லிடாதீங்க அப்புறம் ஷரன் அவங்களை கேலி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க மட்டுமில்ல... ஜெஸி, மல்டி கருவாண்டி எல்லாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஓடி வந்து என்னை பிராண்டிடுவாங்க...இந்த சமந்தாவைப் பார்க்கறப்ப எல்லாம் சைட் போஸ் ஏனோ எனக்கு நம்ம தேவதை மாதிரி இருக்கும் எனக்கு தோனும்!!! (ரகசியத்துக்குள்ள ரகசியம் என்னான்னா இதைப் படிச்ச பூஸாருக்குக் காதுல புகையாம்!!!!) ஹா ஹாஅ ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //பாட்டு கேட்டேன் அதிரா...இந்தப் பாட்டெல்லாம் எனக்குப் புதுசு கேட்டதில்லை...(ஆமாம் கீதா என்னவோ அப்படியே நிறைய பாட்டு கேட்டுட்டாப்ல சொல்லறீங்கனு கேய்க்கப்படாது!!! ஹிஹிஹி)//

      அதானே.. என்னமோ எல்லாப் பாட்டுக்கும் மெட்டுப் போட்டவ மாஆஆஆஆஆறியே ஒரு பேச்ச்சு ஹா ஹா ஹா:).

      //இந்த சமந்தாவைப் பார்க்கறப்ப எல்லாம் சைட் போஸ் ஏனோ எனக்கு நம்ம தேவதை மாதிரி இருக்கும் எனக்கு தோனும்!!!//

      ஹையோ ஹையோ புது வருடத்தில இப்பூடி எல்லாம் கேட்கவேண்டி இருக்கே வைரவா.. ஆலடிக் கணேஷா.. பூநாறி மரத்தடி புஸ்பாஞ்சனேயா....:)).. அவ சைட் போஸ்ட்டைக் காட்டியே காலத்தை கொண்டு போறா கீதா:).. இருங்கோ தேம்ஸ் கரையில வச்சு டக்கு டக்கெனக் குளோஸப்பில் 4,5 படமெடுத்து பகென இங்கின போடுறேன்ன் அதன் பின்பு ஜொள்ளுங்கோ:)) ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல்ல:)..

      //ரகசியத்துக்குள்ள ரகசியம் என்னான்னா இதைப் படிச்ச பூஸாருக்குக் காதுல புகையாம்!!!!)//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புகை இல்லை:) காச்சலாக்கிட்டுது:) ஹா ஹா ஹா மியாவும் நன்னி கீதா:).

      Delete

  28. ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் நன்று. அதிலும் கண்ணதாசன் பாடலை இரண்டு முறை படித்தேன். எனக்கு என்னமோ பிள்ளையார் admk தேர்தல் சின்னம் இரட்டை இலை மாதிரி தோன்றியது.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜே கே ஐயா வாங்கோ..

      //ஊசிக்குறிப்பும் ஊசி இணைப்பும் நன்று//
      மிக்க நன்றி மிக்க நன்றி..

      //அதிலும் கண்ணதாசன் பாடலை இரண்டு முறை படித்தேன்.//
      உண்மையில் அப்பாடல் படிக்கப் படிக்க அலுக்காது... நிறைய தத்துவத்தை உணர்த்தி நிக்குது...

      //எனக்கு என்னமோ பிள்ளையார் admk தேர்தல் சின்னம் இரட்டை இலை மாதிரி தோன்றியது. //

      ஹா ஹா ஹா எனக்கும் அதே அதே:) காதைப் பார்த்தால் இலைபோலதான் இருக்கு.. அஞ்சுதான் சொன்னா இல்லை காஅது ஓகே.. தும்பிக்கைதான் கொஞ்சம் குண்டாகிட்டுது என:)).. அது பிள்லையார் பிள்ளையார்கதைகு ஓவரா மோதகம் சாப்பிட்டிருப்பாரோ என்னமோ:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்.

      Delete
  29. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    பிள்ளையார் அழகாக செய்திருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.
    பாட்டு கேட்டிருக்கேன். படம் பார்க்கல.
    கண்ணதாசன் வரிகள் உங்க பக்கத்திலயே பலதடவை வாசிச்சாச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் அம்முலு வாங்கோ வாங்கோ.. உங்களை இம்முறை எதிர்பார்க்கவில்லை.. இது இன்ப அதிர்ச்சி...

      எங்கட ஆஞ்சநேயரிடம் போனீங்களோ? எப்படி இருக்கிறார்?.. அந்த நாற்சந்தி வைரவைரையும் மறக்காமல் பார்த்திட்டு வாங்கோ...

      நானும் இப்படம் பார்க்கவில்லை.. யெஸ் கண்ணதாசன் அங்கிளின் வரிகள் என் பக்கத்தில் ஏற்கனவே வந்திருக்குது..

      மிக்க நன்றிகள் அம்முலு.

      Delete
  30. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் அதிரா.

    / /பிள்ளையாரைச் செய்து ஒரு புதுப் போஸ்ட் போட்டால் என்ன எனும் ஆசை எழும்பியது//

    பிள்ளையார் நன்றாக இருக்கிறது.
    அஞ்சு கொடுத்த உற்சாகம் தொடர வாழ்த்துக்கள்.
    அதிராவின் கழுத்து அழகு,அதிராவின் கழுத்துதானா?

    வாய்விட்டு சிரித்தேன் கடவுளிடம் உரையாடியதை கேட்டு.
    ஊசிக்குறிப்பு ஏன் இந்த பகிர்வு? இதில் என்ன சந்தோஷம் எனக்கு தெரியவில்லை அதிரா.
    தமிழ்த்துளி நன்றாக இருக்கிறது பலமுறை படித்தது , மீண்டும் படித்தேன்.



    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. 3 நாட்கள் பயணம் எனச் சொல்லிப்போட்டு 5 நாட்கள் எடுத்திட்டீங்க ஹா ஹா ஹா.

      //அதிராவின் கழுத்து அழகு,அதிராவின் கழுத்துதானா?//

      ஏன் சந்தேகத்தோடயே கேட்கிறீங்க:).. யாராவது கன்ஃபோம் பண்ணச் சொல்லிச் சொன்னார்களோ கரீட்டாக் கத்தி வைக்க:) ஹா ஹா ஹா .. இங்கு என்னை விட்டால் எல்லோரும் எதிர்ப்பாலார்தானே:).

      //ஊசிக்குறிப்பு ஏன் இந்த பகிர்வு? இதில் என்ன சந்தோஷம் எனக்கு தெரியவில்லை அதிரா.//

      ஓ கோமதி அக்காவுக்குப் பிடிக்கவிலையோ.. அது கொமெடியாக எல்லோரும் புதுவருடத்தில் சிரிப்பார்கள் எனத்தான் போட்டேன்ன்.. சீரியஸாக்கி நினைக்கக்கூடாது:).

      Delete
  31. பாடல் கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் கோமதி அக்கா.. பயணக் களைப்பிலும் வந்துவிட்டமைக்கு.

      Delete
  32. புத்தாண்டு துவக்கத்தில் விநாயகனை நினைத்து ஒருபதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜி எம்பி ஐயா வாங்கோ.. அதேதான் விநாயகர் சுழியுடன் ஆரம்பம். மிக்க நன்றிகள்.

      Delete
  33. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடம் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மிக்க நன்றி.

      ஊசிக்குறிப்பு:
      இந்த ரேஞ்சில போனால் உங்கள் பட்டத்தைப் பிடிங்கிடுவோம்:)) ஹா ஹா ஹா[பின்னூட்ட வித்துவானுக்கு சொன்னேன்:)].. இம்முறை ரொம்ப உசாராகி:) வாக்குக் குடுக்காமல் நழுவிட்டீங்க:).. திரும்ப வருகிறேன் எனும் வாக்கு ஹா ஹா ஹா...

      நீங்க பேசாமல் பாறைனுக்கே வந்திடுங்கோ:).. அங்கு உங்களிடம் ஓவரா வேலை வாங்குறார்கள் போல இருக்கே.. நேரமே இல்லாமல் இருக்கிறீங்க...

      Delete
    2. இல்லை அதிரா.... நிறைய வேலைகள்... எழுதறேன்... இன்னும் மூன்று நாலு நாட்களில் நேரம் கிடைத்துவிடும். இன்றே ஒரு சில மணி நேரங்கள் தொடர்ந்து ஃப்ரீயாகத்தான் இருந்தேன்.

      Delete
  34. வணக்கம் அதிரா சகோதரி.

    ஓம் நெக்லஸ் உங்கள் கழுத்துக்கு மிகவும் அழகாக இருக்கிறது.

    ஊசி இணைப்பும் அருமை. ஊசிக்குறிப்பு அதை விட அருமை. அனைத்தையும் மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு மியாவும் நன்றிகள் கமலா சிஸ்டர்.

      Delete
  35. நீங்கள் செய்த பிள்ளையாருடன் இந்த வருடம் அருமையாக அமைத்து விட்டீர்கள்.
    எங்களுக்கு இந்த வருடம் பிள்ளையார்பட்டி பிள்ளையார் காலண்டர் வந்து விட்டார்.
    இனி அவர் பாடு எங்களை காப்பது.
    அடுத்து முதல் தேதி அன்று பழமுதிர்சோலையில் மலேசியா முருகன் காலண்டர் ஒருவர் தந்தார். அண்ணனும், தம்பியும் இந்த ஆண்டை நல்லபடியாக நடத்தி கொடுக்கட்டும் என்று வேண்டிக் கொண்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஓ கோமதி அக்கா வீட்டுக்கு சகோதரகள் இருவரும் வந்திருக்கிறார்களோ.. சந்தோசம்.. மங்களம் பெருகட்டும்.

      ஆனா கோமதி அக்கா அப்போ நீங்கதான், நான் வள்ளிக்கு வச்ச வைர நேர்த்திக்கடனை எல்லாம் எப்பூடியாவது மறந்திடட்டாம் கோபிக்காமல்:).. இனிமேல் அதிரா புதுசா நேர்ந்து.. தீர்த்து வைப்பாவாம் எனச் சொல்லிடுறீங்களோ வீட்டுக்கு வந்திருக்கும் ஆனைமுகன் தம்பியிடம்:) ஹா ஹா ஹா.

      எங்களுக்கு தமிழ்க் கலண்டர் ஏதும் கிடைக்கவில்லை.. தமிழ்க்கடைப்பக்கம் போகவில்லை.. போயிருந்தால் கிடைச்சிருக்கும்.

      மிக்க நன்றிகள் கோமதி அக்கா.

      Delete
    2. //ஆனா கோமதி அக்கா அப்போ நீங்கதான், நான் வள்ளிக்கு வச்ச வைர நேர்த்திக்கடனை எல்லாம் எப்பூடியாவது மறந்திடட்டாம் கோபிக்காமல்:).. இனிமேல் அதிரா புதுசா நேர்ந்து.. தீர்த்து வைப்பாவாம் எனச் சொல்லிடுறீங்களோ வீட்டுக்கு வந்திருக்கும் ஆனைமுகன் தம்பியிடம்:) ஹா ஹா ஹா.//

      கண்டிப்பாய் வேண்டிக்கிறேன். தங்கைக்காக இதுகூட வேண்டவில்லை என்றால் எப்படி? ஆனால் முருகரும், பிள்ளையாரும் நீதான் பொறுப்பு என்று சொல்லாமல் இருந்தால் சரி.

      Delete
  36. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா...


    quilling பிள்ளையார் நல்லா இருக்கார் ...

    தம்பி குடுத்த gift அழகு ..

    அந்த சீமராஜா படம் இந்த வருட புத்தாண்டு க்கு sun tv போட்டாங்க ...நாங்க பார்த்தோம் ஜாலி யா தான் இருந்துச்சு ..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அனு வாங்கோ.. மிக்க நன்றி மிக்க நன்றி.

      ஓ சீமராஜா பார்த்திட்டீங்களோ.. அதில பிரபல்யமான ரெண்டு ஹீரோயின்களோடெல்லோ சிவா நடிக்கிறார் ஹா ஹா ஹா..

      Delete
  37. Happy New Year Athira & Family!! Nice Ganesha!

    ReplyDelete
  38. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா :)

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ தேனம்மை வாங்கோ.. முதன்முதலா வந்திருக்கிறீங்க என நினைக்கிறேன்ன் நல்வரவு மிக்க மகிழ்ச்சி...
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

      Delete
  39. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அதிரா. பிள்ளையார் ஸ்டைலா இருக்கிறார்.
    கண்ணதாசனின் அந்தக் கவிதைப் பகிர்வுக்கு... நன்றி. அது 'ஓம்' என்று தரியாமல் அதே வடிவில் நானும் ஒரு 'கீஸ்டாண்ட்' வாங்கி வைத்திருந்தேன். ஒரு நட்பு பார்த்துவிட்டு விளக்கம் சொன்ன பிறகு, அவவுக்கே கொடுத்துவிட்டேன். என்னிடம் இருந்தால் வெறும் அலங்கஅரப் பொருள். இருப்பவர்களிடம் இருந்தால் தான் பெறுமதி என்று தோன்றியது.
    பென்ரன்ட் வடிவா இருக்கு அதீஸ்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் வாங்கோ றீஈஈஈஈச்சர் வாங்கோ.. எவ்ளோ காலத்துக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறீங்க... மகிழ்ச்சி மறக்காமல் வந்தமைக்கு...

      ஹா ஹா ஹா அதேதான் நானும் சின்ன வயதில் அது ஓம் எழுத்து என தெரியாமல் ஏதோ ஒரு சமஸ்கிருதம் என நினைச்சிருந்தேன்:)..

      மிக்க் நன்றிகள் இமா, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      ஊசிக்குறிப்பு:
      ஏன் எப்பவும் பழைய போஸ்ட்டுக்கே வருவீங்க?:)) புதுப் போஸ்ட் அலர்ஜியோ?:) ஹா ஹா ஹா..

      Delete
  40. புது போஸ்ட்டுக்குத் தான் என்னை அலேஜி போல இருக்கு. ;)))) அதுக்குத் தானே முதல் கொமண்ட் போட்டனான். போட்டுட்டு ஒரு ரௌண்ட் போய்டு வந்து அடுத்த போஸ்ட்டுக்குப் போனன். அப்லோட் ஆகேல்ல போல இருக்கு. ஆனால் அந்த போஸ்ட்டுக்கான அப்டேட் எல்லாம் எனக்கு வருது.

    முந்தியும் இடைல சிலதுக்கு... 3 இடுகைகள் - இப்பிடி ஆகி இருக்கு. என்டதை விட்டு மீதி கொமண்ட்ஸ் எல்லாம் அப்டேட் ஆக வரும்.

    மெய்ல் பார்க்கவும். :-)

    ReplyDelete
    Replies
    1. ஓ அபடியோ இமா, நான் எதுக்கு கொமெண்ட்ஸ் வந்திருக்கு எனப் பார்க்காமல் போனில் இருந்தே வெளியிட்டு விட்டு, பின்பு புதுப் போஸ்ட் வந்து தேடினால் அங்கு உங்கள் கொமெண்ட்ஸ் காணம்:))..

      கொசு.. முட்டை போட்டு விட்டது:)).. ஹா ஹா ஹா மிக்க நன்றி இமா.

      Delete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.