அதிரா, ஞானி ஆகிட்டதை நீங்கள் எல்லோரும், இப்போ பல நாட்களாக மறந்துவிட்டதைப்போல எனக்கொரு ஃபீலிங்காகவேஏஏஏ இருக்கு:)). அதை நினைவுபடுத்தவே இந்த அவசர போஸ்ட்:)).
சைவமாக மாறினாலே அதிகம் ஞானிக்குணம் வந்திடுதூ:)).. எப்பவும் சைவமாகவே இருப்போருக்கு இது வராதாக்கும்:)) ஹா ஹா ஹா. நான் இப்போ யோகாக் கிளாஸ்களுக்கும் போகிறேனெல்லோ:).. அதுபற்றி பின்னர் பேசலாம்:)).
எனக்கு டமில்ல டி:) என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்:), ஆரம்பம் நம்பாமல் இருந்தோரும் இப்போ நம்பிட்டீங்க:)), ஆனா உங்களால் நம்ப முடியாத இன்னொன்று:) ஹிந்தியிலயும் டி என்பது:)) ஹையோ அதாரது கல்லெடுப்பது:)).. கீழே போடுங்கோ, நான் என்ன இப்போ ஹிந்தியிலயா பேசப்போகிறேன்ன்:)) அப்பூடிப் பேசினால்தான் அஞ்சுவுக்கு அம்முலுவுக்கெல்லாம் புரியவோ போகுது?:)) ஹா ஹா ஹா:).. அதனால டமில்லயே சொல்லப் போறேன்:))..
இங்கின ஒரு வீடியோ போடுகிறேன் பாருங்கோ, வீடியோவில் கதை சொல்லும் “நிக்கி” அக்கா:) ஹிந்தியில் பேசுவதை, அப்படியே என் பாசையில் இங்கு மொழிபெயர்க்கிறேன்:)).. இனியாவது நம்போணும் அதிராவுக்கு ஹிந்தியிலும் டி என்பதை:)) கர்ர்ர்ர்:)).
எனக்கு இங்கு நீங்கதான் பதில் சொல்லோணும், முதலாவது கதை..
1.ஒரு அரசர் வீட்டுக்கு 7 சாமியார்கள் வருகிறார்கள், அப்போ அந்த அரசர் அவர்களை மறிக்கிறார், தங்கள் இல்லத்தில் விருந்து உண்டுவிட்டுப் போக வேண்டும் என, அதற்கு அவர்களும் உடன்படவே, மனைவியிடம் சொல்கிறார், உடனேயே பாயாசம் ரெடி பண்ணிக் குடுக்கச் சொல்லி.
இதனை ஏற்றுக் கொண்டு, மனைவி போய் சமையல்காரருக்கு உத்தரவு போடுகிறா. உடனே சமையல்காரர், தோட்டக்காரனிடம் சொல்கிறார், பாயாசம் செய்ய பால் வாங்கி வரும்படி. தோட்டக்காரர் பால் வாங்கப் போய் வாங்கிக்கொண்டுவருகிறார் ஒரு வாழியில்[இங்கு இங்கு ஸ்ரீராம் சொன்னது நினைவு வரவே ஓடிச்சென்று கூகிள் அங்கிளைக் கேட்டேன் அது ளி ஆமே கர்ர்:)) ஹா ஹா ஹா பூஸோ கொக்கோ, இனிக் கரெக்ட்டா எழுதுவேன்:))]. வரும் வழியில் மிகவும் வெயிலாக இருக்கிறது, அப்போ அவர் களைப்பு மிகுதியால கொஞ்சம் இளப்பாறுவோமே என ஒரு ஆலமர நிழலில் பாலை வைத்துவிட்டு சற்று ஓய்வெடுக்கிறார்.
அந்நேரம் ஒரு கருடன் பறவை, தன் பசியைப்போக்க, ஒரு விஷப்பாம்பைக் கொத்தித் தூக்கி வந்து, இந்த ஆலமரத்தில் வைத்து சாப்பிடுகிறது, அப்போ பாம்பு வாயைப் பிளக்கிறது, உள்ளிருக்கும் விஷத் துளிகள் இரண்டு வெளியே வந்து, இந்த பால் வாளிக்குள் விழுந்து விடுகிறது.
விஷம் விழுந்தது தெரியாமல், பாலைக் கொண்டுபோய் சமையல்காரரிடம் கொடுக்கிறார். சமையல்காரர் சமைச்சு கொடுக்கிறார், அரசி எடுத்துப் போய் சாமியாட்களுக்குப் பரிமாறுகிறா.
அதனை உண்ட 7 சாமியாட்களும் இறந்து விடுகின்றனர்... மேலோகம் போய் விடுகின்றனர்.. அங்கு பிரச்சனை நடக்கிறது, இந்த 7 சாமிகளையும் கொன்றதன் பாவத்திற்கான தண்டனையை ஆருக்குக் கொடுப்பது?
சாப்பிடச் சொல்லி மறிச்ச அரசருக்கா?
சமையல்காரரிடம் சொல்லி சமைச்சுக் கொடுத்த அரசிக்கா?
பால்காரரிடம் சொல்லி பால் வாங்கிச் செய்த சமையல்காரருக்கா?
கவனமில்லாமல் இருந்த பால்காரருக்கா?
விசத்தைக் கக்கிய பாம்புக்கா?
பாம்பை அங்கு தூக்கி வந்து சாப்பிட்ட கருடப்பறவைக்கா?...
பதில் கண்டுபிடிக்க முடியுதோ? விளக்கத்தோடு பதில் சொல்லுங்கோ.. மீ ரொம்பக் கொன்பியூஸாகி இருக்கிறேன் இந்த முடிவில். யாரைக் குற்றம் சொல்வது? வேண்டுமென இங்கு எதுவும் நடக்கவில்லையே... பதில் சொல்லுங்கோ..
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇INTERVAL😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
நேற்றைய போஸ்டில், வொஷிங்டனிலிருந்து ரொரண்டோ போன பிளேன் பற்றி ஸ்ரீராம் பேசியிருந்தார், அதன் படம் கிடைச்சது.. பைலட்ஸ் இருப்பது தெரிகிறதோ..
இது அந்நேரம் ஜன்னலூடாக, பிளேன் உயரே பறந்த போது..
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
மீ அடுத்த கதைக்கு வருகிறேன்.
2. ஒரு அரசர் காலையில் கழுதைச்சவாரி{வீடியோப் பார்த்துக் கண்டுபிடிக்கினமோ ஆராவது எனப் பார்ப்போம்:)} போவது வழக்கம். ஒருநாள் காலையில் அப்படிப் போகப் புறப்பட்டபோது, எதிரே ஒரு சந்நியாசி வந்து பிச்சை கேட்டார், அரசருக்குக் கெட்ட கோபம்:) வந்துவிட்டது, காலையிலேயே பிச்சைக்காரனில் முழிக்கிறேனே என,
உடனே திரும்பி தன் கழுதை போட்ட சாணத்தை அள்ளி, அப்பிச்சைப் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போய் விடுகிறார்.
பின்னர் கொஞ்சக் காலத்தால் ஒரு அவசர அலுவலாக வெளியூர் போகப் புறப்பட்டு ஒரு காட்டு வழியால் போகும்போது, ஓரிடத்தில் போக முடியாமல் பாதை தடைப்பட்டு, பாதை முழுவதும் கழுதைச் சாணியால் அடைக்கப்பட்டு இருக்கிறது.
அரசருக்கு என்ன பண்ணுவதெனப் புரியவில்லை, அருகிலே பார்க்கிறார் ஒரு ஆச்சிரமம் இருக்கிறது, அங்கு போய் விசாரிக்கிறார், என்ன ஆச்சரியம்.. அந்த ஆச்சிரமத்தில் இருப்பது , முன்பு பிச்சை கேட்ட அதே சந்நியாசி[இந்த இடத்தில, நிக்கி அக்காவின்:) முகத்தை உத்துப் பாருங்கோ:)) அவவும் அதிர்ச்சியாகி நிற்கிறா வீடியோவில:)) ஹா ஹா ஹா இதெல்லாம் உங்களுக்குப் புரியாது:)) நீங்க அதிராவின் எழுத்தைப் படியுங்கோ:)).
அப்போ அந்த சந்நியாசி சொல்கிறார், அரசரே நீங்கள் என் பாத்திரத்தில் போட்ட சாணம் தான், டெய்லி அந்தப் பாதையில் போடப்பட்டு நிரம்பியிருக்கிறது, அதனால நீங்கள் இந்தப் பாதையால் போக வேண்டுமெனில், நீங்கள் செய்த அந்தப் பாவத்தைப் போக்க வேண்டும், அதாவது உங்கள் பாவத்தை அடுத்தவருக்குக் குடுத்துவிட்டு வந்தால், பாதை திறக்கும் என்கிறார்.
உடனே அரசர் நாட்டுக்குள் போய், அல்ககோல் போத்தல் ஒன்றை வாங்கி வந்து, குடிக்கவில்லை, ஆனா குடித்து, வெறியில் தள்ளாடுபவர்போல ரோட்டில் விழுந்து கிடந்து நடிக்கிறார்.
இதைப் பார்த்த ஊர் மக்கள், அதனை உண்மை என நம்பி, அரசரை கண்டபடி திட்டுகின்றனர்... எங்கள் வரிப்பணத்தை எடுத்து நீ குடிக்கிறாயே.. இது நியாயமோ.. எண்டெல்லாம் வசை பாடுகின்றனர்.
இது முடிஞ்சதும் அரசர் எழுந்து, அந்தப் பாதைக்கு செல்கிறார், பாதையில் சாணம் எதுவும் இல்லாமல், தெளிவாகி விட்டது, அரசர் தன் இடத்துக்குப் போய் விட்டார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது தெரியுமோ, நாம் ஒருவரை, உண்மையை அறியாமல், கண்டபடி நம் மனம் போன போக்கில் திட்டினால், அந்தப் பாவம் நம்மை வந்தடைஞ்சுவிடும்:))... அப்பூடின்னு வீடியோவில் அந்த நிக்கி அக்கா[அவவை நான் செல்லமாக அப்பூடித்தான் கூப்பிடுவேனாக்கும்:)] சொல்றா:).
[[[அப்பாடாஆஆஆ இனி ஆரும் அதிராவைத் திட்ட மாட்டினம்:), திட்டினால் பாவம் சேர்ந்திடும் எனும் பயத்தில:) ஹா ஹா ஹா.. எப்பூடியெல்லாம் ஹிந்திக் கதை மொழிபெயர்த்துச் சொல்லி, திட்ட விடாமல் பண்ண, மிரட்ட வேண்டிக்கிடக்கே, செல்லக்கதிர்காம கிழக்குப்புற வைரவரே:))]]].
ஊசி இணைப்பு:
சே சே பூஸு படுத்தால் எலியாருக்குக் கொண்டாட்டமாமே:) அப்பூடி இருக்கே என் நிலைமை:), விரதமில்லாத காலத்தில எதுவும் கண்ணில் படவில்லை, இப்போ குண்டுக் குண்டு எலியெல்லாம் வந்து முன்னால நின்று, என் மனக்கட்டுப்பாட்டை ஜோதிக்குதே கர்ர்ர்:))
ஊசிக்குறிப்பு:
|
Tweet |
|
|||
இன்னாது நீங்க ஹிந்திலயும் டீ குடிசீங்களா :) எங்களை பேய்க்காட்டலாம் ஆனா கீதாக்காவை பேய்க்காட்ட முடியாது கில்லர்ஜியையும் பேய்க்காட்டவே முடியாது :)
ReplyDeleteஹலோ மியாவ் எப்பவும் சைவமா இருப்போர் எப்பவுமே ஞானீஸ் தான் :)
அதிராவை பேய் என்று சொல்வது "நல்லாத்தான்" இல்லை.
Deleteஹா ஹா ஹா ஏஞ்சல் பூஸார் டீ குடிச்சுக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருப்பாங்க போல!!!!
Deleteஅதே கீதாக்கா மீசைக்காரர் வந்தாங்கனா வண்டவாளம் எல்லாம் தெரியும்....ஹா ஹா ஹா
கீதா
//எப்பவும் சைவமா இருப்போர் எப்பவுமே ஞானீஸ் தான் :) // ஏஞ்சலின் அதுனாலத்தான் மாடு, ஆடு, கழுதை, குதிரை இவங்களையெல்லாம் தன்னோட குருவா வச்சிருக்காங்களோ?
DeleteAngelThursday, October 03, 2019 9:42:00 pm
Delete//எங்களை பேய்க்காட்டலாம் ஆனா கீதாக்காவை பேய்க்காட்ட முடியாது கில்லர்ஜியையும் பேய்க்காட்டவே முடியாது :)//
ஹா ஹா ஹா நான் பேய்க் காட்டிட்டனே:)).. இருவரும் வந்து பார்த்து அதிராவுக்கு ஹிந்தியில மொழிபெயர்க்கவும் தெரியுமோ என வெலவெலத்து:) விக்கித்துப் பொய்:)).. கீசாக்கா ரயேட்டாகி நித்திரையாகிட்டா தெரியுமோ?:)).. பின்ன அதிராபற்றி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உண்மைகள் அறியும்போது:)).. ஓஓ வாவ்வ்வ்வ் இவ்ளோ திறமை இருக்கோ அதிராவுக்குள் என ஏக்கம் வருவது.. அது நோர்மல்தானே அஞ்சு:)).. ஹா ஹா ஹா:)..
//ஹலோ மியாவ் எப்பவும் சைவமா இருப்போர் எப்பவுமே ஞானீஸ் தான் :) //
ஹா ஹா ஹா ஹையோ இது வேற ஞானீஸ்ஸ்:)).. எங்கள் ஊர் ஃபிஸ் அண்ட் சிப்ஸ் கடையின் பெயரும் “ஞானீஸ்” தான் .. இற்றாலியன் கடை:).
//KILLERGEE DevakottaiFriday, October 04, 2019 3:04:00 am
Deleteஅதிராவை பேய் என்று சொல்வது "நல்லாத்தான்"////
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
//இல்லை.//
அதானே பார்த்தேன் ஹா ஹா ஹா:))
//அதே கீதாக்கா மீசைக்காரர் வந்தாங்கனா வண்டவாளம் எல்லாம் தெரியும்....ஹா ஹா ஹா
Deleteகீதா//
கீதா நீங்க இடைக்கிடை புளொக்குக்கு லீவு போடுவதால:) உங்களுக்கு விசயம் புரியேல்லை:)).. ஜேர்மனியில கொழுந்தியார் பிடிச்ச சே..சே.. டங்கு ஸ்லிப்பாகுதே:) கிடைச்ச பிறகு:)).. மீசையை ஊரணி அம்மன் கோயில் வாசலில வச்சு எடுத்தாச்சாமே:)).. இப்போ மீசை நஹி:)) ஹா ஹா ஹா..
@நெ.தமிழன்..
Deleteஏஞ்சலின் அதுனாலத்தான் மாடு, ஆடு, கழுதை, குதிரை இவங்களையெல்லாம் தன்னோட குருவா வச்சிருக்காங்களோ?////
haa haa haa
https://tse2.mm.bing.net/th?id=OIP._Lit1PJvy8yiDC42RETaEwHaE8&pid=Api&P=0&w=242&h=162
நெல்லை நோ ந் ோஓ...அவங்க குரு நீங்க சொல்றவங்க இல்லை.....அவங்க் குருவுக்கு கோபம் வந்துடப் போவுது!!!https://www.google.com/url?sa=i&source=images&cd=&ved=2ahUKEwicwKrInYLlAhUa7nMBHavzDXIQjRx6BAgBEAQ&url=https%3A%2F%2Fwww.alamy.com%2Fstock-photo%2Fchimpanzee-teeth.html&psig=AOvVaw1zJQi5BIh6Ep2JayB3KaME&ust=1570265650664246
Deleteஅதிரா மீசை இல்லா கில்லர்ஜியை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை...
கீதா
கீதா நீங்க போட்டிருப்பது அதிராவின் கிரேட் குருவெல்லோ:). நெ.த சொன்னது அஞ்சுவின் குருக்களைப்பற்றி:)) ஹையோ ஹையோ.. இனி நான் ஹிந்தியிலதான் பேசப்போறேன்:)..
Delete//அதிரா மீசை இல்லா கில்லர்ஜியை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை...///
உங்களால நினைச்சுப் பார்க்க முடியல்ல கீதா:) ஆனா ஜேர்மனி அண்ணிக்கு அதுதான் பிடிச்சிருக்காம்:)) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
ஹா ஹ ஹா ஹா ஹா....இஒருங்க இருங்க நான் வைச்சுக்கறேன்...பார்த்துக்கிட்டே இருங்க....
Deleteகீதா
ஹையோ ஹையையோ கில்லர்ஜி அடைப்புக்குள்ள போட்டிருக்கார் //நல்லாத்தான் // அப்டீன்னா பேய் னு விளித்து இருப்பது நல்லா த்தான் இருக்குன்னு அவர் பாராட்டுறார்
Delete///அப்டீன்னா பேய் னு விளித்து இருப்பது நல்லா த்தான் இருக்குன்னு அவர் பாராட்டுறார் ///
Deleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கில்லர்ஜியே மெளனமாகிட்டார்ர் அதிராவின் பதில் பார்த்து:))[மெளனம் எனில் சம்மதம் என சிமியோன் ரீச்சர் சொன்னவ:)).. பிறகு கெ..ள..பி மாதிரி இதையும் மெ..ள..னம் என நினைச்சு கூகிள் அங்கிளிடம் ஓடக்கூடா ஜொள்ளிட்டேன்ன் கர்ர்:))] ஆனா அஞ்சு விடமாட்டாவம்ம்:)).. {டமில்ல டி எடுத்த அதிராவுக்கே வியக்கம் சொல்றா கர்:))}
ஹா ஹா ஹா...
நித்திரை கொள்பவரை எழுப்பலாம் -ஆனால்
நித்திரைபோல் பாசாங்கு செய்பவரை(அதிராவை) எழுப்பவே முடியாது”:) என கண்ணதாசன் அங்கிள் ஜொள்ளி இருக்கிறார்.
ஆவ் கதையை படிச்சிட்டேன் ..தண்டனை கவனக்குறைவா இருந்த பால் வாங்கிட்டு வர வழியில் பாலை மூடாம தூங்கின தோட்டக்காரர்தான் அவருக்கே தண்டனை தரணும் .
ReplyDeleteஒரு உணவு பண்டத்தை இப்படியா ஹைஜீன் இல்லாம திறந்து வைப்பது ? அதோடு தூக்கமும் ..ஹெல்த் அண்ட் safety ,hygiene ரூல்ஸ் follow செய்யாததால் 7 உயிர் போனதுக்கு காரணம் அந்த தூங்குமூஞ்சி தோ .காரர் தான்
ஹா ஹா ஹா ஏஞ்சல் கரீக்டு. சூப்பர் பாயின்ட்...
Deleteஆனால் இந்தக் கதையில் இதைக் கொள்ளலாம் என்றால் என் பாட்டி சொன்ன போது அவர் தூங்குவது போலவோ வாளி என்றோ சொன்னதில்லை. பெரிய சொம்பு அதை அவர் மூடித்தான் கொண்டு வந்தாராம் (நாங்க விட்டுருவமா.....வீட்டுல பால் வாங்கி வரும் போது கூஜாவை திறந்து கொண்டு வரக் கூடாதுனு எத்தனை முறை குட்டு வாங்கியிருக்கோம்!!!!!!!!!! தூசு விழுந்தா கூடப் பால் கெட்டுவிடும்னு) மரத்தடியில் இளைப்பாருவார் அவ்வளவே அப்போது காக்கை கொண்டு வந்த பாம்பு கீழ் விழுந்து சொம்புக்குள் ஒளிய நினைத்து அதில் ஏற நினைக்க மூடி விழுந்து அதன் விஷம் விழுந்துரும். ஆனால் அவர் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பாக்க பாம்பு அதற்குள் மறைந்து கொள்ளும்...ஆனால் இவர் பாலை மூடிக் கொண்டு எழுந்து வந்திருவார்.
எனக்கு இதில் வந்த டவுட்டு பாம்பு விஷம் நீலமாகிவிடும் என்று அப்ப பால் நீலம் ஆகிருன்ந்தா இல்லை விடுங்க நீலம் வேண்டாம் கலர் மாறியிருந்தால் அதைப் பார்க்காமலேயே காச்சுவாங்க....
ஸோ ஏனோ என்னால் இந்தக் கதையை ஏற்க முடியலை பாட்டியிடம் சண்டை போட்டிருக்கேன்...
கீழயும் அதான் எனக்கு இப்படியானவற்றில் டவுட்டு கேள்விகள் எல்லாம் நிறைய வரும். னான் கேட்டால் விதண்டாவாதம் செய்யுறேன்னு சொல்லி சொல்லிக் குட்டு பட்டிருப்பதால் என் கருத்தை என்னோடு வைத்துக் கொண்டுவிடும் வழக்கம்.!!!!!!!!!!!!!!!!!
கீதா
ஹையோ ஏஞ்சல் தோ நினைவில் காகம்னு சொல்லிட்டேன் அது கருடன் பாம்பைக் கொண்டு வரும் போது....
Deleteஅந்தக் காகம் பூஸாரின் கண்ணில் படாமல் பார்த்துக்கோங்க...ஓகேயா...தமிழ்ல டி ஆச்சே ஞானியும் கூட!!!!!!
கீதா
ஏஞ்சலின்... அடுத்தவங்களுக்கு உணவு படைக்கறதுக்கு முன்னால, அது நல்லா வந்திருக்கா, எல்லாம் சரியா இருக்கான்னு டெஸ்ட் பண்ணிப்பார்க்காமல் உணவு பரிமாறியவருக்கு தண்டனை கிடையாதா?
Deleteஎதுக்குக் கேட்டேன்னா, லண்டன் வரும்போது, நீங்க உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு, சாப்பாடு போட்டீங்கன்னா, நான் கூடவே ஒரு பூனை/நாயை கூட்டிட்டு வந்து அதுக்கு அந்தச் சாப்பாடு கொடுத்து 6 மணி நேரம் காத்திருந்து ஒண்ணும் ஆகலைனா அப்புறம்தான் உங்க வீட்டு சாப்பாட்டை சாப்பிடணுமோன்னு டவுட் வந்துடுச்சு
அதெப்படி அஞ்சு தோட்டக்காரரை மட்டும் குறை சொல்ல முடியும், வந்திருப்பது சாமிமார், அப்போ அரசரே மனைவியை அவ கையாலேயே பத்திரமாக செய்ய சொல்லி சொல்லியிருக்கோணும்.. அவர் அதைச் செய்யவில்லை, அரசி அக்கறையில்லாமல், ஏதோ உணவு கொடுப்பதைப்போல சமையல்காரரிடமே சொன்னதும் தப்பு, சமையல்காரரும்.. பாலைக் கவனிக்காமல் அப்படியே செய்தது தப்பு.. இப்படியும் வருகிறதெல்லோ... பால் வாங்கி வந்தவர்... காலம் காலமாக இப்படியே கொண்டு வந்திருக்கலாம், இன்று மட்டும் இப்படி ஆகுமென அவருக்கு எப்படித் தெரியும்... இப்படி எல்லாம் யோசிக்க வருது:))
Delete//கீழயும் அதான் எனக்கு இப்படியானவற்றில் டவுட்டு கேள்விகள் எல்லாம் நிறைய வரும். னான் கேட்டால் விதண்டாவாதம் செய்யுறேன்னு சொல்லி சொல்லிக் குட்டு பட்டிருப்பதால் என் கருத்தை என்னோடு வைத்துக் கொண்டுவிடும் வழக்கம்.!!!!!!!!!!!!!!!!!
Deleteகீதா//
ஓ இந்தக் கதை கீதாவுக்கு ஏற்கனவே தெரியுமோ?.. எனக்க்கு இந்த ஹிந்தி வீடியோப் பார்த்துத்தான் தெரியும்:)) ஹா ஹா ஹா.
இல்லை கீதா, குட்டுக்கெல்ல்லாம் பயந்தால் எப்படி.. சண்டை வந்தாலும் டவுட்ஸ் ஐக் கிளியர் பண்ணிடோணும்:).
//காக்கை கொண்டு வந்த பாம்பு //
ஹா ஹா ஹா கருடன் மருவிக் காக்கை ஆச்சோ:))
நெ. தமிழன்///
Deleteடெஸ்ட் பண்ணிப்பார்க்காமல் உணவு பரிமாறியவருக்கு தண்டனை கிடையாதா?
/////
ஸ்ஸ்ஸ் சாமியாட்களுக்கு குடுப்பதை ரேஸ்ட் பார்க்ககூடாதெண்டு உங்களுக்கு தெரியாதோ?:).... கீசாக்கா கொஞ்சம் ஓடிக்கமோன்ன்ன்:)... நெல்லைத்தமிழனுக்கு சமய சம்பிரதாயம் எல்லாம்... ஞானியாகிய அதிரா ஜொள்ளிக்குடுக்க வேண்டிக் கிடக்கே:) ... ஆண்டவா இது என்ன ஸ்கொட்லாந்துக்கு வந்த ஜோதனை:)..
////
எதுக்குக் கேட்டேன்னா, லண்டன் வரும்போது, நீங்க உங்க வீட்டுக்குக் கூப்பிட்டு, சாப்பாடு போட்டீங்கன்னா, நான் கூடவே ஒரு பூனை/நாயை கூட்டிட்டு வந்து அதுக்கு அந்தச் சாப்பாடு கொடுத்து 6 மணி நேரம் ///
அச்சச்சோ உங்களுக்கு விசயமே தெரியாதோ?:) நாங்க மனிசருக்கு முதல்ல குடுத்து அவங்க சாப்பிட்டுட்டு நித்திரையானாலும் தட்டி எழுப்பி ஓகேயா என செக் பண்ணிப் பார்த்திட்டுத்தான் பூஸ் பப்பிச் செல்லங்களுக்குக் குடுப்போமாக்கும்:)... ஹா ஹா ஹா புவஹா புவஹா......:)
அதே அதே அதிரா பாயின்ட்...சாமி ஆட்களுக்குக் கொடுக்கும் போது டேஸ்ட் எச்சில் எதுவும் படக் கூடாதல்லோ நாம் சாமிக்கு வைப்பது போலவேதானே...
Deleteஹையோ ஹையோ நெல்லையே இப்பூடி ஒரு கிளைவ் கேட்டிருக்காரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
ஹா ஹாஹ் ஆ
கீதா
@நெல்லைத்தமிழன் ..நான் என்னிக்குமே சமைக்கிறதில் சுவை பார்க்க மாட்டேனே :)) எல்லாம் நம்பிக்கைதான் அதனால் தைரியமா எங்க வீடு சமையலை சாப்பிடலாம் நீங்க :)
Delete@ஏஞ்சல் safety ,hygiene ரூல்ஸ் follow
Deleteஇது எல்லாம் அந்த காலத்துல கிடையாது
நிக்கி ஆன்டி சொன்னது அல்ஜீப்ரா விளக்கம் அங்கே பாருங்க a+b algebra என்னை பேய்க்காட்ட முடியாது சொல்லிட்டேன்
ReplyDeleteஇல்ல அஞ்சு நிக்கி ஆன்ரி மட்ஸ் படிச்சதில்லையாம்:))
Deleteஇருங்க நிக்கி ஆன்டி ரெண்டாவதா சொல்றது 7 புள்ளி ஸ்டார் கோலம் அதுக்கு எம்மாம் பில்டப்பு :) நியாயப்படி ராஜா குதிரை சாணத்தை தானே போட்டிருக்கணும் ..கழுதையா வச்சிருக்கார் ஏழை ராஜாவோ ?அதோட அந்த காலத்தில் ஆல்கஹால் போட்டில் இல்லியே ..சோமபானம் சுராபானம்லாம் தானே இருந்தது அதுவும் சுரைக்குடுவையில் இல்லைன்னா மண் பானைல தானே கிடைச்சிருக்கும்.நாங்க அகழ்வாராய்ச்சி அப்புறம் பழங்கால castle போய் வந்தோம் இதிலும் பேய்க்காட்ட முடியாது ன்னை :)
ReplyDeleteசோமபானம் இல்லை... அது நல்லவிஷயம்... அமிர்தம் மாதிரி... சுராபானம்தான் ஆல்கஹால்!
Deleteஹா ஹா ஹா ஏஞ்சல் நானும் கலாய்க்கப் போனேன் அதுக்குள்ள உங்க கமென்ட் பார்த்ததும் இங்கு கை கொடுக்கிறேன்!!
Deleteசரி அந்தக் காலத்து சோம சுராவை ஆல்கஹால்னு பொத்தாம் பொதுவா இங்கிலிஷ்ல சொல்றாங்கனு விருட்டுருவோம்...அந்த குடுவையைத்தான் போத்தலுன் சொல்றாங்கனும் விட்டுருவோம்...ஆனா குதிரையை கழுதைனு சொன்னதுதான் நிக்கி ஆண்டி கோடானுதானே சொல்றாங்க இல்லையோ? கழுதைக்கு ஹிந்தில (ga)கதா(dha)....என் காதில் அப்படி விழுந்துச்சோ?!!!!
கீதா
//சுராபானம்தான் ஆல்கஹால்!// - இரண்டும் போதைதரும் தண்ணீர்தான். நான் விமர்சனம் எழுதிய புத்தகத்தில் இதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்காங்க. அதைத் தயாரிக்கும் செடி இன்னும் இமயமலையில் இருப்பதாகவும், அந்த பானம் கசப்பாகவும் அதீத போதை தருவதாக இருந்தது என்றும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
Delete//AngelThursday, October 03, 2019 10:01:00 pm
Deleteஇருங்க நிக்கி ஆன்டி ரெண்டாவதா சொல்றது 7 புள்ளி ஸ்டார் கோலம் அதுக்கு எம்மாம் பில்டப்பு :)//
ஹையோ ஹையோ ஒரு பயமொயி “வாயைத்திறந்து பேசி, நான் முட்டாளேதான் எனக் காட்டிக் கொடுப்பதைவிட:), பேசாமல் இருந்து, முட்டாள்போல இருக்கே எனப் பெயர் எடுப்பது எவ்ளோ மேல்” ஆம்:)) ஹா ஹா ஹா அப்பூடி எல்லோ இருக்குது இக்கதை:))..
புள்ளி போட்டது கரெக்ட்டா எண்ணிட்டாவே அஞ்சு:).. அதுதான் 7 சாமியாட்கள் அஞ்சு:)).. நான் ஜொன்னனே அதிராவை ஆரும் நம்புவதேயில்லை:)) நேக்கு ஹிந்தியில டி என்பதை இதுக்கு மேல எப்பூடித்தான் புரிய வைப்பதாம்:).. ஹா ஹா ஹா.. நம்பிக்கைதானே வாழ்க்கை:) இனியும் நம்பாட்டில்:)).
//கழுதையா வச்சிருக்கார் ஏழை ராஜாவோ ?//
ஹா ஹா ஹா கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்களே:)) நான் இங்கின ஆருக்கு ஹிந்தி தெரியும் எனக் கண்டு பிடிக்கவே குதிரையைக் கழுதை ஆக்கினேனாக்கும்:)).. ஆனாலும் நான் தந்த குளூ:) உங்களை சந்தேகப் பட வச்சிடுச்சூஊஊஊ:))..
//சோமபானம் சுராபானம்லாம் தானே இருந்தது //
ஆஆஆஆஆஆஅ இந்த சுறாஆஆஅ பானம் எனத்தான் நிக்கி அக்கா சொல்றா வீடியோவில், ஆனா நான் தான்.. அஞ்சுவுக்கெல்லாம் இப்பூடித் தமிழ் புரியாதே:) என நினைச்சு அல்ககோல் என ஆங்கிலப்படுத்தினேன்ன்.. யெல்ப் பண்ணியது டப்பா அஞ்சு?:) ஹா ஹா ஹா..
//சுராபானம்தான் ஆல்கஹால்!//
Deleteஆமா ஸ்ரீராம் ஆமா.. சுறா மீனில் செய்தால் அது அல்ககோலேதான்ன்ன்ன் :))
@ கீதா
Delete//சரி அந்தக் காலத்து சோம சுராவை ஆல்கஹால்னு பொத்தாம் பொதுவா இங்கிலிஷ்ல சொல்றாங்கனு விருட்டுருவோம்.//
ஆஆஆங்ங்ங் கீதாக்கு கிட்னிப் பவர் அதிகம் கரீட்டாப் பிடிச்சு அதிராவைக் காப்பாத்திட்டா:))... வைரவர் எப்பூடியாவது அதிராவின் மானத்தைக் காப்பாத்திடுவார்ர்:))
//ஆனா குதிரையை கழுதைனு சொன்னதுதான் நிக்கி ஆண்டி கோடானுதானே சொல்றாங்க இல்லையோ?///
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் கீதாக்கு ஹிந்தி புரிஞ்சுபோச்ச்சூஊஊஊஊ ஹா ஹா ஹா:))
//அந்த பானம் கசப்பாகவும் அதீத போதை தருவதாக இருந்தது என்றும் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.//
Deleteபுகையிலை ஆக இருக்குமோ?..
ஹலோ மீயும் ஹிந்தில டி ஆக்கும்!!! ஹிஹிஹி...
Deleteபேய்க்காட்ட முடியாதூஊஊஊஊஊஉ
கீதா
சோம ,சுறா ரெண்டுமே போதைதரும் என்று நான் டான்பாஸ்க்கோ ஸ்கூலில் தமிழ் பேச்சு போட்டியில் . ஈரோடு தமிழன்பன் சார் முன்னாடி பேசி ப்ரைஸும் வாங்கியிருக்கேனாக்கும் :)
Deleteஎன்னாது.. ஒரு கொயந்தை, சோமபானம், சுறா:) பானம் பற்றிப் பேசினதுக்குக் கூப்பிட்டு அடிக்காமல்:)), ஃபிறைஸ் குடுத்த அந்தத் தமிழன்பன் தாத்தாவை மீ இப்போ வலைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறேனாக்கும்:)).. ஆராவது யெல்ப் மீ பீஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா.:).
Deleteஊசிகுறிப்பு செம :) நாமெல்லாம் வளர்ந்துட்டோம்னு சொல்லுங்க ஹாஹாஆ
ReplyDeleteநான் இப்போதான் வளர்கிறேன்!
Delete"நான் வளர்கிறேனே மம்மி...."
ஸ்ரீராம் ஹைஃபைவ்....நானும் இதைத்தான் சொல்லிருக்கேன்..கீழே மம்மினு!!!
Deleteஅப்ப உங்களுக்கு ஒருவர்தான் எதிரியா/!!!!!!
கீதா
ஏதிரியே இல்லைனா ???!!!! பிறக்கவெ இல்லையோ
Deleteகீதா
//அப்ப உங்களுக்கு ஒருவர்தான் எதிரியா/!!!!!!/
Deleteகீதா... ஒருவர்தான் என்றால்தான் அங்கே விடை இருக்கிறதே... இருவருக்கு மேல் என்றால் என்ன ஆகும் என்று கேட்டிருக்கிறேன்... இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்!
//AngelThursday, October 03, 2019 10:02:00 pm
Deleteஊசிகுறிப்பு செம :) நாமெல்லாம் வளர்ந்துட்டோம்னு சொல்லுங்க ஹாஹாஆ//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) சே..சே நமக்கேது எடிரி:))
//ஸ்ரீராம்.Friday, October 04, 2019 2:36:00 am
Deleteநான் இப்போதான் வளர்கிறேன்!
"நான் வளர்கிறேனே மம்மி...."//
ஹா ஹா ஹா அப்போ இன்னும் வளர இடமிருக்கு ஸ்ரீராம்:))
சித்திரை செவ்வானம் பாடல் கேட்டேன் ..ஜெயச்சந்திரன் ??நல்ல பாட்டு
ReplyDeleteபாடியது தெரியாது அஞ்சு.. நல்ல பாட்டு.
Deleteமிக்க நன்றிகள் அஞ்சு..
இன்று பாருங்க சீக்கிரமாகவே வந்திட்டேன்...
ReplyDeleteஅதிரா நீங்கள் ஞானியாகிட்டதை நான் மறக்கவே இல்லையே. அப்பப்ப எபி கருத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேனே...
அது சரி ஞானியாருக்கு யோகா?!! டூ லேட்டல்லோ!! ஹிஹிஹி
கீதா
வாங்கோ கீதா வாங்கோ..
Deleteஅதானே இன்று எப்படி போஸ்ட் கண்ணில டக்கெனத் தெரிஞ்சுது?:).. அது எனக்கு 7.5 கடைக்கூறு நடக்க்குதா.. இனி எல்லாம் நல்ல காலமாமே:)) அதனாலகூட இருக்கும்:).
//அதிரா நீங்கள் ஞானியாகிட்டதை நான் மறக்கவே இல்லையே. அப்பப்ப எபி கருத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறேனே...//
ஆவ்வ்வ்வ்வ் இந்த வேலையைத் தொடர்ந்து செய்யுங்கோ கீதா.. உங்களுக்கு ஃபிறீயாவே வில்வித்தை கற்றுத் தாறேன்:)).
//அது சரி ஞானியாருக்கு யோகா?!! டூ லேட்டல்லோ//
அது இது முக்தி நிலைக்கான யோகா கீதா:)
ஹா ஹா ஹா ஹ இதுக்கெல்லாம் போட்டுத் தாளிக்கிறேன்....பாருங்க...இனி..
Deleteஏஞ்சல் கொஞ்சம் ரெடியா இருங்க கை கொடுக்கும் கையாக!!
கீதா
ஹிந்தில டி!! அதுவும் தெரியுமே அப்ப அதுலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்ரேக்கு!! வருமோ
ReplyDeleteஅதைக் கண்டுபிடிக்க கீதாக்கா வந்திருவாங்க ஜாக்கிரதை!..ஹா ஹா தமிழுக்கு ஏஞ்சல், நெல்லை ஸ்ரீராம்...ஸ்ரீராம், நான் எல்லாம் கூடப் பரவால்ல அப்பப்ப கண்டுக்காம போயிடுவோம்...ஆனா ஹிந்தில மிஸ்ரேக் வந்துச்சோ...கீதாக்கா இருக்காங்க பார்த்து
கூடவே கொசுறு...நெல்லையும் இப்ப ஹிந்தில டீச்சர்! அவரும் சேர்ந்திடுவார்..எச்சரிக்கை...ஒயிங்கா மொயி பெயர்த்திருக்கீங்களான்னு செக் செய்யணும் இருங்க பார்த்திட்டு வரேன்
கீதா
//ஒயிங்கா மொயி பெயர்த்திருக்கீங்களான்னு// - நான் வரலை இந்த விளையாட்டுக்கு. காணொளி பார்க்கலாம் நேரமில்லை. தமிழ்ல ஒருத்தர் பேசி, அதை அதிரா எழுதினாலே ஆயிரத்தெட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவாங்க. இதுல இன்னொரு மொழில பேசினதை மொழிபெயர்த்தாங்கன்னா.....
Deleteநெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ கடைசி லைன் செமையா சிரிசுட்டென்..
Deleteகீதா
///ஹிந்தில டி!! அதுவும் தெரியுமே அப்ப அதுலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்ரேக்கு!! வருமோ//
Deleteஅது வந்து கீதா, ஒரு மொழியில எக்பேர்ட் எனில், கடகடவென ரைப் பண்ணுவினமெல்லோ:)) அப்போ மிஸ்ரேக்ஸ் வருவது சகஜம்தானே:)) ஹா ஹா ஹா ஹையோ எப்பூடியெல்லம் கிட்னியை ஊஸ் பண்ணி ரிப்ளை பண்ண வேண்டிக்கிடக்கு செந்தூர் வேலா:))..
//கீதாக்கா வந்திருவாங்க ஜாக்கிரதை ..ஹா ஹா தமிழுக்கு ஏஞ்சல், நெல்லை ஸ்ரீராம்...ஸ்ரீராம்,//
ம்ஹூம்ம்ம் என் ஹிந்தி மொழிபெயர்ப்புப் பார்த்து ஹெட் சுழலுது என ஓடிப்போன கீசாக்கா இன்னும் திரும்பி வரல்ல:))
அஞ்சுவுக்கு ர/ற பிரச்சனை..
நெல்லைத்தமிழன்.. ”டிக்ஸனரி” எடுத்து வர மறந்திட்டால்.. ஐ பாட்டில உங்க புளொக் திறக்குதில்லை பின்பு வாறேன் என்பார்:))
ஸ்ரீராமோ.. எப்பவும் முதல் எழுத்தை மறந்து, அடுத்த கொமெண்ட்டில் முதல் எழுத்தைப் போட்டு.. ஒட்டிப் படிங்கோ என்கிறார்ர்:)).. ஹையோ அதிராவின் ஹாங் இன் நிலைமையைப் பாருங்கோ கீதா:)) ஹா ஹா ஹா:))
@கீதா
Delete///ஒயிங்கா மொயி பெயர்த்திருக்கீங்களான்னு செக் செய்யணும் இருங்க பார்த்திட்டு வரேன்//
ஹையோ ஒ மை லோட்ட்ட்ட்.. பீஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈ:))
[im]https://media.giphy.com/media/XUdEJ9v5I446Y/giphy.gif[/im]
///நெல்லைத்தமிழன்Friday, October 04, 2019 8:19:00 am
Delete//ஒயிங்கா மொயி பெயர்த்திருக்கீங்களான்னு// - நான் வரலை இந்த விளையாட்டுக்கு. காணொளி பார்க்கலாம் நேரமில்லை.//
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இப்பூடி எஸ்கேப் ஆக விடமாட்டேனே.. அந்த வீடியோவில 1.15 நிமிடத்தில நிக்கி அக்கா என்ன சொல்றா எனச் சொல்லுங்கோ பார்ப்போம்:))
ஸ்டன்னாகி நிக்கிறாங்க ஆண்டி..!!! அதுதானே? அதை நீங்களே சொல்லிட்டீங்களே இங்க ஒரு கருத்துல...!!
Deleteகீதா
அதேதான் கீதா.. நீங்களும் அதிராவைப்போல கற்பூரம்:)) ஹா ஹா ஹா..
Deleteவாழி//
ReplyDeleteஹா ஹா ஹா அது வாளி!
வாழி என்றால் வாழ்த்து! நீங்கள் தமிழ்ல டி அல்லோ?!! எனக்கு மறந்து போயிடுச்சு!!!!!!!!!!!!!!!!!
இந்தக் கதை எங்கள் பாட்டி சொல்லிருக்காங்களே....அப்புறம் இதே போன்ற ஒரு கேள்வி வெங்கட்ஜி தளத்திலும் வேறு ஒரு கதை மூலம் கேட்கப்பட்டது. கீதாக்கா பதிலும் கொடுத்திருந்தாங்க...இங்கயும் தருவாங்க!!
யாரும் வேண்டுமென்று செய்யவில்லை....விதி...
கீதா
//ஹா ஹா ஹா அது வாளி!//
Deleteபழக்கதோசத்தில ரைப் அடிச்சிட்டேன், பின்பு நினைவு வரவே ஓடிப்போய்ச் செக் பண்ணி கரெக்ட்டா எழுதிட்டேன்ன்.. அதிராவுக்கு டமில்ல எழுத்துப் பிழை விடுவது பிடிக்காதெல்லோ அதேன்ன்:)) ஹா ஹா ஹா..
ஓ கீசாக்கா முன்பு எங்கட காலைமையில் வந்திட்டு ஓடுவா.. இப்போ நைட் ல எல்லோ சுத்தி திரிகிறா ஹா ஹா ஹா..
பைலட்ஸ் தெரிகிறார்களே...
ReplyDeleteமீண்டும் வரேன்...கணினி ஹேங்க் ஆகுது...ஜன்னலூடே வாவ்!!! எனக்கு இப்படிப் பார்ப்பது ரொம்ப பிடிக்கும்.ஏதோ கதைகளில் சினிமாவில் வரும் வானுலகம் காட்டுவாங்களே அப்படி...
இப்படிப் பஞ்சுப் பொதிகளில் வருவாங்களே..
செம படம் அதிரா...
கீதா
யேஸ் ஏனைய பெரிய பிளேன்களில் இப்படிக் குளோஸ் ஆக பைலட் தெரிய வாய்ப்பில்லை.. இது ஹப்பியாக இருந்தது.
Deleteமேலே இருந்து வானத்தைப் பார்ப்பது ஒருவித அழகோ அழகுதான் கீதா.
அடுத்த கதைக்கு அப்புறம் வருகிறேன்...
ReplyDeleteகீதா
வாங்கோ வாங்கோ..
Deleteஇதானா தி/கீதா சொன்னது? இங்கே ஒரு பஞ்சாயத்து இருக்குனு சொன்னாங்க! என்னடா இதுனு நினைச்சால் இங்கே அதிரடி,ஞானி, கவரிமா, வெள்ளைமாளிகை புகழ்(அப்பாடி, கை வலிக்குது) அதிரா தத்துப்பித்துவமாப் பேசி இருக்காங்க. காலம்பர வரேன். இப்போ நேரம் ஆச்சு, தூங்கணும். அதுக்குள்ளே மத்தவங்க என்ன பதில் சொல்லப் போறாங்கனும் புரிஞ்சுக்கலாமே!
ReplyDeleteவாங்கோ கீசாக்கா வாங்கோ...
Deleteஹா ஹா ஹா நீங்க நேற்று என் பழைய போஸ்ட்டில் பேசிக்கொண்டிருந்தபோதே இதை பப்ளிஸ் பண்ணிட்டேன், அதனால உங்களுக்கு, இண்டிரெக்ட்டா சொன்னேன் இந்த ரெயின் புறப்பட்டுவிட்டது, புதுசு வந்து ஸ்டேசனில் நிக்குது என:)) நீங்க புரியவில்லை அதை:)).
//அதுக்குள்ளே மத்தவங்க என்ன பதில் சொல்லப் போறாங்கனும் புரிஞ்சுக்கலாமே!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்கட சொந்தக் கருத்து வேணும்.
உங்களோட முந்தைய பதிவுப் பக்கத்திலே இந்தப் புதுப் பதிவு காட்டவே இல்லை அதிரடி, என்னடா இது சோதனைனு யோசிச்சேன். அப்புறமா எங்கள் ப்ளாகுக்குப் போயிட்டு அங்கிருந்து வந்தேன். அப்பாடி, எம்புட்டு சுத்து! இங்கேருந்து தேம்ஸ் கிட்டக்க! ஆனால் நான் சென்னைக்குப் போயிட்டுத் திரும்பி வர வேண்டி இருக்கு! :))))))
ReplyDeleteஅது பழைய போஸ்ட்டில் இருந்தால் புதுசு காட்டாது கீசாக்கா. றீபிரெஸ் பண்ணினாலும் காட்டாது:))..
Delete//எம்புட்டு சுத்து! இங்கேருந்து தேம்ஸ் கிட்டக்க! ஆனால் நான் சென்னைக்குப் போயிட்டுத் திரும்பி வர வேண்டி இருக்கு! :))))))//
எக்ஸசைஸ் வேணும்தானே:)) மிக்க நன்றி கீசாக்கா.
பாட்டு சித்திரச்செவ்வானம்... சித்திரை அல்ல. பகிர்ந்தவர் தப்பு செய்திருக்கிறார். ஜெயச்சந்திரனின்- இளையராஜாவின்- மிக இனிமையான பாடல்களில் ஒன்று. எப்போதும் நான் விரும்பிக்கேட்கும் லிஸ்ட்டில் இருப்பது.
ReplyDeleteஓ.. நானும் சித்திரையில இருக்கும் செவ்வானம் எனத்தான் நினைச்சிருந்தேன் இவ்ளோ காலமும்:). ஆஆஆ பாட்டுப் பிடிச்சமைக்கு நன்றி..
Deleteஆஆஆஆ வரவேற்க மறந்திட்டனே.. வாங்கோ ஸ்ரீராம் வாங்கோ..
Deleteஇதே படத்தில் 'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்' என்றொரு எஸ் ஜானகி பாடல் உண்டு. இனிமையான பாடல். அதில் இளையராஜா ஒரு (அந்தக்காலத்தில்) புதுமையான தொழில் நுட்பம் பயன்படுத்தியிருப்பார். 'காற்றினிலே வரும் கீதம்... காற்றினிலே வரும் கீதம்... காற்றினிலே வரும் கீதம்..' என்று வந்துகொண்டே இருக்கும்! ஹிந்தியில் ஆர் டி பர்மன் கூட அந்தத் தொழில் நுட்பம் பயன் படுத்தி இருப்பார் (ஆப் கி கசம்)
ReplyDeleteஓ இந்தப் பாடலும் தெரியும் அழகிய பாடல்.. ஸ்லோவாகப் பாடுவது..
Deleteஇதே காற்றினிலே வரும் கீதம் படத்தில் ஜெயச்சந்திரனின் இன்னொரு மகா இனிமையான பாடல் உண்டு.. ஆரம்ப இசையே அசத்தலாய் இருக்க அமைதியான குரலில் ஜெயச்சந்திரன் "ஒரு வானவில் போலே... என் வாழ்விலெவந்தாய்..." என்று பாடுவார்.
ReplyDeleteஓ இது எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டூ.. மிக அழகிய பாடல்.. இதெல்லாம் ஒரு படத்திலோ.. சில சமயங்களில் பல பாட்டு வந்து நிற்கும் எல்லாமே பிடிச்சதாக இருக்கும்.. எதைப் போடுவது எனத் தெரியாமல் இருக்கும்..:)
Deleteஞானி ஆயிட்டீங்களா? அப்போ உங்க பேர் சங்கரனா?!!! (அபுரி இல்லே?) அது சரி... யோகா க்ளாஸ் போறீங்களா? எனக்கு யோகா க்ளாஸ் சென்று வந்தபோதுதான் அதிக கோபம் வந்தது!
ReplyDelete//ஞானி ஆயிட்டீங்களா?//
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு ஞானியை இப்படிப் பப்புளிக்கிலே அவமானப்படுத்தலாமோ?:)
//அப்போ உங்க பேர் சங்கரனா?!!//
இதாரிது புதுசா முளைச்ச காளான்ன்:)) புது ஞானி:)) ஹா ஹா ஹா
//எனக்கு யோகா க்ளாஸ் சென்று வந்தபோதுதான் அதிக கோபம் வந்தது!//
இதென்ன இது எல்லாமே மாறி நடக்குது ஸ்ரீராமுக்கு மட்டும்:))
இந்த விஷக்கதையை நானும் படித்திருக்கிறேன். இதற்கு வேறு பதில் என்றாலும் என் பார்வையில் ஏழு சாமியார்கள் மீதுதான் தவறு. அரசர் கூப்பிட்டவுடனே சாப்பிடப் போயிடணுமா!!! இரண்டாவது ஆப்ஷன் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தண்டனையைப் பிரித்துக்கொடுத்து விடலாம்! அவர்கள் விதி அப்படிமுடிய வேண்டும் என்று ஏற்கெனவே ஏதாவது பின்னணி புராணக்கதை இருக்கும். எனவே கடவுளுக்குத்தான் தண்டனை!
ReplyDelete//அரசர் கூப்பிட்டவுடனே சாப்பிடப் போயிடணுமா!!!// - ஓஹோ... இந்த எண்ணம் ஸ்ரீராமிடம் இருக்கா. நல்லவேளை தெரிஞ்சது. நாளை, எங்க வீட்டுல ஃபங்ஷன், வாங்க சாப்பிட என்று ஸ்ரீராம் யாரைக் கூப்பிட்டாலும், அவங்களுக்கு இந்த வரி நினைவுக்கு வந்திடாதோ? அப்புறம் அவங்க ஸ்ரீராம் வீட்டு ஃபங்ஷனுக்கு ஓலா டாக்சி புக் பண்ணுவாங்கன்னு நினைக்கறீங்க?
Deleteநெல்லை... அப்படியெல்லாம் இல்லை. அப்படி எடுத்துக்கொண்டால் உங்களுக்குதான் தொல்லை! எனக்குப் புரியவைக்கதான் சள்ளை! நான் ஒரு அறியாப்பிள்ளை!
Deleteஎனக்கு இனி சந்தேகம் இல்லை. ஸ்ரீராம் மனசு முல்லை போல் வெள்ளை.
Deleteகுட். நெல்லை... நீங்க நல்ல பிள்ளை!
Delete//நெல்லைத்தமிழன்Friday, October 04, 2019 2:43:00 pm
Deleteஎனக்கு இனி சந்தேகம் இல்லை. ஸ்ரீராம் மனசு முல்லை போல் வெள்ளை.
Delete
ஸ்ரீராம்.Friday, October 04, 2019 3:01:00 pm
குட். நெல்லை... நீங்க நல்ல பிள்ளை!//
என்ன நடக்குது இங்கின?:)) நெல்லைட்த்ஹமிழன் மட்டும்தான் நல்ல பிள்ளையோ?:) அப்போ நாங்களெல்லாம் பாட் பிள்ளைகளோ:).. விடுங்கோ விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்.. என்ன்னை ஆரும் தடுத்திடாதீங்கோ:))
ஸ்ரீராம்.Friday, October 04, 2019 11:12:00 am
Deleteஸ்ரீராம்.Friday, October 04, 2019 11:12:00 am
ஸ்ரீராம்
//எனக்குப் புரியவைக்கதான் சள்ளை!//
இதை ஆராவது எனக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)) சள்ளை என்றால் வயிற்றுப் பகுதியில் அதிகமாக வளர்ந்திருக்கும் தசையைத்தானே சொல்லுவினம் ஹா ஹா ஹா:)..
நெ.த
//ஸ்ரீராம் மனசு முல்லை போல் வெள்ளை.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா அப்போ எங்க மனசு எல்லாம் என்ன கலர்:))
ஸ்ரீராம் நீங்க சொன்னது நம்ம நெல்லைக்குத்தான் அதிகப் பொருத்தம் அவர் தான் சொல்லிட்டே இருக்காரே வெளியில் யார் வீட்டிலும் சாப்பிடத் தயங்குவேன்னு!!!
Deleteஹா ஹா ஹா....நெல்லை போட்ட இதை அதிரா ஸ்ரீராம் எல்லாம் பொறுக்கி எடுத்து வைக்கலை போல!!!!!!
அதிரா சள்ளை என்றால் தொல்லை இல்லைனா கஷ்டம் புரிய வைப்பது...அப்படினு கொள்ளலாம்...!!!!!!!!
கீதா
ஸ்ரீராம் டி ஆர் ஆகிட்டார்!!!!!ஹிஹிஹி
Deleteகீதா
//அதிரா சள்ளை என்றால் தொல்லை இல்லைனா கஷ்டம் புரிய வைப்பது...அப்படினு கொள்ளலாம்...!!!!!//
Deleteஓ நன்றி கீதா..
அது ஸ்ரீராம் வியாழக்கிழமைக்காக இங்கு கவிதை எழுதிப் பழகுகிறார்:))
அதிராவுக்குப் புரியும் பாசையாக “தொல்லை” இருக்க:)), சள்ளை அங்கிளை எதுக்கு ஸ்ரீராம் உள்ளே கூட்டி வந்தார்:) ஹா ஹா ஹா:)...
Deleteஎன்னாது... பிளேன் பற்றி நான் பேசினேனா? ஓ... சிறிய பயணம், பஸ் என்றெல்லாம் சொன்னேனே அதுவா? ஓகே... ஓகே... பைலட் கைமட்டும் தெரிகிறது! அசப்புல நம்ம ராஜாமணிபோல இருக்கே...!!!.
ReplyDelete//என்னாது... பிளேன் பற்றி நான் பேசினேனா?//
Deleteஆண்டவனே!! ஸ்ரீராமுக்கு மறதி என ஒன்று இருக்கிறதென்பதை நான் மறந்திட்டனே:))..
//அசப்புல நம்ம ராஜாமணிபோல இருக்கே...!!!.//
ஹா ஹா ஹா அப்போ ராஜாமணி அங்கிள் மேட் இன் அப்புறிக்காபோல:)) ஹா ஹா ஹா...
தெரியாமல் பாவம் செய்து விட்டால் அல்கஹால் வாங்கி குடிக்க வேண்டும் என்று தெரிகிறது. அதுதான் பாபவிமோசனம் போல... ஆல்கஹால் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் பூச்சி எல்லாம் செத்துப்போகும் ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது!
ReplyDelete//அல்கஹால் வாங்கி குடிக்க வேண்டும் என்று தெரிகிறது.//
Deleteஹா ஹா ஹா கர்ர்ர்:)) இதுதான் சாட்டெனக் குடிச்சிடாதீங்கோ:)) குடிப்பதைப்போல நடிக்கோணுமாம்:) நிக்கி அக்கா சொல்வதைக் கவனிச்சுக் கேளுங்கோ:)
இப்போல்லாம் எலியைக் கண்டு பூனை பயந்து ஓடும் காலம். இன்னும் கொஞ்ச காலம் போனால் எலி பூனையை லபக்கென்று பிடித்துச் சாப்பிட்டு விடும்!
ReplyDeleteஅது உண்மைதான்.. எலிகள் குண்டாகிக்கொண்டு வருகின்றன, சில வீடியோக்கள் யூ ரியூப்பில் வருமே.. பூனையை கலைச்சுக் கலைச்சு எலி துரத்தும்:)
Deleteஹையொ ஹையோ ஞானி அதிராவுக்கு ஸ்ரீராம் சொன்னது புரியவே இல்லையே நான் என்ன செய்ய...என்ன செய்ய எப்படிச் சொல்ல....
Deleteஅது அதிரா பூசார் ஜெர்ரிக்குப் பயப்படுவார்னு!!!!!!!!!
ஜெர்ரியும் இதைப் பார்க்கலையாஆஆஆஆஆஆஆஆஅ
கீதா
//அது அதிரா பூசார் ஜெர்ரிக்குப் பயப்படுவார்னு!!!!!!!!!//
Deleteஓஓ அதுவோ சங்கதி கீதா:)).. ஹா ஹா ஹா அது அடிக்கடி ஜெரி ட்றை பண்றதுதான்:) ஆனா மீ நசுக்கி விட்டிடுவேன்ன் ஹா ஹா ஹா:)
கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று எதிரி இருந்தால் என்ன அர்த்தம் எண்டு சொல்லவில்லை என்பது வருத்தம்.
ReplyDeleteஹா ஹா ஹா எங்கிருந்துதான் உங்களுக்கு ஸ்டைல் ஸ்டைலாக் கவலை வருதோ?:)..
Delete2,3 எதிரி எனில் நீங்கள் இப்போதான் கிண்டக்காடினில் இருக்கிறீங்கள் எண்டு அர்த்தம்:)). அதாவது வளரத் தொடங்கிறீங்களென:).. ஹா ஹா ஹா மிக்க நன்றிகள் ஸ்ரீராம்.. வரவர நகைச்சுவை கூடுதே உங்கள் எழுத்தில்:)..
//எனக்கு டமில்ல டி:) என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்:)//
ReplyDeleteசத்தியமாக எனக்கு இந்த பொய் தெரியாது.
அரசர் தனது மனைவியிடம் பாயாசம் வைக்க சொன்னாரா ? இல்லை பால்பாய்சன் வைக்க சொன்னாரா ?
(எனக்கு கன்ப்யூசன்)
சரி அரசர் மனைவி அரசிதானே...?
அரண்மனையில் பசு மாடுகள் இல்லாமல் டிப்போவில் வாங்கப் போனாரோ... அரண்மனை ஊழியர் ???
Deleteஅதிலும் பால் கேனை தூக்கி வந்தவர் தளர்ந்து போதி(ஸ்) மரத்தடி நிழலில் சாய்ந்து விட்டார் பாவம்.
//சத்தியமாக எனக்கு இந்த பொய் தெரியாது.//
Deleteபொய்தானே உடனே கிடைக்குமாம்:)) உண்மை லேட்டாத்தான் வந்து சேருமாம்:)).. அப்போ பொய் இன்னும் தெரியல்ல என்றால் அது உண்மை கில்லைஜி :)) ஹா ஹா ஹா புரியுதோ கொயப்பிட்டனோ:))..
//சரி அரசர் மனைவி அரசிதானே...?// என்னதான் அரசி ஆனாலும் அரசருக்கு மனைவிதானே:).. இப்போ என்னதான் ட்றம்ப் அங்கிள் உலகப்புகழ் பெற்ற ஒருவராக இருந்தாலும்.. அப்பப்ப மனைவிக்கு கால் பிடிச்சு விடுறாரெல்லோ:) அப்பூடித்தான் ஹா ஹா ஹா:)).. அது அரச பால்பண்ணைதான் கில்லர்ஜி:) ஆனா சற்றுத் தொலைவிலே இருந்ததாம்:)).. ஹையோ ஆண்டவா.. நிக்கி அக்கா ஜொன்னதை மொழிபெயர்க்க வெளிக்கிட்டு மீ படும்பாடு:)) ஹா ஹா ஹா..
மிக்க நன்றிகள் கில்லர்ஜி.. பதில்கள் தாமதமானதற்கு மன்னிக்கவும்.
முதல் கதைக்கு விதி நு சொல்லிட்டு அடுத்து வினைப்பயன் என்றும் சொல்லாமல் போய்ட்டேன்....
ReplyDeleteமீ க்கும் இது போன்றவற்றில் பல கேள்விகள் டவுட்டு எல்லாம் வரும் கேட்டீங்களா ஞானி...ஞானி பதில் சொல்லோணும்! ஞானிக்கே டவுட்டுனா ஆரு சொல்லுவாங்கோ!!?!
மீ அதனால் அத்தனையும் நீயே பார்த்துக்கப்பா நான் ஹாயா இருக்கேன்னு அந்த சுப்ரீம் கோர்ட்டிடம் சொல்லிடுவேன்...ஹிஹிஹி
அதிருக்கட்டும் உங்க ஹிந்தி சரியான்னு கண்டுபிடிக்க கீதாக்காவோடு மீசைக்காரரும் வந்திருவார்...பாருங்க
மீக்கும் ஹிந்தி குச் குச் மாலும் என்றாலும் ஹிஹிஹி நிக்கிக்கா இன்னா சொல்றாங்கோ...கீதாக்கா அண்ட் கில்லர்ஜி வெரிஃபை அதிரா..
கீதா
//முதல் கதைக்கு விதி நு சொல்லிட்டு அடுத்து வினைப்பயன் என்றும் சொல்லாமல் போய்ட்டேன்....//
Deleteஹா ஹா ஹா.. இதுவும் சரிதான்...
//கீதாக்கா அண்ட் கில்லர்ஜி வெரிஃபை //
பாருங்கோ கீதா, ஹிந்தியில எவ்ளோ எக்பேர்ட் ஆனாலும் அதிரா ஹிந்தி பேச வெளிக்கிட்டால் எல்லோரும் ஓடி ஒளிஞ்சிடுவினம்:)).. நீங்க சொன்ன இருவரும் வாயே திறக்கல்ல பாருங்கோ.. ஸ்பீஜ்லெஸ் ஆகி நிற்கினம்:)) அதிராவுக்கு இப்புட்டு அறிவோ என:)).. புரிஞ்சுக்கோங்க கீதா:)) ஹா ஹா ஹா....
ரெண்டாவது கதை ஹலோ அதிரா அவங்க குதிரைன்னு சொல்லுறாங்க நீங்க கழுதைன்னு சொல்லிருக்கீங்க..
ReplyDeleteஏஞ்சல் பூஸாரை விடாதீங்க அவங்க ஹிந்தில டி எதுவும் இல்லை நீங்க சொன்னப்புல டீ தன குடிச்சிருக்காங்க!!!!!!
கீதா
//ரெண்டாவது கதை ஹலோ அதிரா அவங்க குதிரைன்னு சொல்லுறாங்க நீங்க கழுதைன்னு சொல்லிருக்கீங்க..//
Deleteஆங்ங்ன் அது அது.. ஆராருக்கெல்லாம் இங்கின ஹிந்தி தெரியும் என்பதை கண்டுபிடிக்கவே இந்த மாற்றுவேலை பண்ணினேன்:)) இல்லை எனில் குதிரையைக் கழுதை என்பேனோ:)))
ரெண்டாவது கதை நல்லாருக்கு நிக்கி ஆண்டி நான் ஏஞ்சல், ஸ்ரீராம், நெல்லை எல்லாம் அப்படித்தான் செல்லமாகக் கூப்பிடுவோமாக்கும்!!!!!
ReplyDeleteகீதாக்கா நிக்கி பாட்டினு சொல்லாம இருக்கோணும்!!!!!!!!!!!!
ஊ இ ஹா ஹா ஹா ஹா அது!!! ஜெர்ரியுடன் நானும் கொண்டாடுவேனே!!!!! வாலைச் சுருட்டிக் கொண்டு அப்படி உட்கார்ந்து தியானம் செய்யுங்க ஞானி!!!!!!!!ஓட்டைக் கண் போட்டு ஜெர்ரியும் நானும் ஸ்ரீராம் நெல்லை அக்காஸ் அண்ணன்ஸ் எல்லாம் என்ன செய்யுறாங்கனு பார்க்கப்படாது!!!!!!!
கீதா
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது என் தியானத்தைக் கலைப்பது:)
Deleteஊ கு ஹா ஹா ஹா ஹா அப்ப நான் வளர்ந்துட்டேனா மம்மி!!!!!!!!!!!!
ReplyDeleteஇது இங்கு நம் அக்கா ஒருவருக்கு வேறு ஒரு அர்த்தமும் கொடுக்குமோ!!!! இதை வாசித்தால் அந்த அக்காவுக்கும் புரியுமே!!!!
கீதா
ஆரு கீசாக்காவோ?:) நான் இந்த வம்புக்கு வள்ளே:))
Deleteஇம்முறை பல மீள்வருகைகள் அளிச்சிட்டீங்க ஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றிகள் கீதா.
Deleteஅவசரமாக போட்டாலும் அருமையான பதிவு அதிரா!(ஆஹா! டி.ஆர்.ரேஞ்சுக்கு வந்திருக்கிறதே!) குறிப்பாக ஊசிக்குறிப்பு பிரமாதம்!
ReplyDeleteவாங்கோ பானுமதி அக்கா வாங்கோ
Delete//(ஆஹா! டி.ஆர்.ரேஞ்சுக்கு வந்திருக்கிறதே!) //
ஹா ஹா ஹா இவரின் பேச்சு மேலேயும் கீதா சொல்லியிருக்கிறா:) மனிசனுக்குப் புரைக்கடிக்கப் போகுது:))..
ஓஒ ஊசிக்குறிப்பு பிடிச்சிருக்கோ ஹா ஹா ஹா மிக்க நன்றி பானுமதி அக்கா.
முதல் கதை வேற மாதரி படித்த நினைவு ..அதை போல அந்த நீதியும் படிச்சு மறந்து போச்சு...
ReplyDeleteஇரெண்டாவது கதை ..நல்ல நீதி ..
நாம் ஒருவரை, உண்மையை அறியாமல், கண்டபடி நம் மனம் போன போக்கில் திட்டினால், அந்தப் பாவம் நம்மை வந்தடைஞ்சுவிடும்:))........
நியாபகம் வச்சிக்கணும் ...
வாங்கோ அனு வாங்கோ... நீங்கள் பல்ருக்கு இக்கதை தெரிஞ்சிருக்குது, ஆனா எனக்கு இதுதான் முதல்தரம்.
Delete//நியாபகம் வச்சிக்கணும் ...//
ஹா ஹா ஹா கரெக்ட்டாப் பிடிச்சிட்டீங்க.. ஆரும் ஆரையும் கண்டபடி திட்டிடக்கூடாது என்பதற்காகவே புனையப்பட்ட கதைபோல இருக்கு:).
மிக்க நன்றி அனு.
//உண்மையை அறியாமல், கண்டபடி நம் மனம் போன போக்கில் திட்டினால், அந்தப் பாவம் நம்மை வந்தடைஞ்சுவிடும்:// - இதைப் பற்றி ஷீரடி சாய்பாபா சொல்வது, அடுத்தவருடைய குறைகளைச் சொல்வது, திட்டுவது, அடுத்தவருடைய புண்ணை நக்கிக்கொடுப்பதுபோல. அது அவரது பாவத்தைக் குறைக்கும். நமக்கு அந்தப் பாவம் வந்தடையும் என்று. இது 'நியாயமான திட்டு, தவறான திட்டு' இரண்டுக்கும் பொருந்தும்.
ReplyDeleteஆஆஆஆஆ இம்முறை நெல்லைத்தமிழனுக்குப் பதில் தர ரொம்ப லேட்டாயிட்டேன்ன்.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ..
Delete//இது 'நியாயமான திட்டு, தவறான திட்டு' இரண்டுக்கும் பொருந்தும்//
ஓ அப்போ நியாயமான விசயத்துக்கும் திட்டிடக்கூடாதோ? அப்போ எப்போதான் அதிரா திட்ட முடியும்?:)).. நான் நினைச்சேன் அறியாமல் திட்டினால்தான் தப்பு என, ஒருவரின் தவறு கொம்ஃபோமானால் திட்டலாமாக்கும் என ஹா ஹா ஹா...
அப்போ அஞ்சுவைத் திட்டவே முடியாதோ?:)) சே..சே... இப்பூடி ஆச்சே என் நிலைமை:))
தர்மம், பாவம், புண்ணியம் இதுக்கெல்லாம் நேரடியாக நிறைய இடங்களில் பொருள் கொள்ள முடியாது, அதாவது இது பாவம், இது புண்ணியம், இது தர்மம், இது அதர்மம் என்று.
ReplyDeleteஇந்த நிகழ்வில், விதிதான் இந்த balanceக்குக் காரணம் என்று கொள்ளணும். நேரடியாக பால்காரன் மற்றும் சமையல்காரன் இருவருக்கும் உள்ள பொறுப்பை சரியாகச் செய்யலை. அதனால அவங்களுக்கு பாவத்தின் பெரும்பகுதி போகும்.
1. முன் ஜென்மத்தில்,தான் முடமாகவும், ஏழையாகவும், தன்னால் எதுவும் செய்ய இயலாததாகவும் இருந்தபோது, தன்னைப் பார்த்துக்கொண்ட தன் சகோதரனை 7 பேர் கொன்றுவிடுகின்றனர். அந்த 7 பேருக்கு கருடன், பால்காரன், சமையல்காரன் போன்றோர் உதவுகின்றனர் (கொல்வதற்கு). இதனைப் பார்த்தும் ஒன்றும் செய்யமுடியாமல் மனவேதனையில் அவன் இறக்கிறான். அடுத்த ஜென்மத்தில் அவன் நல்லபாம்பாகப் பிறக்கிறான். முன் ஜென்மத்தில் இன்னொருவருடைய உணவைத் தட்டிப் பறித்து தான் உண்டதால், பாதிக்கப்பட்டவர் அடுத்த ஜென்மத்தில் கருடனாகப் பிறந்து இந்தப் பாம்பை உணவாகக் கொள்கிறார். இறக்கும் தருவாயிலும் அந்தப் பாம்பு, முன் ஜென்ம நிகழ்வுக்கு பழி வாங்கிக்கொள்கிறது.
இப்படி நினைத்துக்கொண்டு யாருக்கும் பாவம் இல்லை, ஆனால் பாம்புக்கு மட்டும் பாவம் வந்துசேர்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம். பழி வாங்கினாலும், செய்த தவறு பாவம்தானே.
//தர்மம், பாவம், புண்ணியம் இதுக்கெல்லாம் நேரடியாக நிறைய இடங்களில் பொருள் கொள்ள முடியாது, அதாவது இது பாவம், இது புண்ணியம், இது தர்மம், இது அதர்மம் என்று.//
Deleteஇது உண்மைதான், இவற்றைப் பிரிச்சுக் கூற நாம் யார்.. நமக்கு என்ன தகுதி இருக்கு என முதலில் யோசிக்க வேண்டும். அடுத்தவர்களைக் குறை/திட்டும் போதுகூட, நமக்கு அதற்கான தகுதி இருக்கோ.. நாம் என்ன தவறே பண்ணாதோரா என யோசிப்பேன் நான்..
//நேரடியாக பால்காரன் மற்றும் சமையல்காரன் இருவருக்கும் உள்ள பொறுப்பை சரியாகச் செய்யலை.//
எனக்கு பாம்பையும், கருடனையும் தவிர்த்து மற்றைய நால்வரும் பொறுப்பாக நடக்கவில்லை எனும் எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.. பெரிய பெரிய மகான்கள் ரிஷிகள் வீட்டுக்கு, சாதாரணமாக விருந்துக்குப் போவோருக்கே, அவர்களின் மனைவிமார்தானெ நேரடியாக சமைச்சு, அவர்களும் சேர்ந்து உண்பார்கள் என படிக்கிறோம்.. அப்போ இங்கு அரசன் ஏன் சேர்ந்து உண்ணவில்லை?.... அரசி ஏன் தன் கையால் பொறுப்பாக சமைக்கவில்லை? எனும் கேள்வி எனக்குல் எழுகிறது?
இக்கிளவிகளை தூக்கிக் கொண்டு ஓடிபோய்.. சே சே கேள்விகளத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் புதன் கிழமையில கேட்டிடுவோம்:)) இம்முறை ஸ்ரீராம் தானே பொறுப்பு:)).. இங்கு எஸ்கேப் ஆகிட்டார்ர்:) அங்கு ஆக முடியாதெல்லோ ஹா ஹா ஹா:).
///இப்படி நினைத்துக்கொண்டு யாருக்கும் பாவம் இல்லை, ஆனால் பாம்புக்கு மட்டும் பாவம் வந்துசேர்கிறது என்று நினைத்துக்கொள்ளலாம்///
Deleteஇது என்ன என்னைக் குழப்புறீங்க... கர்ர்:)).. பாம்பால் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்குப் படி ஏற முடியாது:)) லோயர் வச்சு வாதாட முடியாது:)) எனும் எண்ணத்திலதானே இப்படி முடிவு சொல்றீங்க:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஒரு வாயில்லாத ஜீவனை தண்டனைக்குள்ளாக்குவதை என்னால ஏற்க முடியாது... அது கடிச்சால்கூடப் பறவாயில்லை, தன் உடம்பை ஒருவர் கொத்துகிறார் எனும்போது, உயிர்போகும் தறுவாயில் வாயை பிளந்தது ஒரு குத்தமாய்யா?:)) ஹா ஹா ஹா
//அடுத்தவர்களைக் குறை/திட்டும் போதுகூட, நமக்கு அதற்கான தகுதி இருக்கோ.. நாம் என்ன தவறே பண்ணாதோரா என யோசிப்பேன் நான்..// - இந்த வரிகளைப் படிக்கலை நான். படிச்சாத்தான் அப்புறம் டேவடைக் கிச்சன், மாவிளக்கு இடுகை அப்புறம் எந்தத் தளத்திலும் குறை சொல்லமுடியாது, கலாய்க்க முடியாது. ஹா ஹா
Delete///இந்த வரிகளைப் படிக்கலை நான். படிச்சாத்தான் அப்புறம் டேவடைக் கிச்சன்,//
Deleteஆஆஆவ்வ்வ்வ் ஹையோ நெல்லைத்தமிழன் அவசரப்பட்டு.. படிச்சாலும்:) சரண்டர் ஆகிடாதீங்க:).. இங்கின இந்தத்தத்துவம் மாறுபடுது:)).. அதாவது டேவடைக் கிச்சினைத் திட்டாட்டில்தான் நமக்கு தெய்வக்குத்தமாகிப் பாவம் சேர்ந்திடும்:)).. ஹையோ என் மாவிளக்கு கருகிக் கரியானாலும்:)) டேவடைக் கிச்சினைத்திட்டுவதை நிறுத்த மாட்டனே:)).. ஹா ஹா ஹா...
அந்தத் தத்துவம் ஆருக்கெனில்.. தொட்டதுக்கெல்லாம்.. அவர் இப்படிப் பண்ணிட்டார் இவர் இப்படிப் பண்ணிட்டார்... என திட்டுகிறார்களே போட்டி போட்டு, சிலர் கெட்ட வார்த்தைகளால்கூட.. பப்ளிக்கில் .. அவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு அப்படி எண்ணத் தோன்றும்... இவர்கள் எல்லோருமே குற்றமே செய்யாதோரோ என:))
//வேண்டுமென இங்கு எதுவும் நடக்கவில்லையே... //
ReplyDeleteநடக்கலைதான். ஒருத்தர் குழை சாதம் ரெசிப்பி போடறாங்க. அதைப் படித்த இன்னொருவர், அதே மாதிரி செய்து சாப்பிடுவோம் என்று நினைத்து போய் காய்கறிகள் வாங்கறார். அதில் கத்தரிக்காயில் விஷ வண்டு இருக்கிறது. புடலங்காயில் பாம்பு ஓடியதால் அதுவும் விஷத்தன்மை கொண்டதாக இருக்கிறது. மனைவி சமைக்கும் அவசரத்தில் இவற்றைக் காணவில்லை. சமையல் முடிகிறது. கணவன் சாப்பிடப்போகும் நேரம், அவர் நண்பர் வீட்டிற்கு வருகிறார். கணவன், அவரையும் சாப்பிடச் சொல்லி, இருவரும் சாப்பிடும்போது, கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டால், பாவம் யாருக்கு? அதிராவுக்கு இந்த பாவத்தில் பங்கு உண்டா?
கண்டிப்பா உண்டு :) குழை சாதம்தானே ஆரம்பம் அதனால் அதிரா தான் காரணம்
Delete@நெ.த
Delete///அதிராவுக்கு இந்த பாவத்தில் பங்கு உண்டா?///
இதென்ன புது வம்பாக்கிடக்கு:)) அதிராவின் குழைஜாதத்தை இனி ஆரும் திட்டிடக்கூடாது என்பதற்காகவே, கஸ்டப்பட்டுப் பாடுபட்டுக் ஹிந்தி படிச்சுஊஊ டி வாங்கி, நிக்கி அக்காவைத் தேடிக் கண்டு பிடிச்சு , அவவின் கதையை வீடியோவாக்கி, இங்கு கொண்டு வந்துபோட்டால்ல்ல். ஸ்ரீராம் மாதிரி ருவிஸ்ட்டு சே..சே டுவிஸ்ட்டு வச்சு, திட்டுவதை நிறுத்திப் போட்டுப் பாவத்தைப் போடக் கலைக்கினமே:)) இப்போ நான் என்ன பண்ணுவேன் வில்லிப்புத்தூர் நாராயணாஆஆ என்னைக் காப்பாத்துங்கோ.. காலுக்கு தங்க மிதியடி வாங்கி அஞ்சுவிடம் கொடுத்தனுப்புவேன்ன்:)).
[im] https://i.pinimg.com/236x/c3/fa/16/c3fa162237fb65187167e9121c458ffc--i-spy-so-cute.jpg [/im]
//AngelSaturday, October 05, 2019 4:04:00 pm
Deleteகண்டிப்பா உண்டு :)//
[im] https://media.tenor.com/images/cfd282bc925f2525c388c286cac8ca0e/tenor.gif [/im]
//இப்போ குண்டுக் குண்டு எலியெல்லாம் வந்து முன்னால நின்று, // - அதிரா...இங்கயும் அதே கதைதான். நேற்று இரவுதான் இனி வெள்ளைச் சர்க்கரை டிசம்பர் 4ம் தேதி வரை சாப்பிடுவதில்லை என்று விரதம் ஆரம்பித்தேன். வெளியிலிருந்து வந்த என் பெண், எனக்குப் பிடிக்கும் என்று பனானா கேக் வாங்கிவந்திருந்தாள். இன்றும்கூட ஆசை காண்பித்தாள் (ஒரேயடியாக நிறுத்தாதீங்க. வாரம் ஒரு முறை சாப்பிடலாம் என்றெல்லாம்). கஷ்டப்பட்டு தவிர்த்துவிட்டேன். இனித்தான் ஏகப்பட்ட இனிப்புகள் வரும், என் ஆசையைத் தூண்டும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஹா ஹா ஹா உங்களுக்காக ஆசையாக வெளியில் இருந்து மகள் வாங்கி வந்தால் சாப்பிடத்தானே வேணும் அப்பூடி என்ன டயட் ஹா ஹா ஹா:)).. இதுதான் சொல்வார்கள்.. கடவுள் பல வடிவில் வந்து நம்மைச் சோதிப்பாராம்:)) நாங்கதான் ஸ்ரெடியா நிக்கோணும் ஹா ஹா ஹா:)..
Deleteஎன்னை ஆராவது மிக அன்பாக, 3 தரம் ஃபோஸ் பண்ணினால் சாப்பிட்டு விடுவேன் ஹா ஹா ஹா:)..
//இனித்தான் ஏகப்பட்ட இனிப்புகள் வரும், என் ஆசையைத் தூண்டும்னு நினைக்கிறேன்.//
ஹா ஹா ஹா முன்பும் இப்படிப் பல இனிப்புக்கள் வந்திருக்கும் ஆனா நமக்கு தாக்கம் கொடுத்திருக்காது:)).. இப்போ குட்டி இனிப்பை பார்த்தாலும்.. நமக்காகவே வருதே என நினைக்க வைக்கும்:))..
நாம் /நம்மை ஒன்றைத்தடுக்கும்போதுதான், அதில் ஆசை அதிகமாகுது:)..
அனைத்துக்கும் மிக்க நன்றிகள் நெல்லைத்தமிழன்.
Deleteவணக்கம் அதிரா
ReplyDeleteநல்ல நீதி கதைகளுடன் உங்களுடன் நாங்களும் ஞானியாகி விட்டோம்.
முதல் கதையில் ஏழு பேரை கொன்ற பாவங்கள் யாருக்கு என்பதில், அரசருக்கு அந்த அரசியையும், கூட இருக்கும் மூன்று பேரையும் தவிர்த்து வேறு ஏவலர்களே இல்லாத சோகம் ஒரு பக்கம் வருத்துகிறது. விதியின்பால் நடந்த இச்சம்பவத்தின் பலனை விதியின் வசமாய் இக்கதை கேட்கும் நாமனைவரும் (அரசருக்கு வேறு எவரும் இல்லாத காரணத்தால்) கொஞ்சம் கொஞ்சமாக பங்கு போட்டுக் கொண்டால் குற்றத்திலிருந்து அனைவருமே சீக்கிரமாக தப்பித்து விடலாம் எனத் தோன்றுகிறது.
இரண்டாவதாக வந்த கதையில், பாவத்தை பங்காக்கி தரும் போது நடைபெறும் நற்பலன்களை பார்க்கும் போது அப்படி ஏதாவது ஒரு சமயத்தில் இந்த பாவத்தையும் தொலைத்து விடலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. எல்லாம் ஞானியாகி விட்ட தோஷந்தான்:)) (ஞானி என்றல் எல்லாவற்றையும் விட்டுத் தந்து பிறருக்கு உபகாரமாக மட்டும் இருக்க வேண்டுமல்லவா..)
வானவூர்தியில் செல்லும் சமயம் எடுக்கப்பட்ட படங்கள் அழகாக உள்ளது. மேக கடலில் எழும் அலைகளுக்கு நடுவில் பிரகாசமாய் தெரியும் சூரியனார் படம் மிகவும் அழகாக உள்ளது.படம் எடுத்த தங்களுக்கு பாராட்டுக்கள்.
பூனையின் விரத காலம் தெரிந்துதான் எலியும் தைரியமாக அதன் முன் வந்துள்ளது. எல்லாம் அதனதன் விதிப்பயன்தான்!
ஊசி இணைப்பும், ஊசிக்குறிப்பும் அருமை. ஊசிக்குறிப்பு வாசகங்கள் உண்மை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
இந்த தடவை சடாரென்று திரும்பிய வேகத்தில் ஏறி விட்டேன் என நினைக்கிறேன். அழகான பதிவு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்கோ கமலாக்கா வாங்கோ.. இம்முறை ரெயின் வெளிக்கிட்டு விடுமோ எனும் பயத்தில முதல் பெட்டியிலயே வந்து ஏறிட்டீங்க ஹா ஹா ஹா நன்றி.. ரெயின் இன்னும் சற்று தாமதமாகவே புறப்படும்:)..
Delete//நல்ல நீதி கதைகளுடன் உங்களுடன் நாங்களும் ஞானியாகி விட்டோம்//
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பூடி நீங்களாகவே உங்களுக்குப் பட்டம் குடுக்க நான் விட்டிடுவேனோ:)).. நீங்களில் யாரும் இன்னும் அதிராவைப்போல:) ஞானி ஆகவில்லை என்பதுதான் உண்மையாக்கும்:))..
//வேறு ஏவலர்களே இல்லாத சோகம் ஒரு பக்கம் வருத்துகிறது.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன புதுச் சோகம்? ஸ்ரீராமுக்கு வருவதைப்போல ஹா ஹா ஹா:))..
//விதியின்பால் நடந்த இச்சம்பவத்தின் பலனை விதியின் வசமாய் இக்கதை கேட்கும் நாமனைவரும் (அரசருக்கு வேறு எவரும் இல்லாத காரணத்தால்) கொஞ்சம் கொஞ்சமாக பங்கு போட்டுக் கொண்டால் குற்றத்திலிருந்து அனைவருமே சீக்கிரமாக தப்பித்து விடலாம் எனத் தோன்றுகிறது.////
ஆஅவ்வ்வ்வ்வ்வ் மீ வள்ள இந்த வெளாட்டுக்கு:)) வேணுமெண்டால் அஞ்சுவை ரெண்டுதரம்:) அனுப்பி வைக்கிறேன்ன்ன்ன்ன்ன்..:)) ஹா ஹா ஹா..
அதிராவின் இடுகையில்ரசிக்க வைப்பது ஊசிக்குறிப்பே
ReplyDeleteவாங்கோ ஜி எம் பி ஐயா வாங்கோ... ஆஆஆவ்வ் இம்முறை ஒரு விசயமாவது பொஸிட்டிவாகப் பேசிட்டார் ஜி எம் பி ஐயா.. மிக்க நன்றி..
Deleteஇருந்தாலும் உங்களில் எனக்குப் பிடிச்ச விசயம், “எனக்கு வயசாகிவிட்டது, என்னிடம் எல்லோரும் வரோணும் , நான் எங்கும் போக மாட்டேன்” என எண்ணாமல்... முடிஞ்சவரை அடுத்தவர்கள் புளொக்குகளுக்கும் போய் வாறீங்க....
பாடல் இனிமை.
ReplyDelete//ஞானி ஆகிட்டதை நீங்கள் எல்லோரும், இப்போ பல நாட்களாக மறந்துவிட்டதைப்போல எனக்கொரு ஃபீலிங்காகவேஏஏஏ இருக்கு:)). அதை நினைவுபடுத்தவே இந்த அவசர போஸ்ட்:)).//
ஞானி அதிராவை யாராவது மறப்பார்களா?
கதை மிக நன்றாக இருக்கிறது.
யாரையையும் குறை சொல்ல முடியாது. இப்படிதான் அவர்கள் இறப்பு இருக்க வேண்டும், இந்த நேரத்தில் , இவர்களால் என்று முன்பே எழுதி வைக்கப்பட்டு உள்ளது. அவன் ஆட்டி வைக்கிறான் , நாம் ஆடுகிறோம்.
இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் , அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெறக் கருணையயோடு வாழ்த்த வேண்டும் என்பார் வேதாத்திரி மகரிஷி.
நாம் நமக்கு இன்னல் செய்தவர்களை திட்டி கொண்டு இருந்தால் அந்த பாவம் நம்மை வந்து சேரும் என்றும், பொறுத்துக் கொண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினால் பாவம் குறையும் என்றும் சொல்கிறார்.கடை பிடிப்பது தான் கஷ்டம்.
வாங்கோ கோமதி அக்கா... இம்முறை நான் தான் பதில்தரத் தாமதம்.
Delete//ஞானி அதிராவை யாராவது மறப்பார்களா?//
ஆங்ங் அப்பூடிச் சொல்லுங்கோ கோமதி அக்கா:))..
//அவன் ஆட்டி வைக்கிறான் , நாம் ஆடுகிறோம்.//
அது உண்மைதான்.. உலகம் ஒரு நாடக மேடை, நாமெல்லாம் அதில் நடிகர்கள், ஆனா அஞ்சு நெல்லைத்தமிழன் போன்றோர் கொஞ்சம் ஓவரா நடிக்கினம் கோமதி அக்கா:)).. ஹையோ ஒரு ஃபுளோல வந்திட்டுதூஊஊஊ படிச்சதும் கிழிச்சு அந்தக் குருவிக் கூஉட்டுக்குள் போட்டிடுங்கோ.. முட்டை இட சொகுசா இருக்கும் பேப்பர்:). ஹா ஹா ஹா..
//திருந்தி நல்வாழ்வு பெறக் கருணையயோடு வாழ்த்த வேண்டும் என்பார் வேதாத்திரி மகரிஷி.//
Deleteஅது உண்மைதான், ஆனா அந்த மனநிலை வர, நாம் ஞானி ஆனால் மட்டுமே முடியும்:)).
//பொறுத்துக் கொண்டு வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினால் பாவம் குறையும் என்றும் சொல்கிறார்.கடை பிடிப்பது தான் கஷ்டம்.//
இது உண்மைதான், திட்டுவதைக் காட்டிலும்,.. பெரும்பாலானோர்ர்..
சரி சரி போய் நல்லா இரு என்றே திட்டுவார்கள்.. அது திட்டு வாங்குபவருக்கு இன்னும் கஸ்டமாக இருக்கும் ஹா ஹா ஹா..
ஊசிக்குறிப்பு, ஊசி இணைப்பு இரண்டும் அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் கோமதி அக்கா.
Deleteபதிவும் படங்களும் கதைகளும் கருத்துரைகளும் அருமை.. அருமை!...
ReplyDeleteவாங்கோ துரை அண்ணன் வாங்கோ மிக்க நன்றிகள்.
Delete//அதிரா, ஞானி ஆகிட்டதை நீங்கள் எல்லோரும், இப்போ பல நாட்களாக மறந்துவிட்டதைப்போல எனக்கொரு ஃபீலிங்காகவேஏஏஏ இருக்கு:)). அதை நினைவுபடுத்தவே இந்த அவசர போஸ்ட்:)).// . ஞானி ஆனால் எல்லாத்தையும் விட்டிடோனும். பீலிங்சு எல்லாம் வரக்கூடாது. தெரியாதோ.
ReplyDelete///சைவமாக மாறினாலே அதிகம் ஞானிக்குணம் வந்திடுதூ:)).. எப்பவும் சைவமாகவே இருப்போருக்கு இது வராதாக்கும்:)/// சைவமா மாறினால் ஞானிகுணம் வருதென்றால் ,சைவமாவே இருந்திட்டால் எவ்வளவு ஞானத்தோட இருப்பீங்க என மாத்தியோசிக்கோனும்.
//ஹிந்தியிலயும் டி என்பது// என் சந்நிதிமுருகா எல்லாரையும் காப்பாற்று.
இப்படி ஒரே போஸ்டில கதை,படம் எனப்போட்டால் எப்படி வாசித்து கருத்தெழுதுவதாம்.
கேள்வியெல்லாம் கேட்கப்படாது. சாமியார்களுக்கு விதி வந்து அரசர் வீட்டில சாப்பிடபோய் தவறிவிட்டார்கள்.விதி யாரை விட்டது.(பதில் தெரியாட்டி இப்படி எஸ்கேப் ஆகவேண்டியதுதான்.)
2வது கதை படித்து உங்களை திட்டமாட்டோம்.குட்டுவோம். ஒருவரை திட்டுவதால் அதன் தாக்கம் எங்களையே வந்து சேரும் என சொல்லுவினம். அதையும் கடந்து போயிடவேண்டியதுதான்.
இந்த பாடலும் எனக்கு பிடிக்கும். எஸ்.பி.பாலு (பாடகர்)ஒருவர் பாடியபோது திருத்தியபிந்தான் தெரியும் சித்திர செவ்வானம் என.
படங்களும் அழகா இருக்கு. எனக்கும் மேககூட்டத்தினிடையே ப்ளேன் போவது பார்க்க பிடிக்கும். ஆனால் முகில்கள் கூட்டமா வந்து ஓரு ஆட்டம் வரும் அப்ப கொஞ்சம் பயமா இருக்கும். வெண்முகில் பஞ்சுபோல அழகு. 2 ஊசிகளும் செம கூர்மை.
வாங்கோ அம்முலு வாங்கோ..
ReplyDelete//ஞானி ஆனால் எல்லாத்தையும் விட்டிடோனும். பீலிங்சு எல்லாம் வரக்கூடாது. தெரியாதோ.///
ஹையோ இது என்ன புயு வம்பாக்கிடக்கு:)) ஒரு ஞானியை இப்பூடிச் சொனால் அவர்களுக்குப் பாவம் வந்து சேராதோ:))[இப்பூடி எதையாவது சொல்லி, ஆரம்பமே மிரட்டி வச்சிடோணும்:)].. தேடித் தேடி அடிக்கினமே எங்கின போய் ஒளிப்பேன்ன்:))
[im] https://s-media-cache-ak0.pinimg.com/736x/bf/91/6d/bf916d1f2cc4b7ede7c6f8c81f9bba0b.jpg[/im]
// சைவமா மாறினால் ஞானிகுணம் வருதென்றால் ,சைவமாவே இருந்திட்டால் எவ்வளவு ஞானத்தோட இருப்பீங்க என மாத்தியோசிக்கோனும்.//
ReplyDeleteசே..சேஎ.. நான் என்ன மாட்டேன் என்றா சொல்கிறேன்:)), ஆனா ஆடு, கோழி, மீனை எல்லாம் எனக்காகவே படைச்ச கடவுள் கவலைப்படுவாரெல்லோ?:) கடவுளைக் கவலைப்பட வைக்கலாமோ அம்முலு?:) அது பாவம் எல்லோ:)) ஹையோ எதுக்கு இப்போ எயார்போர்ட்டுக்கு ஓடுறீங்க?:) ஃபிளைட் பிடிச்சு வந்து அடிக்கவோ?:)) வாணாம் ஓவர் காத்தடிக்குது பிளேன் ஆடும்:)) பிறகு அந்தப் பாவமும் மீக்கு வந்திடும்:)) எதுக்கும் நித்திரை கொள்ளுங்கோ நாளைக்குப் பேசித்தீர்த்திடலாம் ஹா ஹா ஹா:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பூடி ஒருநாளும் வேர்த்ததில்லையே:)).
////ஹிந்தியிலயும் டி என்பது// என் சந்நிதிமுருகா எல்லாரையும் காப்பாற்று.//
ReplyDeleteஆமா ஆமா செல்வச்சந்நிதி முருகா .. ஹிந்தி தெரியாதோரைக் காப்பாற்றப்பனே:)).
//விதி யாரை விட்டது.(பதில் தெரியாட்டி இப்படி எஸ்கேப் ஆகவேண்டியதுதான்.)//
ஹா ஹா ஹா பதில் தெரியாத, நம்மால் முடியாத அனைத்துக்கும் நாம் வைத்த பெயர் விதி.. ஏனெனில் நமக்குத்தேவை நிம்மதி.. விதி என விட்டுவிட்டால் நிம்மதியாக வாழலாம், இல்லை எனில் மனம் தவிச்சபடி இருக்கும்..
//2வது கதை படித்து உங்களை திட்டமாட்டோம்.குட்டுவோம்.//
அப்பாடா கொஞ்சம் கொஞ்சமா அனைத்தையும் மறந்து குறைச்சுக் கொண்டு வருகிறார்கள் எல்லோரும்:)) தேம்ஸ்ல தள்ளுவது, ப.வைர அட்டியல் .. இப்பூடி .. ஒருவேளை எல்லோரும் கமலாக்கா சொன்னதைபோல ஞானி ஆகிக்கொண்டு வருகினமோ:)).. டக்குப் பகென தேம்ஸ் இன் வடக்குப் பக்கத்திலும் ஒரு ஆச்சிரம் ஓபின் பண்ணி உண்டியல் வச்சிட வேண்டியதுதேன்ன்:).. ஸ்கொட்லாண்டில ஒரு மலை விற்பனைக்கு வருதாம்:))..
உண்மைதான் பிளேஎன் ஆடும்.. பெல்ட் போடச்சொல்லி எனவுன்ஸ் பண்ணுவார் பைலட்:)) ஆனா மீ ஞானியெல்லோ பயப்பிட மாட்டனே:)).. பிளேன் ஆடும்போது அஞ்சுவை விண்டோ சீட்டில் ஏத்திப் போவென் என ஸ்கொட்லாந்து மலைக்குகை மாதவனுக்கு:) நேர்த்தி வச்சிருக்கிறேன்:)) ஹா ஹா ஹா.
அனைத்துக்கும் மிக்க நன்றிகள் அம்முலு.
என்ன ஆச்சு அதிரா? [ தப்பு, கவரிமான் அதிரா என்று சொல்லியிருக்கணும்! ] திடீரென்று நீதிக்கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டு, ஞானியாகி விட்டீர்கள்?
ReplyDeleteபழைய புகழ் பெற்ற பாடலை கேட்க இனிமையாக இருந்தது!meditation செய்யும் பூனை சூப்பர்!
வாங்கோ மனோ அக்கா வாங்கோ..
Delete//என்ன ஆச்சு அதிரா? //
அது தானாக் கிடைக்குது பட்டங்கள் மனோ அக்கா:), நானா சூட்டுறேன் எனத் தப்பா நினைச்சிட்டீங்கபோல:))..
ஞானியாகிப் பலகாலம் ஆகுது மனோ அக்கா ஹா ஹா ஹா மிக்க நன்றிகள்..
கதைகள் இரண்டில் முதலாவது படித்தது. இரண்டாவது இப்போது தான் படிக்கிறேன். ஸ்வாரஸ்யமான கதைகள். பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteவிமானம் படம் - அசத்தல்.