| இதன் நிறை 2.6 கிலோ:) |
ஆனாலும் பாருங்கோ.. இதில அஞ்சு, கீரி, நான் எல்லாம் நல்ல அடக்கொடுக்கமாக:) எந்நேரமும் கிச்சினில் நின்று எல்லாம் சமைப்போம்ம்:).. ஆத்துக்காரருக்கு கஸ்டம் கொடுப்பதில்லை:), ஆனா எல்லோரும் அப்பூடியா?:))... ஹையோ கொஞ்சம் இருங்க.. அமெரிக்காவில, ஜேர்மனியில பாத்திரம் நொருங்கும் சத்தம் கேட்குதே ஜாமீ:))...
நில்லுங்க.. மடிரொப்:) ஐத் தூக்கிக் கொண்டு கட்டிலுக்குக் கீழ போய் சேஃப்ட்டியா இருந்து ரைப் பண்ணுறேன்ன்.. எங்கிட்டயேவா?:)).. சொல்ல வந்ததைச் சொல்லாமல் விடமாட்டமில்ல:))..
சொல்லிப் போட்டு அடி வாங்கினாலும் சரிதான்:).. இந்த இடத்தில உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகணும்... சின்னனாக இருக்கும்போது விடுமுறை காலத்தில ஊருக்குப் போவது வழமை. வருடத்தில 2 தடவைகள்தான் போகக் கிடைக்கும், அப்படிப் போனால் அம்மம்மா வீடுதான் நம் வீடு. அப்பம்மா வீட்டுக்குப் போய்ப்போய் வருவோம்.
அப்பா தினமும் பின்னேரம் போய், 8,9 மணிக்கு திரும்புவார், எல்லோரும் இடைக்கிடை போவோம் தங்கி வருவோம். ஆனா அப்பா போகும்போது நானும் தொத்திக்கொண்டு போய் விடுவேன்.
அங்கு மாமியின் மகள்மாரோடு தான் நாம் நல்ல ஒட்டு. அங்கு போனால் பொழுதுபோவதே தெரியாது. ஆனால் அங்கு தங்க நெடுகவும் வீட்டில விடமாட்டினம், அப்பாவோடு திரும்ப வந்திடோணும், இல்லையெனில் இங்கிருப்போர் ஏசுவினம்(சித்தி, மாமா), எங்களோடு நிற்க உனக்கு ஆசையில்லையா.. அங்கு போனால் நின்று விடுகிறாயே என. அப்போ இரு பகுதியையும் சமாளித்து நடப்போம்.
அப்படித்தான் ஒருதடவை மாமி வீட்டுக்குப் போனேன் அப்பாவோடு, எனக்குப் பத்து வயதிருக்கும்.. போகும்போதே அம்மாவின் கட்டளை, “அதிரா .. அப்பாவோடு திரும்பி வந்திடோணும்”... “சரி அம்மா”.
போயாச்சு, அங்கு இரவு 9 மணி, அப்போ அப்பா போக வெளிக்கிடுகிறார், மாமியின் பிள்ளைகள் கையைப் பிடிச்சு இழுக்கினம், அதிரா இன்று நில்லுங்கோ... அப்பா சொன்னார், “இல்லை ஆச்சி!! அம்மா பேசுவா, நீ வா நாளைக்கு நாம் திரும்ப வருவோம்.. வேணுமெண்டால் இன்னும் கொஞ்சம் இருந்திட்டுப் போவோம்”.
அந்நேரம் மாமியின் மகன் கொழும்பால் வந்து நிற்கிறார்.. வயதில் பெரியவர்.. அவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார் (நகைச்சுவையாகத்தான்)... இங்க பாருங்கோ அதிரா... உங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்கெனில், அது தப்பில்லை எனில், போனால் போகுதெனச் செய்யுங்கோ.. பின்பு வீட்டில அடிச்சாலும் அடியை வாங்குங்கோ.. ஒரு சந்தோசத்துக்காக, பின்பு அடி வாங்கினாலும் தப்பில்லைத்தானே.. என்றார்... எனக்கு உஷார் வந்திட்டுது:))... ஒரு காலைத்தூக்கி நிலத்திலே துள்:ளித் துள்ளிச் சொன்னேன்... அப்பா பிளீஸ் அப்பா.. அம்மாவுக்குச் சொல்லுங்கோ.. நான் நாளைக்கு வருகிறேனே என, எல்லோருமாக அப்பாவைச் சமாளிச்சு அனுப்பி விட்டோம்.
அன்றிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு நான் மாமியின் மகன் சொன்னதை மனதில் நினைச்சுக் கொள்வதுண்டு... அப்பூடித்தான் இப்பவும்.. சொல்ல வந்ததைச் சொல்லிட்டேன்:) இனி அமெரிக்காவில இருந்து எரிகுண்டு வந்தாலும் சமாளிச்சிடுவோம்:)).
இன்னொரு முக்கியமான கதை சொல்லோணும். பல பெண்களுக்கு தம் ஆத்துக்காரர் சமைச்சுத் தரோணும் என ஆசை இருக்கு. ஆனா என் ஆய்வின்படி:), இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலவும் தெரியுது.
எனக்கு ஒரு இந்திய - கேரள நண்பி இருக்கிறா, அவவின் ஆத்துக்காரரும் டாக்டர். ஆனா அந்த டாக்டர் சூப்பராச் சமைப்பாராம். ஆனால் அந்த நண்பிக்கு அது விருப்பமில்லை, அப்படியென்றுமில்லை, திருப்தியில்லை காரணம்.
அவ சொல்லுவா, அவர் சமைப்பாராம், ஆனால் சமைத்து முடியக் கிச்சினுக்குள் போனால் தனக்கு விசர் வராத குறையாம்.. ஒரே பொருட்கள் சிந்தி, எடுத்த பொருள் எடுத்த இடத்தில் இப்படி இருக்குமாம், அதை ஒழுங்குபண்ணுவதிலேயே தனக்கு போதுமென்றாகிடுமாம், இதைவிட தான் சமைப்பது பெட்டர் என்பா. அத்தோடு அவருக்கு சமையல் தெரிந்தமையால், சில உணவுகள் இவ சமைப்பது அவருக்குப் பிடிக்காதாம், தான் தான் சமைக்கோணும் என்பாராம்.... இப்படிக் குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்.
அப்போ எனக்கு சொன்னா, “அதிரா என்னைப்பொறுத்து ஆண்கள் சமைக்காமல் இருப்பதுதான் பெட்டர்”:) என்றா:)).
விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:), உடனே நான் மாத்தி ஓசிச்சேன்:)... “தொட்டில் பழக்கம் உடுகாடு:) வரை” என்பினமெல்லோ.. அப்போ பழக்கும்போதே கரீக்டாப் பழக்கிட்டால் போச்சு:)....
சரி இப்ப அதுவோ முக்கியம், மேலே இருக்கும் கபேஜ்(கோவா) ஐப் பாருங்கோ... ஒரு கிழமைக்கு முன்பு சுப்பமார்கட் போனபோது, கொண்டு வந்து கொட்டியிருந்தார்கள், ஒவ்வொன்றும்.. 2.5, 2.6 கிலோ எடை, விலை என்ன தெரியுமோ, ஒன்று மட்டும்(each) 49 சென்ஸுகள். அதாவது பாதிப் பவுண்ட்டுகள். எனக்கு மனம் கேட்கவேயில்லை.. எதுக்கு எதுக்கு எனச் சொல்லச் சொல்ல:) ரெண்டைத்தூக்கி:) ட்ரொலியிலே வைத்து, காரில் ஏத்தி, வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திட்டேன்:)... எங்கிட்டயேவா?:).. பத்துறாத்தல் கபேஜை எப்பூடிச் சாப்பிட்டு முடிப்பது சொல்லுங்கோ...
எனக்குச் சின்னனிலிருந்தே கபேஜ் பைத்தியம் இருக்கு. நம் வீட்டு ஃபிரிஜ்ஜில் கபேஜ் இல்லாமல் இருப்பின் அது வாழ்க்கையில் பெரிய அதிசயமே... நம்புவீங்களோ தெரியாது.. இப்பகூட ..இந்த கபேஜ், கோவாஇலை அதாவது கபேஜ் லீவ்ஸ், அடுத்து முட்டைக்கோவா எனப்படும், கல்லாக இருக்கும் உருண்டைக் கபேஜ்... இத்தனோடு பேஷில் ஸ்பிரவுட்ஸ் எனப்படும்.. குட்டிக் குட்டிக் கபேஜ்.. இவ்வளவும் இருக்கு?:))...
டெய்லி.. சுண்டல், பருப்புப் போட்டுக் கறி, குஸ்குஸ் உடன் பிரட்டுவது... இப்படிச் செய்தும், ஒரு கிலோத்தான் செலவாகியிருக்கும் மீதி இருக்கு. அப்போ ரீவியில் ஒரு சமையல் குறிப்பு பார்த்தேன், கபேஜை மெல்லிதாக அரிந்து, கொஞ்சம் வெங்காயம், பச்சைமிளகாய் அரிந்து சேர்த்து, உப்பும் மிளகாய்த்தூளும் சேர்த்து, கடலை மாக் கொஞ்சம் போட்டுப் பிரட்டி, உருண்டைகளாக்கி பொரித்தெடுத்தினம்.
அப்படிச் செய்ய ஓசிச்சேன், கடலை மா வாங்க மறந்துட்டேன். நேற்று ஆசியா வீட்டுப் பக்கம் போனபோது...பார்த்தேன் மைதாவில் குறிப்பு... ஆஆ.. விடுவனோ நான்... நைட் செய்தேன்ன்.. குட்டி எலிகளுக்குப் பிடிக்காதோ எனப் பயந்தேன்... சுட்டு முடியமுன் எல்லாமே காலி.. கோவாவும் பாதி முடிஞ்சுது:).
நான் செய்தது மேலே சொல்லியிருக்கும் ரீ வீ யில் காட்டிய முறை, ஆனா சேர்த்தது மைதா மா.
CABBAGE ROTTI
தேவையானவை:மைதா/கோதுமை மா -: 250 கிராம்
கபேஜ்/கோஸ் -:200 கிராம்
வெங்காயம் ஒன்று.
பச்சைமிளகாய்... விருப்பப்படி.. 3/4.
உப்பு ஒரு தேக்கரண்டி(tea spoon)
| இப்பெல்லாம், கைரேகை பார்க்கினமாம்:) அதுதான் நாங்க ரொம்ப விபரமில்ல:) கிளவுஸ் போட்டிட்டோம்:) |
அனைத்தையும் குட்டியாக அரிந்தெடுத்து, மாவுடன் சேர்த்து உப்பும் சேர்த்து, மெல்லிய சுடுநீரில்... ரொட்டிப்பதமாகக் குழைத்து, எண்ணெயை சூடாக்கி, குட்டிக் குட்டி தட்டை வட்டமாக தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். எப்பவும் நெருப்பை குறைவாக வைத்து பொரிக்கவும்.
எண்ணெய் பெரிதாக செலவாகவில்லை, அதனால் அடிக்கடி செய்யலாம் என ஓசிச்சிருக்கிறேன்:).. இங்கின ஆருக்கும் கோவா வேணுமா?:) றாத்தல் 12 பவுண்டுகள்:).. காசை இப்பவே என் எக்கவுண்டில போடுங்கோ..:).... ஆஆ.. ஓடதீங்கோ.. ஒழுங்கா மொய் எழுதுங்கோ பிளீஸ்ஸ் பொறகு பூஸ் குத்தமாகிடப்போகுதூஊஊ:) ஐ மீன் தெய்வக் குற்றம்:).
நிறையக் குறிப்பு போட வெளிக்கிட்டு, பாருங்கோ கதை சொன்னதிலேயே பெரிசாகிடுத்து, அதனால இத்தோடு நிறுத்திடுறேன்:).
ஊசி இணைப்பு:)..
இலை உதிர் காலம் ஆரம்பமாகிட்டுதெல்லோ.. சாலைகளின் அழகோ சொல்ல முடியாது கொள்ளை அயகு:)..
====================================================
“மழைக்கால இருட்டானாலும், மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்”
என் குரு சொல்லித்தந்தவர்:).
====================================================
|
|
Tweet |
|
|||






