நல்வரவு_()_


Sunday 28 March 2010

இமாவுக்குப் பரிசு!!! அதிராவுக்கு அவார்ட்டு!!!

இது எனக்கு முதல்முதலாக கிடைத்திருக்கிறது.. குரங்கின் கை பூமாலையாகிடக்கூடாதே என பத்திரமாக இங்கே போடுகிறேன்... இதன் ஆதி அந்தம் பற்றியகதையேதும் எனக்குத் தெரியாது, கும்பலிலே கோவிந்தாவாக நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்... இதை எதற்காக எனக்கு தந்திருக்கினம் எனவும் யாரும் சொல்லவில்லை(என்னிடம் அப்படி என்னதான் உள்ளது? அவார்ட்டு வாங்க???).




இதை எனக்கு அன்பாக அளித்தவர்கள்.... ஆசியா, செல்வியக்கா, ஜலீலாக்கா.. அனைவருக்கும் மிக்க நன்றி.

இதை நான் சந்துவாகிய சந்தனாக்கு கொடுக்கிறேன். மற்றவர்கள் எல்லோரும் பெற்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது இமாவுக்கு அதிராவின் அன்புப் பரிசு:




இது என்னவென யோசிக்கிறீங்களோ? இதுதான் ஊறுகாய். போன செப்ரெம்பர் மாதம் அரட்டையில் நடந்த உரையாடலில் என்னை “ஊறுகாய்” க்கு ஒப்பிட்டார் இமா. உடனேயே கடைக்கு ஓடிப்போய் பத்து தேசிக்காயும் உப்பும் வாங்கினேன். (திகதி 04-10-2009).


தேசிக்கய்களை 4/5/6 ஆகக் கீறி(பிளந்து) உள்ளே, முட்ட உப்பை நிரப்பினேன்.(திகதி 04-10-2009).



பின்னர் ஒரு போத்தலில் போட்டு மூடிவைத்தேன். இடைக்கிடை வெயிலில் காய வைத்தேன்.(திகதி 04-10-2009).


அப்படியே விட்டேன். கிட்டத்தட்ட நாலரை மாதங்களின் பின்பு, தேசிக்காய் எல்லாம் நன்கு உப்பிலே ஊறி, உக்கி இப்படி ஆனது (திகதி 24-03-2010).




வெந்தயம், மஞ்சள், செத்தல்மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து வறுத்து பவுடராக்கி, ஒரு பாத்திரத்தில் ஏழு தேசிக்காய்களைப் பிளிந்து, இப்பவுடரை அதில் கரைத்தெடுத்தேன்(திகதி 24-03-2010).


பின்னர் அதனுள் அவ் ஊறிய தேசிக்காய்களைக்கொட்டி நன்கு பிரட்டினேன். (திகதி 24-03-2010).



மீண்டும் அதே போத்தலில் போட்டு மூடிவிட்டேன். இது இப்போ ஊறுகாயாகிவிட்டது... இனி உணவுக்கு பயன்படுத்தலாம்..... இதுதான் யாழ்ப்பாணத்து முறையில் தயாரிக்கப்படும் ஊறுகாய்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது போனவருடமே செய்யத் தொடங்கிவிட்டமையால், கைவிட மனம் வரவில்லை. இமாவுக்கே அதனைப் பரிசளிப்போம் என எண்ணியே மிகுதியைப் படமெடுத்தேன். இது சமையல் குறிப்பல்ல, இமாவுக்கு பரிசு என்பதால் அளவுகள் நான் குறிப்பிடவில்லை, இது ”அங்கு” போடுவதற்காக, ஸ்டெப் பை ஸ்டெப்பாக நான் செய்த கடைசிக் குறிப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மக்கள்ஸ்ஸ்ஸ்.. அதிராஆஆ ஊறுகாயோ????
வோட் பண்ணுங்கோ....


ஆ..... இதென்ன இது??? பப்பி, பூஸ், இலாக்கா மூவரும் வோட் பண்ணியிருக்கிறார்களே.. இது என்ன கொடுமை??? இது அன்பு இலா... எனக்கு அனுப்பிய அன்பு “வோட்” Three in one kik...kik...kik...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புத் தம்பி ஜீனோ, கொசு மெயிலில் அனுப்பியது அன்பு அக்காவுக்கு... அதுக்கு கப்ஷனும் கொடுத்திருக்கிறார்....


“காலை எழுந்ததும்,சுத்த பத்தமாய்ப் பல் விளக்கும் பூஸார்”


“கார்ன் ப்ளேக்ஸ் டாப்பாவினுள்ளே பூந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிடும் பூஸார்”

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாரது அதிராவை ஊறுகாய் எனச் சொன்னது.... பூஸார் தேடிக்கொண்டிருக்கிறார்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காதுவிட்டால், விழிக்க முடியுமா விதை?”
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

32 comments :

  1. அதிரா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச் ஊறுகாய் நாக்கு ஊறுது, இபப் தான் ஊரிலிருந்து மாமியார் நார்த்தங்காய் உப்பு ஊறுகாய் கொண்டுவந்தாங்க.

    அவார்டு உங்கள் அருமையான கல்க்கலான பதிவுகளுக்கும் இனி கலக்க பொகும் பதிவுகளுக்கும். கொடுத்தது.


    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.??/??/

    ReplyDelete
  2. பூஸார் பிரெஷ் பண்ணும் அழகு சூப்பர்

    ReplyDelete
  3. ஊறுகாய் எச்சில் ஊறுது அதிரா...

    விருதுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. ஊறுகாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் ஊறுது.ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா
    பிரம்மாதம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.( அதுக்கு இப்படியா ஜொல்லு விடறது யாரு நாந்தான்.. )

    ReplyDelete
  5. நானும் அவார்டு கொடுத்தேன். அதென்ன இமாவுக்கு மட்டும் ஊறுகாய்?;-(
    டூஊஊஊஊஊஊஊஊ

    ReplyDelete
  6. அதிரா ,முதல் விருதுக்கு வாழ்த்துக்கள்.மேலும் பற்பல விருதுகள் வாங்கி சிறக்க அக்காவின் ஆசிகள்.

    ஏம்ப்பா அதிரா,திகதி 24-03-2010 வரை செய்த ஊறுகாய் ஸாதிகா அக்காவின் ரெஸிப்பி தானே???நானும் இதே முறையை உப்பு எலுமிச்சை என்று போட்டுள்ளேன்.அதைப்பார்த்துத்தான் செய்தீர்களோ என்று பார்த்தேன்.(இந்த‌ உப்பு எலுமிச்சை சிலோன் அம்மிணிகிட்டே இருந்துதான் கற்றுக்கொண்டது)

    அப்புறம் 10 தேசிக்காய் வாங்கினேன் என்று 12 தேசிக்காய்கள் படத்தில் உள்ளதே?கடைக்காரரிடம் 10 காசு கொடுத்து வாங்கி விட்டு 2 கொசுறாக வாங்கி விட்டீர்களோ?

    ReplyDelete
  7. அதிராக்கா,அவார்ட்டு (அவார்டு அல்லவோ,அவார்ட்டோ??!!!)பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ஜீனோக்கும் அவார்ட்டு குடுத்திருக்காங்கள்.இந்த சன்ப்ளவர் போட்டோ போட்டு ஜீனோஸ் கொர்னர் காட் அவார்ட்டு எண்டு சொன்னால் போதுமோ அதிராக்கா? ஜீனோக்கு தலையும் புரியலை..வாலும் புரியலை..அதனால,செல்வி ஆன்ரீக்கு டாங்க்ஸ் சொல்லிட்டு அமைதியா இருக்கார்.

    //இமாவுக்கு பரிசு!!! அதிராவுக்கு அவார்ட்டு!!! // ஜீனோக்கும் இனிப்பாய் ஏதாச்சும் தாங்கோ அதிராக்கா.. (இலாக்கா செஞ்ச மைசூர்பாக் மாதிரி,ஹி,ஹி!!)


    //Three in one kik...kik...kik...// kik..kik..kik...:D :D::D

    ReplyDelete
  8. ஜலீலாக்கா மிக்க நன்றி. ஓ.... ஜலீலாக்கா கடந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் அவார்ட்டு கொடுத்திருக்கிறீங்க.... ஓக்கை. .மிக்க நன்றி.

    மேனகா, என்னை மறக்காமல் வந்து வாழ்த்தியிருக்கிறீங்க மிக்க நன்றி.

    ReplyDelete
  9. அதுக்கு இப்படியா ஜொல்லு விடறது//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    யாரு நாந்தான்.. )/// ஓ உங்களைச் சொன்னீங்களோ... இதை முதல்லயே சொல்லியிருக்கலாமெல்லோ?:), ஓக்கை அப்போ வாபஸ்... நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    மிக்க நன்றி ஜெய்..லானி.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


    நானும் அவார்டு கொடுத்தேன். அதென்ன இமாவுக்கு மட்டும் ஊறுகாய்?;-(
    டூஊஊஊஊஊஊஊஊ/// செல்வியக்கா... ஆதியையும் அந்தத்தையும் மட்டும் படித்திட்டு குய்யோ முறையோ எனத் துள்ளப்படாதூஊஊஊஊஊஊஊ.... அதிராவோடு டூஊஊஊஊஊஉ போட்ட உங்களை, பி.புரம் நீ.மன்றத்துக்கு வரும்படி “மேன்மைதங்கிய” நீதிபதி கட்டளையிடுகிறார்....
    பி.கு:
    நீதிபதி = அதிரா:).
    வந்து சங்கிலியைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. ஸாதிகா அக்கா வாங்கோ. என் எதிர்க்கட்சி சட்டத்தரணியை இன்னும் காணவில்லையே என யோசித்தேன்... குறுக்க பேசப்படாது, கனக்க கதைத்தால் அடுத்த “பிடித்த பத்து பின்னூட்டத்தில” இதையும் இணைத்திடுவேன்:) சாக்கிரதை.... பிறகு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அக்கா அழறேன் எனச் சொல்லப்படாது:).

    ஆகா... அதிரா ஆறுமாதமாக முக்கி முக்கி ஊற வைத்த ஊறுகாயை, டக்குப் பக்கென ஒருநாளில் செய்துபோட்டு....சரி சரி நான் ஒண்ணுமே சொல்லல்லே....:).

    கீக்...கீக்...கீஈஈஈஈஈஈ அது ரெண்டு தேசிக்காய் பிளாக்கில வாங்கினதூஊஊஊ... இது போலிசு, ஆமி, நேவி, அதிரடிப்படை, பப்பி (போலிஸ் டோக்கைச் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்) எல்லாரும் உலாவுற இடமென்பதால நான் ஒளிச்சுட்டேன்.... இப்படிக் காட்டிக்கொடுத்தீட்டீங்களே...:) இப்படிச் சிரிக்க வச்சிட்டீங்களே. மிக்க நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  11. ஜீனோ... இதுக்க்குத்தான் நான் இலங்கைத் தமிழையே யூஸ் பண்ணுறது. உண்மையில் நான், என் எழுத்துப்படி எழுதினால் அது “அவோட்” எனத்தான் எழுதுவேன். இது தமிழ்நாட்டுத் தமிழில் கலக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டேன்ன்ன்:).

    இந்த சன்ப்ளவர் போட்டோ போட்டு ஜீனோஸ் கொர்னர் காட் அவார்ட்டு எண்டு சொன்னால் போதுமோ அதிராக்கா?/// கிக் கிக்... அவ்ளோ சிம்பிள் இல்லை... ஜீனோ கையில அவார்டைத் தூக்கிக்கொண்டு ரெண்டு கால்ல(கவனிக்கவும் சைட் போஸ்:)) எழும்பி நிற்கிறமாதிரி படம் போட்டு... கீழ டாங்ஸ் என்றும் சொல்லோணும் ஓக்கை....:). கெதியாப் போடுங்கோ ஜீனோ... நான் அவோட்டைச் சொன்னேன்:).

    ஜீனோக்கு தலையும் புரியலை..வாலும் புரியலை..///முன்னால தடவினால் - தலை... பின்னால தடவினால் - வால்... இதுகூடவா இன்னும் தெரியேல்லை:):)...பப்பி ஷேம்...

    ஜீனோ!!! நான் எனக்குப் பிடித்ததைத்தான் மற்றாக்களுக்கும் குடுக்கிறனான், இட்ஸ் ஓக்கை... ஜீனோக்காக... தாறன்... திங் பண்ணி...

    மிக்க நன்றி ஜீனோ.

    ReplyDelete
  12. ;)))))))))))) - ithu inku irukkum comments & for Athee's pathilakal. ;)

    paaraattukal athiraa.

    oorukaay supper. tkz. ;) I would like to share this with Selvi. Selvimaa.... vaanko.

    ReplyDelete
  13. Puppy veettu corn flakes petty... athatkul enna ethirpaarkkiraar kitty!!

    Cute kitties Geno. ;)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அதிரா! எனக்கும் ஊறுகாய் வேணும் இல்லேன்னா அழுவேன் :(--------

    ReplyDelete
  15. இமா.... நல்லாருக்கு என்பதெல்லாம் இருக்கட்டும்:). முதல்ல அதிராவை ஏன் ஊறுகாய் எனச் சொன்னனீங்கள்? இதுக்கு எனக்குப் பதில் தெரிஞ்சாகோணும்.. படம் போட்டுவிட்டுக் கேட்போம் என்றுதான் இருந்தனான்..

    இமா ஒண்டில் தழில் எழுதோணும் இல்லாட்டில் ஆங்கிலத்தில் எழுதோணும்.... ஒரு ஆசிரியரே இப்படிக் குழப்பினால்.... மாணவரின் நிலை என்னாவது? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ஆங்கிலத்தைத் தமிழில வாசிச்ச இடத்தில எனக்கு பல்லில நாக்குக் கொழுவி வெட்டுப்பட்டுப்போச்சு, அதுக்குக் காரணமாக இருந்த இமாவை உடனடியாக பி.நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ”மேன்மைதங்கிய ஜனாதிபதி” அழைப்பு விடுகிறார்.....

    Puppy veettu corn flakes petty... athatkul enna ethirpaarkkiraar kitty!! /// பப்பி வீட்டு எலியைத் தேடுறார் இமா..

    ReplyDelete
  16. கவிசிவா, ஊறுகாய்தானே..உங்களுக்கில்லாததோ, இமாவுக்கு கொடுத்திட்டேன் இமா தருவா.. நீங்கள் குழல்புட்டோடு சாப்பிடுங்கோ... இமா பத்தில ஒன்று கவிசிவாக்கு கொடுங்கோ ஓக்கை?:).

    வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  17. அதிரா, ஊறுகாயா??? எனக்குப் பிடிக்காதே. முழுவதையும் இமாவுக்கே கொடுங்கோ. அந்த ஊறுகாய் சட்டியோடு இருக்கும் பூக்கள் என்னிடமும் இருக்கு. சட்டி கொள்ளை அழகு!!!
    //இதை எதற்காக எனக்கு தந்திருக்கினம் எனவும் யாரும் சொல்லவில்லை// எனக்கும் யாரும் சொல்லவில்லை.

    ReplyDelete
  18. உங்களுக்கு இது முதலே கிடைத்திருக்க வேணும் அதிரா.ஓக்கை லேட் ஆனாலும் லேட்டஸ்டா கிடைத்திருக்கு. அதற்கு ஜலீலாக்கா,செல்வியக்கா,ஆசியாவுக்கு நன்றிகள். சன்னைப்போல் இன்னும் சைன் ஆ பிரகாசிக்கோணும்.my wishes.

    ஊறுகாய் பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துவிட்டது. ஊரில வெயிலில் காயும் போதே அரைவாசியை காணக்கிடைக்காது. தோலின் ஒருவித கசப்பும்,உப்பும்,புளிப்பும் சேர்ந்து இருக்கேக்கை சூப்ப்ப்பராய் இருக்கும்.thanks.

    ReplyDelete
  19. அந்த ஊறுகாய் சட்டியோடு இருக்கும் பூக்கள் என்னிடமும் இருக்கு./// ஹீ...ஹீ...ஹீ.... அது நான், கனடா டொலராமாவில் வாங்கியது..

    சட்டி கொள்ளை அழகு!!!/// அது இங்குதான் வாங்கினேன், மண்ணால்தான் செய்யப்பட்டிருக்கு, இதிலிருப்பதைவிட நேரிலே இன்னும் அழகு, கோல்ட் ஆல்தான் பற்றன் போட்டிருக்கு படத்துக்கு தெரியவில்லை.

    எனக்கும் யாரும் சொல்லவில்லை./// கோவிந்தா கோ....விந்தாஆஆஆ... நானும் சொல்லாமலேதான் சந்துவிற்கு மகுடம் சூட்டியிருக்கிறேன்..கிக்..கிக்..கிக்.. நன்றி வாணி.

    ReplyDelete
  20. ஓக்கை லேட் ஆனாலும் லேட்டஸ்டா கிடைத்திருக்கு./// இப்ப எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்??:)), இதையேதான் இன்னும் எத்தனை நாளைக்குச் சொல்லிக்கொண்டிருப்பீங்க??? இதில என்ன லேட்டஸ் இருக்கு? ஐ மீன் அதிராவைவிட லேட்டஸ்சா????:):).. முறைக்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ஊரில வெயிலில் காயும் போதே அரைவாசியை காணக்கிடைக்காது/// அப்போ நீங்களும் என் கட்சிதான்:). கறிக்குப் போடுவதைவிட பழப்புளி நான் சாப்பிட்டு முடிப்பது அதிகம்.. புளிப்பில அப்படியொரு லவ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

    ///அதற்கு ஜலீலாக்கா,செல்வியக்கா,ஆசியாவுக்கு நன்றிகள். சன்னைப்போல் இன்னும் சைன் ஆ பிரகாசிக்கோணும்.my wishes/// அம்முலு எனக்காக நீங்க நன்றி சொல்லி, அதிராவின் குட்டி இதயத்தை தொட்டுவிட்டீங்கள்.. மிக்க மிக்க நன்றி...

    ReplyDelete
  21. அதிரா கலக்கிட்டிங்க. நம்ம வீட்டில் தயிர் சாதம் ஊறுகாய் இல்லன்னா சாப்பாடு சாப்பிட்டது போல் இருக்காது. இத பார்த்ததும் இன்னும் நாவில் நிற்கிறது.அதிராவின் லைம் பிக்கிள். (என்ன பிஸினஸ் லேபல் குடுத்தாச்சு) இங்கு சேல் டேட் வரை யூஸ் செய்யலாம் என்று எல்லா பொருட்களிலும் இருக்கும். ஸோ தைரியமா அதிரா லைம் பிக்கிள் ஹோம்மேட் நம்பர் ஒன். விற்றுபடும் எனக்கு மட்டும் பேட்டண்ட் குடுத்திடுங்க. ஒ.கே வா. உங்க எழுத்து நடையோட ஊறுகாய் ப்ரப்ரேஷன் + ப்ரசண்டேச்ஷன் டபுள் ஒ.கே.

    ReplyDelete
  22. நா ஊறுதே.. அதிராவின் ஊறுகாய்க்கு..

    நன்றி அதீஸ் உங்க அவார்”ட்”டை எனக்காக விட்டுத் தந்ததற்கு.. இதுக்கு மேல கொடுக்கறதுக்கு யாரும் இல்ல :)) சந்து பாவம்..

    இந்த ஜீனோவுக்கு மட்டும் நல்ல நல்ல படங்கள் எல்லாம் கிடைக்குது.. சுடற இடத்துல யிருந்து ஒரு நாள் யாராவது சண்டைக்கு வரப் போறாங்க :))

    ReplyDelete
  23. விஜி மிக்க நன்றி. அதிராவின்ர பிக்கிள் லைவ் லோங்... எக்ஸ்பயறி டேட் கிடையாது விஜி:):).

    இங்கு எமக்கு நல்ல ஊறுகாய் கிடைப்பதில்லை. ஏதோ எண்ணெயில் ஊறவிட்டதுபோல்தான் கிடைக்கிறது. இப்படிச் செய்து வைத்தால் விரத காலத்துக்கு கை கொடுக்கும்.

    ReplyDelete
  24. மிக்க நன்றி சந்து. நீங்க லக்கி, ஏன் தெரியுமோ? அவோட்டை நீங்களே வைத்திருக்கப்போறீங்கள்:).

    ஜீனோவும் லக்கிப்பப்பிதான், அதுதான் நல்ல நல்ல படங்களெல்லாம் கிடைக்குது:).

    ReplyDelete
  25. //1 April 2010 23:45
    athira said...
    சந்து மிக்க நன்றி. சந்தோஷப்படுங்கோ யாருக்கும் குடுக்காமல் நீங்களே அவஓட்டை வைத்திருக்கப்போவதை நினைத்து.

    ஜீனோ லக்கிப் பப்பிபோல, அதுதான் நல்ல நல்ல படங்களாகக் கிடைக்குது.

    1 April 2010 23:49
    athira said...
    மிக்க நன்றி சந்து. நீங்க லக்கி, ஏன் தெரியுமோ? அவோட்டை நீங்களே வைத்திருக்கப்போறீங்கள்:).

    ஜீனோவும் லக்கிப்பப்பிதான், அதுதான் நல்ல நல்ல படங்களெல்லாம் கிடைக்குது:).
    //

    ஒரே பதிலை நாலு நிமிஷ இடைவெளியில் ரெண்டு விதமாக எழுதியிருக்கீங்க அதீஸ்.. :))))))))))))

    ReplyDelete
  26. சந்து சுட்டிக்காட்டியபின்னரே நானும் பார்க்கிறேன். நேரடியாகவே ரைப் பண்ணி அனுப்பிவிடுவதால் நான் சேவ் பண்ணுவதில்லை, எனவே எரர் வந்தால் மீடும் ரைப்பண்ணி அனுப்புவேன், அப்படித்தான் இது நடந்திருக்கிறது. பின்னர் எல்லாவற்றையும் டிலீற் பண்ணிவிடுகிறேன் ஓக்கை?

    ReplyDelete
  27. நோப்...நோப்..//பின்னர் எல்லாவற்றையும் டிலீற் பண்ணிவிடுகிறேன் ஓக்கை?// முடியாத்..முடியாத்..முடியவே முடியாத்! ஜீனோ லக்கி பப்பி என்று ரெண்டுமுறை சொல்லிப்போட்டு மொத்தமாய் டிலீற் பண்ணுகிறேன் எண்டால் என்ன அர்த்தம்?? இதனை ஜீனோ வன்மையாகக் கடிக்கிறது,சொரி,கண்டிக்கிறது.grrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  28. //சுடற இடத்துல யிருந்து ஒரு நாள் யாராவது சண்டைக்கு வரப் போறாங்க :))// நிறைவேறாத ஆசை சந்து..ஜீனோ சுடுவதெல்லாம் தனது ஒலிம்பஸ் கமராவிலே..அதுவும் ஒரு நேக்காகச் சுடவேணும்..(மீன்ஸ் ஆங்கில்,ஓக்கை?)

    ஏலுமெண்டல் சொல்லுங்கோ..உங்கள்க்கு ஜீனோ டிப்ஸ் தருவர்..ஆனால்,சார்ஜ் முன்னமே ஜீனோக்கு அனுப்பிடணும்..டீல் ஆர் நோ டீல்? :)))))

    ReplyDelete
  29. அதிரா,
    //அவஓட்டை வைத்திருக்கப்போவதை//
    பேசாமல் சந்துக்கு விருது என்று எழுதுங்கோ. திருவோடு என்றே என் வாயில் திரும்ப திரும்ப வருது. பாவம் சந்து.....

    ReplyDelete
  30. தம்பி ஜீனோத் தம்பி... கடிச்சிடாதீங்கோ... என்னால ஊசியெல்லாம்போடமுடியாது:), எனக்கு ஊசியெண்டாலே பயம்.

    நான் சொல்லாவிட்டாலும் நீங்கள் லக்கிப்பப்பிதானே... டோரா கிடைச்சிருக்கிறா உங்களுக்கு... அதையும் தாண்டி... அதையும் தாண்டி.. அன்பு அதிராக்கா உடன்பிறப்பாகக் கிடைத்திருக்கிறாவெல்லோ.... அப்போ நீங்க லக்கியேதான்... முறைக்கவாணாம் கர்ர்ர்ர்ர்ர்.

    ஜீனோ சுடுவதெல்லாம் தனது ஒலிம்பஸ் கமராவிலே..அதுவும் ஒரு நேக்காகச் சுடவேணும்/// ஜீனோ!! நீங்கள் படமெடுக்கும் அழகை, ஒருக்கால் டோராவைக்கொண்டு படமெடுத்து எங்களுக்குக் காட்டுங்கோவன்.

    .........................

    வாணி.. சந்துவைப்பார்த்து திருவோடு என்றெல்லாம் சொல்லப்படாது பாவம் சந்து... சந்துஊஊஊஊஊஊ நீங்க வாங்கோ.. நான் வாணியைக் கவனிக்கிறேன்.(வாணி.. இதுக்கெல்லாம் கர் கூடாது... சும்மா சந்துவுக்கு டிஸ்கி.....கிக்..கிக்...)

    உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..... சரியா எழுதினால் பாராட்டுகிறார்களோ இல்லையோ தவறெனில் உயிரெடுத்துவிடுகிறார்களே.... தப்புவதுக்குள் போதுமென்றாகிவிடுகிறதே.... பப்பிகூட நான்கு காலில கதைக்க வருகிறதே... நான் டிலீற் பண்ணல்லே எனச் சொல்ல வந்தேன் ஜீனோஒ....

    ReplyDelete
  31. ஆ... யூஜின், ஊறுகாயை வந்து பார்த்திட்டுப்போறீங்க, எடுத்துப்போகவில்லைத்தானே?:).

    மிக்க நன்றி யூஜின்.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.