நல்வரவு_()_


Sunday 13 March 2011

பூஸ் "ஆர் ஏ டீ ஐயோ....."

என்ன தலைப்பைப் பார்த்ததும் தலை சுத்துதோ?:) அதுதான் ரேடியோவிற்கு ஸ்பெலிங்...(RADIO).. சின்ன வயதில் இப்பூடித்தான் பாடமாக்கினேன்:).


பூஸ் ரேடியோ.... இது பூஸ் வானொலி நிலையம், 24 மணிநேர சேவை, நேரடி ஒலிபரப்பு...

ஒரு தலைப்பு போட நினைக்க இன்னொன்று இடையில் வந்துவிடுகிறது... சரி இதைப் போட்டுவிட்டு, அதைப்போடலாமே என ஆரம்பிக்கிறேன்.


இன்று அதிகாலை 5 மணிபோல ஒரு ஃபோன் வந்து தட்டி எழுப்பியது.. கண்விழித்துவிட்டேன்.. பின் நித்திரை வரவில்லை,  அடுத்தவரை டிஷ்ரேப்புப் பண்ணக்கூடாதே அதனால், ரேடியோ கேட்டுக்கொண்டு
படுக்கலாமே என, ஐ போனுக்கு இயர்போனைப்போட்டுக் காதில போட்டபடி படுத்திருந்தேன்.....



ரேடியோவிலே, கீழே நான் சொல்லியுள்ளவை ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாகப் போனது, மனதில் போட்டுக்கொண்டு, என் பாஷையில் எழுதியிருக்கிறேன், நிறையச் சொன்னார்கள் ஆனால் அனைத்தையும் பதிக்க முடியவில்லை. 

இரு எறும்புகள் ஒரு ஸ்கூட்டரிலே போய் ஒரு பெண்டிலே திரும்பியது, அங்கு ஒரு யானை போய்க்கொண்டிருந்ததாம், யானையிலே மோதப்பார்த்து, எறும்புகள் காலை ஊன்றி பிரேக் பிடித்துவிட்டு, யானையைப் பார்த்துத் திட்டியதாம் “நீ சாவதற்கு என் ஸ்கூட்டரோ கிடைத்தது” என, எறும்பு யானையில் மோதினால் யானையோ சாகும்? எறும்புக்கு அப்படி ஒரு நினைப்பு:). என்ன கொடுமை இது?:)).

=========================================================

ஒரு கல்லூரியிலே படிப்பித்துக்கொண்டிருந்த பிரம்மச்சாரியான(யாருமற்ற) ஆசிரியர் காலமாகிவிட்டாராம். உடனே பொதுமக்கள் அக்கல்லூரி மாணவர்களிடம் கேட்டார்கள் “அடக்கம் செய்ய 4000 ரூபா தேவை,  பணம் திரட்டித் தர முடியுமா?” என்று. அதற்கு மாணவர்கள் அவசராவசரமாக 12,000 ரூபா பணம் திரட்டிக் கொடுத்தார்கள்.

மக்கள் சொன்னார்கள் “4000 ரூபா தானே தேவை, எதுக்கு மும்மடங்காக தருகிறீர்கள்” என்று. மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..


==========================================================
மன்னிக்கவும் அலைவரிசையில் சிறு குழப்பம்:)... சற்று நேரத்தில் தொடரும்..

அது வேறொன்றுமில்லை, தம்பிக்கு நகைச்சுவை பிடிக்கும்,
அதுதான் ஆ.கோ றினால் ரேடியோவின் மேலே ஏறிவிட்டார்.....:)

தடங்கலுக்கு வருந்துகிறோம்...:)
==========================================================

நாசாவிலிருந்து சில விண்வெளி ஆராட்சியாளர்கள் விண்வெளிக்குப் போயிருந்தார்கள், அங்கு போனதும் பேனையை எடுத்தார்கள் எழுத, ஆனால் அவர்களால் எழுத முடியவில்லை, அங்கு புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால், பேனையின் இங்(ink) பேனை முனைக்கு வரவில்லை. அதனை நாசாவுக்கு அறிவித்தார்கள்.

இதைக் கேட்டதும் நாசாவில் சொன்னார்கள், முதலில் இதற்கொரு வழியைக் கண்டுபிடித்த பின்பே, ஆராட்சியைத் தொடர்வோம் என. அதன்படி பத்துவருடங்களாக குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, 1 1/2 கோடி டொலர்கள் செலவுபண்ணி கண்டுபிடித்தார்களாம்.

இதைக் கேட்ட பிரித்தானிய:)  நாட்டவர் கேட்டாராம்.. “அப்போ ரஷ்யாக் காரர், அப்போதே எல்லாம் எழுதி அனுப்பினார்களே விண்வெளியிலிருந்து, அது எப்பூடி?” என. அதுக்கு நாசா விஞ்ஞானி சொன்ன பதில்... “ரஷ்யாக்காரர் பென்சிலை உபயோகித்தார்கள்”. இதில் முடிவு என்னவென்றால்..... எதிலும் எளிமையாக இருக்கப் பழக வேண்டும்:).

==========================================================

ஒரு ஊரிலே ஒரு பெண் இருந்தவாம், அவ எப்பவுமே அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்விப்பதே தன் தொழிலாகக் கொண்டிருந்தா. அவவிடம் ஒருநாள் ஒரு தேவதை வந்ததாம்.

அது சொன்னதாம் “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கு, அதில் அடுத்தவருக்கு சேவை செய்து அடுத்தவர்களை மகிழ்விப்போரின் பெயரெல்லாம் இருக்கும், பார்க்கலாம் உன் பெயரிருக்கா என”, சொல்லியபடியே புத்தகத்தில் தேடியதாம், அதில் அப்பெண்ணின் பெயர் இல்லை. அதற்கு அப்பெண் சொன்னாவாம், பறவாயில்லை, பெயரில்லாவிட்டால் என்ன, அடுத்தவருக்கு சேவை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியே என்று.

தேவதை மீண்டும் இன்னொரு புத்தகத்தைக் காட்டிச் சொன்னதாம், இது கடவுளின் புத்தகம், இதில் கடவுளுக்கு யாரை பிடித்திருக்கோ அவர்களின் பெயர்கள் இருக்கும், இதில் உன் பெயர் இருக்கா பார்ப்போம் எனக்கூறிக் கொண்டே புத்தகத்தைத் திறந்ததாம், முதலாவதாக அப்பெண்ணின் பெயர் இருந்ததாம். இதில முடிவு என்னெண்ணா.... நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம்.
========================================================

இத்தனை நேரமும் மிகவும் பொறுமையாக, அடக்கமாக இருந்து கேட்டு ரசித்தமைக்கு மியாவும் நன்றி.... இத்துடன் இன்றைய நிகழ்ச்சி நிறைவடைகிறது, மீண்டும் நாளை காலை வழமைபோல் தொடரும்.. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்... உங்கள் அன்பு அறிவிப்பாளர்.. மியாவ் பூஸ்:)


=========================================================
ஃபோன் இணைப்பு:

I remember the time, I was kidnapped and they sent a piece of my finger to my father. He said he wanted more proof.
=======================================================

பின் ஊசி இணைப்பு:


ஹா..ஹா....ஹா... கஸ்டப்பட்டுப் படிச்சு எக்ஸாம் எழுதினது..(தெரியும்தானே ஆரென?? பீஈஈஈஈகொக்:))..., ஆனா தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்...(உதென்ன தொப்பி என ஆரும் கேட்டிடப்பூடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

=======================================================
இது எங்கட சொந்த பந்தம்தான்...  “அங்கின” (ஆசனம் செய்வோர் பக்கம்:))
படத்தில இருந்தவங்களும் இவிங்களும் சொந்தபந்தம்தானாம்.....


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


58 comments :

  1. வடை வாங்கி ரெம்ப நாளாச்சு அதிரா.. பசி வேற.. அதான் கண்டதும் ஓடியாந்துட்டேன்..

    ReplyDelete
  2. //மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..//

    ஆஹா.. இப்படிஎல்லோ மாணவன் வேண்டும்..

    பாட்டிலே குட்டி ஸ்ரீதேவி கண்டேன்.. படம் நினைவில்ல.. நல்ல பாடல்.

    ReplyDelete
  3. ஆ... சந்து இங்க அந்த "மலிஞ்ச வடை" எல்லாம் குடுப்பதில்லை நாங்கள்.... சுடச்சுட மட்டின் பிரியாணி.. அ.கோ முட்டையோடு எடுத்துக்கொள்ளுங்க...

    அது லக்‌ஷ்மி என நினைக்கிறேன்.

    ஓம், நான் எழுதியதைவிட ரேடியோவில் கேட்டபோது அதிகம் நகைச்சுவையாக இருந்தது. மிக்க நன்றி சந்து வரவுக்கு.

    ReplyDelete
  4. //இங்க அந்த "மலிஞ்ச வடை" எல்லாம் குடுப்பதில்லை// இப்படியா வடையை கெவலப்படுத்துவது பூஸாரே?

    ReplyDelete
  5. தலைப்பை பார்த்து எத்தனை பேர் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்திருப்பார்களோ?

    ReplyDelete
  6. ha ha ha... rocking funny... i read the heading and thought .. hmm what could that be..

    thariyila ulunthu urungu urundu sirikkiren

    ReplyDelete
  7. ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா வாங்கோ.... இங்க எங்களிடத்தில ”மலிஞ்ச” வடைகூட வாங்கமுடியாது... :):)...

    தலைப்பைப் பார்க்கும்போதெல்லாம் நானே ஒருக்கால் திடுக்கிட்டுத்தான்... பிறகு, ஓஒ இது என்ர தலைப்பு என நிதானத்துக்கு வாறன்:)... எல்லோரும் மயங்கவில்லை கறண்ட் கம்பியில கை வச்சதுபோல ஷொக்ட் ஆகிட்டாங்கபோல:)).

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  8. ஆ.. இல்ஸ்ஸ் வாங்க , பார்த்தீங்களோ தலைப்பைப் பார்த்ததும் ஆராலும் கண்டுபிடிக்க முடியாது சோ... உள்ளே வந்துதான் ஆகணும்:)).

    இல்ஸ் எக்ஸாம் நேரத்திலபோய் தரையில விழுந்திட்டீங்களே.... அடிகிடி படேல்லையோ?... ஏதும் காயம் எண்டால் சொல்லுங்கோ... எங்கட “ஆசன வைத்தியரிடம்” மருந்து வாங்கலாம்... என்ன ஒரு ரூபா தான் செலவு:)).

    மியாவும் நன்றி இல்ஸ்ஸ்.

    ReplyDelete
  9. இன்று அதிகாலை 5 மணிபோல ஒரு ஃபோன் வந்து தட்டி எழுப்பியது.. கண்விழித்துவிட்டேன்.. பின் நித்திரை வரவில்லை, அடுத்தவரை டிஷ்ரேப்புப் பண்ணக்கூடாதே///
    அதிராவை நடுச்சாமம் 5 மணிக்கு எழுப்பிவிட்டவர்கள் யாருப்பா???

    நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம். //
    நிசமாலுமா???

    நாசாவை இப்படி அவமானப்படுத்தக் கூடாது ஓக்கை.

    funny jokes!

    From now on turn the ringer off and go to bed..please. Me escappuuuuu..

    ReplyDelete
  10. ஆஹா தலைப்பே சூப்பர்ர்....

    ReplyDelete
  11. வாங்க வான்ஸ்ஸ்...

    //அதிராவை நடுச்சாமம் 5 மணிக்கு எழுப்பிவிட்டவர்கள் யாருப்பா???
    /// அதுதானே வடிவாக் கேழுங்க வான்ஸ்... எழுப்பினாக்கூட பறவாயில்லை... ஒரு பத்து நிமிடம் கதைத்திருக்க வாணாம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    //நிசமாலுமா???
    // உஸ் மெதுவா... கடவுளுக்குக் கேட்டிடப்போகுதூஊஊஊ:))).

    //நாசாவை இப்படி அவமானப்படுத்தக் கூடாது ஓக்கை/// எந்த நாஆஆஆசரைச் சொல்லுறீங்க... அவர்தான் இப்போ இல்லையே..

    //From now on turn the ringer off and go to bed..please// நீங்க வேற... பற்றரியைக் கழட்டி பெட்டுக்கு(கட்டில்ல்ல்ல்) கீழ போட்டுட்டுத்தானே படுத்தேன்.... அப்பயும்ம்ம்ம்ம் ரிங் பண்ணிச்சே அவ்வ்வ்வ்... பவர் கூட... ஐ மீன் வாணாம் ஒண்ணுமில்லை.

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ். பத்திரமா இருங்க:).

    ReplyDelete
  12. வாங்க மேனகா... நல்லவேளை நீங்க தலைப்பைப்பார்த்து மயங்கிவிழேல்லை என்பது தெரியுது.... மிக்க நன்றி.

    ReplyDelete
  13. கடவுளே... கொஞ்சநாளா “ரெண்டு புள்ளி ஒரு அரைப்பிறையைக்” காணேல்லை என நிம்மதியாக இருந்தேனே... இப்போ ”தெற்கால” இருந்தும் வர ஆரம்பித்திட்டுதே.....

    ஹைஷ் அண்ணன் எனக்குத் தெரியும் ஏன் சிரிக்கிறீங்களெண்டு :))))

    http://www.youtube.com/watch?v=17hEcSsv57g&feature=related

    மியாவும் நண்டி ஹைஷ் அண்ணன்.... இன்னும் ஆராரெல்லாம் சிரிக்கப்போகினமோ ... எதுக்கும் அட்வான்சா..
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...இது பூஸ்ஸ்ஸ் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இது கரடியாம்......

    ReplyDelete
  14. ஹாய் அதிரா...,கலக்கலான ரேடியோ நிகழ்ச்சி.
    ஒன்றிரண்டு நமக்கு தெரிந்தவை என்றாலும்,அதை அதிரா பூஸாரின் ஸ்டைலில் கேட்க்கும் போது ரசிக்காமல் இருக்கமுடியுமா என்னா...?
    நிகழ்ச்சியின் கடைசியில் சொன்னவை நல்ல அர்த்தமுள்ளவையாகும்.
    நல்லாயிருந்தது அதிரா.... மியா....வ்...
    ஸாரி உங்க பாஷையில சொல்லலாமுன்னு...
    பாராட்டுக்கள் இதைதான் சொல்ல வந்தேன்...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  15. அதிரா யூ ட்யூப்ல போய் அந்த க்ளிப்ஸ் பார்த்து நானும் என் பிள்ளைகளும் வாய் விட்டு சிரிச்சாச்சு...
    ஹா...ஹா....ஹா...ஹா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  16. //a lot of people think its a funny video but it is the biggest shit the i saw in my life//

    அதீசு.. நீங்க பின்னூட்டத்துல போட்டிருக்கும் வீடியோ க்கு கீழ இந்தக் கொமேன்ட்டைப் பாத்தேன் :))

    ReplyDelete
  17. வாங்க அப்ஷரா.

    ரசிச்சீங்களோ? நானும்தேன்:)).

    ஒரு வெளவால் வீட்டுக்கு இன்னொரு வெளவால் வந்தால் அதுவும் தொங்கிக்கொண்டுதானிருக்குமாம்... அப்பூடித்தான் பூஸ் வீட்டுக்கு வந்தால் பூஸ் பாஷை தானா வந்துடும் தப்பேயில்லை....:)).

    //அதிரா யூ ட்யூப்ல போய் அந்த க்ளிப்ஸ் பார்த்து நானும் என் பிள்ளைகளும் வாய் விட்டு சிரிச்சாச்சு...
    ஹா...ஹா....ஹா...ஹா...
    // கிக்...கிக்...கீஈஈஈஈ.... நாங்களும்தான்...

    மியாவும் நன்றி அப்ஷரா.

    ReplyDelete
  18. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said... 17
    //a lot of people think its a funny video but it is the biggest shit the i saw in my life//

    அதீசு.. நீங்க பின்னூட்டத்துல போட்டிருக்கும் வீடியோ க்கு கீழ இந்தக் கொமேன்ட்டைப் பாத்தேன் :))
    ///

    வாங்க சந்தூஉ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    தீயனவற்றைப் பார்க்காதே. உங்களுக்கு எதுக்கு சின்ன வயசில தமிழ் ரீச்சர் முக்கீஈஈஈ முக்கிச் சொல்லித்தந்தவ பாரதக்கதை.... எக்ஸாம் எழுத மட்டும்தானா? அதில அர்ச்சுனனை பார்த்துக் கற்றுக்கொள்ளோணும் நல்ல விஷயங்களை... அதாவது குருவியின் தலை மட்டும்தான் தெரியோணும்.... கால் வால் எல்லாம் பார்க்கக்கூடாது, சரி தப்பிப்தவறி பார்த்தால்கூட உடனேயே மறந்திடோணும் காஆஆஆஆவக்கூடாது....

    அதிரா எத்தனைநாள் குப்புறக்கிடந்து சிந்திச்சு கதை எல்லாம் சொல்லியிருக்கிறேன் “அன்னம்போல வாழுங்க என”.... அதெல்லாம் மறந்துபோச்சா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    உலகில நல்லது மட்டும்தான் இருக்கா... கெட்டதும் பின்னிப் பிணைந்தேதான் இருக்கு... நாம்தான் பிரித்தெடுத்துப் பார்க்கப்பழகோணும் ஓக்கை?.

    ஒரு மெத்தப்படித்த மேதாவிக்கே... குட்டிப்பூஸ் உபதேசம் பண்ணவேண்டிய நிலைமையாச்சே... ஆண்டவா...

    இல்ஸ்ஸ், நான் கட்டிலை தேம்ஸ்ஸ் கரையில போட்டிட்டேன்... இனியும் முடியாது...., நீங்க பிங் கலரில பேப்பிள் பட்டின்ஸ் வைத்த சுவட்டரொன்று வாங்கிவாங்கோ பிளீஸ்ஸ்ஸ்..... :)).

    மியாவும் நன்றி சந்து...

    ReplyDelete
  19. அதிரா இப்படி அச்த்தலமா . சும்மா ஜில்லுன்னு கலக்குறீங்க. பாராட்டுக்கள். தொடருங்கள். நல்ல நகைச்சுவை .

    ReplyDelete
  20. //மாணவர்கள் சொன்னார்களாம் “பறவாயில்லை இன்னும் இரு ஆசிரியர்களைச் சேர்த்து அடக்கம் செய்துவிடுங்கள்”..//

    ஹி ஹி ஹி
    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி.
    :)))

    ReplyDelete
  21. நீங்க பிச்சி பிச்சி போட்டதுல எனக்கு வரவே இல்லை ..நா தலைப்பை சொன்னேன் :-)


    ((கடமை அழைக்கிறது பிறகு வரேன் ))

    ReplyDelete
  22. அக்கா என்று இப்படி ஒரு வானொலி நிலையம் அமைத்தீங்க.. கலக்குறீங்களே.. இதன் அலைவரிசை எண் எனக்கு கொடுப்பீங்களா நானும் வீட்டிலிருந்தே கேட்பேனே...

    கலக்குறீங்க.. எப்புடி இப்படியெல்லாம சிரிக்க வைக்கிறீங்க... தொடருங்கள் உங்கள் பகிர்வுகளை

    ReplyDelete
  23. என்னது அடி கிடியா.. நாங்க தான் பல்பே வாங்கினாலும் கிண்ணுன்னு நடப்போமே.. அடிக்கா பயப்படுவோம் :))

    சந்தூ ஊருக்கு தான் போறேன் அடுத்த வாரத்தில என்ன விசாரிக்கணுமோ சொல்லுங்க.. என்னன்னு கேக்கறேன் :))

    அதுக்கெதுக்கு பிங்க் ஸ்வெட்டர் அதுலயும் பேப்பிள் பட்டன் எல்லாம் வச்சு.. கேள்விய கேட்டு தருமி மாதிரியில்ல பம்மணும்..

    என்னாதூஊஊடூடுடுடுடுடுட்ட்ட்ட்டூஊஊஊ!! கடைமை அளைக்கிரதா.. யாருங்க அங்க.. நாங்க பிஸின்னு சொன்னா வந்து கேள்விக்கு மேல கேள்வி கேக்கறது... அதீஸ் இனி ஒரு முறை வரும் போது ரேடியோ டேசனுக்கு முன்னாடி கட்டி போடுங்க இந்த சச தல(சார்ஜா) வை.. அப்புறம் கவனிக்கலாம்...

    ReplyDelete
  24. வாங்க நிலாமதி, ஒரு இடத்துக்குப் போனால் ஒரு இடத்தைக் கவனிக்க நேரம் வருகுதில்லை, அதுதான் பதில் தாமதம்.

    //சும்மா ஜில்லுன்னு கலக்குறீங்க. பாராட்டுக்கள்// நீங்க வேற:) நானே குளிரில நடுங்கிறேன்... சுவெட்டர் வாங்கப்போன இல்ஸ் ஐயும் காணேல்லை:((..

    மியாவும் நன்றி... “மூன் ஸ்குயார்”:).

    ReplyDelete
  25. அன்னு வாங்க.... உஸ்ஸ்ஸ் மெதுவா:)) ஆசிரியரைப் பார்த்து உப்பூடியெல்லாம் சிரிக்கபிடாது தெரியுமோ? போபம் வந்துடும்:))ஆனா ஆசிரியர் எல்லா இடத்திலயும் சிரிக்கலாம் அது கொப்பிரைட்போல:)))...

    மியாவும் நன்றி அன்னு.

    ஊசிக்குறிப்பு(அன்னு கண்ணை மூடுங்க:):

    ஊக்கே..ஊக்கே.... நானே பிரித்தானிய நீதிமன்றத்துக்குப் போய், அந்த ரீவி ரூமில இருந்திடறேன்:)... அடுத்தவங்க அனுப்பமுன்... மீ சரண்டர்....:)))).

    ReplyDelete
  26. ஜெய்லானி said... 22
    நீங்க பிச்சி பிச்சி போட்டதுல எனக்கு வரவே இல்லை ..நா தலைப்பை சொன்னேன் :-) ////

    வாங்கோ ஜெய் வாங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். முதல்ல அந்த “அதை” த் தூக்கி கடல்ல வீசிடுங்க:)... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... எனக்கு கோபத்தில முகமெல்லாம் பச்சையாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்.

    ஏதோ ஃப்ப்லோவர்ஸ் லிஸ்ட் இருக்கே அதைத்தான் சொன்னேன்:))).

    ((கடமை அழைக்கிறது பிறகு வரேன் ))
    /// ஓ.. “மை” அழைச்சால் போகத்தான் வேணும் போயிட்டு வாங்க ஜெய்.. நான் கடமையைச் சொன்னேன்....:)


    ஆ.... இன்னொரு விஷயம் மறந்திட்டனே..... நான் ஜெய்யைப் பார்த்திட்டேன்... நான் ஜெய்யைப் பார்த்திட்டேன்.... எங்க எப்ப என ஆரும் குறுக்க கேள்வி கேட்டிடப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    மியாவும் நன்றி ஜெய்.

    ReplyDelete
  27. தமிழ்த்தோட்டம் said... 23
    அக்கா என்று இப்படி ஒரு வானொலி நிலையம் அமைத்தீங்க.. கலக்குறீங்களே..//

    வாங்க யூஜின், ஒரு தளத்தையும் நிர்வகித்துக்கொண்டு, இப்படிக் குட்டிக் குட்டிப் பூவுகளுக்கும் போய் பின்னூட்டம் போடுறீங்களே... நீங்க கிரேட் தான் யூஜின்.

    இதன் அலைவரிசை எண் எனக்கு கொடுப்பீங்களா நானும் வீட்டிலிருந்தே கேட்பேனே.../// கிக்..கிக்....கீஈஈஇ உங்களுக்கில்லாததோ? பென்னும் பேபரும் இருக்கா? இல்ல பென்சில் என்றாலும் ஓக்கை குறிச்சுக்கொள்ளுங்க எண்ணை:).. ரெடிஆஆஆஆ? வன் ஓ எயிட்(108). காசுகூட கட்டத்தேவையில்லை ஃபிறீதான்...வீட்டிலிருந்தே .... அழைக்கலாம்... ஐ மீன் கேட்கலாம்...:)))). ஆ... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    மியாவும் நன்றி யூஜின் வருகைக்கும், ரேடியோக் கேட்டமைக்கும்:).

    ReplyDelete
  28. ஆ.... இல்ஸ்ஸ் வாங்க பார்த்தாலே தெரியுது அடி பலமில்லை என்று:).

    சந்தூ ஊருக்கா.... அப்பூடியென்றால் சந்துவைப் பிடிச்சுக்கொண்டு வாங்க தேம்ஸ் கரைக்கு:).. எனக்கு முளு(கடவுளே ளு சரிதானே? என்னைக் குழப்பீனமே அய்க்கயி:)).. முளுசா வேணும், வட பிச்சுப் பிச்சு வாங்கின பயக்கத்தில பிடிச்சு வரப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    //அதுக்கெதுக்கு பிங்க் ஸ்வெட்டர் அதுலயும் பேப்பிள் பட்டன் எல்லாம் வச்சு.. கேள்விய கேட்டு தருமி மாதிரியில்ல பம்மணும்../// கர்ர்ர்ர்ர்ர்ர்ர், உப்பூடி அயகான சுவெட்டர் இங்கின இல்லை என சொல்லிடோணும் அதைவிட்டிட்டு.... கர்ர்ர்ர்ர்:), அது பூஸ் நாட்டில மட்டும்தேன் இருக்கு M&S la:))).

    //நாங்க பிஸின்னு சொன்னா வந்து கேள்விக்கு மேல கேள்வி கேக்கறது... அதீஸ் இனி ஒரு முறை வரும் போது ரேடியோ டேசனுக்கு முன்னாடி கட்டி போடுங்க இந்த சச தல(சார்ஜா) வை.. அப்புறம் கவனிக்கலாம்...
    /// உப்பூடித்தான் இல்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடித்தான் வடிவா... நொங்... நொங்.... என..... அந்த ஆஆஆர்த்திமாதிரி:):).... (பெயரை எழுத்துக்கூட்டி வாசிங்க மக்கள்ஸ்ஸ் நொட் அதிரா ஓக்கை:)).. இல்ஸ் விடாதீங்க... ஸ்ரோங்காஆஆ.. ஆ... எனக்கு ஸ்லீப்:) வருதே... நான் கட்டிலுக்குக் கீழயே படுத்திடுறேனே...

    மியாவும் நன்றி, சீயா அலிகேட்டர்:)).

    ReplyDelete
  29. //பத்துவருடங்களாக குப்புறக்கிடந்து, கிட்னியை யூஸ் பண்ணி, 1 1/2 கோடி டொலர்கள் செலவுபண்ணி கண்டுபிடித்தார்களாம். //

    இதே என்னிடம் கேட்டா ஒரு சிலேட்டும் , சிலேட்டு குச்சியும் போதுமின்னு சொல்லி இருப்பேனே ..டாலர் போச்சே...அவ்வ்வ்வ்

    ReplyDelete
  30. //நாம் அடுத்தவருக்கு சேவை செய்து, அடுத்தவரை மகிழ்வித்தால், கடவுளுக்கு நம்மைப் புய்க்கும்ம்ம்ம்ம்.//

    எனக்கு சேவ்-வை பிடிக்காது..ஜிலேபியா இருந்தா ஓக்கை..ஹா..ஹா.. ஆமா நீங்க எந்த சேவை யை சொன்னீங்க ...?

    ReplyDelete
  31. //ஹா..ஹா....ஹா... கஸ்டப்பட்டுப் படிச்சு எக்ஸாம் எழுதினது..(தெரியும்தானே ஆரென?? பீஈஈஈஈகொக்:))..., ஆனா தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்...(உதென்ன தொப்பி என ஆரும் கேட்டிடப்பூடா...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

    அடிக்கடி சூப்பர் பிஸி போர்டை போட்டுட்டு கடையை காலி பண்ணிடறாங்க .ஜன்னலை திறந்து பார்த்துட்டு திரும்பவும் எஸ்கேப்....

    சின்ன கேப் கிடைச்சாலும் சந்தேகம் கேப்போமுல்ல ஹா..ஹா..

    ReplyDelete
  32. //தொப்பி கிடைச்சதென்னமோ எங்களுக்குத்தான்..//

    எனக்கு அப்பவே சின்ன சந்தேகம்..கடல் பக்கம் வீடு இருக்குதே. இந்த மாடல் தொப்பிதான் உங்ககிட்ட இருக்குமுன்னு தெரியும் :-))))))))))))

    ReplyDelete
  33. சிவாஜியின் அந்த பாடல் வருவதுக்கு முன்னே ஒரு சூப்பர் டயலாக் வரும் கடவுள் யார் எப்படி யார் மாதிரி இருப்பார்ன்னு ..?

    பாடலை தேடி பிடிச்சு போட்டதுக்கு நன்னி :-))

    ReplyDelete
  34. அதிரா என்னை இப்படி சுத்த வைத்து இறுதியில் உங்க ப்ளாக் அட்ரஸ் டைப்பித்து வந்திட்டேன்,லேட்டா வந்தால் தானே எல்லா பின் ஊட்டத்தையும் ரசிக்கலாம்.நல்ல பாடல்,நல்ல சுவையான் பகிர்வு.

    ReplyDelete
  35. //இல்ஸ் எக்ஸாம் நேரத்திலபோய் தரையில விழுந்திட்டீங்களே.... அடிகிடி படேல்லையோ?... ஏதும் காயம் எண்டால் சொல்லுங்கோ... எங்கட “ஆசன வைத்தியரிடம்” மருந்து வாங்கலாம்... என்ன ஒரு ரூபா தான் செலவு:)).//

    இல்ஸுக்கு ஃபிரி டீரீட்மெண்ட்...ச்செ...ஸைடில வளர்பவங்களுக்கு இலவச ஆலோசனை தரப்படும் :-))) ஹா..ஹா..

    ReplyDelete
  36. //எனக்கு சேவ்-வை பிடிக்காது..ஜிலேபியா இருந்தா ஓக்கை..ஹா..ஹா.. ஆமா நீங்க எந்த சேவை யை சொன்னீங்க ...?//

    ஆ... ஜெய் வாங்கோ... நான் சேவ்.. எடுத்தாக்களைப்பற்றியும் கதைக்கேல்லை தாடிவச்சாக்களைப் பற்றியும் கதைக்கேல்லை... நான் கதைச்சது நடு உச்சி வச்சாக்களைத்தான்....ஆஆ... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    //அடிக்கடி சூப்பர் பிஸி போர்டை போட்டுட்டு கடையை காலி பண்ணிடறாங்க// மயிலா அப்பூடி? மயில்தான் சொன்னா பிஸி எனச் சொல்வதெல்லாம் ஓல்ட் பாஷன் எண்டு:)).. ஓ... இது சூப்பர் பிஸி எண்டதால ஓக்கை..:))

    //கடல் பக்கம் வீடு இருக்குதே. இந்த மாடல் தொப்பிதான் உங்ககிட்ட இருக்குமுன்னு தெரியும் :-))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அது யுனிக்குப் போய் வாங்கினதூஊஊஊஊஊஊஊஉ கேக்குதா ஜெய்.. ஆஆஅ? கேக்குதோஓஓ?.

    ReplyDelete
  37. வாங்க ஆசியா... லேட்டா வந்தாலென்ன.. வடை இருக்காது அவ்ளோதான்:).. இட்ஸ் ஓக்கை. மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  38. //பாடலை தேடி பிடிச்சு போட்டதுக்கு நன்னி :-))
    ///

    மியாவும் நன்றி ஜெய்.. வேறு ஒரு பாடலைத்தான் தேடினேன்... யூ ரியூப்பை ஓபின் பண்ணினதும் தேடிய பாடலை மறந்திட்டேன்:).... நினைத்து நினைத்துப் பார்த்தேன்... உருண்டு பிரண்டு கிட்னியை யூஸ் பண்ணியும் பாட்டு மறந்து போச்ச்ச்ச்..., சரி என விட்டுப்போட்டு இதைத் தேடிப்போட்டேன்.... இப்போ அது நினைவு வந்திட்டுது...

    //இல்ஸுக்கு ஃபிரி டீரீட்மெண்ட்...ச்செ...ஸைடில வளர்பவங்களுக்கு இலவச ஆலோசனை தரப்படும் :-))) ஹா..ஹா..///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), இல்ஸ்ஸ்ஸ் கெதியா ஓடிவாங்க... நான் ஒரே அமுக்கில ஆளைப் பிடிச்சுவச்சிருக்கிறேன்... ஓடிவாங்க இல்ஸ்ஸ்... ஆர்த்தியை மனதில நினைச்சுட்டே:)..... நொங்கு நொங்கு... எண்டு.... :)

    ஆங்... இப்பூடிச் சொன்னதிலயே என் பாதிக்கோபம் அடங்கிடுச்சி:).... நான் வீட்டிலயும் உப்பூடித்தான் கோபம் வந்தால் தூரத்தில நின்று(கவனிக்கவும்:)) இரு கையையும் நல்லா ஓங்கி ஓங்கி கோபக்காரரைப் பார்த்து:):) “சடார்” “சடார்” எனச் சொல்லிச் சொல்லி பலமுள்ள மட்டும் வீசி வீசி அடிப்பேன்... அத்தோடு கோபம் போய் வீட்டில ஒரே சிரிப்பு மழை கொட்டும்.... இனிமேல் ஆருக்காவது வீட்டில உள்ளோரோடு:) கோபம் வந்தால், என் இந்த முறையைக் கையாண்டு பாருங்கோவன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்:):).

    மியாவும் நன்றி ஜெய்.. பயந்திடாதீங்க.. மயில் இப்போ நடனமாடுது:)).

    ReplyDelete
  39. அதிராக்கா...

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். கண்டிப்பா எழுதுங்க. பூஸாரின் ஃபோட்டோக்களோடு ஹி ஹி :)

    http://mydeartamilnadu.blogspot.com/2011/03/blog-post_22.html

    ReplyDelete
  40. // பூஸ் ரேடியோ.... இது பூஸ் வானொலி நிலையம், 24 மணிநேர சேவை, நேரடி ஒலிபரப்பு... //

    //மன்னிக்கவும் அலைவரிசையில் சிறு குழப்பம்:)... சற்று நேரத்தில் தொடரும்..
    தடங்கலுக்கு வருந்துகிறோம்...:)//

    எண்டு துல்லியமான ஒலிபரப்பு வடிவா இருந்தது பூஸ்.

    ReplyDelete
  41. அதிரா நலமாயிருக்கிறீங்களா? இம்முறை ரேடியோ நிகழ்ச்சிக்கு நான் கடைசியாக வந்துள்ளேன்.இப்போ நேரம் கிடைப்பது???????? மன்னிக்க.
    உங்க பழைய பாடல் {அருமை{ஒலிப்பதும்} பூஸ் ரேடியோவில ஒலிபரப்பானது நன்றாக இருக்கிறது.
    கதைகள் எல்லாமே அர்த்தம் உள்ளதாக இருக்கிறது, அதைக்கேட்டு எழுதிய உங்களைப்பாராட்டாமல் இருக்கமுடியாது.
    பொருத்தமான படங்களை போட்டிருக்கிறீர்கள்.சூப்பரா இருக்கு.
    நானும் பூஸாரின் ரேடியோ அலைவரிசை பிடித்து விட்டேன்.
    நல்ல நிகழ்ச்சியை கேட்ட{ லேட்டாக}திருப்தி.

    ReplyDelete
  42. அன்னு வாங்க...
    ”அடி தாங்கா உள்ளமிது இடிதாங்குமோ?
    இடிபோல தொடர் வந்தால் பூஸ் தாங்குமோ?:))”..

    பயப்பூடாதீங்க அன்னு... அது பீலிங்சூஊ... என்னையும் அழைத்தமைக்கு மியாவும் நன்றி. மிகுதிப் பதில் உங்க வீட்டில தொடரும்...

    ReplyDelete
  43. ஆஆஆஆ... வாங்க அப்துல் காதர்... மீண்டும் நல்வரவு..

    ஒரு தடவை வந்தீங்க பின் காணவில்லை, அதனால நான் பயந்திட்டேன் ஏதும் பிய்க்கவில்லையோ:) என, முன்னே வைத்த காலை பின்னே எடுத்திருந்தேன்...
    எனக்கு பாம்பைக்கண்டால் பயம்..
    பல்லியைக் கண்டால் பயம்....
    யானையைக் கண்டால் பயம்...
    ஆமையைக் கண்டால் பயம்...
    பப்பியைக் கண்டால் பயம்...
    ஏன் பச்சை ரோசைக் கண்டாலும் பயம்:)...
    ஆனால் பிளேனைக் கண்டால் மட்டும் பயமில்லை.. ஏனெண்ணா அது மேலாலதானே போகும்.. :):)..

    சரி சரி படிச்சதும் கிழிச்சிடுங்க பிளீஸ்ஸ்ஸ்... இங்க பாம்புக் கண் கழுகுக் காதோட மக்கள்ஸ்ஸ் திரியினம்..:))).

    ///எண்டு துல்லியமான ஒலிபரப்பு வடிவா இருந்தது பூஸ்/// எண்டு சொன்னதுக்கும், வருகைக்கும் மியாவும் நன்றி

    ReplyDelete
  44. வாங்க அம்முலு... நீங்க யூரோப்பிலயே இருக்கிறதால நேரடியாகவே கேட்டிருப்பீங்க என நினைச்சேன்....:).

    பழைய பாட்டும் பிடிச்சிருக்கா.. நன்றி.

    இனி ரேடியோ எண்ணை மறக்காமல் குறிச்சு வச்சு அடிக்கடி கேளுங்கோ என்ன? அலைவரிசையில ஏதும் குழப்பம் வந்தால் உடனடியாக எனக்கு அறியத் தாங்கோ...:).

    பாதிநேரம் போகும் எனக்கே நேரம் கிடைப்பதில்லை, அப்போ முளு நேரம் போகும் உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்....

    ஓக்கே அம்முலு மியாவும் நன்றி.

    ReplyDelete
  45. //என்ன கொடுமை இது//

    அதே தான் நாங்களும் கேக்கறோம்...என்ன கொடுமை இது...:))

    ReplyDelete
  46. நன்றி அதிரா...சில சமயம் மாவு தண்ணியாக இருந்தாலோ அல்லது தயிரின் அளவு குறைந்தாலே இட்லி கண்டிப்பாக நல்லா இருக்காது..கொழகொழவென வரும்...அடுத்த முறை செய்து பாருங்க...நல்லா வரும்...

    ReplyDelete
  47. ஹி..ஹி..இப்பதான் வரமுடிஞ்சுது அசத்தல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்டசெய்தி நடந்துச்சிம்மா.
    அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
    பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
    அம்மா: கெட்ட செய்தி
    பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

    ReplyDelete
  49. நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
    "உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

    ReplyDelete
  50. @கீதாக்கா ...அப்பாவியின் பதிலுக்கு கீழே போட்டிருக்கீங்களே செம கமெண்ட் ஹா...ஹா...அவங்களுக்கு இந்த டிப்ஸ் கண்டிப்பா பயன் படுமுன்னு நினைக்கிறேன் :-)))))))))))))

    ReplyDelete
  51. அப்பாவி தங்கமணி said... 46
    //என்ன கொடுமை இது//

    அதே தான் நாங்களும் கேக்கறோம்...என்ன கொடுமை இது...:))

    //// ஆ... தங்க மணி... தங்க மணி வாங்கோ... நல்வரவு!!!.

    நட்புப்பகுதிக்கு ஒருநாள் “என்னை யாரோ தேடினார்களாமே” என்று ஒரு சவுண்டோடு வந்தீங்க பாருங்க... அப்பபோய் கட்டிலுக்குக்கீழ ஒளிச்சதுதான்:) நான் இப்பவும் கட்டிலடியை விட்டுவெளியே வருவதில்லை...:). இப்போ ”என்ன கொடுமை இது” எனக்கேட்டுப்புட்டீங்க... ஏசி(இது வேற ஏசி:))இல்லாமலே கைகால் எல்லாம் ந...டு...ங்..குதூஊஊஊஊ... இருப்பினும் பக்கத்தில இல்ஸ்ஸ் இருக்க எனக்கேது பயம்...:))) ஹா..ஹா..ஹா... பார்த்தீங்களோ பயமில்லாமல் ஒரு சிரிப்ப்ப்ப்பூஊஊஉ:).

    வருகைக்கு மியாவும் நன்றி.

    ReplyDelete
  52. வாங்க கீதா, உங்கள் பக்கம் கேள்விகேட்க, அங்கு நான் வந்து பார்க்காமல் விட்டாலும் என பதிலை இங்குவந்து சொல்லியிருக்கிறீங்க மிக்க நன்றி.

    நான் கேள்வி கேட்டிருந்தால் பெரும்பாலும் போய், பதில் வந்திருக்கா என செக் பண்ணுவதுண்டு.

    உண்மைதான் இட்லிப்பதம் எனக்கு கண்டுபிடிக்க முடிவதில்லை, தண்ணியை ஆகவும் குறைத்தாலும் கல்லுப்போலாகிவிடுது... மீண்டும் முயற்சிக்கிறேன்.

    மியாவும் நன்றி கீதா.

    ReplyDelete
  53. Covai Ravee said... 48
    ஹி..ஹி..இப்பதான் வரமுடிஞ்சுது அசத்தல் வாழ்த்துக்கள்.
    // வாங்கோ வாங்கோ நல்வரவு.

    எனக்கு எப்பவுமே ஒரு பாடல் கேட்கும்போது, முதலில் கவனிப்பது அதிலிருக்கும் கருத்துள்ள, தத்துவமான வரிகளைத்தான், அதன் பின்பே மியூசிக்.
    அதனால ரேடியோவில் பாட்டுக் கேட்கின்றபோது ஏதும் வரிகள் மனதுக்குப் பிடித்துவிட்டால், அப்பாட்டைத் தேடி எடுத்து என் மொபைலில் போட்டு வைத்துக் கேட்பது வழக்கம்.

    அப்படிப் பாட்டுக்கள் தேடிப்போனபோது, “தேன்கிண்ணம்” நல்ல ஒரு பகுதியாக எனக்கு கிடைத்தது, அப்பவே ஃபலோவராக அங்கு இணைந்திருக்கிறேன். ஆனால் இப்போ செக் பண்ணிய இடத்தில், அது உங்களுக்குச் சொந்தமானது என அறிந்து, மிக்க மகிழ்ச்சி.

    உங்கள் வருகைக்கு மியாவும் நன்றி.

    ReplyDelete
  54. //அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.
    பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா
    அம்மா: கெட்ட செய்தி
    பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க
    //

    ஜெய் இதைப் படிச்ச நேரம் தொடக்கம் சிரித்தே களைச்சுப்போயிட்டேன், அதை எழுதியிருக்கும் விதம்தான் அதிகம் ரசிக்க வைக்குது....

    2வது... உண்மைதானே டாக்டரில தப்பில்லை.. பேஷண்ட் தள்ளிப்படுத்ததுக்கு அப்பாவி டாக்டர் என்ன பண்ணுவார்?:).. மீ எஸ்ஸ்ஸ்.

    ஓஓ... அப்பாவிக்கு இட்லி புடிக்குமோ?:)..

    மியாவ் மியாவ் ஜெய்.( அதாவது பூனைப்பாஷயில நன்றி சொன்னேன் கர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  55. ஆள் : நீங்க ஒரு பல் டாக்டரா..?
    டாக்டர் : இல்லைங்க 32 பல்லுக்கும் தான் டாக்டர்

    ஆள் : அப்ப என் புளு டூத் வேலை செய்யலை பாருங்க
    டாக்டர் : அடேய் ...நான் கடிக்கிறதுக்குள்ளே ஓடிப்போயிடு ..நான் ஒரீஜினல் பல் டாக்டர் ..செல்போன் மெக்கானிக் இல்லை

    ReplyDelete
  56. //2வது... உண்மைதானே டாக்டரில தப்பில்லை.. பேஷண்ட் தள்ளிப்படுத்ததுக்கு அப்பாவி டாக்டர் என்ன பண்ணுவார்?:).. மீ எஸ்ஸ்ஸ்.//

    நான் டாக்டரா ஆகலாமுன்னு நினைக்கிறேன் ..நீங்க பேஷண்டை அனுப்புறீங்களா...கமிஷன் தனி ஹி...ஹி... :-)))

    ReplyDelete
  57. ஜெய்.. 32 பல்லுக்கும் டாக்டரோ? அப்போ 2 பல்லைப் பிடிங்கினாட்களுக்கெல்லாம் டாக்டரில்லையோ அவர்?:))))...

    //நான் டாக்டரா ஆகலாமுன்னு நினைக்கிறேன் ..நீங்க பேஷண்டை அனுப்புறீங்களா...கமிஷன் தனி ஹி...ஹி... :-)))
    //
    பேஷண்ட் தானே? ஹா..ஹா..ஹா... இதுக்கெதுக்கு தயங்கிறீங்க ஜெய்...?,உங்களுக்கிலாததோ?, இப்பவே ஒரு பூஸார்..., ஒரு உயிர் விடும் தறுவாயில் இருக்கும் மங்கிக்குட்டி:),... ஒரு குண்டு எலியார்:),... ரெடி..(அங்கின ஜெய்..லானி பக்கத்தில:)).

    இவர்களுக்கு வைத்தியத்தை முடியுங்க... பின்னால கியூவரிசைல:) நிறையப்பேர் நிற்கினம்.... விரைவில ஏசிபோட்ட ரக்‌ஷில அனுப்பிடுறேன்.... இந்தப்படை போதுமா? இன்னும் பேஷண்ட் வாணுமா?:))))))... உஸ்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.