அதாவது.... குட்டி குட்டியாக நான் சேமித்து வைத்திருக்கும்.... சில குட்டிக் கவிதைகள்...
என்னைத் தேடிய
புற்றே.. - நான்
இங்கிருக்கிறேன்
அம்மாவின்
கருவறையை
விட்டுவிடு
/////////////////////////////
அவளுக்கு
வசதியாய் வாழும்
கனவு வந்ததில்லை
வறுமையையே
அவள் வசதியாக
நினைப்பதனால்..
/////////////////////////////
பட்டங்கள்..
உன்னை நினைத்தே
தூங்குவதால் சோம்பேறி!
உன்னைப்பற்றி மட்டுமே
உளறுவதால் பைத்தியம்!
உன்னைத் தேடி ஊர் முழுதும்
சுற்றுவதால் போக்கிரி!
பெண்ணே உன்னால்
எனக்கு எத்தனை பட்டங்கள்!!!
///////////////////////////////////////
விளக்குகள்
எரியவும் எரிக்கவும்
எங்களுக்கும் தெரிகிறது
ஆனால் உங்களைப்போல
ஒளிகொடுக்க மட்டும்
தெரியவில்லையே..
===========================
இராத்திரி ரகசியங்களுக்கு
நீங்கள் சாட்சிகளாக
இருப்பதால்தான்
விடிந்ததும் உங்கள்
நாவுகள் துண்டிக்கப்பட்டு
விடுகின்றன..
===========================
விளக்கு சுடும்
என்பதை அறிந்து
எந்தப் பூச்சியும்
அதில் விழுவதில்லை
ஆனால் - பூச்சி
தவறுதலாக
விழுந்துவிட்டதே என
விளக்கு சுடாமல்
விடுவதுமில்லை
/////////////////////////////////////////////////////////
எனக்கொரு
கடிதமெழுது - என்னை
விரும்புகிறாய் என்றல்ல
வேறு எவரையும்
விரும்பவில்லை
என்றாவது எழுது!
£££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££
கேக்குதோ??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காது மட்டும்தான் பெரிசே தவிர, நான் எப்பூடிக் கூப்பிட்டாலும் கேட்குதேயில்லை:((((((
£££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££££
இது நெட்டில் தான் படித்தேன், மிகவும் பிடித்துப் போன கவிதை...(பெரிதாக்கிப் படியுங்கள்)
#########################################################
பின் இணைப்பு:)
இது ரொம்பாஆஆஆஆ ஓவர்...:))))
##########################################################
|
Tweet |
|
|||
நெட்டில் தேடிய கவிதயின் கடைசி வரி நெஞ்சை தொட்டது அதிராக்கா.. ஆனால் எல்லோரும் பணம் சம்பாதிக்கும் ஆசையினால் மட்டும் போவதில்லையே...பலருக்கும் தினசரி வாழ்க்கை ஓடுவதே இருவரும் சம்பாதிப்பதால்தான்.
ReplyDelete//கேக்குதோ??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) காது மட்டும்தான் பெரிசே தவிர, நான் எப்பூடிக் கூப்பிட்டாலும் கேட்குதேயில்லை:((((((//
ஹெ ஹெ ஹெ... என் தம்பிக்கு பூனைகள் கோழிக்குஞ்சுகள் என்றால் செம இஷ்டம். அவனுக்கு இந்த ஃபோட்டோவும் கமெண்ட்டும் காட்டனும். ஹெ ஹெ.. எப்படித்தான் தேடிப் பிடிக்கிறீங்களோ!!
நீங்களும் திரட்டிகளை திட்டி அனுப்பிட்டீங்களா...எல்லாரும் விட்டுட்டே வாராங்க என்னு யோசிக்கணும்!!
அதிரா உங்களின் கவிதை திரட்டல் அருமை.எல்லாம் ரசித்து படித்தேன்,சில வரிகள் மனதைச் சுடுகின்றன.பகிர்வுக்கு நன்றி.எப்பவும் எனக்கு இந்த கவிதைகளை வாசிக்க மிகவும் பிடிக்கும்,நறுக்கென்று கருத்தை சொல்லலாம் தானே!
ReplyDeleteஅருமையான கவிதைகள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
பி.கு. சிறு வயதில் இருந்தே பிடித்த பாட்டு “தெய்வம் தந்த வீடூ”
நைஸ் பூஸ் பாங்க். ;)
ReplyDeleteபூஸ் அக்கா இல்ல ஆரணி அக்கா ரொம்ப நல்லா இருக்கு கவிதை தொகுப்புகள் கலக்கலோ கலக்கல் தான்
ReplyDeletemiyaa.. miyaa... mi... good piggy bank dear.. miiiyaa
ReplyDeleteபூஸார் குட்டி கவிதைக்ள் மிக அருமை, படங்கள் சூப்ப்பர்
ReplyDeleteவாங்க அன்னு...
ReplyDelete//ஆனால் எல்லோரும் பணம் சம்பாதிக்கும் ஆசையினால் மட்டும் போவதில்லையே...பலருக்கும் தினசரி வாழ்க்கை ஓடுவதே இருவரும் சம்பாதிப்பதால்தான்.//
உண்மைதான், ஆனால் சிலர் சம்பாதிக்கவேண்டிய கட்டாயத்திலும், ஒரு சில பெண்கள் தாம் எதுக்காக வீட்டிலேயே இருக்கவேண்டும், என கணவரோடு போட்டிபோட்டு அடம்பிடித்துப் போவோரும் இங்கு இருக்கிறார்கள்.
பிள்ளைகளுக்குத்தானே முன்னுரிமை வழங்க வேண்டும். என் கணவரோடு வேலை பார்க்கும் சில டொக்ரேர்ஸ்(பெண்கள்), தம் பிள்ளைகளுக்காக பாட்(part) ரைம் ஆக வேர்க் பண்ணுகிறார்கள்.... அதாவது கிழமையில் 3 நாட்கள் மட்டும்... அல்லது நேரம் மாத்தியும் செய்யலாம்தானே.
ஒரு 14/15 வயதுவரைதான் அவர்கள் எம்மைத் தேடுவார்கள், அதன்பின் நாம் தேடினாலும் வரமாட்டார்கள்.... தம் ஃபிரெண்ட்ஸ், படிப்பு என போய்விடுவார்கள்.
///நீங்களும் திரட்டிகளை திட்டி அனுப்பிட்டீங்களா...எல்லாரும் விட்டுட்டே வாராங்க என்னு யோசிக்கணும்!!///
எது பற்றிக் கதைக்கிறீங்க எனப் புரியவில்லையே....
மிக்க நன்றி அன்னு.
வாங்க ஆசியா,
ReplyDeleteஎனக்கும் கவிதைகள் என்றால் தேடிப் படிப்பேன்.
//நறுக்கென்று கருத்தை சொல்லலாம் தானே!//
என்ன இப்படிக் கேட்டுவிட்டீங்க? நறுக் நறுக் என்று சொல்லுங்க... குரைக்கிற பூனை கடிக்காதாம்... பயப்புடாதீங்கோ:).
மியாவும் நன்றி ஆசியா.
வாங்க ஹைஷ் அண்ணன்...
ReplyDeleteஉங்களுக்கும் கவிதை பிடிச்சிருக்கோ? மியாவும் நன்றி.
ஓ... உங்களுக்கும் பிடித்த பாட்டோ? அதெப்படிப் பிடிக்காமல் போகும் ஒரே ராசியாச்சே...
1வது பின் குறிப்பு:
இண்டைக்கு பின் குறிப்பு போட்டிருக்கிறீங்க:).
2வது பின் குறிப்பு:
மேல(இது வேற மேல:))இருந்தாலும் எப்பூடி நீட்டா ஒரு எழுத்தும் ஆடாமல் அசையாமல் பின்னூட்டம் எழுதிப்போட்டீங்க?:))).
மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்.
கை...ய் (இது வேற ஹைய்:)) இமா...
ReplyDeleteகை(இது வேற கை:)) சுகமோ?.
///நைஸ் பூஸ் பாங்க். ;)// bank ஐ தமிழில எப்பூடி எழுதலாம் என குப்புறக் கிடந்து கிட்னியை யூஸ் பண்ணி... அக்கன்னாதான் போடுறதாக்கும் என போட்டேன்... இப்பத்தான் பார்க்கிறேன் நீங்க எழுதியிருப்பதை:).
மியாவும் நன்றி இமா.
வாங்க தம்பி யூஜின்..
ReplyDelete///பூஸ் அக்கா இல்ல ஆரணி அக்கா ரொம்ப நல்லா இருக்கு கவிதை தொகுப்புகள் கலக்கலோ கலக்கல் தான்///
என்ர ”பெட் நேம்” எல்லாத்தையும் நீங்கதான் ஒலிபரப்புச் செய்யிறீங்கபோல இருக்கு:):).... இந்த ஸ்மைலியை அங்கு போட்டால், குண்டாந்தடியால அடிக்கிறமாதிரிப் படம் வருமெல்லோ அதையே இங்கும் நினைச்சுக்கொள்ளுங்க:):).
நான் பிறந்ததிலிருந்தே.... என்னைப் பார்ப்போர் போவோர் வருவோரெல்லாம் தமக்கு மனதில் தோன்றும் பெயரைச் சொல்லித்தான் என்னைக் கூப்பிடுவது வழக்கம்.... இப்பவும் அது தொடருது. என் சொந்தப்பெயரைவிட செல்லப்பெயரைக் கூப்பிட்டவர்களே அதிகம்... செல்லப்பெயர்களும் அதிகம்... அதையெல்லாம் சொல்லமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
மியாவும் நன்றி யூஜின்.
வாங்க இல்ஸ்ஸ்ஸ்...
ReplyDeleteஅடிக்கடி காணாமல் போறீங்க,எனக்கு கட்டிலுக்கு கீழ தனியா இருக்கப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்:).
மியாவும் நன்றி இல்ஸ்ஸ்.
வாங்க ஜலீலாக்கா மியாவும் நன்றி.
ReplyDeleteகவிதாயினி பூஸ் வாழ்க.. ஆல் நைஸ்..
ReplyDeleteபாட்டு இணைப்புக்கு நன்றி :)
அதீஸ் கவிதை கலெக்ஷன் கலக்கல்
ReplyDeleteஉங்க செல்ல பெயர் எனக்கு தெரியுமே (நானும் சொல்லமாட்டேனே)
ReplyDeleteநல்ல கவிதைகள், அதீஸ்.
ReplyDeleteஇருவரும் வேலைக்கு போவதால் தான் வாழ்க்கை ஓடுது!!! இதில் எனக்கு முழுமையாக உடன்பட முடியவில்லை. தேவை என்பதை விட டாம்பீக வாழ்வே சிலர் வேலைக்கு போவதன் காரணம்.
எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில் இருவரும் வேலைக்கு போகிறார்கள். வீடு கடல் போல பெரீரீ..ய வீடு.
மனைவி ஒரு சுரத்து இல்லாமல் ஏதோ வாழ்கிறேன் என்பது போல இருப்பார். ஒரு நாள் என்னிடம் புலம்பி தீர்த்து விட்டார். வேலைக்கு போவதை நினைச்சாலே கடுப்பா வருதாம் அவருக்கு. ஆனால் போக வேண்டிய கட்டாயம். எங்கள் ஆளுங்களுக்கு காசு தான் எல்லாமே என்பது போல திரிகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதிலும் பணம் பணம் என்று ஓடாமல் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். ஒரு அழகிய ஓவியம், தையல் வேலை எதுவா இருந்தாலும் நின்று ரசித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகருவேன்.
அப்பாடா! நிறைய புலம்ம்பி விட்டேன். எங்கே சர்பத்!!!???
/////நீங்களும் திரட்டிகளை திட்டி அனுப்பிட்டீங்களா...எல்லாரும் விட்டுட்டே வாராங்க என்னு யோசிக்கணும்!!///
ReplyDeleteஎது பற்றிக் கதைக்கிறீங்க எனப் புரியவில்லையே....//
indli, tamilmanam இவைகளைச் சொன்னேன் :)
வாங்க சந்தூ!!
ReplyDeleteவரவர நம்மட ரேஞ் ஏறிட்டேஏஏஏஏ போகுதே அவ்வ்வ்வ்வ்வ்வ்... நான் கவிதாயினியைச் சொன்னேன்:).
உங்களுக்கும் பாட்டுப் பிடிச்சிருக்கோ? அப்போ ஒரே ராசிதானாக்கும்... :)
மியாவும் நன்றி.
வாங்க ஸாதிகா அக்கா!!
ReplyDeleteசரியான ரயேட்டாக இருக்கிறீங்கபோல... மியாவும் நன்றி.
தமிழ்த்தோட்டம் said... 17
ReplyDeleteஉங்க செல்ல பெயர் எனக்கு தெரியுமே (நானும் சொல்லமாட்டேனே)
/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சொல்றதெல்லாம் சொல்லிப்போட்டு... சொல்லமாட்டாராம்...:). மியாவும் நன்றி யூஜின்.
வாங்க வான்ஸ்ஸ்...
ReplyDeleteஉங்களை மாதிரித்தான் இந்த விஷயத்தில் என்னைப் புலம்ப விட்டால் நொன் ஸ்ரொப்தான்.... மேற்கத்தைய நாடுகளில் நடப்பது முழுக்க முழுக்க நீங்க சொல்லியிருப்பதே... பெரீய வீட்டை வாங்கிப்போட்டு ஆசைக்கு வீட்டிலிருக்க நேரமில்லாமல் இராப்பகலாக உளைக்கிறார்கள்... கணவன் மனைவி சந்திப்பதே சில வீடுகளில் சில மணித்தியாலங்கள்தானாம்....
சொல்லிக்கொண்டே போகலாம்... ஆனால் எல்லோரும் ஒரேமாதிரி இல்லைத்தானே சிலருக்கு சில விஷயங்கள்தான் முக்கியம்... சிலருக்கு வீடு பணம் பெருமை இவைதான் முக்கியம்... சிலருக்கு கணவன் மனைவி பிள்ளைகள்.. இவைக்குத்தான் முன்னுரிமை....
ம்ம்ம்ம்ம் எல்லாம் 2012 உடன் தெரிந்துவிடும்:))).
//அப்பாடா! நிறைய புலம்ம்பி விட்டேன். எங்கே சர்பத்!!!???
// சாரி!!!! இப்பத்தான் சர்பத் முடிஞ்சுபோச்ச்ச்ச்... இட்ஸ் ஓக்கே ஜெய்யின் லெமன் யூஸ் இருக்கு, கொஞ்சூண்டு ஐஸ் போட்டுத் தரட்டே?:)).
மியாவும் நன்றி வான்ஸ்ஸ்ஸ்.
//indli, tamilmanam இவைகளைச் சொன்னேன் :)
ReplyDelete//
ஓ.. அன்னு!! சத்தியமாக எனக்கு திரட்டி என்றால் என்னவென்றே புரியவில்லை, ஏதும் நகைச்சுவையாக்கும் என நினைத்தேன், ஆனாலும் புரியாமல்தான் கேட்டேன்.
நான் எதிலும் இணையவில்லை.... அந்தளவுக்கு வெளிப்படுத்த என் பக்கத்தில் ஏதுமில்லையே... சும்மா.. சும்மா என்னிடம் இருக்கும் பொக்கிஷங்களிப் போட்டுவருகிறேன்... ஒரு புத்தகமாக இருக்கட்டுமே என...
முதுமை எனும் படிக்கட்டுக்களில் இருக்கும்போது, மீட்டிப்பார்க்க.... எவ்வளவு சுகமாக இருக்கும்? அதற்காகத்தான் இவையெல்லாம்....:))).
மிக்க நன்றி அன்னு.
கவிதை தொகுப்பு நல்லா இருக்கு !
ReplyDelete//உன்னை நினைத்தே
தூங்குவதால் சோம்பேறி!
உன்னைப்பற்றி மட்டுமே
உளறுவதால் பைத்தியம்!
உன்னைத் தேடி ஊர் முழுதும்
சுற்றுவதால் போக்கிரி!
பெண்ணே உன்னால்
எனக்கு எத்தனை பட்டங்கள்!!!//
ஹாஹா உன்னை நினைத்து தூங்கலைனு சொல்லலாம்.. ஆனா இது என்ன உன்னை நினைத்து தூங்குறேன்.. ஐயோ ஐயோ ( இங்கே தான் தலைய மோதிக்குற ஸ்மைலி வேணும்)
//பின் இணைப்பு:)
இது ரொம்பாஆஆஆஆ ஓவர்...:))))//
பின் இணைப்பு படத்தில் இருக்குற பின் இணைப்பு ரொம்ப ஓவர் தான்
///ஹாஹா உன்னை நினைத்து தூங்கலைனு சொல்லலாம்.. ஆனா இது என்ன உன்னை நினைத்து தூங்குறேன்.. ஐயோ ஐயோ ( இங்கே தான் தலைய மோதிக்குற ஸ்மைலி வேணும்)///
ReplyDeleteவாங்க கவிக்கா, உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது.... தூங்காமல் இருக்கிறதெல்லாம் ஓல்ட்டு பாஷனாம்:))... இந்தக்காலம், நல்லா சாப்பிட்டு நல்லா தூங்குறதுதான் பாஷனாம்... உஸ்ஸ்ஸ்ஸ் ஆரும் முறைக்கப்பிடாது:)).
//பின் இணைப்பு படத்தில் இருக்குற பின் இணைப்பு ரொம்ப ஓவர் தான்///
ஓவராத்தான் இருக்கு, ஆனா எல்லாம் ஈகோதான்:)... அதாவது, குட்டிக்குட்டிப்பூஸ் எல்லாம் புஸ் புஸ் என மரமேறினால்... நாங்க ஸ்கூட்டர் ஏறுவமே எனச் சொல்லாமல் சொல்கிறார்கள்... நான் பப்பியைச் சொன்னேன்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).
மியாவும் நன்றி கவிக்கா...