நல்வரவு_()_


Thursday, 28 April 2011

என் வீட்டுத் தோட்டத்தில்:), ரண பீன்ஸ் கறி

இது இலாவின் “கொப்பி லெஃப்ட்” தலைப்பூஊஊஊ.  அ-து, இல்ஸ் சொன்னா இத் தலைப்பில, கிச்சின் படங்கள் இணைத்தது போல, தோட்டப் படங்கள் இணையுங்கோ, “இது என் கொப்பி ரைட் தலைப்பல்ல” என, அப்போ ரைட் இல்லாட்டில், கொப்பி லெஃப்ட் தானே?:). ஐ.. தங்கட தலைப்பைக் களவெடுத்திட்டேன் என ஆரும் சண்டைக்கு வர முடியாதூஊஊஊ:)))  கர்ர்ர்ர்ர்ர்ர்:).

இது 2010 இல், கிச்சின் வாசலில், நான் நட்ட “Runner Beans”. ரீவி யிலே அதிகமாக “கார்டினிங்” என்ற தலைப்பை விரும்பிப் பார்ப்பேன். அப்படிப் பார்த்தபோதுதான், இவ் பீன்ஸ் ஐக் காட்டினார்கள், அதன் பூவின் அழகிலே மயங்கி உடனேயே நானும் வளர்க்கவேணும் என கங்கணம் கட்டி, நட்டு வளர்த்து சமைத்தோம்.









ரண பீன்ஸ் கறி
தே.பொருட்கள்: 
ரண பீன்ஸ் - 250g
உருளைக்கிழங்கு - 150g
வெங்காயம் - 25 g
பூண்டு - 4பற்கள்..
மஞ்சள்தூள் - 1/2 தே.க
கரம்மசாலா தூள் - 1/2 தே.க
பால் - 100 ml
உப்பு - 1 தே.க
எண்ணெய் - 2 மே.க
கறிவேப்பிலை - 1நெட்டு
தண்ணீர் -150 ml
எலுமிச்சை - 3 தேக்கரண்டி.

செய்முறை..

பீன்ஸ்சை சிறு துண்டுகளாக வெட்டவும். வெங்காயம், கிழங்கையும் பூண்டையும் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


அடுப்பிலே பாத்திரத்தை வைத்து, எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.

பீன்ஸ், கிழங்கு, உள்ளி, உப்பு போட்டு பிரட்டவும்.

கொடுத்த அளவு தண்ணீர் விட்டு, மூடி அவியவிடவும்.

அவிந்து வந்ததும் மஞ்சள்தூள்  போட்டுப் பிரட்டவும்.

பின்னர் பால், கரம்மசாலா, கறிவேப்பிலை போட்டுப் பிரட்டவும்.

நன்கு பிரட்டலானதும், இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
                                           இலகுவான, சுவையான பீன்ஸ் கறி தயார். 
000000000000000000000000000000000000000000000000000
இவர் கியூ...கம்பர்...
பூத்தார்... ஆனா
காய்க்கவில்லை:((


இவை மண்ணில் வைத்தால் வளராதென சாடியில் வைத்தேன், கீழே கார்டினில் வைத்த ஏனையவை, இன்னொரு நாளில் மூடு:) வரும்போது வேறொரு பதிவாக வரும்.
0000000000000000000000000000000000000000000000000

குட்டி இணைப்பு:):-
தத்துவம் மக்களஸ்ஸ் தத்துவம்......

தம்பி ஜீனோ, இப்படங்களை கொசு மயிலுக்கு அனுப்பியிருந்தார், படத்தை வைத்து நான் ஒரு “உலக தத்துவத்தையே” உருவாக்கிட்டேன்:):

அதாவது, அக்கா எலிபிடிப்பதற்கு, தம்பி ஜெல்ப் பண்றார்:)



அக்காவுக்குக் ஹெல்ப் பண்ணினதால:),
தம்பியை ஒருவர் தலையிலயே தூக்கிட்டுப் போறார்:)
முடிவு என்னன்னா....
அடுத்தவருக்கு நாம், மனம் வைத்து உதவினால்,
நாங்க உதவினவராலதான் என்றில்லை,
யாரால ஆயினும், எமக்கு அப்பலன் கிடைக்கும்ம்ம்ம்ம்ம்ம்.

==========================================================
 “மூத்தோர் சொல் வார்த்தையெல்லாம்
முன்னர் பொய்யாகும்,
காலம் வந்து பாடம் சொன்னால்
பின்னர் மெய்யாகும்”
==========================================================


43 comments :

  1. ரெண்டு செடி தோட்டமாகாது :)

    இந்த பீன்சை சமைத்துச் சாப்பிட முடியுமோ?

    கேட்டை நினைச்சு யாரு இப்படி பாடிட்டு இருக்கப் போறாங்களோ.. பாவம் :))

    ReplyDelete
  2. ஸ்கார்லட் ரன்னர் பீன்ஸ்... எங்கட ஃபேவரிட். அது ஒருக்கா வச்சால் கிழங்கில இருந்து ஆறு ஏழு வருஷம் தொடர்ந்து வளரும். சீசன் முடிஞ்சாலும் கிழங்கைப் பிடுங்கி எறியாதைங்கோ.

    q கம்பர் - பூசணி இனம். இது ஆண் பூ, கொட்டி விடும். பெண்பூவில இருந்து மட்டும் தான் காய் வரும். கொஞ்ச நாள் பொறுங்கோ, காய்க்கும்.

    - J

    ReplyDelete
  3. ஆஹா..அதிரா...ரொம்ப அழகாக இருக்கு உங்க தோட்டம்..சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க...

    ReplyDelete
  4. தோட்டம் அழகு.
    உயரமான இடத்தில் இருக்கோ உங்கள் தோட்டம்? கீழே கார் பார்க்கிங் தெரியுது.

    திருமணம் பற்றித் தான் எங்கும் ஒரே கதையா இருக்கு. இதற்காக மக்களின் வரிப்பணம் எவ்வளவு செலவு செய்யப் போகிறார்கள் என்று ஒரு ஆர்ட்டிக்கிள் படித்தேன். கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது. எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் என்று விளங்கவில்லை!!!????

    ReplyDelete
  5. இந்த பீன்ஸ் சாப்பிட்டு இருக்கிறேன். செடியைப் பார்த்ததில்லை. அழகாயிருக்கே. இங்கே கீரை, தக்காளி, சின்ன மிளகாய்ச்செடி என்டு வைத்திருக்கிறேன். இதைப் பார்த்த உடனேயே படம் எடுத்து போட வேண்டும் போல இருக்கு. ஆனால், படம் எடுத்து போட்டு யாராவது கண்ணூறு வைத்தாலும் என்ட பயத்தில போடல. ஹி ஹி. சோம்பல் தனத்துக்கு நல்லாத்தான் காரணம் கண்டுபிடிக்கிறேன்.

    எனக்கு ஆண், பெண் தாவரம் பார்க்கத் தெரியாது. ஆனால், பூ பூத்து காய்க்காவிட்டால் அது ஆண் என்று சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர், இங்கு ஆண் கொடியை வளர்த்து பந்தல் போல விட்டு இருக்கிறார். கேட்டால் பூ அழகாக இருக்கிறதாம்.

    ReplyDelete
  6. அதிரா மிக அழகாக இருக்கு உங்க வீட்டு தோட்டம்.
    பீன்ஸ்ஸும் நன்றாக இருக்கு. உடனே சமைக்கனும் போல் இருக்கு.

    அதிரா அப்படியே உங்க உங்கள் விட்டு கிச்சன், கார்டன் படம் போடுங்களேன். நாங்களும் பார்த்து மகிழ்வோமில்ல.

    உங்க மெயில் கிடைத்தது. நன்றி அதிரா.

    ReplyDelete
  7. அதீஸ் ,வில்லியம் ,கேட் திருமணத்திற்கு வி ஐ பி அழைப்பிதழ் உங்களுக்கு வந்ததாக கேள்விப்பட்டேன்.அவசியம் போய் தம்பதிகளை வாழ்த்திவிட்டு,மறக்காமல் போட்டோ எடுத்து வந்து பதிவைப்போடுங்கள்.ஒகே...

    ReplyDelete
  8. ரெண்டே ரெண்டு பாட்டை காட்டி எங்கள் வீட்டு தோட்டம் என்று பீற்றல் வேறா?தோட்டம் முழுக்க படம் எடுத்துப்போடுங்கள்.

    ReplyDelete
  9. தோட்டத்தில் இருந்து பீன்ஸை பறித்த கையோடு சமைத்து பதிவில் போடலாமில்லே

    ReplyDelete
  10. அதிரா உங்கள் வீட்டு தோட்டம் சிம்ப்ளி சூப்பர்,அந்த அவரைக்காய் நாங்கள் திருச்சியில் இருந்த வீட்டில் இருந்தது,சாட்டை அவரை என்று சொல்வோம்,பொரியல் செய்தால் வெண்ணெய் மாதிரி இருக்கும்.சூப்பர்.
    வில்லியம் திருமணத்தை டிவியில் லைவாக பார்க்க நாங்க ரெடியாகி விட்டோம்,பாடல் இனி தான் கேட்க வேண்டும்,கொஞ்சம் பிஸி.இன்னும் தோட்டத்தை விரிவாக படம் எடுத்து போடுங்க.

    ReplyDelete
  11. உங்க வீட்டு தோட்டம் அழகா இருக்கு அதிரா!! நானும் வில்லியம்ஸ் திருமணத்தை லைவ்வாக பார்த்தேன்....மக்களின் வரிப்பணம் தானே,அதான் இப்படி செலவு செய்றாங்க.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. வாங்க சந்து. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), 9 படம் போட்டிருக்கிறேன் அப்போ தோட்டம்தானே?:).

    தலைப்புத்தான் தோட்டம்.... அதுதான் சொன்னேனே.. கிச்சின் வாசலில வைத்தது என. கீழே கார்டின் படம் பின்பு போடுறேன்.

    அதூஊஊஊஊ தம்பதியினருக்கு வாழ்த்துப்பாட்டு சந்து:)).

    மியாவும் நன்றி சந்து... வட...வட... வட உங்களுக்கே..

    ReplyDelete
  14. அதாரது அநானியாக வந்திருக்கிறது;).

    ஓ... அது Jeya அக்கா;) தானே? நல்லவேளை அப்போ பார்க்காதமாதிரிப் பார்த்து வச்சதால(உண்மைப்பெயரை:)) இப்போ டக்கெனப் பத்திட்டுது எனக்கு....

    வரமுடியாதெனச் சொல்லிப்போட்டு அநானியாக உலாவப்போயினமோ?:).

    பார்த்தவுடன் ஜீனோவாக்கும் என நினைச்சேன்... ஆனா ஜீனோ கற்பூரத்தில அடிச்சுச் சொன்னவர், வந்தால் ஜீனோவாகத்தான் வருவேன் அநானியாக வரமாட்டேன் எண்டு.

    //அது ஒருக்கா வச்சால் கிழங்கில இருந்து ஆறு ஏழு வருஷம் தொடர்ந்து வளரும். சீசன் முடிஞ்சாலும் கிழங்கைப் பிடுங்கி எறியாதைங்கோ.//
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கிழங்கில வராது, பருப்பிலதான் முளைக்கும் அவரை இனம். ஊரில் இதை ”கத்தி அவரை” என்போம் நினைவிருக்கோ? .

    //கொஞ்ச நாள் பொறுங்கோ, காய்க்கும்.

    //அது போன சமருக்கு நட்டதெல்லோ... பிடுங்கி எறிஞ்சு கனகாலம் ஆச்சு...:).

    மியாவும் நன்றி ~J~.

    ReplyDelete
  15. வாங்க கீதா. இது தோட்டமில்லை... பின்னுக்கு பெரிய தோட்டம் இருக்கு, ஒரு குட்டி இடம் ஒதுக்கி அதில நடுவேன் நிறைய. இது சாடியில் நட்டிருந்தேன்... பூச்சி புழுக்களிலிருந்து பாதுகாக்க.

    போனவருடப் படங்கள்தான் இன்னும் கொஞ்சம் இருக்கு மிகுதியைப் போடுறேன். மியாவும் நன்றி கீதா.

    ReplyDelete
  16. வாங்க வான்ஸ்ஸ்..

    அதுதான் சொல்லியிருக்கிறேன் கிச்சின் வாசலில் நட்டதென. லேபலில் “ரீ ரைம்” போனால் என் சமையலறை வரும் அதில் மீண்டும் பாருங்கோ..... கிச்சினிலிருந்து வெளியே போகும் வாசல் என இருக்கு படம்.. அந்த வாசலில் நட்டது. கிச்சின் நிலத்திலிருந்து உயரத்தில் இருக்கு, ஆனா கிரவுண்ட் ஃபுளோர் தான்.

    படி இறங்கிப்போனால்தான் கார்டின் பின்னாலே இருக்கு.

    மக்கள் சும்மா இல்லை பணம் கொடுத்து வெடிங் ட்ரெஸ், தொப்பி எல்லாம் வாங்கிப் போட்டு வீட்டிலே சேர்ந்து சேர்ந்து பார்ட்டி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

    இங்கு எவ்வளவு அதிகம் வருமானமோ அவ்வளவுக்கு வரியும் ஏறியிருக்கும். ஆனாலும் வாணி, எனக்கென்னமோ வெடிங்கைப் பார்த்த பிறகு வரிப்பணம் கொடுத்தாலும் பறவாயில்லைப்போல இருந்துது.... எவ்வளவு சூப்பர் வெடிங்... குதிரைகள்... குதிரை வண்டில்... ஆஹா கண்கொள்ளாக் காட்சிதானே.

    மியாவும் நன்றி கால் வச்ச வனி:).

    ReplyDelete
  17. வாங்க இல்ஸ்ஸ்.. ஒரு பெட்டி முட்ட கேக் வந்திருக்கு, நான் வாணாம் வாணாம் எனச் சொல்லச்சொல்ல தம்பி வில்லியம்:) விடேல்லை.. கொண்டுபோய் ஃபிரெண்ட்ஸ்க்கெல்லாம் கொடுங்கோ எனத் தந்தவர்... பிரிஜ்ல வைத்திருக்கிறேன் எப்பூடி அனுப்பிவிட?:(((.

    மியாவ் மியாவ்..

    ReplyDelete
  18. வாங்க அனாமிகா. முதல்ல ஒரு தேசிக்காயை வெட்டிப்போட்டு பிறகு தோட்டப்படம் போடுங்கோ... கண் படாது...

    இங்கு இன்னும் ஏதும் நடத் தொடங்கவில்லை.. இனித்தான் செய்யலாம்.

    //எனக்கு ஆண், பெண் தாவரம் பார்க்கத் தெரியாது// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுகூடவா தெரியாது:).

    தாவரத்தில ஆண் பெண் இருக்கா? பூவிலதான் இருக்கென படித்த நினைவு..

    நானும் நினைப்பதுண்டு, காய்க்காவிட்டாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கட்டுமே என...

    மியாவும் நன்றி அனாமிகா.

    ReplyDelete
  19. வாங்க விஜி. இது இங்கு கடைகளில் வாங்கலாம்.

    கிச்சின் படம் போட்டனே, நீங்களும் வந்து பின்னூட்டம் போட்டீங்களே... ரீ டைம் எனும் லேபலில் பாருங்கோ.

    கார்டின் படம்... மூடு வரும்போது போடுகிறேன்...:).

    //உங்க மெயில் கிடைத்தது. நன்றி அதிரா// மிக்க நன்றி.

    வருகைக்கு மியாவும் நன்றி விஜி.

    ReplyDelete
  20. வாங்க ஸாதிகா அக்கா.

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கை கால் எல்லாம் உளையுது, பின்ன சும்மாவோ வெடிங்குக்குப் போய் இப்பத்தான் வந்தேன், வந்த கையோடு பின்னூட்டத்துக்கு பதில் போட வந்திட்டேன்.

    குயினுக்கு நான் எவ்வளவோ சொன்னேன்... புளொக்கில எல்லாம் நான் பிஸியாக இருக்கிறேன் வரமுடியாதென, அவ கேட்டாத்தானே.. “அதிரா, நீங்க இல்லாமல் ரோயல் வெடிங்கா?” எனக் கேட்டிட்டா... வயசானவ கேட்கும்போது ஒரு மரியாதை கொடுக்க வேணுமெல்லோ.. அதுவும் பெண்ணுக்குத் தோழியாக வரச் சொல்லிட்டா... ஸ் ஸ்பெஷல் பிளேனில போய் வந்திட்டேன்... குதிரை வண்டில்ல ஏறும்போது, கால் கொஞ்சம் ஸ்லிப்பாகி சாதுவா நோகுது:).. இட்ஸ் ஓக்கை இதெல்லாம் பெரிய விஷயமில்லை.

    தம்பி வில்லியம் ஓடிவந்து சுத்த தமிழில “நன்றி அக்கா” எனச் சொன்னதைக் கேட்டு ஷொக்ட் ஆகிட்டேன்..

    போட்டோ என்ன போட்டோ லிங் அனுப்புறேன் பாருங்கோவன்...

    ReplyDelete
  21. ஸ்ஸ்... தோட்டப் படம் விரைவில்..

    //தோட்டத்தில் இருந்து பீன்ஸை பறித்த கையோடு சமைத்து பதிவில் போடலாமில்லே//

    2009 இல “அங்கு” ரண பீன்ஸ் கறி என குறிப்பு போட்டிருக்கிறேன் படத்தோடு... தேட முடியேல்லை... மயக்கம் மயக்கமா வருது.. பதிலைப் போட்டிட்டுப் படுக்கப்போறேன்...

    மியாவும் நன்றி ஸாதிகா அக்கா.

    ReplyDelete
  22. வாங்க ஆசியா. இந்த அவரை எல்லா நாட்டிலும் கிடைக்கும்.

    ஊரில எப்பவும் கொஞ்சம் கார்ட்டாக இருக்கும். இங்கத்தையது பஞ்சுபோல பிஞ்சாக இருக்கு.

    வெடிங் பார்த்திருப்பீங்க.. சூப்பர் என்ன. வில்லியம் நல்ல அடக்க ஒடுக்கமான அமைதியான மாப்பிள்ளையாக இ்ருக்கிறார்... அதே அழகாக இருக்கு.

    வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து பாட்டுக் கேளுங்க... ஒரு காலத்தில அதிகம் திரும்ப திரும்ப கேட்ட பாடல்...

    தோட்டப்படம் போடுறேன்.

    மியாவும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  23. வாங்க மேனகா. உலகம் முழுக்க பார்த்திருப்பார்கள் திருமணத்தை. சூப்பராக இருந்துது. வரிப்பணம்தான் உண்மைதான்.... அதேநேரம் வெடிங்கைப்பார்க்க எனக்கு சந்தோசமாகவே இருந்துது..

    ஒருவிதத்தில வெடிங்குக்கு நாங்களும் மொய் எழுதியதாகட்டும்:)))).

    மியாவும் நன்றி மேனகா.

    ReplyDelete
  24. சே சே இந்த கேட்டின் தொல்லை தாங்க முடியலப்பா:) இது வேற கேட் (Kate). பிரித்தானியாவில இருந்து ஒரு ஸ்பெஷ்சல் பிளேன் அனுப்பி நான் தான் மாப்பிள்ளை தோழனா இருக்கோணும் என ரொம்பவெ தொல்லை பண்ணீட்டாங்கோ,,,,

    பிளேன்ல் 2 சீட்டு வேற காலியா இருந்துதா அதில் துணைக்கு அன்பு சகோ செ,செல்வி+திரு செல்வி இருவரையும் அழைத்துக் கொண்டு ஜாலியா போய் வந்தஓம். இது வேற ஓம்!

    வரும்போது கேட்டு (அப்பவே சொன்னேனே இது வேற கேட் என) பிளேன் நிறைய கேக்கும், அகோமுவும் அனுப்பி வைதார்கள். வர வழி எல்லாம் ஜன்னனை திறந்து ஒவ்வொரு அகொமு நட்பு கெல்லாம் போட்டு கொண்டே வந்தோம் :)))


    பி.கு :} ஒன்று வைச்சா அது ”ஆப்பூ” ஒன்றுக்கு மேல வைச்சா அது தோப்பூ அது போலத்தான் இதுவும் ஒரு செடிக்கு மேல வைச்சா (இது வேற மேல) அது தோப்பு எனும் தோட்டம்) :))))

    ReplyDelete
  25. கேட் குடுத்த கேக் தான் எனக்கு வேணும். அகோமு எல்லாத்தையும் அதீஸ் தலையில் குறி பார்த்து எறியுங்கோ ஹிஹி.....

    ReplyDelete
  26. ஹ ஹ... இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க முட்டைய வீச.. அதீஸ்.. அன்டர்கிரவுன்டூ ... கட்டிலுக்கு கிழேஏஏஏ...

    சீயா மீயா அங்க...

    ReplyDelete
  27. உங்க (தொட்டித்)தோட்டத்து கத்திஅவரையை மெல்லியதாக நறுக்கி பொரியல் செய்தால் டேஸ்ட்.
    திருமணத்தை நாங்களும் பார்த்தோம். அதில் ஹைலைட்டே kate வரும்போது ஹரி அண்ணனுக்கு என்ன சொல்லியிருப்பார்!!! என்பதுதான்.
    உங்க பாட்டு என் திருமண நாளை நினைவு படுத்திவிட்டது.ரிஷப்சனில் இப்பாட்டைத்தான் நான் பாடினேன்.
    நன்றி.

    ReplyDelete
  28. அடக் கடவுளே... நேற்று முளுக்க வயிற்றுவலி, இன்று சுகமாகி எழும்பினேன்.. ஹைஷ் அண்ணனின் பதிவு பார்த்துச் சிரிச்சதில் மீண்டும் வந்திட்டுதூஊஊஊ... நான் வ.வலியைச் சொன்னேன்:).

    வாங்க ஹைஷ் அண்ணன்... மன்னிக்கவும் மாப்பிள்ளைத் தோழன்:)))).

    //சே சே இந்த கேட்டின் தொல்லை தாங்க முடியலப்பா:) இது வேற கேட் (Kate)./// என்னாது இந்தக் கேட்டுக்கு(kate) மட்டும் அன்புச் சகோதரி எனப் போடாமல் மொட்டையாப் போட்டிருக்கிறீங்களே... எதுக்கூஊஊஊ:)... மக்கள்ஸ்ஸ் நோட் திஸ் கோல்ட் பொயிண்ட்:).

    வர வர பிரித்தானியாவில கேட்:) அதிகமாகுதூஊஊ... இது வேற கேட் தான்...

    ///நான் தான் மாப்பிள்ளை தோழனா இருக்கோணும் என ரொம்பவெ தொல்லை பண்ணீட்டாங்கோ,,,,///
    ஹா..ஹா..ஹ... இது ஆரெண்டு சொல்லவேயில்லை....:))

    //பிளேன்ல் 2 சீட்டு வேற காலியா இருந்துதா அதில் துணைக்கு அன்பு சகோ செ,செல்வி+திரு செல்வி இருவரையும்//
    எதுக்கு? கல்லுக்கில்லு வந்தாலும் அவங்க ஏற்றுக்கொள்ளுவினம் என்றோ?:)).... செல்வியக்கா இப்போ மேஏஏஏஏஏலிஞ்சிட்டாவாம்... இது ஐ விட்நெஸ் சொன்னாங்கோஒ:)).

    //இருவரையும் அழைத்துக் கொண்டு ஜாலியா போய் வந்தஓம். இது வேற ஓம்!//

    ஓம்..ஓம்... ஒண்ணுமே சொல்றதுக்கில்ல.... அஆஆஆடக்கி வாசிக்கிறேன்:))).

    ReplyDelete
  29. ஹைஷ்126 said... 25
    //வர வழி எல்லாம் ஜன்னலை திறந்து ஒவ்வொரு அகோமு நட்பு கெல்லாம் போட்டு கொண்டே வந்தோம் :)))//
    haa..haa..haa.. சிரிச்சு முடியுதில்லை... பிரித்தானியா வந்தா நேரா இந்தியா திரும்போணும்.... இடையில எதுக்கு நியூப்பக்கம் எல்லாம் பிளேனைத் திருப்பி அ.கோ.மு எறிஞ்சு:) பாருங்க கையில பட்டு தூக்கமுடியாமல்போயிருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

    கீழ பாருங்க தமக்கு அகோமு கிடைக்கலியே என அமெரிக்கா எல்லாம் கொதிச்சு சுனாமியா எழும்பிட்டுது... நல்லவேளை யப்பாஆஆ நாங்க ஹில்லில இருக்கிறோம்:))).

    பின் குறிப்புக்கு சியேர்ஸ்ஸ்ஸ்ஸ்:))).

    மியாவும் நன்றி ஹைஷ் அண்ணன்!!!.

    இது என் பின் குறிப்பூஊஊஊ:):-
    ஹைஷ் அண்ணன், தோழன் என்றீங்க, அதெதுக்கு குதிரை வண்டில்ல நீங்க இல்லையே?:), ஒருவேளை, குதிரை.... “வெயிட்கூட நான் ஏத்தமாடேன் என்றிட்டுதோ”?:))).

    இல்ஸ்ஸ்ஸ்ஸ் பிலீச்ச்ச் சேவ் மீஈஈஈ... முறைக்காமல் கொஞ்சம் அரக்கி இருந்தா என்னவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  30. வாங்க வான்ஸ்ஸ்
    ///கேட் குடுத்த கேக் தான் எனக்கு வேணும்.//
    வான்ஸ்ஸ்ஸ் எந்தக் கேட்:) டைச் சொல்றீங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //அகோமு எல்லாத்தையும் அதீஸ் தலையில் குறி பார்த்து எறியுங்கோ ஹிஹி..... ///
    யப்பா... ஏனிந்த கொல வெறி:)... கூல் டவுன்.... வான்ஸ் கூல் டவுன்....

    ஹைஷ் அண்ணன்! பிளேனை ஸ்ராட் பண்ணி ஜன்னல் எல்லாம் பூட்டுங்க... நேரா அமெரிக்கா கண்ணில தெரிஞ்சதும் ஜன்னலைத் திறந்து அகோமு ஐ எறிஞ்சிடுங்க...:))) மன்னிக்கவும் குடுத்திடுங்க... :).

    ReplyDelete
  31. வாங்க இல்ஸ்ஸ்..
    எல்லோரும் முன்ன்ன்ன்ன்ன்னேறிட்டுப் போயினம் நாங்கதான் கீழ் நோக்கிப் போயிட்டிருக்கிறோம்:))...

    இனி அண்டர் கிரவுண்ட்டிலயோ?.. அங்க காத்தும் வராது வெளிச்சமும் இருக்காது... வாணாம் இல்ஸ்ஸ்... நாங்க ஏசி:) போட்ட முருங்கைமரத்தில ஏறியிருப்பம் வாங்க... அதில மட்டும்தான் ஆரும் ஏறமாட்டினம்....:))).

    பயம்மாஆஆஆஆக்கிடக்கே இல்ஸ்ஸ்ஸ்ஸ்.. சனம் கலைக்கப்போகினம்ம்ம்ம்:))).

    ReplyDelete
  32. வாங்க அம்முலு...

    //அதில் ஹைலைட்டே kate வரும்போது ஹரி அண்ணனுக்கு என்ன சொல்லியிருப்பார்!!! என்பதுதான்///
    என்னாது kate ஐக் கண்டதும், ஹைஷ் ஐக் ஹரி என ஸ்டைலா மாத்திட்டாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))

    //ரிஷப்சனில் இப்பாட்டைத்தான் நான் பாடினேன்.// ஓ... உங்க ரிஷப்ஷனுக்கு நீங்களே பாடினனீங்களோ? கிரேட்ட்ட்ட்ட்ட்...

    அவரையில பொரியலா? சுண்டலைப் பொரியல் என்கிறீங்களோ?.

    மியாவும் நன்றி அம்முலு..

    ReplyDelete
  33. நானும் அதிகாலை 2.30 மணிக்கு முழிச்சு கரெக்ட்டா கல்யாணத்தைப் பார்த்தேன் அதிரா! அதென்னமோ மனசுக்கு சந்தோஷமா இருந்துது!:) (கொசுவர்த்தி சுத்தி நம்ம கல்யாணத்தை எல்லாம் நினைச்சுப்பார்த்துக்க வேண்டியதுதான்.;))

    தோட்டம் நல்லா இருக்குது,இந்த அவரை இங்கே கிடைக்கறமாதிரி தெரியல.ஊர்ல ஒருமுறை இது வளர்த்திருக்கோம்.
    க்யூ'கம்பர்' இப்படி ஏமாத்திட்டாரே? அடுத்தமுறையாவது பாட்டு எழுதும் கம்பரா பாத்து வாங்கி நடுங்க. ஹிஹி!

    ReplyDelete
  34. வாங்க மஹி...

    விடிய எழும்பி நேரடியாக திருமணம் பார்த்திருக்கிறீங்க.... இருந்தாலும் தோழிபற்றி ஒருவார்த்தை சொல்லவேயில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பொர்ர்ர்ர்ர் ஆண்மைதானே:)))). சரி சரி கண்பட்டாலும் என்ற நல்லெண்ணத்திலயும் சொல்லாமல் விட்டிருப்பீங்க... நான் மாத்தி யோசிக்கிறேன்:))).... தோழனையாவது பார்த்தீங்களோ?:))) சரி சரி வாணாம் நான் பேசல்ல பேசல்ல பேசவேயில்லை!!!!!:))).

    //இந்த அவரை இங்கே கிடைக்கறமாதிரி தெரியல.// சூப்பமார்கட்டில இருக்கும் பாருங்க..ஊரில வெள்ளைப்பூவெல்லோ.. இங்க சோவப்பாப்:) பூக்குதூஊஊஊ:).

    //க்யூ'கம்பர்' இப்படி ஏமாத்திட்டாரே? அடுத்தமுறையாவது பாட்டு எழுதும் கம்பரா பாத்து வாங்கி நடுங்க///

    கம்பர் ஏமாந்தார்.. என்றுதான் கேள்விப்பட்டேன்.. ஆனா இந்தக் கம்பர் ஏ.. மாத்திட்டார்:)... இம்முறை ஏதும் நடும் மூடு:)) இல்லை... பார்க்கலாம்..

    மியாவும் நன்றி மஹி.

    ReplyDelete
  35. சூப்பரப்பு.தோட்டம் மாதரி இருக்கிற சின்ன தோட்டம் .

    மியாவ் மியாவ் யானைக்குட்டி. அச்சோ பூனைக்குட்டி. தம்பிகுட்டிக்கு முதுகு வலிக்கும் கீழே இறங்கு..

    ReplyDelete
  36. தோட்டம் சூப்பரபௌஊஉ

    ஆனால்நம்மால் வைகக்முடியலையே
    காதுல புகை
    பதிவு போட்டதும் ஓடிவந்தேன் ஆனால்
    மனசு சரி இலலாததால்
    எல்லார் பதிவையும் பார்த்துட்டு போயிட்டே

    தம்பி சூப்பரா ஹெல்ப் பண்ரார்
    எபப்டி கிடைக்கு இது போல் படங்கள்

    ஊசி குறிப்பு தத்துவம் எல்லாம் பிரமாதங்கோ’

    ReplyDelete
  37. வாங்க மலிக்கா...

    உஸ்ஸ்ஸ்... தம்பியைப் பார்த்து யானைக்குட்டி அப்பூடியெல்லாம் சொல்லப்பிடா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    யா..யா... தம்பி கீழ இறங்குங்கோ...:).

    மியாவும் நன்ரி மலிக்கா.

    ReplyDelete
  38. வாங்க ஜலீலாக்கா.. எங்கே போனீங்க இவ்ளோ நாளும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    அது தம்பிதான் படங்கள் அனுப்பினவர்...

    அதிரா எண்டாலே தத்துவம்தானே.. சரி சரி முறைக்க வாணாம்.

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  39. //அது கிழங்கில வராது, பருப்பிலதான் முளைக்கும் அவரை இனம்.// முதல் முறை வித்திலிருந்துதான் முளைக்கும் அதிரா. பிறகு கொடியின் அடியில் கிழங்கு விட்டிருக்கும். அடுத்தடுத்த வருடங்கள் கிழங்கிலிருந்து முளை வளர ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  40. யூஜின்ன்ன்ன்ன்.. நன்றி.

    இமாஆஆஆஆஆ எனக்கிது தெரியாமல் போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்.... கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கப்படாதோ கர்ர்ர்ர்ர்ர்:). நான் அப்படியே விட்டிருப்பேன்.

    வின்ரர் வந்ததும் அனைத்தையும் பிடிங்கி எறிந்து, துப்பரவாக்கிவிடுவது வழக்கம். போனமுறை கபேஜ் இலைகள் கன்றை பிடுங்காமல் விட்டேன்.... அது இப்போ மீண்டும் நல்ல இலைகள் வந்து சுண்டினோம்... கயர்ப்பேதுமில்லாமல் சூப்பராக இருக்கு.

    நன்றி இமா.

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.