நல்வரவு_()_


Sunday, 17 April 2011

எனக்குத் தெரியும்:)... எனக்குத் தெரியும்:)..

எல்லோரும் முறைப்பீங்க என் கவித:) பார்த்து என எனக்கு நல்லாவே தெரியும்... அதுக்காக நானே என் கைப்பட, என் ஒரே ஒரு கிட்னியைப் பாவித்து எழுதிய “அருமந்த கவிதையை” , என் பக்கத்தில நானே போடத் தயங்கினால்...

அதைவாங்கி ஸாதிகா அக்கா போடுவாவா?, இல்ல ஜலீலாக்கா போடுவாவா?, இல்ல இமா போடுவாவா? இல்ல ஆசியாதான் போட்டிடுவாவா தன் பக்கத்தில, அதுவுமில்லாட்டில் இடிச்சு இடிச்சு பக்கத்திலயே ஒட்டிக்கொண்டிருந்தாலும் இலா தான் போட்டிடுவாவா?.. போனாப்போகுதென வான்ஸ்ஸ் கொண்டுபோய் போட்டிடுவாவோ? இல்ல இன்னும் எல் போர்ட்டாகவே இருக்கிறமே இக்கவிதையைப் போட்டாவது பாஷாகிடுவமே என சந்துதான் தூக்கிப்போய் போட்டிடுவாவோ?:))).

யாருமே போடமாட்டாங்க:((, சோ... நான் போட்டேதான் ஆகவேணும்... ஏன் எண்டால் இது முளுக்க முளுக்க என் உழைப்பாச்சே....

உஸ் முறைக்காதீங்க... இப்ப என்ன காலம்? காலத்துக்கேற்றபடி சிந்திக்கத் தெரியோணும் என்னைப்போல.... அதைவிட்டுப்போட்டு முறைக்கப்பிடா.... எனக்குத் தெரியும் பின்னூட்டம் போடமாட்டீங்க ஆரும் என.. சரி சரி படிச்சிட்டாவது போங்க மக்காள்ஸ்ஸ்ஸ்..

=====================================================

இளவேனிற்காலம்

இவை சுடச்சுட எடுத்த படங்களே...

புற்றாலே புறப்பட்ட
ஈசல்களாக
பார்க்குமிடமெல்லாம்
மக்கள் கூட்டம்!!

ஆடையின்றி இருந்த
பசுமரங்களெல்லாம்
பச்சை இலைகளையும்
பலவர்ணப் பூக்களையும்
கொண்டு - தம்
மானத்தை மறைக்க
முயல்கின்றன!!

வெறிச்சோடியிருந்த
"பார்க்"குகளெல்லாம்
குழந்தைகளின்
குதூகலத்தைக் கண்டு
புத்துயிர் பெறுகின்றன!!

அரையும் குறையுமாக
இருந்த குப்பைத்
தொட்டிகளெல்லாம்
நிரம்பி வழிகின்றன - வீடுகள்
சுத்தப்படுத்தப்படுவதால்!!

இறந்து விடுவோமா
என பனிக்கட்டிக்குள்ளே
ஏங்கிக்கிடந்த - புல்
வேர்களெல்லாம்
விட்டோமா பாரென
விட்டத்தைப் பார்த்துப்
பசும்தரையாகின்றன!!



இருட்டையும் குளிரையுமே
கண்டு விறைத்திருந்த
கண்களெல்லாம் 
வெளிச்சத்தைக்
கண்ட நாணத்தில்
கறுப்புக்கண்ணாடியைத்
தேடுகின்றன -தம்மை
மறைத்துக்கொள்ள!!






நீயின்றி நானில்லை -என
ஒட்டி உறவாடிய
குளிர்கால அங்கிகளெல்லாம்
சிறிது ஓய்வெடுக்கவென்று
அடிப்பெட்டியிலே
அடைக்கலமாகின்றன!!

காணாத தூரத்திலிருந்த
பறவைகளும் அவற்றின்
அழகிய கூக்குரல்களும்
கண்ணுக்கும் காதுக்கும்
கவிமழையாகின்றன!!



நானும் இதுவரை
போட்டிருந்த என்
முக்காடை நீக்கி,
மெதுவாகப் பார்க்கிறேன்
ஆம் - இளவேனில் காலம்
ஆரம்பித்துவிட்டதை!!

====================================================

ஊசி இணைப்பு:

======================================================
ஆயிரம் தான் சொல்லுங்கள்
 கல்லாய் நடக்கும் மனிதர்களை விட
 கல்லாய் கிடக்கும் கல்
மேன்மையானதே
======================================================

41 comments :

  1. படங்களும்,கவிதையும் அழகு...

    ReplyDelete
  2. ஆஹா வடை எனக்குதான் அதிரா...ஆனா நிஜ வடையைதான் காணோம்.

    ReplyDelete
  3. eppo idichen..22222 bad.. kavithai too good..
    Happy spring and Summer dear!

    ReplyDelete
  4. இதோ பின்னூட்டம்.மொத்தமா படிச்சுட்டு அப்புறம் வர்ரேன்..ஏன் இந்த பில்ட் அப்பூஊஊஊஊஉ...பூஸாருக்கு?

    ReplyDelete
  5. //நீயின்றி நானில்லை -என
    ஒட்டி உறவாடிய
    குளிர்கால அங்கிகளெல்லாம்
    சிறிது ஓய்வெடுக்கவென்று
    அடிப்பெட்டியிலே
    அடைக்கலமாகின்றன// ஆஹா..என்னா அர்புதமான வரிகள்.கிட்னியாலே யோசித்தே இப்பூபூபூ[ஊடி அழகாக எழுதும் பூஸ் எல்லோரையும் போல் மூளையை கொண்டு யோசித்தால்...

    ReplyDelete
  6. ஆராவதுபின்னூட்டம் போட்டு இருக்காங்களா என்று பார்த்துக்கொண்டே இருக்கும் பேபி அதிரா படத்தை விட்டு கண்கள் அகல் மறுத்து விட்ட்து.

    ReplyDelete
  7. வாங்க மேனகா... ஆருமே வரமாட்டீங்க என யோசிச்சுக்கொண்டேஏஏஏ கட்டிலுக்குக் கீழ இருந்தனா... அதுதான் வடைக்கு ஓடர்கூடக் குடுக்கேல்லை.... அடுத்தமுறை ஆரியபவானில வாங்கித்தருவன் ஓக்கை..:).

    மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  8. வாங்க லக்ஸ்மி அக்கா, நலமோ? மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஆரிய பவனில்த்தான் வாங்கி தருவீர்களா?சுட்டுத்தர மட்டீர்களா?வடையைத்தான்.

    ReplyDelete
  10. வாங்க இல்ஸ்ஸ்... என்ர கையுக்கு தைலம்போட்டுத் தேய்ச்சுவிட்டீங்களே அதெல்லாம் மறந்துபோச்சா? அவ்வ்வ்வ்வ்வ் சரி சரி இது நமக்குள்ள இருக்கட்டும்.. ஞாயத்தைத் தட்டிக் கேக்க ஜெய் யும் இல்லை இப்போ.

    மியாவும் நன்றி இல்ஸ்ஸ்ஸ். ஆனாலும் குளிர் இன்னும் குறையேல்லை...

    ReplyDelete
  11. ஸாதிகா said... 10
    ஆரிய பவனில்த்தான் வாங்கி தருவீர்களா?சுட்டுத்தர மட்டீர்களா?வடையைத்தான்.

    //ஐ... ஸாதிகா அக்கா... சுட்டுத் தருவன் ஆனா கட்டிலுக்குக் கீழ அடுப்புமூட்டப்பிடாதெண்டு இல்ஸ்ஸ் ஸ்ரிக்டாச் சொல்லிட்டா:))).

    ReplyDelete
  12. //ஏன் இந்த பில்ட் அப்பூஊஊஊஊஉ...பூஸாருக்கு? //

    இல்ல ஸாதிகா அக்கா... குருவிக்குத் தக்கதுதானே ராமஸ்வரம்.. என் கிட்னிக்கு தக்கமாதிரித்தானே கவிதை எழுதவரும்.... ஆனா இதெல்லாம் ஒரு கவிதையா என எல்லோரும் அடிக்க வந்திட்டா? இன்னும் இருக்கே என் சொந்த ஆக்கம்... இப்பூடி பில்டப்பூ பலமா இருந்தால்தானே கட்டிடம் ஆடாதூஊஊஊஊஊஉ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

    //கிட்னியாலே யோசித்தே இப்பூபூபூ[ஊடி அழகாக எழுதும் பூஸ் எல்லோரையும் போல் மூளையை கொண்டு யோசித்தால்... //
    ரொம்பப் புகழ்றீங்க ஸாதிகா அக்கா... முகமெல்லாம் பிங் ரோஸாப்பூ மாதிரி ஆச்சுதூஊஊஊ:))).

    ReplyDelete
  13. ஸாதிகா அக்கா... அப்பவே பேபி அதிரா நல்ல வடிவு என்ன?:))))

    ReplyDelete
  14. அப்போன்னா இப்ப உள்ள பெரிய அதிராவை காடுங்க பார்ப்போம்.

    ReplyDelete
  15. ஸாதிகா said... 15
    அப்போன்னா இப்ப உள்ள பெரிய அதிராவை காடுங்க பார்ப்போம்.
    /// ஸாதிகா அக்கா.... உங்கட பதிவு பார்த்து இன்னும் வெய்க்கம் வெய்க்கமா வருதூஊ...:)) கொஞ்சம் பொறுங்க, போனதும்(அட நான் வெய்க்கத்தைச் சொன்னேன்:)) சுடச்சுட படமெடுத்துப் போட்டிடுறேன்...

    என்ன ஸாதிகா அக்கா, பேபியில உப்பூடி எண்டால் இப்போ(சுவீட் 16 ல:)) எப்பூடியிருப்பன் என கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கோவன்...:))).

    ReplyDelete
  16. //நானும் இதுவரை
    போட்டிருந்த என்
    முக்காடை நீக்கி,
    மெதுவாகப் பார்க்கிறேன்
    ஆம் - இளவேனில் காலம்
    ஆரம்பித்துவிட்டதை!!//

    //ஆயிரம் தான் சொல்லுங்கள்
    கல்லாய் நடக்கும் மனிதர்களை விட
    கல்லாய் கிடக்கும் கல்
    மேன்மையானதே//


    கவிதையில் இப்படியும் அசத்த முடிமோ!
    அருமை அதிரா அருமை...

    ReplyDelete
  17. //நானும் இதுவரை
    போட்டிருந்த என்
    முக்காடை நீக்கி,
    மெதுவாகப் பார்க்கிறேன் // திரும்பப் போட்டுராதைங்க. தொடரட்டும் கவிதைகள். அழகாக எழுதுறீங்க அதிரா.

    ReplyDelete
  18. வாங்க ஆசியா,
    எப்பவுமே நான் நினைக்கிறதுக்கு எதிராத்தான் எல்லாமே நடக்குது.... ஆரும் வரமாட்டினமே, இட்ஸ் ஓக்கை எதிர்பார்ப்பு இருந்தால்தானெ ஏமாற்றம் இருக்கும் என எண்ணிட்டே பதிவு போட்டேனா... எல்லோரும் சுடச்சுட வந்து பின்னிட்டீங்க பின்னூட்டமாக...:).

    மிக்க நன்றி ஆசியா.
    2012 நெருங்குறதால, இனிக் கொஞ்சம் மளமளவென என் பொகிஷமெல்லாம் போட்டிடவேணும் என ஒரு வெறி(இது வேற வெறி:)) மனதில எழுந்திருக்கு:).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  19. வாங்க இமா, இப்போதைக்குப் போடமாட்டன் இனி ஒக்டோபரிலதான்:)))).

    மிக்க நன்றி இமா. அப்போ தொடர்ந்து கவி எழுதச் சொல்றீங்க அப்பூடித்தானே?:).

    ReplyDelete
  20. இமா said... 21
    ம். ;)


    ம்ம் ஓக்கை:), இல்ஸ்ஸ் ஸ்ராட் மீசிக்க்க்க்க்... சாரி ஒரு பேப்பரும் பென்னும் குடுங்க:)).

    ReplyDelete
  21. நல்ல கவிதை ..
    மிக ரசித்தேன் ...

    ReplyDelete
  22. அதீஸ், கவிதை நல்லாதேன் இருக்கு. அதுவும் கடைசி, " கல்லாய் இருக்கும் கல் மேல்", சூப்பர். இங்கே சிலரின் கதை, நடவடிக்கைகள் பார்க்கும் போது தலையில் கல்லை தூக்கி போடலாம் போல இருக்கு. கொலைகேஸில் உள்ளே போனாலும் பரவாயில்லை.
    குளிர் இருந்தாலும் பிரச்சினை, குளிர் இல்லாவிட்டாலும் கஷ்டம் ஹாஹா. இங்கே வெய்யில் அனல் அடிக்கும். அதை விட குளிரே பரவாயில்லை என்று நினைப்பதுண்டு.

    ReplyDelete
  23. வாங்கோ அரசன்!!!

    அரசன் said... 23
    நல்ல கவிதை ..
    மிக ரசித்தேன் ...
    // உண்மையாகவோ? மிக்க நன்றி.

    ReplyDelete
  24. வாங்கோ வான்ஸ்ஸ்..
    //இங்கே சிலரின் கதை, நடவடிக்கைகள் பார்க்கும் போது தலையில் கல்லை தூக்கி போடலாம் போல இருக்கு. கொலைகேஸில் உள்ளே போனாலும் பரவாயில்லை.
    //
    ஏதோ ஒரு முடிவோடதான் இருக்கிறீங்க... படித்ததும் மனம் விட்டுச் சிரித்தேன்... உண்மைதானே எருமைமேல மழை பெய்ததைப்போல இருப்பார்கள் சிலர்... எந்த அசைவுமில்லாமல்:))).

    எங்களுக்கு எப்பவுமே கூஊஊலாகத்தான் இருக்கும்.. மலைப்பகுதியாச்சே.... எப்பவாவது ஓரிரு நாட்கள் மட்டுமே ஃபான் தேவைப்படும்.

    ReplyDelete
  25. கவிதை ரொம்ப நல்லா இருக்கு...! அருமையான கற்பனை...!

    ஊசி இணைப்பு படமும் நல்லா இருக்கும்...! அருமையான ”கற்பனை”...! :)

    ReplyDelete
  26. வாங்க கவிக்கா ..

    //ஊசி இணைப்பு படமும் நல்லா இருக்கும்...! அருமையான ”கற்பனை”...! :)
    /// அதூஊஊஊஊஊ பேபியாக இருக்கும்போது எடுத்தது..:)).

    மியாவும் நன்றி கவிக்கா.

    ReplyDelete
  27. இங்க இன்னும் சம்மர் வரல.. வசந்த காலம் கூட இன்னும் கூடல..

    ரெண்டாவது படம் மனசுக்கு ஒரு வெறுமையைத் தருது அதிரா :)

    //இறந்து விடுவோமா
    என பனிக்கட்டிக்குள்ளே
    ஏங்கிக்கிடந்த - புல்
    வேர்களெல்லாம்
    விட்டோமா பாரென
    விட்டத்தைப் பார்த்துப்
    பசும்தரையாகின்றன!!//

    என் நண்பர் ஒருத்தர் கேட்டார் - பனி மூடி இருக்கும் போது இந்தப் புல் எல்லாம் எப்படி மூச்சு விடும் ன்னு... :)

    ReplyDelete
  28. கவிதை சூப்பர்ப்..

    கடைசி படம் அருமையோ அருமை...கலக்குறிங்க அதிரா..

    ReplyDelete
  29. வாங்க சந்து...

    இப்போ இங்கு பூக்கள், இலைகள் எல்லாம் மளமளவென எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது.

    2வது படம், வானத்தை நோக்கி எடுத்தேன்... அதனால்தானாக்கும்:(.

    ///என் நண்பர் ஒருத்தர் கேட்டார் - பனி மூடி இருக்கும் போது இந்தப் புல் எல்லாம் எப்படி மூச்சு விடும் ன்னு... :)
    // புல் மட்டுமில்லையே, பூச்சி புழுக்களும் உறங்கித்தானே விழிக்கின்றன.

    மிக்க நன்றி சந்து.

    ReplyDelete
  30. வாங்க கீதா..

    கடசிப்படம்....ஹிக்..ஹீ...ஹீ... சின்னனாயிருக்கும்போது அப்பூடித்தான் இருந்தேன்... ரொம்ப அடக்க ஒடுக்கமாக:))))).

    மிக்க நன்றி கீதா.

    ReplyDelete
  31. கலக்குறீங்க அக்கா அருமையான தொகுப்பு

    ReplyDelete
  32. வாங்க யூஜின்...

    காதைக் கொண்டுவாங்க கிட்ட... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    நான் எதைக் கலக்கிறேன்....

    ஆ..... பயந்திடாதீங்க நான் இப்பூடித்தான்:))).

    மியாவும் நன்றி.

    ReplyDelete
  33. எல்லோரும் கவிதை எழுது ரீங்க ஆன நானும் எழுதலாமுன்னு மண்டை கொடஞ்சா இது வரை முடி கொட்டியது தான் மிச்சம்.

    முதலவது முதல் ஊசி குறிப்பு வரை ஜூப்பரு,
    அவார்டு வந்து சொல்வதற்கௌள் இந்தமாதம் முடிந்துடும் போஅல்,
    உடன் வந்தமைக்கு மிக்க சந்தொஷம்

    ReplyDelete
  34. வாங்க ஜலீலாக்கா...

    முதல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), இவ்ளோ லேட்டா வந்தால் கர் சொல்லாமல் என்ன சொல்றதாம்..:)).

    //உடன் வந்தமைக்கு மிக்க சந்தொஷம்
    //
    ஜலீலாக்கா, நான் எங்கேயும் கணக்குப் பார்த்து.. அவ ஒருக்கால் வந்தால்தான் நான் ஒருக்கால் போவேன் என்றெல்லாம் கணக்கு வைப்பதில்லை, முடிந்தவரை போய்க் குதித்து பின்னூட்டம் போடுவேன்...

    ஆனா... ஆரும் என்னோடு கணக்குப் பார்க்கினமெண்டால் நானும் பார்ப்பேன்...:)). சரி இதை விடுங்க.

    நீங்கதான் ஆல் இன் ஆல் ஆச்சே... ஜலீலாக்கா... அடுத்தமுறை ஒரு குட்டிக் ஹைக்கூ கவிதை முயற்சி செய்யுங்கோவன் வந்திடும்...

    மியாவும் நன்றி ஜலீலாக்கா.

    ReplyDelete
  35. இல்ல அதிரா நோ சான்ஸ், கதை ஒகே ஆனால் கவிதை வுஹூஊ

    ReplyDelete
  36. அன்பு அதிரா நலமா?உங்க கவிதைத்தொகுப்பும் உங்க கவிதையும் மிக அருமை.
    அதுவும் உங்க கவிதை மிகமிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.கால‌த்துக்கு தகுந்தகவிதையும் கூட. நான் தாமதமாக பின்னூட்டம் தருவற்கு மன்னிக்க.
    பேபி அதிராவுக்கு சுத்தி போடுங்க
    //கல்லாய் கிடக்கும் கல் மேல்//உண்மையான வரிகள்.

    ReplyDelete
  37. அப்போ கதை எழுதுங்க ஜலீலாக்கா!!!.

    வாங்க அம்முலு... ரொம்ப ரொம்ப பிஸியாக இருக்கிறீங்களே... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(சொறி இது உங்களுக்கில்லை, இதை ரைப் பண்ணும்போது ஒரு எலியார் என்னைப் பார்த்துப் பார்த்து ஓடுறார்.... இது அவருக்குச் சொன்னேன்:)))).

    என் கவிதையை அருமை எனச் சொல்லிட்டீங்க... இனிக் கவிதைகள் தொடரும்... உங்கள் கண்கள் புளிக்கும்வரை:)).

    பேபி அதிராவைப் பார்த்தே சுத்திப் போடச் சொல்றீங்க... சுவீட் சிக்ஸ் ரீன் அதிராவைப் பார்த்தீங்களே எண்டால்... சுத்திப் போட்டால் பத்தாது:).. அதுக்கும்மேல ஏதும் செய்தால்தான் கண்ணூறு போகும்:). சரி சரி முறைக்க வாணாம்.

    மியாவும் நன்றி ஜலீலாக்கா, அம்முலு.

    ReplyDelete
  38. அதிரா...உங்களுக்குக் கவிதையும் எழுத வருதே.அப்படியே கோடையின் ஆரம்பக் காட்சிகளைக் கண்ணுக்குள் கொண்டு வந்த மாதிரி இருக்கு.குளிரின் காட்சியை அனுபவிக்காதவர்கள்கூட அனுபவித்திருப்பார்கள்.மிதமான இளம்சூடுட்டு வெயிலோடு அருமையான கவிதை.பாராட்டுக்கள்!

    நான் எழுதிருப்பது குளிர்தொடங்கும் காலம்.மஞ்சள் பழுத்தல்களைச் சேமித்து பல்கனியில் வைத்து அழகு செய்வதுபோல !

    உங்கள் ஊசிஇணைப்பும்,தத்துவமும் உங்கள் ஸ்டைலோ.தொடருங்கள்.அருமை !

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.