நல்வரவு_()_


Saturday 7 May 2011

கிச்சு..கிச்சு..கிச்சு.. வருதோ?:))))

வருதோ? வருதோ? நான் சிரிப்பைக் கேட்டேன்:)...


வீட்டில... எல்லோரையும் உருட்டி உருட்டி கிச்சு கிச்சு.. காட்டிச் சிரிக்க வைப்பதென்றால் எனக்கு ரொம்ப புய்க்கும்:)..., ஆனா நான் தப்பி விடுவேன்.. சரி சரி ஆவலா கதை கேட்டது போதும்:)), இங்கே அதுக்குப் பதிலா எழுத்தில “பகிடிகளாம்” படிச்சிட்டு முடிஞ்சால் சிரிங்க மக்ஸ்ஸ்ஸ்ஸ்:)).





உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா?

இல்ல சார் எனக்கு சிகரெட்டெல்லாம் பிடிக்கும் பழக்கமில்லை.




நாம நினைப்பதெல்லாம் நடக்க வெளிக்கிட்டால் என்ன ஆகும்?

தெரியல்லியே... ராஃபிக் ஜாம் ஆகிடும்:).

oo

உங்க சொந்த ஊர் எது?

அந்தளவுக்கெல்லாம் வசதி இல்ல சார், சொந்த வீடுதான் இருக்கு.

oo
Cat Funny Drives Car Driving Kitty Cats LOL Laughs Laughing icon icons emoticon emoticons animated animation animations gif gifs kitten kittens animal animals

உன்னைப் பார்த்து ஒரு அழகான பொண்ணு சிரிக்கிறாண்ணா என்ன அர்த்தம்?

என்ன அர்த்தம்? உன் பின்னால நான் நிற்கிறேன் என்று அர்த்தம்.

oo

கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிகணும் என்றால் நாம என்ன பண்ணணும் சாமி?

பாவம் பண்ணனும்.

oo

என்னால வாயே திறக்க முடியல்ல டாக்டர்..

சரி சரி இருங்க, உங்க மனைவியை வெளியே போகச் சொல்றேன்.

oo

உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்?

வாயாலதான்.

oo

கடைக்காரர்:
"அம்மா உங்க நாய், என் கடைப் பழங்களைத் தின்னுது பாருங்க...!"

அந்தப் பெண் நாயிடம் திரும்பி:
"ஜிம்மி... பழத்தை கழுவாம சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்லறது...?"

oo

தாத்தா!! ஏன் உங்க தலை மட்டும் வெள்ளையாவும் தாடி கருப்பாகவும் இருக்கு?

...அதுவா…அது வந்து என்னோட தாடி என் தலைமுடியை விட 20 வருஷம் இளையது.

oo

ஆசிரியர்:`காளையும் பசுவும் புல் மேய்ந்தன`, இதனைச் சரியா சொல்லு.

மாணவன்: `பசுவும் காளையும் புல் மேய்ந்தன`.

ஆசிரியர்: எப்படி?

மாணவன்: லேடீஸ் ஃபர்ஸ்ட் இல்லியா சார்?

oo

சர்தார் Electric கடையில்: "ஒரு ஆம்பளை Fan-ம், ஒரு பொம்பளை Fan-ம் கொடுங்க..."

கடைக்காரர்: "என்னய்யா உளர்ற? Fan-ல ஏது Ladies, Gents...?"

சர்தார்:  "அட.. Bajaj-ல ஒன்னும், Usha-ல ஒன்னும் கொடுப்பா..."

==========================================================
இடைவேளை

பேபி அதிராவும்...ம்ம்ம்..
இதுக்கு மேல ஆரும் குறுக்க கேள்வி கேய்க்கப்பிடா..:(((
==========================================================

முளைச்சு மூணு இலை விடலை.... அதுக்குள்ள என் பையன் இப்படி பண்ணிட்டானே..."

"அடடா...அப்படி என்னங்க பண்ணிட்டான்?"

"அந்த செடியை பிடுங்கிட்டான்...."

oooooooooooooooooooooooooooooooooo




இது ரொம்ப ஓவரா இல்ல????.....

கணவன் : என்னை ஒரு முட்டாள்னு எல்லார் கிட்டேயும் சொல்றதா கேள்வி பட்டேன் .

மனைவி : சாரிங்க . எனக்கு அது ஒரு ரகசியம்ன்னு தெரியாது .

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? அது மூளைக் காய்ச்சல்தான் பரவுதாம்!, அது எப்பிடி உங்களுக்கு வரும்?

oo

தாத்தாவும் பேரனும் TV பார்க்கிறார்கள்....

தாத்தா:
கரண்டைக் கண்டுபிடிச்சவன் நல்லா இருக்கோணும்.

பேரன்: ஏன் தாத்தா?

தாத்தா: கண்டுபிடிச்சிருக்காட்டில் நாங்க இப்போ இருட்டில இருந்தெல்லோ TV பார்க்கோணும்.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
பின் இணைப்பு:
வாழ்க்கை ஒண்ணும் எம்.பி.3 பிளேயர் இல்லை,  
நமக்குப் பிடிச்சபாட்டைக் போட்டுக் கேட்கிறதுக்கு....-



அது பூஸ் ரேடியோ மாதிரி, 
வாற பாட்டை நாம்தான் ரசிச்சுப்பழகோணும்..! ஓக்கை?!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
 

நாங்கெல்லாம் ஆரு???
சைக்கிள் ஹப்பிலயே பிளேன் ஓட்டின ஆட்களாச்சே....
ஆர் துரத்தினாலும் ஓடித் தப்பிடுவோம்:))...


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது தத்துவம்
காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

30 comments :

  1. பின் இணைப்புத்தான் எல்லாத்துலயும் டாப்பு! :)

    நல்ல ஜோக்ஸ் அதிரா! ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  2. அத்தனை ஜோக்ஸும் மனம்விட்டு சிரிக்கும் படி இருக்குது அதிரா,ஆமாம் தத்துவப்பாடல் கேட்க முடியலை,எரர்னு வருது.இலவசமாக ஒரு பாட்டு கேட்கலாம்னு பார்த்தேன்..
    அன்னையர் தின வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. எனக்கு பாட்டு வொர்க் ஆகுதே ஆசியாக்கா?

    எல்லாரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பெயரைச் சொல்லி..

    இந்தப்பாட்டை முதல் முறையா பார்க்கிறேன் அதிரா!:)

    ReplyDelete
  4. வாங்க மஹி... இம்முறை கடலைவடை உங்களுக்கே:).

    எல்லோரும் கொண்டாடுவோம்... பல தத்துவ வரிகள் உள்ளே இருக்கு.. மீண்டும் நேரமுள்ளபோது கேட்டுப்பாருங்க.

    மியாவும் நன்றி மஹி.

    ReplyDelete
  5. வாங்க ஆசியா.

    இது கொஞ்ச நாள் முன்பே ரேடியோவிலும், நெட்டிலுமாக தேடி எடுத்து ஆயத்தப்படுத்தி வைத்திருந்தேன், ஆனா ஏனோ தெரியேல்லை புளொக் எழுத மனம் வருகுதேயில்லை, ஏனோதானோ என ஒரு வெறுப்பாக இருக்கு.

    இப்படியே விட்டால் கைவிட்டுவிடுவேன் என நினைத்தே என்னை ஃபோச் பண்ணி நேற்று இப்பதிவைப் போட்டு முடித்தேன்.

    போட நிறைய இருக்கு, பொறுமையாக இருந்து ரைப் பண்ண மனம் அமையவேணும்.

    மியாவும் நன்றி ஆசியா.

    அன்னையர்தின வாழ்த்துக்கள் உங்களுக்கும். இங்கு மார்ச்சில வந்து போயிட்டுது.

    ReplyDelete
  6. // இது ரொம்ப ஓவரா இல்ல????.....//

    இல்ல.. ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவரா இருக்கு!! மியாவ் நாங்கள்லாம் பாவமில்லையா?? ஓஒ... அதுக்காகத் தான் அந்த தத்துவப் பாடலா..? அழகு அழகு அத்தனை ஜோக்ஸும் அழகு!!

    ReplyDelete
  7. // ஏனோ தெரியேல்லை புளொக் எழுத மனம் வருகுதேயில்லை, ஏனோதானோ என ஒரு வெறுப்பாக இருக்கு.//

    கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிக்கணும் என்றால் நாம என்ன பண்ணணும், நிறைய எழுதணும். நோ வெறுப்ஸ் :-)))

    ReplyDelete
  8. போட்ட்டதும் வடை சாப்பிட ஓடி வந்தேன், ஆனால் முடியல

    முதலல நல்ல சிரிச்சிக்கிறேன்

    ஹிஹிஹிஹி
    ஹாஹாஹாஹா

    அஹ அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்


    புவாஹாஹாஅஹ்ஹாஆஆ புவாஹாஹா

    அப்பரம் தான் மெதுவா மறுபடி வருவேன்

    ReplyDelete
  9. கிச்சு கிச்சு சொன்னதுமே
    வாயெல்லாம் பல்லு
    அது எப்படி பூஸாராதேடி பிடிச்சி அதுக்கு ஏற்ற சிப்பு சிப்பு

    தத்துவமும்ஜூப்பரு, பேபி அதிரா முன்பைவிட இன்னும் மெருகேறி இருக்கார், உடனே காலர தூக்கி விடுவது தெரிய்து தெரியுது....

    ReplyDelete
  10. // ஏனோ தெரியேல்லை புளொக் எழுத மனம் வருகுதேயில்லை, ஏனோதானோ என ஒரு வெறுப்பாக இருக்கு.//
    என்ன அதிரா நீங்க இப்படி எழுதினதை வாசித்ததும் சிரிப்பெல்லாம் நின்றுவிட்டது. இதுக்குதான் அம்மா அடிக்கடி சொல்லுவா நிறைய சிரிக்காதை அழப்போறாய் என.சும்மா ஜோக்தானே.

    உங்க ஜோக்கை படித்து சிரித்தேன்.சூப்பர்.
    படங்கள் எல்லாம் அருமையாய் இருக்கு.

    //காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
    ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!//
    இதுதான் டாப்பு.
    தத்துவப்பாடல் அருமை.
    எப்பூடி? இப்படியெல்லாம் எழுதுறீங்க?.. மிக்க நன்றி

    ReplyDelete
  11. அன்னையர் தின வாழ்த்துக்கள்!!


    சூப்பர்ர் ஜோக்ஸ் அதிரா,அனைத்தையும் ரசித்து படித்தேன்..

    ReplyDelete
  12. அதிரா பாடலை இன்றும் கேட்க முடியலை,சரி மகி பாட்டையாவது சொன்னாரே! பாடலை கேட்காமல் படை எடுப்பை நிறுத்தப்போவதில்லை.எனக்கு நெட் ப்ராளம் அதிரா..

    ReplyDelete
  13. எல்லா ஜோக்ஸ் சூப்பர்...!

    //என்னால வாயே திறக்க முடியல்ல டாக்டர்..

    சரி சரி இருங்க, உங்க மனைவியை வெளியே போகச் சொல்றேன்.
    //


    என்னது???? டாக்டரே டாக்டர் கிட்ட போனாரா??? எது எப்படியோ... ரொம்பதான் பயம்போல.............. யாருக்கா??? டாக்டர் கிட்ட போன டாக்டருக்குதான்... :P (வெயர் இஸ் மை நாய்குட்டி??)

    ReplyDelete
  14. வாங்க அப்துல் காதர்.

    இந்தியாவிலதான் ஒரு ஊரில மனைவிமார் கொடுமை என கணவன்மார் போலீஷிலே புகார் செய்திருக்கிறர்களாம்... இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? 2012 தான் பதில் சொல்லும்:((.

    ///கடவுள் நம்ம பாவங்களையெல்லாம் மன்னிக்கணும் என்றால் நாம என்ன பண்ணணும், நிறைய எழுதணும். நோ வெறுப்ஸ் :-)))///

    நிறையச் சிரிச்சிட்டேன்... எப்பூடி இப்பூடியெல்லாம் திங் பண்ணுறீங்க?:).

    ஹா...ஹா...ஹா... இன்னும் புளொக் எழுதாம இருக்கிறவங்களைப் பற்றி நினைச்சேன் சிரிச்சேன்:)))))....

    அதுசரி ஒரு சின்ன டவுட்... பாதியில சிலபேர் புளொக் எல்லாம் மூடிட்டுப் போகினமே, அவர்களெல்லாம் சீக்கிரமே பாவத்தையெல்லாம் தீர்த்திட்டினமோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    உங்கட பெயரைப் பார்க்கும்போதெல்லாம் ஜெய் இன் நினைவுதான் வருது.

    மியாவ்....மியாவ்...(ரொம்ப நன்றி அப்படியென்று என் பாஷையில சொன்னேன்:))).

    ReplyDelete
  15. ஹ‌ ஹா... ரொம்ப நாளைக்கு ஆப்புரம் வந்திருக்கேன்..
    நான் கிச்சு மூட்டினா சிரிக்க ஒரு ஆள் நிக்கில் தான் :)

    அதீஸ் நீங்க அக்கவுண்ட்ஸ் சொல்லி தந்தீங்கல்ல... 99/100
    ஒரு மார்க் எங்கேன்னு கேக்கப்படாதூ....

    ஆமா அது என்னது எதோ பிளாக் மூடப்பட்டது.. சம்திங்..சம்திங்... அது நானின்ல்லை...

    ReplyDelete
  16. அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  17. அதீஸ், சூப்பரோ சூப்பர். எனக்கும் ப்ளாக் எழுத கடுப்பு, வெறுப்பு, இப்படி அல்லாமே வருது. கொஞ்ச நாளா கமன்ட் போடக் கூட மூட் வருகுதில்லை. ஒரு மாற்றம் வேணும் போலை இருக்கு. எப்படா ஸ்கூல் லீவு விடும் கனடா போகலாம் என்று இருக்கு.

    ReplyDelete
  18. வாங்க புவஹா... ஹா...ஹா.. ஜலீலாக்கா..

    உங்களுக்கில்லாத வடையா?.. கட்டிலுக்குக்கீழ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு எடுத்து ஒளிச்சு வச்சிருக்கிறேன்.... மயிலுக்குக் காட்டாமல் எடுங்க.. காட்டினா அவ்ளோதான் பிச்சு பிச்சுத்தரச்சொல்லி டான்ஸ் தான் நடக்கும்:))).

    ஜலீலாக்கா உங்களுக்கும் கிச்சு..கிச்சூஊஊஊஊ:))

    //பேபி அதிரா முன்பைவிட இன்னும் மெருகேறி இருக்கார், உடனே காலர தூக்கி விடுவது தெரிய்து தெரியுது....
    //

    ஹா..ஹா..ஹா.. தம்பியைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு வோக்கிங் போறாவாம்...:))).

    மியாவும் நன்றி ஜல் அக்கா.

    ReplyDelete
  19. வாங்க அம்ம்ம்ம்முலு...

    பயப்பிடாதீங்க அம்முலு... சிலநேரங்களில் எழுத மனம் வருகுதில்லை அ-து மூடு:) வருகுதேயில்லை... ஏனோதானோவென இருக்கு, மற்றும்படி புளொக்கை எல்லாம் மூடிட்டுப்:) போயிடமாட்டேன்... செய்த பாவம் எல்லாம் தீரும்வரை எழுதோணுமாமே, எம்.அப்.கா சொல்லியிருக்கிறார்:))).

    எந்த ஒரு வேலையாயினும் மனம் ஆசையாக துடிக்கும்போதுதான் செய்யலாம்.... இல்லாவிட்டால்... அதில் ரசனை இருக்காது படிப்போருக்கும்.

    நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, என்னிடம் உள்ளவற்றை சேகரிக்கவே இதனை ஆரம்பித்தேன் என, அதனால நான் எழுதுவதை நிறுத்தமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன், இது என் டயறி!!!!.

    சின்ன வயதிலிருந்தே நோட் புக்கில், காதில் விழுவதையெல்லாம் கிறுக்கி வைப்பேன், அது இப்பவும் தொடருது, கண்ணில் காணும் அழகான நோட் புக்கெல்லாம் வாங்கி வந்து கட்டிலுக்கு பக்கத்தில், மேசை லாச்சியில் எல்லாம் வைத்திருக்கிறேன், நகைச்சுவை, பிடித்த வசனம், .. எதுவாயினும் அதில் கிறுக்குவேன். அவற்றை இங்கு பதிவிடுகிறேன்.. பொழுதுபோகாத நேரங்களில், என்னுடையதை நானே:) படித்துப் பார்ப்பேன்..... எனக்கு என் பதிவை மீண்டும் மீண்டும் படிப்பதில் எப்பவுமே அலுத்ததில்லை:).

    இத்தனை அக்கறையாக மெயிலும் அனுப்பி இங்கும் கவலைப்படுறீங்கள்... அதைப் பார்க்க எனக்கும் கவலையாக இருக்கு.... டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்...

    எனக்காக வந்து பதிவுபோட்டமைக்கும், ரசித்தமைக்கும் மியாவும் நன்றி அம்முலு.

    ReplyDelete
  20. வாங்க மேனகா...

    தெரிஞ்சோ தெரியாமலோ:)) சூப்பர் ஜோக்ஸ் எனச் சொல்லி என்னை தட்டி எழுப்பி விட்டிட்டீங்க... இனிப் பாருங்க... ஒரே வெடி ஜோக்ஸ்தான் வெளிவரும்:).

    மியாவும் நன்றி மேனகா.

    ReplyDelete
  21. ஆசியா... ஓயாதீங்க... பாட்டுக்கேட்கும்வரை போராடுங்க... நெட்டோடு:)))

    ReplyDelete
  22. வாங்க கவிக்கா..

    சொல்றதெல்லாம் சொல்லிப்போட்டு.. நாய்க்குட்டியைத் தேடுறீங்களோ:)? இங்க நாய்க்குட்டி இல்லை, “கடிநாய்தான்” இருக்கு:)))).

    படிச்சுப்படிச்சுச் சிரித்தேன்... மியாவும் நன்றி.

    ReplyDelete
  23. வாங்க இல்ஸ்ஸ்ஸ்..

    //நான் கிச்சு மூட்டினா சிரிக்க ஒரு ஆள் நிக்கில் தான் :)//
    நம்பிட்டேன்ன்ன்ன்ன்:))).

    குருவைவிட(அது நான் தேன்:)) 3 புள்ளிகள் அதிகம் எடுத்த சிஷ்யைக்கு வாழ்த்துக்கள்...

    குரு பத்தடி பாய்ந்தால் சிஷ்யை 16 அடி பாயோணும் ஓக்கை..:).

    இப்படிக்கு,
    பூஸானந்தா.....:)).

    //ஆமா அது என்னது எதோ பிளாக் மூடப்பட்டது.. சம்திங்..சம்திங்... அது நானின்ல்லை...
    // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... விழுறதெல்லாத்தையும் பொறுக்கி உங்கட தலையில போடப்பிடா:)))... பேசாமல் கட்டிலுக்குக் கீழ இருங்க.:))).

    மியாவ்...மியாவ்... மயில்.

    ReplyDelete
  24. வாங்க யூஜின் மியாவும் நன்றி...

    ReplyDelete
  25. வாங்க வான்ஸ்ஸ்.

    உண்மைதான்... எனக்கும் மனம் வருகுதேயில்லை... ஆனா சிலசமயம்... விடப்பிடாது என... வந்து பூந்து விளையாடுவேன்..

    இன்று வியாழன் மாற்றமாமே அதனால்கூட இருக்கலாம்.. ஒருவேளை இனிக் கொஞ்சம் உற்சாகம் வருதோ என்னவோ....:).

    தலையணையை மாற்றுவதால் தலையிடி மாறாதென்பார்கள்.... அப்பூடித்தான் நாடுமாறிப்போய் வந்தாலும் சிலவேளை மூட் மாறாது.. கிக்..கிக்..கீஈஈஈஈ...

    மியாவும் நன்றி வான்ஸ்ஸ்.

    ReplyDelete
  26. //வாழ்க்கை ஒண்ணும் எம்.பி.3 பிளேயர் இல்லை,
    நமக்குப் பிடிச்சபாட்டைக் போட்டுக் கேட்கிறதுக்கு....-

    அது பூஸ் ரேடியோ மாதிரி,
    வாற பாட்டை நாம்தான் ரசிச்சுப்பழகோணும்..! // உண்மைதான்.

    ReplyDelete
  27. வாங்க இமா, நலமோ?.

    உண்மைதான் மியாவும் நன்றி.

    ReplyDelete
  28. ஹா ஹா ஹா ஹி ஹி ஹி கி கி கி. என்ன இதெல்லாம் சிரிப்புதான் மக்கா. பின்ன இப்படி கடிச்சா எப்படி சிரிப்பதாம்.
    எல்லோரும் கொண்டாடுவோம்.. சூப்பர்

    தத்துவமேதை கிழவி அதிரா வாழ்க வளர்க.

    ReplyDelete
  29. வாங்க மலிக்கா... நீங்க எல்லோரும் சிரிக்கவேணும் என்பதற்காகவே, நான் இப்பூடிக் குப்புறக்கிடந்து என் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணான கிட்னியை பூஸ்... சே..சே... யூஸ் பண்ணி எழுதுறேன்... நல்லாச் சிரியுங்கோ... ஆயுளும் நீளும் கிழவியாகும்வரை:)).

    என்னாது பாட்டி அதிரா முடிஞ்சு இப்ப கிழவி அதிராவோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... எனக்கு குட்டியா ஒரு டவுட்... பாட்டி, கிழவி... இது ரெண்டிலேயும் எது வெரி வெரி ஓல்ட்டூஊஊஊஊஊஊ????.

    மியாவும் நன்னி.

    ReplyDelete
  30. காரணம் இல்லாமல் யார்மீதும் அன்பு வருவதில்லை.
    ஆனால், அந்தக் காரணம்தான் யாருக்கும் புரிவதில்லை...!//

    சூப்பர்.... மற்றும் ஜோக்ஸ் சிரிக்க முடியாம சிரித்தேனேஏஏஏஏஏஏஏஎ ஹா ஹா ஹா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.