நல்வரவு_()_


Friday 24 February 2017

நானும் என் அழகிய பற்களும்:)

ன் பல்லைப் பற்றிய  “அவர்கள் ட்ருத்”  இன், கொமெண்ட் படிச்சதும், ஓடினேன்ன்.. ஓடினேன்ன்ன்.. தேம்ஸ் இன் ஆரம்பம் வரை ஓடினேன்... ஆனா அங்கு சடின் பிரேக் போட்டு நின்று விட்டேன்ன்...:)


ந்த இடத்தில் எதற்காக நின்றேன் எனத்தானே யோசிக்கிறீங்கள்? அதுவும் சிலர்.. கொஞ்சம் மேலே போய்... அதிராவுக்கு வயசாகிவிட்டது அதனால்தான் ஓட முடியாமல் நின்றிட்டா எனத்தானே ஓசிக்கிறீங்கள்...

துதான் இல்லை... நான் ஓடியது என்னமோ தேம்ஸ் இல் குதிக்கத்தான்:) ஆனா பிரேக் போட்டு நின்றது களைப்பால் அல்ல:).. என் குதிக்கும்:) முடிவை மாத்திக் கொண்டேன்ன்...

ன் தெரியுமோ?.. பல் செட்டோடு உலாவரும், 77 வயசு அஞ்சுகூட... இன்னமும் வோக் போகிறேன்... பூஸ் பார்த்தேன்.... தாராவோடு பேசினேன்... பேலியோ யூஸ் குடிச்சேன் எனச் சொல்லித் திரியும்போது:)).. கொஞ்சம் இருங்கோ என் சிரிப்பை அடக்கிக் கொண்டு வருகிறேன்ன்ன்:))..

ப்போ ஒரு சுவீட் 16 இல்[என்னைச் சொன்னேன்], அழகிய பல் வரிசையோடு இருக்கும்:) நான் மட்டும், எதற்காக... இந்தக் குவாட்டர்:) வயசில் சாக வேண்டும்... இன்னும் அனுபவிக்க எவ்ளோ இருக்கே.. என எண்ணியே என் முடிவை மாத்தி... திரும்படியும் அதே மின்னல் வேகத்தில்[(நான் நல்லா ஓடுவேன் தெரியுமோ?:) 1500 மீட்டரில் 2 வதாக வந்தேனாக்கும்.. அதை இன்னொரு தபா:) சொல்றேன்:))] ஓடி வந்து இதை எழுதுகிறேன்.

சின்ன வயசிலிருந்தே, எனக்கு நல்ல ஸ்ரோங் பற்கள்(கண்படுத்தாதீங்கோ).. பலபேர் சொல்லியும் இருக்கிறார்கள்.. அழகான பல் வரிசை என:) எனக்குப் பாருங்கோ தற்புகழ்ச்சி புய்க்காது:)..

னா என் பற்களை எப்பவும் நான் பாதுகாத்ததே கிடையாது, முயற்சித்ததும் கிடையாது. எனக்கு ஒரு பிரச்சனை என்னவெனில்.... வாயில் பிரெஸ் வச்சால், தண்ணியை திறந்துவிட்டுக்கொண்டே, கடகடவென தீட்டி முடிப்பேன், எச்சிலை பார்க்க முடியாது என்னால், யாராவது பல் விளக்கிக்கொண்டு கதை சொன்னால் பார்க்கவே மாட்டேன் ஓடிடுவேன்.. அதேபோல், ஆராவது சத்தி எடுத்தாலோ எச்சில் துப்பினாலோ எனக்கும் குமட்டுவதுபோல வரும்... பார்க்கவே மாட்டேன்..

சில படங்களில் பிரெஸ் பண்ணியபடி காட்சிகள் வரும்.. கண்ணை மூடி விடுவேன்.. இதனால அடிக்கடி பிரெஸ் பண்ணி என் பற்களைப் பாதுகாப்பது கிடையாது, ஆனா துப்பரவாக வைத்திருப்பேன், ஒழுங்கா டெண்டல் செக்கப் , ஹைஜினிஸ்ட் என போவேன்.

ண்டவன் புண்ணியத்தில் என் பற்கள் மிகவும் ஸ்ரோங், 32 பால் பற்களும் அப்படியே இருக்கிறது:) . சின்ன வயதிலிருந்தே.. அப்பா பார்த்தால் பேசுவார் என, ஒளித்திருந்து எலிபண்ட் பிராண்ட் நெக்டோ சோடா மூடியைப் பல்லாலேயே திறப்பேன். நல்ல ஸ்ரோங்கான பொருட்கள்கூட விடுங்கோ நான் உடைத்து தருகிறேன் என, பல்லால் உடைச்சுக் கொடுப்பேன்...அதில் எனக்கு ரொம்ம்ம்பப் பெருமை:)

புழுக்கொடியல் தெரிந்திருக்கும், அதெல்லாம் எனக்கு ஜூஜூபி:).

ன்றுவரை இது தொடருது, ஆனா சமீபத்தில் எங்கட சூப்ப மார்கட்டில் நிறைய நட்ஸ் குமிச்சிருந்தார்கள்... பார்த்ததும் ஆசையில் Hazelnuts  வாங்கி வந்து, அவணில் போட்டு றோஸ்ட் பண்ணி எடுத்து, ரின் ல போட்டு வைத்து விட்டு, டெய்லி பல்லுக்குள் கொடுத்தே கோதை உடைத்துச் சாப்பிட்டு வந்தேன்.., வீட்டிலும் அனைவருக்கும்,  அப்பப்ப நானே உடைத்து சப்ளை பண்ணினேன்[ நீங்கள் பாராட்டுவது என் காதில் விழுகிறது.. நன்றி.. நன்றி:)...].[உங்களால் முடியுமோ?:)].

து தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்தனா.. அது பல்லைத் தாக்கவில்லை.. என் தாடை ஜொயிண்ட்டை.. [Jaw joint]நோகப் பண்ணி விட்டது:).. அச்சச்சோ கொஞ்ச நாட்களாக சிரிக்க முடியாமல், சாப்பிட முடியாமல்.. அந்தர அவசரத்துக்கு ஒரு கொட்டாவிகூட:)  விட முடியாமல் நான் பட்ட அவதி எனக்குத்தான் தெரியும்...

தனால இப்போ அனுபவம் பேசுகிறேன், பல்லு நல்ல ஸ்ரோங் என எண்ணி இப்படியான பெண்டு நிமித்தும் வேலைகள் பார்த்திடாதீங்கோ:).

ந்தக் கதையை என் நண்பி ஒருவருக்குச் சொன்னபோது அவ என்னைப்பார்த்து... “நீ ரெம்ம்ம்ம்ப நல்லவ அதிரா”.. எனச் சொல்லிட்டா:)).. டிஷூ பிளீஸ்ஸ்ஸ்.. இருங்க கண் துடைச்சிட்டு தொடர்கிறேன்:),

னெனில், வேறு யாருமெனில் இவ் உண்மையை மறைச்சு, ஏதோ pain  என மட்டும் சொல்லி மழுப்பிடுவாங்க.. நீங்க உண்மை சொன்னதால, இனிமேல் நானும் கொஞ்சம் கவனமாகவே இருக்கப் போறேன் ஏனெனில் எனக்கும் இப்படிக் கண்டதையும் கொடுப்பில் போட்டுக் கடிக்கும் பயக்கம்:) உண்டு என்றிட்டா:).

ஊசிக்குறிப்பு:
அதிராவின் டயறியிலிருந்து:-

66 comments :

  1. VOTE : 2 என்னோடது. பதிவினை இன்னும் நான் படிக்கவில்லை. பிறகு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ கோபு அண்ணன்.. வாங்கோ கவனம் மெதுவா.. அவசரப்பட்டு ஓடிக்கீடி விழுந்திடாமல் மெதுவா வாங்கோ:)..

      //VOTE : 2 என்னோடது.///
      ஆங்ங்ங்ங் இதுதான் எனக்கு உங்களில் ரொம்பப் பிடிச்ச விசயம்.. படிக்க தாமதமானாலும் ஒயுங்கா வோட் பண்ணிடுறீங்க.. மிக்க மிக்க நன்றிகள் கோபு அண்ணன்..

      Delete
  2. Athira I need a help .can you break these coconuts for me 😆 a little bird said that you have a strong jaws and teeth 😃😄

    [im]http://3.imimg.com/data3/AE/VU/MY-4090147/fresh-pollachi-coconut-250x250.jpg[im/]

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அஞ்சு வாங்கோ... நலம்தானே?:) ஐ மீன் பல்லைக் கேட்டேன்:)... உங்களுக்கு இல்லாத ஜெல்ப் ஆ?:).. ஆ என்ன இது முடி இல்லாத் தேங்காய்கள்.. நோ நா மாட்டேன்ன் இது திட்டமிடப்பட்ட ஜதி:).. இனிமேல் நான் என் பல்லை ரொம்ப ஜாக்க்ர்ர்ர்ர்ர்தையா பாதுகாக்கப் போகிறேன்ன்ன்.. ஏனெனில் என் முகத்தில் அயகான பகுதியே இந்தப் பல்லுத்தேன்ன்:) ஹா ஹா ஹா...

      இங்கு ஒரு ஞாபகம் வருது எனக்கு... எங்கள் வகுப்பில் ஒரு பிள்ளை கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவ, மிக பயந்தவ... பாவம் அவவின் கதை வேறு.. அதுபற்றி இங்கு எப்பவோ சொல்லியதாக நினைவு.

      அவ எப்பவுமே வாயை மூடித்தான் சிரிப்பா... அப்போ எங்கள்..இங்கிலிஸ் மாஸ்டர் சரியான கொமெடியன்.. அவர் சொன்னார் அப்பிள்ளையைப் பார்த்து.”ஏனம்மா கையை எடுத்துப் போட்டுச் சிரி, உன் முகத்திலே அழகான பகுதியே அந்த வாய்தான்.. அதையும் ஏன் மறைக்கிறாய் “ என கர்ர்ர்ர்:))4 த மாஸ்டர்.

      லிங் போட்டது தவறு அஞ்சு, நான் திருத்தி போட்டிருக்கிறேன் பாருங்கோ...

      Delete
  3. [im]http://3.imimg.com/data3/AE/VU/MY-4090147/fresh-pollachi-coconut-250x250.jpg[/im]

    ReplyDelete
  4. //நானும் என் அழகிய பற்களும்:)


    ஹலோ தலைப்பை எழுதும் போது சின்ன புள்ளை மாதிரியா இந்த 80 வயசிலும் கலர் கலராகவா எழுதுவது.... அதுமட்டுமல்ல இப்படியா ஒரு தலைப்பு வைப்பது நான் வேகமாக படிக்கும் வழக்கம் உள்ளவன் என்பதால் இதை படிக்கும் போது
    நானும் என் அழுகிய பற்களும் என படித்துவிட்டேன் ஹும்ம்

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ட்ருத் வாங்கோ..

      ///நானும் என் அழுகிய பற்களும் என படித்துவிட்டேன் ஹும்ம்///
      வயசானாலே இப்பூடிக் கொயப்பங்கள் வருவது சகஜம்தானே ட்ருத்.. விடுங்கோ அது எல்லோருக்கும் புரியும்.. ஹா ஹா ஹா....

      ஹா ஹா ஹா பொல்லுக் கொடுத்தே அடிவாங்குபவர்களும் இருக்கிறார்கள்:)

      Delete
    2. :)) :) haahaaaa:) Hi Five @ Avargal truth

      Delete
    3. ஹா ஆஹா :) நல்லவேளை எங்கண்ணுக்கும் அழுகியன்னு தெரிஞ்சதை நான் சொல்லலை :)..அப்புறம் கண்ணு அவுட்டானு கேக்கும் பூனை

      Delete
    4. //வயசானாலே இப்பூடிக் கொயப்பங்கள் வருவது சகஜம்தானே ட்ருத்..//


      நீங்க்ங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் என் நிலை வயசானங்ககூட சேர்ந்ததால் ஏற்பட்ட நிலை......

      Delete
    5. .///அப்புறம் கண்ணு அவுட்டானு கேக்கும் பூனை ///

      ஆமாம் பூனைக்கு கண்ணு அவுட்டுதான் என்று சொல்லிவிடுங்க ஏஞ்சலின். நமக்கா சமாளிக்க தெரியாது

      Delete
    6. AngelinSaturday, February 25, 2017 12:48:00 pm
      :)) :) haahaaaa:) Hi Five @ Avargal truth//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உங்களால ஹை ஃபை மட்டும்தான் பண்ண முடியுமாக்கும்... ஹை லெக் முடியாதே:)..

      ///ஹா ஆஹா :) நல்லவேளை எங்கண்ணுக்கும் அழுகியன்னு தெரிஞ்சதை நான் சொல்லலை :)..அப்புறம் கண்ணு அவுட்டானு கேக்கும் பூனை///

      ஹா ஹா ஹா ரொம்பவும் உஷாராத்தான் இருக்கிறீங்க:)

      Delete
    7. Avargal UnmaigalSaturday, February 25, 2017 2:18:00 pm
      //வயசானாலே இப்பூடிக் கொயப்பங்கள் வருவது சகஜம்தானே ட்ருத்..//


      நீங்க்ங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் என் நிலை வயசானங்ககூட சேர்ந்ததால் ஏற்பட்ட நிலை......///

      இனிமேலும் தப்ப விட்டால் ஆபத்தூஊஊ:)

      [im]https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQRsUK6KJenI97dT5uTaNjThYaAbSKPJuOhKMQmhfhAXwR7YTNV[/im]

      Delete
    8. ///Avargal UnmaigalSaturday, February 25, 2017 2:20:00 pm
      .///அப்புறம் கண்ணு அவுட்டானு கேக்கும் பூனை ///

      ஆமாம் பூனைக்கு கண்ணு அவுட்டுதான் என்று சொல்லிவிடுங்க ஏஞ்சலின். நமக்கா சமாளிக்க தெரியாது////

      கூட்டுச் சேர்ந்திட்டாங்கையாஆஆஆஆஆ கூட்டுச் சேர்ந்திட்டாங்க:).. கொஞ்சம் அசதி எனக் கண் அயர முடியாமல் கிடக்கே:) உடனே சட்டுப் பட்டெனக் கட்சி அமைச்சிடுவினம் சசிகலா மாதிரி:).. ஹையோ நான் அரசியலுக்குள் குதிச்சிடுவன்போல இருக்கே.. ட்ருத் ஆல:)

      Delete
  5. //அதிராவுக்கு வயசாகிவிட்டது அதனால்தான் ஓட முடியாமல் நின்றிட்டா எனத்தானே ஓசிக்கிறீங்கள்...///

    நாங்கள் அப்படியெல்லாம் யோசிக்கவில்லை நீங்கள் ஒடும் போது எவனோ ஒருத்தன் அவச்ச மூட்டை வாங்கலியோ என கூவி வீற்பனை செய்து இருப்பான் அந்த சத்ததை கேட்டதும் சடன் பிரேக் போட்டு இருப்பீங்க

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா நோஓஓஓஓஒ என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது.. தெரியவும் ஞாயமில்லை... நான் இலகுவில் முடிவெடுக்க மாட்டேன்ன்ன்.. ஆனா முடிவெடுத்திட்டால் ..... நான் அவிச்ச முட்டைக்குச் சொன்னேன்:)

      Delete


  6. ///பல் செட்டோடு உலாவரும், 77 வயசு அஞ்சுகூட... இன்னமும் வோக் போகிறேன்... பூஸ் பார்த்தேன்.////

    உங்களுக்கு வயது 80 என்பதை ஏஞ்சலின் சொல்லிவிட்டார் என்ற கோபத்தால் அவரின் உண்மையான 77 வயசை இங்கே சொல்லீட்டீங்க... இதை பார்த்த அவர் கோபத்தால் உங்களை பற்றிய வேறொரு ரகசியத்தை நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.


    உங்கள் இருவரையும் என்னை போல டீன் ஏஜ்ஜில் உள்ளவர்கள் என்று நினைத்து கலாய்த்து கொண்டிருக்கிறேன் அதனால் பெரியவங்க நீங்க இரண்டு பேரும் இந்த பேரன் செய்த தவறுகளை மன்னித்து ஆசிர்வாதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. I am very busy today. .inniku kalaaikum poruppu ungalodathu. Shall come later avargal truth

      Delete
    2. ////இதை பார்த்த அவர் கோபத்தால் உங்களை பற்றிய வேறொரு ரகசியத்தை நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.///
      ஹா ஹா ஹா இங்கினதான் நீங்க தப்புக்கணக்குப் போடுறீங்க ட்ருத்:)... அதிராவோ கொக்கோ:)... வாய் திறந்தால்.. பல்செட்டைக் கழட்டி தேம்ஸ்ல வீசிப்போட்டு,, டக்கென ஒரு போட்டோ எடுத்து புளொக்கில் போட்டிடுவேன்ன் என அஞ்சுவை நேற்றே தேம்ஸ் கரையில் வச்சு மிரரரரட்டிட்டேஏஏஏஏஏன்ன்ன்ன்:)).. நானெல்லாம் வரமுன் காப்போனாக்கும்:).. ஹா ஹா ஹா இது பற்றி என் பெருமைகளை,இன்னொருபதிவில் விரைவில் போடுறேன்ன்ன்:)
      எச்சரிக்கை எனும் தலைப்பில்:).

      ///உங்கள் இருவரையும் என்னை போல டீன் ஏஜ்ஜில் உள்ளவர்கள் என்று நினைத்து கலாய்த்து கொண்டிருக்கிறேன்///
      இது தப்புத்தேன்ன்ன்:) அதாவது இருவரையும்:) எனச் சொன்னது டப்பு:)... நான் மட்டுமேதான்:) டீஈஈஈஈஈஈஈஈஈன் ஏஜ்ல இருக்கேஏஏஏஏஏன்:)..

      Delete
    3. ///AngelinSaturday, February 25, 2017 9:50:00 am
      I am very busy today.///

      ஆமா ஆமா நேற்றே சொன்னீங்க இல்ல:).. இன்று பல்செட்டை கழட்டி புதுசு போடப்போவதாக:).. ஹையோ கவனம் அஞ்சு இன்று மெளனமாகவே இருந்திடுங்க:)..

      ஹையோ இப்பூடி மடக்கிடோணும் இல்லையெனில் என்னைப் பின்னி பெடல் எடுத்திடுவா... சிவராத்திரியும் அதுவுமா நேக்கு கை எங்க வைக்கிறேன் கால் எங்க வைக்கிறேன் என்றே தெரியுதில்லயே ஜாமீஈஈஈஈ:)

      Delete
    4. ஆஆஆ ஒன்று சொல்ல மறந்துட்டேன்ன் மிக்க நன்றிகள் ட்ருத்... பாருங்க இப்போ நான் திருந்திட்டேன்ன்.. ஒயுங்கா ஸ்பாம் கொமெண்ட்ஸ் செக் பண்றேன்:)..

      Delete
    5. ஆமாம் என் கருத்துகள் வேரு ஒருவர் மூலம் சொல்லித்தான் வெளிவரும் என்ற நிலையில் இருந்து மாறி இருப்பது கண்டு சந்தோஷம் அதிராவிற்கு ஒரு தடவைக்கு நாலு தடவை ஏதும் சொன்னால்தான் புரியும் என்பது இப்போது தெளிவாக இருப்பததால் அவருக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்பது கன்பாஃம் ஆகிவிட்டது

      Delete
    6. ///அதிராவிற்கு ஒரு தடவைக்கு நாலு தடவை ஏதும் சொன்னால்தான் புரியும் என்பது இப்போது தெளிவாக இருப்பததால்///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அல்ல உண்மை.. உண்மை என்னவெனில் என்னிடம் ஒரு அலுவலை, 3 தடவைகள் திரும்ப திரும்பக் கேட்டால்ல்ல் உடனே இரங்கி, இருப்பதை எல்லாம் கொடுத்திடுவேன்ன்:) ஹா ஹா ஹா

      Delete
    7. Gimme your diamond necklace
      Gimme your diamond necklace
      Gimme your diamond necklace
      Gimme your diamond necklace

      Ippo kudunga 😆😈😆😈😆😆😆😆😆😆

      Delete
    8. ஹை அதிரா திரும்பத் திரும்பக் கேட்டால் உங்கள் அழகிய ஸ்ட்ராங்க் பல்லும் கிடைத்துவிடுமோ!!ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்

      கீதா

      Delete
  7. Replies
    1. வாங்கோ நாகேந்திரா முதன் முதலா வந்திருக்கிறீங்க மிக்க சந்தோசம் மிக்க நன்றிகள்.

      Delete
  8. Replies
    1. வாங்கோ முகமட்.. இது 2ம் தடவை ஆனாலும் முந்தையது பழைய பதிவாகிட்டமையால் இன்னும் வரவேற்கவில்லை, அதனால இது முதல் வரவுபோல எடுத்துக் கொள்கிறேன்... வாங்கோ மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

      Delete
  9. 2)

    ஊசிக்குறிப்பினில் உள்ள வரிகள்:

    தற்பெருமை பேசுபவர்களால் ஒரு நன்மையும் உண்டு !
    அவர்கள் அடுத்தவர்கள் பற்றி பேசமாட்டார்கள் !! //

    இதில் எந்தவிதமான உண்மையும் இருக்க முடியாது என்பதற்கு அதிரா அம்மையாரின் இந்தப்பதிவே சாட்சியாகும் என்பதை நான் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல 77 to 80 முறை அடித்துச் சொல்லிக்கொள்கிறேன்.

    படிக்கப்படிக்க மனசு பதறிப்போனது. அடக்க முடியாமல் நிறைய அழுகையாக வந்தது. இதுவரை 77 டிஷ்ஷு பேப்பர்கள் போட்டுத் துடைத்தும் கண்ணீர் மட்டும் கட்டுக்கடங்காமல் வழிந்துகொண்டே வருகிறது. இப்போது டிஷ்ஷுவெல்லாம் சரிப்பட்டு வராது என ஒரு மிகப்பெரிய துண்டு (டர்க்கி டவல்) எடுத்துக்கொண்டுள்ளேன்.

    தன்னைவிட அஞ்சு வயதில் மிகமிகச் சிறியவராகவே இருப்பினும், அதிரா அம்மையார் அஞ்சுவின் காலில் தடாலென்று விழுந்து (காலை வாரி விடாமல்) மன்னிப்புக் கேட்கவேண்டும் என, இந்தப்பொடியன் உத்தரவு இடுகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அபச்சாரம்... அபச்சாரம்.. ஒரு கொயந்தைப் பிள்ளையைப் பார்த்து மன்னிப்புக் கேட்கச் சொன்ன பாவத்தைப் போக்க:).. உச்சிப் பிள்ளையாரின் தண்ணி இல்லாத் தீர்த்தத்தில் 3 தரம் மூழ்கி எழுந்து, ஸ்நானம் பண்ணிக்கோங்கோ:)...

      கடசி வசனம்... .. என்னால தாங்கவே முடியல்ல சாமி:)..

      Delete
  10. 3)

    நான் ஒரு பொடியன் என்பது இதோ இந்த என் பதிவின் 190 பின்னூட்டங்களில் ஒன்றினில் மிக நன்றாகவே, வேறு ஒரு நல்லவருக்கான என் பதிலில் விளக்கப்பட்டுள்ளது.

    http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணன், எப்போதுமே சந்தோசமாக அனைவரையும் சிரிக்க வைத்து நாமும் சிரிச்சுக்கொண்டிருந்தால் என்றும் இளமையே...

      முடிவில் போகும்போது எதைக் கொண்டு போகப்போகிறோம்.. அதனால முடிந்தவரை போட்டி பொறாமை இல்லாது எல்லோரோடும் ஒற்றுமையாகவும் கொமெடியாகவும் இருக்கவே முயற்சிப்பேன்ன்.. பதிவு எனக்கு நினைவிருக்கு:).

      Delete
  11. 4)

    அதற்கு தாங்கள் எழுதியுள்ள சில வரிகள் இதோ:

    athiraNovember 15, 2012 at 3:31 AM
    //அடடா, இந்தப்பொடி வைத்துள்ள விஷயம் இந்தப் ******பொடியனுக்கு*******, நீங்க சொல்லியபிறகே புரிகிறதூஊஊஊ. //
    ****** -----*******
    ஹையோ என்னை விடுங்கோ விடுங்கோ.. இனியும் உயிரோடு இருக்கோணுமோ.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:)).

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இன்றுவரை தேம்ஸ்க்குப் போகிறேன் என மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன்:)..

      Delete
  12. 6)

    CHURCH என்ற சொல்லினைப் பிரித்தால் CH U R CH என்று வரும்.

    இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

    BEGINNING IS THE END & END IS THE BEGINNING &
    YOU ARE IN THE MIDDLE என்று அர்த்தமாகும்.

    CHURCH என்ற வார்த்தையில்
    BEGINNING = CH அதே போல
    END = CH

    எனவே CHURCH இல் ஆன்மிகப் பணிபுரியும் பஞ்சு போன்ற மென்மையான மனதுடைய நம் அஞ்சு, அதிரா அம்மையார் தன் காலில் தடாலென்று விழுந்து மன்னிப்புக் கேட்டவுடனேயே, உடனடியாகக் கருணை பொங்கி, அம்மையார் செய்த இந்த பாவங்களுக்கெல்லாம் ‘மன்னிப்பு’ அளித்து ஞான ஸ்நானம் செய்து வைப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது.

    என்ன நடக்கப்போகிறதோ .... பொறுத்திருந்து பார்ப்போம்.

    oooOooo

    ReplyDelete
    Replies
    1. சேர்ஜ் விளக்கம் அருமை.

      //அதிரா அம்மையார் தன் காலில் தடாலென்று விழுந்து மன்னிப்புக் கேட்டவுடனேயே,///
      ஹா ஹா ஹா புரிஞ்சுபோச்செனக்கு:).. அதாவது நான் ஓடிப்போய், அஞ்சு கால்ல விழ:), 77 வயசில ஒயுங்கா எழுந்து நிக்க முடியாமல் தள்ளாடும் அஞ்சு:)... என் மூச்சுக் காற்றால், தடாலென பின்புறமாக விழ.., அந்த அதிர்ச்சியில் அஞ்சுட பல் செட் கழண்டு உருண்டு போய் அப்பாலே நிண்ட ஃபாதர் மேல் விழ.. அவரைக் காப்பாற்ற ஓடிவந்த ஒரு அப்பாவி பொதுமகன்(என்னைப்போல் ஒருவர்) அவசரத்தில் பல் செட்டை உளக்க.. காலில் ரத்தம் வடிய,

      இது விசம் அதனால 34 ஊசி போடோணும் வாயைச் சுற்றி என டாக்டர் சொல்ல, பிரித்தானிய நீதிபதி அஞ்சுக்கும் எனக்கும் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க,... இது பொறுக்க முடியாமல் நான் போய் உச்சிப் பிள்ளையாரின் கோபுர உச்சியில்.. சசிகலா அம்மையார் சமாதியில் அடிச்சதுபோல் அடிக்க:))..

      இதை எல்ல்லாம் பொக்கை:) வாயுடன் இருக்கும் கோபு அண்ணன் , வாயில கடலை மிட்டாய் போட்டு உமிஞ்சுகொண்டே ரீவியில் புதினம் பார்க்க ஆசைப்படுறீங்க:)).. இது நடக்கவே நடக்காது பூஸோ கொக்கோ:))...

      அச்சச்சோ என் பல்லு எனக்கு முக்கியம்.. மீ ஓடியே தப்பிடுறேன்ன்.. மிகுதிக்கு பின்பு வாறேன்ன்ன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

      Delete
    2. ‘//மன்னிப்பு’ அளித்து ஞான ஸ்நானம் செய்து வைப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது. //

      1 வீக் கோயிலை துடைப்பம் வச்சும் பெருக்கணும் அதும் எங்க சர்ச்சில் இருப்பது 1950 யில் வாங்கி வச்ச ப்ரூம் :)

      Delete
    3. அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.



      ///Angelin///1 வீக் கோயிலை துடைப்பம் வச்சும் பெருக்கணும் அதும் எங்க சர்ச்சில் இருப்பது 1950 யில் வாங்கி வச்ச ப்ரூம் :)///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆண்டு வேறு சொல்லிக் காட்டோணுமோ:).. அங்கு கும்பிடப் போவோர் எல்லாம் 1950 க்கு முன் பிறந்தோர் என நேக்கு எப்பவோ தெரியுமே... ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)

      Delete
  13. டய"றி" !!!!

    ரொம்பக் கரடுமுரடா இருக்கும் போல!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உங்களுக்கு தெரியாதா :) இது அதிரா 1930 ல ஸ்டார்ட் பண்ணின டயரி :) பேப்பரை பாருங்க

      Delete
    2. வாங்கோ சகோ ஸ்ரீராம் வாங்கோ.. ஹா ஹா ஹா... என்னில் ஒரு பழக்கம் நான் யாரையும் கொப்பி பண்ணுவதில்லை.. என் யொந்தக்:) கிட்னியின் படியே ஓடிக்கொண்டிருப்பேன்ன்:)..
      அந்த வகையில்...
      R ..... வரும் இடங்களில் எல்லாம் ற பாவிப்பேன்:)
      T ...... “ “ “ ர பாவிப்பேன்:)
      D ...... “ “ “ ட “...
      எப்பூடி?:)..

      ///AngelinSaturday, February 25, 2017 12:52:00 pm
      ///:) பேப்பரை பாருங்க//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆத்துக்குப் போய் அன்னத்தை தடவிப் படம் புய்ச்சால் மட்டும் போதாது:) அன்னம்போல நல்லதை மட்டுமே பிரிச்சுப் பார்க்கப் பழகோணும்:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேப்பரைப் பார்க்கிறாவாம் பேப்பரை:) ஹையோ ஆண்டவா... விளக்கம் கொடுத்துக் கொடுத்தே பொஸுக்கெனப் போயிடுவேன்போல இருக்கே முருகா:)

      Delete
  14. பற்கள் விஷயத்தில் இப்போ நான் கொஞ்சம் வீக்காக்கும்! அந்த அனுபவங்களைக் கூட எழுதத் தொடங்கி பாதியில் நின்று விட்டது. பழைய வஜ்ரதந்தி விளம்பரம் ஒன்று போடுவார்கள். வயதான மனிதர் ஒருவர் இந்த மாதிரி கடுமையான பாதாம் பருப்பை வாயில் போட்டு கடுக்கெனக் கடிப்பார். என் பல் கூசும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ..:) ஆமா இன்னும் நீங்க முடிக்கலை முக்கியமான உயரமான அவர் எப்போ வருவார் சீக்கிரம் சொல்லுங்க :)

      Delete
    2. //முக்கியமான உயரமான அவர் எப்போ வருவார் //

      .ஆ... அது யாரது?

      Delete
    3. அது அது அது :) சொல்லிடுவேன்ன்ன்ன்ன்ன்

      Delete
    4. ///பழைய வஜ்ரதந்தி விளம்பரம் ஒன்று போடுவார்கள். வயதான மனிதர் ஒருவர் இந்த மாதிரி கடுமையான பாதாம் பருப்பை வாயில் போட்டு கடுக்கெனக் கடிப்பார். என் பல் கூசும்///
      ஹா ஹா ஹா அவருக்கு இப்போ தாடை இருக்குதோ தெரியாதே:)..

      ///ஸ்ரீராம்.Saturday, February 25, 2017 1:52:00 pm
      //முக்கியமான உயரமான அவர் எப்போ வருவார் //

      .ஆ... அது யாரது?///

      ஹா ஹா ஹா... “வெள்ளிக்கிழமை வெங்காயம்” உரிச்சால் கண்ணில தண்ணி வரும்:) இதைச் சொன்னால் எனக்கு அடி விழும்:) ஹையோ இந்த பிஸ் ஆல நானும் உளறிடுவன் போல இருக்கே முருகா:))

      Delete
    5. ///AngelinSaturday, February 25, 2017 4:14:00 pm
      அது அது அது :) சொல்லிடுவேன்ன்ன்ன்ன்ன்///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேம்ஸ்ல தள்ளிடுவேன் சொல்லிட்டேன்ன்:)).. அது சிதம்பர ரகசியம்... சகோ ஸ்ரீராம் வேறு “ஆசிரியராக” இருக்கிறார்ர்:).. அவர் காதுக்கு விசயம் போனால் எங்க நிலைமை என்னாகும்:))..

      ஹையோ கொஞ்ச நேரம் பேசினால் நானே உளறிடுவேன்போல இருக்கே:) என் வாய்க்கு பிளாஸ்டர் போட்டிட்டேன்ன்ன்:)).. ஹா ஹா ஹா

      Delete
    6. உங்கள் பல்லின் சொல் கதை என்னாயிற்று நீங்கள் முடிக்கலைனு ஊருக்கே தெரியும்

      கீதா

      Delete
  15. தம வாக்குப் போட்டாச்!

    ReplyDelete
    Replies
    1. ம்ிக்க மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.

      Delete
  16. //வேகத்தில்[(நான் நல்லா ஓடுவேன் தெரியுமோ?:) 1500 மீட்டரில் 2 வதாக வந்தேனாக்கும்.. //

    ஹீ ஹீ :) லாஸ்ட்ல செகண்டா வந்ததுக்கே இவ்ளோ பில்டப்பா

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓ அதைவிட இது ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்வு:) சீக்கிரம் சொல்லுறேன்:)

      Delete
  17. //அப்பப்ப நானே உடைத்து சப்ளை பண்ணினேன்[ நீங்கள் பாராட்டுவது என் காதில் விழுகிறது.. நன்றி.. நன்றி:)...].[உங்களால் முடியுமோ?:)].//

    ஆத்தாடியோவ் அம்மாடியோவ் சத்தியமா எங்களால் முடியாது ஏனென்றால் நாங்க ஹியூமன்ஸ் :)

    ReplyDelete
    Replies
    1. [im]http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89[/im]

      Delete
  18. [im]http://blog.festfoods.com/wp-content/uploads/2012/06/Coconut1.jpg[/im]

    ReplyDelete
  19. வணக்கம்
    சொல்லி ஒவ்வொரு தகவலும் சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ரூபன் வாங்கோ.. நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பது மகிழ்ச்சி. மிக்க நன்றி வருகைக்கு.

      Delete
  20. பல் போனால் சொல் போச்சி என்பதை பல இடங்களில் வாசிக்க முடிகிறதாக்கும்...!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ டிடி வாங்கோ... ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ... பல் இன்னமும் போகல்ல:) போகாமலே இப்பூடி:) போனால்ல்?:) ஹா ஹா ஹா மிக்க நன்றி.

      Delete
  21. அன்புடையீர்
    வணக்கம். உங்கள் பதிவிலிருந்து பல விவரங்களை அறிந்து கொண்டேன் . வாழ்த்துக்கள்
    அன்புடன்
    வியபதி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வாங்கோ... உங்களை என் பக்கம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் வேறு எங்கும் போய் நான் பார்த்ததில்லை... இதனாலேயே தேம்ஸ் பக்கம் எல்லாம் புகைவரப்போகுது:) கொஞ்சம் இருங்கோ திருஸ்டி சுத்திப் போட்டிட்டு வாறேன்ன்:)...

      மிக்க மிக்க நன்றிகள்.

      Delete
  22. மதுரை சகோ, ஏஞ்சலின் பாருங்க இங்க தென்னை அதுவும் தேங்காய்களுடன் படம் போட்டிருக்காங்க அதிரா...எதுக்குத் தெரியுமா? தன்னோட பல்லு ஸ்ட்ராங்குனு தேங்காயைப் பல்லாலேயே உரிச்சுக் காட்டுவாங்க.....இல்லையா அதிரா...ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
  23. அப்படித் தேங்காயை உரிச்சு காட்டினா நல்ல விளம்பரம் ஏதேனும் டூத் பேஸ்டுக்குப் போட்டுருங்க அதிரா...ஹஹஹ்

    கீதா

    ReplyDelete

__()__ .__()__. __()__. __()__. __()__ .__()__ .

எப்பூடி இப்படியெல்லாம் எழுதுறீங்க? அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.